வன்முறையே வரலாறாய்…- 25

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து காண்போம்.

ராவல்பிண்டியைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்களல்லாதோரின் கிராமங்களைச் சூழ்ந்து கொண்ட முஸ்லிம் குண்டர்கள், தப்பட்டைகளை ஒலித்துக் கொண்டும், ரத்தத்தை உறையச் செய்யும் கூக்குரலை எழுப்பிக் கொண்டும் அங்கிருந்த இந்து மற்றும் சீக்கியர்களைக் கொன்றார்கள். எஞ்சியவர்கள் உடனடியாக மதம் மாறும்படி மிரட்டப்பட்டார்கள். வீடுகளைக் கொள்ளையடித்த பின்னர் அங்கிருந்த இளம்பெண்களைத் தூக்கி கொண்டு ஓடிய முஸ்லிம் காலிகள் அவர்களைத் திறந்த வெளியிலேயே கற்பழித்தார்கள். அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.

இதனைக் கண்டு மனம் வெதும்பிய பல இந்து/சீக்கியப் பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். தங்களை உயிருடன் எரிக்க வந்த முஸ்லிம் கும்பல்களிடமிருந்து தப்ப மேலும் சிலர் கிணறுகளுக்குள் குதித்து இறந்தார்கள். வீட்டை விட்டு வெளியே வந்த இந்து/சீக்கிய ஆண்கள் வெறித்தனமான தாக்கப்பட்டு உடனடியாகக் கொல்லப்பட்டார்கள். சில இந்து/சீக்கிய கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. பெரும்பாலோன இந்து/சீக்கியர்களில் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டது. உடனடியாக மதம் மாறியவர்கள் மட்டுமே தப்பிப் பிழைத்தார்கள். மதம் மாற மறுத்தவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், வாளால் வெட்டியும் கொல்லப்பட்டார்கள்.

Convoy of Muslims streaming past the dead of a previous caravan and the whitened bones of their buffaloes.மதம் மாற மறுத்த ஒரு கிராமத்திலிருந்த அத்தனை இந்து மற்றும் சீக்கியர்கள், கிராமத்தின் மத்தியில் குடும்பத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களைச் சுற்றிலும் விறகுகளை அடுக்கிய முஸ்லிம் வெறியர்கள் உயிருடன் அவர்களை எரித்துக் கொன்றார்கள். எரியும் நெருப்பில் சிக்கிக் கொண்ட ஒரு இந்துப் பெண் தனது நான்கு மாதக் குழந்தையை நெருப்பினை விட்டு வெளியே எறிந்தாள். அந்தக் குழந்தை உடனடியாக ஈட்டிகளால் குத்திக் கொல்லப்பட்டது.

மார்ச் 10-ஆம் தேதி இஸ்லாமிய குண்டர்கள் தோபிரான் கிராமத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். அங்கிருந்த 1700 பேர்களில் பெரும்பாலோர் சீக்கியர்கள். முஸ்லிம்களின் தாக்குதல்களிலிருந்து தப்பியோடிய இந்து மற்றும் சீக்கியக் குடும்பங்கள் அங்கிருந்த குருத்வாராவில் தஞ்சமடைந்தன. முஸ்லிம்களல்லாதோரின் வீடுகளைக் கொள்ளையிட்ட பின்னர் எரித்து அழித்த முஸ்லிம்கள் பின்னர் அந்த குருத்வாராவைச் சூழ்ந்து கொண்டு தாக்க ஆரம்பித்தனர். தங்களிடமிருந்த சொற்ப ஆயுதங்களைக் கொண்டு சீக்கியர்கள் எதிர் தாக்குதல் நடத்தத் துவங்கினர். இருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த துப்பாக்கி குண்டுகளும் தீர்ந்து போன பின், வெளியிலிருந்த முஸ்லிம் குண்டர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதாக நைச்சியம் பேசினர்.

அதனை நம்பிய 300 இந்து மற்றும் சீக்கிய ஆண்கள் குருத்வாராவை விட்டு வெளியே வந்து தங்களின் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டுச் சரணடைந்தனர். அவர்களை அழைத்து சென்ற முஸ்லிம் கும்பல் பர்கத் சிங் என்பவரின் வீட்டிற்குள் அவர்களனைவரையும் அடைத்துப் பின்னர் கெரசின் ஊற்றி அந்த வீட்டை எரித்தனர். இப்படியாக முஸ்லிம்களிடம் சரணடைந்த அத்தனை பேரும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அடுத்த நாள் காலை குருத்வாராவின் கதவை உடைத்த முஸ்லிம் குண்டர்களை அங்கு எஞ்சியிருந்த சீக்கியர்கள் தீரத்துடன் எதிர்த்துப் போரடிய பின்னர் முஸ்லிம் வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இதனைப் போன்ற பல நூற்றுக் கணக்கான சம்பவங்கள் அந்தப் பிராந்தியமெங்கும் தொடர்ந்து நடந்தது. நினைவிருக்கட்டும். நாம் இங்கே காண்பது இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னால் நடந்த வன்முறைகளை மட்டுமே. பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் அந்த வருடத்திய ஜூலை மாதத்தில் பயங்கரவாதம், படுகொலைகள், கொள்ளைகள், அடிமைப்படுத்துதல், கூட்டம் கூட்டமான மதமாற்றங்கள், கற்பழிப்புகள், இந்து/சீக்கியர்களை உயிருடன் எரிப்பது, அவர்களின் சொத்துக்களை நாசமாக்குவது போன்ற செயல்கள் பன்மடங்கு அதிகரித்தன. அது குறித்தான அத்தனை தகவல்களையும் எழுதுவதற்கு இங்கே இடமில்லை என்பதால் நடந்த சம்பவங்களைச் சுருக்கமாகக் காண்போம்.

Anti-Sikh-Riots1பிரிவினை அங்கீகரிக்கப்பட்ட பல மாதங்களுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் அங்கிருந்த இந்து மற்றும் சீக்கியர்களின் மீது சிறிதும் மனிதத்தன்மையற்ற பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். குர்பச்சன் சிங் தாலிப் அவரது Muslim League Attacks on Sikhs and Hindus in the Punjab 1947 என்னும் புத்தகத்தில் பஞ்சாப் பகுதியில் மட்டும் நடந்த இதுபோன்ற 592 சம்பவங்களைப் பட்டியலிடுகிறார். அவை அத்தனையும் முஸ்லிம்களால் “மட்டுமே” நடத்தப்பட்ட தாக்குதல்கள். ஒரு இடத்திலும் இந்து/சீக்கியர்கள் இது போன்ற வன்முறைச் சம்பவங்களைத் தாங்களாக முன்னெடுத்து நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிவினைக்கு முன்னர் நடந்த – ஆகஸ்ட் 1946-லிருந்து ஜூலை 1947 வரையிலான – வன்முறச் சம்பவங்கள் அனைத்துமே முஸ்லிம்களால் மட்டுமே துவங்கி நடத்தப்பட்டன. உதாரணமாக, கல்கத்தா, கிழக்கு வங்காளம், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பஞ்சாப் போன்ற பகுதிகளில் நடைபெற்ற கலவரங்கள். பிகாரில் நடந்த இந்துக்களின் எதிர்த் தாக்குதல்கள் அனைத்தும் மேற்கூறிய வன்முறைக்கு பதிலடியாக நடந்தவை. அதே சமயம் பாகிஸ்தானியப் பகுதிகளில் நடந்த வன்முறைகள் அனைத்தும் எந்த எதிர்ப்புமில்லாமல் நடந்து கொண்டிருந்தன.

மேற்கு பஞ்சாபிலும், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் கடுமையான அழிப்புக்கு உள்ளான சீக்கியர்கள் கிழக்கு பஞ்சாபின் பல பகுதிகளுக்கு (அமிர்ஸ்டர் உள்பட) அகதிகளாக வந்து சேர்ந்தார்கள். முஸ்லிம் குண்டர்களால் சீக்கியர்களுக்கு நேர்ந்த படு பயங்கரமான கொடூரங்கள் குறித்த செய்திகள் கிழக்கு பஞ்சாபில் பரவியது. ஏற்கனவே அமிர்ஸ்டர் போன்ற பகுதிகளில் இஸ்லாமியக் காலிகளால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த கிழக்கு பஞ்சாபிய சீக்கியர்களிடையே அது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் சீக்கியர்களிடையே, குறிப்பாக பாகிஸ்தானியப் பகுதியிலிருந்து பல கொடுமைகளுகுப் பிறகுத் தங்களின் சொத்துக்களையும், பெண்களையும் இழந்து, தங்களின் உறவுகள் கொடூரமாக கொல்லப்பட்டதனைக் கண்டு கிழக்கு பஞ்சாபிற்குத் தப்பி வந்த அகதிச் சீக்கியர்களிடையே மேலோங்க ஆரம்பித்தது. எனவே ஜூலை 1947-இல் லாகூர் மீண்டும் முஸ்லிம் குண்டர்களின் கொடுமையால் பற்றி எரிய ஆரம்பித்தது. அமிர்ஸ்டரின் இந்து மற்றும் சீக்கியர்களைச் சீண்டிய அந்தக் கலவரத்தால் கோபமடைந்த இந்துக்களும், சீக்கியர்களும் அமிர்ஸ்டரிலிருந்த முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை ஆரம்பித்தார்கள். சீக்கியர்களின் புனித நகரான, குரு நானக் பிறந்த இடமான ஷேக்புரா பாகிஸ்தானுக்குச் சென்றதினால் உண்டான சீக்கியர்களைச் மேலும் சினமுறச் செய்தது. குரு நானக் சீக்கிய மதத்தை ஆரம்பித்தவர். எனவே ஷேக்புரா சீக்கியர்களிடையே புனிதமான, பெருமதிப்பு உள்ள இடம்.

part_india13ஆகஸ்ட் 1947-இல் பிரிவினை எல்லையின் இருபுறமும் வன்முறை வெடித்தது. அமிர்ஸ்டரில் ஆரம்பித்த இந்தக் கலவரம் வெகு விரைவாக கிழக்கு பஞ்சாபின் குர்தாஸ்பூர், ஜலந்தர், ஹோஷியார்பூர், லூதியான, ஃபெரோஸ்பூர் பகுதிகளுக்கும் பரவியது. பின்னர் ஹரியானவிற்கும் பரவிய இந்த வன்முறையின் முக்கிய நோக்கம் முஸ்லிம்களைக் கொன்று பழி தீர்ப்பதற்கும், அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கும் நடந்ததாகும். சில இடங்களில் சீக்கியர்கள் முஸ்லிம் பெண்களைக் கவர்ந்து சென்றார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பாதுகாப்பதில் மிகுந்த முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள் அந்தப் பெண்களைக் கண்டுபிடித்து மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்தார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முஸ்லிம்களின் அடக்குமுறைகளிலும், “நேரடி” போராட்டத்தின் விளைவாக நடந்த வன்முறைகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த கிழக்கு பஞ்சாபிய சீக்கியர்கள் இனி முஸ்லிம்களுடன் சேர்ந்து வாழ்வது ஒருபோதும் நடக்காது என நம்பினார்கள். எனவே அவர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

அதே சமயம், இந்தியாவின் டெல்லிப் பகுதியின் சில பகுதிகளில் வலிமையுடன் இருந்த முஸ்லிம்கள் இந்துக்களின் மீதான தாக்குதல்களை ஆரம்பித்தார்கள். இதன் பின்னனியிலுருந்த முஸ்லிம் லீக் டெல்லியில் வன்முறையைத் துவங்கும்படி முஸ்லிம் குண்டர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 1947-இல் தேசப் பிரிவினை நிகழ்ந்து கொண்டிருக்கையில் முஸ்லிகள் தானியங்கித் துப்பாக்கிகளும், தாங்களே தயாரித்த பீரங்கிகளுடனும், கையெறி குண்டுகளுடனும், பிற ஆயுதங்களுடனும் கலவரத்தைத் துவங்கி நடத்த ஆரம்பித்தார்கள். முஸ்லிம் கருமான்கள் (blacksmiths) ஆயுதம் தயாரிப்பவர்களாக மாறினார்கள். அவர்கள் தயாரித்த பயங்கர ஆயுதங்கள் முஸ்லிகளிடையே வினியோகிக்கப்பட்டன.

முஸ்லிம்களின் வன்முறை டெல்லியைச் சூழ ஆரம்பித்தது. இந்துக்கள் அதிகம் வசிக்கும் கரோல் பாக் போன்ற பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. சப்ஸி மண்டிப் பகுதியில் ஒரு பெரும் முஸ்லிம் கும்பல் ஒன்று அங்கிருந்த இந்துக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தது. அதனைத் தடுக்கச் சென்ற போலிஸ்காரர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுப் பலர் காயமடைந்தனர். போலிசாருடனான சண்டை ஒரு நாள் முழுக்க அந்தப் பகுதியில் நடந்து கொண்டிருந்தது. டெல்லியின் புற நகர்ப்பகுதியை நோக்கிச் சென்ற முஸ்லிம் குண்டர்கள் பல கிரமங்களை எரித்துச் சாம்பலாக்கினர்.

இது போன்ற  வன்முறைத் தாக்குதல்கள் இந்துக்களின் பொறுமையைச் சோதிக்க, அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் துவங்கினார்கள். முஸ்லிம்களில் பலர் ஆயுதம் தாங்கியவர்களாக இருந்தாலும், எண்ணிக்கையில் அதிகமிருந்த இந்துக்களின் முன்னிலையில் எதிர்த்து நிற்க இயலவில்லை. பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முஸ்லிம் வீடுகளில் சோதனையிட்ட போலிசார் ஏராளமான கள்ளத் துப்பாக்கிகளையும், கொடுவாள்களையும், கத்தி, ஈட்டி, 154 வெடி குண்டுகள், 47 மார்ட்டர்கள், 1950 ரவுண்டுகள் வரக்கூடிய துப்பாக்கி ரவைகள், 13 வயர்லெஸ் ட்ரான்ஸ்மீட்டர்கள், ஏராளமான கையெறி குண்டுகள், தானியங்கி துப்பாக்கிகள் எனப் பல பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

 (தொடரும்)

2 Replies to “வன்முறையே வரலாறாய்…- 25”

  1. இக்கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்க இருமுறை முயன்றேன். முழுவதும்
    படிக்க இயலவில்லை. ஏனெனில் அதற்கான மனோதிடம் என்னிடம் இல்லை :((

    தேவ்

  2. அயோத்தியில் பாழடைந்த கும்மட்டம் இடிக்கப்பட்டபோது, நமது நாட்டில் உள்ள பல மீடியாக்களும், மதசார்பற்ற என்று சொல்லிக்கொள்ளும் சக்திகளும் துள்ளிக்குதித்தன. தாண்டிக்குதித்தனர். ஆனால் இப்போது ஈராக்கில் இரு இலக்க எண்ணிக்கையில் ஷியா மசூதிகளும், சுபி வழிபாட்டுத்தலங்களும், மேலும் சில சன்னி மசூதிகளும் இந்த ரமலான் மாதத்தில் புல்டோசரால் இடிக்கப்பட்டும், புல்டோசரால் இடிக்கமுடியாத பெரிய மசூதிக்கட்டிடங்கள் , வெடி வைத்து தகர்க்கப்பட்டும் உள்ளன. பத்திரிகை செய்திகள் விரிவாக வெளிவந்துள்ளன.இவர்களுக்கு ஏனிந்த வெறி என்று புரியவில்லை.

    இவ்வாறு மசூதிகளை இடித்தும், வெடிவைத்து தகர்த்தும் செய்த தீவிரவாதிகளை, அவர்கள் இந்திய நர்சுகள் மீது கை வைக்கவில்லை என்று சொல்லி, அதற்காக மட்டும் நமது மீடியாவில் ஒரு வக்கிர புத்தி படைத்த பிரிவு பாராட்டு தெரிவித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் இப்படி இறை வழிபாட்டு தளங்களை இடித்து வருவதைப் பற்றி மூச்சு விடக் காணோம். இது என்ன மத சார்பற்ற பாராட்டோ ?

    இஸ்லாமுக்கு ஆபத்து என்று உளறிக்கொண்டு, சென்னையில் தேவை இல்லாமல் , சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த அப்பாவிப் பொதுமக்களின் இரு சக்கர ஊர்திகளை கொளுத்திய ரவுடிக்கும்பல், ஈராக்கில் இவ்வளவு இஸ்லாமிய மசூதிகளை , சன்னி இஸ்லாமிய தீவிரவாதிகளும், அவர்களின் எதிர்த்தரப்பு போராளிகளும் இடித்து அழித்ததைப் பற்றி வாய் திறக்க காணோம். நமக்கு என்ன தோன்றுகிறது என்றால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இஸ்லாத்தை விட்டு விலகவேண்டும்.

    வெறிபிடித்த மதங்கள் அழிவது மனித இனத்துக்கு நல்லது. பெருமளவு வன்முறையும், தீவிரவாதமும், பெண்ணடிமையும் இஸ்லாமிய நாடுகளில் மிக அதிக அளவு காணப்படுகிறது. மனித இனம் வெறியை தூண்டும் மதங்களுக்கு விடை கொடுப்பது நல்லது. கடவுள் நம்பிக்கை ஒரு தீய விஷயம் என்பதாக சில மத வெறியர்களால் ஆக்கப்பட்டு விட்டது. பிற நம்பிக்கையாளரை கொலை செய்வதும், பெண்ணடிமை செய்தலும், தன்னுடைய கொள்கைகளை பிறர் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதும் ஒரு மதம் என்றால் , அந்த மதம் உலகில் இருக்கக் கூடாது. வன்முறை ஒழிக ! மதவெறி ஒழிக ! உலகெங்கும் அமைதியும், அன்பும், சமாதானமும் வளர்க !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *