ஜனநாயக மரபுகளைக் காப்போம்!

parliament-adjournedநாடாளுமன்றம் புனிதமானது, இந்த நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டிய அந்த மன்றம் அரசியல் கட்சி மேடையைப் போல ஆக்கி, ஒவ்வொரு நாளும் உறுப்பினர்கள் எழுந்து அவையின் மையப் பகுதிக்குச் சென்று கூச்சலிடுவதும், அவைத் தலைவர் அவையை சில மணி நேரங்கள், அல்லது ஒரு நாள் முழுவதும் ஒத்தி வைப்பதும் நடக்கும் நிகழ்ச்சியாக ஆகிவிட்டதை உணர்ந்த நமது குடியரசுத் தலைவர் வேதனையுடன் சொல்லி, ஆங்கில செய்தித் தாளொன்றில் வெளியான செய்தி இது.

“நாடாளுமன்றத்தில் ஒரு அறையில் இடம் பிடிப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், தெலுகுதேசக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் மோதிக் கொண்ட செய்தி வெளியான அதே நேரத்தில் நமது குடியரசுத் தலைவர் உணர்வுபூர்வமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். புனிதமான அவையின் கெளரவத்தையும், மரியாதையையும் காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டு என்கிறார் அவர்.

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை வழங்கிப் பேசுகையில் அவர் இவ்வாறு சொல்கிறார்: “இறைவன் பெயரால் கேட்கிறேன், உங்களைத் தவிர வேறு யாரால் முடியும். நமது நாட்டின் உயர்ந்த கெளரவமிக்க அவையின் மரியாதையைக் காக்க வேண்டிய கடமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒவ்வொருவருக்கும், அவைக்கு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் நிச்சயம் உண்டு.”

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சொல்கிறார், பிரதமர் நரேந்திர மோடி பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பதவி ஏற்புக்காக நாடாளுமன்றத்துள் முதன்முதலாக நுழைகின்றபோது மன்ற கட்டடத்தின் வாயிற்படியில் தன் தலையை வைத்து வணங்கிவிட்டு காலடி எடுத்து வைத்ததை நினைவுகூர்ந்து இந்த மன்றத்தின் பெருமை, கெளரவம் ஆகியவற்றுக்கு அவர் தந்த மரியாதையை எண்ணி தான் பெருமிதம் அடைந்ததாகச் சொல்கிறார்.”

இந்த வார “துக்ளக்” இதழில் வேலூரில் புகழ்மிக்க ஒரு பொறியியல் கல்லூரியை நடத்தும் திரு ஜி.விஸ்வநாதன் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பற்றிய விவரம் வெளியாகி யிருக்கிறது. அவர் 1967 முதல் பத்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். முதன் முதலாக அவர் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 28. அவர் சொல்கிறார்: “நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் முதன்முதலாக டெல்லிக்குப் போனேன். அந்த காலகட்டத்தில் அங்கு நிறைய தலைவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆச்சார்ய கிருபளானி, ராம் மனோகர் லோகியா, பிலுமோடி, வாஜ்பாய், ஜோதிர்மாய்பாசு, இந்திரஜித் குப்தா என பல தலைவர்கள் அப்போது அவையில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அப்போது “புதன்கிழமை கிளப்” என்ற ஒரு அமைப்பு இருந்தது. அங்கு எல்லோரும் வருவார்கள், அனைவரும் கலந்து பேசுவோம், நல்ல தொடர்புகளை அது உருவாக்கிக் கொடுத்தது.”

இப்படித் தன் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வரும் திரு ஜி.விஸ்வநாதன் தன்னுடைய நாடாளுமன்ற நாட்கள் மிகச் சிறந்த நாட்களாகச் சொல்கிறார். அவர் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் அதாவது 1967 முதல் 77 வரையிலான காலத்தில், அவர் பார்த்த வரையில் ஒரு முறைகூட அவையின் மையப் பகுதிக்குச் சென்று உறுப்பினர்கள் கூச்சலிட்டது கிடையாது என்கிறார். காங்கிரஸ் கட்சி ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று இரண்டாக உடைந்த நிலையில்கூட அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்ததில்லையாம். ஜோதிர்மாய்பாசு, மதுலிமாயி போன்ற தலைவர்கள் அவையில் அரசாங்கத்தை எதிர்த்து மிகக் கடுமையாகப் பேசுவார்கள். இந்திரா காந்தியைப் பார்த்து “நீங்கள்தான் ஊழலைத் தோற்றுவித்ததற்கு முக்கிய காரணம்” என்று கடுமையாக நேரடியாகத் தாக்கிப் பேசிய தலைவர்களை எனக்குத் தெரியும் என்கிறார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்திரா காந்தி தன்னைப் பற்றி குற்றம் சாட்டும் உறுப்பினரைப் பார்த்துச் சீறியதில்லை; மென்மையான புன்னகையுடன் அந்த விமர்சனத்தை அவர் எதிர் கொண்டார். கோபப் படாமல், மென்மையாக குற்றச் சாட்டுகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். தொடக்க காலம் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அருமையான சூழல் அது என்கிறார் அவர். சபாநாயகரை எதிர்த்துக் கூச்சல் போட்டு, ஆர்ப்பாட்டம் பண்ணும் கலாச்சாரம் எல்லாம் அப்போது இல்லை, குறந்தபட்ச பொதுப் பண்பு அப்போது இருந்தது என்று சொல்லியிருக்கிறார் திரு ஜி.விஸ்வநாதன்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் இடைக்காலத்தில் அந்தப் பண்பு சற்று மாறுபட்ட திசையில் போனாலும், திரும்பவும் பழைய பண்பட்ட சூழ்நிலை திரும்பும் என்று கருதுகிறார் அவர். கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் செயல்பாடுகளில் மக்களை திகைக்க வைத்த செய்தி சோனியா காந்தியின் புதல்வர் ராகுல் காந்தி எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வெளியேறி, அங்கு பத்திரிகையாளர்களிடம் அவையில் ஒரே ஒரு குரல் மட்டும்தான் கேட்கிறது. மற்ற குரல்களுக்கு அங்கு இடமில்லை என்பதுபோல சொல்லியிருப்பதுதான். இதில் என்ன புதுமை இருக்கிறது, அனேகமாக எல்லா கட்சி உறுப்பினர்களுமே அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள் என்று கேட்கலாம். ஆனால் நன்கு கவனித்துப் பார்த்தீர்களானால், கட்சியின் மேல்மட்ட தலைவர்களாக இருப்பவர்கள் தங்கள் இருக்கையின் அருகில் நின்றுகொண்டுதான் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள், சாதாரண உறுப்பினர்கள்தான் அவையின் நடுப்பகுதிக்குச் செல்வது, கோஷங்கள் இடுவது, பதாகைகளைக் காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால், இங்கு இந்த நாட்டின் பிரதமர் பதவிக்குத் தயார் செய்து கொள்ளும் ராகுல் காந்தி இப்படி இறங்கி வந்து ஒரு கீழ்மட்ட தொண்டர் போல நடந்து கொண்டது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியைத்தான் அளித்தது.

பொதுவாக தலைவர் எவ்வழி, தொண்டனும் அவ்வழி என்பார்கள். தலைவர்கள் வழிகாட்டிகளாக, ஆதர்ச உறுப்பினராக நடந்து கொண்டால்தான், தவறான செயல்பாட்டில் இறங்குகின்ற தொண்டன்கூட தலைவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தவறான காரியங்களைச் செய்ய தயங்குவான். பொதுவாக நாட்டில் நடக்கும் ஹர்த்தால், பந்த், கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற சமயங்களில் தொண்டர்கள்தான் தெருத்தெருவாகச் சென்று அலம்பல் செய்வார்களே தவிர, தலைவர்கள் அவரவர் அலுவலகத்தில் இருந்து கொண்டு நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு குடிசை வீட்டில் ஏராளமான குழந்தைகளோடு வசித்து வந்த பெரியவரைப் பார்த்து ஒருவர் கேட்டார். உங்கள் வீட்டில் இருக்கும் இத்தனை குழந்தைகளில் யார் நல்ல குழந்தை என்று. அதற்கு அவர் பதில் சொன்னாராம், அதோ பாருங்கள் குடிசையின் உச்சியில் நெருப்பு வைத்துக் கொண்டிருக்கிறானே அவன் தான் நல்ல குழந்தை என்றாராம். அப்படியொரு நல்ல குழந்தையாக இருப்பது நல்லதா அல்லது நாட்டுக்கு வழிகாட்டும் நல்ல பிள்ளை என்று நாட்டு மக்கள் மனதார, உளமார வாழ்த்துவது நல்லதா? ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் மற்ற கட்சி தோற்பது நடக்கக்கூடியதுதான். மறுபடி தோற்ற கட்சி பதவிக்கு வருவதற்கு என்ன வழி என்று ஆக்கபூர்வமாகச் சிந்தித்து, அதற்கேற்ப தங்கள் பணிகளை முடுக்கிவிட்டு, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிப்பதைவிட்டு இதுபோன்ற சிறுபிள்ளைத் தனமான முயற்சிகள் மறுநாள் செய்தித் தாள்களில் பரபரப்பாக செய்திக்கு வழிவகுக்க முடியுமே தவிர மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தாது.

Narendra-Modi-in-parliment

பிரதமர் மோடி தன்னுடைய ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் கண்ணியத்தையும், ஒழுங்கையும், நாட்டு நலனே மற்ற எல்லா நலன்களுக்கும் மேலானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியும் நடந்து காட்டியும் வருகிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளதைப் போல, மோடி நாடாளுமன்றத்துக்கும், இந்திய ஜனநாயகத்துக்கும் எந்த அளவு மரியாதை தருபவராக இருந்தால் எத்தனையோ உறுப்பினர்கள் அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக கடந்து வந்த வாயில்படியில் தன் தலைவைத்து வணங்கிவிட்டு உள்ளே காலடி எடுத்து வைத்திருப்பார். அதுதான் பண்பாடு. அந்தப் பண்பாட்டையும், ஜனநாயகத்தின் மீதுள்ள பிடிப்பையும் தனது நடவடிக்கைகள், செயல்பாடுகள், முடிவுகள் ஆகியவற்றில் காட்டுவது ஒன்றுதான் உண்மையான ஜனநாயக மரபாக இருக்க முடியும்.

இனி வருங்காலங்களிலாவது நாடாளுமன்றம் கட்சிகளுக்குள், உறுப்பினர்களுக்குள் என்ன அபிப்பிராய பேதம், ஆதரவு அல்லது எதிர்ப்பு என்றாலும் நியதிப்படி தங்கள் ஆதரவு அல்லது எதிர்ப்பைக் காட்டும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாமல், அவையை நடத்த விடாமல் தடுப்பதும், அவைத் தலைவர் ‘ப்ளீஸ்’ எனும் சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டும். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு வரலாம், ஆயிரம் பேருக்கிடையிலும் வரலாம், அப்படி வரும் வேறுபாட்டை முறைப்படி முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எல்லா அமைப்புகளிலும், ஏன் நாடாளுமன்ற விதிமுறைகளிலும் கூட வகுத்திருக்கிறார்கள். அதனைப் பின்பற்றுவது என்ன அத்தனை கடினமா? முதலில் தலைவர்கள் வழிகாட்டினால், மற்றவர்கள் தாங்களாகவே அதனைப் பின்பற்றுவார்கள் என்பது திண்ணம். இந்திய ஜனநாயகம் ஆல்போல் வளர்ந்து அருகுபோல் வேரோடி நிலைக்க வேண்டிய ஜனநாயகம்; உலகத்துக்கொரு புதுமை இது. அதனை அத்தனை எளிதில் அழிந்துபோக விட்டு விடலாமா? ஜனநாயக மரபுகளைக் காப்போம். வாழ்க இந்திய ஜனநாயகம். வாழ்க இந்திய குடியரசு. வாழ்க இந்திய நாட்டு மக்கள்.

10 Replies to “ஜனநாயக மரபுகளைக் காப்போம்!”

  1. ராகுல் காந்திக்கு தோல்வியால் ஏற்பட்ட அவமானம், தாழ்வுணர்சியாக வெளிப்பட்டதன் வெளிப்பாடுதான் இப்படி மட்டமாக நடந்து கொள்ள வைத்துவிட்டது.பாவம், வாரிசு அரசியலில் பிரியங்கா முந்தி விடுவாரோ என்ற பயம் வேறு வந்துவிட்டது. அவர் என்னதான் பண்ணுவார்?

  2. புரியவேண்டியவர்களுக்குப் புரிய வேண்டுமே! அருமையான கருத்துகள். ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியவை.

  3. தினமும் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப்புறத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறார்கள். முந்தய காங்கிரஸ் அரசு இருக்கும்போது பாஜக இந்த காரணத்திற்காக காங்கிரஸ் அரசை செயலற்ற அரசு என்று தூற்றினர். இன்றும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. 44 உறுப்பினர்களே இருந்தால் என்ன, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை காங்கிரஸ் கட்சிக்கு தந்து மோடி அரசாங்கம் ஏன் முன்மாதிரியாக செயல்படவில்லை? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்- இதை மோடி அறிய மாட்டாரோ?

  4. 1970 ஆண்டுகளில் இருந்த கட்சிகளில் தலைமை, உறுப்பினர்கள் – 2010 ஆண்டுகளில் இருக்கும் கட்சிகளின் தலைமை, உறுப்பினர்கள் – ஒப்பிட்டுப் பார்ப்பதில் பயன் ஏதும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில், பாஜக நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொண்டதோ, இன்று காங்கிரஸ் அவ்வாறே நடந்து கொள்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தியதால், பல நிர்பந்தங்களுடன் ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செலுத்தும் பாஜக, பெருந்தன்மையுடன் ஆட்சி செலுத்த வேண்டும்.

    இன்றைய சூழ்நிலையில் ஆளும் கூட்டணிக்கு ராஜ்ய சபாவில் பெரும்பான்பை இல்லை. எதிர்க் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் எந்தச் சட்டங்களையும் நிறைவேற்ற முடியாது.

    பாஜக ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டது. லோக் சபாவில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை, விதிகளைத் திருத்தி, கொடுத்து இருக்கலாம். அவ்வாறு கொடுத்து காங்கிரசின் வாயை அடைத்து இருக்கலாம். (காங்கிரசுக்கு தகுதி இல்லை என்பது வேறு விஷயம் ). இன்று இவ்விஷயம் சுப்ரீம் கோர்ட் வரை வந்து விட்டது.
    கோர்ட் சொல்லி கொடுக்க வேண்டிய நிலைமை வராமல் இருந்தால் நல்லது.

    பாஜக நல்ல மரபுகளுடன், நல்ல விதமாக ஆட்சி செய்தாலே காங்கிரஸ் தனிமைப் படுத்தப் பட்டு விடும்.

  5. The comments made by the two Natarajans above encapsulate everything that is wrong with the Hindu psyche today.

  6. Sorry. Reg. my previous comment – It should be ‘the comments above by Nagarajan and Natarajan encapsulate everything that is wrong with the Hindu psyche today.

  7. Parliament is simply a waste of time. Audit tells us that it takes 1 crore to run the parliament everyday. What a waste of taxpayers money!.

    The members rush to the well of the house in the morning & thie house is adjourned tiil afternoon. In the AN session, the same gets repeated & the house is adjourned for the day.

    The members get their allowance & perks even if they do not attend. The need to sign the register & then they can leave.

    The rules will not be changed since it is the hon’ble members who frame them.

    The only time the house is in full strength is when there is a discussion to increas the members’ salaries. It is voted without any opposition.

    Recently we saw the case of sachin tendulkar attending the rajya sabha only twice. Worse, many even defended him for his action.

    Poltics is the last refuge of a scoundrel.

    Our parliamentarians prove that.

  8. 2003 நவம்பர் 20ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாயி பேசிய பேச்சு இது:

    Prime Minister Atal Bihari Vajpayee on Thursday said the Congress party should remain out of power for a ‘longer’ period of time so that it could learn to behave as a responsible opposition.

    He accused the party of lacking ‘farsightedness’ at an election meeting in West Delhi.

    “Congress has not learnt to remain out of power,” he said. Vajpayee said the Congress-ruled Delhi was still facing a number of problems such as scarcity of water, power, good roads and communication facilities.

    “Even after remaining in power for five years, roads in Delhi are in a bad shape. I have been so many capitals but when I come back here, I feel sad,” he said. Vajpayee added the minimum needs of the people were not being fulfilled.

    Describing the violent incidents in Assam and Bihar, he said that job opportunities were limited and the number of aspirants was high. The government jobs would not solve the purpose and there was a need for generation of self-employment, he said.

    Appealing to the people to elect a government, which understands its responsibility and goes hand-in-hand with the Centre to take Delhi on the path of prosperity and development, Vajpayee said there should not be any friction between the Centre and the states.

    The Congress government in Delhi ‘failed’ to provide the basic minimum facilities to the people, he said. “It has always tried to serve its own interest and was not worried about the people,” he charged.

    Observing that there were so many non-Congress governments in the states, Vajpayee said no one had imagined how a non-Congress government at the Centre would last its full term. The Congress, he alleged, had always tried to destabilise such a government.

    வாஜ்பாயி காலத்தில் காங்கிரஸ் எதிர் கட்சியாக ஒரு போதும் பொறுப்புள்ள கட்சியாக நடந்து கொள்ளவில்லை. முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் உட்பட அனைவரும் முதல் நாள் தொடங்கி அவையை நடத்த விடாமல் கூச்சலும் குழப்பவும் விளைவித்தார்கள் என்பதை நாடு மறந்து விடாது. மே.வாங்க காங்கிரஸ் உறுப்பினரும், காங்கிரசில் அமைச்சராக இருந்தவருமான பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி சபாநாயகர் சொல்லச்சொல்ல நின்றுகொண்டு கூச்சல் போட்ட வரலாற்றை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. பதவியில் இருக்கும் வரை காங்கிரஸ் ஊருக்கு உபதேசம் செய்யும் போலிச் சாமியார். ஒரு பொறுப்புள்ள எதிர் கட்சியாக இருக்கக்கூட தகுதி இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் தோற்றுவித்த அநாகரிகக் காட்சிகளை மறந்துவிட்டு, பா.ஜ.க.தான் குழப்பமும் கூச்சலும் இட்டது போல இங்கு சிலர் எழுதுவது ஏற்றுக் கொள்ள முடியாது. பழைய நிகழ்சிகளை அவர்கள் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும். அவரவர் மனதுக்குப் பிடித்தவர்களைப் புகழ்வதில் தவறு இல்லை. அதற்காக உண்மையை மூடி மறைத்து பா.ஜ.க.வைக் குறை கூறுவது சரியில்லை. காங்கிரசார் தோற்றுவித்து, லல்லு, முலாயம் சிங், மாயாவதி போன்றவர்களால் பின்பற்றப்படும் ஜனநாயகத்தைக் கேலிக்குறியாக்கும் குழப்ப நிகழ்சிகளுக்கு மூலம் காங்கிரஸ் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இதை பா.ஜ.கவும் பின்பற்றியிருக்கலாம், அவை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமே தவிர, யார் காரணம் என்பதை ஆராய்வது அல்ல. பா.ஜ.க தவறிழைத்திருந்தாலும் திருத்திக் கொள்ளத்தான் வேண்டும்; திருந்தவும் செய்வார்கள். ஆனால் பதவி ஒன்றே குறியாக இருக்கும் காங்கிரஸ், தான் பதவியில் இருந்தால்தான் ஊருக்கு உபதேசம், இல்லாவிட்டால் குழப்பம் விளைவிக்கத் தயங்க மாட்டார்கள். இந்த உண்மையை ஆயிரம் கோயிலில் உரக்கச் சொல்வேன்.

  9. The Supreme Court said “Leader of Opposition conveys the voice of a representative different from government in the House; issue of LoP is relevant not only in Lokpal law but also in other existing and incoming legislations”.

    The observation of the SC is erroneous.

    LoP need not voice of a representative different from Govt. It can support the Govt. function also. Just because Lokpal and other legislations require the presence of LoP, the Court or the ruling Party cannot offer the status of Lop to any party as it desires. Only the people – voters are the best judge in this matter. While the people did not give the status of LoP to any party i.e., not even 10% of the total strength, if the minority opposition is given broad rights and powers by the Court, then this may weaken or destroy the possibility of the majority and the Govt. to effectively run the country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *