விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்

இந்து முன்னணி பொறுப்பாளர் திரு. சுரேஷ் இன்று (18.06.2014) இரவு சுமார் 10 மணியளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெட்டி கொலைச் செய்யப்பட்டார்.

இந்த படுகொலையை கண்டித்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்கள் விடுத்த அறிக்கை:

anjali

இன்று (18.6.2014) இரவு சுமார் 9.30 மணி அளவில் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் வைத்து இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் திரு. கே.பி.எஸ். சுரேஷ் எனும் பாடி சுரேஷ் சமூக விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வேலூர் வெள்ளையப்பன் படுகொலை நடந்து ஒரு வருடம் இன்னமும் முடியவில்லை. கொலையாளிகள் கைது செய்யப்பட்டாலும், கொலைக்கு உடந்தையானவர்கள், கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் எல்லாம் வெளியில் தான் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கொலையின் மூலம் தமிழக அரசுக்கு பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது, பயங்கரவாதிகளுக்கு. 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளியை பிடித்த உடன் ஜாமீன் கிடைக்கும் அளவில் தமிழகத்தின் காவல்துறை செயல்பாடு இருப்பதை கண்டு தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள். தமிழக முதல்வர் அவர்கள் இக்கொலை வழக்கை நேரிடையான கவனத்தில் கொண்டு குற்றவாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் உடனடியாக கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும் திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

Tags: , , , , , , , , , , , , , ,

 

20 மறுமொழிகள் விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்

 1. P.Ramamoorthy on June 19, 2014 at 8:11 am

  தமிழகத்தில் முஸ்லீம் தீவிரவாத குழுக்களின் ஸ்லீப்பர் செல்கள் பாதுகாப்புடன் செயல்படுகின்றன. இது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கச்செய்ய வேண்டும். இது விஷயத்தில் அரசு முனைப்புடன் செயல்பட்டு அவர்களை கைது செய்தால்மட்டும் போதாது. அவர்கள் ஜாமீனில் வெளியே விடுவிப்பதும் தடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உதவும் காவல்துறை கருப்பு ஆடுகளும் களையப்படவேண்டும்.

 2. ஆனந்த் சாகர் on June 19, 2014 at 9:53 am

  பயங்கரவாதத்தின் மூலம் மற்ற சமுதாயத்தினரை மிரட்டலாம், பணிய வைக்கலாம் என்கிற இஸ்லாமிய விஸ்தரிப்பு பார்முலா இந்த நவீன யுகத்தில் வேலை செய்யாது என்பதை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மரணம் என்பதே ஒரு இனிய வாழ்வின் துவக்கம்தான். பிரபஞ்ச சக்தியின் நிபந்தனையற்ற அன்பையும் சாந்தியையும் திரு. சுரேஷ் அவர்கள் பெற்று ஆனந்த நிலையை அடைந்து விட்டார்.

 3. kannan on June 19, 2014 at 10:24 am

  நெஞ்சை பிசையும் கொடூரசெயல். பண்ணா இஸ்மாயில் போன்றோரை காவல்துறையினர் ‘உண்மையிலேயே விசாரித்தார்களா?’ என்ற கவலை கூட உருவாகின்றது. ஏனெனில் இந்த கொலைவெறி பிடித்த பயங்கரவாதிகளை மிக கச்சிதமாக ஒரு கும்பல் வெளியில் இருந்து இயக்குகின்றது என்பது மட்டும் உறுதி. தமிழக காவல்துறையினர் திறமைசாலிகள். ஆனால் அவர்களை செயல்படவிடாமல் அதிகாரியோ அல்லது தமிழக அரசோ தடுக்கின்றதோ என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது (உதாரணம், தமிழக ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவகத்தை வெடிகுண்டால் தகர்த்து 11 பேரின் குடும்பம் பலியான வழக்கு உட்பட பல வழக்கில் 21 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து காவல்துறையினரின் தொடர் முயற்சியால் கைது செய்யப்பட்ட ஹைதர் அலி, 15 நாட்களில் வெளியே வர முடிகின்றது) எத்தனை நாட்கள்தான் இத்தகைய இந்துக்களுக்கு எதிரான மனிதகுல விரோத செயல்களை வேடிக்கை பார்ப்பது? இலங்கையில் செத்த இஸ்லாமியருக்கு கூட ‘நான், நீ’ என்று, நேற்று போட்டிபோட்டு அறிக்கை விட்டு தங்கள் மத விசுவாசத்தை காட்டிய தமிழக கட்சி தலைவர்கள் (திமுக. மதிமுக, பாமக) என்ன செய்ய போகின்றனர்? மத அடிப்படைவாதிகளை வெளிப்படையாக கண்டிக்க தயாரா? இந்துக்களே! நமது ஒற்றுமை மட்டுமே நம்மை கௌரவமாகவும், தலைநிமிர்ந்தும் வாழவைக்கும். இதே நிலையில், காசே கடவுள், காமமே வாழ்க்கை’ என்ற ரீதயில், இந்துக்கள் தொடர்ந்து பிடித்துவைத்த களிமண் போன்று ஜட வாழ்க்கை வாழ்ந்தால் இந்த இழிநிலை தொடரத்தான் செய்யும்.

 4. gopalasamy on June 19, 2014 at 11:31 am

  Tamil nadu will become taliban nadu in soon. If govt and police not acting swiftly, the end is imminent. An unruly jihadists with political parties support is taking over the state.

 5. T.s.krishnamurthy on June 19, 2014 at 12:37 pm

  கொடுமை. இது போன்ற வன்முறைகள் இப்போது சகஜமாகி வருகின்றன. .இதைத்தடுக்க உதட்டளவு ஆறுதல் வார்த்தைகளையத்தவிர வேறு உருப்படியான நடவடிக்கைகள் ஒன்றும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை

 6. venkatesh on June 19, 2014 at 11:58 pm

  இன்னும் இந்து சமுதாயம் இப்படி , எத்தனை பலிதானிகள் ஆக வேண்டும் ? இதுக்கு முடிவே கிடையாதா? இது என்ன நாடு? யார் நாடு ?

 7. venkatesh on June 19, 2014 at 11:59 pm

  அன்னாரது ஆன்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்

 8. venkatesh on June 20, 2014 at 7:30 am

  திரு .ரமேஷ்ஜி ஆடிடோர் அவர்களின் இறப்பை எப்படி கண்டித்தோம் அதைவிட பல மடங்கு எதிர்ப்பை கண்டனம் பதிவு செய்தால் மட்டுமே மேலும் தேச பக்தர்க இழப்பை தடுக்க முடியும் ,,,,,,,,,,,,

 9. rama on June 20, 2014 at 2:45 pm

  BJP leaders of second rank are targeted in some states like tamil nadu, UP and in west bengal. As one can see that those state governments that rule these above states are minority appeasing parties like AIADMK, SP, TMC under the leadership of amma, akilesh-mulayam and mamatha.
  Since these take place in identical manner in all above three states, i feel this group indulging in this criminal act are under the knowledge of respective state police patronized by their respective state governments. Oppusdei also normally could involve to shift the blame on islamic jihads since entire europe is under the control of islam now with christianity is losing its hold. So central government must investigate this sort of political murders of BJP and its hindu outfits leaders to arrest any more erosion of leaderships of hindu parties.

 10. ஜடாயு on June 20, 2014 at 4:45 pm

  தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முக்கியமான இந்து இயக்கத் தலைவர்களின் உயிருக்கு என்னேரமும் அபாயம் உள்ளது என்பது நிதர்சனமாகி வருகிறது. குறிப்பாக முஸ்லிம்கள் தங்கள் ஆதிக்கத்தை திட்டமிட்டு பெருக்கி வரும் ஊர்களிலும், தமுமுக தவ்ஹீத் ஜமாத் போன்ற பயங்கரவாத அமைப்புகள் வெளிப்படையாக வளர்ந்து வரும் இடங்களிலும் இந்த அபாயம் கண்ணெதிரே உள்ளது.

  இந்த சூழலில், காவல் துறையினரின் மெத்தனம் குறித்து கண்டனம் தெரிவிப்பது மட்டும் போதாது. கடந்த இரு வருடங்களாக, ஒவ்வொரு முறையும் ஒரு பகுதியில் மிகவும் மதிப்புக்குரிய ஒரு இந்து சமூகத் தொண்டர் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப் பட்ட பிறகு, விலைமதிப்பற்ற ஒரு மனித உயிரை இழந்த பிறகு, அடுத்து யாரோ என்ற பதைபதைப்பு நெஞ்சை அடைக்கும் நிலைமை இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய பயங்கரச் செயல்கள் மூலம், இஸ்லாமிய அராஜகங்களை தட்டிக் கேட்டால் இந்த நிலைமை தான் உருவாகும் என்ற அச்சத்தையும், பதைபதைப்பையும் வெகுஜன அளவில் உருவாக்குவது தான் இந்தப் பாதகர்களின் முக்கிய நோக்கம். இது இந்து இயக்கத் தலைமைகளுக்கு உறைக்கிறதா?

  அதுவும் இப்போது மத்தியில் பாஜகவின் உறுதியான ஆட்சி அமைந்திருக்கும் போதே இவ்வளவு தைரியமாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் செயல்படுகிறார்கள்.. ஏற்கனவே நடந்த குற்றங்களில் தேடப்பட்டு வருபவர்களை கைது செய்து விட்டிருந்தால் மட்டும் இது தடுக்கப் பட்டிருக்குமா என்ன? புதிது புதிதாக ரக்த பீஜன்கள் போல ஜிகாதி அரக்கர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

  என்ன செய்தால் இதைத் தடுக்கலாம்?

  அ) ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி மற்றும் அனைத்து சகோதர அமைப்புகளும் அபாயத்தில் உள்ள தங்கள் முக்கியத் தலைவர்கள் அனைவருக்கும் தங்கள் தரப்பிலிருந்தே பாதுகாப்பு அளிக்க வேண்டும். உரிமம் பெற்ற துப்பாகிகளும், மெய்க்காப்பாளர்களும் எப்போதும் இத்தலைவர்களுடன் இருக்க வேண்டும்.

  ஆ) இத்தனை குற்றங்கள் நடந்துள்ள நிலையில், காவல் துறை அதிரடியாக ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஜமாத்களையும் முஸ்லிம் அமைப்புகளையும் சோதனையிட வேண்டும். கோவை குண்டு வெடிப்புக்குப் பின் இவ்வாறு நடத்தப் பட்ட அதிரடி ஆபரேஷனில் எத்தனை இடங்களில் வெடிகுண்டுகளும், ஜெலாட்டின் குச்சிகளும், பயங்கரவாத பிரசார உபகரணங்களூம் கிடைத்துக் கொண்டே இருந்தன என்பதை தமிழக காவல் துறை கொஞ்சம் நினைவு படுத்திப் பார்த்துக் கொள்வது நல்லது. சந்தேகத்துக்குட்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்.

  இனியும் தமிழ் மண்ணில் இன்னொரு இந்து இயக்கத் தலைவனின் குருதி சிந்த அனுமதிக்கக் கூடாது.

 11. க்ருஷ்ணகுமார் on June 21, 2014 at 2:11 am

  ஸ்ரீ சுரேஷ் அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

  தமிழகத்தில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக்குடிமக்களாகக் கருதப்படும் நிலைமை பெருகுகிறது என்றால் மிகையாகாது.

  இந்த அவலம் தமிழகத்திற்கு மட்டிலும் உரித்ததல்ல. உத்தர ப்ரதேசத்தில் ஹிந்து இயக்க செயல்வீரர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

  மத்ய உள்துறை இந்த விவகாரங்களை தீர விசாரித்து குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வழிவகை செய்து ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

 12. ஒரு அரிசோனன் on June 21, 2014 at 8:57 am

  “வன்முறையே வரலாறாய்”ல் இஸ்லாமியர்கள் வன்முறை மூலம் எதையும் சாதிக்கத் துணிவார்கள் என்று வரலாறு பகர்ந்ததை மெய்ப்பிக்கிறது இந்த வன்முறைச் செயல்.
  இதைக் கண்டனம் செய்து, வன்முறையைக் கைவிடுமாறு ஜனாப் சுவனப்பிரியன் தனது சமயத்தாருக்கு அறைகூவல் விடவேண்டும். தனது இணைய தளத்தில் அமைதிக்காகக் கொடி உயர்த்தவேண்டும் என்பது எனது அவா. அப்படிச் செய்யாவிட்டால், அவர் சொல்வதும், எழுவதும் வாய்ப்பந்தல் என்று இத்தளத்திற்கு வருகை தருவோர் நினக்கநேரிடும்.
  வன்முறைக்குப் பயந்தால், வன்முறைதான் வெல்லும். இதைத் தமிழ்நாடு காவல்துறையும், அரசியல்வாதிகளும் உணரவேண்டும்.

 13. gopalasamy on June 21, 2014 at 9:40 am

  When one person was lynched to death, all 24×7 channels, whole week crying. But in Tamilnadu serial killings happened. But no channels are ready to talk about it. It appears, Hindu Munaany /BJP people deserve to be killed.

 14. kannan on June 21, 2014 at 11:11 am

  திரு, ராமா, மற்றும் ஜடாயு அவர்களின் கருத்துக்கள் மிக ஆழம் பொருந்தியது. இதனை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று கீழ்க்கண்ட விஷயங்களையும் செய்யலாம்:-
  1. தங்கள் குடும்ப தலைவரை இழந்த குடும்பங்களுக்கு கல்வி பொருளாதார பாதுகாப்பு அளிக்கவேண்டும்.
  2. சிவில் சட்டத்தில் ஷரியத் வழியை பின்பற்றும் இந்த பயங்கரவாதிகளுக்கு, கிரிமினல் சட்டத்திலும் அவர்கள் மத (ஷரியத்) சட்டத்தை அமுல்படுத்தவேண்டும்.
  3. நமது சமய கருத்துக்களை நன்னெறி வகுப்புக்கள் மூலம், கல்வி நிலையங்களிலும், ஆலயங்களிலும் போதிக்கவேண்டும். இதன் மூலம் மதமாற்றம் தடுக்கப்படுவதோடு, பண்பும், நல்லொழுக்கமும், தயாள குணமும், சமய பிடிப்பும் ஏற்ப்படும். இதனால் நமது விகிதாசாரம் இனியும் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  4. அச்சுறுத்தல் உள்ள அனைத்து சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
  5. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகையோருக்கு கொடுக்கப்படும் தண்டனையையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். கஷ்டப்பட்டு, தங்கள் இன்னுயிரை பணயமாக காவல் துறையினர் இவர்களை பிடித்தாலும், சுலபத்தில் ஜாமீனில் வெளியே வந்துவிடமுடிகின்றது. இத்தகைய குற்றவாளிகளின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, விரைவில் தண்டனையை நிறைவேற்றவேண்டும்.

 15. seenuerodu on June 21, 2014 at 11:34 am

  ஹிந்து இயக்க தலைவர்களுக்கு …..
  —————————————————–
  படுகொலை செய்யப்பட்ட ஹிந்து தலைவருக்காக ஒரு ஆர்ப்பாட்டமும் செய்தாகி விட்டது, அடக்கமும் செய்தாகிவிட்டது. இனி நாம் அவரவர், அன்றாட வேலையைப் பார்க்கலாம்…. இதில் எனக்கு உடன்பாடு இல்லை.
  ஒரு நாட்டின் அரசன் எப்படி குடிமக்களின் பாதுகாவலனாக இருக்கிறானோ, அதேபோல ஒரு அமைப்பின் தலைவராக இருப்பவர், தொண்டர்களின் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
  அதிகமாக உயிர்பலியாவது தொண்டர்களாகத்தான் இருக்கிறார்கள்….. போனவரை போகட்டும், ஆனால் இனியொரு உயிர் போகாமல் காக்கப்பட வேண்டும்.
  முடியும் என்பது என் வாதம்…..
  அனைத்து இந்து இயக்கத்தின் தலைவர்களும் (இ.மு, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., வி.எச்.பி., ஏ.பி.வி.பி., பி.எம்.எஸ்.,…..) அவரவர் இருக்கும் இடத்திலேயே, ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து (உதாரணமாக – திங்கள்கிழமை முதல்…) காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவிக்க வேண்டும். (பொது இடத்தில் அனுமதி கிடைக்காது)
  விருப்பமுள்ள தொண்டர்கள், அவர்களோடு கலந்துகொள்ளலாம்.
  கோரிக்கைகள்….
  1) இந்த அரசாங்கம் உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்……
  2) தலைவனை இழந்த குடும்பத்திற்கு 3 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்…..
  3) இனி ஹிந்து இயக்கத்தை சார்ந்த ஒவ்வொருவரின் உயிருக்கும் இந்த அரசாங்கம் பொறுப்பேற்கும் என அறிவிக்க வேண்டும்….
  அதுவரை இந்த உண்ணா நோன்பு தொடர வேண்டும்…
  ———————
  இந்த அறப்போராட்டம் உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும்.
  ஹிந்து இயக்க சரித்திரத்தில் எழுதப்பட வேண்டும்.
  இனியொரு ஹிந்து உயிர் படுகொலை செய்யப்படாமல் காக்க வேண்டுமென்றால், நாம் இந்த வழியை பின்பற்றினால் மட்டுமே விடிவு பிறக்கும் என்பது எனது கருத்து…….

 16. Subramaniam Logan on June 22, 2014 at 2:04 am

  அமரர் சுரேஷ் அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
  பலஹீனமாக தோற்றமளிக்கும் வலிமையான எங்கள் கால்களில் ஒன்றில் முள் குத்திவிட்டது. மூலிகை குடித்து முள் வெளியேறும் என்று நம்பி காத்திருக்கப் போகின்றோமா? அல்லது முள்ளை வெளியேற்ற சத்திரசிகிச்சை செய்யப் போகின்றோமா? புற்றுநோயக்குகூட சித்தவைத்தியம் உதவலாம். ஆனால் முள்ளை முள்ளால் மட்டுமே எடுக்க முடியும். இளைங்கர்களே ! இளைங்கர்களே! உங்களுக்கு வழிகாட்ட யாருமே இல்லையா? அழுங்கள்! அழுங்கள்! பூண்டோடு அழியும்வரை அழுங்கள். அதுவரை மகாபாரத சுலோகங்களை மனனம் செயுங்கள் அல்லது தமிழனை வளிநடத்தும் அரசியல் பீடைகளின் பல்லக்கை சுமந்து திரியுங்கள்.
  பிரார்த்தனைகள்
  லோகன்

 17. K R MOHAN KUMAR on June 22, 2014 at 7:27 am

  Even now hindu organisations are working in different factions.Since BJP won, all the parasites are penetrating in all Hindu organisations.I know Shri Soman, Co brother of SURESH working in Hindu Munnani without any proper link with other basic Hindu organisations.There is a plot to divide the community Hindu Krishnan Vaka, to kidnap their girls,to purchase their lands on cheating,and to murder them.This community Hindu Krishnan Vaka people are strong Hindus. These SURESH, BHRAMMA PURAM BALAN, CHAITHANYA OF VELLIMALAI VIVEKANANDA MANDIRAM were from the above community .

 18. BALA SUNDARAM KRISHNA on June 22, 2014 at 9:38 am

  But why do BJP cadres attack public buses and damager publi property and terrorised the general public whenever a local BJP leader was murdered by Islamic terrorists? What did the common people do against BJP to deserve this treatment ? Did they support the killers?

 19. AAR on June 23, 2014 at 12:05 am

  All muslim police officers in Tamilnadu have formed their own gang. The purpose of this gang to support muslim terrorists and to provide all police support to them.

 20. Ram on June 23, 2014 at 1:03 pm

  திரு சுரேஷ் பலியானதற்கு கண்டனங்கள்.

  அதே நேரத்தில், இதை முன்னிட்டு ஆர்பாட்டங்களும், கலவரங்களும் செய்து அரசு பேருந்துகளை தாக்கியும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுதியவர்களையும் கண்டிக்க வேண்டும். இது போன்ற செயல்களால் மக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களே உண்டாகும்.

  RAM

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*