முகப்பு » அரசியல், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்

குறையொன்றும் இல்லை

December 9, 2013
-  

குறையொன்றும் இல்லை
மறைமூர்த்தி கண்ணா …

– மூதறிஞர் ராஜாஜி.

இந்தத் தேர்தல் முடிவுகளில் குறை ஒன்றும் இல்லை என்று ஒரு பாஜககாரனால் கொண்டாட முடியாமல் செய்து விட்டது டில்லி. மத்திய பிரதேசத்தின் சௌகானின் செயல்பாட்டுக்குக் கிடைத்தவெற்றி, ராஜஸ்தானில் காங்கிரஸின் அட்டூழியத்துக்கு கண்டனமாகக் கிடைத்த வெற்றி, சட்டிஸ்கரில் காங்கிரஸ் அனுதாபத்தையும் மீறி நக்சல்களின் மிரட்டலையும் மீறி கிடத்த வெற்றி டில்லியில் முழுமையாகக் கிட்டவில்லை. டில்லியை பிறகு பார்ப்போம். மற்ற இந்த மூன்று வெற்றிகளின் காரணிகளில் காங்கிரஸ் ஆட்சியின் சொதப்பல்களும் பாஜக அரசுகளின் சாதனையும் முக்கியம் என்றால் மோடியின் அயராத உழைப்பும் மக்கள் அவர்மேல் கொண்ட நம்பிக்கையின் அடையாளமும் இந்த வெற்றிகளின் மாபெரும் உந்து சக்திகள். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுக்கு இவை கட்டியம் கூறுவது மட்டுமல்லாமல் முன்னோட்டமாகவும் இருக்கின்றன.

BJP_2013_4_0_vicotry

இதை பலர் மறுக்கிறார்கள். பலதரப்பான தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் (சம்பந்தமில்லாமல் அவர்களை ஏன் கூப்பிடுகிறார்கள்?) மட்டுமல்லாமல்  ராஜஸ்தானில் ஜாட் மக்களின் ஆதரவும், போலிஸ் துப்பாக்கி சூடு நடந்ததால் முஸ்லிம்களின் அதிருப்தியும் வேலை செய்திருக்கிறது என்கிறார்கள். மத்தியப் பிரபொதுவானவர்களும் இதை மறுக்கிறார்கள். சில பாஜகவினர் கூட அடக்கம் காரணமாக இதை மறுக்கிறார்கள்.தேசத்தில் சென்ற தேர்தலில் கிடைக்காத உமாபாரதி ஆதரவாளர்களின் ஓட்டுகள் இப்போது பாஜகவுக்கு கிடைத்துவிட்டன என்கிறார்கள். இந்த நான்கு மாநிலங்களிலும் பாஜக ஏற்கெனவே செல்வாக்கு உள்ள மாநிலங்கள்தானே இதில் பெற்ற வெற்றியில் கொண்டாட என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் கிடைத்த வெற்றியின் அளவுதான். மொத்தம் 589 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 406 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது தோராயமாக 70 சதமானம். சுமார் 250 தொகுதிகளை கையில் வைத்திருந்த காங்கிரஸ் அதில் பாதியை இழந்திருக்கிறது. மற்ற கட்சிகள்? மூச். ரொம்ப சொற்பம். மதசார்பின்மை பிரச்சாரம் எங்கே போச்சு? வரிந்து கட்டிச் சொன்ன குஜராத் கலவரப் பொய்களெல்லாம் என்ன ஆச்சு? மக்கள் அதையெல்லாம் டாய்லெட் பேப்பர் மாதிரி ஆக்கிவிட்டார்கள்!

சரி, இங்கெல்லாம் ஜெய்ச்சாச்சு, மற்ற மாநிலங்கள் என்னாச்சு? என்னமோ எல்லாமே கையிலேயே வந்தாச்சு மாதிரி சொல்லிடமான்னு இன்னும் சிலர் கேட்கிறார்கள். ஆமாம் வாஸ்தவம்தான். கைக்கு வரவில்லைதான். ஆனால் அந்த மாநில மக்கள் என்ன செய்யனும்னு இந்த முடிவுகள் தெளிவா சொல்லுகிற மாதிரி இருக்கின்றன. இங்கயெல்லாம் இந்த அளவுல ஜெயிக்கவில்லை என்றால் மத்த மாநிலங்களில் அது நெகடிவ்வா போய்விடும் அபாயம் இருக்கிறது. பாதை போடப்பட்டிருக்கிறது. நன்றாகவே போடப்பட்டிருக்கிறது. இந்தப் பாதை மொத்த இந்தியாவும் செல்ல வேண்டிய பாதை. இந்தப் பாதையின் கலங்கரை விளக்கே மோடிதான். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவித்த அன்று இந்தக் கலங்கரை விளக்கு ஏற்றப்பட்டுவிட்டது. அது தன் வேலையையும் தொடங்கிவிட்டது.

BJP_celebrations

சட்டிஸ்கரில் ராமன் சிங் ஆட்சி நன்றாக இருந்ததென்றாலும் அங்கு ஏன் இழுபறி நிலை இருந்தது? எல்லா முடிவுகளும் வந்த பிறகு சென்ற தேர்தலை விட ஒரு சீட்டே குறைவாகப் பெற்று நிம்மதி வந்துவிட்டாலும் ஏன் இப்படி என்ற கேள்வி வந்துவிட்டது. இந்த உலகத்தைப் பிடித்த ஒற்றை பீடை எது என்று யாராவது கேட்டல் கம்யூனிஸ்டுகள்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். கம்யூனிசத்தின் விஷக்கனிகள் நக்சல்கள். இவர்களால் வேட்டையாடப்பட்ட காங்கிரஸ் காரர்களால் காங்கிரஸுக்கு அனுதாப ஓட்டுகள் விழுந்துவிட்டன. ஆனாலும் நக்சல்கள் தேர்தல் புறக்கனிப்பு நோட்டிஸ் விட்டிருந்தாலும் அதையும் மீறி 70 சதமானத்துக்கும் மேலே பதிவு நடந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டோரும் பழங்குடிகளும் ஜனநாயகத்தின் மீதும் ராமன்சிங் மீதும் நம்பிக்கை வைத்துவிட்டனர். மத்தியில் 2014இல் ஏற்படப்போகும் பாஜக அரசால் இந்த நக்சல் கொடுமைகளுக்கு சட்டிஸ்கர் மாநிலத்தில் விடிவு ஏற்பட வேண்டும்.

இந்த வெற்றியில் முழுதும் களித்து மிதந்து கொள்ள முடியாதபடிக்கு டில்லி பாடங்களைக் கொடுத்திருக்கிறது. டில்லியில் கேஜ்ரிவாலைப் பாரட்டியே தீர வேண்டும். கட்சி தொடங்கி ஒரு வருடமே ஆகியிருந்தாலும் கங்கிரஸ் எதிர்ப்புப் பேரலையில் அபாரமான வெற்றியைச் சுவைத்திருக்கிறார். அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு இயக்கங்களால் பிரபலமாகி, தேர்தலில் போட்டி இடுவதற்காக திகவை விட்டு விலகி திமுக ஆரம்பித்த அண்ணாதுரை பாணியில் கட்சி தொடங்கினாலும் தொடங்கியவுடன் வெற்றி பெற்றிருக்கிறார். டில்லியில் இவர் கட்சி இல்லாமல் காங்கிரசும் பாஜகவும் இந்தத் தேர்தலைச் சந்தித்திருந்தால் அது இந்திய வரலாற்றில் பாஜகவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இருந்திருக்கும். முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களை சுலபமாக கவர்ந்த கேஜ்ரி தன் வெற்றிக்காக இன்னொரு காரியத்தைச் செய்திருக்கிறார். நாமும் டில்லி மக்களும் நாட்டு மக்களும் கூர்ந்து கவனிக்க வேண்டிய காரியம் அது. தேர்தலுக்கு முன்பாக பாங்ளாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனுக்கு எதிராக பத்வா விதித்த மௌலானா தக்வீரைச் சந்தித்தார். ஊழல் எதிர்ப்பை கையில் எடுத்த கேஜ்ரி அத்தோடு நிற்கவில்லை. முஸ்லிம்களை திருப்தி செய்யவும் முனைந்திருக்கிறார். இவர் ஆட்சி அமைந்தால் அந்த மௌலானவுக்கு கடன்பட்டவராக இருப்பார். அப்போது என்னவெல்லாம் நடக்கும் என்பது நாம் நாட்டில் பலமுறை பார்த்த காட்சிகள்தான். பச்சையாக முஸ்லிம்களை அவர்கள் மதக் கொள்கைப்படி ஓட்டளிக்கச் சொல்லி பாஜகவுடன் மதவாத விளையாட்டை தொடங்கியிருக்கும் கேஜ்ரிவாலுடன் நாடே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு மிசோரம் முடிவுகள் வந்திருக்கின்றன. பாஜகவுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என்று பாஜகவினரே நினத்துவிட்ட ஒரு வடகிழக்கு மாநிலத் தேர்தல் முடிவுகள், குறையொன்றும் இல்லை என்ற நிலையில் நாம் இல்லை,. வடகிழக்கு மாநிலங்கள் என்ற ரூபத்தில் பல நீண்டகால குறைகளை வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக என்ற பிரக்ஞை வர வேண்டும்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

 

13 மறுமொழிகள் குறையொன்றும் இல்லை

 1. lakshmi Narayan on December 9, 2013 at 10:20 pm

  நல்ல கட்டுரை

 2. kmv on December 9, 2013 at 10:29 pm

  Kejriwal wave was more turbulent than Modi wave in Delhi!

 3. T S Rajagopalan on December 9, 2013 at 10:49 pm

  அரவிந்த் கேஜ்ரிவால்” நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம்” என்கிறார். மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கவும் தயார் என்றும் கேஜ்ரிவால் கூறுவது பொறுப்புள்ள அரசியல்வாதி பேசுவதுபோல் இல்லை. தன்னை லக்ஷியவாதியாகவும், மற்ற அரசியல்வாதிகளிலிருந்து மாறுபட்டவன் என்று காட்டிக்கொள்வதற்காக இன்னொரு தேர்தல் என்ற சுமையை இவரை நம்பி வாக்களித்த மக்கள் மீது சுமத்துவதா? மறுபடியும் இதேபோல் தொங்கு முடிவே
  மக்கள் கொடுத்தால் என்ன செய்வாராம்?

 4. A P IRUNGOVEL on December 9, 2013 at 11:03 pm

  மகிழ்ச்சியாக இருக்கிறது.

  அதே நேரம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

  இந்த வெற்றியில் அளவுக்கு மிறி ஆர்ப்பாட்டம் செய்து, எதிர்காலத்தில் மற்றவர்கள் (அதுதான் அந்த இத்தாலி மாஃபியாக்கூட்டத்திற்கு வக்காளத்து வாங்கும் அறிவு ஜீவிகளும், அறிவில்லா ஜீவிகளும்) நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும் வகையில் அமைந்து விடக்கூடாது.

  எச்சரிக்கையாக இருந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

  எதிர்மறை எண்ணத்தோடு நான் இதனை எழுத வில்லை.

  எப்போதும் எதிராளியை குறைத்து மதிப்பிடக்கூடாது.

 5. Anantha Saithanyan on December 10, 2013 at 12:33 am

  காங்கிரஸ் என்னும் டைனோசரின் முதுகெலும்பு உடைக்கபட்டிருகிறது ஆனால் அது முழுமையாக விழுந்து விடவில்லை மிக ஜாக்கிரதையாக அதனை நாம் கண்காணிக்க வேண்டும் நாம் கண்காணித்து கொண்டிருகிரோன் என்று அதற்க்கு தெரிந்தாலே அது பதட்டத்தில் சொதப்ப ஆரம்பிக்கும் அதை மிக சரியாக கணித்து அதன் தலையில் அடித்து விழ்த்த வேண்டும் ……:)

  Regards,
  Anantha Saithanyan.

 6. balasubramanian on December 10, 2013 at 5:49 am

  அரவிந்த் கேஜ்ரிவால்” நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம்” என்கிறார். மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கவும் தயார் என்றும் கேஜ்ரிவால் கூறுவது பொறுப்புள்ள அரசியல்வாதி பேசுவதுபோல் இல்லை. இது நூற்றுக்கு நூறு அரசியல் அனுபவமற்ற ஒரு திமிரான வார்த்தைகள் என்று கூட சொல்லலாம் திரும்பவும் மக்கள் இந்த அளவு வாக்களிப்பார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் இது காங்கிரசின் மேல் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாக ஏற்பட்ட ஒரு விபத்தாக கூட கூறலாம் சந்தர்பங்கள் திரும்ப திரும்ப வரும் என்பது தவறு கிடைத்த சந்தர்பத்தை நல்ல முறையில் பன்படுதிக்கொல்வதே சாமர்த்தியம் இதை உணர்ந்து செயல் படுவது நல்லது

 7. தஞ்சை வெ.கோபாலன் on December 10, 2013 at 7:46 am

  கேஜ்ரிவாலுக்கு நிர்வாக அனுபவம் கிடையாது. அவரிடம் உள்ளவர்கள் அத்தனை பேரும் இளைஞர்கள், ஆர்வமும் துடிப்பும் உள்ளவர்கள். கார் ஓட்ட பழக்கம் இல்லாதவனைக் கூப்பிட்டு உட்காரவைத்து காரை ஒட்டு என்றால் கொண்டு பொய் எங்காவது சுவற்றில் மோதிவிடுவான். அதுபோலத்தான் இவரது நடவடிக்கை இருக்கிறது. ஆட்சிக்கு எதிராக இவர் எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுக்களை நீக்கி நேர்மையான, சுத்தமான ஆட்சியை இவர் அல்ல, வேறு எவராலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில், இப்போதுள்ள அரசாங்க நிர்வாக முறையிலும் செய்து காட்ட முடியாது. இவர் பதவிக்கு வந்தால், பரிதாபமாக தோல்வி அடைவார். அதனால்தான் இவர் கரையில் உட்கார்ந்து கொண்டு நீச்சல் சொல்லிக் கொடுக்க முயல்கிறார். இவர் நோக்கம் தவறு இல்லை, செயல் திறன் கிடையாது, துணிவு கிடையாது, ஆற்றல் கிடையாது. அவற்றை வளர்த்துக் கொள்ள முதலில் சிறிதாவது நிர்வாக அனுபவம் வேண்டும், அதற்கு இவர்கள் பாஜகவுக்கோ அல்லது காங்கிரசுக்கோ ஆதரவு கொடுத்து டெல்லியில் ஒரு ஆட்சி அமைய ஒத்துழைக்க வேண்டும்.

 8. annaamalai. srirangam. on December 10, 2013 at 10:39 am

  திருவாளர் தஞ்சை கோபாலன் சொல்வது மிகவும் சரி.
  கேஜெரிவல் எதார்த்த உண்மைகளை புரிந்துகொண்டு செயல்படவேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு கிளம்பிய பல பேர் நிலைமை நமக்கு தெரியும். இன்றைய நடைமுறைகளில் அரசியல் கட்சி நடத்துவதும், தொண்டர்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதும், கட்சியை வெற்றிப்பாதையில் அழைத்து செல்வதும் சாமான்யமானது அல்ல என்பது அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கு நன்கு புரியும்.

 9. paandiyan on December 10, 2013 at 10:46 am

  கேஜ்ரிவாலைப் பாரட்டியே தீர வேண்டும் என்பது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள். இட்லிவடை ப்லோக்கில் வந்து ஈறிருக்கும் விசுவாமித்திராவின் கட்டுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நான் நேர்ரு சொன்ன மாதிரி இவர் டெல்லி விஜயகாந்த் என்று சொல்லக்கூடிய நாள் விரைவில் வரும்

 10. andal on December 10, 2013 at 2:50 pm

  பெருவாரியான நாளிதல்களால் வெற்றியை ஜீர்ணிக்க முடியவில்லை. குறிப்பாக தி ஹிண்டுவால். பாரதிய ஜனதா கட்சியின் செய்திகளை போடுவதில் தயக்கம் காட்டுகிறது.. தற்போது பெற்ற வெற்றி வரும் பொது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை கட்டுரையாளர் ஞானி எழுத தயங்குகிறார். தடுமாற்றத்தில் உள்ளார்.

 11. நந்திதா on December 10, 2013 at 3:23 pm

  வணக்கம்
  நிதானமாகச் சிந்தித்துப் பொறுப்பாக எழுதப் பட்டுள்ள கட்டுரையும் அதற்கு வலிவூட்டும் பின்னூட்டங்களும். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
  அன்புடன்
  நந்திதா

 12. "HONEST MAN" on December 10, 2013 at 6:06 pm

  புது டில்லியில் புதுசாய் வந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. எப்போதுமே புது வெள்ளம் வரும்போது வேகமாகத்தான் வரும். அப்புறம் ஆடி (பெருக்கு போனதும்) அடங்கி விடும். AAP is definitely not a substitute for BJP. மத்திய பிரதேசத்தை பிடித்தது முக்கியமல்ல. நாட்டின் பிற பிரதேச்ங்களையும் பிடிக்கவேண்டும் என்பதோடு மத்திய அரசையும் பிடிக்க வேண்டும். மத்திய அரசு நமக்கு சிரசு (தலை) மாதிரி. அப்புறம் என்ன? தலையிருக்க (கேஜரி) வால் ஆடுமா?

  காங்கிரஸ் “கை”களில் Leprosy ஊழல்வாதி கால்களில் Democracy கொஞ்சம் யோசித்து பாருங்கள். பிஜேபி டெல்லியில்,மத்திய பிரதேசத்தில் ,குஜராத் இடைத் தேர்தலில் (அதாவது மேற்கு சூரத் சட்டமன்ற தொகுதி) ராஜஸ்தானில் மற்றும் chhattiskar மாநிலத்தில் எல்லாம் காங்கிரஸ் கட்சியை பிஜேபி மண் கவ்வ செய்தது. அதாவது Delhi + Mathiya Pradesh +Gujarath + Rajasthan + Chhatiskar = De + Ma + G +Ra + C = Democracy (approximately, even though not correctly) ஆகவே 5 மாநிலங்களில் Democarcy ஜெயித்தது. ஆனால் MISA என்ற கொடுமையான சட்டத்தை கொண்டுவந்த காங்கிரஸ் MIZORAM மாநிலத்தில் மட்டும் வென்றுள்ளது. என்ன இந்த கட்டுரையின் ஆசிரியர் Mr MISO அவர்களே நான் சொல்லுவது சரிதானே?

  நான்கு மாநில தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் presence ஐ felt பண்ண முடியவில்லை. ஆனால் அவர்களை எதற்கு தேர்தல் ரிசல்ட் குறித்த டிவி விவாதங்களுக்கு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இரும்பு அடிக்கும் இடத்தில் ஈயிக்கு என்ன வேலை? டிவிகாரர்களுக்கு கொஞ்சம் கூட presence of mind என்பதே இல்லையே!. தங்களது பிரச்சார பேச்சுகளில் 100 சதவீதம் மதவாதம் பற்றியே பேசிய (Coal scam புகழ்) காங்கிரஸ் தன முகத்தில் தானே கரியை (coal ) பூசிகொண்டனர். . மதம் ஒரு “OPIUM (=அபின்)” என்றும் பிஜேபி ஒரு மதவாத கட்சி என்றும் வீண் பழி போட்டவர்களை தேர்தலில் இருக்கும் இடம் தெரியாமல் செய்து பிஜேபி ஒரு “காப்பியம்” படைத்துள்ளது. மதம் ஒரு அபின் என்று கூறும் கம்யூனிஸ்ட்காரர்களின் கண்ணுக்கு மட்டும் எப்போதுமே இந்து மதம் மட்டும் ஒரு அபின், ஆனால் MUSLIM களின் மதம் மட்டும் ஒரு MUSLI POWER tonnic . உண்மையை உண்மையென பேச தைரியம் இல்லாத அரசியல் “ஆண்மை” அற்றவர்களுக்கு அந்த டானிக் மிக அவசியமே!

  எதற்கெடுத்தாலும் மதவாதமா? சோனியா! இனி அது உதவாதம்மா
  கை எரிச்சல் அடைந்தால் பொதுவாக நாம் “நம நம” என்று கை எரிகிறது என்று சொல்வோம். ஆனால் இன்று “நமோ நமோ” (Namo = Narendra Modi ) என்றால் காங்கிரஸ் சின்னமான “கைக்கு” எரிச்சல் எடுக்கிறது.

 13. g ranganaathan on December 10, 2013 at 6:57 pm

  இந்தத் தேர்தல்களில் பாஜக தோற்றுப் போயிருந்தால் போலி மதச்சார்பின்மை ஊடகங்களும் (அ)ஞானி போன்ற சமுதாயச் சிந்தனை(?)யாளர்களும் மோடிக்கு செல்வாக்கில்லை என்றும் காங்கரஸின் மதச் சார்பின்மை வெற்றி பெற்றுவிட்டது எனவும் ராகுலை மக்கள் ஏற்றுகொண்டுவிட்டதாகவும் எக்காளம் இட்டுஇருப்பர். அந்தோ என் செய்வது? மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்து விட்டனர். மக்களை நமது முக போல் “சோற்றால் அடித்த பிண்டங்கள்” என்றும் மரத்துப் போன ஜன்மங்கள் ” என்றும் வசை பாட முடியவில்லை. ஆம் ஆத்மி இப்போது உலக ரஷகர் போல் ஊடகங்களுக்கு தோற்றம் அளிக்கிறது. எனவே “மோடி விளைவு” ஒன்றுமில்லை என ஒப்பாரி வைக்கின்றன. பக்கவாத கட்சிகளும் பாஜக வின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் சதவீதக் கணக்கு (இதுவும் முகவின் பாணி) போட்டும் போணியாகாத புள்ளிவிவரங்களை அள்ளி தெளித்தும் திருப்தி அடைகின்றன. டெல்லியின் தொங்கு சட்டசபையை தெளிவான அமைப்பில் வைக்க கேஜ்ரிவால் ஸ்ரீமதி கிரண்பேடியின் யோசனையை ஏற்றுக்கொண்டு பாஜகவுடன் “குறைந்த பட்ச செயல் திட்டத்தை ” ஒப்பந்தம் செய்துகொண்டு ஆட்சி அமைக்க முன்வரவேண்டும், டெல்லி வாக்காளர்கள் காங்கிரசை தான் புறக்கணித்து உள்ளனர், பாஜகவை அல்ல. ஒருவேளை ஊடகங்கள் “பொருந்தாக் கூட்டணி” என்று வசை பாடும். இன்னொரு தேர்தலுக்கு வகை செய்யாமல் (அரசின் செலவினங்களைக் கருத்தில் கொண்டு) தேசப்பற்றுடன் கேஜ்ரிவால் தனது கட்சியை நடத்தி செல்ல முன்வரவேண்டும். இல்லையெனில் அவரும் அவரது கட்சியும் “புதுத் துடைப்பம் நன்றாகப் பெருக்கும்” என்று நினைத்தோமே என்று வாக்காளர்களால் வருகின்ற தேர்தல்களில் புறக்கணிக்கப்படும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*