ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013

சென்னை: பிப்ரவரி 19 முதல் 24 வரை, நூற்றுக் கணக்கான இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்புகள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்காட்சி. பிப்-19 (செவ்வ்வாய்) மாலை 5 மணிக்கு துவக்க விழா. எல்.கே.அத்வானி, சுவாமி ஆசுதோஷாந்தர், சுவாமி ஓங்காரானந்தர் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றர். இடம்: ஏம்.எம்.ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம்.

அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே.

Hindu_fair_2013_invite_1

Hindu_fair_2013_invite_2

Tags: , , , , , , ,

 

6 மறுமொழிகள் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013

 1. mu. janaardhanan on February 17, 2013 at 7:39 pm

  அன்பரே , 64-ஆம் ஆண்டு தனுஸ்கோடி ட்சுனாமிஇனால் தங்களையே இழந்தவர்கள்தான் இன்றும் அங்கு வாழ்கிறார்கள் . 2004 சுனாமி வீசிய இடங்கள் இன்று புதிதாய் மீண்டுள்ளது . தனுஸ்கோடி செல்ல பாதை இல்லை . வண்டிகளில் மரண பயணம் போகவேண்டியுள்ளது. அரசு எதையும் செய்யவில்லை. ஒரு தார் சாலை வசதியை [ 8 km ] இந்த சேவை பணியில் எர்ப்படுத்தபபட்டால் அந்த மக்களுக்கும் சுற்றுலா பக்தர்களுக்கும் உயிர்,- கவனிக்கவும் – உயர் – அல்ல உயிர் சேவையாய் இருக்கும் . ஸ்ரீமான் குருமூர்த்தி அவர்கள் மனதில் இறைவன் இதனை சிந்திக்க வைக்கட்டும் . நமசிவாயம்

 2. snkm on February 19, 2013 at 7:16 pm

  இன்று 19 – 2- 2013 மாலை 4.50 மணி அளவில் கண்காட்சிக்கு சென்றால் இன்று பொது மக்கள் அனுமதி கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.
  முதலிலேயே 20 – 2- 2013 அன்று தான் ஆரம்பம் என்று சொல்லி இருந்தால் பல பேர் வந்து ஏமாற்றத்துடன் வருத்தத்துடனும் திரும்ப சென்றிருக்க மாட்டார்கள்.
  வரும் நாட்களிலாவது சரியாக செய்வார்கள் என்று நம்புவோம்.
  வாழ்க பாரதம்!

 3. எல்கே on February 22, 2013 at 8:11 am

  Why there was no place for RSS/VHP/Hindu Munnani. they are the face of Hindus and Hindu organizations.

 4. somuvaradarajan on February 23, 2013 at 6:33 am

  திருவளர்செல்வர்.ஆனந்தகணேஷ் வாயிலாக தமிழ் ஹிந்து என்ற ஆலயத்துக்குள் பிரவேசம் செய்த காலத்தில் இருந்து அரவிந்தமலரை (மலர்மன்னன்) நன்கறிவேன் ;அம்மலர் எனக்கு வாசம் மட்டும் தரவில்லை —சுவாசமும் கொடுத்தது.எனக்கு வழிகாட்டியதால் என் எழுத்துக்கள் மிளிர்ந்தன.அவரது மறுமொழிகள் என்னை மலரச்செய்தன.அந்த கலங்கரைவிளக்கம் இன்றி இனி எப்படி பயணிப்பேன்?
  சோமுசார்.

 5. அத்விகா on February 23, 2013 at 7:02 am

  திரு வெங்கடேசன் அவர்கள் எழுதிய அம்பேத்கார் ஏன் புத்த மதத்துக்கு மாறினார் என்ற தலைப்பில் தமிழ் இந்துவில் வந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வடிவு பெற்று, இந்த கண்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கிறது என்று இன்றைய 23-2-2013 – சனிக்கிழமை தினமணியில் செய்தி வந்துள்ளது. அனைவரும் படிக்கவேண்டிய அற்புதமான புத்தகம்.

 6. Murugan on February 26, 2013 at 7:06 pm

  நல்ல முயற்சி, வாழ்த்துக்கள், இது மாதிரியான கண்காட்சி மற்ற மாவட்ட தலை நகரங்களிலும் வேண்டும், குறிப்பாக மதுரையில் வேண்டும், செயல்பட உங்கள் கருத்துகளை இந்த பக்கத்தில் பதிவு செயுங்கள், முயற்சிப்போம்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*