நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்

ந்தியாவை வழி நடத்திச் செல்லும் ஆற்றலும் வலிமையும் மட்டுமல்ல, அதற்கான  தெளிவான செயல் திட்டமும் மோடியிடம் உள்ளது என்று  கோடிக்கணக்கானவர்கள் நம்புகிறார்கள்.  வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல இது. குஜராத்தில் அவர் செயல்படுத்திக்  காட்டிய அசாதாரணமான  சாதனைகள் மூலம்  உருவான எதிர்பார்ப்பு.

அப்பழுக்கற்ற தேசபக்தி, நேர்மை, தொலைநோக்குப் பார்வை,  நிர்வாகத் திறன் அடுத்த தேர்தலுக்கான அரசியலைப் பற்றி அல்லாமல் அடுத்த தலைமுறையின் நலனைக் கருத்தில் கொள்ளும் திட்டங்கள் இதெல்லாம் தான் மோடியின் முத்திரை.  ஆனால் இதற்காகவே   இந்தியாவின் பல தரப்பட்ட சுய அதிகார, சுயலாப அரசியல் சக்திகளாலும்,  இந்திய தேசியத்தின் எதிரிகளாலும் மோடி தொடர்ந்து வசை பாடப் படுகிறார். எதிர்க்கப்  படுகிறார்.

இதுவரை அரசியலில் ஆர்வம் செலுத்தாத பெரும் திரளான இளைஞர்கள் மோடிக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். எப்படி நிகழ்ந்தது இந்தப் பெரும் மாற்றம்? எதிர்ப்புகள், சர்ச்சைகள், குற்றச் சாட்டுகள் அனைத்தையும்  மீறி மேலும் மேலும் மக்களை மோடி வென்றெடுப்பது எப்படி?

நரேந்திர மோதி என்னும் தேசிய நாயகன் இதுவரை கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைப் பார்த்தாலே இதற்கான  விடை நமக்குக் கிடைத்து விடும்.   தனது இருபதாவது வயதிலேயே தேசத்தின் நலனுக்காக தன் தனி வாழ்க்கையை முற்றுமாக அர்ப்பணித்து விட்ட ஒரு தியாக  வீரனின்  வரலாறு அது.

Namo_Anee_book

மோதியின் அரசியல் வாழ்க்கையின்  முக்கியப் புள்ளிகளை சுருக்கமாக ஆனால் முழுமையாகத் தொட்டுச் செல்கிறது  அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும்  இந்த நூல்.  “டீக்கடைப் பையன்”  முதல் “பிரதம மந்திரி மோடி?” வரை  பதினாறு அத்தியாயங்களில்  மோடியின்  தொடக்க காலம்,  ஆர் எஸ் எஸ் பிரசாரக்கிலிருந்து  பா.ஜ.க தலைவராகி குஜராத் முதல்வர் வரை அவர் படிப்படியாக வளர்ந்த அரசியல் வரலாறு,  அவரது சாதனைகள்,  மோடி எதிர்ப்பாளர்களின் குற்றச் சாட்டுகள், அதற்கான எதிர்வினைகள் என்று  கச்சிதமாக அமைந்துள்ளது.  ஒவ்வொரு அத்தியாயத்திலும்  மோடியின் வாழ்க்கை சம்பவங்களை மட்டுமல்லாமல், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல் பின்னணியையும் சேர்த்தே சொல்லிச் செல்வது  இளம் வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  முக்கியமான ஆதாரபூர்வமான தரவுகளை உள்ளடக்கி, அதே சமயம்  எல்லா விதமான வாசகர்களும்  படித்துப் புரிந்து  கொள்ளும் வகையில் எளிய மொழி நடையில்  உள்ளது இந்த நூல்.

தற்போதுள்ள அரசியல் சூழலில், மோடியை ஒருவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.  ஆனால் கட்டாயம் புறக்கணிக்க முடியாது.    எனவே  நரேந்திர மோடியைப் பற்றி, அவர் மீது வைக்கப் படும் விமர்சனங்களின் உண்மைத் தன்மை பற்றி அறிந்து கொள்ள விரும்பும்  எல்லாருக்குமானது இந்த நூல்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் ஒரு மாபெரும் வரலாற்றுத் தருணம்.   ஒற்றுமையாக பாரதத்தை உயர்த்திட, இந்திய மக்கள் அனைவருக்கும் நல்வாழ்வு அளித்திட  நரேந்திர மோடி மூலம் ஒரு மாபெரும் நல்வாய்ப்பு உருவாகியுள்ளது.  அதைப் பற்றி நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பொதுத் தளங்களிலும் தெளிவுடன், உறுதியுடன் எடுத்துரைப்பதற்கு  இந்தப் புத்தகம் ஒரு நல்ல கையேடாக, வழிகாட்டியாக இருக்கும்.   இந்த சிறிய நூலை  அதிக எண்ணிக்கையில் வாங்கி உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் கொடுங்கள்.  விழாக்களிலும் கூட்டங்களிலும் நினைவுப் பரிசாக அளியுங்கள்.

நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர்
ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன்
பக்கங்கள்: 79,  விலை: ரூ. 60
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

4 Replies to “நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்”

  1. நல்லது. இந்தப் புத்தகத்தை pdf format இல் தமிழ் ஹிந்து இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டால் உதவியாக் இருக்கும். அதற்காக கிரெடிட் கார்டு மூலம் பணம் அனுப்ப ஏற்பாடு செய்யலாம். அல்லது kindle books மூலம் பிரசுரிக்கலாம். அதுவும் இந்தப் புத்தகப் பதிப்பிற்கான செலவை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.

  2. மதம்மாற கட்டாயப்படுத்துகிறார்கள் :
    நறிக்குறவர்கள் மறியல் nakkheeran.in/Users/frmNews.aspx?N=115011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *