இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

மாற்றமே உலக நியதி

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் ஜனநாயகத்தின் சிறப்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறது. அசைக்க முடியாத அதிபராகக் காட்சியளித்த ராஜபட்சவை, மிகவும் அமைதியான முறையில் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள். அவர்களது தெளிவான அரசியல் பார்வைக்கு முதலில் வந்தனம் செய்ய வேண்டும்.

இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத் தேர்தல் அமைப்புடன் ஒப்பிடுகையில் இலங்கை மிகவும் சிறியது. அதன் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 1.54 கோடி தான். தமிழகத்தின் மாநில சட்டசபைத் தேர்தலுடன் கூட அதனை ஒப்பிட முடியாது. ஆனால், இந்தியாவில் உள்ள அரசியல் விவகாரங்களைவிட அங்கு பிரச்னைகள் அதிகம்.

தொடர்ந்த உள்நாட்டுப் போர்கள், வலதுசாரி தீவிரவாதம், அரசியல் கட்சிகளின் பக்குவமின்மை போன்ற சிக்கல்களால் அங்கு நிலையான அரசியல் அதிகாரமோ, அமைதியான ஆட்சியோ நீண்ட நாட்கள் நிலைக்காமலே இருந்துவந்தது. இந்த வெற்றிடத்தையே மஹிந்த ராஜபட்ச மிக எளிதாக தனது ஆளுமையாலும், குடும்ப அரசியலாலும் நிரப்பினார்.

ஆயினும், தனது எதேச்சதிகாரத்தாலும், அதிகார மமதையாலும், அளவுக்கு மீறிய குடும்ப அரசியலாலும் மக்களின் வெறுப்புக்கு உள்ளானார் ராஜபட்ச. விடுதலைப் புலிகளை வீழ்த்தி இலங்கையின் கதாநாயகன் அந்தஸ்தைப் பெற்ற அவரால் அதை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான தமிழர்களின் ஆத்மாக்களிடம் இருந்து கிடைத்த சாபம் தானோ, அவரது நெருங்கிய சகாக்களே அவரை விட்டுப் பிரிந்தனர்? அதன் விளைவாக 2010-இல் அமோக வெற்றி பெற்ற ராஜபட்ச இத்தேர்தலில், தனது அமைச்சரவையில் இருந்த சகாவாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் தேர்தலின் முடிவுகளை அலசும் முன் இலங்கையின் நெடிய அரசியல் பின்புலத்தையும், அங்குள்ள அரசியல் கட்சிகளின்  நிலவரத்தையும், அங்கு தொடரும் இனக்குழு சிக்கல்களையும் ஓரளவேனும் புரிந்துகொள்வது பயன்படும்.

அதிகாரச் சமண்பாடுகள்:

அப்பாவி தமிழ் மக்களின் சாபம் சும்மா விடுமா?

இந்தியாவைப் போலவே இலங்கையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் தான் இருந்தது. 1948-இல் அந்நாடு சுதந்திரம் பெற்றபோது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான டி.எஸ்.சேனநாயகா முதல் பிரதமர் (இவர் இலங்கையின்  தேசப்பிதா எனப்படுகிறார்) ஆனார். 1951-இல் இலங்கை சுதந்திரா கட்சி சாலமன் பண்டாரநாயகாவால் தோற்றுவிக்கப்பட்டது. இவரே 1956-இல் இலங்கைப் பிரதமரும் ஆனார். அன்று முதல் இன்று வரை, இலங்கை அரசியல் களம் இவ்விரு கட்சிகளிடையிலான அதிகாரப் பகடையாட்டமாகவே மாறிப்போனது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவ்விரு கட்சிகளுமே சிங்கள மேலாதிக்கத்தை சார்ந்தவை. இவ்விரு கட்சிகளின் பாரபட்சமான அணுகுமுறையால் தான் இலங்கையில் சுய உரிமைக்காக ஈழத் தமிழர்கள் போராட வேண்டிவந்தது. அதன் தொடர்ச்சியாக 1977-இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்  (எல்டிடிஇ) உருவானதும், மூன்று  முறை நடைபெற்ற உள்நாட்டு போர்களில் ஈழத் தமிழர்கள் லட்சக் கணக்கில் காவு வாங்கப்பட்டதும் சோகமான வரலாறு.

இலங்கையின் இரு முக்கிய அரசியல் கட்சிகளும் சிங்களர்களை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும், அதிதீவிர புத்த அடிப்படைவாத அமைப்புகளின் தாக்கம் அங்கு மிகுதி. பண்டாரநாயகா புத்த பிக்கு ஒருவரால் கொல்லப்பட்டார் என்ற தகவலே அங்குள்ள மத அடிப்படைவாதத்தின் இடத்தை விளக்கும். அவருக்குப் பிறகு சுதந்திரா கட்சி குடும்ப அரசியலில் கட்டுண்டு போனது. சிறிமாவோ பண்டாரநாயகா, சந்திரிகா குமாரதுங்கா, என 2004 வரை அக்கட்சி குடும்ப ஆதிக்கத்தில் சிக்கி இருந்தது. அதை மாற்றியவர் தான் ராஜபட்ச. ஆனால், அவரும் குடும்ப அரசியலில் வீழ்ந்ததும், அதுவே அவரது சரிவுக்குக் காரணமானதும் வரலாற்றின் வினோதம்.

ஆரம்பத்தில் பிரதமரே இலங்கையின் அதிகார பீடமாக இருந்தார். 1978-இல் செய்யப்பட அரசியல் சாசன திருத்தம் மூலமாக, ஜனாதிபதி ஆட்சி முறைக்கு (அதிபர்) இலங்கை மாறியது. அதிபரால் நியமிக்கப்படும் பொம்மைப் பிரதமரே அங்குள்ள நாடாளுமன்றத்தை கவனிப்பார். அதாவது, இந்தியா போல மக்கள் பிரதிநிதிகளின் நேரடியான தேர்வாக பிரதமர் பதவி அங்கு இல்லை. அதிபர் தேர்தல் முறை, அங்கு மேலும் அதிகாரக் குவிப்புக்கு வழிகோலியது.

ராஜபட்ச: அதிகாரக் குவிப்பின் அடையாளம்

கடைசியாக ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து 2005-ல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார் ராஜபட்ச. அதுவரை சுதந்திரா கட்சியின் அசைக்க முடியாத தலைவியாக இருந்த சந்திரிகா குமார துங்கா அரசியலிலிருந்தே ஒதுங்கினார்; நாட்டைவிட்டும் வெளியேறினார். சுதந்திரா கட்சி ராஜபட்சவின் தனி உடமையானது.

ஐக்கிய தேசிய கட்சியில் அதிபராக இருந்த பிரேமதாசா 1993-இல்  மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, புதிய நட்சத்திரமாக உருவானார் ரணில் விக்கிரமசிங்கே. இவர் இலங்கை அரசியல்வாதிகளில் ஓரளவு நிதானத் தன்மை வாய்ந்தவராகவும், ஈழத் தமிழர்கள் மீது கரிசனை உடையவராகவும் உள்ளவர். இதனாலேயே சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளால் ஒதுக்கப்பட்டார்.

இருப்பினும், இலங்கை அரசியலில் ரணில் மட்டுமே நிலையான ஆற்றுப்படுத்துபவராக விளங்கி வந்திருக்கிறார். இவரது காலத்தில் தான் எல்டிடிஇ அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் உண்மையாக  நடைபெற்றன. அதனை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.

ராஜபட்சவிடம் இழந்த ஆட்சி அதிகாரத்தை மீட்க முடியாமல் ரணில் திணறி வந்தார். 2009-இல் எல்டிடிஇ அமைப்பை இறுதிப்போரில் வெற்றி கண்ட  ராஜபட்சவின் தலைமை முன்பு அவரது சிறந்த தலைமை எடுபடவில்லை.

இங்கு விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை அமலில் உள்ளது.  2004-ல் நடந்த தேர்தலில் பிரதமரான ராஜபட்ச, அடுத்த ஆண்டிலேயே அதிபர் தேர்தலில் குதித்து நாட்டின் அதிபரும் ஆனார். 2009 உள்நாட்டுப் போர்  வெற்றியால் அடுத்த ஆண்டு (2010)  நடைபெற்ற அதிபர் தேர்தலில் 1.90 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றார். இவரது பதவிக்காலம் இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், தனது பலம் மீதான அதீத நம்பிக்கையில் தேர்தலை முன்னதாக நடத்தி இப்போது தோல்வி கண்டிருக்கிறார் ராஜபட்ச.

இனக்குழு சிக்கல்கள்:

மயானமான முல்லைத் தீவு (2009)

இலங்கையின் பூர்வகுடிமக்களாக சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களுள் சிங்களர்களே பெரும்பான்மையர். மக்கள் தொகையில் 70 சதவீதத்துக்கு மேல் இவர்களே உள்ளனர். தமிழர்களின் இருப்பு 13 சதவிதம்.  முஸ்லிம்கள் 10 சதவிதம். பழங்குடிகள், மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பிறர் ஆவர்.

மொழியால் சிங்களமும், மதத்தால் பௌத்தமும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசு மொழிகளாக சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவை இருந்தாலும், தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள்.  யாழ்ப்பாண  நூலகம் எரிப்பு (1981)  போன்ற சகிப்பற்ற செயல்களில் ஈடுபடுவது பெரும்பான்மை சிங்களர்களின் சாகசமாக மாறிய காலகட்டத்தில் தான், 1977-இல் அங்கு துவங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ்ப் பகுதிகளில் வேரூன்றியது.

அதற்கு முன்னரே தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்த தமிழ் தேசிய கட்சிகள் இருந்தபோதும், எல்டிடிஇ  தனது வன்முறைப் பாதையால் மிக எளிதாக மைய இடத்தைப் பிடித்தது. ஆனால், அதன் தலைவர்களிடையிலான அதிகாரப் போட்டியால் அதன் நம்பகத் தன்மை குறைந்துபோனது.

ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்ட பங்காளிச் சண்டையாக எல்டிடிஇ-யின் வரலாறு மாறியதும் ஈழத் தமிழர்களின் கண்ணீர்க் கதைகளுள் ஒன்று. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் முலம் இந்திய மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் (1991) கொன்ற பிறகு, அதன் நம்பகத்தன்மையுடன் இந்திய ஆதரவும் குலைந்து போனது.

இலங்கையில் 1983-இல் நடைபெற்ற உள்நாட்டுக் கலவரத்தில் சுமார் 64,000 பேர் கொல்லப்பட்டனர். அந்தக் கலவரம் ‘கறுப்பு ஜூலை கலவரம்’ என்று  அழைக்கப்படுகிறது. தவிர, 2009 உள்நாட்டுப்  போரில் 1.50 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

போரை அடுத்து,  பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் அரசுப் படைகளால் இழுத்துச்  செல்லப்பட்டு மாயமாகினர். அவர்களின் நிலை என்னவென்று யாருக்கும் தெரியாது.  மேலும்,  லட்சக் கணக்கான தமிழர்கள் தங்கள் சொத்து,  இருப்பிடம், விவசாய நிலங்களை இழந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் ஊனமுற்றனர்; பல்லாயிரம் பெண்கள் விதவை ஆயினர்; பல்லாயிரம்  குழந்தைகள் அநாதை ஆயினர்.

சிங்களர்களிடையே  வலதுசாரி புத்த அமைப்புகளின் கரம் ஓங்கியுள்ளது. அதன் அரசியல் வடிவான ‘ஜாதிக ஹெல உறுமயி’ (ஜேஹெச்உ) கட்சி உள்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது. தவிர, அதிதீவிர இடதுசாரி அமைப்பாக உருவான ‘ஜனதா விமுக்தி பெரமுனா’ (ஜேவிபி)வும் புத்த அடிப்படைவாத அமைப்பாக மாறிப்போனது. இவ்விரு கட்சிகளும் எல்டிடிஇ-க்கு எதிரான வலதுசாரி அமைப்புகளாக குரல் கொடுத்தன. இக்கட்சிகளைப் பகைத்துக்கொண்டு சிங்கள பேரினவாத அரசியலை இலங்கையில் நடத்த முடியாது. இம்முறை இவ்விரு கட்சிகளுமே ராஜபட்சவுக்கு எதிராக அணி சேர்ந்தன.

ராஜபட்சவுடன் போராடிய தமிழர் தலைவர்கள்

இலங்கையில் மூன்றாவது பெரும் மக்கள் கூட்டம் இஸ்லாமியர்கள். இவர்கள் பொதுவாக ஈழத் தமிழர்களுடன் நல்லுறவு பேணுவதில்லை. ஆளும் சிங்கள பெரும்பான்மையினருடன் இணக்கமாக இருக்கவே முஸ்லிம் கட்சிகள் விரும்புகின்றன. இந்தியாவைப் போலவே இலங்கையின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அவ்வப்போது இரு வேறு அரசியல் அணிகளில் தஞ்சம் அடைவது வழக்கம்.

இதுவரை ஆண்ட சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணியிலும் அரசிலும் இடம் பெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன், சிறிசேனாவை  ஆதரித்தது. பொதுவாக ஈழத் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டையே முஸ்லிம் காங்கிரஸ் எடுப்பது வழமை. இம்முறை தான் அந்த நிலைப்பாடு மாறி உள்ளது.

ராஜபட்சவின் அரசில் முன்னாள் போராளியும் தமிழர் கட்சி ஒன்றின் தலைவருமான கருணா  இருந்தும், கூட, தமிழர்களின் ஒட்டுமொத்த விரோதத்தை ராஜபட்ச  பெற்றதால், தமிழர் பகுதிகளில் சிறிசேனாவுக்கு  ஆதரவாக காற்று  வீசியது.

தவிர,  வடக்கு மாகாண  முதல்வராக தேர்வான விக்னேஸ்வரனுக்கு பல தொல்லைகளை ராஜபட்ச அரசு அளித்து வந்ததும் தமிழர் வெறுப்புக்கு காரணமாயின. ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு  சிறிசேனாவுக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத் தக்கது.

மைத்திரி பாலாவின் எழுச்சி:

முன்னாள் அதிபரும் இந்நாள் அதிபரும்..(2014)

63 வயதான ‘பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேனா’ (சுருக்கமாக மைத்ரிபால சிறிசேனா) சுதந்திரா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். முன்னாள் அதிபர் சந்திரிகாவின் ஆதரவால் தான் அவரால் இத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடிந்துள்ளது. இவரும் சிங்கள அடிப்படைவாதியே.

1951-இல் பொல்லனறுவையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான சிறிசேனா, ஆரம்பகாலத்தில் இடதுசாரியாக ஜேவிபியில் இருந்தவர். அதனால் சிறைத் தண்டனையும்  பெற்றவர். பிற்பாடு இவரது அரசியல் பாதை மாறியது. 1979-இல் இலங்கை சுதந்திரா கட்சியில் சேர்ந்த சிறிசேனா, தனது தீவிரக் களப்பணியால் கட்சியில் முன்னிலைக்கு வந்தார். 2001-இல் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 2014 வரை இப்பதவியில் தொடர்ந்தார்.

சந்திரிகா அரசியலிலிருந்து விலகியபோது, அவரது அணியில் இருந்த சிறிசேனா முக்கியத்துவம் பெற்றார். 2005-ல் விவசாயத் துறை அமைச்சராகவும் 2010-இல் சுகாதாரத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று ராஜபட்சவின் உறுதுணையாக விளங்கினார். 2009-இல் நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின்போது அரசு சார்பில் ராணுவ விவகாரங்களைக் கையாண்டவர் இவரே.

ஆனால் கட்சிக்குள் ராஜபட்ச குடும்ப ஆதிக்கமும், ஆட்சியில் மிகுந்த அதிகாரத் தலையீடும், சிறிசேனாவை ராஜபட்சவிடமிருந்து விலகச்  செய்தன. அதிபர் தேர்தலில் ஒருவர் இரண்டுமுறை மட்டுமே போட்டியிட முடியும் என்ற இலங்கை அரசியல் சாசனத்தை தனக்காக ராஜபட்ச திருத்தியபோது அதை எதிர்த்து கலகக் குரல் கொடுத்தார். அதன் விளைவாக அரசில் ஓரம் கட்டப்பட்டார்.

இவர் மீது விடுதலைப்புலிகள் அமைப்பு பலமுறை தாக்குதலை நடத்தி இருக்கிறது. 2008-இல் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலில் சிறிசேனா அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். இவரும் ஈழத் தமிழர்கள் குறித்து நல்ல அபிப்பிராயம் உடையவர் அல்ல என்பது இதன்மூலம் தெரிகிறது. அதிபர் தேர்தலின் போது, ‘வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்படாது’ என்று வாக்குறுதி அளித்தவர் தான் சிறிசேனா.

ஆனால், சீனாவுடன் பல ஒப்பந்தங்களை ராஜபட்ச செய்துள்ளதை சிறிசேனா எதிர்த்து வந்துள்ளார். அதில் ஊழலும் தனிநபர் நலமும் இருப்பதாக அவர் சந்தேகிக்கிறார். எனவே தான், அதிபரானால், சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வேன் என்று அவர் தேர்தலில் பிரசாரம் செய்தார்.

குடும்ப ஆதிக்கம்: மு.க. பரவாயில்லை!

ராஜபட்சவுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடுகளால் சுதந்திரா கட்சியிலிருந்தும், அரசிலிருந்தும் வெளியேறிய சிறிசேனா, அனைத்துக் கட்சிகளின் பொது வேட்பாளரானார்.  ராஜபட்சவை வெல்ல முடியாமல் ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்கே தவித்தபோது, அவருக்கு உகந்த ஆயுதமாக வந்து கிடைத்தார் சிறிசேனா.

ராஜபட்சவின் நிகரற்ற ஆளுமையும், அதிகாரக் குவிப்பும் அவருக்கு போட்டியில்லாமல் செய்திருந்தன. கடந்த டிசம்பர் 2014 வரை இது தான் நிலை. விடுதலைப்புலிகளை வேரோடு அழித்தவர் என்ற பெருமையால் சிங்களர்களின் தனிப்பெரும் தலைவராக அவர் இருந்தார். ஆனால், அவருக்கு உள்ளூற எதிர்ப்பும் இருந்தது. அதை வெளிக்காட்ட முடியாமல் தவித்த மக்களுக்கு ஓர் கருவியாக அமைந்தார் சிறிசேனா.

அதனால் தான் அவரால் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான 25 கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக முடிந்தது; ஜேவிபி, ஜேஹெச்உ, முஸ்லிம் காங்கிரஸ்,  தமிழ்  தேசிய கூட்டமைப்பு போன்ற பல துருவக் கட்சிகளின் ஆதரவை அவரால் பெற முடிந்தது.  இது கிட்டத்தட்ட 1989-இல் ராஜீவுக்கு எதிராக வி.பி.சிங் இந்தியாவில் பிரதமரானது போன்றதே.

முன்னாள ராணுவ தளபதி சரத் பொன்சேகா முந்தைய தேர்தலில் (2010) தனக்கு எதிராகப் போட்டியிட்டதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை 2.5 ஆண்டுகாலம் ராஜபட்ச  சிறையில் இட்டதை இலங்கை ராணுவம் மறக்கவில்லை. விடுதலைப் புலிகளை ஒழித்த தளபதியான அவரை சிறுமைப்படுத்தியதை சிங்களர்கள் விரும்பவில்லை. அவரது ஆதரவு சிறிசேனாவுக்கு கிடைத்ததும் முக்கியமானது.

உண்மையில் சிறிசேனா ராஜபட்சவுடன் ஒப்பிட இயலாதவர். ஆனால், ராஜபட்சவின் அகந்தை, அதிகாரக் குவிப்பு, பேராசை, குடும்ப அரசியல் ஆகியவை காரணமாக ஏற்பட்ட மக்களின் வெறுப்புணர்வுக்கு வடிகாலாக சிறிசேனா உருவானது தான் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. ‘ராஜபட்சவே சிறிசேனாவை அதிபர் ஆக்கியுள்ளார்’ என்று சொன்னால் மிகையில்லை.

இலங்கை மக்களின் தீர்ப்பு:

மக்களின் ஜனநாயகப் பங்களிப்பு

இவ்வாறாக, ராஜபட்சவின் தனி ஆளுமை அதிகார மமதையாக திசை திரும்பிய நிலையில், இலங்கை அரசியல் களத்தின் பல பகுதிகளிலும் அதிருப்தி எழுந்த நிலையில் தான், முன்கூட்டியே தேர்தலை நடத்தினார்  ராஜபட்ச.

சிறிசேனா எதிர்த்தரப்பில் களம் இறங்காமல் இருந்திருந்தால், ராஜபட்ச மீண்டும் அதிபர் ஆகி இருப்பார். இலங்கையின் நற்காலம், சுயநல அதிபருக்கு எதிராக சுயநலமற்ற ஒருவராக சிறிசேனாவை காலம் காட்டியது. அரசிலிருந்து பதவியை துச்சமென தூக்கி எறிந்து வெளியேறிய அவரது தியாகமும் அச்சமின்மையுமே அவருக்கு புதிய பொறுப்பைக் கொடுத்தன.

2015, ஜனவரி 8-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஒட்டுமொத்த வாக்காளர்களில் 67 சதவீதம் பேர் வாக்களித்தனர். குறிப்பாக தமிழர்கள், முஸ்லிம்கள் மிகுந்த மாகாணங்களில் வாக்குப்பதிவு அதிகமாக (75- 80  சதவிதம் வரை) காணப்பட்டது.  அப்போதே ராஜபட்சவின் தோல்வி உறுதியாகிவிட்டது.

வாக்குப்பதிவு முடிந்த தினமே வாக்கு எண்ணிக்கையும் துவங்கி, மறுநாளே முடிவுகளும் வெளியாகின. ஜன. 9-இல் அதிகார மாற்றம் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி மிக இயல்பாக நிறைவேறிவிட்டது.

அதுவரை அசைக்க முடியாத அதிபராக இருந்த ராஜபட்ச,  கண்ணீருடன் தனது அதிகாரப்பூர்வ மாளிகையிலிருந்து வெளியேறினார். அவரது சகோதரர்கள் கோத்தபயவும் பாஸிலும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல். அவர்களது ஆதிக்கத்தால் தான் ராஜபட்சவின் நெருங்கிய கூட்டாளிகள் பலர் விலகிச் சென்றனர்.

அதிபர் தேர்தலில் 19 பேர் போட்டியிட்டாலும், ராஜபட்ச- சிறிசேனா இருவ்ரிடையில் தான் போட்டி நிலவியது. ஒட்டுமொத்த வாக்குகளில்,  51.28 சதவீதம் (62,17,162) பெற்று, 47.58 சதவீதம் வாக்குகளைப் பெற்ற  (57,68,090) ராஜபட்சவை பின்னுக்குத் தள்ளி, இலங்கையின் ஆறாவது அதிபரானார் மைத்ரிபால சிறிசேனா.

ஏற்கனவே அவர் அளித்த உறுதிமொழிப்படி புதிய பிரதமராக ரணில் விக்கிரம சிங்கவை நியமித்தார். இதன்மூலமாக, ராஜபட்சவின் பொம்மலாட்டத்தில் அகப்பட்ட பிரதமர் பதவியின் சுதந்திரமும் மீட்கப்பட்டுள்ளது. ராஜபட்சவால் நியமிக்கப்பட்ட திசநாயக்க ஜயரத்ன பிரதமர் பதவியில் இருந்தார் என்பதே அப்போது தான் தெரியவந்தது.

இதுதான் மக்களாட்சியின் மாண்பு. உலகின் பல்வேறு நாடுகளில் அதிகாரத்துக்காக மக்கள் கொன்று குவிக்கப்படும் நிகழ்வுகளைக் கண்டு நொந்து வருகிறோம். ஆனால், இலங்கை மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை சத்தமின்றி நிறைவேற்றி, ஆரவாரமின்றி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை ஏற்பதாக ராஜபட்சவும் அறிவித்திருக்கிறார்.

அழிவைத் தந்த அதிகார மமதை

அதைவிட மேலாக,  ராஜபட்சவின் திட்டங்கள் தொடரும் என்றும், ‘ஆறு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருப்பேன்: மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என்றும் அறிவித்திருக்கிறார் சிறிசேனா. இந்திய அரசியல் தலைவர்கள் பலருக்கும் கூட இதன்மூலம அற்புதமான அறிவுரைகளை அவர் வழங்கி இருக்கிறார்.

(இச்செய்தியைப் படிக்கும்போது, திமுகவில் நடந்த உள்கட்சித் தேர்தல் பற்றிய செய்திகளையும் பக்கத்திலேயே படிக்க நேர்ந்தது; தொடர்ந்து 11வது முறையாக திமுக தலைவராக மு.கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்).

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை பாரதப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். அதில் முத்தாய்ப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியிருக்கும் கருத்துகள் தான். “அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய இலங்கை மக்களுக்கு பாராட்டுக்கள். இதன்மூலம் ஒரு தனிநபரிடமிருந்த  அதிகாரத்தை இலங்கை மக்கள் மாற்றிக் காட்டியுள்ளனர்” என்று அவர் கூறி இருக்கிறார்.

காரணிகளும், கடமைகளும்:

நடிகர்கள் உதவியும் பயனில்லை

இந்தத் தேர்தல் முடிவுக்கு அடிப்படைக் காரணம் ராஜபட்ச மீதான வெறுப்புணர்வே. தனது சகோதரர்கள் கோத்தபய ராஜபட்ச (பாதுகாப்பு அமைச்சர்), பாஸில் ராஜபட்ச (பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்), சமால் ராஜபட்ச (சபாநாயகர்), மகன் நாமல் ராஜபட்ச (எம்.பி.) ஆகியோரின் கட்டுப்பாட்டில் சுதந்திரா கட்சியை கொண்டுசென்றதால்,  சிறிசேனா உள்ளிட்ட பல மூத்த தலைவர்களை இழந்தார் மஹிந்த ராஜபட்ச. கடைசி நேரத்தில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் நாடு திரும்பி, சிறிசேனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

குடும்ப அரசியல் மட்டுமல்லாது, அதிகார வேட்கை உடையவராகவும் ராஜபட்ச இருந்தார். தான் மீண்டும் அதிபர் ஆவதற்காக இலங்கை அரசியல் சாசனத்தைத்  திருத்தவும் அவர் தயங்கவில்லை. இதனால் சிங்கள மக்களிடையிலும் அவரது செல்வாக்கு சரிந்து போனது.

இவ்விஷயத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைத் தான் ராஜபட்சவுடன் ஒப்பிட முடியும். அவர் 1975-இல் கொண்டுவந்த நெருக்கடி நிலை போலவே கடைசி நேரத்தில் இலங்கையில் (தேர்தலில் தோல்வியுற்றதும்) கொண்டுவர முயன்றது தெரிய வந்திருக்கிறது. நல்ல வேளையாக இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதியும் ராணுவ தளபதியும் அதற்கு உடன்படவில்லை.

இலங்கைத் தமிழர்கள் மீதான தனது பாரபட்ச அணுகுமுறையை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. போர்க்குற்றங்கள் தொடர்பாக தன்னிச்சையான விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற அவரது 2010 தேர்தல் வாக்குறுதி  நிறைவேற்றப்படவில்லை. ஐ.நா. மனித உரிமை அமைப்பின் விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைக்கவே இல்லை.

இலங்கையின் தமிழர் மிகுந்த மாகாணங்களில் ராணுவ ஆக்கிரமிப்பை திட்டமிட்டு அவர் நிகழ்த்தினார். இன்று சுமார் ஒரு லட்சம் ஏக்கர் தமிழர்களின் நிலப்பரப்பு ராணுவத்தின் வசம் உள்ளது. தமிழர் பகுதிகளில் இந்து கோவில்களை அகற்றிவிட்டு புத்த விகாரைகளை அமைப்பது, சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவது ஆகிய பணிகளை அவர் இடையறாது செய்து வந்தார். வெளிப்பார்வைக்கு அமைதி விரும்பியாக நடித்தாலும், உள்ளூற சிங்கள பேரினவாதியாகவே அவர் இருந்தார். எனவே தான் ஒட்டுமொத்த தமிழர்களின் தேர்வாக சிறிசேனா உருவானார்.

முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற்ற கலவரங்களில் புத்தமதத்தினரின் ஆதிக்கத்தை ராஜபட்ச அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே அவரது கூட்டணியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியது. முஸ்லிம்களும் ராஜபட்சவுக்கு எதிராக அணிதிரண்டனர். மொத்தத்தில் பெரும்பான்மை சிங்களர்களின் அதிருப்தியோடும், சிறுபான்மை தமிழர்கள், முஸ்லிம்களின் வெறுப்பும் சேர, ராஜபட்ச தோல்வியுற்றார்.

சிறிசேனா: புதிய நம்பிக்கை .

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் ராஜபட்சவால் திட்டமிட்டு நடத்தப்பட்டன; ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் நிறுவன ஆசிரியர்  லசந்த விக்ரமதுங்க  உள்ளிட்ட – சுதந்திர சிந்தனையுள்ள பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். உலக அளவில் பத்திரிகை சுதந்திரம் மிகமும் குறைந்த நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டது. இதுவும் மக்களிடையே அதிருப்தி பெருகக் காரணம் ஆனது.

இவை எல்லாவற்றையும் விட, ராஜபட்சவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் அணிதிரண்டு, சிறிசேனாவை பொது வேட்பாளராக அறிவித்தது, இலங்கைத் தேர்தலில் திருப்புமுனை ஆகிவிட்டது.

நடந்தவை நல்லவையே. இனி என்ன செய்யப் போகிறார் புதிய அதிபர் சிறிசேனா? தனது முன்னாள் வழிகாட்டியான ராஜபட்சவிடமிருந்து எவ்விதத்தில் அவர் வேறுபடப் போகிறார்? உலகம் அவரை உன்னிப்பாக உற்று நோக்குகிறது.

இலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண  சுய ஆட்சியைப்  பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்;  குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும்.

இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும்.  இவை அனைத்தும் நடக்குமா?

நல்லது நடக்கும்  என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை?

.

44 Replies to “இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?”

  1. Surely, there will be no change in the policy of the present govt. Tamilians will continue to suffer thanks to the past Congress govt. of India.

  2. அருமையான தகவல்களை உள்ளடக்கிய கட்டுரையாக இருக்கின்றது. நன்றி.

  3. என்ன இருந்தாலும் இலங்கையின் 22 மாவட்டங்களில் ராஜபக்ச அவர்கள் வெற்றி பெற்றது 10 மாவட்டங்களில் .எதிரணி வெற்றி பெற்றது 12 மாவட்டங்களில் இந்த 12 மாவட்டங்களில் வட மாகாணத்தில் 3 மாவட்டமும் கிழக்கில் 3 மாவட்டமும் மலையகத்தில் 1 மாவட்டமும் மொத்தம் 7 மாவட்டங்கள் தமிழ் மக்கள் அதிகமாக செறிந்து வாழும் மாவட்டங்கள் மிகுதி 5 மாவட்டங்களே சிங்கள மக்கள் வாழும் மாவட்டங்கள்.அனால் ராஜபக்ச அவர்கள் வெற்றி பெற்ற அனைத்து 10 மாவட்டங்களும் சிங்கள மக்கள் வாழும் மாவட்டம். இதனால் ராஜபக்சே அவர்களின் ஆதரவளர்களான 10 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 மில்லியன் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான எண்ணம் உருவாகி இருக்கலாம்.எனவே இதை போக்கி தமிழ் சிங்கள தேசிய உறவை மேம்படுத்தி இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியது அனைவரின் கடமையாகும்.

    இலங்கை மட்டக்களப்பான்

  4. இந்த தைத் திருநாள் முதல் ஈழத் தமிழரின் வாழ்வில் புத்தொளி பரவட்டும். இந்த இனிய பொங்கல் திருநாள் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிப் பொங்கலினை கொண்டு வர எல்லாம் வல்ல சிவப் பரம்பொருள் துணை நிற்குமாக. மேலும், தமிழ்ஹிந்து வாசகர்கள் மற்றும் எனது அருமை நண்பர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் இனிய தை தமிழ் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  5. இலங்கை அரசியல் வரலாற்றின் ஒரு சிறு பகுதியை அழகாகக் கூறியுள்ளிர்கள் . நன்றி. சின்ஹல பவுத்த மேலாதிக்கம் ஆழமாகப் பரவி உள்ள நாட்டில் தமிழர்களுக்கு விடிவு கிடைப்பது நடக்காத ஒன்றே. அநாகரிக தர்மபால தொடக்கி வைத்த இன மத மொழி வெறி இன்று சின்ஹல மக்களின் மனதில் உணர்வில் இரத்தத்தில் இரண்டறக் கலந்து விட்டது . பவுத்தர்கள் இல்லாத இந்துக்கள் வாழும் பகுதிகளில் பௌத்த விஹரைகள் மூலைக்கு மூலை ராணுவத்தின் உதவியுடன் நிறுவப் படுகின்றன . அதற்கு புதிய சரித்திரமும் எழுதப் படுகின்றது .உதவி இல்லாத ஏழை இந்துக்களை கிறிஸ்தவர்கள் மத மாற்றம் செய்கின்றார்கள். மட இந்துக்களோ தானும் தன்பாடுமாய் உணர்வற்று வாழ்கின்றார்கள் . இதுதான் இன்றைய நிலை.

  6. அட டா …என்ன ஒரு இனிமையான விஷ கருத்துக்கள்,விஷங்களிநூடேயும் உண்மைகளை மறைக்க முடியவில்லை அல்லவா…?சிங்களனின் ராஜ தந்திரத்தில் தோற்றுப்போன அரசியல் கோமாளி ராஜீவின் ஆணவத்திற்கு அடிபணியாத விடுதலைப்புலிகள் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதி.ஆயுதத்தை எந்த ஒரு மனிதனும் விரும்பி ஏந்துவதில்லை,அகிமச்டையாக போராடிய ஈழத்து தந்தை செல்வநாயகாவின் போராட்டம் என்ன ஆனது..? ஏன் நண்பரே எழுதவே இல்லை,6 முறை புலிகளின் அரசியல் வழிகாட்டி அன்டன் பாலசிங்கம் அவர்கள் கோமாளி ராஜீவை தொடர்பு கொண்டு பேசியபோது…13 ஆவது சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை ஒப்பட்பைக்க சொன்னதை ஏன் எழுதவில்லை..?1991 ல் ராஜீவ் கொல்லப்பட்டதை வைத்து மட்டுமே புலிகளை குறை சொல்லும் வரலாற்று ஞானிகள் ஒரு வேலை அப்போது ராஜீவ் கொல்லப்படவில்லை என்றால் 2009ன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 1991 லேயே நடந்திருக்கலாம் என்பதை ஏன் குறிப்பிடவில்லை,…எல்லாம் போகட்டும் இந்தியா எதற்க்காக போராளிக்குழுக்களுக்கு பயிற்சி கொடுத்தது… அதை ஏன் எழுதவில்லை… இந்தியாவின் எடுபிடி கூலிப்படையாக தமிழ் போராளிகள் இருக்க வேண்டும் என்று இந்தியா நினைத்தது… ஆனால் தமிழீழ சுதந்திரம் என்ற ஓரை மட்டுமே குறிக்கோளாக கொண்டி புலிகள் இயக்கம் இயங்கியது என்பதை ஏன் குறிப்பிடவில்லை..?நண்பரே இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் …ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயரை லண்டன் மாநகரத்திற்கு தேடி சென்று துப்பாக்கியால்; சுட்டு கொன்ற உத்தம் சிங் இந்திய சுதந்திர வரலாற்றில் மாவீரன் என்று எனக்கு வரலாற்று பாடம் சொன்னது,நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தின் பெருமைகளை பீற்றியது இந்திய வரலாறு,ஆனால் புலிகள் மட்டும் பயங்கரவாதிகள்…?சரி…இந்தியனுக்கு தமிழீழத்து தமிழர்களை பற்றி பேசவோ அல்லது எழுதவோ யோக்கியதை இருக்கிறதா..? இந்தியாவின் சுதந்திரத்திற்க்காக ராணுவம் அமைத்து போராடிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் என்ன ஆனார் என்பது தொடர்பில் 41 ஆவணங்கள் டில்லி அரசாங்கத்திடம் இருக்கிறதாம் அதை வெளியிட்டால் அந்த நாடுகளுடனான உறவு பாதிக்கப்படுமாம்…ஆஹா…. என்ன ஒரு பதில் இது…இந்திய மக்களுக்காக போராடிய ஒரு தலைவனை பற்றிய குறிப்புகளை வெளியிட்டால் வெளிநாட்டுகளுடனான உறவுகள் பாதிக்கப்படுமாம்…சுதந்திர இந்திய அரசாங்கத்துடனான இந்தியாவி மக்களுடனான உறவு எக்கேடு கேட்டால் என்ன என்ற நிலையில் இருக்கும் ஒரு நாட்டில் பிறந்த கொடுமைக்கு ..நாமெல்லாம் தமிழீழ தமிழனை பற்றி பேசலாமா..?….தமிழீழம் உறுதியாய் பிறக்கும்,13ஆவது சட்டதிருத்தம் ஒன்றும் நியாயமானதல்ல..தமிழர்கள் தங்கள் சுதந்திரத்தை அடைந்தே தீருவார்கள் என்று சொன்ன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ..அவர்களுக்கு நன்றி… தமிழீழம் தொடர்பில் சர்வதேச அரசியல் போக்கு மாற்றம் பெறும் நேரம்.. தமிழீழத்தை தமிழர்கள் நிர்மானித்துகொள்வார்கள் அங்கே இருக்கும் ஒவ்வொரு தமிழனும் புலி தான்.. அங்கே இருக்கும் ஒவ்வொரு சிங்களனும் சிங்கள ராணுவம் தான்,பங்களாதேஷ் இந்தியா பாகிஸ்தான் போர் நினைவிருக்கிறதா..?அப்போது பாகிஸ்தான் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி உதவியது சிங்களம் தான் தெரியுமா…இந்தியாவின் மீனவனை காப்பாற்ற திராணியற்ற ஒரு தேசத்தி பிறந்த நமக்கு.. தமிழீழ தொடர்பில் ஆராய்ச்சி தேவையா…தகுதி இருக்கிறதா… இந்தியா என்றுமே சிங்களனுக்கு இளிச்ச வாய் நாடுதான் இது வரலாறு எனது இந்த பதிலுரை..இது தொடர்பில் பிரசுரிக்கப்படாது என்று நம்புகிறேன்… ஏனெனில் சிங்களனுக்கு இங்கவே முதல் அல்லக்கை ஹிந்து,தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தான் ..நன்றி

  7. mortin அவர்களுக்கு நன்றி. மிக ஆணித்தரமாக உங்கள் கருத்துக்களை முன்வைத்தீர்கள். மிகவும் மேம்போக்கான ஒரு கட்டுரை. இருந்தும் புலிகள் பற்றிய உண்மைக்குப் புறம்பான தகவல்களை கட்டுரையாளர் மிகுந்த கரிசனையோடு சேர்த்திருக்கிறார். அதே நேரத்தில் விடுதலைப் புலிகளின் அழிவுக்குக் காரணமான துரோகி கருணாவை தமிழர் கட்சி ஒன்றின் தலைவர் என்றும் வர்ணிக்கிறார். அதுவும் உண்மையல்ல. அவர் சுதந்திரக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு அதன் உப தலைவர்களில் ஒருவராக உள்ளார் என்பதையும் இவர் அறிந்திருக்கவில்லை. இது ஒன்றே போதும் இக் கட்டுரையின் ஆழத்தை அறிய. மேற்கொண்டும் விமர்சிக்க தகுதியானதல்ல இக்கட்டுரை. நன்றி.

  8. தமிழ் ஹிந்து இலங்கையில் ஜனநாயக அடிப்படையில் உள்ள கட்சிகளை தமிழர்களுடையதோ, சிங்களவர்களுடையதோ அங்கிகரிக்க வேண்டும். பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலை புலிகளை அதன் உழுத்து போன தமிழீழம் நாடு அமைப்பது கொள்கைளை இன்னும் பிரசாரபடுத்த இடமளிப்பது தீமை பயக்கும். தமிழர்களிடம் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற தமிழர் கூட்டமைப்பு இன்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயுடன் கை கோர்த்து செயல்படுகிறார்கள் என்றால் அவர்களால் இவ்வளவு சுதந்திரமாக செயல்பட காரணம் பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலை புலிகளை ராஜபட்ச ஒழித்ததினாலே ஏற்பட்டது என்பதை மறந்துவிட கூடாது. ராஜபட்சவின் பயங்கரவாத ஒழிப்பு சாதனை என்பதை மறுக்க முடியாது என்பதை ரணில் விக்ரமசிங்கேயும், சிறிசேனாவும் குறிப்பிட்டுள்ளனர்.

    2009 உள்நாட்டுப் போரில் 1.50 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர் ,
    15 கோடி தமிழர்கள் கொல்லபட்டனர் என்று பிரசாரம் செய்யலாம்,உண்மை இறுதி புயுத்தத்தில் தமது பாதுகாப்பிற்காக தமிழ்மக்களை பயண கைதிகளாக தமிழீழ விடுதலை புலிகள் பிடித்து வைத்து யுத்தம் செய்ததினால் பொருந்தொகை தமிழர்கள் கொல்லபட்டனர். தமிழீழ விடுதலை புலிகள் இலங்கை தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட தமிழர்களை தொடர்ச்சியாக கொலை செய்தே வந்துள்ளனர். இதன் காரணமாக தமிழர்கள் தமது நாட்டு தலைவர்களுடன் பிரச்சனைகளை பேசவே பயந்தனர்.தமிழீழ விடுதலை புலிகள் பயங்கரவாதம் ஒழித்ததினாலேயே இலங்கை தமிழ் தலைவர்கள் தமது நாட்டு தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட முடிகிறது.
    புலிகள் தமிழர்களை பயணகைதிகளாக பிடித்து வைத்திருந்து இலங்கை இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய முல்லிவாய்க்கால் தவிர்ந்த வேறு எந்த பகுதிகளிலும் தமிழர் எவரும் கொல்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  9. ஸ்ரீலங்காஹிந்து என்பவர் இங்கே எழுதியிருக்கும் கருத்துக்கள் தமிழ் நாட்டு மக்களை தவறான புரிதலுக்கு இட்டுச் செல்வதாக இருக்கின்றபடியால் அது தொடர்பான எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்.

    முதலாவதாக விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல. தனக்கென நிலப் பிரதேசத்தையும் வெளிப்படையான படைக் கட்டுமானத்தையும் கொண்டு மக்கள் ஆதரவுடன் போராடிய ஒரு அமைப்பை பயங்கரவாதிகள் என வரையறுப்பதில்லை. மாறாக அவர்கள் விடுதலைப் போராளிகள், அல்லது கெரில்லாக்கள் என அழைக்கப்பட வேண்டியவர்கள்.

    மேலும் தமிழீழம் என்ற தனி நாட்டுக் கொள்கையை முதன் முதலில் முன்வைத்தது புலிகள் அல்லர். மாறாக தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த தந்தை செல்வநாயகம் அவர்களாவார். இன்றைய தமிழ்க் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி முக்கிய கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்க் கூட்டமைப்பை உருவாக்கியது விடுதலைப் புலிகளாவர். மிதவாதக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் , முன்னாள் ஆயுத அமைப்புகளாக இருந்த டெலோ, ஈ.பீ.ஆர்.எல்.எப் பிரேமசந்திரன் அணி என்பவற்றை ஒருங்கிணைத்து தமிழ்க் கூட்டமைப்பு 2001 இல் உருவாக்கப்பட்டது. அப்போதிலிருந்து விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்க் கூட்டமைப்பே தமிழர் பிரதேசங்களில் எல்லா தேர்தல்களிலும் வென்று வருகிறது. இன்றும் விடுதலைப் புலிகளின் குரலாகவே தமிழ்க் கூட்டமைப்பு இயங்கி வருகிறது.

    மேலும் இப்போது வெற்றி பெற்றுள்ள அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பு மட்டுமல்லாது ராஜபக்சேயும் ஆதரவு அளிக்கிறார் என்பது குறிப்பிடப் படவேண்டியதாகும். எனினும் எந்த ஒரு அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொள்ள தமிழ்க் கூட்டமைப்பு தயாரில்லை என்பதுவே உணமையாகும்.

    தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய அமைப்பாக இலங்கை அரசுடன் சமமான இராணுவ பலத்தை வைத்துக் கொண்டு 2002 இலிருந்து பேச்சுக்களை நடத்தியது விடுதலைப் புலிகள் அமைப்பாகும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு தமது அங்கீகாரத்தை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    இப் பேச்சு வார்த்தைகளை புலிகள் இயக்கத்தைப் பலவீனப் படுத்த எல்லா வழிகளிலும் பயன்படுத்தினார் அப்போதைய பிரதமர் ரணில். இதற்கு முழு ஒத்தாசைகளையும் வழங்கியது மத்திய காங்கிரஸ் அரசாகும். புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதியாக இருந்த கருணாவை பிரதேசவாதம் பேசவைத்தும் பணம் மற்றும் பெண்ணாசையைக் காட்டியும் பிரித்தனர். இப்பிரிவால் 40% போராளிகளை புலிகள் இழந்தனர். இதுவே புலிகள் அமைப்பு அழிவடைய முக்கிய காரணியாக இருந்தது.

    இதன் பின் ஆட்சிக்கு வந்த ராஜபக்சே சமாதான பேச்சுக்களை விட போருக்கே முன்னுரிமை வழங்கினார். ஏற்கனவே பலவீனமடைந்து விட்ட புலிகளை இந்தியா, சீனா, பாகிஸ்தான் , மற்றும் பல உலக நாடுகளின் ஆயுத உதவியோடும் பல்வேறு சதிகளோடும் அனைத்துப் போர்மரபுகளையும் மீறி “வென்றார்”.

    புலிகள் இலங்கை அரசுடன் பேச்சுக்களை நடத்திய தலைவர்களை தொடர்ச்சியாக கொன்றனர் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. ஏனெனில் ஜெயவர்தனே காலம் தொட்டு ராஜபக்சே காலம் வரை எல்லா அரசுகளுடனும் புலிகள் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றனர். அமிர்தலிங்கம் போன்றவர்கள் தனி நாட்டுக் கொள்கையைக் கைவிட்டபடியால் துரோகிகளாகக் கருதப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

    மக்களை மீட்கும் போர் என்ற பெயரிலேயே இலங்கை அரசு இறுதி யுத்தத்தை நடத்தியது. முதன்முதலில் 1987 இல் இவ்வாறான படை நடவடிக்கை operation libaration என்ற பெயரில் இலங்கை அரசால் வடமராட்சி பிரதேசத்தில் நடாத்தப் பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்தே இந்திய அரசு நேரடியாக தலையிட்டது. 1989 வரை இலங்கையில் இருந்த இந்தியப் படை புலிகளுக்கெதிராகப் போரிட்டது.அப்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டனர்.

    இதன் பின் 1990 இலிருந்து இலங்கைப் படைகள் புலிகளுக்கெதிராகப் போரிட்டனர். ஒவ்வொரு ராணுவ நடவடிக்கைகளின் போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எறிகணை(ஷெல்) வீச்சுக்களாலும் விமானக் குண்டுகளாலும் மக்கள் கொல்லப்பட்டனர். இராணுவம் எதாவது ஒரு இடத்தை புலிகளிடம் இருந்து கைப்பற்றினால் அங்கே வாழும் இளைஞர்களைப் பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றது. பெண்களைக் கற்பழித்தது. இதனால் இராணுவத்தின் பிடியில் சிக்க எந்த தமிழ் மக்களும் தயாராக இருக்கவில்லை. ஆதலால் பொதுமக்கள் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்திலேயே வாழவிரும்பினர். புலிகள் பின்வாங்க நேர்ந்தால் மக்களும் அவர்களுடன் சேர்ந்து சென்றனர்.

    1995 இல் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் இராணுவ நடவடிக்கையை எடுத்தார். 5 இலட்சம் மக்கள் புலிகளுடன் சேர்ந்து வன்னிப் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர். வடமராட்சி மற்றும் தென்மராட்சியில் புலிகள் போரிடாது பின்வாங்கியதால் அந்தப் பகுதி மக்கள் அங்கேயே இருந்தனர்.அந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றிய இராணுவம் பல நூறு மக்களை விசாரணைக்கெனப் பிடித்துச் சென்று அவர்களில் பலரை செம்மணி என்ற இடத்தில் கொன்று புதைத்தனர். இது போலவே வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களிலும் ராணுவத்தால் கொன்று புதைக்கப் பட்ட தமிழர்களின் புதைகுழிகள் உண்டு. சில கண்டுபிடிக்கப்பட்டும் முறையான விசாரணைகள் நடத்தப் படுவதில்லை.

    இறுதி யுத்தம் முதலில் கிழக்கில் தொடங்கியது. புலிகள் பின்வாங்கிச் சென்று வாகரை என்ற இடத்திலுருந்து போரிட்டனர். அதுவே அங்கே இறுதியாக இராணுவத்தால் பிடிக்கப் பட்ட இடமாகும். மக்களும் அவர்களுடனேயே சென்றிருந்தனர். இராணுவம் கடுமையான எறிகணைத் தாக்குதலை நடத்தியது. பல நூறுமக்கள் கொல்லப்பட்டனர். இதைக் கண்ட ஏனைய மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்றனர். மக்கள் மீது மரண பயத்தை ஏற்படுத்தி அவர்களை புலிகளிடம் இருந்து பிரித்து புலிகளைத் தனிமைப்படுத்துதலே இராணுவத்தின் உத்தியாக இருந்தது. இதையே மக்களை மீட்கும் போர் என இலங்கை அரசு வர்ணித்தது. தம்மிடம் வேறு வழியின்றி வந்து சேர்ந்த மக்களை சிறைப் படுத்தி சித்திரவதை செய்தது. பலரைக் கொலை செய்தது.பெண்களைக் கற்பழித்தது.

    வடக்கில் மன்னார், கிளிநொச்சி. முல்லைத்தீவு இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை பல மாதங்களாக நடந்த போரில் தமது உயிரைக் கையில் பிடித்தபடி தமது பாதுகாவலர்களான புலிகளுடன் பலமாதங்களாக இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து சென்று மேலும் இடம்பெயர முடியாமல் கடல் தடுக்க அங்கேயே தங்கிய மக்களை அனைத்து சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் வெளியேற்றி விட்டு இரவு பகல் பாராமல் கடும் எறிகணைத் தாக்குதல் நடத்திக் கொன்று குவித்தது இலங்கை ராணுவம். வைத்திய சாலைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியது. தொண்டு நிறுவனங்கள் அந்தப் பிரதேசங்களுக்கு உணவு எடுத்துச் செல்வதை தடுத்தது. மருந்துகளைத் தடுத்தது. இவ்வாறாக இனக்கொலையை செய்து முடித்தது.

    இராணுவம் அது இந்திய ராணுவமாக இருந்த போதும் இலங்கை ராணுவமாக இருந்த போதும் அவை அன்னியப் படைகள். வேற்றுமொழி பேசுவோர். புலிகள் மண்ணின் மைந்தர்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க தம் உயிர்களைக் கொடுத்து எமக்காகப் போரிட்டவர்கள்.அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர். அவர்கள் எம் உறவினர். அவர்கள் எம் நண்பர்கள், எம் பிள்ளைகள், எம் இரத்தங்கள். அவர்களுக்கான மதிப்பு எப்போதும் எம் நெஞ்சில் உள்ளது. நன்றி.

    பின் இணைப்பாக சந்திரிகா அம்மையார் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரபாகரன் பெயரைச் சொன்னபோது எழுந்த கரவொலியைக் காணுங்கள்.https://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&v=T75RevgIzG4&x-yt-cl=84503534

  10. பேரன்பிற்குரிய ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களுக்கு மிகவும் காலம் கடந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ஈழத்தில் ஒருங்கிணைந்த தமிழ் சக்தி குறைந்த பக்ஷமாகவேனும் சரி தம்மால் சாதிக்க முடிந்தது என்ன என்பதை நடந்துமுடிந்த தேர்தல்கள் நிரூபணம் செய்துள்ளன என்றால் மிகையாகாது.

    வடக்கு மாகாண முதல்வர் ஸ்ரீமான் விக்னேஸ்வரன் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் நிதர்சனத்தை மிக யதார்த்தமாக விளக்கிக் கூறியுள்ளார். ஒன்று….. ஆட்சியிலிருக்கும் ஸ்ரீ ராஜபக்ஷேவின் சர்க்கார் அகற்றப்பட வேண்டும் மற்றும் மாற்று சர்க்கார் ஆட்சிக்கு வர வேண்டும். இரண்டு மாற்று ஏற்பாடான ஸ்ரீ மைத்ரிபால சிறிசேனாவின் சர்க்காரிடமிருந்து மிகப்பெரும் அளவில் ஏதும் எதிர்பார்ப்புகள் இல்லை. ஆயினும் பொதுவில் விளக்கவொண்ணா புரிதல்கள் இருப்பதாகப் பகிர்ந்தார்.

    கிழக்கு மாகாணம் சம்பந்தமாக ஸ்ரீ சம்பந்தன் அவர்கள் ஸ்ரீ சிறிசேனா அவர்களை சந்தித்துப் பேசியதில் தமிழ்க்கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தில் அரசாட்சி ஏற்க உரிமை கோருவதில் ஞாயம் இருப்பதனை ஸ்ரீ சிறிசேனா அவர்கள் பகிர்ந்தமை சரியான நிலைப்பாடு. இது செயல்பாட்டில் நிகழ்ந்தால் மிக முக்யமான முன்னகர்வாக இருக்கும்.

    மாகாணங்களுக்கு முறையான அதிகாரப்பகிர்வு ஹிந்துஸ்தானத்தைப் போன்று ஸ்ரீ லங்காவிலும் நிகழ்ந்தால் அது மிகப்பெரும் முன்னகர்வாக இருக்கும். கதிர்காமத்துறை கந்தவேள் இந்த ஆங்க்லப்புத்தாண்டில் ஈழத்தில் அமைதி தழைக்க அருளவேண்டுமாறு இறைஞ்சுகிறேன்.

  11. //இராணுவம் அது இந்திய ராணுவமாக இருந்த போதும் இலங்கை ராணுவமாக இருந்த போதும் அவை அன்னியப் படைகள். வேற்றுமொழி பேசுவோர். புலிகள் மண்ணின் மைந்தர்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க தம் உயிர்களைக் கொடுத்து எமக்காகப் போரிட்டவர்கள்.அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர். அவர்கள் எம் உறவினர். அவர்கள் எம் நண்பர்கள், எம் பிள்ளைகள், எம் இரத்தங்கள். அவர்களுக்கான மதிப்பு எப்போதும் எம் நெஞ்சில் உள்ளது. நன்றி.//

    மிகவும் தீர்க்கமான வரிகள்… புலிகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் இங்கிருக்கும் புல்லுருவிகள் எப்பொழுது தான் திருந்துவார்களோ? எம்பெருமானின் ஈசனின் அருளால் தமிழீழம் விரைவாக அமையுமாக….

  12. இலங்கையில யாழ்பாண தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரபாகரன் பெயரைச் சொன்னபோது மக்கள் கூட்டத்தில் இருந்த ஒரு சிறு குழு கரவொலி செய்தது. தமிழ் மக்களிடையே மிக சிறிய எண்ணிக்கையினருக்கு பயங்கரவா அமைப்புகள் மீது ஒரு கவர்ச்சி இருக்கிறது. தமிழகத்தில் கூட மிக சிறிய எண்ணிக்கையினர் ISIS,பிரபாகரன் ,சேகுவேரா படம் போட்ட ரிசேட் அணிந்ததை கவனத்தில கொள்ளலாம்.பொறுப்புள்ளவர்கள் பயங்கரவாத அமைப்புகளை பிரசாரபடுத்த அனுமதிக்க கூடாது.

  13. அன்பின் க்ருஷ்ணகுமார்,
    தங்கள் நல்லெண்ணபடி எல்லாம் நல்ல படியாக நடக்கும் ,ஆனால் பாரதத்தில் உள்ள பயங்கரவாத ஆதரவு பிரிவினை சக்திகள் தமிழீழம் என்று குழப்பங்கள் விழைவிக்காமல் இருக்க வேண்டும்.

  14. திரு கிருபா அவர்கள் மேலே எழுதியதை இன்றுதான் படிக்க நேர்ந்தது. அமைதி வழியில் போராடிய ஈழத்தலைவர் அமிர்தலிங்கத்தை படுகொலை செய்த பிரபாகரன் தீவிரவாதி தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மேலும் இந்தியாவில், தமிழகத்தில் வந்து முன்னைநாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்த கொலைகாரன் தான் பிரபாகரன்.

    இந்திய ராணுவம் இலங்கையில் 1987-89 காலக் கட்டத்தில் பல அடக்குமுறைகளையும், கொடுமைகளையும் செய்தது என்று ஒரு குற்றச்சாட்டை புலிகளின் ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். அமைதிப்படை ஏதேனும் தவறு செய்திருந்தால் , அதனைப்பற்றி ராணுவநீதிமன்றத்தில் புகார் அளிக்கவேண்டும். அதுதான் முறை. வரம்புமீறி செயல்படும் பல ராணுவவீரர்களை இந்திய ராணுவ நீதிமன்றங்கள் விசாரித்து தண்டனை கொடுத்துள்ளன.

    மேலும் ரஷ்யாவில் 1917-இல் புரட்சி நடந்து கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்தனர். அப்போது சுமார் 10- கோடி ரஷ்யர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக லெனினை படுகொலை செய்வதா ?

    செஞ்சீனாவில் 1949 மற்றும் 1969 ஆகிய ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் புரட்சி மற்றும் கலாசாரப்புரட்சி என்று பெயரில் கோடிக் கணக்கான அப்பாவி சீனப்பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக மாவோவை படுகொலை செய்யவேண்டும் என்று சொல்வதா ?

    சிங்களர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து ஈழத்தமிழர்கள் போராடுவது அவர்களின் உரிமை மற்றும் கடமை. ஆனால் உடன்பிறந்த அமைதிவழிப்போராளிகலையே கொன்ற கொலைகாரன் பிரபாகரன். அமிர்தலிங்கத்தை கொன்ற முட்டாளை, வெறியனை வேறு என்ன சொல்வது ?

    விடுதலைப்புலிகள் என்ற வன்முறை அமைப்பினை சேர்ந்தவர்கள் போரில் தோற்றது அவர்களே தங்கள் தலையில் போட்டுக்கொண்ட மண். அப்பாவி சிவிலியன்களை அழித்த ராஜபக்ஷேவும், அவனுக்கு துணை நின்ற சில தமிழ் நாட்டு எட்டப்பர்கள் குடும்பமும் , இந்த எட்டப்பர்களுக்கு துணை நின்ற மத்தியக் காங்கிரஸ் கட்சியும் அவர்கள் செய்த பாவங்களுக்கு தக்க தண்டனையை அனுபவிப்பார்கள். புலிகளின் செயல்களை நியாயப்படுத்த முனைவது கிருபா போன்றவர்களின் தற்கொலை முயற்சி மட்டுமே.

  15. // புலிகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் இங்கிருக்கும் புல்லுருவிகள் எப்பொழுது தான் திருந்துவார்களோ?//

    பேட்டை ரவுடியை “தேவர் காலடி மண்ணே..” என்று நீங்கள் வேண்டுமானால் தூக்கி வைத்துக்கொள்ளுங்கள் . எங்களுக்கு புல்லுருவி பட்டம் பெருமையே.

    //எம்பெருமானின் ஈசனின் அருளால் தமிழீழம் விரைவாக அமையுமாக….//

    தமிழீழம் அமைந்தால் தமிழக மீனவர்களை ‘ வாங்க இங்கே வந்து எங்க கரை கிட்டேயே மீன் பிடிச்சிட்டு போங்க ‘ என்று இலங்கைத் தமிழர்கள் சொல்வார்கள் என – நீங்கள் ஒருவேளை நம்பினாலும் நம்பலாம் – புலிகள் மண்ணின் மைந்தர்கள் என் கொண்டாடும் அந்த கிருபா என்ற அன்பர் உத்தரவாதம் கொடுப்பாரா ?

    உலகமெங்கும் வன்முறை அதிகமானால்தான் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் மேற்கத்திய கம்பனிகளின் வியாபாரம் பெருகும். அதற்காக அவர்கள் நம் போன்ற நாடுகளில் சண்டை ஓயாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
    இது உங்களுக்கு புரிகிறதோ இல்லையோ ஈசனுக்கு நன்றாகத் தெரியும்.

  16. இராஜபக்ஷேவை வீழ்த்திய சிறிசேன எந்த மாதிரியான தலைவராக இருப்பார் என்கிறது பொறுத்திருந்து பார்க்க வேண்டியது ஒன்று. ஆனால் என்னவாக இருந்தாலும் இராஜீவை கொன்ற புலிகளை ஆதரிப்பது இந்த நாட்டிற்கு செய்கிற திரோகமாக கருதப்படும். காங்கிரஸை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் இந்திய நாட்டின் பிரதமர். புலிகளை, ஹமாஸ் , ஐஎஸ் இயக்கங்கள் இடையே வித்தியாசம எதுவும் கிடையாது

  17. //திரு கிருபா அவர்கள் மேலே எழுதியதை இன்றுதான் படிக்க நேர்ந்தது. அமைதி வழியில் போராடிய ஈழத்தலைவர் அமிர்தலிங்கத்தை படுகொலை செய்த பிரபாகரன் தீவிரவாதி தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.//

    தாயே!!! இது உங்களுக்கே அபத்தமாக தெரியவில்லையா? அமிர்தலிங்கத்தை மட்டும் கூறினீர்கள் இன்னும் படுகொலை செய்யப்பட சிறிசபாரத்தினம் மேலும் பலரையும் விட்டுவிட்டீர்களே அது ஏன்? சரி இவர்களை எல்லாம் பிரபாகரன் ஏன் கொன்றார்? சும்மா பொழுதுப்போக்குக்காக செத்து செத்து விளையாடலாம் என்பதற்காகவா? 13ஆவது அரசியல் சட்டம் என்பது வெறும் கண்துடைப்பு சீர்திருத்தம் மட்டுமே. ஆகையால் அதை ஈழ மக்களும், புலிகளும் கடுமையாக எதிர்த்தார்கள். தனி ஈழம் மட்டுமே நிரந்தர தீர்வு என்பதை முழுமையாக உணர்ந்தவர்கள் ஈழ மக்களும், விடுதலை புலிகள் அமைப்பும்.ஆனால் அமிர்தலிங்கம் போன்றவர்கள் திரைமறைவில் சிங்கள அரசுடன் இணைந்து தனி ஈழத்திற்கு எதிராக 13வது சட்ட திருத்தம் என்னும் கூட்டு சதியினை அரங்கேற்ற முயன்றதால் தமிழ் ஈழ தலைவர்கள் கொடுக்கப்பட்ட தண்டனை அது!!!! உண்மை என்னவென்றால் அது படுக்கொலைகள் அல்ல, களையெடுப்பு. ஆகவே , இதுப் போன்ற இத்துப் போன வாதங்களை எல்லாம் இனி தயவே செய்து நீங்கள் முன்னெடுக்க வேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்…

    //அமைதிப்படை ஏதேனும் தவறு செய்திருந்தால் , அதனைப்பற்றி ராணுவநீதிமன்றத்தில் புகார் அளிக்கவேண்டும். அதுதான் முறை. வரம்புமீறி செயல்படும் பல ராணுவவீரர்களை இந்திய ராணுவ நீதிமன்றங்கள் விசாரித்து தண்டனை கொடுத்துள்ளன.//

    இந்திய ராணுவம் என்னும் பொரிக்கிப் படை காசுமீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் போட்ட ஆட்டங்கள் எத்தனை என்று காசுமீரின் அப்பாவி இசுலாமியர்களிடமும் வட கிழக்கு மக்களின் மீதும் கட்டவித்து விட்ட காட்டுத் தனமான அடக்கு முறைகளை எத்துனை என்று தங்ஜம் மனோரமாவின் சிதையில் இருந்து நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம் அல்லது பல ஆண்டுகளாக உண்ணா நோன்பு இருக்கும் ஐரோம் ஷர்மிலாவிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். இது வரை நடந்த அத்துமீறல் குற்றங்களுக்காக இந்திய ராணுவத்தை சேர்ந்த எத்துனை பேருக்கு தண்டனை வழங்க பட்டிருக்கிறது என்று கூறினால் நான் தன்யன் ஆவேன்.

    சும்மாவா கூறினார் லெனின் ராணுவத்தைப் பற்றி ” ஊதியம் பெரும் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட கூலிப் படை” என்று.

  18. திருமதி. அத்விகா ….

    //அரங்கேற்ற முயன்றதால் தமிழ் ஈழ தலைவர்கள் கொடுக்கப்பட்ட தண்டனை அது!!!!//

    “எமது தமிழ் ஈழ தலைவரால் கொடுக்கப்பட்ட” என்று படித்துக்கொள்ளவும்.

  19. ஆசிரியர் குழுமத்தின் கவனத்துக்கு:

    திரு தாயுமானவனின் இந்திய ராணுவத்தைப் பற்றிய விமரிசனம் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் எழுதப் பட்டு இருக்கிறது. தயவு செய்து கண்டனமாவது தெரிவிக்கவும்.

  20. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

    மிகக் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய மற்றும் உண்மைக்குப் புறம்பான சொல்லாடல்கள்……….. விவரணைகள்.

    \\ இந்திய ராணுவம் என்னும் பொரிக்கிப் படை காசுமீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் போட்ட ஆட்டங்கள் எத்தனை என்று காசுமீரின் அப்பாவி இசுலாமியர்களிடமும் வட கிழக்கு மக்களின் மீதும் கட்டவித்து விட்ட காட்டுத் தனமான அடக்கு முறைகளை எத்துனை என்று தங்ஜம் மனோரமாவின் சிதையில் இருந்து நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம் அல்லது பல ஆண்டுகளாக உண்ணா நோன்பு இருக்கும் ஐரோம் ஷர்மிலாவிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் \\

    CHEAP AND UNFOUNDED STEREOTYPING.

    லத்தாக் முதல் ஜம்மு வரை ஆறு வருஷம் சிவிலியனாக ஜம்மு காஷ்மீரத்தில் உத்யோகத்தில் இருந்திருக்கிறேன். ராணுவத்தினருடனும் பொதுமக்களுடனும் (ஜம்மு, லத்தாக், காஷ்மீரம் என்ற மூன்று ப்ராந்தியத்திலும்) நட்புடன் பழகியிருக்கிறேன்.

    லத்தாக்கிலிருந்து மதறாஸ் வரவேண்டுமானால் ……………… அது சிவிலியனாக இருக்கட்டும் ராணுவத்தினராக இருக்கட்டும்………….. தங்கள் பணியிடம்………… இயற்கை போன்ற எத்தனை தடைகளைக் கடந்து ஒருவர் வரவேண்டும் என்பதனை நிதர்சனமாக வாழ்வில் பல முறை அனுபவித்தவன்.

    பல முறை ரயில் பயணத்தில் ……..ராணுவ துணை ராணுவத்தினருடன் ……….. அவர்களது மது அருந்தும்……….. புகை பிடிக்கும் விஷயங்களில் வாக்கு வாதங்கள் கூட எனக்கு ஏற்பட்டதுண்டு…………ஒரே சூழ்நிலை என்பதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்னர் கசப்புகள் குறைகின்றன. நமக்குப் பிடிக்காத நிகழ்வுகளை மட்டிலும் வைத்து ஒட்டு மொத்த ராணுவத்தினரை எதிர்மறையாக எடை போட முயல்வது கீழ்த்தரமான செயல்பாடு.

    ஜெனாப் மீர் குலாம் ரஸூல் நஸ்கி சாஹேப் மற்றும் ஜெனாப் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் போன்ற உன்னதமான காஷ்மீர முஸல்மான் சஹோதரர்களைப் போன்ற செயல்பாடுடைய அன்பர்கள் லக்ஷக் கணக்கானவர்கள். இவர்களைப் பற்றி விதந்தோதி இந்த தளத்தில் வ்யாசமும் பகிர்ந்திருக்கிறேன். ஆனால் அதே சமயம் ஒட்டு மொத்த காஷ்மீர முஸல்மான் களும் அப்பாவிகள் என்பதனை அங்கு நேராகப் பணியிலிருந்தவன் என்பதனால் நிச்சயம் ஒப்புக்கொள்ள முடியாது. சில ஆயிரக்கணக்கான பிரிவினைவாதிகள் பல லக்ஷக் கணக்கான காஷ்மீர மக்களை எப்படி பகடைக்காய்களாகப் பயன் படுத்துகிறார்கள் என்பதனை அங்கு சென்று ஓரிரு வருஷமாவது பணி செய்தால் தான் புரிந்துகொள்ள முடியும். ராணுவம் எந்த சூழ்நிலையில் வேலை செய்கிறது. சிவிலியன்கள் எந்த சூழ்நிலையில் இங்கு வேலை செய்கிறார்கள் …… நேரில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

    காஷ்மீரத்தில் கொடுமைகள் நிகழ்த்துபவர்கள் பயங்கரவாத பிரிவினைவாத சக்திகளே. ராணுவம் இல்லை. ராணுவம் காஷ்மீர முஸல்மான் களது பாதுகாப்பாளன். நண்பன். பயங்கரவாதம் மற்றும் இயற்கைப்பேரிடர்கள் போன்ற துயர்களின் போது உடனுக்குடன் உதவும் பரோபகாரி.

    ராணுவத்தினர் பணிபுரியும் சூழ்நிலையுடன் பரிச்சயம் உள்ளவனாதலால் …………… அதே சூழ்நிலையில் ஜம்மு காஷ்மீரத்தில் ஆறு வருஷமும் ஹிந்துஸ்தானத்தின் நேபாள எல்லைப்பகுதியில் ஒரு தசாபதத்துக்கு மேலும் பணி புரிந்தவன் என்ற படியால்…….அந்த இறுக்கமான சூழ்நிலையில் விதிவிலக்காக…….. சில ராணுவ சிப்பாய்கள்….. காஷ்மீரம் என்ன? வடகிழக்கு என்ன? ஹிந்துஸ்தானத்தின் மற்ற பகுதிளிலும் கூட………….. முறை தவறி பொதுவிடங்களில் செயல்படும் நிகழ்வுகளை அறிவேன்………..இவை விதிவிலக்குகளே.

    ஏன் தமிழகக் காவல் படையினரின் செயல்பாடுகளில் கூட அத்துமீறல் நிகழ்ந்ததில்லை? பல விசாரணக்கும் உட்பட்டதும் உண்டே. அதை வைத்து ஒட்டு மொத்த தமிழகக் காவல்படையையே தரம் தாழ்ந்து தாக்குவது மதிஹீனமான செயற்பாடு.

    ஒட்டு மொத்த ஹிந்துஸ்தான ராணுவத்தினரை *பொரிக்கிப்படை* என்று தரம் தாழ்ந்து விமர்சித்த இந்த பின்னூட்டப்பகுதியை ……………… உண்மைக்குப் புறம்பான இந்த தரம் தாழ்ந்த விமர்சனத்தை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

  21. ஒரு படுகொலையை ”களையெடுப்பு” என்று நாக்கூசாமல் கூறுகிறார். இவருக்கு தாயுமானவர் என்று பெயர் வேறு. வெட்கம் வெட்கம். இந்திய ராணுவம் ஒரு பொரிக்கிபடையாம்! தமிழ் தமிழ் என்று 24 மணி நேரமும் பேசும் இவர் எழுதும் ”பொரிக்கி” என்ற வார்த்தை சரியான சொல்லா? காஷ்மீரில் அப்பாவி (!?) முஸ்லிம்கள் மீது இந்திய ராணுவம் கட்டவிழ்த்து விட்டதாம்! அங்கே இருந்த 4,00,000 காஷ்மீர் பண்டிட்களை விரட்டியடித்த முஸ்லிம்கள் அப்பாவிகளாம்! அந்த பண்டிட்கள் மீது இவருக்கு இரக்கம் இல்லை. கொலைகார கும்பல்கள் மீதுதான் ரொம்ப அக்கறை. எதற்கெடுத்தாலும் லெனினை துணைக்கு கூப்பிட்டுகொள்கிறார் இந்த தாயுமானவன் என்ற முகமூடி போட்ட கம்யூனிஸ்ட். இவரது தலைவர் லெனின் இந்திய ராணுவத்தைத்தான் அப்படி சொன்னாரா? கடவுளை வெறுத்தொதுக்கும் கம்யூனிஸ்ட் கும்பலில் இவர் ஒரு வித்தியாசமானவரோ? சதா சர்வகாலமும் எம்பெருமான் ஈசனை அழைக்கிறார்.

  22. பொதுவாக பயங்கரவாதிகள், திவீரவாதிகள், எவ்வளவு பேரை வேண்டுமானாலும் சாக அடிக்கலாம். எந்த முறையை வேண்டுமானாலும் பயன் படுத்தலாம். பெண்கள், குழந்தைகள் என விதிவிலக்கு கிடையாது.
    போராளி கசாப் மாதிரி போற்றுதலுக்கு உரியவர்களை நாம் பெருமை படுத்த வேண்டும். பொருக்கி ராணுவம் அடிப்பட்டு செத்தால், , நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். ஏனெனில், நம்மை பாதுகாப்பது, திவீரவாதிகல்தான். நேற்று காஷ்மீரில் இறந்த ராணுவ வீரரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழிவு படுத்த அனைவரையும் வேண்டுகிறேன்.

  23. //ஒட்டு மொத்த ஹிந்துஸ்தான ராணுவத்தினரை *பொரிக்கிப்படை* என்று தரம் தாழ்ந்து விமர்சித்த இந்த பின்னூட்டப்பகுதியை ……………… உண்மைக்குப் புறம்பான இந்த தரம் தாழ்ந்த விமர்சனத்தை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.//

    உயர்திரு கிருஷ்ணகுமார் அவர்களே,

    தங்களது பணியை நான் மிகவும் பாராட்டுகிறேன். அச்சூழ்நிலை பற்றியும், அங்கு தங்களின் அனுபவங்கள் பற்றியும், கட்டுரைகள் (இரகசியம் தவிர்த்தவை) எழுதலாமே! தமிழ் இந்து வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமே!

  24. இங்கே பின்னூட்டம் எழுதியிருக்கும் இந்திய தேச பக்தர்களின் தேச பக்தியை மதிக்கிறேன். ஆனால் தேச பக்தியை விட மேலான ஒன்றுண்டென்றால் அது உண்மை (சத்தியம்) மட்டுமே. இந்தியர்கள் எவ்வளவு தூரம் தம் தேசத்தை நேசிக்கிறார்களோ அதை விட அதிகமாக நாம் எமது சின்னஞ்சிறு தேசத்தின் விடுதலையை நேசிக்கிறோம். இது வெறும் வாய் வார்த்தைகள் இல்லை. விடுதலைக்காக நாம் கொடுத்த விலை மிக அதிகம். மக்களும் போராளிகளும் சிந்திய இரத்தம் மிக அதிகம்.

    நான் எனது பின்னூட்டத்தில் எந்த இடத்திலும் கொலைகளை ஆதரிக்கவோ அல்லது ராஜீவ் காந்தி கொலை குறித்தோ எதுவும் எழுதவில்லை. ஈழத்தமிழ்ப் பொதுமனம் புலிகள் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தைப் பதிவு செய்வதே என் நோக்கமாக இருந்தது.

    1987 ஜூலை 29 வரை இந்திய தேசிய ஊடகங்கள் ஈழத்துச் செய்திகளை போராளிகளிடம் இருந்து பெற்று ஒலி, ஒளி பரப்பி வந்தன. அதன் பின் இலங்கை இந்திய ஒப்பந்தப்படி அங்கு வந்து சேர்ந்த “அமைதிப் படை” அனுப்பிய ஒருதலைப்பட்சமான செய்திகளை வழங்கி வந்தன. அவற்றின் உண்மைக்குப் புறம்பான செய்திகளை எதிர்த்து தமிழ்நாட்டில் தொலைக்காட்சி பெட்டி உடைப்பு போன்ற போராட்டங்களும் நடந்தன என்பது உங்களில் சிலருக்கேனும் ஞாபகம் இருக்கலாம்.

    ஒரு கையைக் கட்டிக்கொண்டு போரிடுகின்றோம், மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கனரக ஆயுதங்களையும் விமானங்களையும் பயன்படுத்தாமல் போரிடுகின்றோம் என்று பொய்செய்திகளை இவ் ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் சாவகச்சேரி என்ற இடத்தில் விமானம் மூலம் குண்டு வீசும்போது இந்திய ஊடகவியலாளர் ஒருவர் புகைப்படமெடுத்து பத்திரிக்கையில் (இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று நினைக்கிறேன்) வெளியிட்டுவிட்டார். உடனே அது புலிகளின் பலமான கோட்டை அதனால் தான் என்று சப்பைக் கட்டு கட்டினார்கள்.

    ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் தடா, பொடா போன்ற சட்டங்களுக்கு அஞ்சி எந்த ஒரு ஊடகமும் ஈழத்தில் நடக்கும் எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் எந்தச் செய்தியும் வெளியிட முன்வரவில்லை. அதே நேரம் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு முன்னெடுத்த பிரசாரங்களை அப்படியே செய்திகளாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டன.எனினும் 1990 க்குப் பின்னான காலகட்டங்களில் விடுதலைப் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் பெரும் நிலப் பரப்புகளை இராணுவத்தின் பிடியிலிருந்து மீட்டு ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெருவளர்ச்சி கண்டதோடு மட்டுமல்லாமல் “de facto” நாடு ஒன்றையே ஆண்டு கொண்டிருந்தனர். இச் செய்திகள் சாதாரண இந்தியப் பொதுமக்களைச் சென்றடையவில்லை. இவ்வாறாக இந்தியாவில் புலிகளுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட எதிர்மறைப் பிரசாரங்கள் 2009 இல் நடந்த மாபெரும் இனப்படுகொலையின் போது தமிழ்நாடு தவிர்ந்த மற்ற மாநிலங்கள் மௌனம் சாதிக்கக் காரணமாக இருந்தன.

    ராஜீவ் காந்தி கொலை எல்லா இந்தியக் குடிமக்களும் புலிகள் மீது கோபமும் வெறுப்பும் கொள்ளக் காரணமாக இருந்தது என்பது மட்டுமல்லாமல் எமது போராட்டம் வெற்றிபெற பெருந்தடை ஒன்றையும் உருவாக்கியது. எனினும் ராஜீவ் கொலையில் புலிகள் நேரடியாக தொடர்புபட்டபோதும் அதன் பின்னணி மிகவும் ஆழமானது என்றே நான் கருதுகின்றேன். ராஜீவ் கொல்லப்படப்போவதை பல அரசியல்வாதிகளும் பல அதிகாரிகளும் அறிந்திருந்தனர் என்ற குற்றச் சாட்டுக்கள் உள்ளன. விசாரணைகள் சரியாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

    இந்தியப் படைகள் ஈழத்தில் நிலை கொண்டிருந்தபோது நடந்தேறிய பல சம்பவங்கள் விடுதலைப் புலிகளுக்கு ராஜீவ் காந்தி மீது கடுங்கோபம் ஏற்படக் காரணமாக இருந்தன. இக்கோபத்தை சில சர்வதேச சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தின என்பது எனது ஐயம். 1991 இலேயே பனிப் போர் முடிவுக்கு வந்தது என்பதும் நரசிம்மராவ் காலத்திலேயே இந்தியா திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு மாறியது என்பதும் கவனிக்கத்தக்கவை.முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் மரணங்கள் குறித்த மர்மங்கள் விலகாததற்கான காரணங்களே ராஜீவ் கொலையின் உண்மையான பின்னணி விலகாததற்கும் காரணமாக உள்ளன. இவை குறித்து இந்தியக் குடிமக்கள் உண்மைகளை அறிய எதிர்காலத்திலேனும் தம் அரசுகளை வலியுறுத்த வேண்டும்.

    ராஜீவ் காந்தி மீது புலிகள் (குறிப்பாக தலைவர் பிரபாகரன்) கோபங்கொள்ள காரணமாக இருந்த சம்பவங்களில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகிறேன்.

    முதலாவதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலைப்படுகொலை. 1987 அக்டோபர் 21, 22 திகதிகளில் யாழ். போதனா வைத்திய சாலையில் புகுந்த இந்தியப் படைகள் நோயாளிகள் வைத்தியர்கள் தாதிகள் அடங்கிய எழுபதுக்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சுட்டுக்கொன்றன.

    இரண்டாவதாக வல்வெட்டித்துறைப் படுகொலை. 1989 ஆகஸ்ட் 2, 3 திகதிகளில் 6 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குமுகமாக அப்பாவிப் பொதுமக்கள் 64 பேரை குழந்தைகள் பெண்கள் அடங்கலாக படுகொலை செய்தது இந்திய இராணுவம்.

    இது தவிர அஹிம்சை வழியில் நீரும் அருந்தாது உண்ணாவிரதமிருந்த திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோரின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கக் கூட மறுத்து அவர்களை சாகவிட்டது இந்திய இராணுவமும் இந்தியத் தூதுவர் ஜே .என். டிக்சித், மற்றும் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசும்.

    அதே போல செக்மேட் 1, 2, 3 என்ற பெயர்களில் பிரபாகரனைக் கொல்வதற்கான இராணுவ நடவடிக்கைகளை வன்னிக் காட்டில் எடுத்தது. எனினும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த இராணுவ நடவடிக்கைகளில் தனிப்பட்ட முறையில் ராஜீவ் காந்தி மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டிருந்தார்.

    இவையும் இதுபோன்ற பல சம்பவங்களுமே ராஜீவ் காந்தி மீது புலிகள் கோபங்கொள்ளக் காரணமாக இருந்தன. இதில் யாழ் வைத்தியசாலைப்படுகொலை இலங்கை அரசால் மக்கள் மீதான படுகொலை என அட்டவணைப்படுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை படுகொலை அப்போது எதிர்க்கட்சியிலிருந்த திரு. ஜோர்ஜ்.பெர்னாண்டஸ் அவர்களால் வியட்நாமில் அமெரிக்கர்கள் செய்த “May Lai ” படுகொலைகளுடன் ஒப்பிடப்பட்டது. எனினும் இந்திய அரசு இவற்றைச் செய்த இராணுவத்தினர் மீது விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தண்டனை அளிக்கவும் இல்லை.

    திரு கிருஷ்ணகுமார் குறிப்பிடுவது போல் இவையெல்லாம் ஒரு சில ராணுவ வீரர்களால் செய்யப்பட்டவை அல்ல. நன்கு திட்டமிட்டு நாட்கணக்காக அரங்கேற்றப்பட்ட படுகொலைகள். உண்மைகள் எவ்வளவு கசப்பானவையாக இருப்பினும் அவை உண்மைகளே. நான் கூறியவற்றின் உண்மைத் தன்மையை அறிய விரும்புவர்கள் இணையத்தில் தேடிக் கண்டுகொள்ளலாம்.

    நன்றி , கிருபா

  25. இலங்கையில், இந்தியா அமைதி படையினர் (பொறுக்கிகள் !) ஆயிரக்கணக்கில் இறந்து போனார்கலாமே? ஏன்? அவர்கள் என்ன தற்கொலை செய்து கொண்டார்களா? அப்பொழுது, சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள் என்று பேசியது யார்? எனது உறவினர், அமைதி படையில், மேஜர் ஆக பனி புரிந்தார். அவர் சொன்ன புலி பெண்களின் நடவடிக்கைகளை இங்கு நான் எழுத முடியாது.

  26. கிருபா
    பிரபாகரன் என்ன பெரிய யோக்கியான? அயோக்கியனை எப்படி எதிர்கொள்வது?

    /ஆனால் தேச பக்தியை விட மேலான ஒன்றுண்டென்றால் அது உண்மை (சத்தியம்) மட்டுமே. //

    அது இருந்தால் இப்படி ஒரு காமென்ட் ஆ போட தேவையில்லை உங்களுக்கு இங்கு

  27. //முதலாவதாக விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல. தனக்கென நிலப் பிரதேசத்தையும் வெளிப்படையான படைக் கட்டுமானத்தையும் கொண்டு மக்கள் ஆதரவுடன் போராடிய ஒரு அமைப்பை பயங்கரவாதிகள் என வரையறுப்பதில்லை//

    நிரய பேசாமல் அது எல்லாம் விடுங்கள். இந்த வாழ்ந்த மகாத்மாக்கள் என் பாண்டி பஜாரில் வந்து துப்பாக்கி சண்டை போட வேண்டும். உலகில் எந்த நாட்டுக்கு போனாலும் இப்படி சுட்டு விளையான்டூ , வழக்கு இல்லாமல் ஜாலியாக போக முடியுமா?? நேர்மையானவன் எதுக்கப்பா அடுத்த தீவை ஆட்டய போட போகனும்?

  28. திரு. கிருஷ்ண குமார்….

    கிருபா அவர்கள் கூறியதை நன்றாக பாருங்கள் ….

    //முதலாவதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலைப்படுகொலை. 1987 அக்டோபர் 21, 22 திகதிகளில் யாழ். போதனா வைத்திய சாலையில் புகுந்த இந்தியப் படைகள் நோயாளிகள் வைத்தியர்கள் தாதிகள் அடங்கிய எழுபதுக்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சுட்டுக்கொன்றன.

    இரண்டாவதாக வல்வெட்டித்துறைப் படுகொலை. 1989 ஆகஸ்ட் 2, 3 திகதிகளில் 6 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குமுகமாக அப்பாவிப் பொதுமக்கள் 64 பேரை குழந்தைகள் பெண்கள் அடங்கலாக படுகொலை செய்தது இந்திய இராணுவம்.//

    இது கொஞ்சம் தான் இன்னும் இது போன்று ஈழத்தில் அமைதிப் படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் போட்ட ஆடம் கொஞ்சநஞ்சம் அல்ல. அனைத்தையும் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு பதிவு போதாது. வேண்டுமானால் கூறுங்கள் அதற்க்கான ஆதரங்களை நீங்கள் இணையத்தில் கண்டாலே கொட்டிக் கிடக்கும்.. வேண்டுமானால் நானே கூட உங்களுக்கு அளிக்கிறேன். அதன் பிறகாவது நீங்கள் “இது எங்கோ நடக்கும் விதிவிலக்குகள்” என்று கூறமாட்டீர்கள் என்று நம்புகிறேன்..

  29. திரு. கிருஷ்ண குமார் அவர்களே ………..

    //முதலாவதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலைப்படுகொலை. 1987 அக்டோபர் 21, 22 திகதிகளில் யாழ். போதனா வைத்திய சாலையில் புகுந்த இந்தியப் படைகள் நோயாளிகள் வைத்தியர்கள் தாதிகள் அடங்கிய எழுபதுக்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சுட்டுக்கொன்றன.//

    மேற்கண்ட தாக்குதல் நடந்தது அக்டோபர் 21ஆம் தேதி1987ஆம் ஆண்டு, விடயம் என்னவென்றால் அன்று தான் தீபாவளித் திருநாள். இந்தியா முழுவதும் தீபாவளி திருநாள் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்திய ராணுவம் அங்கு தீபாவளி அன்று தமிழர்களை வேட்டையாடி கொண்டிருந்தது . இந்திய ராணுவம் ஈழ தமிழர்களுக்கு கொடுத்த தீபாவளி பரிசு தான் அந்தப் படுக்கொலைகள்..

    (Edited and published)

  30. //இரண்டாவதாக வல்வெட்டித்துறைப் படுகொலை. 1989 ஆகஸ்ட் 2, 3 திகதிகளில் 6 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குமுகமாக அப்பாவிப் பொதுமக்கள் 64 பேரை குழந்தைகள் பெண்கள் அடங்கலாக படுகொலை செய்தது இந்திய இராணுவம்.//

    இது கொஞ்சம் தான் இன்னும் இது போன்று ஈழத்தில் அமைதிப் படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் போட்ட ஆடம் கொஞ்சநஞ்சம் அல்ல. அனைத்தையும் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு பதிவு போதாது.
    //

    தமிழக மீனவர்களை சுட்டு விட்டு அதை இலங்கை ராணுவம் மேல பழியை போட்டவர்கள் எலிகள். அந்த எலிகள் சொல்லுவது எல்லாம் ஒரு வரலாறு ??

  31. கிருபா அவர்கள் கூறியதை நன்றாக பாருங்கள் ….

    //முதலாவதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலைப்படுகொலை. 1987 அக்டோபர் 21, 22 திகதிகளில் யாழ். போதனா வைத்திய சாலையில் புகுந்த இந்தியப் படைகள் நோயாளிகள் வைத்தியர்கள் தாதிகள் அடங்கிய எழுபதுக்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சுட்டுக்கொன்றன.

    இரண்டாவதாக வல்வெட்டித்துறைப் படுகொலை. 1989 ஆகஸ்ட் 2, 3 திகதிகளில் 6 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குமுகமாக அப்பாவிப் பொதுமக்கள் 64 பேரை குழந்தைகள் பெண்கள் அடங்கலாக படுகொலை செய்தது இந்திய இராணுவம்.//

    இது கொஞ்சம் தான் இன்னும் இது போன்று ஈழத்தில் அமைதிப் படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் போட்ட ஆடம் கொஞ்சநஞ்சம் அல்ல. அனைத்தையும் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு பதிவு போதாது. வேண்டுமானால் கூறுங்கள் அதற்க்கான ஆதரங்களை நீங்கள் இணையத்தில் கண்டாலே கொட்டிக் கிடக்கும்.. வேண்டுமானால் நானே கூட உங்களுக்கு அளிக்கிறேன். அதன் பிறகாவது நீங்கள் “இது எங்கோ நடக்கும் விதிவிலக்குகள்” என்று கூறமாட்டீர்கள் என்று நம்புகிறேன்..

    பலே பாண்டியா பலே இலங்கை தமிழர் அல்லாதவர்களுக்கு தான் அடுத்த தீவு. இலங்கை தமிழர்களின் சொந்த பூமி என்பது சிங்களர்களின் புனித புத்தகத்தின் வாயிலாகவே அறியலாம். திரு கிருபா & திரு கிருஷ்ணகுமார் கூறியது முழுக்க முழுக்க உண்மையே. அதே சமயம் நமது இராணுவத்தின் வீரர்கள் அனைவரையுமே தவறாக சொன்னால் நம் நாக்கு அழுகிவிடும். நாம் சுகமாக வாழ எல்லைசாமிகளாக இருந்து காப்பவர்களை நாம் போற்றாவிட்டாலும் பரவாயில்லை, தூற்றாதீர்கள். அதே போல விடுதலைபுலிகளையும் முற்றிலும் குறை சொல்ல முடியாது. ஒரு நாட்டின் இன சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடி நியாயம் கிடைக்காவிடில் ஆயுதம் தாங்கி போராடுவது தவறில்லை. பெரும் வெள்ளத்தில் சில சந்தன மரங்களும் அழியப்படுவது உண்டு. பிரபாகரன் ஒரு போராளி. அவரை திரு எம்.ஜி.ஆரும் திருமதி இந்திரா அம்மையாரும் ஆதரித்தது தவறா? ராஜீவ் காந்தி கொலை என்பதில் விடுதலைபுலிகளின் பங்கு ஒரு அம்பு போல தான். எய்தவர்கள் யாரோ? என்பதை கண்டுபிடிக்க சொன்னால் திருடன் கையில் சாவி தருவதை போலதான்! என் போபர்ஸ் பீரங்கியில் சம்பந்தப்பட்ட சோனியாவின் இனத்தார் குத்ரோசிய கூட இருக்கலாம். பழைய பகையை தீர்த்துக்கொண்டு முழு பாவத்தையும் விடுதலைபுலிகளின் மேல் திணித்துவிட்டார்கள். சரி விடுதலை புலிகள் தானே ராஜபக்சேவின் எதிரிகள், அப்பாவி மக்கள் என்ன தவறு செய்தார்கள். அவர்களை மிக கேவலமாகவும், கொடூரமாகவும் கொன்ற சிங்கள ராணுவம் & ராஜபக்சே இவர்களை எப்படி இந்தியாவிற்கு வர அனுமதிக்கலாம்? தற்போது உள்ள சிங்கள ஆட்சியில் உள்ள சரத் பொன்சேகா வின் கொலைவெறியும் தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம். இவர்களின் கொலைவெறி & வக்கிரத்திற்கு யார் தண்டனை தர போகிறார்கள். தற்போது வந்த ஆட்சியாளர்கள் மட்டும் என்ன செய்துவிட போகிறார்கள். பிற்காலத்தில் இவர்களும் ராஜபக்சே போல மாறமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். இதற்கு ஒரே வழி தனி தமிழ் ஈழம் என்பது மட்டும் தான். நம் தாய் நாடாகிய இலங்கையின் முழு பகுதியுமேவா தமிழர்கள் கேட்கிறார்கள். இல்லையே. அவர்கள் வாழும் ஒரு பகுதியை மட்டும் தானே கேட்கிறார்கள். சிங்களனுக்கு அடிமையாக இருக்க வேண்டுமா என்ன, நிச்சியமாக மீண்டும் ஒரு தர்மயுத்தம் வந்தே தீரும். என் ஆசை இலங்கையில் தமிழ் இந்து தேசம் மலரவேண்டும் என்பதே. ஜெய் ஸ்ரீராம்.

  32. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

    நான் அறிந்திறாத *ஞமலி* என்ற தமிழ் வார்த்தையை தாங்கள் அறிமுகப்படுத்தினீர்கள். ஆனால் துரத்ருஷ்டவசாமாக மற்ற மனிதர்களை இழிவு செய்யுமுகமாக.

    ஹிந்துஸ்தான ராணுவத்தினரின் செயல்பாடுகளில் சில உங்களுக்கு ஏற்புடையவை இல்லை என்றால் ………. ஒட்டு மொத்த ராணுவத்தையும்………. வசவிட முனைதல் அறிவு பூர்வமான செயற்பாடு ஆகாது. சிறுபிள்ளைத் தனமான செயற்பாடு. இதை நிச்சயம் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை 🙂

    தேவாரம் ஓதும் வாயால் வசவுகளைப் பொழிதல் சரியில்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

  33. அன்பின் ஸ்ரீ தாயுமானவன் ஸ்ரீ கிருபா

    நீங்கள் இருவரும் ஹிந்துஸ்தான ராணுவத்தினரின் ஈழத்துச் செயல்பாடுகள் சம்பந்தமாக இணையத்தில் உலா வரும் திகில் கதைகளை வாசித்திருப்பது புலனாகிறது 🙂

    எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பொதுவில் நான் ப்ரஸ்தாபிப்பதில்லை. அப்படியே ப்ரஸ்தாபித்தாலும் எனது நிலைப்பாடுகள் தப்பானவை என்றால் அதை அடுத்தவர் சரியான காரணங்களை முன்வைத்து விளக்கினால் ஏற்றுக்கொள்வதில் எமக்குத் தயக்கம் இல்லை.

    \\ வேண்டுமானால் கூறுங்கள் அதற்க்கான ஆதரங்களை நீங்கள் இணையத்தில் கண்டாலே கொட்டிக் கிடக்கும்.. வேண்டுமானால் நானே கூட உங்களுக்கு அளிக்கிறேன். \\\ நான் கூறியவற்றின் உண்மைத் தன்மையை அறிய விரும்புவர்கள் இணையத்தில் தேடிக் கண்டுகொள்ளலாம். \\\

    ஹிந்துஸ்தான ராணுவ செயல்பாடு சம்பந்தமாக நிதிப்பிள்ளைகள் எழுதிக்குவித்த இணையத் திகில் கதைகள் ………… கதைகள் ஆகலாம்……… ஆதாரம் ஆகாது 🙂

    பொய்க்கால் குதிரையில் ஏறி ஹிந்து மஹாசாகரத்தைக் கடந்து ஈழத்துக்குப்போய் ஈழத்தமிழருக்காக வேண்டி அட்டைக்கத்தியினால் சிங்களவருடன் நீங்கள் யுத்தம் செய்து வெற்றி வாகை சூடியதாகச் சொன்னல் எவ்வளவு பொருள் இருக்குமோ அதை விடக் குறைவான பொருள் மேற்கண்ட வாசகத்தில் 🙂 🙂 🙂 🙂

    இணையத்தில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு அன்பர்களே.

    வால்மீகி ராமாயணம் என்ற தலைப்பை மட்டிலும் வாசித்து விட்டு ……..சொந்தக்கதையை வால்மீகி ராமாயணமாக அடித்து விட்ட ஒரு விக்ஞானியுடன் வார்த்தாலாபம் செய்கையில் ……….. அந்தப்பெருந்தகை இதே போல சகட்டுமேனிக்கு இணையத்தை மட்டிலும் தேடோ தேடென்று தேடி……… தப்புத் தப்பான விஷயங்களைப் பகிர்ந்து………… நான் பதிலுக்கு அவரை எதிர் விசாரணை செய்ய முனைகையில்…….. அவர் விஷயத்துக்கே வராது கண்ணாமூச்சி ஆடியதும்…….. நினைவுக்கு வருகிறது.

    இணையத்தில் ஒரு பொய்யை ஒருவர் அடித்துவிட்டால் போதும்…….. அது காபி பேஸ்ட் காபி பேஸ்ட் என விச்வரூபம் எடுத்து பாடாய்ப்படுத்தும்………. ஆக உங்கள் பொன்னான் நேரத்தை தமிழகத்து ஊடகங்கள் ………. தொல்லைக்காட்சிகள்………. பொல்லாத இணையம்……… இவற்றில் பகிரப்பட்டுள்ள திகில் கதைகளில் செலவிட்டு வீணாக்க வேண்டாம் அன்புத் தம்பிகாள்.

    வாஸ்தவத்தில் ஈழத்தில் ஹிந்துஸ்தான ராணுவத்தின் செயற்பாடுகள் பற்றி எனக்கு அதிகம் ஏதும் தெரியாது. அது சம்பந்தமான அறிவு பூர்வமான தரவு சார்ந்த விஷயங்கள் அறிவதில் நிச்சயம் நாட்டம் உண்டு. நிதிப்பிள்ளைகளான பலான பலான இணைய திகில் கதை எழுத்தாளர்கள் மூலமாக இந்த விஷயத்தை நான் நிச்சயம் அணுக விழையமாட்டேன்.

    அன்பர் பெருமாள் முருகன் மாதொருபாகன் பொஸ்தகத்தில் தான் பரப்புரை செய்த ஆவணம் சார்ந்தவை என்ற அவதூறான விஷயங்களுக்கு……. ஆவண ஆதாரங்களாக…………… சங்க நூலைக் காட்டுவார்……. சிற்றிலயக்கங்களைக் காட்டுவார்…….. கல்வெட்டுக்களைக் காட்டுவார் என்று அறிவுபூர்வமாக எதிர்பார்க்கையில் ……….. அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று பசப்பியதைப் போன்ற கால விரயக் கேளிக்கைகளில் எனக்கு ஆர்வம் இல்லை.

    இணைய காபி பேஸ்ட் கந்தறகோளாதிகள் விடுத்து………. உருப்படியாக தரவுகள் சார்ந்து ……… ஏதும் பகிர விழைந்தால் பகிருங்கள்.

    ஹிந்துஸ்தான ராணுவம் உலகத்தின் ஆகப்பெரிய ராணுவங்களில் ஒன்று. அதீத ஒழுக்கக் கட்டுப்பாடுடைய ஒரு ஸ்தாபனம். அதன் செயற்பாடுகளை உரித்தான தரவுகள் சார்ந்து விமர்சிப்பதில் எமக்கு ஆக்ஷேபம் இல்லை.

    ஒட்டு மொத்த ராணுவத்தையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதையோ………….வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கண்டவர்களும் எழுதிய திகில் கதைகளை …….. சகட்டு மேனிக்கு உண்மை என பரப்புரை செய்வதையோ நிச்சயம் ஏற்க முடியாது. உங்கள் கால அவகாசத்தையும் இங்குள்ளவர்கள் கால அவகாசத்தையும் வீணாக்குவதைத் தவிர்க்கலாம்.

    ஜெய்ஹிந்த்

  34. திரு. கிருஷ்ண குமார்…..

    //ஹிந்துஸ்தான ராணுவ செயல்பாடு சம்பந்தமாக நிதிப்பிள்ளைகள் எழுதிக்குவித்த இணையத் திகில் கதைகள் ………… கதைகள் ஆகலாம்……… ஆதாரம் ஆகாது //

    உங்களுக்கு ஈழ மக்களின் வலிகள் இணைய திகில் கதைகளாக தெரிந்தால் அதன் குறைப்பாடு உங்களின் கண்களில் தான் இருக்கிறது… நிதிப்பிள்ளைகள் என்று ரொம்பவே நக்கல் அடிக்கிறீர்கள் பதிலுக்கு இணையத்தில் உலவும் “ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர்களின் அவதூறுகள்” என்று கூறி பதிலுக்கு நக்கலடிக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் அது எனக்கு தேவை இல்லாத வேலை…

    சரி விடயத்திற்கு வருவோம்… ஆதாரம் வேண்டும் என்று கேட்டீர்கள் தானே என்னால் முடிந்த ஆதாரத்தை அளிக்கிறேன்…

    https://www.eurasiareview.com/24032013-commission-of-inquiry-on-indian-war-crimes-in-sri-lanka-oped/

    மேற்கண்ட இணையத்தில் நீங்கள் மிகத் தெளிவாக இந்திய ராணுவத்தின் அதாவது நமது எல்லை சாமிகளின் லீலைகளைக் கண்டுகொள்ளலாம்.. இது நம்பகப் பூர்வமான இணையம் தான். உங்கள் பாணியில் கூற வேண்டுமானால் காப்பி பேஸ்ட் கந்த்ர கோலங்கள் எல்லாம் கிடையாது…

    //ஒட்டு மொத்த ராணுவத்தையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதையோ………….வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ ………..//

    உங்களிடம் இருந்து நான் எதிர்ப்பார்ப்பது இதுப் போன்ற தட்டுக் கேட்ட பழமொழிகளை அல்ல. அதற்க்கு பதிலாக இந்திய ராணுவம் எந்த அட்டுழியங்களையும் செய்யாத உலக உத்தமர்கள் தான் என்பதற்கான உருப்படியான ஆதாரங்களை உங்களால் முடிந்தால் நீங்கள் எனக்கு அளிக்கலாம்.

  35. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

    \\ உங்களுக்கு ஈழ மக்களின் வலிகள் இணைய திகில் கதைகளாக தெரிந்தால் \\

    ஈழ மக்களின் வலிகள் ஒவ்வொரு தமிழனதுமான வலி. அதில் நான், நீங்கள் மற்றும் தளத்தவர் அனைவரும் அடக்கம்.

    மிக சாதுர்யமாக உங்களது சாரமற்ற வாதத்தை திசை திருப்புகிறீர்கள்.

    நான் மறுக்க விழைந்தது ஈழ மக்களின் வலிகளை அல்ல. அந்த வலிகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் நீங்கள் ஹிந்துஸ்தான ராணுவத்தை காரணம் காட்டுவதை மறுக்கிறேன்.

    தாங்கள் எந்த முகாந்தரமும் இல்லாமல் ஈழத்தில் நடந்த சில சம்பவங்களுக்கு ஹிந்துஸ்தான ராணுவத்தை குறை சொல்ல விழைவதையும்………… அதற்கும் மேலே சென்று ஈழத் தமிழ் மக்களை ஹிந்துஸ்தான ராணுவம் திட்டமிட்டு அழித்தொழித்தது என்ற அபவாதத்தையும்.

    ஹிந்துஸ்தான ராணுவத்தினர் ஈழத்தில் செயல்பட்டது பற்றி எனக்கு விவரமாகத் தெரியாது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    ஒட்டு மொத்த ஹிந்துஸ்தான ராணுவத்தை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் தாங்கள் முன்வைக்க விழைவதெல்லாம் வெறும் இணையக் கதைகள்?

    ஷேனாலி வடுகே………… எழுதிய ஒரு வ்யாசம் உங்கள் ஆதாரம்……….சபாஷ்……..சறுக்குகிறீர்கள்……….க்ஷமிக்கவும் அன்பின் ஸ்ரீ தாயுமானவன்……….என்னுடையதை விட உங்கள் கால அவகாசம் பொன்னானது………..உங்களுடைய காரணமற்ற ஹிந்துஸ்தான வெறுப்பு என்ற மூடநம்பிக்கையை நான் சிதைக்க விரும்பவில்லை. இணையக்கதைகளைத் தவிர ஹிந்துஸ்தான ராணுவத்தைக் குற்றம் சாட்ட உங்களிடம் ஏதும் இல்லை என்றால் நாம் மேற்கொண்டு இந்த விஷயம் சம்பந்தமாக விவாதிப்பது வீண்.

    எல்லை மாகாணங்களில் நீண்ட காலம் பணி புரிந்த எனக்கு உணர்வு பூர்வமாக என்னுடைய தாய் நாடு மீது பெரும் பற்று உண்டு. ஸ்ரீ ஜெயமோகன் அவர்களது வ்யாசத்தை வாசித்து என்னுடைய மற்றும் உங்களுடைய முன்னோர்களான நம் தமிழ் மக்கள் பரந்து விரிந்த பாரத நாட்டின் அங்கமாக நம் தமிழகத்தை அவதானித்துள்ளனர் என்று அறிவுபூர்வமாகவும் இந்த விஷயம் பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    உங்கள் போலவே………. உங்களுக்கு நிகராக………. உங்களை விட அதிகமாக………இந்த தளத்தில் பங்கு பெறும் அனைவரும் ஈழத்தமிழரின் நலன் விரும்பிகள் என்பதனை நீங்கள் அறிதல் நலம்.

    எனதன்பார்ந்த நான் மதிக்கும் சிவனடியாருடன் இந்த விஷயமாக தகுந்த காரண காரியங்களுடன் மிகக் கடுமையாக வேறுபடும்
    க்ருஷ்ணகுமார்

  36. //நிச்சியமாக மீண்டும் ஒரு தர்மயுத்தம் வந்தே தீரும். என் ஆசை இலங்கையில் தமிழ் இந்து தேசம் மலரவேண்டும் என்பதே. ஜெய் ஸ்ரீராம்.//

    புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பினால் 2009 வரை நடத்த பட்ட யுத்தத்தில் தமிழர்கள் தினம் தினம் அழிந்தனர். ஊனமாகினர், சொத்துக்களை இழந்தனர். சின்னையா தனது இலங்கையில் தமிழ் இந்து தேசம் மலரவேண்டும் என்ற ஆசைக்காக மீண்டும் ஒரு யுத்தம் வரவேண்டும் என்று தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.தமிழ் இந்து தேசம் மலரவேண்டும் என்று புலிகள் தவறி பிரசார பலத்திற்காக கூட தெரிவிக்கவில்லை.பாதிரிகள் அனுசரணையுடன் செயல்பட்ட புலிகளால் அப்படி தெரிவிக்கவும் முடியாது.இலங்கையில் தமிழ் இந்து தேசம் என்பது தமிழ் ஹிந்துவையும், இந்திய தமிழ் பேசும் ஹிந்துக்களையும் தமது பிரசாரங்களுக்காக பயன்படுத்தும் முயற்சி.பயங்கரவாதத்தைதை நியாயபடுத்துவதற்கு அதனை விடுதலை யுத்தம், புனித யுத்தம் என்று அழைக்கிறார்கள்.

  37. திரு. கிருஷ்ண குமார்………….

    நான் என்ன நினைத்தேனோ அதைத் தான் நீங்கள் கூறி இருக்கிறீர்கள்.. நான் கொடுத்த இணையத்தை நீங்கள் படிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது..

    //ஷேனாலி வடுகே………… எழுதிய ஒரு வ்யாசம் உங்கள் ஆதாரம்……….சபாஷ்……..சறுக்குகிறீர்கள்………. //

    இதில் நான் என்ன சறுக்கினேன் என்று நீங்கள் ஆதாரப் பூர்வமாக பகிர்ந்தால் மிக நன்றாக இருக்கும். எனக்கு உங்களிடம் கார சாரமாக தர்க்கம் செய்வதில் எல்லாம் உடன்பாடே இல்லை. இந்த இணையத்தளத்தில் நான் போற்றி மதிக்கும் ஒரே மனிதர் நீங்கள் மட்டும் தான். ஆனால், உண்மையை வேறு எப்படித் தான் உங்களுக்கு நான் உணர்த்த முடியும்… அந்த இணையத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானது தான். அந்த இணையத்திலேயே இந்திய அமைதிப் படையின் முன்னாள் ராணுவ ஜெனரலாக பணியாற்றிய அசோக் மேத்தா என்பவரும் இந்திய ராணுவம் செய்த அட்டுழியங்களை அம்பலப் படுத்தி இருக்கிறார் எனும் பொழுது இதில் நான் எதை சறுக்கினேன்…

    மேலும், பன்னாட்டு பொது மன்னிப்பு சபை கூறி இருக்கும் அறிக்கையினை படித்து பார்த்ததில் என்ன சறுக்கல்கள் இருக்கின்றன என்று எனக்கு தெளிவாக ஆதாரப்பூர்வமாக கூறவும் … அதில் உள்ள அறிக்கையில் அவர்கள் தெளிவாக கீழ்கண்ட இந்திய எல்லைசாமிகளின் லீலைகளை கூறி அம்பலப் படுத்தி இருக்கிறார்கள்..

    //“IPKF was increasingly accused of raping Tamil women and of deliberately killing dozens of unarmed Tamil civilians, among them elderly people, women and children…in several cases there was eye witness evidence that the victims were non combatants shot without provocation… Several dozen Tamil women, some of whom needed hospital treatment, testified that they were raped by IPKF personnel. A local magistrate in the north reportedly found the IPKF had been responsible for seven cases of rape in December.”//

    விடயம் இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது எப்படி அதாவது எதன் அடிப்படையில் இதனை நீங்கள் மறுதலிக்கிறீர்கள் என்று கூறினால் மேலும் நன்றாக இருக்கும் ..

    //ஸ்ரீ ஜெயமோகன் அவர்களது வ்யாசத்தை வாசித்து என்னுடைய மற்றும் உங்களுடைய முன்னோர்களான நம் தமிழ் மக்கள் பரந்து விரிந்த பாரத நாட்டின் அங்கமாக நம் தமிழகத்தை அவதானித்துள்ளனர்//

    அது மிகத் தவறான அவதானம்.. ஜெயமோகனின் புறநானூற்றுப் பாடல்களைப் பற்றிய கூற்று மிகவும் மோசடியான ஒன்று.அதில் எந்த அறிவும் கிடையாது, பூர்வமும் கிடையாது. அதைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் தெளிவாக கூறுகிறேன். இப்போது அது தேவை இல்லாத விவாதம்..

    //உங்களுடைய காரணமற்ற ஹிந்துஸ்தான வெறுப்பு என்ற மூடநம்பிக்கையை நான் சிதைக்க விரும்பவில்லை……//

    எனக்கு வெறுப்பு இந்துஸ்தானத்தின் மீதுக்கிடையாது, இன்னும் சொல்லப் போனால் இது இந்துஸ்தானம் கிடையாது, இது இந்தியா. இந்திய தேசத்தை என்றுமே நான் வெறுத்ததில்லை. நான் வெறுப்பது இந்துத்துவாவை மட்டும் தான்.. இந்தியாவையோ, இந்து மதத்தையோ அல்லவே அல்ல…

    இந்த விவாதத்தில் உங்களின் பேச்சு மிகவும் முரண்படுகிறது…

    இந்த ஈழ விவகாரத்தைப் பற்றி நீங்கள் கூறியது இதை …

    //ஹிந்துஸ்தான ராணுவத்தினர் ஈழத்தில் செயல்பட்டது பற்றி எனக்கு விவரமாகத் தெரியாது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.//

    அனால் என்னிடமோ இப்படி கூறுகிறீர்கள் ….

    //ஒட்டு மொத்த ஹிந்துஸ்தான ராணுவத்தை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் தாங்கள் முன்வைக்க விழைவதெல்லாம் வெறும் இணையக் கதைகள்?//

    //தாங்கள் எந்த முகாந்தரமும் இல்லாமல் ஈழத்தில் நடந்த சில சம்பவங்களுக்கு ஹிந்துஸ்தான ராணுவத்தை குறை சொல்ல விழைவதையும்………… அதற்கும் மேலே சென்று ஈழத் தமிழ் மக்களை ஹிந்துஸ்தான ராணுவம் திட்டமிட்டு அழித்தொழித்தது என்ற அபவாதத்தையும்.//

    உங்களுக்கே ஏதும் தெரியாத போது எப்படி இதனை அபவாதம் என்று நீங்கள் கூற முடியும்.. சரி நான் கூறியது அபவாதம் என்பதை நிருப்பித்து காட்டலாமே?

    சரி, இந்த விவாதத்தை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன்… ஆனால் ஒன்று உண்மை ஒரு நாள் நிச்சயம் உங்களுக்கு தெரியவரும். அப்படி நீங்கள் உணர நேர்ந்தால் என்னை நீங்கள் ஒரு முறையேனும் நினைத்துக் கொள்ளுங்கள். விடைப் பெறுகிறேன்..

  38. Charu Joke today:
    சரி, அப்படியே பிரச்சாரம் செய்யலாம் என்று இருந்தால் ஒருவர் ஆறு மணிக்கு மேல் நக்ஸலைட்டுகளின் சார்பாகவும் பிரச்சாரம் செய்யலாமா? ஆறு மணி வரை தான் நான் ஐஏஎஸ்; அதற்கு மேல் ஐஎஸ் ஐஎஸ் என்று சொல்லிக் கொண்டு ஆள் சேர்க்கலாமா?

    like the above you people are discussing Tiger matter. Tigers org (ORG!!?) is banned in India. you should not go extreme level and that too critic Indian army. mover over tamilhindu should not publish those comments

  39. புலிகளை இகழ்கிரவன் ஆதாய பிழைப்புவாதிகள்,அவர்களை புறந்தள்ளுவோம்,ராஜீவை இந்தியாவில் கொன்றார்கள் என்ற குறிப்பினை ஒரு நண்பர் புலிகளின் குற்றமாக பதிவு செய்திருந்தார்,ஜாலியன்வாலாபாக் படுகொலையினை நிகழ்த்திய ஜெனரல் டயரை லண்டன் மாநகரம் தேடி சென்று துப்பாக்கியால் கொலை செய்த உக்கம் சிங் இந்திய வரலாற்றில் மாவீரன் என்று எனக்கு வரலாற்று பாடம் பள்ளியில் சொல்லித்தரப்பட்டது,உக்கம் சிங் மாவீரன் புலிகள் பயங்கரவாதிகள் எந்த வகையில் நியாயம்,சிங்களத்துடனான ராஜதந்திர உறவில் இந்தியா சிங்களத்திடம் மண்டி போட்டு பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மை இங்கே எத்தனை பேருக்கு தெரியும்,தெரிந்தவர்கள் நிச்சயமாக புலிகளை இகழ மாட்டார்கள் இந்தியாவின் தமிழ் இன விரோத கொள்கைக்கு மிகப்பெரிய ஆதார பலமாக இருப்பது கோமாளி ராஜீவின் கொலை,ராஜீவ் பிரபாகரன் என்ற ஒரு தனி நபரை குறிவைத்து கொலை செய்ய முயற்சிக்க அது தோல்வியில் முடிந்தது ,ஆனால் பிரபாகரன் ராஜீவ் என்ற தனி நபரை குறிவைத்து செய்த கொலை முயற்சி வெற்றி பெற்றது,உண்மையில் அது தனிப்பட்ட இரண்டு நபர்களின் மோதலாகத்தான் பார்க்க வேண்டும்,ஏனெனில் ராஜதந்திர,மற்றும் அரசியல் அமைப்பின் வழிகாட்டலின் படி இந்தியாவின் அனைத்து கட்சிகளின் ஒப்புதல் பெறப்படாமல் பிரபாகரனுக்கு எதிரான கொலை முயற்சிக்கு உத்தரவிட்டது ராஜீவ் ஆனால் பிரபாகரன் தப்பிவிட்டார்,கோமாளி ராஜீவ் நரகத்திற்கு அனுப்பப்பட்டார்,இந்த நிலைப்பாட்டை தான் ஒற்றை வரியில் பிரபாகரன் அவர்கள் மிக அழகாக குறிப்பிட்டார் “பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த துன்பியல் நிகழ்வு”எனவே தான் ஒற்றை தமிழனின் தன்மானத்தின் எழுச்சி சின்னம் ஸ்ரீபெரும்புதூரில் எதிரியால் மிக அழகாக நிறுவப்பட்டு வரலாற்றை பறைசாற்றுகிறது,உலக வரலாற்றில் எதிரியால் நினைவுச்சின்னம் கட்டவைத்த புகழுக்கு உரியவர்கள் புலிகள்,இது தொடர்பில் புலிகளின் தவறு கோமாளி ராஜீவின் கொலையை அதற்குண்டான காரணங்களை சர்வதேசத்தின் முன்னால் சமர்பிக்க தவறிவிட்டது தான்,காரணம் ஒன்றும் மிகவும் பெரிதானது அல்ல சர்வதேச சமூகத்தின் முன்னால் விளக்கமளிக்குமளவுக்கு ராஜீவ் ஒன்றும் பெரிய மனிதனல்ல,என்று நினைத்திருக்கலாம், அது புலிகளின் நிலை, அது ஒருபுறம் இருக்கட்டும் ஒரு இந்திய பிரதமராகவாவது நல்லவிதமாக நடந்தாரா ராஜீவ் இந்திய தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி போபார்ஸ் பீரங்கி பேர ஊழலில் நாறி பிரதமர் பதவியை இழந்தவன்,போபாலில் 20000 மக்களின் சாவுக்கு காரணமான யூனியன் கார்பைடு கம்பெனியின் முதலாளி ஆண்டர்சனை அமெரிக்காவுக்கு தப்பி செல்ல வைத்த சண்டாளன்,இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது டில்லியிலும் மற்றும் இந்தியாவெங்கும் 3500 சீக்கியர்கள் கொலைசெய்யப்பட்டபோது ஆலமரம் சாயும்போது சில செடிகளும் அழியத்தான் செய்யும் என்று சொன்ன அரக்கன்,எனவே ராஜீவ் கொலையினை துச்சமாக நினைப்பது தான் சரி ….,நண்பர்களே,புலிகள் இன்று ஆயுதங்களை மவுனமாக்கியது சிங்களம் என்ற ஒருத்தனுக்காக அல்ல,24 நாடுகள் புலிகளுக்கு எதிராக போராடியது அது தான் உண்மை,அது சரி…. நாங்கள் எங்கள் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்று புலிகள் அறிவித்த அன்றில் இருந்து இன்றுவரைக்கும் புலிகளின் ஒரு ஆயுதம் கூட முழங்கவில்லையே…தெரிகிறதா கட்டுக்கோப்பு,இதைத்தான் முதல் விசாரணை அறிக்கையில் 2009 ல் நவநீதம்பிள்ளை அவர்கள் அழகாக குறிப்பிட்டார்கள்,”உலகத்திலேயே மிகச்சிறந்த ஒழுக்கம் மிகுந்த கட்டுக்கோப்பான விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் “என்று குறிப்பிட்டார்கள்,எம்.கே.நாராயணன்,சிவசங்கர மேனன்,விஜய் நம்பியார்,ரொமேஷ் பண்டாரி போன்ற இழிபிறவிகளால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய வெளியுறவுத்துறை சர்வதேச அரங்கில் அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது,நடந்து முடிந்த ஐக்கிய நாடுகளின் சபையில் அமேரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவர முன்னைய இரண்டு முறைகள் போல இந்தியா முயன்று தோற்று அசிங்கப்பட்டது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்,மூடிக்கொண்டு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைக்கு இந்த தேசத்தை கொண்டுவந்து நிறுத்திய வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பாளர்களுக்கு நன்றி,சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தல் தொடங்கிவிட்டது களங்கள் மாற்றம் பெரும் ஆனால் புலிகளின் லட்சியம் மாறாது ஏனெனில் காரணம் ஒன்றே ஒன்று தான் புலிகள் தான் தமிழர்கள்,தமிழர்கள் தான் புலிகள்,நான் குறிப்பிட்டது தமிழீழ தமிழர்களை ….. மீதி தமிழர்கள் வழக்கம் போல வேடிக்கை மட்டும் பாருங்கள்,புலிகளை விமரிசிக்கும் தகுதி இந்தியனுக்கு இல்லை இல்லை இல்லவே இல்லை…

  40. ஒரு தவறான கருத்தாடல் மேலே இடம்பெற்றிருக்கிறது,நக்சலைட்டுகள் சார்பாகவும் பிரச்சாரம் செய்யலாமா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது,கொள்கைகளை பிரச்சாரம் செய்வதற்கு தடை எதுவும் இருக்காது என்று நம்புகிறேன்,ஏனெனில் இந்த மண்ணில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து 19ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான கொள்கை பிரசாரங்கள் வெளிப்படையாக நடந்ததிருக்கிறது அப்படித்தான் காந்தி பிரச்சாரம் செய்தார்,கொஞ்சம் தீவீரவாதமாக பாலகங்காதர திலகர் பிரச்சாரம் செய்தார்,…. எனவே தவறில்லை என்று நம்புகிறேன் ஆனால் ஒரு குழப்பம் நிலவுகிறது சுபாஷ்சந்திர போஸ் சுதந்திரப்போராளியா அல்லது இன்றைய அறிவுக்கடல்களின் கருத்துப்படி பயங்கரவாதியா ???பித்தலாட்டம் கூடாது நண்பர்களே…

  41. இந்து மக்களின் தளத்தில் ஸ்ரீலங்காவில் உள்ள கொடிய இயக்கமான புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள்.. வெட்கபட வேண்டியது..

  42. மேலே மார்டின் என்ற பெயரில் எழுதியுள்ளவர் சிறிதாவது சுய அறிவுடன் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை.

    அவருக்கு முதல் கேள்வி:-

    1. தலைவர் அமிர்தலிங்கத்தை கொன்ற பிரபாகரன் புரட்சிவீரனா ? கோழை அல்லவா ?

    2. தன்னுடைய இனத்தை சேர்ந்த பிற போராளிகளான மாத்தையா, யோகேஸ்வரன், சிறீ சபாரத்தினம் ஆகியோரை அழித்த பிரபாகரன் புத்திசாலியா ? ஒரு சர்வாதிகாரி அல்லவா ?

    3. ஜனநாயகத்துக்கும் பிரபாகரனுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா ?

    4. அறிவு கெட்ட பிரபாகரன் ராஜீவை மட்டும் கொல்லவில்லை – அவருடன் சேர்த்து அப்பாவி மக்கள் அதுவும் 17-தமிழர்களை கொன்றான். இது பேடிகள் செய்யும் செயல் அல்லவா ?

    5. பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் படுகொலைக்கு பிரபாகரனே பொறுப்பு. தமிழ் மக்களை தவறாக வழிநடத்திய கோமாளித்தனமான ஒரு சர்வாதிகாரி. அவரது போக்கு பிடிக்காமல் தான் சமாதானப்பேச்சு நடத்திய வெளிநாடுகள் ஒதுங்கிக் கொண்டன. வேறு யாருமே மத்தியஸ்தம் செய்ய முன்வரமாட்டார்கள் என்ற நிலையில் தான் விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிந்துபோனார்கள்.

    6. திருக்குறளையாவது படித்திருந்தால் இப்படி ஒரு மோசமான முடிவு அவருக்கு ஏற்பட்டிருக்காது. தன் வலிவும் , மாற்றான் வலிவும் ஆராயாமல் தன்னுடைய இனத்தை அழித்தவனுக்கு வக்காலத்து வாங்கி எழுதும் அறிவிலிகளை என்ன செய்வது ?

    7. தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும்- ஆனால் தனி ஈழம் என்பது அங்கு எஞ்சியிருக்கும் தமிழ் இனத்தை மேலும் அழிக்கவே உதவும். தமிழனை மேலும் பிணமாக்கி இனத்தையே அழிக்க என்னும் உங்களைப் போன்ற மூடர்களை தமிழ் சமுதாயம் என்றுமே மன்னிக்காது.

  43. என்னும் என்பது தட்டச்சுப் எண்ணும் – என மாற்றிப்படிக்கவும்.

  44. //ஒரு தவறான கருத்தாடல் மேலே இடம்பெற்றிருக்கிறது,நக்சலைட்டுகள் சார்பாகவும் பிரச்சாரம் செய்யலாமா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது,கொள்கைகளை பிரச்சாரம் செய்வதற்கு தடை எதுவும் இருக்காது என்று நம்புகிறேன்,ஏனெனில் இந்த மண்ணில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து 19ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான கொள்கை பிரசாரங்கள் வெளிப்படையாக நடந்ததிருக்கிறது அப்படித்தான் காந்தி பிரச்சாரம் செய்தார்,கொஞ்சம் தீவீரவாதமாக பாலகங்காதர திலகர் பிரச்சாரம் செய்தார்,…. எனவே தவறில்லை என்று நம்புகிறேன் ஆனால் ஒரு குழப்பம் நிலவுகிறது சுபாஷ்சந்திர போஸ் சுதந்திரப்போராளியா அல்லது இன்றைய அறிவுக்கடல்களின் கருத்துப்படி பயங்கரவாதியா ???பித்தலாட்டம் கூடாது நண்பர்களே…//

    ooh. good. let srilanga people discuss their own issues, why you people are discussing here? are they doing the same job in all portals? they are doing their job and you do your job.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *