வன்முறையே வரலாறாய்… – 18

May 6, 2014
By

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

இஸ்லாம் இந்தியாவை அழித்தொழிப்பதற்கு முன்னால் இருந்த இந்தியா குறித்து நாம் அறிந்து கொள்வதுவும் இங்கு அவசியமாகிறது. எனவே, அது குறித்துச் சுருக்கமாக சிறிது காணலாம்.

இந்தியாவின் மீதான இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முன்னால் பல சாதனைகள் புரிந்த உலகின் மிகப்பெரும் நாகரீக சமுதாயமாக இந்தியா இருந்தது என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அறிவியலிலும், கணிதத்திலும், இலக்கியத்திலும், தத்துவத்திலும், மருத்துவத்திலும், வான சாஸ்திரத்திலும், கட்டிடக்கலையிலும் இன்ன பிற தொழில் நுட்பங்களிலும் உலகின் வேறெந்த கலாச்சாரங்களை விடவும் இந்தியர்கள் மிக உயர்வானதொரு நிலையை எட்டியிருந்தனர்.

இந்திய கணிதவியலாளர்கள் சைபரின் (Zero) அவசியத்தைக் கண்டறிந்ததுடன், அல்ஜீப்ராவின் அடிப்படைகளையும் உலகிற்கு அளித்தவர்கள். இந்திய கல்வியின் உயரிய நிலையை அறிந்திருந்த பாரசீக அப்பாஸித் கலிஃபாக்கள், தங்களின் நாடுகளிலிருந்து கல்வியாளர்களையும், வியாபாரிகளையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்து, அவர்களை இந்தியர்களிடமிருந்து கல்வி கற்று வரும்படி ஊக்குவித்தவர்களாக இருந்தார்கள்.

இதனைக் குறித்து எழுதும் ஜவஹர்லால் நேரு, “பாரசீக மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவம், கணிதம் போன்றவற்றை மிகப்பெருமளவில் இந்தியர்களிடமிருந்து கற்றார்கள். பெருமளவிளான இந்திய கணித வல்லுனர்களும், கல்வியாளர்களும் கற்பிக்கும் நோக்குடன் பாக்தாத் போன்ற நகரங்களுக்குச் சென்றார்கள். வட இந்தியாவின் தக்ஷசீலத்தி அமைந்திருந்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயில பெருமளவிலான அராபியர்கள் வந்தார்கள்” என்கிறார்.

770-ஆம் வருடம் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மிகப் பெரும் கணித அறிஞர் பாக்தாதிற்கு இரண்டு பெரும் கணிதக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு சென்றார். முதாலவது, ஏழாவது நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரும் கணித மேதைகளில் ஒருவரான பிரம்மகுப்தர் கண்டுபிடித்த கணித அறிவியலான ப்ரஹ்மசித்தாந்தா (இன்றைக்கும் அரேபியர்களால் அறியப்படும் சிந்த்ஹிந்த்). ப்ரஹ்மசித்தாந்தா இன்றைய அல்ஜீப்ராவின் ஆரம்பகால சூத்திரங்களை உடையது. அந்த சூத்திரங்களின் மேலும் பண்படுத்திய இஸ்லாமிய கணித மேதையும், வான சாஸ்திர நிபுணருமான முகமது இப்ன் மூஸா-அல்-க்வாரிஸிமி, இந்திய சூத்திரங்களையும், கிரேக்க கணித முறைகளையும் இணைத்து இன்றைக்கு பயன்படும் அல்ஜீப்ராவை வடிவமைத்தார். இன்றைக்கு க்வாரிஸிமி அல்ஜீப்ராவின் தந்தையாக அறியப்படுகிறார். ஆனால் அதன் அடிப்படை இந்திய முறைகளை உடையது என்பது அதிகம் அறியப்படவில்லை. அல்ஜீப்ரா முதன் முதலில் இந்திய எண்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது.

எண்களைப் பிரித்தறியும் முறை, பூஜ்யத்தின் உபயோகம் ஆகியவை பற்றிய தகவல்களுடன் கூடிய இரண்டாவது நூலும் மேற்கூறிய கணித அறிஞருடன் பாக்தாதிதிற்குச் சென்றது. அதுவரையிலும் உலகம் அந்தக் கணிதமுறைகளைக் குறித்து அறிந்திருக்கவில்லை. அதனை இஸ்லாமிய கல்வியாளர்கள் உபயோகிக்கக் கற்றுக் கொண்டனர். பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் தாங்களே இந்தக் கணிதமுறைகளைக் கண்டறிந்ததாக உலகிற்கு அறிவித்துக் கொண்டனர். ஆனால் அதில் சிறிதளவும் உண்மையில்லை.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முந்தையை இந்தியா அற்புதமான சிற்பிகளையும், கட்டிடக்கலை வல்லுனர்களையும் கொண்டதாக இருந்தது. சிற்பங்கள் நிறைந்த அழகு நிறைந்த மாட, மாளிகைகள் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் கொண்டுவந்த கட்டிட முறைகளையும் இணைத்துக் கொண்ட இந்தியர்கள் பிற்காலத்தில் இந்தோ-இஸ்லாமிக் கட்டிட பாணியைத் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டனர். ஆனால் இஸ்லாமியர்கள் அதனையும் தங்களுடைய “கண்டுபிடிப்பாக”க் கூறிக்கொண்டனர்.

Al-birunis-india-bookஅல்-புரூனி அவருடைய புகழ்பெற்ற படைப்பான “கிதப் ஏ ஹிந்த்” என்ற நூலில் பழம்பெரும் இந்திய கலாச்சாரத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அந்த நூல் 1030-ஆம் வருடம் அராபிய மொழியில் எழுதப் பட்டது. அராபிய ஆராய்ச்சியாளரான எட்வர்ட் சச்சவு (Edward Sachau) அல்-புரூனியின் இண்டிகாவை 1880-ஆம் வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்தப் புத்தகம் 1910-ஆம் வருடம் “Alberuni’s India” என்னும் பெயரில் வெளியானது. சச்சவு, “அல்-புரூனியைப் பொறுத்தவரையில் இந்துக்கள் அற்புதமான தத்துவவாதிகள்; கணிதத்திலும், வான சாஸ்திரத்திலும் சிறந்தவர்கள்” என விளக்குகிறார்.

கணிதத்தில் இந்தியர்களில் சாதனைகளைக் குறித்து அல்-புரூனி இவ்வாறு கூறுகிறார்,

“அராபியர்களான நாம் ஹீப்ரு சொற்களைப் பயன்படுத்தி எண்களைக் குறிப்பிடுவது போல, அவர்கள் (இந்துக்கள்) எண்களைக் குறிப்பிட ஒரு போதும் சொற்களைப் பயன்படுத்தமாட்டார்கள். இன்றைக்கு அராபியர்களான நாம் பயன்படுத்தும் எண் குறியீடுகள் அழகான இந்திய குறியீடுகளிலிருந்து வந்தவை. எண்ணிக்கை செய்கையில் நாம் (அராபியர்கள்) ஆயிரத்துடன் நிறுத்திக் கொள்வோம். ஆனால் இந்தியர்களோ ஒரு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்களைக் கண்டுபிடித்து அதனை தினமும் உபயோகிப்பவரகளாக இருக்கிறார்கள்…..எண்களின் பல்வேறு பட்ட உபயோகங்கள் அவர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உபயோகிக்கப்படுகிறது. இந்த இரண்டு முறைகளும் பிற்காலத்தில் இணைந்தது…..”

இந்திய மருத்துவ புத்தகங்களான சரக சம்ஹிதா, சுஸ்ருத சம்ஹிதா போன்றவை சமஸ்கிருத மொழியிலிருந்து அராபிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு அல்லது பாரசீக மொழிக்குச் சென்று அதன் வழியாக அராபியரகளை வந்தடைந்தது எனக் கூறுகிறார் அல்-புரூனி. இன்னொரு வரலாற்றாசிரியரான சச்சவு (Sachau) இந்தியாவிலிருந்து இரு வேறு பட்ட வகைகளில் இந்திய புத்தகங்கள் பாக்தாதிற்கு வந்தடைந்ததாகக் கூறுகிறார்.

“காலிஃப் மன்சூர் (753-74) சிந்துப் பகுதியை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் இந்தியாவிலும், பாக்தாதிலும் அமைக்கப்பட்ட தூதரகங்கள் மூலமாக இரண்டு முக்கியமான புத்தங்கள் பாக்தாதினை வந்தடைந்தன. முதலாவது, ஏற்கனவே கூறிய பிரம்மகுப்தரின் ப்ரஹ்மசிந்தாந்தா மற்றும் கண்டகாடயக்கா (Khandakhadayaka or Arkanda). அராபியர்களான அல்-ஃபசாரி மற்றும் யாகுப்-இப்ன்-தாரிக் போன்றவர்கள் இந்திய அறிஞர்களின் உதவுடன் இதனை அரபியில் மொழிபெயர்த்தார்கள். இந்த இரு புத்தகங்களும் அராபிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த புத்தகங்களின் மூலமாகத்தான் அராபியர்கள் வானசாஸ்திரம் குறித்த அறிவினை முதன்முதலாகப் பெற்றார்கள்.”

இதனைக் குறித்து மேலும் விளக்கும் சச்சவு, காலிஃபா ஹாருன்-அல்-ரஷீத் (786-808) காலத்தில் இந்திய கல்வியறிவு பெருமளவில் அரேபியாவை வந்தடைந்தது என்கிறார். பால்க்கைச் சேர்ந்த பார்மாக் அரச குடும்பத்தினர் வெளிப்படைக்கு முஸ்லிம்களாக மதம் மாறினாலும், தங்களின் முன்னோர்களின் நம்பிக்கையான பவுத்தத்தை பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்தனர்.

“பார்மாக் அரச குடும்பத்தினர் தங்கள் நாட்டிலிருந்து பலரை மருத்துவம் மற்றும் மருந்து தயாரிப்பு முறைகளை அறிந்து வரும்படி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவிலிருந்து இந்து கல்வியாளர்களை பாக்தாதிற்கு வரவழைத்து அவர்களைத் தங்களின் மருத்துவ மனைகளில் முக்கிய பதவிகளில் நியமித்தனர். அவர்களின் மூலமாகப் பல முக்கியமான இந்திய அறிவியல், மருத்துவ, கணித புத்தகங்கள் சமஸ்கிருதத்திலிருந்து அராபிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன…..”

al-Biruniஇந்தியர்களிடமிருந்து பெற்ற அறிவின் அடிப்படையைக் கொண்டு அல்கிண்டி (Alkindi) மற்றும் பிற அராபியர்கள் தங்களின் புத்தகங்களை வெளியிட்டார்கள். பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானிஷ் முஸ்லிம் அறிஞரான சையத் அல்-அண்டலுசி (Al-Andalusi) அவரது புத்தகமான The Categories of Nations-இல் இந்தியாவைப் பெரும் அறிவியல், கணித, கலாச்சார மையமாகக் குறிப்பிடுகிறார்.

ஏழாம்-எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் இந்தியா ஒரு துடிப்பான, வளமையான நாடாகவும், மிக முன்னேறிய பல நகரங்களைக் கொண்டதாகவும் எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள்.

“இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளின் உச்சத்தில் (8 முதல் 11-ஆம் நூற்றாண்டுகள்), இந்தியா உலகத்தின் மிக செல்வ வளமுடைய நாடாக இருந்தது. தங்கமும், வெள்ளியும், விலையுயர்ந்த வைரமும், ரத்தினமும், மதங்களும், கலாச்சாரமும், கலைகளும், இலக்கியமும் பெரு வளர்ச்சியடைந்ததாக இருந்தது. பத்தாம் நூற்றாண்டு இந்தியா அன்றைய மேற்கத்திய நாடுகளை விடவும் தத்துவத்திலும், அறிவியல் கண்டுபிடிப்புகளிலும், கணிதத்திலும், இயற்கையின் சுழற்சி குறித்த அறிவிலும் பெருமளவு முன்னேறியிருந்தது. அன்றைய இந்தியா நிச்சயமாக சீனர்களை, பாரசீகர்களை, ரோமர்களை, பைஸாண்டியர்களை விடவும் பல மடங்கு முன்னேற்றமுடையதாகவும் இருந்தது. இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அது அத்தனையும் நாசமாக்கி இந்தியாவைச் சீரழித்தது.

உதாரணமாக, இஸ்லாமியர்கள் காட்டுமிராண்டித்தனமாக உடைத்து அழித்த பழங்கால இந்தியக் கடவுளர்களின் சிலைகள் கலையழகின் உச்சத்தில் அமைந்தவை. அந்தச் சிலைகளுக்கு இணையாகக் கூற கிரேக்கர்களைத் தவிர வேறொருவருமில்லை. இந்தியக் கோவில்களின் கட்டமைப்பு பார்ப்பவர்களைப் பேச்சிழக்க வைக்கும் அதிசயம் வாய்ந்த ஒன்று. அதற்கினையான கட்டிட அமைப்பு அன்றைய உலகில் வேறெங்கிலும் இல்லை. இந்திய சிற்பிகளுகளும், கலைஞர்களும் ஈடு இணையற்றவர்களாக, அழகின் உச்சத்தைத் தொட்டு அதிசயிக்கச் செய்பவர்களாக இருந்தார்கள். இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அவர்களை முற்றிலுமாக அழித்து ஒழித்தது.”

இஸ்லாமிய அழிப்பிற்கு முந்தைய இந்தியாவினைக் குறித்து ஓரிரு பத்திகளில் எழுதிவிட இயலாது. அவ்வப்போது இது குறித்து மேலும் எழுத முயற்சி செய்வேன்.

(தொடரும்)

Tags: , , , , , , , , , ,

 

26 மறுமொழிகள் வன்முறையே வரலாறாய்… – 18

 1. ஒரு அரிசோனன் on May 6, 2014 at 9:04 am

  அற்புதம்! ஒவ்வொரு இந்திய இளைஞனும் இதைப் படித்து, பண்டைய இந்தியர்களின் அறிவுத் திறமையை அறிந்து கொள்ளவேண்டும்! தொடர்ந்து பண்டைய இந்திய/இந்துக்களின் திறமையை எழுதுங்கள்!

 2. ram on May 6, 2014 at 1:23 pm

  excellent article……. the force of destruction destroyed a wonderful nation. let us build it again and this time show no mercy to invaders…….

 3. vivek on May 6, 2014 at 4:38 pm

  மிக அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்.

 4. MURUGESAN P on May 6, 2014 at 10:02 pm

  இஸ்லாமுக்கு முந்திய அராபிய மற்றும் பாரசீக கலாச்சாரம்,மதம், பண்பாடு, இந்துக்களுடன் தொடர்பு பற்றி எழுதுக .

 5. suvanappiriyan on May 7, 2014 at 2:12 am

  நமது நாட்டுக்கு வந்து நமது நாட்டின் கல்வியறிவை அரபுலகில் பரப்பினார்கள் என்றால் அது நமக்கு பெருமைதானே… அதிலும் நமது இந்தியர்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தியதாகவும் கட்டுரை சொல்கிறது. இது ஏழாம் நூற்றாண்டில் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாரசீக மொழியிலிருந்தும் அரபியில் பல்வேறு புத்தகங்கள் இதே ஏழாம் நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது. பாரசீக மொழியும், சமஸ்கிரத மொழியும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர மொழிகள் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆரியபட்டர் காலம் தொட்டு வானியலில் நமது இந்தியர்கள் சிறந்த இடத்தையே பெற்றிருந்திருக்கிறார்கள்.

  ஆனால் ஆறாம் நூற்றாண்டிலேயே குர்ஆன் முகமது நபிக்கு அருளப்பட்டு விட்டது. அதில் சொல்லப்பட்ட வானியல் ஆய்வுகள் அனைத்தும் இன்றைய அறிவியலோடு எந்த விதத்திலும் மோதவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  உலகம் முழுவதற்கும் வேத நூல்கள் இறைவனால் அருளப்பட்டுள்ளது. அந்த இறை செய்தியை அடிப்படையாக வைத்தே ஆரியபட்டரின் ஆய்வுகளும் இருந்திருக்க வேண்டும். திருக்குறளும் ஒரு காலத்தில் இறை வேதமாக இருந்திருக்கலாம். இறைவனே உண்மையை அறிந்தவன்.

 6. "Honest man" on May 7, 2014 at 9:49 am

  /////அதில் சொல்லப்பட்ட வானியல் ………………………..கவனத்தில் கொள்ள வேண்டும்///////

  1)அல்லா வானத்தையும பூமியையும் 6 நாட்களில் படைத்தான் (50 : 38)—– இதை வெடிப்பு கொள்கை ஏற்றுகொள்கிறதா?
  2)சூரியனுக்கு வெளிச்சத்தையும் சந்திரனுக்கு ஒளியையும் தந்தான் (10 : 5.6 )——சந்திரன் நம் பூமியைப்போன்றது. அதற்கு தானாக ஒளிரும் சக்தி கிடையாது.என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அல்லாவுக்கும் அந்த நபிக்கும் தெரியவில்லையே!
  3) நாட்சதிரம் இறைவனாக முடியாது. அது மறைந்துவிடுகிறதே! சந்திரனும் இறைவனல்ல. அதுவும் காணாமல் போய்விடுகிறதே! சூரியனும் இறைவனல்ல. அதுவும் அச்தமித்துவிடுகிறதே! (6 :76-78)——–நீ (=அல்லா) யார் கண்ணுக்கும் தெரியவில்லையே அப்படியானால் நீ மட்டும் இறைவனா? நட்சத்திரம் மறைந்து விடுகிறது என்று எந்த முட்டாள் சொன்னது. சூரியனின் வெளிச்சத்தில் தெரியவில்லை. அவை இரவில் தெரிகின்றன.
  4) சூரியனும் சந்திரனும் தத்தமது வானத்தில் நீந்திகொண்டிருக்கின்றன.(21:32,33)—–சூரியன் நீந்துகின்றானா? ஐயோ நாம் என்ன பாவம் செய்தோமோ புனித நூலென்று சொல்லப்படும் ஒரு புருடா நூலை படிப்பதற்கு?
  5) சூரியன் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்கிறது (36:37,39) பூமி ஓரிடத்தில் நிலையாக உள்ளதப்பா முகமது நபி

 7. ஒரு அரிசோனன் on May 7, 2014 at 10:14 am

  //திருக்குறளும் ஒரு காலத்தில் இறை வேதமாக இருந்திருக்கலாம்.//

  திருக்குறளைத் “தமிழ் மறை” என்று கூறுவார்கள். ஆயினும், அதை இறை வேதமாக ஒப்புக் கொள்வதில்லை. அது அறநெறி நூலாகவே கொள்ளப் படுகிறது. குறள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளை மட்டுமே விளக்குகிறது. இறை வழிபாட்டாக பத்துக் குறள்கள் அடங்கிய ஒரு அதிகாரமே செந்நாப்போதாரால் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

  “வீடு” பெறுவதைப் பற்றி இயம்பும் நூல்களையே இறை வேதமாகக் கொள்ள இயலும் என்று ஆன்றோர்கள் அருளி உள்ளனர்.

  திருக்குறள் உலகச் சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும்படியான நன்நெறிகளைத் தன்னுள் கொண்டுள்ளதே அது பெற்றிருக்கும் நன் மைதிப்புக்குக் காரணம்.

 8. ஒரு அரிசோனன் on May 7, 2014 at 11:51 am

  அன்பு நண்பர் Honest Man,

  ஜனாப் சுவனப்பிரியன் எழுதிய, //அதில் சொல்லப்பட்ட வானியல் ………………………..கவனத்தில் கொள்ள வேண்டும்/// என்ற கருத்திற்கு மாற்றுக்கருத்து அளித்திருக்கிறீர்கள். அது உங்களுக்கு உள்ள எழுத்து சுதந்திரம்.

  ஆயினும், முஸ்லிம் நண்பர் சுவனப்பிரியன் வேதமாகக் கருதும் குரானில் எழுதியிருப்பதை நீங்கள் மறுதளிக்கும்போது, அவரது மனம் புண்படும் படி எழுதுவது தங்களுக்கு முறையானதல்ல. அவர் வணங்கும் அல்லாவையும், அவர் போற்றும் இறைத்தூதரையும் ஏளனம் செய்வது முறைமை அல்ல. அது இந்துக்களுக்கு ஒவ்வாத செயல்.

 9. suvanappiriyan on May 7, 2014 at 12:19 pm

  ஹானஸ்ட் மேன்!

  //1)அல்லா வானத்தையும பூமியையும் 6 நாட்களில் படைத்தான் (50 : 38)—– இதை வெடிப்பு கொள்கை ஏற்றுகொள்கிறதா?//

  ‘(நபியே! இன்னும் வரவில்லையே என்று வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும். (அல் குர்ஆன் – 22:47)

  உங்கள் கேள்விக்கு இறைவன் மிக அழகாக பதிலளிக்கிறான். நம்முடைய கணக்கில் ஒரு நாள் என்பது இறைவன் புறத்தில் ஆயிரம் ஆண்டுகளை ஒத்தது என்பது இந்த வசனத்தில் இருந்து விளங்குகிறது.

  “வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்”
  -குர்ஆன் 16:77

  நாட்களை கணக்கிடும் முறையே பின்னாளில் நமது வசதிக்காக உருவாக்கப்பட்டது எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!

  மேற்கண்ட பதிலைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு கண் சிமிட்டும் நேரத்திற்கு தோராயமாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கவனிப்போம். கண் சிமிட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு விநாடியில் இரண்டு மூன்று முறை நம்மால் இமைகளை சிமிட்ட முடியும். ஆயினும் குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்து விடும் எனக் கூறுவதில் திருப்தி கொள்ளாமல் அதை விடக் குறைவான நேரத்தில் உலக அழிவு வரக் கூடும் எனக் கூறுகிறது. இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட்(milli second) கணக்கில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கமானது இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

  குர்ஆன் சொல்லும் கால அளவை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று மற்றவர்கள் கேட்கலாம். இந்த விளக்கமானது குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் மேலும் சில கணித வடிவமைப்புகளை பார்வையிடுவோம்.

  பேரண்டத்தின் அழிவு எப்போது என்பது பற்றித் திருமறை வசனங்களிலிருந்து அது கூறிய கால அளவு ஏறத்தாழ 0.2 வினாடி என்று நாம் அனுமானித்தோம். ஆனாலும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1433 வருடங்களாகியும் இப்பேரண்டமானது அழிவுறத் தொடங்கவில்லை. எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதய 1433 (ஹிஜ்ரி) வருடங்களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1433 வருடங்களை விட அதிகம் என்பதாகும்.

  இன்னும் விளக்கமாக சொல்லப் போனால்…

  0.2 வினாடி > 1433 வருடங்கள்

  இந்த இடத்தில் குர்ஆனின் கணக்கின்படி பேரண்டத்தின் 2 வினாடி என்பது உலகியலின் கணக்கின்படி 1433 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை 1433 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1433 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் எப்பொழுது துல்லியமாக அழியும் என்ற ரகசியத்தை நம்மை படைத்த இறைவனே அறிவான். இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1433 வருடங்களுக்கு மேல் என்றே கூற முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1433 வருடங்கள் என்ற எண் நிரந்தரமானதன்று. அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1434, 1435 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

  குர்ஆன் இந்த பேரண்டத்தைப் படைக்க ஆறு நாட்கள் ஆனதாக கூறுகிறது. இந்த ஆறு நாட்கள் என்பதை நாம் முன்பு குர்ஆனிலிருந்து பெற்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி நம் உலகியல் கணக்குக்கு ஒரு தோராயமான மதிப்பை பெற முயற்ச்சிப்போம்.

  மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி

  உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள்:
  =0.2*24=4.8=5

  =0.2 வினாடி * வினாடி (sec) * நிமிடம் (min) * மணி(time)

  =5 * 60 * 60 * 24

  =43200 * 6 = 2259000 (ஆறு நாட்களுக்காக விடையை ஆறால் பெருக்கியிருக்கிறோம்)

  =1433=0.2 வினாடி ( அதாவது பேரண்டத்தின் 0.2 வினாடியின் கால அளவு என்பது 1433 உலகியல் வருடங்களுக்கு மேல் என்ற எண்ணுக்கு நிகரானது என்பதை நினைவில் கொள்வோம்)

  =1433 * 2259000 (இறைவன் புறத்தில் உள்ள ஆறு நாட்களின் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின் கால அளவுக்கு நிகரான நம் கணக்கில் உள்ள உலகியல் வருடங்கள்

  =3237147000

  உலகம் படைக்கப்பட்டதின் வருடங்களை உலகியல் கணக்கில் குர்ஆனின் சூத்திரத்தை வைத்து தற்போது கண்டு பிடித்து விட்டோம். இந்த பேரண்டம் உருவாக்கப்பட்டு 320 கோடி வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதனை மிக தெளிவாக கண்டு கொண்டோம்.

  இப்பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாயிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லே ஷேப்லி கூறுகிறார்.

  பேரண்டம் உருவாவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

  குர்ஆன் கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறியல் அறிஞர்களால் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளோடு ஏறத்தாழ ஒத்து வருவதை கண்டு நாம் ஆச்சரியமடைகிறோம். அந்த அறிவியல் அறிஞர்களும் தோராயமாகத்தான் காலத்தை கணித்தனர். குர்ஆனோ இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலத்தை துல்லியமாக 1433 வருடங்களுக்கு முன்பே மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். எழுதப் படிக்க தெரியாக ஒரு மனிதர் இந்த குர்ஆனை தனது சொந்த கற்பனையில் இயற்றியிருக்க முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

 10. suvanappiriyan on May 7, 2014 at 12:42 pm

  ஹானஸ்ட் மேன்!

  //2)சூரியனுக்கு வெளிச்சத்தையும் சந்திரனுக்கு ஒளியையும் தந்தான் (10 : 5.6 )——சந்திரன் நம் பூமியைப்போன்றது. அதற்கு தானாக ஒளிரும் சக்தி கிடையாது.என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அல்லாவுக்கும் அந்த நபிக்கும் தெரியவில்லையே!//

  ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் இறைவன் இதைப் படைத்துள்ளான்.அறிகிற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

  -குர்ஆன் 10:5

  என்ன அழகிய ஒரு இறைவனின் வார்த்தை!. ‘லியா அன்’ என்ற அரபிச் சொல்லை அரபு இலக்கணத்தின் படி மொழி பெயர்த்தால் ‘வெளிச்சம்’ என்றும் பன்மையில் ‘வெளிச்சங்கள்’ என்றும் இரண்டையுமே ஒரே வார்த்தையில் அரபு அகராதி குறிப்பதை பார்க்கலாம்.

  அரபு மொழியில் நல்ல பாண்டித்தியம் உள்ளவர்களிடம் நாம் இதைப்பற்றிய தெளிவை அடையலாம். இணையத்திலும் கூகுளில் தேடினால் ஒருமையும் பன்மையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடப்படுவதை நாம் அறிய முடியும்.

  சூரியனின் சாதாரண வெந்நிற ஒளி மாறுபட்ட அதிர்வெண்களையும் மாறுபட்ட நிறங்களையும் கொண்ட ஒளிகளின் கலவை என நியூட்டன் தனது சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் செலுத்தி ஒளிப் பிரிகையை செய்து காட்டினார். அவற்றை மாறுபட்ட நிறங்களை உடைய ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த மாறுபட்ட வர்ணங்களை உடைய ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் அதன் துணைக் கருவிகளும் இணைந்த கருவியையே நாம் ‘நிறமாலை’ (spectrascope) நோக்கி என்கிறோம்.

  இங்கு சூரியன் பல ஒளிகளை உமிழ்ந்து ஒரு ஒளியாக நமது கண்ணுக்கு தெரிகிறது. சூரியனை நாம் சாதாரணமாக பார்த்தால் அதில் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய ஒரே வெளிச்சத்தை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஏழு வெளிச்சங்களை சுருக்கி நம் கண்ணுக்கு ஒரு வெளிச்சமாக தருகிறது. எனவே ‘லியாஅன்’ என்ற இந்த வார்த்தை பிரயோகம் ஒருமைக்கும் பொருந்தி வருகிறது. ஏழு வண்ணங்களின் கூட்டுக்கும் பொருந்தி வருகிறது.

  குர்ஆனில் பயன்படுத்தப் பட்டிருக்கும் ‘அஸ்ஸ்ம்ஸ லியாஅன்’ என்ற அரபி வார்த்தையை அரபு மொழியும், ஒளிப்பிரிகையையும் நன்கு அறிந்த ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தாரானால் இது இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார். ஏனெனில் ‘நூர்’ என்ற வார்த்தையும் ‘லியாஅன்’ என்ற வார்த்தையும் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரே பொருளையே தரும். சந்திரனுக்கு போட்ட ‘நூர்’ என்ற வார்த்தையை சூரியனுக்கு குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் பொருளே மாறி விடும்.

  ஆனால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரியனுக்கு எந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும். சந்திரனுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நிதானித்து வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது. இயற்பியலை ஓரளவு அறிந்த எந்த மனிதரும் இந்த வார்த்தை பிரயோகத்தை பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி இப்படி ஒரு வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

 11. அ. ரூபன் on May 7, 2014 at 5:04 pm

  சுவனப்பிரியன்,

  நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. சிரித்து மாளவில்லை.

  குரான் பூமியைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

  Allathee jaAAala lakumu al-ardamahdan wasalaka lakum feeha subulan waanzala mina alssama-imaan faakhrajna bihi azwajan min nabatinshatta

  He Who has, made for you the earth like a carpet spread out; has enabled you to go about therein by roads (and channels); and has sent down water from the sky.” With it have We produced diverse pairs of plants each separate from the others.

  Allathee jaAAala lakumu al-ardamahdan wajaAAala lakum feeha subulan laAAallakum tahtadoona

  (Yea, the same that) has made for you the earth (like a carpet) spread out, and has made for you roads (and channels) therein, in order that ye may find guidance (on the way);

  Waal-arda madadnahawaalqayna feeha rawasiya waanbatnafeeha min kulli zawjin baheejin

  And the earth- We have spread it out, and set thereon mountains standing firm, and produced therein every kind of beautiful growth (in pairs)-

  இதையும் படியுங்கள். சொப்பனத்திலிருந்து விழிக்கலாம்.

  The fact that the earth is not flat has been known for thousands of years. The Ancient Greeks Pythagoras (570 – 495 BC), Aristotle (384 – 322 BC) and Hipparchus (190 – 120 BC) all knew this. The Indian astronomer and mathematician, Aryabhata (476 – 550 AD) knew this. And so did the early Christian scholars Anicius Boëthius (480 – 524 AD), Bishop Isidore of Seville (560 – 636 AD), Bishop Rabanus Maurus (780 – 856 AD), the monk Bede (672 – 735 AD), Bishop Vergilius of Salzburg (700 – 784 AD) and Thomas Aquinas (1225 – 1274 AD). In fact, contrary to what we are often told, the sphericity of the earth was common knowledge among early medieval Europeans[2] and the Holy Roman Empire from as early as 395 AD used an orb to represent the spherical Earth.[3]

  If the Qur’an is a letter-by-letter dictation from Allah, it should also concur with this fact that was known throughout the world before its revelation, and it should contradict the flat earth model widely believed in by the 7th century Bedouins of Arabia.

 12. suvanappiriyan on May 7, 2014 at 6:50 pm

  திரு ரூபன்!

  // நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. சிரித்து மாளவில்லை.
  குரான் பூமியைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?
  And the earth- We have spread it out, and set thereon mountains standing firm, and produced therein every kind of beautiful growth (in pairs)-//

  ‘வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.’
  -குர்ஆன் 51:47

  ‘பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.’
  -குர்ஆன் 51:48

  பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
  -குர்ஆன் 15:19

  இன்னும், பூமியை – படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
  -குர்ஆன் 55:10

  ‘பூமியை விரித்தான்’ என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் ‘தஹாஹா’ என்ற சொல் ‘தஹ்வு’ என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. ‘தஹ்வு’ என்ற சொல்லை அரபி அகராதியில் சென்று தேடிப் பாருங்கள். ‘விரித்தல்’ என்ற பொருளைக் கொடுக்கும்.

  பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.
  ‘பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்’
  -விஞ்ஞானி ஹப்பிள்.

  இதைத்தான் இறைவனும் ‘பூமியை விரித்தான்’ அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா திரு ரூபன்!

  ‘பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ‘ என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!

  ‘இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.’
  -எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)

  “The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.”
  (பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
  (அதே புத்தகம் பக்கம் 42)
  http://en.wikipedia.org/wiki/Ultimate_fate_of_the_universe
  http://simple.wikipedia.org/wiki/A_Brief_History_of_Time

 13. Muthukumar on May 7, 2014 at 7:32 pm

  சுவனப்ரியன்,
  எல்லா கேள்விக்கும் பதில் சொல்லவில்லையே? குறிப்பாக “பூமி நிலையாக உள்ளது”.

 14. வெள்ளைவாரணன் on May 7, 2014 at 8:23 pm

  ரூபன் அவர்களே, அவர்களுடன் சிந்தனையை தூண்டும் விதத்தில் பேசிப் புண்ணியம் இல்லை என்று தோன்றுகிறது. நாம் வாழும் பூமி வேறு, கோளவடிவில் விஞ்ஞானிகள் காட்டும் பூமி வேறு என்று சொல்லிவிடுவார்கள். திருந்துபவர்களாக இருந்தால் , alisina.tamil.org போன்ற வலைத்தளங்களை படித்து , சிறிதாவது திருந்தட்டும். iraiyillaislam , faithfreedominternational, ஆகிய நல்ல பகுத்தறிவுத் தளங்களையோ , senkodi போன்ற கம்யூனிஸ்டு வலைத் தளங்களையோ படித்து இஸ்லாத்தைப் பற்றிய உண்மைகளை அறியட்டும்.

 15. Indian on May 8, 2014 at 5:40 am

  Another day, another demolition of temple from the peaceful religion. MR SP, don’t say that Islam has nothing to do with this.
  http://www.reuters.com/article/2014/05/05/us-pakistan-minorities-idUSBREA440SU20140505

 16. அ. ரூபன் on May 8, 2014 at 12:32 pm

  எதிர்பார்த்ததுதான். கேட்பவன் கேணையன் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிற விளக்கங்களைக் கேட்டுக் கேட்டு காது புளித்துவிட்டது. உலகம் 21-ஆம் நூற்றாண்டில் நிற்கிறது. சுவனப்பிரியன் ஏழாம் நூற்றாண்டை விட்டுத் தாண்ட மறுத்தால் யாரால் என்ன செய்ய முடியும்? பரிதாபம்தான். இந்த மாதிரியான ஆயிரம் விளக்கங்களைக் கேட்டாகி விட்டது. படித்தாகி விட்டது.

  இண்டர்நெட்டையே அல்லாதான் கண்டுபிடித்து முகமது மூலமாக அறிவித்தான் என்று சுவனப்பிரியன் குரானில் ஆதாரம் காட்டி விடுவாரோ என்று பயந்து கொண்டிருக்கிறேன்.

 17. வெள்ளைவாரணன் on May 8, 2014 at 1:29 pm

  ‘ இஸ்லாமாபாத், மே. 8–

  பாகிஸ்தானில் உள்ள முல்தான் என்ற இடத்தை சேர்ந்தவர் ரஷீத் ரகுமான். இவர் வக்கீலாக பணியாற்றி வந்தார். வக்கீல் பணியுடன் கல்லூரியில் சொற்பொழிவாற்றும் செயலிலும் ஈடுபட்டு வந்தார். அவர் மதத்துக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களை கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் இருந்து வந்தன.

  இந்த நிலையில் அவர் தனது அலுவலகத்தில் உதவியாளர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த 2 பேர் அவரை சரமாரியாக சுட்டனர். தடுக்க முயன்ற உதவியாளர்களையும் சுட்டார்கள்.

  3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அதில் ரஷீத்ரகுமான் உயிரிழந்தார்.-‘

  இவர்கள் கொலை செய்தது தான் அன்புவழி என்கிறார்கள் சிலர். ஐயோ பாவம் .

 18. suvanappiriyan on May 8, 2014 at 3:25 pm

  திரு முத்துக் குமார்- ஹானஸ்ட் மேன்!

  //5) சூரியன் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்கிறது (36:37,39) பூமி ஓரிடத்தில் நிலையாக உள்ளதப்பா முகமது நபி//

  //எல்லா கேள்விக்கும் பதில் சொல்லவில்லையே? குறிப்பாக “பூமி நிலையாக உள்ளது”.//

  //4) சூரியனும் சந்திரனும் தத்தமது வானத்தில் நீந்திகொண்டிருக்கின்றன.(21:32,33)—–சூரியன் நீந்துகின்றானா? ஐயோ நாம் என்ன பாவம் செய்தோமோ புனித நூலென்று சொல்லப்படும் ஒரு புருடா நூலை படிப்பதற்கு?//

  ‘சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.’
  -குர்ஆன் 36:38

  ‘இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் வானவெளியில் நீந்துகின்றன.’
  -குர்ஆன் 21:33

  இங்கு நீந்துதல் என்ற வார்த்தையைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம். கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் சுற்றி வரும்போது அதற்கு பொருத்தமான வார்த்தையான ‘நீந்துதல்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை படிப்பறிவில்லாத முகமது நபியால் சிந்திக்க முடியுமா? உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த அந்த காலத்தை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். இன்றும் கூட நம்மில் பலர் பூமி உருண்டை என்பதையும் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையையும் நம்பாதவர் இருக்கின்றனர்.

  ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் அதன் இடத்தை விட்டு நகர்கிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல… அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

  தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

  அறிஞர் ஹெர்ஷலின் கண்டுபிடிப்பு!

  அறிஞர் ஹெர்ஷவின் கண்டுபிடிப்பைப் பற்றி அறிவியல் அறிஞர் டூயிக் பின்வருமாறு விளக்குகிறார்.

  ‘ஏனைய நட்சத்திரங்களைப் போன்று சூரியனும் விண்ணில் நகர்கிறது. நட்சத்திரத் தொகுதி ஒன்றில் பிரகாசமான வேகா எனும் நட்சத்திரத்திற்கு உள்ள ஓர் இடத்தை வில்லியம் ஹெர்ஷல் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள நட்சத்திரங்களில் அவைகளுக்கு இடையில் உள்ள தூரம் கூடிக் கொண்டே வருவதைக் கவனித்தார். அதே நேரத்தில் அந்த திசைக்கு நேர் எதிர் திசையில் இருந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி வந்து காட்சி அளிப்பதையும் கவனித்தார்.

  இது உள்ளபடியே பூமி உட்பட கோள்கள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு சூரியன் நகர்வதனால் ஏற்படும் தோற்றமே இந்த நிகழ்ச்சிக்கு காரணமாகும் என அவர் விளங்கிக் கொண்டார்.

  இதை தெளிவாக விளங்குவதற்கு ஹெர்ஷல் ஒரு உதாரணத்தையும் கொடுக்கிறார். ஒரு காட்டிற்குள் மரங்களெல்லாம் ஏறத்தாழ சம தூரத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்வதாக கற்பனை செய்வோம். அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது இடையிடையே நீங்கள் நடக்கும் திசைக்கு நேராகவும் அல்லது அதற்கு நேர் எதிர் திசையிலும் பார்வையைச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் மரங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதாகவும் உங்களுக்குப் பின்னால் உள்ள மரங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வருவதாகவும் உணர்வீர்கள். இந்த தோற்றம் முற்றிலும் உங்களுடைய சுய நகர்வின் காரணமேயாகும். இதே நிலை சூரியன் நகரும் போதும் ஏற்படுகிறது. சூரியன் எந்த திசையை நோக்கி நகர்கிறதோ அந்தத் திசையில் அடர்த்தியாகத் தெரிந்த நட்சந்திரங்கள் இடைவெளி விட்டுத் தெரிகிறது. இதே போல் இதற்கு எதிர் திசையில் நட்சத்திரங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிவதும் சூரியனின் சுயமான நகர்வின் காரணமேயாகும்.
  -அஸ்ட்ரானமி ஃபார் எவ்ரிமேன், பக்கம் 297-98

  இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க எத்தனை ஆய்வுகள் எத்தனை அறிஞர்கள் இரவு பகல் பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய ஆய்வுகளையும் மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்லும் குர்ஆனின் வார்த்தைகள் வெறும் மனிதனின் வார்த்தை என்று எண்ண முடியுமா?

 19. "Honest man" on May 8, 2014 at 6:25 pm

  பங்களா தேசிலிருந்து ஊடுருவல் செய்து அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் குடியேறி voter list ல் இடம்பெற்று ரேஷன் அட்டையும் வாங்கியுள்ள முஸ்லிம்களைப் பற்றி மோடி பேசியபோது அவரை இடுப்பில் கயிறு கட்டி இழுத்து சென்று சிறையில் அடைக்க வேண்டும் என்று மமதையுடன் மம்தா பேசியதை ஒரு பயலும் கண்டிக்க வில்லை.
  ஆனால் இதே மம்தா ஆகஸ்ட் 2005 ல் பார்லிமெண்டில் “” இடது கம்யூனிஸ்ட் கட்சி வங்காள தேசத்திலிருந்து வருவோரை அனுமதித்து அவர்களை “vote bank ” ஆக மாற்றிவருகிறது என்றும் அப்படி வந்தவர்களை வெளியேற்றவேண்டும் என்று கோரினார்.
  முன்னாள் உள்துறை அமைச்சரான இந்திரஜித் குப்தா மேற்கு வங்காளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வங்காள தேச ஊடுருவல்காரர்கள் உள்ளனர் என்று 1996ல் பார்லிமெண்டில் சொன்னார். இவர்கள் இருவரும் சொன்னதையே மோடி இப்போது சொன்னால் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கிறார். அப்படியானால் அதே விஷயத்தை பேசிய இவர்கள் இருவரையும் எங்கே அடைப்பது?

  பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் இளவரசர் Rahul Khan (தி) “ஒரு ரூபாய்க்கு ஒரு சதுர அடி என்று பல ஏக்கர் நிலங்களை அதானிக்கு விற்றுவிட்டார்” என்று புலம்பி தீர்க்கிறார். ஆனால் 2010ல் 1320 மெகாவாட் மின் நிலையம் அமைக்க கமல்நாத் Commercial Minister இருந்த காலத்தில் மத்திய பிரதேசத்தில் Chhindwara விலுள்ள Chourai block ல் நிலம் ஒதுக்கப்பட்டது.

 20. Gopalasamy on May 8, 2014 at 8:55 pm

  there are so many articles in “Irai Illa Islam” blog about arab’s knowledge in 7th century. I requst to go to that blog and do the Thakiya.
  In so many Puranas, creation of universe was explained in different ways. Nobody will argue in favour of it.
  very shameful and height of arrogance.

 21. susendra on May 10, 2014 at 2:18 pm

  ஐயா சுவனப்ப்ரியா, குரான் ஒரு அறிவியல் என்சய்க்லோபிடியா தான் சாமியோவ்… எங்களை விட்டுடு, நாங்க ஏதோ பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி மேக்ஹ்ஸ் சுன்னு படிச்சுட்டு கொஞ்சமா அறிவை வளர்துக்குறோம். எங்களுக்கு குரான் மாதிரி ஒரு உலக மஹா அறிவு களஞ்சியம் வேணாமுடா சாமி…..இன்னும் கொஞ்ச நேரம் நீ சொல்றதல்லாம் படிச்ச எனக்கு அறிவு பெருகி இஸ்லாமிய பைத்தியம் ஆயுடுவேன் போல இருக்குது. நீ எழுதினத எல்லாம் படிக்குரப்பா ஒரே புலறிசிபோயுடுச்சி டா யப்பா…

 22. Khan on May 16, 2014 at 5:46 am

  Really appreciated. Very nice arguments.

 23. Zaam on February 28, 2015 at 10:44 pm

  சுவனப் ப்ரியனின் குரான் விஞ்ஜானம் உண்மையாக இருந்தாலும் இருக்கலாம் . நமது புவிக்கு மட்டும் பொறுத்தம இல்ல அவ்வளவுதான்

  வேறு கோள்களில் சரியாக இருக்குமோ

 24. ஷாராஜ் on October 21, 2020 at 1:55 pm

  ஒரு அரிசோனன்…. சுவனப் பிரியனின் மனம் புண்படாதவாறு எழுதியுள்ள உங்கள் பண்பு பாராட்டுக்கு உரியது. இதுவே இந்து மதத்தின் பண்பு எள்பதும் பரவலாகத் தெரிந்ததே! ஆனால், ,இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் அந்தப் பண்பு இல்லையே….! குரானையும், நபியையும் பற்றி மதிப்பின்றிப் பேசியதற்கே இப்படி சொல்கிறீர்களே,… இஸ்லாம், குரான், ஹதீஸ் ஆகிய “புனித” (????) நூல்களும், அல்லாவும், நபியும், இஸ்லாமிய மதவாதிகள், மதவெறியர்கள், மத தீவிரவாதிகள் ஆகியோரும் பிற மதங்களை மதித்தார்களா? பிற மதத்தவர்களை மரியாதையுடன் நடத்தினார்களா? காஃபிர்கள் என்று கேவலமாகக் கூறி, ஜிகாத் வன்கொடுமைகள் செய்ததும், செய்துகொண்டிருப்பதும் அவர்கள்தானே! பிற மதங்கள் அனைத்தையும் அனைத்து வகையிலும் அழித்தொழிக்க வேண்டும் என்று அல்லா என்னும் கடவுள் போதித்ததாக கூறி, இஸ்லாமிய அதிபயங்கரவாதங்கள் அனைத்துக்கும் வித்திட்டவர், அதற்கு “அழகிய முன்மாதிரி”யாக வாழ்ந்து காட்டியவர்தானே முகம்மது நபி! சுவனப் பிரியனுக்கும் நல்லிணக்க எண்ணம் கிடையாது. இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கம்தான் என்பது அவரது தளத்தில் தெரியும்.

 25. ஷாராஜ் on October 21, 2020 at 2:14 pm

  Susendra அவர்களின் கருத்து சிறப்பான பதிலடி! // குரான் ஒரு அறிவியல் என்சய்க்லோபிடியா தான் சாமியோவ்… எங்களை விட்டுடு, நாங்க ஏதோ பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி மேக்ஹ்ஸ் சுன்னு படிச்சுட்டு கொஞ்சமா அறிவை வளர்துக்குறோம். எங்களுக்கு குரான் மாதிரி ஒரு உலக மஹா அறிவு களஞ்சியம் வேணாமுடா சாமி…..இன்னும் கொஞ்ச நேரம் நீ சொல்றதல்லாம் படிச்ச எனக்கு அறிவு பெருகி இஸ்லாமிய பைத்தியம் ஆயுடுவேன் போல இருக்குது. // என்ற வரிகளை (எழுத்துப் பிழைகளைக் கடந்து) ரசித்து சிரித்தேன். ‘கருப்பு நாய் ஷைத்தான்; ஏனென்றால் அது கடிக்கும்’, (வெள்ளை நாய், செவலை நாயெல்லாம் கடிக்காதா? அது ஷைத்தான் இல்லையா?) ‘முகம்மமது நபி நிலவை இரண்டாகப் பிளந்தார்’,
  (நிலாவையே பிளக்கணும்னா நபி எவ்ளோ கிலோ மீட்டர் உயரம், எவ்ளோ பருமன் இருப்பாரு?), ‘முகம்மது நபி ஏழு வானங்களுக்கு (???????) / சொர்க்கத்துக்கு புராக் என்னும் குதிரையில் சென்று வந்தார்’ என்பது போன்ற ஏராளமான அறிவியல் உண்மைகள் குரானிலும், ஹதீஸிலும் உள்ளன. இனிமேல் அறிவியல் பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு இந்த நூல்களையே பாடமாக வைக்கலாம்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*