மாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..

December 28, 2014
By

மாதொரு பாகன் நாவல் புத்தக எரிப்புக்கு கடும் கண்டனங்கள். எந்தப் புத்தகத்தையும் எரிப்பதோ, தடை செய்யக் கோருவதோ ஜனநாயக விரோதமான வழிமுறைகள். அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் புத்தகம் என்பதன் பௌதீக வடிவம் கூட ஏதோ ஒரு அறிவுக் கீற்றின் பிரதிநிதியாக, சரஸ்வதியின் உருவமாக உள்ளது என்று கருதுவது இந்துப் பண்பாடு. புத்தகத்தைக் காலால் தவறுதலாக மிதித்தால் கூட கண்ணில் ஒற்றிக்கொள்வது இந்துப் பழக்கம். திருச்செங்கோட்டில் கட்சிக் கொடிகள், பேனர்கள் எதையும் கட்டக் கூட நேரமில்லாமல் தங்கள் “எதிர்ப்பை” வெளிப்படுத்திய விடலைத்தனமான சாதி அமைப்பினர் மற்றும் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ், பாஜக காரர்கள் தவறுதலாக வழிநடத்தப் பட்டிருக்கிறார்கள்.

செய்தி:  மாதொருபாகன் புத்தகத்திற்கு எதிராக திருச்செங்கோட்டில் பாரதீய ஜனதா– ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்  போராட்டம். 

இந்த லோக்கல் சம்பவம் உள்ளூர் தமிழ் தினசரிகளில் வருவதற்கு முன்பே தி கிண்டு ஆங்கில நாளிதழில் பயங்கரமான பில்டப்புடன் வெளிவந்து “பற்றி எரிய” வைக்கப் படுகிறது. என்னமோ எழுத்தாளரும் பதிப்பாளரும் உயிருக்குப் பயந்து நடமாட வேண்டிய அளவுக்கு கருத்து சுதந்திரம் தாக்கப் படுகிறது, பாசிச ஆட்சி, பயங்கரவாத இந்துத்துவம் ஆ ஊ என்று கொக்கரிப்பதைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. இந்தப் புத்தகம் விற்கும் கடைகளில் எல்லாம் ஆர் எஸ் எஸ் ரவுடிகள் புகுந்து தாக்குவது போல இவர்களே கற்பனை செய்து கொண்டு (தமிழகம் முழுவதும் ஒரு 20 கடைகளில், பரணில் இருக்குமா இந்தப் புத்தகம்?) லட்சம் பிரதிகள் அச்சடிப்போம், விற்க வைப்போம் என்று அலறுவதைப் பார்த்தால்… ஏம்ப்பா, உங்களுக்கே இது ஓவராக தெரியவில்லையா?

பலரால் படிக்கப் படும், பார்க்கப் படும் வெகுஜன ஊடகங்களில் வரும் வக்கிரமான இந்துமத அவதூறுகளுக்கு எதிராகக் கூட பெரிய அளவில் போராட்டமோ எதிர்ப்போ செய்யாத தமிழக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக, பெருமாள் முருகன் 2010ல் எழுதிய, அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு வட்டார நாவலுக்கு எதிராக கிளர்ந்தெழுவது வினோதம் தான்.. அவர்களது இலக்கிய வாசிப்பின் “வீச்சு” சொல்லிக் கொள்ளும் மாதிரியானது அல்ல. இந்த எதிர்ப்பை உண்மையில் மோரூர் கண்டங்குல கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளையில் உள்ள சிலர் தான் ஆரம்பித்திருக்கிறார்கள். பிறகு இந்து இயக்கங்கள் கூடச் சேர்ந்திருக்கின்றன. அப்போது கூட ஒரு அப்பிராமண சாதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக “பார்ப்பனீய” ஆர் எஸ் எஸ்ஸுக்கு பாராட்டு கிடைக்காது. கருத்து சுதந்திர எதிரி என்ற மொத்து தான் கிடைக்கும்!

தனிப்பட்ட அளவில், மாதொரு பாகன் நாவலில் இந்து மத விரோதமாகவோ அவதூறாகவோ எதுவும் இல்லை என்பதே எனது கருத்து. சொல்லப் போனால், இந்துப் பண்பாட்டின் உள்ளுறையாக உள்ள சுதந்திரத்திற்கும், அதன் தகவமைப்புத் தன்மைக்கும் (adaptability) ஒரு சான்றாககக் கூட நாவலில் வரும் திருவிழாவைக் குறிப்பிடலாம். ஒருவகையில் ‘நியோக’ முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் மகாபாரத காலத்து தொல்மரபின் ஒரு நீண்டகாலத் தொடர்ச்சி என்று கூட அதைக் கூறலாம். ஆனால், இவையெல்லாம் அறிவுத் தளத்தில் நிகழ சாத்தியம் உள்ள வாசிப்புகள். சாதாரண திருச்செங்கோட்டுக் காரர்கள், அந்தக் கோயில் மீதும் தங்கள் சாதி சனங்களின் மரபுகளின் மீதும் தீவிர பிடிப்புள்ள சராசரியான மக்கள், இந்த நாவலை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தால், இத்தகைய கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் உண்மையில் கடும் அதிர்ச்சியடைவார்கள். தங்கள் சமூகத்தையும் கலாசாரத்தையும் நாவல் அவதூறு செய்கிறது, அசிங்கப் படுத்துகிறது என்று தான் கருதுவார்கள். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும், சாதி அடையாளங்களும் அதை ஒட்டிய பெருமித பிரகடனங்களும் நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் தமிழக சூழலில் அப்படி நடக்கா விட்டால் தான் ஆச்சரியம்.

மாதொரு பாகன் நாவல் குறித்து தோழி எஸ்.அனுக்ரஹா எழுதிய விமர்சனம்

மறு திசையில், இந்த நாவலில் வரும் ஒரு குறிப்பிட்ட தகவல், பலவாறாக திரிக்கப் பட்டு, பொதுப் படுத்தப் பட்டு, ஒரு ஆதாரபூர்வமான சமூக வரலாற்று தியரி போல முற்போக்கு முகாம்களாலும், இந்து விரோதிகளாலும் பயன்படுத்தப் படும். எல்லாக் கோயிலிலும் இப்படி “அசிங்கம்” நடந்தது, கோயில்கள் இத்தகைய “அசிங்கங்கள்” அரங்கேறும் கூடாரங்கள் என்று விக்டோரியத் தனமான கிறிஸ்தவ மதிப்பீடுகளை முன்வைத்து கீழ்த்தரமான பிரசாரங்கள் செய்யப் படும். தமிழகத்தின் மற்ற பல வட்டாரங்களில் உள்ள திருவிழாக்களையும் சடங்குகளையும் வக்கிரமான கண்ணோட்டத்துடன் விளக்குவதற்கான கருத்துச் சட்டகம் (template) ஏற்படுத்தப் படும். ஏற்கனவே அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. புத்தக எரிப்பாளர்களைக் கண்டிக்கும் அதே நேரத்தில், இதையும் நாம் மறந்து விடக் கூடாது. சராசரிகளின் முதிர்ச்சியின்மை அறியாமையால் வருவது. ஆனால், அறிவுக் கயவர்களின் திரிபுவாதம் திட்டமிட்டு உருவாக்கப் பட்டு பரப்பப் படுவது.

book-burning

தமிழகத்தில் புத்தக எரிப்பை ஒரு இயக்கமாகவே நீண்டகாலம் நடத்திய பெருமை திராவிட இயக்கங்களைச் சாரும். அண்ணா எழுதிய “தீ பரவட்டும்” என்ற புத்தகத்தின் முந்தைய பதிப்புகளில் அட்டையிலேயே கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திவ்யப் பிரபந்தம் ஆகிய புத்தகங்களைக் குவித்து அதன்மீது தீ எரிவதாக படம் போட்டிருக்கும். இப்போது டீலக்ஸ் பதிப்பில் ஒரே ஒரு புத்தகம் எரிவதாக படம் போட்டு பின்னணியில் பெயர்களை எழுதியிருக்கிறார்கள் ! எப்போதுமே அறிவுத் தேடலுக்கு எதிராக செயல்பட்டு வந்த இந்த இயக்கங்களின் ஆதரவாளர்கள் இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது நல்ல நகைச்சுவை.

அலெக்சாண்டிரியா முதல் நாலந்தா வரை உலகின் அறிவுப் பெட்டகங்களாக இருந்த நூலகங்கள் அனைத்தையும் ஜிகாத் புனிதப் போரில் எரித்து சாம்பலாக்கியது இஸ்லாம் என்ற மதம். உலகில் எங்கோ எவனோ முகமது நபி குறித்து எடுத்த வீடியோவை சாக்கிட்டு சென்னை நகரில் கலவரம் நிகழ்த்தியவர்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புகள். சில வருடங்கள் முன்பு ஔரங்கசீப் பற்றிய வரலாற்றுக் கண்காட்சி சென்னையில் காவல் துறையின் கண் முன்னால் இஸ்லாமிய ரவுடிகளால் குலைக்கப் பட்டது. இத்தனைக்கும் அந்தக் கண்காட்சி முகமதையோ, குரானையோ அல்லாவையோ குறித்தது அல்ல, கொடுங்கோலன் என்றூம் மதவெறியன் என்றும் எல்லா வரலாற்று ஆசிரியர்களும் கூறும் ஔரங்கசீப்பை பற்றியது.. இது எதையுமே கண்டிக்காத கருத்துச் சுதந்திர காவலர்கள் தான் இந்த விஷயத்தில் எரிமலை வெடிப்பதை போல பொங்குகிறார்கள். இதில் தெரிவது அறச்சீற்றம் அல்ல, போலி மதச்சார்பின்மை வாதத்தின் கோமணம் கிழிந்து தொங்குவதன் அவலட்சணம் தான்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

78 மறுமொழிகள் மாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..

 1. sridharan R on December 28, 2014 at 8:06 pm

  This may be another of those conspiracy of the ‘crusaders’

 2. gnanasambandan on December 28, 2014 at 10:28 pm

  முற்றிலும் உண்மை. நியோக முறை பற்றிய புரிதல் மகாபாரதம் படித்தவர்களுக்கே ஏற்றுக்கொள்ள சிரமம் . ஜெய மோகனின் மழைப்பாட்டில் பாண்டுவின் பாத்திரப் படைப்பை எவ்வளவு ஏற்கத்தக்கதாக ஆக்கித் தந்திருக்கிறார்
  அப்படி பட்ட கலை நேர்த்தி கை வராவிட்டால் படிப்பவர்களுக்கு ஆபாசமாகத்தான் படும்
  கதைக்களத் தேர்விலயே அரசியல் இருக்கிறது

 3. Geetha Sambasivam on December 29, 2014 at 7:27 am

  ஆக புத்தகத்துக்கு செலவில்லா விளம்பரம் கிடைத்திருக்கிறது அல்லவா? 🙂

 4. RV on December 29, 2014 at 8:40 am

  ஜடாயு,

  பல ஆனால்களை சேர்த்துக் கொண்டாலும் புத்தகத்தை எதிர்ப்பது தவறு என்று சொல்லி இருக்கிறீர்கள். குறிப்பாக // அப்பிராமண சாதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக “பார்ப்பனீய” ஆர் எஸ் எஸ்ஸுக்கு பாராட்டு கிடைக்காது // புன்முறுவலை வரவழைத்தது.

  உங்களிடமிருந்து தவறு என்று ஒரு வார்த்தையாவது வரும் என்று எதிர்பார்த்தேன், நாளையும் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

 5. paandiyan on December 29, 2014 at 6:24 pm

  இதை இப்படியா விட்டு விட்டால் கு துடைக்க கூட தமிழன் பயன்படுத்தமாட்டான். ஏன்ணோவோ இங்கு இலக்கியம் செழித்து வளர்வது போல. டிஸ்‌கௌன்ட் ஆஃபர் , 50% என்று முன் வெளியிடுக்கு முன் கூவி கூவினால் கூட தேறுமா என்று தெரியவில்லை (என்ன சொல்ல வருகின்றீன்!?)

  ஆனால் பாருங்கள், BJP முட்டாள் , அனைவரும் தற்கூறி என்று சொல்பவர் கூட , ஒரு நப்பாசை — புக் ஓகோ என்று விர்க்குமாம்;
  http://www.nisaptham.com/2014/12/blog-post_27.html
  இதனால், BJP ஒன்றும் இல்லை, எல்லாம் தற்கூறி என்றால், இந்த போராட்டம் மட்டும் எப்படி புக் விற்பனை தூக்கி நிறுத்தும்?

 6. க்ருஷ்ணகுமார் on December 29, 2014 at 10:43 pm

  அவல எழுத்தாளர் எழுதியுள்ள அவலப்புஸ்தகத்தில் என்ன எழுதியிருக்கிறது?

  ஏன் திருச்செங்கோட்டுக்காரர்கள் பொங்கி எழுந்தார்கள் என்று அறிய விழைபவர்கள் கீழ்க்கண்ட சுட்டியில் இருப்பதை வாசிக்கலாம்.

  http://www.luckylookonline.com/2014/12/blog-post_29.html

  ஒரு ஊர் சரித்ரத்தை கீழ்த்தரமாக சித்தரிக்க முனைவது………… ஒரு ஊர்ப்பெண்டிரை தரம் கெட்ட விதத்தில் இழிவு செய்து அதை சரித்ரம் போலப் பகிருவது………..தரம் தாழ்ந்த செயல்.

 7. சாய் on December 30, 2014 at 9:57 am

  பிரிவினை சக்திகள் இப்போது மற்ற சமூகங்களையும் குறி வைக்கத் தொடங்கி விட்டார்கள் எனத் தெரிகிறது. பிராமண சமூகத்தை மட்டும் தாக்கியவர்கள் தற்போது பொதுவில் தங்கள் பாரம்பரியத்தை இறுகப் பற்றியபடி இருக்கும் குறிப்பிட்ட வேறு சில சமூகங்களையும் தாக்குகிறார்கள்.

  சில சமீபத்திய திரைப்படங்களில் புரட்டு நடிகர் விவேக் சொல்வதை கவனியுங்கள். மற்ற ” நகைச்சுவை” நடிகர்களும் ஒழுங்கல்ல.

  கொங்கு நாட்டின் மரபு பற்று மிக்க , மத மாற்றத்திற்கு எதிராக உள்ள ஹிந்துக்களை சில காலமாகவே தாக்கி வருகிறார்கள். பொன்னர் -சங்கர் படம் சென்ற ஆட்சியின் ஒரு உதாரணம்.

  யாரையோ சொல்கிறார்கள், நம்மை அல்ல என்ற எண்ணம் நம் யாருக்கும் கூடாது.
  விட்டால் தானாக அடங்கி விடும் என்றும் சொல்ல முடியாது, தோமையார் புரளி போல பின் ஒரு நாள் மெதுவாக அதிகாரப் பூர்வப் படுத்தி விடுவார்கள்.

  புத்தக எரிப்பு திராவிட மாயை வழக்கம். அது நமக்கு வேண்டாம்.
  வழக்கு பதியப் படுவது , பின்னர் ஜெயித்த பின் அதை மக்களுக்கு பெரிய அளவில் தெரியப் படுத்துவது இதைத் தான் ஹிந்துக் கட்சிகளிடம் எதிர்பார்க்கிறோம்.

  இதற்கு இணையத்தில் கையெழுத்து வேட்டை தவிர இணையம் மூலம் பொது மக்களிடம் பணம் வசூலிக்கவும் செய்யலாம். ஒரு சினிமா பார்க்கும் செலவு ஒருவர் கொடுத்தால் எதிர் வரும் காலத்திற்கென சில விஷயங்களை நிலை நாட்ட முடியும். எதிரி குறைக்கும் போதே அடக்கி விட்டால் நாம் கடி படும் வரை காத்திருக்கத் தேவையில்லை.

  சாய்

 8. J Venkat on December 30, 2014 at 10:30 am

  எப்போதுமே அறிவுத் தேடலுக்கு எதிராக செயல்பட்டு வந்த இந்த இயக்கங்களின் ஆதரவாளர்கள் இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது நல்ல நகைச்சுவை.

 9. paandiyan on December 31, 2014 at 9:05 am

  எப்போதுமே அறிவுத் தேடலுக்கு எதிராக செயல்பட்டு வந்த இந்த இயக்கங்களின் ஆதரவாளர்கள் இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது நல்ல நகைச்சுவை.

  GOOD ONE..

 10. B S on January 1, 2015 at 11:50 am

  //ஒரு ஊர் சரித்ரத்தை கீழ்த்தரமாக சித்தரிக்க முனைவது………… ஒரு ஊர்ப்பெண்டிரை தரம் கெட்ட விதத்தில் இழிவு செய்து அதை சரித்ரம் போலப் பகிருவது………..தரம் தாழ்ந்த செயல்.//

  நாவல் எழுதுவது தாழ்ந்த அல்லது உயர்ந்த செயல் என்ற கட்டுக்குள் வராது. ஒரு கற்பனை புதினம் எழுதும் படைப்பாளி வரலாற்றைத் தனக்கு வசதியாகச் சிதைக்கலாம். பாணடியனின் தலைநகரம் சென்னை என்றும் எழுதலாம். ஏனென்றால் அது வரலாறு அல்ல! புதினம். கற்பனைப் படைப்பு. பிடித்தவர்கள் படிக்கிறார்கள். பிடிக்காதவர்களை எவருமே கட்டாயப்படுத்தவில்லை.

  லக்கி லுக்கில் ஒருவர் போட்ட பின்னூட்டம் இங்கும் பொருந்தும்:

  //அவர் எழுதியதோடு நீங்கள் உடன்படலாம் அல்லது முரண்படலாம். மாற்றுக் கருத்தை முன்வைத்து ஒரு புத்தகமே எழுதலாம். அவர் எழுதிய புத்தகத்தை தடை செய்யக்கூடாது. அவ்வளவுதான். ஒருவரது கருத்து சுதந்திரத்தை வலியுறுத்த நீங்கள் அவர் கருத்தோடு ஒத்தப்போக வேண்டி அவசியம் இல்லை.//

 11. paandiyan on January 1, 2015 at 2:37 pm

  //பாணடியனின் தலைநகரம் சென்னை என்றும் எழுதலாம். ஏனென்றால் அது வரலாறு அல்ல//

  அப்படியா. இது ஒரு கற்பனை இதற்க்கு எதற்க்கு ஆதாரம் என்று எழுதியவர் ஏன் சொல்லவில்லை? என்னிடன் ஆதாரம் இல்லை என்று என் அவர் மழுப்ப வேண்டும். அதுவும் நீங்கள் சொன்ன site இல் பதிவு ஆகி இருக்கின்றதே.

 12. C.N.Muthukumaraswamy on January 1, 2015 at 9:27 pm

  இதனைக் கற்பனை என்று எழுதியவர் சொல்லவில்லை. திருச்செங்கோட்டில் இருந்த வழக்கத்தை ஆவணம் செய்ததாகத்தான் அவரும் அவருக்கு வக்காலத்து வாங்கியவரும் கூறிவந்தனர். சர்ச்சைக்குரிய வழக்கம் திருச்செங்கோட்டில் இருந்ததா/ இருந்தது எந்த காலகட்டத்தில்? நல்ல கலைஞன் அந்த காலகட்டத்தை படைத்துக் காட்டியே இன்று இல்லாத வழக்கத்தை எழுதுவான். இவர் இக்கதையில் சர்ச்சைக்குரிய வழக்கம் இன்றும் நடைமுறையில் இருப்பது போன்றபிரமையை உருவாக்கியுள்ளார். அதுவே எதிர்ப்பினை உருவக்கியுள்ளது. இருப்பினும் இந்தப் புத்தகத்தைத் தடை செய்யக் கேட்பதோ, எரிப்பதோ வேண்டாத செயல். இது எழுத்தாளனின் ஆளுமையைக் காட்டுகின்றதே ஒழிய ஊர் மக்களின் பண்பாட்டையோ, திருச்செங்கோட்டு மாதொருபாகரைக் வழிபடுவோரின் பண்பாட்டையோ எந்தவிதத்திலும் இழிவுபடுத்தாது.
  .

 13. BS on January 1, 2015 at 11:17 pm

  அவர் அப்படி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இது ஒரு கறபனைப்படைப்பு. எவரையும் குறிப்பிடுவன அல்ல என்று போட்டுவிட்டால் போச்சு. சமூக நாவலோ, அல்லது வரலாற்று நாவலோ, இப்ப அப்படி போடுறதுதான் ஃபேஷன். டி வி சீரியல்லே போடுறாங்க. முழுக்க முழுக்க கற்பனைன்னு நல்லாத் தெரியும் ஆனா எவனாவது தியேட்டரைக்கொழுத்தவருவான்னு ஒரு முன்னேற்பாடுதான். அப்படிக்கொழத்தவர்வன்ட, ஏப்பா அவர்தான் முதல்லேயே கற்பனைன்னு போட்டப்புறம் ஏன் தகராறு பண்றேன்னு கேட்பாங்க.

  பெருமாள் முருகன் தான் ஒரு கற்பனை எழுத்தாள்ர் மட்டுமே. வரலாற்றாசிரியர் அல்ல. என் எழுத்து உங்களுக்கில்ல. நீங்க போய் வரலாறுகளைப்படித்துத் தகராறு அதை எழுதியவரிடம் பண்ணவும். என் எழுத்தை எவர் புதினம் என்று விமர்சிக்கிறாரோ அவரிடம்தான் என் பேச்சு என்று சொல்லியிருக்கவேண்டும். உயிர்ப்பயம்தான் காரணம். இப்படியெல்லாம் எல்லாரையும் மிரட்டிவிட்ட்டால், எவனும் நாவல் எழுதமாட்டான்.

 14. BS on January 1, 2015 at 11:26 pm

  /இந்த போராட்டம் மட்டும் எப்படி புக் விற்பனை தூக்கி நிறுத்தும்?
  //

  இந்த போராட்டம் மட்டும் நடந்திராவிட்டால், இப்படியொரு நாவல், பெருமாள் முருகன் என்ற ஆசிரியர் இருக்கிறார் என்று என்னைப்போன்ற பலருக்கும் தெரிந்திருக்காது. நான் இலக்கியம் படிக்கும் வழக்கமில்லாதவன். என்னதான் அதில் இருக்கிறது என்று ஆன்லைன் ஆர்டரில் வாங்கிவிட்டேன். இலக்கியமே படிக்காதவர் ஒரு நாவலை வாங்கினால் பிச்சுகிட்டுப்போகத்தான் செய்யும். யார் காரணம்?

 15. BS on January 1, 2015 at 11:32 pm

  பாண்டியர்களின் தலைநகரம் சென்னை என்று எழுதலாம். நாவலுக்கு ஆதாரம் தேவையில்லை. ஆசிரியர் விரும்பினால் கொடுக்கலாம். பாண்டியர்களின் தலைநகரம் மதுரையே; இப்படி சென்னை என்று எழுதிகிறீர்களே என்று கேட்டால், அப்படியொரு கற்பனை பண்ணிப்பார்த்தாலென்ன என்று எனக்குத் தோன்றி அதை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதினாலென்ன என்று எழுதினேன். அருமையாக வந்திருக்கிறது. படிச்சுப்பார்த்துட்டு நல்லாயிருக்கா என்று சொல்லுங்க. என்றால் என்ன செய்வீர்கள்? ஆதாரங்கள் வரலாற்று நூல்களுக்கு மட்டுமே. வரலாற்றுப்புதினங்களுக்கல்ல. ஏனென்றால், கற்பனைக்கு எல்லையில்லை.

 16. BS on January 1, 2015 at 11:38 pm

  தற்சமயம் ஒரு மலையாளத் திரைப்படம் நன்கு ஓடுகிறது. அதன் விசேசம். கதாநாயகன் பெண்ணுடை நடை பாவனைகளோடும் கதாநாயகி ஆணுடைய நடை உடை பாவனைகளோடும் கதை. படத்தின் வெற்றிக்கு முதற்காரணம். இந்த புதுக்கற்ப்னையே. அந்த இயக்குனரிடமோ, கதாசிரியரிடமோ, இப்படி மாற்றலாமா? இப்படி நடக்குமா? என்றால், நீங்களெல்லாம் ஏன் சினிமா பார்க்க வரீங்க! ஹூமன் அனடாமி போய்ப்படிங்க. நீங்க நினைக்கிறமாதிரி ஆசைப்படுறமாதிரி எக்ஸாட்டா இருக்கும் என்பார் சரிதானே பாண்டியன்?

 17. BS on January 1, 2015 at 11:43 pm

  சாய் சொல்றத கணக்கிலெடுத்தால், இந்துத்வாக்காரர்களைத்தவிர மத்தாவளெல்லாம் இலக்கியம் எழுதக்கூடாது.

 18. Siva Kumar on January 2, 2015 at 7:40 am

  மாதொருபாகன் குறித்த உண்மைகளை அறிய நினைப்போர் இந்த சுட்டியில் இருக்கும் விஷயங்களைப் படிக்கவும். மீடியாக்களில் பொய் செய்திகளே பரப்பப் பட்டுள்ளது.
  http://www.karikkuruvi.com/2014/12/blog-post_29.html

  பெருமாள் முருகன் பற்றிய ஒரு கட்டுரை,
  http://www.karikkuruvi.com/2014/06/blog-post.html

 19. Siva Kumar on January 2, 2015 at 7:42 am

  திருசெங்கோட்டை சேர்ந்தவன் என்ற முறையிலும், கன்ன குலத்தை சார்ந்தவன் என்ற முறையிலும், எங்கள் பகுதியில் என்ன நடந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ( நீங்கள் திறந்த மனதுடம் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில்)

  * மோரூர் கன்ன குல கோயில் நிர்வாகத்தினரிடம் இந்த புத்தகத்தை பற்றிய புகார் அவர்கள் குல மக்கள் ஒருவரின் மூலம் வந்துள்ளது. அதன் பிறகுதான் இது சம்பந்தமாக தங்கள் குல மக்களின் கூட்டத்தை கூட்டி, முறையான புகார் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தனர். திருச்செங்கோட்டு பகுதியை சேர்ந்த மற்ற சமூகத்தினர்களும் இதைப்பற்றி கேள்விப்பட்டு கோபமடைந்து, தஙக்ள் எதிர்ப்பை காட்ட விரும்பினர். இதன்மூலம் அனைத்து சமூக போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் , ஹிந்து முன்னனி, பா.ஜ.க வோ முதலில் தலையிடவில்லை. போராட்டத்தின் போது திருச்செங்கோட்டு பக்தர்கள் அமைப்பு சார்பாக அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் ஊடகத்தில் இது ஹிந்துத்துவ அமைப்பின் எதிர்ப்பாக காட்டியது எல்லாருக்கும் ஆச்சர்யம்தான்.

  * இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் “சாமி கொடுத்த குழந்தை” போன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற அத்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.

  * திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா?

  *நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா? இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்?

  * மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.

  புனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது.

 20. Sevvel on January 2, 2015 at 9:21 am

  திருச்செங்கோட்டில் பல நூற்றாண்டுகளாக இந்துக்களின் உயிரிலும் உணர்விலும் கலந்த ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரையும், கோயிலுக்கு வரும் அடியார்களையும், பெண்களையும், பண்டிகை மரபுகளையும் மிக கேவலமாக சித்தரித்து பெருமாள் முருகன் என்ற முற்போக்கு கம்யூனிச கைத்தடி (உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு என்று பொய்யைப் புளுகி) நாவல் எழுதினார்.

  ஹிந்துக்களுக்காக, என்று கூறிக்கொள்ளும் ஹிந்துத்வ சித்தாந்தம், இயக்கங்கள், கட்சிகள், எழுத்தாளர்கள், மீடியாக்கள் அனைவரும்தான் முதலில் இந்த சர்ச்சையை எதிர்த்து போராடியிருக்க வேண்டும். ஆனால், அதை தவறியது மட்டுமின்றி எதிர்த்த திருசெங்கோட்டு மக்களையும், சில இயக்கங்களையும் கண்டித்தும் கேவலப்படுத்தியும் ஹிந்துத்த்வர்களே எழுதிகிறார்கள். ஹிந்து தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள். பெருமாள் முருகனுக்கு சாமரம் வீசி பாராட்டு விழா எடுக்காததுதான் குறை.

  மாதொருபாகன் திருசெங்கோட்டு சம்பவம் பற்றி அறிய:
  http://www.karikkuruvi.com/2014/12/blog-post_29.html

  இந்த சம்பவம் மூலம், ஹிந்துத்வதுக்கும், பாரதத்தின் கிராம மக்களுக்கும் எவ்வளாவு இடைவெளி (மட்டுமல்ல, துரோகிகள்) என்பதை உணர்ந்துவிட்டோம். எங்கள் தெய்வத்தையும், பெண்களையும், மரபுகளையும் சேறு வாரி தூற்றுபவர்களையும் சகித்துக் கொண்டுதான் இந்த வெக்கங்கெட்ட துரோகிகள் பின்னால் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மதம் – அரசியல் பிழைப்பு, இவை அனைத்தைவிட தர்மமே பிரதானம். இதுவரை திருச்செங்கோட்டில் நாங்கள் செய்த எந்த வேலைக்கும் எந்த ஒரு ஹிந்துத்வ இயக்கங்களும் ஆள் பலம-அரசியல் பலம-சட்ட உதவி-பொருளாதார உதவி-மீடியா உதவி என்று எதுவும் செய்ததில்லை. நாங்க உயிரை பணயம் வைத்து செய்யும் வேலைகளின் அரசியல் பலனை அனுபவிக்க ஹிந்துத்வம் தவறவில்லை. எங்களை ரவுண்டு கட்டி வெட்ட வந்து நாளிதழ்களில் செய்தி வந்த போதும் எந்த ஹிந்து தலைவர்களும் ஏன் என்று கூட கேட்க வில்லை. இனியும் இந்த போலி இயக்கங்களை நம்பிக்கொண்டு இருக்க வேண்டுமா என்று பிற வட்டாரத்தில் வேலை செய்யும் உணர்வுள்ள ஹிந்துக்கள் சிந்திக்கவும்.. மனம் நொந்த நிலையில் எழுதிகிறேன் இதை..

 21. paandiyan on January 2, 2015 at 9:41 am

  // நான் இலக்கியம் படிக்கும் வழக்கமில்லாதவன். என்னதான் அதில் இருக்கிறது என்று ஆன்லைன் ஆர்டரில் வாங்கிவிட்டேன். //
  appadiya? inimea wait for PDF. free ya padikkalam. over soodu udampukku aggathu.

 22. paandiyan on January 2, 2015 at 10:24 am
 23. paandiyan on January 2, 2015 at 1:36 pm

  //ஹிந்துக்களுக்காக, என்று கூறிக்கொள்ளும் ஹிந்துத்வ சித்தாந்தம், இயக்கங்கள், கட்சிகள், எழுத்தாளர்கள், மீடியாக்கள் அனைவரும்தான் முதலில் இந்த சர்ச்சையை எதிர்த்து போராடியிருக்க வேண்டும். ஆனால், அதை தவறியது மட்டுமின்றி எதிர்த்த திருசெங்கோட்டு மக்களையும், சில இயக்கங்களையும் கண்டித்தும் கேவலப்படுத்தியும் ஹிந்துத்த்வர்களே எழுதிகிறார்கள். //

  Yes. True. now this is a new trend. everybody wants to play safely

 24. B S on January 2, 2015 at 2:20 pm

  //appadiya? inimea wait for PDF. free ya padikkalam. over soodu udampukku aggathu.
  //

  ஓவர் சூடு உடம்புக்கு ஆகாது சரிதான். அச்சூட்டைக் கிளப்பி விட்டது யார் யார்? பி டி எஃப் பில் படிக்கலாம்தான். அதுவருமுன்னேயே ஆன்லைனில் ஆர்டர் போட்டு வாங்கிப் படிக்கவேண்டிய ஆர்வத்தை ஊட்டி நாவலை பிரபலடுத்தியது உங்களைப்போல எதிர்ப்பாளர்கள்தானே?

 25. B S on January 2, 2015 at 2:38 pm

  நாவல் வெளியிடப்பட்ட ஆண்டோ 2012. எவ்வளவு பேரோ படித்திருப்பார்கள். டிஜிட்டலிலும் பாதுக்காக்கப்பட்டிருக்கும். வெளிநாட்டிலுள்ளவர்கள் செய்வார்கள். இப்போது வெளிவந்தவுடன் எதிர்ப்பு, நாவல் பொதுயிடத்தில் எரிப்பு, ஆர் எஸ் எஸ், பிஜேபிக்காரகள் நுழைவு, ஆசிரியருக்குக் கொலை மிரட்டல் – எல்லாமே மாதொருபாகனை பிரபலடுத்தி விட்டன. காரியம் முடிஞ்சு போச்சு. நானும் படிச்சிண்டிருக்கேன். அதில் கூறப்பட்ட வரலாறு புனைவா, உண்மையா, ஒரு குறிப்பிட்ட மக்களைப்பாதிக்கிறதா என்று ஆராய்பவர்கள் நாவல் படிப்பவர்கள் கிடையாது. அப்படி ஆராய்ந்து படித்தால் இலக்கிய இன்பம் கிடைக்காது. இலக்கியம் இலக்கியமாகத்தான் படிக்கப்படும். மற்றவர்கள்தான் எல்லாவற்றிலும் ஏதாவது அரசியல் பண்ண விசயம் இருக்கிறதா? என்று தேடுபவர்கள். அந்த நாவலைப்படித்தவர்கள் உங்களைப்பற்றி மட்டமாக நினைப்பார்கள் என்றால், அப்படி நினைப்பவர்கள் நாவலைப்படிக்காமலும் சும்மா பேச்சுவழக்கில் மிதந்து வருபவைகளையும் நம்புபவர்கள்தான். அவர்களை நீங்கள் திருத்தவே முடியாது. சட்டம்போட்டும் கொலை மிரட்டல் விடுத்தும் ஒருவர் என்ன தன் மனதுக்குள் நினைப்பில் வைத்திருப்பதை மாற்ற முடியுமா செவ்வேல், சிவக்குமார்?

  உங்கள் ஜாதி, உங்கள் மக்கள் என்றதும் கொதித்து விட்டீர்கள். இதே கொதிப்பு மற்ற இன மக்களும் எழுத்தாளர்களாலும் அரசியல் வாதிகளாலும் அசிங்கப்படுத்தப்பட்டு மற்ற மக்களும் நம்பி இன்ன ஜாதிப்பெண்களென்றால் இப்படித்தான் என மக்கள் நம்பும்படி ஆகிவிட்டது. இருந்ததா உங்களுக்கு?

  சினிமாவுக்குப்போகும் சித்தாளுவைப்படித்தபின்னர்தான் நான் தலித்துப்பெண்களைக் கேவலமாகப் பார்க்க ஆரம்பித்தேன். நீங்களும் படியுங்கோ. ஆனால் அவர்கள் சார்பாக அந்த எழுத்தாளரைத் தட்டிக்கேட்பார் யாருமில்லை. உங்களுக்கு பிஜேபி ஆர் எஸ் எஸ் ஆதரவுக்கரம். அவர்களுக்கு யார் நீட்டினார்கள்? வாரப்பத்திரிக்கைக்களுக்கு இந்த நாவல் அனுப்பப்பட்ட போது நிராகரிக்கப்பட்டது: காரணம் தலித்துகளை அசிங்கமாக்கியதால் அன்று. ஒரு பிரபல நடிகரை – முதல்வரும் கூட – அசிங்கமாக விமர்சனம் பண்ணியிருந்த்தால் மட்டுமே. பின்னர் தானே தன் செலவில் வெளியிட்டேன் என்று எழுதியிருக்கிறார் முன்னுரையில்.

 26. B S on January 2, 2015 at 2:48 pm

  Thanks for the jeyamohan link you gave, Pandian.

 27. paandiyan on January 2, 2015 at 6:01 pm

  /ஓவர் சூடு உடம்புக்கு ஆகாது சரிதான். அச்சூட்டைக் கிளப்பி விட்டது யார் யார்? பி டி எஃப் பில் படிக்கலாம்தான். அதுவருமுன்னேயே ஆன்லைனில் ஆர்டர் போட்டு வாங்கிப் படிக்கவேண்டிய ஆர்வத்தை ஊட்டி நாவலை பிரபலடுத்தியது உங்களைப்போல எதிர்ப்பாளர்கள்தானே?//

  ana naan padikalaya. only extract from facebook. and this article is also too early stage. now truth is coming one by one. Jayamogan is also react very bad yesterday without reading much information’s. I would say Protest is very much right and perfect one. they have freedom to do so.

 28. க்ருஷ்ணகுமார் on January 2, 2015 at 6:10 pm

  அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

  \\ அவர்களை நீங்கள் திருத்தவே முடியாது. சட்டம்போட்டும் கொலை மிரட்டல் விடுத்தும் ஒருவர் என்ன தன் மனதுக்குள் நினைப்பில் வைத்திருப்பதை மாற்ற முடியுமா செவ்வேல், சிவக்குமார்? உங்கள் ஜாதி, உங்கள் மக்கள் என்றதும் கொதித்து விட்டீர்கள். இதே கொதிப்பு மற்ற இன மக்களும் எழுத்தாளர்களாலும் அரசியல் வாதிகளாலும் அசிங்கப்படுத்தப்பட்டு மற்ற மக்களும் நம்பி இன்ன ஜாதிப்பெண்களென்றால் இப்படித்தான் என மக்கள் நம்பும்படி ஆகிவிட்டது. இருந்ததா உங்களுக்கு?சினிமாவுக்குப்போகும் சித்தாளுவைப்படித்தபின்னர்தான் நான் தலித்துப்பெண்களைக் கேவலமாகப் பார்க்க ஆரம்பித்தேன். நீங்களும் படியுங்கோ. \\

  அப்படியா…………

  ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ………….. ஜோ அமலன் ஆகி……………. பின்னர் ஜோ…………… ஆகி………பின்னர் Tamil ஆகி…………….

  அப்பால…………. பால சுந்தரம் கிருஷ்ணா ஆகி………….. சைடுக்கா ………….. BALA SUNDARAM KRISHNAA ஆகி………….. அப்பால பாலா ஆகி…………. இப்போது B S …………..

  ரெவ ரெண்டு வாள் பொளந்து கட்றேள் போங்கோ !!!!!!!!!!! எல்லாம் அந்த சில்சாமுக்கும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவுக்குமே வெளிச்சம் போங்கோ!!!!!!!! எல்லாம் பரிசுத்த ஆவி படுத்தற பாடு போல இருக்கு!!!!!!!

  சந்தடி சாக்குல எங்கேயாவது சிரி வைணவம் என்று கெளம்பாம இருந்தா சரி……………..

 29. paandiyan on January 2, 2015 at 8:57 pm

  //இந்த போராட்டம் மட்டும் நடந்திராவிட்டால், இப்படியொரு நாவல், பெருமாள் முருகன் என்ற ஆசிரியர் இருக்கிறார் என்று என்னைப்போன்ற பலருக்கும் தெரிந்திருக்காது//

  பலரின் முகத்திரை கிழிந்து இருக்கின்றது. பலரின் ஒர்ஜிநல் முகம் வெளியில் வந்து இருக்கின்றது. பலர் பல நல்ல ஆதரவுகளை அவசர குடுக்கையால் அறை குறை அறிவால் கெடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதற்க்கு அந்த ஓகோ விற்பனை ஒன்றும் பெறிய விசயமில்லை. இது எல்லாம் போராட்டகார்களுக்கு மிக பெறிய வெர்றி எனலாம்.

 30. சாய் on January 7, 2015 at 1:53 pm

  புனைவு அதாவது கதை பற்றி நமக்கு கிளாஸ் எடுப்போர் படிக்கும்படியான புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்கள் எழுத்தை படித்ததில்லை போலும்.
  தாங்கள் கண்ட கேட்ட விஷயங்களை கற்பனயில் குழைத்து எழுதுவோர் அது கதை என்று தெளிவாக குறிபிடுவதோடு ஊர்ப் பெயர்களை கற்பனைப் பெயராக்குவர் .

  வேண்டுமென்றே படிப்பவர்களை குழப்ப, அல்லது . கலவரத்தை தூண்டி விட,எழுதுவோர் இது போன்ற புத்தகங்களை எழுதுகிறார்கள்.

  மேலும் இங்கே சிலர் சில காலமாக அடிக்கடி குறிப்பிடும் நியோகம் எனப்படும் முறை ஏதோ பரவலாக வழக்கத்தில் இருந்தது போலவும், பொது புத்தியில் உறைந்த விஷயம் போலவும் ஒரு மாயையை உருவாக்க முயல்கிறார்கள் சில காலமாகவே…

  மகாபாரதம் தவிர வேறெந்த மக்களை அடைந்த காவியங்களிலும் இதை பற்றி பேச்சை காணோம். பாரதத்திலேயே ” exception, not a rule”- என்பது போன்ற விஷயங்கள் நிறைய உள்ளன. சாதாரண மக்கள் அதன் தத்துவத்தை புரிந்து கொண்டார்களே அன்றி பல கணவன்-ஒரு மனைவி, முனிவர் மூலம் குழந்தை பெறுதல் இவற்றை வாழ்க்கையில் கடைபிடிக்க முயிற்சிகக்கூட இல்லை.

  அன்றைய மற்றும் இன்றைய சமூகத்தில் ஜாதி வித்தியாசமின்றி குழந்தை வரம் வேண்டும்தம்பதியினர்க்கு இரண்டு வழிகள் உண்டு .

  ஒன்று யாகம், பூஜை, விரத வழிபாடுகள் .

  இரண்டு ச்வீகாரம் எடுத்து கொள்ளுதல் . சுவீகார புதல்வனுக்கு சொந்த புதல்வனுக்கு உள்ள அத்தனை உரிமை/கடமைகளும் உண்டு. சாஸ்திரம் அனுமதிக்கும் , வெகுவாக வழக்கத்தில் உள்ள வழி இது.

  இது தான் பொது புத்தியில் , சமூக பிரக்ஞையில் உள்ளவை.வேறெதுவும் அல்ல.

  ‘ நியோகம்” என்று திடீரென்று எழுப்பபப்டும் விஷயம் வழக்கம் போல் ‘ பேய் வழிபாடு செய்யும்” மற்றும் ” பெற்ற குழந்தைகளை நதியில் போடும்”, ” திருத்தப் பட வேண்டிய ஹிந்து” செய்வதாக ” புனைவு தான் “என்ற பெயரில் சிலர் கதை./புனைவு விடுவது .

  எதிர்ப்பு வந்தால் புனைவு, இல்லாவிட்டால் வரலாறு. , அல்லது வரலாற்றை ஆதாரமாக கொண்ட புனைவு. ” இலக்கியம்” என்ற வார்த்தை வேறு சேர்ந்து விட்டால் நாளைக்கு யார் கேட்கப் போகிறார்கள் ?

  சாய்

 31. தாமரை on January 9, 2015 at 9:11 am

  இந்தப் புத்தகத்தை வாங்க ஆளே இல்லாத போது அதை எப்படிப் பிரபலப் படுத்துவது என்று யோசித்ததில் இப்படி ஒரு நடைமுறை வழி இருப்பது தெரிந்திருக்கிறது.உடனே எதிர்க்கிறார்கள் தீவைத்தார்கள் என்று கதைத்தால் நமது மக்கள்தான் பரபரப்பு விரும்பிகளே . உடனே இதை வாங்கிப் படிக்கிறோமோ இல்லையோ வாங்கி விடுவோமென்ற உந்துதல் வருமே .இப்போ கொஞ்ச நாள் முன்னால் கூட கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’ என்ற ஒன்றுமே இல்லாத படத்தை சில அமைப்பினரைத் தூண்டி விட்டு விளம்பரம் தேடிக் கொண்டு சரியான லாபம் பார்த்தாரே . அதுபோல இவர்களும் செய்வது மட்டும் தெரிகிறது.இவர்கள் என்ன செய்தாலும் இதை வாங்க ஆள் இல்லை என்பது மட்டும் நிஜமான உண்மை. தாமரை-பழனி.

 32. S Dhanasekaran on January 9, 2015 at 8:40 pm

  மிகவும் நாகரிகமான முறையில் எழுதப் படும் எனது கருத்துக்கள் பல நேரங்களில் வெளியாவதில்லை. ஆனால் , தனிமனிதனை இழிவு செய்து எழுதப்படும் கருத்துக்கள் தவறாது இடம் பெறுகின்றன.

 33. S Dhanasekaran on January 11, 2015 at 10:11 pm

  My 3 lines are being moderated even after completion of 2 days?

 34. M.Sadasivan on January 14, 2015 at 10:33 am

  கமல் நாடு விட்டு நாடு போகிறேன் என்றது போல்…….

  பெருமாள் முருகன் நடிக்கிறான்………….

  கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எல்லாம் கடவுளுக்கு கொண்டாடும் விழாக்கள் பற்றி எதற்கு கவலைப்பட்டு எழுத வேண்டும்?

  ஒரு மனிதன் தனது 24 மணி நேரத்தில் எத்தனை மணிநேரம் ஆலயத்தில் செலவழிக்கிறான்? பெரும்பாலான நேரத்தில் வீட்டிலேயே இருக்கிறான். ஒரு வாரத்தில் எத்தனை நாள் ஆலயத்தில் செலவழிக்கிறான்? அவன் அதிகமாக இருக்கும் வீட்டில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பது பற்றி நாவலாக எழுத வேண்டியதுதானே.

  வழிபாட்டுத்தலங்களில் செலவழிக்கும் நேரத்தின் அடிப்படையில், வழிபாட்டுக்காக பணம் செலவழிக்கும் அடிப்படையில் பார்த்தாலும் கிறிஸ்துவ இஸ்லாமியர்களை தான் அதிகம் விமர்சிக்க வேண்டும்.

  இஸ்லாம் திருமண பந்தத்தில் உள்ள வயது வித்தியாசம், தலாக் பற்றி விமர்சிக்கலாம், நாவல் எழுதலாம். கிறிஸ்துவத்தில் நடக்கும் பாதிரியார், பாஸ்டர்களின் அத்துமீறல்கள் பற்றி நாவல் எழுதலாம். இவை அத்தனையும் இப்போதுள்ள சமூக அவலங்கள். அவைகளை எழுதினால் சமூகத்தில் விழிப்புணர்ச்சி வரும். ஆனால் அன்றும் இன்றும் என்றும் நடவாததை, வக்கிரத்திற்காக, ஆபாசத்திற்காக எழுதி இந்துக்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது தவறு இல்லையா?

  ஆமா, இந்து மதத்தை கேவலமாக சித்தரிப்பவர்கள் மட்டும் எப்படி முற்போக்கு வாதிகள் ஆகிவிடுகிறார்கள்?

  இந்து மத அடையாளங்களை மட்டும் கேவலமாக சித்தரித்து இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் மட்டும் எப்படி சமூக ஆர்வலர்கள் ஆகி விடுகிறார்கள்?
  மாதொருபாகா……….. பெருமாள் முருகா…………. நீ பெரிய புத்திசாலி ஆச்சே………. சொல்வாயா டுபார்க்கூர்?

  ஓ, நீயும் செத்து போயிட்டாயா?

  ஆமா, பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று சொல்லி பெ.முருகன் என்ற பெயரில் அறிக்கை கொடுக்கிறாயே நீ யார்?

  பெருமாள் முருகன் வேறா? பெ.முருகன் வேறா? இதுதான் உனது பகுத்தறிவா?
  ‘பெருமாள் முருகன் செத்துவிட்டான்’: பெருமாள் முருகன் பற்றி, ஊரை ஏமாற்ற, அனுதாபம் பெற்றுக்கொள்ள, கபட வேடதாரி பெ.முருகன் அறிக்கை.
  http://www.dinamalar.com/news_detail.asp?id=1160416

 35. M.Sadasivan on January 14, 2015 at 10:34 am

  ஒரு கன்னியின் கடைக்கண் பார்வை ஒரு இளைஞனை எப்படியெல்லாம் குதியாட்டம் போட வைக்கிறது………

  காமத்தினால் உடல் சூடு ஏற ஒரு பார்வையே போதுமானதாக இருக்கின்றது……….
  இங்கு உடலில் தீண்டல் ஏற்படாமலே இதெல்லாம் நடக்கிறது.

  இந்த பிரபஞ்சத்தில் விரவியிருக்கும் சக்தியே நம்முள் இதை உருவாக்குகிறது. அதேபோல் நம்மிலிருந்து வெளிவரும் சக்தியும் பிரபஞ்சத்தில் கலந்தே இருக்கிறது. நமது உடல் வேறு உரு எடுத்துக்கொண்டாலும், பிரபஞ்சத்தில் ஏற்கெனவே நம்மால் கலந்த நமது சக்தி கலந்ததுதான். மறுபிறப்பு அப்படியே எடுத்துக் கொள்வோம் என்று எங்கேயும் சொல்லவில்லை. தமோகுணம் கொண்டவன் பறவை, புழு, பூச்சி, செடி, கொடி…… இப்படித்தான் பிறக்கிறான் என்று கீதை கூறுகிறது.

  இப்படி எதோ ஒருவகையில் நாம் உருமாறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆபாச நாவலாசிரியர் “பெருமால் முருகனுக்கு” மறுபிறப்பு மீதும் நம்பிக்கை இல்லையாம்.
  ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது” என்பது அறிவியல். அவனது உடலிலிருந்து வெளிவரும் எந்த ஆற்றலும் சுற்றுப்புறத்தில் கலக்காமல் இருக்க அவன் ஏதாவது செய்ய வேண்டும். ஏனெனில் அவன் சுவாசம் கூட சுற்றுப்புறத்தில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம். அல்லது அவனது பார்வை அவனுடன் ஈர்ப்புக் கொண்ட பெண்ணிடம் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம். இதுவும் கூட மறுபிறப்புதான்.

  பெருமாள் முருகன் இதை செய்வானா? மறுபிறப்பு இல்லை என்பதை நிரூபிப்பானா?

  //பெருமாள் முருகன் என்பவனுக்காக, பெ.முருகன் அறிக்கை:எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல; ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.//

 36. M.Sadasivan on January 14, 2015 at 10:36 am

  எங்கள் பகுதியில் மனநோயாளிகள்தான், அவனுக்கு பசிக்கிறது, அவன் யார் என்று தெரியுமா?………. என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார்கள்.

  அது எப்படி ஒருவரே அவருள் உள்ள ஒருவருக்காக பேசமுடியும்? பெருமாள் முருகன் ஒருவரா? இருவரா? மறுபிறப்பு இல்லை என்று உறுதி பட தெரிவித்த இவர் ஒருவருள் இருவர் எப்படி இருக்க முடியும் என்றும் விளக்குவது நல்லது.
  ரொம்ப புத்திசாலி என்று நினைத்தால் இப்படித்தான் கடைசியில் மறை கழன்று விடும்.

  என்னமோ போடா பெருமாள் முருகா………….

  விஸ்வரூபம் சினிமா எடுத்தால் மட்டுமல்ல, இந்த மண்ணின் விழாக்களை அவசியமில்லாமல் கெட்டதாக சித்தரித்தாலும் இதுதான் நடக்கும்.

  //பெருமாள் முருகன் என்பவனுக்காக, பெ.முருகன் அறிக்கை:எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல; ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.//

 37. M.Sadasivan on January 14, 2015 at 10:37 am

  சினிமாவில் இந்து கலாச்சாரத்தை கெட்டதாக காட்டுகிறீர்களே என்றால் மக்கள் பார்ப்பதால் தான் அப்படி சினிமா எடுக்கிறோம் என்கிறார்கள்……………

  நாவலை ஆபாசமாக எழுதியுள்ளீர்களே என்று மக்கள் கேட்டால் “மக்களிடம் கேட்டுக்கொண்டா எழுத முடியும்?” என கேட்கிறார்கள்.

  எப்படியும் சரி இந்து மதத்தை பழித்து இழித்து எழுத வேண்டும், காட்ட வேண்டும். அவ்வளவுதான் இவர்களது நோக்கம்.

  இப்படி எழுதுபவர்களுக்கும், காட்டுபவர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் என்ற பட்ட வேறு……… த்து.

 38. M.Sadasivan on January 14, 2015 at 10:38 am

  ‘பெருமாள் முருகன் செத்துவிட்டான்’: எழுத்தாளர் உருக்கமான அறிக்கை

  என்ன, அதுக்குள்ளேவா?

  இந்துக்கள் தனது உணர்ச்சிகளையும், உரிமைகளையும் காட்டவே இல்லை, அதற்குள்ளேயே ஒரு இந்து துரோகி செத்துவிட்டான் என்று தனக்குத்தானே அறிக்கை விடுகிறான்.

  மொத்த இந்து சமுதாயமும் உணர்வு பெற்றுவிட்டால் என்னவாகும்?

 39. M.Sadasivan on January 14, 2015 at 10:40 am

  வளர்ச்சி ஒன்று மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்; மதத்தை நாம் கட்டி அழ வேண்டிய அவசியமில்லை.

  மதமா நமக்கு சோறு போடுகிறது? என்றெல்லாம் இந்து மதத்தினரை பார்த்து சிலர் வியக்கியானம் பேசுவர்..

  அப்படி பேசிய வாய்கள் எல்லாம், இந்து மதத்தை தரம் தாழ்ந்து விமர்சிப்பவனைப் பார்த்து,

  “இந்து எதிர்ப்பா உனக்கு சோறு போடுகிறது?”

  “இந்து மதத்தை இப்படி நீ கேவலமாக பேசுவதால் நாம் வளர்ந்து விடுவோமா?” இல்லை

  “இந்து மதத்தை விமர்சிப்பதால் மட்டும் தேசம் முன்னேறிவிடுமா?” என்று ஏன் கேட்கவில்லை.

  இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறான் என்ற எண்ணமா? இல்லை, மத எதிர்ப்பு என்றாலே அது இந்து மதத்திற்கு மட்டும்தான் பொருத்தும் என்று நினைத்துக் கொண்டார்களா?

  “தாயின் மானத்தை உயிரைக் கொடுத்தேனும் காக்க முயல்வதுபோல், இந்து மதத்தின் உயர்வையும் காக்க வேண்டும்”- சுவாமி விவேகானந்தர்.

  மதத்தை விமர்சிக்கும் உரிமை எழுத்தாளனுக்கு உண்டென்றால், அப்படி விமர்சிக்கும் எழுத்தாளனின் பிறப்பையும் சந்தேகிக்கும் உரிமை இந்துக்களுக்கு நிச்சயம் உண்டு. அதையும் எவரும் தடுத்திட முடியாது.

 40. ஒரு அரிசோனன் on January 15, 2015 at 2:28 am

  //பெருமாள் முருகன் தான் ஒரு கற்பனை எழுத்தாள்ர் மட்டுமே. வரலாற்றாசிரியர் அல்ல. என் எழுத்து உங்களுக்கில்ல. நீங்க போய் வரலாறுகளைப்படித்துத் தகராறு அதை எழுதியவரிடம் பண்ணவும். என் எழுத்தை எவர் புதினம் என்று விமர்சிக்கிறாரோ அவரிடம்தான் என் பேச்சு என்று சொல்லியிருக்கவேண்டும்.//

  அவர் அப்படிச் செய்யவில்லை.

  வரலாறு பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதற்காக ஒரு நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு, பின்பு கதை என்று கதை திரிக்கலாமா? வரலாறு என்றால் ஆதாரத்துடன் எழுதவேண்டும். அப்பொழுது யாரும் சண்டைக்கு வர இயலாது. கதை என்றால், கதையாக இருக்கவேண்டும். ஒரு சாதியையோ, சமயத்தையோ இழிவு செய்து எழுதக்கூடாது. அவ்வளவே!

  முகம்மது நபியைப் பற்றி எதோ எழுதினார்கள் என்று திட்டமிட்டுப் படுகொலை பாரிசில் நடந்துள்ளது. அதைப்பற்றி BS அவர்கள் கண்டித்து ஒருவரி எழுதவில்லையே!

  ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏனோ?

 41. paandiyan on January 15, 2015 at 8:43 am

  “ஊரெல்லாம் கூடி,ஒலிக்க அழுதிட்டு
  பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
  சூரையங்காட்டிடைக் கொண்டு போய்ச்
  சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்
  பொழிந்தார்களே”
  -திருமூலர்

 42. gopalasamy on January 15, 2015 at 1:41 pm

  பெருமாள் முருகனுக்கு, அருகிலிருக்கும் கல்வி நிலையங்கள் மீதுள்ள வெறுப்பை, ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்த பயன்படுத்திக் கொண்டார், அதுவும், வரலாறு எழுதிகிறேன் என்று கூலி வாங்கிக் கொண்டு. இந்த மாதிரி கூலிக்கு எழுதும் ஆட்கள் எழுதாமல் இருப்பதே நல்லது. மறுபடியும் வேறு புனைப்பெயரில், இந்த ஆளின் வக்கிரங்கள் தொடரும்.

 43. venkataramanan on January 16, 2015 at 6:50 am

  விற்கத புத்தஹத்துக்க் கு விளம்பரமா ?

 44. […] செய்யக் கோருவது தவறு என்று சொல்லி இருக்கிறார். நண்பர் ராஜன் ஊரில் இல்லை, அதனால் […]

 45. ரங்கன் on January 17, 2015 at 7:42 pm

  அடுத்து MSG ! இங்கே லீலா சாம்சேனின் திருவிளையாடல் அரங்கேறி இருக்கிறது. சீக்கிய மத உணர்வுகள் இங்கே வருகின்றன. இப்போது கருத்து சுதந்திரமா மதமா எது வெல்லபோவது என்பது போகப் போகத் தெரியும்.
  எது எப்படியோ – இதிலும் சந்தன தர்மத்தை ஒரு உருட்டு உருட்டத்தான் செய்வார்கள். ஏனென்றால் – லீலா சாம்சன் ஆயிற்றே. முற்போக்கு மன்னர்கள் சும்மா விடுவார்களா ?

 46. Paandiyan on January 18, 2015 at 10:49 pm

  Charu kku kolai mirtal, jay mo rollback a published article in the overnight —- yarappa ippo silluvandugal???

 47. BS on January 19, 2015 at 10:52 am

  பாண்டியன்!

  சாருவைத் தவிர வேறெந்த எழுத்தாளராவது பெ முருகனின் நாவலை எதிர்த்திருந்தால்.அது கவனிக்கத்தக்க எதிர்ப்பாக உருவாகும். சாருவை எவரும் சீரியசாக எடுக்க முடியாது. அவர் குணம் அப்படி! எப்படி எழுதினால் தன் மீது வெறுப்பு கலந்த போராட்டம் வெடிக்கும் அல்லது வரலாமென ஊகித்து எழுதுவார். நெகட்டிவ் பப்ளிசிட்டி இஸ் பெட்டர் தான் நோ பப்ளிசிட்டி. இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை நம்புவதில்லை. எல்லாம் வியாபாரம்தான். பப்ளிசர்S அப்போதுதான் அடுத்த நாவலை எடுத்துக்கொள்வார்கள்.

  எனவே பாண்டியன் வேறு எழுத்தாளர் (நாவலாசிரியாக இருக்க வேண்டும்) எழுதியதைக் காட்டுங்கள். நன்றி.

 48. paandiyan on January 19, 2015 at 10:56 am

  koothadigal ellam vangappa.. kondadalam..
  idho;
  மனுஷ்ய புத்திரன் தன் முகநூலில் நேற்றைய சம்பவம் குறித்து எழுதியது:

  இன்று புத்தகக் கண்காட்சியில் சாருவுக்கு நடந்தது என்ன?
  …………………………..
  இன்று புத்தகக் கண்காட்சியின் சிற்றரங்கில் எழுத்தாளர்- வாசகர் சந்திப்பில் சாருநிவேதிதா பங்கேற்றார். வழக்கம்போலநிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாசகர் ‘’ எல்லா எழுத்தாளர்களும் பெருமாள் முருகன்விவகாரத்தில் அவருக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் இந்த சமயத்தில் அவரை விமர்சித்துஎழுதியிருப்பது சரியா?’’ என்று கேட்டார். அதற்கு சாரு ‘’ நான் நீண்ட காலமாக பொது அபிப்ராயங்களுக்கு மாற்றானகருத்துக்களைத்தான் கூறி வந்திருக்கிறேன். மாதொரு பாகன் ஒரு ’மீடியாக்கர்’ நாவல். பொதுவாக இதுபோன்றநாவல்கள்தான் சர்ச்சைகள் மூலம் பிரபலமாகின்றன. உதாரணமாக தஸ்லிமா நஸ்லீனீன் லஜ்ஜா ஒரு குப்பை’’ என்றுகூறி தான் ஏன் மாதொரு பாகனை நிராகரிக்கிறேன் என்பது குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது மயிலை பாலு எழுந்து ‘நீ எழுதுறதுதான் குப்பை…வாயை மூடு’’ என்று சத்தம் போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாரு ’’ ஒரு புத்தகத்தை நிராகரிக்கஎனக்கு உரிமை இல்லையா? அதென்ன அவ்வளவு புனிதமான டெக்ஸ்டா?’’ என்று கேட்டார். ஆனால் மயிலை பாலுஅவரை பேசவிடாமல் ஏகவசனத்தில் சத்தம்போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாருவும் ’ என்னை பேசவிடாமல் தடுத்தால்செருப்பால் அடிப்பேன்’ என்றார். உடனே பாலுவும் அவருக்கு ஆதரவானவர்களும் சத்தம் போட ஆரம்பித்தனர். நான் ‘சாரு தன் கருத்தை சொல்லி முடித்ததும் நீங்கள் தாராளமாக அவரிடம் கேள்வி எழுப்பலாம். அவரை பேசஅனுமதியுங்கள்’’ என்றேன். அதை யாரும் கேட்கவில்லை. நான் பின்னால் இருந்து எழுந்த சப்தத்தைபொருட்படுத்தாமல் தொடர்ந்து கூட்டத்தை நடத்த முயன்றேன். பாதுகாவலர்கள் பாலுவை அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

  சிறிது நேரத்தில் பாலு வேறு சிலரை அழைத்துக்கொண்டு அரங்கத்திற்குள் வந்தார். அதில் ஒருவர் சாருவைமிகமோசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே அடிப்பதுபோல சாருவை நோக்கி வந்தார். அவர்பின்னால் சிலர்வந்தனர். அவர்களை வேறு சிலர் தடுத்தனர். பயங்கர கூச்சல் குழப்பம் நிலவியது. சிறிது நேரத்தில் காவல்துறையினர்வந்தனர். கூச்சல் போட்டுக்கொண்டுருந்தவர்களை வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்கள் அரங்கத்திற்குவெளியே நின்று சிறிது நேரம் சப்தமிட்டுக்கொண்டிருந்தனர். காவலர்கள் ’இங்கே பெருமாள் முருகன் பற்றி எதுவும்பேசவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டனர். ஒரு இறுக்கமான சூழலில் சாரு வேறு பல கேள்விகளுக்கு பிறகு பதில்அளித்தார். கூட்டம் முடிந்ததும் காவல்துறையினர் பாதுகாப்பாக சாருவை அழைத்துச்சென்றனர்.

  எனக்கு இந்த சம்பவத்தில் புரியாத சில விஷயங்கள் இருக்கின்றன? சாரு ஒரு எழுத்தாளரை நிராகத்தால் அதற்காகஅவரைப் பேசவிடாமல் தடுப்பது என்ன நியாயம்? இப்படி தடுப்பவர்கள்தான் பெருமாள் முருகனுக்கு கருத்து சுதந்திரம்வேண்டுமென்று போராடுகிறார்கள். அப்படி என்றால் கருத்து சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கிற ஒரு தரப்புக்கு மட்டும்உரிய ஒன்றா? முதலில் மோசமான ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டு பிறகு ‘ அவன் என்னை செருப்பால் அடிப்பேன் என்றுசொன்னான்’ எனச் சொல்லி அனுதாபம் தேடுவதற்காக ஆளைத்திரட்டிக்கொண்டு அடிக்க வருவதில் என்ன நியாயம்இருக்கிறது? மாற்று அபிப்பராயங்களை ஏற்க முடியாமல் திருச்செங்கோடில் சாதி வெறியர்கள் பெருமாள் முருகனுக்குஎதிராக நடந்துகொள்வதற்கும் இன்றைய கூட்டத்தில் சாருவுக்கு நடந்தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ?

  முதல் முறையாக காவல்துறையின துணையுடன் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்த நேர்ந்தற்காக மிகுந்தஅவமானமடைகிறேன். இது ஒட்டுமொத்தமாக பைத்தியக்காரத்தனமான ஒரு சூழல் . இதில் எல்லோருமேகோமாளியாகிக்கொண்டிருக்கிறோம்.

  கடைசியில் எல்லாம் இதற்குத்தானா?

 49. BS on January 19, 2015 at 11:02 am

  சதாசிவம்!

  இங்கு பெருமாள் முருகனிடம் நேரடியாகப்பேசுவது போல நிறைய எழுதியிருக்கிறீர்கள். இவ்விவாத மேடை இங்கு போடப்படும் கட்டுரைகளை வாசிப்பவரிடையே நடைபெறுவதற்காக. இங்கு வந்து பெருமாள் முருகன் வாசித்தால் மட்டுமே நீங்க்ள் எழுதியவை உங்க்ள் நோக்கப்படி நிறைவேறும். இல்லாவிட்டால் ஏனிந்த வேஸ்ட்.

  இரண்டு, கட்டுரையில் ஜடாயு, இந்துத்வாவினருக்கும் நாவல் எதிர்ப்புக்கும் தொடர்பில்லை என்று எழுதியிருக்கிறார். அவர்களை இணைத்துப்போடுவது இந்த்துவா எதிர்ப்பாளர்க்ளின் குறும்புச்செயல் என்று எழுதியிருக்கிறார். படிக்கவும்.

  சதாசிவம்!

  இங்கு பெருமாள் முருகனிடம் நேரடியாகப்பேசுவது போல நிறைய எழுதியிருக்கிறீர்கள். இவ்விவாத மேடை இங்கு போடப்படும் கட்டுரைகளை வாசிப்பவரிடையே நடைபெறுவதற்காக. இங்கு வந்து பெருமாள் முருகன் வாசித்தால் மட்டுமே நீங்க்ள் எழுதியவை உங்க்ள் நோக்கப்படி நிறைவேறும். இல்லாவிட்டால் ஏனிந்த வேஸ்ட்.

  இரண்டு, கட்டுரையில் ஜடாயு, இந்துத்வாவினருக்கும் நாவல் எதிர்ப்புக்கும் தொடர்பில்லை என்று எழுதியிருக்கிறார். அவர்களை இணைத்துப்போடுவது இந்த்துவா எதிர்ப்பாளர்க்ளின் குறும்புச்செயல் என்று எழுதியிருக்கிறார். படிக்கவும்.

  அரிசோனன்!

  இங்கு ஒரு தமிழ் நாவலுக்கு ஏற்பட்ட பிரச்சினையைத்தான் பேசுகிறோம். தமிழ்நாடு, இந்தியா கலாச்சாரமும் ஃபிரான்சில் கலாச்சாரமும் வெவ்வேறு. அந்த நாட்டின் முதல்வர், எங்கள் நாட்டு கலாச்சாரம் சட்ட திட்டங்கள்படி இப்படிப்பட்ட கேலிச்சித்திரங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று ஒளிவுமறைவின்றி சொல்லிவிட்டார். நம் நாட்டில் அப்படிக் கலாச்சாரமும் சட்டமும் இல. மஹமதுவைப்பற்றியக்கேலிச்சித்திரங்கள் அங்கே அவர்களுக்குச் சரி. அதே சித்திரங்கள் இங்கு சரியில்லை.

  எனவே அது சரியா? இங்கே ஏன் சரியில்லை என்ற கேள்விகளுக்கு இடமேயில்லை.

  அரிசோனன்!

  இங்கு ஒரு தமிழ் நாவலுக்கு ஏற்பட்ட பிரச்சினையைத்தான் பேசுகிறோம். தமிழ்நாடு, இந்தியா கலாச்சாரமும் ஃபிரான்சில் கலாச்சாரமும் வெவ்வேறு. அந்நாட்டின் முதல்வர், //எங்கள் நாட்டு கலாச்சாரம் சட்ட திட்டங்கள்படி இப்படிப்பட்ட கேலிச்சித்திரங்கள் அனுமதிக்கப்படுகின்றன// என்று ஒளிவுமறைவின்றி சொல்லிவிட்டார். நம் நாட்டில் அப்படிக் கலாச்சாரமும் சட்டமும் இல. மஹமதுவைப்பற்றியக் கேலிச்சித்திரங்கள் அங்கே அவர்களுக்குச் சரி. அதே சித்திரங்கள் இங்கு சரியில்லை. எனவே அது சரியா? இங்கே ஏன் சரியில்லை என்ற கேள்விகளுக்கு இடமேயில்லை.

 50. BS on January 19, 2015 at 11:12 am

  இன்று கூட ஒருவர் சிரிரங்கத்திலிருந்து தி ஹிந்துவில் கடிதம் எழுதியிருக்கிறார். பிராமணர்களைப்பற்றி இழிவு பண்ணினால் எதிர்ப்பில்லை. இப்போது பெருமாள் முருகனுக்கு மட்டுமேன்?

  இதைப்போலவே, இசுலாமியரைப்பற்றிப் பெருமாள் முருகன் எழுத முடியுமா? ஏன் இந்துக்களைப்பற்றி மட்டும்? என்று கேட்கிறார்கள்.

  பதில். இந்துமதத்தில் லிபரல் நேச்சர்தான் காரணமாக இதுவரை இருந்திருக்கிறது இனி இல்லாமல் பார்த்துக் கொண்டு, எவராவது இந்து மதத்தைப்பற்றி புனைகதைகள் எழுதி இழிவுபடுத்தினால் தாக்குங்கள். ஆனால், அக்கதைகளை எதிர்க்கக் கூடாது. எல்லா எழுத்து வடிவமும் சரஸ்வதியே என்று ஜடாயு இங்கே எழுதிவிட்டார். நூலை எரிப்பது அத்தெய்வதை இழுவு படுத்துவாகும் என்கிறார். முதலில் அவரை உங்கள் வழிக்குக் கொண்டுவாருங்கள்.

  இசுலாம் இன்று தன் தீவிர நோக்குக்காக பல எதிர்ப்புக்களைச் சந்தித்துவருகிறது. அவர்கள் விடாப்பிடியாக இருந்து கொலைகளைப் புரிந்து வருகிறார்கள்.

  எந்த வழி உங்கள் வழி அல் கொய்தா வழியா? அல்லது பரம்பரையாக வந்த சப் சல்தா ஹை என்ற இந்து வழியா?

  முடிவெடுத்துக்கொள்ளுங்கள் முதலில்.

 51. BS on January 19, 2015 at 11:38 am

  பெருமாள் முருகன் ஒரு ஸ்தாபனத்திடமிருந்து வரலாற்றாராய்ச்சிக்காகப் பணம் வாங்கிவிட்டு வரலாறு எழுதாமல் நாவல் எழுதிவிட்டார் என்று இங்கு சொல்கிறார் அரிசோனன். பலரும் இப்படியே சொல்கிறார்கள்.

  அந்த ஸ்தாபனத்திற்கும் பெருமாள் முருகனுக்குமிடையேயுள்ள பிரச்சினையது. அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.

  இங்கு எதிர்ப்பாளருக்கும் பெருமாள் முருகனுக்குமிடையே உள்ள பிரச்சினை அவர் எழுதிய நாவல் மட்டும்தான். நாவலைப்பற்றி மட்டும் பேசுவதே பொருத்தம்.

  நாவலின் கதைக்கரு வரலாற்றின் ஒரு சிறு இழையாகக்கூட இருக்கலாம். அல்லது வரலாறே இல்லை. வரலாறு போன்ற ஒரு பிரமையாகக்கூட இருக்கலாம். அதாவது வரலாறு என்ற போர்வையில் ஒரு புனைவாக இருக்கலாம். ஏற்கனவே சொன்னேன் பாண்டியனின் தலைநகரம் தஞ்சை என்றும் வைக்கலாம். இங்கே சுதந்திரம் என்ற பேச்சுக்கிடமில்லை. எதற்கு இடமென்றால், புனைவு என்பதற்கு எல்லைகள் இல என்பதே. என்று மனிதன் கற்பனை பண்ணத்தொடங்கினானோ அன்றிலுருந்து என்று அவனின் கற்பனை பண்ணும் சக்தியை இழக்கிறானோ அன்று வரை இதுதான் இலக்கியத்தைப்பொறுத்த வரை உண்மை. எல்லைகள் என்பது செய்ற்கை. அதை எழுத்தாளன் வாழும் சமூகம் போடும். அவன் மீது திணிக்கப்படுபவை.

  இதே பெருமாள் முருகன் அதே நாவலில் ஏகப்பட்ட வரலாற்றுத்திரிபுகளை எழதியிருந்தால் எவருமே எதிர்த்திருக்க மாட்டார்கள். அத்திரிபுகள் சுவராஸ்யாமாக எழுதப்பட்டிருந்தால் நாவல் இலக்கியத்தில் சிறப்பான இடத்தைப்பிடித்திருக்கும். ஸ்காட்டின் வரலாற்று நாவல்கள் ஆங்கில இலக்கியத்தில் பிடித்தமாதிரி. அவரின் நாவல்களின் ஒரு சிறிய இழையே வரலாறு. மற்றவை அனைத்தும் பொய்கள். சாண்டில்யனின் வர்ணனைகள் அவரின் பரிபூரண கற்பனைகளே. பொய்கள் இல்லாமல் புதினங்களில்லை. பொய்களே புதினங்களின் அழகு.

  ஆக, மாதொரு பாகன் கண்டுகொண்டிருக்கப்படாமலே போயிருக்கும். இதில் என்ன தெளிவாகிறது: அதாவது, நாவல் எந்தப் பொய்யைச் சொன்னாலும் ஏற்பவர்கள் அவர்களுக்கு எந்தப் பொய் பிடிக்கவில்லையே அது இருந்தால்மட்டுமே அந்நாவலை எதிர்ப்பார்கள். அதாவது நாவல் பொய்சொல்லக்கூடாது என்பவர்களின் ஓரவஞ்சனை புரிந்ததா?

  ஆதாரம் இருக்கா? நேற்று தி ஹிந்துவில் ஒருவர் எழுதியது: நான் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் பல்லாண்டுகளாக அரசுப்பணியில் இருந்தவன். நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சிதான் இது. பலருக்கு சாமி பிள்ளை என்று பெயர் உண்டு. அதன் பொருள் அவர்கள் இப்படி பிறந்தவர்கள் இக்கடிதத்தை நேற்றைய தி ஹிந்து ஆங்கிலநாளிதழில் படிக்கலாம். இவரை எதிர்த்து இன்னும் சதாசிவம் போன்றவர்கள் எழுதவில்லை. வெயிட் பண்ணிப்பார்க்கலாம்.

  நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையாகிறது. தமிழ்நாட்டைத்தாண்டி வாசிக்கிறார்கள். கொச்சியில் நேற்று மேடை போட்டுத் தொடர் வாசிப்பு நிகழ்த்தினார்கள்.

  ஒரு நாவலின் கதைக்கரு, ஒரு இனத்தையோ, ஒரு ஜாதியினரையோ குறிப்பிட்டு இழிவான எண்ணங்களை வாசகர்கள் மனங்களில் புகுத்தினால், அதை அவ்வினத்தார் எதிர்ப்பது ஒன்றும் புதிதன்று. சுஜாதா, நாடார்களைப்பற்றிய எழுதிய நாவலுக்காக குமுதம் இதழுக்கு மிரட்டல் வந்து அந்நாவல் நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்..

 52. BS on January 19, 2015 at 11:50 am

  எழுத்தாளன் உண்மைகளைத்தான் புதினங்களில் எழுதவேண்டுமென்பதே நகைச்சுவையாக கருத்து. இங்கே வரலாற்றை வைத்து எழுதுகிறார். எனவே உண்மையாகத்தான் எழுதவேண்டுமென்றால்….

  இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், அல்லது இவை போன்ற வேறுபல நிகழ்ச்சிகள் தமிழகமுழுவதும் பலவிடங்களில் ஆதிகாலத்தில் நடந்திருக்கும். சாரு சொன்னது போல பாலியல் வக்கிரங்களை அவை போற்றிருக்கும். ஆனால், வரலாற்றாராய்ச்சியாளர்கள் அவற்றைக்கண்டு கொள்வதில்லை. எழுதுவதும் இல்லை. கரணபரம்பரைக்கதைகளாக அவை தெரியவரலாம். நல்லதங்காள் கதை திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு நிலச்சுவானதார் வீட்டில் வாழ்க்கைப்பட்ட பெண்ணின் கதை, கர்ணபரம்பரைக்கதை. அது வரலாறாக எவராலும் எழுதப்படவில்லை. பெரியஎழுத்துக்கதையாக மட்டுமே படிக்கப்படும். வில்லுப்பாட்டாக பாடப்படும். அதைக் கண் காது வைத்த அந்த் நிலாச்சுவாந்தாரின் பெயரைக்குறிப்பிட்டு ஒரு நாவல் எழுதினால், அன்னாரின் பரம்பரை இன்று எதிர்க்கும்.

  ஆதாரமிருக்கா? என்று அவர்கள் கேட்பார்கள். நீலகண்ட ஸாஸ்திரியோ, பேராசிரியர் சுப்பிரமணியமோ, வரலாற்றை மன்னர்களை மையமாக வைத்தே எழுதினார்கள். குடிமக்களை வைத்தல்ல. எனவே கீழ்த்தட்டு மனிதர்களின் வாழ்க்கை எப்படியிருந்தன? என்னெனன் நம்பிக்கைகளுடன் அவர்கள் வாழ்ந்தார்கள்? என்பனவற்றை எவரும் வரலாறாக எழுதிவைக்கவில்லை. மாட்டார்கள். கர்ணப்ரம்பரைக்கதைகளைக்கூட அவர்கள் குறிப்பிட்டால் அதன் நோக்கத்தை மட்டுமே தொட்டுச்செல்வர். ஆயினும் அதில் நெகட்டிவ் இருந்தால் தொடக்கூட மாட்டார்கள்.

  நாவலாசிரியர் இப்படிப்பட்ட செவிவழிக்கதைகளைக் கருவாக வைத்து புதினம் படைப்பது அவன் இலக்கியம் படைத்தலின் ஒருவகை. ஆதாரம் கேட்க்கூடாது. உண்மையா என்ற கேள்விக்கிடமில்லை.

 53. BS on January 19, 2015 at 12:12 pm

  சரி, ஓரினத்து மக்களை இழிவுபடுத்துகிறதே சரியா என்று கேட்டால், சரி அல்லது சரியன்று எனபதை லோகலைஸ்டு கலாச்சாரம் தீர்மானிக்கிறது. இதே நிகழ்வு, ஐரோப்பியா நாடுகளின் ஒன்றில் நடந்ததாக எவரும் எழுதினால் அவ்வினத்து மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் கலாச்சாரம் களவொழுக்கத்துக்கு இடம் கொடுப்பதில்லை. இங்கு அது வேறுமாதிரியாகக் கொள்ளப்படுகிறது. தமிழ்க மக்களுள் எவர் குருதியிலும் அந்நியரின் குருதி சேராமலில்லை என்பதுதான் இயற்கை உண்மை. இன்று குருதி கலப்பு வெகு வேகமாக நடக்கிறது. பட்டணவாழ்க்கை மாற்றுகிறது. நீண்ட வரலாற்றில் நடந்த நிகழ்வு. ஆதிவாசிகள் மட்டுமே இதிலிருந்து விலக்கு. ஆதிவாசிகள் மலைகளிலிருந்து இறங்கி நகர வாழ்க்கைக்கு வந்தால் அவர்களுக்கும் இதே கதிதான்.

  ஆனால், ஆண்-பெண் உறவில் தமிழ்க்கலாச்சாரம் ஒருவன்-ஒருத்தி என்ற கட்டமைப்பை, இலக்கியம், புராணங்க,ள் என்று உருவகித்து வைத்துவிட்டது. ஒருவேளை இக்குருதிகலப்பைத் தடுக்க வைக்கப்பட்ட ஒரு சேஃடி வால்வ் என்று சொல்லலாம். மக்களின் சிந்தனை அதற்கு ஒரு பெருங்கோயிலைக்கட்டிவைத்த கலாச்சாரமாக்கிவிட்டது. சாதியமைப்பு, சாதிப்பெருமை, இன்ன சாதிக்கு இன்ன பெருமை போன்றவை இப்படிப்பட்ட கட்டமைப்பு கலாச்சாரத்திற்குள் வருகின்றன. இந்த உண்மையை ஏற்க விருப்பமில்லாமல், மதச்சாயம் பூசுகின்றார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது எவ்வளவு தூரம் கடைபிடிக்கப்படுகிறது எனபதை இதைப்படிக்கும் வாசகர்களுக்கு விளக்க வேண்டியதில்லை.

  ஆக, நான் ஏற்கனவே சொன்னது போல, இலக்கியவாதிகள் இக்கலாச்சாரம் போடும் எல்லைகளை ஏற்றுக்கொண்டு மட்டுமே எழுதவேண்டும். இலக்கியம் உண்மையில் நசுங்கும். தவிர்க்க முடியாது. இலக்கிய வாதியும் அவன் குடும்பமும் உயிர் வாழவேண்டுமல்லவா? எங்கு இலக்கிய வாதிகள் பரிபூர்ண சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களோ அங்கு இலக்கியம் செழித்து வளரும்.

  கலாச்சாரமே இலக்கியத்தையும் நம் பொதுவாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. ஏற்கனவே சொன்னது போல ஃபிரான்சில் முழுச்சுதந்திரம். இங்கு கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம். இதுதான் இயற்கை. மீறுவோர் பெருமாள் முருகனை நிலையைத்தான் அடைவர்.

 54. paandiyan on January 20, 2015 at 9:50 am

  //சாருவைத் தவிர வேறெந்த எழுத்தாளராவது பெ.முருகனின் நாவலை எதிர்த்திருந்தால்//

  வருடா வருடம் பேரை மாற்றிவரும் IIM கணபதி இப்போ BS உங்களை எனக்கும் க்ருஷ்ணகுமாருக்கும் நன்கு இங்கு தெரியும். உங்கள் பின்னூட்டத்தின் தரமும் நாங்கள் இருவரும் அறிந்தது. நான் இங்கு தெளிவாகவே சொல்லிவிட்டேன் — ஜெயமோகன் ஆமாம் என்று சொல்லி ஓவர்‌நைட்டில் அதை நீக்கியும் விட்டார். (சீல்லுவண்டுகள் பண்ணுவது போல இல்லை…!!!??)

  க்ருஷ்ணகுமார் அளவு எனக்கு பொறுமை இல்லை. என்னை விட்டுவிடுங்கள் இங்கு.

 55. ரங்கன் on January 20, 2015 at 10:54 am

  BS

  அப்படா ஒரு வழியாக ஆதாரம் கொடுத்து விட்டீர்கள் ! ( Anti Hindu பத்திரிகை மூலமாக)
  ( சாமிப் பிள்ளைகளே உங்களுடைய பிறப்பின் இரகசியத்தை தெரிந்துகொண்டால் சரி. இனி பெருமாள் முருகனை விட்டு விடுங்கள். ( சாமிகண்ணு என்று கூட பேர் உண்டு அதற்கு என்ன ரகசியமோ !)

  சரி – எழுத்தாளன் கற்பனைக்கு தடை ஏதும் கூடாதே ( இதிலே சாண்டில்யனின் உதாரணம் வேறு ) இனி பெருமாள் முருகன் எதாவது முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ ஊரையோ நாட்டையோ எடுத்துக் கொண்டு இது மாதிரி ஏதேனும் கற்பனை செய்து நாவல் எழுதச் சொல்லுங்களேன்.

  ( நானும் திருச்செங்கோட்டில் 5 வருடம் இருந்தவன் சார். இந்த மாதிரி கேள்விபட்டதே இல்லை. இதை அந்த ஆங்கிலப் பத்திரிகைக்கு சொன்னால் அதை அவர்கள் வெளியிடவே மாட்டார்கள். இது என்னுடைய முன் அனுபவம். )

 56. சாய் on January 20, 2015 at 2:17 pm

  வாசக நண்பர்களே
  தற்போது நாம் கண்டு களிப்பது எழுத்தாளரும் அவர் தோழர்களும் நடிக்கும் [ நாம் ஏற்கெனவே வேறு நடிகர்கள் நடித்து பலமுறை கண்டிருக்கும் ]
  ” அடிக்கிறாங்களே, கொல்றாங்களே!” நாடகத்தின் ஆயிரம் கோடியாவது மறு மேடையேற்றம்.
  “திடீரென்று பார்வையாளர்கள் நம்மால் பதில் சொல்ல முடியாத கேள்வி நிறைய கேக்கறாங்களே சொம்மா இருந்தோமா கிளம்பினோமா என்று இல்லாமல்…” என்று நடிகர்கள் தவிப்பது இந்த புதுக் காட்சியின் கூடுதல் ஸ்வாரஸ்யம்.

  சாய்

 57. BS on January 20, 2015 at 3:13 pm

  நீக்கி விட்ட பதிப்பை நான் கொஞ்சம் படித்தேன். அவர் அந்நாவல் எழுதப்பட்ட தரத்தை இலக்கியமா இல்லையா என்று விவாதித்திருக்கிறார். மற்றபடி நாம் அந்த பிரச்சினையைப்பற்றிப் பேசவில்லை. அதெல்லாம் இலக்கியவாதிகள் மேட்டர். நமக்கு வேண்டியது எந்த எழுத்தாளராவது பெருமாள் முருகன் அப்படி எழுதக்கூடாதென்று சொன்னார்களா சாருவைத் தவிர? சும்மா தெரிஞ்சுக்கத்தான்.

  ஏன் பேரை பற்றிக் கவலைப்படாதீர்கள். அது க்ருஷ்ணகுமாருக்கு நேரப்போக்கு. நீங்கள் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னால் மேலும் விவாதிக்கலாம். நீங்கள்தான் சாருவை மும்முரமாக இங்கே கொண்டு போட்டிருக்கிறீர்கள். க்ருஷ்ணகுமாரில்லை. அவருக்கு இன்றைய தமிழ் இலக்கியத்தில் நாட்டமில்லை என்பது என் தேர்ந்த கணிப்பு.

 58. BS on January 20, 2015 at 3:29 pm

  ரங்கன்!

  நாம் வெட்டிப்பேச்சு பேசவேண்டிய தேவையில்லை. பெருமான் முருகன் எதை எழுதினாலும் எழுதாமல் விட்டாலும் என் வீட்டுப்பானையில் சோறு பொங்கமாட்டேனென்று அடம்பிடிக்காது. எனவே உணர்ச்சிகளை உள்ளே விட்டு பெர்சனலைஸ் பண்ணாமல் எழுதுங்க.

  தி ஹிந்து பத்திரிக்கையில் ஒருவர் எழுதியதை அப்பத்திரிக்கை போட்டிருக்கிறது. அதை மறுத்துப் பதில் அங்கு வரவேண்டும். வந்தாலொழிய அவர் சொன்னதுதான் சரியென்றாகும் நம்மைப்போன்றவர்களுக்கு. இல்லையென்றா, போடுபவர் வேறெங்காவது அப்பதிலை போட்டு, நான் அனுப்பிய பதிலை தி ஹிந்து போட மறுத்துவிட்டது என்று எழுதலாம். சாரு பிளாக் இருக்கிறது. இங்கே கூட எழுதலாம்.

  நீங்கள் ஐந்து வருடங்கள் மட்டும் வாழ்ந்தவர். கடிதம் எழுதியவரோ பல்லாண்டுகளாக அரசு ஊழியராக அங்கே வாழ்ந்தேன் என்கிறார். பெருமாள் முருகனுக்கு அவ்வளவு உணர்ச்சிகரமாக எதிர்ப்பு கொடுத்தவர்கள் – நூலை எரித்தார்கள், மிரட்டல் விட்டார்கள், மன்னிப்பும் எழுதி வாங்கிக்கொண்டார்கள். அவர்களிடமிருந்து இக்கடிதத்துக்கு ஏன் பதில் இல்லை.

  பெருமாள் முருகன், கிருத்துவர்களையோ, இசுலாமியர்களையோப் பற்றி இப்படி எழுதச்சொல்லுங்களேன் என்று என்னைக்கேட்பதற்கு முன் நான் எழுதிய்வைகளை நன்கு படியுங்கள். உங்கள் கேள்விக்குப் பதில் அங்கே இருக்கிறது. அப்படியே உங்கள் கேள்வியை எடுத்தாலும், நீங்கள் அக்கேள்வியின் மூலம் பெருமாள் எழுதிய நாவல் சரியென்கிறீர்கள்; அதாவது அவர் கிருத்துவர்களைப்பற்றி இசுலாமியரைப்பற்றி எழுதிவிட்டால், திருச்செங்கோட்டைப்பற்றி எழுதியது சரியென்கிறீர்கள். இதுதான் சேம் சைட் கோல்.

  நான் எழுதிய கடிதங்களும் அப்பத்திரிக்கை போட்டதேயில்லை. ஆனால் நீங்கள் ஒன்று செய்யலாம். உங்கள் தரவுகளை இங்கே வையுங்கள். அதுதான் சிறப்பு. சும்மா கேலி கிண்டல் சிரிப்பு நையாண்டிகளுக்காக இவ்விவாதகளத்தைப் பயன்படுத்த வேண்டாமென்பது என் தாழ்மையான வேண்டுகோள் ரங்கன் சார்!

 59. BS on January 20, 2015 at 3:39 pm

  //சாமிகண்ணு என்று கூட பேர் உண்டு அதற்கு என்ன ரகசியமோ !)//

  ரங்கன்!

  இந்துமதக்காவலர்களுள் ஒருவர் போல இங்கெழுதிக்கொண்டிருக்கும் உங்களுக்கு இந்துமதத்தின் அடிபடைகள் கூட தெரியவில்லை. தமிழ்நாட்டில்தான் வாழ்கிறீர்களா?

  தமிழ்நாட்டு இந்துக்கள் தம் குழந்தைகளுக்குப் பெயரிடுவதை முக்கிய ஒரு நிகழ்வாக நடத்துவார்கள். பலரை கலந்தாலோசித்து தம் குழந்தைக்கு நல்ல பாதுகாப்பு அப்பெயர் தருமா என்று சிலர் விடுவர். சிலர் குழந்தையில் தாத்தா, கொள்ளுத்தாத்தாவின் பெயரைச்சேர்த்து முன்னோர் வணக்கம் செய்வர். சிலர் இறைவன் திருநாமத்தை அன்றாட நாம கீர்த்தனம் செய்வதற்காக அவருக்குப் பிடித்த கடவுளின் பெயரை இடுவர். (அடுத்த மடலில் ஒரு கதை இருக்கிறது படிக்கவும்); சிலர், திருஸ்டிகழிப்பதற்காக, தன் குழந்தைக்கு பிறர் முகஞ்சுழிக்க வைக்கும் பெயரிடுவர் (மண்ணாங்கட்டி என்றும் இடுவது உண்டு); சிலர் தன் குழந்தைக்கு தோஷம் உண்டு; அது அதன் வாணாளின் கெடுதல் வராமலிருக்க உக்கிர தெய்வத்தின் பெயரை இடுவர்.

  எனவே, ரங்கன்! ஒவ்வொரு இந்துவின் பெயரின் பின்னால் இரகசியம் இல்லை. வரலாறு உண்டு.

  (அடுத்த மடலைப்பார்க்கவும்)

 60. சாய் on January 20, 2015 at 3:49 pm

  சாமிப் பிள்ளை? வேறு சிலர் வீட்டில் முன்னொரு காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் சில சிறு குழந்தைகள் தந்தையை “அண்ணா” விகுதி போட்டு அழைப்பார்கள் -அதற்கு வேறு மாதிரி கதை கட்டி அதையும் “எங்க தலைவரு சொன்னாரு ” என்று சிலர் குஷியாக அளந்து விடுவதகேட்டிருக்கிறேன்.இம்மாதிரி திரிப்பு விஷயங்களில் சிலருக்கு ஒரு குஷி தான். இப்போது மற்ற வகுப்பாரையும் சீண்டுவது இம்மாதிரி பழைய அனுபவங்களை வைத்துத் தானே?

  திராவிட மாயை போதை ஏறினால் சிலர் பேச்சு /எழுத்து இப்படிதான். இதெல்லாம் தமிழ் கூறும் லொள்ளுலகத்திற்குப் புதிதா என்ன?.நல்ல ஆதாரம் .:-) நன்றி.

  அக்காலக் கூட்டுக்குடும்பத்தில் தம்பதியினரின் கடைசி பிள்ளைக்கும் மூத்த மகனின் பிள்ளைக்கும் வயது வித்யாசம் குறைவாகவே இருக்கும். தன வயதொத்த சித்தப்பா தந்தையை அண்ணா என்று அழைக்க குழந்தைகளும் அப்படியே அழைக்கும். -என்று யாரவது எடுத்து சொன்னால் …

  அடச்சே, போங்கப்பா மேற்சொன்ன விளக்கமெல்லாம் ஜாலியே இல்லை. தொடருவோம் ” பேசும் படம் ” பார்சல் பைசலை . எவ்வளவு வருஷ அனுபவம் அதில். விருது கிருதுக்கேல்லாம் வழி. ஜாலிக்கு ஜாலி. முற்போக்கு பட்டம், வாசகர் வட்டம் . யாரவது கேள்வி கேட்டால் அடிகிரான்களே கொல்றாங்களே தியாகி சீன் . இது இன்னும் நல்ல கதையாக் கீதே.

  சாய்

 61. BS on January 20, 2015 at 3:52 pm

  என் உறவினர் பெண்ணின் இரண்டாவது பெண் குழந்தைக்குத் தோஷம் இருப்பதாகச் சொன்னதால், அக்குழந்தைக்கு ப்ரித்தியங்கரா என்ற தெய்வத்தின் பெயரை விட்டார்கள். அவர்கள் அக்குழந்தையோடு கருநாடகத்திலிருக்கும் அந்த அம்மனின் கோயிலுக்குப்போனார்கள் அக்குழந்தையோடு. அம்மன் உக்கிரமான அம்மன்! குழந்தை இன்று சீரும் சிறப்புமாக வெளிநாட்டில் வளர்ந்து வருகிறது.

  இப்போது, இறைவன் திருநாமத்தை அன்றாடம் நாமகீர்த்தனம் செய்வது பற்றி:

  சாண்டோ சின்னப்பா தேவரின் முருக பக்தி அலாதியானது. ஓர் நாள் அவர் படபிடிப்புத் தளத்தில் தன் படமொன்றை எடுத்துக்கொண்டிருந்த போது, ஓர் சிறுவன் வந்தானாம். அல்லது சிலர் கூட்டிக்கொண்டு வந்தார்கள். இவன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். கேட்டால், பசிக்கிறது என்கிறான். ஏதாவது வேலை போட்டுக்கொடுத்தால் இங்கே யே இருக்கிறேன் என்கிறான் என்றனர். தேவர், இப்போது வேலையில்லையே? என்ற விசனப்பட்டார். ஆயினும் அவனுக்கு உதவ வேண்டுமென்ற அவாவிருக்க, அவனோ ஒரு பத்துவயதுப்பையன். அவனைப்போகச்சொல்ல மனம் வரவில்லை. இறுதியில் //உனக்கு ஒரு வேலை தருகிறேன். அதாவது நான் எங்கேயெல்லாம் இருக்கின்றேனோ அங்கேயெல்லாம் நீ இந்த வெற்றிலைச்செல்வத்தைச் (வெற்றிலை பாக்கு வைக்கும் சிறு வெள்ளிப்பெட்டி) சுமந்து வா என்றார். பிறகு, இன்றிலிருந்து உன் பெயர் முருகன்// என்று முடித்துவிட்டார்.

  அதன் பிறகு அப்பையன் அவரோடேயே இருந்தான். அவர் எப்போது வெற்றிலை வேண்டுமோ, அப்போது முருகா…முருகா என்று கூப்பிட அவன் ஓடி வருவான்.

  (கிருஸ்ணகுமாருக்காக, வைணவப்பேத்தல் கொஞ்சம். மன்னிக்கவும் யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெருக‌)

  நம்மாழ்வார், உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றார். அதாவது ஊண் உறக்கம் எல்லாவற்றிலும் என் இறைவன் என்னோடு கலந்திருக்க வேண்டுமென்ற அவாவின் வெளிப்பாடு அவ்வரி.

  அதைப்போலவே தேவரும் தன் முருகக்கடவுளை இமைப்பொழுதும் மறக்காமலிருக்க அப்பையனுக்கு முருகன் என்று பெயரிட்டார்.

  புரிந்ததா ரங்கன்! தமிழ்நாட்டு இந்துக்கள் பெயரிடுவதிலும் தம் தெய்வத்தை மறப்பதில்லை. உங்களுக்கேன் ரங்கன் என்று பெயரிட்டார்கள் என்று உங்கள் அம்மாவைக்கேளுங்கள். ஒரு நல்ல கதை வரும்.

 62. BS on January 20, 2015 at 4:01 pm

  /வாசக நண்பர்களே//

  சாய்!

  வாசக நண்பர்களிடம் மட்டும் பேசுனால் போதுமா? என்னிடமும் பேசலாமே! ஜடாயு இப்புத்தக எதிர்ப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை என்று முகத்தில் கரியைப் பூசிவிட்டார். அவருக்குப் பதிலெங்கே? ஒருவரும் பேசவில்லையே ஏன்? அவரைப் போட்டு உருட்டுங்கப்பா!

  The same argument i.e. RSS has nothing to do with the matter and its name is mischieviously being drawn into, is put forward in an essay by Aravindan Neelakantan in swarajyamag.com. I am replying to him there as ERGO. Join me in debate there. Could you?

 63. சான்றோன் on January 20, 2015 at 7:03 pm

  இலக்கியவாதி என்பவனுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?
  உண்மையில் இலக்கியவாதி என்பவனுக்கான வரையறை என்ன? எழுதுபவன் எல்லாம் எழுத்தாள‌ன் என்றால் ஆபாசக்கதை எழுதுபவனும் எழுத்தாள‌ன் தானே?
  ஒரு விவசாயியை விட , ஒரு விஞ்ஞானியை விட , ஒரு மருத்துவரை விட ஒரு எழுத்தாளன் எந்த வகையில் உயர்ந்தவன்? அவனுக்கு மட்டும் என்ன சிறப்புச்சலுகை?
  அவனவன் வேலையை அவனவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்….. தன்னால் முடிந்த அளவுக்கு சமூகத்துக்கு தன் பங்களிப்பை செலுத்துகிறான்….. சொல்லப்போனால் மேற்கண்ட மூவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம்…. அவர்கள் எழுத்தாள‌ர்களைப்போல ஒரு அமைப்பாக‌ ஒன்று திரள்வதில்லை…. அவர்களுக்காக குரல் கொடுக்க எந்த ஊடகமும் முன்வருவதில்லை….
  கலை , இசை ,இலக்கியம் எல்லாமே மனித மனங்களை பண்படுத்தவே உருவானவை….பிறரை புண்படுத்தினால் அவற்றின் ஆதார நோக்கமே சிதைந்துவிடும்….
  மாதொரு பாகன் விவகாரம் ஒரு மாபெரும் சதியின் ஒரு அங்கம்…. அதை வெறும் கருத்து சுதந்திரம் என்ற அளவில் கடந்து செல்வது மிகவும் ஆபத்தானது…..
  கால்டுவெல் என்ற கிறித்தவ பாதிரி ஹிந்துக்களிடையே பிளவை உண்டாக்க உருவாக்கியதுதான் திராவிட – ஆரிய இனவாதம்…. இன்றைய அறிவியல் அந்த தியரியை துடைத்துப்போட்டுவிட்டது…. இருப்பினும் , இன்றும் எத்தனை பேர் அதைப்பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்….
  இன்று அது வெறும் புத்தகம்…. எந்த எதிர்ப்பும் பதிவு செய்யப்படாமல் விட்டுவிட்டால் , நாளை அதுவே வரலாறாக மாறும் அபாயம் உண்டு….
  தேவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் , வன்னியர்கள் எல்லாம் மரவெட்டிகள் என்று கடந்த காலத்தில் நிலைநிறுத்திய அதே கும்பல்தான் தற்போது கவுண்டர்களை குறிவைக்கிற‌து….கவுண்டனைத்தானே சொல்கிறான் என்று கடந்து சென்றால் நாளை உங்கள் மீதும் இதே மாதிரியான தாக்குதல் தொடுக்கப்படும்….
  திருச்செங்கோடு என் மண்ணின் ஒரு அங்கம்…. என் அப்ப‌ன் சிவனின் திருத்தலம்…. அந்த மண்னை எவன் அவமதித்தாலும் அது என்னையும் அவமதிப்பதாகும்…..
  பெருமாள் முருகனின் அந்த அபத்தக்குப்பையை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி… நீங்களும் அதேபோன்ற ஒரு திருவிழாவில் , முகம் அறியாதவனுக்கு பிறந்தவன் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்…. உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்….

 64. சான்றோன் on January 20, 2015 at 7:04 pm

  தெருவில் போகும் யாரையாவது பார்த்து டேய் தேவடியா பயலே என்று கூப்பிட்டுப்பாருங்கள்…. செவுள் பிய்ந்துவிடும்…..
  ஆனால் , அதே விஷயத்தை ஒரு கோயிலையும் , [ கவனம்…அது ஹிந்துகோயிலாக மட்டும் இருக்கவேண்டும்….. தப்பித்தவறி வேறு மதத்தை குறிப்பிட்டுவிட்டால் உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை ]அந்த ஊரில் வாழும் மக்களையும் தெளிவாக குறிப்பிட்டு , அவர்கள் தவறிப்பிறந்தவர்கள் என்று குறிப்பிட்டு ஒரு புத்தகத்தை எழுதுங்கள்….. அதை கால‌ச்சுவடு , உயிர்மை போன்ற பதிப்பகங்கள் மூலமாக வெளியிடுங்கள்….
  உடனடியாக உங்களுக்கு இலக்கியவாதி அந்தஸ்து வழங்கப்படும்….
  ஒட்டுமொத்த தமிழகமும் உங்கள் பின்னால் நிற்கும்….. யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு மதவாத ,அல்லது சாதி வெறி முத்திரை குத்தப்படும்…….
  போங்கடா …. நீங்களும் உங்கள் கருத்து சுதந்திரமும்……

 65. paandiyan on January 22, 2015 at 9:01 am

  Eluthalaa Monaigala;
  http://www.jeyamohan.in/70337

 66. ரங்கன் on January 23, 2015 at 10:31 pm

  //அதாவது அவர் கிருத்துவர்களைப்பற்றி இசுலாமியரைப்பற்றி எழுதிவிட்டால், திருச்செங்கோட்டைப்பற்றி எழுதியது சரியென்கிறீர்கள். இதுதான் சேம் சைட் கோல்.//

  இதுதான் பொதுவான ஹிந்து வெறுப்புகளின் வாதம். நான் கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் பற்றி எழுதவா சொல்கிறேன். ஏன் சார் என்ன தப்ப பேசறீங்க என்று கேட்டால் “அப்போ எதிர் வீட்டுக்கரன்ப் பத்தி தப்பா பேச சொல்றியா ? ” என்று கேட்கிறீர்கள்.

  //சும்மா கேலி கிண்டல் சிரிப்பு நையாண்டிகளுக்காக இவ்விவாதகளத்தைப் பயன்படுத்த வேண்டாமென்பது என் தாழ்மையான வேண்டுகோள் ரங்கன் சார்!//

  …//நீங்களும் படியுங்கோ…//…// வைணவப்பேத்தல் கொஞ்சம்…// இவைகளெல்லாம் கேலி சிரிப்பு நையாண்டிகள் இல்லை!!

  //புரிந்ததா ரங்கன்! தமிழ்நாட்டு இந்துக்கள் பெயரிடுவதிலும் தம் தெய்வத்தை மறப்பதில்லை. //

  தமிழ் நாட்டு இந்துக்கள் மட்டுமல்ல எல்லா இந்துக்களும் அப்படித்தான் பெயர் வைப்பார்கள்.

  //உங்களுக்கேன் ரங்கன் என்று பெயரிட்டார்கள் என்று உங்கள் அம்மாவைக்கேளுங்கள். ஒரு நல்ல கதை வரும்.//

  என் முழுப்பெயர் ரங்கநாதன். அதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. நேரிடையாக எடுத்தால் வர்ணங்களின் தலைவன்.. தத்வார்த்மாக சொல்ல வேண்டுமென்றால் ‘ அத்தனை ஆத்மாக்களும் நிறைந்த இந்த பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஒலி வடிவான இறைவனை உன் பெயர் சொல்லும்போதெல்லாம் நீ நினை’ என்றும்
  வைத்துக் கொள்ளலாம். ஆனால் //பலருக்கு சாமி பிள்ளை என்று பெயர் உண்டு. அதன் பொருள் அவர்கள் இப்படி பிறந்தவர்கள் // என்று ஒருவர் கூறுகிறார் ( அவர் எத்தனை காலமாவது அங்கு இருந்திருக்கட்டும் ) என்பது தவறான தகவல் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் சொல்லும் ” ஒரு நல்ல கதை வரும் “என்பது பெருமாள் முருகன் சொல்வது போலத்தான் எல்லா குழந்தைகளும் என்று ஒரு அர்த்தத்தை தரும் அபாயம் இருக்கிறது. இந்து மத வெறுப்பு உங்களை எல்லை மீற வைக்கிறது.

 67. S Dhanasekaran on January 23, 2015 at 11:56 pm

  சான்றோன் அவர்களே! கருத்துக்களைத் தெரிவிக்கும்போது கண்ணியம் அவசியம் அல்லவா?

 68. சாய் on January 24, 2015 at 6:08 pm

  கண்ணியம் என்பதன் எல்லைக்குள்ளேயே வராத வாதம் இங்கே ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறார். ” உங்கள் பெயரின் அர்த்தம் …” என்று, அதற்கும் ஒருவர் படு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
  இதெல்லாம் இந்து தளத்திலேயே சாத்தியம்.
  கண்ணியம் பற்றி பாடம் எடுப்போர் புரிந்து கொள்ளட்டும்.
  படிப்போருக்கு பெ. முருகன் பாணி நாடகங்கள் நன்றாகவே விளங்குகிறது.
  சாய்

 69. BS on January 24, 2015 at 8:38 pm

  சான்றோன்!

  விஞ்ஞானி, மருத்துவரோடு எழுத்தாளரைச் சேர்க்க முடியாது. முன்னவர் இருவரும் மக்களின் உணர்ச்சிகளைத் தட்டிப்பார்ப்பவர்களல்ல. எழுத்தாளர்கள் மனங்கள் செயல்பாடுகள் கிட்டத்தட்ட பைத்தியக்காரனைப்போலத்தான் இருக்கும். மனோதத்துவ அறிவியலார் ஆராய்ந்திருக்கிறார்கள். ஒரு சிலர், எழுத்தாளன், அமானுஷய் நிலையை அடையும்போதே மாபெரும் படைப்பு உருவாகிறது என்பர்.

  எனவே எதையும் தெரியாமல் பேசவேண்டாம். பெருமாள் முருகனைத்தனிப்பட்ட முறையில் எப்படியும் திட்டிக்கொள்ளுங்கள். எல்லா எழுத்தாளர்கள் என்று பொதுவாகப்பேச நீங்கள் நிறையத் தெரிந்துகொண்டுதான் பேசவேணடும். இல்லாவிடால் அபத்தமானக் கருத்துகளாகிவிடும். விஞ்ஞானிகளை ஒரு தனிக்கட்சி. அவர்களை எவருடனும் சேர்க்க முடியாது. அப்படி தனிஉலகத்தில் வாழ்பவர்கள். அவர்கள் அப்படி வாழ்ந்தால்தான் நம்க்கு நல்லது.
  மருத்துவர்கள் கூட்டமாகச்சேர்ந்து அரசியல் பண்ணுவது இப்போது சகஜம். ஒரு அரசு மருத்துவரைக் கன்னத்தில் ஒரு அரசியல்வாதி அடித்தானென்று உ.பியில் 15நாட்கள் அரசு மருத்துவர்க்ள் வேலை நிற்த்தும்செய்ய ஏழைம்க்கள் பலர் செத்துப்போனார்கள்.

  எந்த ஒரு இனமக்களை ஒரு எழுத்தாளனின் படைப்பு வருத்திவிட்டால் அவர்கள் போராட்டம் நடாத்தி அவனை மிரட்டி அவனை மன்னிப்புக்கேடக வைப்பது, ஓட வைப்பது, நீங்கள் இப்போது செய்கிறீர்கள்; பிறர் முன்பே செய்துவிட்டார்கள். பல எடுத்துக்காட்டுகள் சொல்லியாச்சு. எனவே உஙகள் எதிர்ப்பை நீங்கள் பண்ணுங்கள். அவர்களைக்காட்டி நியாயம் சேர்கக வேண்டாம்.

 70. BS on January 24, 2015 at 8:59 pm

  //கலை , இசை ,இலக்கியம் எல்லாமே மனித மனங்களை பண்படுத்தவே உருவானவை….பிறரை புண்படுத்தினால் அவற்றின் ஆதார நோக்கமே சிதைந்துவிடும்….//

  பெரிய பெரிய எண்ணங்களையெல்லாம் வைக்கிறீர்களே !

  ஆனால், தப்பு. இலக்கியம் என்பது ஒரு நிரந்தர எல்லைகளை என்றுமே வைத்துக் கொள்வதில்லை. அது காலத்துக்குக் காலம் நாட்டுக்கு நாடு மாறும். அப்படி மாறுவதனால்தான் பிரச்சினைகளை எழுத்தாளர்கள் சந்திக்க வேண்டியதிருக்கிறது. உங்களைப்போன்றவர்களிடமிருந்து நன்னடைத்தைச் சான்றிதழ்களைப் பெற தமிழகத்தில் பெண் எழுத்தாளர்கள் (ஓரிருவரைத்தவரைத்தவிர‌. எ.கா லீனா மணிமேகலை) மட்டுமே முடியும். அவர்கள் எந்த கெட்டச்சொற்களும் போட்டு எழுதுவதில்லை. எனவே அவர்கள் கீழ்த்தட்டு ஏழை மக்களைப்பற்றிய கதைகள் எழுதுவதில்லை. எழுதினாலும் செயற்கையாக இருக்கும். இன்றைய எதார்த்த நாவல்கள் மக்கள் பேச்சுவழக்குகளை பட்டவர்த்தனமாகக் காட்டுப‌வை. தடுக்க முடியாது. சுதந்திரம் கேட்கவில்லை. அவர்கள் உங்களிடம் திருப்பிக்கேட்பது: பின் எப்படி சேரிமக்களும் கிராமத்து மக்களும் பேசிக்கொள்வார்கள். இங்கிலீசிலா? என்ன சொல்வீர்கள்? எனவே அனைத்துக்கெட்டச் சொற்களும் இம்மாதிரி கீழ்தட்டு வர்க்கத்தை கதா மாந்தர்களாக வைத்து எழுதப்படும் நாவல்களில் இருக்கும். சு. சமுத்திரம் மற்றும் தலித்து எழுத்தாளர்கள் நாவலகள், நான் முன்பு சொன்ன ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு நாவல்களைப்படிக்க உங்களால் முடியாது. அவ்வளவு கெட்ட்சொற்கள் மலிந்து கிடக்கும். அன்று அச்சொற்கள் அசிங்கம்; அச்சில் தவிர்க்கப்படவேண்டியவை, இன்று அப்படி இல்லை.

  இதை உங்களுக்குப் புரிய வைக்க தமிழ் சினிமா வரலாற்றைக்காட்டலாம். 40களில் வந்த திரப்படங்களில் கதாநாயகி முழங்கை கூட வெளிதெரியாதபடி நடிப்பார். நாயகனுக்கும் நாயகிக்கும் இரண்டடி தூரமிருந்து காதல் பாட்டு பாடுவர். அப்படி ஏதோ கொஞ்சம் விலகி விட்டால், நெருங்கி விடால், அவரைப்பற்றிய பேச்சு நாடெங்கும் பிரபலமாகிவிடும். இன்று முக்கால்வாசிப்பகுதியைக் காட்டிவிடுகிறார்கள். நாயகன் தொடாத இடமில்லை. நீங்கள் சொன்ன மாதிரி சொன்னால், அட போங்கப்பா என்று மக்கள் காணாதுவிடுகிறார்கள். தப்பு, தப்பு.. இரசிக்கிறார்கள் 🙂

  காலத்தோடு நாம் மாறவில்லையெனறால் நமக்குத்தான் கஷ்டம்.

  இதற்கு பெருமாள் முருகனுக்கும் தொடர்பில்லை.

 71. BS on January 24, 2015 at 9:13 pm

  //பெருமாள் முருகனின் அந்த அபத்தக்குப்பையை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி… நீங்களும் அதேபோன்ற ஒரு திருவிழாவில் , முகம் அறியாதவனுக்கு பிறந்தவன் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்…. உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்….//

  ஜடாயு கட்டுரையில் சொல்கிறார்: ஒவ்வொரு நூலும் அல்லது இலக்கியபடைப்பும் சரசுவதியின் வடிவங்களே. அவற்றை எரிப்பது சரசுவதி நிந்தனையாகும். ஆதரிப்பதை எதிர்க்கிறீர்களா? அல்லது படிப்பதையேவா?

  நான் படித்தேன். ஒரு நல்ல பொழுது போக்கு இலக்கியம் என்றளவில் பார்த்தேன். அதைமீறி நான் எந்த இலக்கியத்துக்கும் மதிப்பு தருவதில்லை.

 72. BS on January 24, 2015 at 9:26 pm

  //ரு நல்ல கதை வரும் “என்பது பெருமாள் முருகன் சொல்வது போலத்தான் //

  நான் எழுதிய நல்ல கதைவரும் என்பதைத் திரித்து பெருமாள் முருகனையும் மிஞ்சிவிட்டீர்கள். நல்ல கதை வரும் என்பதன் பொருள் ஒவ்வொரு இந்துப்பெயரும் பெற்றோரரின் உணர்வுகளின் வரலாறாக என்பதைக்குறிக்கவே.

  இரங்கநாதன் என்பதற்கு நீங்கள் ஆயிரம் பொருட்கள் எடுத்தியம்பலாம். aanaal, உலகமெங்குமுள்ள இந்துக்களுக்கு அது ஓரே ஒன்றைத்தான் காட்டும். சீரங்கத்தில் உறையும் தெய்வத்தை மட்டுமே.

  நல்ல கதைவரும் எனப்து என் பெயரிலும் உண்டு. அக்கதை வருமாறு:

  என் பெயர் பால சுந்தர விநாயகம். என் அண்ணனின் பெயரும் அதே கடவுளைத்தான் குறிக்கும். எனவே ஓர்நாள் என் அம்மாவிடம் கேட்டேன். எனக்கும் அதே பெயரா? அம்மா சொன்னார்கள்:

  “நீ பிறந்ததே அபூர்வம். செத்துத்தான் பிறப்பாய என்றார்கள். எல்லாரும் கைவிட்டார்கள். நான் தொடர்ந்து வணங்கிய வந்த இரயில்வே பிள்ளையாரிடம் கேட்டதெல்லாம் சுகப்பிரசவம்தான். பிள்ளைக்கு உன் பெயரே என்று கேட்டபடி நீ பிறந்தாய். எனவே அதே பிள்ளையாரின் பெயரைத்தான் உனக்கு விட்டேன். ”

  என் அக்காளின் பெயர் சர்சுவதியின் இன்னொரு பெயர். என் அம்மாவிடம் அக்கதையையும் கேட்டேன் ஓர் நாள். அம்மா சொன்னார்கள்:

  “அப்பா ஒரு கலைஞர். அவரின் படைப்புக்களாலே நாம் வீட்டை ஓட்டுகிறோம். அவர் சொன்னார், நம் வீட்டில் லட்சுமி வருவதற்கு சரசுவதியே காரணம். எனவே அடுத்த குழந்தை பெண்ணென்றாL, சர்சுவதியின் பெயரையே விடுவோம்.”

  காரமடை ரங்கநாதன் என்ற ஒரு திரைப்படத்துக்காரர் ஒருசமயம் தன்பெயருக்கு விளக்கம் கொடுத்தார். காரமடை என்ற ஊர்த் தெய்வத்திடம் அவர் தாய் எப்படி மன்றாடித் தான் பிறந்தேன் என்று.

  இப்படி ஏகப்பட்ட கதைகள். எனவே இரங்கநாதன், பெற்றோர்கள் உணர்வுகளை மதித்தல் நன்று.

 73. ரங்கன் on January 25, 2015 at 8:36 am

  //இப்படி ஏகப்பட்ட கதைகள். எனவே இரங்கநாதன், பெற்றோர்கள் உணர்வுகளை மதித்தல் நன்று.//

  எனக்கு விஷய ஞானம் ரொம்பவே குறைவு அதனால் இந்த தளத்தில் அதிகமாக பதில் எழுதுவதில்லை. ஆனால் எழுதிய அந்த கொஞ்சத்திலும் பெற்றோர்கள் உணர்வுகளை நான் மதிக்கவில்லை என்று எப்படி முடிவு செய்தீர்களோ ?

  //சீரங்கத்தில் உறையும் தெய்வத்தை மட்டுமே.//

  எனக்கு நன்றாகத் தெரியும் – ஆனால் அதை சொன்னால் உடனே ஆயிரம் பேர் ஆரியப் பதரே, இந்து வெறியனே என்று கிளம்பிவிடுகிறீர்கள். ஹிந்துக்கள் தெய்வத்தின் பெயர்தான் அனேகமாக வைத்துகொள்கிறார்கள். அந்த தெய்வத்தின் பெயர்களின் பின்னால் பல தத்துவங்கள் அடங்கி உள்ளன.

  இரங்கநாதன் இல்லை – அரங்கநாதன் என்றுதான் சொல்வார்கள். அதைவிட திருவரங்கன் என்பது பொருத்தம்.

  ஏதோ திருச்செங்கோட்டில் இருந்ததால் பேசுகிறேன் என்பது மட்டும் இல்லை. அந்த ஊரில் உள்ள ஒருவரே அதைப் பற்றி தவறாகப் பேசும் போது ஐயோ சாமி அது கருத்து சுதந்திரம், நாம் ஒன்றும் வாயைத் திறக்கக்கூடாது, ஹிந்துத்வா முத்திரை விழுந்துவிடும் என்று எத்தனை நாள்தான் கிடப்பது.?

 74. ரங்கன் on January 25, 2015 at 8:47 am

  //அதைவிட திருவரங்கன் என்பது பொருத்தம்.//

  நான் சொல்லவந்தது அந்த கடவுளை. என்னைப் பற்றியல்ல. சரியான முறையில் வரிகளைப் பொருத்தவில்லை

 75. […] நெகிழ்வைக் காட்டுகிறது என்று ஆரம்பித்த ஜடாயு கூட இப்போது கட்சி மாறிவிட்டது […]

 76. sariyaaivumaiyam on February 6, 2015 at 7:10 am

  ஒருபெண்ணுக்கு ஐந்து கணவர்கள் என்றெல்லாம் மாபாரதத்தைவேறு இழுக்கிறார்கள்! அது பெண்ணல்ல என்பதை உணர்ந்தாகவேண்டும்! ஐவர் என்பது ஐந்து திணைநிலங்கள்; அந்தமண் பெண்ணுக்குரியது. அந்தமண்ணே பெண்ணாகக் காட்டப்பட்டுள்ளது. அந்த மண்ணைக் காக்கவே மாபாரதப்போர் நடத்தப்பட்டது. இதனை நன்குணர்ந்தவரே சுப்ரமண்ய பாரதி! பாரதம் அடிமைப்பட்டுக்கிடந்தபோது அதனைப் பாஞ்சாலியாகக் கருதிப் பாடியவரே பாரதி. அதே கருத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டதுதான் மாபாரதமும். அன்றைய அந்நியரான மோரியர் ஆரியர் அவுணர் என்கிற மூவரின் கூட்டனியைச் சிதைத்துப் பாஞ்சாலியைக் காத்தவனே கண்ணன் – கார்வேலன்! இதனை அகத்திக்கும்பா – அகத்தியர்குகைக் கல்வெட்டில் ஒடிஸ்சாவில் புவனேசுரத்தில் உதயகிரிமலையருகில் காணலாம். முதலில் இராமாயணமாகத் தென்னகத்தை இராவண செழிய அவுணரிடமிருந்து சீத்தை – பண்படுத்தப்படாத, ஜ நகி – பிறக்காத, வை தேகி – மண்ணை உடலாகக்கொண்ட பெண்ணாகக் காட்டப்பட்ட யோனிவாய்ப்படாமல் ஏர்க்காலில் நிலத்தில் பிறந்ததாகக் காட்டினர்! அந்தப்பெண்ணை – தென்னக மண்ணைக் காத்தவனும் கண்ணன் – கார்வேலந்தான் என்பதையும் அந்தக் கல்வெட்டிலேயே காணலாம். ஒவ்வொரு ஆண்கடவுளருக்கும் சீதேவியைப்போன்றெ ஒரு பெண்ணும், பூதேவி என ஒரு பெண்ணும் – மண்ணும் – நாடுமே மனைவியராகக் காட்டப்படுவதையும் காணலாம்!
  திருச்செங்கோடு மலைமேல் மாதொருபாகனை எப்போது யார் கொண்டுபோய் வைத்தார்கள்? எப்போது மாதொருபாகன் – அர்த்தநாரி வைக்கப்பட்டார் என்பதையே எவரும் அறியாதபோது புனைவுகளுக்கெல்லாம் வரலாற்றுச்சாயமிடுவது ஏற்கத்தக்கதல்ல. அங்கே ஒரு தேவரடியார் மண்டபமும் மலைக்குச்செல்லும் வழியில் உள்ளது. தேவரடியார்கள் அங்கே எப்படி வந்துசேர்ந்தார்கள் என்பதைக்கூட எழுத எவரும் இல்லை. ஆனால் அங்கே வைக்கப்பட்ட மாதொடுபாகன் – அர்த்தநாரி அந்த மண்டபத்துக்குள் செல்வதோ வெளிவருவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து எழுதவும் எவரும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் அந்த அர்த்தநாரிக்கும் பார்வதிக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கும். திருவிழாவின் இறுதிநாளில் பார்வதிக்கும் அர்த்தநாரிக்கும் திருமணத்துக்கான சடங்குகளும்ம் நடத்தப்படும். ஆனால் திருமணம் நடத்தப்படாமலே மாதொருபாகன் அர்த்தநாரியும் பார்வதியும் பிரிந்துவிடுவார்கள்; திருமணமும் நடப்பதில்லை! ஏன் திருமணம் நடக்கவில்லை என்கிற வரலாற்றை எழுதக்கூட எவரும் இல்லை! வரலாறு என்று சொல்லிக்கொண்டுதிரியும் இந்நிலையில்தான் உள்ளது இன்றைய பெருமால்முருகன் போன்றோரின் வரலாற்றறிவு.

 77. sariyaaivumaiyam on February 6, 2015 at 8:00 am

  பெருமாள்முருகன் திருச்செங்கோடு பகுதியில் வாழ்ந்தவரல்ல; அவரது தாயார் மட்டுமே பலகாலமாக அங்குவாழ்ந்தவர். பெருமாள்முருகன் சில ஆண்டுகள் மட்டுமே அங்கு சென்றுவந்திருக்கலாம். படித்தது பட்டம்பெற்றது பணிபுருந்தது எல்லாமே வெளியிடங்களில்தான். திருச்செங்கோடு குறித்து அவருக்க ஒன்றும் தெரியாதென்றே சொல்லலாம். திருச்செங்கோடு மலைமேல் உச்சியில் ஒரு பிள்ளையார்கோயிலும் உள்ளது. அதன் அருகில் ஒரு பெரிய பாறை உருண்டைவடிவில் இருக்கும். அது ஒரு உயர்ந்த மலைச்சரிவுக்கு அருகில் இருக்கும். அதற்குப் பெயரே வரடி – மலடிக்கல் என்பதுதான். பெண்கள்; மாற்றோரோடு புணர்ந்து குழந்தைபெற்றுக்கொள்வதாக இருந்தால் அதே மாதொருபாகன் – அர்த்தநாரி வைக்கப்பட்டுள்ள மலையில் அந்தக்கல்லுக்கு என்னவேலை? வரடிக்கல் என ஏன் பெயரிட்டார்கள்? அந்தக்கல்லைக் கணவனும் மனைவியுமாக – முதலில் மனைவிமட்டுமே அக்கல்லைச்சுற்றவேண்டும் என்றுதான் இருந்தது; ஆனால் சுற்றிவரும்போது அச்சத்தால் சிலபெண்கள் தவறிவிழுந்து இறந்துவிடுவதைக்கண்டு – கணவனும் சேர்ந்து சுற்றவேண்டிவந்தது. இதைக்கூட அறியாதவரா பெருமாள்முருகன்? பலபெண்களுக்கு அந்தக்கல்லைச்சுற்றும்போது ஒருவித அச்சத்தால் கருப்பைமுதலாக உடலின் எல்லாப்பாகங்களும் உதறல் எடுத்துவிடும்; அந்தப் பெண்ணின் கணவனுக்கும் அதே நிலைதான். அந்த அச்சத்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தால் குழந்தை உண்டாவதால்தான் அந்தக்கல்லைப் பல கணவன் மனைவியர் சுற்றிவந்துள்ளார்கள்! குழந்தைபெற்றவர்களும் உள்ளார்கள். ஆனால் பலர் அச்சத்தால் நிலைதடுமாறி விழுந்து இறந்துவிடுவாதால் ஒரு தடுப்புச்சுவற்றையும் கட்டித் தடுக்க முயன்றார்கள். அதையும் மீறி இன்றும் ஒருசிலர் அக்கல்லைச் சுற்றிவருவதையும் காணலாம்! இன்றைய மருத்துவ மேன்மையால் இப்பழக்கம் படிப்படியாகக் கைவிடப்பட்டுவருகிறது. இவற்றையெலாம் அறிந்தவர்தான் பெருமாள்முருகன்! ஆனாலும் இதுகுறித்து ஒரு அடிகூட எழுதாமல் விட்டுவிட்டாரே! அதற்கான காரணத்தையும் எண்ணிப்பாருங்கள்; அப்போது புரியும் அவரது நோக்கங்கள் என்னவாக இருக்குமென்று!.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*