தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 1

Modi
வரும் தேர்தல் மோடியை மையமாகக் கொண்டதாக இருக்கும்.
அதை தமிழக பாஜக பயன்படுதிக்கொள்ளுமா?

 

தமிழகத்தில் விஷக் கிருமிகள் நுழைந்துவிட்டன’’ என்று கூறினார் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம். திமுக-விடம் காங்கிரஸ் தோற்று ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தபோது அவர் கூறியது உண்மை என்பது தற்போது நிருபிக்கப்பட்டுவிட்டது. நிரூபித்தவர்கள் கழகக் கண்மணிகளே தான்.

திமுக-விலிருந்து பிரிந்து உருவான அதிமுக-வும் தன் பங்கிற்கு தமிழக அரசியலை நாசம் செய்திருக்கிறது. இவ்விரு கட்சிகள் இடையிலான துவம்ச யுத்தமாக தமிழக அரசியல் களம் மாறியபோதே, தமிழகத்திற்கு மீட்பு இல்லை என்றாகிவிட்டது.

பரம்பரை விரோதிகள் போல இவ்விரு கட்சியினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்துவதுடன், பொதுவான அரசியல் நாகரிகத்தைத் தூர எறிந்து, இரு தனிநபர்களின் பந்தாட்டமாக தமிழக அரசியலை மாற்றி இருக்கின்றனர். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமசந்திரனின் மறைவுக்குப் பிறகு இந்நிலை உச்சம் அடைந்து, கருணாநிதி- ஜெயலலிதா ஆகிய இருவர் இடையிலான தனிப்பட்ட செல்வாக்கு யுத்தமாக மாறி இருக்கிறது.

இவ்விரு கட்சிகளுமே ஊழலில் சளைத்தவர்கள் அல்ல. திமுக ஆளும் கட்சியாக இருக்கும்போது அதிமுக-வும், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது திமுகவும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், தலைவர்கள் கைதாவதும் நியதியாகி விட்டது.

Jeya and Karuna
ஜெயலலிதா- கருணாநிதி இருவரிடையிலான அரசியல் கூத்துகளிலிருந்து தமிழகம் இந்தத் தேர்தலில் விடுபடுமா?

இவ்விரு கட்சிகளுமே இலவசங்களை வாரி இறைத்து, மக்களின் வாக்குகளை விலை பேசுவதில் சமர்த்தர்களாக இருக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதி தான் இதற்கு வித்திட்டவர் என்றாலும், அதிமுக தலைவி ஜெயலலிதா கருணாநிதியை இவ்விஷயத்தில் பல படிகள் முன்னேறிவிட்டார்.

திமுக-வின் இலவச அரிசி, இலவச டிவி போன்ற திட்டங்களுக்கு போட்டியாக, விலையில்லா அரிசி, விலையில்லா மிக்ஸி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா மின்விசிறி, விலையில்லா தாலிக்குத் தங்கம்,…. எனப் பல இலவசங்களை இறைத்து மக்களை திக்குமுக்காடச் செய்திருக்கிறார் ஜெயல்லிதா.

இவ்விருவரும் ஒன்றுபடும் இரு விஷயங்கள் மட்டுமே உண்டு. முதலாவது, மதுவிலக்கிற்கு எதிரான கொள்கை. இரண்டாவது சிறுபான்மையினருக்கு ஆதரவான கொள்கை. இவ்விரண்டிலும் மட்டுமே இரு கழகக் கண்மணிகளும் ஒன்றுபோலவே பேசுகிறார்கள். வழக்கம்போல, இதிலும் முன்னணியில் இருப்பது அம்மையார் தான்.

இவ்விரு கட்சிகளுமே சூழ்நிலைக்குத் தகுந்தபடி தமிழ்கத்தில் அரசியல் கூட்டணிகளை உருவாக்கி, இரு துருவ அரசியலை வெற்றிகரமாகக் கையாண்டு வருகின்றன. இதன் விளைவாக, திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு எதிரான துடிப்பான அரசியல் கட்சி தமிழகத்தில் இதுவரை உருவாகவில்லை. ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான’ இக்கட்சிகளிடமிருந்து தமிழக மக்களுக்கு விடிவுகாலம் கிடைப்பதற்கான வாய்ப்பும் குறைந்துவிட்டது.

Vaiko
பாஜக-வின் நம்பகமான கூட்டாளியாக இருக்க தகுதி படைத்தவர் மட்டுமல்ல, தமிழகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவர் வைகோ

உண்மையில், இவ்விரு கட்சிகளுக்கும் மாற்று தமிழகத்தில் இல்லையா? வைகோ தலைமையிலான மதிமுக இக்கட்சிகளுக்கு மாற்றாக உருவானது தான். ஆனால், அவரும் காலப்போக்கில் தனது தெளிவற்ற நிலைப்பாடுகள், கூட்டணி அரசியல் நிர்பந்தம் போன்ற காரணங்களால் செல்லாக்காசாகி விட்டார்.

மருத்துவர் ராமதாஸ் தலைமையில் உருவான பாட்டாளி மக்கள் கட்சி, சில வட மாவட்டங்களில் மட்டும் வன்னியர்களின் கட்சியாக குறுகிவிட்டது. இக்கட்சியிடம் தமிழகம் குறித்த ஒரு தொலைநோக்கு சிந்தனை இருந்தபோதும், தனது அடிப்படை வாக்காளர்களான வன்னிய ஜாதியைக் கருத்தில் கொண்டு இயக்கி தன்னை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டது.

தமிழகத்தில் ஒருகாலத்தில் இடதுசாரிகள் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருந்ததுண்டு. சி.பி.எம்., சி பி.ஐ., ஆகிய இரு கட்சிகளுமே இன்று திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியில் இடம்பெற்று சில இடங்களில் வென்றால் பொதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டன. இரு பிரதான கட்சிகளின் அணிகளில் இடம் பெறவே தமிழக இடதுசாரிக் கட்சிகள் முண்டியடித்து, தங்கள் வரலாற்றுக் கடமையை மறந்துவிட்டன.

தமிழ்கத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலையை சொல்லவே வேண்டாம். ஆட்சியை இழந்த்தில் இருந்தே, அக்கட்சி பொம்மலாட்டக்காரர்களின் கரங்களில் சிக்கிய பொம்மை போல, தில்லியில் உள்ள் தலைவர்களால் ஆட்டுவிக்கப்படுகிறது. இடையிடையே காமராஜர் ஆட்சி என்ற கோஷம் ஈனசுரத்தில் கேட்கும். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் உருவம் மங்கலாகி விடுகிறது. இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் என்ற பூதத்தால் அடக்கி ஆளப்படும் நண்பனான் திமுகவை மட்டும் கூட்டணியில் கொண்டதாக காங்கிரஸ் கட்சி மாறி இருக்கிறது.

Ramadoss
சில மாவட்டங்களில் வாக்குவங்கி கொண்ட பாமக-வின் ராமதாஸ், பாஜக பக்கம் வர வாய்ப்புகள் அதிகம்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் செய்த துரோகம் காரணமாக தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள காங்கிர்ஸ் கட்சியுடன் கூட்டணி உறவைத் தொடர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கருணாநிதி. விதி எவ்வளவு கொடுமையானது! எந்தக் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியை காங்கிரஸ் இழந்ததோ, அதே திமுக மட்டும் தான் இப்போது அக்கட்சிக்கு ஒரே துணைவன்! எந்தக் கட்சியை எதிர்த்து பித்தலாட்ட அரசியல் நடத்தி தமிழகத்தின் மையமாக திமுக மாறியதோ, அதே காங்கிரஸ் கட்சி தான் திமுக-வின் இப்போதைய நம்பகமான தோழன்! காங்கிரஸ் தலைவியான இத்தாலிய அன்னையை மணிமேகலையின் மறுபிறப்பாகக் கொண்டாடுவதில் இருந்தே தமிழினத் தலைவரின் வீழ்ச்சி புலப்படும்.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வளர்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் தமிழகத்தில் இன்னமும் கூட்டணிக்கு அலைபாயும் கட்சி என்ற நிலையில் தான் உள்ளது. அதிமுக, திமுக- ஆகிய இரு கட்சிகளின் தோள்களில் காங்கிரஸ் போலவே சவாரி செய்து, அக்கட்சிகளால் அவ்வப்போது கைவிடப்பட்டு மூக்குடைபட்ட அனுபவம் பாஜக-வுக்கும் உண்டு.

இவையல்லாது, திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் தலித் அரசியல் கட்சிகளும், தேவர், முதலியார், கவுண்டர் போன்ற பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் கட்சிகளும் தமிழகத்தில் உள்ளன. இக்கட்சிகளிலும் இரு குழுக்கள் இருந்துகொண்டு, இரு பிரதான திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்று சமூகநீதியை நிலைநாட்டுகின்றன!

Vijayakanth
திமுக- அதிமுக-வுக்கு மாற்றான கட்சியாக உருவாகியுள்ள தேமுதிக-வின் தலைவர் விஜயகாந்த் வந்தால் பாஜக கூட்டணி பலம் பெறும்.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான சக்தியாகத் தோன்றியுள்ள விஜயகாந்த்தின் தேமுதிக மட்டுமே இப்போதைக்கு ஆறுதல் அளிக்கும் கட்சியாக உள்ளது. நடிகர் விஜயகாந்தின் அரசியல் பிரவேசம், தமிழ்கத்தில் உள்ள வெற்றிடத்தைக் கண்டுகொண்டு அதை நிரப்புவதற்கான முயற்சியே. ஆனால், இக்கட்சியும் கால நிர்பந்தங்களால் கூட்டணி அரசியலில் நீந்தியாக வேண்டி இருக்கிறது.

இக்கட்சி இப்போதைக்கு அதிமுகவின் எதிரியாக இருக்கிறது. திமுகவின் பழைய எதிரியாகவும் இருப்பது தேமுதிகவின் சாதகமான அம்சம். ஆனால், விஜயகாந்த்தை எப்படியும் வலையில் வீழ்த்த காங்கிரஸ் திட்டமிட்டு காய் நகர்த்துவதாகத் தகவல். முலாயமையும் மாயாவதியையும் வலையில் வீழ்த்திய காங்கிரஸ் கட்சியால் விஜயகாந்தை வீழ்த்த முடியுமா? அரசியலில் எதுவும் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம்.

மேற்கண்ட கட்சிகளை சரியான விகிதாசாரத்தில் கலந்து உருவாக்குவதே வெற்றிக் கூட்டணியாக மாறும் என்பதும், அந்தந்தக் காலத்திற்கேற்ப இதில் பேரங்கள் மாறுபடும் என்பதும் தான் புரிந்துகொள்ள வேண்டிய அரசியல் நீதி.

Tamilaruvi Manian
தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாக வேண்டும் என்று கூறும் தமிழருவி மணியன், புதிய அரசியல் உருவாக ஆசைப்படுபவர்.

காங்கிரஸ்- பாஜக ஆகிய இரு கட்சிகளும் தேசியக் கட்சிகள். நிதர்சனத்தில் இக்கட்சிகளுக்கு தமிழக அரசியல் நிலையை மாற்றுவதில் பெரும் பங்கு உள்ளது. ஆனால், இரு கழகங்களின்  அரசியல் களமாக ஒட்டுமொத்தத் தமிழகமும் முன்னிறுத்தப்பட்டு பழகிவிட்டதால், துணிந்து தனியே களம் காண இக்கட்சிகள் தயங்குகின்றன. இதன் விளைவாக, கழகக் கூட்டணிகளில் கிடைக்கும் சில இடங்களுக்காக காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த நிலைக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலேனும் முற்றுப்புள்ளி வைக்குமா? இரு கழகங்களிடையிலான அதிகாரப் போராட்டமாக, வரக்கூடிய தேர்தலேனும் மாறாமல் இருக்குமா?  இரு கழகங்களின் பகடைகளாக மாறாமல், இரு கட்சிகளின் ஆணவ அரசியலுக்கு மாற்றாக புதிய அணி உருவாகுமா?

தமிழக அரசியலை கடந்த பல ஆண்டுகளாகக் கூர்ந்து கவனித்து வருபவரும், பல கட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன்,  ”தமிழகத்தில் பாஜக, மதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் இணைந்து புதிய அணி உருவாக வேண்டும்” என்று கூறி இருக்கிறார். இதற்கு வாய்ப்பு உள்ளதா?

 

புதிய கூட்டணி உருவாகுமா?

-இல.கணேசன் பேட்டி

LGதிருச்சி: “தமிழருவி மணியன் முயற்சிக்கும், பா.ஜ. – தே.மு.தி.க. – ம.தி.மு.க. கூட்டணி அமைந்தால் நல்லது” என, பா.ஜ. கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

பா.ஜ., இளைஞர் அணி சார்பில், 26-ஆம் தேதி திருச்சியில் நடக்கும்,  ‘இளந்தாமரை’ மாநாடு குறித்து, மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், திருச்சி, தில்லை நகரில் நேற்று (செப். 18)  நடந்தது.  கூட்டத்தில் பங்கேற்ற தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்றதும், தமிழக முக்கிய பிரமுகர்கள், அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் கூட, அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளனர்.  திருச்சி மாநாடு, எழுச்சியாக, திருப்புமுனையாக அமையும். தேசம் மீது விருப்பம், நன்மை குறித்து அக்கறைப்படுவோர், மோடி வர வேண்டும் என விரும்புகின்றனர்.

யாருக்கு வேண்டுமானாலும், தங்கள் கட்சி சார்பாக பிரதமரை முன்னிறுத்தும் உரிமை உள்ளது. எங்களுக்கு அதில் ஆட்சேபனை இல்லை. முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான்.
இதுவரை கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டணியில்லாமல் போட்டியிடுவோம் என்று நாங்கள் இறுமாப்பாகப் பேசவில்லை.

மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்பதால், கூட்டணியை விரும்புகிறோம். யாருடன் என்பது போக போகத் தெரியும். தமிழருவி மணியன் நல்ல தேசியவாதி. தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதால், தே.மு.தி.க. – ம.தி.மு.க. – பா.ஜ. ஆகிய கட்சிகளை இணைக்க வேண்டும் என்று, சொந்த முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறோம். அவரது முயற்சி வெற்றியடைந்தால் நல்லது.

எங்கள் கட்சியில், பிரதமராக வர நிறைய பேர் உள்ளதால், இதில் யார் வருவார் என்ற சந்தேகம் இல்லாமல் இருக்க, மோடியை அறிவித்தனர். இவர் தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்.  மோடி என்றால், லஞ்ச லாவண்யம் இல்லாத, வளர்ச்சியடைந்த குஜராத் என்ற மாநிலம் தான் நினைவுக்கு வரும். பாரத தேசம் முழுவதும் அதைச் செய்ய மாட்டாரா என்ற ஆதங்கத்தால், அவரை முன்னிலைப்படுத்துகிறோம்.  இதில் தவறில்லை.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

நன்றி: தினமலர் (19.09.2013)

(தொடரும்)

30 Replies to “தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 1”

  1. அன்புள்ள சேக்கிழர் அவர்களே, பஜகா / காங்கிரஸ் இருவருமே தமிழ் நாட்டு கட்சிகளுன் கூட்டு சேரமல் வெற்றி பெறமுடியாது. தமிழ் நாட்டு கட்சிகள் பெரும்
    பணம் ஈட்டுவதே இந்த கூட்ணியால்தான்
    இதை யாராலும் மறுக்கமுடியாது. பாவம்
    தமிழ் நாட்டு மக்கள்.

  2. // வைகோ கூட்டணி அரசியல் நிர்பந்தம் போன்ற காரணங்களால் செல்லாக்காசாகி விட்டார்.//

    வைகோ அரசியலில் தேர்தலில் வெற்றிபெறாமல் இருக்கலாம், அதைவைத்துக் கொண்டு எப்படி அய்யா, செல்லாக்காசாகிவிட்டார் என்று சொல்கிறீர்கள், அரசியலில் இன்னும் நம்பக்த்தன்மை கொண்ட அரசியல்வாதி தமிழகத்தி வைகோ போல சொற்பமானபவர்கள், அவரின் குரலுக்கு இன்னமும் வலு இருக்கிறது, இளைஞர்களிடம் வரவேற்பு இருக்கிறது, எந்த அதிகாரமும், பணபலமும் இல்லாமல் 20 ஆண்டுகளைத்தாண்டி கட்சியை நடத்தி வருவதே ஒரு சாதனைதான். பிறகு எப்படி செல்லாக்காசாகிவிட்டார் என்று சொல்றீங்க,

  3. Govindarajan.K
    (moderation preview) 1 hr, 17 mins ago
    அன்புள்ள சேக்கிழர் அவர்களே, பஜகா / காங்கிரஸ் இருவருமே தமிழ் நாட்டு கட்சிகளுன் கூட்டு சேரமல் வெற்றி பெறமுடியாது. தமிழ் நாட்டு கட்சிகள் பெரும்
    பணம் ஈட்டுவதே இந்த கூட்ணியால்தான்
    இதை யாராலும் மறுக்கமுடியாது. பாவம்
    தமிழ் நாட்டு மக்கள்.

  4. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்களின் விருதுநகர் மகாநாட்டுப் பேச்சை நான் கவனித்துக் கேட்ட வரையில் அவர் கூட்டணி குறித்து என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் சொன்னது: 1. தி.மு.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. 2. அ.தி.மு.க. தங்களை ஏமாற்றி அவமானப் படுத்தி விட்டது, ஆகையால் அதனுடனும் கூட்டணி இல்லை. 3. காங்கிரசும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோற்கடிக்கப் படவேண்டும், அதற்காக எதையும் செய்யத் தான் தயார். இப்படி சொல்லிக் கொண்டே வந்த அவர் தனக்கு திரு வாஜ்பாயுடன் இருந்த நெருக்கம் குறித்தும், தான் சொன்ன ஆலோசனைகளை வாஜ்பாய் அவர்கள் எப்படி உடனுக்குடன் செய்து கொடுத்தார் என்றும் சொல்லி, தன்னை வாஜ்பாய் அவருடைய மகன் என்று சொல்லி மகிழ்ந்ததையும் சொல்லிவிட்டு, தேர்தல் கூட்டணி யாருடன் என்பதை தேர்தலுக்கு முன்னதாக அறிவிப்பதாகவும், அதற்கு முன் கட்சித் தொண்டர்கள் உடனடியாக மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை எப்பாடு பட்டேனும் இறக்குவதற்கு வேலைகளைத் தொடங்க வேண்டும் என்றும் சொன்னார். அதற்கு மத்தியில் யார் மாற்று என்பதை மனதில் கொண்டு அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது போல சொல்லியிருக்கிறார். முடிவும் அப்படித்தான் இருக்கும். அப்படி மத்தில் பா.ஜ.க. கூட்டணி அரசு அமையுமானால், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களில் திரு வைகோவும் இருந்தால், நிச்சயம் அவர் மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு உண்டு. அது நடக்கும். என் கணிப்பு இது.

  5. பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டி இடவேண்டும். மோடியின் தமிழக விஜயம் இதற்கு வழி வகுக்கும்.

  6. Kazhahangal distroyied TAMIZHILNADU and Congeress want to sale BHARATHAM. Tamizhaha B.J.P and national B.J.P having faith and confidance. Everyone gives their valueable votes to B.J.P, it will be go to for INCREDITABLE BHARATH and STORNGER BHARATH. BHARATH MATHAKI JAI. ALAYAM.S.RAJA

  7. மதிமுகவும் பாமகவும் “மது விலக்கு” கொள்கைக்காக பெரிதும் போராடி வருகின்றன. திமுகவும் அதிமுகவும் “மதுவிலக்கு” கொள்கையின் பரம எதிரிகள் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தியின் பேரை சொல்லிககொண்டே மதுவிலக்கு கொள்கையை குழி தோண்டி புதைத்துவிட்டனர். ஆனால் காந்தியின் கொள்கையை கட்டி காப்பாற்றி வருபவர் மோடி ஒருவரே!. மதிமுகவும் பாமகவும் அவர்கள் “மதுவிலக்கு” ஒன்றே எங்கள் இலக்கு என்று அந்த கொள்கையில் உண்மையிலேயே உறுதியாக இருந்தால் அவர்கள் மோடியை தான் ஆதரிக்கவேண்டும். மோடி நமது கழகங்களை போல இலவசங்களை கூறி ஒட்டு வாங்கி ஆட்சிக்கு வருபவர் அல்ல. அவர் ஆட்சி புரிந்த கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் புகாருக்கு ஆளாகாதவர். காங்கிரஸ் போல வாயளவில் secularism பேசிக்கொண்டு ஹிந்து மாணவர்களின் கல்வி கடனுக்கு CHECK வைத்தும் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் CHEQUE அளிப்பவரில்லை மோடி. அவர் அனைவரும் சமம் என்று
    நினைத்து நடப்பதால்தான் குஜராத்தில் முஸ்லிம்கள் பிஜேபி நோக்கி மள மள வென்று வருகின்றனர்

    அவரது எதிரிகளுக்கு கிடைத்தது எல்லாம் 2002 கலவரம் மட்டும்தான். அந்த கலவரம் நடப்பதற்கு காரணமாக இருந்தது எது? கோத்ரா ரயில் படுகொலை. அதை பற்றி மட்டும் யாரும் பேசமாட்டார்கள். ஏனென்றால் அதில் இறந்தது 52 இந்துக்கள். மட்டுமே. அதே போல இப்போது UP யில் நடந்த கலவரத்தின் root cause என்ன? முஸ்லிம் காமககிறுக்கர்களின் eve teasing தானே! பெரிய தீவிபத்து ஏற்பட காரணமாக இருப்பது ஒரு தீப்பொறி தானே! “To every action there is an equal and opposite reaction ” என்பது நியூட்டன் அவர்களின் 3 வது Law of motion . இதே வகையில்தான் பாழடைந்த தொழுகை நடக்காத பாபர் மசூதியை இடித்ததற்கு மும்பை மற்றும் கோவை என்று பல இடங்களில் குண்டு வைத்து இந்துக்களை சாகடித்தனர். அதாவது மேலே சொன்ன அந்த விதியின்படி குண்டு வைத்தது மிகச்சரி என்றே கூறலாம். அப்படிதான் போலி மதச்சார்பின்மைவாதிகள் “இந்துக்கள் அதை இடிக்காமல் இருந்திருந்தால் இவை நடந்திருக்குமா?”என்று கேட்கின்றனர். அந்த கேள்வியும் சரிதான். இப்போது நான் கேட்கபோகும் கேள்விக்கும் அந்த போலிகள் பதில் சொல்லியாகவேண்டும். மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிரொலியாக முஸ்லிம்கள் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று பழி வாங்கியது தவறில்லை என்று வாதிட்டால் ரயிலில் 52 பேர் (ஒரு பாவமும் அறியாத அப்பாவி இந்துக்கள்) இறந்தமைக்கு அதன் விளைவாக நடந்த குஜராத் கலவரம் மட்டும் தவறாகுமா? முஸ்லிம்கள் (கொழுப்பேறி போய் கொல்வது, பெண்களை சீண்டுவது போன்ற) எந்த செயல்களை செய்தாலும் இந்துக்கள் பொறுத்து கொள்ளவேண்டுமா? அடங்கி போகவேண்டுமா? அவனுக்கு சொரணை இருக்க கூடாதா? அவன் திருப்பி தாக்க கூடாதா? சீனா. பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவை தாக்கினால் இந்தியா திருப்பி தாக்க கூடாதா? அப்படி திருப்பி தாக்கிதானே கடந்த காலத்தில் போர்கள் பல நடந்தன. அப்போது இந்தியா யார் மீது குற்றம் சொல்லியது? போருக்கு மூல காரணமான சீனா மீதுதானே குற்றம் சொல்லியது? அந்தவகையில் குஜராத் கலவரத்திற்கு மூல காரணமான முஸ்லிம்கள் மீதுதானே குற்றம் சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல. இந்தியாவில் பலமுறை இனக்கலவரங்கள் நடந்து குஜராத்தை விட அதிக அளவில் மக்கள் இறந்து போயிருக்கும்போது குஜராத்தை ஒன்றை மட்டும் பெசிக்கொண்டிருப்பதேன்? ஆகவே இதை நன்றாக புரிந்து கொண்டு குஜராத் கலவரத்தை மறந்து மோடியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவேண்டும்

    காங்கிரஸ் 60 ஆண்டுகள் நாட்டை ஆண்டு நாட்டு மக்கள் சுபிட்சமாக உள்ளனரா? அதற்கே மீண்டும் ஒட்டு போட்டால் தன தலையில் தானே மண் வாரி போட்டு கொள்வது போலத்தானாகும். ஆகவே, நாட்டு மீது அக்கறை கொண்டுள்ள நல்ல கட்சிகளே! சிந்தித்து நல்ல முடிவெடுங்கள்.

  8. வெகு நாட்களுக்குப்பின் தமிழகத்தின் அவல நிலையை வெகு துல்லியமாக எழுதியுள்ளீர்கள். தங்களுக்கு நன்றி. என்று தமிழகம் கழக கண்மணிகளின் கைகளில் இருந்து விடுதலை அடைகிறதோ அன்று தான் தமிழ் நாட்டுக்கு விமோசனம்.
    தங்கள் பனி தொடரட்டும். மக்களின் எதிர்பார்புகளை பிரதிபலிக்கும் ஓர் உண்மையான பத்திரிகையாக ஹிந்து விளங்க வேண்டுகிறேன்.

  9. ஆழமோ அழுத்தமோ இல்லாத ஒரு மேம்போக்கான பார்வை! திராவிட இயக்கங்கள் துணை இல்லாமல் ஒரு மூன்று நாடாளு மன்ற இடங்கள் கூட பெற இயலாத நிலையில் உள்ள பாரதிய ஜனதாவோடு முஸ்லீம் வோட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் விஜயகாந்த் கூட்டணி வைக்க முன்வந்தாலும் அது யாருக்கு சாதகமாய் இருக்கும் என்பதை கணிக்க பெரிய அரசியல் நோக்கர்கள் தேவையில்லை! தேர்தல் நேரம் தவிர மற்ற காலங்களில் பூதக் கண்ணாடி வைத்து தேடும் அளவு ஆழ்ந்த யோக நித்திரையில் இருக்கும் பாஜக துக்ளக் ஆண்டு விழா கூட்டங்களுக்கு திரளும் மக்களைப் பார்த்து எதோ கட்சிக்கு கூடிய கூட்டம் என்று ஆறுதல் பட்டுக் கொள்ளத்தான் முடியும். மோடி பங்கேற்கும் திருச்சி மாநாடு ஒரு திருப்புமுனையாக அமைந்தால் சந்தோஷம்தான்! தமிழ் தேசீயம், புலிகள் நலம் இவை தவிர வேறு எதுவும் அறியாத வைகோவை பாஜகவின் நம்பத் தகுந்த கூட்டாளி என்று கூறியிருப்பது சற்று நெருடத்தான் செய்கிறது. யாரோடு கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு இத்தனை இடங்கள் கொடுங்கள் என்று கேட்டு வாங்கும் நிலையிலா பாஜக இருக்கிறது? திருவிளையாடல் தருமி போல ஒதுங்கி நின்று குற்றம் குறைகள் இருப்பின் ஏதாவது குறைத்துகொண்டு மீதமுள்ளதை கொடுங்களேன் என்றுதான் கேட்க முடியும்? மோடி தயவில் தமிழ் நாட்டில் ஓரிரு இடங்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம்! நான் கேட்பதெல்லாம்- அந்த வெற்றியில் தமிழக பாஜகவின் பங்கு என்ன? டிராபிக் ராமசாமி என்று அயராது பொது நல வழக்கு போட்டு வரும் ஒரு பொது நல விரும்பி ஒரு கூட்டணி வைத்தால் அதைக் கூட மாற்றுக் கூட்டணி என்று சொல்ல முடியுமா என்ன?

  10. முதிர்ந்த தேசியவாதிகளான, தமிழருவிமணியன் போன்றவர்களும் பாஜக வில் இணைந்து, இழந்து பட்டு நிற்கும் நம் தமிழகத்தின் தேசிய தன்மையை மீண்டும், உயிர்ப்பும், துடிப்பும் கொண்டெழச் செய்ய வேண்டும். ‘அரசியல் ஒரு சாக்கடை’, என்று நல்லவர்கள் ஒதுங்குவதால்தான், யார் யாரெல்லாமோ இங்கு வந்து, ‘அரசியல் என்றாலே பிழைக்க ஒரு வழி’, என்ற தவறான பாதையினை உருவாக்கிவிட்டனர். இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தையும் தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கவைக்கும் புனிதமான பணி, தமிழருவிமணியன் போன்ற நல்லோர்களால், நிச்சயமாக சாத்தியமான ஒன்றே. இதுவே இன்றைய காலகட்டத்தில், விரக்தயின் விளிம்பில் நிற்கும் நம் இளைய சமுதாயத்திற்கு நம்பிக்கை ஒளி ஏற்படுத்தும்.

  11. அன்புள்ள Honestman ,

    தெளிவான நெத்தியடி. பாராட்டுக்கள். பாபர் கட்டிடம் இடிக்கப்பட்டதால் , அதன் பின்னர் நடந்த வன்முறையை நியாயப்படுத்துவோருக்கு, கோத்ரா படுகொலைகளால், அதன் பின்னர் நடந்த குஜராத் கலவரத்தை நியாயப்படுத்த தயக்கம் ஏனுங்க ? ஒரு கண்ணுக்கு வெண்ணை இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பா ?

  12. திரு முத்துகிருஷ்ணன் கூறுவது சரியே மதிமுக நிச்சயமாக ஒரு செல்லாகாசு (non – entitty ) அல்ல. ஆனால் இனி வருங்காலங்களில் தனித்தோ அல்லது “தகாத” கட்சிகளுடன் (அதிமுக அல்லது திமுக போன்றவற்றுடன்) கூட்டணி வைத்துகொண்டால் எதிர்காலத்தில் செல்லாகாசாக மாறும் வாய்ப்பு உள்ளது என்பது திண்ணம். எனவே அக்கட்சி பிஜேபி உடன் கூட்டணி வைத்துகொள்வதே. உசிதம் என்பது என் தாழ்மையான கருத்து.

    திரு நரசிம்மன் கூறுவது போல பிஜேபி தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டால் அது தற்கொலைக்கு சமம். அவருக்கு ஏனிந்த ஒரு நல்ல(?) எண்ணம் தோன்றியது?

    திரு விஜயகாந்த் ராஜயசபா தேர்தலில் காங்கிரஸ் கயவாளிகளிடம் உதவி கேட்டபோது அவரை ஏமாற்றி உதாசீனபடுத்திவிட்டு தன்னோடு சேர்ந்து 2 G யில் கூட்டு கொள்ளை அடித்த திமுகவிற்கு ஆதரவு அளித்தது. அப்படிப்பட்ட துரோகிகள் நிறைந்த காங்கிரஸ் ஐ நம்பலாமா? இலங்கையில் 1,50,000 தமிழர்களை கொல்ல காரணமாக இருந்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் நீர் தமிழர்களின் பச்சை துரோகி என்று மக்கள் முடிவு கட்டி விடுவார்கள். மேலும் ஊழலை ஒழிக்க கட்சி ஆரம்பித்த நீர் ஒரு ஊழல் திமிங்கலத்துடன் கூட்டு சேர்வது சரியல்ல. எனவே குஜராத்தில் நடக்கும் வளர்ச்சி பாரதம் முழுவதும் ஏற்படவேண்டும் என்றால் நீர் பிஜேபி உடன் கூட்டணி வைத்துக்கொள்ளவேண்டும். காங்கிரஸ் ஐ கனவிலும் நினைக்கவேண்டாம்.( காங்கிரஸ் கட்சி உம்மை தன கூட்டணியில் சேர்த்துக்கொள்ள 2002 பற்றி கூறி உம மூளையை மழுங்க செய்யும் மயங்கி விடவேண்டாம். தமிழக பிஜேபி இடம் 2002 சம்பவம் குறித்து நன்றாக விசாரித்து விளக்கம் கேட்டு திருப்தி அடையவில்லை அதன் பின் காங்கிரஸ் பக்கமே நீர் சாயும்.
    உமக்கு இப்போது அதிமுக பரம வைரி . கர்ம வீரர் காமராஜர் “இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று சொன்னார். அந்த இரண்டு மட்டைகள் எவை? ஒன்று அதிமுக மற்றொன்று திமுக. அதுமட்டுமல்ல நீர் உம்மை கருப்பு எம்ஜியார் என்று கூறி வருகிறீர்கள். MGR வெறுத்த திமுகவுடன் கூட்டணி வைத்துகொண்டால் நீர் கருப்பு எம்ஜியார் என்று சொல்லி கொள்வதிலே அர்த்தமே இல்லை. எனவே பிஜேபி உடன் உமது கட்சி, மதிமுக, மற்றும் பாமக ஆகியவை கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் தமிழகத்தில் ஒரு புதிய புரட்சி ஏற்படும்.கணிசமாக இடங்களை பிடிக்கமுடியும். பிறகு திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றின் கொட்டம் அடங்கும்.

    எனவே மேற்சொன்ன 3 கட்சிகளும் நன்கு தீர யோசித்து ஆராய்ந்து பரிசீலித்து ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.

  13. Nice write up, but unfortunately the chances of bjp,mdmk, pmk & dmdk alliance is slim.
    Most likely it will be admk+communists in one alliance & dmk+congress+pmk+dmdk in another alliance.

  14. I came across this article regarding Pakistan becoming more fanatic country (even though they got separated due to their ‘Madham’) post 1970s. The author has compared the state of Pakistan’s cricket and how it got affected by religious policies. Thought of sharing this. I know Hindus can never become fanatics like other ‘Madhams’, but we need to be careful and not get carried away:

    https://dawn.com/news/1043800/pakistan-cricket-a-class-ethnic-and-sectarian-history/1

    I hope Modi can give a corruption free, religious tension free(no appeasement) rule. Everything will fall in place if it is ensured.

    BJP should not form coalition with clowns like Vijayakanth and Ramadoss. Even if they have coalition with Aatha, BJP should try to have a upper hand in the coalition.

  15. மத்தியில்,
    “காங்கிரஸ் இல்லாத இந்தியா”
    மாநிலத்தில், திராவிடம் இல்லாத தமிழகம்”

    இந்த வாசகங்கள் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரமாக இருந்தால் தமிழக அரசியலில் புதிய பாதை கிடைக்கும்.

    நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டி இடவேண்டும். அதுதான் உண்மையான பலம்.

  16. தமிழ் நாட்டில் ஒரு நல்ல அரசியல் தலைவர் வைகோ முதன்மையானவரே!! பி.ஜே.பி நல்ல தலைவர்கள் ஆனால் தமிழர்களுக்காக பேசினால் ஒத்க்கிவிடுவார்கள் ஏன்? உறக்க பேசமாட்டார்கள்.கிட்டத்தட்ட காங் மனப்பான்மையே!!

  17. திரு சேக்கிழார் சொல்வது போன்று நல்லறிஞர் தமிழருவி ம்ணியன் கனவு காண்பது போல பாஜகவுடன் தேமுதிக, மதிமுக மற்றும் பாமக ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்து வரும் தேர்தலில் போட்டியிட்டால் மகத்தான வெற்றி நிச்சயம். ஒவ்வொருவரும் ஒரு திசையில் சென்றுகொண்டிருக்கும் விஜயகாந்த், ராமதாஸ் மற்றும் வைகோ பாஜகவுடன் ஒன்று சேர்வார்களா என்பது ஐயமே. எனினும் பாஜக தனித்துப்போட்டியிடுவது பயன் அளிக்காது. நாடுமுழுதும் திரு மோதி அலை எழுந்தும் வளர்ந்தும் வருகிறது அது தமிழக்த்தில் பயன் தராமல் போய்விடும். திரு ராமதாஸ் மற்றும் திரு வைகோ ஆகிய இருவரும் பாஜக அணியில் சேர்வதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். தேமுதிக சேராத பட்சத்தில் அவர்களோடு மட்டுமாவது கூட்டணி அமைத்தால் ஒரளவேனும் தமிழகத்தில் வெற்றி பெறலாம்.

  18. “தமிழருவி மணியன் முயற்சிக்கும், பா.ஜ. – தே.மு.தி.க. – ம.தி.மு.க. கூட்டணி அமைந்தால் நல்லது”மத்தியில்,

    “காங்கிரஸ் இல்லாத இந்தியா”
    மாநிலத்தில், திராவிடம் இல்லாத தமிழகம்”

    இந்த வாசகங்கள் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரமாக இருந்தால் தமிழக அரசியலில் புதிய பாதை கிடைக்கும்.
    எனவே மேற்சொன்ன 3 கட்சிகளும் நன்கு தீர யோசித்து ஆராய்ந்து பரிசீலித்து ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.

  19. தமிழகத்தில் மாற்று அணி அமையுமா………

    நிச்சயம் அமைய வேண்டும் … சுயநல திராவிட கட்சிகளின் மக்கள் விரோத கொள்கைகளை விழ்த்தி…. நாடும், மக்களும் நலமாக இருக்கும் படி ஒரு சிறந்த மாற்று அணி அமைய வேண்டும்…. ஆனால் அதற்கு பா.ஜ.க என்னும் மதவாத கட்சியை மாற்று அரசியல் கட்சியாக ஏற்று கொள்ள முடியாது… தி.மூ.க ,ஆ.தி.மூ.க, காங்கிரஸ் மட்டும் அல்ல பா.ஜ.கவும் மக்கள் விரோத ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சி தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை…. ஒரு சிறிய வேறுபாடு என்னவென்றால் திராவிட கட்சிகள் மொழி மற்றும் இனத்தை வைத்து ஓட்டு பொறுக்கியது, பா.ஜ.க மதத்தை வைத்து ஓட்டு பொறுக்குகிறது அவ்வளவுதான்… ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதில் மற்ற கட்சிகளை காட்டிலும் பா.ஜ.க எந்த விதத்திலும் குறைந்ததல்ல… இப்போது நமக்கு தேவை ஒரு திடமான மக்கள் நலனை மட்டுமே விரும்பும் ஒரு மக்கள் நல அரசாங்கம்… மக்களின் அடிப்படை உரிமைகளை மதித்து செயல்படுத்தும் அரசமைப்பு நாட்டிற்க்கு தேவை.. அதற்க்கு நிச்சயம் மக்கள் ஜனநாயக சோசியலிசம் தான் சிறந்த தீர்வாக இருக்கும்.. இப்போது இருக்கும் ஓட்டு பொறுக்கி அரசியல் வியாதிக்கு நன்மருந்து ஜனநாயக சோசியலிசம் மட்டுமே….

  20. மறத் தமிழன் மரத் தமிழன் ஆகிவிட்டான். இலவசங்களும் ஜகஜால வாக்குறுதிகளும் அவனை மயக்கிவிட்டன. ஐடி கம்பெனி அலுவலர் முதல் தினக்கூலி பெறும் சாதாரணர் வரை டாஸ்மாக் அடிமைகள். தேசத்தைப்பற்றி சிந்தனை படித்தவனுக்கு இல்லை. பாஜக வுக்கு வோட்டளிக்க மனம் இல்லை.காரணம் போலி மதச்சார்பின்மை வியாதி. ஊடகங்களுக்கு எங்கு கலவரம் ஏற்பட்டாலும் ஆர் எஸ் எஸ், பாஜக வே காரணம் என கோஷ்டிகானம் பாடத்தவறுவதில்லை. நடிகர் சல்மான்கானின் தந்தையார் கேட்ட பத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு காங்ரஸ் கட்சியினால் இதுவரை பதிலளிக்க முடியவில்லை. மும்பை கலவரம், சீக்கியர் படுகொலை போன்றவற்றிக்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்கவேண்டும். ஆனால் தொலைக்காட்சிகளும் செய்தி ஊடகங்களும் அதைப்பற்றி வாயைத் திறப்பதில்லை. கோத்ரா மட்டும் சிரஞ்சீவித் தன்மைப் பெற்று மோடியை தண்டிக்கவேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களும், மதச்சார்பற்ற மகான்களும் கூக்குரலிடுவார்கள். ஹிந்து குழுமத்தின் புதிய வரவான தி ஹிந்து தமிழ் நாளிதழில்(பார்ப்பதற்கும் படிப்பதற்கும் தினகரன் போலவே ஊள்ளது) “படிக்க ஒரு நிமிடம்” என்ற பகுதியில் “தகுதியானவரா மோடி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை திரு கண்ணன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது கட்டுரையின் முடிவில்”எப்படிப் பார்த்தாலும் மோடி இந்தியாவுக்கு ஒரு பெரும் பிறழ்வாகவே இருப்பார்” என்று மங்களம் பாடியுள்ளார்.
    அவருக்கு பதில் அளிக்க விரும்புவோர் kannan31@gamil.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தில் பாஜக செய்யவேண்டியது 1 க்ராமங்கள் தோறும் சென்று ப்ரசாரம் செய்து தொண்டர் கட்டமைப்பை வலுப்படுத்தவேண்டும்.
    2 திராவிட மாயையை அகற்ற முயலவேண்டும்.3 திமுக அதிமுக பாமக கூட்டணிக்கு முயற்சி செய்யக் கூடாது.

  21. திரு ராகுலன் போன்றோர் இருந்தால் ராகுல் அடுத்த பிரதமராகி விடுவார். அப்புறம் இந்தியாவிற்கு ராகுகாலம் தான்..

    திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி அனைத்துமே சரியில்லை என்றும் ஒட்டு பொறுக்கி அரசியல் வியாதிக்கு நன்மருந்து ஜனநாயக சோஷலிசமே என்றும் கூறுகிறார். அணைத்து கட்சிகளும் சரியில்லை எனும்போது ஜனநாயக சோஷலிசம் என்ற மருந்தை எந்த கட்சி கொண்டுவரும் என்று கூறுகிறார்? அவர் ஏதாவது புதிய கட்சி தொடங்க போகிறாரா?

    பிஜேபி ஒரு ஒட்டு பொறுக்கி அரசியலை நடத்துகிறது. என்பது அவரின் குற்றசாட்டு. முஸ்லிம் லீக் என்ற ஒரு அப்பட்டமான மதவாத கட்சியினை பற்றி எதுவும் அவருக்கு தெரியாது போலும். இஸ்லாமிய நாடுகளில்கூட “ஹஜ்” யாத்திரைக்கு மானியம் கிடையாது. ஆனால் மத சார்பற்ற நாடு என்று மார்தட்டி கொள்ளும் மானங்கெட்ட காங்கிரஸ் அரசு மானியம் வழங்கும் காரியத்தை தொடங்கி வைத்தது. அது இன்றுவரை தொடர்கிறது.

    மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சரியோ? இஸ்லாம் மதத்தில் உள்ள அத்தனை பேரும் பஞ்சைகள், பராரிகள்,அன்றாட காய்ச்சிகளா? அரை வயிறு கஞ்சிக்கே அல்லல்படுபவ்ர்களா? இந்துக்கள் அனைவரும் ஒரே ஒரு நபர் விடாமல் பட்டு மெத்தையில் புரண்டு, பன்னீரில் குளித்து, குளு குளு அறையில் உறங்கி, கப்பல் போன்ற காரில் பவனி வந்து 3 வேளையும் முட்டையும் பிரியாணியும் சாப்பிடும் பணம் படைத்தவர்களா? கோவில் வாசல்களில் பிச்சை எடுக்கும் இந்துக்கள் சச்சார் கமிட்டியின் கண்ணுக்கு தென்படவில்லையா? தெருவோரங்களில் நடைபாதைகளில் வாழும் இந்துக்களும் சச்சார் கமிட்டிக்கு பணக்காரர்களா? எல்லா மதத்திலும் ஏழைகளும் உள்ளனர் பணக்காரர்களும் உள்ளனர். குடும்ப பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்காமல் மத அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவதற்கு பெயர்தான் “மதச்சர்ப்பின்மையா? இதை காங்கிரஸ் தானே செய்கிறது! ஆனால் பிஜேபியை பார்த்து ஒட்டு பொறுக்கி என்கிறீர்களே!

    முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும்தான் கல்வி கடன் இந்து மாணவர்களுக்கு கிடையாது என்று காங்கிரஸ் கூறி அதை செயல்படுத்துகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் மதத்தை கூறி அவர்களை பிரித்து அவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைப்பது சரியா? இப்படி மாணவர்களை மற்றும் மக்களை மத அடிப்படையில் பிரித்துவிட்டு பிஜேபி யை பார்த்து divisive force என்று வீண் பழி போடுவது எந்தவித்தத்தில் நியாயம்? இதற்கு பெயர்தான் மதசார்பின்மையா? மண்ணாங்கட்டி.

    மதச்சார்பற்ற நாட்டில் இந்து வழிபாட்டு ஸ்தலங்கள் மட்டும் அரசு கட்டுபாட்டில் இருக்குமாம். ஆனால் மற்ற மதத்தின் வழிபாட்டு ஸ்தலங்கள் அவரவர் கட்டுபாட்டில். மதச்சார்பின்மை என்று பேசிக்கொண்டு அதற்கு மாறாக நடக்கும் இவர்களுக்கும் காந்தியம் பேசிக்கொண்டு கசாப்பு கடை நடத்தும் Butcher க்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

    கடைசியாக:—— பிஜேபி கட்சி 100% நல்ல கட்சி என்று வாதாடவில்லை. அதிலும் ஒரு சில சிறு சிறு குறைபாடுகள் இருக்கின்றன. இல்லை என்று மறுக்கவில்லை. இருப்பவற்றில் குறைந்த குறைபாடுகள் உள்ள கட்சி எது என்று பார்க்கவேண்டுமே தவிர நகுலன் கூறுவது நகைப்பிற்குரியதே!

  22. திரு நகுலன்
    “மக்கள் ஜனநாயக சோசியலிசம் தான் சிறந்த தீர்வாக இருக்கும்” என்று மொழிந்திருக்கிறார். அதுவேறு ஒன்றுமில்லை ஸ்டாலினிஸ சர்வாதிகாரம்தான். ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் ஈவு இரக்கம் இன்று கொலைசெய்வதோடு மக்களை பேச்சு சுதந்திரம் கூட இல்லாமல் மாக்களாய் நடத்து அரசே மக்கள் ஜன நாயகம் எனப்படுகிறது. இந்த ஸ்டாலினிசம் கம்யூனிஸம் எல்லாம் மதச்சார்பற்ற அபிரகாமியம் தான். அங்கே இயேசு என்றால் இங்கே மார்க்சு. அங்கே பைபில் என்றால் இங்கே தாசுகேபிடல். மனிதனேயமற்ற அரக்கத்தனத்திற்கு சர்வாதிகாரத்திற்கு அழகாக பெயர் வேறு மக்கள் ஜன நாயகம்.
    ஹா ஹா ஹஹா

  23. திரு. Honest Man ………..

    //திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி அனைத்துமே சரியில்லை என்றும் ஒட்டு பொறுக்கி அரசியல் வியாதிக்கு நன்மருந்து ஜனநாயக சோஷலிசமே என்றும் கூறுகிறார். அணைத்து கட்சிகளும் சரியில்லை எனும்போது ஜனநாயக சோஷலிசம் என்ற மருந்தை எந்த கட்சி கொண்டுவரும் என்று கூறுகிறார்? அவர் ஏதாவது புதிய கட்சி தொடங்க போகிறாரா?//

    நான் எந்த புதிய கட்சியையும் தொடங்கபோவதில்லை… மேற்படி கூறியது என்னுடைய கருத்தைதான்… ஜனநாயக சோசியலிசம் என்பது உண்மையான மதசார்பற்ற மக்களுக்கான மக்கள் நல அரசாங்கம் அப்படி பட்ட ஒரு ஒரு அரசு அமையும் வரை மக்களுக்கு விமோசனம் கிடையாது… ஏனென்றால் ஜனநாயக சோசியலிச அரசு முறையில் தான் மதம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.. மதத்தின் பெயரால் யாருக்கும் எந்த சிறப்பு உரிமையும் தரப்பட மாட்டாது…. அனைத்துமே பொருளாதார அடிப்படையிலேயே முடிவு செய்ய படும்…. மூன்றாவது அணி என்கிற பெயரில் புதிதாக ஒரு ஓட்டு பொறுக்கியை நாட்டில் நுழைய விட வேண்டாம் என்பது மட்டுமே என் கருத்து… இப்போதும் சொல்கிறேன் பா.ஜ.க கண்டிப்பாக ஒரு மக்கள் விரோத ஓட்டு பொறுக்கி கட்சிதான்… பா.ஜ.க ஒரு ஓட்டு பொறுக்கி கட்சியா அல்லது கொள்கை பிடிப்புள்ள கட்சியா என்பதை நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தல் நிருபித்து விட்டது.. அம்மாநில மக்கள் பா.ஜ.க வை கை கழுவவில்லை காலே கழுவிவிட்டார்கள் என்பது தான் நிதர்சனம்….

    //பிஜேபி ஒரு ஒட்டு பொறுக்கி அரசியலை நடத்துகிறது. என்பது அவரின் குற்றசாட்டு. முஸ்லிம் லீக் என்ற ஒரு அப்பட்டமான மதவாத கட்சியினை பற்றி எதுவும் அவருக்கு தெரியாது போலும். இஸ்லாமிய நாடுகளில்கூட “ஹஜ்” யாத்திரைக்கு மானியம் கிடையாது. ஆனால் மத சார்பற்ற நாடு என்று மார்தட்டி கொள்ளும் மானங்கெட்ட காங்கிரஸ் அரசு மானியம் வழங்கும் காரியத்தை தொடங்கி வைத்தது. அது இன்றுவரை தொடர்கிறது.//

    நான் பா.ஜ.க வை மட்டுமா ஓட்டு பொறுக்கி கட்சி என்று சொன்னேன்.. கூடவே தி.மு.க, ஆ.தி.மு.க,தே.மு.தி.க முக்கியமாக காங்கிரஸ் போன்ற அணைத்து கட்சிகளையும் சேர்த்தே தான் கூறினேன்… பா.ஜ.கவோ அல்லது முஸ்லிம் லீகோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் மதத்தின் பெயரால் அரசியல் நடத்தும் அத்தனை கட்சிகளுமே கேடுகெட்டவை தான்… ஹஜ் மானியம் என்பதெல்லாம் சிறுபான்மையினரை கவர ஓட்டு பொறுக்கிகள் செய்யும் தவறு தான்.. ஏன் பா.ஜ.கவும் தான் 5 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டது அப்போது ஒழித்திருக்க வேண்டியது தானே இந்த மானியத்தை… செய்ய மாட்டார்கள் ஏனென்றால் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி போய் விடுமே என்கிறே ஓட்டு பொறிக்கிகளுக்கே உண்டான அச்சம் தான்…

    //கடைசியாக:—— பிஜேபி கட்சி 100% நல்ல கட்சி என்று வாதாடவில்லை. அதிலும் ஒரு சில சிறு சிறு குறைபாடுகள் இருக்கின்றன. இல்லை என்று மறுக்கவில்லை. இருப்பவற்றில் குறைந்த குறைபாடுகள் உள்ள கட்சி எது என்று பார்க்கவேண்டுமே தவிர நகுலன் கூறுவது நகைப்பிற்குரியதே!//

    கடைசியாக:———– பா.ஜ.க வை 100% நல்ல கட்சி என்று யாருமே சொல்லவில்லை… குறைந்த குறைபாடு அதிக குறைபாடு.. சிறிய அளவில் கொள்ளையடிப்பவன்… பெரிய கொள்ளைக்காரன் இருவருமே ஒன்றுதான் திருட்டில் என்னையா வித்யாசம் .. மேலும் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதில் இந்த கட்சிகள் ஒன்றுகொன்று சளைத்தவை அல்ல… இதில் குறை குறைபாடு மிகை குறைபாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை…

  24. பாரதிய ஜனதா கட்சி தனித்து நின்று போட்டி இட்டு தன் பலத்தை பெருக்குவதால் அதன் பலன் பெருகும்.

    மாறாக கூட்டணி அமைத்தால் இன்னும் அதன் நிலை மோசமாகும்.
    இந்து ஒட்டுகளை அதிமுக பெறும் நிலை தான் வரும்.

    நிதிஷ் குமார் மற்றும் எடியுரப்பாக்களைப் போல் பலரை வளர்த்து விட வேண்டிவரும்.

    ஒரிசாவை நினைவில் வைக்கவும். அங்கு பட்நாயக்கை நன்கு வளர்த்துவிட்டார்கள்.

    இங்கும். வைகோ, விஜயகாந்த், ராம்தாஸ் போன்றவர்களை வளர்த்து விடவேண்டாம்.

    அடுத்த தேர்தலை நிணைக்காமல் அடுத்த தலைமுறையை மற்றும் எதிர்காலத்தை நினைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும்.

    கர்நாடகாவில் எற்பட்டது போல மீண்டும் எந்த மாநிலத்திலும் நடக்க விடக் கூடாது. கர்நாடகாவில் அவசரப்பட்டு ஆட்சிக்கு வந்து விட்டனர்.

    மேலும். மோடி போல முழுநேர பிரசாரகர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

    மோடியும் தற்போது 275-க்கு மேல் இடம் பிடித்தால் மட்டுமே ஆட்சியில் அமரவேண்டும்.275-க்குக் குறைந்தால் வலுவான எதிர்க்கட்சியாக இருந்து
    அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அல்லது வேறு யாரையாவது ஆட்சியில் அமர்த்தி வெளியில் இருந்து ஆதரவு தரவேண்டும்.

    இல்லை என்றால் மக்களின் ஆதரவை எதிர்பார்வை பாரதிய ஜனதா இழந்துவிடும்.

    அவசரப்பட்டு ஆட்சியில் அமரவேண்டாம். கட்சியை வளருங்கள். இந்துக்களுக்காக எதிர்க்கட்சியாக இருந்து போராடுங்கள். அப்படிச் செய்தால் பதவி ஆசை பிடித்து கட்சியில் சேரும் அரசியல்வாதிகள் கட்சியை விட்டுப் போய்விடுவார்கள்.

    ஆளும் கட்சியாக இருந்து சாதிப்பதை விட அதிகமாக வலுவான எதிர்க்கட்சியாக இருந்து சாதிக்கலாம். தலைவர்கள் இதனை கருத்தில் கொள்ளலாம்.

  25. இக்கட்டுரைக்கு கருத்தும் விமர்சனமும் தெரிவிதத அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதிகளில், உங்கள் கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும்.

    திரு. வைகோ-வை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர் தனது காலப் பொருத்தமற்ற நிலைப்பாடுகளால் தனது நிலையைத் தாழ்த்திக் கொண்டது தான் எனக்கு வருத்தம். அவர் மதிமுக துவங்கியபோது, தமிழகம் முழுவதும் பாதயாத்திரை சென்றபோது நானும் அவருடன் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்திருக்கிறேன். அவர் செய்த தவறுகளை இத்தேர்தலில் சரிசெய்துகொள்ள கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக இத்தேர்தலில் அவர் வேட்பாளராக களம் காண வேண்டும்.

    திமுக, அதிமுக-வை விட்டால் வேறு வழியில்லை என்பது தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடே. இத்தேர்தல் அந்தக் கருத்தோட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே எனது கட்டுரைத் தொடரின் நோக்கம்.

    அனைவருக்கும் நன்றி.

    -சேக்கிழான்

  26. திரு ராகுலன் அவர்களுக்கு வணக்கம். நலம் நாடுவதும் அதுவே.

    உங்கள் ஜனநாயக சோஷலிச வாதத்திற்கு திரு விபூதிபூஷன் அவர்கள் சரியான பதில் கொடுத்துவிட்டார். அதுவே போதும் என்று நினைக்கிறேன்.

    ஒரு தேர்தலில் தோற்பதும் ஜெயிப்பதும் சகஜம். அதற்காக ஒரு கட்சி தோற்றுவிட்டால் உடனே அது ஒரு ஒட்டு பொறுக்கி கட்சி என்று ஊர்ஜிதம் ஆகிவிட்டது என கூறாதீர். தோற்கும் கட்சியெல்லாம் ஓட்டுபொறுக்கி கட்சி என்றால் (நீங்கள் மனசில் நினைத்துகொண்டிருக்கும் கட்சியான) கம்யூனிஸ்ட் கட்சி கூட மேற்கு வங்காளத்தில் மற்றும் கேரளாவில் தோற்றது. ஆனால் அதை மட்டும் ஒட்டு பொறுக்கி கட்சி என்று கூறமாட்டீர்கள். ஏனென்றால் அது ஜனநாயக சோஷலிசத்தை கட்டி காக்கிறது என்பீர். கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியோடு கூட்டு வைத்துகொண்டு கும்மாளம் போட்டபோது அப்போது ஒரு மதவாத கட்சியோடு கூட்டு வைத்திருக்கிறோமே என்று அவர்களுக்கு குற்ற உணர்ச்சி இல்லை.. இப்போதும் தமிழ் நாட்டில் திமுக அல்லது அதிமுக யுடன் ஏதாவது ஒரு முஸ்லிம் கட்சி கூட்டு சேர்ந்தால் அதை பற்றி கவலை படாமல் அவர்களோடு மூன்றாம் நபராக கூட்டணி வைத்துகொண்டு கொஞ்சி குலாவுவார்கள். ஆனால் பிஜேபி யை பார்த்து “ஐயோ அது மதவாத கட்சி” என்று கத்துவார்கள். பிஜேபி யை பார்த்து குற்றம் சாட்டி கம்யூனிஸ்ட் தனது சுட்டுவிரலை நீட்டும்போது மற்ற விரல்கள் தன்னை சுட்டுகின்றன என்பதை அவர்கள் உணரவேண்டும். இன்னும் சொல்லபோனால் நாட்டில் communalism வளர்வதற்கு காரணமே communism தான் என்றால் அது மிகையாகாது.

    முஸ்லிம் லீகில் முஸ்லிம்கள் மட்டும்தான் இருப்பார்கள். ஆனால் பிஜேபி யில் முஸ்லிம்கள் ( ஷஹ்னவாஸ், நஜ்மா ஹெப்துல்லா, கிரிஷ்ணகிரியை சேர்ந்த முனவரி பேகம், முக்தர் அப்பாஸ் நக்வி,) மற்றும் சீக்கியர்கள் (Navjot singh Siddhu , S .S . அலுவாலியா) மற்றும் கிறிஸ்தவர்கள் (கோவையை சேர்ந்த ஈபன் ஜெயசீலன்) மற்றும் SC இனத்தவர் (மத்திய சென்னையை சேர்ந்த முருகன்) என்று பல இன மக்கள் பிஜேபி பதவிகளில் உள்ளனர். அதனால் தான் அது பாரதிய ( அதாவது இந்தியாவிலுள்ள ) ஜனதா (அதாவது மக்க்ளைகொண்ட) கட்சி எனப்படுகிறது அது இந்து மதவாத கட்சி என்றால் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அதில் இருப்பார்களா?

    5 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது ஹஜ் மானியத்தை பிஜேபி ஒழித்திருந்தால் காங்கிரஸ் மற்றும் (உங்கள் கட்சியான) கம்யூனிஸ்ட் கட்சியும் கைகோர்த்துக்கொண்டு “பார்த்தீர்களா பார்த்தீர்களா பிஜேபி தன இந்து மத வெறியை காட்டிவிட்டது” என்று கூச்சல் போட்டிருப்பார்கள். அதற்கு லொள்ளு பிரசாத் மற்றும் முல்லா முலாயம் இருவரும் சேர்ந்து ஒத்து ஊதி இருப்பார்கள். கருணாநிதி முரசொலியில் கவிதை எழுதி இருப்பார்.மற்ற கட்சிகள் அவர்களின் வோட்டுக்காக உண்ணாவிரதம் ஆர்பாட்டம் என நடத்தி நாட்டை அல்லோலகல்லோலம் செய்திருப்பார்கள். உங்களை போன்றோர்கள் “அதற்குதான் பிஜேபி வந்தால் நாடு ரண களமாகும்” என்று இணையத்தில் எழுதுவீர்கள். எனக்கு MY (அதாவது muslim + Yadav ) வோட்டு இருக்கும் வரை என்னை யாரும் அசைக்கமுடியாது என்று லொள்ளு சொன்னான். இப்படி மத மற்றும் ஜாதி வெறி கொண்டு பேசியவன் பிஜேபி யை பார்த்து குற்றம் கூறுகிறான். முஸ்லிம் வோட்டுக்காக (மத அடிப்படையில்) 5% இட ஒதுக்கீடு, முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் கல்வி கடன் உதவி என்று கொடுத்து அவர்களை காங்கிரஸ் தான் தாஜா செய்கிறது. பாஜ அல்ல சிறுபான்மை இனத்தவரான முஸ்லிம்களை இநதிய பிரஜைகள் என்ற வகையில் என்றைக்கும் பிஜேபி மதிக்கும் தோழமை கொண்டாடும். ஆனால் அதற்காக அவர்களின் ஓட்டுக்காக என்றும் ஏங்கியதில்லை அதனால் ஒட்டு பொறுக்கிகளுக்குரிய அச்சம் என்றும் பிஜேபிககில்லை.

    ////நான் பாஜ வை மட்டும் சொல்லவில்லை எல்லா கட்சிகளையும் சொல்ல்கிறேன்.//// அப்படியானால் நீங்கள் இந்தியாவில் இருக்கவேண்டாம். சீனாவிற்கு போய்விடுங்கள். அங்கு போய்விட்டால் உங்கள் வாயை திறந்து எந்தவிதமான விமர்சனமும் செய்ய முடியாமல் அமைதியான (!?) வாழ்க்கை நடத்தலாம்.

    அன்பு சகோதரரே நீங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர். ஒட்டு போடுவது உங்கள் ஜனநாயக கடமை. நல்ல ஒரு குடிமகன் ஒட்டு போட்டே ஆகவேண்டும். அப்படியானால் தேர்தலில் நிற்கும் எந்த வேட்பாளரும் 100% யோக்கியன் கிடையாது. ஏன்? உலகத்தில் கூட 100% யோகியன் கிடையாது.நீங்களும் நானும் யோக்கியர்களா? மனசாட்சியை தொட்டு சொல்லமுடியுமா?அவ்வளவு ஏன்? நாம் வாழும் உலக உருண்டை கூட 33 1/2 degree சாய்வாக தான் சூரியனை சுற்றி வருகிறது. உலகத்தில் எதுவும் நேராக இல்லை. ஆகவே குறைந்த percentage உள்ள அயோக்கியனை தேர்ந்து எடுத்துதான் ஆகவேண்டும். Because this is a democatic country , you know .

  27. Honestman இன் விளக்கம் அற்புதம். இதைவிடவா இவர்களுக்கு உறைக்கும் விதத்தில் சொல்ல முடியும்? அப்படியும் இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் (மாற்றிக் கொள்ள மாட்டார்கள்) இவர்களுக்குப் பதில் சொல்வது வீண் வேலை. காலத்தால், மலைகளும், பாறைகளும், மேடு பள்ளங்களும் கூட மாறும் இறந்து போன கம்யூனிச சித்தாந்தத்தைப் பிடித்துக் கொண்டு தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பவர்கள் மாறவே மாட்டார்கள். பா.ஜ.க.வில் ஒரு முஸ்லிம் செய்தித் தொடர்பாளர் உண்டு , இது போல வேறு நிகழ்வுகளை இவர்கள் சுட்டிக் காண்பிக்க முடியுமா? தன்னிடம் ஜூனியராக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் பண்ணிய யாரையும் இங்கு வைத்துக் கொள்வதில்லை.

  28. ————————————————முக்கிய செய்திகள்———————————————–1 நேற்று (22-9-2014) பாகிஸ்தானில் பெஷாவரில் “All Saints Church ” ல் 2 வெடி குண்டுகள் வெடித்து 72 கிறிஸ்தவர்கள் இறந்தனர் 100 க்கு மேற்பட்டோர் காயமுற்றனர். அதில் பலர் critical condition ல் உள்ளனர்.

    2. கென்யா நாட்டில் நைரோபியில் சோமாலிய நாட்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 59 பேர் கொல்லபட்டனர். அதில் 2 இந்தியர்கள் இறந்தனர். அந்த இருவரில் ஒருவர் தமிழர். அவர் பெயர் ஸ்ரீதர் நடராஜன் (வயது 40). மேலும் நான்கு இந்தியர்கள் படுகாயமுற்றுள்ளனர்.

    3. விழுப்புரம் மாவட்டம் – இலவநூர்கோட்டை அருகிலுள்ள எறையூர் கிராமத்தில் லூர்துமேரி (52) மற்றும் சபினா மேரி (35) ஆகிய இரு மேரி களையும் கள்ளச் சாராயம் கடத்தியதாக காவல்துறை கைது செய்தது.

    4. சென்னை Triplicane ல் அய்யாவு தெருவிலிருக்கும் AXIS வங்கியின் ATM யை நொறுக்கியதாகவும் security guard ஐ தாகியததாகவும் நேற்று 3 பேரை போலீஸ் கைது செய்தது. அந்த மூவரும் குடித்துவிட்டு இதை செய்ததாக போலீஸ் கூறுகிறது. அந்த மூன்று மிக மிக நல்லவர்கள் பெயர் பின்வறுமாறு.1)அப்துல் சாஹிப் (23), 2) ரியாஸ் அலி (23), 3) இம்ரான் (28)

    இந்து மதம் சரியில்லை அது நல்லதை போதிக்கவில்லை இந்துக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்று சொல்கிறார்கள் மற்ற மதங்கள் இரண்டும் நல்லதையே போதிக்கின்றன நல்வழி காட்டுகின்றன அமைதி மதம் அன்பு மதம் என்று கூறுகிறார்கள். அதை நாம் கண்டிப்பாக நம்பித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை.

  29. பாகிஸ்தானிய தாலிபானீய தீவிரவாத கொடுங்கோலர்களின் வெடிகுண்டு தாக்குதலில் இறந்தோர் எண்ணிக்கை 78. மேலும் 178 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நைரோபி நகரில் கொல்லப்பட்ட ஸ்ரீதர் நடராசன் என்ற தமிழரிடம் ” முகம்மது நபியின் தாயார் பெயர் என்ன என்று கேட்டு , அவருக்கு தெரியாததால் அல்காயிதா காலிகள் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

    இங்குள்ள அமைதி மதம் என்று சொல்லித்திரியும் நண்பர்கள் இது போன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரிய ஊர்வலம் போய், எதிர்ப்பு தெரிவித்தால் நல்லது. அதை விடுத்து, ஒரு நடிகரின் படத்தை எதிர்த்து ஊர்வலம், போராட்டம் என்று நடத்தி, அந்த நடிகருக்கு தேவை இல்லாத விளம்பரம் கொடுத்து, பல கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்க வழி வகுத்தனர் இந்த கோமாளிகள். அய்யகோ பாவம், அதே நடிகரின் அடுத்த படத்துக்கும் இப்போதே எதிர்ப்பு தெரிவித்து, அந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கு மேலும் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். நமக்கு என்ன சந்தேகம் என்றால், அந்த நடிகருக்கும், இந்த தீவிரவாத கும்பலுக்கும் ஏதோ விளம்பரக்கமிஷன் ஒப்பந்தம் இருக்குமோ என்று ஐயம் எழுகிறது.

    ஆபிரகாமிய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவை ஆகும். அவர்களின் கடவுள் சக்தி வாய்ந்தவர் என்ற என்னமோ, அந்த கடவுள் தங்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோ இல்லாததால் தான் அவர்கள் துப்பாக்கி, வெடிகுண்டு, தற்கொலைப்படை என்று வெறி பிடித்து அலைகிறார்கள். ஆபிரகாமிய மதங்களுக்கு நாத்திகர்கள் எவ்வளவோ மேல். நாத்திகர்கள் அனைவரும் சொர்க்கத்துக்கு போவார்கள். ஆனால் வன்முறையை வாழ்க்கைமுறையாக ஏந்தி வாழும் ஆபிரகாமிய மதத்தினர் நிச்சயம் நரகம் தான் போவார்கள். பிறரை நேசிப்பவன் சொர்க்கம் போவான். பிறரை கொல்ல ஆயுதம் ஏந்தி , கொலை வெறி பிடித்து அலைவோர் எல்லாம் முழு நரகத்துக்கு தான் செல்வார்கள்.

  30. இந்தியாவுக்கு நல்லகாலம் தமிழ்நாட்டுக்கு நல்லகாலம் உருவாக இந்த பிஜேபி வைகோ …… கூட்டணி கண்டிப்பாக வரவேண்டும் வரும்; தங்கள் கட்டுரைக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.- ஜெயகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *