முகப்பு » ஆன்மிகம், நிகழ்வுகள், விவாதம்

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 1


மூலம்:  ராஜிவ் மல்ஹோத்ரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு
தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண்

சுவாமி நித்யானந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப்பற்றி எனது சமீபத்திய இந்திய சுற்றுப்பயணத்தின் போது விசாரித்து அறிய முனைந்தேன். அவ்விசாரணையின் மூலம் ஏற்கனவே  எனக்குத்தெரிந்த தகவல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட புதிய உண்மைகளை அறிந்தேன். நான் ஒரு சட்ட வல்லுனர் அல்ல என்றாலுm  நான்  நம்பிக்கைகுரியவர்களிடம் நான் கேள்விப்பட்டவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

1. சுவாமி நித்யானந்தர் மீது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திடீரென பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் மீது நில அபகரிப்பு, சட்டவிரோதமாக தங்கம், புலித்தோல் வைத்திருத்தல் முதல் காமம் மற்றும் போதை மருந்துகளைப்ப யன்படுத்துதல் வரை ஏராளமான  குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஊடகங்கள் ஊர்ஜிதப்ப டுத்தப் படாத ஒரு சில வீடியோக்களை பலமுறை காட்டின. சுவாமி நித்யானந்தர் கும்பமேளாவுக்கு சென்றார். பின்னர் தலைமறைவாகி கைது செய்யப்பட்டார். ரஞ்சிதா என்ற பெண்ணோடு அவர் தகாத உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்ப ட்டது. பலவாரங்களுக்கு இந்தக் குற்றச்சாட்டுப பல்வேறு ஊடகங்களுக்கு தலைப்பு செய்தியானது.

nithyananda2. ஆனால் அந்த நிகழ்வுகளின் காலவரிசை அசாதாரணமானதாகவும் விசித்திரமாகவும் இருந்ததாக நான் சந்தித்த சட்ட வல்லுனர்கள்  சொல்கிறார்கள். அரசு அதிகாரிகளால் வழக்கு பதிவு செய்வதற்கு முன்னதாகவே ஊடகங்கள் சுவாமி நித்யானந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தின. அதன்பின்னர் காவல்துறை குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை திரட்ட தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்தது. பாதிக்கப்ப ட்டவர்கள் புகார் கொடுக்க முன்வரும்படியும் தங்களை அழைக்கும் படியும் நாள் முழுதும் தொலைக்காட்சிகளில் காவல் நிலைய தொலைபேசி எண்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால் என்ன அதிசயமோ ஒருவர் கூட காவல்துறைக்கும் ஊடகங்களுக்கும் செவி சாய்த்து எந்தப் புகாரையும் கொடுக்க வரவில்லை. யாரிடமும் எந்தப் புகாரும் வராத நிலையிலும்  எந்த உறுதியான ஆதாரமும் காவல்துறைக்கு கிடைப்பதற்கு முன்னரே எல்லாக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு விட்டதைப் போன்று ஊடகங்களில் திரும்பத்தி ரும்ப செய்தி பரப்பப்பட்டதே இதில் பெரிய விசித்திரமாகும்.

3. எனவே இந்த நிகழ்வுகளின் காலவரிசை எப்படி இருந்தது என்றால்: ஊடக ஊழல் குற்றச்சாட்டு ==> பாதிக்கப்பட்டோரை தேடும் காவல்துறையின் விளம்பரங்கள் ==> காவல்துறை புகார்களை பதிவு செய்தல். இது வழக்கத்திற்கு நேர் மாறானது, எதிரானது.

4. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு பெண்ணின் குற்றச்சாட்டினைத் தவிர அவர் மீதான எல்லாப் புகார்களும் கைவிடப்பட்டுவி ட்டன. ஆரம்பத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட  சட்ட விரோதமான நிதி முறைகேடு, நில அபகரிப்பு, மற்றுமுள்ள சட்டத்துக்கு மாறான நடவடிக்கைகள் தொடர்பான புகார்கள் எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டன.

5. முக்கியமாக பாதிக்கப் பட்டதாக கூறப்பட்ட பெண்மணியே (ரஞ்சிதா என்ற திரைப்பட நடிகை) தாமே முன்வந்து அவர்தொடர்பாக சுவாமி நித்யானந்தர் மீது சாட்டப்பட்ட எல்லாக்குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அவரே வழக்குறைஞரை அமர்த்தி தனது  நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வதாக இந்த ஊழலில் ஈடுபட்ட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இது விடயத்தில் நாடுமுழுதும் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் கண்ணை மூடிக்கொண்டு திமுகவின் தானைத் தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு சொந்தமான சன் குழுமத் தொலைக்கா ட்சியைப் பின் தொடர்ந்தனர். திரைப்பட நடிகை ரஞ்சிதா இன்னமும் சுவாமி நித்யானந்தரின் ஆசிரமத்தில் வசித்துவருகிறார் என்பது அவர் இதில் பாதிக்கப் பட்டவராக தம்மைக்கருதவில்லை என்பதையே காட்டுகிறது.

6. ஆக நிலைமை இப்போது எப்படி இருக்கிறது. ஒரே ஒரு பெண் சுவாமி நித்யானந்தர் மீது குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.   ரஞ்சிதா மற்றும் அவரது வழக்குறைஞர் இருவரும் உச்ச நீதி மன்றத்தில் ஆஜராகி தாம் பாதிக்கப்பட்டதாக தவறாக கூறப்படுவதாகவும் இது சதி என்றும் மனுகொடுத்துள்ளார்.

7. குற்றம் சாட்டும் அந்த ஒரே பெண்மணியின் பின்புலம் ஒன்றும் இங்கே சொல்லிக் கொள்வது போல இல்லை. அவரைப் பற்றிய தகவல்களையும் நான் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆகவே அதை இங்கே சொல்லாமல் விட்டு விடுகிறேன்.

8. வலுவான ஆதாரங்கள் இல்லாததால் யாரும் இந்த வழக்கை மேலும் தொடர வலியுறுத்தாததால் இந்த விடயம் கிடப்பில் போடப்பட்டது. சுவாமி நித்யானந்தரும் இதை அப்படியேவிட்டு தானாகவே மறைந்து போக விட்டிருக்கலாம். ஆனால் அவரது வழக்குறைஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்ததின் மூலம் உறுதியான நடவடிக்கை எடுத்தார்கள். கர்னாடக உயர் நீதிமன்றம் குறித்த காலத்திற்குள் வழக்கினை தீர்க்கத் தவறிவிட்டது என்றும் எல்லா தவணைகளும் கடந்துவிட்டன என்றும் மனுவில் வாதிட்டார்கள். வழக்கினை மேல்கோர்ட்டுக்கு கொண்டு சென்று வழக்கிலிருந்து முற்றிலும் விடுபடுவது சுவாமி நித்யானந்தரின் வழக்குறைஞர்களின்  நோக்கமாக இருந்தது.

9. இந்த நடவடிக்கை சரியானது தானா? இல்லை அபாயகரமானதா என்பதைக்காலம் தான் சொல்லமுடியும். இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் மெத்தனப்போக்கினை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. மேலும் வழக்கினை விரைவாக விசாரித்து முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் இந்தவழக்கு விசாரனை உயர் நீதிமன்றத்தில் தற்போது தீவிரமடைந்துள்ளது.

10. கர்நாடக உயர் நீதிமன்றம், தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னால் திறமையற்றதாக வெட்கிதலைகுனிய வைக்கப்பட்டதற்கும்  பழிவாங்கப்போகிறதா? இது மிகவும் ஆழமான, அவசரமான, ஆனால் நான்கு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த வழக்கு என்பதாலும், பெரும்பாலான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டமையாலும், தன்னுடைய முகத்தினை காப்பாற்றிக்கொள்வதற்காகக் காவல்துறை மேலும் கடுமையானதாக நடந்து கொள்ளப் போகிறதா?  இது போன்ற வினாக்களுக்கெல்லாம் விடை சொல்வதற்கு என்னிடத்தில் வல்லமை இல்லை.

11. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி: ஒரு பக்க சார்பான சந்தர்ப்பவாதிகளான ஊடகங்கள் இதை பரபரப்பை மீண்டும் உண்டாக்கும் வாய்ப்பாகக் காண்கின்றன. இந்த துறையில் பணியாற்றும் ஊடகத்தார் மிதமான  நுண்ணறிவும் குறைவான வைராக்கியமும் உள்ளவர்களாக இருந்தாலும் பரபரப்புக்காக இதனை பயன்படுத்த முயல்கின்றனர்.

சுவாமி நித்யானந்தரின் ஆசிரம வாசிகள் மற்றும் அவரது அமைப்பினை சார்ந்த பக்தர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், தொடர்ந்து அவருக்கு விசுவாசமாக நம்பிக்கையுடன் இருங்கள் என்பதே. இதே அறிவுரையையேதான் நெருக்கடிக்கு உள்ளான மற்ற குருமார்களின் சீடர்களுக்கும் என்னை நாடிவந்த போது சொல்லி வந்திருக்கிறேன். உலகெங்கும் உள்ள ஏராளமான மக்களின் தனிப்பட்ட துயரங்களை போக்க அவர் உதவி செய்துள்ளார் என்பது ஐயத்துக்கு இடமில்லாத உண்மையாகும். அவரது உபதேசங்கள் ஓஷோவின் போதனைகளைப் பல சமயங்களில் நினைவு படுத்துகின்றன. அவற்றோடு பாரம்பரிய சடங்குகளை மீட்டுருவாக்கம் செய்து, ஹிந்து தர்மத்தின் மரபு வழியான கோட்பாடுகளையும் அவர் இணைத்துள்ளார்.

nithyananda_doing_homa_arati

ஹிந்துக்களே, மதச்சார்பற்ற ஊடகங்கள், நம்  மத நம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகும் குருமார்களுக்கு, எப்போதும் சந்தேகத்தின் பலனை அளியுங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.. இதுபோன்ற சிக்கல்கள் மற்ற மதங்களுக்கு வருகின்றபோது அவர்கள் கதவைசாத்திக்கொண்டு தமக்குள்ளே அவற்றை முடித்துக் கொள்கிறார்கள். ஹிந்துக்களுக்கு தமக்குள்ளே சிக்கலை சமாளிப்பதற்கான அமைப்பு ஏதும் இல்லை. எனவே இந்த விவகாரங்கள் பொது மன்றத்திற்குவருகின்றன. மதச்சார்பின்மை வாதிகள் இதை ஹிந்துமதத்தினை இழிவு படுத்துவதற்கும் கேலிசெய்வதற்கும் வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த மாதிரி சிக்கல்கள் வருகின்ற போதெல்லாம் எதிராளிகள் பக்கம் சேர்வோரையும், தீர விசாரிக்காமல் நம்மவர்களை கைவிடுகிற ஹிந்துக்களையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். உறுதியற்ற பல மனிதர்களுக்கு இது மிகவும் எளிதானதே.  தமது சமுதாயத்தின் ஒற்றுமைக்காக தோளை உயர்த்தி அதனோடு நிற்பது தான் கடினமானது.

நிறைவாக, இந்த நிகழ்வுகள் நடக்கின்ற சமயத்தில் அவற்றைக் கண்ட சாட்சியாக நான் இருக்கவில்லை. தவிர இந்த வழக்கினைப்பற்றி விவாதிப்பதற்குத்தகுதியுள்ள சட்ட  நிபுணரும் நான் அல்லன். ஆனால் என்னுடைய விசுவாசம் தெள்ளத்தெளிவாக ஒரு ஹிந்துவுடையதாகவே இருக்கிறது.

அன்புடன்,
ராஜிவ்

(ராஜிவ் இது குறித்து எழுதியுள்ள அடுத்த பதிவையும் இதைத் தொடர்ந்து அளிக்க உள்ளேன் – மொழிபெயர்ப்பாளர் குறிப்பு).

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

 

25 மறுமொழிகள் சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 1

 1. N.Paramasivam on September 17, 2014 at 1:27 pm

  ஹிந்துக்களே, மதச்சார்பற்ற ஊடகங்கள், நம் மத நம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகும் குருமார்களுக்கு, எப்போதும் சந்தேகத்தின் பலனை அளியுங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.. இதுபோன்ற சிக்கல்கள் மற்ற மதங்களுக்கு வருகின்றபோது அவர்கள் கதவைசாத்திக்கொண்டு தமக்குள்ளே அவற்றை முடித்துக் கொள்கிறார்கள். ஹிந்துக்களுக்கு தமக்குள்ளே சிக்கலை சமாளிப்பதற்கான அமைப்பு ஏதும் இல்லை. எனவே இந்த விவகாரங்கள் பொது மன்றத்திற்குவருகின்றன. மதச்சார்பின்மை வாதிகள் இதை ஹிந்துமதத்தினை இழிவு படுத்துவதற்கும் கேலிசெய்வதற்கும் வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.//

  உண்மை. இது தான் என் கருத்தும்.

 2. ஆனந்த் சாகர் on September 17, 2014 at 3:35 pm

  நித்தியானந்தா ஹிந்து சாமியார் என்பதால் அவர் செய்த தவறுகளை மூடி மறைக்க பார்ப்பது ஏற்புடையது அல்ல. யார் செய்தாலும் குற்றம் குற்றமே.

 3. R.sridharan on September 17, 2014 at 3:56 pm

  If you look at the Sabarimala -Jayamala issue, Swami Lakshmananada murder,Kanchi Shankaracharya case, Asaram Bapuji and others we can clearly see the hand of the white Christian countries-Church axis. There is absolutely no doubt that these forces with their enormous clout with the leaders of many regional parties and the congress and also with their brute money power have been trying their best to tarnish the image of the Hindu sadhus/sadhvis .The reason is that if the Hindus especially the unlettered /non-Brahmin Hindus ( who are not attracted by the traditional Mutts) start following these sadhus in a big way then their agenda of converting them will fail.

 4. somuvaradarajan on September 17, 2014 at 4:52 pm

  அன்புள்ள அய்யா!
  வணக்கம்.
  நம் குருமார்களை நாம் மதிக்கிறோம்.

  அதே நேரத்தில் அவர்களும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக நடந்துகொள்ள

  வேண்டும்.சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்கவேண்டும்

  என்று ஷேக்ஸ்பியரில் வரும். பொய்க்குற்றச்சாட்டு கூறுபவர்கள் கடுமையாக

  தண்டிக்கப்பட மக்கள் கொதித்து எழ வேண்டும்…………….சோமு .வ.

 5. chandrasekaran on September 17, 2014 at 4:58 pm

  vishvamithiraraiye menaka mayakinappo nithiyanandha onnum vithivilakku alla

 6. க்ருஷ்ணகுமார் on September 17, 2014 at 8:34 pm

  ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசயருக்கு வாழ்த்துக்கள். செறிவான மொழியாக்கம்.

  தொலைக்காட்சிகளில் வெளியான இந்த சன்யாசி பற்றிய காணொளிகள் ஏற்புடையவை இல்லை. சன்யாச தர்மத்திற்கு இழுக்கு.

  \\ குற்றம் சாட்டும் அந்த ஒரே பெண்மணியின் பின்புலம் ஒன்றும் இங்கே சொல்லிக் கொள்வது போல இல்லை. அவரைப் பற்றிய தகவல்களையும் நான் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆகவே அதை இங்கே சொல்லாமல் விட்டு விடுகிறேன். \\

  ஸ்ரீ மல்ஹோத்ரா அவர்களுடைய மேற்கண்ட வாசகத்தைக் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
  விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய விஷயம் அந்தப் பெண்மணி சாட்டிய குற்றத்தில் ஞாயம் உள்ளதா இல்லையா என்பதே. சாட்டப்பட்ட குற்றத்தில் ஞாயம் இல்லை என்பது ருஜுவாக்கப்பட்டால் மட்டிலும் மேற்கொண்டு குற்றம் சாட்ட விழைந்த பெண்மணியின் பின்புலத்தை விசாரிப்பதில் அர்த்தம் இருக்கும்.

  The episodes of Nithyananda, Asaram Bapu et al…. are shameful.

  ஆன்மீகத்தில் இருப்பவர்கள் சன்யாசிகளானாலும் சரி இல்லறத்தார்களானாலும் சரி ப்ரம்மசாரிகளானாலும் சரி…………..இளம் குமரிப்பெண்களுடன் குலாவுதல் என்பது ………….. தர்மத்திற்கும் ஒழுக்கத்திற்கும் எதிரானது.

  வெள்ளை க்றைஸ்தவ சர்ச் ஹிந்து ஆன்மீக வாதிகளை ப்ரச்சினைகளில் சிக்க வைக்க திட்டமிடுகிறது என்றால் அந்த திட்டத்தில் விழும்படிக்கான நடவடிக்கைகளில் ஆன்மீக வாதிகள் ஏன் ஈடுபடவேண்டும்?

 7. sundarsvpr on September 18, 2014 at 8:08 am

  ஹிந்து மதத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றும் இல்லை நித்தியானந்த என்ற நபர் மீது உள்ள குறைபாடுகள். இதனை விசாரிப்பது தவறு இல்லை பகவன் ராமன் மீது சந்தேகம் கூறப்பட்டது அதனை எதிர்கொண்டு வாழ்ந்து காட்டினார் நம் மத தலைவர்கள் மற்றும் இதர மத குருமார்கள் செய்யும் குற்றங்கள் துகில் உரித்து காட்டவேண்டியது தமிழ் ஹிந்து செய்யவேண்டும் சமுதாயம் நல்ல இருக்க அவசியம்

 8. ஒரு அரிசோனன் on September 18, 2014 at 8:29 am

  I have attended two speeches by Nithyananda. He has the capability of delivering good speeches in clearer terms. However, after seeing the records of what his organization asks people to sign, I have changed my mind. As Somuvaradarajan has written, “Ceaser’s wife should be above all suspicion.”

  When a person wears kavi garb, he should remove all worldly desires from his mind.

  What is the necessity for Nithyananda to go incognito when faced with charges? He should have faced them like Swami Jayendra Saraswathi.

  Also, the way he took over Madurai Adhinam…. The way he tried to make himself the top person during kumbamela….

  Let us not discuss it.

  Let him throw away his kavi garbs, wear normal attire, get married, and serve humanity as a normal person, and earn respect.

  Let him not act in way to make people lose faith in sanyasis.

 9. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 18, 2014 at 10:36 am

  ஆனந்த சாஹர்
  “நித்தியானந்தா ஹிந்து சாமியார் என்பதால் அவர் செய்த தவறுகளை மூடி மறைக்க பார்ப்பது ஏற்புடையது அல்ல. யார் செய்தாலும் குற்றம் குற்றமே”.
  நித்யானந்த பரமஹம்சர் குற்றம் செய்திருக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்பது தானே ராஜிவ் மல்ஹோத்ரா ஜியின் வாதம். அவர் ஹிந்து என்பதால் அவரது குற்றத்தினை மன்னிக்கவேண்டும் என்று ராஜிவ் எங்கும் சொல்லவில்லை. யார் குற்றம் செய்தாலும் குற்றம் என்று தான் எப்போதும் வணங்கும் ஈசனைப்பார்த்தே சொன்ன நக்கீரன் பரம்பரை எங்களுடையது. வேறுமதத்தவராயின் இனத்தவராயின் அவரது உலகம் வேறு அவர்களை மதம் மாறச்சொல்லி கொல்லலாம் அவர் பெண்களை வன்புணர்ச்சி செய்யலாம் என்பதெல்லாம் யாருடைய மார்கம் என்று அறிவீர்களா? ஆனந்த சாஹரரே.

 10. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 18, 2014 at 10:42 am

  சோமு வரதராஜன்
  “அதே நேரத்தில் அவர்களும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக நடந்துகொள்ள

  வேண்டும்.சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்கவேண்டும்

  என்று ஷேக்ஸ்பியரில் வரும். பொய்க்குற்றச்சாட்டு கூறுபவர்கள் கடுமையாக

  தண்டிக்கப்பட மக்கள் கொதித்து எழ வேண்டும்”.
  சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக நடந்தாலும் விடமாட்டார்கள் இந்த ஊடகங்களும் அன்னிய சக்திகளும். கோடிக்கணக்கில் பணத்தினைக்கொட்டி இல்லாததை உருவாக்கி சிக்கலில் சிக்கவைக்கிறார்கள். அவர்களது முகத்திரையைகிழிப்பதுதான் வழி.
  சீசரின் மனைவி சந்தேகத்திற்கப்பாற்பட்டவள் என்பதன் பொருள் அவளை சந்தேகப்படுபவர்களின் தலை இருக்காது என்பதால் யாரும் சந்தேகப்பட முடியாது என்பதே. ஆக அது இங்கே பொருத்தமற்றது. மக்கள் விழித்தெழுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

 11. "Honest Man" on September 18, 2014 at 11:27 am

  /////////என்னுடைய விசுவாசம் தெள்ளத்தெளிவாக ஒரு ஹிந்துவுடையதாகவே இருக்கிறது.///////// இவர் நேரில் பார்த்த சாட்சியும் இல்லை. சட்ட ஆலோசகராகவும் இல்லை. வெறும் விசுவாசி என்பதால் சாமியார் செய்யும் அட்டூழியங்களை எல்லாம் மறைத்து விடுவதா? இப்படிப்பட்ட ருத்திராட்ச பூனைகளை அழித்தொழித்தால்தான் இந்து மதம் உருப்படும். நான் இந்து மதம் பிழைக்க வேண்டும் தழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறுகிறேன்.நான் வீரமணி கும்பலை சேர்ந்தவனல்ல. வயலில் நெல் விளைந்தால் கூடவே புல்லும் விளையும். “நித்தி” ஒரு புல். அதை பிடுங்கி எறியவேண்டும். இல்லையென்றால் புல் மட்டுமே விளைந்து இந்து மதம் என்ற நெற்பயிர் அழிந்தொழிந்து விடும். இந்து சாமியார் என்பதால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது என்பது தன விரலைக் கொண்டு தன கண்ணையே குத்திகொள்வது போல ஆகும்.

  மதசார்பற்ற ஊடகங்கள் என்று சொல்லிகொள்ளும் சில ஊடகங்கள் இந்து மத சாமியார்களின் விஷயங்களை மட்டும் பெரிது படுத்துகின்றன. ஆனால் மற்ற மதங்களின் மதத் தலைவர்கள் செய்யும் தவறுகளை கண்டு கொள்வதில்லை என்று கட்டுரையாளர் வருத்தபடுகிறார். சரி, அவர்கள் செய்யும் தவறுகளை நீங்கள் கொட்டை எழுத்துக்களில் (HEADLINE NEWS ல்) வெளியிடுங்கள். யார் தடுத்தது உங்களை? அவற்றை வெளியிடுவதற்கு உங்களிடம் (தமிழ் நாட்டில்) ஒரு தினசரி உள்ளதா? இருக்கும் ஓரிரு மாத இதழ்கள் பழங்கால பக்தி கதைகளை வெளியிட்டு கொண்டு பஜனை பாடி கொண்டிருக்கின்றன.. தற்கால உலகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து சிறுதும் அவர்களுக்கு அக்கறை இல்லை. தற்காலத்திற்கு தகுந்தார் மாதிரி மாறி கொள்ளும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை.

  (Edited and published)

 12. sanjay on September 18, 2014 at 2:56 pm

  I agree with the author that the cases against Nithyananda does not hold water, but that does not absolve him of his acts.

  I have personally attended many sessions of his & interacted extensively with many of his disciples. I came across some strtling facts. A young girl, quite good looking, was coerced (not forcefully) into becoming his disciple & stay in the ashram.

  Her parents were on the lookout for a bridegrrom at that point but the girl refused. She was mentally prepared to become a sanysin when luckily for her, the video incident happened.
  She is now happily married & all is well.

  His antics when he tried to take over the madurai ashram are too ridiculous to even quote here.

  Such Godmen continue to bring disrpute to Hindusim.

 13. தஞ்சை வெ.கோபாலன் on September 19, 2014 at 6:09 am

  ஒருவன் ஹிந்து என்பதாலேயே அவனுடைய நடவடிக்கைகள் அனைத்தையும் நாம் நியாயப்படுத்த வேண்டுமென்பதில்லை. இந்த நித்தியானந்தாவைப் பற்றி பார்க்கும், கேட்கும் எந்த விஷயமும் ஹிந்து தர்மத்துக்கு ஏற்புடையதாக இல்லை. இது போன்ற மனிதர்களின் மனோ விகாரங்களை மறைக்க வாசாலமாகப் பேசி மக்களை மயக்கும் ஆற்றல் இவர்களுக்கு வந்து விடுகிறது. இந்த ஆளின் தோற்றம், பேச்சு, அலங்காரம், ஆடம்பரம் இவைகளோடு, பெண்களைக் கூட்டி வைத்துக்கொண்டு அடிக்கும் கொட்டம் இவற்றைப் பார்த்தாலே இந்த ஆள் மோசடிப் பேர்வழி என்பது உலகுக்குத் தெரிந்துவிடும். வேஷமிட்டு உலகை ஏமாற்றும் எவருமே தன் உண்மை ஸ்வரூபத்தை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு ஹிந்து சந்நியாசி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில நியதிகள் உண்டு. இந்த ஆள் சந்நியாசி இல்லை இந்து தர்மத்தை உபதேசிக்கிறவர் என்றால் அதற்கான தோற்றம் எளிமைதானே தவிர நாடக பாணி அலங்காரம் அல்ல. ஒரு பெண்ணை அந்தரங்கமான துணைவியாக வைத்துக் கொண்டிருப்பவன் எப்படி உண்மையான ஹிந்து துறவியாக இருக்க முடியும். இதுபோன்ற வேஷங்கள் இவர்களை மன வக்கிரங்களுக்குத் தீனி போட உதவுமே தவிர எந்த மனிதனையும் இந்து தர்மத்தில் உயர்த்திவிட முடியாது. இவர் போன்ற ஆட்களுக்கு வக்காலத்து வாங்குவது ஹிந்து தர்மத்துக்கு நாம் செய்யும் கேடு. தயவு செய்து இவர் போன்ற மோசடிப் பேர்வழிகளுக்கு எந்த வகையிலும் துணை போகாதீர்கள். நாம் ஹிந்து என்பதால் கண்களை மூடிக்கொண்டு இவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் சமூகம் நாறிப்போஇவிடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஹிந்து தர்மம் மிக மிக உயர்ந்தது. அது புனிதமானது. சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. அதைப் பரப்புகின்ற மனிதர்களும் அவற்றைப் பின்பற்ற வேண்டும். வேஷதாரிகள் தோலுரித்துக் காட்டப்பட வேண்டியவர்களே. என்னுடைய இந்த கருத்து யார் மனதையாவது புண்படுத்துமானால், தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் சொல்வதுதான் சத்திய வாக்கு.

 14. "Honest Man" on September 19, 2014 at 12:54 pm

  இந்து மதம் செழித்து வளர வேண்டும் என்றால் நிறைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும். (1) ஜனவரியில் பொங்கல் வருகிறது பொங்கல் என்றால் வெறும் பொங்கல் அல்ல. போகி, தைப் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று அடுக்கடுக்காக வருகிறது.பிப்ரவரியில் மகா சிவராத்திரி மார்ச்சில் ஹோலி பண்டிகை, தெலுங்கு பண்டிகை,ஏப்ரலில் தமிழ் வருட பிறப்பு,ஜூலையில் ஆடி வெள்ளி என்று 5 வெள்ளி கிழமைகளில் விசேஷம் ஆகஸ்டில் விநாயகர் சதுர்த்தி, செப்டம்பரில் புரட்டாசி சனி என்று 5 சனி கிழமைகளில் விசேஷம். மேலும் அதே மாதத்தில் நவராத்திரி.அக்டோபரில் சரஸ்வதி பூஜை. நவம்பரில் தீபாவளி. டிசம்பரில் மார்கழி (ஒரு மாத ) பூஜை. இதற்கிடையில் மாதந்தோறும் அமாவாசை, கிருத்திகை என்று வரும். பண்டிகை என்றாலே பயமாக இருக்கிறது. காசு இல்லாமல் பண்டிகை கொண்டாட முடியாது. சாதாரணமாக கோவிலுக்கு போவதென்றால் கூட பழம், பூ, வெற்றிலை பாக்கு, தேங்காய்.கற்பூரம் ஊதுவத்தி என்று வாங்க செலவு ஆகிறது. கோவிலுக்குள் சென்றால் entrance fees , அர்ச்சனை டிக்கெட், உண்டியலில் பணம் என்று எல்லாம் முடிந்த பின் அங்கே அர்ச்சகருக்கு இனாம் தரனும்.(அரை முடி தேங்காய் எடுத்து கொண்டாலும்).அது வரவில்லை என்றால் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். இப்படி பொருள் செலவழித்தால்தான் தான் நமக்கு கடவுள் அருள் கிடைக்குமாம். ஒவ்வொரு ஊரிலும் கெங்கைஅம்மன் திருவிழா என்று 10 நாட்கள் நடக்கும். விருந்தாளிகள் வருவார்கள். அவர்களை கவனிக்க ஏகப்பட்ட செலவுகள் செய்ய வேண்டும். ஆடி மாசம் நடக்கும் வெள்ளி கிழமை திருவிழாவிற்கு ஊரில் சினிமா பாட்டு கச்சேரி நடக்கும் (கடவுள் எனக்கு சினிமா பாட்டு கச்சேரி வேண்டும் என்று பக்தர்களிடம் வேண்டி கொண்டதாக்கும்!) அதற்கு வசூல் மன்னர்கள் வீடு தோறும் படை எடுப்பார்கள்.

  முஸ்லிம்களை பாருங்கள். ஒரு நாளைக்கு 5 முறை தொழுகிறான். மசூதிக்கு போகிறான். கால் கை முகம் கழுவுகிறான். கவிழ்ந்து அடித்து கும்பிடுகிறான். இப்படி கும்பிட்டு கும்பிட்டு அவன் நெற்றியில் ஒரு கருப்பு அடையாளம் ஏற்படுகிறது. அவ்வளவுதான்.ஆனால் ஒரு பைசா செலவு இல்லை. முஸ்லிம் பண்டிகையா? ஆடு வெட்டி மகிழ்வாக தன வயிற்றுக்கு சாப்பிடுகிறான்.எதுவும் வீண் செலவு இல்லை. ஆனால் இந்து இப்படி வீண் செலவு செய்தே ஓட்டாண்டி ஆகிறான். வாழ்க்கையில் என்றைக்கும் மேலுக்கு வருவதே இல்லை.

  சில வீடுகளில் இப்படி வீண் செலவு செய்வதால் கடவுள் மீதும் மதத்தின் மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. அது அவர்களில் பேச்சுகளில் வெளிபடுகிறது. இது போதாது என்று சில சாமியார்கள் (நித்தி போன்றவர்கள்) செய்யும் அசிங்கங்களால் மேலும் மதத்தின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இதெல்லாம் போதாது என்றால் விநாயகர் பால் குடிக்கிறார் என்றும் மழை வர வேண்டி கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைப்பார்கள். இப்படி மூட நம்பிக்கைகள் கொண்ட நிகழ்வுகளாலும் இந்து மதத்தின் மீது வெறுப்போ வெறுப்பு ஏற்படுகிறது.

  1. தீபாவளி மூலம் காசு கரியாவதுடன் சுற்று சூழல் மாசுபடுகிறது.
  2. Plaster of paris மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து நீரை மாசுபடுத்தி மண்ணை மலடியாக ஆக்குகிறோம்.
  3. கார்த்திகை தீபத்திற்கு அகல் விளக்குகள் ஏற்றி அதன் மூலம் (ஏற்கனவே விலைவாசி விண்ணை எட்டும் நிலையில்) எண்ணெய் விலையை எட்டிபிடிக்க முடியாத நிலைக்கு உயர்த்துகிறோம்.
  4. ஆயுத பூஜைக்கு பூசணி காயை உடைத்து சாலையில் போட்டு விபத்திற்கு வித்திடுகிறோம். அது மட்டுமின்றி ஒரு சத்துள்ள காயை உணவுக்கு பயன்படுத்தாமல் வீதியில் வீசி எரிந்து வீணடிக்கிறோம்
  இப்படி எண்ணற்ற பண்டிகைகளால் பணமும் பாழாகிறது. சுற்று சூழலும் பாழாகிறது.

  மேலும் ஊரில் நடக்கும் திருவிழாக்களின்போது சாதி மோதல் ஏற்படுகிறது (தினம் தினம் பேப்பரில் வருவதைத்தான் நாம் படிக்கிறோமே) சாராயம் எக்கசக்கமாக விற்பனை ஆகிறது. குடித்து கும்மாளம் போட்டு குடும்பம் குட்டி சுவராகிறது. போலிஸ் ஒட்டுமொத்தமாக திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு செல்வதால் ஊரில் திருட்டு அதிகமாகிறது. மேலும் திருவிழா கூட்டத்தில் காமகிறுக்கர்கள் (இளைஞர்கள்தான்) புகுந்து விளையாடுகிறார்கள். இதனால் இளைஞர் சமுதாயமே சீரழிகிறது.

  இவற்றை எல்லாம் சீர் தூக்கி பார்த்து மதத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த மதத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இதை உடனடியாக செய்வார்களா?

 15. premathasan thirumeni on September 19, 2014 at 1:27 pm

  திரு சிவதிரு .வீபூதி பூசன் அவர்களே இந்த கட்டுரை வேறுயார் வரைந்தாலும் நீங்கள் இதை தவிர்த்திருக்கலாம்

  அன்புடன் பிரேமதாசன் திருமேனி .

 16. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 19, 2014 at 3:38 pm

  ஹானஸ்டுமேன் மற்றும் தஞ்சை கோபாலனார் அவர்களையும் கட்டுரையை மறுபடியும் ஒரு முறைபடித்துவிட்டு மறுமொழி இடும்படி வேண்டுகிறேன். இன்னும் அடுத்தபகுதி இருக்கிறது அதனையும் பொறுமையாகப்ப் படித்து நிதானமாக சிந்தித்து பதில் எழுதும் படிவேண்டுகிறேன்.

 17. Subramaniam Logan on September 19, 2014 at 7:43 pm

  இந்தக் கட்டுரை பிரசுரமாகிய சில மணி நேரங்களிலேயே எனக்கு வாசிக்கும் துர்பாக்கியம் கிடைத்துவிட்டது. எங்கள் தளத்தில் இவருக்கு சார்பாக மீண்டும் ஒரு பதிவா என்று வெம்பி கொதித்துக்கொண்டிருந்த வேளையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் ஸ்ரீமன் க்ருஷ்ணகுமார் அவர்களின் மறுமொழி அமைந்திருந்தது. பெரும்பாலான இந்துக்களின் நாகரீகமான கொதிநிலையாக திருவாளர் தஞ்சை வெ கோபாலன் அவர்களின் மறுமொழி அமைந்திருந்தது.
  மீடியாக்கள் தொடர்பாக திருவாளர் ராஜீவ் மல்கோத்ரா குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் பல சந்தர்பங்களில் உண்மையே என்றாலும் இவருடைய விடயத்தில் மீடியாக்களுக்கு சநாதன தர்மத்தை பெருமையுடன் பின்பற்றும் நாம் எல்லோரும் நன்றியே பாராட்டவேண்டும்.இவருடைய பல வண்ண நிழற்படங்கள் காணோளிகள் மேன்மைமிகு சிவஸ்ரீ. விபூதிபூஷண் அவர்களுக்கு பார்க்க கிடைக்கவில்லை போலிருக்கின்றது. தயவு செய்து உங்கள்மேல் எமக்கிருக்கும் அபிமானத்தை குறைத்துக்கொள்ள இடம் கொடுக்காதீர்கள்.
  வளர்க இந்து நாகரீகம்
  ஸர்வம் ஷிவமயம்
  சுப்ரமணியம் லோகன்.

 18. "Honest Man" on September 20, 2014 at 7:52 am

  சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களே! நீங்கள் ஒரு gentleman . ஒரு நல்ல மனிதரின் வாயிலிருந்து ஒரு நல்லவரைப் பற்றிய செய்தி வருவதுதான் நல்லது. நித்தி நமது இந்து மதத்தின் கழுத்தில் வைக்கபட்டிருக்கும் கத்தி. அவரைப் பத்தி (= பற்றி) தொடர்ச்சியாக இன்னுமொரு கட்டுரையா? வேண்டவே வேண்டாம் என்று உங்களை வேண்டி கேட்கிறேன். இவரை போற்றி புகழ்ந்தால் இவரை போன்று இன்னும் பலர் இந்து மதத்தில் புற்றீசல் போன்று தோன்ற ஆரம்பித்து விடுவார்கள். உங்கள் கட்டுரையின் மருமொழிக்கள் ஓரிருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்புதான் தெரிவித்துள்ளார்கள் என்பதை கவனத்தில் கொண்டு அவரை தலையில் வைத்து புகழ்வதை தவிர்க்குமாறு கேட்டு கொள்கிறேன். தனக்கு பாஜ பூஜை செய்ய வேண்டும் என்று கட்டாயபடுத்துகிறார் என்றும் அதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு என்றும் தற்போதைய செய்தி. இவருக்கு ஒரு ஆன்மிகவாதியின் குணத்தை விட ஒரு அரசியல்வாதியின் குணம் தான் விஞ்சி நிற்கிறது. ஒரு புனிதமான ஆன்மிகவாதியின் (விவேகானந்தர்) பெயரில் பாதியை (நித்தி + யானந்தா) வைத்திருக்கும் இந்த நபருக்கு அவரின் குணத்தில் ஒரு பாதியாவது இருக்க கூடாதா?

  (Edited and published)

 19. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 20, 2014 at 12:16 pm

  மொழிபெயர்ப்பினைப்பாராட்டிய ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயருக்கு நன்றிகள். மஹாசயரே நீங்களும் கடிதத்தினை நிதானமாக படித்துவிட்டு ராஜிவ் ஜி என்ன சொல்கிறார் என்பதை உணர்ந்து அவரது கருத்துக்களை மறுப்பது நலம்.

  ஐயா நேர்மையான மனிதரே ஹானஸ்டுமேன் இந்த கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை மட்டும் இங்கே மறுமொழி போடுங்கள். அதுதான் சரியாக இருக்கும். ஹிந்து சமய சமூக சிருத்தம் பற்றிய உங்களுடைய கருத்துக்களை தனியே ஒரு கட்டுரையாக எழுதி தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவுக்கு அனுப்புங்கள்.
  தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவிற்கு ஒரு சிறுவேண்டுகோள் ஹானஸ்டுமேன் “அவர்களின் இந்து மதம் செழித்து வளர வேண்டும் என்றால் நிறைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும்”. என்ற மறுமொழியை நீக்கிவிடுங்கள். விவாதமானது பதிவுதொடர்பானதாக இருத்தல் மிக அவசியமானது.
  சிவசிவ

 20. "Honest Man" on September 21, 2014 at 8:18 am

  மேற்கண்ட கட்டுரையின் மொழி பெயர்ப்பாளர் எனது மறுமொழியை நீக்கிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதை நீக்குவதும் நீக்காததும் இந்த இணைய தளத்தினரின் இஷ்டம். அப்படி நீக்கினால் அதனால் எனக்கில்லை நஷ்டம் & கஷ்டம்.

  கட்டுரையில் ஒரு இந்து மத சாமியாரைப் பற்றி எழுதுகிறார். புனிதமாக இருக்கவேண்டிய அவரின் மனதில் ஏகப்பட்ட அழுக்கு. அவரால் இந்து மதத்திற்கு ஏற்பட்டுள்ளது இழுக்கு. இது என்னுடைய ஆதங்கம் மட்டுமல்ல. திரு சஞ்சய், திரு தஞ்சை கோபாலன், திரு ஆனந்த சாகர், திரு சந்திர சேகர், திரு பிரேமதாசன், திரு சோமு வரதராசன் திரு ஒரு அரிசோனன், திர சுப்ரமணியம் லோகன், திரு கிருஷ்ணகுமார், திரு சுந்தர் svpr ஆகியோரின் ஆதங்கமும் கூட. இரண்டு சகோதரர்கள் மட்டும் அந்த fake godman க்கு ஆதரவாக எழுதியுள்ளனர். ஆனால் அவர்களும் உண்மையை அறிந்தால் மனம் மாறுவர் என்பது நிச்சயம்.

  இந்து மத நற்பெயருக்கு தடையாக இருப்பது இந்த fake godman மட்டுமல்ல. சில தேவையற்ற சடங்கு & செயல்பாடுகளும் என்று குறிப்பிட்டு மறுமொழியை எழுதினால் அதை அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அதில் மத சம்பந்தப்பட்ட கருத்துக்களைதானே எழுதினேன்? சினிமா நடிகர்களை பற்றியா எழுதினேன்? இது போன்ற “ஜாலி” சாமியார்களும் போலி சாமியார்களும் ஒழிக்கபடா விட்டால் வேலி இன்றி இருக்கும் நம் இந்து மதம் விரைவில் காலி ஆகிவிடும். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த (மன)அழுக்கு சாமியார் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சாமியார் அந்த “மாமியார்” வீட்டுக்கு போக வேண்டும். நல்ல சாமியார்களை போற்றுவோம். போலி சாமியார்களை தூற்றுவோம்.

 21. Ashok kumar on September 23, 2014 at 1:25 pm

  Dear Mr.Publisher-Tamil Hindu.com

  Please don’t publish and supportt such Fake Godmans and never compare him with OSHO .We know Mr.Nithyananda is still living because of the support of American people.Because the people in Tamilnadu understand who he is and he can’t able to do business anymore here.How much they are fond of money and treated people very cheaply aren’t able to be expressed.

  You will lose the credibility /

 22. sidharan on September 23, 2014 at 10:23 pm

  குற்றம் சாட்டும் பெண்மணியின் பின்புலத்தைக் கட்டாயம் ஆராய வேண்டும்.. ஏனெனில் இம்மாதிரி எங்கோ ஒன்று நடந்தால் நாம் கவலைப் பட வேண்டாம். ஆனால் தொடர்ந்து ஹிந்து சாதுக்களைப் பெண்கள்/ பாலியல் சம்பந்தப் பட்ட குற்றங்களில் சம்மந்தப் படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக இது கடந்த 10 ஆண்டுகளிலேயே அதிகரித்துள்ளது. நம் நாட்டு அரசியலில் இத்தாலியக் கிறிஸ்தவரின் ஆதிக்கம் அதிகரித்த பின்பே இதெல்லாம் நடை பெறுகிறது.

  ஏன் , காஞ்சி சங்கராச்சாரியார் மீதும் பாலியல் குற்றம் சாட்டப் பட்டது.
  ‘காசுக்காக எதுவும் செய்வேன்’ என்று பெருமையாகப் பேசிய, எழுதுகோலை வைத்துப் பிழைப்பு நடத்திய ஒருவர் , ஆசாரியரின் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டதற்கு ஒரு ஆண்டுக்கு முன் மடத்தின் குழந்தைகள் நல மருத்துமனையில் ஒரு விழாவில் பங்கேற்றவர் தன் பங்கிற்கு அவர் மீது சேற்றை இறைத்தார்.

  புற்று நோயினால் கொடிய துன்பத்துக்கு ஆளாகியிருந்த ஒரு பெண்ணை ஆசார்யருடன் தொடர்பு படுத்தி சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது அக்கிரமத்தின் உச்சம்!

  மேலும் சபரிமலை விவகாரத்தில் கோயிலின் புனித்தன்மையைக் கெடுக்கும் வண்ணம் மதம் மாற்றப்பட்ட ஒரு நடிகை ( அவரது கணவர் கிறிஸ்தவர்) குற்றம் சாட்டியதையும் மறக்க முடியாது.

  மேலும் அக்கோயிலின் தந்திரியைக் கடத்தி அவரை
  ஒரு பெண்ணோடு (கிறிஸ்தவர்) புகைப்படம் எடுத்து அவர் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சித்தது நீதிமன்றத்தில் அம்பலமாகியது.

  ஆகவே எனது கருத்து இதெல்லாம் ‘குருசெடர்களின்’ குள்ள நரித்தனமே என்பது.

 23. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 25, 2014 at 5:34 pm

  அசோக் குமார்
  ஆங்கிலக்கட்டுரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாயிருக்கிறது. தமிழில் விவாதிக்கலாம். விவாதிக்கவேண்டும். உங்கள் அபிரஹாமிய பிரச்சாரத்தினை இங்கே வைக்கவேண்டாம்.அபிராஹாமியர் எந்தப்பெயரில் ஒழிந்திருந்தாலும் அதை நாமறிவோம். முடிந்தால் ஆதாரத்தோடு பேசுங்கள். ஆதாரமில்லாமல் பேசுவோரே நம்பகத்தன்மை அற்றவர்களாவர். ஸ்ரீ ராஜிவ் எப்போதும் ஆதாரத்தோடு பேசுபவர்.

 24. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 25, 2014 at 5:44 pm

  ஹானஸ்ட் மேன்
  உண்மை என்பதும் தர்மம் என்பதும் எப்போதும் எண்ணிக்கை சார்ந்ததில்லை. ஸ்ரீ நித்யானந்தரைப்பற்றி தொலைக்காட்சியில் காட்டப்பட்டவற்றைகொண்டு எழுந்ததே இந்த நிலைப்பாடு. உண்மை வெளிவரும். போலிகளின் முகத்திரை கிழியும்.

 25. "Honest Man" on October 1, 2014 at 7:16 pm

  Bangla Desh Telecommunications Minister Abdul Latif Siddique said ” I am dead against Haj. Two million people have gone to Saudi Arabia to perform Haj. Haj is waste of manpower.Those who perform Haj do not have any productivity.They deduct from the economy, spend a lot of money abroad.”

  இப்படி உண்மையை உரைத்த உத்தம மந்திரியை பதவியிலிருந்து பாவிகள் “””நீக்கிவிட்டனர்””‘. இந்து மதத்திலும் பண்டிகை என்ற பெயரில் money powerம் manpowerம் வீணடிக்கபடுகிறது. அதை சுட்டிக்காட்டிய என் comment ஐ “”‘நீக்கவேண்டும்””” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

  2. கம்போடியாவில் ஒரு புத்த Monk (தலைவலி மற்றும் சுவாச பிராச்சனைகளை cure செய்வார் என்று கருதி வந்த) ஒரு 14 வயது பெண்ணை கற்பழித்து இருக்கிறான். இந்து மதம், இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மதம் என்று பார்த்தது பொய் இப்போது புத்தமதமும் இந்த பட்டியலில் சேர்ந்துவிட்டது.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*