விவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு

andhra-pradhesh1 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்ற நாடகத்தை அறங்கேற்றியது.  ரூ80,000 கோடிக்கு மேல் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததாக, 2009-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்து வாக்குகளை அறுவடை செய்தது.  அறுவடை செய்து சில ஆண்டுகளிலே. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது.  ஓன்பது ஆண்டுகால ஆட்சியில் ஊழலுக்கு மேல் ஊழலாக வெளிவந்து கொண்டிருக்கும் இத் தருணத்தில் , தற்போது வெளியாகியுள்ள மோசடி, 2008-ம் வருடம், 2009-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்ட திட்டம், விவசாய கடன் தள்ளுபடி என்பது. இதில் எவ்வாறு முறைகேடுகள் நடைபெற்றன என்பதை தணிக்கை துறையின் ஆய்வுடன் எழுதப்படும் கட்டுரையாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொள்ளையடித்தவர்கள் ஆளும் கட்சியினர் என்பது மட்டுமில்லாமல் வங்கி அதிகாரிகளும் கொள்ளையடித்த சம்பவம் தான் விவசாhயிகளின் கடன் தள்ளுபடியில் அரசு வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் கொள்ளையடித்ததை விலாவாரியாக மத்திய கணக்கு தணிக்கை துறை அம்பலப்படுத்தியுள்ளது.
திட்டம்
விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டம் (Agricultureal Debt Waiver and Debt Relief Scheme )என்ற பெயரில் 2008-ம் ஆண்டு கொண்ட வரப்பட்டது.  இத்திட்டத்தின் படி நாடு முழுவதும் வங்கிகளில் விவசாயத்திற்காக கடன் வாங்கிய விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதும், சில கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்வதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இத் திட்டத்தின் படி நாடு முழுவதும் 3.69 கோடி சிறு, குறு விவசாயிகள் மற்றும் 60 லட்சம் மற்ற விவசாயிகளின் கடன் தொகையான 52,516 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.  இவ்வாறு தள்ளுபடி செய்யபட்ட தொகையை பற்றிய ஆய்வை நடத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தனது அறிக்கையில் கடன் வழங்கிய பல்வேறு வங்கிகள் முறைகேடாக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதுவே தற்போது மிகப் பெரிய விவாதமாக வெடித்துள்ளது.
தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முறைகேடுகள்:
பல மாநிலங்களிலிருந்து முறைகேடுகள் சம்பந்தமாக புகார் வந்த போது, 25 மாநிலங்களில் உள்ள 92 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 715 வங்கிகளில்  80,299 கணக்குகளில் மொத்த கடன் தள்ளுபடி தொகை ரூ330,36,64,949க்கு தலைமை கணக்குத் தணிக்கையாளர், 90,576 கணக்குகளில், ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கணக்கு 20,216 மட்டுமே, இதில் கூட ஒன்பது மாநிலங்களில் 9,334 கணக்குகளை ஆய்வு செய்த வகையில் 1,257 கணக்குகளில்  முறைகேடாக விவசாயின் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு உட்படுத்தப்பட்ட மாநிலங்களில் முழுமையான ஆய்வு நடத்தியிருக்கும் பட்சத்தில் 2008-ல் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி 75 சதவீதத்திற்கு குறையாமல் முறைகேடுகளில் அமைந்திருக்கும் என்பது உண்மையாகும்.  ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமே முறைகேடுகள் அறங்கேறியுள்ளன.  கர்நாடகாவில் 6 மாவட்டங்களில் 35 வங்கிகளில் தள்ளுபடி செய்யத தொகை ரூ36,10,54,526 ஆகும்.  இந்த மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே தணிக்கை துறை சுட்டிக் காட்டிய அனைத்து தவறுகளும் நடந்துள்ளன.
cag-finds-scam-in-rs-52000-crore-farm-loan-waiver-scheme
இதன்படி விவசாய கடன் தள்ளுபடி பெற வேண்டிய 1,257 விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டிய ரூ3.58 கோடி தள்ளுபடி செய்ய வில்லை.  இவ்வாறு தகுதி பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யாத மாநிலங்கள் மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஒடிசா, திரிபுரா மற்றும் சில மாநிலங்கள் உள்ளன.  குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் 1,147 விவசாயிகள் பெற்ற கடன் தொகையான ரூ3,20,63,994 ஐ தள்ளுபடி செய்வதற்குறிய அனைத்து தகுதிகளும் இருந்தும், தள்ளுபடி செய்யப்படவில்லை.  இந்த மாநில விவசாயிகளை போலவே குஜராத் மாநிலத்தில் ரூ15,220 தள்ளுபடி கொடுக்க வேண்டிய ஒரு விவசாயிக்கு சலுகை கிடைக்கவில்லை. வளர்ச்சியடைய வேண்டிய மாநிலம் திரிபுரா என கூச்சல் போடும் ஆளும் அரசு 38 விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தள்ளுபடி தொகையான ரூ19,75,743 கிடைக்கவில்லை.  ஆனால் பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சலுகை கிடைக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.
விவசாயிக்கு கடன் கொடுத்த வங்கிகள், அசல் தொகையை கட்டத் தவறிய விவசாயிகளிடமிருந்து அசலுக்கு அதிகமான வட்டி(interest in excess of the principal ), வட்டிக்கு வட்டி(penal interest ), சட்ட நடடிவக்கை எடுப்பதற்குறிய செலவு தொகை, ஆய்வு நடத்தியதற்குறிய செலவு தொகை, மற்ற இனங்களில் ஏற்பட்ட செலவுகள். ( unapplied interest, legal charges, inspection charges, miscellaneous charges ) மேற்படி இனங்களின் கீழ் வசூலித்த தொகை அனைத்தும் வங்கிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இதை விவசாயிகளிடமிருந்து அல்லது தள்ளுபடி செய்யும் போது விவசாயின் கடனுடன் இந்த தொகையை சேர்த்துக் கொள்ள கூடாது என தெளிவாக அரசு தெரிவித்திருந்தும், பல வங்கிகள் இதையும் சேர்த்துக் கொண்டு விவசாயின் கடனை தள்ளுபடி செய்துள்ளார்கள்.  இவ்வாறு செய்ததால், விவசாயிக்கு ரூ5.33 கோடி தள்ளுபடி சலுகை மறுக்கப்பட்டுள்ளது.  தணிக்கைத் துறையினர் கொடுத்துள்ள ஆதாரங்கள் பெடரல் வங்கி 13 விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டிய தொகையான ரூ4,66,251-ம் அலகாபாத் வங்கி 235 விவசாயிக்கு தள்ளுபடி செய்ய வேண்டிய தொகை ரூ36,35,905 –ம் அரசிடமிருந்து வங்கி பெற்றுக் கொண்டது, அரசு அறிவித்த திட்டத்திற்கு மாறாக சில வங்கிகள் செயல்பட்டுள்ளன.  இதிலே கூட உத்திர பிரதேசத்தில் 1421 கணக்குகளை ஆய்வு செய்த போது ரூ1,45,80,838 மேலே குறிப்பிட்ட இனங்களுக்கு என குறிப்பிட்டு வங்கியே தள்ளுபடி தொகையை வைத்துக் கொண்டது.  ஆகவே விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் அரசு தெளிவாக குறிப்பிட்டிருந்தும், அதை முறையாக செயல்படுத்தவில்லை, இதனால் பல வங்கிகள் தங்களது நிதி ஆதாரங்களை பெருக்கி கொண்டது.
1,934 கோடி ரூபாய் வட்டி தள்ளுபடிக்குறிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களைக் கூட வங்கிகள் வைத்திருக்க வில்லை.  தள்ளுபடி செய்யப்பட்ட வட்டி, வட்டி சதவீதம் என்ன? எந்த காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டது?  மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின் படி எந்த விவசாயிக்கு வட்டி தள்ளுபடி கிடைக்கும் என்பது பற்றி ஆவணங்கள் கூட சில வங்கிகள் வைத்திருக்க வில்லை.  ஆந்திராவில் ஐந்து வங்கிகளில் 25 சதவீத தொகையான ரூ66.16 லட்சத்திற்குறிய அதாவது 75 சதவீதம் கட்ட வேண்டிய விவசாயி கட்டாமலே, வங்கி கட்டியதாக காட்டி மத்திய அரசிடமிருந்து 25 சதவீத தொகையை பெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
BL06_pg1_3col_farm_1386126g
முறையான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கியும், நபர்டு வங்கியும் அவ்வப்போது அனைத்து வங்கிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் இந்த நெறிமுறைகளுக்கு புறம்பாக விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  அதாவது 31.3.1997க்கு முன் கடன் பெற்ற விவசாயிகள், 31.3.1997 முதல் 31.3.2007ந் தேதி வரை தான் செலுத்த வேண்டிய அசல் தொகை மற்றும் வட்டியை கட்டாதவர்கள், மற்றும் பல முறை நினைவுட்டு செய்யப்பட்ட பின்னும், 29.2.2008ந் தேதி வரை கட்டாமல் ஓவர் டியூ வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் படி தள்ளுபடி கிடைக்கும்.  ஆனால் 25  மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்கள் போன்ற மாநிலங்களில் 1.4.1997க்கு பின்னர் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் , வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே மத்திய அரசாங்கம் 31.3.2007ந் தேதி 2004 மற்றும் 2006-ல் கடன் பெற்றவர்களுக்கும் சில சலுகைகள் கிடைக்கும் விதமாக சிறப்புத் திட்டத்தை அறிவித்தது. இந்த சிறப்புத் திட்டத்திலும் வராத விவசாயிகளுக்கு விதி முறைகளை மீறி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்து.   கர்நாடக மாநிலத்தில் மட்டும் 2,879 விவசாயிகளின் கடன் தொகையான ரூ8,85,76,567 விதி முறைகளுக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  மத்திய பிரதேச மாநிலத்தில் 1,050விவசாயிகளின் கடன் தொகையான ரூ2,05,32,186 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ( ஆதாரங்கள் தணிக்கை அறிக்கை பக்கம் எண்19, இணைப்பு பக்கம் எண்9, 4வது இணைப்பு) இதன் காரணமாக தணிக்கை துறை கொடுத்துள்ள பரிந்துரை தவறு செய்த அதிகாரிகள் மீது குறிப்பாக தணிக்கை செய்ய வேண்டிய தணிக்கையாளர்கள், மத்திய தணிக்கையாளர்கள், தவறான சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு கூட்டுறவு வங்கிகள் விதி முறைகளுக்கு மாறாக எவ்விதமான சான்றிதழ்களும் இல்லாமல் கடன் வழங்கியுள்ளார்கள்.  இதன் காரணமாக முறையான ஆவணங்கள் இல்லாமல் கொடுத்த கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்து. இதில் கூட ஆவணங்களை கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ஏற்ப திருத்திய வங்கிகளும் உள்ளதாக ஆய்வு அறிக்கையில் மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது.  கர்நாடக மாநிலத்தில் மான்டியா நகரில் உள்ள மான்டியா சிட்டி கூட்டுறவு வங்கி லிமிடெட் வங்கி, லேக்பவானி மகிளா ஷகாரி பேங்க் நியமிதா, மாத்தூரில் உள்ள Simsha Sahakara Bank Ltd (Maddur), Sri Gurusiddeshwara Cooperative Bank Ltd Hubli ஆகிய வங்கியில் ஆவணங்களை திருத்தியும், கடன் தள்ளுபடி நோக்கத்திற்காக மாற்றி எழுதியும், ( In Four Banks large scale tampering of records.i.e., overwriting, alteration of purpose of loan etc.,  )ரூ8.52 கோடிக்கு தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ளAP Grameena Bank Ballikjurava  land holdings வங்கியில்    17 விவசாயிகளுக்கு சிறு விவசாயி என ஆவனங்களில் திருத்தம் செய்து கடன் தள்ளுபடி தொகையை விட கூடுதலாக  ரூ10.82 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இதை விட மோசமான வழியில் ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கியில் நடந்துள்ளது. Branch of Jharkand Gramin Bank      என்ற வங்கியில் ஒன்பது விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொகையான ரூ40,718 ஐ மறைமுக கணக்கில் வைத்துக் கொண்டு, இவர்களின் நிலங்களின் அளவை அதிக அளவில் காட்டி ரூ1,62,864 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் இன்னும் பல்வேறு மோசடி பூதங்கள் வெளி வர இருக்கின்றன.  இதற்கிடையில் 19.1.2013ந் தேதி அகமதாபாத் நகரில் சி.பி.ஐ யினர் மூன்று தொழிலதிபர்கள், விவசாயி என பொய் சான்றிதழ் கொடுத்து ரூ1,000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடத்திய விவகாரத்தில் முன் ஜாமீன் கொடுக்க கூடாது என நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.  இதில், Biotor Industries Ltd,  KGN Industries என்ற நிறுவனங்களும், சித்தி விநாயக் கூட்டுறவு வங்கியின் (Siddhi Vinayak Cooperative Bank ) நிர்வாகிகளும் அடங்குவார்கள்.  இதில்    நிறுவனத்தை சார்ந்த, அரிப் மேமன், கைது செய்யப்பட்ட  Jigar Thakkar of the coop  bank, Zubin Batiwalaஇவர்கள் மூவரும் சேர்ந்து Bank of Maharashtra வில் ரூ55.40 கோடிக்கு முறைகேடுகள் செய்துள்ளார்கள்.
இந்த முறைகேடுகளில்  பல வங்கிகள் குறிப்பாக கூட்டுறவு வங்கிகள், விவசாயி அல்லாத பலருக்கு கார் வாங்குவதற்கும், தொழில் துவங்க மூலதனம் செலுத்தவும், புதிதாக நிலங்கள் வாங்கவும், வீடு கட்டவும் இவ்வாறு விவசாயம் அல்லாத தொழிலுக்கு கொடுக்கப்பட்ட கடன்களை இத்திட்டன் கீழ் தள்ளுபடி செய்துள்ளார்கள்.  ஆகவே ரிசர்வ் வங்கி சில தினங்களுக்கு முன் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில் அனைத்து ஆவனங்களையும் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது. செத்துக் கொண்டிருக்கும் விவசாயின் வயிற்றில் அடித்த வங்கி அதிகாரிகள் மீதும், போலி ஆவணங்களைக் கொடுத்த அரசுத் துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பல்வேறு தரப்பினர் இந்த முறைகேடுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.  ஒரு தினசரி நாளிதளில் வெளியான தலையங்கம் “ உண்மையில் இந்த திட்டத்தில் பயனடைந்த 3.69 லட்சம் சிறு, குறு விவசாயிகள் மற்றும் 60 லட்சம் வசதிபடைத்த விவசாயிகளின் கடன்  கணக்குகளை முறையாகப் பரிசீலித்தால், ரூ52,000 கோடியில் பாதி கூட தகுதியுடைய விவசாயிக்குப் போய்ச் சேரவில்லை என்பது உறுதிப்பட்டிருக்கும்.”  என்று எழுதியதுதான் உண்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *