கலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்

morning_hindutva2002 கலவரங்களை தொடர்ந்து இந்திய போலி மதச்சார்பின்மையின் இன்னொரு முகம் தெளிவானது. அது ஏற்கனவே இருந்ததுதான். ஆனால் இப்போது அது ரொம்ப தெளிவாக வெளிவந்தது. மனிதத்தன்மையும் நேர்மையும் சிறிதும் இல்லாதது போலி-மதச்சார்பின்மை என்பதுதான் அது. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதல்ல நோக்கம். மாறாக எப்படியாவது மோடியை குற்றவாளியாக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்நிலையில்தான் இந்த நீதி மன்றத் தீர்ப்பு முக்கியமானது ஆகிறது. மோடியின் சிந்தனை எந்த அளவு வன்முறையைத் தடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது என்பதை இது தெளிவாக்குகிறது.

27-02-2002 இல் கலவர சூழல் ஏற்பட்டதும் மோடி doc1அனுப்பிய முதல் முக்கிய ஃபாக்ஸ் செய்திகளில் ஒன்று ஹஜ் புனித பயணத்திலிருந்து திரும்பக் கூடிய இஸ்லாமியர்களுக்கு எவ்வித கெடுதலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும். சிந்தித்து பார்த்தால் இதன் முக்கியத்துவம் புரியும். அயோத்தியிலிருந்து புனித பயணம் செய்து திரும்பிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கரசேவகர்களை பெண்கள் என்றும் குழந்தைகள் என்றும் பார்க்காமல் திட்டமிட்ட ரீதியில் எரித்து படுகொலை செய்திருந்தனர் கோத்ராவை சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள். இந்துக்கள் பதிலடியாக ஹஜ் யாத்திரை செய்து திரும்பும் இஸ்லாமியரை தாக்கக் கூடும். எனவே மிக முக்கியமான கலவர இலக்கு ஒன்றின் மீதான வன்முறையை தவிர்க்க முயற்சி செய்திருக்கிறார் மோடி. ஆனால் இன்றைக்கு வரை இந்த செயலை மோதி செய்ததைக் குறித்து எந்த ஊடகமும் பேசவில்லையே ஏன்? ஏனென்றால் அதன் மூலம் மோடியை கொலைக்கார குற்றவாளி என பிரச்சாரம் செய்ய முடியாதல்லவா? ஏனென்றால் அதன் மூலம் முஸ்லீம்களை உசுப்பி விட முடியாதல்லவா?

கலவரங்கள் பரவி கொண்டிருந்த சூழ்நிலை. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் மட்டுமல்ல அதிக காவல்துறையும் தேவை. ராணுவத்தினருக்கு சில பிரச்சனைகள் உண்டு. நேரடியாக கலவரத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் சிவிலியன் பகுதிகளில் doc2உள்ளே சென்று கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறைக்கு அதிகம் திறன் உண்டு. பயிற்சி உண்டு. கலவரமோ மிகப் பெரியதாக எழுந்திருந்தது. குழந்தைகளையும் பெண்களையும் எரித்து கொன்ற கொடூரத்துக்கு பதிலடி கொடுக்கும் ஆத்திரத்தால் இதுவரை கண்டிராத அளவு பெரிய அளவில் இந்துக்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்திருந்தனர். கலவரத்தை எதிர்பார்த்தவர்கள் கூட இத்தனை பெரிய அளவில் அதை எதிர்பார்க்கவில்லை.  குஜராத் காவல்துறையின் எண்ணிக்கை இந்த கலவரத்தை அடக்க அத்தனை போதுமனதாக இல்லை. எனவே மோடி அண்மையில் இருந்த மத்திய பிரதேச அரசாங்கத்திடம் போலீஸ் படைகளைத் தாருங்கள் என கையேந்தவும் தயங்கவில்லை.  மத்திய பிரதேசத்தில் அப்போது கலவரம் இல்லை. ஆனால் மத்திய பிரதேசத்தின் பதில் என்னவாக இருந்தது? அன்று மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர் இன்று போலி மதச்சார்பின்மையின் முக்கிய ஊதுகுழலான திக்விஜய் சிங். அவர் தனது அரசு செயலரை விட்டு கடிதம் எழுதினார். “மன்னிக்கவும், முடியாது. எங்கள் மாநில காவல் படைகளை அனுப்பமுடியாது.” இந்த கடிதமும் பொதுபுலத்தில் தான் இருந்தது. இதை போலி மதச்சார்பின்மை ஊடகங்கள் கவனிக்கத் தவறியது ஏன்? போலிமதச்சார்பின்மை பேசும் திக்விஜய்சிங்கின் அக்மார்க் உளறல்களை கேள்வியில்லாமல் பிரசுரித்து பெரிது படுத்தி வந்த ஊடகங்கள், ‘நீங்கள் ஏன்  மோடி கேட்ட போது கலவரங்களை அடக்க பாதுகாப்பு படைகளை அனுப்பவில்லை?’ என கேட்கவில்லை?

மோடி வெறுப்பு போலி மதச்சார்பின்மை சக்திகளால் நேர்மையின் மறு அவதாரம் என தூக்கி வைத்து கொண்டாடப்படும் நபர் சஞ்சீவ் பட். ஆனால் இவரது நேர்மை எப்படிப்பட்டது? இவர் கலந்து கொண்டதாக சொன்ன உயர்மட்ட கூட்டம் எதிலும் doc4இவர் உண்மையில் கலந்து கொள்ளவில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட போதும் இதை குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்புவதில்லையே ஏன்? சஞ்சீவ் பட்டின் மின்னஞ்சல்கள் எந்த அளவுக்கு மோடி எதிர்ப்பு சக்திகள் உச்சகட்ட தந்திரத்துடன் செயல்பட்டன என்பதை காட்டுகின்றன. நசீர் என்பவருக்கு மே 2011 இல் அனுப்பிய மின்னஞ்சலில் அமெரிக்காவில் உள்ள அமைப்புகள் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம் என ஷபனம் ஆஸ்மி தனக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறுகிறார்.  நசீர் (இவரது குடும்பம் அமெரிக்காவில் உள்ளது.) பதில் எழுதுகிறார்: ”நாங்கள் ஏற்கனவே சோனியாவுக்கு, இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்ஸிலுக்கு இன்னும் பல அமைப்புகளுக்கு எழுதிவிட்டோம். உங்களுக்கு பிறகு அனுப்புகிறோம்.” டெல்லியில் உள்ள அமைப்புகள் மூலம் உச்ச நீதி மன்றம் நியமித்துள்ள ராஜு ராமச்சந்திரனுக்கு தாக்கம் ஏற்படுத்தலாம் என்கிறார். பிபிஸியில் செய்தியாளராக இருக்கும் சுப்ரான்ஷு சௌத்திரிக்கு அவர் என்ன சொல்ல வேண்டும் என்பதை கிளிப்பிள்ளைக்கு சொல்லி கொடுப்பது போல எழுதுகிறார் பட்: “நான் 27 ஆம் தேதி நான் ‘சர்ச்சைக்குரிய’  உயர்மட்ட குழு கூட்டத்துக்கு சென்ற போது கலந்து கொண்டதாக நீங்கள் கூறலாம்.” இறுதியாக உச்சநீதி மன்றத்திலும் எதுவும் நடக்கவில்லை என்றால் என்ன செய்வது? சஞ்சீவ் பட் எழுதுகிறார்: மொழி பெயர்ப்பு செய்யாமல் அளிக்கப்பட்டால் அதன் தாக்கம் அப்படியே தெரியும் என்பதால்:

If you fear that amicus and Supreme Court will not take it seriously then media trick can be tried. I will be speaking with Rajdeep Sardesai tomorrow I will drop a line to him and let him follow up the lead.

எந்த அளவுக்கு நம் ஊடகங்கள், இயக்கவாதிகள், வெளிநாட்டு சக்திகள், போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள் ஒருவரோடொருவர் பின்னி பிணைந்து இந்துக்களுக்கும் இந்திய தேச நலனுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம் சஞ்சீவ் பட். மோடி எத்தகைய சூழலில் செயல்பட்டு வருகிறார் என்பதை எண்ணும் போதுதான் ஆச்சரியம் ஏற்படுகிறது. தொடர்ந்து அவரைச் சுற்றி பின்னப்படும் சதி வலைகள், தொடர்ந்து எழுப்பப்படும் அவதூறுகள், சொந்த கட்சியிலேயே பதவி மோகம் கொண்டவர்கள் அவரை விட்டு விலகி சென்று அவரை நோக்கி சொல்லும் குற்றச்சாட்டுகள்… இத்தனையையும் மீறி இவரால் சாதிக்க முடிந்திருக்கிறது. இத்தனையையும் மீறி இவரால் குஜராத்தை ஒரு நல்ல நிலைக்கு எடுத்து செல்ல முடிந்திருக்கிறது…  இவருக்கு எதிராக  தேசநலனை குறித்து கவலைப்படாத நம் விலை போன ஊடகங்கள், சுயநல அரசியல்வியாதிகள், மதவெறி பிடித்த அன்னிய சக்திகள் அவற்றின் உள்ளூர் தரகர்கள்… இவர்கள் வகுக்கும் வியூகங்கள்…  இத்தனையையும் மீறி பாரத மக்கள் சக்தி நிச்சயம் வெல்லும் வென்றே தீரும்… அந்த நாளுக்காக நாம் ஒவ்வொருவரும் உழைப்போம்.

Tags: , , , ,

 

12 மறுமொழிகள் கலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்

 1. sujin on December 28, 2013 at 7:57 am

  ஜி, 27/2/2013ணா?

  // நன்றி சுஜின் தவறு திருத்தப்பட்டது. – ஆசிரியர் குழு//

 2. kmv on December 28, 2013 at 8:59 am

  It would have been better facesaving if Similar forceful letter/order for safegaurding normal citizens was given by Gujarat CM.

  Even if this letter was not given, Hindus would never harm any persons on the pilgrimage.

 3. Ravikumar on December 28, 2013 at 11:34 am

  Anna nalla thgavalukku mikka nantri.ungal padhail endrum nangalum….

 4. R.Krishnamoorthy on December 28, 2013 at 3:07 pm

  மோடியின் தலைமையில் பாரத மக்கள்சக்தி நிச்சயம் வெல்லும். .

 5. A.seshagiri on December 28, 2013 at 4:14 pm

  ஆயிரம் கரங்கள் கொண்டு மறைத்தாலும் ஆதவன்(மோதிஜி) மறைவதில்லை!

 6. Arjun on December 28, 2013 at 6:50 pm

  I doubt Modi’s statement ”I’m a hindu Nationalist”. He/we started to project him as a Secularist. No he is/must be a hindu nationalist.

 7. Muthukumar on December 28, 2013 at 7:09 pm

  திரு மோடி அவர்களின் நெஞ்சுரம் நம்மை வியக்க வைக்கிறது.
  எல்லாம் வல்ல இறைவன் `அவருக்கு துணை புரிவானாக.

 8. வீரா.முத்துகுமரன் on December 28, 2013 at 10:02 pm

  காங்கிரஸ் அழிந்தால் நாடும் நாமும் வளம்பெருவோம்

 9. வீரா.முத்துகுமரன் on December 28, 2013 at 10:15 pm

  கொள்ளைகூட்டத்தின் கூட்டுச்சதி ஆழ்கடலின் அடியில் மறைத்தாலும் உண்மை அழியாது அழியும் காங்கிரசு மோடி 2014 பிரதமர்! சூப்பர்மேன் அல்ல ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் தலைவன்

 10. Sriram on December 29, 2013 at 6:44 am

  சத்தியம் வெல்லும்.

 11. Prassannasundhar N on January 4, 2014 at 1:31 pm

  அடங்கோங்காங்கோ…. இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா தமிழ்ஹிந்துவல்லாத மற்ற தளங்களிலும் மோடியின் மீதான பொதுப்படையான, மட்டமான, கலப்படமிகுந்த குற்றச்சாட்டுகளைத் தவிடுபொடி ஆக்கி இருக்கலாமே என்று மனம் அங்கலாய்க்கிறது! ஓரளவுக்கு மேல் பொறுத்துக் கொள்ளவே முடியாத அளவுக்கு போய் விட்டது மைனாரிட்டி மதவாத சலம்பல்கள்.tamil.thehindu வில் இனிமேல் யாராவது மோடியை அசிங்கப் படுத்தி பின்னூட்டமிட்டால் இதை பதிலாக வெளியிடலாம். ஆனால் பிரசுரிக்கத்தான் மாட்டார்கள்.

  இது போன்ற உண்மைகள் நிறைய வெளி வர வேண்டும். நாட்டு மக்களனைவருக்கும் உண்மைகள் தொடர்ந்து உணர்த்தப் பட வேண்டும்.
  சும்மா குருட்டாம்போக்கில் தொடர்ந்து மோடியை மதவாதி, கொலைகாரர் என்றெல்லாம் பிதற்றி வரும் அறிவீனர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னணியில் நிற்பதற்கும் நன்றிகள் அரவிந்தன் சார்! வெல்டன்!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*