இந்து முன்னணி தலைவர் படுகொலை: ஆர் எஸ் எஸ் கண்டன அறிக்கை

jaihind
ஆர்.வி.எஸ். மாரிமுத்து,
தலைவர்,
ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழகம்

கண்டன அறிக்கை

தமிழகத்தில் தேச பக்தியை வளர்ப்பதற்கும், இந்து தர்மத்தை காப்பதற்கும் பாடுபட்டு வருபவர்களை பயங்கரவாதிகள் கொடூரமாக வெட்டி கொலை செய்வதும், கொடூர தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்து முன்னணியின் மாநில ö சயலாளர் திரு. வெள்ளையப்பன் வேலூர் பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் பயங்கரவாதிகளால் இன்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். திரு.வெள்ளையப்பன் தனது வாழ்க்கையை சமுதாயப் பணிக்காக அர்பணித்தவர். தேசப் பணிக்காக இடையாறாத பணி செய்து கொண்டிருந்தவர். அவருக்கு உரிய பாதுகாப்பு தர தமிழக காவல்துறை தவறிவிட்டது.
தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து இந்து இயக்கத் தொண்டர்கள் பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலூரில் பாஜ கட்சியை சேர்ந் அரவிந்தரெட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். பாஜ கட்சியை சேர்ந்த புகழேந்தி, காளையார்கோயில் படைவென்றான் அம்பலம் ஆகியோரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். மேட்டுப் பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் ஆனந்த், நாகர்கோயில் பாஜ மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, குன்னூரில் இந்து முன்னணியின் ஹரி உள்ளிட்ட பலர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் தமிழக காவல்துறையினர் பயங்கரவாதிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருக்கும் காலங்களில் சமூகவிரோதிகளும், பயங்கரவாதிகளும் முழுமையாக கட்டுக்குள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் பயங்கரவாதிகள் சுதந்திரமாக தங்களது ச மூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் இந்து இயங்கங்களின் தொண்டர்கள் தமிழக அரசின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்து சட்டப்படியான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு உடனடியாக பயங்கரவாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப்பணியில்,

ஆர்.வி.எஸ். மாரிமுத்து,
தலைவர்,
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்,
தென் தமிழகம்.

 

9 மறுமொழிகள் இந்து முன்னணி தலைவர் படுகொலை: ஆர் எஸ் எஸ் கண்டன அறிக்கை

 1. prem on July 2, 2013 at 10:23 am

  என்னுடைய ஆழ்ந்த இரங்கள் மற்றும் இந்த கொடூர கொலையாளிகளை கண்டுபிடித்து உடனடியாக என்கௌன்ட்டர் செய்ய தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் நடைய்பெராமல் இருக்க தமிழக அரசு கடுமையான சட்டங்கள் கொண்டு வரவேண்டும்.

 2. M.Sadasivan on July 2, 2013 at 10:44 am

  ஜெயலலிதா அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டாம், அவர் இந்துக்களின் நலனுக்காக எதுவும் செய்துவிட போவதில்லை, ஜெயலலிதாவின் நாற்காலி ஆசையை மென்மையாக கண்டிக்க வேண்டாம், இவருக்கும், கருணாநிதிக்கும், காங்கிரஸ், மற்றும் போலி மதசார்ப்பின்மைவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, முலாயம் சிங்க், லாலு போன்றோரும் கங்கையில் குளித்து இந்துக்களாகத்தான் காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் செய்வது மதவாதிகளுக்கு துதி பாடுவது, திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்றோருக்கு மணிமண்டபம் அமைத்தல் தொடங்கி இந்த முதல்வர் செய்வது தேச துரோக செயல்களே! ஜெயலலிதா ஒரு தேச துரோகி, இந்து விரோதி, வெளியில்தான் ஜெயலலிதா, உள்ளே பல கருணாநிதிகள் உள்ளனர். இந்துக்களால் ஒதுக்கப்பட வேண்டியவர் ஜெயலலிதாவும்தான், ஜெயலலிதாவை எதிர்ப்பதில் நாம் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டாம்.

 3. மு.நாட்ராயன் on July 2, 2013 at 7:41 pm

  இந்துக்கள் என்றால் தங்களது வன்செயலை துண்டிவிடுவது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல். உலகம் முழுவதும் பயங்கர வாதத்தை தூண்டிவிட்டு வருகிறார்கள். இதனால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதத்தால் உலக மக்கள் அனைவரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்களின் செயல் தமிழகத்தில் வெகு வேகமாக பரவிவருகிறது. தினமும் பத்திரிக்கையை எடுத்தால் அவர்களின் உலக கொடுமைதான் தெரிகிறது. இந்திய இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாம் நமது ரத்தத்தை சிந்த வேண்டும். இந்துக்களே விளித்துக்கொள்ளுங்கள்!!!!

 4. sidharan on July 2, 2013 at 8:27 pm

  Jayalalitha is playing a double game- Pretending that she is a very devout Hindu but actually she is not interested in protecting Hindu Dharma. May be She is using islamic extremists to threaten Hindus organisations so that they may not grow in Tamilnadu. All she is interested in is power. She is backed by the church and the islamic forces.

 5. sidharan on July 2, 2013 at 8:28 pm

  BJP/RSS/HM’VHP leaders have to shed their callousness and start providing security to their first and second run leaders. Why are they so smug?

 6. SIVARAMAN on July 4, 2013 at 3:23 pm

  என்னுடைய ஆழ்ந்த இரங்கள் .மற்றும் இந்த கொடூர கொலையாளிகளை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் நடைய்பெராமல் இருக்க தமிழக அரசு கடுமையான சட்டங்கள் கொண்டு வரவேண்டும்.ஜெயலலிதா அரசு மீது நம்பிக்கை வைக்க , அவர் இந்துக்களின் நலனுக்காக எதுவும் செய்துவிட, ஜெயலலிதாவின் நாற்காலி ஆசையை மென்மையாக கண்டிக்க வேண்டாம், இவருக்கும், கருணாநிதிக்கும், காங்கிரஸ், மற்றும் போலி மதசார்ப்பின்மைவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை,

 7. viswanathan on July 9, 2013 at 10:41 am

  ஒ ரு ப ள் ளி எ ழு ச சி பா ட ல் – தமிழக பா ஜ க விற்கு:——

  தூங்க வைக்க பாடப்படும் ஆராரோ!
  அதைப பாடிட கிடைதிடுவர் யார் யாரோ!
  துயில்பவனை எழுப்பிட வந்திடார் எல்லாரும்!
  உங்கள் தூக்கத்தை கலைத்திட நானொரு அலாரம்!

  ஞாயிறு எழுந்தது – கீழ் வானம் சிவந்தது
  இந்நேரமே பணி துவங்கிட உகந்தது
  சேவல் கூவுகிறது – காக்கை கரைகிறது
  மற்ற கட்சிகள் தேர்தல் பணிக்கு விரைகிறது.

  கும்பகர்ணனின் முகவரி கமலாலயமோ?
  பகலும் கூட உங்களுக்கு இரவுகாலமோ?
  நமக்கென கிடைத்துள்ளார் சுறுசுறுப்புள்ள “நமோ”
  ஆனால் இங்கே துவண்டு கிடக்கிறோம் நாமோ!

  சோம்பலை முறி – போர் உடை தறி
  ஓடி ஒளியட்டும் காங்கிரஸ் எனும் நரி
  நாம் போட்டியிடும் தொகுதிகள் three
  பாடுபட்டு மூன்றிலும் வெற்றிக்கனி பறி

  நாம் இப்படி இருப்பதால் படுக்கையே கதியாய்
  தலையில் எழுதி உள்ளது படுதோல்வி விதியாய்
  உங்கள் சோம்பல் எமக்கு தருவது panic
  சுறுசுறுப்புக்கு தேவை ஒரு நல்ல tonic

  You know that “No pain – No gain”
  But you are fast sleeping in vain.
  துக்கம் கவலை சிறிதுமின்றி தூங்கியது போதும்.
  அதனால் நீங்கள் அடையபோவதில்லை ஏதும்

  பாரதிய ஜனதா கட்சியே கண் திறவாய்!
  பாரதம காக்க துயில் கலைந்து வருவாய்!
  சோர்ந்து போயிருக்கும் நம் தொண்டர்களுக்கு உற்சாகம் தருவாய்!
  மாறட்டும் உங்கள் செயல் தொண்டரெனும் மரங்களுக்கு எருவாய்!

  இது உமக்கு நான் வைக்கும் என் அன்பு கோரிக்கை
  இப்படி வணங்கி வேண்டுவது என் ஒரு ஜோடி கை
  விட்டு விடும் உமது பழைய வாடிக்கை
  விட்டால் வாழ்த்தும் உமை கோடி கை

 8. hindunesan on July 10, 2013 at 4:52 pm

  சிறுபான்மஇன பயங்கரவாதம் தலை நீட்டுகிறது .முதுகெலும்புள்ள அரசாங்கம் அதை வெட்டி எரியட்டும்

 9. Varatharaajan on July 13, 2013 at 3:45 pm

  பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தங்களது கண்டன அறிக்கையை படித்த பின்பு, எனக்கு தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஹிந்து இயக்கங்களை சார்ந்த ஏராளமான தொண்டர்களை இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பலிகொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை நடந்துள்ள பல சம்பவங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இயக்க ரீதியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? கொள்கை ரீதியிலும் செயல்பாட்டின் அடிப்படையிலும் ஹிந்து இயக்கங்களின் எதிரிகள் யார்யார்? அவர்களுடைய நோக்கம், செயல்பாடு, பொறுப்பாளர்கள் இவர்களைப்பற்றி ஹிந்து இயக்கங்களின் தொண்டர்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? நமக்கு வன்முறையில் எள்ளளவும் நம்பிக்கை இல்லை என்பதும் உலகறிந்த உண்மை. ஆனால் நமது ஹிந்து இயக்கங்களின் விரோதிகளைப்பற்றி சிறிதும் அறியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*