திருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்

September 27, 2013
By

ரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்ற செய்தி ஒரு மாதம் முன்பே அறிந்திருந்தாலும் நிகழ்ச்சிக்கு நான்கு நாட்கள் முன்புதான் நாமும் சென்று பார்ப்போமே என்று முடிவெடுத்தேன். பாஜக நிர்வாகி ஒருவரிடம் நீங்கள் செல்லும் பஸ்ஸில் எனக்கும் ஒரு இடம் போடுங்கள் என்று கேட்டேன். அதற்க்கு அவர் உங்கள் நண்பர்கள் யாரேனும் இருந்தாலும் சொல்லுங்கள், அவர்களையும் கூட்டிக்கொண்டு போகலாம் என்றார்.

நான் என்னுடைய முகபுத்தக செய்தி பெட்டியில் இதை போட்டேன். நிறைய பேர் தொடர்பு கொண்டார்கள். எண்ணிக்கை கூடியபோது எங்களுக்கு என்று தனியே ஒரு பேருந்து ஏற்பாடு செய்து விடுவதாக சொன்னார்கள் – இலவசம் அல்ல. அனைவரும் செலவை பகிர்ந்து கொண்டோம்.  முக புத்தக நண்பர்கள் உடன் வர நாங்கள் ஒரு பேருந்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று காலை ( 26 செப்டம்பர்) பயணமானோம்.

modi-in-trichy-2

courtesy: narendramodi.in

நாங்கள் திருச்சியை நெருங்கும்முன் அங்கு (மதியம் 1 மணி) கூட்டம் அதிகமாகி விட்டதாக கூறி மாநாடு நடக்கும் இடத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் எங்களை இறங்க சொல்லி பஸ்சை அங்கேயே நிறுத்த சொன்னார்கள் போலீசார். அங்கே பஸ்ஸை நிறுத்தி விட்டு நடந்து சென்றோம். வழியெங்கும் மக்கள் சாரி சாரியாக தாரை தப்பட்டைகளுடன் கோவில் திருவிழா போல வந்து கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் சேர்ந்து கொண்டு மாநாடு நடக்கும் இடத்தை அடைந்தோம். இத்தனை மக்கள் கூடியிருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு (சுமார் 3 லட்சம் பேர் அல்லது அதற்கும் மேல்) வெறும் இரண்டே வாயில்கள். பயங்கர நெரிசல். மெனக்கெட்டு இருக்கைகளை அடைந்தோம். உட்கார்ந்து சிறிது நேரம் கழித்து பின்னால் பார்த்தால் ஏராளமான மக்கள் உட்க்கார இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்கள்.ஐந்து மணி நேரம் நின்று கொண்டே பேச்சை கேட்டனர் அனைவரும். நம் பாடு தேவலை என்று தோன்றியது.

நிகழ்ச்சியில் யார் யார் என்னென்ன பேசினார்கள், அதில் என்னென்ன குறை,சொற்குற்றம், பொருட்குற்றம் என்பதெல்லாம் “நடுநிலையாளர்கள்” கூறுவார்கள். நம்மை விட உன்னிப்பாக பேச்சை அவர்கள் கவனிப்பார்கள். அதனால் கவலை இல்லை. எப்படியும் வீடியோ வரும். மாநாடு பற்றிய என் எண்ணங்களை கூறவே இந்த பதிவு.

dinamani_cartoon_modi_speech

Courtesy: Dinamani.com

முதலில் இந்த பிரம்மாண்ட மக்கள் கூட்டம். இன்றைய தினமணியில் மதியின் கார்ட்டூன் அருமையாக இந்த மாநாட்டு நிகழ்வை பதிவு செய்திருந்தது. இத்தனை லட்சம் மக்கள் பிரியாணி இல்லாமல் சரக்கு இல்லாமல் பணம் கொடுக்கப்படாமல், கைக்காசை செலவு செய்து மாநாட்டுக்கு கட்டணம் செலுத்தி வந்தது திராவிட கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் பாஜகவுக்கும்கூட ஆச்ச்சரியமாகத் தான் இருக்கும். இது நிச்சயம் அவர்கள் வலுவால் வந்த கூட்டமல்ல. சங்கம் மற்றும் இதர பரிவாரங்களும் இதற்கு பொறுப்பில்லை என்று கூறலாம். கூட்டத்தின் ஒரு சிறிய சதவிகிதம் மட்டுமே இவர்களால் வந்திருக்கும்.

மற்ற எல்லோரும் வந்தது ஒரு மாற்றத்தை வேண்டியா, மோடிக்காகவா, மோடியை எல்லோருக்கும் தெரியுமா என்பதெல்லாம் நாம் யோசித்து கொண்டே இருக்கலாம். விடை கிடைக்காது. விவசாயிகள், அடித்தட்டு மக்கள் என்று வழக்கமாக பாஜக மற்றும் சங்க கூட்டங்களில் பார்க்க கிடைக்கும் முகங்கள் அல்ல இவர்கள். பலதரப்பட்டவர்கள். வந்த கும்பலை பார்த்தால் பார்லிமென்ட் மட்டுமல்லாமல் சட்டசபையும் வெல்லும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தோன்றியது (ரொம்பத்தான் ஆசை என்று நினைக்காதீர்கள். இத்தனை தன்னார்வம் கொண்ட இளைஞர்களை எந்த கட்சியிலும் பார்க்க முடியாது) இதனை பயன்படுத்திக் கொண்டு பாஜக கட்சியை அடிமட்டம் வரையிலும் வளர்க்க வேண்டும்.

எல்லோர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு. ஒரு நம்பிக்கை. ஒரு சில மாநிலங்களில் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாற் போல இங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். கண்டிப்பாக உளவு அறிக்கை முதல் அமைச்சரிடம் போயிருக்கும். கூட்டணி பேச்சு வார்த்தையின் போது பாஜக குழையாமல் நெஞ்சை நிமிர்த்தி வேண்டியதை கேட்டு பெறலாம். இல்லையென்றால் மதிமுக தேமுதிக, பாமக, இஜக, புதிய தமிழகம், கொங்கு இத்யாதிகளுடன் களம் இறங்கலாம். கண்டிப்பாக இருவது இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வேலை நாளில் திருச்சியில் நடந்த மாநாட்டிற்கே இவ்வளவு கூட்டம் என்றால் விடுமுறை நாளில் சென்னையில் வைத்து இருந்தால் எண்ணிக்கை கண்டிப்பாக ஏழு எட்டு லட்சத்தை தாண்டும் என்று தோன்றுகிறது.

மாநாட்டுக்கு நேரில் வராதவர்கள் எவருக்கும் நான் சொல்லும் இவ்விஷயம் மிகைப்படுத்த பட்டதல்ல என்பது புரியாது. மோடியைக் கண்டவுடன் மக்கள் அடைந்த உற்சாகத்தை விவரிக்கவே முடியாது. இதுதான் உண்மையான எழுச்சி. தமிழர்கள் முகம் கோணாமல் அகம் நிறைந்து ஒரு ஹிந்தி சொற்பொழிவை ஒரு மணி நேரம் கேட்டார்கள். வாழ்க ஒழிக என்று கோஷம் போட்டே பழக்கப்பட்ட மக்கள் வந்தேமாதரம் என்று கோஷம் போட்டார்கள்.

modi-in-trichy-1

Courtesy: Firstpost.com

“மோடி விவேகானந்தரின் மறு பிறப்பாமே” என்று கிராமத்து ஆட்கள் பேசுவதை கேட்கும் போது சிரிப்பு வந்தாலும், திடீர் என்று அவருக்கு இப்படி நாடு தழுவிய ஒரு மவுசு எப்படி வந்தது? அதுவும் ஊடகங்கள் எதுவும் அவரைப் பற்றி நேர்மறையாக எதுவும் எழுதுவதில்லை என்று கங்கணம் கட்டி கொண்டிருக்கும்போது என்ற கேள்வி மனதில் எழுகிறது. என்னுடன் விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் வந்திருந்தனர். அவர்கள் வீட்டில் கட்சி மாநாடா? அங்கெல்லாம் போகாதே. எல்லாம் குடிச்சிட்டு வந்து கூத்தடிப்பானுக என்று பயமுறுத்தியதையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர். இத்தனை லட்சம் மக்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் இரவு கும்மிருட்டில் நடந்து வரும்போது அனைவரும் ஒழுங்காகச் செல்வதைப் பார்த்து அவர்களுக்கு ஒரு சந்தோஷ நிம்மதி (“இது ஒரு பிரம்மாண்ட கேந்திரா நிகழ்ச்சி போல் இருக்குண்ணா”).

இந்த கும்பலெல்லாம் இதற்கு முன் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு செலுத்தியவர்களாகத்தான் இருப்பார்கள் – நிச்சயமாக பாஜக கிடையாது என்று சொல்வேன். அப்படி இருந்திருந்தால் இந்நேரம் பொன்னார் தான் முதல்வராக இருந்திருப்பார்! இந்த கட்சி கூட்டத்திற்கு வரும் போது மட்டும் ஒழுங்கு எப்படி இயல்பாக வந்து விடுகிறது என்று யோசித்தால் ஒன்று புரியும். தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி.

இந்த எழுச்சியை அரசியல் ரீதியான பலனாக மாற்ற செய்ய வேண்டிய விஷயங்களை பாஜக செய்ய வேண்டும். புதிய முகங்களை நிறைய சேர்க்க வேண்டும். இந்த ஒழுங்கை அரசியல் கலாச்சாரமாக மாற்ற வேண்டும். ஒரு சில விஷயங்கள் நெருடலாகவும் இருந்தன. மோடி புகழ் பாடும் பாட்டுக்கள், ஒலித்தகடுகள் விற்பனை, மோடி படம் போட்ட டி ஷர்ட் மற்றும் அவரது படங்கள் என்பதெல்லாம் என்னை போன்ற நபர்களுக்கு கொஞ்சம் இனிக்காது. இருந்தாலும் இவையெல்லாம் கட்சி அடையும் பரிணாம “வளர்ச்சியின்” ஒரு பகுதி என்று எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

modi-in-trichy-3

தர்மம் நலிவடையும் போதெல்லாம் நான் மீண்டும் வருவேன் என்று சொன்ன பரமனின் வாக்கு ஞாபகத்துக்கு வருகிறது. இது ஒரு அவதாரமாக இருக்குமோ? “மோடி என்ன அவதாரமா” என்று உருட்டுக் கட்டையை எடுத்து கொண்டு அடிக்க வராதீர்கள். நான் அவதாரம் என்று சொன்னது மக்கள் மனதில் தோன்றியிருக்கும் எழுச்சியையும் மாற்றத்தையும். இந்த அவதாரத்தை ஒழுங்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது பாஜகவின் கடமை, பொறுப்பு.

கடைசியாக, இன்றைய நாளிதழ்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் வெள்ளத்தை வர்ணிக்கும் விதம்.
Times of India: More than 80 thousand gathered.
தினமலர்: லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

இரண்டும் உண்மைதான். உண்மையைப் போல பொய்யை சொல்வதில் தேர்ந்த நம் ஆங்கில ஊடகங்கள் தொடர்ந்து இது போல எழுதி கொண்டிருக்கட்டும். கெட்டவன் தூற்றத் தூற்ற நாம் வளர்வோம்.

*********

நிகழ்ச்சிக்குச் சென்று வந்த வேறு சிலரிடமும், அமைப்பாளர்களிடமும் பேசியதிலிருந்து தெரிய வந்த தகவல்கள்

– நமது நிருபர்

மைதானத்தில் போட்டிருந்த சேர்களின் எண்ணிக்கை சுமார் 85000. மொத்தம் வந்திருந்த மக்கள் குறைந்த பட்சம் இதைப் போல மூன்று மடங்கு இருக்கலாம். நாற்காலிகளும் அந்த மைதானம் முழுவதும் நிறைந்து, பாலத்திற்கு அப்பாலிருந்த துணை மைதானங்களும் நிரம்பி வழிந்தன. வந்திருந்த பேருந்துகள்,மினி பேருந்துகளின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேல்.

பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்கும் வகையில் பாட்டில்கள் இல்லாமல் வேறு வகையில் தண்ணீர் வினியோகம் செய்வது பற்றி ஆலோசிக்கப் பட்டது. அது பாதுகாப்பாதனல்ல என்று காவல் துறையினர் கூறி விட்டதால் பிளாஸ்டிக் பைகளில் குடிநீர் வழங்கப் பட்டது.

எமர்ஜென்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன்; உதாரணம் – ஒரு பெண்மணி சர்க்கரை நோய் காரணமாக தீடீர் மயக்கமடைய உடனே வெவ்வேறு மூன்று தொண்டர்கள் சாக்லேட் எடுத்து வந்து கொடுத்தனர் – அது அவர்கள் பையில் எதேச்சையாக இருந்ததல்ல.

பொதுவாக எல்லா கட்சி மாநாடுகளிலும் நிகழ்ச்சி நடந்து முடிந்த பின் அந்த இடம் ஒரு மாபெரும் குப்பை மேடு போல இருக்கும். டாஸ்மாக் பாட்டில்கள், துண்டுகள், செருப்புகள் இவையெல்லாம் கிடக்கும். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மைதானத்தைச் சுற்றிவந்து பார்த்தபோது இவை எதுவும் தென்படவில்லை. பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்காக உரிய கட்டணம் மாநகராட்சிக்கு கட்சி அமைப்பாளர்களால் ஏற்கனவே செலுத்தப் பட்டிருந்த படியால் அவர்கள் இரவோடிரவாக உடனே வந்து மைதானத்தை சுத்தம் செய்து விட்டனர்.

கூட்டம் மிக ஒழுங்கோடு கலைந்துபோனது; நகருக்குள் எந்த அலம்பலும் இல்லாமல் கூட்டம் மிகக் குறைந்த நேரத்தில் வெளியேறியது. இரவு 8 மணிக்கு கூட்டம் முடிந்தது. 11 மணிக்கு நகர போக்குவரத்து வழக்கம் போல ஆரம்பித்து விட்டது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் பந்தோபஸ்துக்கு நின்றிருந்த காவலர்களின் ஈடுபாடான பங்கற்பு. வழக்கமாக இதுபோன்ற அரசில் கூட்ட பந்தோபஸ்துக்கு வரும் காவலர்கள் விட்டேற்றியாகத் தான் நிற்பார்கள்; அது இங்கே நேர் மாறாக இருந்தது. மேலும் ஏற்பாடு செய்த கட்சிக் காரர்கள் முழுமையாக காவல் துறையுடன் ஒத்துழைத்தனர். அவர்களை காவல் துறையினர் மனம் திறந்து பாராட்டவும் செய்தனர்.

modi-in-trichy-4

Tags: , , , , , , , , , , ,

 

38 மறுமொழிகள் திருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்

 1. தஞ்சை வெ.கோபாலன் on September 27, 2013 at 7:49 pm

  இன்று மாலை தஞ்சையில் சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை நிறைவு விழா குறு தயாள் சர்மா அரங்கில் நடந்தது, போயிருந்தேன். என் அருகில் ஒருவர் என்னிடம் ‘சார் நேற்று திருச்சிக்குப் போயிருந்தேன். அடடா என்ன கூட்டம் என்ன கூட்டம், மூணு லட்சம் பேர் இருப்பாங்க சார். கண்ணுக்கு எட்டிய தூரம் மனுஷ தலைகள் தான். எல்லாம் இளைஞர்கள். தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் பொய் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவது அங்கு தெரிந்தது. மோடியைப் பார்க்கவும், அவர் பேச்சைக் கேட்கவும் எத்தனை ஆர்வம். மக்களுக்கு ஒரு புது ரத்தம் பாஞ்சது போல அத்தனை வேகம் விறுவிறுப்பு. நிச்சயம் பா.ஜ.க. இந்த முறை தமிழ் நாட்டில் பேரு வெற்றி பெரும் சார் என்றார். அவர் பா.ஜ.க. ஆள் இல்லை. மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் அவர் கருத்துதான் உண்மை.

 2. அடியவன் on September 27, 2013 at 9:00 pm

  ///மோடியை எல்லோருக்கும் தெரியுமா என்பதெல்லாம் நாம் யோசித்து கொண்டே இருக்கலாம். விடை கிடைக்காது. ///

  விடை உண்டு. மோடியைப் பரவலாகத் தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தெரியும். முன்பு போல் இல்லாமல் இப்போது தொலைக்காட்சி ஊடகங்கள் படி தொட்டிகளில் எல்லாம் பரவி இருப்பது ஒரு முக்கியக் காரணம்.

  வாஜ்பாயியையும் மக்கள் எல்லாருக்கும் அவர் பிரதமர் ஆகும் முன்னரே தெரியும். அவரும் அத்வானியும் 1977 இல் ஜனதா கட்சியின் வெற்றிக்குப் பெருமளவில் பாடுபட்டவர்கள், அவசரநிலை என்ற ஜனநாயகப் படுகொலையில் இருந்து நாட்டைக் காப்பாற்றியவர்களில் முக்கியமானவர்கள் என்று தெரியும்.

  ஆனால் ஜெயலலிதா என்ற பொய் மூட்டையுடன் 1998 இல் கூட்டணி வைத்த காரணத்தால் பின்னாளில் ஜெயலலிதா அந்தக் கூட்டணியில் இருந்து விலகியபின் வந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் 1999 இல் தமிழ்நாட்டின் மூளை முட்க்குகளில் எல்லாம் போய் வாஜ்பாயி யாரென்றே தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாது, நான்தான் அவரைத் தமிழ்நாட்டுக்கே அறிமுகம் செய்து வைத்தேன் என்று கொக்கரித்தார். “அய்யா, வாஜ்பாயி அய்யா, ஏமாத்திப் புட்டீங்களே அய்யா” என்று சொந்தக் குரலில் பாட்டும் பாடினார்!

  மீண்டும் அந்த இழிநிலை எந்தப் பாரத ஜனதா தலைவருக்கும் வரக் கூடாது என்றால் அதிமுகவுடன் கூட்டணி என்ற சிந்தனையே வரக் கூடாது.

  ///கண்டிப்பாக உளவு அறிக்கை முதல் அமைச்சரிடம் போயிருக்கும். கூட்டணி பேச்சு வார்த்தையின் போது பாஜக குழையாமல் நெஞ்சை நிமிர்த்தி வேண்டியதை கேட்டு பெறலாம். இல்லையென்றால் மதிமுக தேமுதிக, பாமக, இஜக, புதிய தமிழகம், கொங்கு இத்யாதிகளுடன் களம் இறங்கலாம். கண்டிப்பாக இருவது இடம் கிடைக்கும்///

  ஜடாயு, என்ன சொல்ல வருகிறீர்கள்? ஜெயலலிதாவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை என்றா? எப்படி நினைக்கலாம்? அவரைப் போல ஒரு நம்பிக்கைத் துரோகி தமிழ்நாட்டில் அரசியலில் இல்லை என்று அன்றைய வாஜ்பாயியில் இருந்து நேற்றைய வைகோ வரை சொல்லுவார்கள் !! இன்னமுமா ஏமாளியாக இருக்க வேண்டும்?

  2013 இல் தமிழக மக்கள் மன நிலை:

  திமுக அதிமுக இரண்டின் மேலும் ஒவ்வொரு வகை வெறுப்பு மனதில் இருக்கிறது. வைகோவைத் தவிர வேறு எந்த அரசியல்வாதியும் மக்கள் பிரசினைகளுக்காகப் போராடுவதே இல்லை என்பது தெரிகிறது, ஆனால் வைகோவால் அதனை வாக்குகளக்க மாற்றத் தெரியவில்லை, அல்லது முடியவில்லை.

  (பொன்.ராதாகிருஷ்ணன் இப்போதுதான் இரண்டு ஆண்டுகளாகப் போராட ஆரம்பித்திருக்கிறார்.)

  இப்போது இருக்கும் இந்த இரண்டு ஒரேகுட்டைய்ல் ஊறிய மட்டை இல்லாத வேறோரு கட்டை கிடைக்காமல்தான் கரைசேர முடியவில்லை என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஒரு துரும்பு சரியாகக் கிடைத்தாலும் பற்றிக் கரைசேரக் காத்திருக்கிறார்கள்.

  இந்தச் சூழலில் திமுக அதிமுக இரண்டில் இத்தோடு கூட்டணி வைத்தாலும் நாற்பத்தாறு ஆண்டுகளாகக் காங்கிரஸ் எப்படிக் கிடக்கிறதோ அப்படித்தான் பாஜகவும் கிடக்க வேண்டி வரும்.

  திமுக அதிமுக இரண்டுக்கும் ஒருசேரக் கதவை அடையுங்கள். பாமக போன்ற சாதிக் கட்சிகள் வேண்டாம். மதிமுக, தேமுதிகவுடன் பாஜக போட்டியிடட்டும், மோடி இன்னும் சில முறை தமிழநாட்டில் கோவை, மதுரை, வேலூர், சென்னை, சேலம் திருனெல்வேலி, தஞ்சை போன்ற இடங்களில் மேடை ஏறட்டும்.

  நீங்கள் சொன்ன இருபது இடங்களில் நிச்சயமாக பாஜக கூட்டணி வெல்லும். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.

  சோ பேச்சைக் கேட்டால் தமிழ்நாட்டுக்கு இப்போது கிடைத்து இருக்கும் விடிவெள்ளியை விடியாமூஞ்சி ஆக்கிய பலிதான் வந்து சேரும்.

 3. K R A Narasiah on September 27, 2013 at 9:21 pm

  படித்த போது நேரில் பார்த்த அனுபவம் காணப்பட்டது. நல்ல பகிர்வு முக்கியமாக இப்பகுதி:
  அடடா என்ன கூட்டம் என்ன கூட்டம், மூணு லட்சம் பேர் இருப்பாங்க சார். கண்ணுக்கு எட்டிய தூரம் மனுஷ தலைகள் தான். எல்லாம் இளைஞர்கள். தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் பொய் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவது அங்கு தெரிந்தது. மோடியைப் பார்க்கவும், அவர் பேச்சைக் கேட்கவும் எத்தனை ஆர்வம். மக்களுக்கு ஒரு புது ரத்தம் பாஞ்சது போல அத்தனை வேகம் விறுவிறுப்பு. நிச்சயம் பா.ஜ.க. இந்த முறை தமிழ் நாட்டில் பேரு வெற்றி பெரும் சார் என்றார். அவர் பா.ஜ.க. ஆள் இல்லை. மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் அவர் கருத்துதான் உண்மை.”
  மாறுதல் வேண்டும். வரும்.
  நரசய்யா

 4. v.balamurugan on September 27, 2013 at 9:56 pm

  நக்சல் கும்பல்களின் மிரட்டல் சில அடிப்படை இஸ்லாமிய அமைப்புகளின் மிரட்டல் இவற்றையும் தாண்டி மாநாடு சிறப்பாக நடைபெற்றது மக்கள் வெள்ளத்தில் திருச்சியே குலுங்கியது

 5. Geetha Sambasivam on September 28, 2013 at 1:43 pm

  உண்மை, நாங்கள் இருக்கும் அம்மா மண்டபம் பகுதியே முதல்நாளிலிருந்து நெரிசலில் பிதுங்கியது. கூட்டம் நடக்கையில் நேரடி ஒளிபரப்புச் செய்த லோட்டஸ் தொலைக்காட்சிக்குச் சரியான வசதிகள் இல்லாமையால் தடங்கல்கள் நிறைய ஏற்பட்டன. மற்றபடி பெரிய கூட்டம் தான் கூடி இருந்தது. கட்டுப்பாட்டையும் காண முடிந்தது. மாற்றம் ஏற்பட்டால் நன்மைக்கே.

 6. சான்றோன் on September 28, 2013 at 3:30 pm

  //மீண்டும் அந்த இழிநிலை எந்தப் பாரத ஜனதா தலைவருக்கும் வரக் கூடாது என்றால் அதிமுகவுடன் கூட்டணி என்ற சிந்தனையே வரக் கூடாது.//

  அத்விகா அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன் ……

  அப்படியே அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதிக பட்சம் நான்கு சீட்டுகள் கிடைக்கும்…… இரண்டு கழகங்களையும் தவிர்த்து , இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலே அதற்கு மேல் வெற்றி பெறலாம்…….

  கருணாநிதியாவது ஆட்சிக்காலம் முடியும் நேரத்தில்தான் முதுகில் குத்துவார்……. ஜெ .முதல் நாளில் இருந்தே ஆகாத்தியத்தை ஆரம்பித்துவிடுவார்…. பிறகு போயஸ் கார்டனுக்கு என சிறப்பு தூதுவர்களை நியமிக்க வேண்டியிருக்கும்….

  மாற்றம் தேவை என்று எதிர்பார்த்து திருச்சியில் கூடிய அத்தனை லட்சம் மக்கள் முகத்திலும் கரியைப்பூசியதுபோல் ஆகிவிடும்……

 7. "HONEST MAN" on September 28, 2013 at 4:42 pm

  ////இந்த சூழலில் திமுக அதிமுக ………..போன்ற இடங்களில் மேடை ஏறட்டும்////

  திரு அடியவனின் மேற்படி கருத்துக்களை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்.
  Mr . Cho என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் (தேர்தலை பொறுத்த வரையில்) அவர் சொல்வதற்கு நேர்மாறாகதான் நடக்கும் என்பது வரலாறு. So , Cho பேச்சை கேட்டு நடந்தால் அது தமிழக பிஜேபி க்குதான் தகராறு..

  மதிமுக, விஜயகாந்த் கட்சி, மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இவை போதும். பாமக உடன் கூட்டு வைத்தால் தமிழக தலித்துக்கள் பிஜேபி பக்கம் தலை வைத்துகூட படுக்கமாட்டார்கள். மதமாற்றத்திற்கு அது வழி வகுக்கக்கூடும் வேண்டாம் விபரீதம். மேலும் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. அதற்குள்ளாக பிஜேபியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். போர்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். திக மற்றும் திமுக ஆகியவற்றின் பொய் பிரச்சாரங்களால் பிஜேபி பற்றி தவறான அபிப்பிராயங்களை கொண்டவர்களிடம் மன மாற்றம் ஏற்படுத்த பிஜேபி மற்றும் RSS குறித்த உண்மை தகவல்களை கொண்ட நூல்களை (booklets ) அவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லி பின்னர் அணுகவேண்டும் கட்சி பற்றி தவறான புரிதல் (Understanding ) காரணமாகத்தான் கட்சி வேகமாக வளரவில்லை என்பதை தமிழக பிஜேபி தலைமை புரிந்து கொண்டு இப்போதேனும் booklets களை அச்சிட்டு கொடுத்து அதன் கிளைகளை போர்கால அடிப்படையில் (On war – footing basis ) செயல்பட பணிக்கவேண்டும். Booklets இல்லாமல் வெறுமனே மக்களை அணுகினால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் ஒவ்வொருவரிடமும் விளக்கம் சொல்லிகொண்டிருந்தால் கால விரயம் மற்றும் சலிப்பு ஆகியவை ஏற்படும் மேலும் “lotus டிவி” யை பெருமளவில் பயன் படுத்தி மக்கள் மனதிலுள்ள சந்தேகம் மற்றும் தவறான எண்ணங்களை நீக்க விவாத நிகழ்சிகளை நடத்த வேண்டும். மோடியின் உரை மூலம் எழுந்துள்ள அந்த எழுச்சியை தேர்தல்வரை மங்கச் செய்யாமலிருக்க அந்த டிவி யை பயன்படுத்துங்கள். எனவே, மோடி ஆட்சி அமைப்பதுவே நம் லட்சியம் எனின் நான் கூறுவது போல மக்களை அணுகினால் வெற்றி நிச்சயம்.

 8. seenu on September 28, 2013 at 7:17 pm

  //நக்சல் கும்பல்களின் மிரட்டல் சில அடிப்படை இஸ்லாமிய அமைப்புகளின் மிரட்டல் இவற்றையும் தாண்டி…//

  டியர், பாலமுருகன் … மிரட்டலா… சும்மா கிச்சு கிச்சு மூட்டாதிங்க…

 9. தஞ்சை வெ.கோபாலன் on September 28, 2013 at 8:24 pm

  மோடி அவர்களின் திருச்சி கூட்டத்துக்குப் பின், அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து பா.ஜ.க.வினர் நமக்கு வெற்றி நிச்சயம் என்று மதார்ப்பில் இருந்துவிடக் கூடாது. இனிமேல்தான் அவர்கள் முழு மூச்சுடன் வேலை பார்க்க வேண்டும். மக்களைக் குறிப்பாக படித்தவர்கள், பெண்கள், இளைஞர்கள் இவர்களைப் பார்த்து பேச வேண்டும். இலவசங்களுக்காக விலை போக வாய்ப்பு உடைய மக்களிடம் சென்று இலவசங்கள் வேறு, மக்களின் எதிர்காலம் வேறு ஆகையால் நல்லாட்சிக்கு வாக்களியுங்கள், ஊழல் அற்ற நேர்மையாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று திரும்பத் திரும்பச் சென்று சொல்ல வேண்டும். உழைத்தால் நிச்சயம் பலன் உண்டு. தூங்காதிருக்க வேண்டும், விழிப்போடு இருந்து தேர்தல் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும் அதற்காக ஏவிவிடப்படும் வன்முறைகளைக்கூட எதிர்கொள்ள பயிற்சி பெறுதல் அவசியம். வெற்றி நிச்சயம்.

 10. Eswaran on September 28, 2013 at 11:03 pm

  அடியவன் அவர்கள் எழுதியுள்ளது மிக மிகச் சரியானது.இதுவரை பெரும் பாலான பா ஜ க தொண்டர்கள் தி மு க கூடாது என்பதற்காக தி மு க வை தோற்கடிக்கும் வலிமையுள்ள கட்சி என்று அ தி மு க வுக்கு ஓட்டுப் போட்டனர்.
  ஆனால், இந்த முறை அப்படி நடக்க வாய்ப்பில்லை.பா ஜ க தொண்டர்கள், புதிய இளைஞர்கள்,மற்றும் நடுநிலை வாக்காளர்கள் எல்லோருமே கண்டிப்பாக தாமரைக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர்.
  இதை உணர்ந்து பா ஜ க தலைவர்கள் செயல்பட வேண்டும்.
  ஈஸ்வரன்.

 11. Venkat Swaminathan on September 29, 2013 at 1:01 pm

  மோடியின் ஹிந்திப் பேச்ச்சைக் கேட்க காசு கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கி இப்படி ஒரு கூட்டம் திரளும் என்று நான் நினைக்கவில்லை. இரு ஒரு பெரிய பிரம்மாண்டமான நிகழ்வு தான். ஆச்சரியம் தருவது தான். மோடிஅலை அவருடைய ஹிந்தியையும் மீறி வீசுகிறது என்று தான் சொல்ல வேண்டும். கருணாநிதியோ, ஜெயலலிதாவோ தம் தொண்டர்கள், உதவியாளர்கள் மூலம் சேர்க்கும், திரும்பவும், சேர்க்கும் கூட்டத்தை விட பெரிது என்றால், இது அவர்கள் கவனித்து பெற வேண்டிய பாடங்களைப் பெற வேண்டும்.

  மோடியைன் வருகையை, அவரது திருவடி என்றும், கால் வைத்த புனித பூமி என்றெல்லாம் பக்தி பரவசம் பெருகுவது எனக்கு நெருடலாகத் தான் இருக்கிறது.

  ராஜாவின் மொழிபெயர்ப்பு தடங்கல் இல்லாது வந்தது எனக்கு சந்தோஷம் தருவதாக இருந்தது. பாராட்டவேண்டும் அவரது மொழிபெயர்ப்பை. இது சுலபமல்ல. இதில் ஏதும் ஆவேசம் இல்லை என்று குறை சொல்வது, எனக்கு வருத்தம் தருகிறது.

  மோடியின் வருகையும் அவர் பெரும் வெற்றியும், காங்கிரஸ் கூடாரம் அவரைக் குறிவைத்துச் செய்யும் சதிகளும் அவரைப் பெருமைப் படுத்துகின்றன என்று தான் நான் நினைக்கிறேன். அதேசமயம், முஸ்லீம்கள் ஸ்கல் கேப் வைத்துக்கொண்டு வரவேண்டும். பெண்கள் புர்கா அணிந்து வரவேண்டும் என் று சொல்வதும், பாஜக இதற்காக 10,000 புர்க்காக்கள் வாடகைக்கோ அல்லது விலைக்கோ வாங்கி தயாராக வைத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் எனக்கு உவப்பாக இல்லை. இதெல்லாம் நம்மை நாமே வெகுவாக மலினப் படுத்திக்கொள்ளும் தந்திரங்கள். இவை வேண்டாம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

 12. அடியவன் on September 29, 2013 at 2:15 pm

  Honest Man கருத்துக்களின் தொடர்பாக

  ஆர்.எஸ்.எஸ் பற்றிய பொய்ப் பரப்புரை செய்வதில் திமுகவை விட திக அதிக அளவிலும், திகவை விட கம்யூனிஸ்டுகள் அதிக அளவிலும் ஈடுபாட்டோடு இருக்கிறார்கள். குறிப்பாகக் கம்யூனிஸ்டு இயக்கங்களின் பரிவாரங்களான (கம்-பரிவார் ?!) மக்கள் கலை இயக்கம், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஜனநாயக மாதர் பேரவை, இந்திய மாணவர் கூட்டமைப்பு (Students Federation of India) ஆகியவை மும்முரமாக இருக்கின்றன. திமுக பொதுவாகவே இந்த விஷயத்தில் பட்டும்படாமல் ஆனால் எதிர்ப்பு நிலையை விட்டுவிடாமல் இருந்து வருகிறதே அல்லாமல் பொய்ப் பரப்புரையில் முழுமையாக ஈடுபடுவதைக் குறைத்து விட்டதன் காரணம் மத்தியில் பாஜக காங்கிரஸின் மாற்று என்பதை உணர்ந்ததால் மட்டுமே.

  ஆனால் கம்-பரிவார் மட்டும் இதில் எள்ளளவும் குறையாத உத்வேகத்துடன் இருக்கின்றது.

  கடந்த ஓரிரு ஆண்டுகளில் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகப் பெரும்பான்மையோர், ஆர்.எஸ்.எஸ்ஸின் தொண்டு குறித்த தங்கள் அங்கீகாரத்தைத் தனிப்பட்ட முறையில் இயக்கத்தின் பால் நல்லுணர்வு கொண்டோரிடம் வெளிப்படுத்தி வருகின்றனர். யு.பி.ஏ (2) வின் அங்கங்களான சில பாராளுமன்ற உறுப்பினர்களே கூட தனிப்பட்ட முறையில் பாஜகவை கிராம அளவில் ஏன் இன்னமும் முழுமையாக வளர்க்க வில்லை? என்று ஆர்வத்தோடு வினா எழுப்பி வருகின்றனர். அத்தோடு இல்லாமல், மத்தியில் ஒரு மாற்று வருவதே நாட்டிற்கு நலம் பயக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் மேடையில் மட்டும் ஆர்.எஸ்.எஸ், பாஜக எதிர்ப்பைக் காட்டுகின்றனர். இது இரட்டைவேடம் என்பதைத் தனிமையில் ஒப்புக் கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை. ஒரு திமுக (முக்கியப்) பாராளுமன்ற உறுப்பினர், ஒரு இந்து இயக்கத்தின் மூத்த பெருந்தலைவரிடம் ‘நாட்டில் நடந்து வரும் மதமாற்றம் குறித்தும், சில இஸ்லாமிய இயக்கங்களின் வன்போக்கு குறித்தும் இவற்றை எதிர்த்துத் தாங்கள் பல ஆண்டுகளாக நடத்திவந்த போராட்டத்தின் உண்மைத் தேவையை உணர்கின்றோம்’ என்று ஒரு திருமண நிகழ்வில் நேரில் சொல்லி வருத்தம் தெரிவித்ததை நேரில் கண்டவர்கள் இருக்கிறார்கள். இத்தகு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் வாக்குச் சாவடிகளில் விட்டுக் கொடுக்கும் மனநிலையில்தான் இருப்பார்கள் என்பது சிலருடன் நெருங்கிப் பழகிய எனது அனுபவம். 1977 தேர்தலிலும் 1991 தேர்தலிலும் அப்படி வாக்குச் சாவடிகளில் விட்டுக் கொடுத்ததை அனுபவப் பூர்வமாகக் கண்டிருக்கிறேன். They are in a mood to concede , for the sake of welfare of the Nation.

  இன்றைய சூழலில், மாற்றுக் கட்சி சார்புடையவர்களே கூட/ கொள்கை ரீதியான எதிர்நிலை கொண்ட இயக்கத்தினரும் கூட பாஜக ஆட்சிக்கு வருவதுதான் நாட்டுக்கு நல்லது என்ற மன நிலையில் இருப்பது கண்கூடு.

  எனவேதான் இந்த முறை பாஜக திமுக அதிமுக இரண்டையும் சேர்க்காமல், பாமக, கொங்கு கட்சி போன்ற ஜாதிக்கட்சிகளைச் சேர்க்காமல் தேர்தலைச் சந்தித்தால் நிச்சயம் “தமிழ்நாட்டுக்கு விடுதலை” பெற்றுத்தர முடியும் என்கிறேன். தமிழ்நாட்டின் கூட்டணி எப்படி இருந்தாலும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும், ஆனால் தமிழகத்தின் விடுதலை திமுக அதிமுக இரண்டையும் உதறித் தள்ளுவதில்தான் இருக்கிறது.

 13. Prassannasundhar N on September 29, 2013 at 5:46 pm

  நான் கல்லூரியில் படிக்கும் போது கம்யூனிஸ்ட் இயக்க பிரிவுகளுள் ஒன்றான SFI (Students Federation of India) வில் ஆர்வத்துடன் இணைந்து சில பல போராட்டங்களில் பங்கெடுத்தேன். அதிலே கரூரிலே ஒரு முறை BSNL அலுவலகம் முன்பு காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆசிர்வதிக்கும் குரலை தொலைபேசிகளில் காலர் ட்யுனாக வைத்துக் கொள்ள BSNL வழி வகை செய்திருந்ததை அடுத்து அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒருவர் BSNL நிர்வாகத்தைக் கண்டித்துப் பேசினார். சாஞ்சி சங்கராச்சாரியைக் கண்டிக்கிறேன் என்றார். சாலையில் இருபுறமும் போவோர் வருவோரெல்லாம் எங்களைப் பார்த்து சிரித்து விட்டுச் சென்றனர். மீண்டும் மீண்டும் சாஞ்சி என்றே சொன்னார். அருகில் சென்று “சார், அது காஞ்சி” என்றேன். “காஞ்சியோ, சாஞ்சியோ எவனுக்குயா தெரியப் போவுது?, இன்னிக்கு பாட்டா வந்தா சரி!” என்றார். பிறகு ஆர்ப்பாட்டம் முடியும் வரை வசதிக்கு தகுந்தார்ப் போல காஞ்சி, சாஞ்சி என்று மாற்றி மாற்றிப் பேசி முடித்தார். எனக்கு அதிசயம் என்னவென்றால் சிறப்புப் பேச்சாளரின் லட்சணமே இப்படியென்றால் என்னை SFI இல் சேர்ந்து ஆதிக்க சக்திகளுக்கெதிராக போராடுமாறு தூண்டிய உன்னத மாணவர் தலைவன் ஆர்ப்பாட்டம் நடக்கும்போதே கேப் இல் சரக்கடித்து விட்டு முழு மப்பில் “மாப்ள, கலெக்ஷன் எவ்வளவுடா?” என்று நிதானமாக கண்கள் சொருக கேட்டுக் கொண்டிருந்தான்.

  அடப்பாவிகளா… தெருவில் போகும் ஒருத்தனும் நம்மைக் கண்டு கொள்ள மாட்டேனென்கிறான். சிறப்பு பேச்சாளரின் பேச்சுக்கு நமுட்டு சிரிப்பை உதிர்த்து விட்டு அவனவனும் போய்க் கொண்டே இருக்கிறான். உண்மையிலேயே இந்த சமுதாயம் சீரழிந்து தான் போய் விட்டதா? இல்லை நாம் தான் நம்மை அறியாமலேயே இந்த லொட்டை பசங்களுடன் சேர்ந்து சீரழிகிறோமா? என்று எனக்கு கண்ணைக் கட்டி விட்டது.

  அன்றோடு வெளியே வந்தேன் SFI ஐ விட்டு.

 14. vittalanand on September 29, 2013 at 10:49 pm

  இன்றையகாலகட்டத்தில் துணிவும், பண்பும் விவேகமும் ஊழல்களுக்கு எதிரான ஒரு தலைவராக மோடி திகழ்கிறார் . குஜராதில் மின் தட்டுப்பாடு இல்லை தண்ணீர், குடிநீர் தட்டுப்பாடு இல்லை சாராயக்கடைகள் இல்லை எதுவும் இலவசம் இல்லை ஆனால் செய்யும் வேலைக்கு தக்க ஊதியம் கிடைக்கிறது எனவே ஏழ்மை மிகக்குறைவே. பள்ளிக்கல்வி ஓரிரு தனியார் பள்ளிகள் தவிர்த்து பள்ளி இறுதி வரை இலவசம். தேவை இல்லாமல் மோடி அவர்களை மத வெறியராக காங்கிரஸ் சித்தருக்கிறது . மோடி வாய் திறந்து பிற மதத்தினரை குறைத்து பேசியதாக எந்த செய்தியும் இல்லை. . அவர் நோன்பு கஞ்சி குடிப்பதும் இல்லை. அவர் சொன்னது ‘ நான் ஒரு இந்தியன் , நான் ஒரு ஹிந்து எனவே நான் என் மதத்துடன் விஸ்வாசம் உள்ளவன்’ என்பது மட்டுமே. இவர் மத வெறியரா அல்லது ஒரு தன்மானமுள்ள தலைவரா என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் .
  குஜராதில் ஊழல் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அங்கு மிகக் குறைவு.. லஞ்சம் பெற்றது தெரிந்தால் அரசு வேலை பறிபோகும். இந்த நிலை இந்தியா முழுவதும் வரவேண்டுமென்றால் .அரசில் கண்டிப்பனவரும் வேண்டியவர்களுக்கு சலுகை தராதவரும் தான் தேவைப்படுகிறார் தற்போதைக்கு, மோடி ஒருவர் தான் இந்த குணங்களை பெற்றிருக்கிறார்.

 15. "HONEST MAN" on September 30, 2013 at 3:58 pm

  நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். நாட்டில் communalism வளர்வதற்கு communism
  தான் முக்கிய காரணம் . மதம் ஒரு “அபின்” என்று கம்யூனிஸ்ட்கள் கூறுகின்றனர். ஆனால் இஸ்லாம் மதம் மட்டும் அவர்களுக்கு “தேவர்மிர்தம்” போல் இனிக்கிறது போலும். அப்பட்டமான் மதவாதம் பேசும் முஸ்லிம் கட்சிகளுக்கு வக்காலத்து வாங்கி கொண்டிருக்கின்றனர். உலகம் பூராவும் குண்டு கலாச்சாரம் காட்டு தீ போல பரவி வருகிறது.

  நேற்று (29-9-13) பாகிஸ்தானிலுள்ள பெஷாவரில் கார் குண்டு வெடித்து 39 பேர் மாண்டனர். மேலும் வடகிழக்கு நைஜீரியாவில் ஒரு கல்லூரியை தாக்கி 40 உறங்கிக்கொண்டிருந்த மாணவர்களை தீவிரவாதிகள் சாகடித்தனர். மேலும் சிரியன் விமானப்படை Raqa என்ற city யிலுள்ள ஒரு technical high school மீது குண்டு வீசி 12 மாணவர்களை கொன்றது. இந்த 3 சம்பவங்களும் நேற்று ஒரு நாளில் நடந்த நிகழ்வுகள் ஆகும். இந்த coommunist கள் மேற்படி குண்டு வெடிப்பு சம்பவங்கள் தினம் தினம் நம் நாட்டிலும் நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்களா? கோத்ரா சம்பவத்தில் முஸ்லிம்கள் மீது வன்முறை மோடி நடத்தினாராம். அதனால் அவர் PM க்கு லாயக்கு இல்லையாம்! இப்படி கூறுவது CPI கட்சிகாரர் தா. பாண்டியன். 2002 க்கு பிறகு ஒரே ஒரு வகுப்பு கலவரம் கூட குஜராத்தில் நடக்கவில்லை 144 தடை சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் கடந்த 8 மாதங்களில் மட்டும் நமது நாட்டில் சுமார் 1000 வகுப்பு கலவரங்கள் நடந்துள்ளன. 965 பேர் இறந்துள்ளனர். 18000 பேர் காயமுற்றனர். இதற்கு யார் பொறுப்பு? The pseudo secularism is solely responsible for the muslim terrorism

  CPM ‘s political organisational report ல் RSS ன் Vanvasi Kalyan Ashram என்ற அமைப்பு tribal area க்களில் செய்துள்ள மகத்தான சேவையை ஒப்புக்கொண்டுள்ளது. இதே கம்யூனிஸ்ட் கட்சிகள் அதாவது இடது சாரி 1989 ல் பிஜேபி யுடன் கூட்டு வைத்துகொண்டது. அதே போல வலது சாரி 1967 ல் ஜன சங்கத்துடன் கூட்டணி வைத்துகொண்டது. இது அவர்களின் cynical opportunism யை வெளிப் படுத்துகிறது

  communism நல்ல கொள்கையோ என்னவோ எனக்கு தெரியாது ஆனால் இந்திய கம்யூனிஸ்ட்கள் நல்லவர்கள் கிடையாது. இவர்கள் தகர உண்டி குலுக்கி வயிறு வளர்ப்போர் ஆவார்கள். .////மாப்ள collection எவ்வளவுடா?////////

  ஜனநாயக மாதர் பேரவை இஸ்லாமிய பெண்களை இஸ்லாம் மதம் அடிமை போல நடத்துகிறதே அதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை. இவர்களுக்கீல்லாம் இது ஒரு பிழைப்பு. அவ்வளவுதான்.

 16. ஈஸ்வரன் on September 30, 2013 at 6:42 pm

  முஸ்லிம்கள் பொதுவாகவே கொஞ்சம் முரட்டுத் தனம் உள்ளவர்கள் . மற்றபடி அனைவருமே தீவிரவாதிகளோ பயங்கர வாதத்தை ஆதரிப்பவர்களோ அல்லர்.அவர்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அதாவது இஸ்லாமிய சமுதாய மக்களுடன் மட்டுமே அதிக அளவில் தொடர்பில் உள்ளனர்.இதனால் அந்த மதத்திலுள்ள தீவிர தவறான எண்ணமுடையவர்களின் பேச்சை மட்டுமே கேட்க இயலுகிறது அதன் காரணமாகவே இவர்கள் பா ஜ க வுக்கு எதிரான கருத்துள்ளவர்களாக உள்ளனர்.இந்த சமுதாய மக்கள் வெளி உலகை பற்றி ஓரளவு தெரிய ஆரம்பித்து விட்டால் உண்மையை உணர்வர்.
  நான் பல இளைஞர்களிடம் சமீபத்தில் பேசியதில் பலரும் மோடியை ஆதரிப்பது தெரிந்தது.அவர்கள் சொல்வது என்னவென்றால் குஜராத்தில் முஸ்லிம் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதை ஒத்துக் கொள்கிறார்கள்.மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் இந்து முஸ்லிம் என்ற பிரிவினை வாதமும் பதட்டமும் தோற்றுவிக்கப் பட்டுள்ளது .இந்த முஸ்லிம் தீவிர வாதக் கோஸ்ட்டிகளை அரசியல் கட்சிகள் ஆதரிப்பதால்தான் அவர்களின் வன்முறையும் முரட்டுத் தனமும் கேட்பாரில்லாமல் உள்ளது.இதை முஸ்லிம்கள் யாரும் தட்டிக் கேட்டால் அவர்கள் தண்டிக்கப் படுகிறார்கள் அல்லது ஒதுக்கிவைக்கப் படுகிறார்கள்.இவர்களது கோட்டம் ஒடுக்கப் பட்டால்தான் முஸ்லிம் மக்கள் சமுதாயத்தில் ஒரு மரியாதைக்குரிய முறையில் வாழமுடியும் என்பதை உணர்ந்துள்ளனர்.விரைவில் அதற்கான மாற்றம் வரும் என்பது அந்த இளைஞர்களின் கருத்து.நான் பேசிய 8 இளைஞர்களில் 5 பேர் மோடிக்குத்தான் ஒட்டு என்றனர்.தனது பெற்றோரும் இந்த எண்ணத்தில் உள்ளதை ஒப்புக் கொண்டனர்.
  ஈஸ்வரன்.

 17. தேர்தல் முடிவும் வரை மோடி உற்சவம் நீட்டிக்கும் என்பதால் தனியாக ஒரு இழை-அல்லது ஆப்ஸ் அல்லது வகை தயார் செய்து விடலாம். அநேகமாக இணையத்தில் எல்லா பத்திரிகைகளும் இரண்டொரு நாளில் இதை செய்து விடும்.

 18. "HONEST MAN" on October 2, 2013 at 6:16 pm

  டிவி யில் குடிக்கும் காட்சி வந்தால் கீழே “குடி குடியை கெடுக்கும்” என்று warning போடுவார்கள். ஆனால் அந்த காட்சியை மட்டும் cut செய்யமாட்டார்கள்.காரணம் காட்சி தொடர்ச்சி போய்விடும் என்ற பயம். அதே போல அடிக்கடி மதசார்பின்மை பற்றி பேசுவார்கள் ஆனால் அதற்கு மாறாக நடப்பார்கள். முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடை க்காதீர்கள் என்று மாநிலங்களுக்கு கடிதம் எழுதுகிறார் ஷிண்டே. முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் கல்வி கடன் வழங்க உத்திரவு இடுகிறார்கள். படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பது போல பேசுவது secularism ஆனால் செக்குமாடு ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றி வருவது போல காங்கிரஸ்காரர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களின் நலன்கள் பற்றி மட்டுமே பேசுவார்கள். அந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள். காரணம் வோட்டுவங்கி பறிபோய் என்ற பயம்.

  சச்சார் கமிட்டி தனது பரிந்துரையில் ” தினம் கஞ்சிக்கு கஷ்டப்படும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும்” என்று கூறுகிறார். அவர்களின் ஏழ்மைக்கு காரணம் அவர்கள் குடும்ப கட்டுபாட்டை பின் பற்றாமல் வத வத வென்று குழந்தைகளை பெற்றுகொள்வதுதான் அதை அந்த ரிப்போர்ட் சொல்லியிருக்கவேன்டாமா? அதற்கு அவர்கள் family planning யை கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்க வேண்டாமா? மக்கள் பெருக்கத்தை கட்டுபடுத்தாமல் இட ஒதுக்கீடு கொடுத்தால் பிரச்னை தீர்ந்து விடுமா? என்ன முட்டாள் தனம்! இந்துக்கள் இப்போதெல்லாம் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்வதில்லை. இப்போது 2 கூட கஷ்டம் ஒன்றோடு நிறுத்தி கொள்ளலாமா என்று யோசிக்கிறார்கள்.”” “அல்லா கொடுத்தார் அல்லா கொடுத்தார்”” என்று எல்லா குழந்தைகளையும் பெற்று கொள்கிறார்கள்.

  YSR கட்சி தலைவரின் அம்மா கட்சி மேடைகளில் பேசும்போது பைபிள் புத்தகத்தை ஒரு கையில் பிடித்துகொண்டு இருப்பார் . ஆனால் அவர் பேசுவதோ secularism . சைத்தான் வேதம் ஓதுகிறது.

  A for Adarsh scam
  B for Bobars scam
  C for coal scam
  D for Dynasty rule
  E for
  F for fodder scam (காங்கிரஸ் கூட்டணி நண்பர் லாலு)
  G for Games scam
  H for Helicopter scam
  I for
  J for
  K for killings of Sikhs
  L for
  M for Medical seat scam (ரஷீத் அஹ்மத்)
  N for Nepotism
  O for ordinance fame govt
  P for Pseudo secularism
  Q for
  R for railway posting for bribe
  S for Spectrum scam
  T for Telephone exchange scam (மாறன்)
  U for
  V for
  W for wooing the minority
  X for
  Y for
  Z for

  காலி இடங்களை நிரப்புமாறு நண்பர்களை வேண்டுகிறேன்.

 19. R NAGARAJAN on October 3, 2013 at 4:26 am

  அண்ணா திமுகவின் கூட்டணியை விட திமுகவே மேல். 1998 அனுபவத்தை மறந்து விடக் கூடாது.

  2004ல் பாஜக சார்பில் திருநாவுக்கரசு போட்டியிடக்கூடாது என்று கூறிய ஜெயலலிதாவுடன் கூட்டணி கூடவே கூடாது.

 20. பெரியசாமி on October 3, 2013 at 12:15 pm

  திமுக, அதிமுக இரண்டுமே ஒன்று தான். திமுக இந்துக்களை இழிவுபடுத்தி பேசும் தலைவரை கொண்டது. இந்துக்களுக்கு நியாயமான சலுகைகள் கூட அவர் ஆட்சிக்காலத்தில் கிடைக்காது. ஆனால் அதிமுக தலைமை இந்துப்பண்டிகைகளுக்கு வாழ்த்து செய்தி அளிக்கும். இந்துக்களுக்கு ஒரு மான்யத்தை சமீபத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். ஆனால் ஜெயலலிதாவும் மைனாரிட்டிகள் விஷயத்தில் கூடுதல் சலுகை அளித்து, இந்துக்களுக்கு குறைவாகவே சலுகை அளிப்பார். பாஜக தேர்தலுக்கு பின்னர் இந்த இரண்டு கட்சிகளில் எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ, அதனை கூட்டணியில் சேர்த்து அமைச்சரவை அமைப்பதில் ஒரு தவறும் இல்லை. தேர்தலுக்கு முன்னர் இந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால், ஆட்சியை பிடிக்கும் அளவு வெற்றி கிடைக்காது. அதிமுகவை விட திமுக தேவலை என்பது தவறு. திமுக திருந்தாத கட்சி.1998-லே தவறிழைத்த ஜெயலலிதா மீண்டும் அதேபோல தவறு இழைப்பார் என்று நினைக்கக் கூடாது.பரதேசி, பாம்பு, பண்டாரங்களுடன் கலைஞர் ஒரு வருடத்திலேயே கூட்டணியை மாற்றி பாஜகவுடன் அணி அமைக்கவில்லையா ? அரசியலில் அப்படி பார்த்தால், பாஜக, விஜயகாந்த், வைகோ ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைப்பதே இப்போதைக்கு நல்லது. திமுகவை சேர்த்தால் காலி யாகிவிடும்.

 21. C.N.MANIVANNAN on October 4, 2013 at 6:56 am

  அதிமுக திமுக ரௌடிகளை போல் மிரட்டல் ஆட்சி நட்துபவகள் இவர்களுடைய கூட்டனி அபத்தனது

 22. அடியவன் on October 4, 2013 at 8:40 am

  ஆர். நாகராஜன் சொல்வது போல “கூட்டணிக் கட்சியாக இருப்பதில்” திமுக அதிமுகவை விட மேல்தான். ஆனால் ஒரு அரசியல் கட்சியாக மத்திய ஆளும் கூட்டணியிலும் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருப்பதிலும் இரண்டுமே ஒன்று போலக் கீழ்த்தரமான கட்சிகளே.

  ஜெயலலிதா என்னமோ ஹிந்து மக்களுக்கு ஆதரவானவர் என்று கூறுவதில் ஏமாளித்தனம்தான் மேலோங்கி நிற்கிறது, காஞ்சி சங்கரமடத்தைப் படாத பாடு படுத்தியதை விடவும் சுதந்திர இந்தியாவில் ஒரு கொடுமையை ஹிந்து மதத்துக்கு யாரும் இழைத்ததில்லை. இதையே வெறு எவரும் செய்திருந்தால் அனைவரும் ஒருமித்த குரலில் “This is persecution ” என்று சொல்லி இருப்பார்கள். சில ஹிந்துக்கள் ஜெயலலிதாவை ஆதரிப்பதற்காக காஞ்சி மடத்தைக் கூடக் குறை சொல்லக் கூடும்.

  தமிழகத்துக்கு இந்த இரண்டு கழகங்களிடம் இருந்து விடுதலை வேண்டும் என்றால் கண்டிப்பாக பா.ஜ.க. இவற்றில் எதனுடனும் கூட்டணி வைக்கக் கூடாது. தேர்தலுக்குப் பின்னால் கூட திமுகவோ அதிமுகவோ எதனுடனும் கூட்டணி இல்லாத முறையில் ஆட்சி அமைத்தால்தான், அடுத்த ஐந்து அல்லது பத்து வருடங்களிலாவது தமிழ்நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தர முடியும். அப்படிப்பட்ட சூழலை கடவுள்தான் உருவாக்க வேண்டும்.

  அந்த விடுதலையை பா.ஜ.க தவிர வேறு எந்தக் கட்சியும் பெற்றுத் தர முடியாது என்ற காரணத்தால் இந்த விஷயத்தில் பா.ஜ.கவுக்கு தார்மீகப் பொறுப்பு அதிகமாகிறது.

 23. அடியவன் on October 4, 2013 at 8:52 am

  சோவுடன் ஒப்பிட்டால் தமிழருவி மணியன் எவ்வளவோ மேல். சோவுக்கு ஜெயலலிதா என்ன செய்தாலும் (அது கொலையே ஆனாலும்) அது சரியானதே என்பார். அவரைப் பொறுத்த மட்டில் கருணாநிதியை அழிக்க ஜெயலலிதாதான் வேண்டும் அதனால் கண்மூடித் தனமாக ஜெயலலிதாவை ஆதரிப்பார்.

  ஜெயலலிதா போல “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்” என்று ஆட்சி நடத்தியவர் சுதந்திர இந்தியாவில் கிடையாது, ஒரே ஒருமுறை எமர்ஜென்சியில் இந்திரா அப்படி நடந்து கொண்டார். ஆனால் ஜெயலலிதாவோ இந்த விஷயத்தில் Consistant . 1991-96, 2001-06, 2011-13 மூன்று ஆட்சிக் காலத்திலும் தனக்கு வேண்டாதவர்கள் பிடிக்காதவர்கள், அதிலும் குறிப்பாகத் தன்னுடன் நெருக்கமாக இருந்துத் தனக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்தவர்கள் ஆகியோரைப் பழிவாங்க போலீஸ், சிறைத் துறை, ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்வதை வழக்கமாகவே வைத்துள்ளார். ஒரு அரசன் தன்னைக் கண்டாலே மக்கள் பயப்படும்படி ஆட்சி செய்தால் அதைக் கொடுங்கோன்மை என்றுதான் சொல்வார்கள். மனித உரிமை மீறல் என்பதை அப்பட்டமாகத் தனக்கு வேண்டாதவர்கள் மீது செய்யும் எவரும் ஆளத் தகுதி அற்றவரே. அரசனின் முதன்மைத் தகுதி எந்த ஒரு குடிமகனுக்கும் பாதுகாப்பு அதிலும் அரசு இயந்திரங்களில் இருந்து அடக்குமுறையிலிருந்து பாதுகாப்பு. அதைத் தரவள்ளவரே அரசனாக இருப்பது முறையாகும். மற்றவை பின்னரே. வெறுமே ஹிந்துப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொன்னால் போதுமா?

  தமிழருவி மணியன் கூறுவதைக் காணுங்கள்:
  http://www.dinamalar.com/news_detail.asp?id=818696

  “”லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் ம.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணி அமைவது, நூறு சதவீதம் உறுதி,” என, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

  மதுரையில் அவர் கூறியதாவது: குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவே, தேசிய அரசியலில், காங்., கூட்டணி செயல்படுகிறது என்பதை, அவசரச் சட்டம் தொடர்பாக அக்கட்சி எடுத்த முடிவுகள் காட்டுகின்றன. சோனியா குடும்பத்தின் பிடியில் காங்கிரஸ் உள்ளது. “ஆட்சி தலைமை மீது கட்சித் தலைமை அதிகாரம் செலுத்தக் கூடாது’ என்ற நேருவின் எண்ணத்தை, ராகுல் தற்போது தகர்த்துள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, காங்கிரசுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் போக்கு, தற்போது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இதை எதிர்த்து வழக்குத் தொடர, தி.மு.க., வுக்கு தார்மீக உரிமை இல்லை. கடந்த 1969க்கு முன், கருணாநிதிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் இருந்த சொத்துக்கள், தற்போது அவர்களிடம் உள்ள சொத்துக்கள் விபரத்தை, அவர் வெளியிடுவாரா? இதுவரை இல்லாத அளவில் காங்., ஆட்சியில், ஊழல் மலிந்துள்ளது. இதற்கு, தற்போது ஒரு மாற்று தேவை. 6 சதவீதம் ஓட்டு வங்கி உள்ள கம்யூ., கட்சிகளை, மாற்று சக்தியாக உருவாக்க முடியாது. தமிழகத்தில் மாற்று அணி அமைய, குறைந்தது 30 சதவீதம் ஓட்டு வங்கி தேவை. பா.ஜ.,வில், மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது 15 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ம.தி.மு.க.,- தே.மு.தி.க., வுக்கு தலா 10 சதவீதம் ஓட்டுக்கள் உள்ளன. இக்கட்சிகள் இணைந்தால், தி.மு.க.,- அ.தி.மு.க., விற்கான எதிராக “மாற்று அணி’யை ஏற்படுத்த முடியும். தமிழகத்தில், நூறு சதவிகிதம் இக்கூட்டணி அமைவது உறுதி. இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதற்காக விஜயகாந்த், வைகோ, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியுள்ளேன். இவ்வாறு கூறினார்.

  “ஹீரோ’ மோடிக்கே வெற்றி:

  தமிழருவி மணியன் மேலும் கூறுகையில், “”ஊழல்களை மூடி மறைப்பதற்காக, “பா.ஜ., ஒரு வகுப்புவாத கட்சி’ என கூறி, காங்., தந்திரமாக செயல்படுகிறது. இதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தலில், கோத்ரா சம்பவத்துக்கு முன் இருந்த “வில்லன்’ மோடிக்கும்; அதன்பின், குஜராத் வளர்ச்சிக்கு வித்திட்ட “ஹீரோ’ மோடிக்கும் தான் கடும் போட்டி நிலவும். இதில், “ஹீரோ’ மோடி வெற்றி பெறுவார்,” என்றார்.

 24. அடியவன் on October 4, 2013 at 8:56 am

  முதலில் நாம் நம்மை நம்பவேண்டும். நம்புங்கள், மோடி தலைமையில் பாஜக மத்திய ஆட்சியைப் பிடிக்கும், தமிழகத்திலும் திமுக அதிமுக கூட்டணிகளை வென்று பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி பத்துக்கும் குறையாத இடங்களைப் பிடிக்கும் என்பதை நாமே நம்பினால், நிச்சயம் நடக்கும்.

 25. அத்விகா on October 4, 2013 at 9:54 am

  ஜெயலலிதா திருநாவுக்கரசருக்கு டிக்கெட் கொடுக்கக்கூடாது என்று சொன்னது உண்மை என்றாலும் பாஜகவினருக்கு புத்தி எங்கே போயிற்று ? திருநாவுக்கரசருக்கு டிக்கெட் கொடுத்து தனியே கூட்டணி இல்லாமல் நின்று இருந்தால் கூட ஓரிரு இடங்களில் மட்டுமாவது வெற்றி பெற்றிருக்கலாம். பாஜகவினர் சுரணை இல்லாமல் அப்போது நடந்து கொண்டது யாருடைய தவறு ? 1998-ஆம் ஆண்டு அமைந்த வாஜ்பாய் அரசை சோனியாவுடன் டீ பார்டி கொண்டாடி, ஒரே ஆண்டில் 1999-லே கவிழ்த்தது ஒரு பெரிய மன்னிக்க முடியாத குற்றம் தான். ஆனால் 2004-லே பாஜக மீண்டும் ஜெயலலிதாவுடன் ஏனுங்க கூட்டு? திருநாவுக்கரசை விட்டுக்கொடுத்து , அப்படி ஒரு கூட்டு தேவையா ? அதனால் தான் பிற்காலத்தில் திருநாவுக்கரசர் கேவலம் போயும் போயும் காங்கிரசுடன் சேர்ந்து அரசியல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே, கடந்த காலத்தில் நடந்த தவறுகளுக்கு பிறர் மீது பழிபோடாமல், நம் மீதே பழியை சுமத்திக்கொள்வது நல்லது. திமுக கூட்டினால் பாஜகவுக்கு தமிழ் நாட்டில் கூட ஓட்டு கிடைக்காது. அதிமுக பாஜகவை தேர்தலுக்கு முன்னால் சேர்த்துக் கொள்ளாது . தேர்தலில் பாஜக 225-250 இடங்கள் வரை பெறும். அதன் பிறகு மூன்றாவது அணிக்கட்சிகள் பாஜகவை நோக்கி ஓடிவரும். தெலுங்குதேசம் , அதிமுக, திமுக, நவீன் பட்நாயக், மம்தா, முலயாம் சிங்கு ,மாயாவதி, ஆகியோர் சுமார் 200 எம்பிக்களுடன் ஓடி வருவார்கள். காங்கிரஸ் முதல் முறையாக 100-க்கும் குறைந்து , காங்கிரசை எவனுமே சீந்த மாட்டான் என்ற கேவல நிலை ஏற்படும். காங்கிரஸ் அதல பாதாளத்தை எட்டிப்பிடிக்கும். பாஜக திமுகவை கூட்டு சேர்த்துக்கொண்டால், தமிழகத்தில் இரு கட்சிகளுக்குமே எவ்வித லாபமும் இல்லை. இப்போதைய நிலையில், பாஜக, வைகோ, விஜயகாந்த், பாரி வேந்தர் கட்சி இவை நாளும் சேர்ந்து தேர்தலை சந்திப்பது எதிர்பாராத வெற்றியை தரும். ( ஏனெனில் பாஜக கூட்டணிக்கு 1998-1999 ஆகிய இரு லோக்சபா தேர்தல்களிலும் கிடைத்தது போல , 4 அல்லது 5 இடம் கிடைத்தால் பெரிய வெற்றி. இன்றோ மோடி தலைமை கிடைத்திருப்பதால், விஜயகாந்த், வைகோ, தமிழருவி மணியன், பாரிவேந்தர் ஆகியோருடன் சேர்ந்த கூட்டணி சுமார் 10 இடங்களை வெல்லுவது உறுதி. திமுகவினர் மீது(டூ ஜி ஊழல் மற்றும் பீ எஸ் என் எல் ஊழல் , மற்றும் இலங்கை தமிழர் படுகொலை காரணமாக) 90 விழுக்காடு அதிருப்தியும், அதிமுகவினர் மீது ( சில நிர்வாக சீர்கேடுகள் காரணமாக) 40 சதவீத அதிருப்தியும் உள்ளது. திமுகவுடன் பாஜக கூட்டு சேர்ந்தால், அதிமுக 40 தொகுதிகளையும் கைப்பற்ற , அதாவது தங்க தட்டில் வைத்து கொடுத்தது போல ஆகிவிடும். எனவே, தேர்தல் முடிந்தவுடன் அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சிகளுடன் ஆட்சிக்கூட்டணி அமைப்பதே நல்லது. திமுகவினர் அதிக இடங்களை பெறுவது என்பது ஒரு வெகு சுவையான கற்பனையே ஆகும். காங்கிரஸ் தனித்து நின்றால் மொத்தம் நாற்பதில் பாண்டிச்சேரி தவிர மிச்சம் 39- தொகுதிகளில் நிச்சயம் 38 தொகுதிகளில் ஜாமீன் தொகையை ( டெபாசிட்) இழக்கும். காங்கிரசுக்கு 40- தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையை ஏற்படுத்தினால் தான், அவர்கள் தமிழகத்துக்கு செய்த வஞ்சனைகளுக்கும் , இலங்கை தமிழினத்தை அழித்த துரோகத்துக்கும் , தக்க பாடமாக அமையும்.

 26. "HONEST MAN" on October 4, 2013 at 10:57 am

  ———–நம்ப முடியவில்லை — நம்ப முடியவில்லை — நம்ப முடியவில்லை ———

  1.எல்லாம் வல்ல அல்லாவின் இறுதி தூதரான அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் முகம் முழுநிலவைப் போல பிரகாசமானது.
  2. புறாவின் முட்டையை போல 2 தோள்களுக்கும் இடையில் ஒரு மச்சம் இருந்தது. அந்த மச்சத்தில் “முகமது ரசூல் அல்லா” என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. அந்த மச்சம் “Mohr -e – Nabiyat ” எனப்படுகிறது.
  3. அவரது எச்சிலுடன் தண்ணீர் கலந்தால் இனிக்கும். அவரது எச்சிலை சப்பும் எந்த குழந்தையும் தாய் பாலின்றி வளரும். அவரது எச்சிலை முஸ்லிம்கள் கையில் வாங்கி தம் உடலில் பூசிக் கொள்வார்களாம். “உளு” (அதாவது தொழுகைக்கு முன் நீரால் உடலை தூய்மை செய்தலுக்கு அரபு மொழியில் கூறுவது) செய்யும்போது நீரை தரையில் துளி கூட விழாது கையிலே தாங்கி தங்களின் உடலிலே முஸ்லிம்கள் தடவி கொள்வார்களாம். அலி என்பவருக்கு கண் நோய் வந்தபோது நபி தனது உமிழ் நீரை தொட்டு தடவினார். நோய் குணமாகிவிட்டதாம் 4. அவரது நிழல் தரையில் படாது.
  5. கும்மிருட்டிலும் அவரால் நடுப்பகலை போல பார்க்கமுடியும்.
  6. தாகத்தால் அவர் ஒருபோதும் அவஸ்தை பட்டதில்லை.
  7. முதுக்குபுற காட்சிகளையும் அவர் தன தலையை திருப்பாமலேயே பார்க்கும் சக்தி அவரிடம் இருந்தது.
  8. ஈ மற்றும் கொசு ஒருபோதும் அவரை தீண்டியதில்லை.
  9. அவரது உடம்பிலிருந்து கஸ்தூரி வாசனை வரும். அவர் பொது இடங்களுக்கு சென்றால் மக்கள் அந்த வாசனையை கொண்டே அவர் அங்கு உள்ளார் என்பதை அறிந்து கொள்வர்.
  10. இவர் சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்ற கழித்தபிறகு அவை அந்த மண்ணில் இருக்காது.அதாவது அந்த மண் உடனே அவற்றை consume செய்துகொள்ளும். மேலும் அந்த இடத்திலிருந்து நறுமணமிக்க சாம்பிராணி வாசனை வீசும்.
  11. தெருக்கள் வழியாக அவர் நடந்து செல்லும்போது எப்போதும் ஒரு மேகம் கூடவே வந்து நிழலை தரும்.
  12. அவரது வியர்வை கஸ்தூரி என்ற வாசனை பொருளை விட நறுமண மிக்கது.
  13. அவரது வளர்ப்பு தாய் ஹலிமா குழந்தை நபிக்கு தாய் பாலை கொடுக்க நினைத்தபோதே அவளது வற்றி போயிருந்த மார்பகத்தில் பால் கப கப வென்று சுரந்ததாம். அது மட்டுமல்ல. அவர்களது வீட்டிலிருந்த கிழட்டு பெண் ஒட்டகம் கூட நிறைய பால் கொடுத்ததாம்.
  14. நபி சிரியா நாடு சென்று வியாபாரம் செய்துவிட்டு ஒரு விலங்கின் மீது ஏறி திரும்புகையில் இரு தேவ தூதர்கள் வெயில் படக் கூடாது என்பதற்காக நிழல் பரப்பி கொண்டு வந்தார்களாம்.
  15. நபி “ஹிரா” குகைக்கு போக வீடுகளை மலைப் பாங்கான பிரதேசத்தை கடந்துதான் செல்ல வேண்டும். அங்கே இருக்கும் கற்களும் மரங்களும் “ஆண்டவனின் தூதர் அவர்களே” என்று வாழ்த்துமாம்
  16. முகமதை பிடித்து தருபவர்களுக்கு 100 பெண் ஒட்டகங்களை சன்மானமாக தருவதாக மக்கா குறைஷிகள் அறிவித்தனர்.சுரக என்பவன் குதிரை மீது ஏறி கடலோரம் சென்றான். சிறிது தூரம் சென்றதும் “குறி சொல்லும் அம்பை” வானத்தில் எய்து குறி பார்த்தனராம். அந்த அம்பு “நபிக்கு தீங்கு செய்யாதே” என்று கூறியதாம்.
  17. முகமதுவிற்கு சுன்னத் செய்யப்படவில்லை. காரணம் அவர் பிறக்கும்போதே அவரது பிறப்பு உறுப்பின் முன் தோல் (foreskin ) அறுக்கப்பட்டிருந்தது.

 27. Prassannasundhar N on October 4, 2013 at 3:21 pm

  தமிழருவி மணியனின் பேட்டியை ஜூனியர் விகடனில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. பா.ஜ.க வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், ம.தி.மு.கவும், தே.மு.தி.கவும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டுமாம். அது என்னவெனில் பொது சிவில் சட்டத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று பா.ஜ.க வற்புறுத்தக் கூடாதாம். காஷ்மீரில் சிறுபான்மையினருக்கு என்றிருக்கும் தனிக்கொடியையோ, தனி அரசாங்கத்தையோ நாம் தொடவே கூடாதம். ஒரே நாட்டில் எதற்கையா 2 விதமான அரசாங்கங்கள்? இந்த லூசு மணியன் இப்பவே இப்படி பேசுகிறார். இந்தாளை எல்லாம் மதிச்சு கூட்டணி பேசினால் ஹீரோ மோடியை ஜீரோவாக்கியே தீருவார்கள். விஜயகாந்துக்கும், வைக்கோவுக்கும் வேண்டுமானால் இக்கூட்டணி லாபமாக இருக்கலாம். தமிழ் மண்ணிலே வாழும், திருப்பு முனையை எதிர்பார்த்து இளந்தாமரை மாநாட்டிற்கு வந்த எண்ணற்ற இளைஞர்களுக்கு இந்த மொண்ணைக் கூட்டணியினால் ஒரு உபயோகமும் இருக்கப் போவதில்லை.

  தனித்து நின்று பாஜக 5 முதல் 7 வரை சீட்கள் பெற்றாலும் அது மிகப் பெரிய திருப்பு முனையாக இருக்கும். அதற்கு நாமெல்லோரும் முனைய வேண்டும். அந்தம்மாவிற்கும் அப்போது தான் உரைக்கும். தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு இருக்குமோ இல்லையோ, நரேந்திர மோதிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நரேந்திர மோதியுடன் சுமுகமான உறவையே ஜெயலலிதா அம்மையாரும் விரும்புவார் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் காங்கிரசுடன் அவரால் நிச்சயமாக ஒத்துப் போக முடியாது. பிரதமர் கனவில் ஆழ்ந்து வீணாய்ப் போவார் என்று யாரும் அவரைக் குறைவாகவும் மதிப்பிட முடியாது. இவ்வாறிருக்கையில் நிதானமே இல்லாத, நாகரீமற்ற வசைச் சொற்களை அனாயசமாக வீசும் விஜயகாந்த் போன்ற குப்பைகளுடன் கூட்டணி வைத்து அவர்களைப் பெரிய ஆளாக்கி வேடிக்கை பார்ப்பதை விட இருக்கும் கெடுதியில் குறைந்த கெடுதியான அதிமுகவை அனுசரிப்பதே மேல். வைகோ- இவரொரு சிடுமூஞ்சி. 10 சீட்களை அழகாகப் பெற்று உருப்படியாக ஏதாவது செய்திருக்கலாம். வீணாகக் கெடுத்துக் கொண்டார். இவர் உணர்ச்சி வயப்பட்டால் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்பதே தெரியாது.

  இன்றும் மக்களுக்கு அதிமுக மீது நன்மதிப்பு குறையாமல் இருக்கிறது. மக்களைப் பெரிதும் வதைத்த மின்வெட்டுப் பிரச்சனையை தீர்த்தது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது, கன்னிப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்க 5 கிராம் தங்கம் வழங்கியது, லப்-டாப் வழங்கியது என்று ஓரளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையாமல் தான் அதிமுக இருக்கிறது.

  எனவே தனித்து நிற்பதே நலம். அதில் ஓரளவுக்கு எண்ணிக்கைகள் கிடைத்தாலே தமிழ்நாட்டின் நற்காலம் தொடங்கிவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும்.

 28. Prassannasundhar N on October 4, 2013 at 4:13 pm

  //இன்றோ மோடி தலைமை கிடைத்திருப்பதால், விஜயகாந்த், வைகோ, தமிழருவி மணியன், பாரிவேந்தர் ஆகியோருடன் சேர்ந்த கூட்டணி சுமார் 10 இடங்களை வெல்லுவது உறுதி.//

  அன்புள்ள அத்விகா அவர்களே,

  விஜயகாந்த் கட்சிக்கு 5% வாக்குகள் தான் கிடைக்கும். அவரின் நடத்தையினாலும், குடும்ப அதிகாரம் அதிகமிருப்பதாலும். வைகோ – கேட்கவே வேண்டாம். வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைப்பதில் அவரைப் போல ஒரு சமர்த்தரை நாம் காண முடியாது. தமிழருவி மணியன் – ஜூனியர் விகடன் பேட்டியை படிக்கவும். பாரிவேந்தர் – இவரா? SRM காலேஜ் மாணவர்களே இவரை மதிப்பதில்லை. இவரின் அலுவலகத்தில் ரெய்டு நடந்ததே, அதை புதியதலைமுறையில் சொன்னார்களா?

  இந்த காமெடி பீசுகளுடன் கூட்டணி வைத்து வெல்லலாம் என்று எண்ணுவதை விட தனியாக நின்றாலே பாஜக வெல்லும். நாமெல்லோரும் அதற்கு முனைய வேண்டும்.

 29. அடியவன் on October 4, 2013 at 6:26 pm

  மாற்றுக் கருத்து என்ன என்பதைப் பார்த்து தீர்வு என்ன என்று யோசிக்க வேண்டும் என்றால், இந்தக் கட்டுரையைப் படியுங்கள்:

  http://m.indianexpress.com/news/doing-the-modi-math/1134243/

  இதில் பா.ஜ. க மற்றும் மோடியின் வலிமை அல்லது வலிமையின்மை குறித்து வழக்கமான பார்வை அல்லாமல் வித்தியாசமான பார்வை இருக்கிறது.

 30. venkat on October 5, 2013 at 9:51 am

  எல்லாம் நன்றாக இருக்குது, எடிஉரப்பா, கல்யான் சிங்க், வஹெலா, மைத்ரேயன், ச.வே.சேகர், போன்றவர்கள் தலைமை பொறுப்பு கொடுக்காமல் இருந்தால் சரி, இப்போவே கிருஷ்ணையர் உள்ள வருகிறார், இவர் நீதிபதி தானே? கோபால்ஜி, எல்ஜி,பொன்.ரதாஜி, போன்ற தலைவர்களை தியாகி , பலிதனிகளை நினையுங்கள், நம்மை விட நாடு பெரிது என நினைக்கும் தலைவர்களை தொண்டர்களை நினைஉங்கல். வாழ்க, சமநீதி,

 31. அடியவன் on October 5, 2013 at 4:22 pm

  பிரசன்னசுந்தர்

  ////இந்த லூசு மணியன் இப்பவே இப்படி பேசுகிறார். ///

  மதுவிலக்கு, ஈழத் தமிழர் விவகாரம், 2G உழல, அரசியலில் நேர்மை, ஜாதீய வன்முறை எதிர்ப்பு என்று ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து சிறந்த கருத்துக்களுடன் நாட்டுக்கு நலம் தரும் விதமாக தனது கருத்துக்களை எழுதி வரும் தமிழருவி மணியன் – ஒருகாலத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்துக்குச் சிறந்த உதாரணமாக இருந்து வந்த இரா.செழியனைப் போல் நல்ல கருத்துக்களை நடுநிலையுடன் வெளியிடும் ஒருவர் – உங்களுக்கு லூசுதான்.

  அவரது நற்கருத்துக்களை நேற்றுவரை ஏற்றுவந்தவர்கள் எல்லாம் இன்று நாக்கூசும் அளவுக்கு அவரை ஏசுவதன் காரணம்(உங்களை அல்ல), அவர் மோடியின் தலைமைதான் இன்றைய இந்தியாவுக்குத் தேவை என்று கூறிவிட்டது மட்டுமே. ஒரே நாளில் சிலருக்குத் தாம் தீண்டத்தகாதவராக மாறிவிடுவோம் என்று அறிந்தும் கருத்தைப் பகிரங்கமாக வெளியிட்ட அவர் நிச்சயம் உங்கள் பார்வையில் லூசுதான்!

  அவர் குறித்து வினவு தளத்தில் இன்று வந்த கவிதை இதோ:

  என்னதான் தனி ‘ரூட்டு’ போட்டு நடை நடந்து காண்பித்தாலும், காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தமிழருவி மணியன். ”தமிழக முதல்வர் வைகோ, இந்தியப் பிரதமர் மோடி” என்ற தனது காந்தி கணக்கின் மூலம் பிழைப்புவாத புலவர் மரபின் ‘ஆழ்வார்’ வேலையில் தன்னை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
  ஆசிட் அடிப்பது,
  மனைவியையே தந்தூரி அடுப்பில் வறுத்தெடுப்பது
  என்ற காங்கிரசின் அகிம்சைக் கலாச்சாரத்தில்,
  ‘தமிழருவி’ கல்லா கட்ட தகுந்த வாய்ப்பற்று போனதால்,

  ச்..சீ..சீ… இந்தக் காங்கிரசே மோசம்,
  உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை என்று
  கவுச்சி வெறுத்த பூனையாய் பேசிப் பிழைத்து,

  கருணாநிதியின் கண் ஜாடைக்கும் சொறிந்து
  கழக ஆட்சியிலும் சில பழங்களைத் தின்று பசியாறி,

  ஆள்பவர்களை நேருக்கு நேர் எதிர்க்க திராணியற்று
  அரசியல் ஒழுக்கம், ஊழல் எதிர்ப்பு, மது ஒழிப்பு என
  வயித்துக்கு பங்கமில்லாமல் வாய்ஜாலம் காட்டி,
  மொன்னையான அறிக்கைகள் வாயிலாக ஆளும் வர்க்க
  தொண்ணை நக்கி உயிர்வாழ்ந்து,

  திடீரென!

  “ஆகா ஈழத்தமிழனுக்கு ஒரே எதிரி கருணாநிதிதான்” என்று எகிறிக் குதித்து
  போயசின் ஈழத்தாய்க்கு எலி பிடித்ததன் மூலம்,
  ஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில்
  கஞ்சி குடித்து வயிறு வளர்த்து சமர்த்தான அக்கிரகாரத்து பூனை
  இப்போது இன்னும் ஒரு படி தாவி
  காவிப் பயங்கரவாதிகளின்
  காலை நக்கவும் தயாராகிவிட்டது.

  அடிக்கடி இவர் உதாரணம் காட்டும் கர்ம வீரருக்கே
  டெல்லியில் தீ வைத்த ஆர்.எஸ்.எஸ். ‘அகிம்சாவாதிகளின்’ பின்னே போய்
  ஊழலற்ற நல்லாட்சி வழங்கப் போகிறாராம் இந்தக் காந்தியக் கல்நெஞ்சன்.

  ”மோடிதான் நாயகன், மோடிதான் வில்லன், மோடிக்கு போட்டி மோடிதான்”
  என்று துக்ளக் சோவை மிஞ்சுமளவுக்கு
  தமிழக பார்ப்பனிய ஊடகங்கள் கண்டு கொள்ளுமளவுக்கு
  ”வருங்கால பிரதமரே வாழ்க! என்று கொடுத்ததுக்கு மேல கூவுது தமிழருவி!

  மூடி மறைக்க முடியாத அளவுக்கு
  மோடியின் குற்றச்செயல்களும், குஜராத் படுகொலைகளும் நாறிக்கிடப்பதால்
  கண்ணை மூடிக்கொண்டு தான் மோடியை ஆதரிக்கவில்லையென்று!
  முன் ஜாமின் வேறு!

  குஜராத் – அதானி குழுமத்துடனான வரவு செலவில் படு பயங்கர நிலப்பேர ஊழலும்,
  மோடியின் ஆட்சியில் எஸ்ஸார், எல்.அண்ட். டி, போர்டு இந்தியா, ரிலையன்சு உள்ளிட்ட
  பல கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக் கொள்ளையில் நடந்துள்ள கொழுத்த ஊழலையும்
  இந்தியத் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியும்,
  இயற்கை எரிவாயு, எண்ணெய் வயல்களின் பங்குகளை விற்பதில்
  ஜியோ குளோபல் என்ற லெட்டர் பேட் நிறுவனத்தின் வழி நடந்த பிரமாண்ட ஊழல் அம்பலமாகியும்,
  கண்ணைத் திறந்து கொண்டு ஆதரிக்கும் தமிழருவிக்கு
  இது நிர்வாகத் திறமையாகவும், ஊழலற்றதாகவும் காந்தியத் தோலுக்கு உரைக்கிறது போலும்!

  ஒரு வேளை மதவெறி போதையில் தமிழருவி தள்ளாடுகிறது போலும்!
  சொல்லப்போனால் மதுவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து கூட உண்மைகள் வெளிவந்து விடும்,
  மதவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து பொய்கள் மட்டுமே புழுத்துக் கொட்டும்.
  சந்தேகப்படுபவர்களுக்கு தமிழருவியின் வாயே தகுந்த சாட்சி!

  கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகள் நாட்டையும், மனித ஆற்றலையும் கொள்ளையடித்து,
  இயற்கை வளங்களையும் சீரழிப்பதை கால் நடையாகக் கூட கண்டிக்காத,
  குறி வைத்து இயக்கம் ஏதும் எடுக்காத இந்த காந்தீய குறி சொல்லி
  திராவிட இயக்கம் எனும் பிம்பத்தை அழிக்க
  மோடி எனும் பார்ப்பன பிம்பத்தை பயன்படுத்தி
  மக்களை வாழவைக்கப் போகிறாராம்!

  இதுவும் அவருக்கு ஒரு நம்பிக்கையாம்!
  இந்து மதத்தின் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது தான் இதன் உள்ளருத்தம் போலும்!
  அதாவது கருணாநிதி, ஜெயாவின் கன்னக் கோலை மோடியின் சூலத்தால் துடைக்கப்போகிறாராம்.
  இந்த சந்தடி சாக்கில் மோடியே ஒரு கார்ப்பரேட் கன்னக்கோல் எனும்
  முழுப்பூசணிக்காயை பார்ப்பன பிராசாதத்தில் மறைப்பதுதான் தமிழருவியின் தகிடுதத்தம்.

  பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளை ஏற்கனவே பிழைப்புவாத அரசியல் வழி
  தமிழகத்தில் காலுன்ற வைத்த திராவிடக் குருவிகளுக்கு
  இந்த அருவி என்ன மாற்றை முன்மொழிந்து விட்டார்!

  கருணாநிதி செய்தால் காரியவாதம்.
  வைகோ செய்தால் மாற்று அரசியல்!
  இந்தத் தரகு வேலைக்கு தமிழருவிக்கு பார்ப்பன கவரேஜ்!
  வீடணர்கள் இல்லாமல் ராமஜெயம் இல்லை
  காலந்தோறும் தமிழருவிகள் இல்லாமல் மோடி உலா இல்லை.
  கருணாநிதி புடுங்கினால் புல்!
  தான் புடுங்கினால் தர்ப்பை என்பதுதான்
  தமிழருவியின் மாற்று சிந்தனை யோக்கியதை!

  அம்பலப்பட்டுப் போன அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட
  சமூக விமர்சகர்களாகவும்,
  சொற்பொழிவாளர்களாகவும்,
  மாற்றுக் கருத்தாளர்களாகவும்
  மாய்மாலம் செய்யும் ஊடகப்பிறவிகள்
  ஒருவித அரசியல் ஒட்டுண்ணிகள் என்பது மட்டுமல்ல,
  அறியப்பட்ட அரசியல் பிழைப்புவாதிகளை விட
  இவர்கள் தான் அதிக ஆபத்தானவர்கள் என்பதற்கு
  தமிழருவியின் தரகு வேலைகள் நிரூபணங்கள்.

  ஆயிரக்கணக்கான இசுலாமிய மக்களை படுகொலை செய்து
  கருவிலிருக்கும் சிசுவை சூலத்தால் குத்தி நரவேட்டையாடியக்
  காவிக் கும்பலின் ‘காவிய நாயகன் நரேந்திர மோடியை’
  நாட்டைக் காட்டிக் கொடுக்கும்,
  இயற்கை வளங்களை சூறையாடும்
  கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன தவத்திற்கு அடியாள் ராமன் வேலை செய்யும்
  மோடி எனும் தேச விரோதியை,
  தேசத்தின் கதாநாயகனாக சித்தரிக்கும் தமிழருவியின் கரசேவை
  பார்ப்பன – பாசிசத்துக்கெதிராக போராடி உயிர்நீத்த
  சமூகப் போராளிகளின் சார்பாக கண்டிக்கத்தக்கது.

  ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் போக்கில்
  தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும்
  மறுகாலனிய கொள்கையின் மூலம்
  ஊழலும், முறைகேடும், தேசவளங்கள் சூறையாடும் அரசியல் போக்காக
  அமலாகிக்கொண்டிருக்கும் முழு உண்மையை
  நக்சல்பாரி அரசியல் அமைப்புகள் மட்டும் தான்
  மக்களிடம் போராடிச் சொல்கின்றன.

  இந்த ‘மாற்று’ அரசியலை தேசத்தின் அமைதிக்கு, ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றும்,
  அகிம்சை வழியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் பாதையே வழி என்றும்,
  திராவிடக் கட்சிகள் மட்டும் தான் தீங்கு என்றும்
  மடைமாற்றும் ஆளும்வர்க்க கைக்கூலிகளின்
  ஒரு அவதாரம் தான்! ‘தமிழருவி’

  பிரிட்டிஷ் அடக்குமுறைச் சட்டங்கள், திட்டங்களுக்கு
  எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுந்து போராடிய போதெல்லாம்,
  பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் பாராளுமன்றத்தில் குண்டு வீசி
  காலனியாதிக்கத்திடம் கணக்கு தீர்த்த போதெல்லாம்,
  காந்தி மடைமாற்றி உண்ணாவிரதம் என்று
  நூல் நூற்று நூல் விட்ட மாதிரி

  மறுகாலனியாக்கத்திற்கு எதிராக குமுறும் மக்களின் மனநிலையை
  மறுபடியும் ஆளும் வர்க்கம் தேர்தல் கோப்பையில் வடித்துக் கொள்ள விழைகிறது.
  இதில் இசுலாமிய ரத்தத்தாலும் தலித்துகள் ரத்தத்தாலும்
  விவசாயிகள், தொழிலாளிகள் ரத்தத்தாலும்
  நிரம்பிய மோடி எனும் கொலைகார கோப்பையை
  தமிழர்களின் கையில் திணிக்க வேலை பார்க்கிறார் தமிழருவி.

  கழுத்தில் ஒரு கருப்பு பேண்ட் பிட்டை போட்டுக் கொண்டு
  பேச்சில் தமிழன் என்று ஒரு பிட்டை போட்டுக் கொண்டு
  அன்று அத்வானி, வாஜ்பாய் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு
  காவடி தூக்கிய வைக்கோ தான் தமிழருவி கண்டுபிடித்த தகுந்த முதல்வர்.

  நான் பொதுவானவன் அரசியல் சார்பற்றவன் நல்லதையே நாடுபவன்
  என்று பேசிக்கொண்டே
  குறிப்பாக பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு
  அல்லக்கை வேலை பார்க்கும் தமிழருவி போன்றவர்கள் தான்
  அறியப்பட்ட பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள்.

  தேர்தல் நெருங்க நெருங்க தமிழருவி மட்டுமல்ல
  தமிழாறு, தமிழ்வாய்க்கால், தமிழ்க்குட்டை…
  என காவிப்புழுதிகள் நிறையவே கிளம்பும்!
  தெருவை சுத்தமாக்க நமக்கும் வேலை இருக்கிறது நிறைய!.

 32. அடியவன் on October 5, 2013 at 4:26 pm

  இனிமேல், தி.க., முஸ்லீம்கள், கம்-பரிவார் அமைப்புகள் என்று வரிசையாக வரிந்து கட்டி தமிழருவி மணியனைத் திட்டுவார்கள், என்ன நம் அன்பர்கள் அவருக்கு லூசு பட்டம் கொடுத்து மகிழ்வார்கள். வசதியைப் பொறுத்து அதிமுகவும் திமுகவும் இந்தத் திட்டும்-பரிவாரத்தில் ஐக்கியம் ஆவார்கள்!

  ஆனால், பொய் மூட்டையான ஜெயலலிதாவை நம்பி தேர்தலுக்கு முன் மட்டும் அல்ல பின்னரும் ஏமாற நம்மில் சிலர் தயாராக இருப்பது கொடுமை!

 33. அத்விகா on October 8, 2013 at 6:14 am

  வினவு ஒரு விலைபோன பேடிகளின் தளம். அவர்கள் வெளியிட்ட கவிதையை முழுவதும் இங்கு வெளியிட்டது தேவை இல்லாதது. அதன் சுருக்கத்தை மட்டும் கொடுத்திருந்தாலே போதுமானது. தமிழருவி மணியன் இதுவரை காசு பார்க்காதவர். மஞ்சள் துண்டார் ஆட்சியின் போது,அவருக்கு திட்டக்குழுவில் ஏதோ ஒரு பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினையில் , இலங்கை அப்பாவி தமிழர் படுகொலை செய்யப்பட்டபோது, கருணாநிதியின் இத்தாலிய சொம்பு அரசு , வாய் மூடி மவுனம் சாதித்ததை கண்டித்து, பதவியை துறந்தார்.

  “தான் கள்ளி பிறரை நம்பாள் ” என்பது பழமொழி. காங்கிரசின் மேல் சாட்டவேண்டிய அனைத்து குற்றச்சாட்டினையும் பாஜக மற்றும் மோடி மீது சாட்டிய ‘வினவு ‘ஒரு சுய சிந்தனை இல்லாத காட்டுமிராண்டி கூட்டம். காங்கிரசின் சில சாதனைகளை பார்ப்போம்.:-

  1. இந்திய நாட்டினை இரு கூறிட்டது தேசவிரோத காங்கிரஸ் இயக்கமே.

  2. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து, உச்ச நீதி மன்றத்தில், சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்து , கச்சத்தீவு என்றுமே இந்தியாவுக்கு சொந்தமாக இருந்ததில்லை என்று பொய் சொல்லியது காங்கிரஸ் அரசே.

  3. காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வந்த காங்கிரசின் மோசடி , உச்சநீதிமன்றத்தால் தோலுரிக்கப் பட்டு, கடைசியில் டிரிப்யூனலின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியானது.

  4. எல்லையில் வாலாட்டிவரும் பாகிஸ்தானிய நாய்கள் இதுவரை , சுமார் 120 தடவை அத்துமீறல் செய்துள்ளனர். மேலும் இரு வீரர்களின் தலையை வெட்டி எடுத்து சென்றனர். பதின்மூன்று இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் , மத்திய காங்கிரஸ் அரசு எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் சாதித்தது. மத்திய உள்துறை அமைச்சர் ஒரு படி மேலே போய், பாகிஸ்தானில் உள்ள சில தீவிரவாதிகள் , பாகிஸ்தான் ராணுவத்தின் சீருடையை திருடிவந்து, திருடிய உடையை அணிந்து இந்திய வீரர்களை கொன்றுவிட்டனர் என்று புளுகுகிறான். இவனை விட பெரிய தேசத்துரோகி யார் இருக்கிறார்கள். இவனெல்லாம் ஒரு மனிதப்பிறவியா என்று சந்தேகமாக இருக்கிறது.

  5. விடுதலைப்புலிகளை பழிவாங்குகிறேன் என்ற பெயரில் காங்கிரஸ் அரசு, சிங்கள நாய்களுக்கு உதவி செய்து, 10000 விடுதலைப்புலிகளுக்கு பதிலாக, ஒட்டு மொத்தமாக சுமார் 3 லட்சம் அப்பாவி தமிழரை படுகொலை செய்தது. இதற்கு மணிமேகலையும் , மணிமேகலையின் சொம்பு திமுக கருணாவும் மட்டுமே காரணம்.

  6. சீனாக்காரன் அடிக்கடி அருணாசலப் பிரதேசத்தில் புகுந்து வாலாட்டுகிறான். காங்கிரஸ் அரசு வாயில் கொழுக்கட்டையை வைத்துக்கொண்டு இருக்கிறது.

  7. மத்திய அரசுடைய கருவூலத்துக்கு (அதாவது கஜானாவுக்கு ) போக வேண்டிய டூ ஜி பணம், பிற ஊழல்களான நிலக்கரி, சுரங்கம் ,ஆதர்ஷ் மற்றும் இன்னமும் வெளிவராமல் இருக்கும் , எதிர்காலத்தில் வெளிவர இருக்கும் ஊழல் கொள்ளைகள் அனைத்தும் , மஞ்சள் குடும்பம் மற்றும் மணிமேகலை குடும்பத்தினரால் கொள்ளை அடிக்கப்பட்டு , வெளிநாட்டு வங்கிகளில் உள்ள திருட்டு கணக்குகளுக்கு போய் சேர்ந்துள்ளது.

  8. காங்கிரஸ் மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில் தான், இந்தியாவில் உள்ள சில தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளும், ( ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா உட்பட ) சில தனியார் துறை வங்கிகளும் , பல கடுமையான விதிமுறை மீறல்களை செய்து, ரிசர்வ் வங்கியால் கண்டிக்கப்பட்டு, கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு, தவறுகளை உண்மையில் செய்த சில அதிகாரிகள் மீது எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று செய்தித்தாள்கள் மூலம் வெளிவந்துள்ளது. உண்மையான குற்றவாளிகள் தப்பி விட்டனர்.

  9. நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்பட்டு , இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத தண்டனை பெற்றோருக்கு எம் பி ,எம் எல் ஏ., அமைச்சர் ஆகிய பதவிகளில் நீடிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை செல்லாக்காசு ஆக்குவதற்காக , ஜனாதிபதியின் அவசர சட்டத்தினை பிறப்பிக்க முயற்சி செய்து , பொதுமக்கள் எதிர்ப்பு அதிகம் வந்தவுடன் , அவசர சட்ட முன்மொழிவினை திரும்பப்பெற்றது இந்த காங்கிரஸ் அரசு தான்.

  10. தெலுங்கானாவை பிரித்துத் தருகிறோம் , எனக்கு ஒட்டுப்போடு என்று ஆந்திர மக்களிடம் 2004-*சட்டசபை தேர்தலில் வாக்குறுதி கொடுத்து, வெற்றிபெற்றபின்னர் பல்வேறு காரணங்களுக்காக , பத்து வருடம் தாமதம் செய்து, இப்போது ஆந்திரா முழுவதும் எரிந்து கொண்டிருப்பதும் இந்த காங்கிரசின் கையாலாகாத்தனத்தினால் மட்டுமே.

  மேலும் எழுதிக்கொண்டே போனால், ஒரு இருநூறு பக்கங்களை தாண்டிவிடும். இவ்வளவு கேவலமான காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கும் ‘ வினவு ‘ போன்ற சொம்புகளை என்ன சொல்வது ? ஐயோ பாவம் !

 34. "HONEST MAN" on October 8, 2013 at 9:04 am

  உள்ளே போன மதுவால் “கனவு” உலகில் மிதந்து ” தினவு” எடுத்து போய் “வினவு” என்ற வலைத்தளத்தில் யாரோ “து…………….சண்முகம்” என்ற ((ஊர் உலகிற்கு)) அறிமுகம் இல்லாத ஒரு “”கழுதை”” கிறுக்கிய கிறுக்கல்களை “”கவிதை”” என்று நினைத்து திரு அடியவன் அவற்றை இங்கே அடிபிறழாமல் reproduce பண்ணியுள்ளார். வினவு என்ற தொட்டியில் கிடந்த குப்பையை “தமிழ் ஹிந்து” என்ற நடு வீட்டில் எடுத்து வந்து கொட்டி விட்ட திரு அடியவனை அடிக்கணும் (லேசாகத்தான்) போலிருக்கு அடியேனுக்கு ( அதாவது எனக்கு).

  வினவு தளத்திற்கு நானும் சென்று பார்த்தேன் அவர்கள் communism பெற்றெடுத்த குழந்தைகள் (கலை இலக்கிய குழு) என்று தெரிந்து கொண்டேன்.அதாவது self -styled secularistகள். பிஜேபி காரர்கள் மதவாதிகள் என்றால் இவர்கள் “பிழைப்புவாதிகள். பாரதியார் தனது பூனூலை கழற்றி எறிந்தார் ஆனால் தனது Turban ஐ கழற்றி எறியாத மன்மோகன் சிங் ஒரு secularist . மணி சங்கர் ஐயர் என்ற சாதி பெயரை தனது பெயருடன் ஒட்டி வைத்துக்கொண்டுள்ள இவர் secularist இவர் ஐயர் இல்லை மகா பொய்யர். ராஜாஜியோடு திமுக கூட்டு வைத்தபோது பார்ப்பனியம் தெரியவில்லை 1971 ல் இந்திரா என்ற பாப்பாத்தியோடு கருணாநிதி கூட்டு வைத்தபோது பார்ப்பனியம் தெரியவில்லை. 1947 ஏப்ரல் 18 ந்தேதி பாம்பே விற்கு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்ற அம்பேத்கர் ஷாரதா கபீர் என்ற பிராமின் டாக்டரை மணந்தபோது பார்ப்பனியம் தெரியவில்லை. 1956 டிசம்பர் 6 ந்தேதி அவர் மறைந்தபோது புத்தமத வழக்கப்படி தகனம் செய்யபட்டார். நாட்டுக்கு மட்டும் மதசார்பின்மையை வழங்கிவிட்டு இந்த சட்ட மேதை மட்டும் புத்த மதத்தை பின்பற்றுவாராம். இந்து மதத்தை வெறுத்து பேசுவாராம். அதெல்லாம் “Hate speech ” கிடையாதாம். ஆனால் மோடி தான் ஒரு ஹிந்து தேசியவாதி என்று சொல்லிவிட்டால் அது மட்டும் கண்டனதிருக்கு உரியது. “பெரிய R ” (இவனுக்கு பெரியார் என்று பெயர் வைத்தவன் யார்) என்ற ஈ.வே.ரா.ராமசாமி “பாம்பையும் பார்ப்பானையும் ஒரே நேரத்தில் பார்த்தல் பாம்பை விட்டு விடு பார்ப்பனை அடி” என்று பேசியது மட்டும் “Hate speech ” கிடையாது. வாயில்லா ஜீவன் மாடு அதன் வயிற்றிலடித்த “லொள்ளு” தன பெயருக்கு பிறகு தன ஜாதி பெயரை போட்டுகொள்ளலாம். ஆனால் he is a secular of first water . Communalism என்ற வார்த்தைக்கு மதவாதம் என்று மட்டும் பொருளல்ல. Community என்ற வார்த்தையில் இருந்துதான் Communilism வந்தது.(community certificate என்றால் சாதி சான்றிதழ் என்று பொருள்) ஆகவே மத சண்டை வந்தால் மட்டுமே கண்டிக்கவேண்டும் தண்டிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். சாதி சண்டையும் பேராபத்தானது. Mental commission (Sorry Mandal Commision ) வந்தபிறகுதான் சாதிகளுக்குள் சண்டை மூர்கமாயுள்ளது.

  நாட்டுக்கு மதசார்பின்மை தான் உயிர்நாடி என்கிறார்கள். அப்போ வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி, infrastructure , குடிநீர் இதெல்லாம் மயிர்நாடியா? அதனால்தான் 67 ஆண்டுகள் ஆகியும் இவையெல்லாம் இன்றுவரை கிடைக்காமல் உள்ளன. இந்துக்கள் குண்டடி பட்டு இறந்தால் அதை பற்றி கவலை இல்லை. ஆனால் ஒரு முஸ்லிம் கைது செய்தால் பூமிக்கும் வானத்திற்கும் குதிக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள் பாகிஸ்தானில் மசூதியில் இருந்து வெளிவரும் ஒரு பிரிவினரை மற்றொரு முஸ்லிம் பிரிவினர்கள் குண்டு வெடுத்து சாகடிக்கின்றனர் எனும்போது காபிர்களாக கருதப்படும் இந்துக்களை மட்டும் விட்டுவிடுவார்களா? ஈவு இரக்கமற்ற இந்த முஸ்லிம் அரக்கர்கள் இறக்கத்தான் வேண்டும் (கத்தி எடுத்தவன் கத்தியால் சாவது போல குண்டு எடுத்தவன் குண்டு மூலமாகவே சாகவேண்டும்) அரக்கன் மீது இறக்கம் காட்டினால் இந்திய மக்கள் (அதாவது நல்ல முஸ்லிம்கள் உட்பட) எப்படி உறக்கம் கொள்ள முடியும்.

  தலித் என்ற வார்த்தை ஒரு சம்ஸ்கிருத வார்த்தை. அதை 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Jyotirao Phule என்பவர்தான் முதல் முதலில் பயன் படுத்தினார். இது தெரியாமல் தமிழ் தமிழ் என்று பேசும் இவர்களின் முகத்தில் காரி உமிழ். கருணாநிதி தமிழர்களை காப்பாற்ற பிறந்த ஒரு அவதாரமாம். அவர் போனை எடுத்தால் “ஹலோ” என்று சொல்லும்போது என்ன மொழி பயன்படுத்துகிறார்? தன கட்சியின் பெண் தளபதியான குஷ்பூ என்று கூப்பிடும்போது வடமொழி எழுத்தை பயன்படுத்துவது தமிழ் மொழுக்கு செய்யும் துரோகம் அல்லவா?

  நேற்று தந்தி டிவியில் ஆயுத எழுது என்ற விவாத நிகழ்ச்சியில் (((என் தங்கச்சியை நாய் கடித்து விட்டது என் தங்கையை நாய் கடித்துவிட்டது என்று திரும்ப திரும்ப commedy நடிகர் Kanakaraj கூறுவது போல))) கம்யூனிஸ்ட் கட்சியின் பேரறிவாளி Kanagaraj என்பவர் சச்சார் கமிட்டி சச்சார் கமிட்டி என்று திரும்ப திரும்ப மூச்சுக்கு 300 தடவை கூறுகிறார். எதோ சச்சார் ஒரு கடவுள் மாதிர்யும் அவரது அறிக்கை ஒரு குரான் மாதிரியும் நினைத்து கொண்டு பேசுகிறார். கோத்ரா ரயில் சம்பவத்தை விசாரிக்க “மாடு” புகழ் லல்லுவினால் appoint செய்யப்பட்டு அவர் “”சொன்னது”” போல விசாரணை செய்து ரயில் விபத்திற்கு காரணம் மின்கசிவு என்று அறிக்கை கொடுத்த Milton Banerjee மாதிரி காங்கிரஸ் அரசு “”சொன்னது”” போல அறிக்கை கொடுத்தார் சச்சார்.அவ்வளவுதான். தினம் தினம் பிரியாணி சாப்பிடும் முஸ்லிம்கள் அரை வயிறு கஞ்சிக்கு கூட வழியின்றி வறுமையில் வாடுகிறார்கள். வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுகிறார்கள். இதற்கு காரணம் இந்துக்கள் என்று கம்யூனிஸ்ட் கம்நேட்டிகள் சாடுகிறார்கள். இவர்கள் தெய்வமாக போற்றும் “காரல் மார்க்ஸ்” கூறுகிறார். “”” மக்கள் தொகை பெருக்கமே வறுமைக்கு காரணம்”” இவர்கள் இதை படிக்கவில்லையா? 1947 ல் இந்தியாவில் முஸ்லிம் ஜனத்தொகை 10.4% ஆனால் இன்று அவர்கள் 15%. 1947 ல் இந்துக்களின் ஜனத்தொகை 84%ஆனால் இன்று அவர்கள் 85%. ஆகவே முஸ்லிம்கள் bomb explosion மற்றும் population explosion ஆகிய இரண்டிலுமே experts . வேகமான முஸ்லிம் பெருக்கத்தால் இந்தியாவை வெகு சீக்கிரமே முஸ்லிம் நாடாக மாற்ற துடிக்கின்றனர். அதனால் இப்போதைக்கு secularism தான் சிறந்தது. (இப்போது பாகிஸ்தானில் secularism உள்ளதா?) அப்புறம் secularism குப்பை கூடைக்கு போகும். அப்படிப்பட்ட அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

  இந்தியாவில் அரசு பணிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அற்ப அளவில் உள்ளதாம் சச்சார் கமிட்டி “சச்” (உண்மை) னை கண்டுபிடித்து சொல்லிவிட்டதாம்.
  பாகிஸ்தானில் பங்களா தேஷில் உள்ள minority இந்துக்கள் அரசு பணிகளில் அபிரதமாக உள்ளார்களோ? காஷ்மீரில் 4 லட்சம் இந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டது பற்றி சிறுதும் வருத்தமில்லை. முஸ்லிம்கள் தரும் 1 பொட்டலம் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு தந்தி டிவியில் கனகராஜ் கத்து கத்து என்று கத்துகின்றார். இது போன்ற காலி படைகளை விட காவி படை எவ்வளவோ மேல்.

  தமிழருவி மணியன் தனது காந்திய அமைப்பு மூலம் பல SC மாணவர்களுக்கு உதவிகள் செய்து வருவது இந்த து. சன்முகதிற்கு தெரியுமா?

 35. அடியவன் on October 8, 2013 at 3:45 pm

  துளிக்கூட மனம் ஒப்பாமல்தான் வினவின் பதிப்பை அப்படியே இதில் இட்டேன். மாற்றுக் கருத்து இன்னதென்று அறிந்துகொள்ள என்று முன்பு ஒரு தொடுப்பை இட்டது போலத்தான் இதையும் செய்ய நினைத்தேன். ஆனால் திட்டுவது எப்படியெல்லாம் தமிழருவி மணியனைத் திட்டுகிறார்கள் என்பதை நம்மவர்கள் அறிந்து கொண்டால்தான் மணியன் போன்றோர் நல்லதையும் உண்மையையும் சொல்வதால் படும் பாடு புரியும், அவர்போல மோடிக்கு ஆதரவு தருபவர்களை ‘லூசு’ என்று வெறுத்து ஒதுக்குவது தவறு என்பது புரியும் என்பதற்காகவே முழுமையாகப் பதித்தேன்.

 36. அடியவன் on October 8, 2013 at 3:56 pm

  Honest Man,

  ///அவர் போனை எடுத்தால் “ஹலோ” என்று சொல்லும்போது என்ன மொழி பயன்படுத்துகிறார்? தன கட்சியின் பெண் தளபதியான குஷ்பூ என்று கூப்பிடும்போது வடமொழி எழுத்தை பயன்படுத்துவது தமிழ் மொழுக்கு செய்யும் துரோகம் அல்லவா?///

  எதுக்கு அவ்வளவு தூரம் போகவேண்டும்?

  ஸ ஷ ஹ ஜ ஆகியன வடமொழி எழுத்துக்கள் என்று ஒதுக்கப்பட்டன, சரி.

  வினையும் விதியும் விளையாடும் ஆட்டம் வினோதமானது. வினைப்பயன் விடுவதில்லை.

  அவரது அருமை மகன் பெயர் ஸ்டாலின். ஸ என்ற வடமொழி எழுத்தை “முதலில்” எழுதாமல், உச்சரிக்காமல் அவர் பெயரை எழுதவும் முடியாது, சொல்லவும் முடியாது!

  எத்தனையோ குழந்தைகளுக்குத் தனித் தமிழில் பெயரை வைத்தவர் தனது ஆசை மகனுக்குப் பெயரை வைக்கும்போதே விதி விளையாடி விட்டது!

  அட, அவரும் அவரது கட்சியினரும் “தளபதி” என்ற பட்டப் பெயர் சூடித் தப்பி விடலாம் என்றால் விதி விடுவதில்லை!

  கருணாநிதிதான் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் எல்லா அரசுக் கோப்புகளிலும் ஆணைகளிலும் கண்டிப்பாகத் தமிழில்தான் கையொப்பம் இடவேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். தனது மகன் ஸ்டாலினைத்தான் தனது அரசியல் வாரிசாக ஆக்கப் போகிறோம் அவர் தனது பெயரைத் தனித்தமிழில் கையொப்பமிடத் தோதாக அவர் பெயர் அமையவில்லை என்பது அப்போது அவருக்குத் தோன்ற வில்லை!! விதி இரண்டாம் முறை விளையாடி விட்டது.

  மேயராகவோ, அமைச்சராகவோ, வேட்பாளராகவோ, சட்டமன்ற வருகைப் பதிவேடுகளிலோ ஸ்டாலின் தனது பெயரை எழுதும்பொதெல்லாம் முதலில் வெறுக்கப்பட்ட “ஸ்” எழுதிதான் பின்னர் தமிழ் எழுத்துக்கே வரவேண்டும் !!

  “ஸ்” இப்பவே கண்ணைக் கட்டுதே !!

 37. Prassannasundhar N on October 8, 2013 at 6:14 pm

  அன்பு அடியவன் அவர்களே…

  அத்விகா அவர்கள் கூறியது போல் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருந்தால் போதுமே! நான் தமிழருவியை லூசு என்று கூறியதை விட நீங்கள் தான் அவரை சந்திக்கு இழுத்து வந்து சாத்தியது போல ஆகிவிட்டது கதை. விஜயகாந்தைப்பற்றியும், வைக்கொவைப் பற்றியும் நான் குறை கூறினேன். அவர்களையும் யாராவது தாறு மாறாகத் திட்டியிருந்தால் அதையும் இங்கே பதிவிடுவீர்களா?

  அய்யா, நிலைப்பாடு என்பது மிகவும் முக்கியம். அது தெளிவாக இருந்தால் தான் அதைப் பின்பற்றி 4 பேர் உடன் வரமுடியும். தமிழருவியின் தற்போதைய நிலைப்பாடு தங்களுக்குப் பிடித்திருக்கிறது போலும். ஆனால் நாளையே அவர் மீண்டும் நான் முன்பே கூறியதைப் போல முஸ்லிம்களின் எதிரி மோடி என்று முன்னிலைப்படுத்த முனைய மாட்டார் என்று ஒரு நிச்சயமும் இல்லை.

  தேமுதிகவும் வேண்டாம், மதிமுகவும் வேண்டாம், பாமகவும் வேண்டாம், தமிழருவியும் வேண்டாம். நம் குடும்பங்கள் ஒன்றிணைந்து அவரவர் பகுதியில் பாஜகவுக்கு வாக்களித்தாலே போதுமானது. மாற்றங்களை எதிர்நோக்கலாம்.

 38. C.N.MANIVANNAN on October 9, 2013 at 5:22 am

  கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளில் பைபிள் க‌ண்ட‌ இந்த பூமி தட்டை!! பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!! பூமிக்கு தூண்கள் உண்டு!! பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!! சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !! என்ற‌ மாபெரும் பேருண்மைக‌ளை மாண‌வ‌ர்க‌ளுக்கு போதிக்கின்றார்க‌ளா?

  பிற மதத்தினரை ம‌த‌ம் மாற்ற‌ம் செய்யும் பொழுது பைபிள் க‌ண்ட‌ இந்த மாபெரும் பூமி தட்டை!! பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!! பூமிக்கு தூண்கள் உண்டு!! பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!! சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !! என்ற‌ பேருண்மைக‌ளை அறிவிக்கிறார்க‌ளா?

  இண்டுஇடுக்கு காடு மலை கடற்கரை பட்டிதொட்டி கிராமம் நகரம் எல்லாம் கர்த்தரின் பைபிள் வாசகங்களை எழுதி எழுதி பிரகடனப்படுத்துபவர்கள் பூமி தட்டை!! பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!! பூமிக்கு தூண்கள் உண்டு!! பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!! சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !! என்ற கடவுளின் வாசகங்களான புனித பைபிளின் இந்த வாசகங்க‌ளையும் வசதியாக மறைப்பதேனோ ?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*