பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான  நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் திருச்செங்கோடு. திருச்செங்கோடு என்றவுடனே நினைவுக்கு வருவது அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவில்தான். ஆணும் பெண்ணும் சரிபாதி என்னும் உயர்ந்த தத்துவத்தை நிலைநாட்டும் வகையில் மாதொரு பாகனாக ஆண்டவன் அங்கே காட்சி தருகிறார். இன்று வரைக்கும் கொங்கு நாட்டுக் கிராமங்கள் பலவற்றுக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுடனான தொப்புள்கொடி உறவு தொடர்ந்து இருந்து வருகிறது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

திருச்செங்கோடு  பகுதி விவசாயம் சார்ந்ததாகவே இருந்து வந்தது. கடந்த காலங்களில் போதிய நீர்வளம் இல்லாததால் மக்கள் வெவ்வேறு தொழில்களுக்கு மாறினார்கள். தங்களின் கடினமான உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வினால் இன்று வெவ்வேறு  தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் அறிந்த வரை அந்தப்பகுதி மக்களின் தொழில் திறமை தமிழகத்தின் பிற பகுதிகளை விடவும் அதிகம். அவர்களிடத்தில் அசாத்தியமான தொழில் முனையும் தன்மை உள்ளது. சென்ற 2011-ஆம் வருடம் வடகிழக்கு மாநிலங்களுக்கு இரண்டு வாரப் பயணமாகச் சென்றிருந்தோம். முதல் நாள் அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரான இடாநகரில் கருத்தரங்கு முடிந்து விடுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அங்கு வழியில் ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரம் வேலை செய்து கொண்டிருந்தது.

அருகில் சென்ற பார்த்தபோது அது திருச்செங்கோட்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது. இவ்வாறு அப்பகுதி மக்கள் ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலை நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆகையால் இப்போது திருச்செங்கோடு நாடு முழுவதும் அறியப்படும் நகரமாக உள்ளது.  போக்குவரத்து, ஜவுளி, விசைத்தறி உள்ளிட்ட பல தொழில்களை  இன்று அவர்கள் செய்து  வருகின்றனர்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில் மற்றும் தொழில் முனையும் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நாடு முழுவதும் பெருமையுடன் அறியப்பட்டு வந்த திருச்செங்கோடு,  கடந்த இரண்டு மாதங்களாக வேறொரு காரணத்துக்காக வெளியில் பரவலாகப் பேசப்பட்டு  வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகள், தேசிய மற்றும் மாநில ஊடகங்கள்  எனப் பலவற்றிலும் கட்டுரைகளும், விவாதங்களும், செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன.

பெருமாள் முருகன்
பெருமாள் முருகன்

அதன் பின்னணியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியரான பெருமாள் முருகன் என்பவர் எழுதிய  ‘மாதொரு பாகன்’ என்னும் நாவல் உள்ளது. அவரது புத்தகத்தில்  எழுபது வருடங்களுக்கு முன்னால் அங்கு நடந்தவற்றைச் சொல்வதாகக் கதையைப் படைத்துள்ளார். அது திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள கிராமப் பகுதியில்  வாழ்ந்த மக்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

தனது நாவலுக்காகக்  கள ஆய்வுகள் மூலம் தகவல்களைச் சேகரித்ததாக அவர் முன்னுரையில் கூறுகிறார். மேலும் அதை எழுதுவதற்காக ஒரு குறிப்பிட்ட அமைப்பில் நிதி பெற்றிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகம் வெளிநாட்டு வாசகர்களுக்காகப் பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நாவலின் கதாநாயகர்கள் அங்கு பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். அந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகிப்  பல வருடங்களாகக் குழந்தை பிறக்கவில்லை.  தம்பதியினர் திருமணமாகி குழந்தைப் பேற்றுக்காக இறைவனை வேண்டுவதும், மலைக்கு மேலே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் சென்று வழிபடுவதும் காலம் காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம்.

நாவலில் குழந்தைப் பேறு தாமதமானதால், கதாநாயகி கோவில் தேர்த் திருவிழாவின் பதினான்காம் நாளன்று இரவு முகம் தெரியாத வேறு  ஏதாவது ஆணுடன் உறவு கொள்ளுமாறு உறவினர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே, அது குழந்தைப் பேறு தாமதமானவர்களுக்கு வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடை முறைதான் என்றும், அதற்காகவே அன்று ஆங்காங்கு ஆண்கள் இரவு நேரத்தில் காத்துக் கிடப்பார்கள் என்றும், எனவே அதில் தவறு இல்லை எனவும் சொல்லப்படுகிறது.  மேலும் அப்படிப் பிறக்கும் குழந்தைகள் ‘சாமி குழந்தைகள்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் நாவல் கூறுகிறது.

திருச்செங்கோடு பகுதியைப் பொறுத்தவரையில் அங்கு வருடா வருடம் நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் முக்கியமானது. பதினைந்து நாட்கள் நடை பெறும் அந்த விழாவில் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து அது மிகவும்  விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்னையின் பின்னணியை அறிந்துகொள்ள இரு வாரங்களுக்கு முன் ஈரோடு பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழில் துறை நண்பர்களுடன் திருச்செங்கோடு சென்றிருந்தேன். அப்போது அங்கு வாழும் பல சமூகங்களைச் சேர்ந்த மக்களையும், கோவில் கட்டளைதாரர்களையும் சந்தித்தோம். அவர்கள் சொன்ன சில விஷயங்கள் மிகவும் வருத்தப்பட வைத்தன.

சென்ற வருட இறுதியில் அந்த நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை சிங்கப்பூரில் வாழும் அந்த ஊரைச் சேர்ந்தவர் படித்திருக்கிறார். அதன் பின் அவர் இங்குள்ள  தனக்கு நெருக்கமானவர்களைத் தொடர்பு கொண்டு, அந்தப் புத்தகத்தின் மூலமான தமிழ் நாவலைப் படிக்குமாறு சொல்லியிருக்கிறார். அதன் பின்னரே அதிலுள்ள விஷயம் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

காலங்காலமாக தாங்கள் பிரதானமாக வழிபட்டு வரும் தெய்வத்தின் தேர்த் திருவிழா நிகழ்வுகள் பற்றியும், தங்கள் ஊர்ப் பெண்களின் கற்பு பற்றியும் மிகவும் கேவலமாகச்  சித்தரித்துள்ளதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே அவர்களில் சிலர் நாவலாசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்டுள்ள விபரங்களுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். அவர் அதற்கு முறையாகப் பதில் அளிக்காமல், இணைப்பையும் துண்டித்து விட்டதாகச் சொல்கின்றனர். அங்கு நாங்கள் சந்தித்த இரண்டு பேர்   அவரிடம் பேசியதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர், தான் நாவலாசிரியரை நன்கு அறிந்தவர்  என்றும் கூறினார்.

பின்னர் உண்மையை அறியும் நோக்கில் ஊர் மக்கள் கூடிப் பேசி  காவல் துறையை அணுகி நாவலாசிரியர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியுள்ளனர். நாட்கள் கடந்த பின்னரும், அங்கு எதுவும் நடக்காததால், திருச்செங்கோடு நகரில் அவர்கள் ஒரு நாள் கடையடைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கடையடைப்பு அனைவரின் ஒருமனதான ஆதரவாலும் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

Tirucengodu 4
தினத்தந்தி செய்தி (23.01.2015)

நிலைமையின் தன்மையைப் புரிந்து கொண்ட மாவட்ட நிர்வாகம், அதன் பின்னர் பிரச்னையைத் தீர்த்து வைக்க எழுத்தாளரிடமும் பொது மக்கள் பிரதிநிதிகளுடனும் தனித் தனியாகப் பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளது. பொதுமக்கள் தரப்பில் புத்தகத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ள விசயங்களுக்கு நாவலாசிரியர் ஆதாரம் காட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இல்லையெனில், தவறாகக் குறிப்பிட்டுள்ள பத்திகளை நீக்க வேண்டும் எனவும், அடுத்த பதிப்புகளில் அவை இடம் பெறக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அப்போது சம்பந்தப்பட்ட  அதிகாரியின் முன்னிலையில் நாவலாசிரியர் நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் கற்பனையென்றும், அந்தப் புத்தகத்தின் விற்காத பிரதிகளைக் கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுக்  கொள்வதாகவும் எழுதிக் கொடுத்துள்ளார்.  பொதுமக்கள் தரப்பில் இனிமேல் எந்தவிதப்  போராட்டமும் நடத்தப்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது. அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவற்றை ஓர் ஒப்பந்தமாக அந்த அரசு அதிகாரி இரு தரப்பிலும் கையெழுத்துகளை வாங்கி முடித்துள்ளார்.

மறுநாள் பெருமாள் முருகன் தனது முகநூல் பக்கத்தில் தனக்குள்ளிருந்த நாவலாசிரியர் செத்து விட்டதாகவும், இனிமேல் ஒரு கல்லூரி ஆசிரியராக மட்டுமே அவர் செயல்படுவாரென்றும் அறிவித்தார். உடனே அந்த விஷயம் பத்திரிகைகளில் வெளிவந்தது. தொடர்ந்து சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள்,  ஊடகங்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரால்  அது எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதற்காகப் பல கட்டுரைகள் எழுதப்பட்டன; நாடு முழுவதும் செய்திகள் வந்தன. தேசிய அளவிலான ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலிருந்து, தமிழகத் தொலைக்காட்சிகள் வரை பலவற்றிலும் விவாதங்கள் நடத்தப் பட்டன.  மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கூட்டங்கள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.  சர்வதேச அளவில் பி.பி.சி. மற்றும் பாகிஸ்தான் பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன.

அவை எல்லாவற்றிலும் முக்கியமாக உள்ளூர் மக்கள் ஜாதியவாதிகளாகவும், மதவெறி பிடித்தவர்களாகவும் ஒருமனதாகச்சித்தரிக்கப்பட்டனர்.  ஒரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி அவர்களை ‘லும்பென்’ (lumpen) என மோசமாகக் குறிப்பிட்டது. தமிழகத்தின் ஒரு இடதுசாரி அறிவுஜீவி ‘பாசிசக் குழு’ என அம்மக்களை வர்ணித்ததாக பத்திரிகைச் செய்தி வந்தது.

வசைபாடிய நூல் எரிப்பு
வசைபாடிய நூல் எரிப்பு

நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் நாவலாசிரியரின் எழுத்துரிமைக்கு என்று சொல்லி  வாதாடும்  அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா?

தாங்கள் புனிதமாக வழிபடும் தெய்வத்தின் தேர்த் திருவிழா பற்றியும், தங்கள் பகுதிப் பெண்களின் மானம் பற்றியும் வரலாறு என்று சொல்லித் தவறுதலாகச் சித்தரித்ததற்கு, எழுதியவரிடம்  ஆதாரம் கேட்க அவர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லையா?

ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு  எந்தவிதமான  ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.  அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும்  பொறுப்புக்கள் உள்ளன. அதற்கான கட்டளைகள் அவர்கள் அனைவருக்கும் காலங்காலமாக இருந்து வருகிறது.

மேலும் தாங்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை என அவர்கள் கூறுகின்றனர். அமைதியான முறையில் தமது எதிர்ப்புகளை சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள்  தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரு நாள் அனைவரும் ஒன்று சேர்ந்து  ஊர்வலமாகச் சென்றபோது, சிலர் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கங்களின் பிரதிகளை எரித்துள்ளனர்.

எனவே அவர்கள் வன்முறையாளர்கள் என ஊடகங்கள் மூலம் சித்தரிக்கப்படுவது  குறித்து மிகவும் கவலை  தெரிவிக்கின்றனர். அந்த  மக்களைப் பற்றி எவ்வளவோ குறைகளைச் சொல்லும்  ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன?

Tirucengodu1
திருச்செங்கோடு மக்களின் அறப்போராட்ட அறிவிப்பு

புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்த் திருவிழாவின் பதினான்காவது நாள் நிகழ்ச்சிக்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும், அது முற்றிலும் தவறானது என்றும் மக்கள் கூறுகின்றனர். புலவர் செ.இராசு கொங்கு நாட்டின் முக்கியமான சமகால வரலாற்றாசிரியர். தமிழ் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சித் துறையின் தலைவராக இருந்தவர்; நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர். தமிழக அரசின் முதல் உவேசா விருதினைப்  பெற்றவர்.  திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள மாவட்டமான ஈரோட்டைச் சேர்ந்தவர்.

அவர் நாவலில் குறிப்பிட்டுள்ள அந்த விஷயங்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார்.  மேலும் கொங்கு நாட்டுப் பெண்கள் ஆரம்ப முதலே தமது உயிரை விடவும் மானத்தைப் பெரிதாகக் கருதி வாழ்ந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கிறார். அங்குள்ள வயதில் மூத்தவர்களும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள மாதிரி எதுவும் இருந்ததாக  தாங்கள் இதுவரை கேள்விப்பட்டதே  இல்லை எனக் கூறுகின்றனர்.

மேலும் அந்த நாவலில் வரலாற்றுப் பிழைகள் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக அங்கு  ‘தேவடியாள் தெரு’ என ஒன்று இருந்ததாகப் புத்தகத்தில்   குறிப்பிடப்பட்டுள்ளது.  தேவரடியார்கள் சமூகத்தைச் சேர்ந்தவரும், கோவில் கட்டளைதாரருமான ஏ. கோபால கிருஷ்ணன் அது முற்றிலும் தவறு என மறுக்கிறார். அது தேரடித் தெரு என்றும், அதிலுள்ள முதல் வீடே அந்த நகரத்தின் முக்கியத் தலைவராக விளங்கிய டாக்டர் சுப்பராயன் அவர்களுக்குச் சேர்ந்தது என்றும், இன்னமும் அது அவர்களின் குடும்பத்திடமே இருந்து வருகிறது என்றும் கூறுகிறார்.

சுப்பராயன் அவர்கள் 1926 முதல் 1930 வரை மெட்ராஸ் பிரசிடென்சியில் முதலமைச்சராகவும், பின்னர் நேருவின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், இந்தோனேசியா நாட்டுக்கு நமது தூதராகவும் பல பொறுப்புகளில் இருந்தவர். அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இன்று வரை அரசாங்கத்தில்  முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.

நன்கு படித்து சொந்தமாகத் தொழில் புரியும் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என்னிடத்தில் சொன்னார். “ சார், திருமணமாகி ஆறு வருடங்களாக எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காகத் தினமும் நான்  மாதொருபாகனை வேண்டி வருகிறேன். எனக்குக் குழந்தை பிறக்கும் போது, இந்த உலகம் என்னை எப்படிப் பார்க்க வேண்டுமென இந்த அறிவுலக வாதிகள் விரும்புகிறார்கள்?” அப்படிச் சொல்லும் போதே அவர் கண்களில் நீர் ததும்பியது. நானும் கண்ணீரை அடக்கச் சிரமப்பட்டேன்.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்

பிரபல சமூகவியலாளர் பிரான்சிஸ் புகுயாமா சொல்கிறார்: “சமூகங்களை எளிதில் அழித்து விடலாம். ஆனால் அவற்றை மீண்டும் உருவாக்குவது எளிதான காரியமல்ல”. இந்திய தேசம் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும்  அமைதியான முறையில் இயங்கி, மக்கள் தங்களின் வாழ்க்கையைத் தமது கலாசாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றையொட்டித் தொடர்ந்து  நடத்தி வருகின்றனர். அவர்கள் அடுத்தவர்களைத் தொந்தரவு செய்வதில்லை; அரசாங்கத்தைக் கூடச் சார்ந்து நிற்பதில்லை.

இந்தப் பண்புகள் தான் இன்று உலக அளவில் நமது தேசத்தின் மிகப் பெரிய பலம். நமது சமூகங்கள் தேசத்தின் அமைதிக்கும்  பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு ஆற்றி வரும் பங்கு பற்றி ஆய்வுகள் வந்து கொண்டுள்ளன.   அப்படித் தான் திருச்செங்கோடு, நாமக்கல் ஆகியன இன்று தேசப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. அதற்கு அந்த மக்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கை நெறிகள் ஆகியவையே காரணமாக இருந்து வருகின்றன.

எனவே தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி  வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள்  மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்?

ஊடகத்தின் மூலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வாய்ப்பில்லாத மக்களின் கருத்துக்களைத் தெரிவிக்க உதவுவதுதான் அறிவுலகவாதிகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே அது முற்றிலும் மாறாக நடக்கிறதே?

கொலைக் குற்றவாளிக்குக் கூட  அவனது கருத்தைச் சொல்ல வாய்ப்புக் கொடுத்த பின்னரே தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் எந்தவித வாய்ப்பும் கொடுக்கப்படாமல் அந்த ஊர் மக்கள் அனைவர் மீதும் தொடர்ந்து  குற்றம் சாட்டிக் கொண்டே செல்வது எந்த வகையில் நியாயமாகும்?

நமது தேசத்தின் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பிரச்னையாக இது தெரிகிறது.

prof_kanagasabhapathiபேரா. ப.கனகசபாபதி அவர்கள் பாரதீய சிந்தனை வழி பொருளாதார வளர்ச்சி பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மேலாண்மைத் துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார். கோவையில் உள்ள மாநில அரசின் நகரியல் கல்வி மையத்தின் இயக்குநராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்.

வலுவான குடும்பம்- வளமான இந்தியா, இந்தியப் பொருளாதாரம்- அன்றும் இன்றும் உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருக்கிறார்.

25 Replies to “பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்”

  1. ஆர்.எஸ்.எஸ். தனக்குத் தொடர்பில்லை என்று https://rsschennai.blogspot.in/2015/02/rss-has-no-role-in-mathurobhagan-issue.html சொல்லியபிறகும். இதை மக்கள் போராட்டமாகக் காட்டாமல் ஆர்.எஸ்.எஸ் போராட்டம் என்று தவறான தகவலை மீண்டும் மீண்டும் சொல்லிவருகின்றனர். பலர் கற்பனையாக மனம் போன போக்கில் திருச்செங்கோட்டைப் பற்றி கதைவிடுகின்றனர். ரீகல் எல்லாவற்றிலும் உச்சமாக தமிழ்நாட்டில் ஆட்சியைப்பிடிக்க பாஜவின் தூண்டுதல் என்கிறது அம்ருதா என்ற ஒரு இதழ்

  2. நமது நாட்டில் ஒரு ஊரில் உள்ள மக்களை எவ்வித ஆதாரமும் இல்லாமல் இழிவு படுத்தி எழுதலாமா ? அது எந்த விதத்தில் சரியானது. அயோக்கியனையே நாம் நேரில் முடியாது. சில ஜடங்கள் தமிழில் புத்தகம் வந்து நாலு வருடம் ஆகிவிட்டதே ? அப்போது சும்மா இருந்துவிட்டு இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்கின்றன ? அந்த புத்தகத்தின் லட்சணம் அவ்வளவுதான். நாலுவருடம் ஆகியும் எவரும் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தபின்னர் அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் ஆங்கில பதிப்பை படித்துவிட்டு அதன் பின்னர் திருச்செங்கோட்டில் உள்ள தனது நண்பர்கள்/ உறவினர்களுக்கு தெரிவித்த பின்னர் தான் அவர்கள் தமிழ் பதிப்பை வாங்கி படித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

    இப்போது முக்கியப்பிரச்சினை என்னவென்றால், எழுத்தாளர் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக்கொடுத்து விட்டுப் போய்விட்டார். ஆனால் டெல்லியிலும், பிற பெரிய ஊர்களிலும் இருக்கும் சில அரைவேக்காட்டு மீடியாக்காரர்கள் எவ்வித உண்மையும் புரியாமல் பிரச்சினையை ஊதிப்பெரிதாக்குகிறார்கள். கற்பனைக் கதை வேறு, வரலாறு என்ற பெயரில் பொய்களை எழுதுவது வேறு.

    ஒரு கற்பனைக்கதையிலேயே ஒரு சாதிப்பெயர் வந்தது என்பதற்காக சுஜாதா கதையை வெளியிட்ட குமுதம் பத்திரிக்கைக்கு குடைச்சல் கொடுத்தார்கள் என்பது நாடு அறிந்த விஷயம்.

    இந்த அசிங்கமான நாவலை வரலாற்றுத்தொடர்புடையது என்று பதிப்பு செய்த பதிப்பகத்தார் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். அதைவிட்டுவிட்டு, வேறு வெளியூரில் இருக்கும் விவரம் தெரியாத பத்திரிகை துறை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து , பிரச்சினையை பெரிதாக்கினால், அது யாருக்கும் நல்லதல்ல. என்ன வக்கிர புத்தி இருந்தால் இப்படி ஒரு ஊரில் உள்ள ஒட்டுமொத்த சமுதாயங்களை இழிவு படுத்தி எழுத மனம் வரும் ? அடப்பாவிகளா? என்ன போக்கு போகப்போகிரீர்களோ ? ஊர் சாபம் சும்மா விடாது . மன்னிப்பு கேட்டால் சரி. இல்லை என்றால் அந்த பதிப்பகம் வெளியிடும் எல்லா நூல்களையும் புறக்கணிப்போம்.

  3. இது பத்திரிகை சுதந்திரம் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தை கேவலப்படுத்தும் செயலையே அந்த பதிப்பகம் செய்துள்ளது.

  4. மிகவும் கவலைக்குரிய செய்தி. படிக்கும்போதே வருத்தமாக இருக்கிறது. மக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டுவதே தவறு என்றால் என்ன செய்ய முடியும்? உண்மை நிலவரத்தை மட்டும் இந்த ஊடகங்கள் அப்படியேவா சொல்லும்? தங்களுக்குச் சாதகமான கருத்துக்களைத் தெரிவிப்போரிடம் மட்டும் கருத்துக்களை வாங்கிப் பதிவு செய்யும்! 🙁

  5. சமூகத்தில் வாழ்ந்து கொன்டிருக்கும் மக்களின் மனம் புண்படும்படியாக அவர்கள் பாரம்பரியத்தை ஆதாரமே இல்லாமல் மனம் போன போக்கில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று தனிப்பட்ட பொறுப்பான நாகரீகமில்லாமல் தான் பேர்
    வாங்கினால் போதும் என்று எழுதுவது சரியல்ல.

    நாம் எழுதும் ஒவ்வொரு சொல்லும் ஒரு வர்கத்தையே அவமானப்படுத்துமென்றால்
    அந்த செய்தியை எழுதிப் பெயர் வாங்குவதை விட எழுதாமலே இருக்கலாம் தவறில்லை

  6. இந்த கதையை படிப்பவர் மனதில் 14ஆம் நாள் திருவிழாவுக்கு செல்லும் பென்கலைஎல்லாம் தவறான பார்வை பார்ப்பதை உணகிருறேன். எழுதியது தவறு என்று நினைக்கிறேன் .

  7. //“சமூகங்களை எளிதில் அழித்து விடலாம். ஆனால் அவற்றை மீண்டும் உருவாக்குவது எளிதான காரியமல்ல”.//

    மிக அற்புதமான வார்த்தைகள் !!! தயவு செய்து இதை இந்த தளத்தில் தொடர்ந்து இந்து மதத்தையும் அதன் சமூகங்களையும் இழிவாகப் பேசி வரும் அன்பர்கள் யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.( with an open mind )

  8. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

    மிருகங்களுக்கு ஆறறிவு கிடையாது. எனவே தான் மற்ற ஜந்துக்களை அடித்து,உதைத்து, அல்லது கொலை செய்வது சர்வ சாதாரணமான செயல். அவை மனித உணர்வுகளை குத்தி, கீறி அதில் இன்பம் துய்க்கும்.

    பெருமாள் முருகன் – தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று தனது “ஒப்பாரி” அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் அவர் ஏன் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளை கீறி குதறி பார்க்க வேண்டும்.

    பெருமாள் முருகன் மனிதன் இல்லையா? தோற்றத்தில் மட்டுமே ஆறறிவு படைத்த மனிதனைப் போல காட்சியளிக்கும் ஒர் ஜந்துவா? எனவே தான் மனிதனின் கடவுள் நம்பிக்கை உள்ள மனிதர்களின் உணர்வுகளை கீறிப்பார்க்கின்றாரா?

    சரி, அந்த ஜந்து அப்படியே இருக்கட்டும்.

    எந்த உயிருக்குமே ஆத்மார்த்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய கருதுகோள் – “மாதா, பிதா, குரு, தெய்வம்”.

    “குரு” – என்பவர் சக மனிதருக்கு சகல வித்தைகளையும் கற்றுக்கொடுக்கும் நல்லோர்கள். தனது “கற்றுக்கொடுத்தல்” – என்கின்ற ஸ்தானத்தை முதலில் மதிக்கும் அல்லது மதிக்க வேண்டிய ஓர் அறிவாளி.

    பெருமாள் முருகன் தனது அறிக்கையில் என்ன சொல்லியிருந்தார் தெரியுமா?

    “பெருமாள் முருகன் செத்து விட்டான். அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, எனவே அவனுக்கு மறுபிறவியில் நம்பிக்கை கிடையாது> இனி அவன் கதை, கவிதைகள் எழுத மாட்டான். அவனை எந்த இலக்கிய அமைப்புகளும் இலக்கிய கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம். இனி அவன் தனது “அற்ப”ஆசிரியர் பணியை மட்டுமே தொடர்வான்.

    இப்பொழுது சென்னை, மாநிலக்கல்லூரியில் இணை பேராசிரியர் பதவியில் மாற்றல் பெற்று வந்திருக்கிறார்.

    இந்த பதவி “அற்ப ஆசிரியர் பணியா?”.

    இவரது பணி, அற்ப ஆசிரியர் பணி என்றால், இவருக்கு சம்பளம் கொடுக்கும் பல்கலைக்கழகம் என்ன அற்ப அமைப்பா?

    இவருடன் பணியாற்றும் ஏனைய பேராசிரியர்கள் அற்ப ஆசிரியர்களா?

    இவரிடம் படிக்கும் மாணவர்கள் என்ன அற்பமானவர்களா? ஒரு ”அற்ப ஆசிரியர்பணி”யை செய்பவரிடம் படிப்பதற்கு?.

    இந்த தேசத்தின் கேடுகெட்ட அரசியல் காரணத்தினால், நான் பெரிதும் மதிக்கும், ஆவலுடன் எதிர்பார்த்த “பேராசிரியர்” பத்வி கிடைக்காமல் போனவன் நான்.

    இருப்பினும், கிடைக்கும் உரையாற்றும் வாய்ப்புகளை ஆத்மார்த்தமாக செய்து வருகின்றேன்.

    இப்படிப்பட்ட ஜந்துக்களுக்கு மட்டும் எப்படி “இணை பேராசிரியர்” பதவி கிடைத்தது என்பது தான் ஆச்சரியம்.

  9. கருத்து சுதந்தரம் என்ற பெயரில் கைக்கூலி வாங்கிகொண்டு உயார்ந்த பண்பாட்டு விழுமியங்களையும்,கலாச்சார செழுமையும், கேவலபடுத்தும், இவர்கள் போலி அறிவாளிகள், காசுக்காக பெற்ற தாயை விபச்சாரத்தில் தள்ளும் இவர்கள் கேவலமானவர்கள். இவர்களை விமர்சிப்பது எதிர்ப்பது நமக்கு தான் அசிங்கம்.

  10. பேராசிரியர் எழுப்பும் கேள்விகள் தான் நேர்மையை விரும்பும் பலர் மனத்திலும் உள்ள கேள்விகள்.

    உண்மையில் இந்த நிகழ்வு பல அறிவுலகவாதிகளின் முகத்திரையைக் கிழித்து அவர்கள் சுயமுகம் காட்டுகிறது.

    ஒருவித “எழுத்தாள” ஜாதி மேட்டிமையுடன் அவர்கள் பேசுகிறார்கள்.[ “இலக்கியம் உங்களுக்கு புரியாது “]

    இது தான் “இலக்கியம்” என்றால் எங்களுக்கு அது எக்காலத்திலும் வேண்டியதே இல்லை.

    பொது சுவற்றில் அசிங்கமாக கிறுக்கும் நபர்களும் எழுத்தாளர்கள், அவர்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்று சொன்னாலும் ஆச்சர்யமில்லை.

    தர்மத்தின் மீதான முதல் தாக்குதல் இதுவல்ல. கடைசியும் அல்ல. சிலரால் சும்மா இருக்க முடியாது. ஆனால் முதல் சரியான எதிர்வினை இதுதான். எதிர்பாராத இந்த ஜனநாயக ரீதியான எதிர் வினையால் அரண்டு தான் போயிருக்கிறார்கள் சிலர். உக்கிரமாக உரக்க கத்துவதில் இருந்தே தெரிகிறது.

    திருசெங்கோட்டு மக்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மீண்டும்.

    சாய்

  11. This is a Tamil translation of his article that appeared in swarajyamag.com a few days ago. He has added or deleted nothing.

    //அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும்//

    Why don’t you and all those affected, go to such metros and demonstrate against the book? Or tell the people that he is wrong? I mean, if they do it from metros, you shouldn’t do it from small towns or villages. You should also go there.

    World Book Fair is on now in New Delhi. Two days ago, a few popular Indian authors and international authorities came on a platform on freedom of writers and roundly condemned the efforts to silence Perumal Murugan. Then, why not you and others make another platform there, and say all that you have written here?

    Pay back in the same coin, can’t you?

  12. திருச்செங்கோடு மட்டுமின்றி பூரா கொங்கு மண்டலத்திலும் காணக்கிடைக்கும் ஒரு நேர்த்தியான பண்பு ஜாதிகளிடையே ஒற்றுமை. ஒவ்வொரு க்ராமக் கோவில் விழாக்களும் அனைத்து ஜாதியினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் பாங்கு.

    ********நோய் நாடி நோய் முதல் நாடி*********** என்பது வள்ளுவர் வாக்கு.

    இந்த கலாசார இழிவு ப்ரசாரத்தின் ஆதி மூலம்……………….. தமிழகத்தை 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் படிக்கு……….. தமிழகத்தை இருண்ட காலத்தில் ஆழ்த்தியுள்ள த்ராவிட இயக்கம். இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்கர் துவங்கி இன்றளவுக்கு தமிழகத்தை நாசம் செய்து வரும் தீரா விட நச்சு அரசியல்.

    தமிழ் மொழிக்காழ்ப்பு (தமிழ் காட்டுமிராண்டி பாஷை இத்யாதி) ………… திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற பெரும் தமிழ் நூற்களை மேடைப்பேச்சுகளில் கைதட்டல் வாங்குவதற்காக சிறுமைப்படுத்தும் அயோக்யத்தனம்…………… இவற்றை எதிர்மறையாக தமிழ் மக்களிடம் இலக்கிய விமர்சன நூற்களாக முன்வைத்தமை …………. தமிழ்ப் பண்பாட்டினை தமிழக சைவ வைஷ்ணவ சமண சமயங்களை ஒட்டு மொத்தமாக அழித்தொழித்து…………….. தமிழர்களை ஆப்ரஹாமியர்களாக மாற்ற விழைதல் …………… இவையத்தனையும் த்ராவிட இயக்கங்களின் செயல்பாடுகள்.

    த்ராவிட இயக்கங்கள் தங்களது இந்த இழிவுச் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காக ஆப்ரஹாமிய சக்திகளுடன் தொடர்ந்து கை கோர்த்து செயல் பட்டு வருகிறார்கள்.

    தமிழகத்து ஏரி குளங்களை இந்த இயக்கத்தினரின் தலை முதல் வால் வரைக்குமான இயக்கத்தினரின் சொத்து சேர்ப்பிற்காக நிர்மூலமாக்குதல்…………. தமிழகத்து கோவில் சொத்துக்களை நாசம் செய்தல்………….. சிற்பங்கள் கல்வெட்டுக்கள் போன்றவற்றை புனருத்தாரணம் என்ற பெயரில் மண்வீச்சடித்து பாழ் படுத்துதல்………………. ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தை மொடாக்குடியர்களாக்கி…………. மலிவு விலையில் தமிழக மக்களுக்கு தசாப்தங்களாக அரசாங்கமே சாராய விற்பனை செய்தல்…………..இவையனைத்தும் மாறி மாறித் தமிழகத்தை சீர்குலைத்துவரும் த்ராவிட இயக்கத்தினரின் செயல்பாடுகள்.

    போதாதற்கு இந்த பண்பாட்டை சிதைக்கும் இழிவு செய்யும் படைப்பினை **********இலக்கிய வாசிப்பு *********** என்ற பெயரில் ********லயோலா கல்லூரி********யில் அரங்கேற்ற முயற்சி. முற்போக்கு என்ற முகமூடியில் ஆப்ரஹாமியம் இந்த இழிவுப் படைப்புக்கு ஆதரவு நல்கி ……………. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று செயல்படுவதை தமிழகம் உணர வேண்டும்.
    இந்த இழிவுச் செயல்பாட்டுக்கு பண ஆதாரத்தை அளித்ததில் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் என்ற பரங்கிய ஸ்தாபனத்தின் கை ……………. பரங்கி க்றைஸ்தவ தேவாலயத்தின் கண்டூய்ட்டாக செயல்பட்டதை தமிழகம் உணரவேண்டும்.

    திருச்செங்கோடு மற்றும் சுத்து பத்து வட்டாரங்களில் ……………… தமிழகப்பண்பாட்டுக்கு எதிரான…………. த்ராவிட ……….. கம்மூனிஸ………….முற்போக்கு மாஃபியா கும்பல்களின் செயல்பாடுகள் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்ப்பண்பாட்டுக்கு எதிரான த்ராவிட கட்சிகளை ஒட்டு மொத்த தமிழகமும் தலை முழுக வேண்டும். அதன் துவக்கம் திருச்செங்கோட்டு வட்டாரத்தில் இருந்து துவங்கட்டும்.

    ஒருபுறம் தத்தமது மதங்களை ந்யாயமாக ஒழுகி வரும் நமது இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ சஹோதரர்களுடன் நல்லுறவு பேணுகையில்…………… இந்த ஆப்ரஹாமியத் தரப்பிலிருந்து சமூஹ விரோத நடவடிக்கைகளான மதமாற்றத்தில் ஈடுபடுதல், நமது கோவில் நிலங்களை அபகரித்தல் ……….. போன்ற சமூஹ விரோத மற்றும் தேச விரோத கார்யங்களில் ஈடுபடும் அன்னிய கைக்கூலிகளின் செயல்பாடுகள் மீது தமிழக மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல் படுதல் வேண்டும்.

    ஹிந்து இன்றே ஒன்று படு.

  13. ////அம்ருதா என்ற ஒரு இதழ்/// இது கம்யூனிஸ்ட் கம்மநேட்டிகள் நடத்தும் மஞ்சள் பத்த்ரிக்கை ஆகும். யார் இந்த “சுபாஷினி அலி”? ஒரு முஸ்லிமை மணம் புரிந்த இந்துவா? இவளுங்களுக்கு ஒரு முஸ்லிம் கிடைத்தால் போதும் அப்படியே மயங்கிவிடுகிறார்கள் பிறந்து வளர்ந்த மதத்தை அப்படியே மறந்துவிடுவதொடு சாடுகிறார்கள். அட மானங்கெட்ட ஜென்மங்களே!

    ////Then, why not you and others make another platform there, and say all that you have written here?////அப்பா BS , சுபாஷினி அலி குற்றம் சாட்டியது போல இதை RSS தன தோள் மீது போட்டுகொண்டு செய்திருந்தால் நிச்சயம் நீர் சொன்னது போல மெட்ரோவுக்கு போய் platform ல் நின்று பேசியிருப்பார்கள். ஆனால் இதை RSS செய்யவில்லை. அந்த ஊர்மக்கள் தான் அதை செய்தனர். அவர்களுக்கு (நீர் கூறுவது போல) அவ்வளவு ஞானம் இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்த நூல் 4 ஆண்டுகளுக்கு முன்பே ( தமிழில் வரும்போதே) அந்த ஆளை அந்த ஊர் மக்கள் விட்டுருப்பார்களா?
    ///பெருமாள் முருகன் செத்து விட்டான். அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது,////
    உனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சரி. உனக்கு உண்மை மீது நம்பிககை கிடையாதா? கதையை ஆதாரத்தோடு எழது. அதை விட்டு உமது பேனாவில் ‘மை’யை ஊற்றாமல் பொய்யை ஊற்றி எழுதுவது நியாமா? நீயெல்லாம் ஒரு எழுத்தாளனா? துப்புகெட்ட பயலே!

    இப்படித்தான் ஒரு ஹுசைன் என்ற துலுக்க ஓவியன் பாரத மாதாவை நிர்வாணமாக வரைந்தான் (டெல்லி இமாம் “பாரத மாத ஒரு தேவிடியா என்றான் என்பது ஒரு தனி விஷயம்) அந்த துலுக்கன் இரவில் தினமும் பார்க்கும் தன மனைவியை முழு நிர்வாணமாக வரைந்திருக்கலாமே! இதை தட்டிகேட்டவர்களை போலி மதச்சார்பின்மைவாதிகள் (coomunist காங்கிரஸ், முஸ்லிம் கட்சிகள்) மத வெறியர்கள் என்று பட்டம் சூட்டினார்கள். தட்டிகேட்டவர்களின் நீண்ட ஆர்ப்பாட்டம் தாங்காமல் அவன் வெளிநாடு சென்று விட்டான் அந்த துலுக்க ஓவியன். இந்த எழுத்தாளனோ சென்னை சென்று விட்டான்.

    இந்த நூல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பற்றி பாட்டாளி மக்கள் கட்சி என்ன சொல்கிறது. கருத்து சுதந்திரத்தை பற்றி ஆதரித்து பேசுகிறதா? இங்கே அமைதியாக ஆர்பாட்டம் செய்த திருசெங்கோடு மக்களை பற்றி தினமும் டிவி யில் விவாதம் நடத்தினார்களே! பிரான்ஸ் நாட்டில் ஒரு பத்திரிகை நபி பற்றி ஒரு படம் (கவனிக்கவும் அது ஹுசைன் மாதிரி வரைந்த ஒரு நிர்வாண படம் அல்ல) வெளியிட்டமைக்கு 12 பேரை சாகடித்தார்களே! திரு செங்கோடு ஆர்பாட்டத்தில் ஏதேனும் ஒரு உயிர் போனதா? அந்த பிரான்ஸ் நாட்டு விவகாரத்தை டிவி க்கள் விவாதம் நடத்தியனவா? நடத்தாது ஏனென்றால் அது முஸ்லிம் விவகாரம். இந்து ஒருத்தன்தான் இளிச்சவாயன். முஸ்லிமை பற்றி தினத்தந்தி டிவியோ, சன் டிவி யோ, புதிய தலைமுறை டிவி யோ சத்தியம் டிவி யோ 12 பேர் கொலை பற்றி எல்லாம் விவாதம் நடத்தினால் அங்கே குண்டுகள் வெடிக்கும். ஆபீஸ் நொறுங்கும். பல தலைகள் விழும். அதற்கு பயந்துதான் பயந்தாங்கொள்ளி இந்துவை வாங்கு வாங்கு வென்று வாங்குகிறார்கள்.

    இப்போது நடந்தது போல (அமைதியான முறையில் ஆனால் பெருந்திரளாக) எதிர்ப்பை எதிர்காலங்களில் இந்துக்கள் ஒன்றிணைந்து தெரிவித்தால் கம்யூனிஸ்ட் ஆதரவு எழுத்தாளர்களின் கொழுப்பு கோட்டம் எல்லாம் அடங்கும்.

  14. எப்படியோ ஜெயித்து விட்டோம் நண்பா்களே! நாம் ஜெயித்து விட்டோம். பெருமாள் முருகன் இன்றுகாலை கூட கழிவறைக்கு சென்றிருப்பாா். அதை அப்படியே அப்படியே விநாடிக்குவிநாடி எழுத வில்லையே ஏன் ? கழிவறை மட்டுமா? படுக்கையறையும் அவர் வீட்டில் உள்ளதே?விநாடிக்கு விநாடி எழுதுவாரா? பணக் கொழுப்பு பண்ணுகிற வேலை.இவா எழுதாவிட்டால் தமிழ மொழி அழிந்து போய்விடுமா? ரொம்பதான் பம்மனாத்து பண்ணுகிறான் பெருமாள் முருகன்.

  15. பெருமாள் முருகன் இது போல் வக்கிரமாக எழுதியது ஏதோ தறசெயலாக நடந்தது அல்ல.. இது உலக அளவில் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு கலாச்சார அழிப்பு வேலையாகவே தெரிகிறது.. இதற்கு ஃபோர்டு ஃபவுண்டேசனும், அதன் முகமூடி அமைப்புகளும் பெரும் நிதியுதவி அளித்து வருகிறது..

    சமீபத்தில், பீகார் முதல்வர் மாஞ்சி பீகார் ஆண்கள் பெருமாலும் அடுத்தவர் மனைவியியுடன் தான் வெளியில் செல்கின்றனர் என்றும், இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். அப்படியே பெருமாள் முருகன் எழுதியது போலவே.. தற்செயலா?

    https://www.dinamani.com/latest_news/2015/02/17/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-90-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/article2673273.ece

    பீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன்தான் வெளியே செல்கின்றனர் என்று அம்மாநில முதல்வர் மாஞ்சி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    பீகாரில் உள்ள ஆண்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களது மனைவியுடன் வெளியே செல்கின்றனர்.

    90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன்தான் செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.

    மேலும் பொது இடங்களில் எங்கு பார்த்தாலும் திருமணமானவர்களும் ஜோடி ஜோடியாக அமர்ந்திருக்கின்றனர்.

    பல இளைஞர்கள் இளம் பெண்களும் விருப்பத்தின்பேரிலேயே இணைகின்றனர்.

    இதில் ஒன்றும் தவறில்லை என்று கூறியுள்ளார்.

    முதல்வரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அரசு திட்டங்களுக்கு கமிஷன் பெற்றேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  16. இதை எழுதுவதற்கு எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது எழுதலாமா ?வேண்டாமா ?என்று இந்நாள்வரை எனது மனத்தில் பெரிய போராட்டம் ,மாதொருபாகன் சம்பந்தமான இந்த கட்டுரை இத்தளத்தில் மூன்றாவது கட்டுரை என்று நினைக்கிறேன், ஆங்கில மாதம்இரண்டாம் மாதம் எட்டாம் திகதி இத்தளத்தில் வருவதற்கு முன்பு தினமலரில் ஒரு வாரம் அல்லது சிலநாள் முன்பு வாசித்ததாக நினைவு வாசித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது, காரணம் பெருமாள்முருகன் எழுதியது கூட பெரிதாகப்படவில்லை ,ஆனால் அதற்கு ஆதரவாக நான் பெரிதும் மதித்து வாசிக்கும் நமது தொன்மையான மதத்தை போற்றி எழுதும் இருவர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுதியதை என்னால் தாங்கமுடியவில்லை .அவர்களுடைய பெயர்களை நான் குறிப்பிடப்போவதில்லை ஆனாலும் இதை எழுதாமல் இருக்கவும் முடியவில்லை .. அப்படி எழுதாவிட்டால் என் தாய் சகோதரிகளுக்கு நான் துரோகம் செய்தவனாய் இருப்பேன் மாற்று மதக்காரர் எங்களை எதிர்த்து எழுதும் போது வரும் அதே கோபம் இதற்கும் வந்தது ,அதனால் இதை குறிப்பிடுகிறேன் . அவர்களை நோகவைப்பது எனது நோக்கமல்ல .அவர்களை எப்போதும் மதித்து நடப்பவன் . அன்புடன் பிறேமதாசன் திருமேனி .

  17. நாம் இவர்களுக்கு இலப்பமாகிவிட்டோம். பெருமாள் முருகன் போன்ற ஜந்துவின் வாழ்வில் நடந்த உண்மையை திருசெங்கோட்டு மக்களின் வாழ்வில் நடந்ததாக புத்தகத்தில் எழுதிவிட்டார் போலும். நாம் அவரும், அவரது வாரிசுகளும் பிற ஆண்களுக்கு பிறந்து இருப்பார்கள் என நினைத்து கொள்ளவேண்டியது தான். ஏன் இது உண்மையாக கூட இருக்கலாம். அவரது ஆண்மையற்ற விரக்த்யில் நம்மையும் நமது மக்களையும் கேவலபடுதிவிட்டார்.

  18. பெருமாள் முருகனுக்கு எழுதும் உரிமை நிச்சயம் உண்டு. அவர் அதை நிறுத்துவதும் அவரது தனிப்பட்ட விருப்பமே. மேலும் அவர் இப்போது உள்ள பதவியை அற்பம் என்றால் இது வரை ஏன் அதை வகித்து வந்தார்?
    மாதொரு பாகன் விவகாரத்தில் இன்று பேராசிரியர் கூறுவதற்கு அறிவு பூர்வமாக எந்த எதிர் கருத்தும் வரவேற்கத் தக்கதே. ஆனால் டெல்லி மற்றும் பிற ஊர்களில் இருந்து வரும் முதிராத கருத்துகளை புறந்தள்ளுவதே இனி இந்த பிரச்சினைக்கு முடிவாகும்.

  19. குப்பையாக எழுதிய ஒரு நாவலுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கவேண்டுமா?

    1. இந்து சமயத்தையும், இந்துக்களையும் தாக்கி எழுதினாலே போதும். அனைவரும் வாங்கிப்படிப்பார்கள் — இந்து சமயத்தைத் தாக்கிய ஒன்றா என்று ஒரு குழுவினரும், அதை எதிர்க்கிறார்களே என்று pseudo-secularistsம், அப்படி என்னதான் எழுதியிருக்கிறது என்று மற்ற அனைவரும்.

    இந்தக் குப்பைக்குப் பரிந்துகொண்டு, எழுத்துரியாயைக்காக்கிறோம் என்று pseudo-secularistsம், இந்து சமய எதிர்ப்பாளர்களும் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

    தமிழ் இந்துவும் இந்த வலையில் விழுந்து இந்த மஞ்சள் குப்பை நூலுக்கு ஏன் விளம்பரம் தேடிக்கொடுத்து, அப்படி எழுதிய எழுத்தாளருக்கு இலவச விளம்பரம் கொடுக்கத்தான் வேண்டுமா?

    ஆகவே நாம் அனைவரு தலா ஒரு குப்பை நூல் எழுதினால் நல்ல விளம்பரம் கிடைத்து நமது பெயர் ஓங்கும் போல இருக்கிறது!

    யானோன்றுமறியேன் பராபரமே!

  20. Govt shall take up the case & penalise these type of animals massacring the morality of the human community. He shall not be allowed to teach any more to the students and spoil the upcoming generation! If he is really feeling for the grave mistake of morally killing a community, let him take retirement and go away.
    Time is the only healer.
    Let the God of Thiruchengodu hills give mental peace to the people suffered and

  21. பெருமாள் முருகன் அவர்கள் சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் ஆசிரியர்/பேராசிரியர் போன்ற பணிகளை செய்வது அற்பம் என்று சொல்லியிருப்பதற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்.தமிழகத்தில் கழகங்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றபின்னர் , பல்கலை கழகங்களின் நிலை அப்படி ஆகிவிட்டது என்பதை மறைமுகமாக உண்மையை குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. டிசம்பர் 2012- முதல் நாலு அரை ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு தனி அலுவலரை நியமித்து நிர்வாகத்தை செம்மைப்படுத்தி இருக்கிறார்கள். அதற்காக பட்டமளிப்பு விழா நடத்தி பட்டங்கள் கொடுக்காமல் இரண்டுவருடம் தாமதிக்க தேவை என்ன ?

    கடந்த ஆட்சியிலேயே பலகலை துணைவேந்தர் பதவி நியமனங்களில் பணம் புகுந்து விளையாடியதாக செய்திகளில் அடிபட்டது. தெற்கே ஒருபல்கலை துணை வேந்தர்மீது விசாரணை நடப்பதாகவும் செய்திகள் கசிந்தன.

    மாநிலக்கல்லூரி பேராசிரியர் அல்லது ஆசிரியர் பணியை அற்பம் என்று சொல்லும் அளவுக்கு , ஏதேனும் வெளிநாடுகளில் இருந்து ஏராளம் பொற்கிழி வந்திருக்கலாம் யார் கண்டது ? பிற மதத்தினரிடம் பொற்கிழி பெற்று இந்து சமயத்தை தாக்கி எழுதும் நல்லவர்கள் இங்கு ஏராளம்.

  22. இந்த முற்போக்குவாதிகள் அந்த முற்போக்கிலாவது ஒழுங்காக இருக்கிறார்களா? கற்பு பற்றி குஷ்பு பேசியதற்கு என்ன ஆர்பாட்டம்? இப்போ இப்படி. குஷ்பு பேசியது தவறு. பெருமாள் முருகன் சொன்னால் சரி. இவர்களுக்கு இது ஓர் பிழைப்பு. இதற்கு ஆதரவு கொடுத்தால் முற்போக்கு. இல்லை என்றால் பிற்போக்கு. டா வின்சி கோட் தடை செய்யப்பட வேண்டும். மாதொரு பாகன் பாதுகாக்கப் பட வேண்டும். சூப்பர்.

  23. // டா வின்சி கோட் தடை செய்யப்பட வேண்டும். மாதொரு பாகன் பாதுகாக்கப் பட வேண்டும்.//

    த விஞ்சி கோட் — கிறித்தவ மதத்தைப் பற்றியது. எனவே, தடை செய்யப்பவேண்டும்.
    மாதொருபாகன் — இந்து சமயத்தைப் பற்றியது. எனவே தடை செய்யப்படவேண்டாம்.

  24. //////டா வின்சி கோட் தடை செய்யப்பட வேண்டும்////

    இந்த ஆங்கில திரைப்படம் சென்னையில் வெளியிட இருந்ததை “மதசார்பின்மை மகான்” கருணாநிதி அதை தடை செய்தார்.(அதை தடை செய்யவேண்டும் என்று யாரும் கோராத நிலையில்). அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? கிறிஸ்தவர்கள் மனம் புண்பட கூடாதாம். எவ்வளவு நல்ல உள்ளம் ! ஆனால் ராமர் பாலத்தை கட்டிய ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான்?அவன் ஒரு குடிகாரன்.என்று மேடை ஏறி பேசும்போது இந்துக்கள் மனம் நோகுமே என்று தோணவில்லை. அப்போது அவர் புத்தியை அடகு வைத்து விட்டாரா?

    இந்த கருணாநிதி அப்படத்தை தடை செய்தார். ஆனால் அதை நீதிமன்றம் தடை நீக்கம் செய்தது. ‘நிதி’ தோற்றார். நீதி வென்றது.

  25. Also, mu.ka said in a meeting” Hindu means thief”. He also quoted a book as a reference. The case is in court.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *