காமிக்ஸ் படித்தீர்களா?

எல்லோருக்கும் ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களை கொன்றது தெரியும். வதை முகாம்களில் அவர்கள் அனுபவித்த துயரம், நாஸிகள் அவர்களிடம் காட்டிய மனிதத்தன்மையற்ற கொடுமை. இவை குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு திரைப்படமாவது ஒரு நாவலாவது வந்து கொண்டே இருக்கும். morning_hindutvaஆனால் நாசிகளால் குறிவைத்து அழிக்கப்பட்ட மற்றொரு இனமும் உண்டு. அது குறித்து மேற்கத்திய பொது பண்பாடு பேசுவதே இல்லை. அவர்கள்தான் ஜிப்ஸிகள் எனப்படும் நாடோடிகள். இவர்கள் இந்தியாவிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்தவர்கள். தம்மை ‘ரோமா’ என அழைக்கின்றனர். ஐரோப்பாவிலெங்கும் வாழ்ந்தவர்கள். ஜோதிடம், குறி சொல்வது என வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். நாடு நாடாக துரத்தியடிக்கப்பட்ட இந்த மக்கள் நூற்றாண்டுகளாக நாடோடிகளாகவே அலைந்து திரிந்தனர். நாசிகள் இவர்களை ‘தாழ்ந்த’ வாழத்தகுதியற்ற இனமாக கருதினர். இவர்களின் குழந்தைகள் பிடிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் இரண்டாம் உலகப்போரின் பேரழிவுகள் குறித்த பொதுவான நூல்களில் நீங்கள் ’ரோமா’க்களை எளிதாக சந்திக்க முடியாது. கூடி கூடி போனால் ஓரிரு வார்த்தைகள் அவ்வளவுதான்.

இத்தகைய சூழலில்தான் தமிழ் காமிக்ஸில் அண்மையில் வெளிவந்த லயன் காமிக்ஸின் 29 ஆவது ஆண்டு மலர் வெளியிட்டுள்ள  ‘கிராபிக்ஸ் நாவல்’ என்கிற சமாச்சாரம் ஒரு மாற்று அதிர்ச்சியை அளித்தது. அண்மைக்காலமாக தமிழ் காமிக்ஸ் உலகத்தில் சில முக்கிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. தமிழ் காமிக்ஸ் உலகம் என்பது பெரும்பாலும் ஐரோப்பிய காமிக்ஸ்களை தமிழில் மொழி பெயர்த்து கொடுக்கும் உலகம்தான். அதில் எப்போதுமே ஒரு ஐரோப்பிய மைய அல்லது மேற்கத்திய மைய பார்வை இருக்கும். குறிப்பாக அமெரிக்க ‘வன்மேற்கு’ (wild west) குறித்த காமிக்ஸ்களில் பூர்விகக் குடிகளின் புரட்சிகள் அனைத்துமே மனநிலை சரியற்ற கிறுக்கர்களாலும் lioncomicsஅமெரிக்க அரசுக்கு தெரியாமல் செயல்படும் ஆயுத வியாபாரிகளாலும் இருக்கும். ஆனால் அமெரிக்க அரசும் வெள்ளையர்களான கௌபாய்களும் அவர்களை மரியாதையுடன் அழைக்கும் ஒரு சில சிவப்பிந்தியர்களுமாக அந்த புரட்சிகர பூர்விகக் குடிகளைத் தோற்கடிப்பார்கள்.  இந்த ஐரோப்பிய மைய – அமெரிக்க மைய பார்வைக்கு நாம் காமிக்ஸ்களை குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. அது அவர்களின் பார்வை. அவர்களுக்கு எது முக்கியமோ அது சொல்லப்படும். அவர்களுக்கு எது ஆதாயமோ அது நியாயப்படுத்தப் படும். இரண்டாம் உலகப்போர் குறித்த காமிக்ஸ் என்றால் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்க, பிரிட்டிஷ் படையினரின் சாகசங்கள் அவ்வளவுதான்.

இந்த கிராபிக்ஸ் நாவலின் பெயர் ‘பிரளயத்தின் பிள்ளைகள்’.  2012 Guy Delcourt பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இதற்கான அருமையான ஓவியங்களைத் தீட்டியவர் ஓவியர் பெடெண்ட்.  gypsies_comicsகதை  இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தை ஒட்டியது. சிகானீஸ் அல்லது சின்காலீஸ் என அழைக்கப்படும் ரோமாக்கள் ’இந்து’ ரோமாக்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் மீதான வெறுப்பு இன்னும் அதீதமானது. இந்த நாடோடிகளுக்கு எதிராக ஐரோப்பியாவெங்கும் நிலவிய பொது வெறுப்பு மனநிலையையும் நாசிகளால் இவர்களின் குழந்தைகள் கடத்தப்பட்டு மனிதத்தன்மையற்ற பரிசோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டதையும், இறுதியில் நாசி வதைமுகாம்களில் இந்த நாடோடிகளே அடைக்கப்படுவதையும் நாவல் கூறுகிறது. முழு கதையை இங்கே சொல்லப் போவதில்லை. இவர்களின் குழந்தைகள் கடத்தப்பட்டது மட்டுமல்ல,  இவர்களையே பிள்ளை பிடிப்பவர்கள் என அடையாளப்படுத்திய கொடுமையும் ஐரோப்பிய பொது புத்தியில் இருப்பதையும் நாவல் காட்டுகிறது.ரோமா-நாடோடிகளின் பாரத பண்பாட்டு தொடர்ச்சி இந்த நாவல் முழுக்க வருகிறது.  gypsy2அருமையாக. நாசிகளை பொதுவாக சித்தரிக்கையில் ஐரோப்பிய பொதுபுத்தி ஒரு மோசமான தந்திரத்தை பயன்படுத்தும். நாசிகள் இந்திய பண்பாட்டுச் சின்னமான ஸ்வஸ்திகாவை பயன்படுத்தினர்.  இது ஒரு மோசமான பண்பாட்டுத் திருட்டு. நியாயப்படி இதற்கு இந்தியர்களிடம் ஐரோப்பா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக இதை ஐரோப்பா பயன்படுத்தி ஏதோ நாசிகள் ஐரோப்பிய பொதுபண்பாட்டுக்கு தொடர்பில்லாதவர்கள் என காட்ட ஸ்வஸ்திகாவை நாசி சின்னமாக பயன்படுத்திக் கொண்டது. ஆனால் இந்த காமிக்ஸ் நாவலில் இந்திய வம்சாவளி நாடோடி பெண் நாசியை கொல்லும் போது கீதை சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.

யூதர்களை பொறுத்தவரையில் நாசி கொடுமை தலைமுறைகள் கடந்துவிட்ட ஒரு கொடும் நினைவு. ஆனால் இந்த இந்திய வம்சாவளி நாடோடிகளுக்கோ இன்றும் ஐரோப்பாவில் கொடுமைகள் தொடர்கின்றன. அக்டோபர் 2013 இல் கிரேக்க காவல்துறை இவர்களின் முகாம் ஒன்றில் இருந்த மரியா என்கிற பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டனர். அவளுக்கு பொன்னிற (blonde) முடியும் வெளுத்த தோலும் இருந்தது. maria1பிறகென்ன… காவல்துறை இந்த பெண் குழந்தை ரோமா-நாடோடிகளால் கடத்தப்பட்டிருக்கும் ஐரோப்பிய குழந்தை என முடிவு செய்தனர்.  நான்கு வயது மரியாவை பராமரித்து வந்த ரோமா தம்பதியினர் காவல்துறையினரிடம் மீண்டும் மீண்டும்  மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். பல்கேரியாவில் இந்த குழந்தை ஒரு ரோமா நாடோடி பெண்ணுக்கு பிறந்தது. பராமரிக்க முடியாத அந்த பெண் இக்குழந்தையை இந்த தம்பதிகளிடம் ஒப்படைத்தாள். ஆனால் ஐரோப்பிய பொதுபுத்தி முழு கூச்சலுடன் வெளிப்பட்டது. அயர்லாந்தில் இரண்டு குழந்தைகள் -அவர்களுக்கும் பொன்னிற கேசம் இருந்ததால்-  ரோமா பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கப்பட்டனர்.  ஐரோப்பியா எங்கும் நூற்றாண்டுகளாக முழுக்க குழந்தை திருடர்களாக முத்திரை குத்தப்பட்ட ஜிப்ஸிகள் மீதான வரலாற்றுக் குற்றத்துக்கு இதோ ஆதாரம். ஒரு வாரமாக இந்த வெறுப்பு அலை 2013 இலும் வீசியது.  பின்னர் மரபணு – டி.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை மரியா ’ரோமா’ சமுதாய குழந்தைதான் என்பதை உறுதி செய்தன. பின்னர் அவள் பல்கேரியாவுக்கு அனுப்பப்பட்டாள். பல்கேரியாவில் பாரத வம்சாவளி ரோமாக்கள் அந்த தேசத்தின் மக்கள் தொகையில் பத்து சதவிகிதம். பல்கேரியாவில் கடத்தி பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளில் 80 சதவிகிதம் ’ரோமா’ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான். நாஸி காலகட்டத்தில் ஐரோப்பாவின் ரோமாக்களில் 25 சதவிகிதத்தினர் கொன்றொழிக்கப்பட்டார்கள். கம்யூனிஸ்ட் ஆட்சியில் அவர்கள் தனி முகாம்களில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டனர்.  பிச்சை எடுக்க வைப்பது, போதை மருந்து கடத்தல் கும்பல்கள், கட்டாயப்படுத்தி குழந்தைகளை விற்க வைப்பது என பல கொடுமைகளை  இந்த பாரத வம்சாவளியினர் தொடர்ந்து ஐரோப்பாவில் அனுபவித்து வருகின்றனர்.மரியா விஷயத்தில் நடந்தது போலவே அயர்லாந்திலும் நம்மவர் பக்கம்தான் நீதி இருந்தது. அயர்லாந்தின் பிரதமர் இதை ஒத்துக் கொண்டார்.

ஆனால் தொடர்ந்து இந்த தொன்மையான பாரத வம்சாவளியினருக்கு ஐரோப்பியாவெங்கும் அநீதிகள் இழைக்கப்பட்டுத்தான் வருகின்றன. இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்வது?

 • நம் மக்களுக்கு ஐரோப்பாவில் மிக மோசமான அநீதிகள் இழைக்கப்பட்டு வாழும் நம் சகோதர சமுதாயத்தைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
 • ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நாசிகளால் மடிந்த ’ரோமா’ மக்களின் நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது. அதை பாரதத்தில் பிரபலப்படுத்த வேண்டும்.
 • இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இம்மக்களின் சர்வதேச மாநாடு ஒன்றை பாரதத்தில் கூட்டினார். அதை இன்னும் வலிமையாக இன்றைய பிரதம மந்திரி முன்னெடுக்க வேண்டும்.
 • இம்மக்களின் மனித உரிமைகளுக்காக பாரதம் குரல் கொடுக்க வேண்டும்.
 • கடந்த ஏழு நூற்றாண்டுகளுக்கு மேலாக நீதி மறுக்கப்பட்டு பல்வேறு படுகொலைகளுக்கு ஆளான நம் சகோதர சமுதாயத்துக்காக ஒரு நினைவுத்தூண் பாரத தலைநகரில் நிறுவப்பட வேண்டும். இஸ்ரேலில் நாசி வதை முகாம்களில் கொல்லப்பட்ட யூதர்களுக்கு இருப்பது போன்ற நினைவேந்தல் மண்டபம் கண்காட்சியுடன் உருவாக்கப்பட வேண்டும். இது ரோமாக்களுக்கு மட்டுமல்லாது உலகமெங்கும் ஒடுக்கப்படும் பண்டைய பண்பாட்டு மானுட சமூகங்களுக்கான உரிமை மையமாக இருக்க வேண்டும். பங்களா தேஷில் ஒழிக்கப்படும் பௌத்த-இந்து மக்கள், குர்திஷ் சமுதாய மக்கள், திபெத்தியர், மலேசிய இந்துக்கள், ஃபிஜி இந்துக்கள், ஈழத்தமிழர், ரோமாக்கள், ஆஸ்திரேலிய பூர்விகக் குடிகள், ஆப்பிரிக்க ஆன்மிக மரபினர், அமெரிக்க பூர்விகக் குடிகள் ஆகிய அனைத்து மக்களின் ஒன்றுபட்ட மையம் ஒன்றை உருவாக்கி இம்மக்களின் மனித உரிமைகள் குறித்த அறிக்கை ஒன்றை பாரத அமைப்பு ஒன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டு வர வேண்டும்.

இவற்றின் மூலம் மற்றொரு பேரழிவு நம் பண்பாட்டு பாரம்பரிய வம்சாவளியினருக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். இதற்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியை பயன்படுத்துவோம்.

 

Tags: , , , , , , , , , ,

 

9 மறுமொழிகள் காமிக்ஸ் படித்தீர்களா?

 1. mahesh kumar on July 3, 2014 at 4:44 pm

  கண்டிப்பாக ஒரு ஒற்றைப் பொது அடையாளம் தேவை ..அது உலகின் பல மூலைகளில் துன்பப்படுகின்ற இந்தியர்களுக்கு ,நம் பின்னால் பாரத தேசம் உள்ளது என்ற உணர்வை தரும் ..ரோமா இனத்தவர்கள் கூட தாங்கள் இந்திய மரபணுவின் தொடர்ச்சி என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாக பத்திரிகைகளில் படித்திருந்தேன் ..அரவிந்தன் நீங்கள் பலரும் கவனிக்காதது போல் கடந்து செல்லும் விசயங்களை கூட நன்றாக எழுதுகிறீர்கள் ..தொடரட்டும் உங்கள் எழுத்து…

 2. suvanappiriyan on July 4, 2014 at 5:56 am

  வெளி நாடுகளில் உள்ள பல இனங்கள் கொடுமைக்குள்ளாவதைப் பற்றி அரவிந்தன் கவலைப்படுகிறார். அந்த கவலைகளோடு சேர்த்து நமது சொந்த மண்ணில் இன்றும் தீண்டத்தகாதவர்களாக, செருப்பணிய சுதந்திரம் இல்லாதவர்களாக, பொது குளத்தில் தண்ணீர் எடுக்க வக்கற்றவர்களாக, கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்களாக, சிரட்டையில் தேனீர் குடிப்பவர்களாக தினம் தினம் செத்து பிழைக்கும் நம் ஊர் தலித் மக்களின் விடிவுக்கு ஏதாவது வழி சொன்னால் புண்ணியமாகப் போகும்.

 3. க்ருஷ்ணகுமார் on July 4, 2014 at 2:10 pm

  அன்பிற்குரிய ஜெனாப் சுவனப்ரியன், ரம்ஜான் முபாரக்.

  தலித் ஹிந்து சஹோதரர்களுக்கு நீங்கள் சொல்லும் கொடுமைகள் இன்றளவும் நிகழ்த்தப்படுவதை ஹிந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்டிருக்கின்றன. ஹிந்துத்வ இயக்கங்களது அயராத பணியால் உத்தபுரம் போன்ற சில இடங்களில் நீங்கள் சொல்லும் கொடுமைகள் அறவே ஒழிக்கப்பட்டு சமூஹத்தின் அனைத்துப் பிரிவினரும் அன்பொடு பழகும் பாங்கும் கோவில் விழாக்களில் அனைவரும் பங்கெடுக்கும் மாண்பும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முருகனருளால் ஹிந்துஸ்தானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இது போன்ற முயற்சிகள் நல்ல பயனைத்தரும் என்று ஹிந்துக்களுக்கு நம்பிக்கையும் உண்டு. ம்………ஹிந்துத்வ இயக்கத்தினரது சமூஹ நல்லிணக்கப்பணிகள் இன்னமும் துரித கதியில் இன்னமும் பரவலாக நிகழ்த்தப்பட வேண்டும் என்பதிலும் கருத்தொற்றுமை உண்டு.

 4. தாயுமானவன் on July 4, 2014 at 4:27 pm

  //தலித் ஹிந்து சஹோதரர்களுக்கு நீங்கள் சொல்லும் கொடுமைகள் இன்றளவும் நிகழ்த்தப்படுவதை ஹிந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்டிருக்கின்றன..//

  அட ஈஸ்வரா!!!!! இதை நான் கேள்வி பட்டதே இல்லை… இந்துத்துவ இயக்கங்கள் அவ்வளவு நல்லவர்களாக மாறி விட்டார்களா? ஹ்ம்ம்… ஹிட்லரின் நாசி கட்சி யூதர்களுக்கு நல்லது செய்தார்கள் என்று கூறும் முகமாக இருக்கின்றது.

  அட, உத்தபுரத்தை விடுங்கள், தற்பொழுது அனைத்து சாதியனரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற தீர்மானத்தை எதிர்த்து நீதி மன்றத்திற்கு சென்று தடை வாங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிவாசாரியார்களையும், தமிழ்நாடு பிராமணர் சங்கத்தையும் முதலில் வழக்கை திரும்ப பெற சொல்லி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கட்டும் . அதன் பிறகு இந்துத்துவா இயக்கங்களுக்கு “சமுக நீதி காவலர்கள்” என்கிற பட்டதை கொடுக்கலாம்.

 5. BALA SUNDARAM KRISHNA on July 5, 2014 at 12:51 am

  சுவனப்பிரியன் அரவிந்தனின் selective amnesia வைத்தான் சுட்டிக்காட்டுகிறார். எங்கோயோ நடக்கும் கொடுமைகளைப் பட்டியலிட்டு உணர்ச்சிகரமாக எழுதும் அரவிந்தன் அவர் வீட்டுக்கொல்லைப்புறத்தில் நடக்கும் கொடுமைகளைத் தெரிந்தும் தெரியாதமாதிரி நடிப்பதேன்? அவற்றையுமல்லவா சேர்த்துப் பேசவேண்டும் ?

  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை ஏன் இவ்வியக்கம் தெருவில் இறங்கிச்சொல்லி போராடவில்லை ? மற்ற இயக்கங்கள் அல்லவா அதைச்செய்து வருகின்றன? ஏன் எதிர் மனு போடவில்லை ?

  காரணம். ஜாதிப்பிராமணாளை எதிர்க்க அவர்கள் விரும்பவில்லை. கட்டுரையில் எழுதுவது easy லிப் சர்வீஸ்.

 6. Dhanasekaran T on July 6, 2014 at 5:26 am

  Odukkappatta samudhaya makkalin menmai pattri Aravindhan kavalai nyayamanadhe. August 2i odukkappattorukkana vidiyal nalaka yerppom.

 7. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on July 10, 2014 at 12:30 pm

  இந்திய வம்சாவழியினரான ஜிப்ஸிக்கள் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் அனுபவித்துவரும் கொடுமைகளை அறிந்து நமது மனமும் அல்லலுறுவது இயற்கைதான். இந்த ஜிப்ஸி மக்கள் இந்தியாவில் லம்பாடிகள் என்று அழைக்கப்படும் நரிக்குறவர் இனத்தவர் என்பது இங்கே நினைவு கூறத்தக்க செய்தி. நரிக்குறவர் சமூகத்தின் சிறப்பு தனது மொழி பண்பாடு சமயம் ஆகியவற்றில் அதன் அசைக்கவியலாத பிடிமானம். இந்த பண்பாட்டு பிடிமானம் தானோ தன்னை இழந்துவிடத்தயாரில்லாத மனோபாவம் தானோ இவர்கள் ஐரோப்பிய மையவாதத்தின் தாக்குதலுக்குள்ளாக ஒரு காரணமாக அமைகிறதோ.

 8. Dr.A.Anburaj on July 27, 2016 at 9:53 am

  ஒரு விஷயம் உண்மை.

  சாதி மற்றும் தீண்டாமை விசயத்தில் இந்து இயக்கங்கள் போதின கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை.

  தற்சமயம் இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி இந்து மகாசவை போன்ற இயக்கங்கள் பலம் இழந்து கொண்டேயிருக்கின்றன். விநாயகா் சதுா்த்தியை மட்டும் ஆா்ப்பாட்டம் விசில் அடி ஊளைச் சத்ததோடு கொண்டாடி மகிழ்வது பல இந்துக்களுக்கு பிடிக்கவில்லை.

  சாதி அமைப்பை ஒரு நாளில் யாரும் மாற்றஇயலாது. 200 ஆண்டுகளுக்கு களப்பணி தீவிரமாகச் செய்ய வேண்டும். ஆனால் இன்று தீண்டாமை சமூகத்தில் சற்று முன்னேறிய குடும்பங்களின் முக்கிய பிரச்சனை சாதி மாறி திருமணம். இது குறித்த எந்த இந்து இயக்கமும் ஒரு செயல் திட்டத்தை கருத்தை வெளியிடவில்லை என்பது வருந்ததத்தக்கது. சாதியில்லா திருமணமங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.அவா்களை கண்ணியமாக வாழ வைக்க இரு குடும்பத்தாரும் முன்வர வேண்டும் என்ற கருத்தை பிரச்சாரம் செய்ய வேண்டும்.பிரச்சாரம் அதிக நன்மையைத் தரும்.கிருஷ்ணா் தனது சகோதாியை அா்ச்சனனுக்கு விரும்பி திருமணம் செய்து வைத்தாா். இங்கே சாதியில்லை.சாதி மாறி திருமணம் செய்தால் பொிய அவமானம் ?ஏதும் இல்லை என்ற தெளிவு உண்டாக்கப்பட வேண்டும்.நமது வலைதளத்தில்கலப்பு திருமணத்தை நியாயப்படுத்தி முதலில் ஒரு கட்டுரையை எழுத வேண்டுகின்றேன்

 9. சரவணன் on September 19, 2016 at 2:51 pm

  இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், அவர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டார்கள்..அவர்களின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை அவர்கள் நேசிக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள். இலங்கையிலும் அதையே செய்தார்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்?அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்னை எப்பதோ சுமுகமாகத் தீர்ந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*