மங்கல்யானும் மறக்கப்பட்ட மனிதர்களும்

செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்வெளி மையம் அனுப்பிய விண்கலத்தை சுமந்து சீறி பாய்ந்து சென்றது ராக்கெட். அந்த சந்தோஷ தருணத்தில் மறக்கப்பட்ட சில மனிதர்களை நினைவுக்கு கொண்டு வருவது நம் கடமை. அதற்கு முன் ஒரு சின்ன விஷயம்.morning_hindutva ஏன் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி அங்கே மீத்தேன் வாயு இருக்கிறதா என பரிசோதனை செய்ய வேண்டும் – அதுவும் பாரதம் போல வறுமையுடன் போராடும் ஒரு நாடு?இந்த கேள்வி உடனடியாக இடதுசாரிகளால் கேட்கப்படும். உண்மையில் வளரும் நாடுகளுக்குத்தான் விண்வெளி தொழில்நுட்பம் மிகவும் தேவை. செயற்கை கோள் தொழில்நுட்பம் மனித வள மேம்பாட்டுக்கும் இயற்கை வளம் பேணுவதற்கும் மிகவும் அவசியமானது. மானுடத்தின் அடுத்த தாவலும் விரிவும் விண்வெளியில் அமையும். அது விரைவில் நிகழும். அப்போது நாம் –அதாவது நம்மை போல காலனிய சுரண்டலால் தேக்கநிலை அடைந்து வறுமையில் உழலும் நாடுகள்- என்ன செய்ய வேண்டும்? காலனிய ஆதிக்கத்தின் மூலம் வளர்ந்த நாடுகள் மட்டுமே அந்த முன்னேற்றத்தில் ஈடுபடட்டும் என விட்டுக் கொடுத்து விட வேண்டுமா? நாம் கைகட்டி அவர்கள் தமக்கு போக எஞ்சியதை நமக்கு தரும் போது அதை கை கட்டி வாங்கி அவர்களின் அரசியல் அழுத்தங்களுக்கு நம் சுதந்திரத்தை விட்டு கொடுத்து…

ஒருவேளை நம் இசங்கள் பேசும் இடதுசாரிகள் எதிர்பார்ப்பது கூட இதைத்தானோ என தோன்றுகிறது. தெரு தெருவாக அறிவியலையும் பகுத்தறிவையும் வளர்க்கிறோம் பேர்வழி என்று ‘பக்திமான் கண்டுபிடிச்சது விபூதி பாக்கெட் விஞ்ஞானி கண்டுபிடிச்சதோ ராக்கெட்’ என்று கோஷம் போடலாம் பாருங்கள்…

mangalyaan

மங்கல்யானுக்கு முதல் பிள்ளையார் சுழி போட்டவர் யார்?  ஆண்டு 1999. பொகரானில் அமெரிக்க செயற்கை கோள்களின் கண்களில் மண்ணை தூவி பாரதம் அணு சோதனையை நிகழ்த்திய முதலாம் ஆண்டு விழா. இந்திய விண்வெளி மையத்தின் அன்றைய தலைவர் கஸ்தூரி ரங்கன் உரை ஆற்றுகிறார், “பாரதத்துக்கு சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் ஆற்றல் இருக்கிறது.”  போகிற போக்கில் சொல்லி செல்லப்பட்ட இந்த வார்த்தைகள் அந்த கூட்டத்தில் இருந்த மனிதர் ஒருவருக்கு பொறி தட்டுகிறது. அக்கினி குஞ்சொன்றை கண்டேன் என.

உரைக்குப் பின்னர் அவர் கஸ்தூரி ரங்கனை சந்திக்கிறார்.

”உண்மையா? நெஜமாகவே முடியுமா?”

“ஆம்” என்கிறார் கஸ்தூரி ரங்கன். அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்.

“செலவு? நம்மை போல வளரும் நாட்டின் பொருளாதாரத்துக்கு முடியுமா? அதுவும் அமெரிக்கா விதித்த தடைகள் எல்லாம் இருக்கின்றனவே…”

”அதையெல்லாம் கவலைப்படாதீர்கள். இந்திய தொழில்நுட்பத்தால் அதிசயங்களை செய்ய முடியும். அரசு முழுமையாக துணை செய்ய வேண்டும்.”

வேண்டிய வசதிகள் செய்து தரப்படும். என அந்த மனிதர் வாக்களிக்கிறார். வேலைகள் துரிதமாக நடை பெறுகின்றன.  2003 இல் அன்றைய பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களால் சந்திராயன் தேச விடுதலை திருநாள் அன்று அறிவிக்கப்படுகிறது. “ பாரதம் சந்திரனுக்கு விண்-பரிசோதனை மிஷன் ஒன்றை அனுப்பப் போகிறது. அதன் பெயர் சந்திரயான்.”

மிக குறைவான செலவில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண் -சோதனை செயல்திட்டம் அது. சந்திரயான் இரண்டு ஆண்டுகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ஓராண்டுதான் செயல்பட்டது. என்ற போதிலும் அந்த காலகட்டத்தில் அது சந்திரன் குறித்து சேகரித்து அனுப்பிய  தரவுகள் மிக அதிகம் – சந்திரனில் இருக்கும் நீர் உட்பட. இந்தியாவின் இந்த குறைந்த செலவு விண்-செயல்திட்டங்களுக்கு மற்றொரு முக்கிய மகத்துவம் உண்டு. 304 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான  உலக விண்வெளி தொழில்நுட்ப சந்தையில் ஒரு முதன்மை போட்டியாளராக இந்தியா வளர்ந்து வருகிறது. காலனியாதிக்கத்தால் வஞ்சித்து சுரண்டப்பட்ட மற்ற வளரும் நாடுகளுக்கும் இது ஒரு நல்ல முன்னுதாரணம்.

சரி. கஸ்தூரி ரங்கனின் உரையிலிருந்து சந்திரயானை கண்டறிந்து ஊக்குவித்த அந்த மனிதர் யார்?

joshi1பேராசிரியர். முரளி மனோகர் ஜோஷி. இந்திய ஊடகங்களால் குறிப்பாக இடதுசாரி ஊடகங்களால் மிக மோசமாக சித்தரிக்கப்பட்ட அந்த மனிதர்தான். ஏதோ மூடநம்பிக்கையாளர் பிற்போக்குவாதி என மீண்டும் மீண்டும் கேலி செய்யப்பட்ட அந்த மனிதர் இந்திய அரசியலில் வேண்டுமென்றே பலிகடாவாக்கப்பட்டவர். ஜோஷி மூடநம்பிக்கையாளரா? ஒரு சிறிய உதாரணம் புரியவைக்கும். 1995 இல் விநாயகர் விக்கிரகங்கள் பால் குடிக்கும் அதிசயம் நிகழ்வதாக ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வெளிவந்த ‘சண்டே’ எனும் ஆங்கில இதழுக்கு ஜோஷி பேட்டி அளித்திருந்தார்: இது விக்கிரகங்களில் இருக்கும் நுண் துளைத்தன்மையால் ஏற்படும் இயற்கை நிகழ்வே தவிர இறை சக்தியால் நிகழும் அற்புதம் அல்ல.

கல்வி அனைத்து இந்தியருக்குமான அடிப்படை உரிமை என  1993 இல் உச்ச நீதி மன்றம் கூறியதற்கு செயல்வடிவம் அளித்தவர் ஜோஷி. அதற்கு அவருக்கு உத்வேகம் அளித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஓராசிரியர் பள்ளி கோட்பாடுகள். இன்று சர்வ சிக்‌ஷா அபியான் எனும் செயல் திட்டம் முழுவடிவுடன் செயல்படுவதற்கு பின்னால் ஒரு இந்துத்துவ மூளை இருக்கிறது. இயற்கை வளம் மற்றும் பாரம்பரிய அறிவு பாதுகாப்பு ஆகியவற்றிலும் ஜோஷியின் செயல்பாடு முக்கியமாக இருந்தது. ஆனால் இவை எல்லாம் பேசப்படுவதே இல்லை.   சர்வ சிக்க்ஷா அபியானுக்கும் சந்திரயானுக்கும் இன்றைக்கு மங்கல்யானுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. அது இந்த செயல்திட்டங்களின் சிக்கனம் சார்ந்த செயல்திறமை.  இயல்பாக நம் பண்பாட்டில் ஊறியது அது. நம்மை போல காலனியத்தால் சுரண்டப்பட்ட நாடுகளுக்கு இன்றைய அதி முக்கிய தேவை அதுவேதான். மிகவும் சிக்கனமாக ஆகச்சிறந்த திறமையை சிந்தாமல் சிதறாமல் செயல்களில் வெளிக் கொண்டு வருவது…

nnஇதை போலவே மறக்கப்பட்ட மற்றொரு சாதனையாளர் -இன்னும் முக்கியமானவர் ஒருவர் உண்டு. அவர்தான் இஸ்ரோவின் முதன்மையான விஞ்ஞானிகளில் ஒருவராக திகழ்ந்த நம்பி நாராயணன்.  KVD எனும் விண்கலன் தொழில்நுட்பம் ஒன்றை இந்தியாவுக்கு அளிக்க சோவியத் யூனியன் ஒப்பு கொண்டது அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு தெரிந்துவிட்டது. அதனினும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்து கொண்டிருந்தவர் நம்பி நாராயணன். அமெரிக்கா சீற்றம் அடைந்தது. 1992 இல் முதலாம் புஷ்  இந்திய விண்வெளி மையத்தின் மீது தடைகளை விதித்தார். 1994 இல் நம்பி நாராயணன் இந்திய விண்வெளி ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டார்.  செக்ஸுக்காக மாலத்தீவை சேர்ந்த  இரு பெண்களுக்கு அவர் இந்திய விண்வெளி தொழில்நுட்பங்களை விற்றார் என அவர் மலினப்படுத்தப்பட்டார். கைது சித்திரவதை என தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்ட இந்த மனிதரின் வாழ்க்கை உண்மையில் மிக எளிமையானது. அவர் கைது செய்யப்பட்ட போது அவர் வீட்டில் இருந்த டிவி கூட வேலை செய்யவில்லை. ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தைக் காட்டிலும் எளிமையான ஒரு வீடு என்பதை பத்திரிகையாளர்கள் கண்டார்கள்.

நடந்தது என்ன என்பதை ’Emerging Space Powers: The New Space Programs of Asia, the Middle East and South-America’  எனும் நூல் ரத்தின சுருக்கமாக சொல்கிறது. அது அப்படியே இங்கே:emerge1

The plot thickened when, at the Liquid Propulsion Systems Center, S.Nambi Narayanan and P.Sasikumaran were arrested for ‘spying for foreign countries’. Eventually the Central Bureau of Investigation admitted that the charges against S.Nambi Narayanan and P.Sasikumaran were false and baseless and they were freed. Later the United States was accused of setting them up as part of a dirty-tricks campaign against the sale of the KVD-1. Although not properly recognized for his achievement, Nambi Narayanan went on to develop the Vikas engine that eventually sent Chandrayan to the Moon in 2008.  (Brian Harvey, Henk H. F. Smid, Théo Pirard, Springer, 2011, பக். 225)

அமெரிக்காவின் இந்த கீழ்த்தர விளையாட்டில் கேரள போலீஸிலிருந்து பங்கு வகித்த கள்ள ஆடுகளில் போலீஸ்துறையிலும் இருந்தன. பின்னர் பதவிற்ற இடதுசாரிகளிலும் இருந்திருக்கின்றன. பாரதத்துக்கும் எனவே இந்துத்துவத்துக்கும், எதிராக மார்க்ஸியர்கள் ஏகாதிபத்தியவாதிகளுடன் கை கோர்ப்பதென்பது வரலாற்றில் எப்போதும் நடக்கும் துரோகம்தானே!

ஏனெனில் முழுமையான விசாரணைக்கு மீண்டும் மீண்டும் முட்டுக்கட்டைகள் மார்க்ஸிஸ்ட் அரசால் போடப்பட்டு இறுதியில் உச்சநீதி மன்ற அதிரடியால் முழு விசாரணை நடந்தது. அதில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார்.  அன்று கேரள போலீஸின் SIB இல் டெபுடி டைரக்டராக இருந்தவர் ஸ்ரீகுமார். நம்பிநாராயணனை 50 நாட்கள் சிறையில் வைத்து உடல்-உள்ள ரீதியாக சித்திரவதை செய்து அவரை தன் மேலதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க நிர்ப்பந்தித்தார் இவர்.

sk1

ஏறக்குறைய ஒட்டுமொத்த இஸ்ரோ (ISRO) அமைப்பே இதனால் ஒரு முடிவுக்கு வந்திருக்கும். உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி 1999 இல் மத்திய அரசு இவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. அப்போது குஜராத் உளவுத்துறையில் ஸ்ரீகுமார் பொறுப்பில் இருந்தார்.

sknnஆக பார்த்தார் ஸ்ரீகுமார். 2002 கலவரங்கள் அவருக்கு வகையாக உதவின. மோடி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இடதுசாரி வட்டங்களில் பிரபலமானார்.  2004 இல் இவர் மீதான குற்றச்சாட்டுகள் சோனியா அரசால் அமுக்கமாக மறைக்கப்பட்டன. ஓய்வு பெற்ற நம்பி நாராயணன் தம் தள்ளாத வயதில்  இன்னும் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு எதிராக நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கும் போது,   ஸ்ரீகுமார்   மனித உரிமை போராளி வேடம் தரித்து இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்ஸிலால் அழைக்கப்பட்ட விருந்தாளியாக அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறார்.

மங்கல்யானுக்காக மனம் மகிழும் போது ஒரு கணமாவது நம்பி நாராயணனையும் நன்றியுடன் நினைத்து கொள்வோம்.

நாளை மீண்டும் தேநீருடன் சந்திக்கலாம்.

20 Replies to “மங்கல்யானும் மறக்கப்பட்ட மனிதர்களும்”

  1. அறிய செய்திகளை அள்ளித்தந்த அ.நீ. அவர்களுக்கு தேநீர் நன்றிகள்…..
    – சீனு ஈரோடு .

  2. // ஆக பார்த்தார் ஸ்ரீகுமார். 2002 கலவரங்கள் அவருக்கு வகையாக உதவின. மோடி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இடதுசாரி வட்டங்களில் பிரபலமானார். 2004 இல் இவர் மீதான குற்றச்சாட்டுகள் சோனியா அரசால் அமுக்கமாக மறைக்கப்பட்டன. ஓய்வு பெற்ற நம்பி நாராயணன் தம் தள்ளாத வயதில் இன்னும் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு எதிராக நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கும் போது, ஸ்ரீகுமார் மனித உரிமை போராளி வேடம் தரித்து இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்ஸிலால் அழைக்கப்பட்ட விருந்தாளியாக அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறார். //

    இந்த பாவிகளை யார் தண்டிப்பது ? எனக்கு சக்தியிருந்தால் அறம் பாடியிருப்பேன். நெஞ்சு அடைத்துப்போகிறது. வேறென்ன சொல்ல.

  3. பசுக்களின் கூட்டத்திலே மறைந்திருந்திருக்கும் பசுந்தோல் போர்த்திய குள்ளநரிகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு, காவு கொடுக்கப்பட வேண்டும்.

    என்ன செய்வது?

    இது போன்ற உண்மைகள் மட்டும் வெகுஜன ஊடகங்களுக்கு தெரியாமல் போய் விடுகின்றனவா?

    அல்லது தெரிந்தும், உள்ளுக்குள் இருக்கும் தேசத்துரோக சிந்தனை தடுக்கின்றத.

    நன்றி திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களே!

  4. As an irony the project director for Mangalyaan project is Nambi Naarayanan’s own sister’s son himself

  5. திரு.அரவிந்தன், முரளி மனோகர் ஜோஷியைக் குறித்து கூறாமல் விட்டது. அவர் ஜோசியத்தை பல்கலை கழகங்களில் ஒரு பாடமாக வைத்தார்.
    தனிப்பட்டவர்களின் நம்பிக்கையைக் குறித்து நாம் பேச வேண்டாம். பொதுப்பணத்தில் அறிவியலைப் போன்று இதை படிப்பிக்க வேண்டுமா? என்பதை
    கேட்டுத்தானே ஆகவேண்டும்?
    அதே நேரத்தில், திரு.ஜோஷி “பிள்ளையார் பால்குடி படலத்தில்” அறிவியல் மனநிலையில் இருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  6. //முரளி மனோகர் ஜோஷியைக் குறித்து கூறாமல் விட்டது. அவர் ஜோசியத்தை பல்கலை கழகங்களில் ஒரு பாடமாக வைத்தார். தனிப்பட்டவர்களின் நம்பிக்கையைக் குறித்து நாம் பேச வேண்டாம். பொதுப்பணத்தில் அறிவியலைப் போன்று இதை படிப்பிக்க வேண்டுமா? என்பதை கேட்டுத்தானே ஆகவேண்டும்.// இதை எதிர்பார்த்தேன். வழக்கம் போல இதிலும் தரவு மயக்கங்கள் உண்டு. ஒன்று: ஜோஷி ஜோதிடத்தை பாடமாக வைக்கவில்லை. ஜோஷியின் காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருந்த பல்கலைக்கழகங்கள் ஜோதிடத்தை பாடமாக புகுத்துவதன் மூலம் அதை சமாளிக்க முடியும் என கருதின. அதற்கான ஒப்புதலை யூஜிசி சேர்மன் வழங்கினார். இதற்கு தான் பொறுப்பல்ல என ஜோஷி தெளிவாக இந்தியா டுடே நேர்முகத்தில் விளக்கினார். ஏற்கனவே இந்திய பல்கலைக்கழகங்களில் ஜோதிடம் படிப்புகள் அளிக்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் அடக்கம். ஆனால் ஜோதிடம் ஒரு அறிவியல் என்றும் அது சேர்க்கப்பட வேண்டுமென்றும் அடித்து பேசிய ஒரு முதலமைச்சர் அப்போது இருந்தார். மத்திய பிரதேசத்தின் அந்நாள் முதலமைச்சரான திக்விஜய் சிங். ஆனால் இன்றைக்கு வரை அறிவியல் மனப்பான்மை பேசும் பகுத்தறிவு பேசும் எந்த அறிவுஜீவியும் அவரை அதற்காக பெரிய அளவில் கண்டித்ததாக அல்லது அதை பெரிது படுத்தியதாக எனக்கு தெரியவில்லை.

  7. //ஆனால் ஜோதிடம் ஒரு அறிவியல் என்றும் அது சேர்க்கப்பட வேண்டுமென்றும் அடித்து பேசிய ஒரு முதலமைச்சர் அப்போது இருந்தார். மத்திய பிரதேசத்தின் அந்நாள் முதலமைச்சரான திக்விஜய் சிங். ஆனால் இன்றைக்கு வரை அறிவியல் மனப்பான்மை பேசும் பகுத்தறிவு பேசும் எந்த அறிவுஜீவியும் அவரை அதற்காக பெரிய அளவில் கண்டித்ததாக அல்லது அதை பெரிது படுத்தியதாக எனக்கு தெரியவில்லை.//

    எப்படிச் செய்வார்கள்? திவிசி தான் இந்து எதிர்பாளர்களின் போர்வாள் என்றல்லவா நம்பிக் கொண்டிருக்கிறார்கள்!

  8. சுரணை கெட்ட பத்திரிகையாளர் உலகம் இதையெல்லாம் துப்பறிஞ்சு எழுதாதா ?
    1999 எந்த ஆட்சி? மாற்றம் இதை கையாண்டது? அதில் ஈடுபட்ட எடுபட்டவர்களை மொத்தமாக இப்போதாவது எழுதுமா ?
    நம்பி நாராயணன் விக்கி லிங்க் https://en.wikipedia.org/wiki/Nambi_Narayanan

  9. After attaining the geo satellie orbit by Mangalyan our scientiests relieved a deep breathe as their commitment to make the project is immense. The students get high inspiration from this kind of achievement which may kindle them to dedicate themselves for the nation. I think the popularity given to our scientists is limited whereas the same given to actors are high. This culture should be reversed then only we can get more number of efficient people in other field.

  10. அறிவியலும் ஆன்மிகம் நம் நாட்டின் இரு கண்கள். இரண்டும் ஒன்றுக்கு ஓன்று தொடர்புஉடயவை. ஆன்மிகத்தை தேடிசென்றல் அறிவியல் உண்மை தெளிவு பெறும்

  11. ஜோதிடம் அறிவியலா என்று ஆராய்வதற்கு முன்னர் திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் ப்ளாக்குகளை முழுவதும் படித்து விட்டு கருத்து எழுதுவது நல்லது.ஜோதிடத்தினை விட சிறந்த அறிவியல் எதுவும் இன்று உலகில் இல்லை. மைனாரிட்டிகள் என்று சொல்லிக்கொண்டு , வெளிநாட்டில் உள்ள ஒரு ஊருக்கு மதம் சார்ந்த புனிதப்பயணம் செய்ய அரசின் மான்யம் விரயம் செய்யப்படும் நம் நாட்டில், அரசு செலவில் ஜோதிடத்தினை இலவசமாக சொல்லிக்கொடுப்பதில் கூட தவறு இல்லை. ஆனால் ஜோதிடம் கட்டணம் வசூலித்து தான் கற்பிக்கப்படுகிறது. அரசு இலவசமாக ஒன்றும் மான்யம் தரவில்லை. பொதுப்பணத்தில் ஜோதிடத்தை யாருக்கும் கற்றுக்கொடுக்கவில்லை. திரு பாலாஜி அவர்களின் கருத்தும் இந்த விஷயத்தில் தவறு.

  12. திரு.அரவிந்தன் நீலகண்டன், முரளி மனோகர் ஜோஷி குறித்து எழுதிய மறுமொழியைக் கண்டு அதிர்ந்தேன். திரு.ஜோஷிக்கு ஆதரவாக அரவிந்தன் முன்வைக்கும்
    வாதங்கள் மூன்று.
    (1) ஏற்கெனவே மதுரை காமராஜர் பல்கலைகழகம் போன்றவற்றில் ஜோதிட படிப்பு இருந்தது என்பது முதல் வாதம். ஒரு கல்வி அமைச்சராக, திரு.ஜோஷி,
    அப்பல்கலைக் கழக துணை வேந்தர்களுடன் பேசி இப்பாடத்திட்டங்கள் அறிவியலுக்கு முரணானவை. ஆகவே விலக்கி விடுங்கள் என்று நிர்வாக முறைகளில்
    சரி செய்திருக்க வேண்டும். இது போன்ற வேலைகளை செய்வதற்குத்தான் கல்வி மந்திரி. ஏற்கெனவே இருந்தது என்று தப்பிப்பதற்கு அல்ல.

    (2) யூஜிசிதான் முடிவெடுத்தது என்று கூறுவது அதை விட மோசம். சி.பி.ஐ அரசுக்கு கீழ்தான் இயங்குகிறது. ஆனால் சி.பி.ஐ எடுக்கும் முடிவுகளில் நாங்கள்
    தலையிடுவதில்லை என்பதுபோன்ற காமெடி இது. யூஜிசியின் தலைவரை நியமிப்பது கல்வி அமைச்சர்தான். தவறு நேர்ந்தால் சரி செய்வதுதான் அவர்
    வேலை.

    (3) நிதி பற்றாக்குறை என்பது எல்லாவற்றையும் விட மோசமான வாதம். நிதி வருவாய்க்காக ஜோதிட பாடத்திட்டத்தை புகுத்துவது சரியென்றால், நம்
    ஏர்வாடி தர்கா க்ரூப் “பேயடிச்சிடுச்சாம்-விலகிடுச்சாம்” பாடத்திட்டத்தையும், அற்புத சுகமளிக்கும் கூட்டத்தினர் “செவிடர்கள் பேசுகிறார்கள்-ஊமைகள்
    கேட்கிறார்கள்” பாடத்திட்டத்தையும் பல்கலைக்கழகங்கள் துவக்கலாம். இவற்றை நம்புபவர்களும் கோடிக்கணக்கில் இருக்கத்தானே செய்கிறார்கள். அரசு
    உதவியே கல்விக்கு தேவைப்படாது. நன்றாக கல்லா கட்டலாம்.

    மக்களின் பிடிவாத நம்பிக்கைகளை காரணம் காட்டி, சமூகத்தை பிற்போக்காகவே வைத்திருக்கும் முயற்சிகளை நாம் எதிர்க்கத்தான் வேண்டும்.
    திக்விஜய் சிங்காக இருந்தால் என்ன, ஜோஷியாக இருந்தால் என்ன! சாமியார் கனவை நனவாக்க பொதுப்பணத்தை விரயம் செய்த சாமாஜ்வாதி மாநில
    அமைச்சர், காங்கிரஸ் மத்திய அமைச்சராக இருந்தால்தான் என்ன!
    ———————————————-
    திரு.அரவிந்தன் நீலகண்டன் தன் மறுமொழியில், திரு.ஜோஷி ஜோதிட பாடத்திட்டத்தை புகுத்தியது தானல்ல என்று இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த
    பேட்டியை சுட்டியிருந்தார். கூகுள் ஆண்டவரிடம் வேண்டி அந்த பேட்டியை படித்தேன்.
    https://indiatoday.intoday.in/story/in-the-ugc-i-am-nobody-murli-manohar-joshi/1/231176.html

    திரு.அரவிந்தன் கூறியது உண்மைதான். ஜோஷி தனக்கும் இந்த முடிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அத்தோடு
    நிற்கவில்லை. அறிவியலைக் குறித்து அவர் புரிதலை கவனியுங்கள்.

    ஆங்கிலத்தில் வருவது திரு.முரளி மனோகர் ஜோஷியின் பதில்கள். தமிழில் என் புரிதல்.

    As a minister, I don’t express my personal belief about this or that. Astrology is practised in the country by millions. Newspapers publish astrology columns. It finds a place on television. These are well-known facts.
    நான் ஜோதிடத்தைப் பற்றி எதுவும் கூற மாட்டேன். ஆனால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் ஜோதிடம் பார்க்கிறார்கள்.

    About whether astrology is a science – there is a big debate on whether scientism is science, whether science is free inquiry or whether it should be limited to the traditional methods of inquiry. Many renowned scientists are speaking the language of mysticism.
    Mysticismத்தின் மொழியில் விஞ்ஞானிகள் பேசுகிறார்களாம். அதுவும் பிரசித்தி பெற்ற! நம்பிட்டோம். ஆனால் எந்த Mysticism கிரேக்கமா? எகிப்தியமா? இந்தியாவா?
    Godless Particle என்று ஒரு விஞ்ஞானி கூறியதை, சுவாரஸியத்திற்காக God Particle என்று பத்திரிகைக்காரர்கள் எழுதிவிட்டால், அந்த விஞ்ஞானி Mysticismத்தை
    பற்றி பேசினார் என்று கூறி விடலாம்தானே!

    I strongly believe that the academic world should engage in a serious debate about what is science and what is not. We have to decide whether the reductionist approach is correct or the holistic approach is. I am a strong advocate of the holistic approach. As for astrology, it is for the astrologers to decide.
    எது அறிவியல் என்று இனி Debate செய்ய வேண்டுமா? ஜோஷி சார்! அறிவியல் உலகம் அந்நிலையைக் கடந்து வந்து மாமாங்கம் ஆகிவிட்டது. ஆங்கில
    மொழியில் இப்படி அப்படி என்று பேசி விளக்கிவிட்டால், எந்த ஒரு அறிவியல் துறையையும் கேள்வி கேட்டு விடலாம். ஜோதிடத்தைப் பற்றி
    ஜோதிடக்காரகள்தான் முடிவெடுக்க வேண்டும். சரிதான்!

    I have no knowledge of astrology. I am not competent to compare the various schools of astrology.
    இதுதான் Topclass Comedy. தாலி கட்டுவாங்க, முத ராத்திரி நடத்துவாங்க, புள்ள பெத்துப்பாங்க. ஆனா தாலின்னா என்னன்னு தெரியாது.

    I don’t know whether the (scientific) principles of force of attraction of heavenly bodies are applied in astrology. But may I ask you why then does the position of the moon affect the tides and even mould conditions of the human mind?
    கோள்களின் பாதையைக் கொண்டு ஜோதிடம் சொல்லப்படுவது இவருக்கு தெரியாதாம். நம்பிட்டோம். ஆனாலும் “மானே தேனே” போட்டுக்கற மாதிரி
    சந்திரனால் கடலலைகள் பாதிக்கப்படுகிறதுதானே! என்ன சொல்ல வரார் பாருங்க!

    (அதனால கோள்களினாலும் பூமியும், அதில் வாழும் மனிதர்களும் பாதிக்கப்படுவார்கள்தானே!) இத ஜோஷி சொல்லல. நான் புரிஞ்சுக்கறேன்.

    அடுத்த கேள்வி பதிலை கவனியுங்கள்.
    Q. Maybe because the moon is nearer than the astrologically important planets like Jupiter or Saturn.
    A. Perhaps, but let me say again that I don’t know whether astrologers follow the principles of physics.
    பார்ட்டி எஸ்கேப்.

    Many doctors, engineers and bureaucrats attend the courses on astrology run by the Bharatiya Vidya Bhavan.
    படிக்கறது அவங்க உரிமை. நம்பாத எங்க தலைல ஏன் கட்டறீங்க?

    Their philosophy of Marxism has completely failed in today’s world. But isn’t Marxism still taught in the universities? Has anyone objected to its being taught? Why should astrology be discarded because some Marxists think it is fake? Some say that stem cell research is unethical. Is that the reason why we should stop it? Some say sex should not be discussed in a public forum. Has it prevented us from introducing sex education in schools?
    இதுதான் Ultimate Attack.
    மார்க்ஸியம் தோற்று விட்டது. ஆனாலும் படிக்கிறோமே!
    பாலியல் கல்வி வேண்டாம் என்று கூட சிலர் எதிர்க்கிறார்கள். நாம் சொல்லித்தானே கொடுக்கிறோம்.
    Stem Cell மருத்துவத்தை சிலர் எதிர்க்கிறார்கள். நாம் ஆராய்ச்சியை செய்கிறோம்தானே!
    இது சூப்பர். Selective Amnesia மாதிரி, Selectiveஆக சில அறிவியல் துறைகளை, நமக்கு சங்கடமில்லாத துறைகளை ஆதரித்து விட வேண்டும். ஏனெனில்
    அப்பொழுதுதானே, அறிவியல் ஆதரவாளன் என்று பீற்றிக் கொள்ளலாம்.

    Vedic astrology, as I understand it, is based on information provided by the scholars of the Vedic times.
    வேத காலத்தில் இருந்தவர்களிடம் தொலை நோக்கி இருந்திருக்காது. Big Bang Theory குறித்து புரிந்திருக்காது. அவர்கள் கூறியது அக்காலத்தினருக்கு, நமக்கு
    அல்ல.

    இப்படி பேசுவோம்னு ஜோஷிக்கு தெரியும். ஆகவே இன்னொரு “மானே தேனே”
    Vedic astrology is the oldest system of astrology. But that does not mean that Vedic astrology should not take into the account the recent developments in astronomy, cosmology, and so on.
    எப்படி? கோள்களெல்லாம் தூரமாக சென்று கொண்டே இருக்கின்றன என்று கூறும் நவீன அறிவியல். அதனால் ஒரு Formulaவை கண்டுபிடித்து, அதன்
    புவியின் உயிர்கள் மீதான பாதிப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

    Q. Is it a fact that the UGC has recently passed another proposal for a science degree in Human Consciousness which has a large section devoted to the yogic sciences?
    A. I am not at all involved in the affairs of the UGC, as I told you earlier. But yogic sciences are taught all over the western world, as far as I know.
    இன்னொரு “மானே தேனே”! இதுதான் அரசியல்வாதிகளின் வித்தை. Human Consciousness குறித்து அறிவியல் படிப்பையும், அதில் யோக அறிவியலையும்
    சேர்க்கும் திட்டத்தைக் குறித்து கேட்டால், மேற்கத்திய நாடுகளிலேயே படிப்பிக்கிறார்களே! நாம் ஏன் படிப்பிக்கக் கூடாது என்று கௌண்டர்.

    கடைசியாக இப்பேட்டியிலிருந்து நான் புரிந்து கொள்வது.
    (1)அரவிந்தன் நீலகண்டனுக்கு என் நன்றிகள் பல. இப்படிப்பட்ட புல்லரிக்கும் அறிவியல் உண்மைகளை தன்னகத்தே கொண்டு, இந்திய கல்வித்துறையில்
    அரிய மாற்றங்கள் செய்த/செய்ய விரும்பிய ஜோஷியைக் குறித்து முழுவதுமாக அறிந்து கொண்டேன்.

    (2) கொஞ்சம் கூட எனக்கு சந்தேகம் இல்லை. ஜோதிட பாடத்தை இவர்தான் துவக்கியிருப்பார்.

    (3) நான் திரு.மோடிக்குத்தான் ஓட்டளிக்க இருக்கிறேன். மறுபடியும் திரு.ஜோஷி கல்வி மந்திரியாக வந்து மேலும் பல அறிவியல் சாதனைகளை புரிந்து
    இந்திய கல்வித்துறையை நாறடித்து, அடுத்த தலைமுறையை மழுங்கடித்து விடுவார். 5 வருடம் இருந்தா 30 வருட இந்திய அறிவியல் முன்னேற்றம்
    ஃபணால்.

    அவ்வபோது சரியான அறிவியலும் வரும்.

    மங்கள்யான் வரும். கூடவே ஜோதிடமும்.
    அணுசக்தித் துறையில் முன்னேற்றம் வரும். கூடவே அணுவை விட சிறிய துகள்களைக் குறித்து ஆராயும் Particle Physics, Quantum Physics ஆகியவை நடராஜ
    நடன தத்துவம்தான் என்று சிலர் (விஞ்ஞானிகள்) கூறுகிறார்கள். ஆகவே அதற்கான பாடத்திட்டம் வரும்.
    நவீன மருத்துவத்தில் முன்னேற்றங்கள் வரும். கூடவே இந்திய மருத்துவத்தில் அனைத்து நவீன நோய்களுக்கான நிவாரணம் கிடைக்கும் என்ற அறிவியலும்
    வரும்! (ங்கே!)

    இப்படி “மானே தேனே” போட்டுக்க உண்மையான அறிவியலும், முட்டாள்களுக்கும், ஆட்டு மந்தைகளுக்குமான பழம்பெருமை பித்தலாட்டங்களும் வரும்.

  13. பாலாஜி இந்த கட்டுரை ஜோதிடத்தை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்தது அல்ல. நீங்கள் ஒரு கேள்வி கேட்டீர்கள் அதற்கான அடிப்படை தரவுகளை தந்தேன். இன்றைக்கு அரசில் இருப்பது ஜோதிடம் ஒரு அறிவியல் அதை பாடதிட்டமாக்க வேண்டும் என்று கூறிய திக்விஜய்சிங்தான். யுஜிசியில் சில பல்கலைக்கழகங்கள் ஜோதிடத்தை பாடதிட்டமாக வைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது ஜோஷி வருவதற்கு முன்னரும் நடந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே மதுரை காமராசர் பல்கலைக்கழக எடுத்துக்காட்டை கூறினேன். இந்த எளிய உதாரணத்தை கூட புரிந்து கொள்ள தங்களால் முடியவில்லை. மார்க்ஸியம் நிச்சயமாக போலி அறிவியல் , ஜோதிடத்தை போலவே என அறிவியல் தத்துவ கோட்பாட்டாளரான கார்ல் பாப்பர் கூறியது பிரசித்தம். எனவே ஜோஷி மார்க்ஸியத்தை குறிப்பிட்டது சரியான வாதமே. தன்னுணர்வு ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடக்கின்றன. அதில் இந்திய பண்பாட்டு ஞான மரபு சார்ந்து இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு அதிக ஆராய்ச்சி சாத்தியங்கள் நிச்சயமாக உள்ளன. இதில் என்ன பிரச்சனை உள்ளதென்பது தெரியவில்லை. ஜோதிடத்தை அறிவியல் ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் அல்லாது உளவியல் சிகிட்சை பார்வையில் அணுகும் பார்வையும் உளவியலில் உண்டு. கார்ல் யுங், ஸ்தனிஸ்தலாஸ் க்ரொப் ஆகியோரது அணுகு முறைகள் உதாரணம். இவற்றையெல்லாம் புறந்தள்ளி விடலாம். மேலும் எந்த விஞ்ஞானியும் அணுத்துகள்களின் இயக்கமோ க்வாண்டம் இயற்பியலோ ‘ நடராஜ
    நடன தத்துவம்தான்’ என கூறவில்லை. ப்ரிட்ஜாஃப் கேப்ராவோ அல்லது இலியா ப்ரோகைனோ கூறுவது முழுக்க முழுக்க வேறு தளத்தில். மற்றபடி இந்த கட்டுரைக்கு தொடர்பாக ஏதாவது இருந்தால் பேசுங்கள். இல்லையேல் உங்கள் இந்து – இந்திய பண்பாட்டுக்கு எதிரான வெறுப்பை மட்டுமே கொட்டிக் கொண்டிருக்கலாம். அத்தகைய மூடத்தனமான கூச்சலுக்கு எவ்வித எதிர்வினையும் இல்லை வந்தனங்கள்.

  14. திரு ஆர் பாலாஜி அவர்கள் விஸ்வரூபம் பற்றிய கட்டுரைக்கு ஒரு மறுமொழியில்,

    “நம் ஆசாரவாதிகள் கூட வேத மந்திரங்களை காற்றிலிருந்து நம் ரிஷிகள்
    பிடித்தார்கள் என்று கூறுவார்கள்”

    என்று கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது. இதிலிருந்தே தெரிகிறது இவரது இந்திய-இந்து பண்பாட்டுக்கு எதிரான வெறுப்பு.

    நமது இந்து பண்பாடு பற்றிய சரியான அறிவின்றி நம்மேலேயே நமக்கு உள்ள தாழ்வு மனப்பான்மையாலேயே விளையும் நிலை இது. ஒன்றை விமர்சிக்க வேண்டுமென்றால் அது பற்றி ஒழுங்காகப் படித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது தாறுமாறாக உளறாமல் சும்மா கிடக்க வேண்டும். இல்லையென்றால் அறிவாளிகளின் நகைப்புக்குப் பாத்திரமாக வேண்டியது தான்.

    ‘டொக்கு கிராமம் ஒன்றில்’ இருந்துக் கொண்டு அமெரிக்கக் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு தருபவர்கள் ஒருவேளை ப.ஜ.க. கட்சியும் அமெரிக்கக் குடியரசுக் கட்சியும் ஒன்று என்று நினைத்துவிடுவார்கள் போலும்!

  15. Mr Balaji,
    From your outbursts against Mr AN, it makes one to think that you must be a scholar and must be well versed in Indian Astrology to declare it as non scientific. If not,I expect one to keep quiet about a subject one is hardly familiar with.
    It will be interesting if you could provide evidence that Astrology is NOT scientific. I have a problem though with the very word “Modern science”. It seems to be changing daily!! And mind you, the present day science is based on Western Universalism (a term coined by Mr Rajiv Malhotra Ji) Mr Balaji Sir,I urge you to read his book ” Being different”.
    The problem with some Indians is this inferiority complex.Whatever the White man vomits out as science, these Indians will swallow it without any question. What is science today normally turns out to be BS the following day. Being a Western trained Doctor,I can confidently declare about my field,the” Medical Science”, the pinnacle of Western wisdom, being as scientific as “Pakistan being peace loving nation” or ” Mr Balaji being a lover of Indian values and tradition”.

  16. ஸ்ரீ கந்தர்வன் மிகச்சரியாக மொழிந்திருக்கிறார் ஆர் பாலாஜியை சரியாக அடையாளப்படுத்தியிருக்கிறார்
    “நம் ஆசாரவாதிகள் கூட வேத மந்திரங்களை காற்றிலிருந்து நம் ரிஷிகள்
    பிடித்தார்கள் என்று கூறுவார்கள்”
    என்று கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது. இதிலிருந்தே தெரிகிறது இவரது இந்திய-இந்து பண்பாட்டுக்கு எதிரான வெறுப்பு.
    ஸ்ரீ அ நீ அவர்களும் அழகாக சொல்லிவிட்டார்
    “உங்கள் இந்து – இந்திய பண்பாட்டுக்கு எதிரான வெறுப்பை மட்டுமே கொட்டிக் கொண்டிருக்கலாம்”.
    ஆர் பாலாஜி மேற்கத்திய மாயையிலிருப்பவர். இந்தியா ஹிந்து ஆகியவற்றைப்பெயரளவில் மட்டும் ஏற்றுக்கொண்டு ஒரு அடையாளமாக மட்டும் வைத்துக்கொண்டு அதை மேற்கத்தியவயமாக்கும் போக்கு மட்டுமே அவரது கருத்துக்களிலும் கட்டுரைகளிலும் காணப்படுகிறது.
    நமக்கு இன்றைக்குத்தேவைப்படுவது நமது பாரம்பரியங்கள், தத்துவங்கள், ஆகியவற்றை ஆழ்ந்து உணர்ந்துகொள்வது அவற்றை நிகழ்கால சிக்கல்களுக்குத்தீர்வுகாணப்பயன்படுத்துதலே. மேற்கிலிருந்துக்கற்றுக்கொள்வதில் தவறில்லை. மேற்கத்தியவயமாய் மாறி நம்மை இழந்துவிடுதல் தான் தவறு. நம்முடைய நோக்கில் மேற்கிலிருந்து கற்கவேண்டியதைகற்று விலக்கவேண்டியதைதூர விலக்கவேண்டும்.

  17. ஏதாவது ஜோதிடப் புத்தகத்தில் உங்களுக்குத் தேர்ச்சி இருக்கிறதா நண்பர் பாலாஜி அவர்களே! ஜோஷியின் பேச்சை நக்கலடித்த நீங்கள் நேரடியாக புலிப்பாணி ஜோதிடரின் பாடல்களையே நக்கலடித்திருந்தால் நீங்கள் அறிவார்ந்த விஷயங்களைப் பேசுபவர் என்று நம்பலாம். மாறாக ஒரு விஷயத்தை முற்றிலுமாய் நிராகரிக்கும் மனப்போக்கு உள்ள உங்களுக்கு, அதை பற்றி ஆழ்ந்து படித்து அலசிப்பார்த்து முடிவுக்கு வராமல், அதை நம்புபவர்களை குறை கூற எந்த தகுதியும் இல்லை. நிச்சயமாக இல்லை.

    ஒரு விஷயத்தின் மீது எந்த அறிவுமே இல்லாமல் அதை நிராகரிப்பது தவறு. அதையும் மற்றவர்களாவது தெரிந்து கொள்ளலாமென்பதை இழித்துப் பேசுவது மிகவும் தவறு.

  18. அன்புள்ள பாலாஜி,

    அம்மா திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் வலைத்தளத்தில் ஜோதிடத்தைப்பற்றி சுமார் 300 கட்டுரைகள் உள்ளன. அவற்றை தாங்கள் முழுவதும் படித்துவிட்டு, அதன் பிறகே ஜோதிடம் பற்றி கருத்து தெரிவிப்பது முறையாக இருக்கும் என்று நம்புகிறேன். அவற்றைப் படித்தால் நிச்சயம் தங்கள் புரிதல் மாறும்.

  19. அறிவியல் என்றால் என்ன என்று தெரியாமல், அனைவரும் பாலாஜியை ஜோதிடம் பற்றி தெரியாமல் பேசக்கூடாது என்று சொல்லகூடாது. எனக்கும் ஜோதிடம் பற்றி முழுவதும் தெரியாது, ஆனால் அதற்கும் அறிவியலுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்று தெரியும். எந்த ஒரு கருத்தையும் பல முறை சோதித்தப்பின்தான், அறிவியல் என்று அதை கூற முடியும். அது எங்கேயும், எவ்விடத்திலேயும், யாருக்கும் சரியாக இருத்தல் கட்டாயம். ஜோடிதம் உண்மையாக, அறிவியலாக இருந்தால் ஏன் அதை நம்மால் பயன்படுத்த முடிவதில்லை. ஒரு நாளில் ஒரே ஊரில் பிறந்த இரு வேறு மனிதர்களின் வாழ்க்கை ஏன் மாறுபடுகின்றது? உளவியல் ரீதியாக அணுக வேண்டுமெனில், ஜோடிதம் என்றால் என்ன? அதை எவ்வாறு கற்க வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று சொல்லித்தருவது அவசியமா? பேய் ஒட்டுதலையும், உளவியல் ரீதியாக அணுகலாம். ‘பேய் ஓட்டப்படுகிறவர்களின் மனநிலை என்ன? அவர்கள் உளவியல் மாற்றங்கள் என்ன?’ என்று அணுகுவீர்களா? அல்லது ‘பேய் ஓட்டுவது எப்படி?’ எப்படிப்பட்ட பேய்களை எப்படி ஓட்ட வேண்டும்?’ என்று அணுகுவீர்களா? இதை உளவியல் பயின்றவர்கள் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது இந்த கட்டுரை சம்பந்தமாக இல்லாததால், இதை இத்துடனே விட்டு விடுகிறேன், இல்லையெனில் என்னையும் திரு அரவிந்தன் அவர்கள் ‘வெறுப்பை மட்டும்’ கொட்டிக்கொண்டிருன்கிறேன் என்று கூறி விடுவார். அரவிந்தன் அவர்களே, நானோ பாலாஜியோ அல்லது மற்றவர்களோ தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல, எனவே நீங்கள் தயவு கூர்ந்து வாசகர்களின் கருத்திற்கு பதில் மட்டும் அளிக்கவும், உங்களின் சொல்லாடலால் ‘இந்துத்துவ எதிர்ப்பை கொட்டுபவர்’ என்று கூறுவது நாகரீகமா? உங்களின் இந்த பதிப்பில், பல முறை மார்சிசத்தை தாக்கி உள்ளீர்கள் அதனால் ‘மார்க்சிச எதிர்ப்பை கொட்டுபவர்’ என்று உங்களை சாடுவது நாகரீகம் அல்லவே. இந்து மதத்தின் பெயரால் தமிழர்கள் வாழ்க்கை முறை மாற்றப்பட்டதும் (தமிழ் கடவுள்களே சிறு தெய்வங்கள் ஆனது முதல்), வந்தேறிகளினால் நம்மை நாமே மட்டமாக என்ன வைத்ததும் தான் நமக்கு கிடைத்த பரிசுகள். அதனின் தொடர்ச்சிதான் நாம் வெள்ளையனை உயர்வாகவும் நம்மை தாழ்வாகவும் பார்க்க தொடங்கியது. இதை கூறும் பகுத்தறிவாளர்களை ‘பக்திமான் கண்டுபிடிச்சது விபூதி பாக்கெட் விஞ்ஞானி கண்டுபிடிச்சதோ ராக்கெட்’ என்று கொச்சை படுத்துதல் முறையா? இந்துத்துவத்தை பாராட்டும் பலர் இதைவிட பல முட்டாள்தனமான கருத்துக்களை கொண்டிருப்பதை நாம் தினமும் பார்க்கலாம், எனவே அதை கூறி இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லாம் முட்டாள் என்று கூறிவிட முடியுமா? உங்கள் தனிநபர் நம்பிக்கையாகவே இருந்தாலும், உங்களுக்கு ஜோடிதத்தில் நம்பிக்கை உள்ளதா? என்று கூறுவது இந்தப்பதிப்பை படிக்கும் என்னை போல் பலருக்கும் உதவியாக இருக்கும். (உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது என் கருத்து ஆனால் பலர் நீங்கள் நம்புவதாக நம்பி, பல கமெண்ட்களை இட்டுள்ளர்கள்).

  20. One friend says he would sung : “ARAM PADIIERUPPEN”.
    The same SriKumar became Congress Hand and accused Modi which was set right by Supreme Court. This person should face the verdict. The Dhrma is a bit slow but sure he will face the music in 2014. He should be jailed and tortured as he did to Namai Narayanan.

    Thanks to writer for bringing out facts details etc.
    rajan
    Kuwait

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *