வன்முறையே வரலாறாய்… – 6

 மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan

 தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

M.A.Khan அவர்கள் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன….

முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2, பகுதி 3,  பகுதி 4, பகுதி 5

***

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னால் இந்திய ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களாக, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுணர்வுடன் இருந்ததாகவும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகைமையைத் தூண்டியதாகவும் இன்று பொதுவாக சொல்லப்பட்டு வரும் செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை.

மாறாக, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய மண்ணில் கால் வைத்த காலம் தொட்டு இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நல்லுறவு ஒருபோதும் இருந்ததே இல்லை என்பதே வரலாறு நமக்கு அளிக்கும் செய்தியாகும். ஆனால் சுயநலவாதிகளால் இன்றைக்கு ஆளப்படும் இந்தியாவில் பரப்பப்படுகின்ற கட்டுக்கதைகளுக்கு அளவே இல்லை.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்சிக்காலத்தில் இந்து- முஸ்லிம் நல்லுறவு எவ்வாறு இருந்தது என்று இப்பகுதியில் பார்ப்போம்.

முன்பே கூறியபடி, அமைதிமார்க்க வழிகாட்டியான குரான் மற்றும் சுன்னாவின் கட்டளைகளைப் பின்பற்றி ஹிஜாஜ் தனது மருமகனான முகமது-பின்-காசிமை, 6,000 படைவீரர்களுடன் இந்தியாவை நோக்கி அனுப்பி வைத்தான்.

இந்துஸ்தானத்திலிருக்கும் உடல் வலிமையுள்ள அனைத்து ஆண்களையும் கொன்று, அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளை அடிமைகளாக பிடித்துக்கொண்டு வரும்படி விடப்பட்ட உத்தரவுடன் பின்-காசிம் இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வருகிறான். சிந்துப் பகுதியிலிருக்கும் டிபால் நகரைக் கைப்பற்றிய பின்னர், தொடர்ந்து இடைவிடாமல் மூன்று நாட்களுக்கு டிபாலின் குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

முகமது-பின்காசிம் முன்னிலையில் அழித்தொழிக்கப்படும் காஃபிர்கள் (பொ.யு. 712)

அதையடுத்து ப்ராஹ்மனாபாதில் போரிடும் வயதுடைய 6,000-லிருந்து 16,000 ஆண்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதையடுத்த மூல்தான் வெற்றியிலும் அங்கிருந்த அத்தனை ஆண்களையும் வெட்டிக் கொலை செய்கிறான் பின்-காசிம்.

பின்-காசிமின் வெற்றிகளைப் பறைசாற்றும் சச்-நாமா, அவன் ராவர் நகரைக் கைப்பற்றி அங்கு 60,000 அடிமைகளைப் பிடித்ததாகத் தம்பட்டமிடுகிறது. அதனைத் தொடர்ந்து காசிம் கண்ணில் தென்பட்ட அத்தனை ஆண்களையும் கொன்றுவிட்டு அவர்களின் மனைவிகளையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடித்து ஹிஜாஜிற்கு அனுப்பி வைக்கிறான்.

பின்-காசிம் சிந்துப் பகுதியிலிருந்த மூன்றாண்டு காலத்தில் பல லட்சக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு, வழிபாட்டுச் சிலைகள் உடைத்தெறியப்பட்டன; அந்த இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டன. ஹிந்துக்களின் அரண்மனைகளும், வீடுகளும், கணக்கில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டு ஏராளமான செல்வம் கொள்ளையடிக்கப்பட்டது.

கஜினி முகமதின் 17 வட இந்தியப் படையெடுப்புகளும் (1000-1027) பின்-காசிமின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவையல்ல. கண்ணில் தென்பட்ட ஹிந்து ஆண்கள் அத்தனை பேரையும் சுல்தான் முகமது இரக்கமின்றிக் கொன்று குவித்தான். பல லட்சக் கணக்கான ஹிந்துப் பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டார்கள். கண்ணில் தென்படும் எந்தவொரு கோவிலும், அரண்மனையும் சூறையாடப்பட்டு, இடித்துத் தள்ளப்பட்டது. கஜினி முகமதின் வரலாற்றாசிரியரான அல்-உத்பி, 1001-02இல் நடந்த படையெடுப்பைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்:

“கறுத்த மேகங்களின் பின்னனியில் மின்னிய கூர்மையான வாள்கள் வெட்டிச் சாய்த்த உடல்களிலிருந்து குருதி எரி நட்சத்திரத்தைப் போல உருகி ஓடியது. அல்லாவின் நண்பர்கள் அவர்களின் எதிரிகளை வெற்றி கொண்டார்கள். முஸல்மான்கள் 15,000 காஃபிர்களை வெட்டிச் சாய்த்து, அவர்களின் உடல்களை நாய்களும், நரிகளும் உண்ண வைத்தார்கள். அல்லா கணக்கிலடங்காத கொள்ளைச் செல்வங்களை வாரி வழங்கினான். ஏறக்குறைய ஐந்து லட்சம் அடிமைகளும் சுல்தானுக்கு உரிமையாகினர். அவர்களில் இருந்த அழகான பெண்களும், ஆண்களும் கூட”.

கஜினி முகமதுவின் படை நடத்திய அட்டூழியம்- சோமநாதர் ஆலயம் தரைமட்டம்.

நாகர்கோட்டையை (காங்ரா) 1008-ஆம் வருடம் கைப்பற்றிய கஜினி முகமது ஏறக்குறைய 70 லட்சம் (70,000,000) திர்ஹாம் பணத்தையும், ஏழு லட்சத்து நானூறு (700,400) தங்க, வெள்ளிப் பொதிகளையும், ஏராளமான வைர, வைடூரிய கற்களையும், அழகுற நெய்யப்பட்ட துணி வகைகளையும் கொள்ளையடித்ததாக அல்-உத்பி மேலும் எழுதுகிறார்.

தானேசர் என்னும் இடத்தில் 1011-ஆம் வருடம் நடந்த படையெடுப்பைப் பற்றி எழுதவரும் அல்-உத்பி, “சிலை வழிபாடு செய்யும் காஃபிர்களை அழித்து அங்கே இஸ்லாமிய வழிபாட்டை நிறுவும் உத்தேசத்துடன் நடந்த படையெடுப்பில் கொல்லப்பட்ட காஃபிர்களின் உடலிலிருந்து பொங்கி வழிந்த குருதியினால் அங்கு ஓடிய கால்வாய் செந்நிறம் கொண்டு மனிதர்கள் குடிப்பதற்கு லாயக்கில்லாததாக மாறியது. அங்கு அடித்த கொள்ளைப் பொருட்களை கடைசிவரை சுல்தானால் கணக்கிடவே முடியவில்லை. அல்லாவின் கருணையே கருணை” என மனம் மகிழ்கிறார்.

அடுத்து கன்னோஜில் நிகழ்ந்த படையெடுப்பைக் குறித்து எழுதுகையில், “அங்கு வசித்த காஃபிர்கள் ஒன்று இஸ்லாமை ஏற்க வேண்டும், அல்லது சுல்தானின் வாளுக்கு இரையாக வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அங்கும் ஏராளமான செல்வமும், அடிமைகளும் கைப்பற்றப்பட்டார்கள். அங்கு கிடைத்த கொள்ளைப் பொருட்களை கைகளால் எண்ண முயலும் ஒருவனின் கைகள் களைத்துப் போகும்” என அகமகிழ்கிறார்.

“கன்னோஜின் பெரும்பாலான காஃபிர்கள் சுல்தானின் முன்பு போரிட முடியாமல் தப்பியோடினார்கள். அவ்வாறு தப்பியோடாதவர்கள் உடனடியாக்க் கொல்லப்பட்டார்கள். அன்றைய ஒரு தினத்தில் மட்டும் சுல்தான் காஃபிர்களின் ஏழு கோட்டைகளைக் கைப்பற்றினார். பின்னர் அங்கு கொள்ளையடிப்பதற்கும், அடிமைகளைப் பிடிப்பதற்கும் தோதாக தனது படைவீரர்களுக்கு விடுமுறை வழங்கினார்” என மேலும் சொல்கிறார் அல்-உத்பி.

முன்பே கூறியபடி, கஜினி முகமதின் இன்னொரு வரலாற்றாசிரியரான அல்-புரூனி இந்தப் படையெடுப்புகளைக் குறித்துக் கூறுகையில், படு பயங்கரமான இந்த படையெடுப்புகளால் இந்துஸ்தானத்தின் முன்னேற்றம் முழுமையாகத் தகர்த்தெறியப்பட்டதாக எழுதுகிறார். இதன் காரணமாக இந்துக்கள் முஸ்லிம்களைக் கண்டதும் அருவருப்புடன் ஒதுங்கி நடந்ததாகக் கூறுகிறார்.

கஜினி முகமதிற்குப் பின்னர் படையெடுத்த கோரி முகமது இந்தியாவில் செய்த அழிவுகள் சாதாரணமானவையல்ல. பெரும்பாலான இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவைக் கொள்ளையடித்து, ஏராளமான செல்வங்களையும், அடிமைகளையும் தங்களின் நாட்டிற்குக் கொண்டு சென்றார்கள். ஆனால் கோரி முகமதின் படையெடுப்போ இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்தும் எண்ணத்துடனேயே, 12-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக 1206-ஆம் வருடம் இஸ்லாமிய ஆட்சி இந்தியாவின் ஒருபகுதியில் நிறுவப்பட்டது.

முதல் தரைன் போர்- பொ.யு.1191 (இதில் வென்ற பிருத்விராஜ் சௌஹானை, துரோகி ஜெயசந்திரனின் உதவியால் கோரி அடுத்த போரில் வென்றான்).

பாரசீக வரலாற்றாசிரியரான ஹசன் நியாஸ்மி, அவரது தாஜ்-உல்-மாசிர் என்னும் நூலில், அஜ்மீர் மீது படையெடுத்த கோரி முகமதுவைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“ஏறக்குறைய ஒரு லட்சம் காஃபிர் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டு நரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு கைப்பற்றப்பட்ட பொருளையும், செல்வத்தையும் பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில், கடலையும் மலைகளையும் பற்றி ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டது போலத் தோன்றும்”. பின்னர் டில்லியை நோக்கிச் சென்ற முகமது கோரியின் தாக்குதல் காரணமாக “டில்லியின் தெருக்களில் ரத்த ஆறு ஓடியதாக” அவர் குறிப்பிடுகிறார்.

1193-ஆம் வருடம் கோரி முகமதின் படைத்தலைவனான குத்புதீன் ஐபக், அலிகர் மீது எடுத்த படையெடுப்பைக் குறிக்கும் ஹசன் நியாஸ்மி, “கூரிய வாள் முனையால் வெட்டிக் கொல்லப்பட்ட ஹிந்து காஃபிர்கள் நரகத் தீயில் விழுந்து மாண்டார்கள்” என்கிறார். அந்தத் தாக்குதலின் பயங்கரம் குறித்து மேலும் கூறுகையில், “வெட்டப்பட்ட காஃபிர் ஹிந்துக்களின் தலைகள் வானைத் தொடுமளவிற்கு மலை போலக் குவிந்திருந்தன. அவர்களின் உடல்களைக் கழுகுகளும், மிருகங்களும் குதறித் தின்றன. காஃபிர்களின் கோவில்களும், சிலைகளும் இடித்துத் தள்ளப்பட்டன” என மேலும் விளக்குகிறார்.

குத்புதீன் ஐபக்கின் பனாரஸ் (காசி) படையெடுப்பைக் குறித்து இவ்வாறு எழுதுகிறான் ஹசன் நியாஸ்மி,

“பனாரஸ் ஹிந்துஸ்தானத்தின் நடுப்பகுதி போல இருக்கும் இடம். இங்கு குத்புதீன் ஐபக்கினால் ஏறக்குறைய ஓராயிரம் ஹிந்துக் கோவில்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அந்தக் கோவில்களின் அஸ்திவாரத்தில் புதிய மசூதிகள் எழும்பின. அல்லா அருளிய ஷரியா சட்டம் அங்கு நிறுவப்பட்டு, இஸ்லாமிய மதம் நிலை நிறுத்தப்பட்டது”

“பின்னர் ஜனவரி 1197-ஆம் வருடம் குத்புதீன் ஐபக் குஜராத்தின் தலைநகராக இருந்த நாஹர்வாலா நகரை அடைந்து, அங்கிருந்த ஐம்பதினாயிரம் காஃபிர் ஹிந்துக்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள். அங்கு மலையெனக் குவிந்திருந்த உடல்கள் அங்கிருந்த குன்றுகளின் உயரத்திற்குச் சமமாக இருந்தது. இருபதினாயிரத்திற்கும் அதிகமான அடிமைகளுடன், எண்ணிக்கையில் அடங்காத கால்நடைகளும் கைப்பற்றப்பட்டன”

குத்புதீன் ஐபக்கின் வெற்றிகளைத் தொடர்ந்து சொல்லும் ஹசன் நியாஸ்மி, அவனது 1202-ஆம் வருடத்திய காலிஞ்சர் வெற்றியைக் குறிப்பிடுகையில், “அங்கிருந்த கோவில்கள் அனைத்தும் மசூதிகளாக மாற்றப்பட்டன. சிலை வழிபாடு செய்யும்ம் காஃபிர்கள் ஒழித்துக்கட்டப்பட்டு அங்கே சுவனத்தில் வாழும் அல்லாவின் உத்தரவு நிலை நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய ஐந்தாயிரம் ஹிந்துக்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டார்கள்”

மேற்கூறிய சில உதாரணங்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் இந்தியாவில் வேட்டையாடிக் கொல்லப்பட்ட ஹிந்துக்களையும், அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட, வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்ட மக்களையும், இடித்துத் தகர்க்கப்பட்ட கணக்கில்லாத ஹிந்து ஆலயங்களையும், பின்னர் அவை மசூதிகளாக மாற்றப்பட்டதையும் குறித்து, வகை தொகையின்றி அடிக்கப்பட்ட கொள்ளைகள் குறித்து, சிறிதளவு விளக்குகின்றன.

இன்னும் ஏராளமான தகவல்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களாலேயே எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் இங்கொன்றும், அங்கொன்றுமாக நிகழ்ந்தவை அல்ல என்பதை வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்தக் கொடுஞ் செயல்கள் இந்தியாவெங்கும் பரவலாக நிகழ்ந்தவை. இஸ்லாம் என்னும் அர்த்தமற்ற, கொடூரமான மதத்தின் பெயரால் நிகழ்ந்த வன்முறை இந்தியாவின் எந்த பாகத்தையும் விட்டுவைக்கவில்லை.

இதனைக் குறித்து தொடர்ந்து நான் எழுதுவேன்.

(தொடரும்)

4 Replies to “வன்முறையே வரலாறாய்… – 6”

  1. Mr Swanapriyan, are you still in the denial mode?
    Indian history should be rewritten and truth should be told. I hope NaMo will start the ball rolling .

  2. Irony is, these attacks have been happening for centuries and none of the Indian kings thought of fighting them back. I always wonder, how a few thousand soldiers march towards India and kill lakhs of people. If 5 lakh were taken as slaves, why didn’t the 5 lakh fight against the few thousands?
    When Gajni was invading in the North West..Rajendra Cholan was marching from south towards North East. If any NW king had approached him for help, history would have been different.
    All fate..what else to blame.

  3. “Irony is, these attacks have been happening for centuries and none of the Indian kings thought of fighting them back. I always wonder, how a few thousand soldiers march towards India and kill lakhs of people. If 5 lakh were taken as slaves, why didn’t the 5 lakh fight against the few thousands?”


    Its not that Indian Kings were weak. Indian Kings fought with morals and they will not fight against unarmed persons as per Hindu Dharma.

    Remember, Ghazni was defeated 17 times initially. Each times, Ghazni begged pardon from Rajputs and ran away. Hindu Kings let him go, once he asked for pardon.

    Each time, Ghazni went back and came back with bigger army.

    (Side note: Why muslim women are kept as slave and uneducated without any respect? Becuz muslim women only role is to produce more muslims to join the jihad against other religions.)

    As soon as Ghazni was defeated, his army men will drop arms and mingle with the common people of India. Hindu Kings will never kill others outside the battlefields. Hindus will accept unarmed people as their friends. But when Ghazni came back, muslims in India, again joined him in the battle. Ghazni and all muslim rulers led a battle of deceit. islam allows this deceit to ultimately establish islamic rule. Its how muslims are wired.

    Eighteenth time when Ghazni came back with bigger army and with support of local muslims who spied for them, they managed to defeat Rajputs but Ghazni never let anyone go. They killed almost everyone even unarmed and same King who pardonned them earlier for 17 times was brutally murdered.

    Don’t think this is a historic event only. Even now same thing is happening in India.

    muslims wherever they are in less numbers they will be silently increasing their population. They will use the rights of law given to them by Indian Constitution to protect them. Once muslim population increases, they will plan to create small small trouble in an area. These plans are done in friday prayer in mosques. If their small trouble goes unnoticed, they will increase the magnitude of trouble – attacking women, making their ghetto inaccessible to Hindus, not obeying police, attacking Hindu festivals…., If local police or others retaliate, they will fight. If they got defeated in fight, they come for compromise and go back to increasing their population. If they win in fight, they will work on removing Hindus from that area and establishing their shariat rule.

    (Side note: Why muslims hate Banks? muslims prefer cash dealings to hide their source of terrorism funds. In Banks, that is not possible. They prefer islamic shariat banking. Once they gain control over that country, they will estabish shariat banking and by then its too late, no one can question them.)

    This is a slow cycle. It had happened in Coimbatore, Melapalayam, Melvisharam, Ambur, Arcot, Meersapet. It will happen everywhere. In Kerala, where muslims are majority, no one should move during friday prayer times.

    Take for example, Melapalayam. Hindus are majority in Tirunelveli district but how many of the Hindus will openly take arms against muslims. But muslims will not hesitate to kill Hindus in Melapalayam area.
    Like all Police station, policemen are interested in earning mamool. They don’t care about India or Hindus. If muslims give money, Police will protect any criminals.
    Revenue Dept officials are interested in sand mining money making.
    Politicians are interested in minorty votes. So they will not openly say or take actions against muslims. But nobody knows to whom muslims vote.
    Decent Tamil media will also not report against muslims atrocities in Melapalayam area.
    So ultimately no one cares about Hindus.

    You or me will not fight against muslim unarmed person. But muslims will not hesitate to even kill a Hindu child without cause.

    Whats happened in Pakistan? Hindu population reduced from 23% in 1947 to just 1.5% now.
    Whats happening in Bangaldesh? Silent Hindu genocide is going on there. Recall Bangladesh Prime Minister issued a statement that Hindus will be protected. Now why should such a statement be made all of a sudden?
    But no Indian media reports about it.
    NDTV is ISI funded TV. More news about Musharraf and Imran Khan.
    Prannoy Roy is bankrupt, he needs money even if its ISI given. Bharkha Dutt husband is kashmiri separatist leader. Remember, NDTV was live telecasting army and police movement during Kargil war and Mumbai attack to help terrorists.
    Times is only about Bollywood and Cricket.
    Headlines is Congress TV. Congress is run by muslim Feroz Khan family. To hide their identity, they are using Gandhi name.
    CNN IBN cares only about American Business.
    Media18 is Reliance company only cares about Ambani business interests.

    I have travelled and lived in many developed countries. Believe me, muslims are the biggest problem facing these countries – Germany, France, Denmark, Sweden, Norway, England, USA, Australia, China.

    Only way out of this is to ban islam and restrict muslim population to muslim coutries. Else muslims will eliminate others.

  4. Dear AAR,
    //Remember, Ghazni was defeated 17 times initially. Each times, Ghazni begged pardon from Rajputs and ran away. Hindu Kings let him go, once he asked for pardon.
    Each time, Ghazni went back and came back with bigger army.//
    This brings into my memory a famous proverb:
    “Fool me once, shame on you; fool me twice, shame on me.”
    If I (Hindus) get fooled 17 times, do I not deserve to be destroyed? Sorry, my blood boils on thinking about the naivety of our Hindu forefathers. Pardoning the enemy once is valor. But doing it continuously is not valor; it is foolhardiness. I could not believe how it happened.
    Wait a minute. I see our pseudo-secularists in India. I believe how it could have happened.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *