தவ முனிவனின் தமிழாகமம்

பாரதத்தின் ஆஸ்தீக சமயங்கள் யாவும் வேதத்தை ஏற்றுப் போற்றுவன. அவற்றுள் சிலவற்றுக்குச் சிறப்பான பிரமாண நூல்கள் சில இருந்தாலும் அவை பொதுப்பிரமாணமாக வேதத்தையே கொள்கின்றன. இவ்வகையில் சைவசமயமும் சிறப்புநூலாக சைவாகமங்களைக் கைக்கொண்டாலும் பொதுப்பிரமாணமாக வேதத்தையே குறிப்பிடுகின்றது. இதனால், இச்சமயத்தை ‘வைதீக சைவம்’ என்று சான்றோர்கள் கொண்டாடுவர்.

umapathi_sivamஇன்னும் ‘வேதாகமோக்த சைவசித்தாந்தம்’ என்று ஒரு வழக்கும் இருக்கிறது. சைவசித்தாந்தம் வேத சிரசு என்ற உபநிடதங்களில் முகிழ்த்து, சைவாகமத்தின் சிரசான ஞானபாதத்தில் ‘திரிபதார்த்த விவேகம்’ என்ற முப்பொருள் (பதி, பசு, பாசம்) ஆய்வாக உயர்ந்து மணம் பரப்பி, சந்தான குரவர் என்று கொண்டாடும் மெய்கண்டதேவர், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் என்ற நால்வரும் இன்னும் சித்தாந்த நூலாசிரியர்களும் தந்த செந்தமிழ் நூல்களில் சைவசித்தாந்தமாக காய்த்துக் கனிந்தது.

இன்றைக்கு சில தசாப்தங்களாக ஆரிய-திராவிட வாதப்பிரச்சினைகளோடு ஒட்டியதாய், ஏற்பட்ட நாஸ்தீக இயக்கங்களின் வளர்ச்சியை ஒட்டி சில சமயாபிமானச் சைவர்கள் “புரட்டாஸ்தாந்து” (Protestant) சைவத்தை உருவாக்க முயன்றனர். மேலைத்தே சத்தவர்களின் கிறிஸ்துவமயமாக்கல் பெருந்தோல்வி அடைந்த பின்னணியில், இந்த சமயப்பிரிவினை மேலைநாட்டாரால், மேன்மேலும் ஊக்குவிக்கப்படலானது. இத்தரப்பார் வேதம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, எங்களுக்கு திருமுறைகள் உள்ள போது, வேறென்ன வேண்டும் என்று வினவத் தொடங்கியுள்ளனர்.

தமிழ் வேதம் என்று போற்றுகின்ற திருமுறைகளிலேயே வேதாகமங்கள் போற்றப்படுகின்றனவே என்று யாரேனும் கேட்டால், அதெல்லாம் முன்பு தமிழில் இருந்த வேதங்களும் ஆகமங்களும் தான். அவைகள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. அல்லது அழிந்து விட்டன என்று ஆராய்ச்சிகளும் வெளியிட்டார்கள். எங்கள் திருமூலர் தந்த திருமந்திரம் இருக்க, புரிதல் இல்லாத வேறு மொழியில் மந்திரங்கள் ஏன்? என்றும் வினவி வருகிறார்கள்.

ஆயினும், இன்னும் வேதாகம முறையில் வழிபாடுகள் எந்த இடையூறுமின்றி தொடர்ந்து நடந்து வருவதை இவர்களால் தடுக்க இயலாதிருக்கிறது. இன்னும் சிலருக்கு தமிழிலுள்ள திருமுறைகளிலேயே ஆகமம், நால்வேதம், அந்தணர், மந்திரம், ஆகுதி, வேள்வி என்று பலவும் இருப்பதைக் காண்கிற போது அதற்கு விபரீதமாகப் பொருள் சொல்லி விபரிப்பதில் கடந்த பல ஆண்டுகளாகவே அலாதி ஆர்வம் இருக்கிறது.

jaffna-hindu-sivadeekshai

ஆனால், இவர்களில் பலருக்கும் கூட திருமுறைகள் ஒழுங்காகத் தெரியாது. தெரிய வருகிற போது, ‘கூர்மத்தை நம்பிக் குடி கெட்டேனே’ என்று வைணவர் போல வருந்துவர். இன்னும் சிலர் ஓஹோ திருமுறையும் ஆரிய மாயை தான் என்று பகுத்தறிவு என்ற பேரில் சுயமரியாதை பேசத் தொடங்கி விடுவர். இவற்றை நாம் பல்லாண்டுகளாகவே கண்டு வருகிறோம்.

ஆக, திருமுறைகள் இருக்கு முதலிய இன்றுமுள்ள வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம்.

அந்த வகையில் சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம். சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணமும் இவ்வாறே ஆகம வழிபாட்டின் சீர்மையை விளக்கிக் கூறுகின்றது.

திருமூலர் வரலாற்றைச் சொல்லப் புகுந்த தெய்வச்சேக்கிழார்,

‘தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’

என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார். திருமூலரும் இதனையே,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

என்று குறிப்பிடுகின்றார்.

இருவர் வாக்கிலும் ஒரே அமைப்பில் தமிழ் வகுப்ப என்றும் தமிழ் செய்யுமாறே என்றும் மொழியின் பெயர் குறிப்பிடுவதற்கு காரணம் என்ன?

மேலும், ஆகமங்களின் பெயரையும், அவற்றின் தொகையையும், அவற்றைத் தாம் பெற்ற முறைமையையும், அவற்றில் கூறப்படும் பொருளையும் திருமூலநாயனார் குறிப்பாயும் வெளிப்படையாயும் உணர்த்துகின்றார்.

காமிகம் போன்ற ஆகமங்களில் ஆகமங்களின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சுதாசிவ பரமேஸ்வர மூர்த்தியின் ஈசான முகத்திலிருந்து பிரணவர் முதலிய சிவாம்சமுள்ள முப்பதின்மர் கேட்டறிந்தவை பத்து ஆகமங்கள் என்றும் ருத்திராம்சமுள்ள அநாதிருத்திரர் முதலிய முப்பத்தறுவர் கேட்டது பதினெட்டு ஆகமங்கள் என்றும் இவ்வரலாறுகளில் குறிப்பிடப்படுகின்றது.

இதையே திருமூலரும்,

அஞ்சன முனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சோ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே’  (1)

என்றும்,

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய்து
ஆந்தி மதிபுனை அரன்அடி நாடொறும்
சிந்தைசெய்து ஆகமஞ் செப்பலுற் றேனே’  (2)

என்றும்,

‘நவவாகமம் எங்கள் நந்தி பெற்றானே’ (3)

என்றும்,

‘நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவர் என்றோ டெண்மரு மாமே’  (4)

என்றும்,

‘பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தும் வாதுளம்
மற்றவ் (வி)யாமளம் ஆகுங் காலோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே’ (5)

என்றும் பலவாறு குறிப்பிடுகின்றார். இவற்றை யாழ்ப்பாணத்து கோப்பாயில் இற்றைக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த பண்டிதர். ச.பஞ்சாட்சரசர்மா அவர்கள் பட்டியலிட்டு விளக்கியிருக்கிறார்கள்.

thirumoolar

அதே ஊரில் தொண்டைமண்டலாதீனத்தால் ‘சித்தாந்தபானு’ என்று சிறப்பிக்கப்பட்ட காரணம் முதலிய ஆகமங்களை நன்கு கற்ற ஆகமவித்துவானாகிய சிவஸ்ரீ. சோ.சுப்பிரம்மண்யக்குருக்கள் என்ற பெரியவரும் இக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் திருமந்திரப்பாடல்கள் சிலவற்றுக்கு அதே பொருள் காட்டும் ஆகம ஸ்லோகங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். அவை மிகவும் வியப்புக்குரியதாயுள்ளன.

திருமந்திரத்தில் ஆதித்தன் நிலை, அண்டாதித்தன் என்ற பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. அதில் ஐந்தாவது பாடல் ஒன்று உள்ளது.

‘வலைய முக் கோணம் வட்டம் அறுகோணந்
துலையிரு வட்டந் துய்ய விதமெட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட்டிதழாம்
அலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே’

இது தான் பாடல். படித்தால் ஒன்றும் விளங்கவில்லை. சரி, இதற்கு கையிலுள்ள திருமந்திர மொழிபெயர்ப்புகளை புரட்டினாலும் ஒரு புரிதலும் இல்லை. இது விசுத்தியில் சூரியன் உதிக்கும் நிலை கூறியது என்று தந்திருக்கிறார்கள். பாடல் படித்ததை காட்டிலும் இதைப் படிக்கிற போது இன்னமும் புரிதலில்லாது போகிறது.

ஆனால், இதை மேற்சொன்ன குருக்கள் அவர்கள், சூரியனுக்குரிய யந்திரம் என்று கூறுகிறார். அதாவது ஸெளரசக்ரம் என்கிறார். சூட்சுமாகமத்தில் அதற்கான ஸ்லோகத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

‘வ்ருத்தம் த்ர்யஶ்ரம் புனர்வ்ருத்தம்
ஷட³ஶ்ரம் வ்ருத்த யுக்³மகம்
அஷ்டாஶ்ரஞ்ச கலாஶ்ரஞ்ச
ஸெளர சக்ரம் ப்ரகீர்த்யதே’

சிவாகமங்களில் காணப்படுவன என்று அறியப்படாதனவாயுள்ள, சாக்த ஆகமத் தொடர்புடைய பல விடயங்களையும் திருமூலர் அழகாகக் குறிப்பிடுகின்றார்.

திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்திலுள்ள நவாக்கரி சக்கரம், புவனாபதி சக்கரம், வயிரவி மந்திரம் என்ற தலைப்புகளுக்குள் உள்ள பல பாடல்கள் சாக்த ஆகமத்தொடர்புடையன.

வயிரவி மந்திரம் என்ற பகுதியிலுள்ள 20ஆம் பாடல் –

‘வருத்த மிரண்டுஞ் சிறுவிரல் மாறிப்
பொருத்தி யணிவிரற் சுட்டிப் பிடித்து
நெறித்தொன் றவைத்து நெடிது நடுவே
பெருத்த விரலிரண் டுள்புக்குப் பேசே’

இது யோனி முத்திரை மற்றும் சூலமுத்திரையை காட்டுவதாக திருமந்திர உரையாசிரியர்கள் பதிவு செய்கிறார்கள்.

Yoni Mudra
Yoni Mudra

ஆனால், இது யோனிமுத்திரையையே காட்டுவதாக மேற்குறிப்பிட்ட சித்தாந்தபானு குருக்கள் குறிப்பிடுவதுடன், பரசுராம கல்ப சூத்திரத்திலிருந்து ஒரு ஸ்லோகமும் காட்டுகிறார்.

‘மித: கநிஷ்டி²கே ப³த்⁴வா – தர்ஜநீப்⁴யாம் அநாமிகே
அநாமிகோர்த்⁴வ ஸம்ஸ்ருஷ்ட – தீ³ர்க⁴ மத்⁴யமயோரத:
அங்குஷ்டா²க்³ர த்³வயம் ந்யஸ்த்வா –  யோநிமுத்³ரேயம் ஈரிதா’

இந்த முத்திராவிதி கூறும் ஸ்லோகமும் திருமந்திரப்பாடலும் ஒரே பொருள் கொண்டு விளங்குகின்றன.

இனி, புவனாபதிச்சக்கரம் என்ற பகுதியிலுள்ள முதற்பாடல்

“ககாராதி யோரைந்தும் காணிய பொன்மை
அகாராதி யோரா றரத்தமே போலும்
சகாராதி யோர்நான்கும் தான்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே”

நன்றாக இதை படித்துப் பாருங்கள்… ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா..? இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும். இதில் அகாராதி என்பது மந்த்ரத்தில் ஹகாரமாகப் பிரயோகிக்கப்பெறுகின்றது.

ஐந்தாம் பாடல்..

“ஏதும் பலமாக மியந்திர ராசனடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பிற் சட்கோணந் தானிடே”

இந்தப் பாடலுக்கு உரையாசிரியர்கள் இந்து ராசன் என்று பாட பேதம் செய்து சந்திர மண்டலத்துக்கு அதிபதி என்று பொருள் கொள்கிறார்கள். ஆனால், இது இயந்திரராசன் என்பதே சரி என்றும், அந்த யந்த்ரராஜம் என்பது ஸ்ரீ சக்கரத்தையே குறிக்கும் என்றும் அறியக்கிடக்கிறது.

மேலும் திருமந்திரத்தின் அசபை என்ற பகுதியில் ‘ஆனந்தம் அம்- ஹ்ரீம்- அம்- க்ஷம்- ஆம்- ஆகுமே’ என்றும், ‘செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரீயும்’ என்றும் திருமூலர் வடமொழி எழுத்துக்களை- பீஜாக்ஷரங்களை மாற்றாமல் அப்படியே பாவித்திருக்கிறார்.

‘ஐம்பதெழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பதெழுத்தே அனைத்து ஆகமங்களும்’

என்றும்

“ஓதும் எழுத்தோடுயிர்க் கலை மூவைஞ்சும்,
ஆதி யெழுந்தவை ஐம்பதோ டொன்றென்பர்’

என்றும் திருமூலர் குறிப்பிடும் ஐம்பது. ஐம்பத்தொன்று என்ற எண்ணிக்கை கொண்ட எழுத்துக்கள் எவை என்பதற்கு தொல்காப்பியத்திலோ, நன்னூலிலோ, வீரசோழியத்திலோ எந்த விளக்கமும் காணப்படவில்லை.

சிவாச்சார்யர்கள் தினமும் சிவபூஜையின் போது ஓதும் ‘க்ஷித்ராதி³ குடிலா ப்⁴ராந்த…’ என்று தொடங்கும் ஆகம ஸ்லோகமான மிக நீண்ட சதாசிவத்யானத்தை திருமூலர் அப்படியே சதாசிவலிங்கம் என்ற பகுதியில் மொழிபெயர்த்துள்ளார்.

shiva_5faced

‘த⁴வளேஶான வத³னம், பீதம் தத்புருஷாநநம்
க்ருஷ்ணாகோ⁴ ர முகோ²பேதம், ரக்தாபோ⁴த்தர வக்த்ரகம்
ஸுஶ்வேதம் பஶ்சிமாஸ்யேகம், ஸத்³யோஜாதம் ஸமூர்த்திகம்…”

என்பதை

நடுவு கிழக்குத் தெற்குத் தரமேற்கு
நடுவு படிகநற் குங்கும வண்ணம்
அடையுள வஞ்சனஞ் செவ்வரத்தம் பால்
அடியேற் கருளிய முகமிவை யஞ்சே

என்று  தமிழில் ஆக்கித் தந்துள்ளார்.

மேலும்,

பத்³மாஸநஸ்தம்² பஞ்சாஸ்யம், ப்ரதிவக்த்ரம் த்ரிலோசனம்

என்பதை

‘அஞ்சுமுகமுள ஐம்மூன்று கண்ணுள’

என்றும்

ஜடாக³ண்டேந்து³ மண்டி³தம்

என்பதை

‘சுருளார்ந்தசெஞ்சடைச் சோதிப்பிறையும்’

என்றும் ஆக்கியுள்ளார்.  இவ்வாறு இந்த நீண்ட ஸ்லோகத்தையே இரண்டு பாடல்களில் மூலர்பிரான் சுருக்கிப்பாடியுள்ளார்.

“தத் த்வம் அசி” என்ற உபநிடத மஹாவாக்கியத்தை மூலர் “தற்பதம் தொம்(துவம்)பதம் அசிபதம்’ என்பார்.

“தற்பதம் தொம்பதம் தானாமசிபதம்,
தொற்பத மூன்றும் துரியத்துத் தோற்றவே…”

இப்படி ஏழு பாடல்கள் உபநிடத மஹாவாக்கியங்களைக் கூறுவனவாயுள்ளன.

ஆகவே, சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே அறியலாம். ஒரு சில ஆகமங்கள் தவிர இன்னும் பல அச்சேறவில்லை. அச்சேறிய ஆகம நூல்களிலும் இருக்கிற பாடபேதம், பிற்சேர்க்கை, விளக்க குறைவு, பொருந்தாத சொற்கள் என்று நீண்ட ஆய்வுகள் நடந்ததாக அறிய முடியவில்லை.

இவ்வாறு ஆகம ஆய்வுகள் நடைபெறுவதுடன், திருமந்திரம் பற்றிய விரிவான ஆய்வுகள் நடப்பதும் உண்மையை உலகுக்கு உரைப்பதாகவும் பலவித நன்மைகளைத் தருவதாயும் அமையும்.

இவற்றுக்கெல்லாம் சக்தி பின்னமிலா எங்கள் பிரானும், தமிழ்மந்திரம் படைத்த தவமுனிவரான திருமூலர் பிரானும் அருள் புரிய பிரார்த்திப்போமாக.

32 Replies to “தவ முனிவனின் தமிழாகமம்”

  1. ////////திருமுறைகளிலேயே ஆகமம், நால்வேதம், அந்தணர், மந்திரம், ஆகுதி, வேள்வி என்று பலவும் இருப்பதைக் காண்கிற போது அதற்கு விபரீதமாகப் பொருள் சொல்லி விபரிப்பதில் கடந்த பல ஆண்டுகளாகவே அலாதி ஆர்வம் இருக்கிறது.///////

    எது எப்படியோ, நான்மறை என்னென்ன என்பதை மாணிக்கவாசகரே பின்வரும் திருவாசகத் திருச்சாழல் பாக்கள் மூலம் கூறுகிறார்.

    நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
    அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
    அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
    கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ.

    அருந்தவருக் காலின்கீழ் அறம்முதலா நான்கினையும்
    இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ?
    அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
    திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ.

    மேலும், “அந்தணர் என்போர் அறவோர்” என்பதோடு திருக்குறள் முடித்துக்கொள்கிறது. அறத்தின் வழி நடப்பவர் எவரும் அந்தணர் தான். அத்தமிழ்ச்சொல்லுக்கு அதற்கு மேலும் விளக்கம் கூற முனைபவர்கள் முனைந்துகொள்ளட்டும்.

    //////இருவர் வாக்கிலும் ஒரே அமைப்பில் தமிழ் வகுப்ப என்றும் தமிழ் செய்யுமாறே என்றும் மொழியின் பெயர் குறிப்பிடுவதற்கு காரணம் என்ன?//////

    இறைமை என்பது “உரை உணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வு.” அதனை உரைக்கும் ஆறு தனக்கு அருளப்பட்ட போது, அத்தகைய உணர்வை, தனது சொந்த அனுபவத்தை, தனக்குக் கிடைத்த காட்சியைத் தமிழ்மொழியில் வெளிப்படுத்தி இறைவனைத் தமிழ்செய்கிறார் திருமூலர். வடமொழி ஆகமங்களில் இருந்து மொழிபெயர்த்ததாக எங்குமே அவர் கூறியதில்லை. அவரே அவ்வாறு கூறாதபோது, அவர் அப்படிச்செய்தார் என்று சாதிப்பது திருமூலருக்குக் களங்கம் கற்பிப்பது போலாகிறது.

    //////அடியேற் கருளிய முகமிவை யஞ்சே
    என்று தமிழில் ஆக்கித் தந்துள்ளார்.///////

    எதற்கு இப்படி மெனக்கெடுகிறீர்கள். திருமந்திரம் முழுக்கவே வடமொழி நூல்களின் மொழிபெயர்ப்பு என்று சுருங்கச் சொல்லி விளங்கவைத்திருக்கலாமே… 🙂

  2. நீர்வை மயூரகிரியாருக்கு நமது வணக்கங்களும் பாராட்டுக்களும். கட்டுரையின் மீது மறுமொழி இட்டிருக்கும் திரு முத்து அவர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.

    சூரியன் ஒளிதருகிறது அவ்வளவுதான். இதனை எல்லா மொழிகளிலும் எழுதிவைத்திருக்கிறார்கள் அவ்வளவு தான். லத்தீனில் முதலில் எழுதினானா, பாரசீக மொழியில் முதலில் எழுதினானா என்றெல்லாம் கேட்டால் , ஒவ்வொரு மொழியாரும் தங்கள் மொழிதான் காலத்தால் முதலில் வந்தது என்றே சொல்வார்கள். யாரும் தங்கள் மொழி இப்போது வந்தது என்று ஒத்துக்கொள்ளமாட்டார்கள். நமக்கு கருத்தே முக்கியம். தண்ணீர் தாகம் தீர்க்கும் என்பதையும் , நெருப்பு சுடும் என்பதையும் யார் முதலில் சொன்னால் என்ன ? சொன்ன விஷயம் உண்மையா பொய்யா என்பதை மட்டுமே நாம் பார்க்கவேண்டும் என்பது என் கருத்து.

    நம் இந்தியாவில் சிலர் தமிழ் தான் செம்மொழி – உடனே தமிழை செம்மொழி என்று அறிவிக்கவேண்டும் என்று சொல்லி கோரிக்கை விடுத்தனர். உடனே மத்திய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது. உடனே தொடர்ந்து சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் என்று எல்லா மொழிகளுமே செம்மொழி என்று அறிவிக்கப்பட்டு விட்டன. இதனால் தமிழுக்கு என்று தனித்த நன்மைகள் எதுவும் விளையவில்லை. எல்லோருக்கும் கிடைப்பது தான் நமக்கும் கிடைக்கப்போகிறது. தமிழகத்தில் இதற்காக செம்மொழி மாநாடு என்று ஒரு விழாவினை நடத்தியது தான் மிச்சம். பலன் ஒன்றும் இல்லை. இந்தியாவின் அரசியல் அமைப்பில் இருக்கும் எட்டாவது அட்டவணையில் இருக்கும் எல்லா மொழிகளுமே வரும் அடுத்த அடுத்த சட்டசபை தேர்தல்களை ஒட்டி , செம்மொழி பட்டியலில் சேர்ந்துவிடும். இதுதான் உண்மை. எனவே யார் முந்தி என்பது ஒரு பயனற்ற விவாதம்.

    ‘வடமொழியும், தமிழும் ஆயினானை ‘- என்கிறது தேவாரம். சிவபிரானே இந்த இருமொழிகளுமாய் உள்ளான் என்பதே உண்மை. சிவபிரானின் உடுக்கை ஒலியில் இருந்தே பிறந்தவை தமிழும் சமஸ்கிருதமும். சிவபிரானின் உடுக்கையின் ஒரு பக்கத்தில் இருந்து தமிழும், மறுபக்கத்தில் இருந்து வடமொழியாம் சந்தசும் வெளிப்பட்டன. எனவே இதில் எதுவும் ஒன்றுக்கு மற்றது காப்பி அடித்தது அல்ல. ஏனெனில் GREAT MEN THINK ALIKE- என்று ஆங்கிலத்தில் கூட ஒரு பழமொழி உண்டு. உயர்ந்த உணர்வு பெற்றோர் சிந்தனை ஒரே மாதிரி தான் இருக்கும். இதில் அது முந்தி, இது முந்தி என்று சொல்லி வெட்டி வேலைகளில் இறங்குவது தவறு. வரலாறு என்பது பொய்யர்களால் எழுதப்பட்டது. அதில் சில உண்மைகளையும் கலந்து கொள்வார்கள் அவ்வளவுதான். ஏனெனில் முழுவதும் பொய்யாக எழுதினால் நம்பமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது. ஒரு மொழியில் எழுதப்படும் வரலாறு என்பது , அந்த மொழி பயன்படுத்தப்படும் பகுதிகளின் மன்னர் அல்லது ஆட்சித்தலைவரின் அனுமதியுடன் எழுதப்படும் பொய்யாகும். ஆள்வோரை புகழ்ந்துதான் எழுதமுடியும். ஆள்வோருக்கு எதிரான உண்மைகளை எழுதினால், தலை இருக்காது. ஆட்சிகள் மாறும்போது , வரலாறுகளும் மாறுவது வழக்கம். உதாரணமாக ஒரு இருபது , இருபத்தைந்து வருடத்துக்கு முன்னர் யூகோஸ்லாவியா என்று ஒரு கம்யூனிஸ்ட் நாடு இருந்தது. அந்த நாட்டில் வரலாற்றுப் புத்தகங்களும் இருந்தன. இப்போது அந்த நாடு சுமார் 7 அல்லது எட்டு நாடுகளாக உடைந்து சுக்கு நூறாகி விட்டது. யூகோஸ்லாவியா- வில் இருந்து பிரிந்த இந்த 7-8 நாடுகளும் இப்போது தனித்தனி வரலாற்றுப் புத்தகங்களை வெளியிட்டுள்ளன. இந்த 7-8 வரலாறுகளும் ஒன்றுடன் மற்றொன்று ஒத்துப்போகவில்லை. ஒவ்வொருநாடும் தன்னுடைய வரலாற்றுப் புத்தகம் தான் சரி என்று சொல்லிக்கொண்டு திரிகின்றன.

    தமிழ் நாட்டில் திமுக ஆளும்போது, திமுக தலைவர்களைப் பற்றி பாடநூல்களில் வரலாற்றுப் பாடம் தயாரிப்பார்கள். திமுக ஆட்சி போய், அதிமுக ஆட்சி வந்தபின்னர் எம் ஜி ஆர் வரலாறு பாடத்தில் சேர்க்கப்படும். மீண்டும் திமுக ஆட்சி வந்தால் கலைஞர் வரலாறு பாடத்தில் சேர்க்கப்படும். மொத்தத்தில் வரலாறு என்பது ஒருவகைப் பித்தலாட்டமே. முன்னைநாள் பிரதமர் இந்திராகாந்தி அவசரநிலைக் காலத்தில் ( மேயர் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் உட்பட பல லட்சம் மக்களை இந்தியா முழுவதும் சிறையில் வைத்தே கொன்ற காலம் – ஜூன் 1975 முதல் மார்ச் 1977 முடிய ) புதிய பொய் வரலாறுகளை எழுதி , அதாவது history capsules – எழுதி பூமிக்கடியில் புதைத்தார். பின்னர் வந்த ஜனதா கட்சி ஆட்சியில் , அவை வெளியே எடுக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதுதான் வரலாறுகளின் யோக்கியதை. எனவே, நண்பர் முத்து போன்றோர் இந்த வெட்டிக் கால ஆராய்ச்சிகளில் இறங்குவது தேவை அற்றவை என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

    தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய கிளை மொழிகள் வந்தன என்று தமிழ் நாட்டுப் பாடப் புத்தகங்களில் வரலாறு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் பிற மாநிலத்தவரோ, தங்கள் மொழியின் கிளை மொழிதான் தமிழ் என்று சொல்கிறார்கள். உலகம் முழுவதும் இதுபோன்ற யார் சீனியர் என்ற கருத்து வேறுபாடு இருந்துகொண்டுதான் இருக்கும். இதனை தீர்க்க முடியாது.

  3. அன்பின் ஸ்ரீ முத்து,

    அந்தாதி இல்லா இறைவனுக்கந்தாதிப் பனுவல்களால் அழகு செய்த எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் பகர்ந்த கந்தர் அந்தாதியிலிருந்து அழகான பனுவல் ஒன்றை தங்களது முந்தைய இடுகையில் பதிவு செய்திருந்தீர்கள்.

    வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
    சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே

    என்பது வள்ளல் வாக்கு.

    திருப்புகழ் வல்லவர் சீர்பாதத்தூளி எம் சென்னியதே.

    தங்கள் கருத்தை மறுதலிக்க வேண்டியுள்ளது

    \\\ திருமந்திரம் முழுக்கவே வடமொழி நூல்களின் மொழிபெயர்ப்பு என்று சுருங்கச் சொல்லி விளங்கவைத்திருக்கலாமே \\\

    ஐயா வ்யாசத்தில் தெளிவாக தெய்வச் சேக்கிழார் பெருமானின் வாக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதே. தாங்களும் வாசித்திருப்பீர்களே.

    \\\\\ தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
    மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’

    என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார். \\\\\

    சிறியேன் திருமந்திரமும் வாசித்தறிந்தேன் அல்லேன். ஆகமாதி நூற்களும் வாசித்தறிந்தேன் அல்லேன். ஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயர் அவர்கள் தெய்வச் சேக்கிழார் பெருமான் வாக்கினையே பகிர்ந்துள்ளார்.

    திருமூலரின் வாக்கான,

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

    என்பதை தனித்து வாசித்தால் அவர் ஆகமாதி நூற்களை தமிழ் செய்யப்புகுந்தார் என்று தெளிவாகச் சொல்லி விடலாமா தெரியவில்லை. ஆயின் சேக்கிழார் பெருமானின் வாக்குடன் திருமூலரின் வாக்கை இணைத்து வாசித்தால் அப்படித்தானே ஐயா பொருள் கொள்ள முடியும்?

    தாங்கள் சேக்கிழார் பெருமானின் வாக்கினை மறுதலிக்கிறீர்களா?

  4. ப்ரம்மஸ்ரீ மயூர கிரி ஷர்மா மஹாசயர் அவர்களுக்கு வந்தனம்.

    தாங்கள் சமீபத்தில் பகிர்ந்த வ்யாசங்களில் மிகவும் அருமையான வ்யாசம் இது. பல முறை வாசித்தேன்.வரிக்கு வரி தரவுகள். தமிழ்கூறும் நல்லுலகத்தில் பாவிக்கப்படும் பொதுப்படைக்கருத்துக்களுக்கெதிரான மாற்றுக்கருத்துக்களை தெளிவாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து நேரடியாக பீஜாக்ஷரங்களை பகிர்ந்திருக்கிறீர்கள். அருமை.

    \\ தமிழ் வேதம் என்று போற்றுகின்ற திருமுறைகளிலேயே வேதாகமங்கள் போற்றப்படுகின்றனவே என்று யாரேனும் கேட்டால், அதெல்லாம் முன்பு தமிழில் இருந்த வேதங்களும் ஆகமங்களும் தான். அவைகள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. \\\

    ரிக்யஜுஸ்ஸாமாதர்வண வேதங்களையே மறைகள் என்று நேரடியாகச் சொல்லும் திருமுறை வாசகங்கள் ஏதும் இருக்கின்றனவா?

    \\ கூர்மத்தை நம்பிக் குடி கெட்டேனே’ என்று வைணவர் போல வருந்துவர் \\

    இந்த சொல்லாடலின் பொருள் விளங்கவில்லை. இதற்கு முன் கேட்டதில்லை. விளக்கவும்.

    \\\ பிரணவர் முதலிய சிவாம்சமுள்ள முப்பதின்மர் கேட்டறிந்தவை பத்து ஆகமங்கள் என்றும் ருத்திராம்சமுள்ள அநாதிருத்திரர் முதலிய முப்பத்தறுவர் கேட்டது பதினெட்டு ஆகமங்கள் என்றும் இவ்வரலாறுகளில் குறிப்பிடப்படுகின்றது. \\\

    அறுப்பத்தறுவர் பெயர்களை இயலுமானால் பகிரவும். பெயரையாவது வாசித்து ஸ்மரிக்கும் பேறு பெறலாமே.

    \\\ பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
    உற்றநல் வீரம் உயர்சிந்தும் வாதுளம்
    மற்றவ் (வி)யாமளம் ஆகுங் காலோத்தரம்
    துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே’ \\\

    இதற்கு ஸ்ரீமான் முத்து அவர்கள் நேரடியாக என்ன விளக்கம் சொல்வார் என அறிய விழைகிறேன்.

    \\ என்றும் திருமூலர் குறிப்பிடும் ஐம்பது. ஐம்பத்தொன்று என்ற எண்ணிக்கை கொண்ட எழுத்துக்கள் எவை என்பதற்கு தொல்காப்பியத்திலோ, நன்னூலிலோ, வீரசோழியத்திலோ எந்த விளக்கமும் காணப்படவில்லை. \\\

    கர்ம், ஞானேந்த்ரியங்களால் நறுமணமிக்க மானசிக மாலையை புனைந்து அதனை சசிதேவி மாங்கல்ய தந்து ரக்ஷாபரண க்ருபாகரன் தன் கோல ப்ரவாள பாதத்தில் சமர்ப்பிக்குமுகமாக வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய

    “””” ஆசைகூர் பத்தனேன் மனோபத்மமான பூ வைத்து நடுவே அன்பான நூலிட்டு நாவிலே சித்””””””

    என்ற திருப்புகழமுதத்தில்

    “”””” மாத்ருகா புஷ்ப மாலைகோலப்ர வாளபாதத்தில் அணிவேனோ””””

    என்று வள்ளல் பெருமான் பாடுகிறார். இங்கு மாத்ருகா புஷ்பமாலை என்ற படிக்கு சுட்டப்படுவது

    கௌமாரம் இணையதளத்தில்

    “”””” வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட
    மாத்ருகா புஷ்ப மாலை. “””””

    என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆயின் தணிகைமணி குஹத்திரு வ.த.சு.செங்கல்வராய பிள்ளையவர்களின் பாடப்படி இது “மா க்ருதா புஷ்ப மாலை” — மிக உயர்ந்ததான கருத்தாக்கங்களுடன் புனையப்பட்ட மாலை. எங்கள் திருப்புகழ் சபையின் திருப்புகழ்க் குறுந்தொகுப்பின் பெயர் “மாக்ருதா புஷ்பமாலை”. எங்கள் புழக்கத்தில் இருக்கும் பாடம் “மாக்ருதா புஷ்ப மாலை கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ”.

    \\ சிவாச்சார்யர்கள் தினமும் சிவபூஜையின் போது ஓதும் ‘க்ஷித்ராதி³ குடிலா ப்⁴ராந்த…’ என்று தொடங்கும் ஆகம ஸ்லோகமான மிக நீண்ட சதாசிவத்யானத்தை \\

    கேழ்விப்படாத த்யான ச்லோகமாக இருக்கிறது. பொதுவில் பகிரக்கூடியதாக இருந்தால் தயவு கூர்ந்து பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    காமகோடி மண்டலி தளத்தில் பரசுராம கல்பசூத்ரம் பற்றிய விசாரம் ஆறுபாகங்களடங்கிய வ்யாசத்தொடராக பதிப்பிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு உபயோக கரமாக இருக்கலாம். அங்கு இந்நூல் வாமாசாரத்தைச் சார்ந்தது என்று வாசித்ததாக நினைவு.

    நான் இன்னமும் பலமுறை வாசிக்க வேண்டிய வ்யாசம் இது.

    உளமார்ந்த நன்றிகள்.

  5. ஸ்ரீ முத்து ஐயா அவர்களிடம் கேழ்க்க விரும்பும் இன்னம் சில வினாக்கள்

    ஐயா, திருக்குறளில் அந்தணர் என்ற சொல் ஒரு முறை மட்டும் வரவில்லை. பல முறை வந்திருக்கிறது. அவை அனைத்தையும் தொகுத்து வள்ளுவப் பெருமான் சொல்ல விழைவதைப் பகிர முயல்வது சரியாக இருக்குமே. இயலுமானால் தாங்களே இது சம்பந்தமாக தனியாக ஒரு வ்யாசம் சமர்ப்பித்தால் நன்று. பரிமேலழகர் அபிப்ராயம் வைதிக அபிப்ராயம் என்பர். ஆனால் அந்தணர் சம்பந்தப்பட்ட குறட்பாக்களை ஒருங்கே ஒரு இடத்தில் விசாரம் செய்தால் தெளிவான பார்வை கிடைக்குமே என்ற அபிலாஷையில் எமது மேற்கண்ட விக்ஞாபனம்.

    பன்மொழி பேசும் மக்களும் பல சமய முறைப்படி ஒழுகும் மக்களும் ஒன்றாக ஹிந்துஸ்தானமுழுதும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். மக்கள் எப்போதும் மற்றவருடன் ஒட்டாது தனித்த தீவாக வாழ்ந்ததில்லையே. ஒவ்வொரு மொழியிலும் ………. தமிழ் உட்பட…….. சம்ஸ்க்ருதம் உட்பட…….. மற்ற மொழிகளின் கருத்தாக்கங்களை கொண்டும் கொடுத்தும் தான் மக்கள் வாழ்ந்திருப்பர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா?

    ஸ்ரீ மயூர கிரி ஷர்மா அவர்கள் ஆகமாதி சாஸ்த்ரங்கள் மற்றும் திருமந்திரத்துக்கு இடையேயான சாம்யதைகளை பகிர்ந்துள்ளார். வெளிப்படையாக சாம்யதைகள் தெரிகின்றனவே.

    திருமந்திரத்திலிருந்து இந்த வ்யாசம் தெரிவிக்கும் பாடல் :-

    பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
    உற்றநல் வீரம் உயர்சிந்தும் வாதுளம்
    மற்றவ் (வி)யாமளம் ஆகுங் காலோத்தரம்
    துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே

    இது பற்றித் தங்கள் கருத்து யாது என்றும் அறிய விரும்புகிறேன்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  6. அன்பின் கிருஷ்ணகுமார்,

    //தாங்கள் சேக்கிழார் பெருமானின் வாக்கினை மறுதலிக்கிறீர்களா?//

    அதைத் தாங்கள் செய்தது நினைவில்லையா?

    நான் இந்த தமிழ் இந்து வளையத்தில் எழுதிய “அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்” என்ற கதைக்குக் கீழ்க்கண்ட கருத்தைப் பதிவுசெய்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.

    //நீங்கள் வ்யாசம் எழுதும் சமயம் உங்களுக்கு இந்த விஷயத்தின் முழுப்பின்னணி தெரியாமல் இருந்திருக்கலாம் என்று ஏற்றுக்கொள்கிறேன்.
    Again revisit the summary of PAK sir.
    சம்பந்தர் காலத்திய கழுவேற்ற சம்பவம் சேக்கிழார் மற்றும் நம்பியாண்டார் நம்பிகளால் கிட்டத்தட்ட 350 வருஷங்களுக்கு பிற்பட்ட காலத்தில் வடிக்கப்பட்டதால் நம்பகத் தன்மை குறைகிறது என்று பாக் சார் அபிப்ராயப்படுகிறார். மறுக்க முடியவில்லையே. # 1//

    ஆக, சேக்கிழார் எழுதியது பொய் என்றும், PAK சாரும், மதிப்பிற்கு உரிய ஜடாயு அவர்களும் எழுத்துதானே உண்மையாகப் பட்டது. அதுதானே உங்கள் வாதமாக இருந்தது!

    அடுத்த பதிவில் மேலும் எழுதுகிறேன்.

  7. திருமூலரின் தமிழாகமத்தினைப்பற்றி அன்பினுக்கினிய ஈழத்து சைவமணி மயூரகிரி சர்மா அருமையான கட்டுரை வரைந்துள்ளார். பாராட்டுக்கள். அவரது முயற்சி தொடரவேண்டும்.
    திருமந்திரம் தமிழ் நாட்டு சைவ சித்தாந்திகள் வீரசைவர்கள் இருவராலும் ஒருங்கே கொண்டாடப்படும் பெருமைக்குறியது. திருமூலர் லிங்கதாரணம் செய்தவர் என்று ஈழத்து அறிஞர் வேதநாதன் சொல்வார். திரு அடிகளாசிரியர் போன்ற வீரசைவ ஆச்சாரியார்களும் அவ்வண்ணமே கூறுவர். அடிகளாசிரியர் திருமூலரும் பேருரையும் என்ற நூலில் எப்படி தத்வமசி அன்ற மகாவாக்கிய ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று விளக்கியுள்ளார்.
    திருமந்திரம் சைவாகமங்களின் பிழிவு சாரம் என்றே கொள்ளப்படவேண்டும். சைவசித்தாந்தத்தின் கலைச்சொற்களின் கருவூலமாக விளங்குவது அந்த நூல் என்று எனது குருநாதர் கூறுவார். இன்னும் ஆழ்ந்து ஆய்ந்து திருமந்திரத்தினைப்பற்றி கட்டுரை எழுதுங்கள் என்று ஸ்ரீ சர்மா அவர்களை வேண்டுகிறேன்.

  8. ஸ்ரீ சர்மா
    “இத்தரப்பார் வேதம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, எங்களுக்கு திருமுறைகள் உள்ள போது, வேறென்ன வேண்டும் என்று வினவத் தொடங்கியுள்ளனர்”.
    வேதம் ஆகமம் இரண்டையும் போற்றுவோரே சைவர் வேதத்தினை விட்டுவிடுபவர்கள் உபாய சைவர் என்றே திருமூலர் சொல்வர்.
    திருமூலரின் வரலாற்றை ஆய்கின்ற பொழுது வேதமும் ஆகமமும் ஒரு சில வர்ணத்தவர்க்கே உரியதன்று என்று புரிகிறது. ஆகமம் அனைவருக்கும் உரியதென்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். சைவரில் சிலர் இன்னமும் வேதம் ஒரு சிலருக்கே உரியதென்று சொல்கிறார்கள். மூலன் என்னும் இடையன் உடல் புக்க சுந்தரானந்தர் வேதாந்தம் உரைக்கில் எல்லோரும் வேதாந்த நிதித்யாசனம் செய்தல் கூடம். வேதமந்திரங்கள் ஓதல் கூடும். அந்த நிலை வரும் வரை உபாய சைவர்கள் தமிழ் போதும் என்ற வாதம் எடுபடத்தான் செய்யும்.

  9. க்ருஷ்ணகுமார்
    பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
    உற்றநல் வீரம் உயர்சிந்தும் வாதுளம்
    மற்றவ் (வி)யாமளம் ஆகுங் காலோத்தரம்
    துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே
    மஹாசய இந்த பாடலில் திருமூலர் பிரான் 28 ஆகமங்களில் ஒன்பது ஆகமங்களை நந்தியம் பெருமான் பெற்றதாகக் குறிப்பிடுகிறார். அவை காரணம், காமிகம், வீராகமம், சிந்துஜம், வாதுளம், யாமளம், காலோத்திரம், சுப்பிரபேதம், மகுடம் என்பவை. இவற்றில் யாமளம் தவிர மற்றவை வேதசம்மதமான சிவாகமங்களாகும். யாமளம் தாந்ரீக அவைதீக சாக்தாகமாகும். ஆகவே சைவ அறிஞர்கள் இதனை தாந்த்ரீகர் யாரோ இடைச்செருகல் செய்திருக்கவேண்டும் என்று கருதுகின்றனர்.
    அந்த இடத்தில் இருந்த சைவாகமம் எதுவென்றும் தெரியவில்லை போலும்.
    கீழே பொருள் காண்க:
    https://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10103&padhi=%20&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

  10. அன்பார்ந்த ஸ்ரீமான் அரிசோனன்

    ஹிந்து அறிவியக்கம் என்பது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் மற்றும் சங்க பரிவார இயக்கங்களின் ஒரு முக்யமான கூறு.

    சமணக்கழுவேற்றம் என்ற விஷயம் சம்பந்தமாக உங்களது வ்யாசத்தில் நீங்கள் பகிர்ந்த கருத்துக்களில் தரவு சார்ந்து நீங்கள் மேற்கொண்டு ஏதும் சொல்ல விழைந்தால் ………. அது சிறியேனது புரிதலையும்………… பொதுப்புரிதலையும் மேம்படுத்துமானால்…………. அவற்றை அறிய விழைகிறேன்.

    ஸ்ரீ மயூரகிரி ஷர்மா அவர்கள் இங்கு வைத்த விஷயங்களின் கருதுகோள் வேறு. இந்த வ்யாசம் விசாரம் செய்யும் விஷயத்தை மட்டிலும் இங்கு விவாதம் செய்யுமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன். தங்கள் வ்யாசம் சம்பந்தமான கருத்துக்கள் தங்கள் தரப்பிலிருந்து மேற்கொண்டு இங்கு பதியப்பட்டால் அதனை முன்னிட்ட மேற்கொண்ட ப்ரச்னோத்தரங்கள் சிறியேன் தரப்பிலிருந்து உங்கள் இழையில் மட்டிலும் பதிவு செய்யப்படும்.

    “””””தெய்வச் சேக்கிழார் பெருமான் சொல்லி விட்டார். அதை மறுதலிக்க விழைகிறீர்களா? “”””””

    என்ற சிறியேனது ப்ரச்னத்தில் அவர் சொல்லி விட்டால் அதை கேழ்விக்கு கூட உட்படுத்தாது அப்படியே ஏற்க வேண்டும் என்ற படிக்கு ஒரு கருத்து த்வனிக்குமானால் (த்வனிக்கிறது என்பது நிதர்சனம் – உங்கள் உத்தரம் அதை பதிவு செய்து விட்டது) சிறியேனுடைய கருத்து அறிவு பூர்வமான கருத்து ஆகாது என ஒத்துக்கொள்கிறேன்.

    நெருப்பு சுடும் என்று வேதங்களே நூறு முறை சொன்னாலும் அதை ஏற்கமாட்டேன் என்று ஆதி சங்கராசார்யரே தனது பாஷ்யாதிகளில் எழுதியுள்ளதாக இதே தளத்தில் வாசித்திருக்கிறேன். பாஷ்ய மூலத்தில்……. எங்கு…… எந்த பாஷ்யத்தில் என்று சரிபார்க்கவில்லை. இருக்கட்டும்.

    ஹிந்து சமய சாஸ்த்ரங்களில் …………… சைவ, வைஷ்ணவ, பௌத்த, ஜைன சமய சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள்…………….. கருப்பு, வெள்ளை, …………… பொய், உண்மை……….. என்ற இரு கருத்துக்கூறுகளில் மட்டிலும் அடங்காது…………. இதைத் தவிற இன்னொரு முக்யமான கோட்பாடும் இருக்கிறது…………. அது என்ன? அது தெரிந்தால் நமது புரிதல் எப்படி மேம்படும் என்று சிறியேன் பெரியோர்களிடமிருந்து கேட்டறிந்ததை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

    இந்த வ்யாசத்தில் எழுப்பப்பட்ட ப்ரச்னங்களை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் அவ்விஷயப் பகிரல் ஹேதுவாகும்.

  11. //கேழ்விப்படாத த்யான ச்லோகமாக இருக்கிறது. பொதுவில் பகிரக்கூடியதாக இருந்தால் தயவு கூர்ந்து பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.//

    க்ஷித்ராதி குடிலாப்ராந்த மந்த்ரசிம்ஹாஸநஸ்திதம்/
    சுத்தஸ்படிக சம்ஹாஸம் த்வாத்ரிம்ஸத் லக்ஷணாந்விதம்/
    பத்மாஸநஸ்தம் பஞ்சாஞ்யம் ப்ரதிவக்தரம் த்ரிலோஸநம்/
    த்ருக் கிரியேசா விசாலாக்ஷம் ஞாந சந்த்ர கலாஙிதம்/
    தவளேசாந வதநம் பீதம் தத்புருஷாநநம்/
    க்ருஷ்ணாஹோர முகோபேதம் ரக்தாம்போத்தர வக்த்ரகம்/
    சுஸ்வேதம் பச்சிமாஸ்யேகம் சத்ஜோயாதம் சமூர்தகம்/
    நாகயக்ஞோபவீதிநம் சாந்தம் ஜடாகண்டேந்து மண்டிதம்/
    சக்த்யஸீசூலகட்வாம்க வரக்யக்ர கராம்புஜம்/
    தக்ஷிணஸ்தோஸ்தவாமஸ்தே டமரும் பீஜபூரகம்/
    நாகாக்ஷ சூத்ரம் நீலாப்ஜம் பிப்ராணாம் பஞ்சபி கரை/
    சம்சிந்த்ய மூர்த்தே ரூபரி சசக்திமாத்ர விஜ்ஜிரும்பிணம்/
    லிங்கா காரோபமர்த்தேந பாவநே லிங்கதாம் த்யாயேத்//

    தமிழ் எழுத்தில் எழுதியதால் பல தவறுகள் உள்ளன.. எனவே, அவற்றை கவனித்து திருத்தம் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்..

    பிரபலமாக பழக்கத்தில் உள்ள அகோரசிவாச்சார்யார் பத்ததியின் வழியே சிவபூஜை செய்பவர்கள் ஆத்மார்த்த சிவபூஜையில் இந்த ஸ்லோகத்தாலேயே சிவலிங்கத்தில் ஸ்வாமியை தியானிக்கிறார்கள்…

  12. இங்கே மறுமொழிகளைப் பதிவு செய்துள்ள அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது பணிவன்பான நன்றிகளும் வணக்கங்களும் உரியதாகட்டும்…

    இங்கே திருமூலர் மொழிபெயர்ப்புச் செய்தார் என்று சொன்னதாக கருத வேண்டாம்..

    ஆகமங்களைக் கற்று, அதனை உணர்ந்து, அந்த அனுபூதியில் திளைத்து, தான் பெற்ற அனுபவத்தை திருமூலர் தமிழில் வழங்கியுள்ளார்… ஆக, அது ஆகமசாரம், ஆகம வழி நின்ற நூல் என்பதே எம் கருத்து… ஆகமங்களை கற்பதற்கு ஒரு திறவு கோலாக திருமூல மஹாரிஷி தமிழில் திருமந்திரத்தை செய்துள்ளார் என்று நம்பலாம்…

    இக்கட்டுரை பற்றிய பெரியோர்களின் கருத்துக்கள் எவ்வாறாயினும் அதனை பெற சிறியவனான யான் மிக ஆவலோடுள்ளேன்…

    ஆகமங்களை கற்க விரும்புகிறவர்களுக்கு கீழுள்ள இணையம் உதவலாம்…

    https://www.agamaacademy.org/digital-library-en.php

  13. திரு சர்மா அவர்களுக்கு,
    முதல் பகுதியில் உள்ளவை பல தவறான கருத்துக்கள். புரிதில் இன்றி எழுதப்பட்டுள்ளது.
    // இவர்களில் பலருக்கும் கூட திருமுறைகள் ஒழுங்காகத் தெரியாது. தெரிய வருகிற போது …..,//
    இது மிகவும் தவறு. வாழ்வியல் சடங்குகள் செய்பவர்கள் பலர் திருமுறைகளின் மீது ஆழ்ந்த பக்தியும் அறிவும் கொண்டவர்கள். சைவத்தையும் திருமுறையையும் கண்கள் போன்று போற்றுகின்றவர்கள்.

    உங்களின் கருத்து பல தளங்களின் விவாதிக்கப்பட்டுள்ளது.

    https://www.shaivam.org/articles/art-kumaraguru-thelivukkaka.htm

    https://www.youtube.com/watch?v=DyiboX011qc

    https://www.thevaaram.org/

    https://manivasagar.in/

    https://pattamuthu.webs.com/

    https://www.youtube.com/watch?v=n8rAG28-jJsthi

    திருமுறை ஓதி வாழ்வியல் சடங்குகள் செய்பவர்களின் பல கேள்விகள் உங்களை போன்றவர்களால் பதில் தரமுடிவதில்லை.

    இது என்றும் தீர்க்கப்படாத விவாதம்.

    https://jataayu.blogspot.in/2008/06/1.html

    கோவில்களில் வேதத்தையும் நம் வீடுகளில் சைவ திருமுறையும் ஓதி வழிபடுவது தான் சால சிறந்தது.

    உங்களிடம் ஒரு கேள்வி. திருமுறைகளை தள்ளிவைத்து விட்டு வேதத்தையே கொண்டாடும் தமிழர்களை உங்களுக்கு தெரியுமா?
    திருச்சி தஞ்சை மாவட்டங்களுக்கு சென்று பாருங்கள்.

    இறுதியாக:
    “வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்
    பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
    சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
    பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்.”

    திருமந்திரத்திற்கு சிறந்த உரைநூல்கள் தத்துவ நோக்குடன் உள்ளன.
    https://www.youtube.com/watch?v=zK_n5aFBP2w

    சோமசுந்தரம்

  14. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் ஒரு தனித்தன்மை வாய்ந்தது. இது முதலொன்பது திருமுறைகளைப் போலத் தோத்திரமுமன்று; பதொனொன்று பன்னிரண்டாம் திருமுறைகளைப்போல இலக்கியமுமன்று. பதினான்கு சித்தாந்த சாத்திரங்களைப் போல அளவையடிப்படையில் கொள்கைகளை விளக்கும் சாத்திர நூலுமன்று. ஆதலால் திருமந்திரம் பேசப்படும் அளவுக்கு ஆய்வுக்கும் அனுபவத்திற்கும் உட்படுத்தப் படுவதில்லை என்பது என் கருத்து. இந்நூலின் ஒன்பது தந்திரங்களும் முறையே காரண ஆகமம்,காமிக ஆகமம், வீர ஆகமம், சிந்தாகமம், வாதுள ஆகமம், வியாமள ஆகம்ம், காலோத்தர ஆகமம், சுப்பிரமச் ஆகமம்,, மகுடாகமம் ஆகிய ஆகமங்களின் பொருளைத் தருகின்றன என்று கூறுவர். தமிழகத்தில் திருமந்திரம் குறித்து அரிய ஆராய்ச்சி செய்த இருவர. டாக்டர் வி.வி. இரமண சாஸ்திரி. மற்றொருவர் திருமந்திரமணி துடிசைக்கிழார் அ. சிதம்பர முதலியார். இருவர் ஆய்விலும் மொழி, காலம், பற்றியும் செல்விடப்பட்ட பகுதிகள் அதிகம். திருமந்திர ஆசிரியர் வடமொழியாளர் என்றும் கயிலைத் தாழ்வரை யி லிருந்து தென்னிந்தியாவை வந்தடைந்தவர் என்றும் அவருடைய காலம் கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்கு சற்று முன் என்றும் இரமணசாத்திரியார் கருத அவருக்கு நேர் மாறான கருத்துக்களை திருமந்திர மணி வழங்குகிறார். திருமந்திரப் பொருளாராய்ச்சி மொழிச் சண்டையாக திசை திரும்பி விடுகின்றது. திருமந்திர வழி யோக சாதனை புரியும் சைவர்கள் உளரோ? இறைவன் வேதாகமங்களை உரைத்த்ருளினான். அவன் உரைத்த மொழி எது? அந்த மொழி சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் வாக்குக்களில் எந்த வாக்கில் இருந்தது. உறுதியாக ‘க்ஷரம்’ (அழிவது) ஆகிய வைகரியாக இருந்திருக்க முடியாது. நந்தியெம் பெருமான் சனகர் முதலிய்வர்களோடு சுந்தரநாதருக்குக் கற்பித்த வேதாகமங்கள் சூக்கும வாக்கா? இன்று நம்மிடைஉலவும் வேதாகம நூல்கலாகிய வைகரி வாக்கா? “ஆரியமுந் தமிழு முடனே சொல்லிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே” என்றதனால் இருமொழிக்கும் பொதுவான மூலமொழி யொன்றினால் இறைவன் உணர்த்தினான் என்பதும் சிவாகமப் பொருள் தமிழில் விரிவாகப் பேசப்படாமல் இருந்த நிலையில் சிவாகமப் பொருளைத் தமிழில் செய்தார் என்பதும் தெளிவு. 51 அக்ஷரங்கள் வடமொழிக்கு மட்டுமே உரியதல்ல. ‘உந்தி முதலாக முந்துவளி துரப்ப “மேல் எழூஉவதினால் எழுத்து. இது ஒலியையே குறிக்கும். எழுதுவதினால் எழுத்து எனப்படும் வரி வடிவைக் குறிப்பதன்று. இந்த 51 ஒலி எழுத்துக்களும் சைவசித்தாந்த சாத்திரங்களில் ஆறு அத்துவாக்களில் ஒன்றாகி வன்னங்களில் அடங்கும். இவ்வொலி எழுத்துக்கள் உலகமக்களின் அறிவு விளங்கிடும் அனைத்துமொழிக்கும் பொது. அதனால்தான் ‘அக்ஷரம்’ (அழியாதது’ ) எனப்படும். த்மிழில் எழுத்துக்கள் பதமாக அமையும் போது ககாராதி ஒலிகள் இயல்பாக ஒலித்தலினால் நெடுங்கணக்கில் அமைக்கத் தேவைப்படவில்லை.. க்கரம் சொல்லுக்கு முதலில் வரும் பொழுதும் இரட்டிக்கும் பொழுதும் வல்லொலியாக வரும், இரு உயிரெழுத்துக்களின் இடையிலும் மெல்லொற்றை அடுத்தும் வரும்பொழுது மென்மையாக ஒலிக்கும். இந்த இயல்பினை காக்கை, காகம், காங்கை ; பட்டம் , கபம், பம்பரம்என் உச்ச்சரித்து ஒலிவேறுபாட்டினை உணர்க. ஒலிவேறுபாட்டினால் பொருள் வேறுபாட்டினை உணர்த்த வேண்டிய காலத்தில் தமிழ்றிஞர்கள் கிரந்த எழுத்தைப் படைத்துப் பயன்படுத்திக் கொண்டனர் . மந்த்ரமாத்ருகா எனும் 51 அக்ஷரங்களும் அழியாத ஒலியெழுத்துக்களே ; அவை உலகமொழிகளுக்கெல்லாம் பொது வான ஒலிகளே; சுத்தமாயை நாதமாகவும் பின் விந்துவாகவும் பின் அக்ஷசரமாகவும் விரிவடைந்த் சுத்த மாயையின் விருத்தியே.

  15. முனைவர் ஐயா அவர்களே,

    //தமிழில் எழுத்துக்கள் பதமாக அமையும் போது ககாராதி ஒலிகள் இயல்பாக ஒலித்தலினால் நெடுங்கணக்கில் அமைக்கத் தேவைப்படவில்லை..//

    தமிழின் ஒலிகளைப் பற்றி அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். மெய் சிலிர்க்கிறது!

  16. அன்பார்ந்த ஸ்ரீமான் சோமசுந்தரம்

    திருச்சிற்றம்பலம்

    \\ கோவில்களில் வேதத்தையும் நம் வீடுகளில் சைவ திருமுறையும் ஓதி வழிபடுவது தான் சால சிறந்தது. \\

    ஒரு சிறிய பிழை திருத்தம்.

    கோவில்களில் வேதத்தையும் திருமுறைகளையும் முன்னோர்கள் விதித்தபடி அந்தந்தக் காலபூஜைகளின் போது முறையாக ஓதி பூஜை செய்வது தகும் என்ற தங்களது கருத்தையே அடிநாதமாகக் கொண்டது ஸ்ரீ ஷர்மா அவர்களது வ்யாசம் என்று உணர்கிறேன்.

    எங்களது திருப்புகழ் சபையில் த்யான ஆவாஹனாதி உபசாரங்கள் முழுதும் திருப்புகழ் வழியாகவே செய்யப்படுகிறது. முன்னர் கூடப் பகிர்ந்திருக்கிறேன்.

    திருப்புகழ் ஓதும் அடியவர்கள் அனைவரும் உபயுக்தமாக திருமறைகளையும் ஓதுகிறார்கள். ஆயின் ஆலயங்களில் முறையாகத் திருமுறை பயின்ற வணக்கத்திற்குரிய ஓதுவார் மூர்த்திகள் கரதாளங்களுடன் திருமுறை ஓதும் அழகு தனி தான். எனக்குப் பரிச்சயமான ஓதுவார் மூர்த்திகள் அனைவரும் திருப்புகழமுதத்திலும் வல்லவர்களே.

    தாங்கள் பகிர்ந்த உரல்களை சாவகாசமாக வாசிக்க வேண்டும்.

    ஸ்ரீ ஷர்மா மஹாசயர் பகிர்ந்த உரல் மிகவும் உபயோககரமாக இருக்கிறது. பூஜ்ய ஸ்ரீ அகோர சிவாசார்ய ஸ்வாமின் அவர்களது பூஜா பத்ததி நூல் க்ரந்த மற்றும் தமிழ் லிபியில் காணக்கிட்டுகிறது. ஆனால் தாங்கள் பகிர்ந்த த்யான ச்லோகம் அதில் இல்லை.

    ஓரிரு வருஷங்கள் முன்பு ஸ்ரீ ஜடாயு அவர்கள் பகிர்ந்த புண்யான் இமான் பரம பாசுபதான் ஸ்மராமி என்ற ச்லோகம் தங்களுக்கு நினைவிருக்கலாம். ஸ்ரீ ஜடாயு அவர்களோ தாங்களோ அந்த ஸ்துதி முழுதையும் பகிர முடியுமானால் நன்று. வைஷ்ணவ பரமான புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி என்ற தொகுப்பு அறிவேன்.

    ஆமாம். தாங்கள் பகிர்ந்த தமிழ் லிபியிலான த்யான ச்லோகத்தில் நிறைய பிழைகள். எளிமையான அனுஷ்டுப் சந்தஸ். பெரும்பாலும் த்யான ச்லோகங்கள் சார்த்தூல விக்ரீடிதம் என்ற நீளமான சந்தஸில் அமையக்காணலாம். நாகரத்தில் அல்லது ஆங்க்ல ரோமன் லிபியில் இணையத்தில் தேடுகிறேன். ஆப்படவில்லை. தங்களிடம் க்ரந்த லிபியில் இருக்குமானாலும் பகிரலாம். ஈழத்தில் சம்ஸ்க்ருதம் க்ரந்த லிபி வழியே இன்னமும் வாசிக்கப்படுகிறது என அறிந்தேன். ஹாலாஸ்ய மாஹாத்ம்யம் க்ரந்த லிபியில் கிட்டுகிறது.

    சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய தாங்கள் பகிர்ந்த உரலும் பயனுள்ளது. புக்மார்க் செய்திருக்கிறேன்.

    ஸ்ரீமான் அரிசோனன், தங்கள் வ்யாசம் சம்பந்தமாக முன்னர் சொல்லாத…… தாங்கள் புதியதாக சொல்ல விழையும் கருத்தை அறிந்து….. எனது புரிதலை மேம்படுத்திக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். என் கருத்தை அங்கு பதிவு செய்கிறேன்.

    ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசய,

    \\\ தமிழில் எழுத்துக்கள் பதமாக அமையும் போது ககாராதி ஒலிகள் இயல்பாக ஒலித்தலினால் நெடுங்கணக்கில் அமைக்கத் தேவைப்படவில்லை. அதனால்தான் ‘அக்ஷரம்’ (அழியாதது’ ) எனப்படும். மந்த்ரமாத்ருகா எனும் 51 அக்ஷரங்களும் அழியாத ஒலியெழுத்துக்களே ; அவை உலகமொழிகளுக்கெல்லாம் பொது வான ஒலிகளே; சுத்தமாயை நாதமாகவும் பின் விந்துவாகவும் பின் அக்ஷசரமாகவும் விரிவடைந்த் சுத்த மாயையின் விருத்தியே. \\\

    ஸ்ரீமான் சோமசுந்தரம் அவர்கள் பகிர்ந்தது போன்று சமன்வயமிக த்வேஷரஹிதமான கருத்தாழமிக்க பகிர்வு.

    ஸ்ரீ ஷர்மா மஹாசய, மீண்டும்………… பலகாலம் நான் நினைவில் வைத்திருக்கக்கூடிய வ்யாசம் இது. கடுமையான உழைப்புடன் தகவல்கள் வர்ஷிக்கப்பட்டிருக்கின்றன.

    திருச்சிற்றம்பலம்
    சிவசிதம்பரம்.

  17. //ரிக்யஜுஸ்ஸாமாதர்வண வேதங்களையே மறைகள் என்று நேரடியாகச் சொல்லும் திருமுறை வாசகங்கள் ஏதும் இருக்கின்றனவா?//

    “இருக்கோடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்”
    – ஆளுடைய அடிகள்

    “அரவொலி ஆகமங்கள் அறிவார் அறிதோத்திரங்கள்
    விரவிய வேதவொலி விண்ணெல்லாம் வந்தெதிர்ந்திசைப்ப”
    – ஆளுடைய நம்பி

    சாம வேதம் ஓதும் வாயோன் என்று பல இடங்களில் சிவபிரானை நம் சம்பந்த பெருந்தகையார் அழைத்துள்ளனர்.

    எனினும்

    ஆகமம் ஆகிநின்று அன்னிப்பான் தாள் வாழ்க – சிவபுராணம்

    “மன்னும் மாமலை மகேந்திர தன்னிற்
    சொன்ன ஆகமம் செய்துவித்தருளியும்”
    – கீர்த்தி திருவகவல் , ஆளுடைய அடிகள்

    இவையாவன கருததக்கன.

    பேராசிரியர் திரு.அ.ச.ஞா அவர்கள் தம்பிரான் தோழர் அருளிய திருப்பாட்டுகளிலும், திருவாசகத்திலும் ஆகமம் தொடர்பான சொற்கள் புழங்குவதாகவும். பிள்ளையார், ஆளுடைய அரசுகள் காலத்திற்கு பின்தான் ஆகமங்கள் சிறப்புற தொடங்கின என கருதுவதாக தெரிவிக்கின்றார்.

    சிறியேன் கருத்தில் தவறு இருப்பின் பெரியோர்கள் பொறுத்தருள்க..
    ஆரூரா!! ஐயாறா!!

  18. திருவந்தெழுத்து எனப்படும் பஞ்சாட்சரம் திருமுறைகளில் நமசிவாய எனவும் சிவாய நம எனவும் ந முதலகவும் சி முதலாகவும் வேற்றுமையின்றி ஓதப்படும். நமசிவாய என்பதற்கு, என்னுடையது என்று கூற ஒன்றும் இல்லை; அனைத்தும் சிவனுடையவே என்றும் ‘சிவாய நம’ என்பதற்கு ‘ சிவனுக்கு வணக்கம்’ என்பதாகவும் பொருள் கொள்வர். சாத்திரங்களில் அந்தெழுத்தும் பொருளுணர்த்தும் ஐந்து பதங்களாகக் கூறுவர். ‘அந்தியும் நண்பகலும் ஐந்து பதஞ் சொல்லி” என்பது நம்பியாரூரர் வாக்கு. சாத்திரங்கள், திருவந்தெழுத்தை ‘ந’ முதலாகக் கூறினால் முத்தி கிட்டாது என்றும், உலக போகங்களே கிட்டும், அதனால் பிறவி நீங்காது என்றும் கூறும். பிறவியறுக்க வேண்டுவார் ‘சி’ முதலாகிய சிவாய நம எனும் மந்திரத்தையே உச்சரிக்க வேண்டும் என்றும் கூறும். இவ்வாறு சத்திரம் கூறுவதற்குக் காரணமும் உண்டு. ‘ந ‘ என்பது திரோதம் திரோதானம் என்பதும் சத்தியே எனினும் அது உயிர் பக்கவம் பெறும் பொருட்டு உலகத்தைக் காட்டிச் சிவத்தை மறைப்பதினால் மலம் என்றும் கூறப்படும். எனவே ‘ந்’ முதலாகிய ஐந்தெழுத்து உலகபோகத்தையே முதன்மைப் படுத்தலின் முத்திப் பயன் தராது. ‘ம’ ஆணவமலம். ஆன்ம அறிவை மறைத்து எல்லா அனர்ந்த்தங்களையும் ஆன்மாவுக்கு விளைவிப்பது. எனவே ‘நம்’ முதலாகிய ப்ஞ்சாட்சரம் பிறப்பறுக்க விரும்புவாருக்கு ஆகாது என்பது சாத்திரம். (‘விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம், பெரியவினை தீரிற் பெறும்’.,. ‘மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ,மேலாகி மீளா விடின்’, ‘சிவமுதலே யாமாறு சேருமேல் தீரும், பவமிதுநீ ஓதும்படி’ (திருவருட்பயன் 84,85, 87), ‘நம்முதலா வோதிலருள் நாடாது நாடும்அருள் சிம்முதலா வோதுநீ சென்று’ உண்மைவிளக்கம்41) திருமந்திரத்த்ல் பல மந்திரங்கள் திருவந்தெழுத்தில் ஐந்தெழுத்துக்களும் மாறி உரைக்கப்படுகின்றன. (959, 965, 976, 982} திருமந்திரம் 923 “ஆயுஞ் சிவாய நமம்சி வாயந, வாயு நமசிவா யயநம் சிவாயந, வாயுமே வாய நமசியெனு மந்திர, மாயுஞ் சிகாரம் தொட்டந்தத் தடிவிலே” என்று எழுத்துக்கள் ‘சி’ முதலாகிக் கடை வரையில் மாறும் முறையைக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு சிமுதலாயதிருவந்தெழுத்து முதலெழுத்துமாறும் முறையை, இந்தத் திருமந்திரத்தை (923) ஒட்டி அருணகிரிப் பெருமானும் , “ஜெய ஜெய அருணாத் திரிசிவ யநமச்” எனத் தொடங்கும் திருவருணைத் திருப்புகழில் கூறுவது மட்டுமேயன்றி,திருமூலரை நினைவு கூறும் வகையில், முருகப்பெருமானை ‘அனைத்திற்கும் மூலமாகிய பொருளே’ எனும் பொருளில் ‘ திருமூலா’ என அழைக்கின்றார். சித்தாந்த சாத்திரங்கள், முத்தியை நாடுவோர் ‘நம ஆகிய எழுத்துக்களை முதலாகவுடைய ஐந்தெழுத்தை விலக்க உபதேசிக்கத் திருமந்திரம், ‘ந’ முதலாகவும், ‘ம’ முதலாகவும், உயிர் எனும் பொருளைத் தரும் ‘ய’ முதலாகவும் ஐந்தெழுத்தைக் கூறுகின்றது. இந்த எழுத்து மாறும் முறை உபாசனைக் குரிய சக்ரங்களில் எழுத்துக்களின் அடைவு முறையா, செபிக்கும் மந்திரங்களா? இவ்வாறி ஐந்தெழுத்துக்களை மாற்றிக் கூறும் சாதகர்கள் யார், அவர்கள் அடையும் பயன் பற்றிய தெளிவு இல்லை. இது போன்ற காரணங்களால் என்போன்றார் திருமந்திரத்தின் முழுப்பயனையும் அறிய இயலாத நிலை உள்ளது அரிந்தோர் விளக்கப் பணிவுடன் வேண்டுகின்றேன்.

  19. அன்பின் கிருஷ்ணகுமார்,

    இந்தக் கருத்தில் மேற்பதிவு செய்து விவாதத்தைத் தொடரவேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

  20. //கோவில்களில் வேதத்தையும் திருமுறைகளையும் முன்னோர்கள் விதித்தபடி அந்தந்தக் காலபூஜைகளின் போது முறையாக ஓதி பூஜை செய்வது தகும் //
    உண்மையான கருது.

    இங்கே கருத்து பிழை வருவது எல்லாம் மொழியில் தான்.
    பலர் திருமந்திரத்தையும் மற்ற பல நூல்களையும் வடமொழியில் இருந்து தான் எழுதப்பட்டது என கூறிவருகின்றனர். இங்குதான் விவாதம் வருகின்றது.

    முனைவர் ஐயா போன்று சம நிலையில் உள்ளவர்கள் தான் இதைபற்றி தெளிவு படுத்தவேண்டும்.

    “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்”

    சோமசுந்தரம்

  21. முனைவர் ஐயா அவர்களே,
    தங்கள் ஐந்தெழுத்து விளக்கம் அருமை. முதலில் என் ‘ந’வை ஓதக்கூடாது என்பதற்குத் தாங்கள் கூறிய கருத்தில் பொதிந்துள்ள உண்மையை அறிந்துகொண்டேன். பிறவாவரம் வேண்டுவதற்கு எப்படி ஓதவேண்டும் என்று விளக்கியதும் புரிந்துகொண்டேன்.

  22. ///// நண்பர் முத்து போன்றோர் இந்த வெட்டிக் கால ஆராய்ச்சிகளில் இறங்குவது தேவை அற்றவை என்பதை புரிந்து கொண்டால் நல்லது./////

    ஒரு நூல் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது வடமொழியில் இருந்து சுடப்பட்டதாக ஒரு குழு காலந்தோறும் வாதிடும் போது, அந்தந்த காலகட்டத்தில் அதனை மறுதலிக்கவில்லையென்றால், கால ஓட்டத்தில் உண்மை பின்தங்கி விடும். மேலும், காப்பியடிக்கப்பட்டிருக்குமோ என்று ஐயம் கொண்டிருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு உண்மை நிலையை எடுத்துக்கூறுவதில் தவறும் இல்லை, வெட்டித்தனமும் இல்லை. வெட்டி ஆராய்ச்சி என்று, கட்டுரை எழுதியவருக்கு அறிவுறுத்தாமல், அதை மறுதலிக்கும் எனக்கு அறிவுறுத்துவது தமிழ்சார் வாதத்தை மழுங்கடிக்கும் செயலாகக் கூட இருக்கலாம் 🙂 மேலும், எனது வாதத்தை வெட்டி என்று கூறினால், உங்களது நீண்ட விளக்கத்தை எந்த கணக்கில் சேர்ப்பது? இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து திருக்குறள் வடமொழி நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்று சொன்னாலும் சொல்லுவார்கள். ஏனெனில், திருக்குறள் சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வடமொழியிலும் தமிழிலும் ஒரு நூல் இருந்தால் அது வடமொழியில் தானே முதலில் தோன்றியிருக்கவேண்டும்…. 🙂

    ////// ஆயின் சேக்கிழார் பெருமானின் வாக்குடன் திருமூலரின் வாக்கை இணைத்து வாசித்தால் அப்படித்தானே ஐயா பொருள் கொள்ள முடியும்? /////

    ////////இதற்கு ஸ்ரீமான் முத்து அவர்கள் நேரடியாக என்ன விளக்கம் சொல்வார் என அறிய விழைகிறேன்.////////

    திருமூலர் ஆகமப்”பொருளை”த் தமிழில் வகுத்ததாகத் தானே சேக்கிழார் கூறுகிறார். ஒருவர் Quantum Mechanics-ஐ தெளியக் கற்றுக்கொண்டு சொந்தமாகத் தமிழில் புத்தகம் எழுதுவதற்கும், அந்த இயற்பியல் துறையில் ஏற்கனவே வெளியாகியிருக்கும் ஆங்கில/ஜெர்மானிய நூலைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கும் வேறுபாடுகள் இல்லையா, ஐயா?

    மேலும், ஆகமங்கள் முதன்முதலில் வடமொழியில் இயற்றப்பட்டதாக சேக்கிழார் பெருமான் எங்கே கூறியிருக்கிறார்? தமிழுக்கும் வடமொழிச்சொற்களுக்கும் திருமூலர் முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து, ஆகமங்கள் தமிழ்ச்சொற்களும் வடமொழிச்சொற்களும் கலந்த கலவையில் தான் முதன்முதலில் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது. அக்கலவையில் அது வடமொழியில் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. எனவே முதன்முதலில் அவை தமிழில் தோன்றியிருக்கலாம், அல்லவா?

    அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
    சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
    தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
    உணர்த்தும் அவனை உணரலு மாமே.

    என்னும் பா சில பதிப்புகளில் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளது. சிலர் இதனை இடைச்செருகலாகக் கருதி, இதனைத் திருமந்திரத்தில் சேர்ப்பதே இல்லை.ஏனெனில், 3000 பாக்கள் இருக்கவேண்டிய இடத்தில் 3047 இருக்கின்றன.

    சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
    உவமா மகேசர் உருத்திர தேவர்
    தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
    நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே

    இது ஆகமம் வரல் ஆறு. திருமூலரே தனது குருவாகிய நந்தி எப்படிப் பெற்றார் என்று கூறியுள்ளார். இவை அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்ட அறுபத்து அறுவர் வழி வரவில்லை. இது வேறொரு வரல் ஆறு. மேற்குறிப்பிடப்பட்டவர்கள் தம்மில் தாம் பெற்ற ஆகமங்களே ஒன்பது தானாம். பிற ஆகமங்கள்/ஆகமப்பகுதிகள் இப்போது கிடைப்பதாக இருந்தால், நமக்கு கிடைக்கும் அவை திருமூலருக்குக் கிடைக்காமல் போனது விந்தைதான்!

    நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
    புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய்து
    அந்தி மதிபுனை அரன்அடி நாடொறும்
    சிந்தைசெய்து ஆகமஞ் செப்பலுற் றேனே

    என்று திருமூலர் வாக்கிலேயே அவர் செப்பலுற்றது ஆகமம் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. இதனை மயூரகிரியாரும் மறுக்கமாட்டார், ஏனெனில் அவரது கட்டுரையின் தலைப்பே அதுதான். மேலும்,

    ஐம்பதெழுத்தே அனைத்து வேதங்களும்
    ஐம்பதெழுத்தே அனைத்து ஆகமங்களும்

    என்றும் திருமூலர் கூறியிருக்கிறார். ஐம்பது எழுத்து, ஐம்பத்தோர் எழுத்து என்று திருமூலர் கூறியுள்ளதை வடமொழியின் எழுத்துக்கள் என்று எடுத்துக்கொண்டால், வடமொழியில் இல்லாத, தமிழுக்கே சிறப்பாயுள்ள எழுத்துக்களான குறில் எ, குறில் ஒ, ழகரம், றகரம், னகரம் ஆகிய எழுத்துக்களைத் தவிர்த்துவிட்டுத்தான் திருமூலர் ஆகமம் இயற்றியிருப்பார். ஆனால் பாருங்கள், திருமந்திரத்தின் முதல் பாவாகிய

    ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
    நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
    சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே

    என்பதிலேயே இந்த ஐந்து எழுத்துக்களும் உள்ளன. முதல் மூன்று எழுத்துக்களுமே வடமொழியில் இல்லாத எழுத்துக்கள். எட்டு என்பதில் எகரமும், ஏழு என்பதில் ழகரமும் வருகின்றன. ஐம்பது, ஐம்பத்தொன்று என்று மொழியுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைத் திருமூலர் குறித்திருந்தால், நூற்கள் இயற்றப்பட்ட மொழிகளாகிய வடமொழி மற்றும் தமிழின் எழுத்துக்களின் எண்ணிக்கையை சேர்த்து ஐம்பத்தைந்து ஐம்பத்தாறு என்று குறிப்பிட்டிருப்பார்.

    மேற்குறித்த பா பாயிரத்தில் தானே வருகிறது, ஒன்பது தந்திரங்களில் அடங்கவில்லையே என்றால், முதல்தந்திரத்தின் முதல் பாவாகிய

    விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
    தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
    உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
    கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே

    என்பதிலும் அந்த ஐந்து எழுத்துக்களும் வருகின்றன.

    எனவே, ஐம்பது, ஐம்பத்தொன்று என்னும் எண்ணிக்கையைக் கொண்டு அவைகளை வடமொழி எழுத்துக்கள் என்று சொல்வது சரியல்ல.

    //////அறுப்பத்தறுவர் பெயர்களை இயலுமானால் பகிரவும். பெயரையாவது வாசித்து ஸ்மரிக்கும் பேறு பெறலாமே.//////

    https://www.shaivam.org/agadisci.htm

    /////////“”””” வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட
    மாத்ருகா புஷ்ப மாலை. “””””///////

    நீங்கள் கூறுவதைப் பார்த்தால், வடமொழியில் 51 எழுத்துக்களே இல்லை என்பது போல் தெரிகிறது. ஏனெனில், க்ஷ் என்பது இரு மெய்களின் கூட்டெழுத்தே ஒழிய, அடிப்படை மெய்யெழுத்தன்று.

  23. அன்பின் ஸ்ரீ முத்து ஐயா,

    திருச்சிற்றம்பலம்.

    பரிச்ரமப்பட்டு ஆழ்ந்த விளக்கங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள். அர்த்தபுஷ்டியுடன் கூடிய அருமையான விளக்கங்கள். உளமார்ந்த நன்றிகள். சைவம் தளத்தை அவ்வப்போது வாசிப்பேன். அறுபத்தறுவருடைய பட்டியல் என்றில்லாது. 30+56 = 86 . சிவாகமங்களைப் பெற்ற 86 மூர்த்திகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அனந்த மற்றும் ந்ருஸிம்ஹ என்ற பெயர்களும் பட்டியலில் காணக்கிட்டுகிறது.

    கார்த்திக் என்ற அன்பர் திருமுறைகளில் வேதத்தின் பெயர்களும் பகிரப்பட்டுள்ளன என்று கருத்துப் பகிர்ந்துள்ளார்.

    ரிக் வேதத்தைச் சொல்லும் பனுவலின் பகுதியை சுட்டவும் செய்திருக்கிறார்.

    சம்பந்தப்பெருமானின் பனுவல்களில் சாமவேதத்தைக் குறிப்பிட்டுச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.

    மனிதர்கள் தீவுகளாக வாழ்வதில்லை. உலகின் அனைத்து மொழிகளும் ஒன்றிலிருந்து ஒன்று கொண்டும் கொடுத்துமே இயங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? அறியேன்.

    தமிழ் முந்தியா சம்ஸ்க்ருதம் முந்தியா என்ற விவாதத்தில் சிறியேன் இறங்க விழையவில்லை. இரண்டும் ஹிந்துஸ்தானத்தின் மிகப் புராதனமான மொழிகள்………………. மிகப்பெரும் கருத்துக் களஞ்சியகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளவை என்பதில் சிறியேனுக்கு சம்சயமில்லை.

    கீழ்க்கண்ட பாவைப்பற்றித் தாங்கள் விளக்கமளிக்கவில்லை :-

    பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
    உற்றநல் வீரம் உயர்சிந்தும் வாதுளம்
    மற்றவ் (வி)யாமளம் ஆகுங் காலோத்தரம்
    துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே

    ஆகமங்களை திருமூலர் வரிசைப்படுத்தியிருக்கிறாரே. திருமூலர் இவற்றைப் பற்றி விவரித்திருக்கிறார் என்ற படிக்கு திருமூலர் திருமந்திரம் எழுதும் முன்பே இவை இருந்திருக்க வேண்டும் என்ற அனுமானம் எப்படித் தவறாகும். அதையொட்டி அந்த ஆகமங்களில் சொல்லப்பட்ட விஷயங்களின் சாரம்சம் (மும்?) (ஸ்ரீ ஷர்மா அவர்கள் விளக்கமளித்தபடிக்கு இதை மொழிபெயர்ப்பு என்று கருத வேண்டா) திருமந்திரத்தில் காணக்கிட்டுகிறது என்று அனுமானிப்பதில் தர்க்கப்பிழை ஏது?

    \\\\ நீங்கள் கூறுவதைப் பார்த்தால், வடமொழியில் 51 எழுத்துக்களே இல்லை என்பது போல் தெரிகிறது. ஏனெனில், க்ஷ் என்பது இரு மெய்களின் கூட்டெழுத்தே ஒழிய, அடிப்படை மெய்யெழுத்தன்று. \\\

    தமிழை சம்ஸ்க்ருதத்தின் இலக்கண அமைப்பு வாயிலாக பார்க்க முனைவதும் சம்ஸ்க்ருதத்தை தமிழ் இலக்கண வாயிலாக பார்க்க முனைதலும் முரண் என்று தோன்றுகிறது. மொழியியல் சிறியேன் அறியாத விஷயம். பின்னிட்டும் சங்கதம் தளத்தில் இது சம்பந்தமான வ்யாசத்தை கவனிக்கவும்.

    https://www.sangatham.com/learning/varnamala.html

    தாங்கள் அளித்த கருத்தாழமிக்க விளக்கங்களுக்கு மீண்டும் உளமார்ந்த நன்றிகள்.

    திருச்சிற்றம்பலம்
    சிவசிதம்பரம்.

  24. அன்பார்ந்த ஸ்ரீமான் *ஓர்* அரிசோனன்

    சாரமற்ற ஒரு கருத்தை தரவுகள் ஏதுமில்லாமல் உரக்கப்பேசுவதன் மூலம் நிர்த்தாரணம் செய்ய முடியும் என்பது அறிவு பூர்வமான சம்வாதத்துக்கு அழகாகாது.

    முதலில் உங்கள் வ்யாசம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை அது சம்பந்தப்படாத ஒரு இழையில் பகிர்வது சரியல்ல.

    சொல்ல வேண்டிய விஷயங்களை உங்கள் வ்யாசத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறேன்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  25. இந்த கட்டுரைக்கு ஆராய்ச்சி பூர்வமாக மறுமொழிகள் இட்டு வரும் முத்து, பெரியசாமி அடியான், க்ருஷ்ணகுமார், சிவஸ்ரீ. வீபூதிபூஷண், சோமசுந்தரம், முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள், சிறியேன் கார்த்திக், என்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்…

    எனது கருத்தையே கட்டுரையாகப் பதிவு செய்தேன்… சிலர் புரிதலில்லாமல் மறுமொழியிட்டிருக்கிறார்கள்… நிச்சயமாக, இது குறித்த பன்முக ஆய்வை நான் எதிர்க்க மாட்டேன்..

    ஆனால்,க்ருஷ்ணகுமார், , முனைவர் போன்ற பலரும் மிக ஆழமான கருத்துக்களை பதிந்திருக்கிறார்கள்…

    ஆனால், ஆச்சர்யம் என்ன என்றால் சைவத்திருநூலான… இறைநூலான… பிரதான நூலான ஆகமங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் இப்படி எல்லாம் எதிர்ப்பது பொருத்தமா என்று அறியேன்…

    அவ்வாறன்றி ஆகமத்தை இறைநூல் என்று கொண்டால்… ஆகம வழி நூல் திருமந்திரம் என்பது திருமூலருக்குப் பெருமை தானே…?

    //51 அக்ஷரங்கள் வடமொழிக்கு மட்டுமே உரியதல்ல. ‘உந்தி முதலாக முந்துவளி துரப்ப “மேல் எழூஉவதினால் எழுத்து. இது ஒலியையே குறிக்கும். எழுதுவதினால் எழுத்து எனப்படும் வரி வடிவைக் குறிப்பதன்று. இந்த 51 ஒலி எழுத்துக்களும் சைவசித்தாந்த சாத்திரங்களில் ஆறு அத்துவாக்களில் ஒன்றாகி வன்னங்களில் அடங்கும். இவ்வொலி எழுத்துக்கள் உலகமக்களின் அறிவு விளங்கிடும் அனைத்துமொழிக்கும் பொது. அதனால்தான் ‘அக்ஷரம்’ (அழியாதது’ ) எனப்படும். த்மிழில் எழுத்துக்கள் பதமாக அமையும் போது ககாராதி ஒலிகள் இயல்பாக ஒலித்தலினால் நெடுங்கணக்கில் அமைக்கத் தேவைப்படவில்லை.. க்கரம் சொல்லுக்கு முதலில் வரும் பொழுதும் இரட்டிக்கும் பொழுதும் வல்லொலியாக வரும், இரு உயிரெழுத்துக்களின் இடையிலும் மெல்லொற்றை அடுத்தும் வரும்பொழுது மென்மையாக ஒலிக்கும். இந்த இயல்பினை காக்கை, காகம், காங்கை ; பட்டம் , கபம், பம்பரம்என் உச்ச்சரித்து ஒலிவேறுபாட்டினை உணர்க. ஒலிவேறுபாட்டினால் பொருள் வேறுபாட்டினை உணர்த்த வேண்டிய காலத்தில் தமிழ்றிஞர்கள் கிரந்த எழுத்தைப் படைத்துப் பயன்படுத்திக் கொண்டனர் . மந்த்ரமாத்ருகா எனும் 51 அக்ஷரங்களும் அழியாத ஒலியெழுத்துக்களே ; அவை உலகமொழிகளுக்கெல்லாம் பொது வான ஒலிகளே; சுத்தமாயை நாதமாகவும் பின் விந்துவாகவும் பின் அக்ஷசரமாகவும் விரிவடைந்த் சுத்த மாயையின் விருத்தியே.//

    என்னே அற்புதமான ஆய்வு… இந்த ஆய்வுச் செய்திக்கு பணிவன்பான நன்றிகள்…

    ஆனால், இப்படி 51 ஒலிகள் பற்றி ஏன் பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசும் தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம் என்று எந்தத் தமிழிலக்கணமும் சொல்லவில்லை… ? என்பதே எனது வினாவாகும்…

  26. தொல்காப்ப்பியம் முதலிய இலக்கண நூல்கள் தமிழ் மொழியில் வழங்கும் எழுத்துக்களுக்கே இலக்கணம் கூறுவன. மொழியில் தேவைப்படும் எழுத்தொலிகளுக்குமட்டுமே இலக்கணம் கூறுகின்ரன. அவசியமிலாததற்கு இலக்கணம் கூறின் மிகைபடக்கூறல், அதிவியப்தி, அல்லதுவெற்றெனத் தொடுத்தல் எனௌம் குற்றத்தின்பாற்படும் என விடுத்தனர் போலும். தொல்காப்பியம் பிறப்பியலில் இரண்டு புறநடைச் சூத்திரங்கள் உள்ளன. ” எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து, சொல்லிய பள்ளி யெழுதரு வளியின், பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத், தகத்தெழு வளியிசை யரில்தப் நாடி,அளவிற்கோடல் அந்தணர் மறைத்தே” எனும் நூற்பாவில் உள்ளிருந்தெழும் எழுத்தொலிகளுக்கு மாத்திரை முதலிய இலக்கணம் கூறுவது அந்தணர் மறையில் காணப்படும் என்று உரத்துவிட்டு, அடுத்த நூற்பாவில், “அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும், மெய்தெரி வளியிசை அள்புநுவன் றிசினே” எனத் தான் மேற்கொண்ட எழுத்தொலிகளுக்கெ இலக்கணம் கூறுவது தம் கருத்தென ஆசிரியர் தொல்காப்பியர் வரையறுத்துக் கொண்டார். அதுவே பின்னை வந்த நூலாசிரியர்கட்கும் கருத்தாகும். திருமந்திரம் உலகநூலன்று. மெய்ஞ்ஞான் நூல். பரமாயையாகிய விந்தினின்றும் விரியும் மந்திரவொலிகளைக் கூறுகின்றது. மந்திரங்களுக்கு உச்சரிப்பு சுத்தம் இன்றியமையாதது.. இயற்றமிழில், “கதைவிடாத தோள்வீமன்” எனும் திருப்புகழ் தொடரில்,Gathai என்பதை kathai என உச்சரித்தல் நகைப்புக்கிடமாகுமே யன்றிப் பெரும் பிழை ஏற்படாது. ஆனால் மந்திரமொழியைப் பிழைபட உச்சரிப்பதால் கடும் விளைவுகளேற்படும். ஒலிப்பயிற்சி சுத்தத்திற்கன்றோ தொல்காப்பியர் “அந்தணர் மறைத்தே” என்றார். தொல்காப்பியர் நாடகவழக்கும் உலகவழக்கும் கலந்த புலனெறி வழக்குக்கு இலக்கணம் கூற வந்தார்; அவர்கூறவந்த செய்திக்கு முப்பது எழுத்தொலிகளே போதும். திருமூலர் கூரவந்த செய்திக்கு முப்பது எழித்தொலிகள் போதா; எனவே ஐம்பத்தொரு அட்சரங்களைக் கூறினார்.

  27. //நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
    அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ// தமிழ்த் திருமுறைகளில் தான் வேதாகமங்களை இறைவன் கல்லால் நிழலிலிருந்து நீழலிலிருந்து உரைத்தான் என்ற கருத்து கூறப்படுகின்றது. வேதங்கலில் எங்காவது சிவன் அல்லது இறைவன் வேதாகமங்களைக் கூறியருளினான் எனும் கருத்து வழங்கப்படுகின்றதா? ‘அபௌருஷேயம்’ எனவே வேத வல்லுநர்கள் கூறுகின்றனர். அறிந்தார் விளக்க வேண்டுகின்றேன்.

  28. //தொல்காப்பியர் நாடகவழக்கும் உலகவழக்கும் கலந்த புலனெறி வழக்குக்கு இலக்கணம் கூற வந்தார்; அவர்கூறவந்த செய்திக்கு முப்பது எழுத்தொலிகளே போதும். திருமூலர் கூரவந்த செய்திக்கு முப்பது எழித்தொலிகள் போதா; எனவே ஐம்பத்தொரு அட்சரங்களைக் கூறினார்.//

    அருமையான விளக்கம் முனைவர் ஐயா!

  29. மதிப்பிற்குரிய ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்களுக்கு

    ஐம்பத்தொன்றுக்கும் முப்பதுக்கும் உயர்வு தாழ்வு நவிலாது……….. சமன்வயமிக…………. சற்றுக்கூட………. மிகைப்படுத்தல் இல்லாமல் விளக்கமளித்தது அருமை.

    தாங்கள் பின்னால் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி மட்டிலும் சிறியேனுக்குத் தெரிந்த வரை பகிர்ந்திருக்கிறேன்.

    “”அபௌருஷேயம்’ எனவே வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்.””

    மறைகளுக்கு……. *அபௌருஷேயம்* ( எந்த ஒரு மனிதராலேயும் யாக்கப்படாமை) என்ற அம்சத்தினை விஸ்தாரமாக பூர்வ மீமாம்சா சாஸ்த்ரங்கள் விளக்குகின்றன என்று என் ஆசிரியர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.

    அதன் தொடர்ச்சியாக வேதத்தில் கூறப்படும் *பெயர்ச்சொற்கள்* எந்த ஒரு வரலாற்றில் இருந்த தனி மனிதரைப் பற்றியும் குறிப்பிடுவதில்லை என்றும் மாறாக சொல்ல வந்த விஷயத்தை விவரிக்குமுகமாக பகிரப்பட்ட…… ஒரு ஆக்யானத்தின் (நிகழ்வு – வ்ருத்தாந்தம்) — அங்கமாக மட்டிலும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. ( ஆகவே வேத மந்த்ரங்களுடைய ரிஷிகளை மந்த்ர கர்த்தாக்கள் (மந்த்ரத்தை படைத்தவர்) என்றில்லாது மந்த்ர த்ரஷ்டா (மந்த்ரங்களைக் கண்டறிந்தவர்கள்) என்றே சொல்லப்படுகிறார்கள். )

    குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று சூத்ரங்கள்

    आख्या प्रवचनात् ( 1-1-30)
    ஆக்2யா ப்ரவசனாத்
    The name is on account of explaining them.

    परन्तु श्रुतिसामान्यमात्रम् (1-1-31)
    பரந்து ச்ருதி ஸாமான்யமாத்ரம்
    But the vedic words are used in a general sense

    कृते वा विनियोगःस्यात्कर्ममणस्सम्बन्धात् (1-1-32)
    க்ருதே வா விநியோக3ஸ்யாத் கர்மணஸ்ஸம்பந்தாத்
    On the other hand the inducement is for the purpose of the action, becuase it is connected with the sacrifice.

    வேதாந்திகளோவெனில் வேதங்களை அனாதியான ஈச்வரனின் மூச்சுக்காற்றாகச் சொல்கின்றனர் என்றும் கேட்டிருக்கிறேன். இந்த விஷயம் ஆழமாக விஷயமறிந்தவர்களால் உபநிஷத் ப்ரமாணங்களில் இருந்து விளக்கப்படுதல் நலம்.

  30. முனைவர் ஐயா முத்துகுமாரசுவாமி வேதம் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு வேதங்களில் சான்று கேட்டுள்ளார். இது சைவ வேதாகம சிவாச்சாரியார்களின் கருத்து.
    வேதாகமங்களில் கரைகண்ட ஹரதத்த சிவாச்சாரியார் நூலின் தமிழ் உரையை சைவம்.ஆர்க் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
    https://www.shaivam.org/tamil/sta_sruti_sukti_mala.pdf
    அதில்
    “முழுமுதற் கடவுளால் இயற்றப்பட்டதால் வேதங்கள் ப்ரமாணங்களாகும்
    என்பதும். காளிதாஸன் க்ரந்தம் போல வேதமும் ஒரு மகாபுருஷன்செய்தது
    தான் என்பது அனுமானத்தால் சித்திக்கும் என்பது. தார்க்கிகர்கள் கொள்கை.
    புருஷஸூக்த மந்த்ரமும் (யக்ேஞச்வரனான) – பரேமச்வரனிடமிருந்து மூன்று
    ேவதங்களும் உண்டானதாகக் கூறுகிறது.
    ைஜமினி மகரிஷியும், அவைரப் பின் பற்றும் மீமாம்ஸகர்களும். ேவதங்கள்
    அெபளருேஷயமானதால், புருஷ ேதாஷம் ெகாஞ்சமும் சங்கிக்க இடமற்றது;
    ஆதலால் ப்ரமாணங்கள் என்கிறார்கள்.
    மூச்சு விடுவதுேபால் சிரமமில்லாமல் (அனாயஸமாகக்) கடவுளிடமிருந்து
    ேவதங்கள் ெவளிவந்தன. ஆதலால் ஈச்வரன் என்ற புருஷஸம்பந்தம் இருந்தாலும்
    மற்ற கிரந்தங்கைளப்ேபால், மானிட, க்ருதி யில்லாததால் ேதாஷமற்றைவ,
    ப்ரமாணங்களாகும் என்பது வ்யாஸர், அவைரப் பின்பற்றியவர்களுைடய
    ெகாள்ைகயாகும்.
    க்ரந்தகாரர் ஸ்ரீ ஹரதத்தாசார்யார் இந்த மூன்று ெகாள்ைககைளயும்
    அங்கீகரித்து விளக்கம் ெசய்திருக்கிறார்”.
    என்று சொல்லப்பட்டுள்ளது.

  31. thanay ariya thanakkoru kedilay
    thannai ariyamal thane keduginrar
    thannai ariyum arivai arinthabin
    thannai archikka thanirunthane

    thanni unarum Kulathhil erangamal adhan aalam kana muyarchithal immathiriyana santhegangal varum.Ethu kurithu Sri Kagapujandar badalkalil vilakkam ulladhu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *