காஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காஷ்மீர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 25.3.2013ந் தேதி காஷ்மீர் சட்ட மன்றத்தில் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, டெல்லி காவல் துறையினர் கைது செய்த ஹிஸ்-புல்-முஜாஹிதீன் (Hizb-ul-Mujahideen ) அமைப்பைச் சார்ந்த தற்கொலை படையின் பொறுப்பாளரான லியாகத் ஷா (Liaquat Shah ) என்பவனை டெல்லி காவல்துறையினர் கைது செய்த விவகாரத்தில், மாநில அரசுக்கும், டெல்லி காவல்துறையினரும் இடையே நடக்கும் அதிகார போட்டியின் காரணமாக சில முக்கியமான கருத்துக்களை சட்ட மன்றத்தில் தெரிவித்துள்ளார். மாநில முதல்வரின் கருத்து இந்தியா இறையான்மைக்கு எதிரான கருத்தாக தெரிவதால் இக் கட்டுரை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.  சட்ட மன்றத்தில் மூன்று முக்கியமான கருத்தை மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
omar01
அப்சல் குரு ஜனநாயகத்தின் கோவில் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.  ஆனால் ராஜீவ் காந்தி மீது நடத்திய தாக்குதல் அல்லது பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் மீது நடத்திய தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இல்லையா?  (Afzal Guru had attacked the temple of democracy.  Was not the attack on Rajiv Gandhi or the one  on the Punjab Chief Minister (Beant Singh) an attack on democracy ) இவர்களை தாக்கியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.   அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த, சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளி அனைவருக்கும் , அனைத்து சட்ட உதவிகளும் எல்லா நிலைகளிலும் கிடைத்தன. ஆனால் அப்சல் குருவிற்கு கிடைவில்லை. (forest brigand Veerappan and others of his gang were also involved in innocent civilian killings. Yet they were allowed to use every legal recourse in their defence)  1971லிருந்து காஷ்மீரில் அரசியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொண்டு வரப்பட்ட ராணுவத்திற்கு  என கொடுக்கபட்டுள்ள தனி அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக குரல் கொடுத்தாலும், அச்சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு மறுக்கிறது. (Political issue since 1971 While reiterating hid demand of revocation of the Armed Forces Special Powers Act.   ) என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.  இதன் மூலம் காஷ்மீர் முதல்வர் இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கலாம்,
ஆயுதமற்ற காவல் படையினரை அடித்தே கொல்லும் இஸ்லாமிய வெறியர்கள்
ஆயுதமற்ற காவல் படையினரை அடித்தே கொல்லும் இஸ்லாமிய வெறியர்கள்
அப்சல் குரு பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதை மறந்து விடக் கூடாது.  2001 டிசம்பர் மாதம் 13ந் தேதி பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுக்க தவறியிருந்தால், பல மூத்த தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இறந்திருப்பார்கள் என்பதை கூட ஒமர் அப்துல்லா நினைத்து பார்க்க வில்லை.  ராஜீவ் காந்தி கொலை செய்த குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முதல்வர் பியாந் சிங்கை கொன்ற கொலைகாரர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னும் ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை என கேட்பது ஒரு முதல்வருக்கு தகுதியானதா என்பதை நினைத்து பார்க்க வேண்டும். உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கு பின் குடியரசு தலைவரிடம்  கருணை மனுப் போட்டு, தள்ளுபடி செய்த பின் தண்டனை நிறைவேறியது.  மேலும் பயங்கரவாதி அப்சல் குருவிற்கு வக்காலத்து வாங்கும் செயலை ஒரு முதல்வரே செய்வது, மாநிலத்தில் மேலும் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் என்பதை மறந்து விட்டார்.  26.9.2011-ல் ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவிற்கு கருணை காட்ட வேண்டும் என்று சுயாட்சி உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் ஆதரவு கொடுத்தது ஏன் என்று புரியவில்லை.  பாராளுமன்றத்தை தாக்கிய குற்றவாளி அப்சல் குருவிற்கு, காஷ்மீர் சட்ட மன்றத்தில் ஷாகிப் என்ற அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது.  அப்சல் குருவை தூக்கிலிட்டது அரசியல் காரணங்களுக்காக என வாதாடும் இவர்கள், சட்டமன்றத்திலேலே ஒரு பயங்கரவாதிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக ஷாகிப் என்ற அடைமொழியை கொடுத்ததும் அரசியல் சிந்து விளையாட்டுதான்.
அமைதியாக இருப்பதாக ஓமர் சொல்லும் காஷ்மீர அப்பாவி முஸ்லீம்கள்
அமைதியாக இருப்பதாக ஓமர் சொல்லும் காஷ்மீர அப்பாவி முஸ்லீம்கள்

காஷ்மீர் சட்ட மன்றத்தில் ஒமர் அப்துல்லா முதல்வராக பொறுப்பு ஏற்ற பின் தொடர்ச்சியாக பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும்  ஆதரவாகவே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  2010-ல் முதல்வர் ஒமர் அப்துல்லா சட்ட மன்றத்திலேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தததை ஏற்றுக் கொள்ள இயலாது என்பது போல் பேசினார் (Challenge the accession of the state with India )  அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுவதில் தான் தோல்வியடைந்ததாகவும் சட்ட மன்றத்தில் பேசியுள்ளார்.  ஆகவே அப்சல் குருவின் செயல்பாட்டை ஆதரிக்கும் விதமாக செயல்படுவது ஒமர் அப்துல்லாவின் வழக்கமான ஒன்றாகும். இரண்டாவது, சந்தன கடத்தல் வீரப்பனை அப்சல் குருவுடன் ஒப்பிட்டு பேசுவது சரியானது கிடையாது.  சந்தன கடத்தல் வீரப்பன்  தன்னையும், தனது குடும்பத்தினரையும் பழிவாங்கிய காவல் துறையினரை மட்டுமே கொலை செய்ததும், அவனது குடும்பத்தை சீர்குழைய செய்தவர்களை பழிவாங்கியது தான் அவனது செயலாகும்.  ஆனால் அவனது செயலுக்கு எவரும் அங்கீகாரம் கொடுக்க வில்லை , சட்ட மன்றத்தில் அவனுக்காக கருணை காட்ட தீர்மானம் நிறைவேற்றவில்லை என்பது மட்டுமில்லாமல் அவன் மீது பல வழக்குகள் நீதி மன்றத்தில் உள்ளது.  என்கவுன்டர் மூலமாக வீரப்பன் கொல்லப்பட்டான் என்பதை ஒமர் அப்துல்லாவிற்கு தெரியாது, அதற்காக பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய அப்சல் குருவின் செயல்பாட்டை, சந்தன கடத்தல் வீரப்பனுடன் ஒப்பிடுவது ஒரு முதல்வருக்கு அழகல்ல.   இந்த நாட்டின் ஆன்மாவின் மீது நடத்திய தாக்குதல், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தவன் என்பதும். நீதி மன்றத்தின் மூலமாக பல் வேறு வழிகளில் நாடாளுமன்றத்தை தாக்க உதவி செய்தவன் என்ற குற்றச்சாட்டு;ம் நீருபிக்கப்பட்டுள்ளது.  இறுதியாக தீர்ப்பிற்கு பின் குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரித்த பின்னர் தான்; தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது.

ஹிஸ்புல் பயங்கரவாதி லியாகத் ஷா
ஹிஸ்புல் பயங்கரவாதி லியாகத் ஷா

மூன்றாவதாக  ஹிஸ்-புல்-முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த தற்கொலை பிரிவின் பொறுப்பாளர் லியகத் ஷா என்பவன் கைது விவகாரத்தில், ஒமர் அப்துல்லா வக்காலத்து வாங்கியுள்ளார்.  இந்த தீவிரவாதி ஹோலி பண்டிகையின் போது டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஊடுருவியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லி காவல் துறையினர் இந்திய நேபாள எல்லையில் உள்ள கோரக்பூரில் கைது செய்யப்பட்டான்.  கைது செய்த போது அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் டெல்லியில் சோதனை நடத்திய போது ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தக் ஆயுதங்கள் ஹோலி பண்டிகையின் போது டெல்லியில் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதற்கு என்பதும் தெரியவந்தது.  ஆனால் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அவன் சரணடைய வந்தவன் என கூறி வருகிறது.  பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் சரணடைய மாநில அரசு வேண்டுகோள் விடுத்தது, இதற்கு சம்மதம் தெரிவித்து இதுவரை எவரும் சரணடையவில்லை.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சரணடைபவர்களுக்கு பாதுகாப்பும், மறுவாழ்வும் வழங்குவதாக அறிவித்த போதே நான்கு வழிகளில் அவர்கள் சரணடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது,  அதாவது, பூஞ்ச்- ராவல்கோட் (Poonch-Rawalakote), வாகா எல்லை(wagah), ஊரி- முஸபராபாத், மற்றும் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் சரணடையலாம் என அறிவிக்கப்பட்டது.  கடந்து இரண்டு ஆண்டுகாலமாக அறிவிக்கப்பட்ட இந்தக் வழித் தடங்களில் எவரும் சரணடையவில்லை என உள்துறை செயலாளர் திரு.ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.  1989லிருந்தே ஹிஸ்-புல்-முஜாஹிதீன் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என போராடி வருகிறது.

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வக்காலத்து வாங்கும் லியகத் ஷா பாகிஸ்தான் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதியிலிருந்து நேபாளம் வழியாக  இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.  நேபாளத்திற்கு சென்றவுடன் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை கிழித்து விட வேண்டும் என பாகிஸ்தானில் தெரிவிக்கப்பட்டது, அதை போலவே லியகத் ஷா தனது பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை கிழித்து விட்டார், என்றும், பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது என டெல்லி காவல் துறை அதிகாரி ஸ்ரீவத்ஸ்வா தெரிவித்தார் ( ஆதராம் Mjuhk; Washingtonpost. 22.3.2013)  ஆகவே சரணடைய வந்தவர் ஏன் பாகிஸ்தான் பாஸ்போர்டடை கிழித்து எறிய வேண்டும் என்பதற்கு சரியான விளக்கம் கிடையாது. 2012-ல் 1,000 பேர்கள் மறுவாழ்விற்காக விண்ணப்பித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.  ஆனால் இவர்களில் ஒருவர் கூட சரணடைய வில்லை ஏன் என்பதற்கான காரணங்களும் தெரியவில்லை.
நான்காவதாக மாநில முதல்வர் வைத்துள்ள முக்கியமான கோரிக்கை ராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.  1990-ல் இச் சட்டம் கொண்டு வரும் போது என்ன காரணங்களை கூறப்பட்டதோ, அதே காரணங்கள் இன்னும் இருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.  1990-ல் இச் சட்டத்தை கொண்டு வரும் போது பாரத தேசத்தின் எல்லையிலிருந்து அதாவது காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டிலிருந்து (Line of Control )20 கி.மீ சுற்றுளவு பகுதிகளில் இச்சட்டம் அமுல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் நாட்கள் நகர நகர மற்ற பகுதிகளிலும் இச் சட்டம் அமுல் படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் Rajouri, Poonch, Anantnag, Baramulla, Budgam, Kupwara, Pulwama, Srinagar போன்ற மாவட்டங்களிலும் இச் சட்டம் அமுல் படுத்தப்பட்டது.  மேலும் 2001-ல் ஆகஸ்ட் மாதம் மேலும் சில பகுதிகளுக்கு இச் சட்டம் அமுல் படுத்தப்பட்டது.  காஷ்மீரில் உள்ள சூழ்நிலை ஜம்முவிற்கும் பரவியதால், ஜம்முவில் உள்ள Jammu, Kathua, Udhampur, Doda   Nghd;  போன்ற சில மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
இவ்வாறு விரிவுப்படுத்த வேண்டிய சூழ் நிலை ஏன் ஏற்பட்டது என்பதை பற்றி காஷ்மீர் சட்ட மன்றத்தில் விவாதித்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சட்டத்தை அமுல் படுத்திய பின்னர் இராணுவத்தினர் தங்களது பணியின் காரணமாக 80,000 ஏ.கே. 47 மற்றும் 56 ரக துப்பாக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டன, தொடர் சோதனையின் போது பயங்கரவாதிகளிடமிருந்து 1,300 மெஷின் கன் துப்பாக்கிகள், 2,000 ராக்கட் லாஞ்சர்கள், 63,000க்கு அதிகமான கையெறி குண்டுகள், 7 மில்லியன் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.  இவைகளை கண்டு பிடிக்கும் நடந்த சண்டையில் 5,108 ராணுவத்தினர் பலியானார்கள், 20,000க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்.  ஆகவே நிலைமை இவ்வாறு இருக்க் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோருவது சரியானது தானா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
தலை வெட்டி கொல்லப்பட்ட இளம் ராணுவ வீரரின் மனைவி கதறல்
தலை வெட்டி கொல்லப்பட்ட இளம் ராணுவ வீரரின் மனைவி கதறல்
இன்னும் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டகாசங்கள் குறைந்து விடவில்லை.  4.2.2010ந் தேதி பாகிஸ்தானில் உள்ள முஸப்பரபாத்தில் அனைத்து பயங்கரவாத அமைப்பின் பொறுப்பாளர்கள் ஒன்று கூடி கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினாலும் இன்னும் நமது நோக்கம் நிறைவேறவில்லை என்றும், இதற்காக மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்கள. (ஆதராம் Mjuhk; seemamustafa @gmail.com ) ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த முல்லா ஒமர் 17 டிவிசன்கள் உள்ளன, இவை நிழல் இராணுவமாக செயல்படும் என தெரிவித்துள்ளார்(reorganized his cadres into 17 divisions called the “ shadow armies” ) ஆகவே நிலைமை இவ்வாறு இருக்க எப்படி இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பது தெரியவில்லை.  காஷ்மீ;ர் மாநில சட்ட மன்றத்தில் ஒமர் அப்துல்லா பேசியது கண்டிக்க தக்கது, இனிமேலும் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது இந்தியாவின் இறையான்மைக்கு பங்கம் ஏற்படும் என்பது மட்டும் உண்மையாகும். இதை தட்டிக் கேட்கும் தைரியம் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

4 Replies to “காஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்”

  1. நான் ஜம்மு காஷ்மீரில் மூன்றாண்டு காலம் பணி புரிந்துள்ளேன்.ஆகையால் நான் கூறுவதில் உண்மை உள்ளது. அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தானின் மேல் அளவு கடந்த ஆசை. அதே சமயம் பாகிஸ்தானுடன் இருந்தால் தங்கள் கதி அதோகதிதான் என்ற உணர்வும் உள்ளது. காஷ்மீரத் (ஜம்மு லடாக் பகுதிகள் அல்ல) தலைவர்களுக்கு பாகிஸ்தானை போற்றியே வரும் எண்ணம் உள்ளது. அதே சமயம் தனி நாடாக இருந்தால் உலகளாவிய பதவி சுகம் கிடைக்கும் என்று மனப்பால் குடித்து
    வருகின்றனர். அவர்களுக்கு இந்தியாவின் மீது எப்பொழுதும் பாசம் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. ஆனால் அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு அவர்களை குஷிப் படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.
    ராணுவத்தை மட்டும் அங்கிருந்து அகற்றினால் அடுத்த நிமிடமே பாகிஸ்தானியர்கள் உள்ளே புகுந்து நாச வேலைகளை செய்வார்கள். இன்று இந்த கேடு கேட்ட ஓமர் அப்துல்ல நிம்மதியுடன் தூங்க முடிவதேன்றால், ராணுவப் பாதுகாபினாலேயே! அதுமட்டுமல்ல! இந்தக் கலைவாணி பயல்கள் இந்தியாவின் பல பாகங்களில் ஏராளமாக பொருள் சேர்த்து வைத்துரிக்கிரார்கள்.
    ஆகையால், இவர்களின் பேச்சை ஒரு போதும் கவனிக்கக் கூடாது. அதே சமயம் அவர்களை முழுதுமாக கண் காணிக்க வேண்டும். இதனாலேயே, ஒமரின் தாத்தா ஷேக் அப்துல்லாவை இந்திராவோ அல்லது நேருவோ ஒரு போதும் நம்பியதில்லை. ராஜீவ் நம்பியதால், 1989 ல், காஷ்மீர் பண்டிட்டுக்களை வேரோடு பெயர்த்து, இன்று சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்கின்றனர்.
    ராணுவத்தை இன்னும் தீவிரப் படுத்தி இந்துக்களைக் காப்பாற்ற வேண்டும்.

  2. இக்கட்டுரை மிகைப்படுத்தப்பட்ட வாதமாகவே தெரிகிறது.

    தமிழகத்தில், வீரப்பனை, “வீரப்பர்” என்றே அழைக்க வேண்டும் என்று ஒரு
    முதல்வர் கூறியதையும், இராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை அளிக்க
    வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானமே நிறைவேறியிருப்பதையும் ஏனோ
    கட்டுரை ஆசிரியர் மறந்து விட்டார்.

    ஒரு மாநில முதல்வர் அம்மாநிலத்தைச்சேர்ந்தவரின் நலம் வேண்டுவது
    இந்தியாவில் புதியதுமல்ல. அதை தடுக்கவும் முடியாது.

    பிரிட்டனில் வட அயர்லாந்து பிரதேசத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய
    காலத்தில் கீரியும்-பாம்புமாக சண்டை பிடித்த பிரிட்டீஷ் இராணுவத்தினரும்,
    அதிகாரிகளும், தீவிரவாதிகளாக இருந்து பின்னர் அரசியல்வாதிகளாக
    மாறியவர்களும் இன்று ஒருசேர பணி செய்கின்றனர்.

    இதே ஒமர் அப்துல்லா, கடந்த வாரம் ஒரு பேட்டியில், காஷ்மீர் மக்கள்
    அனைவரும், இந்தியா என் தாய் நாடு என்று அறைகூவ வேண்டும் என்று
    எதிர்பார்த்தால் அது என்றுமே நடக்கப்போவதில்லை என்று கூறினார். நமக்கு
    சங்கடமாக இருந்தாலும் உண்மை இதுதான். இந்தியன் என்று கூறாவிட்டால்
    சுடுவோம் என்று எவ்வளவு பேரை சுடுவது. உடல் இரணங்களை விட மன
    இரணங்கள் தலைமுறை தலைமுறைகளாக தொடரும்.

    எனக்கு இரணம், காஷ்மீர் பண்டிட்டுகள் துரத்தப்பட்டது. அங்குள்ள மக்களுக்கு
    இரணங்களே இருக்க முடியாதா என்ன? இரணங்களின் காயங்களுக்கு
    மருந்தளிப்பதைப் போன்று ஒரு சில தலைவர்களாவது பேச வேண்டும். இன்றைய
    நிலையில் காஷ்மீரிலோ, டில்லியிலோ இவ்வாறு பேச ஆளில்லை என்பது
    உண்மைதான். ஆனால் எதிர்காலத்தில் ஒருவர் வராமலா போவார்?

    ஒரு Flashback!
    பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடக்க தொடங்கும் போதே “இந்திய
    அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் பேச்சுவார்த்தை அமையும்” என்று
    மத்திய அரசைச்சேர்ந்த ஒருவர் பேசிவிட்டால், பேச்சுவார்த்தை துவங்காது
    அல்லது உருப்படாது.

    திரு.வாஜ்பாய் ஒரு கூக்லி அடித்தார்.
    இன்ஸானியத் கே முத்தே பர் ஆவோ பாத் கரேன்”. “மனிதத்தின் அடிப்படையில்
    வாருங்கள் பேசலாம்” என்றார். பேச்சுவார்த்தை தோற்றது உண்மைதான்.
    ஆனால், ஒரு சில பிரிவினைவாதிகள் Mainstreamக்கு வந்தார்கள்.

    இந்த பிரச்சினை தீர இன்னும் பல தசாப்தங்கள் ஆகும். திரு.வாஜ்பாய் போன்ற பல
    தலைவர்கள் நமக்கு தேவை. “நேர்மையானவர்-சொன்ன சொல் மீறாதவர்-தங்கள்
    பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பார்-அவரால் முடிந்ததை செய்வார்” என்னும்
    குணாதிசயங்களைக் கொண்ட தலைவர்களை எதிர்காலம் நமக்கு அளிக்கையில்
    இப்பிரச்சினை கண்டிப்பாக முடிவுக்கு வரும்.

    காஷ்மீரில் பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் உள்ளனர் என்பது எவ்வளவு
    உண்மையோ, அதைப்போன்றே, காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் சில
    அத்துமீறல்கள் நடந்துள்ளதும் உண்மையே! அதனால் பாதிக்கப்பட்டவர்கள்
    போராடுகையில் அவர்களையும், ஜிகாதிகள், தீவிரவாதிகள் என்று அழைக்கத்
    துவங்கினால், அம்மக்களில் பெரும்பான்மையினர் மேன்மேலும்
    அன்னியப்பட்டுத்தான் போவார்கள்.

  3. I think Balaji has also some point that can not be omitted. Even todya all Tamilians doing for SriLanka is the samethink Kashmiris doing for India. The people bit volatile so they kill all Hindus, even start attacking innocent SriLankas as well — That is Rubbish — this is all because of politician — they want people support — drive them emotionally — Language, religion, caste — and rob them — easy — do not do anything welfare of the people, stay in the power rob those poor people on the emotions — lack of education — that is all

  4. நமது இரண்டு வீரர்களின் தலையை வெட்டி எடுத்துச்சென்ற பாகிஸ்தானிய கயவர்களை கொன்று அவர்களின் தலையை பதிலுக்கு வெட்டி எடுத்துவரவேண்டிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கு மௌன சாமியாராக இருக்கிறார். பாதுகாப்பு அமைச்சரோ இன்னமும் மோசம். காங்கிரஸ் திருடர்களை வீட்டுக்கு அனுப்பினால் போதாது. நாட்டை விட்டே விரட்டவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *