அவதூறுகளை எதிர்கொள்வது-2

morning_hindutvaசில ஆண்டுகளுக்கு முன்னால் ‘Invading the Sacred’ எனும் நூல் வெளிவந்தது. இந்து மதத்தின் மீது அமெரிக்க பல்கலைக் கழகங்களில் தொடுக்கப்படும் கருத்தியல் போர்கள் எத்தகைய தன்மை கொண்டவை என்பதை அந்த நூல் வெட்ட வெளிச்சமாக்கியது. சீமானுக்கும் ஈவெராவுக்கு இணையாக ஆனால் சிக்மண்ட் ப்ராயிட்டின் துணையுடன் இந்து குறியீடுகளை மிக கேவலப்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களிலேயே மிக மோசமானது ஜெஃப்ரி க்ரிபால் என்பவரின் ‘ஆய்வு’. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ‘Invading the Sacred’ நூலின் மதிப்பீட்டுரையில் இதே தளத்தில் ஸ்ரீரங்கம். மோகன.ரங்கன் எழுதினார்:

நம் சிந்தனை தோற்கும் பெரும் ஞான நிதியினை பாரதத்துக்கு நல்கி சுதந்திர இந்தியாவின் மூலவராகிவிட்ட எம்மான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி ஜெப்ரி க்ருபால் (Jeffrey J. Kripal) என்பவர் ஆராய்ச்சி பண்ணுகிறேன் பேர்வழி என்று உளறிக் கொட்டி, வாரி, புழுதியும் சேற்றையும் தன் மூஞ்சியிலேயே பூசிக் கொள்வதைப் பார்க்கணுமே! ஐயோ பாபம்! என்ன ஜந்துக்கள்? என்று தோன்ற வைத்துவிடுகிறார் க்ருபால். வங்காள மூல நூலையே வைத்து ஆய்வு கழட்டுகிறேன் என்று சவடால். ஆனால் சுவாமி தியாகாநந்தா அக்கு அக்கக்காக வங்க மொழியே தெரியாது இவருக்கு என்று நிரூபித்துவிட்டார். வங்க மொழி அகராதியை கையில் வைத்துக்கொண்டு ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருந்தால் அதில் எங்கே எங்கே என்று தேடி வக்கிரமான பொருள் சாயைகளையே கஷ்டப்பட்டு திணித்து காமா சோமா என்று செய்யப்பட்ட கந்தல் குப்பை, ஆய்வுப் பிரதியாக எப்படித்தான் ஆனதோ?

முழுக்கட்டுரையும் இங்கே.

இந்துக்கள் இத்தகைய ஆராய்ச்சிகளால் வெகுண்டெழுந்தனர். ஜெஃப்ரி க்ருபாலுக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. உடனடியாக மேற்கத்திய ஊடகங்கள் அவற்றை இந்து தலிபான் என்றன. க்ரிபாலுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக கட்டுரைகள் எழுதப்பட்டன. பின்னொரு சமயம் க்ரிபாலே தனக்கு எதிராக கொலை மிரட்டலெல்லாம் விடுக்கப்படவில்லை என தெளிவுபடுத்தினார்.  ஆனால் ஒட்டுமொத்தமாக இந்துக்களின் எதிர்வினை வன்முறையாக அமையவில்லை. ஜெஃப்ரி க்ரிபாலின் நூல் வெளிவந்த போது இந்திய பாராளுமன்றத்தில் அதை தடை செய்வது குறித்த பேச்சு கூட எழுந்தது. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி செய்து வந்தது. உட்துறை அமைச்சராக விளங்கிய லால் கிருஷ்ண அத்வானி இந்த நூலை தடை செய்ய முடியாது என கூறிவிட்டார். ஆக, இந்து ’வலதுசாரிகள்’ என முற்போக்குகளால் கரித்து கொட்டப்படுவோர் கூட ஹிந்து ஞான மரபின் ஒரு மகத்தான ஞானிக்கு எதிராக செய்யப்பட்ட அவதூறை ஜனநாயக ரீதியில் சந்திக்கவே முடிவு செய்தனர்.

சரி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் எப்படி இந்த அவதூறை எதிர் கொண்டது என்பதுதான் இதில் முக்கியமானது. எல்லா மேற்கத்திய உளவாளிகளையும் போலவே செயல்பட்டார் க்ரிபால்.  ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் வந்து தங்கினார். அங்குள்ளவர்களின் நம்பிக்கையை பெற்றார். அங்குள்ள நூலகங்களை ஆவண காப்பகங்களை தாராளமாக பார்க்கும் அனுமதியை பெற்றார். க்ரிபால் தன்னுடைய முடிவுகளை தான் புதிதாக கற்ற வங்காள மூல மொழியில் ‘ம’வின் புகழ் பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதத்தை படித்ததன் மூலம் எழுதியிருந்தார். க்ரிபாலின் ‘ஆராய்ச்சி’யை ஆகா ஓகோ என புகழ்ந்த அமெரிக்க அறிவுலக ஆசாமிகள் ஒருவருக்கும் வங்காள மொழி தெரியாது. க்ரிபாலின் ‘ஆராய்ச்சி’ சரியானதுதானா என ஒரு வங்க மொ9788120835320ழி தெரிந்த இந்திய அறிஞரை கேட்க வேண்டுமென்றும் அவர்கள் நினைக்கவில்லை. இவர்கள்தான் இந்தியா குறித்த ஆராய்ச்சிகளை – நாம் நம்மை எப்படி காண வேண்டும் என்பதை- சொல்லிக் கொடுக்கிறார்கள்.  என்சைக்கோளோபீடியா ப்ரிட்டானிக்கா முதல் மைக்ரோசாப்டின் என்கார்டா வரை இந்து மதம் குறித்த கட்டுரைகள் இத்தகைய ’அறிஞர்களால்’தான் எழுதப்படும்.  கிறிஸ்தவ மத கட்டுரை ஒரு ’நம்பிக்கை உடைய’ கிறிஸ்தவரால்தான் பெரும்பாலும் எழுதப்படும். இஸ்லாமிய மதம் குறித்த கட்டுரை வெகு நிச்சயமாக நம்பிக்கை இல்லாத இஸ்லாமியரால் கூட எழுதப்பட முடியாது. ஆனால் இந்து மதம் குறித்த கட்டுரைகளோ மேற்கத்திய கலை களஞ்சியங்கள் முதல் கல்லூரி பாடங்கள் வரை இந்து மதத்தை விமர்சிக்கும் மேற்கத்திய ‘ஆராய்ச்சியாளர்களாலேயே’ எழுதப்படும். நாளைக்கு இந்து மதத்தை ஆராய்ச்சி செய்ய அல்லது அறிந்து கொள்ள அதுவே அடிப்படையாகிவிடும்.

க்ரிபாலின் ’ஆராய்ச்சி’க்கான முதல் வலுவான எதிர்வினை அமெரிக்காவில் உள்ள வேதாந்த அமைப்பில் உள்ள ஆத்மஞானானந்தாவால் முன்வைக்கப்பட்டது. இவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்தான். ஆனால் இவர் க்ரிபாலுக்கு வங்க மொழி வங்காள சமுதாயத்தின் பண்பாடு ஆகியவை 200908311112133620குறித்த புரிதல் எத்தனை சரியாக இருக்கும் என்பதை குறித்து முதலில் வினா எழுப்பினார். நியாயப்படி இந்த வினாவைதான் முதலில் அமெரிக்க ஆராய்ச்சியுலகம் எழுப்பியிருக்க வேண்டும். இந்நிலையில்தான் சுவாமி தியாகனந்தா விரிவான எதிர்வினை ஆற்றினார். க்ரிபாலின் ஆராய்ச்சியில் ஏன் எவரும் மூலநூல்களை சரிபார்க்கவில்லை என தலைப்பிட்டு 124 பக்கங்கள் கொண்ட எதிர்வினை அது.  அவரும் ப்ரவராஜிகா விராஜப்ரணாவும் இணைந்து இந்த எதிர்வினையை மிக விரிவாக்கி ஒரு நூலாக எழுதினார்கள்: ‘Interpreting Ramakrishna: Kali’s Child Revisited’. ஒரு நவீன ஹிந்து அமைப்பு தனக்கு எதிராக மிக மோசமாக மிக விரிவாக மிக பெரிய நிறுவன பலத்துடன் சுமத்தப்படும் அவதூறுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான சரியான ஆதர்ச எதிர்வினையாக அது அமைந்தது.

இந்த நூல் ஒரு எதிர்வினை மட்டுமல்ல. அதையும் தாண்டி இது ஹிந்து ஞான மரபையும் அதன் ஞானிகளையும் எப்படி அணுகுவது என்பதற்கான புதிய அறிதல் சட்டகத்தை உருவாக்கியது. ஜெஃப்ரி கிரிபால் ஏற்கனவே காலாவதியாகி போயிருந்த ப்ராயிடிய சட்டகத்தை மட்டும் பயன்படுத்தவில்லை. அவரது ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே ஒரு பிழை இருந்தது. தியாகனந்தாவும் வ்ரஜப்ரணாவும் அதை ‘பண்பாட்டு ஒற்றைப்பார்வை’ (Cultural monovision) என குறிப்பிடுகின்றனர். மற்ற பண்பாட்டு அம்சங்களை தனது பண்பாட்டின் அளவு கோல்களால் அளப்பது. இதை மேற்கு தன்னுடைய ஆராய்ச்சி அணுகுமுறையில் மட்டுமல்லாது தன்னுடைய காலனிய ஆதிக்கத்துக்கு1334650600-243x366 உட்படுத்தப்பட்ட நாடுகளின் பொதுபுத்தியிலேயே ஆழமாக பதிய வைத்துள்ளது. உதாரணமாக சமுத்திர குப்தர் இந்திய நெப்போலியன், பாங்காங்க் ஆசியாவின் லாஸ்வெகாஸ், கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர்,  தொல்காப்பியர் தமிழனின் அரிஸ்டாட்டில், … சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு கட்டத்தில் நாமும் அதை அப்படியே ஏற்று அதன் அடிப்படையில் நம்மை தகவமைக்க ஆரம்பித்துவிடுகிறோம். நம் வாழ்க்கைக்கான அளவீடுகள் மேற்கின் பார்வையால் நிர்ணயிக்கப்படுகின்றன. இரண்டு இந்திய நண்பர்கள் கை கோர்த்து சென்றால் அமெரிக்க பார்வையில் அவர்கள் ‘ஓரினச் சேர்க்கையாளர்கள்’.  ஓரினச்சேர்க்கை  சரியா தவறா என்பதல்ல ஆனால் அமெரிக்க பண்பாட்டு சட்டகத்தின் மூலமே இந்தியர்களாகிய நாம் அறியப்பட வேண்டும்.  மிக ஆழமாக பக்கம் பக்கமாக விரிவான வரலாற்றுத்தரவுகள், தத்துவ உளவியல் பார்வைகள், சமூக பண்பாட்டு சூழல்களின் அறிதல் என க்ரிபாலின் ஒவ்வொரு அவதூறையும் தவறு என்றும்  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் உண்மையில் எப்படி அணுக வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தெளிவாக காட்டுகிறார்கள். ஆனால் இந்த நூலின் 390 பக்கங்களில் ஜெஃப்ரி க்ரிபால் குறித்து ஒரு ஆத்திரமான சொல் ஒரு வசை சொல் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம் பண்பாடு, நம் மகான்கள், நம் தெய்வங்கள் இவற்றுக்கு எதிரான அவதூறுகள் குறித்து நம் எதிர்வினைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரே நமக்கு ஒரு அருமையான அறிவியலை அளித்திருக்கிறார். அவரது சீடரான நிரஞ்சன் (பிற்காலத்தில் சுவாமி நிரஞ்சானந்தர்)  ஒரு நாள் படகில் வருகிறார். அப்போது உடனிருப்பவர்கள் அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர் என்பது தெரிந்ததும் குருதேவரை இழிவாக பேசுகிறார்கள். நிரஞ்சன் ஆத்திரமடைகிறார். ’இப்போது நீங்கள் நிறுத்தவில்லை என்றால் எதை குறித்தும் கவலைப்பட மாட்டேன். இதோ படகையே புரட்டி கங்கை பிரவாகத்தில் மூழ்கடித்து விடுவேன்.’ என கூறுகிறார்.  இது ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு தெரியவந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் நிரஞ்சனை கடிந்து கொண்டார்.  ஆனால் யோகின் எனும் சீடருக்கு இதே அனுபவம் ஏற்பட்டது. படகில் சிலர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குறித்து அவதூறுகள் பேசினர். யோகின் எதுவும் செய்யவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தார். பேசாமல் கரையிறங்கி குருதேவரிடம் வந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் நடந்ததை கூறினார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்னார், “உன் குருவை அவமதிப்பதை  கேட்டுக்கொண்டு நீ சும்மா இருந்திருக்க கூடாது.”

கண்மூடி இருக்கலாம், அவதூறுகள் மறைந்துவிடும் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்கிற நிலைபாடும் சரி வன்முறையால் அல்லது பலத்தால் அவற்றை அடக்கிவிடலாம் என்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மாறாக ஞானத்துடன் உண்மையை உரக்க சொல்வதும் எந்த அவதூறையும் தர்மத்தை மேலும் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லும் வழியாக மாற்றுவதுமே அவதூறுகளை எதிர்கொள்வதில் ஹிந்துவின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

Tags: , , , , ,

 

10 மறுமொழிகள் அவதூறுகளை எதிர்கொள்வது-2

 1. கண்ணன் on December 26, 2013 at 8:16 am

  “கண்மூடி இருக்கலாம், அவதூறுகள் மறைந்துவிடும் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்கிற நிலைபாடும் சரி வன்முறையால் அல்லது பலத்தால் அவற்றை அடக்கிவிடலாம் என்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மாறாக ஞானத்துடன் உண்மையை உரக்க சொல்வதும் எந்த அவதூறையும் தர்மத்தை மேலும் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லும் வழியாக மாற்றுவதுமே அவதூறுகளை எதிர்கொள்வதில் ஹிந்துவின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்”. – இரண்டு நாட்களில் வந்த கட்டுரைகளின் சாரமாக வந்த இந்த வாக்கியம் உண்மையான ஹிந்துக்களிடம் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

 2. keertivaasan on December 26, 2013 at 9:14 am

  The full book ” ‘Interpreting Ramakrishna: Kali’s Child Revisited’.” is available here:
  http://www.gemstone-av.com/KCR3b.pdf

 3. க்ருஷ்ணகுமார் on December 26, 2013 at 12:03 pm

  \\ சரி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் எப்படி இந்த அவதூறை எதிர் கொண்டது என்பதுதான் இதில் முக்கியமானது. எல்லா மேற்கத்திய உளவாளிகளையும் போலவே செயல்பட்டார். \\

  இங்கு *ஜெஃப்ரி க்ரிபால்* எல்லா மேற்கத்திய உளவாளிகளையும் போலவே செயல்பட்டார்.

  என்று இருக்க வேண்டுமே. அப்போது தானே வாக்யம் முழுமை பெறும்.

  \\ கண்மூடி இருக்கலாம், அவதூறுகள் மறைந்துவிடும் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்கிற நிலைபாடும் சரி வன்முறையால் அல்லது பலத்தால் அவற்றை அடக்கிவிடலாம் என்பதும் சரியான அணுகுமுறை அல்ல. \\

  Superb. a Golden Quote

  \\ மிக ஆழமாக பக்கம் பக்கமாக விரிவான வரலாற்றுத்தரவுகள், தத்துவ உளவியல் பார்வைகள், சமூக பண்பாட்டு சூழல்களின் அறிதல் என க்ரிபாலின் ஒவ்வொரு அவதூறையும் தவறு என்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் உண்மையில் எப்படி அணுக வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தெளிவாக காட்டுகிறார்கள். ஆனால் இந்த நூலின் 390 பக்கங்களில் ஜெஃப்ரி க்ரிபால் குறித்து ஒரு ஆத்திரமான சொல் ஒரு வசை சொல் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. \\

  அருமை. ஸ்ரீ சீதாராம் கோயல் அவர்களது குரு ஸ்தானத்தில் இருந்த ஸ்ரீ ராம்ஸ்வரூப் அவர்களுடைய எழுத்து முறைமைகளும் இப்படியே என அறிகிறேன்.

  அவதூறை எதிர்கொள்ளும் போது கூட அறிவு பூர்வமாகவும் கண்யத்துடனும் எப்படி எதிர்வினையாற்றுவது என்பதற்கு ஒரு அலகீடாகக் கொள்ளலாம்.

  Extremely inspiring and has the force for rededication. kudos!

 4. veda t. sridharan on December 26, 2013 at 12:48 pm

  சமுத்திர குப்தர் இந்திய நெப்போலியன், பாங்காங்க் ஆசியாவின் லாஸ்வெகாஸ், கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொல்காப்பியர் தமிழனின் அரிஸ்டாட்டில், … சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு கட்டத்தில் நாமும் அதை அப்படியே ஏற்று அதன் அடிப்படையில் நம்மை தகவமைக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

  உண்மை.

  நாம் சிந்திக்கும் விதம் எவ்வளவு அபத்தமாக உள்ளது என்பதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் இதிகாய்ங்களைப் பற்றியது. இந்தியாவின் இதிகாய்ங்கள் என்றால் ராமாயணம், மகாபாரதம் என்று soவல்வதில் தவறு இல்லை. ஆனால், அதைye ஆங்கிலத்தில் எபிக்ஸ் ஆஃப் இண்டியா என்று keட்கும்pothu ராமாயணம், மகாபாரதம் என்று soவல்வது அபத்தமானது. ஏனெனில் ஆங்கிலச் soல்லான எபிக் என்பதன் பொருள்படி பார்த்தால், ராமாயணம், மகாபாரதம் மட்டுமல்ல, நம் நாட்டின் கணக்கற்ற காவியங்கள் அந்த வரையறைக்குள் வரும். ஆனால், ராமாயணமும் மகாபாரதமும் இது இப்படி நடந்தது என்னும் பொருளிleye இதிகாsaம் என்று அழைக்கப்படுகின்றன.

 5. murali on December 26, 2013 at 1:52 pm

  புதிய ஆண்டு (ஆங்கில) பிறப்பிற்கும் நமது பாரத தேசத்திற்கும் ஏன் கிறிஸ்துவர்களுக்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லை என்று யாராவது எழுதுங்களேன். புதிய ஆண்டு பற்றி பைபிளில் எந்தக் குறிப்பும் இல்லை அதற்க்கு எந்த மத முக்கியத்துவமும் இல்லை. பின் ஏன் நமது ஹிந்து மக்கள் இந்த எழவு புத்தாண்டு நாளைக் கொண்டாடுகிறார்கள்? அன்று நமது கோயில்களையும் திறந்து வைத்துகொண்டு கும்பல் சேர்கிறார்கள்?

  கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் கேரளத்தில் கூட அன்று விடுமுறை இல்லை. இன்னும் பல மாநிலங்களில் புத்தாண்டுக்கு விடுமுறை இல்லை. அன்று எந்த மாநில ஹிந்து கோயில்களிலும் விசேஷ பூஜைகள் கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எதோ ஏசுநாதரின் கூடப் பிறந்தவர்கள் போல இங்கு உள்ள மக்கள் அதை கொண்டாடுகிறார்கள்!

 6. murali on December 26, 2013 at 4:16 pm

  சென்ற வார தினமணி தமிழ்மணி பதிப்பில் கலா ரசிகன் எழுதும் தொகுப்பில் ராசாராம் என்ற இ ஆ ப அதிகாரி எழுதிய ஒரு புத்தகத்தில் நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு மேற்கோள் இருந்தது . அது உண்மையில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு . இது பற்றி ராமகிருஷ்ண தபோவன வெளியீடுகளிலும் உள்ளது . ஆனால் அந்த எழுத்தாளர் அது பற்றி தவறாக நபிகள் என்று எழுதியதை கலா ரசிகனும் ஆமோதித்து எழுதியதை மறுத்து நான் தினமணிக்கு கடிதம் எழுதியதையும் வெளியிடவில்லை . அந்த இ ஆ ப அதிகாரி ரீல் விட்டு ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார் இப்படி .

 7. paandiyan on December 26, 2013 at 5:47 pm

  murali
  அதை பலபேருக்கு தெரியும் வன்னம், கட்டுரை சங்கதி , அதில் உங்கள் ஏதிர்வினைகளை இங்கு வெளியீடவும். உண்மை பல பேருக்கு தெரியட்டும்.

 8. Tamil Nadu on December 26, 2013 at 7:31 pm

  வணக்கம்
  நண்பர்களுக்கு ஹிந்து மதத்தின் புனித நூல் என்று சொல்லப்படும் ரிக் , யஜுர் ,சாம , அதர்வணம் நூல் மற்றும் பகவத்கீதை போன்றவற்றில் உள்ள கருத்துகளை தமிழ் ஆகம் சித்து அணைத்து மகளுக்கும் கடைக்க செய்யுங்கள் .தாழ்த்தப்பட்ட இந்து மகளுக்கு கொடுத்து அதனை உணர சொல்லுங்கள் அப்போதுதான் அதில் உள்ள கருத்துகள் அனைவர்க்கும் புரியும் இந்த நல்ல பனியை ஹிந்து மதத்தின் அமைப்புகளும் மடங்களும் உடன் செயவேண்டும் .

 9. Dheeran on December 26, 2013 at 9:27 pm

  நமது ஆன்மிக மரபுபடி வாதங்கள், தெளிவாக்குதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே அவதூறுகளை வெற்றிகொள்ள முடியும். மாறாக பிற மதத்தினரையும், அவர்களது நம்பிக்கைகளையும் மோசமாக விமர்சனம் செய்ய முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

  இரண்டாவதாக, வந்தபின் காப்பதைவிட, நமது பழம்பெரும் சமுதாயத்தின் சமுதாய அமைப்புபற்றிய உண்மைகளையும், சனாதன தர்மம்பற்றியும், அதன் குறியீடுகள், வழிபாட்டுமுறைகள் பற்றியும் அனைத்துமக்களுக்கும் தெளிவாக கற்பிப்பதும் அதற்காக சிறப்பானதொரு பிரச்சார இயக்கத்தை உடனே ஆரம்பிப்பதும் மிகவும் அவசியம்,

 10. vedamgoapl on December 27, 2013 at 8:35 pm

  Ramakrishna Math, Swami Vivekananda Road, Ulsoor, Bangalore – 560 008 is celebrating the 161st Birthday of Holy Mother Sri Sarada Devi, on Tuesday, 24th December 2013. As per the programme given by Swami Tattwarupananda, on 24th evening at 5.30 to 6.15, there will be Christmas Carols, at 6.30 Arati to Sri Ramakrishna, at 6.55 Arati to Christ, and at 7.00 Discourse – ‘Sermon on the mount’

  What is this nonsense? Arati to Christ? Whom are they fooling? Are there any takers? Have Christians penetrated into some of the RK Missions? In the name of revered Mother Sri Sarada Devi, they are promoting Christianity in India. This is reprehensible. Christianity is bankrupt of spiritualism. Hence Churches in India are adopting Hindu spiritual practices. Then why should RKM ape Christianity?

  Hindus all over the world strongly object to this belittling of our Sanatan Hindu Dharm by RKM. RK Math, Ulsoor, Bangalore, should stop promoting Christianity. It is against the preachings of Sri Ramakrishna and Swami Vivekananda.

  P. Deivamuthu (Hindu Voice)

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*