ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

ரிலையன்ஸ் ஊழல்

முரளி தியோரா பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.  இந்த முறைகேடுகள் 2006 முதல் 2008 வரையுள்ள காலக் கட்டத்தில் நடந்துள்ளது.  சி.ஏ.ஜி.அறிக்கையில் மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது.  முதலாவதாக  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்( ஆர்.ஐ.எல்) கெய்ர்ன் நிறுவனங்களுக்கு அரசு, எண்ணெய் துரப்பண பணியை 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை இஷ்டம் போல் நீட்டித்துத் தந்த்து.  இரண்டாவதாக, எண்ணெய் எடுக்கப்படாத இடங்களுக்கான ஒப்பந்தங்களை தானே எடுத்துக் கொண்டு, மறு டெண்டர் விடுவதற்கு பதிலாக அரசு ஆர்.ஐ.எல். மற்றும் கெய்ர்ன் நிறுவனங்களுக்கே ஒப்பந்த்த்தை நீட்டித்துத் தந்த்து.  மூன்றாவதாக  ஆர்.ஐ.எல். நிறுவனம், தனது மூலதன செலவுத் தேவைகளை 117 சதவீதம் அதிகரித்துக் ( 2004 -2006 கால கட்டத்தில்) காட்டியது.  அது அரசுக்கு வந்திருக்க வேண்டிய வருவாய்.  இதில் மோசடி நடந்துள்ளது என்பது, கேஜி 6 படுகையில் மே மாதம் 2004 முதல் 2006  அக்டேபர் வரையிலான கால கட்டத்தில் ரிலையன்ஸின் மூலதன செலவுகள் அதிகமாயிருப்பதை சி.ஏ.ஜி கேள்வி கேட்டுக் துளைத்திருக்கிறது.  அதாவது துவக்க காலத்தில் மேபாட்டுத் திட்டத்தின் 2.39 பில்லியன் டாலர்  மூலதனச் செலவு பிடிக்கும் என ரிலையன்ஸ் கணக்கிட்டது.  ஆனால் 2006 அக்டேபரில் அதனை 5.19 பில்லியன் டாலராக ஆக்கிவிட்டது. இதில் தான் முறைகேடு நடந்துள்ளது.  சி.ஏ.ஜி யின் அறிக்கையின் படி முதல் மதிப்பீட்டுக்கும் இரண்டாவது மதிப்பீட்டுக்கும் உள்ள அதிரடி வித்தியாசம், அரசின் நிதிநிலையைப் பாதிக்கக்கூடியது. என்று குறிப்பிட்டுள்ளது.

மருமகன் அடித்த கொள்ளை

ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து.  ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன.  1997-ல் வெறும் 50 லட்சம் மட்டுமே முதலீடாக இருந்த சொத்து, 2010-ல் அறிவிக்கப்பட்ட சொத்து 60.53 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.  டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது.  ஆனால் அந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்ற விசாரனையில் வதேராவுக்கு ஆதரவாக அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்து அவரை காப்பற்ற ஹரியான காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளது.  ஆகவே மருமகன் அடித்த கொள்ளையைப் பற்றி இதுவரை திருமதி சோனியா காந்தி வாய் திறக்கவில்லை.

vadraஉத்திர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த மாயாவதி ரூ2,54,000 கோடி அளவில் கொள்ளையடித்துள்ளார்.  மாயாவதியை போலவே முலயாம் சிங் யாதவ்வும் வருமானத்திற்கு அதிகமான அளவில் சொத்து குவித்துள்ளார்.  இதற்கிடையே அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மணிக்குமார் சுபா என்பவர் ரூ25,000 கோடிக்கும் அதிக அளவில் லாட்டரி சீட்டில் மோசடியாக கொள்ளையடித்துள்ள விவரம் வெளியே வந்துள்ளது. டெல்லி விமான நிலைய நிலத்தை குத்தகைக்கு விட்டதில் ரூ1,63,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அல்டரா மெகா பவர் திட்டத்தில் (ருடவசய ஆநபய Pழறநச Pசழதநஉவள ) ரூ29,033  கோடி ஊழல் நடந்துள்ளது. பொய்யான கணக்குகளை காட்டி சத்தியம் கம்யூட்டர் நிறுவனம் ரூ5,200 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது, இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் ஆந்திர பிரதேசத்தை சார்ந்த காங்கிரஸ்காரர்கள்.

2004 முதல் 2013 வரை நாட்டில் நடந்துள்ள மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.  மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், போன்றவர்கள் சம்பந்தப் பட்ட ஊழல் 2ஜி அலைக் கற்றை ஊழல்.  இதில் அரசுக்கு ரூ1,76,000 கோடி இழப்பு என்று கூறிய பின்னரும், அதை மூடி மறைக்க நடந்த நாடகம் ஏராளம்.  உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக தற்போது வழக்கு நடந்து வருகிறது.  டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ரூ70,000 கோடி வரை முறைகேடுகள் நடந்துள்ளன.  இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தளபதியான சுரேஷ் கல்மாடி, டெல்லி முதல்வர் திருமதி ஷீலா தீட்ஷித், திரு.ஜெய்பால் ரெட்டி போன்றவர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். நீதி மன்றம் மோசடியை சுட்டிக் காட்டிய பின்னரும் பதவி விலக டெல்லி முதல்வர் மறுத்துவிட்டார்.

பாராளுமன்றம் கூடும் போதெல்லாம், அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்கதையாகவே வெளி வருகிறது. பிரதம மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி துறையிலும் ரூ1,86,000 கோடி ஊழல் என மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.  தனி நபர் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்ததின் காரணமாக வழக்கு விசாரனைக்கு வரும் போது, அரசிடமிருந்த முக்கியமான ஆவணங்கள் மறைந்து விட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் காங்கிரஸ் கட்சியினர் என்பதும், காங்கிரஸ் கட்சியினரை காப்பதற்காகவே மாநில அரசுகள் மீது பழி போடுகின்றனர். புயங்கரவாத இயக்கமான சிமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிய தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்  தனது டாக்டர் ஜாகீர் ஹூசைன் அறக்கட்டளையில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரத் துறையின் சார்பாக அறக்கட்டளைக்கு வழங்கிய ரூ1.36 கோடியை எடுத்துக் கொள்வதற்காகவே 10 மாவட்டங்களின் மூத்த அதிகாரிகளின் கையெழுத்துக்களை போலியாக போட்டதும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி திட்டங்கள் வழங்காமலேயே வழங்கியதாக போலி கணக்கு காட்டியதும் சல்மான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். இதுவும் தற்போது விசாரனையில் உள்ளது.  இதில் வேடிக்கை என்ன வென்றால் 12.1.2012ந் தேதி உத்திர பிரதேச அரசு மோசடி பற்றி தெளிவுப்படுத்துமாறு மத்திய  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் குர்ஷித் குடும்பத்தை கேட்ட பிறகும் அவர்கள் பதிலளிக்கவில்லை. இது மிகப் பெரிய மோசடியாகும்.

MANJUL_260812pol_coal_scam_corporatesமந்திரி சபையிலேயே யோக்கியமானவர் என பெயர் பெற்றவரும் ராணுவ அமைச்சருமான ஏ.கே. அந்தோனி என்பவர் இருந்தாலும, அவரின் துறையில் ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ350 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.  இது சம்பந்தமாக எதிர் கட்சிகள் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பிய போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்த பதில் இது பற்றி முழுமையாக துறை ரீதியாக விசாரனை நடத்தப்பட்டது, லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எவ்வித ஆதராமும் இல்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்தாhர். ஆனால் இத்தாலிய அரசு லஞ்சம் கொடுக்க்பட்டதாக ஃபின்மெக்கானிக்கா நிறுவத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்ட பின்னர் இந்திய அரசு பதில் கூற தயக்கம் காட்டியது.  வுர்த்தகத் துறை அமைச்சகம் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு உரிமம் வழங்கியதில் ரூ650 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் ஆனந்த சர்மா காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர். சர்வ தேச சந்தையில் டன் 1க்கு 530 டாலர்கள் விற்ற போது, டன் 1க்கு 400 டாலர் என விலை நிர்ணயம் செய்ததால் ரூ650 கோடி ஊழல் நடந்துள்ளது.  இதுவும் விசாரனையில் உள்ளது.  ஈராக்கின் உணவுக்கு எண்ணெய் விவகாரத்தில் சோனியா காந்தியை காக்க வேண்டி, நடவர்சிங் பலிகடாவாக்கிய சம்பவம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் வரலாறாகும்.

ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால், சோனியாவின் மருமகனும் தனது பங்கிற்கு சில ஊழல்களை செய்துள்ளார்.  பிரதமர் வசம் இருந்த நிலக்கரி துறையில் தவறான ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு ரூ1,86,000 கோடி இழப்பு என சிஏஜி தனது அறிக்கையை சமர்பித்த நிலையில், மதிப்பீடுகள் சர்ச்சைக்குரியனவாகவும், பிழை உள்ளனவாகவும் இருப்பதாக பிரதமர் கூறினார்.  ஆனால் சீனியர் அதிகாரிகளின் குழு நடத்திய விசாரனை அறிக்கையில் 1,85,000 கோடி இழப்பிற்கு காரணமாக 53 நிறுவனங்களின் நிலக்கரி படிவப் பகுதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டியது.  புpரதமரின் கருத்துக்கு, ஒரு டன் நிலக்கரிக்கான சராசரி விலைக்கும், கோல் இந்தியாவின் ஒரு டன் நிலக்கரிக்கான உற்பத்திச் செலவுக்கும் இடையிலான வித்தியாசத்தை கணக்கிடடு அதை 57 படிவுகளிலிருந்து தோண்டியெடுக்கக் கூடிய நிலக்கரி அளவுடன் பெருக்கி வந்த தொகையின் குறைந்த பட்ச அளவுதான் என்று பதில் கூறியது சி.ஏ.ஜி.  ஆகவே செய்த தவறுகளை மூடி மறைக்கவே இந்த அரசு முயற்சி செய்கிறது.

அல்டரா மெகா பவர் திட்டங்கள் (Ultra Mega Power Project)

நாட்டில் நிலவி வரும் மின்பற்றாக் குறையை போக்குவதற்காக 4,000 மெகா.வாட் மின் உற்பத்தி திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இதி;ல் Sasan, Mundra, Krishnapatnam, Tilaiya என்ற நிறுவனங்கள் ஒப்பந்தம் வழங்க விண்ணப்பங்கள் அளித்தன.  ஆனால் இந்தக் நிறுவனங்களின் தன்மைகளை முழுமையாக ஆய்வு செய்யாமல் தன்னிச்சையாக அனில் அம்பானியின் நிறுவனமான      Reliance Power Limited க்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.  ரூ29,033 கோடி மதிப்புள்ள திட்டத்தில் ரூ11,852 கோடி Reliance Power Limited நிறுவனம் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது.  இந்த கொள்ளை பற்றி மத்திய தணிக்கை துறை தனது ஆய்வுகளை அரசுக்கு அளித்த பின்னர் கூட மன்மோகன் சிங் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

நீர்முழ்கி கப்பல் வாங்கியதில் முறைகேடு (Scorpene Deal Scam )

இந்திய கப்பற் படைக்கு 12 நீர்முழ்கி கப்பல்கள் வாங்க ராணுவ அமைச்சராக பிராணப் முகர்ஜி இருந்த போது ரூ19,000 கோடிக்கு பிரான்ஸ் நிறுவனமான Thales வுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.      நடவர் சிங் மீது உணவிற்கு எண்ணெய் திட்டத்தில் நடந்துள்ள ஊழல் குற்றச்சாட்டினால்  பதவி விலகியதால், திரு ஏ.கே.அந்தோணி ராணுவ அமைச்சராக நியமிக்கப்படடார்.  நீர்முழ்கி கப்பல் வாங்கியதில் இடைதரகர் ஒருவருக்கு 4 சதவீத கமிஷன் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ராணுவ அமைச்சகம் ஒப்பந்தத்தில் கமிஷன் வழங்கப்பட மாட்டாது என்ற ஷரத்து இருப்பதாக கூறி, எவருக்கும் கமிஷன் வழங்கப்பட வில்லை என்றே வாதிட்டது. ஆனால் இடைத் தரகர்; அபிஷேக் வர்மாவிற்கு கமிஷன் தொகை ரூ500 கோடி சென்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 18.2.2006ல் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது, 20.12.2007 வரை சி.பி.ஐ எந்த வழக்கும் குற்றம் சட்டப்பட்டவர் மீது பதிவு செய்யப்பட வில்லை. இதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது.   இந்த ஒப்பந்தத்திற்கு முதன்மை ஊழல் தடுப்பு கண்காணிப்பாளர் திரு.என்.விட்டல் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்த பின்னரும், ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கு அனுமதி அளித்தார்கள்.  ஆகவே ஆளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களுக்கு ரூ500 கோடியில் ; பங்கு உண்டு என்றும் கூறப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் ஊழல்

scams2010-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் 441 திட்ட பணிகளில் 299 மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என்றும் இதனால் அதிகமான செலவினங்கள் ஏற்படுவதாக குறிப்பிட்டார். ஆனால் இரண்டு வழிகளில் செலவினங்கள் அதிகமாகின்றன என்பதை தெரியப்படுத்த வில்லை. ஒன்று ஊழல் மற்றும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுப்பதால் திட்ட செலவினங்கள் அதிகம் ஏற்படுகின்றன.  2010லிருந்து நெடுஞ்சாலை துறையில் நடந்துள்ள மோசடிகள் சம்பந்தமாக 100 புகார்கள் சி.பி.ஐக்கு வந்துள்ளன.  இதில் மூன்றை மட்டுமே விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  கொடுக்கப்பட்ட புகார்கள் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த கமல்நாத் மற்றும் டி.ஆர்.பாலு பொறுப்பு வகித்த போது நடந்துள்ள முறைகேடுகள் சம்பந்தமானதாகும். 174 கி.மீ தூரம் கொண்ட நாக்பூர் – பிதுல் இடைபட்ட சாலைக்கு ரூ2,500 கோடி ஒதுக்கப்பட்டது. இதில்மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்றும்.,  டென்டர் நடைமுறைக்கு மாறாக குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு Oriental Structural Engineering Pvt., Ltd., . என்ற நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தலில் முறைகேடு நடந்துள்ளது. மேலும் 17 நிறுவனங்களுக்கு அடிப்படையில் எந்த தகுதியும் கிடையாது என்பது தெரிந்தும் அனுமதி கொடுத்த விவகாரத்திலும் மோசடிகள் நடந்துள்ளன என புகார்கள் வந்துள்ளது.  ஆனால் இது பற்றிய விசாரனை ஆமை வேகத்தில் நடப்பதால், குற்றவாளிகள் தப்பித்து வருகிறார்கள.  காங்கிரஸ் கட்சியின் அனுகு முறையின் படி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்பது தெளிவாக தெரிகிறது.

கர்நாடகாவில் வகப் வாரிய நிலம் அபகரிப்பு

நான்கு லட்சம் கோடி ரூபாய் பெருமான வகப் வாரிய நிலத்தை காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் ; 2 லட்சம் கோடி மதிப்புள்ள நிலங்களை அபகரித்து கொண்டார்கள் என்பது குற்றச்hட்டு. இது சம்பந்தமாக கர்நாடக அரசு சிறுபான்மை கமிஷனின் தலைவர் திரு.அன்வர் மணிப்பாடி விசாரனை நடத்தி அறிக்கை சமர்பிக்க உத்திரவிடப்பட்டது.  இதன் காரணமாக நடத்திய விசாரனையில் காங்கிரஸ் கட்சியை சார்ந்தக் மத்திய அமைச்சர் திரு மல்லிக்கர்ஜீன் கார்கேரே, ராஜ்ய சபாவின் துணைத்  தலைவர் திரு. கே.ரகுமான் கான், திரு தரம்வீர்சிங், சட்ட மன்ற காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான  ரோஷன் பெய்க், தன்வீர் சேட், ( ) போன்றவர்கள் சட்ட விரோதமாக கைப்பற்றியுள்ளார்கள் என அறிக்கை தெரியப்படுத்துகிறது.  இது பற்றி காங்கிரஸ் கட்சி வாய் திறப்பதில்லை.

மகாராஷ்ட்ர மாநிலத்தில் காங்கிரஸ் செய்த ஊழல்கள்

மகாராஷ்ட்ர மாநிலத்தில் 1999 முதல் 2009 வரை நீர்பாசன துறை அமைச்சாரக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார், திரு.சரத்பவாரின் உறவினரும் கூட, இவரது துறையில் ரூ70,000 கோடிக்கு திட்டங்கள் அறிவித்து நிதி ஒதுக்கியதில், சுமார் ரூ35,000 கோடி வரை மோசடிகள் நடந்துள்ளதாக விசாரனையில் தெரியவந்தது. ஏதையல Pயனொயசந  என்பவர் நீர்பாசன துறையின் தலைமை பொறியாளர் முதல்வருக்கு எழுதிய கடித்தில் டகைவ சைசபையவழைn    திட்டத்திற்கு செலவழித்த ரூ12,000 கோடி வீனடிக்கப்பட்டதாக எழுதியிருந்தார். ரூஒரு கோடிக்கு மேல் விடப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தும் அமைச்சரின் கையெழுத்து இல்லாமல் ஒதுக்குவது கிடையாது.  இதன் காரணமாக அதிகாரிகளின் கருத்துக்கள் புறக்கனிக்கப்பட்டு, தன்னிச்சையாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.  பவாரின் அறிவுரையின் படியே ஒப்பந்தக்காரர்கள் பல மடங்கு விலையை உயர்த்தி கட்டுமான பொருள்கள் பற்றிய தகவல்களை கொடுத்தார்கள். ரூ100 கோடி மட்டுமே ஒதுக்க கூடிய டுழறநச Pநபெயபெய Pசழதநஉவ in லுயஎயவஅயட னுளைவசiஉவ திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் இல்லாமல் ரூ3,200 கோடி ஒதுக்கிய சம்பவமும் உள்ளது. வறட்சி பாதித்த விதர்பா பகுதியில் தவறான கணக்கீட்டில் 32 திட்டங்களுக்கு ரூ17,700 கோடி ஒதுக்கியதிலும் பெருமளவு மோசடிகள் நடந்துள்ளன.

cag-finds-scam-in-rs-52000-crore-farm-loan-waiver-schemeஇதே மகாராஷ்ட்ர மாநிலத்தில் நில ஆக்கிரமிப்பு என்பது ஆளும் கட்சியின் அன்றாட நிகழ்வாகும்.  மகாராஷ்ட்ர முதல்வராக விலாஸ்ராவ் தேஷ்முக் இருந்த போதும், அவருக்கு பின்னர் முதல்வராக வந்த அசோக் சவானும்,  ரூ55,000 கோடிக்கு ஆறு நகரங்களில் குடிசைகளை மாற்றி மாடி வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது.  இதில் ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனங்கள் ரூ 14,000 கோடிக்கு மேல் லாபத்தை பார்த்ததாக எழுந்தது குற்றச்சாட்டு, இதில் வேடிக்கை என்னவென்றால் 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு போல முன் வருபவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதன் காரணமாக இரண்டு முதல்வர்களுக்கும் மோசடி தொகையில் பங்கு உள்ளது என்ற குற்றச்சாட்டு விசாரனையில் மட்டுமே உள்ளது.  தாராவி பகுதியில் ஒரு சதுர அடி ரூ20,000 முதல் ரூ30,000 வரை விற்க கூடிய பகுதிகளில் அரசாங்க நிலத்தை வெறும் ச.அடி ரூ250க்கு விற்கப்பட்டது. இதில் அதிக ஆதாயம் அடைந்தவர்கள் அசோக் சவான் உட்பட நான்கு முதல்வர்களும்.  இதை போலவே பூனா நகரத்தில் 322.7 ஏக்கர் நிலத்தை இலவசமாக வினோத் கோயாங்கா குடும்பத்திற்கு தாரை வார்த்து கொடுத்ததில் கூட காங்கிரஸ் முதல்வர்களுக்கு பங்கு உ;ண்டு.  இதில் வேடிக்கை என்னவென்றால் முதல்வராக இருந்த சுசில்குமார் ஷிண்டே பிரச்சினையை நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லாமல் கட்ட பஞ்சாயத்து மூலமாக தீர்த்துக் கொள்ளாலம் என தெரிவித்து விட்டார். ரூ70 கோடி மதிப்புள்ள இடத்தை வெறும் ரூ7 கோடிக்கு சரத்பவாரின் டெக் பார்க் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.  அகவே நில மோசடியில் நாட்டிலேயே மகாராஷ்ட்ர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் அடித்த கொள்ளை கோடிக் கணக்கில் என்றால் மிகையாகாது.

லாட்டரி ஊழல்

அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மணிக்குமார் சுபா என்பவர் நாகலாந்து லாட்டரி திட்டத்தில் ரூ25,000 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  நாகலாந்து லாட்டரி திட்டத்தில் மட்டுமில்லாமல், மேகாலயா லாட்டரி திட்டத்திலும் ரூ25,000 கோடி மோசடி நடந்துள்ளதாகவும் வழக்கு தொடுக்க்பபட்டது.  இந்த வழக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் நேபாள நாட்டைச் சார்ந்தவர் என்றும், நேபாளத்தில் கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றவர், அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த ஒரு கொலையில் இவருக்கு தொடர்ப்பு இருப்பதாகவும் வழக்கு தெடுக்கப்பட்டது.  இவரை காப்பதற்காகவே அஸ்ஸாம் முதல்வர் பல்வேறு வழிகளில் முயலுவதாகவும் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இன்று வரை இவர் மீது எந்த நடவடிக்கையும் காங்கிரஸ் கட்சி எடுக்கவில்லை.  கட்சியின் தலைவர் அந்நிய நாட்டைச் சார்ந்தவர் என்பதால் அந்நிய நாடான நேபாளத்தை சார்ந்தவர் கூட பாராளுமன்ற உறுப்பினராக தகுதி படைத்தவராகி விட்டார்.  இது தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியின் அவலட்சனம்.

மது விற்பனையில் கொள்ளை

congress-snatching-hindu-rightsஆந்திர மாநிலத்தில் ஆண்டுக்கு ரூ50,000 கோடி வருமானம் வரும் மது விற்பனையில் கோடிக் கணக்கில் காங்கிரஸ் முதல்வரும், ஆயத் தீர்வை அமைச்சரும் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.  மாநிலத்தில் விற்பனையாகும் மதுவில் 60 சதவீதம் சட்ட விரோதமான கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.  இது சம்பந்தமாக மாநிலத்தின் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வ செய்து 750 பக்க அறிக்கையை அரசுக்கு கொடுத்துள்ளத.  இதில் 18 மாவட்டங்களில் அரசியல்வாதிகளுக்கும் குறிப்பாக ஆளும் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மது வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்ப்பு இருக்கிறது. ஸ்ரீகாககுளம் மாவட்டத்தில் மாதந்தோறும் அமைச்சர் ரூ39.46 லட்சம் கொடுக்க்படுவதாகவும், உள்ளுர் சட்ட மன்ற உறுப்பினருக்கு ஒரு கடைக்கு ரூ10,000 வழங்குவதாகவும் தெரிவித்தார்.  இதில் வேடிக்கை என்னவென்றால் 10.7.2011ந் தேதி ரூ10 லட்சம், 9.8.2011ந் தேதி ரூ10 லட்சம், ஆகஸ்ட் 18ந் தேதி மற்றும் செப்டம்பர் 1ந் தேதி ரூ 5லட்சம் கொடுத்தாக வாக்குமூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக ஆந்திர அரசுக்கு வரவேண்டிய வருமானம் ரூ7,000 கோடி சட்ட விரோதமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் அமைச்சருக்கு கொடுக்கப்படுகிறது. ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என மேடையில் பேசும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் முறைகோடுகள் கோடிக் கணக்கில் கொள்ளையடிப்பதை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே கோடிக் கணக்கில் கொள்ளையடித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீன்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை கவனிக்க வேண்டும்.

(முற்றும்)

Tags: , , , , , , , , , , , , , , , , , ,

 

3 மறுமொழிகள் ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2

 1. பரமசிவம் on February 10, 2014 at 2:49 pm

  இந்த பணத்தைக் கொண்டு, இவ்வாறு ஊழல் நடைபெறவில்லை என்றால், அடுத்த 7 ஆண்டுகளுக்கு வரியே இல்லாத பட்ஜெட் போட இயலும்.

 2. ஒரு அரிசோனன் on February 11, 2014 at 6:37 am

  இதைப்படித்ததும், எனக்கு காங்கிரஸ் தலைவரான கர்மவீரர் காமராஜரின் நினைவுதான் வருகிறது. ஏழையாகப் பிறந்த அவர் ஏழையாகவே இறந்தார். அவருடைய தாயும் இறுதிவரை தன் மகன் அனுப்பிய (நூறு ரூபாய்கள் என்று நினைக்கிறேன்) குறைவான பணத்திலேதான் காலம் தள்ளினார். விலைவாசி அதிகமாகி வருகிறது, பணம் கூட அனுப்பு என்று கேட்டுக் கொண்ட தாய்க்கு காமராஜர் சொன்ன பதில் இதுதான்: “வரவுக்குள் செலவு செய்யக் கற்றுக்கொள் அம்மா!” அவருடைய சொந்தக்காரர்கள் இவர்களுக்கும் தனிச் சலுகை அளிக்கப்படவில்லை, கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்க்கப்பட வில்லை. அவரது அமைச்சரவையில் பணியாற்றிய கக்கன், லூர்தம்மாள் சைமன் போன்றவர்கள் சொத்துக்கள் சேர்க்கவில்லை. எளிய வாழ்க்கைதான் வாழ்ந்தார்கள்.
  காமராஜர் சேர்த்து வழங்கிய சொத்து, அனைத்துக் குழந்தைகளையும், தனது குழந்தைகளாக நினைத்து, உயர்நிலைப் பள்ளி இறுதி ஆண்டுவரை இலவசக் கல்வி அளித்ததுதான், அறியாமை என்ற இருட்டை நீக்கியதுதான். அப்படிப்பட்ட தன்னமில்லாத தியாகிகள் வரும்வரை இந்தியா கொள்ளை அடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

 3. GANAPATHY on July 21, 2014 at 11:09 pm

  இவைகளின் அர்த்தம் என்ன ?

  ருடவசய ஆநபய Pழறநச Pசழதநஉவள

  ஏதையல Pயனொயசந

  டுழறநச Pநபெயபெய Pசழதநஉவ in லுயஎயவஅயட னுளைவசiஉவ

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*