மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1

இந்தியப் பாராளுமன்றம் “தில்லி தர்பார்” என்றே பொதுவாக அறியப் படுகிறது. தில்லியில் தான் மத்திய அரசின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கங்கள், அமைச்சகங்கள், அரசியல் தரகர்கள் எல்லாமே மையம் கொண்டிருப்பது. பூகோள ரீதியாக தில்லி இருப்பது ஓரிடத்தில் தான். ஆனால் இந்திய நிலப்பரப்பின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அதன் மாயக்கரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு பொதுவான அரசியல் நம்பிக்கை.

ஆனால், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில், நாட்டின் அரசியல் மையம் தில்லியிலிருந்து குஜராத்துக்கு இடம் பெயர்ந்து விட்டதோ என்று சொல்லுமளவுக்கு குஜராத் பற்றிய பேச்சுக்களும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  மோதி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருவர் கைகளாலும் ஓசைப்படும் மத்தளமாகி விட்டது குஜராத். தேசிய அரசியலின் மையத்தில், அதிகார வர்க்கத்தினரின் மேல்பூச்சு வாசத்திற்குப் பதிலாக உண்மையான இந்திய மண்ணின் மணம் வீசப் போவதற்கான அறிகுறி இது என்று தவ்லீன் சிங் போன்ற அரசியல் நோக்கர்கள் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

“குஜராத்” என்ற பெயரை மதக் கலவரங்கள், சமூக மோதல்கள், வன்முறைகளின் குறியீடாக தேசத்திலும் உலக அரங்கிலும் முன் நிறுத்த மீண்டும் மீண்டும் காங்கிரசும், எதிர்க்கட்சிகளும், போலி அறிவுஜீவிகளும், ஊடக சதிகாரர்களும் தொடர்ந்து முயன்றனர். ஆனால் பல்வேறு புலன் விசாரணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் உண்மையை ஓங்கி அறைந்து வெளிக்கொணர்ந்தன. அந்த முயற்சிகள் மண்ணைக் கவ்வின. இப்போது “குஜராத்” பற்றிய கருத்துரைகள் அனைத்துமே வளர்ச்சி, பொருளாதாரம், சமூகநலத் திட்டங்கள், தொழில்துறை ஆகிய விஷயங்களையே சுற்றி வருகின்றன. வளர்ச்சி பற்றிய சொல்லாடல்களுக்கும், விவாதங்களுக்கும்  ஒரு அளவீடாகவே ஆகியிருக்கிறது, மோதியின் “குஜராத் மாடல்”. இந்த திசைமாற்றம் நரேந்திர மோதியின் தலைமையிலான பாஜக, களத்தில் அடைந்துள்ள முதல் வெற்றி.

Modi and Flag

நரேந்திர மோதி நாட்டின் தலைமைப் பொறுப்பேற்கத் தகுதியானவர் என்பதை அழுத்தமாக சொல்வதற்காக, அதற்கான நிரூபணமாகத் தான், குஜராத்தில் அவர் செய்த சாதனைகளும், கொண்டு வந்துள்ள மாற்றங்களும் பரப்புரை செய்யப் படுகின்றன. இதன் நோக்கம் மற்ற மாநிலங்களை மட்டம் தட்டுவதோ அல்லது அவற்றில் எந்த வளர்ச்சியுமே ஏற்படவில்லை என்று சொல்வதோ அல்ல.  குஜராத் எட்ட வேண்டிய எல்லா இலக்குகளையும் எட்டி விட்டது, அது எந்தக் குறைகளும் அற்ற சொர்க்க பூமி என்று சொல்வதல்ல. ஆனால், மேம்போக்காக ஒரு சில புள்ளி விவரங்களைப் போட்டுக் காட்டி வெட்டி சவடால்கள் விடும் எதிர்ப்பாளர்களின் ஒரே நோக்கம் மோதியின் ஆட்சித் திறன் பற்றிய உண்மைகளை இருட்டடிப்பது. குறுகிய காலத்தில் மோதியின் தலைமை நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைகள் பற்றிய உண்மைகள் மக்களின் மனதில் பதிவதைத் தடுப்பது. தங்கள் தோல்விகளை மறைப்பது. எந்தவொரு தொலைநோக்குத் திட்டமும் இல்லாமல் வெட்டி அராஜக அரசியல் மட்டுமே நடத்தினாலும் கூட, முன்பே பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களின் இயல்பான தொடர்ச்சியை, ஏதோ தாங்கள் செய்த பெரிய சாதனை போல காட்டிக் கொண்டிருப்பது.

ஒரு புறம் காங்கிரசின் மெகா ஊழல்கள், கடும் தோல்விகள். மறுபுறம் பாஜகவின் நல்லாட்சி நிரூபணங்கள். தொலைநோக்கு செயல்திட்டங்கள். இது தான் இந்தத் தேர்தலில் மையமாக உள்ள  மோதல்.  இதைப் பேசுவதற்குப் பதிலாக, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு விஷயத்துடன் குஜராத் வளர்ச்சியை ஒப்பிட்டு, இங்க பார் குஜராத் ஒரு சதவீதம் கம்மி, அங்க பார், குஜராத் இரண்டு சதவீதம் கம்மி என்று சொல்வதன் மூலம், இவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்?  நடப்பது மாநிலங்களுக்கு இடையேயான போட்டி அல்ல,  பாராளுமன்ற தேர்தல். தேசியத் தலைமையை தேர்வு செய்வதற்கான போட்டி.  இப்படி செய்வதன் மூலம் மற்ற மாநில மக்களை உசுப்பி விட்டு, குஜராத்தை விட நாங்கள் இளப்பமா என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, மோதி அலையை மழுங்கடித்து விடலாம் என்று இவர்கள் கணக்குப் போட்டால், அது கட்டாயம் நிறைவேறப் போவதில்லை. அது இவர்கள் மீதே பூமராங்க் ஆகி திருப்பி அடிக்கப் போகிறது.

ஏனென்றால், இந்தியாவின் பொதுஜன கருத்து வெளி என்பது  புள்ளி விவரங்களைப் போட்டு விளையாடும் சாதுர்யம் மட்டும் அல்ல. ஊடகங்களும் பரப்புரைகளும் சொல்லும் செய்திகளை தங்கள் அனுபவங்கள், நேரடியான தகவல் தொடர்புகள் மூலம் உறுதி செய்து கொண்டு தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அரசியல் தேர்வுகளை செய்வார்கள். குஜராத்தை விட தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று ஜெயலலிதா மேடைகளில்  கெக்கலிக்கிறார். அந்தக் கெக்கலிப்புக்குப் பின் உள்ளவை அரைகுறை உண்மைகள் என்பதையும், மிகச் சில துறைகளில் ஏற்பட்டுள்ள ஒரு நீண்டகால வளர்ச்சியைத் தவிர்த்து மற்றதெல்லாம் வெறும்  பம்மாத்து என்பதையும் தமிழக வாக்காளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.  இதுவரை தமிழகத்தில் நடந்த எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  60 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் மோதி பிரதமராக வேண்டும் என்று கூறியிருப்பது யாரோ செய்தி சதி அல்ல. தானைத் தலைவர் சொல்வது போல தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்களும் அல்ல. ஜெயலலிதா கடந்த கால சீரழிவு அரசியலின், கழக அரசியலின் ஒரு எச்சம்; ஆனால் மோதி எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியை மையப்  படுத்திய அரசியலின் ஒளிக்கீற்று என்று மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

jayalalitha1ஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்தக் கதைகளின் உண்மையான ஹீரோக்கள் ஆர்.வெங்கட்ராமன், காமராஜர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தானே அன்றி, ஜெயலலிதா அல்ல. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர்  ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் வளர்ச்சிக் கொள்கைகளை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு உள்ள தகுதியின் இலட்சணம் என்ன என்று தமிழக மக்கள் அறிவார்கள். அம்மாவே இப்படி என்னும் போது கலைஞர்களையும், தளபதிகளையும் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

சர். சி வி.ராமன் கண்டுபிடித்ததை “ராமன் எஃபெக்ட்” என்றும், ஜெய்ப்பூரில் வடிவமைக்கப் பட்ட செயற்கைக் கால்களை “ஜெய்ப்பூர் கால்கள்” என்றும் சொல்வது போல, குஜராத்தில் நடைமுறைப் படுத்தியதால் “குஜராத் மாடல்” என்று அழைக்கிறார்கள். மற்றபடி, மோதியின், பாஜகவின் நல்லாட்சி பற்றிய கொள்கைகளும் திட்டங்களும் இந்தியா முழுவதற்கும் பொருத்தமானவையும் ஏற்றவையும் ஆகும். இவை வெறும் கோட்பாடுகளோ, தேர்தல் கோஷங்களோ அல்ல. உண்மையில்  இந்த நல்லாட்சிக் கொள்கைகளை குஜராத்தில் பரிசோதனை செய்து, அதில் உள்ள குற்றம் குறைகளைக் களைந்து மேலும் பல நல்ல அம்சங்களையும் சேர்த்து ஒரு செயல்திட்டமாக மோதி முன்வைப்பது எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று யோசித்துப் பாருங்கள். மோதிக்கு ஒரு வாய்ப்பளித்தால், இந்த நல்லாட்சியின் பலனை ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும், ஒவ்வொரு மாநிலமும் அனுபவிக்கும்.  மோதி பிரதமராகவே கூடாது என்று வெறுப்புடனும் வன்மத்துடன் கையெழுத்துப் போட்டு கோரிக்கை விடுக்கும் அறிவுஜீவி, எழுத்தாளர், சிந்தனையாளர் பூர்ஷ்வாக்களுக்கும் அந்த நல்லாட்சியின் பலன்கள் கிடைக்கும். இடைவெட்டு இல்லாத 24 மணி மின்சாரத்தில், இன்னும் ஜோராக பெரிதாக எப்படி மோதி மீது வெறுப்பு கக்குவது, மக்களை முட்டாளாக்குவது என்று அவர்கள் யோசிக்கலாம்.

  • மோதி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ஆராய்ச்சி செய்து மோதினாமிக்ஸ் (Modinomics) என்ற புத்தகத்தை சமீர் கோச்சார் எழுதியிருக்கிறார்.  இவர் Skoch  Group  தொழில் குழுமத்தின் தலைவர் சிறந்த பொருளாதார நிபுணர். அனைவரையும் அரவணைக்கும் பொருளாதாரம் (Inclusive Economics),  அனைவரையும் அரவணைக்கும் அரசாட்சி (Inclusive Governance) என்ற இரண்டும் தான் மோதினாமிக்ஸின் தாரக மந்திரங்கள் என்பதை விரிவாக இந்தப் புத்தகத்தில் பல ஆதாரங்களுடன் விளக்குகிறார். பார்க்க: https://modinomics.net/
  • இந்தியா டுடே இதழின் மூத்த பத்திரிகையாளர் உதய் மாஹூர்கர் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள Centrestage: Inside the Narendra Modi Model of Governance என்ற புத்தகம்,  மோதி அரசின் சாதனைகளைப் பற்றியதாக  மட்டுமல்லாமல், சிறு குறைகள், இன்னும் நன்றாக செயல்பட வேண்டிய துறைகள் என்பதைப் பற்றிய நடுநிலையான விமர்சனமாகவும் அமைந்துள்ளது.

*********

மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

1. குஜராத் மாடல் என்பதை எப்படி வரையறை செய்கிறீர்கள்? அதன் முக்கிய அம்சங்கள் என்ன?

Modinomics-Book-Cover1இந்தியாவில் இதுவரை  ஒவ்வொரு “பாதிக்கப் பட்ட” சமூகக் குழுக்களையும் தனித்தனியான அலகுகளாகக் கருதி எந்த ஒத்திசைவும் இல்லாமல் தான் பெருமளவு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப் பட்டு வந்துள்ளன. இது வாக்கு வங்கிகள் உருவாகவும், நீடிக்கவும் தான் வகை செய்திருக்கிறதே தவிர வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, மக்களிடையே எந்தப் பெருமித உணர்வையும் உண்டாக்கவில்லை. இதிலிருந்து மாறுபட்டு, நல்லாட்சி (good governance) மூலமாக, அனைத்துத் தரப்பினரையும் சென்று சேரும் வளர்ச்சி என்பது தான் குஜராத் மாடல்.

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடம் உறைந்துள்ள ஆற்றல் குறித்த சுய பெருமித உணர்வை ஏற்படுத்தி, அதை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைப்பது மோதியின் குஜராத் மாடல்.

சாமானிய மக்களுக்கு “உதவுவது” அல்ல, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க எல்லாவிதமான ஊக்கங்களையும் வசதிகளையும் அளிப்பது.

கண்மூடித் தனமான, பொத்தாம் பொதுவான மானியங்களைத் தவிர்த்து, சுகாதாரம், கல்வி போன்ற குறிப்பிட்ட துறைகளில் மட்டும் ஏழை மக்களுக்கு உண்மையிலேயே நேரடியாக உதவும் வகையில் மானியங்களைப் பயன்படுத்துவது.

காளையின் கொம்பைப் பிடித்து மடக்குவது போல, வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பிரசினைகளை ஆயத்த நிலையில் (mission mode) நேரடியாக எதிர்கொள்வது, அவற்றை துரிதமாகத் தீர்ப்பது.

இந்த மாடல் அமல் படுத்தப் பட்ட போது, நடைமுறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. சில விஷயங்களில் நினைத்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், மோதி அரசு தொடர்ந்து அந்த விஷயங்களில் கூடுதல் கவனமும் அதிக முனைப்பும் செலுத்திக் கொண்டே இருக்கிறது. அது தான் மோதிக்கும் மற்ற அரசியல் தலைமைகளுக்கும் உள்ள வேறுபாடு.

2. சமூக வளர்ச்சியில் குஜராத் மிகவும் பின்தங்கியுள்ளதே.. ?

தீர்க்கவேண்டிய சில பிரசினைகள் உள்ளன என்பது உண்மை தான். ஆனால், “மிகவும் பின் தங்கிய” என்பது எந்த வகையிலும் சரியல்ல.

உதாரணமாக, சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான சராசரியை விட மோசமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், பழங்குடியினர் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் குஜராத் என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற இத்தகைய மாநிலங்களிலும் அந்த விகிதங்கள் சராசரியை விட மோசமாகத் தான் உள்ளன. இதற்குக் காரணம், பழங்குடியினர், கிராம நகர மக்களைப் போல நெருக்கமாக கூடி வசிக்காமல், தூர தூரமுள்ள பிரதேசங்களில் சிதறி வாழ்கின்றனர். அத்தகைய இடங்களுக்கு மருத்துவ வசதிகளைக் கொண்டு செல்வது மிகவும் கடினம்.  அப்படியும் கூட,  மோதி அரசின் சிறந்த முயற்சிகளால் 2002ல் 60 ஆக இருந்த சிறுகுழந்தைகள் மரண விகிதம், இப்போது 38 ஆகக் குறைந்திருக்கிறது.  மேற்கூறிய மற்ற பழங்குடியினர் அதிகமாக உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது சிறப்பாகவே உள்ளது.

இன்னொரு உதாரணம். ஒரு வருடத்திற்கு 1200க்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களின் இதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்யும் யு.என்.மேத்தா இதய சிகிச்சை மையம் முற்றிலும் அரசு நிதியில் இயங்குகிறது. கடந்த பத்து வருடங்களில் இதற்கான நிதி 2 கோடியிலிருந்து 70 கோடி வரை உயர்த்தப் பட்டுள்ளது.

குஜராத்திற்கே உரித்தான சில காரணங்களால், கிராமப் புறங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, பிற மாநிலங்களில் இருந்து டாக்டர்களை வரவழைப்பவது உட்பட பல முன்னெடுப்புகளை மோதி தலைமையிலான அரசு செய்து வருகிறது.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

 

18 Replies to “மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1”

  1. Jaya is rattled by the fact that Modi may win with thumping majority on his own. She was thinking that after elections she would extend the needed support and act as per her wishes. That may not happen and hence she is changing her style of speech.. For her astuteness, shrewdness and intelligence she is looked upon as a savior of Tamilnadu from karunanidhi’s family rule.Now Tamils are really afraid that she is wasting her chance to be a powerful force in the centre. Even now true patriots hope and pray that better sense will prevail on her as this is golden opportunity for her to have and bigger say in Delhi Politics and Tamil’s future and progress.

  2. இந்திய நாடு உருப்பட வேண்டுமானால் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டுமானால் உலக அரங்கில் முன்னுதாரமான முதல் நாடாக விளங்க வேண்டுமானால் உயர்திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆக வேண்டும். இந்த ஒப்புயர்வு பெற்ற மாமனிதரின் தலைமை நம் நாட்டிற்கு அவசியம் தேவை. இதனை நன்குணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். இந்த அரிய வாய்ப்பை எவரும் நழுவ விடக்கூடாது என்று விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் .

  3. Regarding the Infant mortality rate, I want to add a few points to what has already been given by Jatayu. In addition to being a more predominant Tribal state, the general custom in Gujarat community is to deliver the child at home instead of a hospital. This was the major cause of the huge infant and mother mortality rate in Gujarat when Modiji took over. Modiji and his Health ministry officials found out the real reason and have devised schemes like “Chiranjeevi Yojna” to ‘encourage’ ‘institutional delivery’ in the presence of a doctor or trained nurse, by way of free insurance scheme for the delivery, free transport service in 108 ambulances for pregnant ladies at the time of the delivery etc. This is what is required of every government– to analyse the problem and to device ways and means to overcome the problem. And in this Modiji had shown the will and the thinking to device schemes for alleviating different problems facing the society like this and others like power supply, water supply, transport etc.

  4. ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் முன்வைக்கும் சித்திரத்தில் மிக முக்யமான அம்சம்

    ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் தரப்பிலிருந்து மற்றும் வலதுசாரிகளின் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் குஜராத் அறவே குறைகள் அற்ற மாகாணம் என்பது அல்ல. இந்த மாகாணத்திலும் குறைகள் உண்டு தான். ஆனால் ஸ்ரீ நரேந்த்ரபாய் குறைகளை மட்டிலும் கண்டறியவில்லை. மாறாக குறைகளுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவதற்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து மிகப்பெருமளவில் குறைகளை நிவர்த்தி செய்துள்ளார் என்பது வலதுசாரிகளின் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் பார்வை.

    பிறப்பிலேயே இறக்கும் சிசுக்கள் விகிதாசாரம் பற்றிய ஸ்ரீமான் ஜடாயு அவர்களின் பார்வை மிக முழுமையான பார்வை.

    ஒப்பிடல் என்றால் பார்க்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவு!!!!!!!!!!!!

    முதலில் தமிழகம் மற்றும் குஜராத் மாகாணத்தின் நிலைமை. குஜராத் வனவாசிகள் அதிகமுள்ள மாகாணம். தமிழகத்தை விட. அது தவிர ஸ்ரீ க்ருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்லியது போல் பொதுஜனங்களின் …… வீட்டிலேயே ப்ரசவம் பார்க்க விரும்பும் வட்டார வழக்கம். இதை மாற்றுவது என்பது………..முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல். மோதி இதில் பெருமளவில் வெற்றி அடைந்துள்ளார் என்பதனையே புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இன்னமும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பது நிதர்சனம் என்றாலும்.

    2002 ல் கிட்டத்தட்ட 60 சதமானமாக இருந்த இந்த விகிதாசாரம் 2013 வாக்கில் 38 சதமானமாகக் குறைந்துள்ளது. அதாவது ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் குறைகளுக்கான காரணத்தைக் கண்டறிந்து களைய முற்பட்ட படிக்கு கிட்டத்தட்ட 40 சதமானத்துக்கு மேல் இந்தக் குறை களையப்பட்டுள்ளது.

    இது புள்ளியியல் என்ற விஷயத்தை நேர்மையாக அணுக விழைபவர்கள் செய்ய வேண்டிய முறை.

    ஆனால் வெறுப்புமுதல்வாதத்தை முன் வைக்க விழையும் ஸ்ரீமான் பூவண்ணன் போன்ற அன்பர்கள் ஆங்காங்கு மோதி வெறுப்பு வாதிகள் இணையத்தில் உலாவிடும் உரலாயுதங்களை கையிலெடுத்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உரல்களைப் பகிர்வது மட்டுமின்றி நேரெதிரான புரிதலை முன் வைக்க விழைவது.. …… என் சொல்ல………

    குஜராத்தைப் போன்று வனவாசிகள் ஜனத்தொகை அதிகம் இல்லாத தமிழகம் போன்ற ஒரு மாகாணத்தின் விகிதாசாரங்களை ……..குஜராத்துடன் ஒப்பிட விழைவது முதல் தவறு.

    2002-2013 கால கட்டத்தில் நிலைமையை அபிவ்ருத்தி செய்ய குஜராத் சர்க்கார் எடுத்ததில் அவர்கள் அடைந்த வெற்றியான கிட்டத்தட்ட 40 சதமானம் ………… மேற்பூச்சு மேனாமினுக்கி த்ராவிட சர்க்காரின் ஒப்பீட்டு (comparitive — figures not available) விகிதாசாரத்தை விட மேன்மை மிக்கதாகவே இருக்கும்.

    மோதியின் கையில் சர்க்கார் வந்த பின் அவர் அடைந்த ஒப்பீட்டு வெற்றியை ஒப்பிடுகையில் த்ராவிட சாக்கடை சர்க்கார் அடைந்த ஒப்பீடு ………. வெற்றியாக இருக்கவே முடியாது.

    நிலைமை இப்படி இருக்கையில் ………….

    பிறப்பிலேயே சிசுக்கள் இறக்கும் விகிதாசாரம் குஜராத்தில் மற்ற மாகாணங்களை ஒப்பிடுகையில் இன்னமும் அதிகமாக இருக்கிறது என்பது மட்டிலும் ஒரு நேர்மையான புள்ளியியல் வ்யாக்யானமாக இருக்கலாமே அன்றி………..

    மோதி சர்க்கார் பிறப்பிலேயே சிசுக்கள் இறக்கும் ப்ரச்சினையில் எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை என்பதோ அல்லது மோதி சர்க்கார் எடுத்த முயற்சிகள் வெற்றிகள் அளிக்கவில்லை என்பதோ …………… புள்ளியியலை வைத்து விளையாட விழையும் கடைந்தெடுத்த வெறுப்புமுதல்வாத ப்ரயாசை என்றால் மிகையாகாது………..

    த்ராவிட விசிலடிச்சான் குளுவான் கள் இப்படிப்பட்ட கந்தறகோளாதிகளை செய்வது என்பது புரிந்துகொள்ளத்தக்கதே……….

    ஆனால் நான் மிகவும் மதிக்கும் மேஜர் ஸ்ரீ பூவண்ணன் போன்ற கசடறக்கற்ற……….. விஷயங்களைப் புரிந்துகொள்ளத் தக்க professionals……….judicial interpretation படி விஷயங்களைப் புரிந்து கொள்ளாது literal interpretation படி விஷயங்களை திரிபுடன் முன்வைக்க விழைதல் என்பது சுட்டிக்காட்டுவது…………..

    அன்பர் அவர்களின் வ்யாக்யானாதிகள் ……………….. they are not professional interpretations but out and out hate mongering

  5. பெருமதிப்பிற்குரிய திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    குஜராத் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளை கடந்த 12 வருடமாக கண்கூடாக கண்டுவரும் குஜராத்திகள், அவருடைய செயல்பாட்டின் அளவை மட்டும் நோக்காமல், அவருடைய நோய்முதல் நாடும் போக்கினையே பெரிதும் விரும்பி, பெரும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

    இந்த விவாதத்தில், தாங்கள் பெரியவர் மேஜர் திரு பூவண்ணன் அவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களைப் பற்றி எழுதியுள்ள விமரிசனத்தை உற்று நோக்குகிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழகத்தில் பிறந்து,தமிழகத்திலேயே கல்வி கற்று , வேலைவாய்ப்பு அல்லது தொழில் நிமித்தம் பிற மாநிலங்களில் பணியாற்றுவோர் மனநிலை எப்படி இருக்கும் ?

    என் வகுப்பறை தோழர் ஒருவர் பெயரை இங்கு நான் பதிவு செய்யவிரும்பவில்லை. விமானப்படையில் பணியாற்றிய பின்னர், தற்போது ஓய்வு பெற்று விட்டார். அவர் அடிக்கடி என்னிடம் சொல்லுவார். வட இந்தியாவில் பணியில் சேர்ந்த புதிதில், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று தென் மாநிலங்களை சேர்ந்தோர் , வட இந்தியாவில் மிக சரளமாக அங்குள்ள மக்களிடம் பழக முடிந்ததையும், நம் தமிழ் மாநில மக்கள் பட்ட சிரமங்களையும் எடுத்துக்கூறுவார்.

    அறுபதாம் ஆண்டுகளில் (1960-1970) திக மற்றும் திமுகவினர் அரசியல் மேடைகளில் கக்கிய விஷம் அளவிடற்கரியது. அந்த விஷத்தை உண்டவர்கள் பலர். திரு பூவண்ணன் போன்றோர் அந்த பாதிப்பிலேயே உள்ளனர். பெருந்தலைவர் காமராஜரை கரும்பூதம் , கொள்ளிவாய்ப் பிசாசு , என்றெல்லாம் வர்ணனை செய்த திமுக கூட்டங்களில் நிகழ்த்தப் பட்ட உரைகளை நாங்கள் நேரில் கேட்டுள்ளோம்.

    இந்திய சுதந்திர தினமாகிய 15-8-1947 அன்று கருப்புக்கொடி ஏற்றி , துக்க தினமாக அனுசரிக்கும்படி ,ஈ வே ரா வும், அவரது பக்தகோடிகளும் விடுத்த அறிக்கைகளை அன்றைய விடுதலை போன்ற பத்திரிகைகளில் படித்துள்ளோம். அவை இணைய தளத்திலும் ஏராளம் காணக்கிடக்கின்றன. சுதந்திர தினத்தை துக்கதினமாக கொண்டாட வேண்டும் என்ற கருத்துக்கு அண்ணா உடன்படவில்லை.

    மேலும் பிற்காலத்தில் , ஒன்றே குலம், ஒருவனே தேவன் -என்று திருமூலரைச் சொல்லி, பெரியாரிடம் இருந்து பிரிந்தார்.

    திமுகவினரின் இந்தி எதிர்ப்பு என்பது தமிழகத்தை பெருமளவில் பாதித்த ஒரு விஷயம். அதற்கு அவர்கள் இந்தி ஆதிக்க எதிர்ப்பு என்று ஒரு பொய்ப் பூச்சு பூசினர். ஆனால் அவர்கள் வீட்டுப் பேரனுக்கு மட்டும் இந்தி தெரியும் என்று சொல்லி , மத்திய அமைச்சர் பதவி, அதுவும் எடுத்த எடுப்பிலேயே கேபினெட் அந்தஸ்தில் பதவி அடைந்தனர்.

    ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாக கட்டாயமாகவே கற்பிக்கப்படுகிறது. கட்டாயமாக தேவை இல்லை என்றாலும், விருப்பப் பாடமாகவாவது அமைவது நல்லது. திமுகவினர் செய்த இந்த தீய செயலால், கடந்த 50 வருடமாக , பணக்காரனும், வசதி படைத்த அரசியல்வாதிகளும் தங்கள் குழந்தைகளையும், பேரன்பேத்திகளையும் இந்தி படிக்கவைத்து, உரிய பலன் பெறுகின்றனர்.ஏழைகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழன் எதிர்காலத்திலாவது முன்னேறி உருப்பட வேண்டும் என்றால், திமுக, போன்ற சாதிப்பிரிவினை கட்சிகளிடம் இருந்து விடை பெறவேண்டும். உலகம் மிக சுருங்கி வருகிறது. எதிர்கால உலகில் , தமிழகத்தில் இருக்கும் தமிழனை விட , வெளிநாடுகளில் இருக்கும் தமிழனின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். ஏனெனில், தமிழகத்தில் , ஓட்டல்களில் வேலை பார்க்க கூட , தமிழன் இல்லை. கலைஞர் 1-9-1972 முதல் உருவாக்கிய கள்ளு-சாராய கடைகளின் தொடர்ச்சியான , டாஸ்மாக் வாசலில் பிணம் போலக் கிடக்கிறான்.

    ஜாதி அடிப்படையிலான பிரிவினைகள் தமிழகத்தை எதிர்காலத்தில் முற்றிலும் அழிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. எங்கும் நிறைந்தவன் தான் தமிழகத்தை காப்பாற்றவேண்டும். திராவிடம் என்பது நிலப்பரப்பு அது ஒரு இனம் அன்று. அதனை இனம் என்று சொல்லி, வெள்ளையர்கள் உருவாக்கிய , பிரித்தாளும் சூழ்ச்சியில் இருந்து தமிழகம் இன்றுவரை விடுபடவில்லை. விரைவில் இந்த பொய்யர்களும், பொய்களும் வெளிச்சத்துக்கு வரும்.

  6. தில்லியை ஆள ஒரு “தில்”லான ஆள் தேவை. மன் மோகன் போன்று ஒரு கோழை (ராகுல் nonsense என்று மிக கேவலமாக சொன்னபோதும் எதிர்த்து பேசாத கோழை) ஆண்டால் ஏழைகளும் பாழைகளும் ஏற்றத்தை பார்க்கவே முடியாது.

    கீழ்கண்ட கேள்விகளை சில கட்சிகள் கேட்கிறார்கள். அதற்கும் இந்த தமிழ் இந்துவில் கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

    1. பாகிஸ்தானுக்கு மின்சாரம் சப்ளை செய்து பல கோடி ர்பாஇக்கு மது பாட்டில்களை மோடி தருவித்தார் —- தாமஸ் பாண்டியன்.(CPI )
    2. குஜராத்தில் வாடகை தாய்மார்கள் நாட்டிலேயே அதிகமாக உள்ளனர். அதன் பொருள் அந்த மாநிலத்தில் வறுமை கோர தாண்டவம் ஆடுகிறது – ஆவடி குமார்
    3. 30 கிராமங்களில் மின்சார இணைப்பே கிடையாது. – தந்தி டிவி
    4. சாதி வாரியாக தண்ணீர் பிடிக்க நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது.
    5. குஜராத்தின் கடன் 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுதான் குஜராத் மாடலா?
    6. corporate நிறுவனங்களுக்கு சதுர அடி ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் மோடி 35000 ஏக்கர் நிலங்களை ஏழைகளிடமிருந்து பறித்து விற்றார். அப்படி வாங்கிய அதானி கம்பனி அந்த நிலத்தை 3000 ரூபாய்க்கு விற்றது.
    7. அதானி கம்பனிக்கு லாபம் ஈட்டி தரும் நோக்கத்தோடு அங்கே மின்சாரம் அதிக கட்டணத்தில் (தமிழ் நாட்டு கட்டணத்தை விட) இல்லங்களுக்கு சப்ளை செய்கிறார்கள்.
    8. மோடி அலை என்று ஏதுமில்லை. இவரால் பயனடைந்த கார்பரேட் நிறுவங்களின்
    மாய வலை ஆகும். மீடியாக்களை பணம் கொடுத்து இவருக்கு ஆதராவ செய்திகளை வெளியிடுகிறார்கள்.
    9. காங்கிரஸ் மற்றும் பிஜேபி க்கும் பொருளாதாரத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. —இரண்டு கம்யூனிஸ்ட் காம்ரேடுகள்.
    10. வெண்மை புரட்சி என்பது காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட ஒன்று. அதை இவரது சாதனை என்று மோடி கூறுவது ஏமாற்று வேலையாகும்.
    11. தன மனைவி இருப்பதை மறைத்த மோடிக்கு மகளிர் பற்றி பேச அருகதை இல்லை — Rahul Khan (தி).
    12. மோடி என்பவர் ஆர்.எஸ்.எஸ் ன் வளர்ப்பு. ஆர்.எஸ்.எஸ் என்பது முஸ்லிம்களுக்கு விரோதமானது. ஆகவே மோடி ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராக நடப்பது ஆகாத காரியம்.
    13. குஜராத் கலவரம் என்பது ஒரு state sponsored genocide. ஆனால் சீக்கியர் கலவரம் என்பது அப்படி அல்ல.
    14. குஜராத்தில் இப்போது முஸ்லிம்கள் பயந்து பயந்து வாழ கிரார்கள். அதனால் தான் அங்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்த கலவரமும் இல்லை.
    15. RBI கவர்னர் அறிக்கையின் படி குஜராத் வளர்ந்த மாநிலமல்ல.

    தயவு செய்து மேற்கண்ட 15 சந்தேகங்களுக்கும் விடை அளித்து ஒரு கட்டுரையை விரைந்து எழுதுங்கள் மக்கள் மனதில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்து போனால் பிஜேபி க்கே வாக்களிப்பார்கள் என்பதில் சிறுதும் ஐயமில்லை ஒரு வேலை “தமிழ் இந்து ” எழுத தவறினால் அன்பான வாசகர்கள் எழுதினால் நன்றாக இருக்கும். அப்படி யாரேனும் செய்வார்களா?

  7. So many questions were raised. It is easy to raise any questions without base. If I give one statement,
    can anybody take this as reference?
    Modi says, India and it’s constitution is foremost importance to him. when you are not ready to accept this theory, what is the use of argument.
    So many articles came in Thuglak and Kalki about Gujarath after visiting Gujarath.If you are not ready to accept that due to some reasons, then why others accept your statements?
    Almost all statements are biased one. You want to say Godra train burning is state sponsored one? Modi took all actions against godra riots.
    can you say what actions taken to control the situation in 1969 Ahmadabad riots, 1989 Bagalpur riots, in kerala riots and in 1946 riots? if anybody says conveniently about 1984 riots, why we have to accept? why we have to bother about Adani? In Gujarath 24 hrs electricity is available. Why lady and daddy could not do it in Tamil naadu?
    If anybody openly says, they could not accept a person, who believes and respects Hindu religion as PM, then i consider this an honest statement.

  8. I want to refute one statement, “Gujarath muslims are afraid: or otherwise, they indulge in riots”.
    Is it not degrading one community?

  9. நரேந்திர மோடிக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை தொடர்ந்து அவிழ்த்து விட்டு வரும் கும்பலுக்கு பதில் சொல்வது வெட்டி வேலை. ஏனெனில் நாம் சொல்லும் பதில்களை படிக்கவோ, பரிசீலிக்கவோ அவர்கள் யாரும் தயாராய் இல்லை.

    உதாரணமாக அடிக்கடி, பாபர் மசூதியை இடித்தது தான் பிரச்சினைகளுக்கு ஆரம்பம் என்பது போல புளுகுவார்கள் செகுலர் காம்ரேடுகளும் . ஆபிரகாமீயப் பொய்யர்களும். ஆனால் 1992-லே பாபர் மசூதி இடிக்கப்படும் முன்னரே, 1989-90 காலக்கட்டத்தில் , 31- இந்துக்கோயில்கள் காஷ்மீரில் இடிக்கப்பட்டன என்பது , பார்லிமெண்டின் நடவடிக்கைகளில் பதிவாகி உள்ளது. அவற்றை இடித்தது யார் என்பது உலகுக்கே தெரியும்.

    அதேபோல, மவுண்ட் ரோடு ஆங்கிலப் பத்திரிகை அடிக்கடி, குஜராத் கலவரங்களை பற்றி எழுதி , அவற்றுக்கு மோடியே பொறுப்பு என்று எழுதும். குஜராத்தில் கோத்ராவில் இரயில் பெட்டிகளை கொளுத்திய அயோக்கியர்கள் யார் ? அப்போது அறுபது அப்பாவி உயிர்கள் பலியிடப்பட்டனவே என்பதை மூடி மறைத்து, எந்த நாட்டிலும் ஒரு படுகொலை நிகழ்ந்தவுடன் ஒரு எதிர்விளைவு இருக்கும் என்பது குருடனுக்கும் தெரியும். ஆனால் மவுண்ட் ரோடு ஆங்கிலப் பத்திரிகை குருடனுக்கு மட்டும் அது தெரியாது.

    இதுபோன்ற எதிர் தாக்குதல்களை யாரும் நியாயப்படுத்த மாட்டார்கள். ஆனால் அவை திட்டமிடப்பட்டவை என்று சொல்ல ஆரம்பித்தால்,

    1947- ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட படுகொலைகளுக்கு ஜவஹர்லால் நேருதான் காரணம் என்று சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆகும் ? இதற்கு முடிவே இராது .

    1969-லே அஹமதாபாதில் நடந்த கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியில் அல்லவா நடந்தன ?

    1984-லே இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது, பெரிய ஆலமரம் வீழும் போது, அதிர்வுகள் உண்டாயின என்று சொல்லி, சீக்கியர்களை படுகொலை செய்யப்பட்டதை , அலட்சியமாக சொன்ன ராஜீவ் காந்தியை , இந்த செகுலர் குரங்குகள் வாய் மூடி , கைகட்டி அங்கீகாரம் செய்தனர் என்பது நாடு அறியும்.

    1989-லே பாகல்பூர் கொடுங்கோலர்கள் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டம் அனைவரும் அறிந்ததே. அப்போது அங்கே காங்கிரஸ் மகானுபாவர்கள் தான் ஆட்சி புரிந்தனர். இந்த செகுலரிஸ்டுகள் வாயில் எதுவோ இருந்தது.

    இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து , 1992-க்கு முன்னரும் பின்னரும் பல இனக்கலவரங்கள் நிகழ்ந்துள்ளன . இவற்றை எல்லாம் விக்கி யில் சென்று காண்க.
    இந்திய ஜனநாயகத்தில் இந்த இருபத்தோராம் நூற்றாண்டு வாக்காளப்பெருமக்கள் அனைவரும் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கின்றனர். உலகமே ஒரு கிராமமாக சுருங்கி வருகிறது. ஒரு மாநில முதல்வராக , சாதனைகள் புரியாமல் , பயனற்ற செயல் புரியும் வீணரை மீண்டும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கமாட்டார்கள்.
    செக்குலரிசம் என்றால் அது எல்லா மதங்களுக்கும் எதிரானதும் அல்ல, எல்லா மதங்களுக்கும் ஆதரவானதும் அல்ல. அது மதச்சார்பற்ற நடுநிலை ஆகும். இந்தியாவிலோ மத சார்பற்ற என்றால், இந்து விரோத நிலை என்று ஆகி விட்டது. எனவே இந்துவிரோத மதசார்பற்ற நிலை விரைவில் அழியும்.

    தன்னுடைய வழி உயர்ந்தது என்று சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. தன்னுடைய வழி மட்டுமே உயர்ந்தது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

    உ பி யில் , ஷியா முஸ்லீம்களின் புதைகாட்டினை சன்னி முஸ்லீம்கள் ஆக்கிரமித்த நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தும், சுமார் 70 ஆண்டுகளாகியும் அதனை அமல் செய்ய இயலாத நாட்டில், அதனைப் பற்றி இந்த செகுலரிஸ்ட் பிறவிகள் வாயே திறப்பதில்லை.அந்த வழக்கின் விவரங்கள் , இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

    உண்மையான செகுலரிஸ்ட் இந்துக்கள் மட்டுமே . மற்ற மதத்தினர் செகுலரிஸ்ட்கள் அல்ல. இந்துக்கள் மட்டுமே பிறமதத்தினரை சமமாகக் கருதும் எண்ணம் படைத்தோர். ஆபிரகாமிய மதத்தினர் தங்கள் மதத்தினை தவிர மற்றவரை மதமாற்றம் செய்தும், மதம் மாற மறுப்போரை கொன்றும், நாத்திகரை கொன்றும் , தாங்கள் மட்டும் வாழ முடியும் என்று முட்டாள் தனமாக கற்பனை செய்து வாழ்கின்றனர்.

    அதன் விளைவே, நாம் இன்று காணும் ஷியா – சன்னி மோதல்களும், ஈரான் -ஈராக் மோதல்களும், உலகெங்கும் இஸ்லாமிய நாடுகளில் நிலவும், மற்றும் பரவும் வன்முறைகளும். பாகிஸ்தானில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி , அவரு ஒரு அகமதியா முஸ்லீம் என்பதால், அவருக்கும் அவர் சார்ந்த அகமதியா இனத்தவருக்கும் பாகிஸ்தானில் இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி, இணையத்தில் ஏராளம் தகவல்கள் உள்ளன. இது பற்றி எல்லாம் நமது செகுலரிஸ்ட் மீடியாக்கள் வாய் திறக்காது.

    அன்புள்ள ஹானஸ்ட் மேன்,

    வீணர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதில் நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது.

    முதலில் மோடி ஒரு டீக்கடைக்காரன் என்றார்கள்.

    இரண்டாவதாக , அவர் ஒரு திருமணமானவர் என்றார்கள்.

    மூன்றாவதாக , அவர் மாலையிட்ட ஒரு சிலையை , புனிதப்படுத்துவதாக கூறி, உ பியில் உள்ள சமாஜ்வாதி கட்சியினர் அங்கு புனிதப்படுத்தும் சடங்கினை செய்கிறார்கள்.

    இவை எல்லாம் எதனை காட்டுகின்றன ? மோடி அலையைப் பார்த்து உபியில் உள்ள மாயா, முலயாம், மேற்கு வங்கத்தின் மமதா , ஆகியோர் மிரண்டு போய் உள்ளனர் என்பதையும் , உபியில் இம்முறை மாயா, முலயாம்சிங்கு, ஆகியோரின் தொகுதிகள் குறையப்போகின்றன என்பது அவர்களுக்கு வயிற்றைக் கலக்கி உள்ளது. மம்தா வென்றாலும், அங்கும் பாஜக கணிசமாக வெற்றி பெற்றுவிடுமோ என்ற பயத்தில் உளற ஆரம்பித்து விட்டார்.

    மோடி தலைமையிலான என் டி ஏ 300-முதல் 320 வரை இடங்களை வென்று ஆட்சி அமைக்கும். அதன் பின்னர் இந்த மூணாவது நாலாவது அணிகள் காங்கிரசில் சேர்ந்து கரைந்து விடும். கம்யூனிஸ்டுகளுக்கும் அதே கதி தான். அவர்கள் தங்கள் ஊழல் கட்சிகளை கலைத்து விட்டு, காங்கிரசில் சேர்ந்து, இந்தியாவிலே இரு கட்சி ஜனநாயகத்தை உருவாக்கினால் நாட்டுக்கு நல்லது. இந்தியா வெல்லும்.

  10. என் நண்பர் ஒருவர் சிறிது கம்யூனிசப் பற்று உள்ளவர் எனது முந்திய கடிதத்தைப் படித்து விட்டு, கம்யூனிஸ்டு கட்சிகளை கலைத்து விட்டு, போயும் போயும் காங்கிரசில் சேர சொல்கிறாயே ? கம்யூனிசம் என்ன அவ்வளவு கேடு கெட்ட கொள்கையா ? என்று தொலைபேசியில் கேட்டார்.

    அவரிடம் கம்யூனிஸ்டுகளுக்கும் , காங்கிரசுக்கும் இடையே உள்ள பொதுவான குணங்களைப் பற்றி சொல்லி, அப்படி இணைவது அவர்களுக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது என்பதை விளக்கினேன்.

    கம்யூனிஸ்டுகள் பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஜனநாயகம் , பல கட்சி உள்ள அரசியல் அமைப்பு இவற்றை ஏற்காதவர்கள். கம்யூனிஸ்டுகளின் சர்வாதிகார அரசு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்பவர்கள்.கலாசாரப்புரட்சி , கம்யூனிசப் புரட்சி என்று சொல்லி கோடிக்கணக்கான மக்களை கொன்ற பாவிகள். டியானன்மென் சதுக்கத்தில் அமைதிவழி தர்ணா செய்த 4000 மாணவர்களை இராணுவ புல்டோசர்களை ஏவி படுகொலை செய்த சண்டாளர்கள் . இரத்தவெறி பிடித்த ஓநாய்கள் தான் கம்யூனிஸ்டுகள்.

    காங்கிரஸ்காரர்களும் அவசர நிலைப் பிரகடனத்தினை நியாயப்படுத்தி , பத்திரிகை சுதந்திரத்தை எதிர்த்தும், அடக்குமுறைகளை செய்து எதிர்க்கட்சியினரை சிறையில் தள்ளியும் வன்முறை வெறியாட்டம் நடத்தியும் சிறையிலேயே பல லட்சக்கணக்கானவர்களை கொன்று , வரலாறு படைத்தனர். ஆனாலும் கம்யூனிஸ்டுகளைப் போல , பல கோடி மக்களை கொல்லும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில், சில லட்சம் மக்களை மட்டுமே கொல்ல முடிந்ததே என்று வேதனைப் படுபவர்கள். எனவே இரண்டு கொலைகார கட்சிகளும் ஒன்றிணைவது இனம் இனத்தோடு சேரும் என்ற விதிப்படி சரியாக வரும். இரண்டு கட்சிகளுமே ஜனநாயக விரோதிகள். மனித இரத்தம் குடிக்கும் ஓநாய்க் கும்பல்கள் தான்.

    நமது பெரியவர் கூட, அவசரநிலை முடிந்தவுடன் சாத்தூர் பாலகிருஷ்ணனைக் கொன்றாயே சண்டாளி, சதிகாரி, மேயர் சிட்டிபாபுவின் ரத்தம் குடித்தாயே, இன்னமும் உன் ரத்தப் பசி அடங்கவில்லையா, மூளி, மூதேவி, இரத்தக் காட்டேரி , ஓநாய், சதிகாரி, குடிகேடி என்றெல்லாம் அன்பு மழை பொழிந்து அதன் பின்னர் , நேருவின் மகளை நிலையான ஆட்சி வேண்டி, காஷ்மீரத்துப் பண்டிதனின் மகள் காலைக் கழுவி வாழ்ந்தார்.

    எனவே, இங்கு இப்போது இருக்கும் காங்கிரஸ் மற்றும் 3ஆவது அணிக்கட்சிகள் அனைத்துமே கொள்கை என்பது இல்லாத கோமாளிக் கும்பல்கள்தான். எனவே மோடி தலைமையிலான ஆட்சியே இந்தியாவை கரையேற்ற முடியும். சரியான பொருளாதாரப் பார்வை உள்ள ஆட்சி அமையவிருக்கிறது.

  11. கம்யூனிசம் மனித இனத்துக்கு எதிரானது. காங்கிரஸ் இந்தியர்களுக்கு மட்டும் எதிரானது. கம்யூனிசம் உலக அபாயம். காங்கிரஸ் நாட்டுக்கு மட்டுமே அபாயம். கம்யூனிசம் உழைப்பாளிகளின் சர்வாதிகாரம் என்று சொல்லி, உழைப்பளைகளை கோடிக்கணக்கில் கொன்ற கட்சி. காங்கிரசோ குடும்ப நலனுக்காக நாட்டை பலியிட்ட கட்சி. இன்றைய உலகில் இந்த தீய சக்திகளை ஓட ஓட விரட்டி முடித்துவிடுவார்கள். கம்யூனிசம் என்பது முழுத் தீமை. காங்கிரஸ் என்பது 75% தீமை.

    நமது தாய்நாடு உலகில் அமைதியாக வாழ வேண்டுமானால், உற்பத்திக்கு இருக்கும் லைசென்ஸ், மற்றும் இதர கட்டுப்பாடுகளை ஒழித்து, தொழிற்சாலைகளுக்கு தேவையான நீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் உருவாக்கி , தங்கு தடையின்றி செயல்பட ஏற்பாடு செய்யவேண்டும்.

  12. எனது 21-4-2014 (நேரம் 11-05) தேதியிட்ட மறுமொழியின் 6 வது கருத்திற்கு நானே பதில் (=எதிர்வினை) எழுத விரும்புகிறேன்.
    6) அதானி குரூப் நிறுவன் தலைவர் கௌதம அதானி 1993 லிருந்து குஜராத்தில் முந்த்ரா கடலோர நகருக்கு அருகில் நிலம் வாங்க தொடங்கினார். அவர் வாங்கிய நிலத்தின் அளவு. 15,946 ஏக்கர்கள் ஆகும். 1993ல் குஜராத்தில் காங்கிரஸ் முதல்வர் சிமன்பாய் படேல் ஒரு சதுர மீட்டர் நிலத்தை 10 பைசாவிற்கு விற்றார். 1995 ல் கேசுபாய் படேல் (பிஜேபி) ஒரு ரூபாய்க்கு விற்றார். 1996-97ல் சங்கர் வகேலா (ராஷ்ட்ரிய ஜனதா பார்ட்டி- தற்போது அவர் காங்கிரஸ் காரர்) 1-50 ரூபாய்க்கு விற்றார். மோடி 5000 ஏக்கர் நிலத்தை 15 ரூபாய் rate ல் விற்றார். வாங்கிய நிலங்கள் அனைத்தும் barren wasteland (=கரம்பு நிலம் அல்லது போட்டால் காடு) ஆகும் அதானி குஜராத்தில் மட்டும் தனது project களுக்கு நிலம் வாங்கவில்லை.ஹரியானா,ஓடிஸா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் வாங்கியிருக்கிறார். ராகுல் காந்தியும் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் மேடையும் மைக்கும் கிடைத்துவிட்டால் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறுகிறார்கள். இத்தோடு அதை நிறுத்திக் கொள்வது நலம்.

  13. எனது 21-4-2014 (11-05) தேதியிட்ட மறுமொழியின் 11 வது point க்கு நானே தரும் பதில்:

    11) In 11/13, Supreme court refused to entertain a PIL accusing Modi over not stating spouse details in his nomination papers in 2012 assembly polls (In 2001, 2002, 2007 too Modi left the coloumns of spouse blank) Modi encouraged her wife to go back to her parent’s home to complete her education. She left him, followed his advice and became a teacher. Today she gets a monthly pensionof Rs.15000/=. She fasts and prays for Modi to become PM. None of the family members including his mother live in the CM bungalow. Shankersingh vaghela, leader of opposition in Gujarat assembly has appealed to his party men not to sensationalise Modi’s marital status. In 4/2009 the OPEN MAGAZINE published an article about his wife. So it is not a secret. The congress party distributed pamphlets about Modi’s marriage when Modi contested the by- election
    to Rajkat -3 assembly seat in 2001.
    Lord Buddha left his wife. Her name was Yasodhara. Bagavan Mahavir left his wife. Her name was Yasodha. Modi left his wife .Her name is Jesodha Ben.

    மேலும் சில விவரங்களை தெரிந்துகொள்ள 14-4-2014 அன்று “தமிழ் இந்து”வில் வந்த “”மோடி திருமணத்தை மறைத்தாரா?”” என்ற கட்டுரைக்கு நான் 16-4-2014 அன்று எழுதிய மறுமொழியையும் படிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..

  14. எனது 21-4-2014 (நேரம் 11-05) தேதியிட்ட மறுமொழியில் 7 வது point க்கு நானே தரும் எதிர்வினை (=பதில்) கீழே:—-

    1-6-2013 தேதியின்படி மாநிலங்களின் மின் கட்டண விவரம் கீழே தரபடுகிறது.

    1. ஆந்திரா —————————————————————————————————– 3-10
    2. அஸ்ஸாம்————————————————————————————————–3-82
    3. பீகார் ———————————————————————————————————-3-53
    4. தமிழ்நாடு —————————————————————————————————3-33
    5. குஜராத் ——————————————————————————————————3-43
    6. ஹரியான (காங்கிரஸ் ஆட்சி) ———————————————————————4-90
    7. மகாராஷ்டிரா (காங்கிரஸ் ஆட்சி) —————————————————————-4-90
    8. உத்திரப்ரதேசம் ——————————————————————————————4-75
    9. திரிபுரா (ஏழைகளுக்கு என்றே உழைத்து ஓடாய் போன கம்யூனிஸ்ட் ஆட்சி)—3-92
    10. ஓடிஸா —————————————————————————————————-3-73
    11. மேற்கு வங்காளம் (மோடி PM ஆனால் இருண்டுவிடும் என கூறும் மம்தா)— 5-69
    12. கர்நாடகா (காங்கிரஸ் ஆட்சி)——————————————————————— 6-53
    13. கோவா (பிஜேபி)————————————————————————————— 1-53
    14. சத்திஷ்கர் (பிஜேபி)———————————————————————————– 2-40

    தமிழ் நாட்டு கட்டநத்திற்கும் குஜராத் கட்டணத்திற்கும் 10 பைசா தான் வித்தியாசம். சரி அங்கே 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது.ஆனால் இங்கே? “”இல்லாத மின்சாரத்தை”” சும்மா ஏலம் போட்டு கூவி கூவி விற்றாலும் என்ன லாபம்?

  15. எனது மறுமொழியின் 12 வது point க்கு நானே தரும் பதில் (=எதிர்வினை) கீழே!

    12. ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒரு பாம்பை கண்டது போல அலறுகிறார்கள். இதற்கு காரணம் இங்கே திக மற்றும் திமுக ஆகியவை செய்த அபாண்ட பிரச்சாரமே! ஆர்.எஸ்.எஸ் என்பது Rashtriya Swayamsevak Sangh ன் சுருக்கமாகும்.அதனை ஆங்கிலத்தில் “National Volunteer Organisation” என்றும் தமிழில் “தேசிய தன்னார்வ தொண்டமைப்பு” என்றும் கூறலாம். அதன் பெயருக்கு ஏற்ப 1971 ல் ஒரிசா புயலின்போதும் 19977 ல் ஆந்திரா புயலின்போதும் ஆர்.எஸ்.எஸ். துயர்துடைப்பு பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திகொண்டது. 2001 ல் குஜராத் பூகம்பத்தின்போது நிவாரண பணிகளில் ஈடுபட்டது. “இந்தியா டுடே” என்ற பத்திரிக்கை கூறியது:- “”ஆர்.எஸ்.எஸ் ன் மோசமான எதிரிகள் கூட குஜராத் பூகம்ப பணிகளில் முதலிடம் வகித்தது ஆர்.எஸ்.எஸ் தான் என்பதை ஒப்புகொள்வர்.””

    20-11-1974 ல் முன்னாள் ஜனாதிபதி ஜாகிர் உசேன் கூறியது: “” முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் வன்முறை & வெறுப்பு ஆகியவற்றை தூண்டுகிறது என்ற குற்றசாட்டு பொய் ஆகும்
    1939 ல் பூனாவில் ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு விஜயம் செய்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூறியது:- “” நான் ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு விஜயம் செய்தது இதுதான் முஜ்தல் தடவை. இங்கே உயர்சாதியினருக்கும் தலித்துகளுக்க்ம் சமத்துவம் இருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.””
    மறைந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங் கூறியது:- “”1984 ல் சீக்கியர்களுக்கு எதிராக (தன்னை மதசார்பற்ற கட்சி என்று மார்தட்டி கொள்ளும்) காங்கிரஸ் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியபோது ஆர்.எஸ்.எஸ் சீக்கியர்களை காப்பாற்றியது. அநாதரவான சீக்கியர்களை காப்பாற்றிய ஆர்.எஸ்.எஸ். க்கு நான் உரிய மரியாதையை அளிக்க வேண்டும். காங்கிரஸ் தான் மிக மோசமான வகுப்புவாத கட்சி என்று கூறினார் (ஆதாரம்: 16-11-1989 தேதியிட்ட “Public Asia ”
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட 57 குழந்தைகளை ( 38 முஸ்லிம்கள் + 19 இந்துக்கள்) தத்தெடுத்து ஆர்.எஸ்.எஸ் ஆள் நடத்தப்படும் “Seva Bharathy ” மூலம் உயர்கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    1962 ல் இந்திய சீன போரின்போது ஆர்.ச.எஸ் தொண்டர்களின் அர்ப்பணிப்பை கண்டு மனம் நெகிழ்ந்த (((ஆர்.எஸ்.எஸ். க்கு தடை விதித்த அதே ))) நேரு 1963 ல் ஜ்குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் னை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
    காந்தியை கொன்ற கட்சி என்று கூறுகிறார்கள். காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தொடர்பு உண்டு என்று நேரு 4-2-1948 ல் அதை தடை செய்தார். காந்தி கொலையை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜஸ்டிஸ் கபூர் கமிசன் தனது அறிக்கையில் காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். க்கும் தொடர்பு இல்லை. என்று கூறியது. இந்த கமிசன் அறிக்கையை ஏற்று உச்ச நீதி மன்றம் ஆர்.எஸ்.எஸ் க்கும் காந்தி கொலைக்கும் தொடர்பில்லை என்று தீர்ப்பு கூறி ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கியது.
    15-1-2000 ல் “The Statesman” பத்திரிக்கையில் A G நூரணி என்ற முஸ்லிம் எழுத்தாளர் ஆர்.எஸ்.எஸ். தான் காந்தியை கொன்றது என்று ஒரு கட்டுரையை எழுதினர். இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் நீதிமன்றதில் வழக்கு தொடுத்தது. கோர்ட் அனுப்பிய சம்மனுக்கு அவர் ஆஜாராகாமல் போனதால் கோர்ட் non -bailable warrant னை பிறப்பித்தது. 25-2-2002 ல் ஆர்.எஸ்.எஸ் மீது அபாண்டமான கட்டுரை எழுதியமைக்கு நிபந்தனையற்ற apology யை கோர்ட்டில் தெரிவித்தார். அதுமட்டுமன்றி 3-3-2002 ல் மேற்படி பத்திரிக்கையில் அதற்கான மன்னிப்பையும் வெளியிட்டது. விஷயம் இப்படியிருக்க இன்னும் சில பைத்திய காரர்கள் மேற்படி குற்றசாட்டை திரும்ப திரும்ப கூறி வருகின்றனர். அவர்களை என்ன சொல்ல?
    பள்ளி மாணவர்களுக்கு தொண்டுள்ளம் ஏற்படுத்த எப்படி என்.எஸ்.எஸ். பயன்படுகிறதோ அப்படியே ஆர்.எஸ்.எஸ் பாரத தேச மக்களுக்கு பயன்படுகிறது.
    (கீழே தொடர்கிறது)

  16. (தொடர்கிறது)

    1) A National Sample Survey of the last 7 years shows that in rural Gujarat the no. of BPL muslims fell from 31% to 7 %. In the cities it declined from 42% to 14.6% The maximum per capita expenditure of Muslims in rural Gujarat increased from Rs. 209/- to Rs. 291/= in urban Gujarat from Rs 259/= to Rs. 328/= in the last 7 years.

    2) 11% of Gujarat Government state employees and 12% of policemen in Gujarat comprised MUSLIMS.

    3) Only 3500 Muslims went for Haj 10 years ago. The number has gone up to 31000 this year.

    4) குஜராத் முஸ்லிம்களின் literacy rate 73.5% ஆனால் இந்துக்களின் கல்வி அறிவு 68.3% நேஷனல் சராசரி = 59.1% — (ஆதாரம் சச்சார் கமிட்டி அறிக்கை)

    5. கம்யூனிஸ்ட் கள் ஆண்ட மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் ஜனத்தொகை 25.2% ஆனால் 2.1% முஸ்லிம்கள்தான் அரசு உத்தியோகத்தில் உள்ளனர். ஆனால் குஜராத்தில் ஜனத்தொகையில் 9.1% உள்ள முஸ்லிம்கள் 5.4 சதவிகதத்தினர் அரசு பணியில் உள்ளனர்.

    ஆகவே ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களுக்கு விரோதமானது என்றும் ஆர்.எஸ்.எஸ்.காரரான மோடி வந்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்ற பொய்யான கருத்தை கூறுவதை இனியாகிலும் நிறுத்துங்கள்.

  17. 21-4-14 தேதிய மறுமொழியின் 14 வது கேள்விக்கு நான் தரும் பதில் கீழே:—————–

    14) குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து பயந்து வாழ்கிறார்கள். அதனால் தான் அங்கு கலவரம் இல்லை என்று சொன்னால் காஷ்மீரில் நடக்கும் கலவரங்களுக்கு காரணம் அங்கு முஸ்லிம்கள் யாருக்கும் பயப்படாமல் வெறியாட்டம் ஆடுவதுதானா? குஜராத்தில் அவர்கள் வாழமுடியாது என்றால் அங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும் (காஷ்மீரில் 400000 இந்துக்கள் அங்கிருந்து வெளியேறியது போல) முஸ்லிம்கள் யாரும் பயந்தும் வாழவில்லை நயந்தும் வாழப்வில்லை எப்போதும் போலவே இருக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கம்மினாடிகள்தான் இப்படி எதையாவது மோடி மீது அபாண்டங்களை அள்ளி வீசிக்கொண்டே இருந்தால்தான் அவர்களுக்கு முஸ்லிம்களின் வோட்டுகள் கிடைக்கும் என்ற நினைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *