ஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க!

மீபத்தில் ஒரு ஆங்கில செய்தி ஊடகம் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிய ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. கருத்துக் கணிப்பு வல்லுனர்கள் பலர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி மாலை தொடங்கி சரியாக இரவு 9 மணிக்கு அகில இந்திய அளவில் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தெந்த கூட்டணி, எத்தனை இடங்கள் பெறும் என்பதை உத்தேசமாக வெளியிட்டது. அந்த முடிவின்படி காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய கூட்டணி 117 இடங்களை மட்டுமே பெறும் என்றும் பா.ஜ.க.கூட்டணி 186 இடங்களைக் கைப்பற்றுமென்றும், இவ்விரு அணிகளையும் சேராத உதிரி மற்றும் பிராந்தியக் கட்சிகள் சுமார் 230 இடங்களுக்கு மேல் கைப்பற்றுமென்றும் அறிவித்தார்கள்.

தங்களுக்குச் சாதகமாக இருந்தால் அதைப் பெருந்தன்மையோடு முகத்தில் புன்னகை காட்டி ஏற்றுக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பங்கேற்போர், இந்த முறை முகத்தில் எள்ளும் கொள்ளூம் வெடிக்க இதெல்லாம் உங்கள் உள்மனத்தின் ஆசையென்றெல்லாம் பேசி முடிவை நிராகரித்தனர். பீகாரில் நிதிஷ்குமாரின் கட்சி பெருந்தோல்வியைச் சந்திக்கும் என்று ஆரூடம் சொன்ன அந்த ஊடகம், சிறை சென்ற லாலு பிரசாத்தின் கட்சி பெருவெற்றி பெறுமென்றும், அடுத்து பா.ஜ.கவும், மூன்றாவதாகத்தான் நிதிஷின் கட்சி வருமென்றும் தெரிவித்தார்கள். நிதீஷ்குமார் சொன்னார், இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் பொழுது போக்க வேண்டுமானால் சரியாக இருக்கும், முடிவுகளின் நம்பகத்தன்மையைப் பொருத்து அல்ல என்றார். இதெல்லாம் கொள்ளு என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றதும் வாயை இறுக மூடிக் கொள்ளும் மனோநிலை.

rahul-up-1இந்த சூழ்நிலையில் தங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெரிதும் குறைந்து கொண்டு வருகிறது என்பதை உணர்ந்த காங்கிரஸ், தங்களுக்கு வெறும் 117 இடங்கள் மட்டும்தான், இனி பதவிக்கு வந்து பவிஷு காட்ட முடியாது, 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்ற இன்னபிற ஊழல்களில் புகுந்து விளையாட முடியாது என்கிற ஆத்திரம், வெறுப்புணர்ச்சி, அவசர அவசரமாக கூடி ஆலோசித்திருக்க வேண்டும். இதில் அதி அற்புத மேதாவியான திக்விஜய்சிங், முகத்தில் மகிழ்ச்சிக் குறியை வைக்க பிரம்மன் மறந்துவிட்டானோ என்று திகைக்க வைக்கும் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி ஆகியோரும் கலந்து கொண்டிருக்க வேண்டும். இவர்கள் எல்லாம் சேர்ந்து கட்சியின் புதிய கதாநாயகன் அட்டைக் கத்தி வீரர், இளவரசர் ராகுல் காந்திக்கு என்ன கட்டளையிட்டார்களோ தெரியவில்லை தன் குதிரை மேல் ஏறி திக்விஜயம் செய்யத் தொடங்கிவிட்டார். போனதுதான் போனார் சும்மா போனாரா, தன் வீர தீர பிரதாபங்களை அடித்தொண்டையில் கத்தி, தானும் தன் தந்தை, பாட்டி போல வீரமரணம் அடைந்தாலும் கவலை இல்லை. ஆனால் பா.ஜ.க.தூண்டிவிடும் மதவாதத்தை எதிர்க்காமல் இருக்க முடியாது என்றெல்லாம் வீர பிரசங்கம் செய்யத் தொடங்கி விட்டார். இன்று அதுதான் எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தி. அடடா என்ன கண்டுபிடிப்பு. மனோகரா நாடகத்தில் மனோகரன் தன் தந்தைக்கு எதிராகக் கத்தியைத் தூக்கக்கூடாது என்று அன்னை கட்டளையிட்ட சூழ்நிலையில் ராஜசபையில் தூணோடு கட்டுண்ட நிலையில் கையறு நிலையில் உணர்ச்சிவசப்பட்டு கத்தியதாக வசனம் எழுதி வைத்தார்கள். அதே வசனத்தை காதல் காட்சியில் நடிக்கும் ஜெமினியும் சாவித்திரியும் காஷ்மீர் பனிப் பள்ளத்தாக்கில் பேசுவதாக அமைந்தால் நன்றாக இருக்குமா? அதைப் போலத்தான் இருக்கிறது இளம் சிங்கத்தின் ராஜஸ்தான் வீரவசனமும்.

ஐயா இளவரசரே, உங்கள் பாட்டியோ, உங்கள் தந்தையோ கொலை செய்யப்பட்டதற்கு இந்த நாடே கண்ணீர் விட்டு அழுதது. உங்களுக்குத் தெரியாது, பாவம், நீங்கள் அப்போது சின்ன பாப்பா. இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்த குற்றவாளிகள் யார் என்பதையெல்லாம் காவல்துறை, புனலாய்வுத் துறை இவை தூண்டித் துருவி கண்டுபிடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டு விட்டது. ஐயா இளவரசரே, திடீரென்று உங்களுக்கு ஒரு ஞானோதயம் ஏற்பட என்ன காரணம்? அவர்கள் வழியில் நீங்களும் பலியிடப்படலாம் என்கிற சந்தேகம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது. பாவம் உங்களுக்குப் பாடம் சொல்லி அனுப்பி வைத்தவர்கள் தம்பீ! இப்படியெல்லாம் சொல்லு; அப்போதுதான் ராஜஸ்தான் மாநிலப் பெண்கள் உங்கள் மீது அனுதாபம் வைத்து ஐயோ பாவம் குழந்தை இப்படிச் சொல்கிறதே என்று கண்ணீர் மல்க உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று சொன்னார்களோ?

‘கரிபி ஹடாவ்’ என்று வறுமையை இந்த நாட்டைவிட்டு ஓட்டோ ஓட்டு என்று ஓட்டிவிடுவேன் என்று பாட்டியும் தான் பறை சாற்றினார்கள். பாவம், அது ஓடவில்லை. உங்கள் தந்தை குறுகிய காலமே பிரதமராக இருந்தார், அவரை யாரும் இந்தியாவில் வெறுத்ததாகத் தெரியவில்லை. அவர் கொலையுண்டது வெளிநாட்டுச் சக்திகளால் என்பதை ஊரே அறிந்திருக்கும் நிலைமையில், அது என்னவோ பா.ஜ.க. எனும் கட்சி மதவெறியைத் தூண்டி அதனால் நாடு முழுவதும் ஒரே கொலைக்களம் ஆகிவிடுவதைப் போலவும், உங்களையும் யாரோ, கத்தி, கபடா இவைகளைத் தூக்கிக் கொண்டு துரத்துவது போலவும், அதில் நான் கொலையுண்டாலும் கவலைப் படமாட்டேன் என்றெல்லாம் வீரவசனம் பேசிக் கொண்டே ஓட வேண்டிய அவசியம் என்ன தம்பி. கொஞ்சம் யோசிங்க. இந்தத் தேர்தல் உங்கள் கொள்ளுத் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, நீங்கள் உங்கள் அக்கா, அவர் புருஷன், அவர்கள் குழந்தை இவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல தம்பி. ஒன்று தெரியுமா நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் வங்காளதேசப் பகுதிகளையும் உள்ளடக்கிய இந்தியாவின் ஜனத்தொகை முப்பதே கோடி. இன்று அவ்விரு நாடுகளும் பிரிந்து போன பின்பு இந்தியாவில் மட்டும் 125 கோடிகள். அந்த அளவுக்கு இங்கே பிரச்சினைகள் தலைவிரித்து ஆடுகின்றன. தம்பி! தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பள்ளிக்கூட மானவனைப் போல கையையும், காலையும் ஆட்டிக் கொண்டு அடித்தொண்டையில் யாருக்குத் தம்பி சவால் விடுகிறீர்கள். உங்கள் அம்மாவும், அவர் கைகாட்டிய திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் மனமோகன சிங்கரும் ஏனைய தொண்டர்களும் ஆட்சி புரியும் தேசத்தில் பா.ஜ.க. எங்கோ மத ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகவும், மதவெறியைத் தூண்டுவதாகவும் கர்ஜனை புரிந்திருக்கிறீர்களே தம்பி. நேற்றிரவு ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டீங்களா? அப்படியானால் கொஞ்சம் எதிரிகள் நடந்த காலடி மண்ணை எடுத்துச் சுற்றிப் போடச் சொல்லுங்கள். பயம் தீரும்.

rahul3தம்பி! இது என்னவோ பள்ளிக்கூடத்து நாடகம் இல்லை. இது ஒரு பெரிய நாட்டின் வரலாற்று நிகழ்வு. இந்த அரசியலில் வெற்றி, தோல்வி, நாட்டின் முன்னேற்றம், எதிர்கால திட்டங்கள் இவை அனைத்துமே உள்ளடங்கியிருக்கின்றன. உங்கள் மீது ஒருவிதமான அனுதாபத்தை உண்டுபண்ணி, ஏழை எளிய, அறியாத மக்களின் வாக்குகளை நாடகமாடி கவர்ந்து விட எண்ணமென்றால், சற்று சாவகாசமாக உட்கார்ந்து யோசனை செய்து பாருங்கள் தம்பி. அரசியல் எத்தனை சிக்கல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஏதோ அவசர கோலத்தில் அள்ளித் தெளித்துவிடும் விளையாட்டு அல்ல.

பெரிய பதவிக்கு ஆசைப் படுகிறீர்கள். ஆசை மட்டும் இருந்தால் போதுமா, அந்த ஆசைக்கேற்ப உங்கள் மனோ பாவத்தை, எதிர்காலத் திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள். நிதான புத்தியை உபயோகப் படுத்தி, நாட்டுக்குத் தேவை நல்லாட்சி, நல்ல தலைமை, திறமையான அமைச்சர்கள் என்று சிந்தியுங்கள். உங்கள் அப்பா அப்படித்தான் அரசியலை அணுகினார். தொலைத் தொடர்புத் துறையின் அசுர வளர்ச்சிக்கு அவரே காரணமாக இருந்தார். உங்களைப் போல அதிர்ந்து பேசிக் கொண்டோ, அபாண்டமாக எதிரிகள் மீது பொய்யான புகார்களைச் சொல்லி நாடகமாடியோ நடந்து கொள்ளவில்லை. அவரை உங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே. மனோகரா நாடக வசனம் பேசினால் நாடகம் வேண்டுமானால் நன்றாக இருக்கும், நடைமுறைக்கு அது செல்லுபடியாகுமா என்று சற்று யோசியுங்கள் அல்லது புத்திமான் யாரிடமாவது சென்று ஆலோசனை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள். வீரவசனம் பேசி, உரத்த குரலில் தன்னையும் கொலை செய்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றெல்லாம் பேசினால் மக்கள் சிரிக்கிறார்கள் தம்பி. ஆகையால் கூட்டத்தில் பேச வேகமும், வீரப்பும் மட்டும் போதாது, சற்று விவேகமும் வேண்டும், உண்மைகளைத் தெளிதல் வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

பா.ஜ.க. கொலைவெறியைத் தூண்டுகிறது என்று வாய் கூசாமல் சொன்ன நீங்கள் பாவம் என்ன செய்வீர்கள். நீங்கள் குழந்தை அப்போது, டெல்லி மாநகர் தெருக்களில் சீக்கியர்கள் ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட போது அத்தனை ஆயிரம் சீக்கியர்களின் உறவுகளும் மேடையேறி, அன்று காங்கிரசார் எங்களைத் துரத்தித் துரத்திக் கொன்றபோது ஆத்திரப் பட்டோம். அப்புறம் ஆத்திரம் அடங்கியது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று காத்திருந்தோம். அவர்கள் குற்றமற்றவர்கள் என்று வெளியே உலவுகிறார்களே, அந்தோ என்ன செய்வோம், இனியும் இந்த நாடகத்தைக் காசு கொடுத்து பார்க்க மாட்டோம், கடை விரித்தது போதும் அண்ணே, ஊருக்குப் போங்க என்று உங்கள் வண்ட வாளங்களையெல்லாம் ஊர் ஊராகப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்களா? உங்களையெல்லாம் மூட்டை முடிச்சோடு வண்டி ஏற்றிவிட மக்கள் தயாராகி விட்டார்கள். பாவம், வீட்டுக்குப் போய், உங்கள் அம்மா, அக்கா குடும்பத்தாருக்கு நல்ல நாடகமாகப் போட்டு நடித்துக் காண்பியுங்கள். அவர்களாவது மனம் மகிழ்ந்து இருக்கட்டும். இந்த நாடும் ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விடும்.

அந்தக் காலத்தில் கொத்தமங்கலம் சுப்பு ஒரு கவிதை எழுதினார். அந்தக் கவிதை “யுத்தம் முடிஞ்சு போச்சு தம்பி ஊருக்கு வாங்க” என்று தொடங்கும். அதே கவிதை வரிகளில் உங்களுக்கு ஒரு கவிதை இதோ: “உங்க ஊழல் எல்லாம் தெரிஞ்சு போச்சு வீட்டுக்குப் போங்க, பொய்யைச் சொல்லி ஊர் ஊரா அலைய வேணாங்க.” என்ற இந்த வரிகளை உங்களுக்குச் சமர்ப்பித்து கைகூப்பி வேண்டி ஐயா காங்கிரசின் ஊழல்கள் போதும், இனியும் எங்களை ஏமாற்றாதீர்கள் என்று பாமர மக்கள் எழுப்பும் ஓசையைக் கேளுங்கள் தம்பி! புண்ணியமாப் போகும்.

8 Replies to “ஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க!”

  1. ஊழல் நாற்றம் தாங்க முடியவில்லை என்று எவ்வளவு நேரம்தான் மூக்கை மூடிக் கொண்டிருப்பது. மூக்கை மூடிக் கொண்டே இருந்தால் மூச்சி திணறி சாக வேண்டியது தான் என்பதை நன்கு உணர்ந்து விட்ட மக்கள் ஊழல் நாற்றத்தை ஒழிக்க காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதே முதல் வேலை என்று தீர்கமான முடிவுக்கு வந்து விட்டனர்.

    லூசு பையன் திக்விஜய்சிங் “காவி படை என்பது தாலிபானின் இந்து வடிவமே” என்று உளறி உள்ளான். தன கிறிஸ்தவ எஜமானி இத்தாலிகாரி மனம் மகிழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தினம் தினம் தன மனம் போன போக்கில் பேசி வருகிறான். (1) தாலிபான்கள் பாக். ல் பெண் கல்வி கூடாது என்று “மலாலா” என்று சிறுமி மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இது அந்த லூசுக்கு தெரியாதா? (2) ஆப்கானில் Shamsia Husseini என்ற 17 வயது மாணவி முகம் மீது acid வீசினர். அது அந்த அரை கிறுக்கனுக்கு தெரியாதோ? (3) ராம்பூர் (UP ) காங்கிரஸ் MLA நவாப் காசிம் அலி என்பவன் “எந்த முஸ்லிம் பெண்ணும் 8 வது வகுப்பிற்கு மேல் படிக்கக் கூடாது” என்று diktats வெளியிட்டதை இந்த மறை கழண்டுபோன மடையனுக்கு தெரியாதா? (4) சௌதி
    அராபியாவில் கார் ஒட்டிய ஒரே பாவத்திற்காக 6 சௌதி பண்கள் ஒவ்வொருவரும் 80 டாலர் அபராதம் கட்டினர் என்ற விவரமாவது இந்த Mental case க்கு தெரியுமா? இந்துக்கள் மகளிர் கல்விக்கு தடை விதிக்கின்றனரா?

    முஸ்லிம்களை “தாஜா” செய்வதையே தொழிலாக கொண்ட கட்சி காங்கிரஸ். இதற்கு அஸ்திவாரம் போட்டது யார் தெரியுமா? தினம் ஒரு ரோஜா என்று தன button hole ல் சொருகிக் கொண்ட உத்தம “புருஷன்” நேருதான். தனது marriage invitation ஐ உருது மொழியில் அச்சிட்டார் என்றால் முஸ்லிம்களை “தாஜா” செய்வதில் பெரிய கில்லாடி தான். எல்லோரும் மனிதர்களே என்ற பரந்த மானப்பன்மை இருந்தால் சிறுபான்மை பெரும்பான்மை என்றுஒரு மதசார்பற்ற நாட்டில் மக்களை பிரிப்பதேன்? நேரு தனது 16 வருட பதவி காலத்தில் ஒவ்வொரு மாநில CM ம் 3 மாதங்களுகொருமுறை தங்கள் மாநிலங்களில் உயர் பதவிகளில் எத்தனை முஸ்லிம்களை அமர்த்தி உள்ளனர் என்று நேரு review செய்யும்போது பதில் சொல்ல வேண்டுமாம். முஸ்லிம்கள் மீது மட்டும் எவ்வளவு பாசம் நேசம் பார்த்தீர்களா?

    மதம் மாறிய (Christian convert ) கிறிஸ்தவ வெறியன் திக்விஜய்சிங்குக்கு எனது 3 கேள்விகள். (1) நற்செய்தி கூட்டங்களில் “ஸ்பெஷல் ஸ்தோத்திரம்” மூலம் ஊமைகளை பேச வைக்கமுடியும், குருடர்களை பார்க்கவைக்கமுடியும், செவிடர்களை கேட்கவைக்கமுடியும் என்று கிருத்துவர்கள் சொன்னால் அப்புறம் மருத்துவர்கள் எதற்கு? (2)பூமி ஒரு இடத்தில் நிலையாக உள்ளது.சூரியன் காலையில் தோன்றி மாலையில் மறைந்து ஓய்வு எடுக்கிறது என்று பைபிள் சொல்கிறது. பைபிள் கூறுவது உண்மை எனின் நீங்கள் கிருத்துவர்களா கிறுக்கர்களா? (3) ” உங்கள் முன்பாக என் சமூகம் செல்கிறது” என்ற இயேசு வசனம் முன்னால் எழுதப்பட்ட ஒரு மகிழுந்துவில் (Car )பயணம் செய்துகொண்டிருந்த 3 கிறிஸ்தவர்கள் எதிரே வந்த ஒரு சரக்குந்து (Lorry ) மீது மோதி 3 பேரும் பரமபிதாவின் பரலோகத்திற்கு சென்றனர். இந்த காருக்கு முன்னால் இயேசுவின் சமூகம் சென்றுருந்தால் ஒரு விபத்து நடக்கபோவதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்து அவர்களை காப்பாற்றி இருக்கலாமே அந்த ரட்சகர்.

    இந்த “திக்” போன்றே ஒரு மகா கிறிஸ்தவ வெறியன் AP CM ஆக இருந்தவன் SAMUEL Rajasekar Reddy . இவனது மகள் ஒரு பிராமின் (அணில் குமார்) ஒருவனை காதலித்து திருமணம் செய்து அவனை கிறிஸ்தவனாக மாற்றி இன்று அவன் evangelist ஆக உள்ளான். திருப்பதிய்ல் உள்ள 1000 கால் மண்டபத்தை இடிக்க மூல காரணம் இந்த ரெட்டி தான். திருப்பதிக்கு 2 மலைகளே சொந்தம் என்று GO போட்டவன் இவன்தான்.ஆனால் அதை AP கோர்ட் தள்ளுபடி செய்தது. “நல்ல மல்லா” என்ற forest லுள்ள மலை உச்சியில் வாடிகன் நகரத்தை போல உருவாக்க திட்டம் போட்டான். ஆனால் ஹெலிகாப்ட்டர் விபத்தில் புட்டுக்குனு பூட்டான். அந்த விபத்து நடந்த இடம் அதே மலை (ருத்ரகொண்டா) தான். தான் ஒரு secularist என்று மக்களை ஏமாற்ற அடிக்கடி திருப்பதி செல்வான். திருமலைக்கு அருகில் “அலிபரியில்” நக்சலைட்டுகள் சந்திரபாபு நாயடுவை தாக்கினர். அவர் உண்மையான இந்து தப்பித்துகொண்டார். திருப்பதி ஏழுமலையான் பிறந்த நாளான “திருவோணம்” நாளில்தான் அந்த ரெட்டி மாண்டு மடிந்தான். கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டான். இவன் ஆட்சியில் இருந்தபோது செய்த காரியங்களை கீழே பார்ப்போம். (1) 2008 – 09 ல் உருது அகாடமிக்கு 34 கோடி தந்தான் (நேரு உருது மொழி மீது கொண்ட காதலைப் போல) ஆனால் சமஸ்கிருத அகாடமிக்கு எதுவும் கிடையாது. (2) மதிய உணவு திட்டம் மத்ரசாகளுக்கு விஸ்தரிக்கபட்டது ஆனால் இந்துக்கள் நடத்தும் “சரஸ்வதி சிசு பள்ளி” களுக்கு கிடையாது. (3) முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு கொடுத்தான். (4) முஸ்லிம்கள் professional college ல் சேர் அனைத்து கட்டணங்களையும் அரசே செலுத்தியது. ஆனால் இந்துக்களுக்கு கிடையாது. (5) பெத்லஹெம் போக கிறிஸ்தவர்களுக்கு 20000 மானியம் தந்தான். (6) மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தான்…இப்படிப்பட்ட அப்பட்டமான கிறிஸ்தவ வெறியர்களின் (கே வி தாமஸ், A K அந்தோனி, அம்பிகா சோனி, அஜித் ஜோகி,, ஆஸ்கர் பெர்னாண்டஸ்,உமர் சாண்டி, ஜகதீஷ் டைட்லெர் பி.ஜெ. குரியென் மார்கரட் ஆல்வா et al ) துணை கொண்டுதான் இத்தாலி நாட்டு இறக்குமதி கத்தோலிக்க கிறிஸ்தவ மகாராணி ANTONIA Maino தர்பார் நடத்திகொண்டிருக்கிறார். அன்னை இந்திரா “Be Indian Buy Indian ” என்றார் ஆனால் அவரின் அருமை புதல்வனோ “Be Indian Buy Italian ” என்று மாற்றி விட்டார்.

    இந்துக்களுக்கு எதிரிகள் “3 M ” கள் ஆகும். அவை 1) Marxists 2) Muslims 3) Missionaries ஆகும். “”ஒரே இறை, ஒரே மறை”” என்று கொண்டுள்ள முஸ்லிம்கள் துனியா பூராவும் “ஒரே மதம்” என்ற ஒரு நிலையினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் செயல்படுகின்றனர்.இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா ஒரு முஸ்லிம் நாடாவது உறுதி ஆகி விட்டது. இப்போது சமீப காலமாக சீனாவிலும் முஸ்லிம்கள் தங்கள் “வேலையை” ஆரம்பித்துள்ளனர்.பத்திரிக்கைகளை படித்தால் இது தெரியும். சீனா ஒரு வழி யானால்தான் இங்கே உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு புத்தி வரும். இங்கே அடக்கி வாசிப்பார்கள்.

    பாட்னா குண்டு வெடிப்பு தீவிரவாதி ஐனுல் அன்சாரியின் தந்தை அதுல்லா அன்சாரி “தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு தேசத்திற்கு துரோகம் செய்த அவன் எனக்கு மகனே அல்ல. அவன் பிணத்தை நாங்கள் யாரும் வாங்க மாட்டோம்” என்று கூறிய அந்த தேசபகதரின் கால்களை கண்ணீரால் கழுவி சாஸ்டாங்கமாக விழ விரும்புகிறேன். Hats off to you , my blood brother ATHULLAH ANSAARI !

  2. காங்கிரஸ் தோல்வி அடைந்துவிடும் என்று மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

    அர்சியல் சூழ்ச்சிகளில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்தவர்கள்.அந்த சமயத்தில்
    மக்களின் கவனத்தை திசை திருப்ப எதனையும் செய்யும் கலை கைவரப் பெற்றவர்கள்.

    தஞ்சை கோபாலன்ஜி அவர்களின் எழுத்து நடை தேர்ந்த ஓர் அரசியல் விமர்சகரின் நடையைப் போல மெருகேறிவிட்டது. தேர்தல் முடியும் வரை அவரிடமிருந்து இது போல நிறைய எதிர்பார்க்கிறோம்.

  3. இன்றைய நிலையில் மோடி ஒரு மாபெரும் தலைவரா வளமாக வலம் வருகிறார். மோடி போல் மாபெரும் தலைவர்கள் பா.ஜெ.கட்சியில் பலர் உள்ளனர். இவர்கள் மோடிக்கு பக்க பலமாக உள்ளனர் என்பதனை நாடு அறியவேண்டும் . ராகுல் பிரதான்யம் கொடுத்து மோடி போன்றவர்கள் பதில் கொடுக்கவேண்டாம் இரண்டாம் நிலை தலைவர்கள் பதில் கூறினால் போதும்

  4. வணக்கம்
    நாட்டு மக்களின் மன ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் கட்டுரை. தமிழ் ஹிந்துவுக்கும் கட்டுரையாளருக்கும் ஒரு ராயல் சல்யூட்
    அன்புடன்
    நந்திதா

  5. தஞ்சை வெ. கோபாலன் அவர்களின் இந்த கட்டுரை ஒரு கிளாசிக். அவரது எழுத்துப் பணி & பாணி இரண்டுமே மிக சிறந்தவை. என்றும் தொடரட்டும்.

  6. Vedham Gopal’s article is more rhetoric than reason.Plitical discourse is always full of demogaugy and emotionall appeals.Americans also occasionally fall a prey to rheytoric as the tamilians have been doing for the last four decades.Rahul Gandhi is canvassing to cash on the feelings of sympathy while Modi is using the feelings of the injured majority.People like gopal should instead of
    ttacking the individual should expose the hollowness of the party and its misdeeds and inefficiency

  7. ஒரு நாட்டை தீவிரவாதம் ,எந்த அளவு கேடு செயும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் .ஆனால் அரசியல் தீவிரவாதம் ஒரு நாட்டை சுடு காடாக மாற்றும் என்பது உங்களுக்கு தெர்யும ? காமன் வெல்த் ஊழல் ,நிலக்கரி ஊழல் ,ஸ்பெக்டரம்ஊழல் ……..இன்னும் பல வகை ஊழல்தான் காங்கிரசின் சாதனையாக இருக்க முடியும் .ஆனால் இளவரசருக்கு இது எதுவுமே தெர்யாது என்பது வேடிக்கை . தெரியாது என்பதுதான் காங்கிரசில் நிறை பேருக்கு தெரியும் .நீங்கள் இனிமேல் களவு செய்ய நாட்டில் வேறு ஒன்றும் இல்லை ……..

  8. Thiruvengadam on November 6, 2013 at 6:05 am //People like gopal should instead of
    ttacking the individual should expose the hollowness of the party and its misdeeds and inefficiency//

    மரியாதைக்குரிய திருவேங்கடம் அவர்களுக்கு, ராகுல் காந்தி எனும் தனி நபரைத் தாக்கும் நோக்கம் எனக்கு இல்லை. ஒரு பெரிய கட்சியின் துணைத் தலைவர் என்கிற முறையில், “குடமுருட்டி குண்டு”* போன்ற புருடா கதைகளைச் சொல்லிக்கொண்டு, முன்பு அவர்கள் குடும்பத்தில் நடந்த கொலைகளைச் சொல்லி ராஜஸ்தான் மக்களின் அனுதாபத்தைப் பெற்று ஓட்டு வாங்கி வெற்றி பெற்று விடலாம் என்கிற குழந்தைத்தனமான நினைப்புக்கு ஆப்பு வைப்பதுதான் எனது நோக்கம். தவிர அவரை பெரிய தலைவராக மதித்து அவருக்குத் தனி கவுரவம் கொடுப்பது அல்ல என் எண்ணம். தலைவர்களாக பிறப்பவர் சிலர். தலைவர்களாக அனுபவத்தின் காரணமாக ஆகின்றவர்கள் சிலர், தலைவர்களாக நிர்பந்தத்தினால் திணிக்கப்படுபவர்கள் சிலர். இவர் கடைசி வகை. இவரோ, இவரது தாயோ, இந்த நாட்டைப் பற்றி, இந்த நாட்டின் வரலாற்றைப் பற்றி, மக்களைப் பற்றி எதுவும் தெரியாமல் நேரு குடும்பத்து வாரிசு எனும் ஒரே தகுதியில் நமக்கெல்லாம் பாடம் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மகாத்மா காந்தி இந்திய அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக இந்த நாடு முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு மக்களையும் அவர்களது தேவைகளையும் புரிந்து கொள் என்று கோபாலக்ருஷ்ண கோகலே சொன்ன அறிவுரைகளின்படி காந்தி மூன்றாம் வகுப்பில் ரயிலில் பயணம் செய்து மக்களைப் புரிந்து கொண்டு அரசியலுக்கு வந்தார். இவர்?……. போகட்டும், வேதம் கோபால் வேறு, நான் தஞ்சை வே.கோபாலன். நன்றி ஐயா. வணக்கம்.

    * குடமுருட்டி குண்டு = முன்பொருமுறை திருச்சி குடமுருட்டி பாலத்தருகில் கருப்பாக ஒரு பந்து அளவில் ஏதோ ஒரு பொருள் இருந்தது. அதை குண்டு என்று நினைத்து காவல் துறை கைப்பற்றியது. அந்த பாலத்தின் வழியாக கருணாநிதி போகவேண்டி இருந்தது. அவர் உடனே என்னைக் கொல்ல சதி, குடமுருட்டியில் வெடிகுண்டு வைத்து விட்டார்கள் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டார். கடைசியில் அது குண்டே அல்ல. வேறு ஏதோவொரு பொருள். மக்களுக்கு நல்ல தமாஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *