மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 2

மூலம்: வால்டர் வுல்லன்வெபர்

தமிழில்: அருணகிரி

இந்தக்கட்டுரை, ஜெர்மனியைச்சார்ந்த ஸ்டெர்ன் (STERN) என்கிற ஊடக நிறுவனம் 2003-இல் வெளியிட்ட கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாக்கி எழுதப்பட்டது. இதில் வெளிச்சம் போடப்பட்டுள்ள பல விஷயங்களைக்குறித்து புத்தகங்களும், கார்டியன் முதலான பத்திரிகைகளில் கட்டுரைகள் பலவும், சானல் 4 டாக்குமெண்டரிகளும் வெளிவந்து விட்டன. ஆனால் இன்றுவரை இந்த கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் மதர் தெரசாவின் ”சேவையின் பிரசாரகர்கள்”  (Missionaries of Charity)  அமைப்பிடமிருந்து எந்த பதிலும் கிடையாது.

அடைப்புக்குறிக்குள்  ”மொ.பெ.” என்று குறிக்கப் பட்டுள்ளவை மொழிபெயர்ப்பாளரின் குறிப்புக்கள்.

முந்தைய பகுதி 

தொடர்ச்சி… 

வருக்கும் எதற்காகவும் பணம் தருவதில்லை என்பது கடவுள் தனக்குத்தந்த உரிமையாகவே தெரசா கருதினார். ஒருமுறை லண்டனில் தன் சிஸ்டர்களுக்காக 500 பவுண்டிற்கு உணவு வாங்கினார். ஆனால் அதற்கான பணத்தை தர வேண்டுமென்று உணவு விடுதிக்காரர் கேட்டபோது, மெல்லிய சிறு தேகம் கொண்ட  மதர் தெரசா என்ற அந்தப்பெண்மணியின் கோபம் வெடித்துக்கிளம்பியது: “இது கடவுளின் பணிக்காக!” என்று கத்தினார். பெரும் குரலெடுத்து  தொடர்ந்து அவர் திட்டத்தொடங்கியதில், உணவு வரிசையில் நின்றுகொண்டிருந்த வேறொருவர் முன் வந்து அந்த செலவுப்பணத்தை ஏற்றுக்கொண்டார்.

Missionary_Position_book_Mother_Teresaமதர் தெரசாவின் அமைப்பு தன் கணக்கு வழக்குகளை அரசுக்கு வெளியிடும் ஒரு சில நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கே 1991-இல் அவரது அமைப்புக்கு வரவு 5.3மில்லியன் மார்க்குகள். செலவு (சேவை செலவுகள் உட்பட?) வெறும்  360,000 மார்க்குகள்- அதாவது 7% மட்டுமே செலவு. மீதமுள்ள பணம் எங்கே போனது? இங்கிலாந்து அமைப்பின் தலைமைப்பதவி வகிக்கும் சிஸ்டர் தெரசினாவிடம் கேட்டபோது “மன்னிக்கவும், உங்களுக்கு அதைச்சொல்ல முடியாது” என்று தவிர்க்கும் விதமாக பதிலளித்தார். இந்த நிதியில் ஒரு பகுதியை ஒவ்வொரு வருடமும் பிற நாடுகளில் உள்ள இந்த அமைப்பின் கிளைகளுக்கு அனுப்புவதாக வரித்தாக்கல்  செய்த விவரங்கள் சொல்கின்றன. ஆனால் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு என்கிற விவரம் தரப்படவில்லை. அதில் ஒருநாடாக எப்போதும் இருப்பது ரோம்- அங்குள்ள வட்டிகன் வங்கிக்கணக்கில் அந்த நிதி சேர்கிறது. ஆனால் அதன்பின் அந்த வட்டிகன் கணக்கில் சேர்ந்த பணம் என்ன ஆகிறது என்பது இறைவனால் கூட அறியமுடியாத ரகசியமாகும்.

ஒன்று நிச்சயம்- பணக்கார நாடுகளில் இருந்து வரும் பெரும் பணத்தால் ஏழை நாடுகளில் உள்ள மதர் தெர்சாவின் சேவை அமைப்புகள் பலன் பெறுவதே இல்லை. மதர் தெரசாவின் அதிகாரபூர்வ சரிதையாளர் கேத்ரின் ஸ்பிங்க் எழுதுகிறார் “சிஸ்டர்கள் அமைப்பு ஒரு நாட்டில் காலூன்றிய உடனேயே மதர் அந்த அமைப்புக்கான அனைத்து நிதி உதவிகளையும் விலக்கிக்கொண்டு விடுவார்”. மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு கிடைப்பதெல்லாம் வெறும் தொடக்கநிலை உதவி மட்டுமே. திரட்டப்பட்ட பெரும்பாலான நன்கொடை நிதியும் வட்டிகன் வங்கியின் கணக்கிலேயே கிடக்கும்.

ஸ்டெர்ன் (STERN), நன்கொடைகள் எங்கெங்கே போகின்றன என்பது குறித்து எழுத்து மூலமாகவும் நேரே சென்று பார்த்தும் கல்கத்தாவிலுள்ள மதர் தெரசாவின் சேவையின் பிரசாரகர்கள் அமைப்பை பல முறை கேட்டுக்கொண்டது. மதர் தெரசாவின் அமைப்பு ஒருமுறையும் பதில் அளிக்கவேயில்லை.

“நியுயார்க்கில் உள்ள ஹவுஸுக்குப்போனால், நன்கொடைகள் எங்கே போகின்றன என்று உங்களுக்கு தெரிய வரலாம்” என்கிறார் இவா கோலோட்ஷியெ என்கிர போலந்துப்பெண்மணி. இவர் தெரசாவின் MIssioanries of charity-இல் 5 வருடங்கள் வேலை பார்த்தவர். அவர் சொல்கிறார்: “வீடற்றவர்களுக்கான அந்த அமைப்பு நடத்தும் நிலவறையில் விலைமதிப்புள்ள பல புத்தகங்கள், நகைகள், தங்கம் ஆகியவை இருக்கின்றன. அவை என ஆகின்றன? மதர் தெரசா அமைப்பின் சிஸ்டர்கள் நன்கொடைகளாக இவற்றை புன்சிரிப்புடன் வாங்கி உள்ளே வைத்துக்கொள்கிறார்கள். இப்படி வந்து சேரும்  பெரும்பாலான நன்கொடைகள் அங்கேயே பலகாலமாக எவ்வித பயனுமின்றிக்  குவிந்து கிடக்கின்றன”.

பல மில்லியன்களாக வந்து சேரும் நன்கொடைகளுக்கும் இதே கதிதான். சிஸ்டர் விர்ஜின் என்றழைக்கப்பட்ட சூசன் ஷீல்ட்ஸ் சொல்கிறார் “தவறாக உபயோகிக்கப்படுவதில்லை என்று கொண்டாலும்கூட, இப்படி வரும் நன்கொடைகள் பெரும்பாலும் எந்த சேவைக்காகவும் உபயோகிக்கப்படுவதே இல்லை. எத்தியோப்பிய பஞ்சத்தின்போது வந்த பல செக்குகள் எத்தியோப்பியா ஏழைகளுக்காக என்று குறிப்பிடப்பட்டே வந்தன. அப்படி வந்த செக்குகளின் கணக்கைக்கூட்டி அந்தத்தொகையை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி விடட்டுமா என ஒருமுறை கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும் சிஸ்டரிடம் கேட்டேன். அவரது சொன்ன பதில் “இல்லை, ஆப்பிரிக்காவிற்கு நாம் பணம் அனுப்புவதில்லை”. ஆனால்  பணம் பெற்றுக்கொண்ட தற்கான ரசீதில் மட்டும் தவறாமல் ”எத்தியோப்பியாவிற்காக”  என்று எழுதியே நன்கொடை தந்தோருக்கு அனுப்பி வந்தேன்”.

முன்பு இந்த அமைப்பின் சிஸ்டர்களாக இருந்தவர்களைப்பொறுத்தவரை, மதர் தெரசா அமைப்பிற்கு வரும் நிதி என்பது எப்போதுமே ஒருவழிப்பாதைதான். “பிற அமைப்புகளைவிட நமக்கு அதிகமாக நிதி வருகிறது என்பது ஆண்டவன் மதர் தெரசாவை அதிகம் நேசிக்கிறான் என்பதையே காட்டுகிறது என்றே எங்களுக்கு சொல்லப்பட்டது” என்கிறார் சூஸன் ஷீல்ட்ஸ். நன்கொடைகளும் கொழுத்த வங்கிக்கணக்கும் ஆண்டவனின் அன்பின் அடையாளங்கள். ஆக, எடுத்துக்கொள்வது திருப்பித்தருவதை விடப் புனிதமானது.

நன்கொடை வழங்குபவர்கள் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவுவதற்காகத்தானே பணம் தருகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? நியுயார்க் பிரான்க்ஸ் நகரில் இந்த அமைப்பின் பெண் துறவிகள் கஞ்சித்தொட்டி நடத்துகிறார்கள்- உண்மையை சொல்லப்போனால், உணவுப்பொருட்கள் வாங்குவது முதல் அத்தனை சேவைகளையும் செய்யும் பிற தன்னார்வலர்களை வைத்து நடத்திக்கொள்கிறார்கள். கஞ்சியை விநியோகிப்பது மட்டும் சிஸ்டர்களாய் இருக்கலாம். ஒருமுறை தன்னார்வலர்கள் ரொட்டி வாங்கிக்கொண்டு வர மறந்து விட்டதால், உணவு வினியோகம் தடைபடும் நிலையில், சுபீரியரிடம் ரொட்டி நாம் வாங்கி விடலாமா என்று கேட்டபோது “அந்தக்கேள்விக்கே இடமில்லை- நமது அமைப்பு வறியதொரு அமைப்பு” என்று அவர் சொன்னதை ஷீல்ட்ஸ் நினைவுபடுத்திக்கூறுகிறார். இதுபோல் எண்ணிலடங்கா பல சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் சொல்கிறார். வெள்ளாடை வாங்க வசதியில்லாத நிலையில் முதல் கம்யுனியனிற்கு ஒரு பெண் வரமுடியாமல் போனபோது. ஷீல்ட்ஸ் (அன்று சிடர் வெர்ஜின்) சுபீரியரிடம் அந்த வெள்ளை ஆடையை நாம் வாங்கித்தரலாமா என்று கேட்க அதை அவர் கடுப்புடன் மறுத்ததைச் சுட்டிக்காட்டுகிறார் ஷீல்ட்ஸ். அந்தப்பெண் கடைசிவரை முதல் கம்யுனியன் பெறவே இல்லை.

அவசியத்தேவைக்கான செலவுகளைக்கூட இப்படி இறுக்கிப்பிடிப்பதால் ஏழைகளிலும் ஏழைகளான இந்தியாவின் ஆதரவற்ற குழதைகள்தான் உண்மையில் அதிகம் பாதிப்புக்கு ஆளாகின்றார்கள்.
டெல்லியில் தெரசாவின் அமைப்பு நடத்தும் ஒரு இல்லத்திலிருந்து வெளிநாட்டினரால் தத்தெடுக்கப்பட அனாதைக்குழந்தைகள் காத்திருக்கிறார்கள். இந்த இல்லத்தை நடத்தும் செலவும் வழக்கம்போல் தெரசாவின் அமைப்பிற்குக் கிடையாது. வெளிநாட்டிலிருக்கும் எதிர்கால தத்து பெற்றோர்கள் செலவில் இந்த இல்லம் நடத்தப்படுகின்றது. ஜெர்மனியில் இப்படிப்பட்ட தத்து குழந்தைகளுக்கான முதற்பெரும் இடை-நிறுவனமாக செயல்படுவது ப்ரோ இன்ஃபண்டெ என்னும் அமைப்பு. அதன் தலைவரும் மதர் தெரசாவின் தனிப்பட்ட நண்பருமான கார்லா விடெகிங் இந்த அமைப்பின் நன்கொடைதாரருக்கும் ஆதரவாளருக்கும் எழுதிய கடிதம் இவ்வாறு பேசுகிறது:

”எனது செப்டம்பர் வருகையின்போது அங்கே இரண்டு மூன்றுகுழந்தைகள் ஒரே கட்டிலில் படுத்துக்கிடப்பதைப் பார்த்தேன். அவை அடைக்கப்பட்டு இருந்த அறை மிகக்குறுகலான அறை. ஒரு சதுர இஞ்ச் கூட விளையாட்டு இடம் குழந்தைகளுக்கு இல்லை. இதனால் எழும் நடத்தை  தொடர்பான பிரச்சனைகளை நாம் எளிதாகப் புறம் தள்ளிவிட முடியாது”.  இந்த கடிதத்தின் தொனி, நிதி ஆதாரம் இல்லாத பலவீன நிலையில் இருந்துகொண்டு அந்தக் குழந்தைகளின் தேவைகளுக்காக விடெகிங் நன்கொடைதாரர்களிடம் வேண்டுவதாக உள்ளது. பலவீன நிலையா? அதுவும் யுனிசெஃப்பைவிட மும்மடங்கு இந்தியாவில் மட்டும் செலவழிக்க முடியக்கூடிய அளவுக்கு பில்லியன் அளவு பணச்செழிப்பு உடைய மதர் தெரசாவின் அமைப்பு நிதிஆதார வசதியற்ற அமைப்பா? தெரசாவின் அமைப்பிற்கு  கட்டில்கள் வாங்க மட்டுமல்ல,  விளையாட்டு மைதானங்களுடன் சேர்த்தே அனாதை இல்லங்களையும் நிறுவக்கூட நிதிவசதி இருக்கிறதுதான்- டெல்லியில் சில இடங்களில் மட்டுமல்ல,  டெல்லி, பம்பாய், கல்கத்தா என்று முக்கிய நகரங்கள் அனைத்திலும் அவதிப்படும் ஆயிரக்கணக்கான தெரு அனாதைகளை கைதூக்கி விடும் அளவுக்கு அவர்களிடம் பெரும்பணம் இருக்கிறதுதான்.

christopher-hitchens-on-mother-teresa

ஆனால் மதர் தெரசாவைப்பொறுத்தவரை, சேமித்தல் என்பதே அதனளவில் ஒரு முக்கிய விழுமியமாகும். அதெல்லாம் சரிதான், ஆனால் வறிய அமைப்பாகத்தொடங்கிய அவரது நிறுவனம் கிடுகிடுவென பெரும்நிதிவசதியோடு வளரத்தொடங்கியபோது வந்து சேர்ந்த விலையுயர்ந்த நகைகள், படங்கள், வீடு நிலம் முதலான சொத்துகள், செக்குகள், சூட்கேஸ் நிரம்பி வந்து சேர்ந்த பணக்கற்றைகள்  – இவற்றையெல்லாம் என்ன செய்தார்? அவர் நினைத்திருந்தால் இப்படி பெரும் சேமிப்புக்கிடங்கில் தன் செல்வங்களை புதைத்து வைத்திருப்பதைத்தாண்டி, கவனமாகத்திட்டமிட்டு  அந்தப்பணத்தைக்கொண்டே தன் சேவைச்செயல்கள் முழுவதையும் செய்திருக்க முடியும். ஆனால் நோபல் பரிசு வென்ற இந்த அம்மையாருக்கு உண்மையில் மக்களுக்கு உதவும் வகையில் திறம்பட நிர்வகிக்கப்படும் ஒழுங்குமிகு நிர்வாகம் என்பது தேவையில்லை. மிஷனரிஸ் ஆஃப் சேரிடி அமைப்பு “உலகிலேயே ஒழுங்கற்ற (disorganized) ஒரு நிறுவனம்” என்று பெருமையுடன் கூறிக்கொண்டார் தெரசா.  அவரது நிறுவனத்தில் கம்ப்யூட்டர்கள், நகலெடுக்கும் யந்திரங்கள், நவீன தட்டச்சு இயந்திரங்கள் ஆகிய எவற்றிற்கும் அனுமதி கிடையாது. நன்கொடையாக வந்தாலும், அவற்றை நிறுவவோ உபயோகிக்கவோ அனுமதி கிடையாது.  கணக்குகளை எழுத பள்ளி நோட்டுப்புத்தகங்களையே உபயோக்கிக்கிறார்கள். அதில் பென்சில் கொண்டு நுணுக்கி நுணுக்கி கணக்குகளை எழுதுகிறார்கள். இப்படியே இறுக்கி எழுதப்பட்ட கணக்குகளால் இடைவெளி இன்றி எழுதி புத்தகத்தின் பக்கங்களை நிரப்புகிறார்கள். பிறகு அந்தக்கணக்குகளை எல்லாம் ரப்பர் கொண்டு அழிக்கிறார்கள். அழித்து விட்டு அதே பக்கங்களில் மீண்டும் கணக்கெழுதத்தொடங்குகிறார்கள். எதற்கு இதெல்லாம்? சேமிப்பதற்காகவாம்.

நெடுங்கால நோக்கம் கொண்ட சேவை நிறுவனம் என்பது அதன் ஸிஸ்டர்களை செவிலிப்பணிக்கும், ஆசிரியப்பணிக்கும், மேலாண்மைப்பணிக்கும் பயிற்சி தந்து தயார் செய்யும். ஆனால் தெரசாவின் அமைப்பிலுள்ள  எந்த ஒரு ஸிஸ்டருக்கும் எந்தப்பயிற்சியும் அளிக்கப்படுவதே கிடையாது.

வருடங்கள் செல்லச்செல்ல ஒழுங்கற்ற நிர்வாகம் என்பதில் பெருமிதம் கொண்ட மதர் தெரசாவின் சில முடிவுகள் மென்மேலும் விசித்திரமாயின. சுஸன் ஷீல்ட்ஸ் சொல்கிறார்: ஒருமுறை அவரது அமைப்பு, நியுயார்க் நகரில் உள்ள வெற்றுக்கட்டிடமொன்றை எய்ட்ஸ் நோயாளிகள் பராமரிப்புக்காக வாங்க முடிவு செய்தது. கட்டிட விலை: 1 டாலர். ஆனால் உடல் ஊனமுற்ற பலர் உபயோகிக்கும் கட்டிடம் என்பதால் நியுயார்க் நகராட்சி அமைப்பு லிஃப்ட் ஒன்றை நிறுவும்படி சொன்னது. ஆனால் லிஃப்ட் நிறுவ மறுத்து விட்டது தெரசாவின் அமைப்பு.  மதர் தெரசாவைப்பொறுத்தவரை லிஃப்ட் என்பது செல்வச்செழிப்பின் அடையாளம். இறுதியில் அந்தக்கட்டிடம் நியுயார்க் நகராட்சியிடமே திரும்பத்தரப்பட்டது.

தெரசாவின் சேவையின் பிரசாரகர்கள் அமைப்பு எத்தியோப்பியாவில் பசியால் வாடுபவர்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளை (அதற்காகவென்று நன்கொடைகளைப்பெற்ற பின்னரும்) அனுப்பாமல் போனதும் இந்திய அனாதைக்குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு தராமல் போனதும்  ஒருபுறம் இருக்க,  இந்த அமைப்பு பெருமை கொள்ளும் ஒழுங்கற்ற நிர்வாகம் என்கிற கோட்பாட்டினால் பாதிக்குள்ளான பிறரும் உள்ளனர்.

மதிப்பு வாய்ந்த லான்ஸெட் என்கிற மருத்துவ இதழின் எடிட்டரான ராபின் ஃபாக்ஸ் என்பவர் 1994-இல் மதர் தெரசாவின் இல்லங்களின் அவலநிலைகளைக்குறித்து எழுதிய விமர்சனக் கட்டுரையில் முறையான அறுவைச்சிகிழ்ச்சை  என்பது இந்த அமைப்பின் இந்திய கிளைகளில் காணப்படவே முடியாத ஒன்று என்று சொன்னது மருத்துவ உலகையே அன்று அதிச்சிக்குள்ளாக்கியது: எலும்புருக்கி என்று சொல்லப்படும் டிபி நோய்  (எளிதில் தொற்றக் கூடியது – மொ.பெ)  வந்தவர்கள்கூட தனியறையில் வைக்கப்படுவதில்லை என்பதையும் அங்கே பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கொதிக்கும் நீரில் கிருமி நீக்கம் செய்யப்படாமல்  வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவப்பட்டு மீண்டும்  மீண்டும் உபயோகிக்கப்படுவதையும் அவரது கட்டுரை வெளிச்சம் போட்டது. கடுமையான வலியில் துடிதுடிக்கும் நோயாளிகளுக்குக் கூட வலிமரப்புக்கு மாத்திரைகள் தரப்படுவதில்லை- மாத்திரைகள் இல்லாததால் அல்ல, மதர் தெரசாவின் கொள்கையின் காரணமாக. ”கிறிஸ்துவின் வலியில் பங்கு பெறுவதென்பதே ஒருவருக்கு தரப்படும் மிக அழகிய பரிசு ஆகும்” என்றார் மதர் தெரசா.  ஒருமுறை வலியில் கதறிக்கொண்டிருந்த நோயாளி ஒருவரிடம் மென்மையாக “நீ வலியில் துடிக்கிறாய் என்றால், ஏசு உன்னை முத்தமிடுகிறார் என்று பொருள்” என்றார். அதைக்கேட்ட நோயாளி “அப்படியென்றால் உங்கள் ஏசுவை என்னை முத்தமிட வேண்டாமென்று சொல்லுங்கள்” என்று கோபத்தில் கத்தினார்.

MissionariesOfCharity5

வாழ்வின் இறுதிநிலையில் உள்ளோருக்கான இல்லத்தில் பணியாற்றிய இங்கிலாந்து டாக்டர் ஜாக் ப்ரெகர்  இவ்வாறு சொல்கிறார்: “அன்பும், புரிதலும், அக்கறையும் அளிக்கும் ஒருவர் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசிகளைப் பயன்படுத்துவார்.  மதர் தெர்சாவின் அமைப்பு ஒருவேளை உலகிலேயே பணக்கார சேவை அமைப்பாக இருக்கும். கறாரான மருத்துவக் கண்ணோட்டத்தில்  பார்த்தால், அவரது இல்லங்களில் இறந்து கொண்டிருக்கும் பலரும் உண்மையில் இறக்க வேண்டிய அவசியமே கிடையாது”.

பிரிட்டிஷ் செய்தி இதழான கார்டியன் ”கவனமே இல்லாமல் உதாசீன சேவைசெய்வதற்கான முறைப்படுத்தப்பட்ட அமைப்பு” என்று மதர் தெரசாவின் அமைப்பைக்குறிப்பிடுகின்றது.

இறக்கும் நிலையில் உள்ளோர் கதி இதுவென்றால், அனாதைக்குழந்தைகளுக்கான மருத்துவ கவனிப்பும் எவ்வகையிலும் மேம்பட்டதாக இல்லை. ஜெர்மனியின் ப்ரோ இன்ஃபண்டெ (தத்தெடுக்க உதவும் இடைநிலை அமைப்பு) தலைமை தத்துப்பெற்றோர்களுக்கு இவ்வாறு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது: ”உங்கள் குழந்தைகளுக்கு சரியான தடுப்பூசி தந்திருக்கிறார்களா என்பதைக்கவனியுங்கள். சில கேஸ்களில், பயன்பாடு நாள் முடிந்த பழைய தடுப்பூசி போட்டிருப்பதாகவும், சரியாக பராமரிக்காததால் வீரியமிழந்த தடுப்பு மருத்துகள் உபயோகப்பட்டதாகவும் அனுமானிக்கிறோம்”.

இவையெல்லாமே ஒரு விஷயத்தைத்தான் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன- அதுவும் மதர் தெரசா அடிக்கடி தன் உரைகளில் குறிப்பிட்டதுதான் –  இறப்புக்குப்பின் உள்ள வாழ்க்கையைப்பற்றியே அவரது அக்கறை எல்லாம், இவ்வுலக வாழ்க்கையில் அவருக்கு அக்கறை கிடையாது என்பதுதான் அது.

மதர் தெரசாவின் வியாபாரம் என்பது என்ன? பணத்துக்காக  நல்ல மனசாட்சியை பண்டமாற்று செய்வது என்பதுதான் அது. இந்த பண்டமாற்றில் மிகப்பெரும் நன்மை அடைந்தவர்கள் நன்கொடை தந்தவர்கள். கிஞ்சித்தும் நன்மை காணாதவர்கள் ஏழைகள்.

மதர் தெரசா உலகை மாற்றவோ, ஏழைகளின் துன்பங்களை ஒழிக்கவோ, வறுமைக்கெதிராக போராடவோ விரும்பினார் என்று நம்புபவர்கள் உண்மையில் தங்களது மன சாந்திக்காகவே அவ்வாறு நினைத்துக்கொள்கிறார்கள். அவ்வாறு நம்புபவர்கள் உண்மையில் மதர் தெரசா பேசுவதைக் கவனித்துக்கேட்டதே இல்லை. ஏழையாய் இருப்பதும், துன்பப்படுவதும் அவரைப்பொறுத்தவரை உன்னத லட்சியங்கள் மற்றும் சாதனைகளாகும், அந்த லட்சியக்குறிக்கோளை தன்கீழ் தன் பராமரிப்பில் இருந்த அத்தனை பேர் மீதும் அவர் சுமத்தினார், கிறித்துவின் ஆணையை ஏற்ற அவரது குறிக்கோள் இவ்வுலகல்ல, இறப்புக்குப்பின் உள்ள மறுவுலகே.

பின்னாட்களில் புகழ் ஏற ஏற மதர் தெரசா என்கிற பிம்பம் மீது மக்கள் கொண்டுள்ள தவறான புரிதல் அவருக்கே புரியத்தொடங்கியது. அந்தத்தவறான புரிதலைச் சரிசெய்யும் பொருட்டு, இவ்வாறு வாசகங்களை எழுதி அவரது மதர் இல்லம் கட்டிட முகப்பில் தொங்க விட்டார்:

”அவர்களிடம் சொல்லுங்கள்: சேவைக்காக அல்ல, ஏசுவுக்காகத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று. எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் மதப்பற்றாளர்கள். நாங்கள் சமூக சேவகர்கள் அல்ல, ஆசிரியர்கள் அல்ல, மருத்துவர்கள் அல்ல. நாங்கள் (கிறித்துவின்) பெண்துறவிகள் மட்டுமே”

அப்படியென்றாலும் இறுதியில் ஒரு கேள்வி எஞ்சுகிறது: வெறும் பெண் துறவிகள் மட்டும்தான் நீங்கள் என்றால், உங்களுக்கு எதற்கு இந்த அளவு பணம்?

(முற்றும்)

11 Replies to “மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 2”

  1. சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர், அவரது தாய் தெரிசா அம்மையாரிடம் உதவி கேட்கச் சென்றிருந்தார். அவர் ஒரு இந்து என்று அறிந்தவுடன், தெரிசா அம்மையார் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார். ஆனால் அவருடன் வந்த ஒரு கிறித்தவரைச் சந்தித்து அளவளாவினார்.

    தெரிசா அம்மையாரா இப்படி நடந்துகொண்டார் என்று என்னால் நம்பவே முடியவில்லை. பிறகு மேலும் ஒருசிலரும் அம்மையார் உதவி செய்வது சம்யமாற்றததிற்காக மட்டுமே என்று சொன்னார்கள்.

    இக் கட்டுரை நான் கேட்டவற்றை உறுதி செய்கிறது.

  2. தேவையான கட்டுடைப்பு

    தெரசா அம்மையார் கால கதி அடைந்த பின்னர் அவரது உருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்தை அணிந்த ஒரு பெண்மணி கேன்ஸர் ரோகத்திலிருந்து விடுபட்டதாக பரங்கிய வாடிகன் தேவாலயம் பரைசாற்றி இந்த அம்மணியை புனிதராக ஆக்கியது. புனித ரெவ ரெண்டு தெரசாள் அம்மையார் வ்யாதியஸ்தர்களுக்கு ஒண்ணுமே செய்யவில்லை என்பதை மட்டிலும் ஏற்க முடியாது.

    வ்யாதியஸ்தர்களுக்கு வலிக்கு மருந்து கொடுக்காமல் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவை நோக்கி ஜெபம் செய்வதே வலி நிவாரணி என்று செயல்பட்டிருக்கலாம். ஸ்டெரிலைஸ் செய்யாத சிரிஞ்சை ஹிந்துஸ்தானத்தில் தமது பல சேவைஸ்தாபனங்களில் உபயோகித்திருக்கலாம். கணக்கு வழக்கு ஊழல் ………….. செய்யும் சேவைகளைப் பற்றிய புளுகல்கள்………..போதை மருந்து வ்யாபாரிகளிடம் நன் கொடை பெற்றமை……………… இத்யாதி இத்யாதியெல்லாம் நிச்சயம் பட்டியலிடப்பட வேண்டியவையே……….

    தெருவில் குப்பைத்தொட்டி அருகே நாய்களும் பெருச்சாளிகளும் ஒரு மனித உடலை பதம் பார்க்கும் அவலமில்லாமல்…….. அந்த மனித உடல் புனித ரெவ ரெண்டு தெரசாள் ஸ்தாபனங்களில் சாகும் வரை வைக்கப்பட்டமை கூட குறைத்து மதிப்பிட வேண்டிய விஷயம் இல்லை. தெரசாள் ஸ்தாபனத்துக்கு இந்த சரியான காரியத்துக்கான ச்ரேயஸ் நிச்சயம் உண்டு.

    ரெவ ரெண்டு தெரசாள் அம்மையார் பற்றி……. அவர் சார்ந்த க்றைஸ்தவ ஸ்தாபனங்களும் …………. அவர்களது அடியொற்றும்………….. போலி மதசார்பின்மை வாதிகளும்………… விலை போன ……..தினசரி கூச்சல் சந்தை நடத்தும் தொலைக்காட்சிகளும்………..பரப்பிய கட்டுக்கதைகள் கொஞ்ச நஞ்சமில்லை என்பது புரிகிறது.

    க்றைஸ்தவ ஆளுமைகளோ மாற்று மத ஆளுமைகளோ தம்மாத்தூண்டு நல்ல காரியம் செய்திருந்தால் அதை மலையளவு போற்ற வேண்டியதும் அவர்கள் மலை போல செய்துள்ள அவலங்களை கபள சோற்றில் முழுப்பூசணியை மறைப்பது போல மறைக்க வேண்டியதும்………… அதைப் பற்றி மௌனம் சாதிக்க வேண்டியதும்…….. நட்ட நடு செண்டர் வாலறிவோரின் செயப்பாடு என்பது ஜெகப்ரஸித்த அலகீடு.

  3. Dear all
    There are some people who enjoy unqustionable interigity in our country,,one among them is M.TERESA,,Govt officials, or any high valued press person dare to ask questions. so things go their way ,,, not the right way.this is our system. let the present GOVT go in to these details & find out ‘THE TRUTH’,,which alone will prevail.
    LET GOD SAVE INDIA.

  4. இந்தியா உட்பட பல ஏழை நாடுகளில் பணம் வசூலித்து இப்படி ரோமின் கத்தோலிக்க தலைமைக்கு பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். இந்த சேவைக்கா பாரத ரத்னாவும் நோபெல் பரிசும் – ஐயோ !

    கடைசியாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள்படி, கடவுள் அதாவது கர்த்தர் அல்லது பரிசுத்த ஒளி என்று எதுவும் இல்லை என்று அவரே அவர்களின் மேல்பாதிரியாருக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட கடிதங்களில் தெரிவித்துள்ளதாக செய்தி ஆதாரங்களுடன் வந்துள்ளது. அந்த கிறித்தவ அமைப்புக்கள் இப்போது கோடி கோடியாக பணம் வசூலித்து அதிக அளவில் நிலங்களையும், கட்டிடங்களையும் இதுபோல ஏராளம் அசையா சொத்துக்களையும் வாங்கி விட்டனர். இவர்களிடம் இருந்து நாம் தான் விலகி எசசரிக்கையாக இருக்கவேண்டும்.

  5. மனிதநேயமல்ல, இது மதமாற்ற நேயம், மதம் உலகளாவிய ஏமாற்று
    வித்தை

  6. Priya Rani
    How come a man who could not save himself will save others. Do not preach false hopes here. How come the blood of a person crucified will cleans the sins of all of his believers if has not died at all. Sacrifice means death.

  7. நம் நாட்டின் பெயர் இந்தியா. ஹிந்துஸ்தான் அல்ல . நம் அன்பர்கள் இதை மனதில் வைத்துக் கொண்டு தம் கருத்துரைகளை வழங்குதல் நலம் .

  8. தெரசா அவர்களை பாராட்ட மனதில்லாவிட்டாலும் பழித்து பேசுதல் கூடாது. எல்லா இடத்திலும் அதிருப்தியாளர்கள் உண்டு. ஆனால் இந்த கட்டுரையை எழுதியவர்கள் விஷக்கிருமிகள். கிரிக்கெட் விளையாட்டைப்பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் வீரரை திட்டுகிறவர்கள் எப்படி மனசாட்சியே இல்லாதவர்களோ அதேபோல இந்தக் கட்டுரை எழுதியவர்களும். உங்களால் சமூகப்பணி செய்யமுடியவில்லை என்றால் செய்கிறவர்களை செய்யவிடுங்கள். பீர்பாலின் கதையில் வருவதுபோல அக்பர் கிழித்தக் கோட்டின் பக்கத்தில் பெரியக் கோட்டைக் கிழித்தாரே (மற்றவர்களோ அக்பர் கிழித்தக் கோட்டை சிறியதாக மாற்றுவதற்கு பாதிக்கோட்டை அழிக்க, மறைக்க முயற்சி செய்தார்கள்) அவர்கள் அறிவாளிகளா! அல்லது பீர்பால் அறிவாளியா?) அதேப்போல. இவ்வளவு தரக்குறைவாக எழுதுகிற நீ தெரசா செய்த சமூகப்பணியில் ஒரு சதவீதமாவது செய்ய கற்பனை செய்தாவது பார்த்திருப்பாயா? ஆனால் நீர் சேற்றில் நின்றுகொண்டு தெரசாவின் பணிமீதும் சேற்றை வாரி இறைக்க நினைக்கிறீரே ஐயா நீர் நன்றாயிருப்பீரோ, உம் அடியார்கள் நன்றாயிருப்பீர்களோ. ஒருவன் கஷ்டப்படுவது அவன் கர்ம வினை அல்லது முற்பிறவி பாவம் என்று தன் நலனை மட்டுமே கவனித்துக்கொள்ளும் குலமல்லவா உமது குலம். ஆனால் நீ செய்கிற உதவியை உனக்கு திருப்பி பதிலுதவி செய்யமுடியாத நபர்களுக்கு உதவி செய் என்ற இயேசுபிரானின் உபதேசத்தை பின்பற்றிய தெரசா மீதா பழிகூறுகிறீர். இறைவன் நியாயந்தீர்க்கிறவன். அவனது நியாயத்தீர்ப்பு உம்மேல் வருவதற்குள் இயேசு யார் என்பதையும் அவரின் உபதேசம் என்னவென்றும் புதிய ஏற்பாடு படித்து அறிந்துகொள்ளும். ஒருவேளை காப்பாற்றப்படுவீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *