இந்தியாவுக்கு வாக்களிப்பீர் – 1

நரேந்திர மோதியின் தலமையிலான பி ஜே பி கட்சி ஓரளவுக்கு போதுமான இடங்களைப் பெற்று சில கூட்டணிகள் மூலமாகவோ அல்லது தனியாகவோ வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

இந்தக் கருத்துக் கணிப்புகளை அப்படியே நம்ப வேண்டியதோ எடுத்துக் கொள்ள வேண்டியதோ அவசியம் கிடையாது. இருந்தாலும் அவை அனைத்துமே ஒரே விதமான கணிப்புகளை முன் வைக்கின்றன. இவற்றை ஒரு விதமான அறிகுறியாக கருதிக் கொண்டு மோதிக்குச் செல்லும் இடமில்லமெல்லாம் வரலாறு காணாத கூட்டம் கூடுவதையும் மக்களிடம் பரவலாக இருக்கும் எதிர்பாப்புக்களையும் சேர்த்து நோக்கும் பொழுது இந்தக் கணிப்புகள் அனேகமாக சாத்தியமாகி விடும் என்று நம்புவதற்கான முகாந்திரங்கள் உள்ளன.

மோதியின் வெற்றி அனேகமாக உறுதி செய்யப் பட்டு விட்டாலும் கூட இரண்டு பெரும் அச்சுறுத்தல்களை நம்மால் ஒதுக்கி விட முடியாது. அவை இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் அவர் உயிருக்கு இருக்கும் அபாயம். இரண்டாவது எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின். இந்த எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களில் ரிமோட்டாக ஊடுருவி அதில் இடப் பட்டுள்ள ஓட்டுக்களை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மாற்றி விடலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இதை இந்திய கோர்ட்டுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கின் பேரில் ஓட்டுப் பதியும் பொழுது ஒரு அச்சிட்ட ரசீதையும் அளிக்கும் விதமாக அந்த இயந்திரத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் வழக்கம் போலவே இந்தியக் கோர்ட்டுகளின் வழ வழா கொழ கொழா தீர்ப்புகளைப் போலவே அதை இந்தத் தேர்தலுக்குள்ளாகவே செய்ய வேண்டும் என்று உறுதியாக எந்தத் தீர்ப்பையும் வழங்காதபடியால் அதையே சாக்காகக் கொண்டு காங்கிரஸ் அரசாங்கம் ஓட்டுப் பெட்டியில் மாற்றம் செய்வதற்கான நிதியை ஒதுக்காமல் இருந்து கொண்டது. அதனால் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அதே சந்தேகத்துக்குரிய இயந்திரங்களே மீண்டும் பயன் படுத்தப் படப் போகின்றன. அந்த மெஷின்களில் சில தொகுதிகளில் மாறுதல் செய்வதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து விடக் கூடிய அபாயகரமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. அப்படி நடந்து விடாது என்பதை எவரும் உறுதியாகச் சொல்லி விட முடியாது.

மோடியின் வெற்றியை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று காங்கிரஸ் கம்னியுஸ்டு கட்சிகள் முதல் வெளிநாடுகள் வரை முயற்சி செய்து வருகின்றன. அவரை கொலை செய்தாவது அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கரண் தப்பார், ஞாநி சங்கரன் போன்ற பத்திரிகையாளர் முதல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரை ஒரே குரலில் சொல்கிறார்கள். இதை இந்தியாவின் அறிவு ஜீவிகளும் முற்போக்குவாதிகளும் மவுனமாக ஆதரித்தும் வருகிறார்கள். இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் வோட்டிங் மெஷின்கள் மூலமாக இந்தத் தேர்தலின் முடிவுகள் மாற்றப் படுவதற்கும் பெருத்த வாய்ப்புகள் உள்ளன.

india272-full-view-kolkata

இந்த இரு அச்சுறுத்தல்களையும் மீறி இந்தியாவில் உண்மையான தேர்தல் நடந்து ஆண்டவன் அருளால் மோடியின் உயிருக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்கும் பட்சத்தில் பி ஜே பி மத்தியில் மோடியின் தலைமையில் ஆட்சிக்கு வருவதை எவரும் தடுத்து விட முடியாது.

காங்கிரஸ், கம்னிய்ஸ்டு, இஸ்லாமிய பயங்கரவாதிகள், மதமாற்ற சக்திகள், பாக்கிஸ்தான், சீனா, இந்திய மீடியாக்கள், முற்போக்கு சூடோ செக்குலார் அறிவு ஜீவிகள் போன்ற அனைத்து விதமான இந்திய விரோத நாசகார சக்திகளும் ஒற்றுமையாக எப்பாடு பட்டாவது மோடியை நிறுத்தி விட வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்

இந்தச் சூழலில் இந்தியாவின் மக்கள் செய்யக் கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான். அனைவரும் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து நாட்டின் முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை கொண்டு இத்தாலியக் கொள்ளைக் கும்பலின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க மோடி தலமையிலான பி ஜே பி க்கு தாமரைச் சின்னத்தில் வாக்களிப்பது மட்டுமே இந்திய விரோதிகளின் சதியை முறியடிக்கும். அதை இந்திய வாக்காளர்கள் செய்வார்களா? செய்வார்களா?

இந்தத் தொடரில் நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்பதைச் சொல்லவிருக்கிறேன். அதற்கு முன்னால் நரேந்திர மோடி மீது அளவற்ற காழ்ப்புடனும் ஆழ்ந்த வெறுப்புடனும் இடதுசாரி அறிவு ஜீவிகளினாலும், மீடியாக்களீனாலும், இந்திய தேச விரோதிகளினாலும் வைக்கப் படும் சில விமர்சனங்களையும் விரிவாக அலசவிருக்கிறேன்.

****

மோடியின் மீது பல்வேறு குற்றசாட்டுகள் வைக்கப் படுகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் மீது அவதூறுகளும், குற்றசாட்டுக்களும் எழுவது சகஜமான ஒன்றே. மோடியின் மீதான விமர்சனங்கள் மென்மையானது முதல் கடுமையானவை வரை பல விதமாகவும் வீசப் படுகின்றன. அவற்றில் நியாயமான குற்றசாட்டுக்களோ சந்தேகங்களோ இருந்தால் அவற்றிற்கான பதில்களை விளக்கிச் சொல்லலாம். அதைத்தான் மது கிஷ்வர், மீடியா க்ரூக்ஸ், குருபிரசாத், ஒத்திசைவு ராமசாமி போன்றோர் ஆக்கபூர்வமாகச் செய்து வருகிறார்கள்.

மோடியின் வெற்றியை எப்படியும் தவிர்க்க முடியாது என்ற நிலையில் முடிந்த வரை அவர் மீது நம்பிக்கையின்மையை எறிந்து பார்க்கலாம் ஒட்டியது ஒட்டட்டும் என்று அவர் மீது தொடர்ந்து பல விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. அவர் மீது எந்தவிதமான ஊழல் குற்றசாட்டுகளையும் அவர்களினால் வைக்க முடியவில்லை. அவர் மீது எந்தவிதமான கிரிமினல் குற்றசாட்டுக்களையும் இந்தியாவின் அனைத்து விதமான கோர்ட்டுகளையும் பயன் படுத்தியும் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே அவர் மீது வாக்காளர்களிடத்து அவநம்பிக்கையையாவது விதைக்க முடியுமா அதன் மூலமாக அவருக்குப் பெருகி வரும் ஆதரவுகளைக் குறைக்க முடியுமா என்று சூடோ செக்குலார் ஊடகங்களும் மோடி வெறுப்பு கட்டுரையாளர்களும் அரசியல்வாதிகளும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களின் எரிச்சலும், கோபமும், வெறுப்பும், ஆதங்கமும்,படபடப்பும், பதட்டமும், கையாலாகதத்தன்மையும் அவர்களின் கட்டுரைகளின் மூலமாகவும் பேச்சுக்கள் மூலமாகவும் பெரிதும் அப்பட்டமாக வெளிப்படுகின்றன.

அப்படி மோடி மீதான அவநம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்கும் ஒரு உத்திகளில் ஒன்று மோடி குஜராத் மாநிலத்தை மட்டுமே ஆட்சி செய்து வருபவர் ஆகவே அவரால் சிக்கலான, கஷ்டமான, சோதனையான ஒட்டு மொத்த இந்தியாவை நிர்வாகம் செய்ய முடியாது என்பது. இதையே பல விதமாகவும் மீண்டும் மீண்டும் எழுதி வருகிறார்கள். மோடி குஜராத் என்ற ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்திருக்கலாம் ஆனால் அது மட்டுமே இந்தியாவின் பிரதமராகும் தகுதியை அளித்து விடாது. அது மட்டுமே மாபெரும் இந்தியாவை ஆளும் தகுதியை அவருக்கு அளித்து விடாது ஆகவே அவர் இந்தியாவின் பிரதமர் ஆக அருகதை அற்றவர். ஆகவே மக்களே அவருக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்பதே இவர்கள் சொல்ல வரும் செய்தியின் சாரமாகும். இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் எழுதியும் சொல்லியும் ஒரு விஷப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த விமர்சனத்தில் உள்ள அபத்தத்தை முதலில் காணலாம்

மோடி குஜராத்தை நான்காவது முறையாக ஆட்சி செய்து வருகிறார். அவர் குஜராத்தை அமெரிக்கா போலவோ வளர்ந்த வளமான ஐரோப்பா நாடுகள் போலவோ இன்னும் முழுமையாக மாற்றி விடவில்லை. அதற்கு முன்பாக 50 ஆண்டுகள் மோசமான ஆட்சியை அவரால் வெறும் 15 ஆண்டுகளில் மாற்றி விடவும் முடியாது. அதற்கான மந்திரக் கோல் எதுவும் அவரிடம் கிடையாது. இருந்தாலும் எதிர்காலம் குறித்த தீர்க்கமான பார்வையுடனும் நேர்மையான கடுமையான உழைப்பினாலும் நிர்வாகத் திறனாலும் ஆட்சி நிர்வாகத்தைப் பெரும் அளவு கணணிப் படுத்துவதினால் ஊழலை குறைக்கும் விதமாகவும் ஆட்சி செய்து வருகிறார். அவரது நிர்வாகத்தினால் மின்சாரம், நீர் மேலாண்மை, விவசாயம் போன்ற கட்டுமானத் திட்டங்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்து அதற்கான விளைவுகளை அளிக்க ஆரம்பித்துள்ளன. ஐ நா சபை முதல் மத்திய அரசாங்கம் வரை அவரது நிர்வாகத்தைப் பாராட்டி ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக குஜராத் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் அவர் மீது மாநில அனுபவம் மட்டுமே உள்ளவர் மத்திய அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற அவநம்பிக்கை விதைக்கப் பட்டு வருகின்றன.

Modi opinion poll 2மோடியை விட்டு விடலாம். ஒரு கார்ப்போரெட் நிர்வாகம் தனது நிர்வாக மேலதிகாரிகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்? ஒரு ஐ டி நிறுவனத்தையே எடுத்துக் கொள்வோம். ஒரு சின்ன ப்ராஜக்ட்டை மேனேஜ் செய்த மேனேஜரை அதை விட அடுத்து பெரிய ப்ராஜக்ட்டை நிர்வாகிக்க தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு விற்பனை நிறுவனத்தில் ஒரு மாவட்டத்தில் விற்பனையை மேலாண்மை செய்த அதிகாரியை மாநில அளவின் அதிகாரியாக தேர்ந்தெடுக்க்கிறார்கள். மாநில அனுபவம் உடையவர்களை அகில இந்தியாவுக்கோ அல்லது இந்தியாவின் பல்வேறு ரீஜியன்களுக்கோ அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியா முழுவதும் நிர்வாகிக்கும் ஒரு பொறுப்புக்கு ஏற்கனவே இந்தியா முழுதும் நிர்வாகித்த அதிகாரிதான் வேண்டும் என்று எந்த நிறுவனமும் பிடிவாதம் பிடிப்பதில்லை. முன் அனுபவம் அதை விடச் சிறிய துறையிலோ, பகுதியிலோ இருந்தாலும் அதன் அடிப்படையிலேயே அதை விடப் பெரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே எந்தவொரு தனியார் நிறுவனங்களிலும் தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை.

இந்திய அரசு பதவிகளை எடுத்துக் கொண்டாலும் சரி மாவட்ட நீதிபதிகளாக இருந்தவர்களை மாநில நீதிபதிகளாக்குகிறார்கள். மாநில நீதிபதிகளாக இருந்தவர்களைத்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக்குகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியை நியமிக்கும் பொழுது நீ ஏற்கனவே இந்தியாவின் தலமை நீதிபதியாக இருந்திருக்க வேண்டும் என்று எவரும் சொல்வதில்லை. நீ மாநில அளவில் ஹைக் கோர்ட்டுகளில்தான் நீதிபதியாக இருந்துள்ளாய் ஆகவே உன்னை சுப்ரீம் கோர்ட்டுக்கு அமர்த்த முடியாது என்று எவரையும் மறுப்பதில்லை

மாவட்ட அளவில் டி ஆர் ஓ வாக கலெக்டராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரியைத்தான் மாநில அளவில் செயலராக எடுக்கிறார்கள். மாநில அனுபவும் உள்ளவரைத்தான் இந்தியா அளவில் பெரிய பொறுப்புக்களுக்கு நியமிக்கிறார்கள். இதுதான் தனியார் நிறுவனம் ஆனாலும் சரி இந்திய பொதுத் துறைகள் ஆனாலும் சரி இந்திய அரசாங்கம் ஆனாலும் சரி ஏன் உலக அளவிலும் சரி இதுதான் நடைமுறை.

ஆனால் மோடி என்று வரும் பொழுது மட்டும் இவர்கள் வைக்கும் வாதம் என்ன? அவருக்கு மாநில அனுபவம் மட்டுமே உள்ளது ஆகவே அவரை மத்தியில் பிரதமராக்க முடியாது என்று. சரி அந்த அபத்தமான வாதத்தை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொண்டாலும் கூட அவருக்கு மாற்றாக இந்த அறிவு ஜீவிகள் வைப்பது எவரை? ராகுல் காந்தியையும், சோனியாவையும், சீத்தாராம் யெச்சூரிகளையும், கேஜ்ரிவால்களையும் தானே? ஏற்கனவே பிரதமராக இருந்த அனுபவம் உள்ளவர்தான் வேண்டும் என்றால் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்றால் அவர்கள் முன்னால் உள்ள தேர்வு என்ன? தேவகவுடாவும். வாஜ்பாயியும், மன்மோகனும் தானே? மற்றவர்கள் உயிருடன் இல்லை. இதில் வாஜ்பாயி முதுமை அடைந்தவர் சுயநினைவில் இல்லாதவர். தேவகவுடாவும் உலக மகா ஊழல்களின் தந்தையுமான மன்மோகன் மட்டுமே பிரதமராக இருந்த அனுபவம் உடைய ஒரெ தகுதியுள்ள நபர்கள். அவர்களைத்தான் இந்த மோடி எதிர்ப்பாளர்கள் முன்னிறுத்துகிறார்களா என்ன? ஆதரிக்கிறார்களா?

ஆக மோடி அளவு கூட தகுதியும் நிர்வாக அனுபவமும் இல்லாத ராகுல். சோனியா, கரத், யெச்சூரி போன்றவர்களை ஆதரிக்கும் இதே அறிவாளிகள் அவர்களை விட தனது திறமையையும் நிர்வாகத் திறனையும் பல முறை நீரூபித்து பல விருதுகளைப் பெற்ற மோடியை மூர்க்கமாக நிராகரிக்கிறார்கள். ஏன்? என்ன காரணம்? அவர் ஆட்சிக்கு வந்து விட்டால் குஜராத் போலவே இந்தியாவும் முன்னேறி நகர ஆரம்பித்து விடும். அப்படி இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டால் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது, ஊழல்கள் செய்ய முடியாது, நாட்டை விற்க முடியாது, பிற அந்நிய மதங்களை வளர்க்க முடியாது. ஏழ்மையை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாது. இந்து மதத்தை நம்பும் ஒருவர் அதை ஏற்றுக் கொள்ளும் ஒருவர் பிரதமர் ஆவதைக் கனவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே அனைத்து விதமான மோடி எதிர்ப்பாளர்களும் இவை போன்ற சொத்தைக் காரணங்களை முன் வைத்து மோடியை எதிர்த்து அவர் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட பாடு படுகிறார்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திரிகிறார்கள்.

மோடியினால் சிக்கலான இந்தியாவை நிர்வாகிக்க முடியாது என்பது மற்றொரு வாதம். அதுவும் இதைப் போலவே அபத்தமான ஒரு வாதமே. ஆகவே அனைத்து விதங்களிலும் முன் அனுபவமும் திறமையும் நேர்மையும் உடைய ஒரு தகுதியுள்ள தலைவர் மோடி அவர் குஜராத் போலவே இந்தியாவையும் நிர்வாகிப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் வைத்து அவரை ஆதரிக்க வேண்டும். செய்வார்களா? செய்வார்களா?

(தொடரும்)

Tags: , , , , , , , ,

 

16 மறுமொழிகள் இந்தியாவுக்கு வாக்களிப்பீர் – 1

 1. vaidya on April 7, 2014 at 12:18 pm

  The congress has become frustrated and every small leader started about Modi,shows, that the BJP victory become inevitable while congress is loosing strength everywhere.while TMC may score on its own in W.Bengal, and AADMK<at Tamilanadu, Siva shena at Mombai, while other places BJP with local parties may get thro successfullly. Let us hope for a strong centre for the nextg 5 years for real delveopment of the country,againist eroding economy and getting back all the funds left abrod left,which alone going to save the sinking economy.

 2. ramesh srinivasan on April 7, 2014 at 12:35 pm

  அது மட்டுமா? மோடி மந்திரி சபை அமைக்கும்போது நீர ராடியா, பர்க்கா தத் எல்லாம் தலையிட முடியாது

 3. A.seshagiri on April 7, 2014 at 1:20 pm

  திரு.ச.திருமலை அவர்கள் நல்ல நேரத்தில் மோதி அவர்களின் திறமைகள் பற்றிய மிக அருமையான கருத்துச் செறிவான கட்டுரைத்தொடரை ஆரம்பித்து இருக்கிறார்.அதில் E .V.M . சம்பந்தமான ஒரு முக்கியமான சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.இதற்கு இது சம்பந்தமான விவரம் தெரிந்தவர்கள் பதில் அளித்தால் நலமாக இருக்கும்.ஏனெனில் பொதுவாகவே தரமான கருத்து கணிப்பு நிறுவனங்கள் வெளியிடும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் (Opinion poll )வாக்கு பதிவு முடிந்தவுடன் நடக்கும் கருத்து கணிப்புகளும் (Exit poll ) பெரும்பாலும் உண்மையான தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப்போகும். குறிப்பாக வாக்கு பதிவு முடிந்தவுடன் நடக்கும் கருத்து கணிப்புகள் துல்லியமாகவே இருக்கும்.ஆனால் வாஜ்பாய் அவர்களுக்கு நல்ல ஆதரவு நாடு முழுதும் இருந்த போது நடந்த 2004 தேர்தலில்(அப்பொழுது பெரும்பாலான கருத்து கணிப்புகள் வாஜ்பாயே மீண்டும் ஆட்சியில் அமர்வார் என்று அடித்து கூறின)அவர் யாரும் எதிர்பாராத வகையில் தோற்றார்.எனவே மோதி என்று வருகிற போது எந்த விதமான தகிடு தத்தங்களை எப்பாடு பட்டாவது செய்ய ஒரு கும்பல் தயாராகவே உள்ளது.இந்த மாதிரி மோசடி வழி ஓன்று இருந்தால் என்னதான் எல்லோரும் மோதிக்கு வருகிற தேர்தலில் ஒட்டு போட்டாலும் அவை எல்லாம் ‘விழலுக்கு இறைத்த நீராக போவதற்கு’ வாய்ப்பு இருக்கிறது.இதை தடுக்க என்னதான் வழி?

 4. Geetha Sambasivam on April 7, 2014 at 2:46 pm

  செய்யவேண்டும்.

 5. தாயுமானவன் on April 8, 2014 at 12:55 am

  கருணாநிதி சனிக்கிழமை அன்று கோவை வ.உ.சி மைதானத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சு…

  “தமிழ்நாடு கேட்பாரற்ற பூமியாகி விட்டது. இனி தமிழ்நாட்டிலே எவர் வேண்டுமானாலும் நுழையலாம். அத்துமீறி நுழையலாம். ஆட்சி புரியவே நுழையலாம் என்கின்ற எண்ணம் ‘மோடி’களுக்கும் ஏற்படாது. “தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு” என்ற நாமக்கல் கவிஞருடைய வார்த்தையை நாம் மறவாமல் பணியாற்றினால், மோடி அல்ல; யாரும் உள்ளே நுழைய முடியாது. மீறி நுழைபவர்கள் நம்முடைய எதிர்ப்பால் ஒரு “கோடி”யிலேதான் நிற்க வேண்டும். “மோடி”களுக்கு இங்கே வேலை இல்லை என்று நான் உரைக்க முடியும்.”

  பேசியது கருணாநிதியாக இருந்தாலும் கருத்தை மட்டும் நான் வரவேற்கிறேன்.. ஏனென்றால் அடுத்த நிமிடம் அந்த நாக்கு வேறு மாதிரியும் பேசும் என்பது எனக்கே தெரியும்..

 6. "Honest man" on April 8, 2014 at 8:05 am

  ///மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை/// ஆமாம் ஆமாம் என்னை போன்ற “கேடி”களுக்குத்தான் இங்கே வேலை உள்ளது. சாராய கடையில் குடிகாரனுக்குதான் வேலை. நல்லவனுக்கு அங்கே என்ன வேலை? 47 வருடங்களாக நாங்கள் இந்த தமிழ் நாட்டை சுரண்டி சுரண்டி இருண்ட கண்டமாகவும் வறண்ட பூமியாகவும் ஆக்கி வைத்துள்ளோம். இங்கே மோடி வந்து குஜராத்தை “மிகை மின்சார மாநிலமாக” மாற்றியது போல தமிழ்நாட்டையும் மாற்றலாம் என்று நினைக்கிறாரா? அது இந்த ஜென்மத்தில் நடக்காது.பிரச்சனைகள் இல்லாமல் போய் விட்டால் அப்புறம் நானும் எங்க சகோதரியும் இங்கே எப்படி பொழப்பு நடத்துவது? அவர் ஒரு 5 வருடம் நான் ஒரு 5 வருடம் என்று நாட்டை மாறி மாறி ஆள்வது என்று எங்களுக்குள் எழுதபடாத ஒரு contract போட்டு வைத்துள்ளோம். மோடி கட்சி இங்கே வந்து நல்லது செய்து தொடர்ந்து 3 அல்லது 4 முறை (குஜராத்தில் ஜெயிப்பது போல) ஜெயித்து இங்கேயே நிரந்தரமாக ஆட்சி செய்தால் எங்கள் கதி என்ன.ஆவது? என் அன்பு மகன் ஸ்டாலின் கதி என்னாவது? இப்போதுதான் ஒரு வழியா அழகிரியை ஓரம் கட்டி ஸ்டாலினுக்கு மகுடாபிஷேகம் செய்ய நினைத்திருக்கிறோம். அந்த எண்ணத்தில் மண் விழ செய்யம் இவரை நாம் தமிழ் நாட்டிற்குள் நுழைய விட கூடவே கூடாது. தமிழன் என்றொரு இனம் உண்டு. அவனுக்கு தனியே ஒரு குணமுண்டு என்று பாடி வைத்து போனார் ஒருவர். . அது இந்த மாதிரி (நல்லது நடக்கவிட கூடாது) என்ற நல்ல குணம்தான்.///தமிழ்நாடு கேட்பாரற்ற பூமியாகிவிட்டது//// இந்தியாவே ஒரு கேட்பாரற்ற பூமியாகிவிட்டது. சீனாக்காரன் அருணாசல பிரதேசத்தில் அத்து மீறிநுழைந்து பல ஆயிரம் கிலோமீட்டர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளான். அதை கண்டிக்க எவனுக்கும் வக்கில்லை. இந்தியாவில் பிறந்த ஒருவர் இந்திய நாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் நுழைய விட கூடாதாம். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பேசும் இவரை கைது செய்யவேண்டும் என்று எவனும் சொல்லவில்லை. முதுகெலும்பற்ற ஜென்மங்கள். தொடை நடுங்கிகள். “தேர்தலில் வோட்டு மூலம் பழிவாங்க வேண்டும்” என்றால் உடனே கண்டனம் தெரிவிக்க வந்து விடுவார்கள்.””அத்து மீறி நுழையலாமா?”” என்ன வார்த்தை.இது? 91 வயது ஆன பெரிய மனுஷனா இவன்.? வயசு தான் ஆகியிருக்கிறதே அன்றி wise உள்ளவராக இல்லை. நாமக்கல் கவிஞர் ஒரு புறம் இருக்கட்டும் “.யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடிய கவிஞரின் வார்த்தைகளை மறந்து விட்டாரா? உலகத் தமிழ் மாநாடு வரும்போது மட்டும்தான் இந்த கவிதை ஞாபகம் வரும்போலும். இந்தியாவில் வாழும் இந்தியனே இங்கே நுழையக்கூடாது என்று இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஒரு தமிழன் சொல்வதால்தான் உலகத்தில் தமிழர்களை எங்கே பார்த்தாலும் உதைக்கிறார்கள். இடம் பெயர்ந்த தமிழர்கள் படும் கஷ்டங்களுக்கு முக்கிய காரணம் இந்த அயோக்கியந்தான். இவன் “தமிழர்களின் தன்னிகரற்ற தானை தலைவனாம்!””

 7. ரங்கன் on April 8, 2014 at 9:21 am

  வோட்டு யந்திரத்தைப் பற்றி குறை சொல்ல வேண்டும் என்பது ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த ஒரு அபத்தம். நீங்கள் சொல்வது போல செய்ய முடியுமோ முடியாதோ எனக்கு தெரியாது. அப்படி முடியும் என்றால் மோடி நான்காவது முறையாக முதல்வரானது இப்படித்த்தான் என்று கூறினால் ஒப்புக் கொள்ள முடியுமா? மோடி அலை இப்போது வீசுகிறது அதனால் அவர் வெற்றி பெறுவது உறுதி என்றுதான் கொள்ள முடியும்.

 8. arasaivadivel on April 8, 2014 at 10:32 am

  எமது பாரத நாட்டின் தலைவிதியை மொதியல் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என விதி இருந்தால் எவர் தடுக்கமுடியும் .தர்மம் வெல்லும் .மக்களின் நல் எண்ணங்கள் நிறைவேறும் .இறைவனின் பெரும்கருணை அளவற்றது .

 9. paandiyan on April 8, 2014 at 6:02 pm

  if this should not happen in India, vote for BJP;
  சீனாவில் பாகிஸ்தான் எல்லை பகுதியான ஸின்ஜியாங் மாகாணத்தின் உகியார் முஸ்லிம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்கு, சாவு வீட்டில் அழவும், திருமணத்தின் போது சிரிக்கவும் கூட பொதுமக்களுக்கு பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர்.

  சீனாவில் இருந்து உகியார் பகுதியை பிரித்து தனி நாடு வழங்கக் கோரி, அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் முஸ்லிம் பயங்கரவாதிகள், ஏற்கனவே டி.வி. நிகழ்ச்சிகளை தடை செய்தல், ரேடியோ கேட்பது, பத்திரிகைகள் படிப்பது, பாட்டு பாடுவது மற்றும் நடனமாட தடை விதித்துள்ளனர்.

  இது போதாது என்று, தற்போது கூடுதலாக திருமண வீட்டிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும் சிரித்து மகிழக்கூடாது. சாவு வீட்டிலும் துக்கம் தாங்காமல் அழக்கூடாது என்றும் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

  இது குறித்து ஸின்ஜியாங் மாகாண ஆளுநர், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சீன அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 10. அத்விகா on April 8, 2014 at 7:37 pm

  “யாதும் ஊரே யாவரும் கேளிர் “- என்றும், ” தீதும் நன்றும் பிறர் தர வாரா “- என்றும் கூறியவன் கூட தமிழன் அல்ல. யாரோ வெளிநாட்டான் சொன்னதை உள்ளே புகுத்தி விட்டார்கள். திருக்குறளில் கூட கடவுள் வாழ்த்து என்பது கிடையாது. யாரோ வெளிநாட்டான் நம் நாட்டுக்கு வந்து , திருட்டுத்தனமாக உள்ளே நுழைத்துவிட்டான். கள்ளுண்ணாமை, பிறன் மனை விழையாமை எல்லாமே வள்ளுவன் சொன்னதல்ல. எவனோ சொன்னது, எனவே தமிழா உனக்காக இன்பம் அளிப்பதற்காக மட்டுமே நான் 1-9-1972 முதல் கள்ளு மற்றும் சாராயக் கடைகளை திறந்தேன். உன்னால் டாஸ்மாக் வியாபாரம் பெருகட்டும். அரசு கஜானா நிரம்பட்டும். அரசு கஜானா பணத்தை எடுத்து, நாங்கள் மேலும் மேலும் காண்டிராக்டுகள் எடுத்து கமிஷன் அடிப்போம். புதிய ஊழல் பல புரிந்து , டூ ஜீயையும் மிஞ்சி, உலக சாதனை புரிவோம். தமிழா , எங்களுக்கு மீண்டும் ஓட்டுப் போட்டு, எங்கள் குடும்ப வளம் பெருக அருள்புரிவாயாக. நிறையக்குடி தம்பி, நீ அதிகம் குடித்தால் தான் , எங்கள் குடும்பம் மேலும் மேலும் வளம் பெரும்.

 11. ஒரு அரிசோனன் on April 9, 2014 at 8:42 am

  உயர்திரு அத்விகாவின் குறிப்பு மிக நன்றாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன். வஞ்சப் புகழ்ச்சி அணியில் அவ்வையையும் மிஞ்சி விட்டார்!

 12. அத்விகா on April 9, 2014 at 4:38 pm

  உயர் திரு அரிசோனன் அவர்களே,

  தினசரி நான் செல்லும் பாதையில் சாலை ஓரம் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடக்கும் இளைஞர்களைப் பார்க்கும் போது என் வயிறு பற்றி எரிகிறது. யார் பெற்ற பிள்ளையோ , இப்படிக்கிடக்கிறதே என்று அளவிட முடியாத வருத்தம் ஏற்படுகிறது. அந்த வருத்தத்தின் வெளிப்பாடு தான் என் முந்தைய கடிதம்.

 13. ஒரு அரிசோனன் on April 10, 2014 at 7:16 am

  உயர்திரு அத்விகா அவர்களுக்கு,

  திருவள்ளுவரையே குத்தகைக்கு எடுத்துக் கொண்டமாதிரி பேசி, அவரது படங்களை அரசு ஊர்தியில் மாட்டச்செய்து, அவருக்கு குமரியில் சிலையும் எடுத்து, அவர் சொன்ன “கள்ளுன்னாமை”யைக் கூவத்தில் தூக்கி எறிந்தவர்களுக்கு நமது பிதற்றல் காதில் விழுமா என்ன? “மாற்றான் தொட்டது மல்லிகையும்” மணக்கும் என்றவர்கள் வள்ளுவரின் “பிறன் மனை விழையாமை”யைக் கருத்தில் கொள்வார்களா?

 14. k.s.senthil kumar on April 10, 2014 at 1:11 pm

  தமிழக வாக்காளர்களே ( ஹிந்துக்களே) ஒரு நிமிடம் சின்ன்திப்பீர்!

  2002 குஜராத் கலவரத்தை நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் அமைப்புகள் பூதாகரமாக்கி மோடி அவர்களை கேவலப்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களும் தூற்றினார்கள், ஆனால் இலங்கை தமிழர்கள் படுகொலை செய்தபோது இங்கு இருக்கும் தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து நாடகமடினார்களே தவிர மற்ற மாநில முஸ்லிம் அமைப்புக்களை சேர்த்து ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. அவர்களின் நோக்கம் முஸ்லிம் மட்டுமே நன்றாக வாழ வேண்டும். மற்றவர்களை பற்றி கவலை இல்லை. மேலும் இந்தியாவில் முஸ்லிம் & கிறிஸ்டியன் மட்டுமே சிறுபான்மையினர் இல்லை, புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம் இவையும் சிறுபான்மையினர் தான். இவர்கள் யாரும் பிஜேபி யை எதிர்க்கவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே என்ன விலை கொடுத்தாவதும் நாம் மோடி அவர்களை பிரதமர் ஆக்கியே தீர வேண்டும்.
  ஜெய் ஹிந்த்.

 15. "Honest man" on April 10, 2014 at 5:50 pm

  வாழும் வள்ளுவருக்கும் வாழ்ந்த வள்ளுவருக்கும் உள்ள வித்தியாசங்கள் :——–
  1. வாழ்ந்த வள்ளுவருக்கு வாசுகி என்று “ஒரே ஒரு” மனைவி.
  2. அவர் கடவுள் வாழ்த்து பாடினார். இவர் தமில்டாஹி வாழ்த்து பாடுகிறார்.
  3. அவர் தனது 1330 குரலில் ஒரே இடத்தில் கூட “தமிழ்” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இவரோ வாழ்நாள் பூரா தமிழ் என்று சொல்லியே தமிழையும் தமிழர்களையும் ஏமாற்றி வருகிறார்.
  4. வாய்மை என்ற அதிகாரம் எழுதினர் அந்த வாழ்ந்த வள்ளுவர். ஆனால் வாழும் வள்ளுவர் தன ஆட்சி அதிகாரத்தால் எத்தனை பொய் களை கூறியிருக்கிறார். சிதம்பரம் பல்கலை கழகத்தில் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் விழாவின்போது அங்கே படித்து கொண்டிருந்த மாணவன் உதயகுமார் மர்மமான முறையில் இறந்தான். அதனால் மாணவர்கள் கொதிதேழுன்தனர். வாழும் வள்ளுவரோ இறந்த மாணவன் என் மகன் இல்லை என்று அம மாணவனின் தந்தையிடமே எழுதி வாங்கிவிட்டார். அவ்வளவு நல்லவர்.
  5. அவர் கள்ளுண்ணாமை என்று எழுதினர். இவரோ குடிமக்களை குடிக்க வைத்து குடிக்கும் மக்களாக மாற்றினார்.
  6. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் குறித்த குறிப்புகள் அனைத்து உண்மையா என்று தெரியாத நிலையில் மேலும் அவரே “நீட்டலும் மழித்தலும் வேண்டாம்” என்று சொன்ன நிலையில் அவருக்கு கற்பனையாக ஒரு உருவம் கொடுத்து தாடியும் மீசையும் கொண்டு வள்ளுவர் சிலையை படைத்தார். இவர்தான் உருவ வழிபாடு கூடாது என்று கூறுபவர்.

 16. பொன்.முத்துக்குமார் on April 16, 2014 at 1:21 pm

  இவை எல்லாமே தமிழ் ஹிந்து வாசகர்கள் அறிந்ததுதான்.

  ஆனால், இவற்றை தமிழ்ஹிந்து வாக்காளர்களல்லாத – புதிய மற்றும் பழைய வாக்காளர்களிடம் கொண்டு செல்வது எப்படி ?

  முக்கியமாக ”இத்தேர்தல் மாநில அரசை தேர்வு செய்வதற்கல்ல, மத்திய அரசை தேர்வு செய்வதற்கு, எனவே திரா”விட” கட்சிகளை புறக்கணிப்பதில் எந்த பிழையுமில்லை, பா.ஜ.க-வை ஆதரிப்பதன் மூலம் அவர்கள் அடுத்தவன் தோள் பிடித்து தொங்கி தொங்கி நடக்கும் தேவை இன்றி சொந்த காலில் நிற்குமளவுக்கு பலம் பெறவைக்க வேண்டியதே இப்போதைய நமது இன்றியமையாத கடமை” என்பதை தெளிவாக புரியவைக்க வேண்டும் – குறிப்பாக திராவிட குஞ்சுகளுக்கு.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*