பிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை

அண்டைய நாடுகளுக்கு விடுத்துள்ள அழைப்பு ஒரு ராஜதந்திரச் செயல்.

தெற்கு ஆசிய SAARC நாட்டுத் தலைவர்களுக்கு, தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு அனுப்பியுள்ளது வரவேற்க்கப்பட வேண்டிய விஷயம். இதுவரை எந்த நாடும், எந்தத் தலைவரும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. சாதாரணமாக தேர்தல் முடிந்தபின் பதவியேற்றுக்கொள்வது என்பது ஒரு உள்நாட்டு நிகழ்ச்சியாக மட்டுமே கருதப்பட்டுவரும் நிலையில், அண்டைய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்ததன் மூலம் உலக நாடுகள் அனைத்தையும் பாரதத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வைத்திருக்கிறார் மோதி. இதன் மூலம் தன்னை ஒரு வித்தியாசமான தலைவராக முன்னிறுத்தியுள்ளார்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது முந்தைய காங்கிரஸ் அரசின் பாகிஸ்தான் கொள்கையைக் கடுமையாக விமரிசித்திருந்தார் மோதி. தேர்தலில் அவர் வெற்றி பெற்றவுடன் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான், “எந்தவிதமான நிபந்தனைகளும் முன்வைக்கக்கூடாது; அவ்வாறு நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்குத்தான் நாங்கள் உட்படுவோம்” என்று தெரிவித்திருந்தது. தற்போது நவாஸ் ஷெரீஃபுக்கு அழைப்பு விடுத்த்தன் மூலம் பந்தை அவர்கள் பக்கம் செலுத்திவிட்டார் மோதி. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கொள்கையில் பலமாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Modi_in_parliament

அதே போல பிரச்சாரத்தின் போது இலங்கைத் தமிழர்கள் நலனும் தமிழக மீனவர்கள் நலனும் தனது அரசால் காக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதை மனதில்கொண்டு, இலங்கை அதிபர் ராஜபக்சாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழகத்துத் திராவிடக் கட்சிகள் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகின்றன. அதிகாரப் பூர்வமாக இலங்கை எதிரிநாடாக அறிவிகப்படவில்லை. அது நமது நட்புநாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அங்கேயுள்ள நமது தமிழ் மக்களுக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமானால் நட்பு ரீதியாகப் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம், மிகவும் அழுத்தம் கொடுத்து காரியம் சாதிக்க முடியும். மேலும் நாகரீக உறவுடன் கலாச்சார ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் உண்டான நட்பை வளர்த்துக்கொள்ளுவதும் முக்கியம். அப்போது தான் இலங்கை மீதான் சீனா மற்றும் பாகிஸ்தானின் செல்வாக்கைக் குறைக்க முடியும். முந்தைய காங்கிரஸ் அரசு போல் இல்லாமல் மோதி அரசு இவ்விஷயத்தில் தீவிரமாகச் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை. இதைப் புரிந்துகொள்ளாமல் இங்கேயுள்ள திராவிடப் புலிகள் கூச்சல் போடுவதும் வெற்று அரசியல் செய்வதும் பயனற்றது.

பங்களாதேஷில் ஹிந்துக்கள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அடித்து விரட்டுதல் என்பவையெல்லாம் அங்கே தினம் தினம் நடக்கின்ற சமாச்சாரங்கள். அனுதினமும் ஹிந்து அகதிகள் நமது எல்லைக்குள் அடைக்கலம் தேடி வருகின்றனர். அதற்காக நாம் பங்களாதேஷை முறைத்துக்கொண்டு முறுக்கி நின்றால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நாடு தனி நாடாக, சுதந்திர நாடாகத் தோன்றியதற்கு காரணமே நாம் தான். ஆகவே அந்நாட்டுடன் உரிமைகொண்டு கண்டித்துச் செயல்பட முடியும். அதைச் செய்ய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. அங்கிருந்து தீய நோக்கத்துடன் நம் நாட்டுக்குள் திருட்டுத்தனமாக வந்த இஸ்லாமியர்களுக்குச் செய்த பல உதவிகளை, அங்கிருந்து உயிருக்குப் பயந்து நம்மிடம் அடைக்கலம் தேடி வருகின்ற ஹிந்து அகதிகளுக்குச் செய்யவில்லை காங்கிரஸ் அரசு. அந்நிலையை நிச்சயமாக மாற்றப்போகிறார் மோதி.

கடந்த பத்து ஆண்டுகளில் நேபாளத்தின் மீது சரியாகக் கவனம் செலுத்தாமல் அதனுடனான உறவை எந்த அளவுக்குக் கெடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கெடுத்துள்ளது காங்கிரஸ் அரசு. உள்நாட்டுப் பிரச்சனைகளில் அந்நாடு கொந்தளித்துக்கொண்டிருந்த போது, அதற்கு உதவும் விதமாகச் செயல்படாமல், மாவோயிஸ்டுகள் பிடியில் அந்நாடு சிக்குமாறு செய்த பெருமை காங்கிரஸ் அரசுக்கு உண்டு. கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகப் பாரம்பரியம் என அனைத்து விதத்திலும் நம்முடன் மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய நேபாளத்தின் நட்பை மீண்டும் புதுப்பித்து உறுதி செய்ய வேண்டும்.

அண்டைய நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதன் பின்னே, தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் பாரதத்தின் தலமைச் சிறப்பையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மோதி அரசு செயல்படும் என்பது என் கருத்து. அதன் முதல் படியே அண்டைய நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகும். பாரதத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு உலக அளவில் பாரதத்தின் நிலை உயரும் என்பது நிச்சயம்.

(Harsh Thamizh தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

34 Replies to “பிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை”

  1. திரு மோடி அவர்களின் அணுகு முறைகள் எல்லாமே அறிவு பூர்வமாக உள்ளது

    வருங்காலத்தில் நம் நாடு எப்படி இருக்கவேண்டும் என்று திட்டமிட்டு ஒவ்வொரு காயையும் மிகவும் சாமர்த்தியமாக, புத்திசாலித்தனமாக நகர்த்துகிறார்

    திட்டமிட்டு திட்டமிட்டு செயலாற்றுகிறார்

    திரு மோடி அவர்களின் அணுகுமுறை என் மனதைக் கவர்கிறது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  2. மோடியின் வெளியுறவுக் கொள்கைகளை வெளிப்படுத்துவது போல இருக்கிறது, தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அவர் அழைத்திருப்பது. இதில் இன்னொரு முக்கியமான அம்சமும் உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாண்மையை தனது பதவியேற்பு விழாவிலேயே உறுதி செய்ய முனைகிறார் மோடி. இந்த அணுகுமுறையை தேசநலனில் நூறு சதவிகித ஆர்வம் கொண்ட மோடியால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

    அது மட்டுமல்ல, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் (வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்டோர்) அதே பதவியேற்பு விழாவில் மோடிக்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்போது இலங்கை அதிபர் ராஜபட்ச அங்கு இருப்பாரானால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

    இலங்கை அதிபருடன் இந்தியப் பிரதமர் கைகுலுக்குவது பாவச்செயல் அல்ல; அது ஒருவகை ராஜதந்திரம் என்பதை ஏன் தமிழக தலைவர்கள் உணர்ந்துகொள்ள மறுக்கின்றனர் என்பது புரியவில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ பிரதிநிதி அவர்.

    ராஜபட்ச மோடியின் கரம்குலுக்கும் அதே நிகழ்வில் தே.ஜ.கூட்டணி சகா என்ற உரிமை உணர்வுடன் வைகோவும் விஜயகாந்தும் அருகே நிற்க வேண்டும். அதன் பொருளை மற்ற அனைவரையும் விட ராஜபட்ச அதிகமாகவே உணர்வார். வைகோவும் தமிழகத் தலைவர்களும் அவசரப்பட்டுவிடக் கூடாது. இலங்கை வாழ் தமிழர்களுக்கு நலம் விளைய வேண்டும். அதுவே நமது இறுதி இலக்கு.

    அதுமட்டுமல்ல, சார்க் நாடுகளில் மாலத்தீவு தவிர பிற நாடுகள் அனைத்தும் ஒருகாலத்தில் பிரிக்கப்படாத பாரதத்தின் அங்கமாக இருந்த நாடுகள். மோடியின் அகண்டபாரதக் கனவு ஐக்கிய இந்தியாவாக (UNITED INDIA) எதிர்காலத்தில் உருவாகலாம். அதுதான் உண்மையில் ’இந்திய துணைக்கண்டம்’. பழங்காலத்தில் அதன் பெயர் பாரத வர்ஷம். அதன்மூலமாக இந்தியாவைச் சூழ்ந்துள்ள நாடுகளும் பயன்பெறும்; இந்தியாவும் பயன்பெறும்.

    மோடி இந்தியாவின் நலன்களை மட்டும் கருதுபவர் அல்ல; முந்தைய பாரதமாக இருந்த நாடுகளின் நலனையும் கருதுபவர் என்பதே, அவரது பதவியேற்பு விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அவர் விடுத்துள்ள அழைப்பின் மூலமாகத் தெரிகிறது.

    -சேக்கிழான்

  3. பதிவு:
    அதே போல பிரச்சாரத்தின் போது இலங்கைத் தமிழர்கள் நலனும் தமிழக மீனவர்கள் நலனும் தனது அரசால் காக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதை மனதில்கொண்டு, இலங்கை அதிபர் ராஜபக்சாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.”

    எனது கேள்வி:

    இங்கே ஒரு விஷயத்தை கணிக்க வேண்டும். மோடி தமது பேச்சில் “தனது அரசால் காக்கப்படும்” என்று தான் உறுதி அளித்துள்ளார். இன்னும் முறைப்படியான மத்திய அரசே அமையாத போது, இலங்கை அதிபரை தமது பதவி ஏற்புக்கு அழைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன ???

    பதிவு :

    அதற்குள் தமிழகத்துத் திராவிடக் கட்சிகள் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகின்றன.

    எனது கேள்வி:

    திராவிட கட்சிகள் கூப்பாடு போடுகின்றனரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. அவ்வாறு கூச்சல் போடுவதாகவே வைத்துக்கொண்டாலும், அதில் தவறு என்ன உள்ளது? கூச்சல் போடுவது தவறு என்றால், இந்த விவகாரத்தில் தமிழக பிஜேபி என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்பதை ஏன் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.???
    தமிழக பிஜேபியின் சம்மதத்துடன் தான் சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா ???
    இலங்கை இன வெறியன் ராஜபக்ஷே மோடி அவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய செயல் தான் என்பதை கட்டுரை ஆசிரியர் உறுதி பட சொல்ல முடியுமா ???

    பதிவு:

    அதிகாரப் பூர்வமாக இலங்கை எதிரிநாடாக அறிவிகப்படவில்லை. அது நமது நட்புநாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    எனது கேள்வி:

    ஒரு நாடு பிற நாட்டினை நட்பு நாடு – பகை நாடு என பிரித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முறை இது வரை எந்த நாடு கடை பிடித்து வருகின்றது ???

    பதிவு:

    அங்கேயுள்ள நமது தமிழ் மக்களுக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமானால் நட்பு ரீதியாகப் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம், மிகவும் அழுத்தம் கொடுத்து காரியம் சாதிக்க முடியும். மேலும் நாகரீக உறவுடன் கலாச்சார ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் உண்டான நட்பை வளர்த்துக்கொள்ளுவதும் முக்கியம்.

    எனது கேள்வி:

    இது வரை எத்தனை முறை நட்பு ரீதியாக பேச்சு வார்த்தை நடத்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது ???
    அவ்வாறு நடந்த பேச்சு வார்த்தையில் எந்த அளவில் காரியங்கள் சாதிக்கப்பட்டுள்ளது ???
    நாகரீகம் / கலாசாரம் போன்ற ரீதியில் இரு நாடுகளுக்கும் உள்ள நட்பை வளர்த்துக்கொள்ள தான் முக்கியம் என்றால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொதுவான நாகரீகம் / கலாசாரம் எவை எவை ???

    பதிவு:

    அப்போது தான் இலங்கை மீதான் சீனா மற்றும் பாகிஸ்தானின் செல்வாக்கைக் குறைக்க முடியும்.

    எனது கேள்வி:

    இலங்கையுடனான சீனா மற்றும் பாகிஸ்தானின் செல்வாக்கை குறைக்க, லட்சக்கணக்கில் அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த ஒரு மனிதாபிமானமற்ற கொடுங்கோலனிடம் மண்டியிட்டு தான் காரியம் சாதித்து கொள்ள வேண்டும் என பதிவாசிரியர் கூற முற்படுகின்றாரா ???

    பதிவு:
    முந்தைய காங்கிரஸ் அரசு போல் இல்லாமல் மோதி அரசு இவ்விஷயத்தில் தீவிரமாகச் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.

    எனது கேள்வி:

    மோதி அரசு மீது மக்கள் வைத்துள்ள அதே நம்பிக்கையை உறுதி படுத்தும் விதமாக தான், சிங்கள இன வெறியன் ராஜபக்கேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளதா ???

  4. திரு உமா சங்கர் அறிய வேண்டுவது என்ன? லட்ச கணக்கில் தமிழர் கொல்லப்பட்ட போது காங்கிரசுடன் ஆட்சி செய்த தி.மு.க. பல இடங்களில் பா.ஜ.க. மற்றும் வை.கோ. வை விட அதிக வாக்குகள் பெற்றதே. அப்படியாயின் இங்கு இருப்பவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ராஜபக்சேவுடன் கை கொடுத்து பரிசு வாங்கிய தோல்.திருமா. அவர்கள் இந்த தேர்தலிலும் சென்ற தேர்தலில் பெற்ற வாக்கை தான் பெற்றார். குறைவு எதுவும் இல்லை. இதனை மாற்ற முதலில் அவர் முயற்சிக்கட்டும். பின் குறை காணலாம்.

  5. எனது கேள்வி:
    இங்கே ஒரு விஷயத்தை கணிக்க வேண்டும். மோடி தமது பேச்சில் “தனது அரசால் காக்கப்படும்” என்று தான் உறுதி அளித்துள்ளார். இன்னும் முறைப்படியான மத்திய அரசே அமையாத போது, இலங்கை அதிபரை தமது பதவி ஏற்புக்கு அழைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன ???

    பதில்:
    என்ன சொல்ல வருகிறீர்கள்? அரசு அமைத்த பிறகுதான் வெளிநாட்டவருக்கு அழைப்பு விட வேண்டுமா என்ன? அரசை அமைக்கப் போவதே பிரதமர் மோதி தானே ஐயா? தன்னுடைய பதவி ஏற்பு விழாவுக்கு அவர்களை அழைத்ததன் மூலம் (இது வரை எந்தத் தலைவரும் எந்த நாடும் செய்யாதது) உலகின் கவனத்தை இந்தியாவின் மீது திருப்பியிருக்கிறார். தன்னையும் ஒரு வித்தியாசமான தலைவராக முன்னிறுத்தியிருக்கிறார். சேக்கிழான் சொல்வதைப் போல தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாண்மையை நிலைநிறுத்தும் செயல் இது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    எனது கேள்வி:
    திராவிட கட்சிகள் கூப்பாடு போடுகின்றனரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. அவ்வாறு கூச்சல் போடுவதாகவே வைத்துக்கொண்டாலும், அதில் தவறு என்ன உள்ளது? கூச்சல் போடுவது தவறு என்றால், இந்த விவகாரத்தில் தமிழக பிஜேபி என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்பதை ஏன் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.???
    தமிழக பிஜேபியின் சம்மதத்துடன் தான் சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா ???
    இலங்கை இன வெறியன் ராஜபக்ஷே மோடி அவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய செயல் தான் என்பதை கட்டுரை ஆசிரியர் உறுதி பட சொல்ல முடியுமா ???

    பதில்:
    திராவிடக் கட்சிகள் கூப்பாடுதான் போடுகிறார்கள். அது மிகவும் தவறான செயல். கண்டிக்கத்தக்கதும் ஆகும். இத்தனை வருடங்களாக்க் கூப்பாடு போட்டு வெற்று அரசியல் செய்து சாதித்தது என்ன? இவர்கள் இங்கே கூப்பாடு போட்டுக்கொண்டு வெற்று அரசியல் செய்ததால் அங்கே அவதிப்படுவது இலங்கைத் தமிழர்கள் தானே? இதைக்கூடவா இத்தனை ஆண்டுகள் கழித்தும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?

    எனது கேள்வி:
    ஒரு நாடு பிற நாட்டினை நட்பு நாடு – பகை நாடு என பிரித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முறை இது வரை எந்த நாடு கடை பிடித்து வருகின்றது ???

    பதில்:
    எதிரி நாடாக அறிவுக்கும் முறை உலகில் உண்டு. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் எதிரி நாடுகள்தான். இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகளாகத்தான் மூன்று முறை யுத்தம் புரிந்திருக்கின்றன. இன்றும் பாகிஸ்தான் எதிரி நாடாகத்தான் கருதப்படுகின்றது. இரண்டு நாடுகளுக்கும் பேச்சு வார்த்தை அவ்வப்போது நடப்பது வேறு விஷயம். 2012-ல் அமெரிக்கா கூட பாகிஸ்தானை எதிரி நாடாக அறிவிக்கும் நிலை வந்தது. சீனாவுடன் ஒரு முறை யுத்தம் புரிந்தாலும் இன்று வர்த்தக ஒப்பந்தங்களும் நட்புறவும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இலங்கையுடன் நாம் யுத்தம் புரிந்ததில்லை. வர்த்தக ஒப்பந்தங்களும் இருக்கின்றன.

    எனது கேள்வி:
    இது வரை எத்தனை முறை நட்பு ரீதியாக பேச்சு வார்த்தை நடத்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது ???
    அவ்வாறு நடந்த பேச்சு வார்த்தையில் எந்த அளவில் காரியங்கள் சாதிக்கப்பட்டுள்ளது ???
    நாகரீகம் / கலாசாரம் போன்ற ரீதியில் இரு நாடுகளுக்கும் உள்ள நட்பை வளர்த்துக்கொள்ள தான் முக்கியம் என்றால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொதுவான நாகரீகம் / கலாசாரம் எவை எவை ???

    பதில்:
    வாஜ்பாய் ஆட்சியில் இலங்கையுடனான நட்புறவு முன்னேற்றம் கண்டது. தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான பேச்சு வார்த்தைகளுக்குக் கூட நார்வே நாட்டினை ஊக்குவித்த்து இந்தியா. ஆனால் வாஜ்பாய் அரசின் முதுகில் குத்தியவர்கள் தமிழகத்து திராவிடக் கட்சிகளான திமுக, மதிமுக மற்றும் பாமக ஆகியவைதான். இலங்கையில் உள்ள பௌத்த அமைப்புகளும் ஹிந்து அமைப்புகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கிறிஸ்தவரின் மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டுமென்று இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்த்து வாஜ்பாய் ஆட்சியின் ராஜதந்திரத்தால்தான். இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நாகரீக கலாச்சாரத் தொடர்பு பல நூற்றாண்டுகள் கொண்டது. சங்க இலக்கியம் மணிமேகலை அதற்குச் சிறந்த உதாரணம். ஹிந்துக்கள் புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாகவே கருதுகிறார்கள். இலங்கையில் பலர் ஹிந்து தெய்வங்களை வணங்குகிறார்கள். சிங்களவர்கள் மொழியினால் வேறுபட்டவர்களே அன்றி இனத்தினால் அல்ல. இலங்கைக்குத் தேவை பௌத்த-ஹிந்து அடையாளம். அதை இந்தியாவில் ஒரு ஹிந்து அரசு ஆட்சியில் இருக்கும்போதுதான் சாதிக்க முடியும். அதற்கான நல்ல தருணம் தற்போது வாய்த்துள்ளது. கலாச்சார ரீதியாக பேச்சு வார்த்தை நடத்தினால் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க முடியும்.

    எனது கேள்வி:
    இலங்கையுடனான சீனா மற்றும் பாகிஸ்தானின் செல்வாக்கை குறைக்க, லட்சக்கணக்கில் அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த ஒரு மனிதாபிமானமற்ற கொடுங்கோலனிடம் மண்டியிட்டு தான் காரியம் சாதித்து கொள்ள வேண்டும் என பதிவாசிரியர் கூற முற்படுகின்றாரா ???

    ஒரு நாட்டில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலை தூக்கினால் அதை அழிக்க முற்படுவது தான் சரியான செயல். அதைத்தான் இலங்கை அரசு செய்த்து. அப்பாவி மக்களைக் கேடையமாகப் பயன்படுத்தி அவர்கள் அழிவுக்குக் காரணமாக இருந்தது விடுதலைப் புலிகள். விடுதலைப்புலிகள் ஒன்றும் புனிதப்பசுக்கள் அல்ல. அவர்களால் அழிக்கப்பட்ட தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் அழிக்கப்பட்ட தமிழர்களை விட அதிகம். 10 வயது 12 வயது பாலகர்களையெல்லாம் போரில் ஈடுபடுத்தித் தங்களுக்கு முன்னால் அவர்களைக் களத்திற்கு அனுப்பிக் கொன்று போட்டவர்கள் விடுதலைப்புலிகள். தங்களைத்தவிர வேறு எந்த அமைப்புகளும் இருக்கக்கூடாது என்று மற்ற தமிழ் அமைப்புத் தலைவர்களையும் தொண்டர்களையும் தீர்த்துக்க்கட்டியவர்கள் விடுதலைப் புலிகள். அப்பேர்பட்ட தீவிரவாதக் குழுவினரை அழித்த நாட்டை கொடுங்கோல் நாடு என்றோ அதன் தலைவரை கொடுங்கோல் தலைவர் என்றோ கூறுவது தவறு.

    மேலும், ராஜபக்சே அரசு இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசு. அங்கே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு தமிழ் தேசியக் கூட்டணியின் தலைமையில் அரசு அமைந்துள்ளது. முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதல்வராக உள்ளார். அவரும் மற்ற தமிழ் தேசிய தலைவர்களும், “தமிநாட்டு அரசியல்வாதிகள் எங்கள் விஷயத்தில் தலையிட்டு அரசியல் செய்யாமல் இருந்தாலே போதும், நாங்கள் நிம்மதியடைவோம்” என்று கூறும் அளவிற்கு இங்கே வாய்ச்சொல் வீரராக வெற்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் திராவிடத் தலைவர்கள். இங்கே உள்ள இவர்கள் அமைதியாக இருந்தாலே அங்கே பிரச்சனை பாதி தீர்ந்துவிடும்.

    எனது கேள்வி:
    மோதி அரசு மீது மக்கள் வைத்துள்ள அதே நம்பிக்கையை உறுதிப் படுத்தும் விதமாக தான், சிங்கள இன வெறியன் ராஜபக்கேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளதா ???

    பதில்:
    நாட்டின் வெளியுறவுக்கொள்கையை மத்திய அரசுதான் தீர்மானிக்கும். முழுமையான தேசத்தின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டுதான் வெளியுறவுக்கொள்கை வரையறுக்கப்படும். அதனுடன் மாநில அரசுகள் ஒத்துழைப்பு தருவதுதான் முறை; மக்களுக்கும் நன்மை பயக்கும். அதைவிடுத்து ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது மக்களுக்கு நன்மை பயக்காது. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர் நலன் காப்பேன் என்று உறுதி கூறியுள்ளார் மோதி. தமிழர்கள் மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களின் நலனும் காப்போம் என்றுதான் தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே பாஜக கூறியுள்ளது. அதை மனதில்கொண்டுதான் தெற்கு ஆசிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதன் முடிவுகள் தெரியாமல் மோதி அவர்களை விமரிசனம் செய்வது தவறு. பொறுத்திருந்து பாருங்கள் என்பதே என்னுடைய ஆலோசனை.

  6. இது தமிழ் ஹிந்துக்களின் மனதில் பேரிடியாகும் ,, இது தமிழ் ஹிந்துக்களின் வாசகன் ஒருவனாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். இது சங்க சேவகனாகவும் வருத்தமாக உள்ளது . உலக தமிழனை காக்கும் ஹிந்து அரசு அமையாதா? சங்க பரிவார் போலியாக தமிழ் ஹிந்துக்களிடம் வேலை செய்ய எங்களை நசுக்க வேண்டாம் ,,,,,,,,,

  7. இன் நேரத்தில் மற்ற ஒன்றையும் குறிபிட விரும்புகிறேன் . இதே சங்க்ஹா பரிவாரின் ஒரு சம்ச்கர் பாரதி அமைப்பாளர் ஒரு பொது நிகழ்ச்சியில் லங்கா தமிழர்களை பற்றி கேக்கும் பொது இதே போன்ற கருத்தை தான் தெரிவித்தார் ,,, இப்படி இருக்கும் பொது யாருக்கு அடிமையாக்க நாம் வேலை செய்யணும் ,, ஆதரிக்கணும் ,,, இரண்டு லக்ஷம் தமிழர்களை கொன்ற கொக்கரிக்கும் தலைவனுக்கு வரவேர்ப்ப? மோடிக்கு ஒட்டு போட்ட பிரச்சாரம் செய்த எங்களுக்கு இதவிட பரிசு வேறு ஒண்டா இந்திய தமிழ் ஹிந்துக்களின் அவமானம் ,,,,,,,,!!!!!!

  8. இது மோடியின் பதவி ஈர்ப்பு விழாவின் மிக பெரிய கரும் புள்ளி ,,,,,,, கரும் புள்ளி ,,, கரும் புள்ளியை அழிக்க மிக பெரிய விலை கொடுக்க வேண்டும் ,,, இவர் என்ன சாதிக்க போகிறார்?

  9. இது இன்னொரு சோனியா காங் சா ? தமிழ் நாடு அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும். அமைதியனா கண்டனம் அழுத்தமாக தெரிவிக்க வேண்டும் … மோடிசிக்கு அழுத்தமாக தெரிவிக்க வேண்டும் ,,, கோபால்ஜி ,,, பொன் ஜி ,,, இதுக்கு என்ன சொல்கிறார்கள் ? தண்ணீர் குட குடிக்க முடியவில்லை ,,, தமிழ் மீனவர்களிடம் எப்படி தமிழ் ஹிந்துக்களுக்க நாங்கள் வேலை செய்ய முடியும் ?கோபால்ஜி ,,, பொன் ஜி தமிழ் ஹிந்துக்களை காக்க வேண்டும் ஜி ? பிறகு நீங்கள் எது வேண்டுமானாலும் சொல்லுங்கள் …

  10. @உமாசங்கர், இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள்:
    1) நட்பு நாடு / எதிரி நாடு என்று இல்லாத நாடு ஏதேனும் உண்டா? அணிசேராக் கொள்கை என்ற ஒன்றே, நட்பு நாடு / எதிரி நாடு என்றிருப்பதை நிரூபிக்கிறது அல்லவா? பாகிஸ்தானும் சிரியாவும் ஈரானும் நட்பு நாடுகள் இல்லையா? இஸ்ரேல் இவர்களுக்கு எதிரி நாடு இல்லையா?

    2) பாகிஸ்தான் ஏன் சிங்களப் படைகளுக்கு போர்த்தடவாளம், ஆயுதங்கள் கொடுத்தது? நட்பு நாடு இலங்கை என்பதாலா? அல்லது இந்தியா நட்புநாடு என்பதாலா? அல்லது ஆயுதங்களால் கொல்லப்படப் போகிறவர்கள் ஹிந்துக்கள் என்பதாலா?

    3) ஏன் பாகிஸ்தான் நாட்டு அதிபரோ, காஷ்மீர முதலமைச்சரோ பதவியேற்பு விழாவுக்கு வரக்கூடாது என்று நீங்கள் கோஷமிடுவதில்லை? கொலை செய்தவர்கள் முகமதியர் என்பதாலா? அல்லது இறந்தவர்கள்/வன்புணர்வுக்கு உள்ளானவர்கள் தமிழர்கள் இல்லை, ஹிந்துக்கள்தானே என்பதாலா?

    4)..

    5)..

    6)…
    (4,5,6 …. கேள்விகள் உங்கள் பதில் வந்தபின் கேட்கப்படும்).

  11. இது தீவிர சங்க்ஹா ஆதரவான எனக்கே மிகவும் கவலை அளிப்பத்தாகவே உள்ளது தயவு செய்து இதை தவிர்க்க vendum

  12. இது மோடி அரசின் முட்டாள்தனமான முடிவு. முதல் முடிவே இவ்வளவு எதிர்ப்பினை சம்பாதிக்கும்போது இன்னும் 5 ஆண்டு காலங்களில் பாராளுமன்றத்தில் அமளி துமளிதான். பதவி ஏற்கும்போது அடுத்த நாட்டுக்காரன் பக்கத்தில் இருந்தால்தான் பதவி செல்லுபடியாகுமா? பதவி ஏற்கும்போது அவனை அழைத்தால்தான் அடுத்து அவனிடம் சமாதனம் பேச வாய்ப்பு கிடைக்குமா? இல்லாவிட்டால் அவனோடு பேசவே முடியாதா? இலங்கை அதிரை விட்டு விட்டு மற்றவர்களை மட்டும் அழைத்தாலும் பிரச்சனை.யாரையும் அழைக்காமல் பதவி ஏற்றுகொண்டால் எந்த பிரச்சனையுமே இல்லையே! சதா சர்வகாலமும் பிரச்சனைகளோடு மட்டுமே வாழ்ந்துவிட்ட மோடிக்கு பிரச்னையை விலை கொடுத்து வாங்குவது அவருக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரியா? மோடியை நான் மலை போல நம்பினேன். ஆனால் அது தூள் தூளாக நொறுங்கிவிட்டது. பிரச்சனைகளை தீர்க்க வந்த நல்ல தலைவர் என்று நினைத்தான் ஆனால் இவர் பிரச்சனைகளின் ஒட்டு மொத்த உருவம் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன்.
    இவர் மீது பதவி ஏற்கும் முன்பே இப்படி ஒரு வெறுப்பு வந்துவிட்டதே! இதற்கு முன் பதவி ஏற்றவர்கள் எல்லாம் இப்படிதான் எல்லோரையும் அழைத்து பதவி ஏற்றார்களா? இதை கேட்டால் தமிழ்நாட்டிலுள்ள பிஜேபி யினர் “ராஜதந்திரம்” என்பார்கள். போங்கையா நீங்களும் உங்க ராஜதந்திரமும். அதை குப்பை கூடையில் போடுங்கள். தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு. தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு.

    சுருக்கமாக நான் சொல்வது என்னவென்றால்:– இலங்கையோடு பேச்சு நடத்தி தமிழர்களுக்கு நல்லது செய்வது என்பது சரி. ஆனால் அதற்காக அவரை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்தால்தான் அவர் பேச்சு வார்த்தைக்கு சம்மதிப்பாரா? இல்லை என்றால் மறுத்து விடுவாரா? மோடிக்கு ஏனிந்த படாடோபத்தின் மீது அளவுகடந்த ஆசை? எளிமையாக பதவி ஏற்றால் உலக மக்கள் இவரை ஏற்று கொள்ள மாட்டார்களா? காந்தி பிறந்த குஜராத் மண்ணில் இவருக்கு எளிமை பிடிக்காதா? என்னமோ போங்கள். அடுத்த 5 வது ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி தான் சந்தேகமே இல்லை. நான் நினைத்ததெல்லாம் தவிடு பொடி. The first impression should be the best impression. ஆனால் முதல் நடவடிக்கையே (பிரதமர் ஆவதற்கு முன்பே) தடாலடி நடவடிக்கையாக உள்ளது. ஆரம்பரமே அலங்கோலம்.

  13. நான் ஒரு தமிழ் வெறியன் அல்ல. அனால் இவரது பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியின் மூலம் இவரது அரசு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லகூடிய அரசு அல்ல என்பது உறுதியாகிவிட்டது. விளையும் பயிர் முளையிலேயே தெரிகிறதே. தமிழ்நாடு நமெக்கென்ன ஒரே ஒரு எம்.பி யைத்தானே தந்ததுஎன்பதால் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிகூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது போலும். தமிழர்கள் என்றால் கிள்ளுகீரையா? மேடைதோறும் இந்திய, இலங்கை மற்றும் உலக தமிழ்மக்கள் நலன் குறித்து நீட்டி முழங்கிய ராதாகிருஷ்ணன் இலங்கை அதிபரை அழைப்பதால் தவறில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார். . மாற்றி பேசினால் கிடைக்கபோகும் மந்திரி பதவி பறி போய்விடுமே. என்ற பயம். என்ன செய்வது?
    ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்வது மடத்தனம். அவரது கடந்த கால வரலாரூகளும் தற்போதைய நடப்புகளும் முரண்பட்டவை. நேரத்திற்கு நேரம் தன நிறத்தை மாற்றும் பச்சோந்தி போல காலத்திற்கேற்ப கருத்தை மாற்றிக்கொள்ளும் மனித உருவிலிருக்கும் பச்சோந்தி அவர்.
    கருணாநிதி பற்றி சொல்லவே தேவை இல்லை. அவரது அயோக்கியதன அரசியலுக்கு கடந்த 9 ஆண்டுகாலமே சாட்சி.

    ஆனால் நாம் நம்பிய நரேந்திர் மோடி நம்மை நட்டாற்றில் விடபோகிறார் என்பதை நாசுக்காக கூறவே ஒரு நரகாசூரனை (ராட்சஷன் ராஜபக்சே) பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

  14. ராஜபட்சேவை அழைத்தது குறித்து தமிழக அரசியல்வாதிகளின் கடும் எதிர்வினையைப் புரிந்து கொள்ள முடிகிறது. வைகோ உருக்கமாக கடிதம் எழுதுகிறார். ஜெயலலிதா “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது” என்கிறார். இந்த எதிர்ப்புகள் தொடர்ந்து இலங்கைத் தமிழர் நலன் குறித்த அரசியல் அழுத்தத்தைத் தக்க வைக்க உதவும் தான். இத்தகைய எதிர்ப்பரசியல் தங்கு தடையின்றி வெளீப்படுவது என்பதே இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு அம்சமும் கூட.

    ஆனால், வரும் நாட்களில், இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையிலேயே ஏதாவது நல்லது நடந்தால், இலங்கை அரசு தமிழர் உரிமைகளையும் நலன்களையும் மதிக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுத்தால் (இது நிச்சயம் நடக்கும் என்று நான் நம்புகிறேன்), அதற்கான ஒரே காரணம் மோதி தலைமையிலான உறுதியான இந்திய அரசு இலங்கை அரசுக்கு விடுக்கும் ராஜரீக எச்சரிக்கைகளாக மட்டுமே இருக்கும்.. அது மத்திய அரசின் உறுதியான வெளியுறவுக் கொள்கையின் சாதனையாக இருக்குமே அன்றி, தமிழக அரசியல்வாதிகளின் கூச்சலாலோ, நாம் டம்ளர் போன்ற உதிரி லும்பன் இயக்கங்களின் ஆரவாரத்தாலோ ஏற்பட்டதாக இருக்காது.

    அத்தகைய நகர்வு எப்போது சாத்தியம்? அதற்கு முதலில் ராஜபட்சேவுடன் புதிய அரசு உட்கார்ந்து பேசக் கூடிய சூழல் உருவாக வேண்டும். பதவியேற்வு விழா அழைப்பு அந்த சூழலை உருவாக்குவதற்கான சிறந்த ராஜதந்திர நடவடிக்கை அன்றி வேறில்லை. சிங்கராஜன் காட்டில் முடிசூட்டிக் கொள்கையில் ஓரத்துப் புதர்களில் வாழும் ஓநாய்களையும் நரிகளையும் கூட அழைத்து வாலைச் சுருட்டிக் கொண்டிருக்க அறிவுறுத்துவது போன்ற செயல் இது.

    எதிர்ப்பாளர்கள் என்னதான் நினைக்கிறார்கள்? ராஜபட்சே என்பது ஒரு நபர் மட்டுமல்ல, ஒரு மாபெரும் அரசியல் குடும்பம். அந்தக் குடும்பமே இலங்கை அரசியலில் அஸ்தமிப்பது வரையோ, (அல்லது சோழர்கள் பாண்டியர்களை முற்றிலுமாக “கருவறுத்தது” போல தமிழ் மாவீரர்களின் கற்பனைப் படை எழுந்து வந்து காடையர்களை கருவறுக்கும் வரையோ) ஒவ்வொரு இடத்திலும் போய் ராஜபட்சே ஒழிக கருப்புக் கொடி காட்டிக் கொண்டிருப்பது என்பது எதிர்ப்பரசியலுக்கு உதவும். ஆனால் இப்போதும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் நலனுக்கு ஒரு வகையிலும் உதவாது.

    தமிழ் ஊடகங்களின் ஓலங்களுக்கு மத்தியில் “பலிக்குமா மோடியின் ராஜதந்திரம்” என்று தினமணி எழுதியுள்ள தலையங்கம் நடுநிலையான பார்வையை வைத்துள்ளது – https://goo.gl/vLdQF5

  15. பாராளுமன்றதிற்குள் நுழையும் முன் படிக்கட்டுக்களை தொட்டு வணங்கினீர்கள். இந்தியா எனது தாய். அதே போல பிஜேபி யும் எனது தாய் என்றீர்கள். உங்கள் மீது இருந்த மதிப்பு மளமளவென உயர்ந்தது. உங்கள் பதவி ஏற்பு விழாவை மிக மிக மிக மிக எளிமையாக நடத்தியிருந்தால் உங்கள் புகழ் வானத்தின் உச்சிக்கே சென்றிருக்குமே! ஊடகங்கள் எல்லாம் வாழ்த்தியிருக்குமே! இப்போது ஆப்கனிஸ்தானில் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் என்ற செய்தி வந்திருக்கு. போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் இந்திய நிலைகள் (POSTS ) தாக்குதல் என்ற செய்தி வருகிறது. அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து அவர்கள்மனம் மகிழ மகிழ சுட சுட leg piece வைத்து பிரியாணி கொடுக்க போகிறீர்களா? ராஜபக்ஷே என்ன நினைப்பான். தமிழ் நாட்டில் உள்ளோர் என்னை தூற்றுகின்றனர். ஆனால் மோடியை பாருங்கள் எனக்கு ராஜ உபசாரம் செய்கிறார். அவர் இருக்கும் வரை என்னை ஒன்றும் ஆட்ட முடியாது அசைக்க முடியாது என்று நினைப்பார். அதனால் தமிழ் நாட்டு மக்களுக்கு மோடி மீது ஒரு வெறுப்பு உண்டாகாதா?

    தமிழ்நாட்டு பிஜேபி தலைவர்களுக்கு கட்சியை வளர்க்க ஒரு துப்பு இல்லை. நடந்து முடிந்த தேர்தலில் பார்த்தோமே. இவர்கள் எங்கு பிரச்சாம் செய்தார்கள் என்றே தெரியவில்லை. எங்க ஒர்ருக்கு எந்த பிஜேபி தலைவரும் வரவில்லை. (ஆனால் நிற்பது பிஜேபி வேட்பாளர்) இவர்களுக்கெல்லாம் டிவி நிகழ்ச்சியில் விவாதம் செய்ய கூப்பிட்டால் அலைந்துகொண்டு ஓடுவார்கள். எங்க ஊர் பிரச்சாரத்தின்போது (விஜயகாந்த் வந்தபோது) மற்ற கட்சி கொடிகள் எங்கும் இருந்தன.. ஆனால் பிஜேபி கொடி 1 அல்லது 2 இருந்தது ரொம்ப கேவலமாக இருந்தது.
    மத்த்டியில் ஆட்சி வந்துள்ளதே. அதை வைத்து தமிழ் நாட்டில் கட்சி அப்படி இப்படி எப்படியாவது வளரும் என்று நினைத்தால் முதலுக்கே மோசம் வந்துவிடும் போலிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களுக்கு எதிராக ராஜபக்ஷேவை அழைத்திருப்பது கட்சிக்கு மூடுவிழா நடத்தவேண்டியதுதான் பாக்கி.

  16. ஹானஸ்ட் மென் நீங்களுமா, நம்பவே முடியவில்லை.விவேஹம் ஒன்றே மூலதனம்.பல ஆண்டுஹளுக்கு பிறகு பிஜேபி பெரும்பான்மைபெற்று நம் எல்லோருடைய நல்ல நேரம் திரு மோடி அவர்கள் பிரதம மந்திரியாக பதவியேற்க உள்ளார் திரு ஹர்ஷ் அவர்களின் கருத்தினை முழுவதுமாக ஏற்கிறேன் .உமாஷங்கர் கேள்விகளுக்கு ஜெயகுமார் அவர்களும், ஹர்ஷ் அவர்களும் நல்ல விளக்கங்கள் அளித்து உள்ளனர் .வெங்கடேஷ் ,பாலமுருகன் உண்மையான சங்கத்தொண்டர்களாக இருப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. நம் முன்னோரான சாணக்கியன் கற்றுக்கொடுத்த ராஜதந்திரங்களை கடைப்பிடிப்பது விவேகமான செயல் என்று கருதுகிறேன் திரு மோடிக்கோ , பா ஜ க விற்கோ அரசியல் , ஆலோசனை சொல்ல …………மன்னிக்கவும் ஒரு பயலுக்கும் துளிக்கூட அருகதை கிடையாது .சிறந்த அறிவுரை சொல்ல பா ஜ க வில் டஜன் கணக்கில் ஆட்கள் உள்ளனர்.திருவள்ளுவர் கூற்றுக் கினங்க………. மெய்ப்பொருள் காண்பதற்கு தெளிவு பெறுமாறு அனைத்து நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன் .

  17. காங்கிரஸ் காரர்களின் அரசு தீய சக்தி என்பது வெள்ளிடைமலை. வழக்கமாக இரண்டு வருடம் மட்டுமே விடுதலைப்புலிகளுக்கு தடை விதித்து ஒரு உத்தரவு பிறப்பிப்பது வழக்கம். ஆனால் ஆட்சியை விட்டு விலகுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு ஐந்து வருடம் தடை பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன ? காங்கிரஸ் காரனின் இந்த அயோக்கியத்தனமான சதிக்கு நமது வெளியுறவு துறையை சேர்ந்த சில ஐ எப் எஸ் அதிகாரிகள் உடந்தை என்ற சந்தேகம் வருகிறது.மோடி பதவி ஏற்றபின்னர் இந்த உத்தரவினை உடன் மறுபரிசீலனை செய்யவேண்டும். தீய எண்ணத்துடன் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. இராஜீவினுடைய கொலை நடந்த அந்த காலகட்டத்தில் கூட , ஐந்து வருடங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தடை நீடிக்கப்பட்டு வந்தது. எனவே இதில் சொக்கத்தங்கம் சோனியாவின் மோசடி விளையாட்டும், அயலுறவுத்துறை ஐ எப் எஸ் அதிகாரிகளுடைய திருவிளையாடலும் இணைந்துள்ளது. அயலுறவுத் துறையை உடன் களையெடுப்பு நடத்தி தீய சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும். மோடி நல்ல ஆட்சி தருவார் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. தமிழன் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொள்ளவேண்டாம்.

    நல்லுறவு தேவை தான். அதற்காக பதவி ஏற்பு விழாவுக்கு இந்த படுபாதகன் இராஜபக்ஷேவை அழைப்பதா ? கொலைகாரி சோனியாவையும், இலங்கை தமிழன் தலையில் கொத்துஎரி குண்டுகளை டன்கணக்கில் வீச துணைபுரிந்த சோனியாவின் சொம்புகளையும் நீதி விசாரணை நடத்தி தூக்கில் போடுவோம். பதவி ஏற்பில் துவக்கத்திலேயே அபசகுனம் போல கொலைகாரனுக்கு அழைப்பிதழா ? ஜெயலலிதாவுக்கு மேலும் செல்வாக்கு பெருக பாஜக துணைபோகக் கூடாது.

    இந்த அதிகாரிகள் வெளியுறவில் மோடியை ஏமாற்றி சிக்கலில் மாட்டி விடுவார்களோ என்ற அச்சம் தமிழகத்தில் நிலவுகிறது. பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தானி, இலங்கை இரு நாட்டு அதிபர்களையும் அழைத்தது தேவை இல்லாத வேலை. அதிலும் நமது வீரர்களின் தலையை வெட்டி எடுத்து சென்ற பாகிஸ்தானியர்கள் அந்த தலைகளையாவது திரும்ப ஒப்படைத்தார்களா ? மன்னிப்பு கேட்டார்களா ?

    சிங்களக் காடையர்கள் இன அழிப்பு செய்து நமது தமிழினத்தை அதுவும் அப்பாவி சிவிலியன் தமிழரை கொன்ற வாயிற்று எரிச்சல் இன்னமும் நீங்க வில்லை.

  18. தமிழ் ஹிந்துவிற்கு , பெரும்பாலான மக்கள் இந்த வலைத்தளத்தை பார்ப்பார்களா எனபது சந்தேகமே.மிக அருமையாக ,தெளிவான கருத்துக்கள் பலரிடமும் போய்ச்சேர ஒரு தினசரி நாளிழதை ஆரம்பித்தால் என்ன ? மேலும் தி ஹிந்து ஆங்கிலப்பத்திரிக்கை யின் தலையங்கம் ,மற்ற முரண்பாடான கருத்துக்களுக்கும் அன்றைய தினமே தக்க பதில் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . தங்களின் பதில்கண்டு………..

  19. நவாஜ் ஷெரிப் பதவியேற்ப்பு விழாவுக்கு மன்மோகன் போகக் கூடாது என்று சொன்ன மோடியா?

  20. சார்க் நாட்டு தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி இருக்கும் செயலை செய்தவர் யாராயிருந்தாலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இந்த இரண்டு நாடுகளுக்கும் அதிபர் அல்லது பிரதமராக இருப்போரை அழைப்புப் பத்திரிகை வைத்து அழைத்திருப்பது வருந்த மட்டுமே தக்கது. இதற்கு முன்னர் இப்படி முந்திய பிரதமர்களின் பதவி ஏற்புக்கு அழைக்கவில்லையே – இப்போது திடீரென்று ஏன் இவர்களை அழைக்கவேண்டும் என்பது நமது கேள்வி அல்ல.

    உத்தரப்பிரதேசத்தில் மத வன்முறையாளர்களின் செயலால் சுமார் 100- பேர் கொலைசெய்யப்பட்டனர். அதன் விளைவாக அந்த படுகொலைகளுக்கு காரணமான அமைச்சர்களும், அவரது சமாஜ்வாதி கட்சியையும் உ பி மாநில மக்கள் தூக்கி வீசிவிட்டனர். 80- இடத்தில் 73 இடங்களில் பாஜக அணி வென்றது. தங்கள் கோபத்தினை தேர்தலில் காட்டினர்.

    ஆனால் இலங்கையில் அதாவது ஸ்ரீலங்காவில் 1,50,000 – சிவிலியன் தமிழர்கள் மீது கொத்து எரிகுண்டுகளைப் போட்டு கொன்றவன் கொடுங்கோலன் ராஜபக்ஷே. மேலும் இன்னமும் காநோதவர்கள் பட்டியல் என்று லட்சக்கணக்கில் உள்ளது என்பதே உண்மை. அவர்களை எந்த கணக்கில் சேர்ப்பது ? அங்கு இறந்த அப்பாவிகள் இந்தியத் தமிழர்களின் இரத்த உறவுகள். நிலைமை இப்படி இருக்க சார்க் நாட்டு அதிபர்களை அழைக்கிறோம் என்ற பெயரில் ராஜபக்சேவை அழைப்பது தேவை இல்லாத வேலை. இப்போது அவர்கள் அனைவரையும் அழைக்க ஒரு அவசியமும் / அல்லது அத்தியாவசியமும் இல்லை.

    நமது தளத்தில் மறுமொழி எழுதும் ஒரு அன்பர் தனது கடிதத்தில் ஏதோ வேலை வெட்டி இல்லாமல் , பாஜக வுக்கு ஆலோசனை சொல்லவும், புத்திமதி சொல்லவும் நம் வாசகர்கள் அலைவது போல கருத்து தெரிவித்திருக்கிறார். எங்கள் சொந்தக்காரர்கள் அப்பா இறந்தவர்கள் லட்சக் கணக்கானோரும். அதற்கு பழிக்கு பழி வாங்கவேண்டும் என்று நாங்கள் துடிக்கவில்லை. ஆனால் எங்களை அவமரியாதை செய்வது போல எங்கள் இரத்தபந்தத்தை கொன்றவனை அரச மரியாதையுடன் அழைத்து விருந்து கொடுக்காதே என்பது தான். அதற்கு இப்போது என்ன தேவை வந்தது ? இலங்கையில் இன்னமும் தமிழர்கள் மீது கொடுமைகள் தொடர்கின்றன. பதவிக்கு வந்து காங்கிரசின் இடத்தில் அமர்ந்து விட்டதால்,காங்கிரசுக்கும் , பாஜகவுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்ற தோற்றத்தைக் கூட உருவாக்கிவிடாதீர்கள்.

    மீண்டும் சொல்கிறேன், இந்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் அதாவது சிவசங்கர மேனனில் ஆரம்பித்து , இப்போது சார்க் என்ற பெயரில் , இன அழிப்பு படுகொலை செய்தவனுடன் உறவு கொள்ள துடிப்போரை கடவுளும் ,காலமும், ,மன்னிக்கமாட்டார்கள். இலங்கையில் தமிழனின் நிலங்களும், வீடுகளும் பறிமுதல் செய்யப்பட்டு சிங்களக்காடையர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. அங்குள்ள இந்துக்களின் கோயில்கள் ஏராளம் இடிக்கப்பட்டு புத்த விகாரங்களாக மாற்றப்பட்டுள்ளன.

    தமிழக பாஜகவில் உள்ள பொன்னாரில் இருந்து, இல கணேசன் மற்றும் இதர தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மிக கசப்பான சூழலில் , இந்த அழைப்பை அனுப்பிய மத்திய அரசின் அதிகாரிகளை உடனே நடவடிக்கை எடுத்து வெளியுறவுத் துறையில் இருந்து மாற்றவேண்டும். இல்லை என்றால் , தமிழகம் உங்களை மன்னிக்காது. திரு நரேந்திர மோடிக்கு கெட்ட பெயரை உருவாக்கி கொடுக்காதீர்கள்.

  21. ‘ நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தர உள்ள இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை சமாளிக்க அவர் இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சரான விக்னேஸ்வரனை தம்முடன் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

    ஆனால் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்க விக்னேஸ்வரன் மறுத்து விட்டார். இது குறித்து விக்னேஸ்வரன் ராஜபக்சேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய பிரதமராகப் பதவியேற்கப்போகும் நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தாமதமாக கடிதம் அனுப்பியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

    இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி பெற்ற வெற்றி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பபடவேண்டியது என கூறியுள்ள அவர், ஆனால் அவருடைய பதவியேற்பு நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் இணைந்து கலந்து கொள்ள இயலாது என தெளிவுபடுத்தியுள்ளார். அவ்வாறு தாம் கலந்து கொண்டால் இலங்கை அரசுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது போன்ற தோற்றம் உருவாகிவிடும் என கூறியுள்ளார்.

    ஆனால் வடக்கு மாகாணத்தின் மக்கள் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் ராணுவத்தினரால் பதட்டத்துடனே வாழ்ந்து வருவதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘- இது தான் இன்றைய பத்திரிகை செய்தி. இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்துவரும் மாநில முதல்வர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் அந்த நாட்டு அதிபருடன் இந்தியாவுக்கு வர மறுக்கிறார். ஏனெனில் தமிழர்கள் வாழும் வட பகுதியில் இலங்கை ராணுவம் தேவை இல்லாமல் நிலை கொண்டுள்ளது. நமது இந்திய அரசின் வெளியுறவுத்துறை ஒரு ஞான சூன்யம் என்பது தெரிகிறதா ?

    ஒரு பயலுக்கும் அருகதை கிடையாது என்று சொல்லவும் நமக்கு என்ன அருகதை இருக்கிறதோ என்று நம்மை நாமே சீர்தூக்கி பார்த்துக்கொள்வோம். இலங்கை அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு , நமது வெளியுறவு துறையின் மூடத்தனத்தையும், காங்கிரஸ் ஆட்சி மாறியும், காங்கிரசின் ஆதரவு கயவர்களின் திருவிளையாடல் வெளியுறவு துறையில் இன்னமும் உள்ளது என்பதையுமே தெளிவாக காட்டுகிறது.

  22. இது குறித்து இரண்டு பக்கமும் மாறி மாறி பேசிக்கொண்டே இருக்கலாம்.

    ஆனால் ஒன்று நிச்சயம். இனிமேல் இலங்கையை நம்மால் எந்தவிதத்திலும் நெருக்கவோ ஜனநாயக ரீதியில் கூட அழுத்தம் தரவோ இயலாது என்பதுதான் வெளிப்படை. காரணம் இலங்கையில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபாவாடை விரிக்கப்பட்டுவிட்டது. இனி இந்தியாவால் இலங்கைக்கு பெரிதாக எந்த பயனும் இல்லை, அவர்களும் பிழைப்புக்கு இந்தியாவை நம்பி இல்லை என்பதே நிதர்சனம். நாம் இலங்கையை நிர்ப்பந்திப்பதைவிட இலங்கை சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி நம்மை நிர்ப்பந்தித்ததே தியாகி மன்மோஹனார் ஆட்சிக்காலத்தில் நடந்தது. அதுவே தொடரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.

    மேலும் ஒரு கேரள மீனவன் (ஊடக மொழியில் ‘இந்திய மீனவர்கள்’) சுட்டுக்கொல்லப்பட்டான் என்றவுடனே இரண்டு இந்திய ஊடகங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் இத்தாலி கடற்படை காலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை, தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கில் இந்திய (ஊடக மொழியில் ‘தமிழக மீனவர்கள்’) மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும்போது இந்தியா கிழித்த கிழிப்போடு ஒப்பிட்டுக்கொண்டால் தமிழக மீனவர்களுக்கே இந்தியாவில் நாதியில்லாமல் இருக்கும்போது இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியா ஏதும் கிழித்துவிடாது என்பது தெள்ளத்தெளிவு.

    அப்படியே எட்டாவது பேரதிசயமாக மோடி அரசு ராஜபக்சே-வை நிர்ப்பந்தப்படுத்த முயன்றால் மோதியை அடக்கி வைக்க சமீபத்திய எழும்பூர் நிகழ்வுகள் தொடரக்கூடும். இலங்கையிலும் பாகிஸ்தானிய தூதரகம் இருக்கிறது, கூடவே ஒத்துழைக்க இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள்.

  23. Honest Man அவர்களின் ஆதங்கம் மிக நியாயமானதே.. நாட்டின் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்க பட்டது இந்நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக தான். அதை விட்டு பதவி ஏற்பை இவ்வளவு விமர்சையாக கொண்டாடுகிறார் என்றால் எதை சொல்வது. ஒரு வேலை, தன்னை மனதில் பெரிய அசோக சக்கரவர்த்தி என்று நினைத்து கொண்டார் போல. சேவை மனப்பான்மை உள்ளவர் செய்யும் செயல் அல்ல இது.

    மோடியின் இத்தகு செயலை பற்றி ஒரு இணையத்தில் படித்தது தான் நினைவிற்கு வருகிறது “தனது முடிசூட்டு விழாவுக்கு குறுநில மன்னர்களை அழைக்கும் சக்ரவர்த்தியைப் போல எண்ணிக்கொண்டு தெற்காசிய நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் மோடி. இதனைக் காணாததைக் கண்ட அற்பனுக்குரிய நடத்தை என்றும் கூறலாம். “

  24. //ஒரு நாட்டில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலை தூக்கினால் அதை அழிக்க முற்படுவது தான் சரியான செயல். அதைத்தான் இலங்கை அரசு செய்த்து. அப்பாவி மக்களைக் கேடையமாகப் பயன்படுத்தி அவர்கள் அழிவுக்குக் காரணமாக இருந்தது விடுதலைப் புலிகள்.//

    ஹர்ஷ்… நீங்கள் என்ன அரசியல் தரகன் சுப்பிரமணியன் சாமியின் அடுத்த அரசியல் வாரிசாக வர முயற்சி செய்கிறீர்களா.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் எப்படி உங்களால் இது போன்று நா கூசாமல் பொய் கூற முடிகின்றது. விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம்மென்றால் லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலிய, கனடா, நோர்வே போன்ற வல்லரசு நாடுகளில் ஏன் இன்று வரை விடுதலை புலிகள் அமைபிற்கு தடை விதிக்க வில்லை. ராஜபட்சே எவ்வளவோ மன்றாடியும் மேற்சொன்ன நாடுகள் அனைத்தும் தடை விதிக்க மறுத்து விட்டன.

    //10 வயது 12 வயது பாலகர்களையெல்லாம் போரில் ஈடுபடுத்தித் தங்களுக்கு முன்னால் அவர்களைக் களத்திற்கு அனுப்பிக் கொன்று போட்டவர்கள் விடுதலைப்புலிகள்.//

    நீங்கள் தான் நேரில் நின்று பார்த்தீர்களா.. போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் எந்த சர்வதேச ஊடகமும் அங்கு அனுமதிக்க படவில்லை. அனைத்துமே ராஜபட்சே என்னும் மிருகத்தால் உயிர் பயம் காட்டி விரட்டி அடிக்கபட்டன. செஞ்சிலுவை சங்கம் போன்ற தன்னார்வ அமைப்புகள் கூட அங்கில்லை. இளம் சிறார்களை போரில் ஈடுபடுத்தியது குற்றம் தான். ஆனால் நீங்கள் கூறுவது போல் அவர்களை களத்திற்கு அனுப்பி சோதனை எல்லாம் நடத்தவில்லை. இது குற்றம் என்றால் செஞ்சோலை மீது இலங்கை ராணுவம் ஏவுகணையை வீசி 66 குழந்தைகளை கபளீகரம் செய்த இலங்கை ராணுவத்தை என்ன பண்ணலாம் கூறுங்கள்.. அவர்களின் வீரத்தை பாராட்டி நம்முடைய NCERT சமுக அறிவியல் பாட நூலில் அவர்களை பற்றி ஒரு பாடம் வைத்து விடலாமா.

    //நாட்டின் வெளியுறவுக்கொள்கையை மத்திய அரசுதான் தீர்மானிக்கும். முழுமையான தேசத்தின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டுதான் வெளியுறவுக்கொள்கை வரையறுக்கப்படும்//

    ஐயோ.. அப்படியா.. ரொம்ப கஷ்டமாக இருந்தால் சொல்லி விடுங்கள்.. எங்கள் தமிழ்நாட்டிற்க்கு என்று தனியாக ஒரு வெளிஉறவு அமைச்சகத்தை ஐ.நா மட்டும் உலக நாடுகளின் அங்கிகாரத்தோடு நாங்கள் உருவாக்கி கொள்கிறோம். உலகில் இருக்கும் 10 கோடி தமிழர்களின் இன்னல்களுக்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் அடிகடி உங்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் காலில் விழாமல் இருக்கும் துர்பாக்கிய நிலையாவது இனி ஏற்படாமல் இருக்கும்..

    மற்றபடி உங்களின் இந்த சாணக்கிய தனம் என்னும் சொற்பயனை எல்லாம் ராஜப்ட்சேவை தக்காட்டுவதற்க்கு வைத்து கொள்ளுங்கள்….தமிழர்களை ஏமாற்றுவதற்கு அல்ல..

  25. தமிழக சட்டசபை இலங்கையில்.நிகழ்த்தப்பட்ட படுகொலை மற்றும் இன அழிப்பு தொடர்பாக கடும் அதிருப்தியையும் , மனவேதனையையும் தெரிவித்து , போர்க்குற்ற விசாரணை செய்யப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு முன்னரே அனுப்பி உள்ளது. தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதையும், இந்திய அரசியல் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்டசபை இயற்றிய தீர்மானத்தை புறக்கணித்து, 9- கோடி தமிழர்களின் இதய துடிப்பினை அலட்சியப்படுத்தி, ஒரு வெளியுறவுத்துறை அதிகாரி செயல்படுகிறார் என்பதை பாஜகவினர் அலட்சியப்படுத்தக் கூடாது. இராஜபக்ஷேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தமிழகத் தமிழர்களுக்கு ஒரு பெரிய அவமானமாகவே கருதுகிறோம். பாஜக சிந்திக்குமா ?

  26. விடுதலிப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான். அவர்கள் ஈழத்தலைவர் அமிர்தலிங்கம் போன்ற அமைதிவழி தலைவர்களையும் கொன்றிருக்கிறார்கள். இராஜீவ் காந்தியையும், அங்கு உடன் இருந்த 18 பேரையும் படுகொலை செய்த பாவிகள். தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டம் திசை தவறிப் போனதற்கு விடுதலைப் புலிகளின் தவறான கொள்கைகளும் செயல்களுமே காரணம்.

    சிங்களக்காடையர்களின் இராணுவம் செய்த அட்டூழியங்களையும் , இன அழிப்பையும் காரணம் காட்டி , விடுதலைப் புலிகளின் தவறுகளை நியாயப்படுத்த முடியாது. விடுதலைப் புலிகள் சிங்கள போலிசு மற்றும் இராணுவத்துக்கு எதிராக போராடியதை யாரும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வழிக்கு வராத எத்தனையோ அமைதி வழி தலைவர்களை படுகொலை செய்துள்ளனர். தாயுமானவனின் கருத்து ஏற்கத்தக்கதல்ல.

  27. //ஹர்ஷ்… நீங்கள் என்ன அரசியல் தரகன் சுப்பிரமணியன் சாமியின் அடுத்த அரசியல் வாரிசாக வர முயற்சி செய்கிறீர்களா.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் எப்படி உங்களால் இது போன்று நா கூசாமல் பொய் கூற முடிகின்றது. விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம்மென்றால் லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலிய, கனடா, நோர்வே போன்ற வல்லரசு நாடுகளில் ஏன் இன்று வரை விடுதலை புலிகள் அமைபிற்கு தடை விதிக்க வில்லை. ராஜபட்சே எவ்வளவோ மன்றாடியும் மேற்சொன்ன நாடுகள் அனைத்தும் தடை விதிக்க மறுத்து விட்டன.//

    விடுதலை புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று பெரும்பான்மையான உலக நாடுகள் தடை விதித்துள்ளன. இலங்கை, இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன், கனடா ஆகிய நாடுகள் விடுதலை புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளன.

    Proscription as a terrorist group: –

    32 countries have listed the LTTE as a terrorist organisation. As of January 2009, these include:

    • India (since 1992)
    • United States (designated as Foreign Terrorist Organizations by the Department of State since 8 October 1997. Named as a Specially Designated Global Terrorist (SDGT) since 2 November 2001)
    • United Kingdom (designated a Proscribed Terrorist Group under the Terrorism Act 2000 by the Home Secretarysince 2000)
    • European Union (since 2006; 27 countries)
    • Canada (since 2006) Canada does not grant residency to LTTE members on the grounds that they have participated in crimes against humanity.
    • Sri Lanka (from January 1998 to 4 September 2002, and again from 7 January 2009)
    The first country to ban the LTTE was its former ally, India. The Indian change of policy came gradually, starting with the IPKF-LTTE conflict, and culminating with the assassination of Rajiv Gandhi. India opposes the new state Tamil Eelam that LTTE wants to establish, saying that it would lead to Tamil Nadu’s separation from India though the leaders of Tamil Nadu are opposing it. Sri Lanka itself lifted the ban on the LTTE before signing the ceasefire agreement in 2002. This was a prerequisite set by the LTTE for the signing of the agreement. Indian Government extended the ban on LTTE considering their strong anti-India posture and threat to the security to Indian nationals.

    The European Union banned LTTE as a terrorist organisation on 17 May 2006. In a statement, the European Parilament said that the LTTE did not represent all the Tamils and called on it to “allow for political pluralism and alternate democratic voices in the northern and eastern parts of Sri Lanka”.

    (https://en.wikipedia.org/wiki/Liberation_Tigers_of_Tamil_Eelam )

  28. //நீங்கள் தான் நேரில் நின்று பார்த்தீர்களா.. போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் எந்த சர்வதேச ஊடகமும் அங்கு அனுமதிக்க படவில்லை. அனைத்துமே ராஜபட்சே என்னும் மிருகத்தால் உயிர் பயம் காட்டி விரட்டி அடிக்கபட்டன. செஞ்சிலுவை சங்கம் போன்ற தன்னார்வ அமைப்புகள் கூட அங்கில்லை. இளம் சிறார்களை போரில் ஈடுபடுத்தியது குற்றம் தான். ஆனால் நீங்கள் கூறுவது போல் அவர்களை களத்திற்கு அனுப்பி சோதனை எல்லாம் நடத்தவில்லை. இது குற்றம் என்றால் செஞ்சோலை மீது இலங்கை ராணுவம் ஏவுகணையை வீசி 66 குழந்தைகளை கபளீகரம் செய்த இலங்கை ராணுவத்தை என்ன பண்ணலாம் கூறுங்கள்.. அவர்களின் வீரத்தை பாராட்டி நம்முடைய NCERT சமுக அறிவியல் பாட நூலில் அவர்களை பற்றி ஒரு பாடம் வைத்து விடலாமா.//

    அப்பாவிப் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி அவர்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மடிந்துபோக்க் காரணமானவர்கள் விடுதலை புலிகள். அவர்களிடமிருந்து தப்ப முயன்றவர்களையும் ஈவு இரக்மின்றி சுட்டுத் தள்ளியவர்கள் விடுதலை புலிகள். இது உலகமறிந்த ரகசியம். இவ்வுண்மையை மேற்கத்திய மனித உரிமை அமைப்புகளே பல அறிக்கைகளில் வெளியிட்டுள்ளன.

    இதோ ஒரு சாம்பிள்: – One hundred thousand civilians held hostage by Tamil Tiger rebels on a stretch of land just twice the size of New York’s Central Park have come under repeated indiscriminate shelling by the Sri Lankan armed forces. The civilians are trapped in a government-declared “no-fire zone” in the northern Vanni region. The Tamil Tigers have fired upon civilians who have tried to escape the area. (https://www.huffingtonpost.com/human-rights-watch/tamil-tigers-use-civilian_b_187704.html )

    அதோடு மட்டுமல்லாமல், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) ஆகியவற்றின் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சபாரத்தினம், பத்மநாபா, சுபத்திரன் தம்பிராஜா போன்றவர்களையும் அவர்களின் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் கொன்றவர்கள் விடுதலை புலிகள்.

    // ஐயோ.. அப்படியா.. ரொம்ப கஷ்டமாக இருந்தால் சொல்லி விடுங்கள்.. எங்கள் தமிழ்நாட்டிற்க்கு என்று தனியாக ஒரு வெளிஉறவு அமைச்சகத்தை ஐ.நா மட்டும் உலக நாடுகளின் அங்கிகாரத்தோடு நாங்கள் உருவாக்கி கொள்கிறோம். உலகில் இருக்கும் 10 கோடி தமிழர்களின் இன்னல்களுக்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் அடிகடி உங்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் காலில் விழாமல் இருக்கும் துர்பாக்கிய நிலையாவது இனி ஏற்படாமல் இருக்கும்..//

    உண்மையையும் யதார்த்த நிலையையும் புரிந்துகொள்ளாமல் உளறாதீர்கள். இங்கே தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தங்களுடைய அரசியல் லாபத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாய்ச்சொல் வீர்ரின் பேச்சுக்களை நம்புவதால்தான் உங்களுக்கு இந்த நிலை. பிரிவினைவாதிகளின் பேச்சைக் கேட்டு உங்களுடைய வாழ்க்கையை அழித்துக்கொள்ளாமல் திருந்துகிற வழியைப் பாருங்கள்.

    //மற்றபடி உங்களின் இந்த சாணக்கிய தனம் என்னும் சொற்பயனை எல்லாம் ராஜப்ட்சேவை தக்காட்டுவதற்க்கு வைத்து கொள்ளுங்கள்….தமிழர்களை ஏமாற்றுவதற்கு அல்ல..//

    யார் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்…. தமிழகத்திலிருக்கும் திராவிடக் கட்சிகளா இல்லை இந்திய மத்திய அரசா என்பது போகப் போக உங்களுக்குத் தெரியும்.

  29. //ஆலோசனை சொல்ல …………மன்னிக்கவும் ஒரு பயலுக்கும் துளிக்கூட அருகதை கிடையாது .சிறந்த அறிவுரை சொல்ல பா ஜ க வில் டஜன் கணக்கில் ஆட்கள் உள்ளனர்//

    ஹலோ ஜானவிபுத்திரன்!

    டஜன் கணக்கில் இருக்கும் ஆட்கள் ஒருவர் கூட வாய் திறக்க மாட்டார்கள். அவர்களுள் பெருந்தலைவர்கள் எவராலும் மோடி ஆட்சியைப்பிடிக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் பதவி சுகம் காணக் காத்திருக்கிறார்கள். மோடியை விமர்சித்தால் அச்சுகம் கிடைக்காது. எனவே அமைதி காப்பார்கள்.

    துளிகூட அருகதை இல்லாத பயலகள்தான் சொல்லவேண்டும் இப்படி:

    //ஆட்சிக்கு வந்தது இந்திய மக்கள் எதிர்ப்பார்ப்புகளில்தான். அவற்றை பூர்த்தி செய்ய வேண்டிய மோடி காரியத்தை விரைவில் ஆரம்பிக்கத்தான் பார்க்கவேண்டும். வெறும் பத‌வி ஏற்பைக்கூட கருநாதித்தனமாக, நடிகரகளையும் தீவிரவாத்த்தால் இந்தியாவைத் துண்டாட நினைக்கும் பாகிஸ்தான் பிரதமரையும் தமிழர்களால் வெறுக்கப்படும் இன்னொரு முத்ல்வரையும் அழைத்து டாம்பீகமாகத் தன்னைக்காட்டிக்கொண்டால், மக்கள் மோடியைத் தூக்கியெறியும் காலம் வரும்//

    என்று அந்தப்பயல்களதான் எச்சரிக்கை பண்ண‌ வேண்டும். BJP பெருந்தலைவர்களுள் எவரேனும் சொன்னால், உங்களைப்போல், …’நீங்களுமா?” என்று கேட்ட பலர் வருவார்கள்.

  30. //ஐயாறப்பன் on May 23, 2014 at 7:27 pm ஆனால் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்க விக்னேஸ்வரன் மறுத்து விட்டார்.//
    முதலில் இவர் விக்னேஸ்வரனை இலங்கையில் இவர்கள் ஆதரவாளர்கள் எப்படி பிரசாரபடுத்துகி றார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
    இந்திய மாபெரும் தலைவன் மோடியும் தாடி வைத்திருக்கிறார் -எங்கள் விக்னேஸ்வரனும் தாடிவைத்திருக்கிறார்
    மோடியும் பொட்டு வைத்திருக்கிறார் -விக்னேஸ்வரன் பொட்டு வைத்திருக்கிறார்.
    மோடியும் தோளில் துணி அணிந்து இருக்கிறார் -விக்னேஸ்வரன் தோளில் துணி அணிந்து இருக்கிறார்.ஆகவே இந்தியாவின் அதி உயர்ந்த உயர்ந்த மோடி மாதிரி தான் எங்களது விக்னேஸ்வரனும் என்று கூறி பெருமை அடைகிறார்கள்.

    இந்தியாவிவின் தமிழ் பிரதேசத்தில் எவ்வளவு கேவலமான பொய்கள் உலாவருகின்றது என்பதிற்கு ஒரு எடுத்து காட்டு.
    தாயுமானவன் on May 24, 2014 at 1:56 am
    விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம்மென்றால் லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலிய, கனடா, நோர்வே போன்ற வல்லரசு நாடுகளில் ஏன் இன்று வரை விடுதலை புலிகள் அமைபிற்கு தடை விதிக்க வில்லை. ராஜபட்சே எவ்வளவோ மன்றாடியும் மேற்சொன்ன நாடுகள் அனைத்தும் தடை விதிக்க மறுத்து விட்டன.

  31. @Dheeran
    Kudos. Fantastic response to Shri தாயுமானவன் and exposing his lies. Tamil Tigers are banned in lot of countries. India not only should ban them for 5 years but for life. I have read the ground situation in post war Sri Lanka ( Thuklak magazine). Tamils of Sri Lanka have had enough of this war. They do not want any help from these Tamil politicians. Keep out of our affairs, thank you seems to be their message. They very well know that these immoral, rascals have axes to grind. Any peace in Sri Lanka is anathema to these corrupt politicians. I believe now Pakistan and Sri Lanka are releasing INDIAN FISHERMEN, thanks to Modi Ji ( NOT TAMIL FISHERMEN as some people would like to call them). You are an Indian first, not a Tamil first.

  32. மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைவதுபோல தமிழ்நாட்டிலும் பா.ஜ.க. அரசு விரைவில் அமையவேண்டும். இந்த கருணாநிதி என்ற ஊழல் பெருச்சாளியும், ஜெயலலிதா என்ற அகந்தை உருவான ஹிரண்யகசிபுவும் தமிழ்நாட்டின் முதல்வர் பதவியை மாற்றி மாற்றி அலங்கோலப் படுத்தியது நிற்கும் என்று கனவு காண்கிறோம், ஆனால் ராஜபக்சேயையும், ஷெரிபையும் அழைத்து மக்களிடம் இருந்து விலகி நிற்கிறார் மோடி.

    ராஜபக்சே கொடுங்கோலன், போர்க்குற்றவாளி. ராஜீவைக் கொன்ற பிரபாகரன் கூட்டாளிகள் குற்றவாளிகள் என்றால், லட்சக் கணக்கான அப்பாவி மக்களை வானத்தில் இருந்து குண்டு வீசிக் கொன்ற ராஜபக்சே லட்சக்கணக்கினாலன குற்றவாளி. அவனை வரவேற்பது தர்மத்துக்கே அடுக்காத செயல்.

    ஈழத் தமிழர்களின் போராட்டம் சுதந்திரப் போராட்டம். வரலாறு தெரியாமல் அல்லது வரலாற்றை மறைத்துவிட்டு அவர்களைத் தீவிரவாதிகள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். செல்வா – பண்டாரநாயக ஒப்பந்தத்தில் இருந்து, வெலிக்கடைச சிறைப் படுகொலை உள்பட இலங்கை-ஈழ வரலாற்றைப் பற்றி யாராவது இப்படிப்பட்டவர்களுக்குப் பாடம் எடுத்தால் தேவலை. தாயுமானவன் கருத்துக்கள் சரியானவையே. ஆனால் தமிழ்நாட்டுக்கென்று வெளியுறவுத் துறை என்பதல்லாம் சரியல்ல.

  33. Modi should not have invited Rajapakshe to his swearing-in ceremony. Rajapakshe is a war criminal who is responsible for anhilating the tamil race. He has not only taken lives, but till today, has not done anything for the rehabilatation & resettelement of tamils in srilanka. They are under constant army watch & young women are being forcibly raped.

    The Jaffan library, one of the oldest in the world has been completely destroyde by the armed forces.

    Saying that we are befriending him just to keep china in check is like taking a school girl attitude.

    Let us wait & watch what action Modi will take for the fishermen issue.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *