அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்து

morning_hindutvaஅவதூறுகளை எதிர்கொள்வது எப்படி என்பதை இந்துக்களுக்கு எவரும் கற்றுக்கொடுக்க தேவை இல்லை. கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்துக்கள் அவதூறுகளை எதிர் கொண்டு வருகின்றனர். அவதூறுகள் பல வழிகளில் பலவிதங்களில் வருகின்றன. ‘நீ நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தா லிங்கத்தோட பொருளை சொல்லுடா’ என்றெல்லாம் கேட்கும் அற்பத்தனமான ஆபாச அறிவின்மை இந்த அவதூறு சங்கிலியின் முதல் கண்டுபிடிப்புமல்ல கடைசி கண்ணியுமல்ல. கம்பீரமான பெரும் ஊர்வலங்கள் மெல்ல நகரும் வீதிகளில் தெருநாய்கள் குரைப்பதற்கும் சுதந்திரம் இருந்தே ஆக வேண்டும். ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக தமிழகத்தில் இந்த ஆபாச அறிவின்மைதான் பகுத்தறிவு என்கிற பெயரில் வலம் வருகிறது.

இதனால் தமிழ் சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த இழப்புகள் சாதாரணமானவை அல்ல. நம் கலை பாரம்பரியம் மதம் பண்பாடு என அனைத்தின் மீதும் ஒரு இழிவு பார்வை; simon1ஒட்டுமொத்தமாக மதமாற்றத்தை எளிதாக்கும்  மனநிலைக்கு ஒரு சராசரி தமிழனை கொண்டுவந்ததுதான் இந்த ஈவெராவிய போலி-பகுத்தறிவின் பங்களிப்பு. இதனால் மக்களுக்கு அறிவு ஏற்பட்டது மூடநம்பிக்கை ஒழிந்தது என்பதெல்லாம் கலப்படமில்லாத பொய்யே தவிர வேறில்லை. சீமானின் மடத்தனமான பகுத்தறிவற்ற உளறல்களில் அவ’ர்’ சிவலிங்கம் என்றால் என்ன என்கிறார்.  அதாவது அது ஆண்குறி என்றும் இந்துக்கள் குறிவழிபாடு செய்பவர்கள் என்றும் அது அவமானமான காட்டுமிராண்டித்தனம் என்றும் மிஷிநரிகள் காலம் காலமாக செய்து வந்த பிரச்சாரத்தை சீமான் சுட்டுகிறார். நம் பண்பாட்டு ஆன்மிக சின்னங்களை அறிந்து கொள்வதில்இந்த பகுத்தறிவு போலிகளின் மூளை ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டு பின்னால் உள்ளது . இந்த போலி பகுத்தறிவு மனநோயாளிகளும் அவர்களை பின்பற்றுவோரும் அனுதாபத்துக்குரிய பிறவிகள் ஆனால் அவை நம் அமைதியை சீர்குலைத்து அடுத்தவனின் ஆயுதங்களாக மாறும் போது அதை எதிர்கொள்வது எப்படி?

இத்தகைய பிரச்சாரங்கள் ஹிந்து மதத்தின் மீதான தாக்குதல்கள் இவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது? எழுத்தாளர் எஸ்.பி.சொக்கலிங்கம் இது குறித்து சட்டரீதியான ஒரு தெளிவான பார்வையைத் தந்திருக்கிறர. அவருக்கு தமிழ்ஹிந்து தளத்தின் சார்பாக நன்றிகள்.:

சீமானுடைய பேச்சு சந்தேகத்திற்கு இடமில்லாமல் சட்ட விரோதமானது. இந்திய தண்டனைச் சட்டம் 295 A வின் கீழ் குற்றமாகும்.
பிரிவு 295 A:

யார் ஒருவர் வேண்டுமென்றே, வன்மம் பாராட்டுகின்ற நோக்கில், எந்த குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இந்திய குடிமக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில், வார்த்தையாலோ (எழுத்தாகவோ, பேச்சாகவோ) அல்லது செய்கையினாலோ அல்லது கண்ணுக்குப் புலனாகும் வகையிலோ, அல்லது வேறெந்த விதத்திலோ அவர்களது மதத்தையோ, மத நம்பிக்கையையோ அவமானப்படுத்தினாலோ, அல்லது அவமானப்படுத்த முயற்சி செய்தாலோ அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அல்லது அபராதமும், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

295 A குற்றம் புலன்கொள் (Cognizable) குற்றம் மற்றும் பிணைவிடாக் (Non-bailable) குற்றமாகும்.
சீமானுடைய பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 298 கீழும் குற்றமாகும். மேலும் தன்னுடைய இந்தப் பேச்சால் அவர் இரு சமூகத்தினரிடையே பகையை வளர்க்கும் விதத்திலும், மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறார். அதனால் அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 A வின் கீழும் குற்றம் புரிந்திருக்கிறார். சீமான் மேற்சொன்ன சட்டவிதியின் படி குற்றம் இழைத்திருக்கிறார். அதனால் அவர் தண்டிக்கப்படவேண்டும் என்றும் ஹிந்துக்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆனால் எப்படி செய்வதென்று தெரியவில்லை என்று முக நூலில் கருத்து தெரிவிக்கிறார்கள்.
யார் புகார் கொடுக்கலாம்?
சீமான் செய்தது கிரிமினல் குற்றம். அரசாங்கத்திற்கு எதிரானது (அனைத்து கிரிமினல் குற்றங்களும் அரசாங்கத்திற்கு எதிரானவைதான்). அதனால் சீமானின் பேச்சால் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம்.
எங்கே புகார் கொடுக்கலாம்?
சீமானின் சட்டவிரோதப் பேச்சின் காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு அனைத்து இடங்களிலும் பார்க்கமுடிகிறது (தகவல் தொழில் நுட்பம் பிரிவு 66 A வின் படியும் சீமான் மீது புகார் கொடுக்க முடியும்). பேச்சைக் கேட்டு பாதிப்பு அடைந்தவர்கள் அவர்களது அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம்.
சிக்கல்:
ஏனைய புலன்கொள் குற்றம் மற்றும் பிணைவிடாக் குற்றம் புரிந்தவர்கள் மீது புகார் கொடுத்தால் காவல்துறை வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்யும். மேற்கொண்டு நீதிமன்றமும் சட்ட நடவடிக்கை எடுக்கும். ஆனால் 295 A, 153 A பிரிவின் கீழ் குற்றம் இழைத்தவர்கள் மீது புகார் கொடுத்தால் காவல்துறையால் சீமானை கைது செய்ய முடியாது. நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் 295 A மற்றும் 153 A பிரிவுகளில் குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டும். குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு சட்டத்தில் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சீமானின் மீது புகார் கொடுக்கலாம். ஆனால் அரசாங்கம் ஒப்பளிப்பு வழங்கும் வரை மேல் நடவடிக்கைக்கு காத்திருக்க வேண்டும்.

சுருக்கமாக சொன்னால் அரசாங்கத்துக்கு அரசியல் வைராக்கியம் வேண்டும். அது ஜெயலலிதா அரசுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை. ஏனோதானோ என்று இரண்டு நாட்கள் அவரை தூக்கி ஜெயிலில் வைத்து சொகுசாக பார்த்து கொண்டு பின்னர் தியாகி என வெளியே விடவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அரசாங்கத்தை காட்டிலும் நீதி மன்றங்களை நம்புவது உத்தமம். sekarஇந்த விஷயத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். உடனடியாக நீதி மன்றத்தில் சீமானின் ஆபாச முட்டாள்தன பேச்சுக்கு எதிராக வழக்கு பதிந்திருக்கிறார். பொதுவாக இது மத உணர்வை புண்படுத்தும் செயல்மட்டுமல்ல. வெறுப்பு குற்றமும் கூட. Hate Crime. எனவே அத்தகைய ஒரு வெறுப்புணர்ச்சியை பரப்பி வரும் ஒரு வெறியன் பொது ஊடகங்களில் தனிமைப்படுத்தப் படவேண்டும். ஆனால் ஆனந்தவிகடன் முதல் இண்டியா டுடேயின் தமிழ் பதிப்பு வரை இந்து வெறுப்பு என்பதே சமூக நீதி என்பது போன்ற மாயபிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதையும் நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். தந்தி டிவியில் சீமான் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது அதனை முடக்கக் கூறி இந்துக்கள் பெரிய அளவில் தந்திக்கு மெயில்கள் அனுப்பலாம். கடிதங்கள் அனுப்பலாம். மொழியில் நிதானத்துடன் இவை செய்யப்பட வேண்டும்.

Metronation Chennai Television Ltd.
RMZ Millenia, 1C, 1st Floor,
No.143, Dr.M.G.R. Road, Kandanchavadi,
Perungudi, Chennai-600 096.
Telephone(s) +91-44-42907777, +91-44-42907789
Fax: +91-44-4290779
feedback@dttv.in
For Advertising Contact
South: V Damodar; Ph: 98410 02001; EMail: damodar@dttv.in
West: Jagdish Amin; Ph: 98671 65549; EMail: jagdish@dttv.in
North: Manish Roy; Ph: 98990 77799; EMail: manish@dttv.in

’சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ எனும் பெயரில் முகநூலில் இயங்கும் ஹிந்து இயக்க சகோதரர் (https://www.facebook.com/enlightened.master.3?fref=ts) பின்வரும் மடலை வடிவமைத்து அதனை முதலமைச்சருக்கு cmcell@tn.gov.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டிருக்கிறார். இதையும் நாம் செய்ய வேண்டும்.
krishnam

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே வணக்கம்.

சமீப காலமாக‌ “நாம் தமிழர்” என்கின்ற கட்சி/இயக்கத்தை சேர்ந்த‌ சைமன் என்கின்ற சீமான் என்பவர். இந்த நாட்டின் இதிகாச புருஷன், சக்கரவர்த்தி திருமகன் உலகில் உள்ள ஹிந்துக்களின் புனித தெய்வமான ஸ்ரீ. ராமபிரானை தர‌க்குறைவான வார்த்தைகளால் பேசி உள்ள வீடியோ பார்த்து நானும் என் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளானோம். இவர் சிவலிங்கத்தையும் இதைப்போலவே கேவலமாக பேசியுள்ளார். தமிழகத்தின் பெரும்பான்மையான சமுதாயமான இந்துக்களையும் மிகவும் புண்படுத்தி பேசியுள்ளார். தமிழ் நாடு போன்ற அமைதிப் பூங்காவில் இப்படி ஒருவர் ஒரு மதத்திற்கு எதிராக பேசி, கடவுள்களை அசிங்கமாக பேசுவது நாட்டின் ஜன நாயகத்திற்கும், இறையாண்மைக்கும் கேடு விளைவிக்கிறது. அதுவும் வேற்று மதத்தை சார்ந்த ஒரு நபர் இப்படி பேசுவது மதங்களுக்கு இடையே குழப்பங்களையும், கலவரங்களையும் உருவாக்கும் என்று தோன்றுகின்றது. இதை அரசாங்கமும் இப்படியே விட்டு கொண்டு போனால் கண்டிப்பாக இந்த நாட்டின் பூர்வ குடி மக்களும், பெரும்பான்மை மக்களும் மிகவும் மனத்தளர்ச்சி அடையும் சூழ்நிலை உருவாகக் கூடும். மேலும் ஹிந்து சமுதாயத்திற்கு எப்போதும் ஆதரவும் அரவனைப்பும் தரும் நீங்கள், அனைத்து சமுதாயத்தையும் சமமாக பாவிக்கும் நீங்கள், இதை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த சைமன் என்கிற சீமான் மீது நீங்கள் தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒரு சராசரி தமிழனின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

இவை எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். இன்னும் வேறு சில அவதூறுகள் உண்டு. அவற்றை எதிர்கொள்வது எப்படி என்பதை நாளை பார்க்கலாம்.

Tags: , , , , , ,

 

50 மறுமொழிகள் அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்து

 1. பாலா on December 25, 2013 at 7:34 am

  புகார் கொடுக்க முடியும் என்பதை விட நேரடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். யாரும் யாரையும் இப்படி கேவலமாக பேசக்கூடாது அப்படி பேசினால் என்னவாகும் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டாய் இவர் மீது வழக்கு தொடாலாமே. ஆனால் இவர் பேசியது போலவே இவர் சார்ந்த மதத்தையும் கேவலமாக பேசும் ஆட்களை என்ன செய்வது? இவரின் பேச்சுக்கு கிருத்துவ மதம் என்ன செய்தது? கிருத்துவ மதமா இவரை இப்படி பேச கற்றுக்கொடுத்தது?

 2. kmv on December 25, 2013 at 8:21 am

  Complaining to CM cell will not stop him on talking the same words again. It is nothing but shifting responsibility to govt and making him big. Better response could be directly talking to him and explain on the hidden philosophy and meaning. If 1000 persons call him over phone (&/or post on their Blog/FB) and repeat the same phrase politely …he wont repeat.

 3. கண்ணன் on December 25, 2013 at 8:48 am

  இவர் ஏதோ தனிப்பட்ட வெறியில் இப்படிப் ப்வேசிவிடவில்லை; இவருக்குப்பின்னால், இதைப்போன்ற காரியங்களுக்காக – இது தேவனின் காரியம் என்பதற்காக நிதியளிக்க, ஊக்கப்படுத்த, ஆதரவளிக்க, பின் பலமாய் இருக்க மத நிறுவனங்கள் உண்டு; அவை தொடர்ந்து, பெஸ்கி பாதிரியார் காலத்திலிருந்தும் அதற்கு முன்பிருந்து இப்படியே செயல்படுகின்றன என்பதும் உள்ளங்கைப் புண்ணாகத்தெரிந்தாலுm இவற்றைப் பார்க்க மறுக்கும் அதி நல்லவர்களும் உண்டு என்பதும் நம் சாபக்கேடு.

 4. Ramki on December 25, 2013 at 9:02 am

  கிறித்தவ மதம் இது போன்ற நபர்களை பகிரங்கமாக நன்னெறி படுத்தலாமே. மற்ற மதங்களோடு இணக்கத்தைப் பற்றி சிறுபான்மையினர் எப்போதும் கவலை கொள்வதில்லை

 5. jayakumar n on December 25, 2013 at 9:08 am

  இந்து மதத்துக்கு எதிராக எத்தனையோ பேர் வந்தார்கள் காணமல் போய்விட்டார்கள் இயற்கை இவர்களை அழிக்கும் இவர்கள் காணமல் போய்விடுவார்கள் இந்து மதம் கோடான கோடி வருடம் மேலும் தழைத்தொங்கும்; இது சத்யம்.

 6. ஓகை நடராஜன் on December 25, 2013 at 9:33 am

  //இவரின் பேச்சுக்கு கிருத்துவ மதம் என்ன செய்தது? கிருத்துவ மதமா இவரை இப்படி பேச கற்றுக்கொடுத்தது?//

  உலகில் வேறெங்கும் எப்படியோ தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் இப்படிக் கேவலமாகப் பேசக் கற்றுக் கொடுத்தது சர்வ நிச்சயமாக ஈவெரா தான்.

 7. ramesh on December 25, 2013 at 9:55 am

  அவனை எல்லாம் கண்டுக்காம விடுங்க. அவன் ஒரு போலி பொதுநலவாதி. சினிமா எ விட்டுட்டு இப்ப வேற வழி கண்டுபுடிச்சிருக்கான். குறைச்சிட்டு போய்டுவான்

 8. S .Tharmalingam on December 25, 2013 at 10:07 am

  சீமான் கேட்ட அதே கேள்வியைத்தான் நானும் பலமுறை பலரிடமும் கேட்டுவிட்டேன். பதில் கிடைக்கவேயில்லை. இப்போதுதான் தெரிகிறது இது சிலரை சட்டநடவடிக்கைக்கு தூண்டுகிறதாக. எனது ஆறாவது அறிவைப் பயன்படுத்தி அறிவற்ற ஒரு அஹ்ர்திணையான பொருளைப்பற்றிய விளக்கத்தைக் கேட்பது சட்டப்படி குற்றம் என்பதை இப்போது அறிந்து வருந்துகிறேன். பகுத்தறிவு சிந்தனையாளனாயிருப்பது இந்தியாவில் குற்றமா?மனிதனாய் இருந்தால்தானே மதங்களைத் தழுவும் வாய்ப்பிருக்கும். ஒரு இந்து மதவாதி, லிங்கம் என்றால் என்ன என்று விளக்கமளிக்க தெரியாதுவிட்டால் “தெரியாது” என்று சொல்வது இந்துதர்மமாக இருக்கும். இதைவிடுத்து ஆண்டவன் படைப்பை சிறைக்குள் தள்ளி விட்டு போலியுருவங்க்களை பூஜித்துக் கொண்டிருப்பதால் எம்மினத்துக்கு அறியாமைதானே மிஞ்சும். அறிவாளிகளை சிறைக்குள் அடைத்துவிட்டால் எஞ்சிய மூடர்களால் நாட்டை ஆளமுடியாதென்பதை மாநில முதல்வர் அறியாரா? எனவே சட்டநடவடிக்கை அசாத்தியமே. சீமானின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதே சட்டத்தை நாடுவதை விட சிறப்பானது. நன்றி.

 9. தஞ்சை வெ.கோபாலன் on December 25, 2013 at 10:12 am

  // ‘நீ நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தா லிங்கத்தோட பொருளை சொல்லுடா’ என்றெல்லாம் கேட்கும் அற்பத்தனமான ஆபாச அறிவின்மை இந்த அவதூறு சங்கிலியின் முதல் கண்டுபிடிப்புமல்ல கடைசி கண்ணியுமல்ல.//

  மனித உடல் ஆபாசமென்றால் இவைகளை இயற்கையோ அல்லது இறைவனோ ஏன் கொடுத்திருக்க வேண்டும். இப்படி பேசும் அறிவாளி, இவர் குறிப்பிடும் அந்த உறுப்பு இல்லாமல் இவரோ , இவரது அப்பனோ, பாட்டனோ பூமியில் பிறந்திருக்க முடியுமா என்பதைச் சற்று யோசித்துப் பேச வேண்டும். “கொங்கைகளே சிவலிங்கம் என்று கோக்கவிஞன் காளிதாசன் பூஜித்தான்” என்கிறார் பாரதி. காளிதாசன் என்ன இவர்களைப் போல பாமரனா? உலக மகா கவி. இதெல்லாம் தெரியாத வெற்றுக் கூச்சல் ஆசாமிகளுக்குத் தத்துவங்கள் எங்கே புரியப் போகிறது.

 10. paandiyan on December 25, 2013 at 10:33 am

  அட இந்த காமெடி பீஸ்ஸா இது. இதையும் பாருங்கள்.

  http://www.youtube.com/watch?v=0NJb3dIu04E&feature=player_embedded

 11. paandiyan on December 25, 2013 at 10:39 am

  இந்த வீடியோ வில் பயங்கர காமெடி இருந்தது. இப்பொழுது இதை எடுத்துவிட்டார்கள் போல . இதை நான் ஜெயமோகன் ஸைட் இல் இருந்து ஒருவரின் அப்‌டேட்ல் பார்த்தது முன்னர்.

 12. க்ருஷ்ணகுமார் on December 25, 2013 at 11:12 am

  \\ ஆனால் இவர் பேசியது போலவே இவர் சார்ந்த மதத்தையும் கேவலமாக பேசும் ஆட்களை என்ன செய்வது? \\

  அன்பின் ஸ்ரீ பாலா,

  க்றைஸ்தவ மதத்தை விமர்சிப்பது……..அதில் உள்ள குறைகளைப் பட்டியலிடுவது……. மிக முக்யமாக…..க்றைஸ்தவ மதத்தைத் தவிர மற்ற மதங்களை ஒழுகுபவர்கள் அனைவரும் பாவிகள்…….என்று கூப்பாடு போடுவது……. இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டியது மிகவும் அவசியம்.

  ஆனால் அப்படிச் சுட்டிக்காட்ட விழைகையில் பாஷா ப்ரயோகத்தை மிகக் கவனமாக கையாள்வது அவசியம்.

  ஹிந்துக்களின் தரப்பிலிருந்து கண்யமற்ற பாஷையை ப்ரயோகம் செய்து மாற்று மதத்தவர்களை விமர்சிக்கும் போக்கு தவறானதே.

  க்றைஸ்தவத் தரப்பிலிருந்து கண்யம் என்பது அறவே இல்லாத விமர்சனங்களை…… இன்று நேற்று அல்ல……. கடந்த சில நூற்றாண்டுகளாக ஹிந்துஸ்தானம் அனுபவித்து வருகையில்……. அவர்களின் மீதான ப்ரதி தாக்குதல்…. அவர்களின் பாணியிலேயே அமைவது இயற்கையே. ஆனால் அது ஒரு உணர்வு பூர்வமான எதிர்ப்பே ஆகுமே ஒழிய சமயோசிதமான எதிர்ப்பாகாது.

  மேலும் ஆழ்ந்த கருத்துக்களடங்கிய……. மிகப்புராதனமான ஹிந்து மதத்தைச் சார்ந்தவருடைய……. தரப்பிலிருந்து….. கையாளப்பட வேண்டிய எதிர்த் தாக்குதல் கூட…… அதன் இயல்பில் இருப்பதே….. அதற்கு கௌரவம் சேர்ப்பதாக அமையும். இந்த விஷயம் புரிந்து….. சுதாரித்து ……அவரவர் பாஷா சைலியில் சரியான தன்மை கொணர்வதற்கு……..பொங்கி வரும் உணர்வை அடக்கி அறிவைத் தீட்ட வேண்டியது அவசியம். முறையான சமயக்கல்வி இதற்கு வழிவகுக்கும். தான் கண்யமான பாஷையில் கருத்துப்பரிமாற்றம் புரியவில்லை எனினும்…….குறைந்த பக்ஷம் அது பற்றிய புரிதல் மற்றும் பஸ்சாதாபம் ஒரு நபருக்கு இருக்குமானால்…….அவர் கண்யத்தின் வெகு அருகாமையில்.

 13. Great Hindu on December 25, 2013 at 11:12 am

  //இவரின் பேச்சுக்கு கிருத்துவ மதம் என்ன செய்தது? கிருத்துவ மதமா இவரை இப்படி பேச கற்றுக்கொடுத்தது?//

  அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்? இவர்களை கைது செய்தும் பயனில்லை. அந்நியன் திரைப்படத்தில் காட்டியதுபோல தண்டனைகள் இருந்தால் தான் இவர்கள் பயப்படுவார்கள்..

 14. க்ருஷ்ணகுமார் on December 25, 2013 at 11:24 am

  \\ இவரின் பேச்சுக்கு கிருத்துவ மதம் என்ன செய்தது? கிருத்துவ மதமா இவரை இப்படி பேச கற்றுக்கொடுத்தது? \\

  நிச்சயமாக இவரின் பேச்சுக்கு க்றைஸ்தவ மதத்தின் பங்கு உண்டு.

  க்றைஸ்தவம் மட்டிலும் அல்ல. இதன் சஹோதர ஆப்ரஹாமிய மதமான இஸ்லாமும்.

  இந்த மத ப்ராசார இணைய தளங்களை வாசித்தீர்களானால்…… தன் மதத்தை ஒழுகுவதன்றி……..மாற்று மதத்தவரை அழித்தொழிக்க விழையும் இவர்களது செயல்பாடுகள்….. இவர்களது தர்ம க்ரந்தங்களின் அடியொற்றியே என்பது புரியும்.

  தங்கள் மதப்படி ஒரு ஆப்ரஹாமியர் ஒழுகுவது என்னாலும் இங்கு பங்கு பெறும் ஒவ்வொரு ஹிந்து சஹோதரராலும் போற்றத்தக்கதே.

  நாம் எதிர்கொள்ள விழைவது பித்தலாட்ட முறைமைகளின் படி மாற்று மதத்தைச் சிறுமைப் படுத்த விழைவதும் மாற்று மதத்தவரின் மீதான ஜிஹாதி தாக்குதல்களும்.

 15. க்ருஷ்ணகுமார் on December 25, 2013 at 11:41 am

  \\ கிறித்தவ மதம் இது போன்ற நபர்களை பகிரங்கமாக நன்னெறி படுத்தலாமே.\\

  அன்பின் *திரு* ராம்கி

  ஆப்ரஹாமிய மதங்கள் அடுத்த நாட்டில் காலெடுத்து வைக்கும் போதே அங்குள்ள கலாசாரங்களை வேரும் வேரடி மண்ணும் இல்லாது அழித்தொழிக்க வேண்டும் என்ற த்ருட சங்கல்பத்துடன் துவங்குகின்றன.

  ஹிந்துஸ்தானத்திற்கு வந்த கால்டுவெல், வீரமாமுனிவர் முதல் இன்று விதேசி க்றைஸ்தவ தனத்தில் செழித்து விளங்கும் களைகளான தெய்வநாயகம் இத்யாதி நபர்களின் செயல்பாடுகள் அனைத்தும் க்றைஸ்தவ மதத்தின் போதனைகளின் அடியொற்றியே.

  பரங்கிய வாடிகன் கிரிஜா க்ருஹத்தின் அறிக்கைகள் மாற்று மதங்கள் உண்மையான இறைவன் பால் கொண்டு சேர்க்காது; உண்மையான இறைவன் பால் மானிடர்களைச் சேர்ப்பது க்றைஸ்தவம் மட்டுமே என முழங்குகிறது.

  க்றைஸ்தவ மதம் இது போன்ற நபர்களை நன்னெறிப்படுத்த முடியாது. க்றைஸ்தவர்களில்…… தங்கள் மத நூற்களை பொதுவிலான கருத்துப்படியன்றி…..மானுட நன்னெறிப்படி அறிய விழையும்…….. மதநல்லிணக்க நெறிகள் படி அறிய விழையும் விதிவிலக்கான அன்பர்களால் இக்கார்யம் நடை பெற முடியும். ஆனால் அப்படிப்பட்ட அன்பர்களை கிரிஜா க்ருஹங்கள் செயல்பட விடாது.

  \\ மற்ற மதங்களோடு இணக்கத்தைப் பற்றி சிறுபான்மையினர் எப்போதும் கவலை கொள்வதில்லை \\\

  ம்ஹும்…….. தவறான புரிதல்.

  எனக்குப் பல இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ மித்ரர்கள் உள்ளனர். சங்கீதம் சார்ந்து.

  மிகப்பெரும்பாலான எனது இஸ்லாமிய நண்பர்கள் ஹிந்து மதத்தை மிகவும் மதிப்பவர்கள். கண்யமிக்கவர்கள். இவர்களை பாழ் செய்வது இந்த மதத்தின் அடிப்படைவாத இயக்கங்கள்.

  க்றைஸ்தவர்களில் தங்கள் மதத்தை ஜபர்தஸ்தியாக அடுத்தவருக்கு போதனை செய்ய விழையாத க்றைஸ்தவர்கள் சொற்பமே. என்னுடைய க்றைஸ்தவ மித்ரர்களிடம் என்னுடைய முதல் கண்டிஷன் நானாகக் கேழ்க்காது க்றைஸ்தவம் பற்றிய ப்ரசாரம் என்னிடம் வேண்டாம் என்றே. இந்த மாதிரி விஷயமும் அவர்களுக்குப் புரிய வருகிறது என்பதே பெரிய விஷயம்.

  என் கடன் மதமாற்றத்தில் ஈடுபடுவதே….. என்பதே மிகப்பல க்றைஸ்தவர்களின் செயல்பாடாகி வருவதே…. ஆபத்தான விஷயம்.

 16. Geetha Sambasivam on December 25, 2013 at 2:40 pm

  தனிப்பட்ட முறையில் நண்பர் ஒருவர் கேட்டதற்காகச் சில ஆண்டுகள் முன்னர் எழுதியது. இங்கே மீண்டும் சுட்டியை மட்டும் (தமிழ் இந்துத் தளம் அனுமதித்தால் ) தருகிறேன். பலரும் சிவலிங்கத்தின் உட்பொருளைச் சரியானபடி புரிந்து கொள்ளவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. சிவராஜயோகம் என்ற உயர்ந்த யோகம் செய்பவர்களுக்கே நன்கு விளங்கும். சாதாரண மனிதரால் புரிந்து கொள்ளப்படுவது கடினமே. எனக்கு விளக்கக்கூடிய அளவுக்கு தத்துவ ஞானம் அல்லது ஆன்மிக அறிவு இல்லை. தெரிந்தவரை பொருள் சொல்லி இருக்கிறேன். தவறுகளைச் சுட்டிக் காட்டவும். திருத்திக் கொள்ளலாம்.

  http://sivamgss.blogspot.in/2010/04/blog-post_08.html

 17. ஜெயக்குமார் on December 25, 2013 at 5:26 pm

  ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுங்கள்- பிதாவே என்னை சிலுவையில் அறையும் இவர்கள் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள், அவர்களை மன்னியும். என்று இவர்கள் வணங்கும் இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். அவர் வழியில் நடக்கும், அல்லது நடப்பது போல் நடிக்கும் சாதாரணமானவர்கள் கூறுவதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை என்பது என் கருத்து. அந்நிய நாட்டிலிருந்து வந்து, அந்நிய நாட்டு பணத்தின் மூலம் இந்திய எளிய பாமரர்களை “மிஷன்” மூலம் மத மாற்றம் செய்யும் இவர்களை யாரோடும் ஒப்பிடமுடியாது. வேதங்களில் கூறப்படாத கருத்துக்களையா இவர்கள் வணங்கும் கடவுள்கள்/இறை தூ தர்கள் கூறியுள்ளார்கள்? எந்த மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் திருக்குறளை விடவா மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கூறி விடமுடியும்?அல்லது, ஹிந்து மதம் தவிர மற்ற மதத்தினர் அனைவரும் புத்தர், ஏசு, காந்தி, போல் சொந்த வாழ்வில் நடந்து கொள்பவர்களா? மதத்தின் பெயரால் “மதம்” பிடித்து வம்பிற்கு இழுக்கும் அற்பர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே சிறந்தது. இதில் கோபப்பட்டு, அரசைப் பழி சொல்வதோ, வரிந்து கட்டிக் கொண்டு நாமும் நம் தரம் தாழ்ந்து போவதோ உத்தமமானதல்ல என்பது என் கருத்து.

 18. Deepak on December 25, 2013 at 5:36 pm

  Chapter X

  51-56. But the dwellings of kandalas and Svapakas shall be outside the village; they must be made Apapatras, and their wealth shall be dogs and donkeys. their dress shall ne the garmnent of dead; they shall ear their food from broken dishes; black iron shall be their ornaments; their transaction among themselves; and their marriages with their equals.Their food shall ne given to them by other(but not aryans) in broken dish; at night they shall not walk about in villages and in towns; by they may go about for purpose of their . distinguished by marks at the king’s command, and they shall carry out the corpses of persons who have no relatives; that is a settled rule. By the king’s order they shall always execute the criminals, in accordance with the law, and they shall take for themselves the clothes, the beds, and the ornaments of such criminals.

  பிற மதத்தை பற்றி அவதூரு பேசிய சீமானை கைது பண்ணவேண்டுமென்றால், இப்படி கேவலமான சட்டத்தை வகுத்த சுமதி பார்கவா என்ற மனுஸ்பிருதியன் பிதா மனுவையும் மனுதர்மத்தையும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இங்குள்ளவர்கள் சொன்னால் நலமாக இருக்கும்.

 19. Great Hindu on December 25, 2013 at 5:58 pm

  மேலே ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளதைப் போல உண்மையிலேயே தெரிந்துகொள்ள விரும்பும் நபர் மரியாதையுடன்தான் கேட்பாறேதவிர சீமானைப் போலவோ ஈவேராவைப் போலவோ ஆபாசமாக கேட்கமாட்டார்கள். தயவுசெய்து இதற்குப் பெயர் பகுத்தறிவு என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள். அந்த வார்த்தைப் பயன்படுத்தக் கூட இதுபோன்றவர்களுக்கு அதிகாரமில்லை. “திருக்குறளைவிட குரானே சிறந்தது” என்று ஒரு இஸ்லாமியர் எழுதியபொழுது ஈவேராவோ அவரின் பகுத்தறிவோ, தமிழ்பற்றோ எங்கே போனது? ஆகா, எல்லாரும் இந்துக்களைப் போல கோழைகளா என்ன? அடுத்தநாள் உயிர்வாழ வேண்டாமா???

  இதைப் பார்க்கும்பொழுது வடிவேலுவின் வசனம்தான் நினைவிற்கு வருகிறது:- “அங்குட்டு என்னையப் போட்டுப் பொரட்டிப் பொரட்டி எடுத்தாங்க.. அங்கெல்லாம் சும்மா இருந்துட்டு நாளைக்கு சாகப் போற கெழவியப் போட்டுத் தள்ளறேங்கறியே, வெக்கமாஇல்ல?”. இதுபோன்ற கோழைத் தனத்திற்குப் பெயர் தமிழ்நாட்டில் பகுத்தறிவு!

  உண்மையான பகுத்தறிவு எது என்று தெரியவேண்டுமென்றால், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த மேதை பிரான்சிஸ் வோல்டைர் எழுதியவற்றைப் படித்துப் பார்க்கவும். “கிறிஸ்தவ மதத்தின் ஜன்ம விரோதி வோல்டைர் இறந்துவிட்டான்” என்று போப்பாண்டவர் பெருமூச்சு விடுமளவுக்கு சிரதளவும் பயமில்லாமல் எழுதியவர் வோல்டைர்.

  முதலில் பகுத்தறிவு எந்த மனிதனுக்கில்லை என்று அதைப் பற்றி பேசுபவர்கள் விளக்கமுடியுமா? நாய்கூட நாலுபேர் சாலையைக் கடக்கும்போதுதான் சார் கிராஸ் செய்யுது. “ஆஹா, அவங்கெல்லாம் முட்டாள்கள், நாங்கதான் ஸ்பெஷல்” என்று அடுத்தவனை மட்டமாக நினைக்கும்போதே பகுத்தறிவு அழிந்துவிடும். “எனக்கு முட்டாள்கள்தான் வேண்டும்” என்று சொன்னவர் என்ன பகுத்தறிவை வளர்த்திருப்பார் என்று சற்று சிந்திப்பது நல்லது.

 20. Prassannasundhar N on December 25, 2013 at 6:32 pm

  லிங்கத்தின் முன் நின்று கை கூப்பும் எவனும் அதை ஆன் குறி என்று இதுவரை நினைத்துப் பார்த்திருப்பானா? சீமான் செபஸ்டியன் போன்ற ஆட்களுக்கு மட்டுமே இது போன்ற யோசனைகள் வரும். இவரைப் பொருத்தவரை இவ்வளவு தான் முடியும். ஆனால் லிங்கம் என்பதை உயிர்களின் துவக்கம் என்பதாகத் தான் நம் முன்னோர் கண்டுள்ளனர். உருவமற்ற இந்த அகண்ட பிரபஞ்சத்தில் உயிர்களின் பிறப்புக்கும், நாம் வாழும் இந்த பூமியின் தோற்றத்திற்கும் மூலாதாரம் எதுவென தேடிய தேடலின் விளைவே லிங்க வழிபாடு! ஆண்டவனின் நீல அகலத்தையும் விஸ்தீரணத்தையும் புரிந்து கொள்ள ஒரு ஆயுள் காலம் போதாது. எதிலிருந்து இத்தனை தோற்றங்களும் என்னும் தேடல் மூலாதாரம் எது என்பதை தேடலில் முடிகிறது. அந்த மூலாதாரம் தான் லிங்கம் என்னும் உருவாக அமைந்தது. எவ்வாறு மனிதனின் குறியிலிருந்து பிறப்புகள் உண்டாகிறதோ, லிங்கத்தினிடமிருந்தே அனைத்தும் உண்டானது.

  இந்த சிறிய காரணத்தைக் கூட ஆராய விழையாமல் பொத்தாம் பொதுவாக நல்ல அப்பனுக்குப் பிறந்தவன் பொருள் சொல்லுடா என்று கேட்பவன் மிருகத்திற்கொப்பானவன். நமக்கு மிருக பாஷை தெரியாது. அதனால் மிருகத்திற்குப் புரிய வைக்கவும் முடியாது.

  குடியிருக்கும் வீட்டினுள்ளே அத்து மீறி நுழைந்து அமைதியைக் குலைக்கும் எந்த மிருகமும் அடக்கப் படும். அது நிகழ இன்னும் சில நாட்கள் உள்ளன. அவ்வளவே!

 21. ariyan on December 26, 2013 at 12:19 am

  இங்கேர்சால் கிருத்துவ மதத்தை , நாற அடித்ததை , வெளி இட வேண்டும் ! பைபிள்- ஆபாச கதைகள் – தந்தையோடு இரண்டு மகள்கள் உறவு கொண்ட கதைகள் இருக்கிறது திராவிட கதை சொன்ன மத வெறியன் கால்டு வேல் ,பிராமண வேஷம் போட்டு மதம் பரப்பிய வீரமா முனி , வெள்ளையனுக்காக , ஆங்கிலத்துக்கு பாய் விரித்த ஈவேரா நாயுடு – கிருத்துமஸ் வாழ்த்து சொல்லும் மஞ்சள் துண்டு – இவர்களை போல் சைமன் என்ற கிருத்துவன் பேசி இருக்க்கிறான் ! தமிழக அரசு கடும் நடவடிகை எடுக்க வேண்டும் !

 22. naam thamizar on December 26, 2013 at 1:55 am
 23. kargil jai on December 26, 2013 at 2:14 am

  லிங்கத்திற்கு விளக்கம் கேட்ட மூடர்களே

  திருமூலர் சொல்லும் விளக்கத்தை கேள்

  இலிங்கம தாவது யாரும் அறியார்
  இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
  இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
  இலிங்கம தாக எடுத்தது உலகே.

  இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
  இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
  இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
  இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.

  ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தாத்தானே இதெல்லாம் புரியப் போவுது…

 24. அத்விகா on December 26, 2013 at 4:43 am

  தீபக்,

  நீங்கள் எழுதுவதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. சுவாமி தயானந்த சரஸ்வதியை விட பெரிய சிந்தனையாளர் இனிமேல்தான் பிறக்க வேண்டும். அவருடைய சத்யார்த்தப் பிரகாசம் என்ற நூலை வாங்கிப்படி.சென்னை கோபாலபுரம் ஆர்யா சமாஜ் அலுவலகத்தில் கிடைக்கும். மனுஸ்மிருதி என்பது எல்லா இந்துக்களையும் கட்டுப்படுத்தும் நூலல்ல. மேலும் மனுஸ்மிருதியிலும் ஏராளம் பிற்கால இடை செருகல்கள் உள்ளன என்று பலரும் நிரூபித்து உள்ளனர். மேலும் இந்துக்களுக்கு மனு ஸ்மிருதியைப் போல நாராயண ஸ்மிருதி மற்றும் இன்னும் பல ஸ்மிருதிகள் உள்ளன. நீங்கள் குறிப்பிட்டுள்ள பகுதிகள் அந்த இடைசெருகலின் ஒரு பகுதியே ஆக்கும்.

  மனு தனது நூலில் செய்தொழில் அடிப்படையில் மனித இனத்தை நான்காக பிரித்துள்ளார். பிறப்பின் அடிப்படையில் அல்ல.

  மனுவின் சிலையை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வைத்துள்ளனர். அதனை நீக்க வேண்டும் என்று சொல்லி வழக்கு தொடுக்கப்பட்டபோது, அந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று , சிலையை அகற்றக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த விவாதம், வாதம் எல்லாம் ஆரிய சமாஜின் புத்தகமாக வெளிவந்துள்ளது. வாங்கிப்படித்து அதன் பின்னர் தாங்கள் எழுதவும்.

 25. Great Hindu on December 26, 2013 at 6:33 am

  //பிற மதத்தை பற்றி அவதூரு பேசிய சீமானை கைது பண்ணவேண்டுமென்றால், இப்படி கேவலமான சட்டத்தை வகுத்த சுமதி பார்கவா என்ற மனுஸ்பிருதியன் பிதா மனுவையும் மனுதர்மத்தையும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இங்குள்ளவர்கள் சொன்னால் நலமாக இருக்கும்.//

  உலகில் இன்று எங்காவது மனுஸ்மிருதி பின்பற்றப் படுகிறது என்று நீங்கள் நிரூபித்துவிட்டால், மனுவை எப்படி தண்டிக்கலாம் என்று உண்மையிலேயே யோசிக்கலாம். சரி, பிறமதத்தினரை எவ்வளவு ‘மரியாதையுடன்’ நடத்தவேண்டும் என்று விவிலியத்திலும் குரானிலும் பக்கம் பக்கமாக விவரித்துள்ளனரே. அதைக் கூறிய ‘பாலைவன ராஜாக்களுக்கும்’ மனுவிற்குத் தரும் அதே தண்டனை பொருந்துமா?

  பய் தி வே, இந்து புராணங்களில் வரும் சம்பவங்களும் நபர்களும் உங்களைப் பொறுத்தவரை கற்பனை புரட்டுக்கள் தானே, பின்னே எப்படி மனுவை தண்டிப்பீர்??

 26. தருமானந்தசிவம் on December 26, 2013 at 8:57 am

  இந்து மதம் வேறு,ஆபிரகாமிய மதங்கள் வேறு என்பது அப்பட்டமான பொய் ..ஆபிரகாமிய மதங்களின் தாய் மதமாகிய யூத மதத்தின் பல கொள்கைகளை ,கட்டுப்பாடுகளை ,சட்டங்களை தென்னாசியாவின் மூதாதை மற்றும் இயற்க்கை வழிபாடுகளுடன் சேர்ந்து பாரம்பரியம் ஆகியது தான் இன்றைய இந்து மதம் …

 27. தருமானந்தசிவம் on December 26, 2013 at 8:59 am

  சீமானின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதே சட்டத்தை நாடுவதை விட சிறப்பானது.

 28. naam thamizar on December 26, 2013 at 9:15 am
 29. தருமானந்தசிவம் on December 26, 2013 at 9:22 am

  பார்ப்பனியம் சீமான் என்ற எடுப்பார் கைப்பிள்ளையை வேண்டிய அளவிற்கு பயன்படுத்தியாயிற்று. அழுக்கடைந்த துடைப்பு துணி இனி அதற்கு தேவைப்படாது …… தமிழர்களின் சமூக நீதிக்காக போராடிய பெரியாரையும் அவருடைய போராட்டத்தையும் அப்போராட்டங்களின் விளைவாக பயன்பெற்ற அன்னக்காவடிகளை வைத்தே தூற்றியாயிற்று ……

  [இந்த மறுமொழி ஈவேரா இயக்கத்தினர் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களை பார்க்கிறார்கள் என்பதை காட்டவே பிரசுரிக்கப்படுகிறது.- ஆசிரியர் குழு]

 30. அத்விகா on December 26, 2013 at 10:33 am

  மேலே என்னுடைய கடிதத்தில் நாராயண ச்மிருதி என்பதை ” நாரத ஸ்மிருதி “- என்று திருத்தி படிக்க வேண்டுகிறேன். தட்டச்சுப் பிழையை மன்னிக்கவும்.

 31. arivalagan on December 26, 2013 at 7:59 pm

  these type of rascals should sent to jaul

 32. kmv on December 26, 2013 at 8:27 pm

  கம்பீரமான பெரும் ஊர்வலங்கள் மெல்ல நகரும் வீதிகளில் தெருநாய்கள் குரைப்பதற்கும் சுதந்திரம் இருந்தே ஆக வேண்டும். please Do not stoop to respond him.

 33. a.vivekananthan on December 31, 2013 at 2:10 pm

  லிங்கத்தின் அர்த்தமது தெரியும் ஆனால்
  வானரம் மழை தனில் நனைய
  துக்கனம் தானொரு நெறி சொல
  தாண்டி பிதிடும் ஜானமும் கல்வியும்
  பயின்ட நூல் களும் ஈன ருக்கு உரைத்திட லாமோ.
  என விவேக சிந்தமணியிலும்
  முட்டாளுக்கு அறிஉரை சொல்லத்தேவை இல்லை
  என பைபிளிலும் கூறப்பட்டிருக்கிறது.
  நண்பர்களே அமைதி கொள்ளுக்க.

 34. R.Kumari Kuselan on January 2, 2014 at 12:56 am

  சிவலிங்கம்:
  இது கடவுள் அரு உரு திரு மேனியை காட்டுகிறது. இதில் லிங்கம், ஆவுடை, கோமுகி(அறிவியல் படி electron , proton , neutron ) என்னும் பாகங்கள் உண்டு. லிங்க பகுதி சிவனையும், ஆவுடை சக்தியையும், கோமுகி கருணையையும் காட்டுகிறது. நாம் தோன்றுவதற்கு நம் தாயும் தந்தையும் எவ்வித காரணமாக உள்ளார்களோ, அதுபோல எல்லா உலகங்களும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்ற தாயும் , தந்தையுமே சிவமும் சக்தியும் ஆகும். அதுவே சிவ லிங்கம்.

  இதை செபஸ்தியன் நாடாரிடம்(ச்சீ மான்) சொல்லுங்கள்.

  (Edited and published)

 35. பொன்.முத்துக்குமார் on January 3, 2014 at 1:04 am

  இந்த மொழியியல் வல்லுநர் தோற்றோரியல்-தான் tutorial-ஆக மாறியது என்று திருவாய் மலர்ந்தருளியதை கேட்டபோது, நோம் சாம்ஸ்கி போன்ற அற்பப்பதர்கள் இந்த மகா ஞானி-யின் பாதம் பணிந்து பாடம் கற்கும் பாக்கியமற்றுப்போய்விட்டார்களே என்று அவர்கள் மேல் பரிதாபம் மேலிட்டது.

 36. TAMILAN on January 4, 2014 at 3:45 pm

  அப்போ லிங்கம் என்றால் என்ன ? அர்த்தம் கொஞ்சம் சொல்லுகோ

 37. Prassannasundhar N on January 5, 2014 at 11:47 am

  //அப்போ லிங்கம் என்றால் என்ன ? அர்த்தம் கொஞ்சம் சொல்லுகோ//

  மேலே இத்தனை பேர் சொல்லியிருக்காங்களே பாஸ்! நல்லா மூஞ்சி கழுவிட்டு வந்து திரும்பியும் எல்லா பின்னூட்டங்களையும் படிங்க!

 38. sanjay on January 9, 2014 at 1:42 pm

  Seeman is a product of EVR, so he will only talk like this.

 39. priyavarshini on January 10, 2014 at 5:32 pm

  ஹிந்து மதத்தில் சொல்லிய உன்னதமான கருத்துகள் ஆழமான உண்மைகள் இவற்றை பற்றி சரியா படிக்காமல் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை பரப்பி வருகின்றனர் அறியாமையால் இதை பலர் இதை நம்பி வருகின்றனர் குறிப்பிட்ட மதத்தவரின் மனதை புண் படுத்துகிறார்கள் இதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்

 40. Muthukumar on January 12, 2014 at 8:11 pm

  bibleunmaikal.com – பார்க்கவும்.

 41. sanjay on January 13, 2014 at 9:51 am

  There was a movie “Neveena Saraswathi Sabatham” released recently which made fun of Hindu Gods Godesses. It is to be telecast on Vijay TV during the pongal hoiidays.

  Why did Tamilhindu not raise a word against the film?

 42. kmv on January 26, 2014 at 9:26 pm
 43. Truth on January 31, 2014 at 4:33 pm

  இது நாம் தமிழர் வலைத்தளம் – http://naamtamilar.org/ இங்கு சென்று தொடர்புக்கு என்றிருப்பதை அழுத்தி, அவருக்குக் கேட்க விரும்புவது, சொல்ல விரும்புவது, எல்லாம் சொல்லலாம். வெறும் பேச்சு வேங்கைகளில் புதிதாக முளைத்திருப்பவர்களில் இவரும் ஒருவர். எப்படி ஒருவருக்கு தன் கைத்தடியை சுற்ற சுதந்திரம் உண்டோ, அதே போல அக்கைத்தடி அடுத்தவர் முகத்தில் படாமல் சுற்றப்பட வேண்டும் என்பது தெரிய வேண்டும். அவ்வாறு தெரியாவிடில் நமது கடமை அக்கைத்தடியை வைத்தே அவருக்கு புரிய வைப்பது. எங்கே, பார்க்கலாம், எத்துணை பேர் மேற்சொன்ன தளத்தில் சென்று தங்கள் முத்திரையைப் பதிக்கிறார்கள் என்று.

  “தர்மோ ரக்ஷதி” என்று சொல்லிக் கொண்டு தமிழ் ஹிந்துவில் கமெண்டு போட்டால் மட்டும் போதாது. காளான் எங்குள்ளதோ அங்கேயே சென்று மருந்தடிக்க வேண்டும்.

 44. renghanatan on February 3, 2014 at 3:34 pm

  இந்து என்பது மதம் அல்ல . இந்து ஒரு சமயம். இது யாராலும் உருவானது அல்ல. இந்து சமயத்தில் முழுவதும் வாழ்க்கை தத்துவங்கள், எப்படி வாழ வேண்டும் நாம் யார் என்பது எதற்காக பிறவி எடுத்துள்ளோம் என்று அறிவது மற்றும் முக்கியமாக உணர்வது, முழுவதும் நம்மை உணர்வது, நாம் எப்படி பிறந்தோம் ,எதற்காக பிறந்தோம்,நாம் அடைவது எதை, எது கடவுள் ,அதில் நாம் யார், முதலில் நான் என்பது என்ன ,நான் யார் என்பதை உணரட்டும், அதற்கு விளக்கம் கிடைக்கும், விளக்கத்தை உணர மனிதர்களாகிய மனித பிறவிக்கு மட்டுமே உணர்தல் முடியக்கூடிய விசயம், அதனால் இதை பற்றி பெரிதாக எடுத்துகொள்ள எதுவும் இல்லை, தன்னை உணர்வது மனிதனால் மட்டும் ஆகக்கூடியது, ஐந்தறிவு மிருகங்களால் முடியாது.

 45. Manickavelu S on February 11, 2014 at 7:44 pm

  அவன் பேரே செபாஸ்டின் சைமன் தான. அதான் அப்படி பேசி இருக்கான். இந்து மதத்துல மட்டும் தான் உருவ வழிபாடு இருக்கா? கிருத்துவத்துல மாதா சிலைய வச்சிதான கும்பிடுறாங்க அத ஏன் கேட்க எந்தவொரு பகுத்தறிவு வியாதிக்கும் முதுகெலும்பு இல்ல?

 46. saravanan on March 17, 2014 at 9:11 pm

  don’t give importance to the words of that uncultured fellow.indha madhiri pesuna alunga ippa kasila sivan kaladila kidakkanga

 47. இராசராசன் on January 24, 2015 at 7:28 am

  இந்து மதத்தை இழிவு படுத்தி பேசுவது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது. இசுலாத்தில் உருவ வழிபாடு இல்லை என்று யார் கூறியது. சௌதி நாட்டில் உள்ள மக்கா நகரத்தில் ‘காஅபா’ என்கிற பெயரில் ஒரு கல் இருக்கு.இது இசுலாத்தின் படி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்ததாக குரானில் குறிப்பிட்டிருக்கிறது. அதை இசுலாமியர்கள் சுத்தி வருவது வழக்கம் மட்டுமில்லாமல் அதனுடைய படத்தை அவர்கள் இல்லங்களிலும் , கடைகளிலும் மாட்டுவது வழக்கம். மதத்திற்கு எதிர்ப்பு என்று பிரகடனம் செய்யும் சீமான் இசுலாத்தையோ அதனுடைய மூட நம்பிக்கைகளையோ சுத்திக்காட்டுவது உண்டா.

 48. இராசராசன் on January 24, 2015 at 9:22 am

  இந்து சகோதரர்களே தமிழில் ஒரு பழமொழி அறிவீர்கள சூரியனை கண்டு நாய் குலைப்பதால் சூரியனுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது மாறாக நாயின் தொண்டை தான் கெடும். உலகெங்கும் அதிகமாக சபிக்கப்படும் நாடு அமேரிக்கா தான். அதனுடைய கொடியை எரிப்பது இசுலாமிய நாடுகளில் சகஜம் அமேரிக்கர்களை அவதூறாக பேசுவதும் கூட் ஈரானின் முந்தைய அதிபர் அஹ்மதினஜாத் அமேரிக்காவை

 49. இராசராசன் on January 24, 2015 at 9:26 am

  அமேரிக்காவை ஒரு சாத்தானிய நாடு என்றும் அதனுடைய அழிவு விரைவில் ஏற்படும் என்று பிரகடனம் செய்தார் அமேரிக்காவுக்கு இதனால எதுவும் ஏற்படவில்லை. வல்லாதிக்கமாக இருந்துக்கொண்டிருக்கிறது. அதேபோல இந்து மதத்தை சீமானோ , திருமாவளவனோ , வீரமணியோ அவதூறாக பேசுவதால் எதுவும் ஆகபோகிறது இல்லை

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*