திரைப்பார்வை: The Man from Earth

The Man from Earth.

யேசு மனிதரா அல்லது தேவ குமாரனா அல்லது வரலாற்றில் அப்படி ஒருவர் இருந்தாரா, பைபிள் இறைவனின் நேரடி வார்த்தைகளா இல்லை கிறித்துவ அப்போஸ்தலர்களின் வார்த்தைகளா அல்லது பாகனிய தொன்மங்களில் இருந்து சுருட்டி கிறிஸ்துவ சாயம் பூசி மத நம்பிக்கையினால் உறையவைக்கப்பட்டதா என கிறித்துவத்தின் அடிமுடியை அலசும் படம். இவற்றைக் குறித்து பொதுவில் கிறிஸ்தவ விமர்சகர்களிடம் இருக்கும் ஊகங்கள், வரலாற்றுக் குறிப்புகள் போன்றவற்றை ஒரு முற்றிலும் புதிய விதமான கற்பனையுடன் கலந்து சொன்ன விதம் மிகச் சுவாரசியமானது. படத்தில் குறியீடாக எதையும் சொல்லவில்லை, பட்டவர்த்தனமாக தெளிவாக சில விஷயங்களைப் பேசுகிறது. நாம் கற்பனையால் நிரப்பிப் புரிந்து கொள்ள வேண்டியது என எதுவும் இல்லை. எனவே இது படத்தைக் குறித்தான விமர்சனமோ, அலசலோ அல்ல. படம் குறித்தான அறிமுகம் மட்டுமே. இதன் நோக்கம் வாசகர்களைப் படத்தைப் பார்க்கத் தூண்டவும், அதன்வழி படம் பேசும் முக்கியமான கருத்துக்களைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுரீதியான ஆர்வத்தைத் ஏற்படுத்துவதும், வெற்று நம்பிக்கையை உதறி தர்க்கப் பூர்வமாக சிந்திக்கச் செய்வதுமே.

The_Man_from_Earth_posterவிடைபெற்றுச் செல்லும் ஒரு கல்லூரிப் பேராசிரியரை (ஜான்) வாழ்த்தி வழியனுப்ப அவர் வீட்டிற்கு வரும் சக பேராசிரிய நண்பர்களுடன் படம் துவங்குகிறது. ஒரு வரலாற்றாய்வாளர், ஒரு உயிரியல் பேராசிரியர், ஒரு மானிடவியலாளர், ஒரு தொல்லியலாளர், ஒரு உளவியல் நிபுணர் என நல்ல கலவையான நண்பர் கூட்டம் அது.

எந்தத் தேவையுமில்லாமல் எதற்கு திடீரென்று பணியில் இருந்து விலகிச்செல்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள் நண்பர்கள். ஆரம்ப தயக்கத்திற்குப் பிறகு, தான் 14000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மனிதன் என்றும், பத்து வருடங்களுக்கு மேல் ஒரு ஊரில் இருந்தால் வயதான மாற்றமே தெரியாமல் இருக்கும் தன்னை மக்கள் சந்தேகப்படுவார்கள் என்பதால் இடம் மாறிக் கொண்டே இருப்பதாகவும் ஜான் சொல்கிறார். குகை மனிதனில் இருந்து, சுமேரியனாக, இந்தியாவில் புத்தரின் மாணவராக, ஐரோப்பாவில், அமெரிக்காவில் என ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தான் எப்படி எல்லாம் வாழ்ந்து வருவதாகச் சொல்கிறார். முதலில் கிண்டல் செய்து அதை வேடிக்கையாக்கிக் கொள்ள முயல்கிறார்கள் நண்பர்கள். ஜான் நிதானமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் சொல்லச் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல் தொனி மாறுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் துறையில் இருந்து அவரைக் கேள்வி கேட்கிறார்கள். அவர் சொல்லும் பதில்களை தங்கள் துறை சார்ந்த தகவல்களுடன் ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். ஆனாலும் நம்பிக்கையில்லை.

சட்டென்று உரையாடல் மதம் பற்றித் திரும்புகிறது. நமது மதத்தின் ஆளுமைகளில் யாரையாவது தெரியுமா என்று ஒரு நண்பர் கேட்கிறார். ஜான், ‘ஒருவகையில்..ஆம்’ என்கிறார். உரையாடல் நீள்கிறது… “மோசஸ்?”

‘அது மிஸிஸ் என்னும் சிரியாவின் தொண்மம் கிறிஸ்தவத்தில் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பும் பல வகைகளில் அந்தத் தொண்மம் இருந்தது. அவர் வரலாற்றில் இருந்தவரல்ல’.

“அப்போஸ்தலர்கள் உண்மையில் எதையும் மக்களுக்கு போதிக்கவில்லை, புதிய ஏற்பாடு ரொம்ப எளிமையானது, மிஞ்சிப்போனால் 100 வார்த்தைகள் அவ்வளவு தான், அப்போஸ்தல்ர்களும் பின்வந்தவர்களும் அவர்கள் தேவைக்காக அதில் கட்டிவைத்த கதைகள் தான் மற்ற எல்லாமும்” என்கிறார்.

நண்பர் கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண், கிறித்தவ நம்பிக்கையாளர் மனம் புண்படுகிறார். மற்ற நண்பர்கள் அவரைச் சமாதானப்படுத்தி ஜானை மேலும் கேள்வி கேட்கிறார்கள். ஜான் சொல்கிறார், “புத்தரிடம் பயின்ற பின்பு, அதையே சிந்தித்துக் கொண்டிருந்தேன் சுமார் ஐநூறு ஆண்டுகள்… அப்புறம் மத்திய தரைக்கடல் பகுதிக்கு வந்தேன். Etruscan ஆக வாழ்ந்தேன் அப்படியே ரோமப் பேரரசின் குடிமகனானேன். பெரிய கொலை எந்திரமாக மாறிய அதன் போக்கு பிடிக்காமல் கொஞ்சம் தள்ளி கிழக்காகப் போனேன். புத்தரின் போதனைகள கொஞ்சம் காலத்திற்குத் தகுந்த மாதிரி மாற்றிச் சொன்னால் என்ன என்று தோன்றியது. சொன்னேன். ரோமை எதிர்த்து வாழ முடியுமா? ரோம் வென்றது. அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு… அதவாது ஏராளமான கற்பனைகளுக்கு நடுவில் கொஞ்சம் வரலாறு”.

the-man-from-earth-movie3

நண்பர்கள் அமைதியாகிறார்கள். கிறிஸ்த நம்பிக்கையாள பெண் தர்ந்து போகிறார். மற்றவர்கள், சிலுவையில் அறைந்தது, உயிர்த்தெழுந்தது, ஜீசஸ் என்கிற பெயர் என்று ஒவ்வொன்றைக் குறித்தும் கேட்கிறார்கள். “என் கையில் ஆனியடித்த தழும்பைத் தேடாதீர்கள். அதெல்லாம் அழுத்தமான சுவாரசியத்திற்காக ஜோடிக்கப்பட்டது. என் கைகளைக் கட்டியிருந்தார்கள் அவ்வளவுதான். திபெத்திலும், இந்தியாவிலும் வலியை உணராதிருக்கவும், உடல் உறுப்பின் செயல்பாடுகளை வெளியிலிருந்து உணரமுடியாதவாறு கிட்டத்தட்ட நிறுத்தும் அளவிற்கு மந்தமாக்கவும் பயின்றிருந்தேன். நான் இறந்துவிட்டதாக நம்பினார்கள். சிலுவையில் இருந்து மாற்றி உடலை ஒரு குகையில் கிடத்தினார்கள். உடல் செயல்பாடுகளை மீட்டுக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தை விட்டு மெல்ல அகல விரும்பினேன். குகை வாசலில் இருந்த ‘பக்தர்கள்’ பார்த்து உணர்ச்சிவசப்பட்டு என்னை ‘உயிர்தெழும்பிய கடவுளாக்கி’விட்டார்கள். சொல்லிப் புரியவைக்க முடியவில்லை, அங்கிருந்து மத்திய ஐரோப்பா நோக்கி வந்துவிட்டேன்.”

இந்த உரையாடலே படத்தின் பெரும்பகுதியை நிரப்புகிறது. இடைஇடையே மற்ற நண்பர்கள் சொல்வதாக வரும் கருத்துக்களும் முக்கியமானவை. கிறிஸ்துவின் தொண்மம் ஹெர்குலிஸ், கிருஷ்ணன் வரை பின் செல்கிறது. ஹெர்குலிஸ் அல்க்மெனி என்னும் கன்னிக்குப் பிறந்தவர், ஸீயஸ் என்னும் இறைத் தந்தையின் ஒரே வாரிசு. ரட்சகர். (ஆங்கிலத்தில் சேவியர், கிரேக்கத்தில் சோடர்). இறந்ததும், ஒலிம்பஸ் மலையில் தனது இறைத்தந்தையுடன் இணைந்தார். பிற்காலத்தில் யேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின இரவு ஜெருசலேமின் கெத்செமான் தோட்டத்தில் தனது இறைத்தந்தையை பிரார்த்தனை செய்தார் என்கிற தொண்மத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். புத்தரின் போதனைகளான அன்பு, காருண்யம், சகிப்புத் தன்மை ஆகியவற்றின் மலிவான சாயல்களே கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு இடத்தில் ஜான் சொல்கிறார், “நான் என் பெயரை எப்போதும் ஜான் என்று தான் வைத்துக் கொள்கிறேன். ‘உயிர்த்தெழுதல்’ பரவிய பிறகு யோஹனன் (கடவுள் கருணையானவன்) என்ற ஹீப்ரு சொல்லுடன் என் பெயர் குழம்பியது. அது பிறகு இறவாமையின் சாட்சியாகி, நானே ரட்சகன் என யாஷ்வா (ரட்சகர் கடவுள்) என்ற பெயர் ஆனது. யாஷ்வா கிரேக்கத்தில் ஈசோயஸ் ஆகி, பின்னர் லத்தீனில் ஈசஸ் ஆகி, கடைசியாக ஜீசஸ் ஆகியது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருந்தது. நான் இறைவனின் மகன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை. எனக்கு என்னைவிடச் சிறந்தவரான ஒரு குரு இருக்கிறார், அவர் சொன்னதைச் சொல்கிறேன் என்று தான் சொன்னேன். ஒருபோதும் இறந்தவர்களை உயிர்ப்பிக்கவில்லை, அற்புதங்கள் நிகழ்த்தவில்லை, யூதர்களின் ராஜா என்று கூறிக்கொள்ளவில்லை, சிலருக்கு வைத்தியம் செய்தேன், அது நான் கிழக்கில் கற்றுக் கொண்ட வைத்திய முறைகள். அப்புறம் எல்லாம் வாடிகனின் அபத்தக் கருத்துக்கள் “.

the-man-from-earth-movie2

உளவியலாளர், ஜானை சிகிட்சைக்கு வரவேண்டும் என்கிறார். பொய்க் கதைகளால் நண்பர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். அவர் சொன்னதெல்லாம் வெறும் கதை என்று அறிவிக்க வேண்டும் என்று சொல்கிறார். பிறகு அவரே ஜான் சொன்னவற்றை நம்பும் படியாக ஒரு சுவாரசியத் திருப்பத்துடன் படம் நிறைவடைகிறது.

ஆறு பேர் அமரக்கூடிய ஒரு சிறிய வீட்டுக் கூடத்தில் மொத்தப் படமும் நடக்கிறது. வேறு எந்த வெளிப்புறப்படப்பிடிப்பும், பார்வையாளனை பரபரப்பிற்குள்ளாக்கும் எந்த சம்பவங்களும் கிடையாது. இவர்களின் உரையாடல் தான் படமே. சூரியன் அஸ்தமனமாகத் தொடங்கும் ஒரு மாலை வேளையில் உரையாடல் நடக்கிறது. இடையே பீத்தோவனின் புகழ்பெற்ற ஏழாவது சிம்பொனியின் இரண்டாவது கட்ட இசைக்கோர்வை ஒலிக்கிறது. குளிர் ஏற ஏற கனப்பின் வெளிச்சத்திலும், கதகதப்பிலும் உரையாடல் தொடர்கிறது. கதையும், திரைக்கதை அமைத்தவிதமும், கூர்மையான வசனமுமே படத்தின் பலம். கொஞ்சம் கூட சலிக்காமல் பார்க்க வைக்க்கிறது. கிறிஸ்தவத்தை தெளிவான விமர்சனங்களால் கேள்விக்குள்ளாக்குகிறது. சுருக்கமாக வின்னில் இருந்து வந்த தேவகுமாரன் யாரும் அங்கே இல்லை, மண்ணில் இருந்து வந்த சாதாரன மனிதன் தான் என்கிறது ‘The Man from Earth’ படம். ஒட்டுமொத்த கிருத்துவமே மதவாதிகள் பாகனிய நம்பிக்கைகளில் இருந்து அள்ளிச் சேர்த்த தொண்மங்களை பொய் வரலாற்றால் மேலும் பெருக்கி, நம்பிக்கை, விசுவாசம், நரகம், சொர்க்கம், பாபம், தண்டனை, மீட்பு என மிரட்டிக் கட்டிவைத்தது தான் என்கிறது படம். இந்த அறிமுகக் கட்டுரையில் விவரிக்காமல் விட்டது படத்தில் நிறைய இருக்கிறது. அமெரிக்காவின் தொலைக்காட்சிகளில் வெளியான புகழ்பெற்ற அறிவியல் புனைவுத் தொடரான ‘ஸ்டார் ட்ரெக்’கின் பல அத்தியாயங்களை எழுதிய அறிவியல் புனைவு எழுத்தாளர் ஜெரோமி பிக்ஸ்பி எழுதிய கதையை ரிச்சர்ட் ஷென்க்மான் இயக்கியுள்ளார். மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அறிவியல் புனைவு வகையில் ஒரு புதிய அலையையையும், பின்தொடரல்களையும் உருவாக்கிய படம் எனப்படுகிறது. அந்த அளவிற்கு இப்படம் வரவேற்கப்பட்டது. அனைவரும், குறிப்பாக கண்களை மூடிக்கொண்டு நம்பும் கிறிஸ்தவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , ,

 

36 மறுமொழிகள் திரைப்பார்வை: The Man from Earth

 1. captainjohann on December 21, 2013 at 9:05 am

  There are Myths like Christmas father created in Every religion. The essence of Christianity is ” Love they Neighbor as yourself” . Well it is very difficult to follow

 2. sumaithangi kuppuswamy on December 21, 2013 at 10:18 am

  Will this film ever be relesed in theatres? I doubt.

 3. ஆனந் அமலன் on December 21, 2013 at 11:24 am

  தமிழில் குறைந்த செலவில் நாடகமாகவோ, குறும்படமாகவோ எடுத்து வெளியிட ஏதுவான ஒன்று.

 4. Geetha Sambasivam on December 21, 2013 at 11:27 am

  விளக்கமான விமரிசனத்திற்கு நன்றி. இப்படி ஒரு படம் வந்திருப்பதே இந்த விமரிசனம் படித்ததும் தான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

 5. kmv on December 21, 2013 at 1:03 pm

  will you accept if similar movie is taken about Krishna/ Ram / Murugan….?

 6. S Narayanan on December 21, 2013 at 1:13 pm

  இந்தியாவில் இத்திரைப்படம் திரையிடப்படுவது சந்தேகமே, பார்க்க ஆவலாயுள்ளது. வழியேதும் இருந்தால் தெரியப்படுத்தவும்

 7. தக்ஷிணாமூர்த்தி on December 21, 2013 at 4:18 pm

  //kmv on December 21, 2013 at 1:03 pm
  will you accept if similar movie is taken about Krishna/ Ram / Murugan….?//

  இத்தகைய விஷயங்களைப் படித்ததும் சற்றும் யோசிக்காமல் முதலில் செய்யமுடிகிற எளிய எதிர்வினை இந்தக் கேள்வி தான்.

  நண்பரே, யேசு, பைபிள் இரண்டின் அடிப்படைகளையே உடைத்தெறியும் கடும் விமர்சனங்களை, தொல்லியல் ஆதாரங்களை வைத்தவர்கள் இந்துத்துவர்கள் அல்ல, கிறிஸ்தவ உலகமான மேற்கைச் சார்ந்த ஆய்வாளர்களே. யேசு என்ற ஒரு மனிதரே இல்லை என அவர்களின் வாதம் இருக்க, இந்தப் படம் உண்மையில் கிறித்தவ உலகில் யேசு மீதும்,பைபிள் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை கொஞ்சம் ‘மட்டுப்படுத்தி’ யேசு கன்னிக்குப் பிறந்த தேவதூதர் இல்லை, மண்ணில் வந்த சாதாரன மனிதர் என்கிறது.

  ஒருபுறம், காலத்தையே கி.மு/கி.பி. என கிறித்துவின் பிறப்பை அடிப்படையாக வைத்து பிரித்துத் தொகுக்கும் அளவுக்கு யேசுவின் பிறப்பை ஒரு உண்மையான வரலாற்றுச் சம்பவமாகவே நிறுவிட முற்படும் போது அது பரிதாபமாக குலைந்து சரிகின்றது. மறுபுறம், மதவெறியர்களும், மதமாற்ற கூலிகளும் இந்தியாவின் வரலாற்றைத் திரித்து, இந்து தெய்வங்களை பிசாசு, சாத்தான் என தொடர்ந்து விஷத்தைக் கக்கிப் பிரச்சாரம் செய்கையில் அறிவியல் சான்றாதாரங்கள் பொய்ப் பிரச்சாரங்களை உடைத்துத் தூளாக்கி வருகிறது. தூவாரகை வெறும் கற்பனையல்ல, உண்மையான நகரம் என ஆழ்கடலாய்வுகள் ஒரு புறம் சந்தேகத்துக்கிடமின்றி கண்முன் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. மகாபாரதத்தில் வரும் கோள், நட்சத்திரங்களின் நிலை பற்றிய குறிப்புகளை நவீன வானியல் மென்பொருளைக் கொண்டு பரிசோதிக்கையில் அவை அச்சுப்பிசகாமல் சரியாக நிகழ்ந்தவை என்று தெளிவாகிறது. உண்மையென நம்பவைக்கப்பட்டவ யேசு கதை பொய்யாய்ப் போக, பொய்யென இழித்துரைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன் வரலாற்று மனிதனாக எழுந்துவருகின்றான். காலம் மாறுகிறது நண்பரே! கொஞ்சம் சுற்றி நடப்பனவற்றைக் கவனியுங்கள்.

  மற்றொரு முக்கியமான விஷயம், இந்துமதம் எப்போதும் கண்மூடித்தனமான நம்பிக்கை ஒன்றே வழி என வலியுறுத்துவதில்லை. அறிவுள்ள ஒரு இந்துவுக்கு தொண்மங்களின் அடியாழத்திலிருக்கும் தரிசனமும், தத்துவமுமே தான் சென்றடைய வேண்டிய இலக்கு எனத் தெரிந்திருக்கும். இந்தப் படம் போல் அல்ல, இதை விட மிகக்கடுமையான விமர்சனங்களையும், மதமாற்ற சக்திகளாலும், மத வெறியர்களாலும் பணபலத்தாலும், அதிகாரத்தோடும் நடத்தப்படுகின்ற அவதூறுகளையும் கூட இந்துமதம் தன் தர்க்க-தத்துவ பலத்தால் தாண்டி வந்துள்ளது. எனவே இப்படி ஒரு படம் இந்து தெய்வங்களை குறித்து எடுக்கப்பட்டால் அது புதிதல்ல. ஒரு உதாரணம், சமீபத்தில் இந்துக்கள் தங்கள் அன்னையாகப் போற்றி வணங்கும் தேவிதுர்கையை நவராத்ரி சமயத்தில் ‘விபச்சாரி’ என்று கூறி ஒரு பல்கலைக்கழகத்தில் செமினார் நடந்தது பற்றி தெரியுமா? இது போல் எண்ணற்ற சம்பவங்கள் உள்ளது. அவற்றைப் பற்றிப் படித்திருக்கிறீர்களா? இத்தகைய சம்பவங்களின் போது ஒரு முறையேனும் எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியுள்ளதா? கேட்டிருந்தால் மகிழ்ச்சி, இல்லையென்றால், உங்களைப் போன்றவர்கள் தங்கள் மனசட்சியை நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

 8. V.RAJA SUBRAMANIAM on December 21, 2013 at 5:17 pm

  Dear sir,

  Daily i read the tamil hindu paper its really super its very easy to read and understand any matters in tamil for school students at very low cost. In this paper not only local news all over the world news like political, sports, leaders speeach, cinema and etc.

 9. கதிரவன் on December 21, 2013 at 7:43 pm

  அந்த பல்கலைக்கழகத்தின் பெயரையும், முகவரியையும் , அதன் மீது காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டதா, அப்படி புகார் கொடுக்கப்பட்டிருந்தால், காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதையும் தெரிவித்தால் நன்றாயிருக்கும். அது பற்றிய மேலும் தகவல்களை கொடுத்தால் , எதிர்காலத்திலாவது அந்த “தான் கள்ளி பிறரை நம்பாள்” பல்கலைப்போலியை நாம் எச்சரிக்கையுடன் அனைவரும் அறியச்செய்யவேண்டும்.

 10. கதிரவன் on December 21, 2013 at 7:52 pm

  அன்புள்ள திரு ராஜசுப்ரமணியம்,

  ” இந்து “பத்திரிகை ஏறக்குறைய இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அடிவருடிப் பத்திரிகை.அது எந்த மொழியில் வந்தாலும் , ஒரே லட்சணம் தான். செகுலர் என்று சொல்லிக்கொள்ளும் மோசடிக்காரர்களின் கைப்பாவை. கம்யூனிஸ்ட் சீனாவுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் பல செய்திகளை பிரசுரிக்காமல் மூடி மறைத்த ஓர வஞ்சனைப் பத்திரிகை. மேலும் அவசரநிலைக் காலத்திலும் ஆளுங்கட்சிக்கு அவர்கள் அடித்த ஜால்ரா இன்றுவரை சகிக்க வில்லை. ஜனநாயகம், சுதந்திரம், இவற்றுக்கு எதிராகவும், ஆளுவோருக்கு சொம்பாகவும் செயல்பட்ட அந்த இந்துப் பத்திரிகை ஆங்கிலம், தமிழ், என்று நம் நாட்டில் உள்ள இன்னபிற மொழிகள் அனைத்திலும் புதிய பெயரில் , புதிய பொய்வேடம் இட்டு வந்தாலும், அது ஒரு அழுக்குத்தான். அவர்கள் கண் சிவப்புக்கண். அவர்களுக்கும் உண்மை தெரியாது, வாசகர்களையும் உண்மையை தெரிந்துகொள்ள விடமாட்டார்கள். அப்பத்திரிக்கை தமிழ் நாட்டை பிடித்த ஒரு சாபக்கேடு.

 11. க்ருஷ்ணகுமார் on December 21, 2013 at 9:22 pm

  \\ மிகக்கடுமையான விமர்சனங்களையும், மதமாற்ற சக்திகளாலும், மத வெறியர்களாலும் பணபலத்தாலும், அதிகாரத்தோடும் நடத்தப்படுகின்ற அவதூறுகளையும் கூட இந்துமதம் தன் தர்க்க-தத்துவ பலத்தால் தாண்டி வந்துள்ளது. \\

  அறிவு பூர்வமான தர்க்கங்கள் தொடர்க. அருமையான வ்யாசத்துக்கு வாழ்த்துக்கள்.

 12. paandiyan on December 21, 2013 at 10:03 pm

  //will you accept if similar movie is taken about Krishna/ Ram / Murugan….?//
  கிருஷ்ணரை பற்ரி சிசுபாலன் பேசியதாக வரும் விசயங்களை
  விடவா ஒரு ஸிநிமா சொல்லிவிடப்பொகின்றது ?
  ஏதோ ஒரு கருத்து போட்டால் போகின்றது என்று ஒரு சிலபேர்கள்…

 13. ariyan on December 21, 2013 at 10:58 pm

  கிருத்தவ புத்தகம் சொல்வது எல்லாம் கட்டு கதை என்பது போல் இந்த திரைப்படம் உறுதி செய்கிறது ! இந்த படத்தை பார்த்து மக்கள் புத்தி தெளிவு பெறட்டும்

 14. RV on December 22, 2013 at 12:01 am

  பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டீர்கள், அறிமுகத்துக்கு நன்றி!

 15. Subramaniam Logan on December 22, 2013 at 5:35 pm

  வணக்கம்
  அருமையான informativ வான பதிவு.அதிலும் \ மிகக்கடுமையான விமர்சனங்களையும், மதமாற்ற சக்திகளாலும், மத வெறியர்களாலும் பணபலத்தாலும், அதிகாரத்தோடும் நடத்தப்படுகின்ற அவதூறுகளையும் கூட இந்துமதம் தன் தர்க்க-தத்துவ பலத்தால் தாண்டி வந்துள்ளது. \\ என்ற கருத்தும் KMV என்ற ஒரு நபருக்கு நீங்கள் அளித்துள்ள பதிலும் இதுவரையில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்று தேடவைக்கின்றது. நீங்கள் தொடர்ந்து எழுதுபவராக இருந்தால் பதிவிடும் வலைதளத்தை அறியத்தரவும்.
  சர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்.

 16. kmv on December 22, 2013 at 7:58 pm

  This movie did not hit screens but made as DVD and was on top numbers in the net during 2007. (Admin can add this info),

  Mr.Dakshnamoorthy. Thanks for the message,

 17. vinoth on December 23, 2013 at 9:42 am

  //….//will you accept if similar movie is taken about Krishna/ Ram / Murugan….?//
  கிருஷ்ணரை பற்ரி சிசுபாலன் பேசியதாக வரும் விசயங்களை
  விடவா ஒரு ஸிநிமா சொல்லிவிடப்பொகின்றது ?
  ஏதோ ஒரு கருத்து போட்டால் போகின்றது என்று ஒரு சிலபேர்கள்…///

  நமது நோக்கம்…
  படம் குறித்தான சில கேள்விகள் மட்டுமே. இதன் நோக்கம் வாசகர்களைப் சிந்தித்து பார்க்கத் தூண்டவும், அதன்வழி படம் பேசும் முக்கியமான கருத்துக்களைக் குறித்து தக்ஷிணாமூர்த்தியிம் கருத்து எப்படிபட்டது என்பதை மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுரீதியான ஆர்வத்தைத் ஏற்படுத்துவதும், வெற்று நம்பிக்கையை உதறி தர்க்கப் பூர்வமாக சிந்திக்கச் செய்வதுமே.

  இதே படத்தின் தொடர்ச்சியை .. தமிழில் எடுத்தால் கதை எப்படி இருக்கும்… ஒரு கேமரா.. சில மனிதர்கள் மட்டும் வைத்து ஒரே இடத்தில் உலக வரலாற்றை பேசும் அற்புத்மான சப்ஜட் இல்ல.. அதனால் அதை நாம் எப்படி தொடரலாம் என்று பார்ப்போம்…

  இது படம் பற்றியும் , வரலாறு பற்றியும் ஒரு பார்வைமட்டுமே…
  அதை நாமும் செய்யலாம் இல்லையா…

  சூப்பரு இல்ல…
  ====================================================

  இனி.. மேன் பிரம் ஏர்த்…ஜான் .. வேலையை ரிசைன் பண்ணிட்டு… உலக டூர் போரார்… போர வழியில் இந்தியாவில் .. தமிழகத்தில் சுற்றி பார்க்கும்போது .. ஜப்பசி மாச மழைகாலம்.. குளிரும் கூட.. தீபாவளி முடுந்த நேரம்… எந்த கடையிலும் கூட்டம் இல்லை…

  நம்ம அரக்கோணம் ரயில்வே ஸ்டெசன் அருகே இருக்கும் 1760ம் எண் டாஸ் மாக் கடை பாரில் ஒரு ஜானிவாக்கர் புல் வாங்கி குளிருக்கு இதமாய் சாப்பிடுபோது….

  எதிரில் வந்து உட்கார்ந்தவர்… உங்களே எங்கேயோ பார்த்திருக்கேனே..னு கேட்டர்…

  இல்ல இல்ல .. நான் சுற்றுலா பிராயானீ.. வெளீ நாட்டுல இருந்து வர்ரேன்.. அப்படின்னு தப்பிக்க பர்த்தார்.. இன்னம் ரேண்டு மூண்னு பேர் சேர்ந்து கிட்டு ரெண்டு ரவுண்ட் சாப்பிட்டு பேசினாங்க….

  எந்த ஊர் என்ன பன்றீங்க என்று வற்புத்தி கேட்டவுடன்… நான் 14000 வயதானவன்.. இந்தியாவில் பல காலம் குடியிருந்தேன்.. என்று சொன்னார். அப்பன்ன .. இந்திய வரலாற்றில் யாரை பார்த்திருக்கின்ன கேட்டாங்க… பார்க்காதது யாரை வேண்ணா கேளூங்கன்னார்..

  யப்பா என்ன மழை என்ன குளிர்.. .. கோவர்த்தன மலையை குடையா பிடிச்சு ஊரையே காத்தாரமே கிட்னர்… அது பற்றி உங்களுக்கு தெரியுமான்னு கேட்டாங்க…

  அட ஏங்க… உஙக் ஊர் அம்பிகளை உங்களுத்தெரியாதா….

  இப்போ மோடியை தூக்கி பிடித்து பிரசாரம் செய்யும் படை பத்ரிநாத் சுனாமியில் செய்த பிரச்சாரம் தெரியாதா?

  அரசு கணக்குபடி வெள்ளத்தில் சிக்கியோர் 50 ஆயிரம் பேர் குஜராத் மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 5% .. அப்படின்ன வெள்ளத்தில் சிக்கியோரில் குஜரத்திகள் 2500 பேர் சரசரியாக இருக்கலாம்…

  ஆனா மோடி இன்னோவ காரில் 30 ஆயிரம் பேரை மீட்டார்னு பரப்பலையா… அதை குறித்து கேள்வி வந்த்வுடன் பீஸ் போன பல்பு மாதிரி அதுக்கு என்த பதிலும் இதுவரை வரலியே….

  அதெ போல்.. அன்றைக்கு மழைக்கு கிட்னர் கட்டியிருந்த வேட்டியை தலைக்கு பிடித்துகொண்டு.. கொண்டு நடந்தார்.. அவரின் ஆடு மாடும் கூட வந்தது …

  இதை.. வழக்கம் போல பில்ட்டப்பு பண்ணீட்டாங்க…. இதை எல்லாம் யாரும் கேட்டுட கூடாதுன்னு தான்… கல்வி கேள்வியெல்லாம் அவங்க கட்டுப்பாடில் வைத்தாங்க… அவ்வளவு தான்…

  இன்னம் பால கிட்னரின் லீலை முதல்.. ராம காதை வரை.. ஆசியா முழுக்க இருக்கும் புத்தம் இந்தியாவில் இல்லாத வராலாறு வரை பலதும் இருக்குன்னார்…

  புல் பாட்டில் காலியாடுதா .. மழையும் விட்டது… ஜான் சரி நான் புறப்படறென்..
  பக்கத்தில் இருக்கும் ஓட்டலில் தான் தங்கி இருக்கேன்.. நாளை பார்ப்போனு புரப்பட்டர்…

  ===============================================================

  இப்படி ஒரு பார்வையை நாமும் பதிவு செய்யலாம் .. படமும் எடுக்கலாம் .. தமிழ் இந்தி ஆங்கிலம் மூன்றிலும்….

  எந்த வேசத்துக்கு யாரு பொருந்துவர்…?

  மேலும் மழை பின்னனில் ஒரு குத்து பாடு பாரில் வைச்ச சூப்பர் ஹிட்டாக்கலாம்…

  இத் வேறும் கற்பனை மட்டுமெ… யாரைக்கும் பதில் கொடும்மும் நோக்கம் நமக்கு இல்லை…

  இதை தொடர்ந்தால் இந்திய வரலாறை அலசாம் .. செய்லாமா தக்ஷிணாமூர்த்தி?

 18. Prabhakaran on December 23, 2013 at 8:36 pm

  Vinoth super,wer r u dhakshna i think u r speaking with krishnar..,

 19. தக்ஷிணாமூர்த்தி on December 23, 2013 at 8:41 pm

  திரு.vinoth,

  புத்திசாலித்தனமாக எதையாவது சொல்லியே ஆகவெண்டுமென்று ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள். முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் உங்கள், கதை, திரைக்கதை, வசனத்தில் “ஒரு இதுவே” இல்லை. அடித்துப் பிரிக்க வேண்டாமா? உங்களைச் சொல்லிக் குற்றமில்லை, உங்களுக்கு சரியாக பயிற்சி கொடுக்கவில்லை போல. எமாற்றிவிட்டார்கள் உங்களை, பாவம்.

  இந்த விஷயத்தில் உங்களுக்கு முன்னோடிகள் நம் தமிழ்கூறும் நல்லுலகில் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு டாக்டர்.தெய்வநாயகம், டாக்டர் தேவகலா ஆகியோர் தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லிக் கொடுத்ததே தாமஸ் தான் என்று ஒரு பெரிய திரைக்கதை எழுதி கைவசம் வைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய பணமுதலீட்டில் படம் எடுக்கப்போவதாக சொல்லிக்கொடேஏஏஏ இருக்கிறார்கள். தேடிப்பிடித்து வாசியுங்கள். ப்ரோ. சாருஹாசன் நடித்து கிறிஸ்தவ மிஷனரிகளின் கும்பலுக்குள் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘ஒளியைத் தேடி (அல்லது) தமசோமா ஜ்யோதிர் கமய’ என்ற ‘வரலாற்று’ திரைப்பட டிவிடியையும் ஒரு பயிற்சிக்காகப் பார்க்கலாம். உங்களால் முடியும், நம்பிக்கை தான் முக்கியம். மனம் தளராதீர்கள்.

 20. krishnamoorthy on December 24, 2013 at 10:52 am

  எல்லோரும் இது ஏன் என்ற கேள்வியை முன் வைக்க ஆரம்பித்து விட்டார்கள் .இது வேறு ஒரு தளத்தின் ,உக்கிய முன்னேற்றம் .
  அற்புதமான பதிவு .யார் மனத்தையும் புண்படுத்தாத வார்த்தைகளின் தொகுப்பு.அருமை .இந்த பதிவரின் வேறு எழுத்துக்களை எங்காவது படிக்க முடியுமா ?இருந்தால் kmsukiracer@gamil.com க்கு சொல்லுங்களேன்.

 21. Satish on December 24, 2013 at 12:54 pm

  Mr.KMV, Vinoth,
  Hope you know that Vijay TV is telecasting a seriel called ‘Mahabaratha’. Its a Hindi seriel from Star TV dubbed in Tamil. It started with a lot of fanrare..flamboyant ads, a neeya naana by Gopinath etc. I too expected a new magnum opus and was thrilled that, even today, people are there to picturise Mahabaratha. But the very first episode, first 5 mins, I was convinced that its not mahabaratha, but mahabaratha mathiri…
  Later after a couple of weeks again happened to see that, it was a negative of Mahabaratha, meaning, the same story, same characters but the intention is like any typical seriel…’unna azhichiruven, unna konnuduven, unna vazhavidamatten’ types. Later I came to know and even saw that myself last week..before and end of the seriel, there is a caption saying, ‘all characters and story in this seriel are fictitious and resemblense to any other story is incidental. this is not to hurt anyones sentiments’.
  Ithu eppadi irukku? Inspite of all these, Hindus never protest, because the dharma teaches us tolerance. Maybe that’s the weakness too…which others are exploiting.
  I am telling this, because, you people asked, what if someone takes a similar picture with Krishna. I wanted to tell you that, they are already doing it and you are too late to ask this question 🙂

 22. க்ருஷ்ணகுமார் on December 24, 2013 at 4:13 pm

  \\ ஆசியா முழுக்க இருக்கும் புத்தம் இந்தியாவில் இல்லாத வராலாறு வரை பலதும் இருக்குன்னா \\

  வினோதரே, வரலாறு அப்படீன்னா என்ன?

  இர்ஃபான் ஹபீப், ரொமீலா தாப்பர், கிண்டு ராம் இவர்களெல்லாம் எழுதும் கதைப் புத்தகங்களா?

  சிக்கிம், லத்தாக், ஹிமாசல ப்ரதேசம் போன்ற ப்ரதேசங்கள் ஹிந்துஸ்தானத்தில் இல்லையா? அல்லது அங்கு புழங்கும் மதங்களில் பௌத்தம் இல்லீங்களா?

  அல்லது இந்த இடங்களில் எல்லாரும் அல்லேலூயா பாட ஆரம்பித்து விட்டார்களா?

 23. paandiyan on December 24, 2013 at 5:16 pm

  //நமது நோக்கம்…
  படம் குறித்தான சில கேள்விகள் மட்டுமே. இதன் நோக்கம் வாசகர்களைப் சிந்தித்து பார்க்கத் தூண்டவும், அதன்வழி படம் பேசும் முக்கியமான கருத்துக்களைக் குறித்து தக்ஷிணாமூர்த்தியிம் கருத்து எப்படிபட்டது என்பதை மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுரீதியான ஆர்வத்தைத் ஏற்படுத்துவதும், வெற்று நம்பிக்கையை உதறி தர்க்கப் பூர்வமாக சிந்திக்கச் செய்வதுமே.//

  இப்படி வித்தியாசமாக படம் எடுத்தவர் உண்மை நிலை பற்ரி படித்தேன் முன்பு . இப்போ இங்கு அது.

  ஆட்டோ வந்து நிற்கும். ஜான் ஆபிரஹாம் சீட்டில் உட்கார மாட்டார். கால் வைக்கிற இடத்தில் வெளிக்கி இருப்பது போல் குந்தி இருப்பார். அவர் கூட வருபவர் இறங்க சொல்லி கெஞ்சுவார். ஆபிரஹாம் ரொம்ப அழுக்காக ஆடை யுடன் எப்போதுமே குளிக்காதவர் என்று பார்த்தவுடன் தெரியும்படி உடலும் ரொம்பவே அழுக்காக இருப்பார். ஆட்டோவில் சிரித்துகொண்டே குந்திய நிலையில் இறங்க மறுப்பார். ஆட்டோகாரன் கத்துவான். இவர் இறங்க மாட்டார். எடிட்டிங் ரூமிலிருந்து இவருடைய எடிட்டரும் வந்து மலையாளத்தில் இறங்கும்படி கெஞ்சுவார் . இவர் சிரித்துகொண்டே மறுப்பார். வெகு பிரயாசைக்கு பின் இவரை சிலர் ஒன்று சேர்ந்து வலுக்கட்டாயமாக ஆட்டோ விலிருந்து இறக்குவார்கள்.

  அடுத்த முறையும் அதற்கடுத்த முறையும் அதற்கடுத்த முறையும்
  ஆட்டோ வந்து நிற்கும் .நான் காண நேர்வது அதே காட்சி தான்.

  நான் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த படத்தின் இயக்குனர் ‘ ராஜநாயஹம் ! அவார்டு வாங்கனும்னு ஆசைப்பட்டா கடைசியில் இப்படி தான். தரைக்கு இறங்கி வா. நீயும் வித்தியாசமா படம் பண்ணனும்னு நினைக்கிறியா ? பார்த்துக்க.உனக்கும் இது தான் கதி ‘ என எல்லோரும் அங்கே ஜான் ஆபிரகாமை வேடிக்கை பார்க்க கூடியிருக்கும் போது என்னை பார்த்து உற்சாகமாக சத்தம் போட்டு சொல்வார். வெராண்டாவில் உள்ளவர்கள் சிரிப்பார்கள்

 24. vinoth on December 26, 2013 at 10:58 am

  வெரி குட்…..

  நீங்கள் புளகாங்கிதப்படும் உண்மை… வரலாற்று உண்மை பற்றி அதன் இந்திய வெர்சன் எப்படி இருக்கும்.. அதை எப்படி பேசலாம்..என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை….

  மேற்கு நாடுகளில்.. அதிகம் இருப்பது கிறித்தவம்.. அதனால் அதை பற்றிய விமர்சனம் வரும்.. அதையும் ஏற்றுகொள்ளூம் மனப்பக்குவம் இருக்கின்றது…

  மோடி குறித்த கேள்வி.. கிட்னர் குறித்த ‘அறிவுப்பூர்வமான கேள்விக்கு பதில் இருக்கா இல்லையா?’
  முதலில் இதற்கு பதில் சொன்னால் அடுத்தது பற்றிப் பேசலாம்..

  தாமஸ் மட்டுமல்ல… இன்னம் பல நூறு விஷயங்கள் கிறித்துவத்திலும் .. இசுலாமிலும் இருக்கு… பதிலளிக்க நான் தயார். .. மோடி , கிட்னர் பற்றி நீங்கள் பதிலளிக்கவில்லையெனில்.. என்னாலும் உங்கள் கேள்வியை கண்டுகொள்ளாமல் இருக்க இயலும்.

  1) இங்கு அப்படி ஒரு படம் எடுத்தால் அதாவது பெரும்பான்மை இந்து மதத்தை பற்றி விமர்சனம் செய்து படம் எடுத்தால்… எப்படி இருக்கும்???

  2) சாதி மத வெறி முதல்.. ஆளும் வர்க்கத்துக்கு சாமரம் வீசி.. எளியோரை ஏய்பது வரை.. தன் சொந்த மக்களை சுரண்டுவது வரை பல நூறு பிரச்சனை இந்து மதத்தில் இருக்கிறதா இல்லையா? இது குறித்து தட்சணா மூர்த்தியோ.. இல்லை தமிழ் இதுவோ எழுதியதுண்டா?அடுத்த மதத்தை பற்றிய விமர்சனம் என்றவுடன் விழுந்து விழுந்து எழுதினால்… கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிவது போலத்தான்.. திரும்பி வரும்பொது சேதம் இருக்கவே செய்யும்…

  முதலில் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்… மற்றவற்றை ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

 25. vinoth on December 26, 2013 at 11:38 am

  நமது நாட்டை சுற்றிலும் பின்னப்படும் சதி வலை பற்றி பாருங்கள்…

  http://www.youtube.com/watch?v=NGE3yTKWMuo

  மக்களை சாதி மன இனங்களை கடந்து ஒன்று படுத்தி.. ஒரே குரலாக.. நாட்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க வேண்டிய நேரத்தில்…. பிளவு படுத்தக்கூடிய இத்தகய விவாதங்கள் தேவை தானா? நான் கிழி கிழி என்று கிழிக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தால்… சிவன், திருமால் பெண் உரு எடுத்த ஐயப்பன் பற்றியோ…

  இல்லை சீதை பற்றோ பேசியிருக்கலாம். அதற்கெல்லாம் பதில் யாரிடமிருந்தும் வந்ததில்லை…
  எனக்கு யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.. நான் சொல்ல வந்தது …இது தேவையற்றது என்பது தான்.

  எதிர்கால தலைமுறை நம் காலததை பார்க்கும்போது.. இயற்கை வளங்களை.. மண் முதல் தண்ணீர், மரம் வரை கொள்ளையிடும்போது… அண்டை நாடு அரண் அமைக்கும்போது .. 2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த, 5000 வருடத்துகு முன் வாழ்ந்தவர்கள் பற்றி பேசி… இன்றைக்கு இருப்பதை இழக்க்கிறொம்ம்.. காங்கிரசுக்கு மாற்று பஜ என மக்களை நம்பவைப்பது எவ்வளவு பெரிய சதி ?

  ப ஜவும் காங் செய்வவதையே செய்யும் .. இன்னம் அதிகம் செய்யும்…

  அப்படிப்ப சூழ்நிலையில் நமது செயல்பாடு இப்படியென்றால்… எதிர்கால சந்திக்கு பாலை வனத்தை விட்டு சொல்வோம் என்றால் .. எதிர்கால சந்திதி .. நம்மை பற்றி எனன் சொல்வர்?

  இத்தகய பட விமர்சன்ங்கள் தேவையற்றவை… மதங்களின் மீதான விமர்சனங்களை தவிர்த்து..ஆக்கபூர்வமான செய்லபாட்டுக்கு வழி காண்போம்.

 26. க்ருஷ்ணகுமார் on December 26, 2013 at 12:20 pm

  ஸ்ரீமான் தக்ஷிணா மூர்த்தி

  அறிவு பூர்வமான வ்யாசம். அற்ப விதண்டாவாதங்களுக்கு அறிவு பூர்வமான எதிர் வினைகள்.

  இந்த தளத்தில் அவ்வப்போது *முகமூடி சுவிசேஷ சேவைப் படையினர்* பற்பல பெயர்களால் உலா வருவார்கள்.

  சில சமயம் நேர்மையான கருத்துக்களைக் கூட இவர்கள் முன்வைப்பார்கள். அதற்கு மட்டிலும் விதிவிலக்காக நீங்கள் பதிலிறுக்க முயற்சிக்கவும். விழலுக்கு நீரிறைக்க வேண்டாம்.

 27. க்ருஷ்ணகுமார் on December 26, 2013 at 12:43 pm

  \\ தாமஸ் மட்டுமல்ல… இன்னம் பல நூறு விஷயங்கள் கிறித்துவத்திலும் .. இசுலாமிலும் இருக்கு… பதிலளிக்க நான் தயார். \\

  பின்னூட்டங்களால் பேசப்படும் கருப்பொருளிலிருந்து திசை திருப்பும் வல்லமை தெரிகிறதே. பொலிக பொலிக.

  \\ மோடி , கிட்னர் பற்றி நீங்கள் பதிலளிக்கவில்லையெனில்.. என்னாலும் உங்கள் கேள்வியை கண்டுகொள்ளாமல் இருக்க இயலும். \\

  அடியவர் இச்சையில் எவையெவையுற்றன அவை தருவித்தருள் பெருமாளுக்கு ஹரஹரோஹரா!!!!!!!

  \\ சாதி மத வெறி முதல்.. ஆளும் வர்க்கத்துக்கு சாமரம் வீசி.. எளியோரை ஏய்பது வரை.. தன் சொந்த மக்களை சுரண்டுவது வரை பல நூறு பிரச்சனை இந்து மதத்தில் இருக்கிறதா இல்லையா? இது குறித்து தட்சணா மூர்த்தியோ.. இல்லை தமிழ் இதுவோ எழுதியதுண்டா? \\

  ஸ்………….ஸப்பா கண்ண கட்டுதே!!!!!!!!!!

  இதோ ஓரிரு நாட்கள் முன்னர் ஸ்ரீமான் ஜடாயுவின் ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர் என்ற வ்யாசம் பார்க்கவும். குளவி என்ற எழுத்தாளர் மிக சமீபத்தில் ஸ்ரீமான் திருமாவளவன் என்ற தலித் சஹோதர அரசியல்வாதிக்கு எழுதிய லிகிதம் பார்க்கவும். அதே குளவியின் பரமக்குடி பற்றிய வ்யாசம் பார்க்கவும். ஊத்தபுரத்தில் ஹிந்து இயக்கங்கள் ஹிந்து ஒற்றுமைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பார்க்கவும். கிடங்கு கிடங்காய்….. தமிழ் ஹிந்துவில் ஹிந்து இயக்கங்கள் சமுதாயத்தில் உயர்வுதாழ்வு களைய ஆற்றிய பங்களிப்புகள் யாது என்ற விபரங்கள் கிடைக்கும்.

  நீங்களே தமிழ் ஹிந்து தளத்தை ஆராய்ந்து வாசகர்களுக்கு ஒரு விருந்தளிக்கலாமே!

  அஃதாகப்பட்டது நேர்மையின் பாற்பட்டு செயல்பாடு இருக்குமென்றால்!!!!!!!!!!!

  நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
  வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே!
  வாய்ச் சொல்லில் வீரரடி.

  கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
  நாட்டத்தில் கொள்ளாரடீ! – கிளியே!
  நாளில் மறப்பாரடீ

  இங்கு ஸ்ரீமான் கள் ஜடாயு ,அ.நீ போன்ற எழுத்தாளர்களிலிருந்து இங்கு பங்களிக்கும் நான் உள்பட ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் என்ற ஆலமரத்தின் விழுதுகளாய் சமுதாயத்தில் தொடர்ந்து சேவைகள் செய்து வருபவர்களே.

  ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
  மாக்களுக்கோர் கணமும் – கிளியே
  வாழத் தகுதி யுண்டோ?

 28. Srinivasan V on December 30, 2013 at 4:45 am

  பழைய பின்னூட்டம் ஒன்றை இங்கே நினைவு கூறுகிறேன்.
  நன்றி.
  அன்புடன்,
  ஸ்ரீநிவாசன்.

  —–
  ஏசுவின் பிறப்பு, வாழ்க்கை குறித்தும் ஆவணப் பதிவு எதுவும் இல்லை. அதையும் கற்பனை என்று சொல்லிவிட முடியும். பிரசார பலத்தில் உருவான பிம்பம் என்றே சொல்லலாம். நாம் சொல்வதில்லை. மத நம்பிக்கை உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கிறோம். அதற்காக, வா தேவ குமாரனைக் கும்பிட்டுப் பரம பிதாவிடம் போய்ச் சேரலாம் என்றால் எப்படி? எல்லாம் ஏசுவே என்று பஜனை பாடி பிற மதஙகளை தூஷித்து மத மாற்றம் செய்ய ஆரம்பிப்பதால்தான் ஏசுவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாகிறது. முதலில் டிசம்பர் 25 ஏ ஏசுவின் பிறந்த நாள் அல்லவே? அதாவது தெரியுமா இங்கே மதம் மாறிக் கிறிஸ்தவர்களானவர்களின் பரம்பரைக்கு?

  -மலர்மன்னன்

  http://www.tamilhindu.com/2011/04/should-hindus-worship-jesus/

  மலர்மன்னன் on October 31, 2012 at 7:15 am

 29. kmv on January 1, 2014 at 10:54 am

  I doubt any one will take a movie on any Hindu god , questioning the worship or with similar lines of probing. Even if taken, the opposition will be minimal.

  Now Rephrasing the question, why no Hindu organisation is protesting the present day cartoons which make all Hindu gods as comic characters and depict like superman.? (Note: no such Major cartoons are made for other religion figures)

 30. கரிகாலன் on January 4, 2014 at 5:00 pm

  https://www.youtube.com/watch?v=B1JsfQwHr2g இயேசு டிசம்பர் 25 பிரக்கவில்லை உண்மையே.. ஆனால் அவர் பிறந்தார் என்பதும் உன்மையே

 31. கரிகாலன் on January 6, 2014 at 6:32 am

  கிறிஸ்த்தவம் இப்படி குறைந்த காலகட்டத்திற்க்குள் வளறகாரனம் அது தேவனுடைய வார்ததையாக இருக்கிறது. உதராணம் வேதத்தில் இருந்து சில வசணங்கள் *

  அப்போஸ்தலர் 5: 36 ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான். ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள். அவன் மடிந்துபோனான். அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.

  37 அவர்களுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான். அவனும் அழிந்து போனான். அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.

  38 அப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்.

  39 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது. தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.

  40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.

  41 அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,

  42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.

 32. sarang on January 6, 2014 at 3:25 pm

  வினோத்

  கிழி கிழி என்று கிழியுங்களேன். அச்சு காம்ரேடுகளை போல நீங்கள் பெறுகிறீர்கள்.

  புராணங்கள் வெகுவாக ஒரு இயற்கை நடப்பினை குறிக்கவோ அல்லது ஒரு கடினமான தத்துவத்தை எளிமையாக விளங்கிக் கொள்ளவோ வந்தவை. புராணங்களில் வரும் விடயங்களுக்கு பின்னால் தத்துவ பிணைப்பு இருக்கும்.

  திரிபுர சம்ஹாரத்தை எடுத்துக் கொள்ளுங்களேன், அது ஜாவா சுமத்ரா பகுதியில் நடந்த ஒரு மிகப் பெரிய இயற்க்கை சீற்றத்தை குறிக்கிறது.
  மத்ஸ்ய அவதாரம், ஹிமாலய மலை உருவானதை குறிக்கும்.

  பாகவதம் முழுவதுமே ப்ரம்ஹ சூத்ரம் என்ற மிக கடினாமான தத்துவ விசாரத்தை எளிமை படுத்தி சொல்வது.

  இரண்டாயிரம் ஐயாயிரம் ஆண்டுக்கு முன் இருந்தவர்கள் எப்படி இந்த நீர் வளம் நில வளம் கெடாமல் இருக்க சிந்தனை செய்தார்கள் என்று கொஞ்சம் யோசியுங்களேன். ஒரேடியாக அவர்களை முட்டாலாக்காதீர்கள். பாம்பை பார்த்தா கொள்ளாமல் இருக்க அவர்கள் பாம்பை ஒரு தெய்வீக வடிவமாக கண்டார்கள். பாம்பு தான் சார் சூரியனிலிருந்து வரும் விஷ கதிர்களை ஜீரணித்து நம்மை காக்கிறது. எறும்பை பார்த்தல் மருந்தடித்து கொள்ளாமல், வாசலில் கோலம் போட்டு வீட்டுக்கு வெளியே எறும்பை வைத்தார்கள்.

  பல அரச மரங்கள் சாமி மரமாக்கப்பட்டதற்கு காரணம் அவை நீர்வளத்தை பாது காப்பதனால் தான்.

  எல்லாருக்கும் நீங்கள் விஞான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது பாருங்கள். மெத்த படித்த உங்களுக்கு இதெல்லாம் குருட்டு நம்பிக்கையாக இருக்கலாம். ஆனா பாருங்க இது நல்லா வேலை செய்தது, அது ஒரு வாழ்கை முறை அவ்வளவு தான்.

  விஞானம் படித்தவன் தான் அதிகமாக சுரண்டுகிறான், அழிக்கிறான். பல விதமான டிரில்லர் கண்டுபிடிச்சு மன வளத்தை கெடுக்கிறான்.

  முதலில் முன்னோரை முட்டாள்கள் என சிந்திப்பதை நிறுத்துங்கள். உங்களை அதி மேதாவி என்று எண்ணுவதை நிறுத்த்துங்கள். எதோ உங்களுக்குள் பெரிய ஆதங்கம் இருப்பதுபோல பாவிப்பதை தவிருங்கள்.

  உங்களால் முடிந்தால் நீங்கள் ஆதங்கப்படும் நிலை மாற என்ன செய்தீர்கள் என்று பட்டியல் இடலாம், நாங்களும் தெரிந்து கொண்டு பின்தொடருகிறோம்.

 33. பிரதாப் on January 6, 2014 at 5:23 pm

  தன் முன்னோர் முட்டாள் என்று நினைப்பவன் தானும் அதுவே ஆகிறான். எனவே வினோத் அவரின் முன்னோர்களை முட்டாள் என்று நினைப்பதில் தவறில்லை. தன்னைப் போலவே தன்னுடைய முன்னோர்களையும் கருதுகிறார். அவ்வளவுதான்.

 34. ரங்கன் on January 6, 2014 at 6:55 pm

  அய்யா வினோத் அவர்களே – தயவு செய்து கிழியுங்கள் – உதாரணமாக திரௌபதி அக்னியில் தோன்றுகிறாள் – என்பதை மூடத்தனமாக நாங்கள் நம்பிக்கொண்டிருக்கின்றோம். இது சாத்தியமா என்று ஒரு கேள்வி மட்டும் கேட்டால் போதும். வாருங்கள் ! எங்களைத் திருத்துங்கள் !! ஆனால் ஒரு விஷயம் – எங்கள் கிராமத்து ஆசிரியர் கூறினார் – த்ரௌபதி ஐந்து நல்லவர்களை மணந்தது போல நம் மனமும் நல்ல குணங்களையே நாட வேண்டும். இதையும் நீங்கள் எங்களை திருத்தின பிறகு தூக்கிப் போட்டு விடுகிறோம். என்ன சார் நல்லவனாக இருக்க வேறு ஒருவர் சொன்னால்தானா என்கிறீர்களா? ஆம் அய்யா – நாங்கள்தான் மூடர்கள் ஆயிற்றே !!

 35. ரங்கன் on January 7, 2014 at 7:08 pm

  அட போங்க சாமி
  ரங்கன் என்ற பேரை பார்த்ததுமே என் மறுமொழிகளை நீக்கி விடுவீர்கள் போலும் – சரி அது உங்கள் விருப்பம். எனக்கும் சிறிதளவே தான் விஷய ஞானம் உள்ளது. சரி போகட்டும். இந்த தளத்தைப் படிக்க ஆரம்பித்ததில் இருந்து ஆர் எஸ் எஸ் பற்றிய என் தவறான எண்ணம் முழுவதும் மாறியது. அது போதும்.

 36. venkatasubramanian on August 23, 2016 at 6:06 am

  Christianity was brought to India by Europeans to create slaves to have their business happen nicely. This is 100 % Concept for Business purposes only. without these conversions India could have got out of Europe’s clutches even in 1800 it self. These Europeans came to India to plunder our wealth and did that successfully. Christianity helped for that. Strangely if you count how many Christians contributed for India.s freedom struggle. Even after Independence those people tried to project as if India under British was far better than our own men. Christianity is a curse on India.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*