ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்


shivaஹிந்து தர்மத்தில் மிக நீண்டகாலமாகப் போற்றப்படும் பழம்பெரும் வழிபாடுகளுள் ஸ்ரீருத்ரவழிபாடும் முதன்மையானது. வேதங்களிலும், மஹாபாரதம், இராமாயணம் முதலாய இதிஹாசங்களிலும் சிவபெருமானே ஸ்ரீருத்திரர்
என்று கூறப்படுகிறார். ருத்திரசேனைக்கு அவர் தலைவராக இருப்பதால், மஹாருத்திரர் என்றும் குறிப்பிடப்படுகிறார். பொதுவாகவே, ருத்ரர் என்ற சொல் சிவப்பரம்பொருளையே குறிப்பதாயினும், அது பலருக்கும், பல
குழுக்களுக்கும் பெயராக இருந்துள்ளமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

சைவாகமங்களிலும் சைவசித்தாந்தமரபிலும், பரசிவத்திலிருந்து தோன்றியவர்களே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐம்பெரும் மூர்த்திகள் இவர்களே முறையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல்,
மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களையும் ஆற்றுவதாயும் சித்தாந்தவிளக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும், சைவதந்த்ரங்கள் இந்த உலகம் காலாக்னி ருத்ரரினின்று தோன்றியதாயும், இறுதியில் அவரிலேயே ஒடுங்கும் என்றும் குறிப்பிடுவதாயும் தெரிகின்றது.

ஒருவரா..? பதினொருவரா..? பலரா..?

சிவபுராணங்களில், பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு பிரம்மனுக்கு உதவியாக இருப்பதற்காக சிவபெருமான் பிரம்மாவின் நெற்றியிலிருந்து ருத்திரர்களைப் படைத்ததாக கூறுகின்றன. இவ்வாறு தோன்றியவர்கள் “ஏகாதசருத்ரர்கள்” என்ற
பதினொரு பேராவர். சாக்ததந்திரங்களில் இந்த ருத்ரர்கள் மஹாசக்தியின் காவல் தேவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இந்த வகையில் ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுர சுந்தரியின் ஸ்ரீசிந்தாமணி கிரகத்தைக் காவல் புரியும் எண்ணில்லாத ருத்ரர்கள் பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது.

வேதத்தில் ருத்திரர்களைப் போற்றும் பகுதி ருத்ரீயம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர, மானிடர்களும் தம் தவவலிமையால், உருத்திரகணத்தவராயினர் என்றும் அறிய முடிகின்றது. இவர்களிடையே பலகுழுக்கள் காணப்பட்டதால், அவர்கள் “உருத்திரபல்கணத்தர்” எனப்பட்டனர். உருத்திரர் என்பது தமிழா? சம்ஸ்கிருதச்சொல்லா..? என்பதே பேராய்விற்குரிய ஒன்றாகும். தமிழில் ‘உரு’ என்றால் மேலான என்றும், திரம் என்றால் வழி என்றும் பொருள்கொண்டு உருத்திரர் என்றால், மேலானவழிச்செல்ல முயல்பவர்கள் என்று காட்டுகின்றனர்.

இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்கண்ணர்’ என்ற நாமம் உண்டானது.
முன்பு இருந்து மறைந்ததாக கருதப்படும் ‘லெமூரியா’ என்ற கடல் கொண்ட தமிழ்மண்ணில் வாழ்ந்த பலருக்கும் நெற்றிக்கண் இருந்தது என்றும் அவர்களே ‘உருத்திரர்’ எனப்பட்டனர் என்றும் கூட, சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வடமொழியில் ருத்ரன் என்றால், ‘அழச்செய்பவன்’ என்பது பொருளாகும். யாரை..? என்ற வினா எழும்புகிற போது, தீயவர்களை என்று குறிப்பிடுவர். இதைவிட, ருத்ரன் என்பவன் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் குறிப்பிடுவர்.
இதனைக் கந்தபுராணம்

இன்னலங்கடலுள் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரமமூர்த்தி உருத்திரனெனும் பேர் பெற்றான்

என்கிறது.

பதினொரு ருத்ரர்

ஒரு சமயம் பிரமனால், படைப்புத்தொழிலைச் செய்ய இயலாது போயிற்று. அவன் சோர்ந்து விழுந்து இறந்த போது, அவனது உடல், பரசிவனருளால் பதினொரு கூறாகி எழுந்ததென்றும் அப்பதினொரு கூறுமே ஏகாதச ருத்ரர்கள் என்று மத்ஸயபுராணம் குறிப்பிடுகின்றது.brahma_the_creator

வேறு நூல்களில் இந்த வரலாறு சிறிது வித்தியாசமாக சொல்லப்படுகிறது. பிரமனின் வேண்டுகோளின் படி சிவனால் பிரமனது நெற்றியிலிருந்து பதினொரு ருத்ரர் உருவாக்கப்பட்டனர். அவர்களினைக் கண்ட பிரமன் மயக்கமுற அவர்களே
தாமே படைப்புத்தொழிலைச் செய்யத்தொடங்கினராம். ஓவ்வொரு ருத்திரரும் கோடி ருத்ரரைப் படைக்க, பிரமன் சோர்வு நீங்கி எழுந்த போது, அங்கே பதினொரு கோடி ருத்திரர்கள் காணப்பட்டனராம்.. இதனால், வெகுண்ட பிரமன் சிவனிடம் அழுது விண்ணப்பம் செய்தான்.

எனவே, சிவபெருமான் ருத்ரர்களை அழைத்து படைப்புத்தொழிலைத் தொடர வேண்டாம் என்று கட்டளையிட்டு, அவர்களுக்கென்று, புதிய உலகம் ஒன்றைப்படைத்து அங்கே சென்று வாழக்கட்டளையிட்டருளினார்.. இந்த ருத்ரர்கள் வழிபாடு செய்த லிங்கங்களை “ருத்ரகோடீஸ்வரர் என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த ருத்திரர்கள் தம் உலகிற்கு அப்பாலும் போர்த்தொழில் செய்யும் வீரர்களிடமும் அவர்களின் ஆயுதங்களிலும், அவர்களின் கோபத்திலும் வந்து தங்குவதாயும் குறிப்பிடப்படுகின்றது.

இவர்களுக்கு உருவம் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை. இவர்களை குறிக்க பதினொரு லிங்கங்களை அமைத்துப் பூஜிக்கும் வழக்கமே காணப்பட்டது. என்றாலும், காஞ்சி கைலாசநாதர் கோவிலில் “ஏகாதசருத்ரரின்” சிற்பங்கள்
காணப்படுகின்றன.

இவர்களின் பெயர்கள் முறையே மஹாதேவன், ஹரன், ருத்ரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசானன், விஜயன், பீமதேவன், பவோத்பவன், கபாலி, சௌம்யன் என்பனவாகும்.

இவர்கள் வழிபட்ட லிங்கங்களில் முறையே தோமரம், கொடி, வாள், வஜ்ரம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டு, வில், மழு ஆகிய ஆயுதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகின்றது.

ஸ்ரீமத் பாகவதத்திலும் ருத்ரர்களின் வரலாறு சிறிது வித்தியாசமாகப் பேசப்பட்டிருக்கிறது. அவர்களின் பெயர்கள் அஜர், ஏகபாதர், அக்னிபுத்திரர், விரூபாட்சர், ரைவதர், ஹரர், பகுரூபர், த்ரியம்பகர், அசுரேசர், சாவித்ரர்,சயந்தர் என்பனவாகும்.

திருக்கச்சி ஏகம்பரைப் போற்றிய திருநாவுக்கரசர்

“விரைகொள் மலரவன் வசுக்கள் “ஏகாதசர்கள்” வேறுடைய
இரைக்கும் அமிர்தக்கரிய ஒண்ணா எங்கள் ஏகம்பனே”

என்று பாடுவதால், ஏகம்பரை ஏகாதசருத்திரர்கள் போற்றி வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகின்றது

சதம் என்றால் நூறு. இந்தவகையில் எண்திசையிலும், ஆகாயத்திலும், பாதாளத்திலுமாக திசைக்குப் பத்துப்பேராக விரிந்து நிற்கும் நூறு ருத்திரர்களை “சதருத்ரர்கள்” என்று குறிப்பிடுகின்றனர். இந்த நூற்றுவரின் பெயர்களும் பல நூல்களில் காணப்படுகின்றன. வேதங்களும் இவர்களைப் போற்றுகின்றன. இவர்கள் கடல் மீதும் ஆகாயத்திலும் பயணம் செய்ய வல்லவர்கள். மான், மழு தரித்தவர்கள், சிவனைப் போன்ற உருவத்தினர் என்று பலவாறாக கருதப்படுகின்றது.

வேதங்களில் இந்திரன் முதலியவர்களைப் பற்றிக்குறிப்பிடும் போது, நம: என்ற சொல் பெயருக்குப் பின்னே குறிப்பிடப்படுகின்றது. ஆனால், அதே வேதங்கள் ருத்ரரைக் குறிப்பிடும் போது முதலில் வணக்கமாகிய “நம:” என்று சொல்லி அதன் பின் நாமத்தைச் சொல்வதையும் அவதானிக்கலாம். ஆனால், இந்த வேதப்பகுதிகள் யாவும் மூலருத்ராகவும் ஸ்ரீருத்ரராகவும் விளங்கும் மஹாருத்ரரான சிவப்பரம்பொருளையே சுட்டும் என்பதே வைதீகசைவர்களின் நம்பிக்கை.

சிவனால், அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்டது பாசுபதாஸ்திரம், ஆனால், சிவனால் முருகனுக்கு வழங்கப்பெற்றது “ருத்ரபாசுபதாஸ்திரம்” என்ற மஹாஸ்திரம் என்று கந்தபுராணம் சொல்வதும் இங்கு சிந்திக்கத்தக்கது.

ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரஜெபமும்

திரயீவித்யா என்ற ரிக்,யஜூர், சாமம் என்ற மூன்று வேதங்களுக்கும் நடுவில் இருப்பது யஜூர்வேதம். அது சுக்லயஜூர்வேதம், கிருஷ்ணயஜூர்வேதம் என்று இரண்டு பிரிவாகிறது. அதில் கிருஷ்ண யஜூர்வேதத்தின் நடுவில் ஏழு
காண்டங்கள் கொண்ட தைத்திரீய சம்ஹிதையில் நடுவிலுள்ள நான்காவது காண்டத்தில் ஐந்தாவது ப்ரச்சனமாக இருக்கிறது ஸ்ரீருத்ரம்.

இந்த ஸ்ரீருத்திரத்தில் 11 அனுவாகங்கள் உள்ளன. இது ஸ்ரீ ருத்ரம், மஹாருத்ரம், சதருத்ரீயம், நமகம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீ ருத்ரத்தின் நடுவில் சிவ நாமம் பதிந்திருப்பது அற்புதத்திலும் அற்புதமாகும்.

நீரில் நின்று கொண்டு ஸ்ரீ ருத்ரம் சொன்னால் மழை வர்ஷிக்கும் என்பது நம்பிக்கை. இதனை சிவலிங்க அபிஷேகத்திலும், சிவபூஜையிலும் தவறாமல் பயன்படுத்தி வருவார்கள்.

பலரும் இதனை தமிழில் மொழிபெயர்க்கவும், அதே போல, கவிநடையிலேயே தமிழ் வடிவம் பெறச்செய்யவும் முயன்று வந்திருக்கிறார்கள். சைவர்களின் முக்கியமான ஒரு பிரமாணமாகவே ஸ்ரீ ருத்ரத்தை நாம் தரிசிக்கலாம்.
திருநாவுக்கரசு நாயனார் பாடிய நின்ற திருத்தாண்டகமும் தமிழில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் என்று போற்றப்பட்டு வருகின்றது.

srirudram
ருத்ர பாராயண கிரமத்தில், ஸ்ரீ ஏகாதசருத்ரீயம், ருத்ரஏகாதசீ, மஹாருத்ரம், அதிருத்ரம் என்கிற விசேடமான விரிவான பலர் கூடி பாராயணம் செய்யும் மரபுகளும் வைதீக சைவர்களின் வழக்கில் விரவிக்காணப்படுகின்றன.
இப்போதெல்லாம் சிதம்பரம் முதலிய திருக்கோவில்களில் ஏகாதசருத்ரஹோமம் போன்றவை மிகவும் பிரபலமடைந்துள்ளன. இதற்கு காரணமாக உடனடியாக பலனும், சிவனருளும் கிடைப்பதாகச் சொல்லப்படுகின்றது.

பெரிய புராணத்தில் ‘உருத்திரபசுபதி நாயனார்’ என்பவரும் 63ல் ஒருவர். இவர் ருத்ரம் ஓதியே நாயனார்களில் ஒருவரானவர். அதைத் தவிர ஆலய வழிபாடுகளோ, அடியார் வழிபாடுகளோ கூட இவர் செய்ததாகச் சொல்லப்படவில்லை. ஆக, இவர் வரலாறு ருத்ரம் ஓதுதலில் சிறப்பை உணர்த்தவே பெரிய புராணத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ருத்ரவீணை, ருத்ரபிரியாகை, ருத்ரபர்வதம், ருத்ரரிஷி துர்வாஷர், சதுர்த்தசீ ருத்ரவிரதம் , ருத்ரபட்டம், ருத்ராக்னி, ருத்ரதீபம், போன்றவையும் ருத்ரம் சார்ந்து சிந்திக்க வேண்டியனவே.

ருத்ரர் வழிபாடு

ருத்ரமூர்த்திக்கு ஆலயங்கள் , சந்நதிகள் அமைந்திருப்பது மிகவும் குறைவு. என்றாலும் திருமாணிக்குளி பீமருத்ரர் ஆலயம் ருத்ரருக்கான ஆலயங்களில் பிரபலமானது. கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியில் அம்புஜாட்சி உடனாய வாமனபுரீஸ்வரராலயம் அமைந்துள்ளது.

இங்கு கருவறையின் முன்பு திரையிடப்பட்டு நீலவண்ணத்தாலான அத்திரையில் சிவப்பு வண்ண நூலால் ‘பீமசங்கரர்’ என்ற பீமருத்ரரின் திருவடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். சிறப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடைய இந்த ருத்ரரின் திருவடிவம் அக்னிஜ்வாலையுடன் எட்டுக்கரங்களுடன் காணப்படுகின்றது. இக்கோவிலில் நடத்தப்படும் நான்கு கால பூஜைகளும் இந்த திரையிலுள்ள பீமருத்ரருக்கே நடத்தப்படுகின்றன. பூஜை முடிந்ததும் உள்ளே உள்ள சிவலிங்கத்திருமேனிக்கு தீபாராதனை மட்டுமே செய்யப்படுகிறது. இத்தகு புதுமையான வழிபாட்டிற்கு பல புராணக்கதைகளை அத்தலபுராணம் பேசுகிறது.

இதே போல, திருக்குடந்தை என்ற கும்பகோணத்தில் நாகநாதசுவாமி கோவிலில் பிரளயகாலருத்ரருக்கு திருவடிவம் அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. திருவெண்காட்டில் அகோரருத்ரருக்கு அழகான பெரிய வடிவம் உள்ளது. அதே போல, திருவண்ணாமலையில் காலாக்னிருத்ரர் சந்நதி இருக்கிறது. ஆனால், அம்மூர்த்தியை பைரவர் என்றே அழைத்து வழிபாடாற்றுவதாயும் தெரியவருகின்றது.

இதே போல, பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹாதேவன் என்ற அஷ்டருத்ரருக்கும் திருக்கடவூரில் திருமாளிகைச்சுற்றில் திருவுருவங்கள் உள்ளதாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் அத்திருவடிவங்களின் மேல் அஷ்டவசுக்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதாயும் தெரியவருகிறது. ஆனால், சிலர் அஷ்டபைரவர்களையும் வேறு சிலர் சிவனுடைய ஆஷ்டு வித்யேஸ்வரரையுமே அஷ்ட
ருத்ரராக கருதுகின்றனர். எனவே, இது தொடர்பில் ஆய்வுகள் நடைபெற வேண்டிய தேவையுள்ளது.

மயானத்தில் சிவபெருமான் ருத்ரதாண்டவம் செய்வதாக குறிப்பிடப்படுகிறது. இங்கே காட்டப்படும் மய என்பதற்கு உருவாக்குதல் என்றும், அயனம் என்பதற்கு தொடர்ந்து செல்லுதல் என்றும் பொருள். இதனை ஸ்மசானம் என்ற சொல்லால் குறிப்பது தவறு என்றும் பெரியவர்கள் காட்டுவர். இதனால், உருத்திரசமயிகளும் பாசுபதர்களும் தம் வழிபாட்டிடங்களை மாயானம் என்று சொன்னார்கள் என்றும் தெரிய வருகின்றது. கச்சிமயானம், திருக்கடவூர்மயானம்,
வீழிமயானம், காழிமயானம், நாலூர் மயானம் என்ற ஐந்து மயானங்கள் சிவவழிபாட்டாளர்களுக்கு முக்கியமானவையாக காட்டப்படுகின்றன.

இதே போல, ருத்ரவழிபாடுகள் ஈழத்தில் நடைபெற்றமைக்கான ஆதாரங்கள் இப்போது இல்லாதவிடத்தும், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஸ்தலங்களை அடுத்து ருத்ரமயானங்கள் அருகில் காணப்படுவதும், அருகிலேயே ஆலய தீர்த்தம் உள்ளதும், அங்கெல்லாம் ருத்ரவழிபாடு நடந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் என்ற ஊரில் மயானத்திற்கு மிக அண்மையாக, மயானத்தை நோக்கிய வண்ணம் பெரியதொரு சிவாலயம் இராஜகோபுரத்துடன் காணப்படுவதும், ருத்ரவழிபாட்டுடன் இணைத்து சிந்திக்க வைக்கிறது. இதனை
விட, பிற்காலத்தில் இங்கிருந்த ருத்ரவழிபாடு பைரவ வழிபாட்டுடன் கலந்திருக்கலாம் என்றும் எண்ண முடிகின்றது.

ஆக, ருத்ரர் பற்றிய விளக்கங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அது பற்றிய பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் ருத்ரரை சிவனுடன் இணைத்தும், கலந்தும், பேதப்படுத்தியும் மாறுபட்டும் சிந்திக்கும் நிலைமைகளும் விரவிக்கிடக்கின்றன. எனவே, ருத்ரர் பற்றியும் ஸ்ரீ ருத்ரம் பற்றியும் ஆய்வுகள் மேம்படவேண்டும். இது வரை ஆய்வுகள் நடைபெற்றிருந்தால் அவை பிரபலப்படுத்தப்பட வேண்டும். அதன் வாயிலாக, சைவத்தமிழ்ச்சான்றோர்கள் ருத்ரர் பற்றிய தெளிவு உண்டாக வழி செய்ய வேண்டும்.

36 Replies to “ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்”

  1. அன்பர் ஷர்மா அவர்களின் தொகுப்பு பிரமாதம். இந்த நற்பணி தொடரட்டும். வாழ்க வளர்க

  2. யாத இஷு​: ஶிவதமா ஶிவம் ப₃பூ₄வ தே த₄நு​: |
    ஶிவா ஶரவ்யா யாதவ தயாநோ ருத்₃ர ம்ருʼட₃ய || 1.2||

    ருத்ர, சிவாதி நாமங்கள் ஒரே வரியில்
    அமைந்திருக்கக் காண்கிறோம்.

    ‘நமோ பவஸ்ய ஹேத்யை’ எனும்
    வரி ‘மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி’
    எனும் சிவபுராண வசனத்துடன் ஒத்திசைவாக
    அமைந்துள்ளது.

    ஸாயண ஆசார்யரும், பட்ட பாஸ்கரரும் எழுதிய உரைகள்
    ருத்ர ப்ரச்நத்துக்குப் போதுமானவை;
    பிற ஆராய்ச்சிக் குழப்பங்கள் தேவையற்றவை.

    திரு கந்தசாமிப் புலவர் தமிழில் செய்த திருவாப்பனூர்ப் புராணம்
    ஸ்ரீ ருத்ர ஜபத்தைக் கூறுகிறது –

    கங்கை யமுனை பிரயாகை கன்ன வேணி காவிரிமற்
    றெங்கும் நடந்து சேதுமுதல் இயற்றுந் தீர்த்த யாத்திரைநெய்
    பொங்கும் ஓமம் சிவபூசை பொருவில் *சீருத் திரசெபமும்….

    இதை மின் தமிழ்க் குழுமத்தில் பகுதி பகுதியாக
    டாக்டர் காளைராசன் அவர்கள் வெளியிட்டு வருகிறார்

    தேவ்

  3. “முன்பு இருந்து மறைந்ததாக கருதப்படும் ‘லெமூரியா’ என்ற கடல் கொண்ட தமிழ்மண்ணில்”
    Sorry. There was never a land called Lemuria. Another later day invention by the late Russian lady of the Theosophical society. Let us not give credit to all these fictional theories.

  4. ஸ்ரீமயூரகிரியார் தமிழ் ஹிந்துவில் வழங்கியிருக்கும் மற்றுமொரு நல்லக்கட்டுரை இது.பாராட்டுக்கள்.வேதியிர் குடியில் பிறக்கவில்லை என்றாலும் ஸ்ரீ ருத்ரத்தினை கேட்கும் வாய்ப்பு படிக்கும் வாய்ப்பு இன்று அனைவருக்கும் கிடைத்துள்ளது. சதருத்ரீயம் மோக்ஷத்தின் சாதனம் என்ப்ர் பெரியோர். அதனை ஓதும் வாய்ப்பு விரும்புவோர் அனைவருக்கும் கிடைக்கவேண்டும். ஸ்ரீ சர்மா போன்றவர்கள் அதற்கு வழிசெய்யவேண்டும்.

  5. ஸ்ரீ சர்மா அவர்கள் ஸ்ரீ அப்பர் சுவாமிகளின் நின்றதிருத்தாண்டகம் ஸ்ரீ ருத்ரத்தின் சாரம் என்று பெரியோர்கள் கருதுவதாக கூறியுள்ளார். சிலப் பெரியவர்கள் ஸ்ரீமாணிக்கவாசக அடிகளின் சிவபுராணமும் ஸ்ரீ ருத்ரத்தின் சாரமென்கின்றனர். ஸ்ரீ தேவ் அவர்களின் பின்னூட்டம் அதற்குக்கட்டியம் கூறுகிறது. ஸ்ரீ மணிவாசகரின் போற்றித்திருவகவலும் ஸ்ரீ திரு நாவுக்கரையர் பிரானின் போற்றித்திருத்தாண்டகப் பனுவல்களில் ஸ்ரீ ருத்ரத்தின் ஆழ்ந்தப்பொருள் பக்தி பிரபாவம் அவற்றை ஓதும் போதும் கேட்கும் போதும் காண்கிறேன்.
    இன்னும் ஒன்று வேதம் சிவபெருமானுக்கே அதிகம் நமோ நம வென்று போற்றுவதை ஸ்ரீ ருத்ரத்தில் காணலாம். அதிலும் அவரது திரு நாமங்களுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம் வருகின்றது என்ற செய்தி ஸ்ரீ ருத்ரத்தினை அடிக்கடி கேட்க காதலுவகை ஏற்படுகிறது.

  6. சிவபரம்பொருள் உலகுயிர்களுடன் கலப்பினால் அதுவதுவாகவே இருந்து இயக்குகின்றான். உயிர்களின் கட்டுண்டநிலையிலும் அதாவது முத்திநிலையில் மட்டுமன்றி பெத்தநிலையிலும் அத்துவிதம்மாக உயிர் உலகுடன் கலந்து நிற்கின்றான். உலகிலுளுள்ள உயர்ந்தபொருள் இழிந்தபொருள் என்று கூறப்படுகின்ற அனைத்தும் அவனே. ‘ஒன்றும் நீயல்லை அன்றி ஒன்றில்லை’ என்ற மணிவாசகத்தின் கருத்தே ஸ்ரீருத்திரத்தில் விரிவாகப் போற்றப்படுகின்றது. அப்பர் பெருமானின் நின்ற திருத்தாண்டகம் ஸ்ரீருத்திரத்தின் கருத்தைக் கொண்டதே. அம்பலவானருக்குத் திருமஞ்சனம் செய்யும்போது நின்றதிருத்தாண்டகத்தை ஓதுவது சிவனடியார்களின் மரபு. ஸ்ரீருத்திரம், நின்றதிருத்ஹாண்டகம் இரண்டின் பொருளொற்றுமைகள் அறிந்து ஓத மிகப் பயனும் இன்பமும் பெறலாம். வழக்கம் போல ப்ரம்மஸ்ரீ சர்மா அவர்கள் சைவ விளக்கம் செய்யும் நல்லதொரு கட்டுரை அளித்துள்ளார்கள். வாழ்க்!

  7. / இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்கண்ணர்’ என்ற நாமம் உண்டானது./ கடியலூர் உருத்திரங் கண்ணனர் என்ப் பெயரிய சங்கச் சான்றோர் வாழ்ந்துள்ளார்.’இன்பஞ்செய்தலின் ஆங்கரன்; எம்பிரான், இன்பம் ஆக்கலின் சம்பு; இடும்பைநோய், என்பதோட்டும் இயல்பின் உருத்திரன், ‘ எனக் காஞ்சிப்புராணம் கூறுகின்றது. ஒரு நாமம் ஓருவம் ஒன்றுமிலானுக்கு, அவன் அருளும் திறம் பற்ரிப் ப்ல காரணப் பெயர்கள் புராணங்களிலும் ஆகமங்களிலும் வழங்கப் பெறுகின்றன. வேதத்திலும் வழங்கப் பெறும் இவ்வுருத்திர நாமம் குறிப்பிடத்தக்க சிறப்புடையது. ருதம் என்றால் துக்கம்; திரனென்றால் ஓட்டுபவன். எனவே, உருத்திர நாமத்திற்குத் துன்பத்தை ஓட்டுபவன் என்பதுவே பொருள். இப்பெயர் ‘அழுதல் எனும் பொருள் தரும் ‘ரோதனம்’ என்ற அடிச்சொல்லிலிருந்து பிறந்தது என்று கூறி, இப்பெயர்க்கு அழுபவன் என்ற பொருளையும் கூறி அதற்குத் தாங்களே புனைந்த கதைகளையும் கூறிக் கதைப்பர் சிலர், துக்கத்தை விரட்டுபவன் ஆகையால் அழுகையத் துடைப்பவன் என ப்ரம்ம்ஸ்ரீ சர்மா அவர்கள் சரியான பொருளைச் சுட்டியுள்ளார்கள். மஹாருத்திரர் ஒருவரே. அவரே நீலக்ண்ட பரமேசுவர்ர். அவரை வழிபட்டு உருத்திர சாரூபமும் உருத்திரப் பெயரும் பெற்றோ பலர். அவர்களைக் குணருத்திரர் என்று சைவமாபாடியம் கூறும். குணருத்திரர் மூவரில் ஒருவர். மஹாருத்திரர் மூவருக்கும் அப்பாற்பட்ட பரமேசுவரர் என ஆகமங்கள் கூறும். ருத்திரரைப் பற்றி அறியாதர்ர் மூவரில் ஒருவனாகிய உருத்திரனையே சைவர்கள் வழிபடும் கடவுளாகக் கூறுவர். உருத்திரர் பற்றிய மேலும் விவரங்களை வடமொழிக் கந்த புராணம் சம்பவகாண்டம் 20, 21 ஆம் அத்தியாயங்களிலும், பாம்பன் ஸ்ரீமத் குமரகுதாச சுவாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ சுப்பிமணிய வியாசம் என்னும் திருநூலிலும் பெறலாம்.

  8. இங்கே பதிவிட்ட அனைத்து அன்பர்களுக்கும் நன்றிகள்…

    சைவமாபாடியத்திருந்து மிகத்தெளிவான விளக்கத்தை முனைவர். கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்கள் காண்பித்தமை ருத்ரர் சம்பந்தமான பல்வேறு சந்தேகங்களை தீர்த்து வைக்கிறது.. சைவச்சான்றோரான அவர் இது போன்ற இன்னும் பல விடயங்கள் குறித்தும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று விண்ணப்பிக்கின்றேன்..

    தேவ் அவர்களுக்கு,

    //ஸாயண ஆசார்யரும், பட்ட பாஸ்கரரும் எழுதிய உரைகள் ருத்ர ப்ரச்நத்துக்குப் போதுமானவை; பிற ஆராய்ச்சிக் குழப்பங்கள் தேவையற்றவை.//

    இந்த கட்டுரையின் நோக்கு ஸ்ரீ ருத்ரம் பற்றிய ஆய்வன்று ருத்ரர்கள் பற்றிய ஆய்வேயாம்.. ஸ்ரீ ருத்ரம் சிவபெருமானையே குறிக்கிறது என்பது நமது நம்பிக்கை…

  9. ஸ்ரீ ருத்ரத்தினைப்பற்றி தமிழ் வழிபாட்டினை போற்றும் பெரியவர்கள் சில தவறானக் கருத்துக்களைப் பரப்பிவருகின்றனர். அவை
    1. ஸ்ரீ ருத்ரம் போற்றும் ருத்ரர் வேறு சிவபெருமான் வேறு. இந்தக்கட்டுரையும் முனைவர் ஐயா அவர்களின் விளக்கமும் அதனைத்தெளிவாக்கிவிட்டன.
    2. வேதத்தின் மத்தியில் ஸ்ரீ ருத்ரமும் அதன் மத்தியில் பஞ்சாக்ஷரமும் வருகிறது என்றக்கருத்தினையும் மறுத்து பஞ்சாக்ஷரம் இடையில் திணிக்கப்பட்டதாகக் கூறிவருகிறார்கள். ஸ்ரீ ருத்ரத்தின் அமைப்பே நமோ நம என்பதோடுப்பிண்ணிபிணைந்திருப்பதால் பஞ்சாச்சரியின் மூலம் ஸ்ரீ ருத்ரமே என்பது தெளிவாகிறது.
    3. அவர்களின் இன்னொரு அபத்தவாதம் ஸ்ரீ ருத்ரம் சிவபெருமானை திருடன், திருடர் தலைவன் என்று அவமானப்படுத்துகிறது என்பது. சிவபெருமானுக்கு அகோர கோர முகங்களும் இருக்கின்றன என்பதை அவர்கள் ஏன் மறந்துவிட்டார்கள் என்று தெரியவில்லை.
    4. எனக்கு அபத்தம் என்று தெரிந்தும் சரியாக பதில் தெரியாத ஒரு கேள்வியும் உண்டு வேதம் த்ரயி என்பதால் தமிழ் அருளாளர்கூறும் நான்மறைவேறாம். நான்காவதான அதர்வவேதம் சைவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. அதர்வசாகை அதர்வ வேதி அந்தணர்கள் யாவரும் சைவர் என்று ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாயர் கூறுகிறார். இங்கே அடியேனுக்கு எழும் கேள்வி அதர்வண வேதத்தினை சேர்த்தால் பஞ்சாக்ஷரி வேத நடுவில் வராதா வேதமுடியாகாதா. வேதம் த்ரயீ என்பதற்கு எமது ஆசான் அமரர் ஸ்ரீலஸ்ரீ அடிகளாசிரியர் கர்ம, பக்தி(உபாஸன) ஞானம் காண்டங்கள் என்று தமது திருமந்திர உரை நூலில் கூறுகிறார். இதில் இன்னும் வடமொழி அறிந்த வேத விற்பன்னர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
    சிவஸ்ரீ.

  10. சமீபத்தில் ராமாயண நவாஹ மஹோத்ஸவத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கிட்டியமையால் ராமகுணார்ணவத்தினின்று வேறான மற்ற விஷயங்களில் விமுகமாக இருக்க நேர்ந்தது.

    ருத்ர பகவானைப் பற்றிப் பேசும் வ்யாசம் சமர்ப்பித்த ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா மஹாசயருக்கு நன்றி.

    இந்த விஷயம் அதிவிஸ்தாரமாய் ருக், யஜுர் வேதங்கள், புராண ஆகமாதிகளிலிந்து விசாரம் செய்யப்பட்டு ஆங்க்ல பாஷையில் ஒரு வ்யாசமாக கீழ்க்கண்ட சுட்டியில் காணப்படுகிறது. விஷயத்தில் ருசி உள்ள அன்பர்கள் வாசிக்கலாம்.

    https://creative.sulekha.com/the-rudras-eleven_398301_blog

    மேற்கண்ட சுட்டியில் சில்பசாஸ்த்ரங்கள், விவிதபுராணங்கள், சதருத்ரீயம் போன்ற பல க்ரந்தங்களிலிருந்து கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட ஏகாதச ருத்ர நாமாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    ——-

    சிவகவசம் சிஷ்டர்களின் அனுசந்தானத்தில் உள்ள ஸ்தோத்ரம். இந்த்ராக்ஷி ஸ்தோத்ரத்துடன் காலை மாலை வேளையில் ஜபிக்கப்படுகிறது.

    ஸ்காந்த மஹாபுராணத்தின் ப்ரம்ஹோத்தர கண்டத்தில் காணப்படுவது

    அதில் சிவபெருமான் *ருத்ர* என விளிக்கப்படுகிறார்.

    ஜய ஜய ருத்ர, மஹாரௌத்ர, பத்ராவதார ( ருத்ரனுக்கு வெற்றி, மஹாகோபம் பொருந்தியவா, எல்லோரையும் காத்துரக்ஷிப்பவா) என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறார். மேலும் விளக்கம் தேவையின்றி *பரமசாந்தஸ்வரூபாய* எனவும் ஸ்துதிக்கப்படுகிறார்.

    அருவுருவானவன் என்பதால் ஒரு புறம் *நிராகாராய* என்று சொல்லப்படினும் அதிவிஸ்தாரமாய் சிவபெருமானது ரூபவர்ணனமும் கொடுக்கப்படுகிறது. பகவானது பல ஆயுதங்கள் சொல்லி வருகையில் *சக்ராத்யாயுத* என சக்ரம் தரித்தவரே எனவும் ஸ்துதிக்கப்படுகிறார். *ப்ரணவஸ்வரூபாய* எனவும் அனந்தன், வாஸுகி, தக்ஷகன் முதலான அஷ்டநாகங்களை பூஷணமாக அணிந்தவராயும் இன்னமும் பலப்பல விகுதிகளுடன் அதிவிஸ்தாரமாய் பகவானது ரூப, குண விசேஷங்கள் வர்ணிக்கப்படுகிறது.

    ——–

    ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து ஏகாதசருத்ரர்களின் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன (3-12-12). இதற்கு அடுத்த ச்லோகத்தில் எகாதசருத்ரர்களின் ருத்ராணிகள் (ருத்ரபத்நிகள்) பெயரும் சொல்லப்பட்டுள்ளன.

    धीर्धॄतिरसलोमा च नियुत्सर्पिरिलाम्बिका
    इरावती स्वधा दीक्षा रुद्राण्यो रुद्र ते स्त्रियः

    தீர் த்ருதிரஸலோமா ச நியுத்ஸர்பிரிலாம்பிகா
    இராவதீ ஸ்வதா தீக்ஷா ருத்ராண்யோ ருத்ர தே ஸ்த்ரிய:

    தீ:, த்ருதி:, ரஸலா, உமா, நியுத், ஸர்பி:, இலா, அம்பிகா, இராவதி, ஸ்வதா, தீக்ஷா என்ற பதினொருவரும் ருத்ராணிகளாவர். மேற்கண்ட சுட்டியில் ருத்ராணிகளின் நாமாக்கள் விஷ்ணுபுராணத்திலிருந்தும் கொடுக்கப்பட்டுள்ளன. பெயர்களில் வித்யாசம் காணப்படவில்லை.

    ——–

    எப்படி புருஷ சூக்தத்தில் *சஹஸ்ர* என்ற பதம் ஆயிரம் என்று ஒரு எண்ணிக்கையாக இல்லாது அஸங்க்யேயமாய் எண்ணிக்கையற்றதாய் சொல்லப்படுகிறதோ அதேபோல் மேற்கண்ட ஆங்க்ல வ்யாசத்திலும் *சதம் அனந்தம் பவதி; அஸங்க்யேயம்* – ருத்ரன் எண்ணிக்கையற்றவர் என்று சொல்லப்படுகிறது. அத்விதீயமான பரம்பொருளை அஸங்க்யேயமாய் சொல்வது உகந்ததன்றோ

  11. ப்ரத்யேகமாய் சிவபெருமானையும் விஷ்ணுவையும் வணங்கும் அடியார்களுக்கு என் வந்தனங்கள். சிவ விஷ்ணு அபேதமான விஷயத்தில் நாட்டம் உள்ள அன்பர்களுக்கு ருத்ர சம்பந்தமான சில சமன்வயமான் விஷயங்கள்.

    ———–

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் *ருத்ர* நாமம்

    சுலேகாவின் ஆங்க்ல வ்யாசத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் *ருத்ர* நாமா காணப்படுவதைப்பற்றி ப்ரஸ்தாபம் உள்ளது.

    *ருத்ரோ பஹுசிரா பப்ரு:* என்ற பதின்மூன்றாவது ச்லோகத்தில் 114வது நாமமாக *ருத்ர* நாமம் காணப்படுகிறது.

    அந்திம காலத்திலும் ப்ரளயகாலத்திலும் அனைவரையும் அழவைப்பவன் எனவும் துக்கங்களைக் களைபவன் என்ற படிக்கு இந்த நாமம் விளக்கப்படுகிறது.

    ———-

    காலாக்னி ருத்ரனும் *காலாக்னி ஸத்ருச க்ரோத* ராமனும்

    ஸ்ரீ ருத்ரத்தில் முதல் அனுவாகத்தின் கடைசீ மந்த்ரமான “நமஸ்தே அஸ்து பகவன் விச்வேச்வராய* என்ற மந்த்ரத்தினூடே *காலாக்னி ருத்ராய* என்ற பதம் காணக்கிட்டும். லோகாலோகங்களை பஸ்மமாக்குபவர் எனப்பொருள்படும். ஆனாலும் அப்படியான காலாக்னி ருத்ரனான பகவான் *பரமசாந்தஸ்வரூபாய* எனவும் ஸ்துதிக்கப்படுவதைக் கண்டோம்.

    ராமாயண நவாஹத்தில் சமீபத்தில் கலந்து கொண்டபடிக்கு ராம குணங்களைச் சொல்கையிலும் இந்த *காலாக்னி* என்ற பதம் வால்மீகி முனிவரால் எடுத்தாளப்பட்டது நினைவுக்கு வந்தது.

    ஆனால் ஆஸ்சர்யமான விஷயம் என்னவென்றால் எப்படி நீலகண்டனான உமாமஹேஸ்வரன் லோகாலோகங்களை பஸ்மமாக்குபவன் எனினும் பரமசாந்தனுமாகச் சொல்லப்படுகிறானோ அப்படியே ராமபிரானையும் வால்மீகி முனிவர் மிகவும் கோபம் கொண்டவனாகவும் மிகவும் பொறுமையுள்ளவனாகவும் சொல்வது.

    ராமாயணத்தின் முதல்காண்டமான பாலகாண்டத்தின் முதல் ஸர்க்கத்தில் நாரதர் ராமபிரான் பெருமையை வால்மீகி முனிவருக்கு சொல்வதாக அமைவது.

    विष्णुना सदृशो वीर्ये सोमवत् प्रिय दर्शनः |
    काल अग्नि सदृशः क्रोधे क्षमया पृथ्वी समः || १-१-१८

    விஷ்ணுனா ஸத்ருசோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்சன:
    காலாக்னி ஸத்ருச: க்ரோதே க்ஷமயா ப்ருத்வீ ஸம: (1-1-18)

    வீரத்தில் விஷ்ணுவைப் போலவும் காண்பவர்க்குக் குளிர்ச்சியான் பூர்ண சந்த்ரனைப் போலவும் கோபத்திலானால் ப்ரளய காலாக்னி போன்றும் பொறுமையிலோ பூமியையும் ஒத்தவன் ராமசந்த்ரன் என வால்மீகி முனிவருக்கு நாரதர் ராம குணார்ணவத்தைச் செப்புகிறார்.

    என்ன ஒரு சாம்யதை!!!!!!!! எப்படிப்பட்ட குணகாம்பீர்யம்!!!!!

    சிவ சிவ சிவ
    ராம ராம ராம

  12. இணையம்தோறும் “வைஷ்ணவானாம் யத: ஷம்பூ” என்று கூவிக் கொண்டே இருப்பவர்கள் இந்தப் பதிப்பையும் படித்து, பின் “ஹரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு” என்ற “மந்திரத்தையும்” ஓதி விட்டார்களேயானால் நன்றாக இருக்கும். அற்புதம்.

  13. ஞான(?) பூமி,

    உங்களுடைய வயத்தெரிச்சலை இங்கு வந்து கொட்டியதில் உங்களுடைய ‘பரந்த மனப்பான்மையும்’, ‘சகிப்புத் தன்மையும்’ தான் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்!

    இந்த ஞான பூமி போன்றவர்களது ‘holier than thou’ மனப்பான்மை போலியானது என்பதை எத்தனை பேர் புரிந்துக் கொள்வார்களோ, இறைவனுக்கே வெளிச்சம்.

  14. ஞானபூமியார்
    “இணையம்தோறும் “வைஷ்ணவானாம் யத: ஷம்பூ” என்று கூவிக் கொண்டே இருப்பவர்கள் இந்தப் பதிப்பையும் படித்து, பின் “ஹரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு” என்ற “மந்திரத்தையும்” ஓதி விட்டார்களேயானால் நன்றாக இருக்கும். அற்புதம்”
    இதனை ஸ்ரீ கந்தர்வன் ஸ்ரீ சாரங்கர் போன்ற வைணவர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எம்மைப் போன்ற சைவர்களும் ஏற்றுக்கொள்ள முடியாது.இது ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசயர் போன்ற கேவலாத்வைதிகளான ஸ்மார்த்தர்களுடைய நிலைப்பாடு.
    சைவர்களாகிய எம்மைப்பொருத்தவரையில் சிவமேபரம். திருமால் சிவனடியார். அவர் அணிந்துள்ள கவுஸ்துப மணிகூட சிவலிங்கமாகவே காண்போம். திருமாலின் அவதாரங்களான ஸ்ரீ ராமனும் ஸ்ரீ க்ருஷ்ணனும் கூட சிவபக்தர்களாகவே நாம் காண்போம்.
    இந்த நிலையிலிருந்து சைவரோ வைணவரோ ஸ்மார்த்த நிலைப்பாட்டிற்கு வரவேண்டிய அவசியம் இருவருக்கும் இல்லை என்றேகருதுகிறேன். வரவர் வழி அவரவருக்கு பொருத்தமானது.
    சிவஸ்ரீ.

  15. ஓஹோ திரு ஞானபூமியார் இங்கே வம்புக்கு இழுத்தது திருமாலடியார் ஸ்ரீ கந்தர்வன் அவர்களையா?இருக்கட்டும் ஸ்ரீ கந்தர்வன் போன்றோர் அதைப்பற்றி அசட்டை செய்யவேண்டியதில்லை. அவரது சித்தாந்தப்போக்கிலேயே தமிழ் ஹிந்துவில் தொடர்ந்து நல்ல ஆழ்ந்த அறிவார்ந்த செழுமையானக்கட்டுரைகளை எழுதவேண்டுகிறேன்.
    சிவஸ்ரீ.

  16. “சைவர்களாகிய எம்மைப்பொருத்தவரையில் சிவமேபரம். திருமால் சிவனடியார். அவர் அணிந்துள்ள கவுஸ்துப மணிகூட சிவலிங்கமாகவே காண்போம். திருமாலின் அவதாரங்களான ஸ்ரீ ராமனும் ஸ்ரீ க்ருஷ்ணனும் கூட சிவபக்தர்களாகவே நாம் காண்போம்.”
    Precisely the reason why the Hindu community is divided. We cannot even agree on this basic fact that the Supreme Brahman is ONE but known by many names. I am sorry to say that the author cannot look beyond the narrow vision of a Saivaite.

  17. \\\\இதனை ஸ்ரீ கந்தர்வன் ஸ்ரீ சாரங்கர் போன்ற வைணவர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்\\\\

    \\\\சைவர்களும் ஏற்றுக்கொள்ள முடியாது.\\\\

    ஹரியும் சிவனும் ஒண்ணு என்பதை பரமைகாந்திகளாகிய வைஷ்ணவர்களோ அல்லது சைவர்களோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாததை நான் இதுவரை இந்த தளத்தில் குணமாகவே போற்றி வந்துள்ளேன். தோஷமாக அல்ல. மேலும் அந்த பரமைகாந்தித்வம் நான் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்றும் எழுதி வந்துள்ளேன். இன்னமும் அப்படியே. பரமைகாந்திகளின் திருத்தாள்களில் என் சென்னியிருப்பதாக.

    காலாக்னி ருத்ரனையும் காலாக்னி சத்ருச க்ரோத ராமனையும் ஸ்மரிக்கு முன்பே இது சிவ விஷ்ணு அபேதத்தில் நாட்டமுடைய அன்பர்களுக்காக எனத் தெளிவாகச் சொல்லியே எழுதியுள்ளேன்.

    *காலாக்னி* என்ற சொல்லைக் கேழ்க்கும் போது ஸ்ரீ ருத்ரம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என இரண்டும் என் நினைவுக்கு வருவது எனக்கு பரமைகாந்தித்வம் இல்லாமையால். இரண்டும் எனது அனுசந்தானத்தில் இருப்பதால்.

    \\\\ “ஹரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு”\\\\இது ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசயர் போன்ற கேவலாத்வைதிகளான ஸ்மார்த்தர்களுடைய நிலைப்பாடு.\\\\

    ம்ஹும்……. இது எனது நிலைப்பாடு கூட அன்று.

    மேற்கண்ட இரண்டு சொற்றொடர்களிலே ஹரிஹர அபேதம் சொல்லும் முதற்பகுதியில் எனக்கு உடன்பாடு உண்டு……

    இரண்டாவது சொற்றொடரிலே தோஷாரோபணம் இருப்பதால்……. எனக்கு பெரியோர் போதித்த சிஷ்டாசாரத்தில் தோஷாரோபணம் தவிர்க்கப்பட வேண்டியது என்றும் இருப்பதால்…….

    இதை காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் செப்பிய படி……

    “அரி யாதவன் வாயிலே மண்ணு” ……. அதாவது யசோதைப் பிராட்டியிடம் கண்ணன் நிகழ்த்திய லீலையைச் சொல்லும் ஒரு சொற்றொடராக…… க்ருஷ்ண லீலையை ஸ்மரிக்கும் ஒரு சொற்றொடராக….. வல்லின “ற” வைப் புறந்தள்ளி இடையின “ர” வை சொற்றொடரில் ஏற்க போதிக்கப்பட்டிப்பதை நினைவு கூர்கிறேன்.

  18. \\\\\இணையம்தோறும் “வைஷ்ணவானாம் யத: ஷம்பூ” என்று கூவிக் கொண்டே இருப்பவர்கள் \\\\\\

    ஸ்ரீ ஞானபூமி, “வைஷ்ணவானாம் யத: சம்பூ” என்பது ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் ச்லோகம். ச்லோகத்தை சான்று காட்டலை ச்லோகம் சொல்லல், பாராயணம் செய்தல், அனுசந்தானம் செய்தல் என்ற படிக்கு நினைவு கூர்தல் முறையான சொற்ப்ரயோகம். “கூவுதல்” போன்ற சொற்ப்ரயோகங்களை ஏன் கையாள வேண்டும்.

    உங்களுக்கு அபிப்ராய பேதம் இருக்கும் பக்ஷத்தில் அபிப்ராய பேதங்களை இயன்ற வரை பணிவான நயமான சொற்களால் பகிருவது முறையான கருத்துப் பகிர்வு ஆகுமே.

  19. \\\\கேவலாத்வைதிகளான ஸ்மார்த்தர்களுடைய \\\\\

    ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய,

    மேற்கண்ட jargons கலந்த சொற்றொடரைத் தாங்கள் உபயோகித்தமை. சில விஷயங்கள்.

    ஸ்மார்த்தரல்லாத (ஸ்ம்ருதிகளை அனுசரிக்காத) வணக்கத்திற்குறிய பல கேவலாத்வைத சான்றோர்கள் உண்டு.

    ஸ்மார்த்தர்கள் தங்களை ஸ்மார்த்தர்கள் என்று சொல்வது ஒரு பக்ஷம்.

    வைஷ்ணவர்கள் ஸ்மார்த்தர்களை ஸ்மார்த்தர் என சுட்டுவதில்லை. ஏனெனில் சடங்குகளுக்கு ஆதாரமான ஸ்ம்ருதிகள் த்ரிமதஸ்தர்களுக்கும் பொது என்பதாலும் ஸ்ம்ருதிகளை எல்லோரும் அனுசரிப்பதாலும். வைஷ்ணவர்கள் தங்கள் பரிபாஷையில் ஸ்மார்த்தர்களை ஸ்மார்த்தர்கள் என்று அழைக்காது சாமான்யர்கள் என்றே அழைப்பர்.

    Jargons களை அதனதன் context ல் புரிதல் சரி.

  20. \\\\Precisely the reason why the Hindu community is divided. We cannot even agree on this basic fact that the Supreme Brahman is ONE but known by many names. I am sorry to say that the author cannot look beyond the narrow vision of a Saivaite.\\\\

    With all due respects to your considered opinion, let me differ from some of the views expressed with reasons.

    \\\Supreme Brahman is ONE but known by many names\\\\ True

    \\\ I am sorry to say that the author cannot look beyond the narrow vision of a Saivaite.\\\

    No, here the rather than blaming the author as that of “cannot look beyond the narrow vision of a Saivaite”, I look at it appreciatively like ” the author is not going beyond his focused vision of a Saivite”.

    It is not like…… sort of…… Hindu community is divided. But rather divisions are sort of imminent part of Hinduism. And, I never consider these divisions ever have weakened the society. Let me explain this with a similar case.

    You should be aware of *Orthodox* jews. Zionists redeemed the Biblical Land of what they call today *Israel* after too much of planning; strategy; bloodshed and what not. And the pains they took and are taking for capturing and beholding *Jerusalem*. In all these, there were and are *n* number of jewish groups often with contrary view points. Especially, what looks to the outsiders, *the funny* *Orthodox Jews*…….who till today are not reconciled to the human redemption of the promised land…… since, they believe the redemption is *God* promised and it is *God* who should redeem the land…..

    As you may be aware of, irrespective of what they believe or not believe *the funny* *Orthodox Jews* are also part of the strong *Jewish Diaspora* and Israel, in spite of *n* number of contrary viewpoints, are still a strong nation and getting strengthened leaps and bounds.

  21. இந்தியன்
    “Precisely the reason why the Hindu community is divided. We cannot even agree on this basic fact that the Supreme Brahman is ONE but known by many names. I am sorry to say that the author cannot look beyond the narrow vision of a Saivaite”.
    ஐயா இந்தியரே! யாமும் பாரதியரே! பரம்பொருள் ஒன்று அவரது பெயர்கள் பல என்பது உங்கள் நிலை. ஹிந்து சமூக ஒற்றுமைக்கு உங்களுடைய நிலையை ஏற்றால் நாமும் ஸ்மார்த்தராகிவிடுவோம் சைவராக இருக்க இயலாது.சைவம் என்ற மரபு, வைணவர் எனற மரபு அததற்குள்ளும் பல்வேறு கிளைகள் இவைகளெல்லாம் சேர்ந்ததே ஹிந்துப் பாரம்பரியம். அதை சங்கரவேதாந்தத்திற்குள் அடைக்க முயல்வது ஏற்புடையது அன்று. இன்னும் சொல்லப்போனால். Diversity and inclusiveness constitute the core of Bharathiyatha and Hinduthuva. நீங்கள் சொல்லும் போக்கு ஹிந்து சமூதாயத்தை அபிரகாமிய சமயங்களைப்போலாக்கும் முயற்சி. அது ஆரோக்கியமானது அன்று..

  22. சிவஸ்ரீ. விபூதிபூஷண் –

    சங்கர வேதாந்தம் என்பது எதையும் குறிப்பிட்டுள்ள எல்லைக்குள் அடைக்க முயல்வது அல்ல. ஏனெனில் கதவு இருந்தால் அல்லவா அடைக்க முடியும். ? அறுவகை மதம் என்ற பிரிவுகளை தொகுத்து ஒரு வடிவம் கொடுத்தார் அவ்வளவே. அத்வைதம் என்பதும் . சங்கரர் உருவாக்கியதில்லை. பிரபஞ்சம் தோன்றிய நாள் முதலாக இருக்கும் உண்மை. எந்த புதிய மதத்தையும் அவர் உருவாக்க வில்லை. மேலும் அத்வைதம் என்பது open and all inclusive ஆன விஷயம்..ஆபிரகாமிய மதங்கள் குறுகிய எல்லையை தாண்டி வரமுடியாதவை. ஏனெனில் அவற்றுக்கு மூடப்பட்ட கதவுகள் மட்டுமே உண்டு. வெளிக்காற்று உள்ளே வர விடமாட்டார்கள். நாங்கள் அப்படி அல்ல. சிவ வடிவாகவே அனைத்தையும் (விஷ்ணு உட்பட) காண்பது என்பது உயர்ந்து விளங்கும் சைவம் ஆகும். ஆனால் விஷ்ணுவடிவாக அனைத்தையும் காணும் மரபே உண்மையான வைணவமும் ஆகும். பெயர்கள் , உருவங்கள் வேறு வேறு ஆயினும் அடிப்படை ஒன்றே. இதனை ஏற்காத வெறியர்களால்/ மூடர்களால் தான் , சரித்திரம் தோன்றாத நாள் முதலாகவும் , சரித்திரம் தோன்றிய பின்னரும் , சனாதன தர்மமும், மனித இனமும் பெரும் சோதனைகளை சந்தித்து வந்துள்ளன. சாக்தமும் அனைத்தையும் அன்னை வடிவில் காணும் ஒரு அற்புதம் ஆகும். ஆணாதிக்க வெறியர்களுக்கு சூடு கொடுக்க வந்த அற்புதமே சாக்தம்.

    மாந்தோப்பில் புகுந்த சில மூடர்கள் மாமரத்தில் எவ்வளவு இலைகள் இருக்கின்றன என்று எண்ணிக்கொண்டு இருந்தனர். எண்ணிக்கையில் வித்தியாசம் வந்து வீண் விவாதம் செய்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒரு புத்திசாலியும் இருந்தான். அவன் மரத்தில் ஏறி பல மாம்பழங்களை பறித்து, சுவைத்து உண்டான் என்று ஒரு கதை ராமகிருஷ்ண பரமஹம்சரில் வரும். அதே போல தான், இங்கு நடக்கும் தேவை இல்லாத சண்டைகள். நான் மட்டுமே உயர்ந்தவன் , நான் சொல்லும் கருத்து மட்டுமே சரி , மற்றவர் சொல்லும் கருத்து தவறு என்று சொல்வது நமது அறியாமையை மட்டுமே காட்டுகிறது.

    வளர்வோம், உயர்வோம், வாழ்வோம்.

    இறை நம்பிக்கையை விட இறை நம்பிக்கை இன்மையே கூட உயர்ந்தது தான். ஆனால் எங்கெங்கு எல்லைகள் வகுக்க ஆரம்பிக்கிறார்களோ, அங்கெல்லாம், இறை நம்பிக்கை , இறை நம்பிக்கை இன்மை இரண்டுமே தாழ்ந்து போகின்றன. நாராயணனே நல்லவன் என்று ஒருவர் சொன்னால் , மற்றவர்கள் எல்லாம் நல்லவர்கள் அல்ல என்று பொருள் அல்லவா? மற்றவன் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பானா? வீண் விரோதமும் சண்டையும் தான் வரும். அதேபோலத்தான் சிவமும். சிவமே பரம்பொருள் என்றால், மற்றதெல்லாம் பரம்பொருள் அல்ல என்ற பொருள்தான் வருகிறது. மற்றவனெல்லாம் வாயிலே பஞ்சு மிட்டாயா சாப்பிட்டுக்கொண்டிருப்பான் ?

    ஜோதிடத்தில் மாமேதையான திரு கே எஸ் கிருஷ்ணமூர்த்தி , அவர்வாழ்ந்த காலத்தில், ASTROLOGY AND ADHRISHTA – என்று ஒரு மாதப்பத்திரிக்கையை நடத்தி வந்தார். அதில் 1964-ஆம் வருடம் வந்த ஒரு இதழில் , ஒரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :-

    ” BY APPLYING ANY METHOD, ONE WILL BE ABLE TO PREDICT THE TRUTH.”

    ஜோதிடத்தில் கூட பல முறைகள் உள்ளன. ஒவ்வொரு முறையை பின்பற்றுவோரும் தன்னுடைய வழி/ முறை மட்டுமே சரி என்று கூறும் அறியாமை அக்காலத்தில் இருந்தது. அவர்களுக்கு சாட்டை அடி கொடுக்கவே, திரு கே எஸ் கே அவர்கள் மேலே கூறிய கருத்தை வெளிப்படுத்தினார்.

    கடவுள் நம்பிக்கையிலும், எந்த வழி, எந்த மொழி, எந்த உருவம் , எந்த மத நூல் வேண்டுமானாலும் பின்பற்றி நல்வழி, நல்ல கதி அடையலாம். ஆனால் பிற வழிகள், பிற மொழிகள், பிற உருவங்கள், பிற மதநூல்கள் இவற்றை அழித்துவிட்டு , தங்களுடைய வழி, தங்களுடைய மொழி,தங்களுடைய உருவம், தங்களுடைய மதநூல் ஆகியவை மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைக்கும் மூடர்கள் , காலப்போக்கில் கடவுளால் அழிக்கப்படுவார்கள். இது உறுதி.

  23. ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயருக்கு
    நன்றி. அத்வைதிகளுக்குள்ளும் ஸ்மார்த்தரல்லாதவர்கள் உண்டு என்ற ஒரு உண்மையை உணர்த்தியதற்கு அடியேனின் நன்றி.பல்வேறு சமயங்கள், வழிபாட்டுமுறைகள், தத்துவப் பள்ளிகள், மார்கங்கள் இருப்பது நமது பாரதப்பாரம்பரியத்தின் பண்பாட்டின் சிறப்பு. அதை ஒற்றைத்தன்மையதாக மாற்றும் முயற்சி அவசியமில்லை என்பதனை மீண்டும் வலியுறுத்தியமைக்கும் நன்றி.
    சிவஸ்ரீ.

  24. With due rewspect to the author and Shri krishnakumar,
    When one claims Shiva is ONLY Parabrhmam, it sort of claims superiority over Vishnu and Vaishvanism. This is what causes division in our religion.(similar hues and tones of Abrahamic religions that have such claims of superiority ) My family are Vaishnavites. Our Kuladeivam is Durga Matha. Few years back, we went on a pilgrimage to all the Arupadaivedu. In my humble opinion and limited knowledge , our Sanatana Dharma is not and should not be encased in such narrow outlook.
    It will be easy to accept if the author claims that Shiva is his Istha Deivam. My apology if my response had offended anyone.

  25. சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
    சொல்” லென்று இரணியந்தான் உறுமிக் கேட்க,
    நல்லதொரு மகன் சொல்வான்:-‘தூணி லுள்ளான்
    நாரா யணந்துரும்பி லுள்ளான்’என்றான்.
    வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
    மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
    அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
    அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ?
    கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
    மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
    விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே-

    சுப்பிரமணிய பாரதியார்.

  26. அன்புள்ள ஹிந்துத்துவர்களுக்கு வணக்கம்.
    கரூரில் சிவ்த்திரு. மணிகண்டன் என்ற சிவனடியார் சிவாலயக் குடமுழுக்கு ஒன்றில் கலந்து கொண்டு வீடுதிரும்பும் போது போலீஸல் தாக்கப்பட்டார் அதன் மீது சட்டப்பூர்வ நடவ்டிக்கை கோரி ஒரு இணையக்கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதை அறிந்து அதில் அடியேனும் கையெழுத்து இட்டேன். நீங்கள் அனைவரும் கையெழுத்து வழங்குவதோடு உங்கள் நண்பர்களையும் அவ்வண்ணமே கையெழுத்து அளிக்கும் படி வேண்டுகிறேன். பொதுவாகவே நமது கோயில் திருவிழாக்களில் போலிசார் பக்தர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொள்கிறார்கள் என்ற வருத்தமும் அடியேனுக்கு உண்டு.

    கையொப்பமிட கீழே
    You can sign my petition by clicking here.

  27. அன்புக்குறிய ஹிந்துத்துவ அன்பர்களுக்கு,
    வணக்கம். மேற்கண்ட அடியேனின் சுட்டியில் சரியாக விண்ணப்ப இணைப்பு வெளிவரவில்லை. கையொப்பமிடகீழே கிளிக் செய்யவும்

    https://www.change.org/en-GB/petitions/legal-action-against-the-policemen-s-manhandling-of-siva-devotees-in-lalgudi-requested

  28. ஆண்மையும் பெண்மையும் இணைந்து வாழவே நம் முன்னோர் வழி வகுத்தனர்.
    ஆணாதிக்கம் , பெண்ணடிமைத்தனம் இவை நாம் வாழும் காலத்ததின் கருத்தாக்கம்.அக்காலத்தின் உரிமை பிரச்சினை இல்லை. எல்லோருக்கும் அவரரவர் கடமை உண்டு- அதனுடன் சேர்ந்ததே உரிமை.

    மனிதன் முதலில் தெரிந்து கொள்ளும் உறவு அன்னையே . அன்னை வழிப்பாடு இறைவனை அன்னையாக பார்க்கும் இனிய உணர்வால் வந்தது.

    “ஆணாதிக்க வெறியர்களுக்கு சூடு கொடுக்க வந்த அற்புதமே சாக்தம்.” என்பது தவறான பார்வை.

  29. தவறான பார்வையை சுட்டிக்காட்டிய வாசகருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது கருத்தினை ஏற்கிறேன். அதேசமயம் நம் முன்னோர்கள் ஏற்படுத்திய நிலைகளில் இருந்து நாம் எவ்வளவோ வழுவி விட்டோம். எல்லா வழிபாட்டு தலங்களிலும் அது எந்த மதத்தை சேர்ந்ததாக இருந்தாலும் பெண்களுக்கு 50- இடஒதுக்கீடு செய்தால் மட்டுமே உண்மையான சமத்துவம் ஏற்படும். அந்த நிலை இன்னும் ஏற்படவில்லை. இதே நிலை நீடித்தால், பெண்களுக்கென்று தனியே மசூதிகள், சர்ச்சுகள், கோயில்கள் ஏராளமாக உருவாகும் நிலை வரும். இப்போது இருக்கும் மதங்கள் குப்பையில் தூக்கி வீசப்பட்டு, பெண்களுக்கென்று தனியே ஒரு மதம் உருவாக்கப்படும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

  30. அன்பார்ந்த ஹிந்துத்துவ பெருமக்களே உணர்வுடைய ஹிந்துக்களே வணக்கம். இந்த வேண்டுகோள் உங்களூக்காகவே உங்களூக்குமட்டுமே. சோழர்காலத்திய புராதனமான சிவாலயம் ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அது அரசின் திட்டங்களால் இடிக்கப்படும் அபாயம் உள்ளது. எனது சிவண்டியார் நண்பர் ஒருவர் கீழ்கண்டவிண்ணப்பத்தினை ஆன் லைனில் தயாரித்துள்ளார். நீங்கள் அதற்கு கீழே கிளிக் செய்யவும். ஏற்கனவே 40000 கையொப்பங்கள் விண்ணப்பம் பெற்றுவிட்டது. இதனை இன்னும் மிகப்பெரிய வெற்றியாக மாற்ற நமது சிவாலயம் காக்க கையொப்பமிடுங்கள். விவரங்களை அறிய தினமலர் செய்தியைப்படிக்கவும்.
    சிவஸ்ரீ

    https://www.change.org/petitions/stop-demolishing-1000-years-temple

    https://www.dinamalar.com/news_detail.asp?id=718261

  31. ஆயிரம் ஆண்டு பழமையான சோழர்காலத்திய சிவாலயம் காக்க கையொப்பம் இடும்படி எனது முந்தைய பின்னூட்டத்தில் வேண்டியிருந்தேன். அன்பர்கள் பலரும் உலகெங்கிலிருந்தும் கையொப்ப்பம் இட்டுவருகிறார்கள்.கையொப்பங்களின் எண்ணிக்கை 6000 த்தை நெருங்கிவிட்டது. கையொப்பமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை அனுப்பி கையொப்பமிடக்கூறுங்கள்.
    அன்புடன்
    சிவஸ்ரீ

    https://www.change.org/petitions/stop-demolishing-1000-years-temple

    https://www.dinamalar.com/news_detail.asp?id=718261

  32. சிவஸ்ரீ ஐயா அவர்களுக்கு நன்றி. ஐயா அவர்களின் வேண்டுகோளின்படி இன்னும் இரு தினங்களில் 7500 கையொப்பங்கள் முழுமை ஆகிவிடும்.அடியேனும் அனைத்து சிவனடியார்களுக்கும் மெய்அன்பர்களுக்கும்,நண்பர்களுக்கும் மின் அஞ்சல் மூலமாகவும், முகநூல் மூலமாகவும் வேண்டுகோள் அனுப்பினோம் .எங்கள் கையொப்பம் ஏற்கனவே பதிவு செய்து விட்டோம்.சென்னை அன்பர் சசிதரன் மற்றும் நண்பர்களுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று நேற்று நேரில் மனு கொடுத்திருக்கிறார்கள்.

    நன்றியுடன்,

    சிவ.ஆ.இராசு

  33. உணர்வு கொண்ட ஹிந்துத்துவர்களே ஹிந்துக்களே வணக்கம். இணைய விண்ணப்பம் 6000க்கும் அதிகமான கையொப்பங்களைப்பெற்றுவிட்டது. அது 10000 கையெழுத்துக்களையேனும் பெற்றாகவேண்டும். ஆகவே அனைவரும் கையெழுத்திடவேண்டுகிறேன். ஹிந்துசமுதாயத்தின் எந்த ஒரு தனிமனிதனுக்குத்துன்பம் நேர்ந்தாலும் அது நம்மை பாதிக்கும் உணர்வை ஏற்படுத்தாவிட்டால் ஹிந்து என்பதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. அதே போல் ஹிந்துப் பண்பாட்டின் சின்னங்களாகவும் அங்கங்களாகவும் உள்ள ஆலயங்கள், புனித நூல்கள்,பசு, மகான் கள் ஆகியவற்றை பாதுக்காக்கவும் பறிபோயிருந்தால் மீட்கவும் நமக்கு உணர்வு அவசியம். அந்த உணர்வு இருக்கிறது என்பதற்கு ஒரு சில நாட்களில் 6000 கையொப்பங்களைப்பெற்ற இந்த விண்ணப்பம் ஒரு உதாராணம். உலகெங்கும் இருக்கும் ஹிந்துக்களே ஹிந்துத்துவர்களே வாருங்கள் ஹிந்து தர்மம் காப்போம்.
    சிவஸ்ரீ

    https://www.change.org/petitions/stop-demolishing-1000-years-temple

    https://www.dinamalar.com/news_detail.asp?id=718261

  34. இணையத்தில் மானம்பாடி சிவாலயத்தினை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. அந்த இயக்கத்தினை மேற்கொண்ட சிவனடியார் பெருமக்கள் அடியேனுக்கு அனுப்பிய ஈமெயில் செய்தி கீழே தருகிறேன். இந்தக்கையெழுத்து இயக்கத்தில் பங்கு கொண்ட ஆதரவளித்த அனைத்து தமிழ் ஹிந்து நண்பர்களுக்கும் நன்றிகள் பாராட்டுக்கள்.
    சிவஸ்ரீ.

    Dear all,
    Vanakkam,Sivayanama,Very glad to inform you all, the NHAI Dept had accepted our appeal.They were earlier proposed to lay road by occupying Manambadi Sivan temple area.Now they withdrawn their proposal!.
    So we thank you everyone on their part of support& action taken.
    We thank you Mr.D.CHANDRASEKAR REDDY, DGM[T]&PROJECT DIRECTOR,NHAI ,for his personal visit to the site[temple]& for accepting our appeal,
    Thanking you all once again,pl.view the attachment.

  35. சிவபிரான் முக்குணமற்றவர் என்று எங்காவது சொல்லப்பட்டிருந்தால் எடுத்துக் காட்டவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *