தேநீர் விற்றவன் தேச தலைவனா?

morning_hindutvaதேநீர் விற்றவருக்கு தேசத்தை குறித்து என்ன தெரியும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் நரேஷ் அக்ரவால் கூறியிருக்கிறார்.  பலருக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஒரு ஜனநாயக நாட்டில் பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவரை குறித்து இப்படி பேசுவதா? ஆனால் கொஞ்சம் யோசித்து பார்த்தால் புரியும்.  இந்திய நாட்டின் போலி மதச்சார்பின்மையின் ஒரு முக்கிய பார்வை இது. இன்று நேற்றல்ல 1914-க்கு பிறகே இந்திய அரசியலின் போக்கு இதுவாகத்தான் இருந்திருக்கிறது.

வரலாற்றை சிறிது பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயத்தை அவதானிக்கலாம். பால கங்காதர திலகர் சாதாரண பள்ளி ஆசிரியருக்கு பிறந்தவர். வறுமையிலிருந்து சிறிதே மீண்ட நடுத்தர குடும்பம். வீர சாவர்க்கர் பெற்றோர்களை இளம் வயதிலேயே இழந்து மூத்த சகோதரன் குடும்ப பொறுப்பை எடுத்து கொள்ள பொருளாதார ரீதியாக கடும் துன்பப்பட்டவர். புரட்சியாளர்களின் பிதாமகராக இருந்தவர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா. இவரும் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சொந்தமாக கடும் உழைப்பினால் முன்னேறி இந்திய இளைஞர்கள் இங்கிலாந்தில் தங்கி படிக்கவும் ஐரோப்பிய புரட்சியாளர்களுடன் கை கோர்த்து செயல்படவும் உதவித் தொகை வழங்கியவர். பாரதியாரின் கதையை சொல்லவே வேண்டாம். வ.உ.சிதம்பரத்தின் குடும்பம் அவரது சிறைவாசத்துக்கு பிறகு நடுத்தெருவுக்கே வந்துவிட்டது.  சுப்ரமணிய சிவாவின் வாழ்க்கையை குறித்து நாம் அனைவரும் மறந்துவிடவே ஆசைப்படுவோம். லாலா லஜ்பத் ராயின் தந்தை பஞ்சாபில் ஒரு பள்ளியில் உருது ஆசிரியர். டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வறுமையுடன் மட்டுமல்லாமல் ஆச்சாரவாதிகளின் சாதியத்தை எதிர்க்கும் தொடர் போராட்டமாக விளங்கியது.  டாக்டர் ஹெட்கேவார், குருஜி கோல்வல்கர் இவர்கள் அனைவருமே எளிய நடுத்தர குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சுருக்கமாக ஹிந்துத்துவத்தின் முக்கிய வேர்கள் என அறியப்படும் வரலாற்று நாயகர்கள் அனைவருமே எளிய நடுத்தர அல்லது அதற்கும் கீழிருந்து சமுதாயத்தில் போராடி மேலே வந்தவர்கள்.

இதனால் இவர்களின் ஒவ்வொரு தேசபக்த செயலும் இவர்களது குடும்பங்களை நடுத்தெருவுக்கே கொண்டு வந்தன. பாபாராவ் கணேஷ் சாவர்க்கர் வீர விநாயக தமோதர சாவர்க்கரின் சகோதரன். இவர் 1909 இல் கைது செய்யப்பட்டார். இவரது சொத்து -என்ன பெரிய சொத்து ! வீடும் தோட்டமும்- அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டது. இவரது மனைவி யசு கொட்டும் மழையில் வெளியில் அனுப்பப்பட்டார். அவருக்கு உதவி செய்யும் உற்றார் உறவினர்களுக்கும்  காவல்துறை கண்காணிக்கும் கடும் விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் மிரட்டல். இதன் விளைவாக ஒரு கட்டத்தில் இவர் சுடுகாடுகளில் வாழ்ந்தார். அங்கு கிடைக்கும் உணவுகளை உண்டு. இறுதியில் 1918 இல் இவர் அந்தமான் சென்ற தனது கணவரை காணாமலே இறந்தார்.

கண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்பதை அறிந்திடாமல் கனவுலகில் வாழ்கிறோம்.

ஆனால் காந்தி-நேரு இவர்களின் கதையே வேறு.

காந்தி, நேரு இருவருமே அட்டகாசமான  பணக்கார குடும்பங்களைச் சார்ந்தவர்கள். jnehru காந்தியின் தந்தை போர்பந்தர் சமஸ்தானத்தின் திவான். பணத்தில் கொழித்து புரண்ட குடும்பம். பின்னாட்களில் காந்தியின் எளிமை  கூட செல்வந்தர்களின் செழிப்புடன் தான் இருந்தன. நேருவின் குடும்பமும் இத்தகைய பெரும் நிலவுடமை பாரம்பரியம் கொண்டதே. மோதிலால் நேரு அன்றைய இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.  இவர்களின் தலைமை ஏற்பட்ட பிறகு காங்கிரஸில் மேலே வருவதென்பது சாதாரண இந்தியனுக்கான சாத்தியமாக இல்லாமல் ஆக்கப்பட்டது. ஒவ்வொரு பிராந்திய காங்கிரஸிலும் அங்கிருந்த பெரும் நிலச்சுவான்தார் குடும்பமே காங்கிரஸ் தலைவராகும் நிலை ஏற்பட்டது. காந்தி-நேரு தலைமையின் கீழ் சுப்ரமணிய சிவா அல்லது பாரதி போன்ற தலைவர்கள் உருவாகும் நிலைக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டது. காந்தி வருவதற்கு முன்னால் ஆங்காங்கே உள்ள பிராந்திய நிலைமைகள் குறித்த பெரும் போராட்ட இயக்கங்கள் உருவாகின. தூத்துகுடி கிளர்ச்சி அத்தகையதுதான். ஆனால் காந்தி-நேரு தலைமைக்கு பின்னர் அந்நிலை மாறியது. ‘High Command’ எனும் வார்த்தை காங்கிரஸ் அரசியல் அகராதியில் ஏறியது. மேல் தலைமை திட்டத்தை விவரித்து கொடுக்கும். அதை அப்படியே உள்ளூர் நிலவரங்களையெல்லாம் குறித்து கவலைப்படாமல் நிறைவேற்ற வேண்டியது அங்குள்ள தலைவர்களின் பொறுப்பு.

இதற்கான ஒரே முக்கிய விதிவிலக்கு காமராஜர். ஆனால் இறுதியில் அவரும் பெரும் குடும்ப வாரிசான இந்திராகாந்தியால் அவமானப்படுத்தப்பட்டு காங்கிரஸிலிருந்து விலகி மனவருத்தத்துடன் மறைந்தார். மற்றொருவர் லால் பகதூர் சாஸ்திரி. இவரும் காங்கிரஸின் பொது போக்கில் உருவானவர் அல்லர் விதிவிலக்கு என்றே கூறலாம். எளிய நிலையிலிருந்து மேலே வந்தவர்கள் அதிகார வட்டத்தின் எல்லைகளுக்கு அப்பால்தான் நிறுத்தி வைக்கப்பட்டனர். ஒன்று அவர்கள் பெரும் குடும்ப தலைவர்களுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் இல்லாவிடில் அரசியல் துறவறம் ஏற்கவேண்டும்.

சிறைவாசம் சுகவாசமானது.

திலகரின் சிறைவாசம் கொடூரமானது. அவரது உடல்நிலையை சிதறடித்தது. voc1வ.உ.சிதம்பரத்தின் சிறைவாசமும் அவ்வாறே. செக்கிழுப்பது, சாட்டையடி படுவது, வாழ்க்கையை என்றென்றைக்கும் நாசமாக்கும் மோசமான வியாதிகள் வரும் ஆரோக்கியமற்ற சூழலில் விலங்குகளை விட கீழாக நடத்தப்படுவது. சுப்ரமணிய சிவா பெருவியாதிக்கு ஆளானார். வீர சாவர்க்கரின் அந்தமான் சிறைவாசம் மிக கொடுமையானது. தேசபக்தியின் ஆரம்ப எழுத்தறிவும் இல்லாதவர்கள் அவர் பிரிட்டிஷாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாக சொல்கிறார்கள்.

ஆம். ஐயன்மீர். கலிலியோ கூட தம்மை சித்ரவதை செய்து சிறையிலிட காத்திருந்த கத்தோலிக்க புனித விசாரணையாளரிடம் பூமி சூரியனை சுற்றவில்லை சூரியன் தான் பூமியை சுற்றுகிறது. என் பொய்யான சித்தாந்தத்துக்காக மன்னிப்பு கோருகிறேன் என்றார். ஆனால் அதை வைத்து அல்ல அதற்கு பின்னரும் அவர் எப்படி செயல்பட்டார் என்பதை அல்லவா பார்க்க வேண்டும். அந்தமான் சிறை ஆவணங்கள் சொல்வதென்ன?

1911-13:  வீர சாவர்க்கருக்கு வழங்கப்பட்ட தண்டனைகளே தனித்தன்மை கொண்டவை. தனியறை சிறைவாசம் என்று உள ரீதியில் சித்திரவதை. கனத்த விலங்கிடப்பட்ட கரங்களால் தென்னை மட்டைகளை சிறுதுண்டுகளாக உடைத்தல் – ஆனால் இதற்கு உலோக கருவிகளை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு நாளும் காலை ஏழுமணி முதல் இரவு ஏழு மணிமுதல் செக்கிழுக்க வேண்டும். இடையில் இரண்டே குவளைகள் savarkarநீர் அருந்த அனுமதி உண்டு. இவற்றுக்குள் கொஞ்சம் எளிமையான தண்டனை என்னவென்றால் ஒரு நாள் முழுவதும் தென்னை நார்களை பிய்த்து வெறுங்கையால் நூலாக மாற்றுவது. இந்த நிலையில்தான் நவம்பர் 14 1913 இல்  அவர் பிரிட்டிஷாருக்கு அளித்த விண்ணப்பத்தில் தாம் இச்சிறையிலிருந்து நீக்கப்பட்டால் சட்டத்திற்குட்பட்ட செயல்பாடுகளுடன் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக கூறும் வாசகங்கள் இருக்கின்றன. அதற்கு பின்னர் நடப்பவைதான் முக்கியமானவை. பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் தந்திரமானவர்கள். வீர சாவர்க்கர் உண்மையாகத்தான் இவற்றை சொல்கிறாரா என அறிய ஒரு பரிசோதனை செய்கின்றனர்.  நவம்பர் 16 1913 இல் சாவர்க்கர் தம் தோழர்களுக்கு தாம் புரட்சி நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டதாக தெரிவிக்க வேண்டுமென பிரிட்டிஷ் அரசு கூறுகிறது. வீர சாவர்க்கர் அதை ஏற்கிறார். ஆனால் அதற்கு அரசு இடைத்தரகு இன்றி நேரடியாக தாமே பேச வேண்டும் என்று சொல்கிறார்.  அவ்வாறில்லையெனில் தாம் ஏதும் செய்ய இயலாதெனக் கூறுவிடுகிறார்.  பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு சாவர்க்கர் ‘திருந்தவில்லை’ என்பது புரிகிறது. இதற்கு பின்னர் அந்தமான் சிறையைப் பார்வையிட்ட சர்.ரெஜினால்ட் கிரடாக்கு தம் அறிக்கையில் வீர சாவர்க்கர் இன்னமும் ‘திருந்தவில்லை ‘ என கூறுகிறார்.

சிறை ஆவணங்கள் மூன்று சம்பவங்களில் வீர சாவர்க்கர் சிறைக்குள் தண்டனை பெற்றதை சொல்கின்றன. 1912, 1913, 1914. ஆம். அவர் ‘கருணை மனு’ சமர்ப்பித்த பிறகு சிறைக்குள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பிரச்சனை ஏற்படுத்தியதற்காக தண்டனை பெற்றிருக்கிறார்.

முதல் உலகப் போர் காலகட்டம். வீர சாவர்க்கர் மீண்டும் ஒரு கருணை மனு அனுப்புகிறார்:

அக்டோபர் 3, 1914 தேதியிட்ட அந்த விண்ணப்பத்தில்  அரசியல் கைதிகளை விடுவிக்க கோருகிறார். அவர்கள் விடுவிக்கப்பட்டால் முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்காகப் போராடுவர் என வீரசாவர்க்கர் கூறுகிறார்:  ‘எனது விடுதலை எனக்கு முக்கியமில்லை. எனவே என்னை விடுதலை செய்யாமல் என்னைத்தவிர ஏனைய அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள். ‘  சர்.கிரடாக் பின்வரும் வார்த்தைகளால் வீர சாவர்க்கரின் விண்ணப்பதை நிராகரிக்கிறார்: ‘அவர்களது இரகசியத்தொடர்புகளை நாம் கண்காணித்து வருகையில் தெரிவது என்னவென்றால் அவர்கள் இத்தருணத்தை (முதல் உலகப்போரை) தமக்கு ஆதரவாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே. ‘

சாவர்க்கரின் இந்த கொந்தளிப்பான சிறை வாசத்துடன் நேருவின் சிறைவாசத்தை ஒப்பிடுவது அவசியமாகிறது.

nehru2ஜவஹர்லால் நேருவின் அணுக்கரான ஆஸஃப் அலி தனது காதல் மனைவிக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் நேருவுக்கு சிறையில் அளிக்கப்படும் சலுகைகளை பக்தி பரவசத்துடன் வர்ணிக்கிறார். அவருக்கென்றே தனியான படுக்கை, தனி நாற்காலிகள், தனியான மேசை, அவருக்கு பிடித்தமான நீல நிற ஜன்னல் திரைசீலைகள்… நேருவின் சிறை அறை ’ஒரு குட்டி பங்களாவாகவே’ காட்சி அளித்தது. என்கிறார் அவருக்கென்று அவர் விரும்புல் நூல்கள் தருவிக்கப்பட்டன. அவர் விரும்பும் போது தனிமையும் விரும்பும் போது பிறருடன் சேர்ந்திருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர் தேவைப்படும் போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க அனுமதிக்கப்பட்டார். பொதுமேடைகளில் பேசுவது மட்டும் முடியாது அவ்வளவுதான். 

சிறை வாசத்தையே வசந்தகாலமாக்கும் ரசவாதி நேரு.

ஒவ்வொரு இந்திய தேசியவாதியின் அயல் நாட்டு உறவுகளும் கண்காணிக்கப்பட்டது. ஆனால் நேரு தன் மனைவியின் சுகவீனத்துக்காக சுவிட்சர்லாந்த் சென்றார். சாவர்க்கருக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்திருந்தது. ஆனால் பிரிட்டிஷார் கடுமையாக எச்சரித்திருந்தனர். எந்த நேரத்திலும் எங்களுக்கு ஐயம் ஏற்பட்டால் நீங்கள் மீண்டும் அந்தமானுக்கு அனுப்பப்படுவீர்கள். ஆனால் 1938 இல் சாவர்க்கர் ஜப்பானில் இருக்கும் விடுதலை வீரரான ராஷ் பிகாரிபோஸுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்கிறார்.  அதே ஆண்டு ராஷ் பிகாரி போஸ் ஹிந்து மகா சபை கிளையை ஜப்பானில் தொடங்குகிறார். ஜனவரி 1941 இல் பாரதத்திலிருந்து நேதாஜி தப்பி வெளியேறுகிறார். அதற்கு முன் இறுதியாக வீர சாவர்க்கரை மட்டுமே சந்திக்கிறார். இச்சந்திப்பும் அடைத்த கதவுகளுக்கு பின்னே நடைபெறுகிறது. நேதாஜிக்கு சோவியத் இல்லாவிட்டால் ஜெர்மனி ஆகிய நாடுகளிடமிருந்து ஆதரவு கிடக்கும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் சாவர்க்கர் ஜப்பானிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இருக்கும் இந்தியர்களையும் இந்திய தேசியவாதிகளையும் சந்திப்பதே நல்லதென்று கருதுகிறார்.

Savarkar12ஜூன் 25 1944 இல் சிங்கப்பூர் வானொலி ஒலிபரப்பில் நேதாஜியின் ஆஸாத் ஹிந்த் போர்படையின் முதன்மை தலைவர்கள் வீர சாவர்க்கருக்கு தம் நன்றியையும், வணக்கங்களையும்  சமர்ப்பிக்கிறார்கள். ‘சில அரசியல் தலைவர்கள் தெளிவான பார்வையின்மையின் காரணமாக இந்திய இராணுவ வீரர்களை கூலிப்படையாளர்கள் எனச் சொல்கையில் வீர சாவர்க்கர் அச்சமின்றி இளைஞர்களை இந்திய இராணுவத்தில் இணையுமாறு கூறுவது மனமகிழ்ச்சி அளிக்கிறது. ‘ என சுதந்திர இந்திய தேசிய ராணுவத்தின் தலைவர்  கூறுகிறார். ‘வீர சாவர்க்கருக்கு வணக்கம் தெரிவிப்பது தியாகத்திற்கே வணக்கம் தெரிவிப்பதான மகிழ்ச்சியும் கடமையுமான செயலாகும். ‘ என ராஷ் பேகாரி போஸ் கூறுகிறார்.

என்ன தியாகம் செய்தால் என்ன?

நேருவுக்கு சர்வதேச அரசியல் தெரியும். வேறெந்த தலைவருக்கு அது தெரியும்? நேருவுக்கு அழகான ஆங்கிலம் பேச தெரியும். அயல்நாட்டு பத்திரிகையாளர்களுடன் அற்புதமான ஆங்கிலத்தில் உரையாடத் தெரியும். காஷ்மிர் பிரச்சனைக்கு கூட இந்திய ராணுவத்தை விட மௌண்ட்பேட்டன்களுடனான புரிதல் மூலமாக பிரச்சனையை தீர்த்துவிட முடியுமென்று நம்பிய அகிம்சா மூர்த்தி நம் வசந்த கால இளவரசன் என்கிறார்கள்.

modiஅத்தகைய திறமைகள் சாவர்க்கருக்கு உண்டா? ஐநா சபைக்கு காஷ்மிர் பிரச்சனையை கொண்டு போக படேலுக்கு தெரியுமா? சாவர்க்கர் உயிரை துச்சமென மதித்து ஆகப்பெரிய இழப்புகளை சந்தித்து இறுதி மூச்சு வரை தேசத்தையே தன் லட்சியமாக க்கொண்டு வாழ்ந்திருக்கலாம். சமஸ்தானங்களாக சிதறுண்டு போகட்டும் என வெள்ளைக்காரன் போட்ட திட்டத்தை மண்ணை கவ்வ வைக்க தன் உடல்நிலையை தியாகம் செய்து படேல் உழைத்திருக்கலாம்.  பெருநோய் உடலை அரிக்க சுப்பிரமணிய சிவா செக்கிழுத்திருக்கலாம்… ஆனால் அன்னை இந்திராகாந்தி சின்னவயதிலேயே பொம்மைகளை தன் முன் நிற்கவைத்து அவற்றிடம் இன்குலாப் சிந்தாபாத் என முழங்கினார் தெரியுமா? (இது பாட புத்தகங்களில் கூட இடம் பெற்ற நிகழ்ச்சி.) ஜவஹர்லால் நேரு – அந்த வசந்தத்தின் இளவரசன் செக்கசெவேலென்று இருப்பார் தெரியுமா?

ஆம்…

தேநீர் விற்றவர் தேசத்தலைவர் ஆகமுடியுமா என்கிற கேள்வி ஊடகச்சீற்றமின்றி எவ்வித தார்மிக வெட்கமும் இன்றி வைக்கப்படுவதற்கு அடிப்படை காரணம் இதுதான். இதுவும் போலி மதச்சார்பின்மை மனவியாதிதான்.

தேநீர் விற்றவர், தெருவில் வாழும் மக்கள் நிலையை அவர்களில் ஒருவராக அனுபவித்தவர் அவர்தான் சிறந்த தேசத்தலைவர்களாக முடியும்… அத்தகையவர் மட்டுமே ஆக முடியும்.

நாளை காலை மீண்டும் சந்திப்போம் தேநீர் கோப்பையுடன்…

வந்தே மாதரம்!

 

 

 

27 Replies to “தேநீர் விற்றவன் தேச தலைவனா?”

  1. அருமையான கட்டுரை அ.நீ அவர்களுக்கு நன்றி

  2. மிக அற்புதமான கட்டுரை. இந்திய சுந்தந்திரப் போர் வரலாற்றில் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட பல வீரத் தலைவர்களின் வாழ்வில் அனுபவித்த பல கொடுமைகளை இந்தக் கட்டுரையில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். வீர சாவர்க்கர் அந்தமான் சிறைகளில் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா? ஓரளவுக்கு “சிறைச்சாலை” எனும் திரைப்படத்தில் சாவர்க்கரின் தியாகம் காட்டப்படுகிறது. அரை வேக்காட்டு காங்கிரஸ்காரர்கள் சிலர் மோதியின் மீது குற்றம் சாட்ட எதுவும் கிடைக்காத காரணத்தால், இதுபோன்ற கீழ்த்தரமான வாதங்களை முன் வைக்கிறார்கள். அவர்களது பிதற்றல்களில் அதிகம் வெளிப்படுவது அவர்களுடைய வயிற்றெரிச்சலும், பொறாமையும், தேர்தலில் தங்களுக்குப் படுதோல்வி நிச்சயம் என்பதும்தான். அசிங்கங்கள், வரலாறு தெரியாத முண்டங்கள்தான் இப்படியெல்லாம் பேசும். காமராஜ் செய்த தியாகம் மிக அதிகம். ஆனால் அவர் படிக்கவில்லை என்பதால் அவரை “படிக்காத மேதை” என்றனர். அவரும் அப்படித்தான் இருந்தார். அவர் படிக்கவில்லை என்பதற்காக அவரை முதலமைச்சராகவோ, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆவதற்கோ எவரும் எதிர்க்கவில்லை, மாறாக அவர்தான் பதவி ஏற்கத் தயங்கினார். மற்றவர்களை இதுபோல தரக்குறைவாக தாக்க பண்பாடு உள்ள எவரும் முன்வர மாட்டார்கள். ஆனால் பாவம்! காங்கிரஸ் தலைவர்கள் இதுவும் பேசுவார்கள், இதற்குக் கீழேயும் போய் பேசுவார்கள். அடித்த கொள்ளை இனிமேல் முடியாதே, அடித்த கொள்ளையை மோடி வந்ததும் விசாரணை நடத்துவாரே, கொள்ளை அடித்தவர்கள் சிறைக் கம்பிகளை எண்ண வேண்டுமே என்கிற அச்சம் இவர்களை இப்படியெல்லாம் பேசவைக்கிறது. வெள்ளை சட்டை அணிந்தால் மட்டும் போதுமா, நாகரிகம், பண்பாடு வேண்டாமா? கிடையாது, இவர்களுக்கு வரவும் வராது. போகட்டும் மன்னித்து விடுவோம்.

  3. மிக கொந்தளிப்பான காலங்களில் தியாகத்தையும் தொண்டையும் மட்டுமே கொண்டு தன் பின்னால் வரும் சந்ததிகளின் வாழ்விற்கு ஒளியேற்றுவதற்காக தியாகம் செய்த ஒவ்வொரு இந்துத்துவர்களும் கடவுள்களே…. அற்புதமான கட்டுரை அரவிந்தன் நீலகண்டன்.

  4. திரு மோடி அவர்கள் தேநீர் விற்றவர் தான். அதனை இல்லையென்று மறுக்கவில்லை. எதோ அவர் கள்ள சாராயம் விற்றவர் போல ஜாதிவெறி பிடித்த கட்சியின் ஒரு (தறு) தலை(வர்) கூறியிருக்கிறது. அந்த அகர்வாலுக்கு கொஞ்சம் வால் நீளம்தான். 2014 ல் அதை ஓட்ட நறுக்க வேண்டும்.Nehru was born with silver spoon in his mouth நேரு பள்ளி செல்ல அரண்மனையை விட்டு வெளியே வரும் போது 4 கார்கள் நிற்குமாம். அதில் அவர் விருப்பப்பட்ட காரில் செல்வாராம். செல்வ செழிப்பில் வாழ்ந்து ஏழைகளைப் பற்றிய உண்மை நிலைமை உணராமல் போனதால்தான் ஏழை இந்தியா இன்னும் ஏழையாகவே இருக்கிறது. டீ கடைகளில் கடைகோடி மனிதன் தான் இருப்பான். அவன் உண்மை நிலைமை மோடிக்கு தெரியும். சோறுக்கு வழி இல்லாதவன் 2 டீ குடித்து விட்டு வேலையை பார்ப்பான்.

    “நேர்மையற்ற” நேரு தீர்கதரிசனதோடு செயல்பட்டாராம்! சென்னை வரும்போதெல்லாம் MLV தரிசனம் கண்டார். அது போல வேறு எங்கு போகும் போதெல்லாம் என்ன தரிசனம் கண்டார் என்பதை “மத்தாய்” என்பவரிடம் கேட்டால் இந்த “மத்தாப்பு மனிதனின்” வண்டவாளங்களை கொத்து கொத்தாய் சொல்வார். 16 ஆண்டு காலம் ஆண்ட நேரு வறுமையை “”என்றும் பதினாராகவே”” வைத்திருந்தார். அதற்கு பிறகு அம்மையார் இந்திரா வந்தார்.” கரிபி ஹாடோ” திட்டம் கொண்டு வந்தார். ஆனால் அந்த வறுமை ஓடவில்லை இவர்தான் ஓடிவிட்டார். அதற்கு பிறகு “இத்தாலி இறக்குமதி” திருமதி சோனியா வந்து இப்போது உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டம் கொண்டுவந்திருப்பதன் மூலம் . இன்னும் வறுமை, பசி, பட்டினி ஒழியவில்லை என்றுதானே அர்த்தம். நேரு ஒரு பெரிய தீர்கதரிசியாம்! My foot !

    மோடி டீ விற்றதால் தேசத்தின் தலைவராக வரமுடியாதா? இந்த கதையெல்லாம் விடாதப்பா ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் ஆப்ரஹாம் லிங்கன் தான் அமெரிக்க ஜனாதிபதியாக ஆனார் என்பதை மறந்து விட்டு பேசாதே. ஏய்ப்பவருக்கே காலம் என்று எண்ணிவிடாதே இது எத்தனை நாள் “கை” கொடுக்கும் மறந்து விடாதே. இந்த நிலைமைக்கெல்லாம் ஒரு மாறுதல் உண்டு அந்த மாறுதல் 2014ல் நடக்குமடா மண்டு.

  5. Drops of tear on eyes, the feeling of heaviness in chest are my experience when I read this articles. When we bring out these history in our school system and also taught its real sprit, we can avoid many corruption and scams which are due to selfish individual who never thought of co-citizen’s condition or patriotism. Rose flower’s illusion of western attraction has killed our patriotic sprit and hiding this real history from our school book exposed his true nature. Musticate the energy to wake up our people by this kind of website is a great challange. I pray the almighty Shiva to give all strength and success in our attempt. Vandemadharam, Jai Hind.

  6. It appears that BJP has totally drifted the election strategy from delvelopment of country/ eradicating scams into depending on one MAN. This is nothig but replica Of CONGRESS which depends on one family.

  7. அழகாக ஆங்கிலம் பேசுவதாலேயே அதிகாரம் பெற்ற நேரு குடும்பத்தினிடமிருந்து பாரதத்துக்கு விடுதலை அளிக்கும் ஆற்றல் மோடிக்கே உண்டு.

  8. அற்புதமான பதிவு.
    நடுநிலைமையுடன் வரலாற்று நிகழ்வுகளைத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்;
    இளைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்

    அன்புடன்
    தேவ்

  9. சாட்டையடியான கட்டுரை.

    அதீத செல்வச் செழிப்பும் சரி, அதீத வறுமையும் சரி – மாபெரும் ஆளுமைகளை உருவாக்குவதில்லை. ஒரு தேசத்தை, சமூகத்தை உலுக்கக் கூடிய, கிளர்ந்தெழச் செய்யக் கூடிய தலைவர்களில் பெரும்பாலர் நடுத்தர வர்க்கத்திலிருந்தே வருவார்கள். ஏனென்றால் அதில் தான் கனவுகளும், நம்பிக்கைகளும் போராட்டங்களும் உள்ளன என்று விவேகானந்தர் ஓரிடத்தில் கூறுகிறார். அது உண்மையே. நரேந்திர மோதியின் எழுச்சி என்பது இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் நல்லூழ்.

    இதில் விதிவிலக்குகளும் உண்டு. தாகூர், காந்தி, படேல் போன்றவர்கள் செல்வச் செழிப்புள்ள குடும்பங்களில் பிறந்தவர்களானாலும் இந்த தேசத்தின் மண்ணுடன், பண்பாட்டுடன், மக்களுடன் உள்ள பந்தத்தை உணர்ந்தவர்கள். ஆனால் நேருவும் அவரது சந்ததியினரும் அப்படியல்ல. காங்கிரசையும் இந்திய அரசியலையும் பீடித்துள்ள இந்த elitist மனப்பான்மை நேருவிடத்திலிருந்தே தொடங்குகிறது. கட்டுரை மிகச் சரியாகவே அதை சுட்டிக் காட்டுகிறது.

  10. இந்த தேசத்தை ஆள வேண்டியவர்கள் பணக்காரர்களும் நேருவின் குடும்ப வாரிசுகளும்தான் என்கிற எண்ணம் காங்கிரசுக்கும் சமாஜ்வாதிக்கும் வெளிப்படையாகவே உள்ளது. கம்யூனிசத் தலைவர்களும் இதே சிந்தனையை உள்ளடக்கியவர்களே. அதனால்தான் அவர்களிடமிருந்த இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகிறது. உள்ளத்தில் இருப்பதுதானே வெளியில் வரும். அதில் ஆச்சிரியம் ஒன்றும் அல்ல. இது இந்தியர்களின் தேசம்! இந்த நாட்டை ஆள நாம் தகுதியுடையவர்கள் என்கிற எண்ணம் ஒவ்வொரு இந்தியருக்கும் வரவேண்டும். அப்பொழுதுதான் இப்படிப்பட்ட பேச்சுக்கள் வெளிவராது. மக்கள் முட்டாள்கள்; நாம் என்ன பேசினாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிற மனநிலை பணக்கார அரசியல்வாதிகளிடம் உள்ளது. நாம் போடுகிற எலும்புத் துண்டை தின்று கிடப்பவர்கள் என்கிற எண்ணம் அவர்களிடம் உள்ளது. இது உடைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட கயவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் சாட்டையடி. அதைத்தான் மோடி செய்கிறார்.

  11. // வசந்தத்தின் இளவரசன் செக்கசெவேலென்று இருப்பார் //

    அருமையான அடையாளம்.

    தினசரி தேநீர் கிடைக்கட்டும்.

    – சீனு ஈரோடு.

  12. டீக்கடையில் டீ ஆற்றிய மோடி பிரதமர் ஆகப் போகிறார். அவர் பிரதமர் ஆகமுடியாது என்று சொல்லும் சமாஜ்வாதி கட்சி நண்பர் என்ன செய்யப்போகிறார் ? ஏனிந்த வெட்டிப் பேச்சு? பெரும் பணக்காரரும், தொழிலதிபர்களும் மட்டும் தான் பிரதமர் ஆகமுடியும் என்பது ஜனநாயகம் இல்லை. ஏழைகளும், நாட்டுப்பற்றுடைய நல்லோரும், எளியோரும் பிரதமர் ஆவது தான் நமக்கு பெருமை. சமாஜ்வாதி கட்சி அழிவுப் பாதையில் செல்கிறது. நரேஷ் அக்ரவாலுக்கு என்ன தெரியும் ? விரைவில் இவர் போன்றவர்கள் சமாஜ்வாதி கட்சியை ஒழித்துக் கட்டுவார்கள். நாட்டுக்கு நல்லது தான்.

  13. நேருவை நாட்டுமக்கள் ஒட்டுமொத்தமாக மறந்திருந்தனர். இன்றைய பாரதத்தின் அவல நிலைக்கு காரணம் நேரு என்பதை உணரதொடங்கிவிட்டோம்.நன்றி கட்டுரைக்கு.

  14. என்னுடன் தர்க்கம் செய்த இஸ்லாமிய, கிருத்துவ சகோதரர்களை வாதத்தின் மூலம் மடக்கி, அவர்களின் வெளிநாட்டு சிந்தனைகளையும், வெளிமதங்கள் இந்தியாவில் வறுமையை உருவாக்கியதையும் ஆதாரபூர்வமாக நிரூபித்தால் அவர்கள் கடைசியில் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்: “நாங்கள் வந்து உங்கள் சொத்துக்களை எடுத்து சென்றது உண்மைதான்.. பாரம்பர்யத்தை அழித்ததும் உண்மைதான்.. ஆனால் நீங்களோ பிச்சைக் காரர்கள்.. வாழத் தெரியாத பரதேசி பிச்சைக் காரனாய் ஆனால் என்ன? நாங்கள் இந்திய பிச்சைக் காரர்கள் அனைவரையும் பிடித்து ஆட்சி செய்தோம், எப்படி இருந்தாலும் பிச்சைக்காரர்கள் தானே? என்ன தவறு?”

    அதாவது இந்த செக்யூலர்களின், ஆபிரகாமிய சிந்தனையாளர்களின் ரத்தத்தில் ஊறிய எண்ணமே, தாங்கள் எசுராஜாவின், ஷேக் அல்லது முகலாய வம்சங்களின் வாரிசுகள். fittest survives. ஹிந்துக்கள் அனைவரும் unfit மற்றும் கீழ்நிலை வேலையாட்கள், ஆட்சி செய்ய தகுதி அற்றவர்கள் என்பதுதான். இதனால்தான் இவர்கள் பாகிஸ்தானை உருவாக்கினர். இப்போதும் தனிநாடு கேட்கின்றனர்.

  15. //அழகாக ஆங்கிலம் பேசுவதாலேயே அதிகாரம் பெற்ற நேரு குடும்பத்தினிடமிருந்து பாரதத்துக்கு விடுதலை அளிக்கும் ஆற்றல் மோடிக்கே உண்டு//

    முனைவர் அவர்கள் குறிப்பிடுவதையே நானும் கருதுகிறேன்… பரதகண்டச் செழுமையும்… இந்துமரபும் சீர் குலைந்தமைக்கு நேரு குடும்பத்திடம் பாரத ஆட்சி விழுந்தமையும் முக்கிய காரணமாகும்…

  16. இந்த மாதிரி எல்லாம் பேசி நம்மவர்களிக்கு நல்ல விளம்பரம் கொடுத்து விடுகிறார்கள் .

  17. Scenic beauty of Sabarmathi river front in Gujarat

    https://economictimes.indiatimes.com/slideshows/nation-world/sabarmati-riverfront-project-gujarat-looks-to-promote-tourism/sabarmati-riverfront-project/slideshow/25975404.சம்ஸ்

    டெல்லியில் ஓடும் யமுனாவும் விரைவில் மீண்டும் புனித நதியாக உருமாற த்வாரகாபுரி கண்ணனை பிராத்திப்போம்.

  18. அ.நீ.யின் இந்தத் தொடர் பற்றி கேள்விப்பட்டு படிக்க வந்தேன். அவரோடு பெரிதும் வேறுபடுபவன் என்றாலும் அவர் சரியான தரவுகளைத் தருவார் என்று நம்பிக்கை உண்டு.

    காந்தி அட்டகாசமான பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது சரியல்ல. சத்தியசோதனையில் பல இடங்களில் தான், தன் குடும்பம் பட்ட பணக்கஷ்டத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். மத்தியதர வர்க்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இங்கிலாந்து போய் படித்தாரே என்று யாராவது கிளம்பும் முன்: சவர்க்கார் கூட இங்கிலாந்தில் படிக்கப் போனவர்தான்.

    படேலும் ராஜாஜியும் ஆசாதும் பிரசாதும் ஜேபியும் பி.ஜி. கெரும் கித்வாயும் திரு.வி.க.வும் கிருபளானியும் பெரும் பணக்காரப் பரம்பரையில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல. அவர்களது நேர்மை – பணக்கார சூழலில் பிறந்து வளர்ந்த நேரு, போஸ், சரத் போஸ் போன்றவர்களின் நேர்மை கூட – சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. காந்தி-நேரு தலைமையில் பணக்கார நிலச்சுவான்தார்களே காங்கிரஸ் தலைவர்கள் ஆக முடிந்தது என்பது அவதூறு. படேலும் ராஜாஜியுமாவது தன் சொந்த முயற்சியால் பணம் சம்பாதித்து பிறகு அந்தத் தொழிலையும் கைவிட்டார்கள். அது கூட இல்லாத பலரும் உண்டு! அவர்களது குடும்பச் சூழல் இங்கிலாந்து சென்று படித்த சவர்க்காரிடமிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறது?

    சிவாவும் பாரதியும் வ.உ.சி.யும் எப்போது ஹிந்த்துவத்தின் வேர்கள் ஆனார்கள்?

  19. // இங்கிலாந்து போய் படித்தாரே என்று யாராவது கிளம்பும் முன்: சவர்க்கார் கூட இங்கிலாந்தில் படிக்கப் போனவர்தான். //

    ஆர்.வி, இப்படி ஒரு ஒப்புமையை அளிக்கும் முன் கொஞ்சம் வரலாற்றுத் தகவல்களைப் பார்த்திருக்கலாம்.. காந்தியை குடும்பம் காசு போட்டு பாரிஸ்டர் படிக்க அனுப்புகிறது. வீர சாவர்க்கர், முழுதுமாக ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா (இக்கட்டுரையிலேயே அவரைப் பற்றி வருகிறது) அளிக்கும் உதவித் தொகையில் இங்கிலாந்து போகிறார்.. காந்தி போல, பின்னாளில் சுயசரிதைக்கான சுவாரஸ்யமான விஷயங்களாக ஆகியிருக்கக் கூடிய பியானோ வகுப்புகள், லத்தீன் மொழி வகுப்புகள், சைவ உணவு பரிசோதனைகள் ஆகியவற்றில் அவர் ஈடுபடவில்லை. அங்கு இந்தியா ஹவுசில் புரட்சி நடவடிக்கைகளில் நேரடியாக இறங்கினார்.. அவர் முதல் சுதந்திரப் போர் புத்தம் எழுதி அது வெளியாவதற்கு முன்பே பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப் பட்டது. தனது பாரிஸ்டர் பட்டப் படிப்பை முடிக்கவும் இல்லை. அதற்கு முன்பே கைது செய்யப் பட்டு கப்பலில் கொண்டு வரப் பட்டு அந்தமான் சிறைக்கூடத்தில் தள்ளப் பட்டார்.

    பணக்காரர்கள் நேர்மையில்லாதவர்கள் என்றோ, காங்கிரசில் காந்தி- நேரு யுகத்தில் நிலச்சுவாந்தார்கள் *மட்டுமே* தலைவரானார்கள் என்றும் இந்தப் பதிவு பொத்தாம் பொதுவாக கூறவில்லை.. காமராஜர் போன்ற விதிவிலக்குகளையும் சுட்டிக் காட்டித் தான், காங்கிரசில் உருவான அதிகார மையத்தைப் பற்றி பேசுகிறது.

    சி.வா.வும், பாரதியும், வ.உ.சியும் ஆதிமுதலே ஹிந்துத்துவ வேர்கள் தான்.. சிவா பாப்பாரப் பட்டியில் பாரதமாதா கோயில் கட்டியவர். பாரதி – சொல்லவே வேண்டாம். வ.உ.சி இந்து மகா சபைத் தலைவர் மூஞ்சேயை மிக மதித்தவர். அவருடன் நேரடியான தொடர்பும் கொண்டிருந்தார். இந்த தேசபக்த வீரர்கள் *காங்கிரஸ் காரர்கள்* அல்ல. இந்துத்துவர்கள் உட்பட, எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமானவர்கள்.

  20. ஜனாப் நேரு பதிவின் தரம் தாழ்ந்த தாக்குதலால் நான் இங்கே எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஜடாயுவின் பதிலைக் கண்டு புன்சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்பதை பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

    // காங்கிரசில் காந்தி- நேரு யுகத்தில் நிலச்சுவாந்தார்கள் *மட்டுமே* தலைவரானார்கள் என்றும் இந்தப் பதிவு பொத்தாம் பொதுவாக கூறவில்லை.. காமராஜர் போன்ற விதிவிலக்குகளையும் சுட்டிக் காட்டித் தான், காங்கிரசில் உருவான அதிகார மையத்தைப் பற்றி பேசுகிறது. // காமராஜர் போன்றவர்கள் விதிவிலக்கு என்றால் பொத்தாம்பொதுவான விதிதான் என்ன? இரண்டு பேர்தான் விதிவிலக்கு என்றால் பொத்தாம்பொதுவாக எப்படிப்பட்டவர்கள் தலைவர்கள் ஆனார்கள்? அப்படிப்பட்ட பொத்தாம்பொதுவான விதிப்படி தலைவர்கள் ஆனவர்களில் ராஜாஜியும் கித்வாயும் ஆசாதும் படேலும் பிரசாதும் ஜேபியும் திருவிகவும் எப்படி இடம் பெறுகிறார்கள்?

    வ.உ.சி. மூஞ்சேவுடன் மட்டுமா தொடர்பில் இருந்தார்? காந்தியோடு இருந்தார். ஈ.வெ.ரா.வோடு இருந்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவ மாநாட்டுக்கெல்லாம் தலைமை தாங்கி இருக்கிறார். அதனால் அவரை திராவிட இயக்கத்தின் வேர் என்றும் சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே? அல்லா பற்றியும் ஆஹாவென்று எழுந்த ரஷ்யப் புரட்சியையும் பாடியவன் ஹிந்துத்துவத்தின் வேர் என்றால் சந்தோஷம். பிற மதத்தவரைப் பற்றி அவனுக்கிருந்த புரிதல்கள் உங்களுக்கும் கிடைக்கட்டும். பாரதமாதா கோவில் கட்டினால் ஹிந்துத்துவாவா? கலக்கிட்டீங்க!

  21. காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் முட்டாள்தனத்தின் காரணமாக இந்தியா இன்றுவரை எவ்வளவோ இழப்புக்களை சந்தித்து வருகிறது. ஐ நா சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை எடுத்து சென்று நிரந்தர தலைவலி ஆக்கிவிட்டார். மேலும் சீனாவுடன் இந்தி சீனி பாய் பாய் என்றார். கிருஷ்ணமேனன் என்ற கம்யூனிஸ்ட் அனுதாபியை பாதுகாப்பு அமைச்சராக்கி நாட்டை நாசம் செய்தார். சீனாக்காரன் அவர் முதுகில் குத்தினான். பொருளாதாரத்திலும், அரசியலிலும் தெளிவான கண்ணோட்டம் இல்லாத குழப்ப வாதி. நம் நாடு செய்த பாவம் இவரைப்போன்ற ஒரு உதவாக்கரை முக்கியமான பிரதமர் பதவியில் அமர்ந்தது.

  22. அரவிந்து அவர்களே நேரு காலத்தில் ஊழல் பேர்வழிகள் காஷ்மீரில் பக்க்ஷி குலாம் பஞ்சாபில் கைரோன் போன்றவர்களை நேரு ஆதரித்தார். இவைகளை பற்றி எழுதினால் நேரு காலத்திலிருந்து ஊழல் கட்சி காங்கிரஸ் என்பது இன்றைய மக்கள் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *