மோடிக்கு வாக்களிப்பீர்! வளர்ச்சிக்கு வாக்களிப்பீர்!

v_shanmuganathan
வி.சண்முகநாதன்

நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் (BJP Parliamentary Party) இணைச் செயலாளர் திரு.வி.சண்முகநாதன் கோவையில் ஏப். 21 அன்று  வெளியிட்டுள்ள அறிக்கை:

.

தமிழகத்தில் வரும் ஏப். 24ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை காணாத வகையில் இந்தத் தேர்தல் நவீன பிரசார சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 1.5 கோடியாக உள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்பதே எங்கும் காணப்படும் கருத்தாக உள்ளது. இம்முறைதான் நரேந்திர மோடி என்ற சாதனை முதல்வரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் நம் அனைவரும் பொறுப்புணர்வுடன் நமது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். முதலாவதாக, வரும் 24ம் தேதி நாம் ஒவ்வொருவரும் நமது பகுதியில் நமது வாக்குரிமையைச் செலுத்த வேண்டும். அடுத்து நமது நண்பர்கள், அண்டை வீட்டினர், உறவினர்களையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும். நூறு சதவிகித வாக்குப்பதிவை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்து, நாட்டின் தற்போதைய தேவையான அரசியல் மாற்றத்தை உருவாக்க, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராவதற்கு நமது வாக்கைச் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, கோவை மக்களவைத் தொகுதியில், மோடியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில்,  பாஜக வேட்பாளர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். கோவை தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான, பல திட்டங்களை கோவைக்குக் கொண்டுவந்த அவர் கோவையில் வென்றால், அடுத்து பொறுப்பேற்கவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கோவை மாநகரின் தேவைகளை வலியுறுத்திப் பெற வசதியாக இருக்கும்.

மோடியின் வாக்குறுதிகள்:

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் நம்மால் நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின்  ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற கோஷம் மட்டுமே அதை ஒழித்துவிடாது என்பதே அனுபவ பாடம். மாறாக, வறுமையை ஒழிக்க பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி பல திட்டங்களை முன்வைத்துள்ளார்.

நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலமாகவே மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என்கிறார் மோடி. வேலைவாய்ப்பு அதிகரிக்க தொழிற்சாலைகள் பெருக வேண்டும்; நமது உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். தான் பிரதமரானால் அதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார் மோடி.

இரண்டாவதாக, நாட்டின் அடிப்படை ஆதாரமான விவசாயத்தைக் காக்கவும் பல திட்டங்களை முன்வைத்துள்ளார் மோடி. தேசிய அளவில் நதிநீர் இணைப்பு அதில் முக்கியமானது. அடுத்து, விவசாயிகளுக்கு குளிரூட்டப்பட்ட கிடங்குகள், விளைபொருள்களைக் கொண்டுசெல்லவும் குளிரூட்டப்பட்ட வாகனங்கள், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கச்செய்ய விற்பனை அமைப்பு, விளைச்சலுக்கு நிகரான கடன் வசதி ஆகியவற்றை அளிப்பேன் என்று அவர் கூறி இருக்கிறார்.

மூன்றாவதாக, தேசத்தில் நிலவும் வன்முறையைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்கிறார் மோடி. பெண்கள் மீதான வன்முறைக்கும் பாலியல் கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; எல்லையில் வீரர்கள் அண்டைநாட்டின் ராணுவத்தால் கொல்லப்படுவது தடுக்கப்படும்; நக்சல் ஆதிக்கமுள்ள பல பகுதிகளில் ரிசர்வ் போலீஸ் படையினருக்கே பாதுகாப்பில்லாத நிலை காணப்படுகிறது. இதனை மாற்ற நமது ராணுவமும் காவல்துறையும் நவீனமயமாக்கப்படும் என்கிறார் மோடி.

நமது பல பிரச்னைகளுக்கு முடிவெடுக்க இயலாத தலைமையும், அரசியல் நிர்பந்தங்களில் கட்டுண்ட பிரதமரும் தான் காரணம். நமது நாடு முன்னேற வேண்டுமானால், தைரியமான பிரதமர் தேவை. குஜராத் மாநிலத்தில் தனது திறமையை நிரூபித்தவரான, ஆற்றல் மிகுந்த நரேந்திர மோடி இந்தியப் பிரதமரானால், ரூபாய் மதிப்பும் உயரும்; சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பும் உயரும்.

நமது வெற்றி வேட்பாளர்கள்:

ஆகவே, நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்கவும், கோவையில் நல்ல தொழில் சூழல் அமையவும், நமது பொருளாதாரம் மேம்படவும், கோவை தொகுதி பாஜக வேட்பாளர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும், பொள்ளாச்சி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் திரு. ஈ.ஆர்.ஈஸ்வரனுக்கும் கோவை மாவட்ட மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அதேபோல தமிழகம் முழுவதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களாகப் போட்டியிடும் மோடியின் பிரதிநிதிகள் அனைவருக்கும் வாக்களித்து, நாட்டில் புதிய மாற்றம் காண வித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

.

12 Replies to “மோடிக்கு வாக்களிப்பீர்! வளர்ச்சிக்கு வாக்களிப்பீர்!”

  1. இன்றைய சூழ்நிலையில் நாட்டில் ஒரு மாற்றம் அவசியம் தேவை தேசிய உணர்வு உள்ள ஒரு நபர் தேவை அவர் தான் மோடி மூத்த தலைவர்கள் அத்வானி முரளி மனோகர் ஜோசி போன்ற மூத்த தலைவர்கள் ஆதரவு தருவார்கள என்று நம்புவோம்

  2. ஆம். பா.ஜ.க்கு வாக்களித்து மோடியின் கரத்தை வலுப் படுத்துவோம்.

  3. தா .பாண்டியன் ,ஜெயலலிதா ,கருணாநிதி ,போன்ற திடீர் துப்பறியும் நிபுணர்கள் குஜராத்தை புலன்விசாரனை செய்ய புகுந்த காட்சி பரிதாபகரமானது .சோறு உண்டா ,அதில் குழம்பு உண்டா ,துணி உண்டா ,சுகம் உண்டா என்ற அக்கறைகள் ஒரு புறம் இருக்கட்டும் , ரொட்டிதுண்டும் ,மது ரசதினாலும் மட்டும் வாழ்க்கை அமைவதில்லை என்றார்களே என்று இயேசு நாதர் பைபிள் லில் ஐயுருகிறாரே …அதை மண்டியிட்டு கேட்ட பின்புமா பாண்டியனார்ரே மயக்கம் ??

  4. தமிழக பாராளுமன்ற 39 தொகுதிகளும், பாண்டி 1 தொகுதி உட்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் 24-4-2014 வியாழன் அன்று தேர்தல் முடிவடைந்தது. இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர், நடந்த தேர்தலைப் பற்றி பத்திரிகைகள் தரும் சித்திரம் வருமாறு:-

    1. தேர்தல் கமிஷன் நடுநிலைமையாக நடக்கவில்லை என்று மஞ்சளார் கருத்து தெரிவித்துள்ளார்.

    2. நக்கீரன் அட்டையில் ” ஆடித்தீர்த்த அமைச்சர்கள்- திமுக அப்செட் “_ என்று எழுதி உள்ளது. திமுக அப்செட் என்றால், தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தமிழனுக்கு திட்டு காத்திருக்கிறது- அதாவது வசை மழை கலைஞரிடம் இருந்து- என்பதை உணர்க.- புரிந்து கொள்க.

    3. ஜூனியர் விகடன் ” பாய்ந்தது பண நாயகம் – வெல்லுமா ஜனநாயகம் ?”- என்று தலைப்பு எழுதியுள்ளது.

    4. ஹோமியோபதி மருத்துவ முறையில் அடிப்படை நூலான டாக்டர் ஹானிமனின் ஆர்கனான் ஆப் மெடிசின் -என்ற நூலில், கூறப்பட்டுள்ள தத்துவம் நினைவுக்கு வருகிறது.

    ” ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் , எந்த பொருள் / மூலகம்,/ இரசாயனம் சேர்வதால் , ஒரு நோய் உருவாகிறதோ, அதே பொருள்/ மூலகம்/ இரசாயனத்தை தீவிரப்படுத்தி ( by increasing the potency of the element/ chemical) கொடுத்தால் , அந்த நோய் குணமாகிவிடும் “- என்பதே அந்த கண்டுபிடிப்பு.

    திமுகவினர் ” திருமங்கலம் பார்முலா “- என்ற தேர்தல் வியாதி போக்கும் மருந்தை கண்டுபிடித்து வெற்றி பெற்றனர். இன்றோ அந்த மருந்தை தயாரித்த விஞ்ஞானி ஆனா அழகிரி திமுகவில் இல்லை. திருமங்கலம் பார்முலா இரகசியத்தை தெரிந்துகொண்டு விட்ட , பிற கழகங்களும் , திருமங்கலம் பார்முலாவை செம்மைப் படுத்தி, அதாவது மேம்படுத்தி , புதிய யுக்திகளால் வெல்ல முயற்சிக்கிறார்கள். தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறார்கள். அவ்வளவுதான். திருமங்கலம் பார்முலா இனி திமுகவுக்கு கை கொடுக்காது.

    தேர்தலுக்கு முந்திய இரண்டு நாட்கள் மட்டுமே , தேர்தல் கமிஷன் ரொம்பவும் கெடுபிடி செய்து பண வேட்டை நடத்தி, பணம் வாக்காளர் கைகளுக்கு கிடைக்காத படி , தடை செய்ய முடியும். மேலும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இருந்து , பணப்பட்டுவாடா புகார்கள் குவிந்தால், தேர்தல் கமிஷன் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே சென்று நடவடிக்கை எடுக்க முடியும். அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மேன் பவர் ( மனித சக்தி ) அவ்வளவுதான். எனவே, இம்முறை கட்சிகள் ( கழகங்கள்) தேர்தலுக்கு ஐந்து நாள் முன்பே பணப்பெட்டியை மிக திறம்பட திறந்து வீசின. இதில் திமுக பின்தங்கி விட்டது. பிரச்சாரம் முடிந்தபின்னர் பணப்பட்டுவாடா தொடங்கலாம் என்றிருந்த திமுகவினர் தேர்தல்கமிஷனின் தடைகளால் , பண வழங்கலில் தங்கள் திட்டம் முழுவதையும் செயல் படுத்த முடியவில்லை.

    நம் மக்கள் பணம் வாங்கினாலும், ஓட்டுப் போடும்போது, யாருக்கு போடவேண்டும் என்று தீர்மானித்து தான் சரியாகப் போடுகிறார்கள். முக்கிய இரு கட்சிகளும் பணம் கொடுத்திருப்பதால், பணம் வாக்குகளைத் தீர்மானிக்காது.

    சுமார் 74 சதவீத வாக்குப் பதிவு, இம்முறை கழகங்களின் சர்வாதிகாரம் செல்லாது என்பதையும், பாஜக அணி குறைந்தது 5 முதல் அதிகப்பட்சம் 22 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்பது தெரியவருகிறது. மோடி பிரதமர் ஆகவேண்டும் என்ற அடிப்படையிலேயே வாக்காளர் மனநிலை இருந்துள்ளது என்பது 16-5-2014 மாலை ஆறு மணிக்கு முடிவுகள் வரும்போது தெரியும்.

    தமிழகம், ஆந்திரம், ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஜாமீன் தொகை அனைத்து தொகுதியிலும் காலியாகிவிடும். பாஜக கூட்டணி வேட்பாளர்கள் மட்டுமே எங்கும் பண விளையாட்டில் இறங்கவில்லை.கம்யூனிஸ்டுகளும் , ஆம் ஆத்மியும் பணம் கொடுக்கவில்லை. காங்கிரசுடன் இந்த கும்பலும் சேர்ந்து அழியும்/ தேர்தலுக்கு பின்னர் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் காணாமல் போவார்கள். இவர்களுக்கு பதிலாக புதிய இயக்கங்கள் பிறக்கும். இந்தியா வளமுடன் வாழ்க.

  5. மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை. எனவே பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியது அவசியம். இதைத் தவிர இத்தேர்தலில் வேறு ஏதும் அவசியமில்லை.

    ஆனால் மோதி பிரதமராக வந்து விட்டால் பாலும் தேனும் ஓடும் என்கிற அளவுக்கு பேசுவது எழுதுவது அபத்தமே.

    1. ஊழலில் பாஜக காங்கிரசுக்கு சளைத்தது அல்ல. இந்தத் தேர்தலில், பாஜக பிரச்சாரத்திற்கு செலவு செய்யும் பணமே இதற்கு சாட்சி.
    2. பாஜக ஒரு வித்தியாசமான கட்சி என்ற பிம்பத்தைத் தொலைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஆட்சிக்காக எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளும். 98 மற்றும் 99 ஆண்டுகளில் ஆட்சி அமைத்த விதமே இதற்கு சான்று.
    3. இன்று பேசப்படும் 2ஜி, நிலக்கரி மற்றும் பிற ஊழல் வழக்குகளில் எந்த வித முனைப்பையும் பாஜக காட்டாது . காங்கிரசுடன் சமரசம் செய்து கொள்ளும் . இல்லாவிட்டால் பாஜக அரசு ராஜ்ய சபாவில் பல சட்டங்களை நிறை வேற்ற முடியாமல் போய் விடும். (bofors வழக்கில், ஆறு ஆண்டு ஆட்சியில் பாஜக அரசு எந்த விதமான முனைப்பும் காட்டவில்லை என்பது கண் முன் உள்ள உதாரணம் ).
    4 தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், பாஜக (பாஜக தலைமை), காவிரி, முல்லைப் பெரியார், பாலாறு போன்ற நதி நீர் விஷயங்களில் எந்த விதமான கருத்தையும் கூறவில்லை. பிரதம வேட்பாளர் மோதியும் இவ்விஷயங்களைப் பற்றி வாயையே திறக்கவில்லை .

    2011 தமிழ் நாடு சட்டசபைத் தேர்தலில், எவ்வாறு திமுக கூட்டணி தோற்பதற்காக அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தேவைப் பட்டதோ (அதிமுக நல்ல ஆட்சி தரும் என்ற நம்பிக்கையில் அல்ல) அதே போல், இன்று மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு நீக்கப் படுவதற்கு பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம்.

    இதற்கு மேல், இத்தேர்தலில் வேறு முக்கியமில்லை. கட்டுரையாளர்கள் ஆட்சி மாற்றம் பாலும் தேனும் ஓடும் என்ற அளவிற்கு எழுத வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

  6. திரு ஆர் நாகராஜன் அவர்களே,

    நமது இந்திய தேர்தல்களில் குறைந்த தீமையே தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால் சுயநலமற்ற ஒரு நபர் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றால் தான் , ஊழல் சிறிதாவது குறையும். மேலும் முக்கிய முடிவுகளை எடுக்காமல் காலம் தள்ளி விளையாடும் வோட்டு வங்கிஅரசியல் சிறிதாவது விடைபெறும்.

    1998-1999 ஆகிய ஆண்டுகளில் அமைந்த என் டி ஏ அரசு பல கூட்டணி கட்சிகளை சமாளித்து சிறப்பாக செயல்பட்டது. தங்க நாற்கர சாலைக்கு அப்போது தான் அஸ்திவாரம் இடப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தில் யாரோ ஒரு முன்னாள் பாஜக கூட்டணி கட்சிக்காரர், பின்னர் வந்த காங்கிரஸ் அரசில் வேகமாக செயல்பட்டு , பலன் பெற்றார் என்றாலும், சாலை நல்ல தரமாக கிடைத்தது என்பது உண்மை.

    ஊழல் அற்ற அரசு வேண்டாம் , பெரிய அளவு ஊழல்கள் நடந்தாலும் பரவாயில்லை , மைனாரிட்டிகள் காலைக் கழுவி வாழும் அரசு தான் தேவை என்று செகுலரிஸ்ட் என்ற பொய்ப் பெயரில் ஒரு கும்பல் , மீடியா தயவுடன் கூறிவருகிறார்கள். மெஜாரிட்டி மக்களுக்கு துரோகம் செய்யும் அரசை இனி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். நீ அரிசி கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன் – இருவரும் ஊதி ஊதி சாப்பிடலாம் -என்று சொல்லும் அயோக்கிய காங்கிரசின் அரசியல் இனி எடுபடாது.

    தேனும் பாலும் ஓடும் என்று யாரும் , எந்த ஆட்சியிலும் ,எதிர்பார்க்க வில்லை. இந்த தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளும் அதாவது திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று அணியினரும் பல தொகுதிகளில் கரன்சி கட்டுக்களை இறக்கினர். ஆனால் அதிக கரன்சி கொடுத்த கட்சிக்கு ஓட்டுப் போடலாம் என்ற எண்ணம் இல்லை. இப்போது கூட, பணத்தை வாங்கிக் கொண்டு, ரொம்ப மோசமானவனை வடி கட்டலாம் என்று தான் , வடிகட்டி ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இது மேமாதம் 16-ஆம் நாள் தெரியவரும்.

    வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட பணம் யானை வாயில் போனதுதான் என்று அனைவரும் அறிவர். காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால், அது மேலும் அதிகரிக்கும். பாஜக ஆட்சியில் அந்த கருப்பு /நிலம்/மஞ்சள் பணம் அதிகரிக்காது. புதிய டெபாசிட்டுகள் வெளிநாடு போகாது. இவர்கள் வந்த பின்னரும் வெளிநாட்டுக்கு அப்படி பணம் திருட்டு தனமாக சென்றால், அடுத்த தேர்தலில் மாற்றி ஓட்டுப்போட வேண்டும் என்பது தான் ஒரே வழி. அதிக அளவில் தேசபக்தர்கள் இருக்கும் கட்சி இப்போது பாஜக தான். திருடர்களும், தீவிரவாதிகளும் இருக்கும் கட்சி காங்கிரசும் அதன் கூட்டணிக்கட்சிகளும் தான். மெஜாரிட்டி யை வைத்துதான் எந்த முடிவும் எடுக்க முடியும்.

    காங்கிரசிலும் கூட சிவராஜ் பாட்டில், பெரியவர் ஞான தேசிகன் போன்றோர் உள்ளனர். ஆனால் அவர்கள் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. சோனியா கும்பலின் கட்டுப்பாட்டில் மட்டுமே கட்சி இருக்கிறது.

    சுப்பிரமணிய சாமியின் நேற்றைய தகவல்களில் ஆம் ஆத்மிக்கு பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய தீவிரவாத ஜிஹாதி இயக்கங்கள் நிதி திரட்டி நன்கொடை என்ற பெயரில் 200 கோடிக்கு மேல் வந்துள்ளது என்று தெளிவாக எழுதி, அண்ணா அஜாரேவுக்கும், அரவிந்த கேஜ்ரிவாலருக்கும் உரசல் ஏன் வந்தது என்பதை விளக்கி உள்ளார்.

    இந்தியா மைனாரிட்டி சார்பு உள்ள நாடாக இருக்கிறது. அதனை உண்மையான மத சார்பற்ற நாடாக ஆக்க வேண்டும். இங்கு மெஜாரிட்டி மக்கள் உரிமைகள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான மஞ்சள் கட்சி அரசுகளால் பறிக்கப்பட்டன. எனவே ஆட்சி மாற்றம் அவசியம்.

    வெளிநாட்டு தீவிரவாதிகளுடன் கொஞ்சும் அரவிந்த கேஜ்ரிவால் , பத்வா தீவிரவாதிகளின் ஆதரவு பெற்ற காங்கிரசின் பினாமி அரவிந்த கேஜ்ரிவால் போன்றோர் இந்திய அரசியல் வானில் இருந்து நம் மக்களால் துடைத்து எறியப்படுவார்கள்.

  7. கூட்டணி அரசாக இருக்கும் வரையில், மோதியால் கூட, பெரும்பான்மை மக்கள் (ஹிந்துக்கள்) விரும்பும் வகையில் ஆட்சி செய்ய முடியாது.

    NDA ஆட்சி (6 ஆண்டு ஆட்சி) ஹிந்துகளுக்காக ஏதும் செய்யவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். பங்களாதேஷ் ஊடுருவல் முஸ்லீம்களில் ஒருவர் கூட இவர்கள் ஆண்ட ஆறு ஆண்டுகளில் வெளியேற்றப் படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

    இந்தத் தேர்தலில், ஜெயலலிதா கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை. எனவே பாஜக வேறு வழி இல்லாமல் மாற்று கூட்டணி அமைத்தது.

    இத் தேர்தலில், NDA விற்கு 250 இடங்கள் கிடைத்து , பெரும்பான்மை இடங்களுக்காக தேவைப் பட்டால், இதே பாஜக அதிமுக விடம் கையேந்தி வரும். இதில் சந்தேகமே இல்லை.

    கடந்த 5 ஆண்டுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல முறை உயர்த்தப்பட்டன. ஒவ்வொரு முறையும் பாஜக இது தவறு என்று கூச்சல் போட்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இவ்விலைகளை குறைப்போம் என்று ஏன் கூற மறுக்கிறார்கள்? ஏனென்றால், இது முடியாது , வருங்காலங்களில் இவற்றின் விலை ஏற்றத்தை தடுக்க முடியாது என்றும் பாஜகவிற்கு நன்றாகவே தெரியும்.

    இவ்வளவு ஏன்? ராபர்ட் வத்ரா மீது கூட வழக்கு போட மாட்டார்கள். கேட்டால், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கூறி முடித்து விடுவார்கள். ஒரு ஊழல் வழக்கு கூட பாஜக காங்கிரஸ் மீது பதிவு செய்யாது என்று சத்தியமே செய்து விடலாம்.

    இன்று அதிகமாகப் பேசப்படும் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விஷயத்திற்கு வருவோம்.

    1999 ஆண்டு supreme court இவ்வழக்கில், நான்கு பேருக்கு தூக்கு தண்டனையும், மூவருக்கு ஆயுள் தண்டனையும் உறுதி செய்தது. தூக்கு தண்டனை பெற்ற நால்வரும் தமிழக கவர்னருக்கு கருணை மனு அனுப்பினர். 2000 ஆண்டு ஜூலையில், ஒருவருக்கு (நளினிக்கு) மன்னிப்பும், மற்ற மூவரின் கருணை மனுக்களை நிராகரித்தும் கவர்னர் , மாநில அரசின் பரிந்துரையின் பேரில் உத்தரவு இட்டார்.

    மற்ற மூவரும், உடனே குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர் (2000 ஆண்டு அக்டோபர் மாதம்). அப்போது ஆண்ட NDA அரசு ஆட்சி முடியும் வரை (மே 2004 வரை ) எந்த பரிந்துரையும் செய்ய வில்லை. ஏன்? அப்போது கூட்டணிக் கட்சிகளாக இருந்த மதிமுக , பாமக ஆதரவிர்காக , முடிவு செய்யாமல் போனார்கள். அப்போது உள் துறை அமைச்சராக இருந்தவர் அத்வானி அவர்கள்.

    NDA இப்போது ஆட்சி அமைத்தால், கூட்டணிக் கட்சிகளின் நிற்பந்தகளுக்கு பணிந்துதான் போக வேண்டியிருக்கும். நல்ல ஆட்சி கொடுக்க முடியாது.

    கீழ்க்கண்டவை இல்லாமல், மோதி அரசு அமைய ஆண்டவனை வேண்டுவோம்.

    1 அதிமுக ஆதரவு.
    2 வை கோ மற்றும் அன்பு மணி ஆதரவு
    3 மம்தா ஆதரவு
    4 ஜகன் மோகன் கட்சி ஆதரவு

  8. ” கீழ்க்கண்டவை இல்லாமல், மோதி அரசு அமைய ஆண்டவனை வேண்டுவோம்.

    1 அதிமுக ஆதரவு.
    2 வை கோ மற்றும் அன்பு மணி ஆதரவு
    3 மம்தா ஆதரவு
    4 ஜகன் மோகன் கட்சி ஆதரவு- ”

    திரு ஆர் நாகராஜன் அவர்களின் இந்த கருத்து அனைவருக்கும் நூற்றுக்கு நூறு உடன்பாடானதே. அனைவரும் இறைவனை வேண்டுவோம்.

  9. ஆந்திரம் பெரிய மாநிலம் . அதனை இரண்டாகப் பிரித்து தெலுங்கானாவை உருவாக்க வேண்டும் என்ற கிளர்ச்சி 1955- 1969 ஆகிய ஆண்டுகளிலேயே நடந்தது.அப்போது பிரதமர் இந்திரா தெலுங்கானா பகுதியை சேர்ந்தவரை முதல்வர் பதவியில் அமர்த்தி, தெலுங்கானாவை பிரிக்கத்தேவையில்லை , உங்கள் பகுதிக்கு போதிய வளர்ச்சி இல்லை என்று சொல்லித்தானே பிரிவினை வேண்டும் என்று கேட்கிறீர்கள். இப்போது தெலுங்கானா பகுதியை சேர்ந்த நபரையே முதல்வர் ஆக்கி விட்டேன். உங்கள் வளர்ச்சிக்கு தேவையானதை செய்து கொள்ளுங்கள் என்று கூறி , கிளர்ச்சியை அடக்கினார். தெலுங்கானா கிளர்ச்சியை மேலும் தூபம் போட்டு வளர்த்தது காங்கிரஸ் கட்சியே ஆகும். 2004-ஆம் ஆண்டு தேர்தலில், சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசத்தை பதவியில் இருந்து அகற்ற , கே சி ஆருடன் கூட்டு சேர்ந்து, தேர்தல் வாக்குறுதியாக தெலுங்கானாவை தனியாக பிரித்து தருகிறேன் என்று சொல்லி வாக்கு கேட்டு , காங்கிரசார் வெற்றிபெற்றனர். ஆனால் 2014- வரை சும்மா இருந்துவிட்டு, அதாவது பத்து வருடம் கழித்து , தெலுங்கானாவை இப்போது பிரித்து கொடுக்க உள்ளனர். இவ்வளவு தான் நடந்தது.

    ஆந்திர சட்ட சபையின் ஆதரவு தீர்மானத்துடன் இந்த செயலை ,2004-லேயே செய்திருந்தால், இவ்வளவு வெறுப்பும், குழப்பமும், கலாட்டாவும் ஏற்பட்டிருக்காது.
    25 எம் பி தொகுதி உள்ள ஆந்திராவில் இனி காலெடுத்து வைக்க முடியாத நிலையை காங்கிரஸ் கட்சிக்கு சோனியா குடும்பத்தினர் ஏற்படுத்தி விட்டனர். 17- எம் பி தொகுதி உள்ள தெலுங்கானா பகுதியில் விஜய சாந்தி ஒருவரை மட்டும் நம்பி தேர்தலில் இறங்கி உள்ளனர். சந்திரசேகர ராவ் காங்கிரசின் பயமுறுத்தலுக்கு பணிய மறுத்துவிட்டார். அதாவது காங்கிரசுடன் இணைய மறுத்து விட்டார். எனவே காங்கிரஸ் அங்கும் காலியாவது உறுதியாகி விட்டது.

    இப்போது சி பி ஐ – காங்கிரசாரால் கே சி ஆர் மீது ஏவி விடப்பட்டுள்ளது. கருணாவின் மனைவி மீதும் , இப்போது கருணா கூட்டணி வைக்கவில்லை என்றவுடன் , 5 வருடம் தூங்கப்போட்டுவிட்ட, கலைஞர் டீவீ வழக்கை, ஏவி விட்டுள்ளனர். தெலுங்கானா மக்களுக்கு 2004 முதல் 2014- வரை பத்து வருடம் துரோகம் செய்த சோனியா குடும்பம் , இப்போது கே சி ஆரைப் பார்த்து அவர் காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சொல்கிறது.

    இதிலிருந்து என்ன தெரிகிறது ? பாஜக ஆட்சியில் ம பி, உ பி, பீகார் ஆகிய 3 பெரிய மாநிலங்களை மிக சுமுகமாக பிரித்தனர். அந்த மூன்று மாநிலங்களின் சட்ட சபையிலும் ஆதரவு தீர்மானம் இயற்றி , அமைதியாக மாநிலப்பிரிவினை நடந்தது. ஆனால் இப்போதோ, ஆந்திராவில் சுமார் ஆறுமாதம் கடும் போராட்டங்களை சந்தித்து, வெறுப்பு, ஆத்திரம், வேதனை ஆகிய 3 மட்டுமே எஞ்சி உள்ளது. புதிய மாநிலம் உருவாக்க ஆந்திர சட்ட சபையின் ஆதரவின்றி , பிரிவினை நடந்துள்ளது. இந்த வேதனை மாற பல வருடங்கள் ஆகும்.

    காங்கிரஸ் மத்திய அரசில் பதவியில் நீடிப்பது நம் நாட்டுக்கே பெரிய அபாயம். மண்ணு மோகன் சிங் , பிரதமர் பதவியில் நீடிப்பதோ அதனைவிட பெரிய அபாயம். நம் நாட்டை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். 543- லே 345 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லவேண்டும். அனைவரும் வேண்டுவோம். இறைவன் அருள்க.

  10. 2004 மற்றும் 2009 தேர்தல்களில், கருத்துக் கணிப்புகள் NDA விற்கு ஆதரவாக இருந்தன. தேர்தல் முடிவுகள் வேறு விதமாக இருந்தன.
    அதிலும், 2009 தேர்தலில் கண்டிப்பாக NDA வெல்லும் என்றெல்லாம் (மும்பை 26/11/2008 தாக்குதலுக்குப் பிறகு) பேசினார்கள். ஆனால், 2009 இல் 2004 ஐ விட குறைவான இடங்களே கிடைத்தான. (மும்பையில் ஒரு இடத்தில் கூட வெல்ல வில்லை). UPA pre poll alliance மூலமாக 258 பெற்றது.

    பாஜக தற்போது ஆட்சியைப் பிடித்து விட்டது போலவே நடந்து கொள்கிறது. வெற்றி மமதை இப்போதே வந்து விட்டது. இந்த மமதை
    படு குழியில் தள்ளி விடும். மக்கள் எளிமையை எதிர் பார்க்கிறார்கள்.
    இந்த பாஜகவினர் ஆட்சிக்கு வந்த பின், RSS கற்றுக்கொடுத்த எளிமையை மறந்து விடுகிறார்கள். பதவிக்காக சமரசம் செய்து கொள்கிறார்கள்.

    இத்தேர்தலில் , பாஜக வெற்றி பெற்றால் (மே 16 இன்னும் வரவில்லை), புதிதாக ஏதும் செய்ய வேண்டாம் – UPA செய்த தவறுகளை செய்யாமல் இருந்தாலே போதும். என்னைப் பொறுத்த வரையில் – நீர் வளங்களை நாடு முழுக்க புதுப்பித்து, புதிய நீர்த் தேக்கங்களை உருவாக்கி , எரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி – நிலத்தடி நீர் உயர்வதற்கு வேலை செய்தாலே போதுமானது.

  11. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்துவரும் கருத்துக்கணிப்புக்கள் மாதிரி, பல்வேறு ஜோதிடர்களும் யார் பிரதமர் என்று பார்லிமென்ட் தேர்தல் குறித்து பலன்கள் எழுதியுள்ளனர்.

    1. பெங்களூரிலிருந்து வெளிவரும் times of astrology என்ற ஜோதிட மாத இதழில், திரு பி . வி . இராமன் அவர்களின் புதல்வி திருமதி காயத்திரி தேவி வாசுதேவ் அவர்கள், மோடி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்று , மேமாதம் 2014- இதழில் ஆய்வு செய்து அறிவித்துள்ளார். என் டி ஏவுக்கே தனி பெரும்பான்மை கிடைத்துவிடும் .

    2. ஜோதிடப்பேரறிஞர் அம்மா ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் பாஜக வென்றாலும் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரில் ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

    3. வேறு ஒரு அகில இந்திய ஜோதிட அமைப்பு என் டி ஏ மிகப்பெரும் வெற்றி பெறும் எனவும் , மோடி தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் ஆவார் என்றும் தெரிவித்துள்ளது. 2014- மேமாத இதழில் இக்கணிப்பு வெளியாகி உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *