ஆம் ஆத்மி பார்ட்டியை தெ(பு)ரிந்து கொள்வோம்

டெல்லியில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி  28 இடங்களை பெற்று ஆட்சியில் அமர்;ந்துள்ளது.  பாரதிய ஜனதா கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்ற பின்னரும் பெரும்பான்மைக்கு இன்னும் ஐந்து இடங்கள் குறைவாக இருப்பதால், ஆட்சி அமைக்க விருப்பம் இல்லாமல், காங்கிரஸ் கட்சியின் துணையுடன் ஆம் ஆத்மி கட்சி  பதவி ஏற்றுள்ளது.  நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, மறைமுகமாக காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சிக்கு உதவியதாக குற்றச்சாட்டுகளும் உண்டு.  கீழ் தட்டு மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அதிகாரத்தை கைபற்றியுள்ள கட்சி ஆம் ஆத்மி கட்சியாகும்.  உண்மையிலேயே இந்த கட்சி ஊழலை ஒழிக்க கூடிய கட்சிதானா என்றும், இவர்களின் பின்புறத்திலிருந்து இயக்குவது யார் என்று பார்க்க வேண்டும்.  இதில் அங்கம் வகிக்கும் பெருவாரியான உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகள் என்றால் மிகையாகாது.

நிதி பெற்ற விவரங்கள்

அமெரிக்காவிலிருந்து செயல்படும் போர்ட் பவுன்டேஷன் (Ford Foundation ) நிறுவனத்திடமிருந்து, அர்விந்த கெஜ்ரிவால் மற்றும் அவரது நன்பர்களும், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கியமானவர்களான மணிஸ் சிசோடியா (Manish Sisodia) போன்றவர்கள் ஏற்படுத்திய கபீர் (Kabir)என்ற NGO விற்கு பெற்ற நன்கொடை.4லட்சம் டாலர். அதாவது ரூ86,61,742  ஆகும். இவ்வளவு பெருந்தொகையை பெற்றுக் கொண்டு, அதை எவ்வாறு செலவு செய்தார்கள், எதற்காக செலவு செய்தார்கள் என்பதை மக்கள் முன் வைக்கவில்லை. 2007-ம் வருடம் முதல் 2010-ம் வருடம் வரை இந்த தொகை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  எதே போர்ட் பவுன்டேஷன் நிறுவனத்திடமிருந்து மட்டும் பணம் பெற வில்லை.  அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றவர்களிடமிருந்தும் பணம் பெற்றுள்ளார்கள்.

ford-foundation-aap-kejriwal-cia-india-1

2007-ம் ஆண்டு முதல் 2010-ம் வருடம் வரை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஸ் சிசோடியா ஆகியோரின் கபீர்   விற்கு கிடைத்த நன்கொடையின் பட்டியல் பிரியா (PRIA) ரூ2.37,035, மஞ்சுநாத் சண்முகம் ட்ரஸ்ட் ரூ3,70,000, டச்சு தூதரகம் வழங்கியது ரூ19,61,968. இந்திய வளர்ச்சி அமைப்புAssociation for India’s Development) ரூ15,00,000.  இந்திய நன்பர்கள் சங்கம் வழங்கியது ரூ7,86,500.  ஐ.நா.சபையின் வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில்(United Nations developing programs)வழங்கியது ரூ12,52,742  . இத்துடன் இந்த மூன்று ஆண்டுகளில் வேறு சிலரிடம் வசூல் செய்த தொகை ரூ11,35,857 ஆகும்..  இவை மட்டுமில்லாமல் இன்னும் சில நிறுவனங்களிடம் பெற்ற தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் ஆம் ஆத்மி கட்சியின் யோகேந்திர யாதவ் தனது தனிப்பட்ட தொண்டு அமைப்பிற்காக போர்ட் பவுன்டேஷனிடம் பெற்ற தொகை 3,50,000 டாலர்.

ஐ.டி. தொழிலில் கொடி கட்டி பறக்கும்  Infosys  என்ற நிறுவனத்தின் தலைவரான நாராயண மூர்த்தி கெஜ்ரிவாலுக்கு கொடுத்த பணம் ரூ12 லட்சம்.. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஈனம் செக்யூரிட்டி (Enam Securities)   என்ற  பங்கு வர்த்தக நிறுவனம் வழங்கிய தொகை ரூ2 லட்சம்.  2ஜீ அலைக் கற்றை ஊழலில் சிக்கிக் கொண்ட டாடா நிறுவனத்தின் தொண்டு நிறுவனமான டாட்டா சோஷியல் வெல்பேர் ட்ரஸ்ட் (Tata Social Welfare Trust) அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொடுத்த தொகை ரூ25 லட்சம், Eicher Goodearth Trust என்ற நிறுவனம் கொடுத்த தொகை ரூ3லட்சமாகும்.  நாடு முழுவதும் கல்லூரிகளை நடத்தி வரும் ஜகன் நாத் குப்தா நினைவு கல்வி அறக்கட்டளை (Jagan Nath Gupta Memorial Education Society) 13 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது.  இவ்வாறு லட்சக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டு, ஏழைகளின் நன்மைக்காகவே பாடுபடுவதாக கூறும் இவர்கள், பெற்ற பணத்தை எவ்வாறு செலவழித்தார்கள் என்பதற்குறிய கணக்குகளை பொது மக்கள் முன்னிலை வைக்க வில்லை.

இந்திய திருநாட்டில் டெல்லி மாநிலத்தில் நடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நன்கொடை பெற்றவர்கள், நாளை தினம் இந்த நாட்டை அந்நிய நாட்டினருக்கு விற்க மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.  இந்த வாத்த்தை வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  ஆம் ஆத்மி கட்சியின் இணைய தளத்தில் வெளி நாடுகளிலிருந்து பெற்ற நன்கொடை விவரத்தை வெளியிட்டுள்ளார்கள்.  இந்தியாவில் நன்கொடை பெற்ற தொகை ரூ3,77,56,484-, அமெரிக்காவில் பெற்ற நன்கொடை ரூ44,59,490-, இங்கிலாந்தில் வாங்கிய நன்கொடை ரூ10,93,699-, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சில் பெற்றது ரூ14,12,696-, சிங்கப்புரில் பெற்றது ரூ10,74,514-, கனடாவில் ரூ4,46,175 என செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.  இந்திய நாட்டில் உள்ள ஊழல்களை ஒழிக்க எடுத்த அவதாரமாக கருதும் ஆம் ஆத்மியினர் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற வேண்டிய அவசியம் என்ன? இதற்கு முழுமையான விளக்கங்கள் அளிக்க முன்வருவார்களா? என்பது தெரியவில்லை.

தேச விரோத சக்திகளுடன் உறவு

அர்விந்த் கேஜ்ரிவாலுடன் பிரசாந்த் பூஷண்
அர்விந்த் கேஜ்ரிவாலுடன் பிரசாந்த் பூஷண்

ஆம் ஆத்மி கட்சியின்  முக்கிய நபரும், கட்சி துவங்குவதற்கு முன்பே களத்தில் இறங்கிய பிரசாந்த் பூஷன் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் ஆதரவாக களத்தில் உள்ளவர்.  கூடங்குளம் அனல் மின்நிலையத்தை மூட வேண்டும் என்ற போராட்டம் நடக்கின்றது. இந்த போராட்டம், அமெரிக்காவின் ஆலோசனையின் படி இங்குள்ள சில பாதிரியார்களின் துணையோடு போராட்டம் நடத்தும் உதயகுமாருடன் நெருங்கி தொடர்ப்பு கொண்டவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர்..   1998-ல் கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, அத்வானி அவர்களை கொல்ல திட்டமிட்டு வெடி குண்டு தாக்குதல் நடத்திய் சம்பவத்தின் சூத்ரதாரியான அப்துல் நாசர் மதானிக்கு ஆஜராகும் அட்வகேட். காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவாகவும், தனி நாடு கோரி போராடும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் இடது சாரி சக்திகளுடன் கூட்டு சேர்ந்துக் கொண்டு  தேசத்திற்கு விரோதமாக குரல் கொடுப்பவர் பிரசாந்த் பூசன்.  இவரின் ஒரு கருத்து இந்திய இறையான்மைக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தாகும். /Our role is to facilitate a dialogue between Kashmir India and Pakistan ‘  என்பதாகும். இந்த வாதத்தை போலவே But if we still feel that people feel alienated in Kashmir then a UN mandated plebiscite can be conducted . மேற்கண்ட இரண்டு கருத்துகளும் பிரசாந்த் பூஷன் தொடர்புகளை அம்பலப்டுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானோ அல்லது லஷ்கர் இ தொய்பாவே கலவரத்தை தூண்டவில்லை என இந்திய மண்ணில் பேசியவர் பிரசாந்த பூஷன். (there was no hand of Pakistan and Lashker-e-Toiba in instigating any disturbance in Kashmir ) பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதியிலிருந்து, இந்திய ராணுவம் வகுப்புவாதமாக மாறிவிட்டது என பிரச்சாந் பூசன் பேசியது அவரின் தேச விரோத சிந்தனையை தெரிந்து கொள்ள வேண்டும்.

Binayak Sen என்பவர் மாவேயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய புள்ளி, இவரை சத்தீஸ்கர் அரசு கைது செய்தது.  இந்த கைதை கண்டித்து 2011ம் வருடம் ஏப்ரல் மாதம் டெல்லியில் நடந்த Justic for Trail என்ற நிகழ்ச்சியின் கடைசி நாளில் பிரசாந்த் பூஷன் கலந்து கொண்டு சத்தீஸ்கர் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை வகுக்கின்ற பொறுப்பு பினாயக் சென்னிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆகவே இந்திய திருநாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் மாவேயிஸ்ட்கள் மற்றும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் என்றால் மிகையாகாது.  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான கோபால் ராஜ், அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷ்திற்கு எதிராக துவக்கப்பட்ட அகில இந்திய மாணவர் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு கம்யூனிஸ்ட் பார்டி ஆப் இந்தியா( மார்க்கிஸ்ட்-லெலினிஸ்ட்) (Communist Party of India Marxist – Leninist Liberation )அமைப்பாகும்.  இந்த அமைப்பு நேரிடியாகவே மாவோயிஸ்ட்களின் சித்தாந்தங்களை ஆதரிக்கும் இயக்கமாகும்.

அரவிந்த் கெஜ்ரிவால்

aap-arvind-kejriwalதன்னை தூய்மையானவராக காட்டீக் கொள்ளும் கெஜ்ரிவால் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 20 ஆண்டு காலமாக டெல்லியிலேயே பணி புரிந்த ரகசியம் என்ன என்பது தெரியவில்லை. IFS பணியில் உள்ள அதிகாரி கட்டாயமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே பணியாற்ற வேண்டும் என்ற விதியை ஒரு முறை கூட கெஜ்ரிவால் பயன்படுத்த வில்லை. ஒரு முறை கூட டெல்லிக்கு வெளியே பணி மாற்றம் செய்யப்படவில்லை.  அரசு ஊழியர் வெளிநாட்டில் படிக்க சென்றால், முழு சம்பளத்துடன் கூடிய  விடுப்பு கொடுக்கப்படும்,  அதே சமயம் படிப்பு முடித்த பின்னர் கட்டாயமாக மூன்று ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தும், விதிக்கு புறம்பாக நடந்து கொண்டது ஏன்? முழு சம்பளத்துடன் வெளிநாடுகளில் படிக்க செல்லும் அரசு ஊழியர், படிப்பு முடிந்தவுடன், அரசுக்கு முழு அறிக்கை சமர்பிக்க வேண்டும், கெஜ்ரிவால் ஏன் அறிக்கை சமர்பிக்கவில்லை. ஒரு முறை கெஜ்ரிவால் சண்டிகருக்கு பணி மாறுதல் செய்த போது, பணி மாறுதல் ரத்து செய்ய காரணம் என்ன? அரசு ஊழியராக இருக்கும் போதே  கபீர் என்ற NGO தொண்டு நிறுவனத்தை நிறுவுவதற்கு முன் அரசின் அனுமதி பெற வேண்டும், நீங்கள் அனுமதி பெற்றீர்களா என்பது தெரிய வேண்டும். இவருடைய தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற அரசின் அனுமதி உண்டா என்பதும் தெரியவில்லை.  சட்டததிற்கு விரோதமாக மின் இணைப்பு துண்டிக்கப்ட்ட பகுதிகளுக்கு, மின் இணைப்பு கொடுத்தது சரியா, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டது, ஜனநாயக வழியா என்பதை விளக்க வேண்டும்.

இறுதியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அமைச்சர்களை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்த போது, மிகவும் கேவலமான முறையில் பிரணாப் முகர்ஜியை விமர்சனம் செய்த கெஜ்ரிவால், குடியரசு தலைவராக பதவி ஏற்றவுடன் அவரை புகழ வேண்டிய அவசியம் என்ன?  தேர்தலுக்கு பின்னர் பல முறை தாங்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலை சந்திதததின் பின்னணி என்ன? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதில் கூற வில்லை.  ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் முடிந்த பின்னர், சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரை தேர்வு செய்து பின்னர் அவரை பதவி ஏற்க முடிவு செய்வார்கள்.  ஆனால் சட்ட மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் தானே டெல்லியின் முதல்வர் என முடிவு செய்தது ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா என்பதை பொது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சி டெல்லி முன்னாள் முதல்வர் மீது குற்றச்சாட்டுகளை கொடுத்தால்  விசாரனை நடத்த தயார் என அறிவித்துள்ளார்.  இதில் வேடிக்கை என்னவென்றால்,  சட்ட மன்ற தேர்தல் நடக்கும் முன் , காமன்வெலத் விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல் சம்பந்தமான அறிக்கை வெளியானவுடன், முதல்மந்திரி பதவியிலிருந்து ஷிலா தீட்ஷித் விலக வேண்டும் என குரல் கொடுத்தவர் கெஜ்ரிவால் என்பதை மறந்து விடக்கூடாது.  இது சம்பந்தமாக மத்திய அரசு நியமித்த சாங்குலு குழுவினரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே விசாரனை நடத்த முடியும்.  ஆனால் தன்னை யோக்கியனாக காட்டுக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியினர்  ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிய மாட்டார்கள் என்பது உண்மையாகும்.

ஷாஜியா இல்மி

Shazia Ilmi என்ற இந்த பெண்மனி ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்.  இவர் முழு காங்கிரஸ் ஆதரவாளர்.  இவரது தகப்பனார் உத்திர பிரதேச சட்ட மன்ற உறுப்பினராக பல முறை கான்புர் சட்ட மன்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்.  உத்திர பிரதேசத்தில் அமைச்சாரகவும் பதவி வகித்தவர்.  இவ்ரது சகோதரியின் கணவர் முன்னாள் மத்திய அமைச்சர் அரீப் முகமது கான்.  இவர் கல்வி பயின்றது ஜாம்மிய இஸ்லாமிய பல்கலை கழகத்தில்.  இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எந்த கருத்தையும் முன் வைக்காதவர்.

யோகேந்திர யாதவ்

காங்கிரஸ் ஆட்சியில் பதவி சுகத்தை அனுபவித்தவர். 2009-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்திக்கு ஆலோசகராக பணியாற்றியவர். 2005-2012 வரை தேசிய கல்வி ஆராய்ச்சி மையத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசியல் விஞ்ஞானம் என்ற புத்தகத்தின் ஆய்வாளராக பணியாற்றினார்.  சோனியா காந்தியின் தலைமையில் உள்ள தேசிய ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்.  கல்வி உரிமை சட்டம் பற்றி தேசீய ஆலோசனை குழு உறுப்பினர்,  2011-ல் பல்கலைகழக மானிய குழு உறுப்பினர்.  ஆகவே மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, தற்போது ஊழல் மிகுந்த ஆட்சி என வர்ணிப்பது விசித்தரமானதாகும்.  எந்த நேரத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

*******

kejriwal_tauqir1ஆம் ஆத்மி கட்சியும் கூட காங்கிரஸ் கட்சியை போல் சிறுபான்மையினரை தாஜா செய்யும் காரியத்தில் ஈடுபட்டது.  டெல்லி சட்ட மன்ற தேர்தலுக்கு முன்  Barelui    பகுதியில் உள்ள இஸ்லாமிய தலைவரான மௌலானா தக்கீர் ஈஸா கான்  (Taugeer Raza Khan)என்பவரை சந்தித்து, வரும் சட்ட மன்றத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்.  இவர் பங்களா தேஷ் நாட்டின் எழுத்தாளாரான தஸ்லீமா நஸ்ஸூரிதின் மீது பட்வா விதித்தவர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  ஆகவே டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே  இஸ்லாமியர்களுக்கு ஆதரவான போக்கினை கடை பிடித்தவர்கள்.  மௌலானா தக்கீர் ஈஸா கானை சந்தித்த்து போல், அடிப்படைவாத இஸ்லாமிய தலைவரான மதானியைச் சந்தித்து தனது ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதராவினை கேட்டவர் கெஜ்ரிவால் என்பதை மறந்து விடக் கூடாது.

சர்வாதிகாரம் என்பது ஆம் ஆத்மி கட்சியில் சர்வசாதராணமாகும்.  தேர்தலில் டெல்லியில் உள்ள பத்ராபுர் தொகுதியின் வேட்பளாராக அம்ரீஸ் சௌத்திரிக்கு கொடுப்பதாக கூறியவர்கள், திடீர் என வேட்பாளரை மாற்றி விட்டார்கள்.  இதில் வேடிக்கை என்ன வென்றால், ஆன்லைனில் பத்ராபுர் தொகுதியின் வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டும் என கட்சியினரிடம் கருத்து கேட்ட போது 60 முதல் 70 சதவீதமானவர்கள் அம்ரீஸ் சௌத்திரிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். ஆனால் இந்த மாற்றம் ஏற்பட்டது.  இதன் காரணமாக அம்ரீஸ் சௌத்திரி கெஜ்ரிவாலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.  How much money you took to sell the Badarapur seat?  என அனுப்பினார் .   இதற்கு பதிலாக கெஜ்ரிவால் அனுப்பியது  In Rs.2 crore .          ஆகவே. ரூ2 கோடிக்காக ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவி விற்கப்பட்டது என்றால் இவர்களா லஞ்சத்தை ஒழிக்க முற்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு வருடங்களாகவே அன்னா ஹசாரே இயக்கத்திலிருந்து கெஜ்ரிவால் தொடாந்து வலியுறுத்தி வந்த விஷயம், சட்ட மன்ற, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிரிமினல் குற்ற பின்னணி உள்ளவர்களை நிறுத்தக் கூடாது என்று கூறியவர்.  இந்த கருத்துக்கு மாறாக கெஜ்ரிவால் மேல் 9 கிரிமினல் வழக்குள் நிலுவையில் உள்ளன. கோபால் ராயின் மீது கலவரம் ஆயுதங்களுடன் தாக்குதல் என்று இரண்டு வழக்குகளும், தனது நிர்வாக குழு உறுப்பினரும், கபீர் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்துபவருமான மணீஷ் சிசோடியா மீது மூன்று கிரிமினல் வழக்குகள் உள்ளன.  இதை விட கேலவமான வழக்கு ஒன்று உள்ளது, ரேஷன் கடைகளில் முறைகேடுகள் செய்த்தற்காகவும், ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து விட்ட தனது தந்தையின் வாழ்நாள் கால் பென்ஷனை இறந்த்தை மறைந்து வாங்கி வரும் வழக்குகள் கொண்ட தேஷ்ராஜ் ரகாவ்  ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்.  இது போல் இன்னும் பலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

எனவே  புரையோடி போன அரசியலை புனிதமாக்க அவதரித்த்தாக தன்னை காட்டிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியின் மறு அவதாரம் என்றால் மிகையாகாது.

6 Replies to “ஆம் ஆத்மி பார்ட்டியை தெ(பு)ரிந்து கொள்வோம்”

  1. ஆம் ஆத்மி பார்டியை, அல்லாஹு அக்பர் பார்டி எனக் கூறலாம். இதில் உள்ள தலைவர்களுக்கெல்லாம் , மகசாகி, ஃபோர்ட் ஃபௌண்டேஷன் மற்றும் இம்மாதிரியான நிருவனங்களிலிருந்து நிதி அளிக்கப்படுகிறது. மேலும் இவைகளைப்பற்றி ஒரு பட்டியல்இங்கே
    Here is the list of Indians/ NGOs who have been funded by or have proximity to Ford Foundation
    • Arvind Kejriwal and Manish Sisodia’s NGO – Kabeer
    • Mallika Sarabhai’s Darpana
    • Yogendra Yadav was funded by ICSSR of Jawaharlal Nehru University, which in turn
    was funded by Ford Foundation
    • Amartya Sen for its books – Ideas of Justice
    • Teesta Setalvad and Javed’s Sabrang Communication, one who has been fighting
    against Modi all these years
    And you would know, most of these guys are part of Aam Aadmi Party or are major supporters of AAP.
    Just to do further research on members of Aam Aadmi Party, I tried to find some details on other members like Aruna Roy, Medha Patkar, Prashant Bhushan and Gopal Rai…
    And this was even a bigger SHOCKER to me…
    Aruna Roy is the one who had sent a petition to President PRANAB MUKHERJEE for mercy towards Ajmal Kasab.. the one who killed so many innocents in Mumbai terror attack on 26th November 2008. She was also part of Sonia Gandhi’s National Advisory Council
    Here are some links pertaining to the same
    https://www.kashmirtimes.in/newsdet.aspx?q=11654
    Prashant Bhushan, who we all know for the rubbish referendum view on Kashmir, was also the preferred mediator of the Maoists a couple of years back. Now why would they want Prashant Bhushan?? Did they trust that Prashant Bhushan would show some soft corner towards them?

    Here are the links pertaining to the same
    https://indiatoday.intoday.in/story/prashant-bhushan-wants-referendum-on-army-presence-in-hinterland-of-kashmir/1/334580.html
    https://indianexpress.com/news/maoists-name-prashant-bhushan-2-others-as-mediators/940819/
    Medha Patkar – we all know her for being responsible for delay in Sardar Sarovar Dam. But something that I didn’t know earlier, I came to know when I read the link given below. It says that tribals in Chattisgarh had thrown her out of the village of Dantewada for her pro-naxal behavior.

    https://articles.timesofindia.indiatimes.com/2010-01-07/india/28114789_1_naxal-hit-areas-narmada-bachao-andolan-tribals
    There were some other articles, which suggested her proximity to Angana Chatterjee (who was suspected to be an ISI agent). But didn’t know the authenticity of the article, hence not attaching it.
    Gopal Rai – Ex member of Sonia Gandhi’s NAC. Was president of All India Students Association (associated with CPI (M-L)), which is known for its pro Maoist stance..
    If all this was not enough, One more article that I came across and that raised doubts on CIA’s interest in India is the one in Economic Times, that suggested that Government was giving work for Aadhar to a startup – MongoDB, which is funded by CIA’s venture fund. Links to the same are given below.
    https://www.firstpost.com/economy/relax-cia-is-not-snooping-into-aadhaar-via-mongodb-1268077.html
    https://articles.economictimes.indiatimes.com/2013-12-03/news/44710564_1_uidai-chairman-nandan-nilekani-uid-data-in-q-tel
    This really is giving me a sleepless nights. Just wondering, if we have so many anti nationals within the country, do we really see Pakistan and China as a bigger threat?
    But then was wondering, why is media not exposing all this?

    But then somewhere the answer is in front of us – Manish Sisodia (ex journalist with Zee), Yogendra Yadav (ex Journalist CNN IBN), Shazia Ilmi (ex journalist) and the latest entrant Ashutosh (ex Managing Editor IBN7)… Are they not a party to it?
    Also wondered why people like Meera Sanyal (ex chief RBS) and V Bala (ex Director Infosys) joining AAP. Then came to know thatMeera Sanyal’s NGO Pradan (which operates in Naxal hit belt) is funded by Ford Foundation.

    Also, Narayan Murthy (Chairman of Infosys) is on the board of Ford Foundation. Probably there could be his compulsion to align with them given that 60% of Infosys’ business comes from US.
    We all believe corruption is an issue, but nothing can be bigger that National Security.
    We all want corruption free India and Aam Admi Party raised some hopes. But these news articles, really make me worried that by extending our support to AAP, are we compromising on NATIONAL SECURITY?
    If people who can compromise on national security for personal gains, will they ever give you corruption free governance?
    Like Ford Foundation, is AAP only a front face of some bigger conspiracy?
    This time, I was thinking of seriously giving a chance to AAP… but not ANYMORE…
    As a TRUE INDIAN, if this is worrying you as well, do forward it to spread awareness.

    Main Stream Media will not do that job.

  2. மேலும் நரேந்திர மோதிக்குக் கிடைக்க வேண்டிய வாக்குச்சீட்டுகளைக் கெடுக்கவே அல்லாஹூ அக்பர் பார்டி நிறுவப்பட்டுள்ளது. டில்லியில் நடந்த “தர்ணா” – “நான் அடிப்பது போல் அடிப்பேன்- வலிக்கிறதுபோல் நீ காண்பித்துக்கொள், மக்களை நாமிருவரும் சேர்ந்து மோதி வராமலிருக்க இதையும் ஒரு திறனுள்ள கருவியாக உபயோகிக்கலாம்” எனக் காண்பித்துள்ளனர்.

    ஒரு முதன் மந்திரியாக ஆவதற்குத் தகுதி வேண்டமா? “கேஜெரிவால்” தான் ஒரு ரௌடிக் கும்பலுக்குத் தலைவரே எனக் காண்பித்துக்கொள்கிறார்.

    இந்திய நாட்டு பண்புக்கெதிராக எதைச் செய்யலாமெனக் காத்துச் செய்யும் கும்பலெனவே எனக்குத் தோன்றுகிறது. இன்னும் எழுத எத்தனையோ உள்ளது.

    இக்கட்சி நாட்டு மக்களுக்குள் ஓர் குழப்பத்தை உண்டாக்கவே தறுவாய்க்கேற்றவாறு நிறுவப்பட்டுள்ளது. நம் இந்திய மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  3. அல்லாஹூ அக்பர் பார்டி (AAP)யும் காங்கிரசுமாகச் சேர்ந்து செய்யும் மற்றொரு சூனியச் சூழ்ச்சி.
    நாளை நரேந்திரமோதி பிரதம மந்திரியாக ஆகி, அடுத்த 26, ஜனவரி குடியரசு அணிவகுப்பில் உள்ளத்து உணர்ச்சி பூர்வ பேருரை நிகழ்த்தத் தடுக்க இவ்விரு போராட்டங்களை நடத்த இருக்கிறார்.
    1. ஜனவரி 26, குடியரசு அணிவகுப்பு கூடாதாம்.
    2. டெல்லி காவல்படை டெல்லி முதன் மந்திரி வசம் ஒப்படைக்க வேண்டுமாம்.
    அப்போது வருங்கால பாஜ கட்சி இவர்களுக்காக டெல்லியைவிட்டு மற்றொரிடத்திற்குத் தலை நகராக மாற்ற முடியுமா?
    ஆக எப்படியும் பாரதீய ஜனதாகட்சிக்கு எப்படியாகிலும் தொந்திரவு அளிக்க இன்றே திட்டமிடப் படுகிறது.
    இதற்குத் தக்கவாறு காங்கிரஸ் அரசாங்கம் போகும்போது இவ்வாறு இந்திய நாட்டையே கெடுத்துவிட்டுப் போகலாம். காங்கிரசுக்குத் தாம் அரசாங்கத்தை விட்டுவிட ஓட்டப்படப் போகிறதெனத் தெரிந்து இவ்வாறு செய்கைகளை பாரத நாட்டு வருங்காலத்தில் அக்கறையின்றி செய்ய இன்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது.
    இப்போதாவது மக்கள் அல்லஹூ அக்பர் பார்டியையும் இத்தாலிய ………………. போப் சூழ்ச்சிகளை தெ(பு)ரிந்துகொல்லவேண்டும்.
    தமக்கு இருகண் போனாலும், எதிரிக்கு ஒரு கண்ணாவது குருடாக்க வேண்டுமெனும் கொடூர கொடுவெறிக்காமம் (sadism)

  4. AAP IS MAINLY FUNDED BY CHRISTIANS MISSIONARIES AND MOST OF THEIR MEMBERS ARE DRAWN FROM HARD CORE ISLAMIC JIHADS AND CHRISTIANS MISSIONARIES. IN T N STATE ALL OFFICE BEARERS OF APP ARE FROM CHRISTIAN SUPPORTED NGOS AND MISSIONARIES. ALSO APP SUPPORT FOR THE CAUSE OF MR.UDHIYAKUMAR WHO IS OPPOSING THE NUCLEAR POWER PLANT IN KUNDANKULAM DUE TO HIS AGITATION IS BACKED BY FOREIGN MISSIONARIES OF CHRISTIANITY WHO NORMALLY WORK IN INDIA AS OPPUSDEI A VATICAN RUN INTELLIGENCE OPERATIVE WING. THEY HAVE MORE THAN 1,20,000 MEMBERS IN INDIA MOSTLY FROM KERALA AND TAMILNADU. THEY WORK IN COVERT, SECRET OPERATIONS TO SHOW HINDUISM IN BAD LIGHT TO SPREAD THEIR FALSE RELIGION. NOW ALL THOSE MEMBERS ARE PARTY MEMBERS OF APP. APP WAS STARTED BY MISSIONARIES WHICH TASTED THE POWER IN INDIA IN THE PAST 10 YEARS THROUGH PROXY ITALIAN LADY RUN CONGRESS PARTY DO NOT WANT MR. MODI TO COME IN POWER. THIS IS THE ONLY IDEA BEHIND THESE PEOPLE TO DO DRAMA. ALL OF US MUST EXPOSE THEIR TRICKS AND DIRTY INTENTION TO THE PEOPLE AND BRING TO THEIR NOTICE OF HINDUS.

  5. பொதுவாகவே மேற்கத்திய நாடுகளின் கொள்கை நமது நாட்டை கேவலப்படுத்தி அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி ஆதாயம் தேடுவோருக்கு ஆதரவாகத்தான் இருந்துவந்துள்ளது. உதாரணமாக நமது நாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘Slumdog Millionaire’. இந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு நடிகனை பார்ப்பதற்காக கழிவறையிலிருந்து வெளியேறும் முயற்சியில் மலக்குழியில் குதித்து வெளியேறும் காட்சி உள்ளது. இதைவிடக் கேவலமாக பாரதநாட்டை சித்தரிக்க முடியுமா? மேலை நாடுகளில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற நமது நாட்டின் பல பிரபலங்களை நாம் உதாரணமாக காட்ட முடியும். மிகவும் விமரிசனத்திற்கு உள்ளான ‘பயர்’ மற்றும் ‘வாடர்’ திரைப்படங்களும் இதே போன்ற ஒரு முயற்சி என்றே நினைக்கத் தோன்றுகிறது. நமது நாட்டையும் பண்பாட்டையும் மக்கள் தரத்தையும் கேவலப்படுத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் மேலைநாட்டினர் கண்டிப்பாக விருதும் ஆதரவும் தருவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ஊடகத்துறையில் வெளிநாடுகளிலிருந்து உதவியோ விருதோ கிடைக்கும் என்று விரும்பும் அனைவரும் நமது நாட்டை கேவலப்படுத்துவதை நியாயப்படுத்தும் நிலைப்பாட்டை கொள்ள வேண்டும் என்பதே மேலை நாடுகளின் தெளிவான கொள்கை என்பதை தேசிய எண்ணம் கொண்டவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *