Menu
Categories
மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1
July 10, 2014 அரசியல்

மக்கள் சக்தியானது ஜாதி, மொழி, மதம் போன்ற தடைகளை உடைத்தெறிந்து….. ஹிந்துஸ்தானம் உலக அரங்கில் உன்னதமாக மிளிர்வதற்கு…… உறுதியான ஆட்சி அமைய வழி செய்தது…… நடந்து முடிந்த லோக்சபை தேர்தல்.

பார்ப்பன பனியா கட்சி என்றும் ஹிந்தி மாகாணங்களில் புழங்கும் கட்சி என்றும் கிண்டலடிக்கப்பட்ட பாஜக… ஹிந்துஸ்தானத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நாற் திசைகளிலும் தன் முத்திரை பதித்து துஷ்ப்ரசாரகர்களின் முகத்தில் கரிபூச முடிந்தது நடந்து முடிந்த தேர்தலில்.

கடைந்தெடுத்த ஓட்டுவங்கி மதவெறி அரசியலானது ஹிந்துஸ்தானம் முழுதும் மதசார்பின்மை என்ற பசுத்தோல் போர்த்தி இது வரை  உலாவந்துள்ளதும் இந்த தேர்தலில் முடிவுக்கு கொணரப்பட்டுள்ளது.  உள்ளீடற்ற மற்றும் அடிமட்ட மக்களுக்கு எந்த வளர்ச்சியையும் இதுவரை கண்ணிலும் காட்டாத ……..பசப்பு மட்டிலும் மிக்க …….மதசார்பின்மை கோஷத்தை ஒதுக்கி ……. தேச வளர்ச்சியை முன்னிறுத்திய……. ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களுக்கு ஹிந்துஸ்தானம் முழுதும் உள்ள முஸ்லீம் சஹோதரர்களும் வாக்களித்திருந்தால் மட்டிலும் இப்படிப்பட்ட தனிப்பெரும்பான்மை கிட்டியிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

மதசார்பின்மை மாயையில் இருந்து வெளிவந்த முஸ்லீம் சஹோதரர்கள் மற்றும் அதிலிருந்து இன்னமும் வெளிவராத முஸ்லீம் சஹோதரர்கள்……. பாஜக மற்றும் மோதி பற்றி கொண்டுள்ள அச்சங்கள் யாவை மற்றும் மோதி சர்க்காரிடமிருந்து இவர்களது அபிலாஷைகள் யாவை என்ற விஷயங்கள்………. இண்டியா டிவி தொலைக்காட்சியினர் நிகழ்த்திய *ஆப் கீ அதாலத்*  (உங்கள் ந்யாயாலயம்) என்ற நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.  மேற்கண்ட விவாதம் ஹிந்தி / உர்தூ / ஹிந்துஸ்தானி என்ற பலபாஷைகள் கலந்த ஒரு மொழிநடையில் நடத்தப்பட்டது.  இந்த பாஷைகளில் பரிச்சயம் உள்ள அன்பர்கள் கீழ்க்கண்ட உரலில் உள்ள காணொலியில் இந்த நிகழ்ச்சியைக் காணலாம்.  இந்த பாஷைகளில் பரிச்சயம் இல்லாத அன்பர்களுக்காக இந்த நிகழ்ச்சியின் சாராம்சம் மூன்று பாகங்களில் ஆன இந்த வ்யாசத்தில் பகிரப்படுகிறது.

வ்யாசம் எழுதி முடித்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது.  இதைப் பகிரலாமா வேண்டாமா என்று சம்சயம் இருந்தது.  ஹிந்துக்களொடு கைகோர்த்து தேச வளர்ச்சியில் பங்கு கொள்ள விழையும் முஸ்லீம் சஹோதரர்களின் அச்சங்கள் யாவை மற்றும் இவர்களது அபிலாஷைகள் யாவை……போன்ற சில விஷயங்கள் இந்த வ்யாசத்தில் பேசப்படும் நிகழ்ச்சியில் பெருமளவு முஸ்லீம் சஹோதரர்களாலேயே விவாதிக்கப்படுவதால்……… பகிர விழைந்துள்ளேன்.

இந்த விவாதங்களில் முஸல்மாணிய சஹோதரர்கள் சிலர் முன்வைத்த கேழ்விகளிலும் பகிரப்பட்ட சில உத்தரங்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை.  வாசிக்கும் வாசகர்களுக்கும் அபிப்ராய பேதங்கள் இருக்கலாம்.  ஆனால் இயன்ற வரை நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை உள்ளது உள்ள படி எனக்குப் புரிந்த படி பகிர்ந்துள்ளேன்.  என் பகிர்தலில் பிழைகள் இருக்குமானாலும்  சொல்லப்பட்ட கருத்துக்களில் அபிப்ராய பேதம் இருக்குமானாலும் …. அவற்றையும் சுட்டிக்காடுமாறு வாசகர்களிடம் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

பித்தலாட்ட மதமாற்றம், ஜிஹாதி வன்முறைக்கு மறைமுக ஆதரவு போன்ற பரிச்சயங்கள் இல்லாது தங்கள் பக்ஷத்து அச்சங்கள் மற்றும் அபிலாஷைகளை பெருமளவு தெளிவாக முஸல்மாணிய சஹோதரர்கள் இந்த நிகழ்ச்சியில் விவாதித்ததை நிச்சயம் போற்றுகிறேன்.

இயலுமானால் இந்த நிகழ்ச்சி ஹிந்துஸ்தானத்தின் மற்றைய பாஷைகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பரவலாக ஒளிபரப்பப்பட வேண்டும்.  மிகப்பெரும்பான்மையான முஸல்மாணிய சஹோதரர்கள் ஹிந்துக்களுடன் கரம் கோர்த்து தேசத்தின் வளர்ச்சியில் பாடுபடத் தயாராக இருக்கிறார்கள் என்பது என் அனுமானம்.  முஸல்மாணிய சஹோதரர்களின் மத்தியில் நல்ல சக்திகளின் கை ஓங்கினால் பித்தலாட்ட மதமாற்ற சக்திகள் மற்றும் ஜிஹாதி மதவெறி சக்திகளின் கை தானாகத் தாழும் என்பது நிதர்சனம்.

முதலில் இந்த நிகழ்ச்சியின் கட்டமைப்பு பற்றி ஓரிரு வரிகள்.

நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் விருந்தினரரான அரசியல்வாதி / பெருந்தகையின் மீது பொதுவில் பேசப்படும் குற்றச்சாட்டுக்கள் நிகழ்ச்சி அமைப்பாளரான ஸ்ரீ ரஜத் ஷர்மா அவர்களால் முன்வைக்கப்டும்.  குற்றம்சாட்டப்படும் நபர்  பொதுமக்கள் முன்னிலையில் தன் தரப்பு வாதங்களை பதிலுக்கு முன்வைப்பார்.  நரேந்த்ரபாய் மோதி, டாக்டர் சுப்ரமண்ய ஸ்வாமி, AK49 என்ற க்யாதிக்கு உரித்த அரவிந்த கேஜ்ரிவால், அண்ணா ஹஜாரே, பாபா ராம்தேவ், திக்கிராஜா என்ற க்யாதி வாய்ந்த திக்விஜய் சிங்க் முதல் தமிழகத்து அரசியல்வாதியான ஆண்டிப்பட்டி ராஜா வரை பலரும் பங்கெடுத்த ப்ரபலமான நிகழ்ச்சி இது.  நூறு நூற்றைம்பது பார்வையாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அவர்களும் கேழ்விகள் கேழ்க்கலாம்.   ஸ்ரீ ரஜத் ஷர்மா அவர்கள் ஒரு அரசு வக்கீல் போன்று ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து கேழ்விகளையும் குறுக்குக் கேழ்விகளையும் முன்வைத்து பங்கெடுக்கும் விருந்தினரை வறுத்தெடுப்பார். ந்யாயாலயம் என்றால் ந்யாயாதிபதியும் இருப்பாரே.  பொதுமக்களின் மத்தியில் மதிப்பு வாய்ந்த பத்திரிக்கையாளர், கல்வியாளர் போன்ற பெருந்தகைகள் ந்யாயாதிபதியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சி முடிவில் விவாதங்களின் பாற்பட்டு தனது தீர்ப்பினை அளிக்க நிகழ்ச்சி நிறைவு பெறும்.

நாம் விவரிக்க இருக்கும் நிகழ்ச்சி சற்றே மாறுபட்ட ஃபார்மேட்டில் வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் அனைவரும் முஸல்மாணிய சஹோதரர்கள். விருந்தினர்களாக பங்கெடுத்த பெருந்தகைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் இந்த நிகழ்ச்சியில் முன்வைக்கப்படவில்லை.  மாறாக பங்கெடுத்த விருந்தினர் பெருந்தகைகள் மோதி சர்க்கார் பற்றி முன்வைக்கப்பட்ட அச்சங்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு தங்கள் அனுபவங்கள் சார்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள்.

muslims-in-aap-ki-adalat

விருந்தினர்களாக ஐந்து முஸல்மாணிய பெருந்தகைகள் பங்கெடுத்தனர்.

ஒரு புறம் மோதி அவர்களுடன் தோளொடு தோள் கொடுத்து குஜராத் மாகாண வளர்ச்சியில் பங்களித்து வரும் ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா ( Zafar sareshwala)  என்ற வ்யாபாரி.  அடுத்து குஜராத் மாகாண பாஜக Spokesperson என்ற பொறுப்பில் பணியாற்றும் மோ(ஹ்)தர்மா ஆஸிஃபா கான் சாஹிபா என்ற பெண்மணி. இருவரும் மோதி ஆதரவாளர்கள்.  குஜராத்தில் 2002ம் வருஷம் மதக் கலஹம் நடந்த பின்னர் மோதிக்கு எதிராக மிகக்கடுமையாக பொது தளத்தில் பணியாற்றி,  பின்னர் தங்கள் முனைப்பின் காரணமாக கலஹம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்த படிக்கு மோதியின் மீது குற்றம் சாட்ட ஹேது ஏதும் இல்லை என ஆராய்ந்தறிந்த முஸல்மாணிய பெருந்தகைகள்.

மற்றொரு புறம் மோதி ஆதரவாளர்கள் என்ற படிக்கு இல்லாது ஆனால் மோதி சர்க்கார் மீது நம்பிக்கை கொண்டுள்ள முஸல்மாணிய பெருந்தகைகள்.  All India Muslim Personal Law Board இன் அங்கத்தினரான ஜெனாப் முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் சாஹேப் (Mufti Ehsaz Ahmed), All India Imam Association அங்கத்தினராகிய மௌலானா ஸாஜித் ரஷீதி சாஹேப் (Maulana SAjid Rashidi) மற்றும் டொய்ச் வங்கியின் Managing Director மற்றும் Investment Banker என்ற ஸ்தானத்தில் பணிபுரிந்த ஜெனாப் ஸையத் ஜாஃபர் சாஹேப்(Syed Zafar).

நிகழ்ச்சி ஆரம்பிக்கு முன்னர் முஸல்மாணிய சஹோதரர்களிடையே மோதி அவர்கள் மீது நேர்மறையான நம்பிக்கை தரும் படிக்கான அவரது பல ப்ரசங்கங்கள் காணொலிகளாகக் காண்பிக்கப்பட்டன.

பத்திரிக்கையாளரான எம்.ஜே. அக்பர் அவர்கள் தான் பாஜகவில் சேரத் தூண்டியபடிக்கான…… மோதி அவர்கள் பீஹார் மாகாணத்தில் நிகழ்த்திய பொதுக்கூட்ட ப்ரசங்கம் முதல் காணொளியாகக் காண்பிக்கப்பட்டது.

தன் முன் கூடியுள்ள பெருங்கூட்டத்தினரிடம் மோதி அவர்கள் கேழ்க்கிறார். ஏழை முஸல்மான் எதிர்கொண்டு போராட வேண்டியது ஏழ்மையுடனா அல்லது ஹிந்துக்களிடமா? ஏழை ஹிந்து எதிர்கொண்டு போராட வேண்டியது ஏழ்மையுடனா அல்லது முஸல்மான்களிடமா? ஹிந்துக்கள் மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் இருவரும் முனைந்து போராட வேண்டியது ஏழ்மையுடன் என்று மோதி அவர்கள் முழங்குகிறார்.

மதசார்பின்மை என்று வெற்று கோஷம் போடும் ஓட்டுவங்கி அரசியல் வாதிகள் முஸல்மாணிய சஹோதரர்களுக்கு உண்மையில் நன்மை செய்திருக்கின்றனரா? அதே சமயம் முஸல்மானுக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் மோதியின் குஜராத்தில் முஸல்மான் களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா என்று மக்கள் அறிய வேண்டும் என்று மக்களிடம் வினவுகிறார்.

போலி மதசார்பின்மை கோஷம் போடும் அரசியல்வாதிகள் நிறைந்த பீஹார் மாகாணத்தில் நகரங்களில் வசிக்கும் முஸல்மான் களில் 45 சதமானத்தினர் ஏழைகள். அதேசமயம் குஜராத் மாகாணத்தில் நகரங்களில் வசிக்கும் முஸல்மான் களில் 24 சதமானத்தினர் ஏழைகள்.  மதசார்பின்மை கொடிபிடிக்கப்படும் பீஹார் மாகாணத்துடன் ஒப்பிடுகையில் 50 சதமானத்துக்கும் கீழாக ஏழ்மை காணப்படுவது குஜராத் மாகாணத்தில் என மோதி நிதர்சனத்தை பொதுமக்கள் முன் முழங்குகிறார்.

இதன் பின்னர் மோதி அவர்கள் உத்தர ப்ரதேசத்தில் நிகழ்த்திய ப்ரசங்கத்தின் காணொளி காட்டப்படுகிறது.  என்னுடைய சர்க்கார் ஆட்சிக்கு வருமானால் ஹிந்துஸ்தானத்தில் மதக்கலஹங்கள் நடக்க அனுமதிக்க மாட்டேன் என்று முழங்குகிறார்.  2002 ம் வருஷம் குஜராத் கலஹம் நிகழ்ந்த சமயத்தில் மோதி அவர்கள் அரசாட்சி ஏற்றபின்னர் 2014ம் வருஷம் வரைக்குமான 12 வருஷ காலத்தில் குஜராத் மாகாணத்தில் ஒருமுறை கூட கலஹம் நிகழ்ந்ததில்லை.    ஏனென்றால் பலம் மிகுந்த குஜாராத் அரசு குஜராத் மாகாணத்தில் மதக்கலஹம் நிகழக்கூடாது என்று உறுதி கொண்டு ஆட்சி நடத்தியது.  அது போன்ற கலஹமற்ற ஆட்சியை உத்தரப்ரதேசத்திலும் ஹிந்துஸ்தானம் முழுதும் எதிர்பார்க்கிறீர்களா? பாஜக சர்க்காருக்கு வாக்களியுங்கள் என்று மோதி முழங்குகிறார்.

இதன் பின்னர் ஆப் கீ அதாலத் நிகழ்ச்சியில் மோதி அவர்கள் பங்கெடுத்த போது முஸல்மாணிய குழந்தைகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பது தன் அவா என்றும் இக்குழந்தைகளின் ஒரு கையில் குரான்-ஏ-கரீமும் ஒரு கையில் கணினியும் இருக்க வேண்டும் என்பது என் கனவு என்றும் மோதி அவர்கள் பகிர்ந்த கருத்து காணொலியாகக் காண்பிக்கப்பட்டது.

இந்தக்காணொலிகளுக்குப்பின்னர்  நிகழ்ச்சி அமைப்பாளரான ஸ்ரீ ரஜத் ஷர்மா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான கேழ்விகளை இந்த முறை நான் கேழ்க்கப்போவதில்லை. மாறாக இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராகப் பங்கேற்கும் முஸல்மாணிய சஹோதரர்கள் தங்கள் வினாக்களை முன்வைப்பர்.  இங்கு பங்கெடுக்கும் ஐந்து முஸல்மாணிய பெருந்தகைகள் தங்கள் அனுபங்களையும் கருத்துக்களையும் பதில்களாக முன்வைப்பர் என்றார். நிகழ்ச்சியில் ந்யாயாதிபதியாகப் பங்கெடுத்தவர் ராஜஸ்தான் மாகாணத்து அஜ்மேர் நகரத்தில் உள்ள ஹஜ்ரத் க்வாஜா மொய்னுத்தீன் சிஷ்டி தர்க்காஹ்வின் உத்தராதிகாரியான ஜெனாப் ஸையத் மொய்னுத்தீன் சிஷ்டி.  தலைப்பாகை முதல் அங்கிவரை காவி உடையில் நிகழ்ச்சியில் பங்கெடுத்தார் நிகழ்ச்சியின் ந்யாயாதிபதி.  முழு நிகழ்ச்சியிலும் ஹிந்துவாகப்பங்கெடுத்தவர் நிகழ்ச்சி அமைப்பாளரான ஸ்ரீ ரஜத் ஷர்மா அவர்கள் மட்டிலும்.

நிகழ்ச்சியில் மோதியின் மீதும் அவர் கருத்தாக்கங்கள் மீதும் ஒன்றன் பின் ஒன்றாக இல்ஜாம் (ilzam) என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதன் மீது விவாதங்கள், கேழ்விகள், பதில்கள் குறுக்குக் கேழ்விகள் அதற்கு பதில்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப்பார்ப்போம்.

குற்றச்சாட்டு எண் – 1

பீதியில் இருக்கும் முஸல்மாணியர் :-

மஹாத்மா காந்தியின் பேரனாகிய கோபால் க்ருஷ்ண காந்தி என்ற பத்திரிக்கையாளர் அவர்கள் மோதி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுதும் மதக்கலஹங்கள் பெருகும்.  ஹிந்துக்களும் முஸல்மான்களும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாவர் என்று ஒரு வ்யாசத்தில் எழுதியுள்ளார் என்று விவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர் துவங்குகிறார்.

விவாதம் துவங்குகிறது.

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா :-

2002ம் வருஷம் குஜராத் மாகாணத்தில் கலஹம் நிகழ்ந்தது உண்மை தான். இக்கலஹத்தில் நூற்றுக்கணக்கில் ஹிந்துக்களும் ஈராயிரம் முஸல்மாணியரும் பலியாயினர் என்பதும் உண்மை.  இதைத் தொடர்ந்து இந்த கலஹத்திற்காக வேண்டி மோதி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று ஒருகாலத்தில் நான் பணியாற்றியுள்ளேன்.  ஆனால் அதற்குப்பின்னர் கலஹம் சம்பந்தமான ஆவணங்களை ஆராய்ந்தறிந்த படிக்கு, மோதி அவர்கள் குஜராத் கலஹத்துக்கு காரணம் இல்லை. மாறாக அதை அடக்க விழைந்த நபர் என அறிந்தேன்.  மோதியின் குஜராத்தில் முஸல்மான் சஹோதரர்களுக்கு வளர்ச்சி கிட்டுகிறது என்பதை நிதர்சனமாக அறிந்து என் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டுள்ளேன்.

மோதியுடன் ஜெஃபார் சரேஷ்வாலா

மோதியுடன் ஜாஃபர் ஸரேஷ்வாலா

குஜராத்தில் 2002ம் வருஷம் மட்டிலும் கலஹம் நிகழ்ந்துள்ளதா. அதற்கு முன்னர் நிகழ்ந்ததில்லையா?

சொல்லப்போனால் மிக பயங்கரமாக குஜராத் மாகாணத்தில் நிகழ்ந்த கலஹம் 1969ம் வருஷம் நிகழ்ந்த கலஹம்.  இதில் கிட்டத்தட்ட 5000 முஸல்மாணிய சஹோதரர்கள் பலியானார்கள்.  இதன் பின்னர் 1985, 1987, 1990, 1992 எனத் தொடர்ந்து 2002ம் வருஷம் வரை குஜராத் மாகாணத்தில் பலமுறை கலஹங்கள் நிகழ்ந்துள்ளன.

கலஹம் நிகழ்வது ஒரு புறம்; அதில் ஆயிரக்கணக்காக மக்கள் பலியாவது ஒரு புறம்.  ஆனால் கலஹம் முடிந்த பின்பும் பொதுஜனங்களினிடையே மாதக்கணக்காக உறையும் பீதி மறக்கவொண்ணாதது. ஒவ்வொரு கலஹத்துக்குப் பின்னும் நிலைமை கட்டுக்குள் வரும் வரைக்கும் ஊரடங்குச்ச்சட்டம் மாதக்கணக்கில் அமலில் இருந்துள்ளது.  பல சமயம் 6 மாதங்கள்  சில கலஹங்களுக்குப் பின் 200 நாட்கள் என ஊரடங்குச்சட்டம் நீடித்தமை இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

ஒரு முஸ்லீம் சஹோதரர் குறுக்குக் கேழ்வி முன்வைக்கிறார் :-

2002ம் வருஷம் குஜராத் கலஹம் நிகழ்ந்த போது முதல் மூன்று நாட்களில் யார் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் அதற்குப்பின்னர் கலஹத்தை அடக்குகிறேன் என்று மோதி அவர்கள் சொன்னதாகப் பொதுவில் குற்றம் சாட்டப்படுகிறது. 15 ஆகஸ்ட் செங்கோட்டையில் உரையாற்றும் போது இதை மோதி அவர்கள் பொதுஜனங்களுக்கு மத்தியில் மறுப்பாரா?  குஜராத் கலஹங்களில் குற்றமிழைத்த கயவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளிப்பாரா?

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா சாஹேப் (Zafar Sarehwala):-

2002ம் வருஷம் நிகழ்ந்த குஜராத் கலஹங்களில் கொடுமையானவை என்று 9 பெரும் கலஹ நிகழ்வுகள் வெவ்வேறு ந்யாயாலயங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன / விசாரிக்கப்பட்டு வருகின்றன.  பக்ஷபாதம் இல்லாத இவ்விசாரணைகளில் இது வரை 63 ஹிந்துக்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  குஜராத் மாகாணத்தில் மந்த்ரி பதவியில் இருந்த ஸ்ரீமதி மாயாபென் கோட்னானி என்ற அம்மணி கூட ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.  சாதாரண பொதுஜனமாகட்டும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் ஆகட்டும் விசாரணையின் பாற்பட்டு குற்றவாளிகள் என்று அறியப்பட்டால் அவர்கள் ந்யாயாலயத்தால் தண்டிக்கப்பட்டனர் என்பதை மறுக்க முடியாது. மதக்கலஹத்தில் இழைத்த குற்றங்களுக்கு தண்டனைகள் பெருமளவில் விதிக்கப்பட்டது 2002ம் வருஷத்து குஜராத் கலஹத்துக்குப் பின் தான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.  ஆயுள் தண்டனை தவிர 460 ஹிந்துக்களுக்கு பற்பல கால அவதிகளில் சிறைத்தண்டனைகள் ந்யாயாலயத்தால் விதிக்கப்பட்டுள்ளன.

9 பெரும் கலஹ நிகழ்வுகளில் இதுவரை 7 கலஹ நிகழ்வுகள் ந்யாயாலயத்தால் முழுதும் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  மீதி உள்ள 2 கலஹ நிகழ்வுகளும் விசாரணையில் உள்ளன. அதில் 12 ஹிந்துக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்  என்பதும்  நிதர்சனம்.

இதிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த அளவுக்கு குஜராத் மாகாணத்தில் ந்யாயம் கிடைத்துள்ளது என்பதை மக்கள் அறியலாம்.

குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் ஆஸீஃபா கான்

குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் ஆஸீஃபா கான்

ஆஸிஃபா கான் சாஹிபா :-

மதக்கலஹம் என்றதும் 2002ம் வருஷத்திய குஜாராத் கலஹம் மட்டிலும் ஏன் நினைவில் வருகிறது.  அதில் குற்றமிழைத்தவர் பற்றி மட்டிலும் ஏன் நினைவுக்கு வருகிறது.  எத்தனையெத்தனை படுபயங்கர மதக்கலஹங்கள் ஹிந்துஸ்தானம் முழுதும் நிகழ்ந்துள்ளன.  1993 மும்பை மாநகரத்தில் நிகழ்ந்த கலஹம்.  பின்னர் மாலியா மியானாவிலும் நீலியிலும் நிகழ்ந்த கலஹங்கள் குறைவானவையா? அப்போதெல்லாம் காங்க்ரஸ் தானே ஆட்சியில் இருந்தது.  எவ்வளவு பேர் விசாரிக்கப்பட்டு இதுவரை தண்டிக்கப்பட்டுள்ளனர்.  கலஹம் நிகழ்ந்த பின் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு அது அறிக்கை அளித்த பின்னர் அதில் சொல்லப்பட்ட பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டுள்ளனவா?  1993 மதக்கலஹத்தில் விசாரணை கமிஷன் அறிக்கை 19 போலீஸ் அதிகாரிகளைக் குற்றம் சாட்டி அவர்கள் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் தொடர்ந்த காங்க்ரஸ் சர்க்கார் இவர்களுக்கு தண்டனை கொடுக்காது பதவி உயர்வு கொடுத்துள்ளது என்பதை மக்கள் அறிய வேண்டும். அதே சமயம் குஜராத் மாகாணத்தில் கலஹம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் பல போலீஸ் அதிகாரிகள் ஜெயிலில் உள்ளனர் என்பதையும் அறிய வேண்டும்.

டாக்டர் ஃபஹீம் பெக் :-

கடந்த 10 வருஷ காலங்களில் காங்க்ரஸ் சர்க்கார் நாங்கள் முஸல்மாணியருக்கு அத்தைச் செய்வோம் இத்தைச் செய்வாம் என்று சொல்லி எங்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி ஓட்டு சேகரம் செய்ய முற்பட்டார்களேயன்றி எந்த வாக்குறுதிகளையும் அமல் செய்யப்புகவில்லை என்பது நிதர்சனம்.  நான் முன்னாள் ப்ரதம மந்த்ரி ஸ்ரீ மன்மோஹன் சிங்க் அவர்களின் தரப்பிலிருந்து …  ஆர் டி ஐ விண்ணப்பங்கள் மூலம் …..சர்க்கார் முஸல்மாணியருக்கு என்னென்ன வாக்குறுதிகளை அமல் செய்துள்ளது என்று கடந்த இரண்டு வருஷங்களாக அறிய முற்பட்டேன்.  ஆனால் எனது எந்த விண்ணப்பங்களுக்கும் சர்க்கார் தரப்பிலிருந்து ஜவாப் கிடைக்கவில்லை.

இதற்கு மாறாக “ஸப் கா ஸாத் ஸப் கா விகாஸ்”  –  “அனைவருடனும் ஒன்றிணைந்து அனைவருக்காகவும் வளர்ச்சி” என்ற கோட்பாட்டை மோதி அவர்கள் முன்வைப்பது ஏற்புடையதே.   மோதி தன் ப்ரசாரத்தின் போது காங்க்ரஸ் காரர்கள் முஸல்மாணியருக்கு பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றினர் என்றும் கூறியுள்ளார். மோதி அவர்கள் தன்னுடைய வாக்குறுதிகளை அமல் செய்வாரா மாட்டாரா? முஸல்மாணிய சஹோதரர்கள் மோதி சர்க்காரிடமிருந்து தங்கள் முஸல்மாணிய சமூஹம் சார்ந்து நேர்மறையான செயல்பாடுகளை எதிர்பார்க்கலாமா?

அப்படி இருப்பினும் கூட மோதி அவர்கள் உக்ரவாதி என்றே கூறுவேன்.  2002 மதக் கலஹத்தின் போது மோதி அவர்கள்  கலஹக்காரர்களிடம் முதல் மூன்று நாட்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அதற்கப்புறம் சர்க்கார் தன் வேலையைச் செய்யும் என்று சொன்னார் என்றபடிக்கு ஒரு கருத்து நிலவி வருகிறது. அதைப்பற்றி மோதி அவர்களிடம் வினவப்பட்ட போதெல்லாம் நேரடியாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்தே பதில் சொல்லியிருக்கிறார்.

ஆஸிஃபா கான் சாஹிபா :-

நிகழ்வுகளை பக்ஷபாதமில்லாது ஆராயுங்கள்.  25ம் திகதி மோதி முக்ய மந்த்ரியாகப் பதவியேற்கிறார். பதவியேற்று 3 நாட்களுக்குள் கலஹம் நிகழ்கிறது. அதற்குள் எப்படி இப்படி ஒரு நிகழ்வை ஒருவர் திட்டமிட இயலும்.  இவை துஷ்ப்ரசாரங்களே.  தவிரவும் அந்த முதல் மூன்று நாட்கள் பற்றி நாங்களும் மோதி அவர்களிடம் வினவியுள்ளோம்.  நிமிட வாரியாக சர்க்கார் தரப்பிலிருந்து அந்த மூன்று நாட்களில் கலஹத்தை அடக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்ற விபரங்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.  பதிலளிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல. பதில்கள் பொது தளத்தில் பொதுஜனங்களுடைய பார்வைக்கு என்றும் உள்ளன.  முதல் நாள் ராணுவம் வரவழைக்க விண்ணப்பிக்கப் பட்டது. ஆனால் வரவழைக்க முடியவில்லை. பாராளுமன்றத் தாக்குதலை அடுத்து ராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லையில் இருந்தனர். வேறு வழியில்லாததால் போலீஸுக்கு கலஹக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது, கலஹத்தை அடக்க Flag March நிகழ்த்தப்பட்டது.  துப்பாக்கிச் சூடுகள் நிகழ்ந்தன.  அதில் கலஹத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள் மற்றும் முஸல்மாணியர் என்று இரண்டு சமூஹத்தைச் சார்ந்தவர்களும் மரணித்தனர்.

இந்த மோசமான சமயத்தில் தான் 400 குழந்தைகள் பாவ்நகர் மதரஸாவிலிருந்து பாதுகாக்கப்பட்டனர்  என்பதை எப்படி மறப்பீர்கள்? அவ்வளவு ஏன் அதிக அளவு கலஹத்துக்கு உள்ளான குல்பர்க் சொஸைடியிலிருந்து அம்மணி ஜாகியா ஜாஃப்ரி அவர்கள் தப்பிக்க முடிந்தது என்பது பாதுகாப்பு நடவடிக்கைகள் முஸ்தீபுடன் அமலில் இருந்தன என்பதால் தான் என்பதை மறுக்க முடியாது அல்லவா.  ஸர்தார்புராவிலிருந்து எத்தனையெத்தனை முஸல்மாணியர்கள் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கூட்டிச்செல்லப்பட்டனர்?  இதுபோன்று நேர்மறையாக  மோதி சர்க்காரால் முஸல்மாணியர் பாதுகாக்கப்பட எடுக்கப்பட்ட நிகழ்வுகளை நாம் கணக்கிலும் எடுக்காது …………. மாறாக மோதி சர்க்கார் தான் கலஹங்கள் நிகழக் காரணமானது என்று குற்றம் சாட்டுவது பிழையானது.

டாக்டர் ஃபஹீம் பெக் :-

இந்த விபரங்களை மோதி அவர்கள் நேருக்கு நேராகப் பொது தளத்தில் முஸல்மான் களிடம் ஏன் பகிரக்கூடாது என்பது தான் என் கேழ்வி. நாங்கள் அவருக்கு ஓட்டுப்போட்டிருந்தாலும் போடவில்லையெனினும் எங்களிடம் நேரடியாக அவர் சம்வாதம் செய்யலாமே.  மேலும் அவருக்கு வெகுஜன ஆதரவு கிட்டியுள்ளது.  இதை நாங்கள் ஏற்கிறோம்.  முதலில் மோதி அவர்கள் முஸல்மாணிய சமூஹத்தை ஒரு ஓட்டு வங்கி சமூஹமாக மட்டிலும் எண்ணியிருக்கலாம். ஆனால் இப்போது அப்படி நினைக்க முடியாது. பின்னும் இப்படிப்பட்ட வெகுஜன ஆதரவு அவருக்கு ஒரு அக்னி பரீக்ஷையே.  வாக்குறுதிகளை சொன்னபடி நிறைவேற்றுவாரா?

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

முஸல்மாணிய சஹோதரர்களது ந்யாயமான கேழ்விகளை சர்க்கார் தரப்பின் முன் வைக்கவே நான் விரும்புகிறேன். உங்களது எல்லா கேழ்விகளும் சர்க்காரிடம் சேர்க்கப்படும் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன்.

மௌலானா ஸாஜித் ரஷீதி சாஹேப் (All India Imam Association – Maula Sajid Rashidi) :-

சஹோதரரே நீங்கள் மோதி அவர்களிடம் என்ன வினவ நினைத்தீர்களோ அதையே நாங்கள் அவரிடம் முன்னர் வினவியுள்ளோம். ஒரு க்ஷணம் நினைத்து பாருங்கள். தேர்தலுக்கு முன்னர் எந்த முஸல்மானாவது நான் மோதிக்கு ஓட்டுப்போடுவேன் என்று வெளிப்படையாக சொல்லியிருக்க முடியுமா? மோதி அவர்கள் வெளிப்படையாக முஸல்மான் சஹோதரர்களது வாக்குகளை சேகரிக்க முனைந்திருந்தால் முஸ்லீம் ஓட்டுக்கள் அவருக்கு கிட்டியிருக்காது என்பது மட்டுமல்ல எப்போதும் ஆதரவு தரும் ஹிந்துக்களும் அவருக்கு ஓட்டுப்போட்டிருக்க மாட்டார்கள்.

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

நான் விளக்கம் அளிக்கிறேன். ஸ்வதந்த்ரம் கிடைத்ததிலிருந்து ஹிந்துஸ்தானத்தில் இதுவரை 45000 –  46000 மதக்கலஹங்கள் நிகழ்ந்துள்ளன. குஜராத் மாகாணம் மட்டும் தான் ஹிந்துஸ்தானத்தில் விதிவிலக்கான மாகாணமாக ………. கலஹங்களுக்குப் பின்னர் கலஹத்தில் ஈடுபட்ட கலஹக்காரர்களை விசாரணை செய்து தண்டித்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.  மற்ற எந்த மாகாணத்திலும் இந்த அளவு விசாரணையோ அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதோ இதுவரை நிகழ்ந்ததே இல்லை.  நான் மோதி அவர்களிடம் கேழ்க்க விரும்புவது…………. ஐயா, நீங்கள் ராம ராஜ்யத்தை அமல் செய்வீர்களா? நாங்கள் விழைவது ஹிந்துஸ்தானத்தில் ராம ராஜ்யம் அமல் செய்யப்படுவதையே.  ராவண ராஜ்யம் அல்ல.  எங்களுக்கு ராம ராஜ்யமே வேண்டும் …… எந்த ராம ராஜ்யத்தில் அனைத்து மக்களுக்கும் நீதி கிட்டுமோ அப்படிப்பட்ட ராஜ்யம்    (பெரும் கரவொலிக்கு மத்தியில்)

எங்களுக்கு கல்வி வேண்டும். வேலை வாய்ப்பு வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஹிந்துக்களுக்கும் முஸல்மாணியருக்கும் அனைத்து மக்களுக்கும் வேண்டும்.  எங்களை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லுமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா சாஹேப் (Zafar Sareshwala) :-

மோதி அவர்கள் கிட்டத்தட்ட 20 – 30 நபர்களைக் கொண்ட கிட்டத்தட்ட 250 முஸ்லீம் குழுக்களுடன் அவ்வப்போது அளவளாவியிருக்கிறார்.  ஒவ்வொரு அளவளாவலும் ஒரு மணி நேரமாவது நிகழும்.  அப்போது மிக வெளிப்படையாக அவர்களுடன் சம்வாதம் செய்வார்.  அப்போது அவர் சொல்லியிருக்கிறார்.  குஜராத் மாகாணத்தில் முஸல்மாணியர் ஜனத்தொகை 9  – 10 சதமானம் தான்.  நீங்கள் ஓட்டுப்போடாவிட்டாலும் கூட நான் ஆட்சியைப் பிடித்து விட முடியும். ஆனால் உங்கள் ஆதரவு இல்லாமல் என்னால் ஒரு முழுமையான ஆட்சி நடத்த முடியாது என்பது நிதர்சனம் என்று சொல்வார்.   முஸ்லீம்களின் ஓட்டு எனக்கு கிடைக்கிறதா இல்லையா என்பது அடுத்த பக்ஷம்.  20 கோடி முஸல்மாணியரை நான் அரவணைத்து செல்ல வேண்டும். முஸல்மாணியரையும் கைகோர்த்து…….. ஒரு நலம் சார்ந்த வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை நடத்துவதற்காக வேண்டி……  என்னென்ன அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ…… அவை அனைத்தையும் எடுத்தே நான் ஆட்சி செய்வேன்.

ஆஸிஃபா கான் சாஹிபா :-

2007 வாக்கில் நடந்த தேர்தலில் மத்ய குஜராத்தில் முஸல்மாணியர் பெருமளவில் மோதி அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.  வாக்குகள் கிடைக்கவில்லையானாலும் பாஜக எம்பிக்கள் மற்றும் எம் எல் ஏக்கள் ஒவ்வொரு முஸல்மாணிய குடியிருப்புகளுக்கும் சென்று உங்களது தேவைகள் என்ன என்று பேர் பேராக விசாரித்து சர்க்காரால் செய்ய முடிந்த வளர்ச்சிப் பணிகளை ஒவ்வொரு பகுதியிலும் செய்ய முனைந்தனர்.  முஸல்மான் சஹோதரர் பால் நட்பை அடிப்படையாகக்கொண்ட கரத்தை பாஜக அளித்தது. முஸல்மான்களும் தங்கள் நட்புக்கரத்தை நல்கினர். அதன் விளைவே நடந்து முடிந்த தேர்தலில் குஜராத்தில் 26 தொகுதிகளையும் பாஜகாவால் கைப்பற்ற முடிந்தது.  பெருமளவில் முஸல்மாணியரும் ஓட்டுப் போட்டிருந்தாலேயே இப்படி ஒரு வெற்றியை பாஜக பெற்றிருக்க முடியும்.

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

மோதி அவர்கள் தேர்தலில் நிற்க எத்தனை முஸல்மாணியருக்கு டிக்கட் கொடுத்துள்ளார்? தில்லியில், குஜராத்தில், உத்தரப்ரதேசத்தில்  — இங்கெல்லாம் ஒரு டிக்கட் கூட முஸல்மாணியருக்கு கொடுக்கப்படவில்லை.

ஜெனாப் முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் (Mufti Ehsaz Ahmed) :- All India Muslim Personal Law Board

நாம் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு நூற்றுக்கு நூறு சதமானம் ஓட்டளிக்கிறோமோ அந்தக் கட்சிகள் முஸல்மாணியருக்கு எத்தனை டிக்கட் கொடுத்துள்ளன என்பதும் வினவப்பட வேண்டும்.மேலும் எப்போது நாம் ஒரு அரசியல் கட்சிக்கு அருகில் செல்லக்கூட யோசனை செய்வோமோ? அப்படி சந்தேஹக் கண் கொண்டு நோக்கும் கட்சியானது நமக்கு இந்த கார்யம் செய்ய வேண்டும் அல்லது அந்த கார்யம் செய்ய வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? இது வரை மற்ற அரசியல் கட்சிகள் நமது மனத்தில் வலதுசாரிகளைப் பற்றி ஒரு தேவையற்ற பீதியை திட்டமிட்டு மனதில் விதைத்து நம்மை ஆண்டு வந்தனர்.  மோதி ஆட்சிக்கு வந்தால் கலஹம் நிகழும் நாம் வன்முறைக்கு உள்ளாவோம் என நம்மை அச்சுறுத்தியுள்ளனர் மற்ற கட்சிகள்.  இந்த தரம் தாழ்ந்த அரசியல் செயல்பாட்டிலிருந்து நாம் மீள வேண்டும்.  2006 வாக்கில் நான் தாருல் உலூமில் பணி செய்த போது ப்ரவீண் டொகடியா போன்றோர் வீசும் உணர்ச்சியும் வெறியும் மிகுந்த கேழ்விக்கணைகளுக்கு பதிலளித்து பதிலளித்து ஆயாசம் அடைந்தது நினைவுக்கு வருகிறது. இது போன்ற நபர்களை வைக்க வேண்டிய இடத்தில் யாராவது வைத்துள்ளார் என்றால் அது மோதி தான் என்று சொல்வேன்.  ஒரு பொது விவாதத்தில் இப்படிக் கருத்துப் பகிர முடியுமா தெரியவில்லை. ஆனால் அது தான் உண்மை.  இப்போதெல்லாம் ப்ரவீண் டொகடியா அவர்களது வன்மம் மிகுந்த பேச்சுக்கள் அதிகம் வெளிவருவதில்லை.

Gunotsav-Narendra-Modi

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

பஜ்ரங்க் தள் மற்றும் ப்ரவீண் டொகடியா போன்றோர் வன்முறை மிகுந்த செயல்பாடுகளை குஜராத்தில் நிகழ்த்த முடியாது?

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala):-

நீங்கள் பொதுவாகப் பேச விழைவது மதக்கலஹம் பற்றி.  மதக்கலஹம் என்ற கொடுமையான நிகழ்வுகள் கூட அடுத்த பக்ஷமே. மதக்கலஹம் வன்முறை நிகழ்வுகள் இவையில்லாமலும் கூட முஸல்மாணியர் மத்தியில் மிகக் கடுமையான பீதியை விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்க்தள் நிலைநிறுத்தியிருந்தனர் 1990 களில்.  சர்க்கார் காங்க்ரஸுடையதாக இருக்கட்டும் அல்லது வேறு கட்சியினதாக இருக்கட்டும் தெருவில் ஆட்சியில் இருந்தது இந்த ஹிந்து இயக்கங்களே.  இவர்களுடைய அனுமதியின்றி அஹமதாபாத் நகரத்தில் ஒரு அசைவ உணவகத்தைக்கூட நடத்தமுடியாது. அந்த அளவுக்கு இவர்களது கெடுபிடி இருந்தது 90 களில்.  போலீஸ் தரப்பினரிடம் டொகடியா சாஹேப்புக்கு மிகுந்த செல்வாக்கு இருந்த காலம்.

இப்படிப்பட்டவர்களது வன்முறைச் செயல்பாடுகளை கட்டுக்குள் கொணர்ந்தவர் மோதி தான்.  அஹ்மதாபாத் நகரத்தில் டொகடியா சாஹேப் வருகிறார் என்றால் அவரை வரவேற்க 150 – 200 வாகனங்கள்  சன்னத்தமாக இருக்கும்.  இவரது வருஷாந்தர பொதுக்கூட்டத்திற்கு 5 லக்ஷம் முதல் 10 லக்ஷம் வரை பொதுஜனங்கள் கூடுவர். ஆனால் இன்றைய திகதியில் இவரது வண்டி ஓட்டுனரைத் தவிர இவருடன் வேறு யாரையும் கூடப் பார்க்க முடியாது.  இப்போதெல்லாம் மிகக் குறைவான பொதுஜனங்களே இவரது பேச்சை குஜராத்தில் கேழ்க்கிறார்கள்.

மஹாராஷ்ட்ராவில், கோவாவில், ஹைதராபாத்தில் டொகடியா சாஹேப் பெரும் பொதுக்கூட்டங்களில் உரை நிகழ்த்த முடியும்.  குஜராத்தில் வன்மம் கூடிய உரைகள் நிகழ்த்த முடியாது.  ஏனெனில் அப்படி ஏதும் பேசினால் சாபர்மதி ஜெயிலில் மோதி மாவாட்ட வைப்பார் என்பது இவருக்குத் தெரியும்.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

மோதி அவர்கள் ஸ்ரீ ராணா ப்ரதாப் போல தேர்தலை தீரத்துடன் எதிர் கொண்டார். ஆனால் பாத்ஷா அக்பர் போன்று இவரது ஆட்சி இருக்க வேண்டும்.  அவரது ஹ்ருதயத்தில் வீர சாவர்க்கர் இருந்தார் என்றால் அவரது புத்தியில் பாபா சாஹேப் அம்பேத்கர் இருக்க வேண்டும்.

(தொடரும்)

"21" Comments
 1. கதிரவன்

  நெஞ்சைத் தொடும் விஷயங்களை மிகவும் பக்குவமாக பரிமாறி இருக்கிறீர்கள். திரு கிருஷ்ணகுமாருக்கு நம் நன்றிகள். எல்லாம் வல்ல தந்தைக்கே உபதேசித்த முத்துக்குமாரசாமியின் அருள் திரு கிருஷ்ணகுமாருக்கு என்றும் பூரணமாகக் கிட்டும். வையகம் வளமுடன் வாழ்க. அனைத்துயிரும் இன்பம் உறுக.

 2. பரமசிவம்

  நன்றாக எழுதி உள்ளார். படித்த பின், அடுத்து வரும் பதிவுகளை எதிர் நோக்கி உள்ளேன். You tube சென்று Aap ki adalat பார்த்து முடித்தேன். இருப்பினும், மொழியாக்கம் நன்கு உள்ளதால், அடுத்த பதிவு எதிர்பார்க்கிறேன்.

 3. மோடியின் மீது முசல்மான்கள் இந்தளவு நம்பிக்கை வைத்திருப்பது மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுதான் உண்மையான ச்வந்திரதிற்கு அடையாளம். நரேந்திர மோடி ஜியின் முகத்தில் நரேந்தர் அதாவது விவேகனந்தரைதான் பார்க்கிறேன். வருங்காலங்களில் நிறைய நரேந்த்ரர்கள் உருவாகவேண்டும். இது கிருஷ்ணா பஹ்வானின் அனுக்ராஹதில் நடக்கும்.

 4. அ. ரூபன்

  Shri Krishnakumar,

  Wonderful. I’ve watched the whole programme. Very good questions and answers. Hope it will reach Modi as Rajat promised.

  Thank you.

 5. அடியவன்

  கிருஷ்ணகுமார்

  மிகவும் நல்ல தகவல்கள் அடங்கிய இந்த விஷயத்தை மொழிபெயர்த்து நாங்களும் அறியும் வண்ணம் தந்தமைக்கு மிக்க நன்றி. இதைப் பதிவதற்கு எதற்காகத் தயங்க வேண்டும். உண்மையான மனித நேயம் இந்தக் கட்டுரையில் இருக்கிறது. அல்-உம்மா என்ற முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தை நிறுவிய ஜவஹரிருல்லா என்பவர் இப்போது தனது கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி என்று பெயர் வைத்து, ஜெயா மாற்றி கருணா, கருணா மாற்றி ஜெயா என்று கூட்டணி வைத்து, ஜெயா ஆதரவில் சட்ட மன்ற உறுப்பினரும் ஆகி தக்கியா நாடகம் நடிக்கும் இந்தத் தமிழ் நாட்டு மக்களுக்கு, மத நல்லிணக்கம் என்றால் என்ன, மனித நேயம் என்றால் என்ன என்று சொல்லும் இப்படிப்பட்ட விஷயத்தைக் கொண்டு சேர்க்கும் உங்கள் பணியில்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சிறப்பு என்ன என்பது வெளிவருகிறது.

  சுவனப் பிரியர் மத நல்லிணக்கம் என்றால் என்ன என்பதை இதைப் படித்துத் தெரிந்து கொள்வார்; ஆனால் இது கண்ணில் படாதது போல இருப்பார்.

  தாயுமானவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மத நல்லிணக்க சிந்தனை, மனித நேயப் பாதை ஆகியவர் பற்றி அறியவும் இது ஒரு சிறந்த உதாரணம். இப்படியிருக்க இதை எழுத நீங்கள் தயங்கி இருக்கவே அவசியம் இல்லை. பாராட்டுக்கள்.

 6. அடியவன்

  உண்மையை விட பலமானது உலகில் இல்லை.
  ஊடக எத்தன் எத்தனைப் புளுகினாலும்
  அத்தனையையும் உடைத்துக் கொண்டு
  உண்மை வெளிவரும். இப்போதுதான்
  ஊடக எத்தனை வென்று உண்மை வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

 7. வீ.பாலமுருகன்

  ஆனால் அதற்காக பிரவீன் தொகாடிய ஜி யை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
  வீ.பாலமுருகன்

 8. க்ருஷ்ணகுமார்

  கருத்துப் பகிரும் அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.

  எனது ப்ரியத்துக்கு பாத்ரரான மித்ரர் ஸ்ரீ களிமிகு கணபதி அவர்கள் முஸ்லீம் சமூஹம் பற்றி இந்த தளத்தில் பகிர்ந்த வ்யாசம் பலரால் ச்லாகிக்கப்பட்டது. அதே சமயம் நான் மிகவும் மதிக்கும் ……என்னை எழுத ப்ரேரணை செய்த….. ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களால் தகுந்த காரணங்களுடன் எதிர்மறையாகவும் விமர்சிக்கப்பட்டது. ஆதலால் முழுதும் முஸல்மாணிய சஹோதரர்களின் கருத்துக்களைத் தாங்கிய ஒரு வ்யாசத்துக்கு நமது தளத்தில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்ற பெரும் தயக்கம் இருந்தது. நமது உடன்பிறவா சஹோதரர்களாகிய முஸல்மாணியரின் கருத்துக்களொடு உடன்படும் ஹிந்து சஹோதரர்களது கருத்துக்களை வாசிக்கையில் மிகுந்த பெருமிதம் ஏற்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஹிந்துத்வ இயக்கத்தினரின் செயல்பாடுகள் நல்ல பலனைத் தருகிறது என்ற மன நிறைவையும் அளிக்கிறது.

  ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்வ இயக்கங்கள் பெருமளவு பாடுபடுவது ஹிந்து ஒற்றுமை என்ற கருத்தாக்கத்துக்கு. ஆனால் அதே சமயம் அனைத்து பாரதீயர்களையும்……. நம் அனைவருக்கும் பொதுவான…….. சமயங்கள் மற்றும் மதங்கள் கடந்த கலாசாரம் என்ற ரீதியில் ஒன்றிணைப்பதற்கும்……… ஹிந்துத்வ இயக்கங்கள் ஹிந்துஸ்தானம் முழுதும் பாடுபட்டு வருகின்றன என்பதும் பகிரப்பட வேண்டிய விஷயம். அப்படிப்பட்ட ஒரு நல்ல கார்யத்தின் வெளிப்பாடே சிறியேன் இங்கு பகிர விழைந்த நிகழ்ச்சி.

  நிகழ்ச்சியில் ஆங்காங்கு சொல்லப்பட்ட சில கருத்துக்களில் எனக்கும் கூட உடன்பாடில்லை. ஆனால் அவை யாவை எனது உடன்பாடின்மை எத்தகையது என்பது தெளிவாகப் பேசப்பட வேண்டிய விஷயம். இயன்றால் எனது சில கருத்துக்களை ஒரு குறு வ்யாசமாக சமர்ப்பிக்க முனைகிறேன். ஆனால் ஒட்டுமொத்தமாக நமது முஸ்லீம் சஹோதரர்கள் பகிர்ந்த கருத்துக்களில் எனக்கு ஆழ்ந்த உடன்பாடுண்டு.

  “மதசார்பின்மை” என்ற பெயரில் ஓட்டு வ்யாபாரம் செய்யும் கட்சிகளின் பொய் வாக்குறுதிகள், உள்ளீடற்ற வெற்று கோஷங்கள் மற்றும் செயல்பாடுகளையே பல தசாப்தங்களாகப் பார்த்த முஸ்லீம் சஹோதரர்களுக்கு…… மோதியின் குஜராத்தில் ……அவர் ஆட்சியில் இருந்த 12 வருஷ காலமாக….. மதக் கலஹம் என்ற சொல்லின் அடிச்சுவடு கூட இல்லாமையும்…………

  மதசார்பின்மை என்ற பெயரில் வெற்று கோஷமிடும் ஸ்ரீ முலாயம் சிங்க் அவர்களது சர்க்கார் ஆட்சிக்கு வந்த பின்னர் உத்தரப்ரதேசத்தில் மட்டிலும் 200க்கும் மேற்பட்ட மதக்கலஹங்கள் நிக்ழ்ந்துள்ளதும்…………….. நூற்றுக்கணக்கான முஸ்லீம் சஹோதரர்கள் மாண்டதும்………..முஸ்லீம் சஹோதரர்களுக்கு மட்டிலும் அல்ல………..

  உலகுக்கே தெரிந்த விஷயம்.

  முஜஃப்பர்நகரில் சரணார்த்தி கேம்புகளில் குளிரில் ஒடுங்குவதற்கும் குளிரைத் தாங்கும் படிக்கான ஆடைகளும் கூட இல்லாமல் பெண்களும் குழந்தைகளும் அவஸ்தைப்பட்ட சமயத்தில்………….. ஆட்சியாளர்கள் அழகு சுந்தரிகளின் ஆட்டம் பாட்டத்தில் களித்துக் கூத்தாடியதையும் உலகம் அறியும்.

  இருப்பதெல்லாம் இருக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் உட்கார வை என்ற படிக்கு………….மக்கல் அவஸ்தைப்படும் சமயத்தில் ஜெனாப் ஆஜம் கான் என்ற முலாயம் அவர்களது மந்த்ரி மஹோதயர் அவர்களது காணாமல் போன எருமைமாட்டைத் தேடிக்கண்டுபிடிக்க உ.பியின் போலீஸ் படை முடுக்கி விடப்பட்டதும்…………….. எருமை மாடு கிடைத்த பின் போலீஸ் ஆட்சியாளர்களின் சபாஷ் பெற்றதையும் உலகம் அறியும்.

  உ.பி முஸ்லீம் சஹோதரர்கள் கொல்லப்படும் கொலக்களமாக ஆகி வருகின்றது என்றால் தமிழகம் ஹிந்து சஹோதரர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கொல்லப்படும் கொலைக்களமாக ஆகி வருகின்றது என்றால் மிகையாகாது.

  125 கோடி ஹிந்துஸ்தானியர் அனைவரையும் ஒருமிக்க இணைத்து தேசம் என்ற தேரை வளர்ச்சி என்ற பாதையில் இழுக்க முயலும் ………………….ஹிந்து ஹ்ருதய சாம்ராட்…………. இல்லையில்லை………..இந்த நிகழ்ச்சியையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எமது முஸல்மாணிய சஹோதரர்களின் கண்களிலும் அவர்களது சொற்களில் இருந்த நம்பிக்கையையும் பார்க்கும் போது……….

  ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களை ஹிந்து ஹ்ருதய சாம்ராட் என்று சொல்வது தகாது. ஸர்வஜன ஹ்ருதய சாம்ராட் என்று சொல்வது தான் சாலத் தகும். அன்னாரது …….. மற்றும் அவரது அமைச்சகத்தின் முயற்சி திருவினையாக எல்லாம் வல்ல வள்ளிமணாளனை இறைஞ்சுகிறேன்.

  இந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட கருத்துக்களில் காணப்பட்ட நிறைகள் மற்றும் குறைகளை அறிய ஆவலாக இருக்கிறேன். மிகக் குறிப்பாக இதை வாசிக்கும் எமது பேரன்பிற்குரிய ஜெனாப் சுவனப்ரியன் போன்ற முஸ்லீம் சஹோதரர்களது கருத்துக்களை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

 9. தாயுமானவன்

  திரு கிருஷ்ண குமார் …

  //ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களை ஹிந்து ஹ்ருதய சாம்ராட் என்று சொல்வது தகாது. ஸர்வஜன ஹ்ருதய சாம்ராட் என்று சொல்வது தான் சாலத் தகும்//

  அஹா.. அஹா… என்ன பவ்யம்!! என்ன பவ்யம் !!!

  “ஸர்வஜன ஹ்ருதய சாம்ராடாம்”. ஏதோ ஊடக மாயையாலும், காங்கிரஸ் கட்சியின் தொடர் ஊழல்களாலும் வெறுத்துப் போய் மக்கள் தெரியாமல் செய்த தவறுக்கு(மோடியை தேர்ந்தெடுத்தது) இதுவும் வேண்டும், இதற்க்கு மேலும் வேண்டும். யாரோ 4, 5 மேட்டுக் குடி இசுலாமியர்களின் கருத்துக்களை போட்டு விட்டு, ஏதோ நாட்டில் உள்ள ஒட்டு மொத்த இசுலாமியர்களின் கருத்தாக கூற நினைப்பதை என்னென்று சொல்ல.. சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சுவனப்ரியன் அவர்களே பார்த்து சூதானமாக நடந்து கொள்ளுங்கள். அந்த 4, 5 மேட்டுக் குடிகளின் கருத்துக்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்..

 10. கதிரவன்

  இன்று இந்தியாவின் மேட்டுக்குடி பல டி வி சானல்களை நடத்திவரும் தென்னிந்திய அரசியல் மற்றும் நாடக- சினிமா – கதைவசன குடும்பமும், மேற்கு இந்தியாவில் இதே போல மகளை எம் பி யாக்கிவிட்ட குடும்பமும் தான். மக்கள் தவறு செய்யவில்லை. காங்கிரஸ்காரனுக்கு கால் பிடித்து வாழ்ந்த சில இனத்துரோகிகள் மட்டுமே மக்கள் தவறு செய்ததாக கூறி புலம்புகிறார்கள்.

  டூ ஜி குடும்பங்கள் விரைவில் திகார் மற்றும் பல சிறைகளை நிரப்பும் போது தான் பலருக்கும் உண்மைகள் புரிய வரும். இந்து என்றாலே எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு சொல் ஆகும். இந்து என்றாலே all inclusive . எனவே ஹிந்து ஹ்ருதய சாம்ராட் என்று சொல்வது ஸர்வஜன ஹ்ருதய சாம்ராட் என்று சொல்வது தான். இந்து என்றாலே எல்லைகள் எதுவும் இல்லாத என்று பொருள்.

 11. திரு க்ருஷ்ணகுமார்!

  //இந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட கருத்துக்களில் காணப்பட்ட நிறைகள் மற்றும் குறைகளை அறிய ஆவலாக இருக்கிறேன். மிகக் குறிப்பாக இதை வாசிக்கும் எமது பேரன்பிற்குரிய ஜெனாப் சுவனப்ரியன் போன்ற முஸ்லீம் சஹோதரர்களது கருத்துக்களை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்.//

  பொதுவாக நரேந்திர மோடி அவர்களுக்கு இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பொன்றும் இல்லை. அவருக்கு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் தன்னை இந்துத்வாவாதியாக பிரகடனப்படுத்திக் கொண்டு கோத்ரா ரயில் எரிப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். போலீஸ் அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட் “உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் உங்களின் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள்” என்று மோடி சொன்னதை அவ்வளவு லேசில் மறந்து விட முடியாது. “ராஜ தர்மத்தைக் காப்பாற்றுங்கள்” என்று வாஜ்பாய் சொல்லும் அளவுக்குத்தான் அன்றைய மோடியின் ஆட்சி இருந்தது. இஹ்ஸான் ஜாப்ஃரி கடைசி முயற்சியாக மோடியோடு “காப்பாற்றுங்கள்” என்று கதறியதையும் மறந்து விட முடியாது. இள மங்கை இர்ஷத் ஜஹான் போலி எண்கவுண்டரையும் நாம் மறக்க முடியுமா?

  இத்தனை செயல்களையும் இவர் செய்தது இந்து மதத்தின் மேல் உள்ள பற்றினால் அல்ல. ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்த தான் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசையால் எழுந்தவைகளே அவை. இன்று நினைத்ததை சாதித்து விட்டதனால் அதற்காக பிராயச்சித்தம் தேட முயற்சிக்கலாம். அவரது அதிகாரத்துக்கு பயந்து ஒரு சில முஸ்லிம்கள் அவரை வானளாவ புகழலாம். நடந்து வரும் தங்கள் தொழிற்சாலைகளை காப்பாற்றிக் கொள்ள அந்த முஸ்லிம்கள் நரேந்திர மோடியிடம் சரணடையலாம். செய்த தவறுகளுக்கு தண்டனை பெறாத வரை சாமானய முஸ்லிம்கள் நரேந்திர மோடியை என்றுமே மன்னிக்க மாட்டார்கள்.

  “உங்களின் மன்னிப்பு மோடிக்கு தேவையில்லை” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பாதிப்பக்குள்ளான மக்களின் பிரார்த்தனை என்றுமே வீண் போகாது. அவரின் தூக்கத்திலும் செய்த கொடுமைகள் கண் முன்னே நிழலாடும். “அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்” எனும் பழமொழி இன்றில்லா விட்டாலும் என்றாவது நிறைவேறும்.

  தன்னை முன்னிறுத்திக் கொள்ள தனது கட்சியை ஆட்சிக் கட்டிலில் ஏற்ற இந்நாட்டில் எத்தனையோ நேர்மையான வழிகள் உள்ளது. ஆனால் முஸ்லிம்களை வீண் பழி சுமத்தி அவர்களை கொன்று இந்துக்களின் ஓட்டுக்களை ஒருமுகப்படுத்தி அதன் மூலம் தனது அதிகாரத்தை நிறுவியிருக்கும் நரேந்திர மோடியை என்னால் எவ்வாறு பார்க்க முடியும் என்று திரு க்ருஷ்ண குமார்தான் சொல்ல வேண்டும்.
  எந்த வகையிலோ இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்திய முஸ்லிம்கள் உறுதுணையாக இருப்பார்கள். நாட்டை ஆள்வோருக்கு கட்டுப்படச் சொல்லி இஸ்லாமும் கட்டளையிடுகிறது. இனி வரும் ஐந்து வருடத்தில் தேவையற்ற செலவினங்களை குறைத்து அனைத்து மக்களையும் ஒன்றாக பாவித்து நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வாராக!

 12. க்ருஷ்ணகுமார்

  இந்த நிகழ்ச்சியை நான் தமிழாக்கம் செய்வதற்குத் தூண்டு கோலாக இருந்தது…..

  நான் ஆர்வமுடன் வாசித்து வரும் தளங்களுள் ஒன்றான அன்பர் ஸ்ரீமான் ராமசாமி அவர்களுடைய ஒத்திசைவு தளத்தில் பகிரப்பட்ட………

  ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களைப் பற்றியும் அவர் செயல்பாடுகள் மற்றும் அதற்குத் தோள் கொடுத்த ஹிந்து, இஸ்லாமிய சஹோதரர்களின் செயல்பாடுகள்…………அவருக்கு எதிர்மறையாக செயல்பட்ட பணம்காய்ச்சி மரங்களாகிய தீஸ்தா சீதளவாத இத்யாதி அம்மணிமார்கள் அய்யாமார்கள் பற்றிய வ்யாசாதிகள்……….. ஒன்று அல்லது இரண்டு அல்ல……….. மூச்சு முட்டும் படிக்கு 38 வ்யாசங்கள்………..

  இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள விஷயத்தெளிவில் ஆர்வமுள்ள அன்பர்களுக்கு இந்த வ்யாசங்கள் உபகாரமாக இருக்கும் என்பதால் சம்பந்தப்பட்ட உரலைப் பகிர்ந்துகொள்கிறேன்.

  http://othisaivu.wordpress.com/page-7/

  த்ராவிட மடங்களைப் பற்றியும் அந்த மடத்து தம்பிரான் ஸ்வாமிகள் பலரைப்பற்றியும் கிடங்கு கிடங்காக விஷயங்களும் விலா நோகும் படியான அங்கதமும் மிக்க வ்யாசங்களும் அந்த தளத்து ஆர்கைவ்களில் காணக்கிட்டும் என்பது கொசுறுத் தகவல்.

 13. க்ருஷ்ணகுமார்

  என் விக்ஞாபனத்துக்குச் செவிசாய்த்து ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் கருத்துப் பகிர்ந்துள்ளார். இங்கல்லாது அவரது தளத்தில்.

  மேற்கொண்டு சிறியேனும் அங்கு கருத்துப்பகிர்ந்திருக்கிறேன்.

  சம்பந்தப்பட்ட ஓரிரு கருத்துப்பகிரல்கள் இங்கு பகிரப்பட்ட விஷயங்களுக்கு மேலதிகத் தெளிவு கொடுக்கும் என்பதால் அந்த ஓரிரு இடுகைகளை இங்கு நம் தளத்து வாசகர்களுடன் பகிர விழைகிறேன்.

  ஜெனாப் சுவனப்ரியன் அவர்களது சுருக்கமான இடுகை :-

  பொதுவாக நரேந்திர மோடி அவர்களுக்கு இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பொன்றும் இல்லை. அவருக்கு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் தன்னை இந்துத்வாவாதியாக பிரகடனப்படுத்திக் கொண்டு கோத்ரா ரயில் எரிப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். போலீஸ் அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட் “உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் உங்களின் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள்” என்று மோடி சொன்னதை அவ்வளவு லேசில் மறந்து விட முடியாது. “ராஜ தர்மத்தைக் காப்பாற்றுங்கள்” என்று வாஜ்பாய் சொல்லும் அளவுக்குத்தான் அன்றைய மோடியின் ஆட்சி இருந்தது. இஹ்ஸான் ஜாப்ஃரி கடைசி முயற்சியாக மோடியோடு “காப்பாற்றுங்கள்” என்று கதறியதையும் மறந்து விட முடியாது. இள மங்கை இர்ஷத் ஜஹான் போலி எண்கவுண்டரையும் நாம் மறக்க முடியுமா?

  இத்தனை செயல்களையும் இவர் செய்தது இந்து மதத்தின் மேல் உள்ள பற்றினால் அல்ல. ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்த தான் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசையால் எழுந்தவைகளே அவை. இன்று நினைத்ததை சாதித்து விட்டதனால் அதற்காக பிராயச்சித்தம் தேட முயற்சிக்கலாம். அவரது அதிகாரத்துக்கு பயந்து ஒரு சில முஸ்லிம்கள் அவரை வானளாவ புகழலாம். நடந்து வரும் தங்கள் தொழிற்சாலைகளை காப்பாற்றிக் கொள்ள அந்த முஸ்லிம்கள் நரேந்திர மோடியிடம் சரணடையலாம். செய்த தவறுகளுக்கு தண்டனை பெறாத வரை சாமானய முஸ்லிம்கள் நரேந்திர மோடியை என்றுமே மன்னிக்க மாட்டார்கள்.

  “உங்களின் மன்னிப்பு மோடிக்கு தேவையில்லை” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பாதிப்பக்குள்ளான மக்களின் பிரார்த்தனை என்றுமே வீண் போகாது. அவரின் தூக்கத்திலும் செய்த கொடுமைகள் கண் முன்னே நிழலாடும். “அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்” எனும் பழமொழி இன்றில்லா விட்டாலும் என்றாவது நிறைவேறும்.

  தன்னை முன்னிறுத்திக் கொள்ள தனது கட்சியை ஆட்சிக் கட்டிலில் ஏற்ற இந்நாட்டில் எத்தனையோ நேர்மையான வழிகள் உள்ளது. ஆனால் முஸ்லிம்களை வீண் பழி சுமத்தி அவர்களை கொன்று இந்துக்களின் ஓட்டுக்களை ஒருமுகப்படுத்தி அதன் மூலம் தனது அதிகாரத்தை நிறுவியிருக்கும் நரேந்திர மோடியை என்னால் எவ்வாறு பார்க்க முடியும் என்று திரு க்ருஷ்ண குமார்தான் சொல்ல வேண்டும்.

  எந்த வகையிலோ இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்திய முஸ்லிம்கள் உறுதுணையாக இருப்பார்கள். நாட்டை ஆள்வோருக்கு கட்டுப்படச் சொல்லி இஸ்லாமும் கட்டளையிடுகிறது. இனி வரும் ஐந்து வருடத்தில் தேவையற்ற செலவினங்களை குறைத்து அனைத்து மக்களையும் ஒன்றாக பாவித்து நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வாராக!

 14. க்ருஷ்ணகுமார்

  ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் எனது இடுகைக்கு உத்தரமாகப் பகிர்ந்த இடுகையின் சாராம்சம் :-

  \\ ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் மீது 2002 குஜராத் கலஹத்திற்காக இது வரை ஒரு குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்ய முடியவில்லை.//

  ஒரு நாட்டின் முதல்வர் ஒரு கலவரத்தில் நேரிடையாக பங்கெடுக்க மாட்டார். நடக்கும் கலவரங்களை தடுக்காமல் வாய் மூடி மௌனமாக இருப்பது ஒரு முதல்வருக்கு அழகா! டெஹல்கா வெளியிட்ட காணொளிகளை நீங்கள் பார்க்கவில்லையா? பாபு பஜ்ரங்கி ‘நரேந்திர பாய் எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். மியா பாய்களை வெட்டி வீழ்த்தினோம்’ என்று பகிரங்கமாக நடந்த அக்கிரமங்களை ஒத்துக் கொண்டு இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறாரே! மோடி அவர்கள் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் அந்த கலவரங்களை கட்டுப்படுத்தி பல முஸ்லிம் உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் காப்பாற்றி இருக்கலாமே!

  https://www.youtube.com/watch?v=mfnTl_Fwvbo

  இந்த வீடியோவைப் பார்த்து விட்டு உங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

 15. க்ருஷ்ணகுமார்

  ஜெனாப் சுவனப்ரியன் அவர்களுடன் நான் பகிர்ந்த……………

  மற்றும் 2002 கலஹம் சம்பந்தப்பட்டும் இந்த நிகழ்ச்சி சம்பந்தப்பட்டதுமான ………..

  மேலும் இவ்விஷயங்களில் நம் விஷயத் தெளிவு எந்தெந்த ஆவணங்கள் சார்ந்து இருக்க வேண்டும் என்ற என் புரிதல்….

  விஷயத்திற்கு மேலதிகத் தெளிவு கொடுக்கும் என்று நான் எண்ணுவதால் பகிரப்படுகிறது.

  ஜெனாப் சுவனப்ரியன்,

  \\ ஒரு நாட்டின் முதல்வர் ஒரு கலவரத்தில் நேரிடையாக பங்கெடுக்க மாட்டார். \\

  2002 குஜராத் கலஹம் மற்றும் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் …… இந்த இரண்டும்……ஹிந்துஸ்தானத்து மற்றும் எண்ணிறந்த விதேச ஊடகங்கள் மற்றும் பல என் ஜி ஓ க்களுக்கு கிட்டத்தட்ட ஒரு பணம் காய்ச்சி மரமாக கடந்த 12 வருஷங்களாக இருந்தது என்றால் மிகையாகாது.

  கோத்ரா கலஹம் அதையடுத்த 2002 மதக்கலஹத்தில் ஹிந்து மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதும் அதையடுத்து நடந்த ந்யாயாலய விசாரணைகளில் இரண்டு சமூஹத்தைச் சார்ந்த குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதும் ந்யாயாலய தஸ்தாவேஜுகளில் ருஜுவாக்கப்பட்ட விஷயம்.

  தான் குற்றம் செய்திருந்தால் அதற்காக மன்னிக்கப்படக்கூடாது ……….. மாறாக மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் கூறியுள்ளார். எனக்கு அதில் முழு உடன்பாடு உண்டு.

  கலஹம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ………… ஊடகங்களில் ……. உரல்களில் (URL) ………… சம்பவ விவரணைகளாக இல்லாமல் ……….. நமக் மிர்சி மசாலா சேர்க்கப்பட்ட திகில் கதைகள் போலும் ……. சில சமயம் திகில் கதையாக வடிக்க முனைந்து முடியாமல் நகைச்சுவைக் கதையாகவும் …………… மோதி விரோத தொழில் முனைவோர்களால் பரப்புரை செய்யப்பட்ட அவலங்கள் எண்ணிறந்தவை; மேலும் அப்படிப்பட்ட அவலங்கள் வீழ்ச்சி என்ற புள்ளியை தொட்டு விட்டாலும் தொடர்கிறது என்பது நிதர்சனம்.

  அறிவு பூர்வமான முழுமையான சம்பவ விவரணைகள் போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட் – ஆடோப்ஸி ரிபோர்ட் மற்றும் ந்யாயாலய விசாரணைகளை வாசித்து ஆராய்கையில் தெரிய வரும். இது போன்ற மூல மற்றும் முழுமையான ஆவணங்கள் சார்ந்த அறிவு பூர்வமான விவரணைகளை நான் நண்பர் ஸ்ரீ ஒத்திசைவு ராமசாமி அவர்கள் தளத்தில் வாசித்துள்ளேன். அதே தளத்தில் பங்கு பெறும் நண்பர் ஸ்ரீ வெங்கடேசன் அவர்கள் பாபு பஜ்ரங்கி பற்றிப் பகிர்ந்த தகவல்களும் பதிலுக்கு ஸ்ரீ ராமசாமி அவர்கள் பகிர்ந்த தகவலும் நேரடியாக நூற்றுக்கணக்கான பக்கங்கள் சார்ந்த தீர்ப்பு ஆவணங்களில் இருந்து பகிரப்பட்டவை. விஷயத்துக்கு தெளிவு அளிப்பவை.

  நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ……. மூல ஆவணங்கள் சார்ந்து…… அதன்பாற்பட்ட விஷயப்பகிர்வுகளில் எனக்கு முழுமையான அக்கறை உண்டு. இந்த நிகழ்வுகள் சம்பந்தமாக முறையான முழுமையான விபரங்களைக் கொடுப்பவை என்ற படிக்கு. ஊடக கிசுகிசுக்கள் உரல்கள் பேசும் மிகைப்படுத்தப்பட்ட விவரணைகள் போன்றவை பரபரப்புக்கு மற்றும் உரத்துக் கூச்சல் போடுவதற்கு உதவலாம். விஷயத்தெளிவுக்கு உபயோகமற்றவை என்பது என் தாழ்மையான கருத்து.

  கலஹத்தில் மோதி அவர்களின் செயல்பாடு என்பது விவாதிக்கப்பட்ட நிகழ்ச்சியில் ஒரு கூறு மட்டிலும். இஸ்லாமிய சமூஹம் சார்ந்து மற்ற மதசார்பற்ற கட்சிகளின் செயல்பாட்டிலிருந்து ஹிந்துத்வ இயக்கங்களின் செயல்பாடு எப்படி மாறுபட்டது என்பதும் ஒரு கலஹமற்ற அமைதி நிலவும் சூழலில் இஸ்லாமிய சமூஹம் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூஹமும் எப்படி ஒருங்கிணைந்து வளர்ச்சிப்பாதையில் செல்ல முடியும் என்பதும் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

  கலஹ நிகழ்வுகளைப் பொறுத்த வரை நான் முறையாக அறிந்த விஷயங்கள் சொல்பம். மேற்கொண்டு விவாதிக்க விழையும் அன்பர்கள் அவரவர் புரிதல்கள் அல்லது முன் தீர்மானங்களுக்கு ஏற்ப எதைப்பற்றியும் விவாதிக்க விழையலாம். ஊடக பரபரப்பு செய்திகள் URL கிசுகிசுக்கள் போன்றவற்றில் சொல்லப்படும் விஷயங்களில் என் கவனம் இருக்காது. ந்யாயாலய ஆவணங்கள் சார்ந்து பகிரப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் உள்ள படி மதிப்புடன் அறிய விழைவேன்.

  நான் விஷயங்களைப் பகிர்வதைக் காட்டிலும் விஷயங்களில் ஆழ்ந்த புரிதல் மற்றும் அக்கறை உள்ள ஹிந்து மற்றும் முஸல்மாணிய அன்பர்களுடைய……நிகழ்ச்சியைச் சார்ந்த ஒவ்வொரு கூறினைப்பற்றிய பற்றியும் அவரவரது அபிப்ராயங்களை அறிவதில் ஆர்வமாக இருக்கிறேன்.

  கருத்து வேறுபாடுகளால் மட்டிலும் ஆனது அல்ல உலகம். உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடையேயும் வியக்கத் தக்க கருத்தொற்றுமைகளும் உண்டு என்பதனை எனது வாழ்க்கை கற்றுக்கொடுத்துள்ளது.

  கருத்தொற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டு கரம் கோர்த்து…… மக்கள் அன்பு மற்றும் வளர்ச்சிப்பாதையில் செல்வது வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பது என் ஆழமான கருத்து.

  இங்கு பகிரப்பட்ட விஷயங்கள் சில எனது வ்யாசத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களுக்கு மேலதிகத் தெளிவைத் தரும் என்பதால் அதை சம்பந்தப்பட்ட திரியில் பகிர விழைகிறேன்.

  உள்ளீடற்ற வெற்று உணர்வுகள் சார்ந்த கருத்துக்கள் அல்லாது……… கருப்பொருள் சாராத பகிரல்கள் அல்லாது…….. விஷயம் சார்ந்த அறிவு பூர்வமான கருத்துக்களை பகிர விழைந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான் சொல்ல வேண்டிய விஷயம் மேலும் ஏதும் இருக்குமானால் உங்களது தளத்தில் பகிரப்படும் விவாதங்களில் மேற்கொண்டு பங்கு பெறுவேன். மற்ற படி இந்த விவாதம் சம்பந்தமாக விஷயத்துக்குத் தெளிவு தரும் உங்கள் தளத்து பகிரல்களை ஆர்வத்துடன் வாசிக்க விழைகிறேன்.

  குதா ஹாஃபீஸ்

 16. க்ருஷ்ணகுமார்

  அன்பார்ந்த ஸ்ரீமான் கதிரவன், அடியவன், பரமசிவம், ரூபன், பாலமுருகன்

  ராமாயணம் பற்றிய ஒரு வ்யாசம் மற்றும் ஆப்ரஹாமியத்தில் அமிழும் தமிழ்ப்பிரிவினை வாதம் பற்றிய ஒரு வ்யாசம் ……இவ்விரண்டிலும்….. மேலும் எனது கவனம் ஜெனாப் சுவனப்ரியன் அவர்களது கருத்துக்களை அறிவதிலும் ஒருமுக / பலமுகப்படுத்தப்பட்டதால்…….. உங்கள் தனிப்பட்ட கருத்துக்களில் சொல்லப்பட்ட விஷயங்களை உடன் அவதானிக்க முடியவில்லை. அதற்கு எமது க்ஷமா யாசனங்கள்.

  ஸ்ரீ அடியவன் குறிப்பிட்டபடி ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் கருத்து அறிய ஆவலாக இருந்ததால்… மேற்கொண்டு அன்பர் அவர்கள் நமது தளத்தில் கருத்து பகிராததால்……… அவரது தளத்திற்கு சென்று அங்கு ஏதும் பதிந்துள்ளாரா என அறிய விழைந்து அதையும் பகிர்ந்துள்ளேன்.

  எதிர்மறையான விமர்சனங்களில் உள்ள கருத்தாழம் என்னை எப்போதும் கவரும் மற்றும் மேம்படுத்தும் விஷயக்கூறு என்று கருதுகிறேன்.

  எனக்கு இந்த வ்யாசத்தைப் பகிர்வதில் இருந்த பெரும் தயக்கம் அன்பர்களான நீங்கள் பகிர்ந்த நேர்மறையான ஆதரவு மற்றும் வாழ்த்துக்களால் பெருமளவு குறைந்தது என்றால் மிகையாகாது.

  ஸ்ரீ பாலமுருகன் அவர்கள் சொன்ன விஷயத்தை நானும் கவனித்தேன். ஆனால் ஒரு முழுமையான பார்வையை எனது தொடரவிருக்கின்ற வ்யாசத்தில் பகிர முனைகிறேன்.

  அன்பின் ஸ்ரீமான் தாயுமானவன் அவர்கள் பிரிவினை வாதம், அடிப்படை வாதம், மத நல்லிணக்கம் போன்ற விஷயங்களைப் பற்றி கருத்தாழப் பார்வையைக் கொள்ளாது உள்ளீடற்ற கோஷத்தின் பார்வையை…… வ்யக்தி விசேஷம் சார்ந்த பார்வையை……. கொண்டுள்ளார் என்பது என் புரிதல். இதையும் என் தொடரவிருக்கும் வ்யாசத்தில் பகிர முனைகிறேன்.

  \\ . எனவே ஹிந்து ஹ்ருதய சாம்ராட் என்று சொல்வது ஸர்வஜன ஹ்ருதய சாம்ராட் என்று சொல்வது தான். \\

  மிக அழகான மற்றும் நான் பெருமளவு உடன்படும் விளக்கத்தைப் பகிர்ந்த ஸ்ரீமான் கதிரவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அழகான சஹ்ருதய விளக்கம்.

 17. அடியவன்

  தாயுமானவன்

  அண்மைச் செய்தி ஒன்று இதோ :

  /// ஈராக்கில் உள்நாட்டு போரை அரங்கேற்றி, பலரை கொன்று குவித்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இந்தியர்கள் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இந்த இயக்கத்தில் மொத்தம் 18 இந்தியர்கள் உள்ளதாகவும், அவர்கள் மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களின் பின்னணி குறித்து தற்போது உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ///

  சில மேட்டுக்குடி முஸ்லிம்களை உங்களைப் போன்றவர்கள் நம்புவதில்லை. நீங்கள் நம்பும் முஸ்லிம்கள் “வேட்டுக் குடியினர்” எனபது உங்களுக்குத் தெரிவதும் இல்லை!!! நம்மை எல்லாம் இவர்களிடம் இருந்து வேட்டுவக்குடியின் மாப்பிள்ளை முருகன்தான் காப்பாற்ற வேண்டும்.

 18. /// ஈராக்கில் உள்நாட்டு போரை அரங்கேற்றி, பலரை கொன்று குவித்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இந்தியர்கள் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இந்த இயக்கத்தில் மொத்தம் 18 இந்தியர்கள் உள்ளதாகவும், அவர்கள் மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களின் பின்னணி குறித்து தற்போது உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ///

  இதற்கு என்ன ஆதாரம்? யார் அந்த தமிழர்கள்? எதையாவது சொல்லி இஸ்லாத்தை களங்கப்படுத்தும் முயற்சி இனியும் செல்லாது. இணையம் என்ற ஊடகம் அனைத்து பொய்களையும் துகிலுரித்துக் கொண்டிருக்கிறது. கவலை வேண்டாம்.

  மேலும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற போராட்டக் குழுக்களை ஆதரிப்பது ஒன்றும் தேச விரோத செயல் அல்லவே! கேரள செவிலியர்கள் அவர்களை புகழ்ந்ததை நமது தொலைக் காட்சி அனைத்தும் ஒளிபரப்பியதே! அதே போராட்டக் குழுக்கள் அப்பாவிகளை இலக்காக்கி அவர்களை கொன்றொழித்தால் அப்போதுதான் அவர்கள் சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள். அது வரை அவர்கள் தங்கள் நாட்டுக்காக போராடும் போராளிகளே!

 19. கதிரவன்

  இந்தியாவை சேர்ந்த குடிமகன் சுவனப்பிரியன் அவர்களே,

  இந்தியாவுக்கு எதிராக போர் தொடுப்போம்/ இந்தியாவையும் தாக்குவோம் என்று சூளுரைத்துள்ள ஐ எஸ் ஐ எஸ் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் பக்தாதியின் அறிக்கையை தாங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது.

  இந்தியாவுக்கு எதிராகப் போரிடுவேன் என்று சொல்லும் எவரானாலும் எங்களுக்கு எதிரிகளே . இந்தியக்குடிமகன் 18- பேர் அந்த கும்பலில் சேர்ந்தால், அவர்களை எப்படி நம் நாட்டு மக்கள் என்று கருத முடியும் ? நம் நாட்டுக்கு எதிராக போரிடுவோம் என்று சொல்லும் இயக்கத்தில் சேருபவன் யாராயினும் அவன் தேசவிரோதியே. உங்களைப்போன்ற பொய்யர்களின் முகத்திரை சிறிது சிறிதாக கிழிந்து வருகிறது.

  லட்சக்கணக்கான மக்கள் தினசரி வழிபடும் தர்க்காக்களை இடிப்பது நியாயம் என்று பேசும் உங்களின் கருத்து மன்னிக்க முடியாதது. கடவுள் உங்களுக்கும், உங்களைப் போன்ற வன்முறையாளர்களுக்கும் தக்க கூலி வழங்குவான்.

 20. அடியவன்

  சுவனப்பிரியன்

  ///மேலும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற போராட்டக் குழுக்களை ஆதரிப்பது ஒன்றும் தேச விரோத செயல் அல்லவே! கேரள செவிலியர்கள் அவர்களை புகழ்ந்ததை நமது தொலைக் காட்சி அனைத்தும் ஒளிபரப்பியதே! அதே போராட்டக் குழுக்கள் அப்பாவிகளை இலக்காக்கி அவர்களை கொன்றொழித்தால் அப்போதுதான் அவர்கள் சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள். அது வரை அவர்கள் தங்கள் நாட்டுக்காக போராடும் போராளிகளே!///

  நீங்கள் தெரிவித்திருப்பது அப்பட்டமான “இந்திய தேச” விரோதமான கருத்துக்கள்.

  நான் “இந்திய தேச” விரோதமான கருத்துக்கள் என்று சொல்லக் காரணம், நீங்கள் இந்தியாவை உங்கள் தேசமாகக் கருதவில்லை என்ற தோணி உங்கள் மேற்கூறிய வார்த்தைகளில் தெரிகிறது.

  ஐ.எஸ்.ஐ. எஸ். யின் தலைவர் தன்னைக் காலிப் என்று அறிவித்திருக்கிறார். அனைத்துலக முஸ்லிம்களுக்கும் தானே தலைவர் என்றும் அறிவித்திருக்கிறார். அனைத்துலகமும் இஸ்லாம் ஆளவேண்டும் என்று அறிவித்திருக்கிறார். இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் போர் அறிவிப்பையும் செய்திருக்கிறார்.

  இப்படி இருக்க ஐ.எஸ்.ஐ.எஸ். உக்கு ஆதரவு தருவதும், ஈராக்குக்கே சென்று அவர்களுடன் தோளோடு தோள் நின்று போரிடுவதும் தவறில்லை என்று தைரியமாக எழுதி இருக்கிறீர்கள். இதை விடவும் இந்திய தேசத்துக்கு எதிரான கருத்து இல்லை. இந்தியாவிலிருந்து 3000 பேர் ஷியாவும், சுன்னியுமாக ஈராக்குக்கு விசா விண்ணப்பித்த ஆதாரம் உள்ளது.

  ஒரு தேசத் துரோகியோடு விவாதிக்கும் நிலையிலும் அமைதி காக்கும் மனப்பக்குவத்தை அளித்த இந்து மதத்தின் சகிப்புத் தன்மை போற்றற்குரியது.

 21. //இந்தியாவுக்கு எதிராக போர் தொடுப்போம்/ இந்தியாவையும் தாக்குவோம்//

  இவ்வாறு அவர் எந்த இடத்திலும் கூறவில்லை. மாறாக… நமது இந்திய செவிலியர்களிடம் ‘நீங்கள் எங்களுக்கு எதிரியல்ல… எங்களின் சகோதரிகள்’ என்று கூறி அந்த இக்கட்டான நிலையிலும் தாங்கள் நோன்பிருந்தாலும் இந்த பெண்கள் இந்துக்கள் என்பதால் அவர்களுக்காக உணவுக்கு ஏற்பாடு செய்த பெருந்தன்மையும் யாருக்கு வரும்.

  ‘இந்தியாவுக்கு எதிராக போர் தொடுப்போம்’ என்று ஐஎஸஐஎஸ் தலைவர் சொன்னதற்கான ஆதாரத்தை கொடுங்கள், அவரை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

Leave a Reply
*