“எது கருத்து சுதந்திரம்?” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8

“மாதொருபாகன்” நாவல் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து, அந்த நாவல் சித்தரிப்புகளின் வரலாற்றுத் தன்மை குறித்தும், கருத்து சுதந்திரம் மற்றும் அதன் வரையறைகள் குறித்தும் தமிழகத்தின் பிரபல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம்.

தலைமை : தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கெளமார மடாலயம்.

முன்னிலை : கல்வெட்டு ஆய்வாளர் புலவர் திரு. இராசு, கொங்கு வரலாற்று ஆய்வு நிறுவனம்

கருத்தாளர்கள்:

திரு. பேரா. சாமி தியாகராசன், தமிழறிஞர்
திரு . அரவிந்தன் நீலகண்டன், ஆய்வாளர்
திரு. சாரு நிவேதிதா, எழுத்தாளர்
திரு. ம. வெங்கடேசன், சமூகவியல் சிந்தனையாளர்
திரு. பொன் தீபங்கர், மானுடவியல் சிந்தனையாளர்
திரு. வீர. ராஜமாணிக்கம், கட்டுரையாளர்
திரு. இராம.ரவிக்குமார், சமூக செயல்பாட்டாளர்

நாள்: பிப்ரவரி 8 (ஞாயிறு) மாலை 4 மணி.

இடம் : ஜங்கம் சிவாச்சாரியார் மடம்,பெரிய மாரியம்மன் கோவில் அருகில், திருச்செங்கோடு.

அனைத்து சமூக மக்களும், சமுதாய தலைவர்களும், ஆன்மீக பெரியவர்களையும், செயற்பாட்டாளர்களையும் நிகழ்விற்கு அழைக்கிறோம்.

– திரு. அர்ஜுன் சம்பத், இந்து தர்ம சேவை அறக்கட்டளை

thiruchengode-seminar

11 Replies to ““எது கருத்து சுதந்திரம்?” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8”

  1. தமிழகத்தை பொறுத்த மட்டில் இந்து தர்மத்தை இழிவு படுத்தி பேசுவது கருத்து சுதந்திரம். இதை திருமாவளவன் , சீமான் , வீரமணி போன்றவர்கள் செய்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அப்பொழுது பிறரின் கருத்து சுதந்திரத்தை இவர்கள் மதிக்க மாட்டார்கள். அதற்கு’ மெட்ராஸ் கப்பே’ என்கிற ஹிந்தி படம் பிரபாகரனை தீவிரவாதி என்று வர்ணிப்பதாம் . உண்மையை சொன்னால் சீமான் கொந்தளிப்பார்.

  2. சமூக பிரச்சனைகள் தவறான நம்பிக்ககைள் மனித பலகீனங்கள் சமூக ஒழங்கீனங்கள் சாதி இனம் மதம் சாா்ந்தவை அல்ல.அதற்காக அதை முன்னிறுத்தி ஒரு பிாிவினாின் அடையாளமாக அதை முன்னிருத்துவது பண்பாடற்ற காடைத்தனமாகும்.இது மனிதஉ ரிமை ஆகாது. வம்படி வழக்கு.இலக்கிய சுதந்திரம் ஆகாது. பிறரை இளக்காரமாக நினைப்பது ஆகும். அசிங்கமான அந்த நாவல் குறித்து பாதிக்கப்பட்ட வர்கள் எடுத்த நடவவடிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. தொடரட்டும் நற்பணிகள்.

  3. எது கருத்து சுதந்திரம் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்வது மகிழ்ச்சி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிஞர் பெருமக்களின் உரையை கேட்க ஆவல். ஆனால் சூழ்நிலை இடம் தரவில்லை. கருத்தரங்க செய்திகளை தங்கள் இணையதளத்தில அறிந்துகொள்ள முயல்வேன்.
    ந்ன்றி.
    குமரன் கருணாகர்ன்

  4. இழிவு படுத்துவதன் மூலம் நம்பண்பாட்டை சமயத்தினை அழித்துவிடமுடியும் என்று கனவுகாண்கிறது திட்டமிடுகிறது அபிராஹாமியக்கூட்டம். அதன் முகத்திரையை கிழிக்க அவசியமான நிகழ்வு சரியான இடத்தில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு உரையையும் பதிவு செய்து யூடூபில் ஏற்றுங்கள். கருத்தரங்கத்தின் குறிக்கோள் வெற்றிபெற அம்மையப்பன் அருள் செய்யவேண்டுகிறேன். இன்றுதான் பார்த்தேன். கோவையில் இருந்தாலும் நாளை என்பதால் கலந்துகொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. முடிந்தால் அவசியம் கலந்துகொள்வேன்.

  5. மாதொருபாகன் நூல் சர்ச்சை குறித்த கருத்தரங்கிற்கு வரமுடியாமற்போனது குறித்து வருத்தம். அங்கே பேசியவர்களின் கருத்துக்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  6. இந்த கருத்தரங்கில் பங்கு பெற்ற ஸ்ரீ வீர.ராஜமாணிக்கம், ஸ்ரீ ம.வெங்கடேசன், ஸ்ரீ சாரு நிவேதிதா மற்றும் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் போன்ற அனைவரின் உரைகளின் வீடியோ பதிவுகளை வலையேற்றுமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    தேவையான இந்த நிகழ்வுக்கு ஏற்பாடுகளை முனைந்து செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்த ஹிந்து தர்ம சேவை அறக்கட்டளையின் நிர்வாகியினருக்கும் ஸ்ரீ அர்ஜூன் சம்பத் அவர்களுக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  7. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பணயபுரம் சிவாலயம் ………..சாலை விஸ்தரிப்பு பணிக்காக தகர்க்க இருந்ததைப் பற்றி…………ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசயர் அவர்கள் சில மாதங்கள் முன்பு இங்கு கருத்துப் பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது.

    இதைக் காப்பாற்றும் வண்ணம் ஃபேஸ்புக் இணைய மூலமாக முயற்சி எடுக்கப்பட்டதும்……… ஆலயம் காக்கப்பட்டதும் பற்றிய விபரங்களை……….. ஆலயத்தின் வ்ருத்தாந்தங்களை……… இந்த யூட்யூப் பதிவு விவரிக்கிறது. வாசிக்கும் அன்பர்கள் இதை மேற்கொண்டு பகிரவும்.

    https://www.youtube.com/watch?v=qtDSLjYHUe4

  8. சர்ச்சையின் முடிவாக நாவலாசிரியர் தான் எழுதுவதையே நிறுத்திவிட்டேனென்றும், இனி த‌ன் ஆசிரியத் தொழிலை மட்டுமே செய்வேனென்றும், எழுதிய நாவலை தான் சர்ச்சைக்குரிய பகுதிகளை மாற்றிவிடுவேனென்றும், அச்சடிக்கப்பட்ட பிரதிகள் திரும்பவாங்கிக்கொள்ளப்படுமென்றும், இனி அச்சடிக்கப்படமாட்டாதென்றும் எழுத்து மூலமாக வாக்குமூலமே கொடுத்து விட்டு, தன் முக நூலில் படிப்போருடன் பகிர்ந்தும் முடித்துக்கொண்டு விட்டார்.

    இச்சூழ்நிலையில் ஒரு கருத்தரங்கம் வைப்பது மீண்டும் அந்நாவலைத் தேடிபிடித்துப்படிக்கும் ஆர்வத்தைப் பெருக்கவே செய்யும். ஆங்கில நாவலை மீண்டும் பெறமுடியாது. காரணம் அதனுரிமையில் நாவலாசிரியர் தலையிட முடியாது. உலகமுழுவதும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இந்நாவலில் சொல்லப்படும் ‘வரலாற்றை;’ ப் பற்றிச் சட்டை செய்வோரல்ல.

    இப்படிப்பட்ட கருத்தரங்கம் வாசகரை (ஆங்கிலம் தெரிந்தோரை) அவ்வாங்கில மொழியாக்கப் பிரதிக்காகவும், தமிழ் தெரிந்தோரை இணையத்தில் இலகுவாகக் கிடைக்கும் பிரதிக்காகவும் அனுப்பும்.

    அவர்களை இந்நாவலில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் பொய்யானவை என்று சொல்லித் திருத்தப்பார்க்கவா இக்கருத்தரங்கம்? வன்புணரப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் விசாரணை பண்ணுவது போல.

    நீதிமன்றத்துக்கே போய்விட்டது சர்ச்சை. அப்படியானால் நீதிமன்றத்திலல்லவா வெற்றிபெறப் பார்க்கவேண்டும்? தோல்வியடைந்தால், நாவலாசிரியாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாவல் மீண்டும் அச்சடிக்கப்படுமல்லவா?

    இக்கருத்தரங்கம் தங்களைத் தாங்களே முன்னிலைப்படுத்திக்கொள்ள உதவும் ஒரு அக்ருவியாகத்தான் படுகிறது.

    கருத்துச்சுதந்திரம் என்பது ஒரு தீராப்பிரச்சினை. இரு குழுக்கள் என்று இலக்கியம் எழதப்படத் தொடங்கியதோ அன்றிலிருந்தே உண்டு. ஒன்று: கருத்துச்சுதந்திரமென்பது ஒரு கட்டுக்கோப்புக்குள் அடங்குவது. இன்னொரு குழு: இல்லை. கட்டுப்பாடுகள் அதற்குக் கிடையா. கருத்தரங்கள் பேசப்போகிறவர்கள் முதல் குழு இல்லையா? ஏனென்றால், இரண்டாவது குழு ஏற்கனவே பேசிவிட்டது.

    என் கருத்தை நான் ஏற்கனவே மாதொருபாகனைப்பற்றி ஜடாயு எழுதிய கட்டுரையில் போட்டுவிட்டேன்: கருத்து சுதந்திரம் என்பது உலகமுழுவதற்கும் ஒன்றே ஒன்றாக எடுக்க முடியாது. எந்தக்கலாச்சாரத்தில் வாழ்கிறோமோ அதனையொட்டியே அது கட்டுப்பாட்டுக்குள், அல்லது கட்டுப்பாடில்லாமல் இருக்கும். நம் கலாச்சாரத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையே நாம் விரும்புகிறோம். இதை ஒரு கருத்தரங்கில் போய் நான் தெரிந்துகொள்ளவேண்டுமா? உடனே ஒருவர் இங்கு எழுதிவிடுவார்: ஆபிரகாமியர் (அதாவது நான்!) நிறுத்தப்பார்க்கிறார்கள் என்று.

    எனவே கருத்தரங்கம் நடத்துங்கள். வாழ்த்துக்கள்.

  9. ஒரு பெண்ணை விபசாரத்தில் சில வக்கிர புத்திக்காரர்கள் தள்ளுவது சமூக அநீதி. ஆனால் அப்பெண் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவராக் காட்டும் போது அது வீண் கற்பனைக்கு வழி கோலும்.அரங்கேற்றம் என்ற திரைப்படம் பாலசந்தா் அவர்களால் வெளியிடப்பட்டது.அதில் ஒரு வைதீக குடும்பத்தில் பிறந்த பிறாமணப் பெண் விபச்சாாியாக்கப்படுகிறாள். அதைப்பாா்தத பிறாமணப் பெண்கள் அனைவருமே இப்படித்தானோ என உலக அனுபவம் இல்லாத அப்பாவிகள் பலா் நினைக்கக் கூடும்.படம் வெளியான சமயத்தில் பெரும் விவாதம் நடைபெற்றது.பிறாமண சமூகம் தனது எதிா்ப்பை பண்பாடான முறையில் காட்டி அமைதி காத்தது அவர்களும் மேன்மையைக் காட்டியது. இதற்கு முன் ஒரு திரைப்படத்தில்” ஆனந்தக் கோனாரே நீ அறிவு கெட்டுததான் போனீயரே” என்ற பாடல் இ்டம் பெற்றபோது பல தியேட்டா்கள் அடித்து நொறுக்கப்பட்டது.திரை தீவை்த்து கொளுத்தப்பட்டது. முகம்மதுவைின் உண்மையான வரலாறை படம் எடுத்ததற்கு முஸலீம்கள் போட்ட ஆா்ப்பாட்டம் என்ன?

  10. தற்போது சில மூடர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பேசி இந்துக்களை வசைபாடக் கிளம்பிவிட்டனர். பிழைப்பதற்கு வழியில்லாத இடதுசாரிகள், பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் மூடர் (பேராசிரியர்களும் அடக்கம்) கூட்டம்தான்.

    இவர்களுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை சங்கர மடம், மனு தர்மம்தான். நியூஸ் 7 தொலைகாட்சி நிகழ்ச்சியில் மதச்சண்டைகளைப்பற்றிப் பேசத்தொடங்கிய மதிமாறன் என்கிற மாமேதை சங்கரராமன் கொலை பற்றிப் பேசiய உடனே அறிவிப்பாளர் அவரைத் தடுத்துவிட்டார்.

    இதுபோன்ற சொரணையற்ற ஜென்மங்களைப் பேச அழைக்கும் தொலைக்காட்சிகளை இந்துக்கள் அனைவரும் புறக்கணிக்கலாமே.

    கோபாலன்

  11. //இதுபோன்ற சொரணையற்ற ஜென்மங்களைப் பேச அழைக்கும் தொலைக்காட்சிகளை இந்துக்கள் அனைவரும் புறக்கணிக்கலாமே.//

    நேர்பட பேசு நிகழ்ச்சியை நேரம் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரே ஒரு பிஜேபி அன்பரை வைத்துக் கொண்டு மற்றவர்கள் தாக்கு தாக்கு என்று தாக்குவார்கள். திருப்பி திருப்பி சுப வீரப்பன் , அருணன், திக வில் ஒரு பெண்மணி ( யப்பா அந்த பெண்மணி எந்த விஷயம் பேசினாலும் தில் ‘ பார்பன திட்டு’ புகுத்தி விடுவார்! )
    இப்படி பல ‘bore’ கள். இப்போது புதிய தலைமுறை சேனல் பார்பதையே விட்டு விட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *