வன்முறையே வரலாறாய்…- 26

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் பிராந்தியத்தைச் இந்துக்களும் சீக்கியர்களும் எவ்வாறு திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டார்கள் என்பதனைக் குறித்து சிறிது காணலாம்

PARTITION_MIGRATIONஇந்திய பாகிஸ்தான் பிரிவினையில் ஏறக்குறைய இருபது மில்லியன் மக்கள் இரு நாட்டு எல்லைக் கோடுகளையும் கடந்து சென்றார்கள். இந்து மற்றும் சீக்கியர்கள் பாகிஸ்தானிலிருந்தும், முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்தும் இடம் பெயர்ந்தார்கள். முஸ்லிம் லீக், முஸ்லிகளுக்கென தனி நாடு வாங்குவதையும் தாண்டி, பாகிஸ்தான் ஒரு முழுமையான முஸ்லிம்கள் மட்டுமே வாழும் நாடாக மாற்றுவதற்கு எண்ணம் கொண்டவர்களாக இருந்தது கண்கூடு. காஃபிர்களான இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் “தூய” இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இடமில்லை.

எனவே, முஸ்லிம்களல்லாதவர்களை பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்க முஸ்லிம் லீக் மிகுந்த கவனத்துடன் திட்டங்களைத் தீட்டியதுடன் அதனை மிகத் திறமையாகச் செயல்படுத்தவும் துவங்கியது. காஃபிர்களை இனப்படுகொலை செய்யும் முஸ்லிம் லீகின் திட்டத்தைக் கண்டனம் செய்யும் “டைம்ஸ் ஆஃப் லண்டன்”, “முஸ்லிம் லீகின் தொடர்ச்சியான வெறியூட்டும் பொய்ப்பிரச்சாரங்களே பஞ்சாபின் இரத்தக்களரிக்குக் காரணம்” எனக் குற்றம் சாட்டியது.

முகமதலி ஜின்னா மற்றும் முஸ்லிம் லீகின் உயர்மட்டத் தலைவர்களின் வெறியூட்டும், ஆசைவார்த்தைகள் காட்டும் பேச்சுக்கள் பெருவாரியான முஸ்லிம்கள் பாகிஸ்தான் குறித்த கனவினை அவர்களிடையே தூண்டியதாகக் கூறும் காலின்ஸ் மற்றும் ல-பியேர் (Freedom at Midnight), “இஸ்லாமிய “தூய” பாகிஸ்தானில், இந்து வட்டிக்கடைக்காரர்கள், கடை முதலாளிகள், ஜமீன்தார்கள் (பெரும்பாலோர் சீக்கிய நிலச்சுவான்தார்கள்) போன்றவர்கள் காணாமல் போவார்கள்.,,,பாகிஸ்தான் நமது என்றான பிறகு அங்கே கடைக்காரர்கள் நம்மவர்கள், பண்ணைகள் நம்முடையவை, வீடுகளும், தொழிற்சாலைகளும் இந்து மற்றும் சீக்கியர்களிடமிருந்து நம்மிடம் வந்து சேரும்” என்று முஸ்லிம்களிடையே ஆசையைத் தூண்டினார்கள் என்கின்றனர்.

மேலும் தொடரும் காலின்ஸ் மற்று ல-பியேர், “இந்து மற்றும் சீக்கியர்களின் முகவரிகள் தாங்கிய ஆயிரக்கணக்கான கடிதங்களும், தந்திகளும் லாகூரின் மத்திய தபால் தந்தி அலுவலகத்திற்கு  வந்து குவிந்தன. படுகொலை செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் கற்பழிக்கப்பட்ட பெண்களின் படங்கள் அந்தக் கடிதங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அப்படங்களின் பின்புறம் எழுதப்பட்டிருந்த செய்தி, ‘முஸ்லிம்கள் உங்களின் நிலத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர்களின் கையால் இந்து, சீக்கிய சகோதரர்களுக்கு நடந்த இந்த நிலைமையே உங்களுக்கும் காத்திருக்கிறது’ என்றது. இந்துக்களின் மனோபலத்தைக் குறைத்து அவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கும் விதமாக முஸ்லிம் லீகினால் அனுப்பி வைக்கப்பட்டவையே அந்தக் கடிதங்கள்.” என விளக்குகின்றனர்.

images (1)பாகிஸ்தான் கவர்னர் ஜெனரான முகமதலி ஜின்னாவின் லாகூர் அலுவலகத்திருந்து செப்டம்பர் 5, 1947 தேதியிட்ட கடிதமொன்று, “இந்துக்களும் சீக்கியர்களும் எவ்வாறு எல்லையைக் கடந்து செல்லப் போகிறார்கள் என்பது குறித்து எனக்குக் கவலையில்லை என்று எல்லோருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இங்கிருந்து எவ்வளவு விரைவாக ஒழிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒழிப்பது நல்லது. லைலாபூரில் இருக்கும் மூன்று இலட்சம் சீக்கியர்கள் அங்கிருந்து நகர்வது போலத் தெரியவில்லை. ஆனால் அவர்களை அங்கிருந்து விரைவாக வெளியேற்ற வேண்டும்” என உத்தரவிடுகிறது.

கல்கத்தாவானாலும், நவகாளியானாலும் அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பாகிஸ்தானாகாட்டும், அங்கிருந்த போலிஸ் படையானது பெரும்பாலும் முஸ்லிம்களை மட்டுமே உடையதாக இருந்தது. பிரிவினைக் கலவரங்களைத் தடுக்கத் துளியும் முயலாத அந்தப் போலிஸ்காரர்கள் அதற்கும் மேலாக இந்து மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையிலும், கலவரங்களிலும், கொள்ளையிலும், தீவைப்பிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டாரகள். கல்கத்தாவின் முதன் மந்திரியாக இருந்த சுஹ்ராவர்த்தி அங்கு நடந்த கலவரங்களில் நடந்து கொண்ட முறைகளை ஏற்கனவே கண்டோம். இஸ்லாமியர்கள் கலவரம் செய்வதற்கு வசதியாக கல்கத்தாவின் 95% காவல் நிலையங்களில் முஸ்லிம் அதிகாரிகளை மட்டுமே நியமித்ததுடன், காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு இந்துக்களுக்கெதிரான கலவரங்களை வழி நடத்தியவர் அவர் என்பது நினைவிருக்கட்டும்.

பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானில் சிறிது காலம் (1954) முதன் மந்திரியாகப் பணிபுரிந்த, ஷேர்-எ-பங்ளா (Tiger or Bengal) என்றழைக்கப்பட்ட எ.கே.ஃபஸலுல் ஹக், கல்கத்தாவில் நடந்த கலவரங்களைக் குறித்துக் கூறுபவை மிக முக்கியமானவை. கலவரங்களைக் குறித்து வங்காள சட்ட சபையில் செப்டம்பர் 19, 1946 அன்று உரை நிகழ்த்தும் ஃபஸலுல் ஹக், “கல்கத்தாவில் ஏதோ புத்துலக நாதிர் ஷா படையெடுத்து வந்தது போலத் தோன்றுகிறது…கலவரங்களும், கற்பழிப்புகளும், கொள்ளையும், தீயிடலும்…..காவலதிகாரிகளைத் நான் தொடர்பு கொள்ள முயன்ற ஒவ்வொரு முறையும் என்னை போலிஸ் கட்டுப்பாட்டு அறையைக் தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறார்கள்….”

கலவரம் நடக்கையில் கல்கத்தாவின் அரசு அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொள்ள முயன்று தோல்வியுற்ற ஃபஸலுல் ஹக், “எந்தப் போலிஸ் அதிகாரியும் நான் சொல்வதனைக் கேட்கவில்லை; கட்டுப்பாட்டு அறை காவல் அதிகாரிகளும் சரி அல்லது அரசாங்க அதிகாரிகளும் சரி என் பேச்சைக் கேட்கவே இல்லை. எந்த விதமான அச்சமும், கட்டுப்பாடும் இல்லாமல் நடந்த இந்தப் படுகொலைகளை அடக்க காவல் துறையும், ராணுவமும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கலவரம் ஆரம்பித்த 16-ஆம் தேதியே (வெள்ளிக்கிழமை!) இதனை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம்….” எனத் தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். முஸ்லிம்களிடையேயும் அபூர்வமான மனிதாபிமானம் உள்ளவர்களுக்கு ஒரு உதாரணமான ஃபஸலுல் ஹக்.

மேற்கு பாக்கிஸ்தான் பகுதியில் பிரிவினையின் போது நடந்த வன்முறைகளை விளக்க வரும் பத்திரிகையாளர் குர்பச்சன் சிங் தாலிப், ”

Riot-victims.-India-1947.“…..முற்றிலும் முஸ்லிம்கள் நிறைந்த போலிஸ்காரர்களும், ராணுவத்தினரும் இஸ்லாமிய குண்டர்கள் அப்பாவி இந்து மற்றும் சீக்கியர்களைத் தாக்குவதனைத் தடுக்க பெயரளவில் மட்டுமே முயற்சிகள் செய்தனர். அல்லது செய்வது போல நாடகமாடினர். அதனையும் விட முஸ்லிம் போலிஸ்காரர்களும், ராணுவத்தினரும் இந்தக் கலவரத்தில் முழுமையாக ஈடுபட்டதுடன், கலவரம் நடத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு ஊக்கமளித்தனர். இன்னும் சில சம்பவங்களில் மேற்படி போலிசும், ராணுவமும் இக்கலவரங்களைத் தலைமேயேற்று நடத்தியது. முஸ்லிம் குண்டர்களால் முழுவதும் கொல்ல முடியாத இந்து மற்றும் சீக்கியர்களை இவர்கள் கொன்று தீர்த்தனர்….ஆகஸ்ட் மாத முடிவிற்குள் லாகூரில் வாழ்ந்த இந்து மற்றும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு அல்லது அங்கிருந்து விரட்டப்பட்டிருந்தனர். மிக, மிகச் சில இந்து மற்றும் சீக்கியர்கள் மட்டுமே அதாவது வெறும் ஒரு இலட்சம் பேர்கள் மட்டுமே இவர்களிடமிருந்து தப்பிப் பிழைக்க முடிந்தது….” என நிலைமையை விளக்குகிறார்.

சிவில் மற்றும் ராணுவ கெஜட் அளிக்கும் தகவலின்படி, முஸ்லிம்களல்லாதோர், குறிப்பாக சீக்கியர்கள் லாகூரைத் தங்களின் பரம்பரை நகராகக் கூறி அங்கிருந்து அகல மறுத்தனர். அவர்களின் அந்த மறுப்பு மிகக் கொடூரமான முறையில் படுகொலைகளிலும், கொள்ளைகளிலும் முடிந்தது. முஸ்லிம் குண்டர்களால் நடத்தப்பட்ட எண்ணிப்பார்க்க இயலாத கொடும் வன்முறை காரணமாக லாகூரின் தெருக்களில் 9000 இந்து, சீக்கியப் பிணங்கள் எரிப்பாரும், புதைப்பருமின்றி அழுகிக் கிடந்தன.

குர்பச்சன் தாலிப், “ஆகஸ்ட் 10, 1947 அன்று லாகூரின் அனைத்து இந்து, சீக்கியப்பகுதிகள் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தன. முஸ்லிம் போலிஸ்காரர்கள் இஸ்லாமியர்களல்லாதோரின் மீது தாக்குதல்கள் நடத்தும் வன்முறைக் கும்பல்களை வழி நடத்திக் கொண்டிருந்தார்கள்” என மேலும் கூறுகிறார். லாகூரின் கலவரங்களை நேரில் கண்ட “ஹிந்துஸ்தான் டைம்சின்” பத்திரிகையாளர் ஒருவர், “மதவெறியூட்டப்பட்ட படையினராலும், போலிஸ்காரர்களும், குண்டர்களாலும் மேற்கு பஞ்சாபில் மூன்று வாரங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரங்களினால் இப்பகுதியின் எழுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்து மற்றும் சீக்கியர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். ஆயிரக்கணக்கான ரவுண்டு துப்பாக்கித் தோட்டாக்கள் உபயோகிக்கப்பட்டு நடந்த இந்தப் பயங்கரமான படுகொலைகளில் கணக்கற்றவர்கள் கொல்லப்பட்டனர். ஷேக்புரா பகுதியில் நடந்த படுகொலையானது ஜாலியன் வாலாபாக்கினை விடவும் பலமடங்கு அதிமானது” என விவரிக்கிறார்.

கலவரம் துவங்கிய நாளிலிருந்தே முஸ்லிம் போலிஸ்காரர்களும், ராணுவத்தினரும் பாகிஸ்தான் பகுதியில் கலவர கும்பலுடன் கூட்டுச் சேர்ந்தே இந்து, சீக்கியர்களைத் தாக்கியழித்தனர் என்பதற்கு பல உதாரணங்கள் எடுத்துக் கூறுகின்றனர் பத்திரிகையாளர்களும், வரலாற்றாசிரியர்களும். உதாரணமாக மார்ச் 5, 1947-ஆம் தேதி பாகிஸ்தானின் ராணுவத்தினருடன் லாகூரின் ராஹ் மஹால் பகுதிக்கு வந்த முஸ்லிம் குண்டர்கள் அங்கிருந்த இந்து, சீக்கியர்களைத் தாக்கத் துவங்கினர். அங்கிருந்த இந்து மற்றும் சீக்கியர்கள் அதனை எதிர்த்துப் போராட ஆரம்பிக்க, உடனடியாக அங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டரின் தலைமையில் வந்த போலிஸ் படையொன்று அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் துவங்கியது. இதனை எதிர்த்துக் கேட்ட ஒரு இந்துவை அந்த முஸ்லிம் சப்-இன்ஸ்பெக்டர் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றான்.

மார்ச் 6, 1946 அன்று அமிர்ஸ்டரில் இஸ்லாமியக் குண்டர்கள் கலவரத்தைத் துவக்கியபோது, அந்தப்பகுதியிலிருந்த அத்தனை இந்து மற்றும் சீக்கிய போலிஸ்காரர்கள் அகற்றப்பட்டு அவர்களுக்குப் பதிலாக முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டனர். இதனைக் குறித்துக் கூறும் பத்திரிகையாளர் கோஸ்லா, “முஸ்லிம் மாஜிஸ்ட்ரேட்டுகளும், முஸ்லிம் போலிஸ்காரர்களும் கூட்டுச் சேர்ந்து அங்கு கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர்” என்கிறார். அதுவே ராவல்பிண்டிப் பகுதியில் நடந்த கலவரத்திலும் நிகழ்ந்தது. ஒரு மூத்த சீக்கிய அட்வகேட் லாகூரின் மாஜிஸ்ட்ரேட்டிடம் இது குறித்துப் பேசியபோது அந்த மாஜிஸ்ட்ரேட், “தவறான வதந்திகளை அந்த சீக்கிய அட்வகேட் பரப்புவதாகவும், அதுவே அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும்” என்று மிரட்டியதாகவும் மேலும் கூறுகிறார் கோஸ்லா.

PARTITION-PICS.jpg-Jமுஸ்லிம்கள் பெரும்பான்மையாயிருந்த அத்தனை பகுதிகளிலும், தேசப்பிரிவினையின் போது இதுவே நிகழ்ந்தது என்பதினை நாம் நினைவில் கொள்ள வேண்டும். லாகூரில் ஆகஸ்ட் 1947-இல் இந்து, சீக்கிய மக்களுக்கு எதிரான வன்முறையில் பலூச்சி ரெஜிமெண்ட் மிகப் பிரதான இடத்தை வகித்தது. அதனையும் விட அந்த லாகூரின் ஜங் பகுதி மாஜிஸ்ட்ரேட்டான பிர் முபாரக் அலி ஷா தனது துப்பாக்கியைச் சுட்டுக் கொண்டு ஒரு பெரும் முஸ்லிம் கும்பலுக்குத் தலைமை தாங்கிச் சென்றதுவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு நேரெதிராக இந்தியப் பகுதியில் அதிகாரிகள் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு மிகுந்த முனைப்புக் காட்டினார்கள். இதனைச் சுட்டிக் காட்டும் பத்திரிகையாளர் கோஸ்லா, “இந்திய அரசாங்கம் கலவரப்பகுதிகளுக்கு படைகளை அனுப்பி கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கையில், பாகிஸ்தான் பகுதியைச் சார்ந்த மேற்கு பஞ்சாப் அரசாங்கம் கலவரக்காரர்களுக்கு சகலவிதமான ஆதரவும் அளித்து அவர்களை இந்து, சீக்கியர்களைத் தாக்க அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.” என்கிறார்.

இந்தியப் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த கலவரங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனைகள் அளிக்கப்பட்ட அதே நேரத்தில் பாகிஸ்தான் பகுதியில் அது போன்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதினை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 (தொடரும்)

 

 

 

 

5 Replies to “வன்முறையே வரலாறாய்…- 26”

  1. இந்த தொடரினை அப்படியே புத்தகமாக வெளியிட்டு, நம் இளைய சமுதாயத்திற்கு, நமது தேசத்திற்கு மட்டுமல்ல; உலகத்திற்கே அச்சுறுத்தலாக உள்ள ‘அன்பு மார்க்கத்தாரின்’ சுயரூபத்தை உணர்த்த வேண்டும். அப்படியாவது ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் நம் இந்துசமுதாயம் விழித்துக்கொள்ளட்டும்!

  2. இந்த மாதிரியான வரலாற்று விஷயங்களை எடுத்துச் சொன்னாலே நம்மை ஏதோ வன்முறையாளன் போல மற்றவர்கள் சித்தரிக்கிறார்கள். மக்களும் இதை நம்புகிறார்கள். இதற்கு காரணம் நமது பள்ளி கல்லூரிகளில் பயிலப்படும் வரலாற்றில் இந்த விஷயங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதுதான்.

    வரலாறு என்றொரு டிவி சேனல் ஆரம்பித்து இந்த விஷயங்களை ஆதாரப்பூர்வமாக திரும்ப திரும்ப பேசுவதால் மட்டுமே, மக்கள் இதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு நமது கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் கற்றுகொள்வார்கள்.

    என்றெண்டும் அன்புடன்,
    பா. முரளி தரன்.

  3. Superb articles,please bring them all in the forms of DVDs,cdsbooks with illustrations
    Even now these people are like this only

  4. //////வரலாறு என்றொரு டிவி சேனல் ஆரம்பித்து இந்த விஷயங்களை ஆதாரப்பூர்வமாக திரும்ப திரும்ப பேசுவதால் மட்டுமே, மக்கள் இதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு நமது கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் கற்றுகொள்வார்கள்//////

    திரு முரளிதரன் எண்ணம் நல்ல எண்ணம்தான். ஆனால் இந்த “தமிழ் இந்து” தளத்தை மிக சிலர்தான் பார்க்கிறார்கள். எனவே “தமிழ் இந்து” என்ற பெயரில் ஒரு தினசரி ஆரம்பியுங்கள் என்று இந்த இணைய தளத்திதினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்தேன்.(த ஹிந்து என்ற தமிழ் பத்திரிக்கையில் இந்து மதத்தையும் இந்துக்களையும் மிக கேவலமாக எழுதுகின்றனர். அதனால் அதற்கு சவாலாக “தமிழ் ஹிந்து” அமையட்டும் என்ற எண்ணத்தில்) ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆனது. இந்த லட்சணத்தில் நீங்கள் “வரலாறு” என்று ஒரு டிவி சானல் துவங்க சொல்கிறீர்கள். இது ஆககூடிய காரியமா? You are crying for the moon .திரு கோபால்சாமி உங்கள் கருத்தை ஆதரிக்கிறார். சந்தோஷமே! ஆனால் உங்கள் கருத்தை ஆதரிக்க வேண்டியவர்கள் ஆதரிக்க மாட்டார்களே! என்ன செய்ய?

    இவர்களுக்கும் சரி, தமிழக பிஜேபிகாரர்களுக்கும் எந்த ஒரு நல்ல யோசனையும் கூறுவது பயனற்றது நான் எப்போதோ தெரிந்து கொண்டேன். நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *