கைகொடுத்த காரிகையர்: திலகவதியார்

தமக்கையின் ஞானோபதேசம்
தமக்கையின் ஞானோபதேசம்

தேவார மூவர் என்று சிறப்பிக்கப் படுகிறவர்கள் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் என்ற மூவர். இவர்கள் தங்களுடைய தேவாரப் பாடல்களால்  சைவப் பயிரை வளர்த்தார்கள். சமண சமயம் வீறு கொண்டெழுந்தபோது அப்பரும் திருஞானசம்பந்தரும் தங்கள் அமுத வாக்கால் மக்களிடம் சைவ சமயத்தை எழுச்சி பெறச் செய்தார்கள். அதனால் தான்,

“எப்படிப் பாடினாரோ? அடியார்

அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே.

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்

அருள் மணிவாசகரும் பொருள்தேடி உணர்ந்து”

-என்று இவர்கள் நால்வரையுமே சிறப்பிக்கிறார்கள்.

இவர்களில் முதலாவதாக வைத்துச் சிறப்பிக்கப் படுகிறவர் அப்பர் என்றழைக்கப் படும் திருநாவுக்கரசர். ஆனால் இந்தத் திரு நாவுக்கரசர் முதலில் சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறிவிட்டார். அதிலிருந்து இவரை மீட்டெடுத்துச் சைவசமயத்திற்குக் கைகொடுத்தவர் இவருடைய தமக்கையான திலகவதியார் என்ற பெண்மணியாவார். தம்பிக்காகவே வாழ்ந்த இவரைப் பற்றிப் பார்ப்போம்.

திருமுனைப்பாடி நாடு, பெண்ணையாற்றால் வளம் பெற்றது. அந்நாட்டில் திருவாய்மூர் என்னும் ஊர் சீரும் சிறப்பும் பெற்றது. இந்த ஊரில் தான் நாவரசரும் அவரது சகோதரியான திலகவதியாரும் திரு அவதாரம் செய்தார்கள். அந்த ஊரிலுள்ள வயல்களில் வெட்டிய கரும்புகளிலிருந்து சொரிந்த கருப்பஞ்சாறு ஓடி வயல்களிலுள்ள மடைகளை உடைத்து விடுமாம். அப்படி உடைந்த மடைகளை அடைக்க அங்குள்ள உழவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அந்தக் கரும்புகளிலிருந்து காய்ச்சி எடுத்த வெல்லக் கட்டிகளாலேயே மடைகளிலுள்ள உடைப்பை அடைப்பார்களாம்.

இங்கு சேக்கிழார் இனி வரப்போகும் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பால் உணர்த்துகிறார். வயலில் விளைந்த கரும்புகளிலிருந்து பெருகிய சாறு எப்படி அந்த மடைகளை உடைத்துக்கொண்டு பாய்கிறதோ அதேபோல சைவத்திலே பிறந்த நாவரசர் சைவத்தை உடைத்து விட்டு சமணம் செல்லப் போகிறார் என்பதை உணர்த்துகிறது. அதே கருப்பஞ்சாற்றிலிருந்து காய்ச்சி எடுக்கப்பட்ட வெல்லக் கட்டிகளாலேயே அந்த மடை அடைபடுவதை, நாவரசரின் சகோதரியாலேயே அவர் மறுபடியும் சைவ சமயத்திற்கு மாறப்போகிறார் என்பதை உணர்த்துகிறது. பாடலைப் பார்ப்போம்.

கடைஞர்மிடை வயற்குறைத்த கரும்பு

குறை பொழி கொழுஞ்சாறு

இடைதொடுத்த தேன்கிழிய

இழிந்தொழுகு நீத்தமுடன்

புடை பரந்து ஞிமிறொலிப்பப்

புதுப்புனல் போய் மடையுடைப்ப

உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப

-என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

சைவசமயத்தைப் பெருக்கி வளர்க்கும் திருவாய்மூரில் குறுக்கை வேளாளர் குடியில் புகழனார் என்பவர் தம் பெயருக்கேற்ப புகழோடு விளங்கி னார். இவருடைய மனைவியான மாதினியாரும் தம் பெயருக்கேற்ற இனிய குணங்களைக் கொண்டிருந்தார். இவர்களுக்கு திருமகளைப் போன்ற திலகவதியார் பிறந்தார்.

இவர் பிறந்த சில ஆண்டுகளுக்குப் பின் இந்த உலகின் இருள் நீங்கி ஒளியை விளங்கச் செய்யும் சூரியனைப் போல் மருள்நீக்கியார் அவதாரம் செய்தார்.

தக்க வயது வந்ததும் மருள் நீக்கியாருக்கு ஆயகலைகள் அறுபத்துநான்கையும் கற்க ஏற்பாடு செய்தார்கள். மருள் நீக்கியாரும் அவற்றில் ஆர்வமுடன் அவற்றில் ஆழ்ந்த அறிவு உண்டாகும் வண்ணம் அவற்றைப் பயின்றார்.

திலகவதியாருக்குப் பன்னிரண்டு வயதான சமயத்தில், அரசனிடம் தளபதியாக இருந்த கலிப்பகையார் என்பவர் திலகவதியைத் திருமணம் செய்ய விரும்பிப் பெண் கேட்டு சான்றோர்களை அனுப்பினார். புகழனாரும் தம் மகளை அவருக்கு மணமுடிக்க சம்மதம் தெரிவித்தார்.

ஆனால் நாட்டில் போர்மேகம் சூழ்ந்ததால் மன்னன் கலிப்பகையாரை வடதிசைக்கு அனுப்பி வைத்தான். போர் முடிந்த பின் திருமணச் சடங்கை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்தார்கள்.

Thilakavathi1போர் முடியுமுன்னரே நோய்வாய்ப் பட்ட புகழனார் இறைவனடி சேர்ந்தார்.  ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்பதை உணர்ந்த மாதினியாரும் தன் கணவரைப் பின் தொடர்ந்தாள். தந்தையும் தாயும் ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகை விட்டுச் சென்றதால் தனித்து விடப்பட்ட திலகவதியும் மருள்நீக்கியாரும் உறவினர்களோடு தந்தை தாய் இருவருக்கும் செய்ய வேண்டிய ஈமக் கடன்களை முறைப்படி செய்தார்கள்.

ஒருவாறு அவர்கள் தேறி வரும் சமயம் இடிபோன்ற செய்தி வந்தது. திலகவதிக்கு நிச்சயம் செய்யப்பட்ட கலிப்பகையார் போர்க்களத்தில் வீர சுவர்க்கம் அடைந்தார் என்று செய்தி கொண்டு வந்தார்கள் உறவினர்கள்.

இதைக் கேட்ட திலகவதியாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அவர் என்ன சொன்னார் தெரியுமா? “என் தந்தையும் தாயும் கலிப்பகையாருக்கு என்னை மணம் செய்து கொடுக்க இசைந்தார்கள். அவரே மணமகன் என்று தீர்மானம் செய்து விட்டார்கள். அந்த முறையால் நான் அவருக்கு உரியவள். அதனால் இந்த உயிரை அவரோடு சேர்ப்பேன்” என்று துணிந்தாள். இதைக்  கேட்ட மருள் நீக்கியார் அவர் மடிமேல் விழுந்து அழுதார்.

“அன்னையும் அத்தனும் சென்ற பின்னும் நீங்கள் துணை இருப்பதால் தான் நான் உயிரோடு இருக்கிறேன். நீங்களும் என்னைத் தனியே விட்டு விட்டால் உங்களுக்கு முன் நான் உயிர் துறப்பேன். இது நிச்சயம்” என்று அரற்றினார்.

இதைக் கேட்ட திலகவதியார், தம்பியின் முகத்தைத் துடைத்து ஆறுதல் கூறினாள். தம்பி உயிரோடு இருக்க வேண்டுமே என்ற கருணையினால் தம் உயிரைத் தாங்கிக் கொண்டு,  திருமணம் செய்து கொள்ளாமல் எவ்வுயிர்க்கும் அருள் புரிந்து தவம் மேற் கொண்டு வாழ்ந்து வந்தார்.

மருள் நீக்கியார் தம்முடைய மனச் சாந்திக்காக ஏழைகளுக்குப் பொருளுதவி செய்தும் தான தருமங்கள் செய்தும் தரும சாலைகள், தண்ணீர்ப் பந்தல்களும் அமைத்தார்.  சோலைகள், நந்தவனங்களையும் அமைத்தார். தம்முடைய திருமாளிகைக்கு வரும் அதிதிகளுக்கு விருந்தளித்தும் வந்தார்.

காலம் செல்லச் செல்ல, நிலைத்து நில்லாத இந்த உலகின் இய்ல்பை உணர்ந்த மருள் நீக்கியார், கொல்லாமையை வலியுறுத்தும் சமண சமயத்தில் சேர்ந்தார். பாடலிபுத்திரம் என்னும் இடத்திலுள்ள பள்ளியை அடைந்தார். அங்கிருந்த சமணர்கள் முக்தியைத் தெரிந்து கொள்ளும் வழி இதுதான் என்று கூறிப் பல நூல்களைக் கற்பித்தார்கள்.

மருள்நீக்கீயாரும் சமண சமயத்தில் உள்ள அருமையான கலைகளைக் கூறும் சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். இதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த சமணர்கள் மருள் நீக்கியாருக்கு ‘தருமசேனர்’ என்ற பெயரை வழங்கினார்கள். இயல்பாகவே அறிவாற்றலில் சிறந்த தரும சேனர் தம்முடைய வாதத் திறமையால் பௌத்தர்களை வென்றார். இதனால் சமணசமயத் தலைமைப் பதவியில் மேன்மையடைந்தார்.

இங்கே திலகவதியார் தன் தம்பியின் செயல்களைக் கேள்விப்பட்டார். உறவுகளை விட்டு நீங்கி சைவசமயமாகிய நல்வழியை அடைவதற்காக திருவதிகையில் கோயில் கொண்டிருக்கும் வீரட்டானேசுவரரைத் தரிசிப்பதற்காகச் சென்றார்

கெடில நதிக்கரையில் நடு நாட்டிலுள்ள எட்டு வீரட்டங்களில் ஒன்றான திருவதிகை வீரட்டானேச்வரரைத் தரிசித்து, சிவச் சின்னங்களான திருநீறு, உத்திராக்ஷம்,சடாபாரம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு கோயில் பணிகள் செய்ய ஆரம்பித்தார்.

விடியுமுன் துயிலு ணர்ந்து வீரட்டானேச்வரர் கோயிலைப் பெருக்கி, மெழுகிக் கோலமிட்டு, மலர் கொய்து மாலைகள் கட்டி, இப்படியான திருத் தொண்டு செய்து வந்தார். ஆனாலும் தன் உடன் பிறந்த தம்பி மருள்நீக்கியார் சமணத்தில் சேர்ந்தது பற்றி மிக்க வருத்தமும் கவலையும் அடைந்தார்.

வீரட்டானேச்வரரிடம் தம் மனக்குறையையும் கவலையையும் தெரிவித்தார், “என்னை ஆண்டருளும் நீரானால் அடியேன் பின் வந்தவனை ஈண்டு,  பரசமயக் குழி நின்றும் எடுத்தருள வேண்டும்” என்று பல முறை தொழுது வேண்டினார். திலகவதியாரின் மனக்குறை யைக் கேட்ட பெருமான், சூலை நோய் தந்து மருள் நீக்கியாரைத் தடுத்தாட் கொள்ள நினைத்தான்.

thilakavathi2இறைவன் எண்ணப்படி மருள் நீக்கியாருக்குச் சூலை நோய் உண்டாயிற்று. கடுங்கனல் போல் சூலைநோய் மருள்நீக்கியார் வயிற்றைத் தாக்கியது.

அந்த நோய் ஆலகால நஞ்சும், வடவாமுகாக்கினியும், இந்திரனுடைய வஜ்ராயுதமும் கொடுமையான ஆயுதங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாற் போல் குடலில் உள்ளே குடைய ஆரம்பித்தது. மருள் நீக்கியார் துடித்தார்; துவண்டார்.

இதைக் கண்ட சமணர்கள் தங்களுடைய மந்திரங்களால் அந்நோயைக் குறைக்க முயற்சி செய்தார்கள்.ஆனால் சூலைநோய் குறையவில்லை; அதிகரித்தது. நோய் அதிகமாக ஆக, மருள் நீக்கியார் பாம்பின் விஷம் தலைக்கேறியவர் போல் மயங்கி வீழ்ந்தார். செய்வதறியாது திகைத்த சமணர்கள் மயிற்பீலி கொண்டு தடவினார்கள். மந்திரம் ஏற்றிய நீரைக் குடிக்கச் செய்தார்கள். ஆனால் நோய் மேலும் மேலும் முற்றவே இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய இயலாது விரக்தியடைந்து கைவிட்டார்கள்.

வேதனை பொறுக்க முடியாமல் மருள் நீக்கியார் தனக்கு சமையல் செய்யும் சமையற்காரரை  திலகவதியாரிடம் அனுப்பினார். அவர் சென்று உமது தம்பியிடமிருந்து வருகிறேன் என்று சொல்ல “ஏதேனும் தீங்கு வந்ததோ?” என்று அம்மாதரசி கேட்டாள்.  “ஆமாம் தங்கள் தம்பி கொடிய சூலை நோயால் பீடிக்கப்பட்டிருக்கி றார். எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். ‘நான் உய்யும் வழியை என் தமக்கையிடம் கேட்டு வா” என்று என்னை அனுப்பினார். என்றார் வந்தவர். “நான் அந்த அமணர்கள் இருக்கும் இடம் வர இயலாது” என்று அவரிடம் சொல்’ என்று திலகவதியார் சொல்ல வந்தவரும் சென்று அப்படியே சொன்னார்.

இதைக் கேட்ட மருள் நீக்கியார்,  “எனக்குப் பொருத்தம் இல்லாத இந்தப் பொலிவற்ற சமண சமயத்திலிருந்து, செம்மையான சைவ சமய வழியைச் சேர்ந்திருக்கும் என் தமக்கையாகிய திலகவதியாரை அடை வேன்” என்று தீர்மானம் செய்தார். அப்படியே

உடுத்துழலும் பாயொழிய

உறியுறு குண்டிகை ஒழியத்

தொடுத்த பீலியும் ஒழியப்

போவதற்குத் துணிந்தெழுந்தார்.

-வெண்மையான ஆடை உடுத்தார். யாரும் அறியா வண்னம் இருளில் திலகவதியார் வசிக்கும் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார். தமக்கை திலகவதியாரிடம் சென்று அடிமேலுற வணங்கினார்.

நந்தமது குலம்செய்த

நற்றவத்தின் பயன் அனையீர்

இந்த உடல்கொடு சூலைக்கு இடைந்து

அடைந்தேன் இனி மயங்காது

உயந்து கரை ஏறும் நெறி

உரைத்தருளும்

-என்று கதறினார். இறைவனுடைய கருணையை எண்ணி நெகிழ்ந்த திலகவதியார், காலில் விழுந்து கதறும் தம்பியை நோக்கி, “சான்றோர் ஏற்றுக் கொள்ளாத பரசமயக் குழியில் விழுந்து தாங்க முடியாத துயரத்தை அடைந்தீர். எழுந்திரும்” என்றார்.

எழுந்த தம்பியிடம், “நீர் இப்படி என்னிடம் வந்து சேர்ந்தது வீரட்டனேச்வரருடைய திருவருளால் என்பதை உணர வேண்டும். எனவே தம் கழலடைந்தோரைக் காக்கும் வீரட்டானேச்வரரைப் பணிந்து திருப்பணி செய்வீர்” என்று கட்டளையிட்டார் தமக்கையார். அவருடைய அறிவுரையை ஏற்று வணங்கிய தம்பிக்கு  ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரத்தை உச்சரித்து திருநீறு அளித்தார்.

அடியேனுக்குப் பெருவாழ்வு வந்ததென்று மருள்நீக்கியார் அகமகிழ்ந்து அவர் அளித்த திரு நீற்றைத் தம் மேனியில் பூசிக் கொண்டு தில்கவதியாரைப் பின்தொடர்ந்தார். திருப்பள்ளியெழுச்சி சமயம் வீரட்டானேச்வரர் கோயிலில் தொண்டு செய்வதற்காகத் திலகவதியார் துடைப்பம், மெழுகுவதற்காகச் சாணம், நீர் கொண்டு வரக் குடம் முதலியவற்றோடு கோயில் சென்றார்.

தமக்கையாரோடு கோயில் சென்ற மருள் நீக்கியார் தரையில் விழுந்து வீரட்டானேச்வரரை வணங்கினார். உணர்ச்சி மிகுந்து வர இறைவனுடைய பெருமைகளைப் பாட ஆரம்பித்தார். திரிபுரங்களையும் எரித்த வீரட்டானேச்வரரைத் துதித்து

கூற்றாயின வாறு விலக்ககிலீர்

கொடுமை பல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக்கே இரவும் பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத் துறையம்மானே!

-என்று தொடங்கி பத்து பாடல்களால் துதித்தார்.

apparமருள்நீக்கியார் பாடப் பாட அவருடைய சூலைநோய் குறைந்து கொண்டே வந்து முற்றும் நீங்கியது நோய் நீங்கியதும் மருள் நீக்கியார்.

அங்கங்கள் அடங்க ரோமமெல்லாம்

அடையப் புளகங்கள் முகிழ்த்தலரப்

பொங்கும் புனல்கள் கண்பொழிந்திழியப்

புவிமீது விழுந்து புரண்டார்.

உன் கருணை வெள்ளத்தில் ஆழும் தகுதி எனக்குண்டோ? என்னைத் தடுத்தாட்கொள்ள வந்த இந்தச் சூலைநோய்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?” என்று ஈசனை வணங்கினார்.

அப்பொழுது ஓர் அசரீரி வாக்கு,  “பதிகத் தொடை பாடிய பான்மையால் நாவுக்கரசர் என்னும் நாமம் இன்று முதல் உனக்கு வழங்கப் பெறும்” என்று வானத்தில் ஒலித்தது. இது கேட்ட மக்கள் பலவித வாத்தியங்களை முழக்கினார்கள்.

இறைவனுடைய அருளைப் பெற்ற வாகீசராகிய திருநாவுக்கரசர் சைவச் சின்னங்களான விபூதி உத்திராக்ஷம், சடாபாரம் இவற்றோடு உழவாரப் படையையும் கைக்கொண்டார். இதைக் கண்ட திலகவதியார்,

எம்மைப் பணிகொள் கருணைத்திறம்

இங்கு யார் பெற்றனர்?

-என்று மகிழ்ந்து ஈசன் கருணையை எண்ணி வியந்தார்.

அதன் பின் நாவரசர் ஏராளமான தேவாரப் பாடல்களைப்பாடினார். ஒவ்வொரு தலமாகச் சென்று சைவ நெறியைப் பரப்பினார்.

நாவரசர் சிறுவனாகத் தாய் தந்தையரை இழந்து துயருற்ற போதும் திலகவதியார் உற்ற துணை யாக இருந்து கைகொடுத்து உதவினார்.

சைவத்திலிருந்து தம்பி நெறி பிறழ்ந்து சமணம் சார்ந்த போதும் இறைவனிடம் வேண்டி அவருக்குச் சூலைநோய் வரச் செய்து மருள் நீக்கி யாரை மீண்டும்  சைவநெறியில் புகச் செய்தார்.

தம்பிக்கு மட்டுமல்ல,  சைவநெறி மங்கி சமணம் மீண்டும் தழைத்து விடுமோ என்று குழப்பமாக இருந்த காலகட்டத்தில் சைவ நெறிக்கும் கைகொடுத்தவராக விளங்குகிறார் திலகவதியார்.

 

12 Replies to “கைகொடுத்த காரிகையர்: திலகவதியார்”

  1. உயர்திரு ஜெயலட்சுமி அவர்களே,

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது, திருநாவுக்கரசரின் வரலாறு. இதைத் தெள்ளு தமிழில் எழுதிய தங்களுக்கு நன்றி. வணக்கம்.

    தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நமச்சிவாய!

  2. ## தம்பிக்கு மட்டுமல்ல, சைவநெறி மங்கி சமணம் மீண்டும் தழைத்து விடுமோ என்று குழப்பமாக இருந்த காலகட்டத்தில் சைவ நெறிக்கும் கைகொடுத்தவராக விளங்குகிறார் திலகவதியார்.

    அருமை. நன்றி. ‘நமசிவாய’

  3. அரிய கட்டுரை. ஆசிரியருக்கு நன்றி.

    அப்பரடிகள் தனது “ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்” என்ற தேவாரத்தில் “உடன் தோன்றினராய்” என்று திலகவதியாரையே சுட்டுகிறார். வேறு எந்த தேவார ஆசிரியரும் சகோதர ஸ்தானத்தை அப்பரடிகள் போல விதந்து ஓத வில்லை. என்றால், திலவதியாரின் பெருமை நம்மால் கூற முடியுமா?

    குறிப்பு: திருநாவுக்கரசர் ஊர் திருவாமூர்; திருவாய்மூர் அன்று. இரு ஊர்களும் அவரது சரித்திரத்தில் வருவதால் சிறிது குழப்பம்.

  4. Mr. An Unknown Man,

    I agree, and empathize with you. My blood boils every time I hear such news.

    This news should have been covered, and the “love Jihad” against Hindu girls should have be taken seriously by Modi Government. May be Tamil Hindu is going to cover it. Let us wait and see.

    Let us hope Ms. Suvanapiriyan and Meeraan Sahib condemn such activities.

  5. Arizonan,

    No offense, but your naivete amuses me. What does it matter if the few token Muslims who visit this website condemn this incident or not? Their condemnation means diddly squat. Ever heard of ‘Al Taqiyya’? The fact is – conservative Hindus girls are not safe in this country. They are constantly bombarded with malicious propaganda – ‘all religions are the same’, ‘converting to another religion is a sign of secularism and progressiveness’, ‘patriarchy is evil’, and so on.

    Our girls are ill-informed, ignorant, naive, and extremely vulnerable. Unless Hindu parents realize it and start instilling dharmic values and a sense of self-preservation into the minds of their girl children, the Hindu community is doomed in the long run.

  6. Mr. An Unknown Honest Man,

    //They are constantly bombarded with malicious propaganda – ‘all religions are the same’,//

    This propaganda is not done by other religions, but with one famous Hindu religious leader who passed away. When the kids, including boys and girls, were instructed that all religions are the same, they wonder why they are prevented from marrying from another religion.

    We Hindus take things to extremity. Instead of teaching kids to respect all religions, we teach them that all religions are the same. I have seen the followers of tha religious leader keeping Jesus, Mecca’s Kaba,etc., along with our Hindu gods. I have seen the kids of theose people are taught prayers from all religions. Finally, they end up marrying outside the religion.

    //Unless Hindu parents realize it and start instilling dharmic values and a sense of self-preservation into the minds of their girl children, the Hindu community is doomed in the long run.//

    I agree.

    With our blind attachment to English medium schools, we admit our children in convents, where they were taught Hindu religion is inferior.

    I feel that we need to take a look inward, and watch what we say to our kids. How many of us are being role models to our kids so that they can follow us?

    There is a proverb: “Only if people drink, there will be liquor shops. If we keep liquor bottles in our refrigerators, how can we expect our kids not to drink when they grow up.”

    Instead of blaming others, let us make sure we teach our children our religious values. When we point one finger at others, three are pointing towards us.

    // What does it matter if the few token Muslims who visit this website condemn this incident or not?//

    It is a good start. If condemnations begins from them also, it would help us a lot. It would lead people respecting each other.

    Let us be good role models to our kids. Let us teach them our language, our culture, our relion, feed them our food.

  7. //////With our blind attachment to English medium schools, we admit our children in convents, where they were taught Hindu religion is inferior.////// பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் ஒன்றுபட்டு முயற்சி செய்து English medium conventகளை திறக்க முடியாதா? நாம் என்றைக்கும் கிறிஸ்தவர்கள் நடத்தும் கான்வென்ட்களில்தான் நமது குழந்தைகளை சேர்க்கவேண்டுமா? நாம் பண்டிகை என்ற பெயரில் வீண் செலவுகள் செய்து வருகிறோம். நேற்று விநாயகர் சதுர்த்தி. தெருவிற்கு தெரு பிரமாண்ட விநாயகர் சிலைகளை நிறுவி விழா எடுக்கின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து ஏற்கனவே கோவிலில் இருக்கும் விநாயகர் சிலையை வணங்கினால் போதாதா? அல்லது ஒரு ஊருக்கு ஒரு (வெறும் களிமண்ணால் ஆன ) விநாயகர் சிலையை நிறுவி அனைத்து இந்து ஜனங்களும் வணங்க கூடாதா? இந்த விழாவின்போது சினிமா பாடல்களை ஒலிபரப்புகின்றனர். அதற்கு தகுந்தாற்போல கண்டபடி ஆடுகின்றனர். (இதனால் இளைஞர் சமுதாயமே குட்டி சுவராகின்றது) (சில நேரங்களில் குடித்துவிட்டும் ஆடுகின்றனர்)

    சரி இவ்வளவும் செய்துவிட்டு அந்த சிலையை எடுத்துபோய் கடலில் அல்லது ஏரியில் (இப்போது தண்ணீர் இல்லாததால் ஏரியில் உள்ள அசுத்தமான குட்டையில்) கரைக்கின்றனர்.மூன்று நாட்கள் தலைமேல் வைத்து போற்றி நான்காவது நாள் அழுக்கு குட்டையில் அனாவசியமாக தள்ளுவது விநாயகருக்கு பெருமையா? அல்லது நமக்கு பெருமையா? இப்படி சிலைக்கு, பந்தல் மைக் செட்டுக்கு, மேளத்திற்கு, வாணவேடிக்கைக்கு, சிலையை எடுத்து செல்ல vehicle க்கு என்று ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு செலவு ஆகும் என்று யோசித்து பாருங்கள். இந்த செலவுகளை தவிர்த்து அந்த பணத்தைகொண்டு convent களை துவங்கினால் நாம் அடுத்தவன் convent க்கு போய் அவமானபடவேண்டி இருக்குமா? சில ஆண்டுகளுக்கு முன் அவனவன் வீட்டில் சிறிய அளவில் களிமண்ணால் ஆன பிள்ளையாரை வைத்து வழிபடுவார்கள். (எங்கள் வீட்டில் ஒருமுறை வாங்கிய விநாயகர் சிலையை அடுத்த பல ஆண்டுகளுக்கும் வைத்து வழிபடுவோம்) சிலையை எடுத்துபோய் நீர்நிலைகளில் கரைப்பதால் (chemicals காரணமாக) நீர்நிலைகள் கெடுகின்றன. மண் மாதாவை மலடியாக ஆக்குகின்றோம். இது சரியா? இது எல்லாம் யார் காதில் விழபோகிறது? இப்படிப்பட்ட திருவிழாவை கொண்டாடுவதால் (1) இளைஞர்கள் கெடுகிறார்கள் (2) மத மற்றும் சாதி சண்டைகள் ஏற்படுகின்றன (3) வீண் செலவு ஏற்படுகிறது (4) என்றைக்கும் நாம் கிறிஸ்தவ கான்வென்ட் களையே நம்பி வாழவேண்டியுள்ளது. அவர்கள் நம் இந்து பிள்ளைகளுக்கு “”கண்ணன் ஒரு வெண்ணை திருடன்” என்று சொல்லி கொடுத்து நம் குழந்தைகளை எடுத்து அனுப்புகிறார்கள். “இந்து முன்னணியினர்” இந்த DISADVANTAGES களைப்பற்றி எல்லாம் கண்டு கொள்வது இல்லை. அவர்கள் இந்த விழா மூலம் இந்துக்கள் ஒற்றுமை ஏற்படுகிறது என்று தவறாக எண்ணி கொண்டிருக்கின்றனர். திரு ராமகோபாலனுக்கு யார் எடுத்து சொல்வது?

  8. பெரிய புராணத்தில் சொல்லப்பட்ட சிவனடியார்கள் பற்றிய அருமையான வ்யாசங்களைப் பகிர்ந்து வரும் ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி அம்மைக்கு எம் பணிவார்ந்த வணக்கங்கள். இழையிலிருந்து மாறுபட்டு கருத்துப் பகிர்வதற்கு எமது க்ஷமா யாசனங்கள்.

    அன்பின் ஸ்ரீ அரிசோனன், ஸ்ரீ ஹானஸ்ட்மேன்

    இழை சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்க விழைவோமே.

    நீங்கள் விவாதிக்க விழைவது முக்யமான விஷயங்களே. அதன் முக்யத்துவம் அது தனியான ஒரு வ்யாசமாக சமர்ப்பிக்கப்பட்டு அதில் விவாதம் நிகழ்வதன் மூலம் இன்னமும் உறுதி பெறும்.

    \\ The authors of this website didn’t think it was important to cover the story of the Hindu girl in Meerut who was gangraped, tortured, and converted. Perhaps they will be kind enough to cover the following story? \\

    எல்லாக்காரியங்களையும் அடுத்தவரே செய்ய வேண்டும் என நாம் ஏன் நினைக்க வேண்டும். ஸ்ரீ ஹானஸ்ட்மேன் அவர்கள் சமூஹம் சார்ந்த ப்ரச்சினைகளை அழகாகவும் தெளிவான வாசகங்களுடனும் இந்த தளத்தில் தனது பல உத்தரங்களால் பகிரும் அன்பர் ஆயிற்றே. நீங்களே இந்த ப்ரச்சினைகளை ஒரு வ்யாசமாக இந்த தளத்தில் சமர்ப்பித்தால் அது ஏற்கப்பட்டு அதில் விவாதங்களும் நிகழலாமே. அள்ளித் தெளித்த கோலங்களாக இல்லாமல் உங்களது ஆழமான கருத்துக்களை தனி வ்யாசங்களாக சமர்ப்பிக்குமாறு நான் முன்னமும் விக்ஞாபித்திருந்தேன்.

    மீரட் சம்பவம்……….. விநாயக சதுர்த்தி விழாவை ரசாயன வண்ணங்களாலான விநாயகர் ப்ரதிமைகளின்றி சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைக்காத இயற்கை வண்ணங்களாலான ப்ரதிமைகள் மூலம் கொண்டாடுதல்……….. தனித்தனியான வ்யாசங்களில் முழு ஆழத்துடன் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.

    உங்கள் விவாதத்தில் குறுக்கிட்டதற்கும் எமது க்ஷமா யாசனங்கள்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  9. உயர்திரு கிருஷ்ணகுமார் அவர்களே,

    //உங்கள் விவாதத்தில் குறுக்கிட்டதற்கும் எமது க்ஷமா யாசனங்கள்.//

    நீங்கள் மன்னிப்புக் கோரவேண்டிய தேவையே இல்லை. நீங்கள் சொல்லியிருப்பது — எங்களது விவாதம் தனிக் கட்டுரைகளாகவே எழுதப்படவேண்டியது என்று தெரிவித்திருப்பது மிக அருமையான கருத்தாகும்.

    இப்படிப்பட்டதான உங்களது கருத்துக்கள், மிகவும் பொருள் செறிந்ததும், இந்து சமூகத்திற்கு இன்றியமையாததுமான கட்டுரைகளையும், வாத எதிர்வாதங்களையும், இந்து சமய மேம்பாட்டுக்குப் பாடுபடும் தமிழ் இந்து இணையதளத்தில் தோன்றி ஒளிரச் செய்வதற்கு ஆதாரமாக அமைகின்றன.

    எனவே, தயக்கமின்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    நன்றி. வணக்கம்.

  10. Thanks for the offer to write for this website. I’ll definitely consider it. I’m not sure if English articles are accepted in this website though. Could someone clarify?

    Also, why was my other comment not published? I’d written a reply to Arizonan in which I had lambasted Hindus who worship Irfan Habib and ridicule Dina Nath Batra. I’d like to see an explanation from a moderator.

  11. இது போன்ற வரலாறு ஏன் எந்த பள்ளி பாட புத்தகத்திலும் போடுவதில்லை ? கிருத்துவ பள்ளிகளில் பைபிள் நடத்தபடுகிறது .. முதலில் இந்துக்கள் நடத்தும் பிரைவேட் பள்ளிகளில் சமய வரலாற்றை விருப்பமுள்ள மாணவர்களுக்கு கற்று கொடுக்கலாமே .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *