மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்

த்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது. சவூதி அரேபியா ஆரம்பித்துள்ள சண்டையில் பாகிஸ்தானை தலையிட சவூதி அரச குடும்பம் கேட்டதும் பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப், ‘சவூதியின் மீது நடக்கும் எந்த ஒரு தாக்குதலும் பாகிஸ்தானின் மீது நடக்கும் தாக்குதல், சவூதியின் உதவிக்கு பாகிஸ்தான் வரும்’ என சொல்லியிருப்பது, சிக்கலான அரசியல் விளையாட்டிலே இன்னோர் அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கின்றது.

மத்திய கிழக்கிலே பாகிஸ்தானிய தலையீடு ஒன்றும் புதிது அல்ல. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதில் இருந்தே அது தன்னை ஒரு கூலிப்படை நாடாக அறிவித்துக்கொண்டு மற்றவர்களின் வேலையை செவ்வனே செய்து வருகிறது என்பதால் ஆச்சரியப்படவும் ஏதுமில்லை.

ஜோர்டான் பாலஸ்தீன குழுக்குக்களுக்கு எதிராக 1970 செப்டெம்பரில் ஆரம்பித்த தாக்குதலை முன்னின்று நடத்தியது அப்போதைய ஜோர்டானுக்கான ராணுவ பயிற்சியாளர் ஜியா உல் ஹக் தான். யுஏஈ யின் ஷேக் தனியாக ஒரு விமான தளம் வைத்திருப்பதாக இருந்தாலும் சரி அமெரிக்காவுக்கே தனியா ஒரு விமானதளத்தை விட்டுக்கொடுப்பதாக இருந்தாலும் சரி பாகிஸ்தான் எப்போதுமே அடுத்தவர்களின் வேலையை செய்ய மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது.

ஆனால் இப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சுன்னி சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது.

middle_east_map

ஈரானும் சும்மா இராமல் ஈராக், பஹ்ரைன், லெபனான், சிரியா போன்ற நாடுகளில் தலையீட்டு சவூதி, குவைத், யுஏஇ நாடுகளை அரை வட்டமாக சுற்றி வளைக்க முயல்கிறது. ஈராக்கில் ஷியா பிரதமருக்கு ஆதரவு, சிரியாவின் அசாட்டுக்கு ராணுவ உதவி என பல வேலைகளை செய்கிறது. ஈரானிய ராணுவ ஜெனரலான குசாம் சுலைமானி ஆசாட்டுக்கு உதவியான ராணுவ உத்திகளை வகுத்தும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தலமையேற்று நடத்தியும் உள்ளார்.

சவூதியும் சளைத்தது அல்ல. ரஷ்யாவின் செச்சனயா வரை தன்னுடைய உளவுத்துறையை அனுப்பி தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. முன்பு உளவுத்துறை தலைவரும் இப்போதைய சவூதி அரசருமான சல்மான் அசீஸ் இதை செவ்வனே செய்தவர். ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீட்டு தீவிரவாதிகளுக்கு உதவியதாலேயே சவூதிக்கு எதிராக ஈரானில் செயல்களை ரஷ்யா ஆதரிக்கிறது. ஐ.நா.வில் சிரியாவின் அசாட்டுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளும் ரஷ்யாவின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளன. அதுவும் இப்போது சல்மானே அரசர் ஆகிவிட்டதால் இது இன்னும் பிரச்சினை. ரஷ்யாவின் மீதான பொருளாதார தடைகளின் காரணமாகவே பெட்ரோலிய விலையை சவூதி மிகவும் குறைவாக வைத்து ரஷ்யாவின் பொருளாதாரத்தையும் ஈரானின் பொருளாதாரத்தையும் அடிக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இதே போல் எகிப்திய முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்புக்கு எதிராக எகிப்திய ராணுவத்தை ஆதரித்து அதை ஆட்சியில் அமர்த்தியது. இப்போது எகிப்துக்கு 300 பில்லியன் டாலர்கள் வரை நிதியுதவிக்கு வளைகுடா நாடுகள் ஒப்புக்கொண்டிருக்கின்றன !

இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். ஏமனில் உள்நாட்டு போரோ அல்லது அதிலே சவூதி தலையிடோ புதிது அல்ல. 1970களில் நடந்த உள்நாட்டுபோரிலும் எகிப்தும் சவூதியும் தலையிட்டு இருந்தன. (இங்கே ஏமனையும், அதற்குப் பக்கத்திலே மஸ்கட்டை தலைநகராக கொண்டிருக்கும் ஓமனையும் போட்டு குழப்பிக்ககூடாது. இரண்டும் வேறு வேறு நாடுகள்).

இப்போது 10 நாடுகளின் கூட்டுப்படையிலே பாகிஸ்தானும் சேருவது தான் இன்னோர் பிரச்சினையை புதிதாக கொண்டுவருகிறது. பாகிஸ்தானிய ராணுவம் இன்னும் பணம், அரசியல் அதிகாரம் எல்லாவற்றையும் பெறுவது ஒரு புறம் என்றாலும், பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளை ஒழிப்பது நடக்காமல் போகும். இப்போதே பாகிஸ்தானின் பஞ்சாபிய தீவிரவாதிகள் தண்டிக்கப் படவில்லை. பெஷாவர் ராணுவப் பள்ளியில் குழந்தைகளை படுகொலை செய்த சம்பவத்திற்கு பின்பு கூட ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை.

திரும்பவும் ஆஃப்கான், காஷ்மீர் என பாகிஸ்தான் தன்னுடைய கூலிப்படை ஏற்றுமதியையும் தீவிரவாதிகளை ஆதரிப்பதையும் ஆரம்பிக்கும்.  அரேபிய நாடுகளும் அமெரிக்காவும் போடும் சிந்தினது சிதறினதை வைத்து பொருளாரத்தை நடத்தும். சவூதியை மையமாக கொண்டு செயல்படும் தீவிரவாதிகளை இனிமேல் சவூதி இந்தியாவிடம் ஒப்படைக்குமா என்பதும் சந்தேகமே.

அமெரிக்கா மத்திய கிழக்கிலே தன்னுடைய கையை கழுவும் பட்சத்திலே இது இன்னும் பெரும் பிரச்சினைகளை கொண்டுவரும். காரணம் இப்போது அமைதியாக இருக்கும் இஸ்ரேல். சமீபத்திலே இஸ்ரேலிய தாக்குதலிலே ஈரானிய ராணுவ ஜெனரல்கள் இறந்ததும் அதற்கு சவூதி ஆதரவு அளித்ததும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று. ஈரானிய அணு உலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவேண்டும் என்றே அரபு நாடுகள் எதிர்பார்க்கின்றன. அதற்கு இஸ்ரேலிய அதிபர் நெதன்யாஹுவை ஆதரிக்கவும் செய்கிறன. இந்தியாவும் இஸ்ரேலும் கூட்டணி வைப்பதையும் அரபு நாடுகள் இதனாலே பெரிதாக ஏதும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போதும் இந்தியா ஈரானில் துறைமுகம் கட்டியிருக்கிறது, அதையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் பாதையையும் உருவாக்கிக்கொண்டுள்ளது. பண்டமாற்று முறையில் ஈரானிடம் பெட்ரோலியம் வாங்கிக்கொண்டு இருக்கிறது.

இதிலே இந்தியாவின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுவரை ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த இஸ்லாமிய மதப்பிரிவுகளின் கூட்டணிக்கு இந்தியாவின் எதிர்வினை என்ன என்பதும் தெரியவில்லை. ஈரானுடைய உறவு எப்படியிருக்கும் என்பதும் தெளிவாகவில்லை.

ஆனால் இன்னோர் சுற்று பிரச்சினைக்கு வளைகுடா பகுதி தயாராகிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

(ராஜசங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

12 Replies to “மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்”

  1. என்ன நம்ப சுவனப்பிரியன் இருக்கும் இடத்தில் மத சண்டையா? IP அட்ரெஸ் செயல் இழந்து விட்டதோ . அய்யோகோ அய்யோகோ???

  2. முகம்மது ஒரு அகண்ட அரபிஸ்தானத்தை உருவாக்க கனவு கண்டாா்.அதை சாம பேத தண்ட அடாவடித்தனமான வழிகளில் இரத்தக்களறியில் அமைக்க முயன்றாா். அவரது முயற்சி அவரது மரணத்தின் போது கைகளுவப்பட்டது. அரேபிய குழுக்களின் வல்லாதிக்கத்திற்குதான் அது இன்று வரை பயன்பட்டுக்கொணடிருக்கின்றது. ஒரு குழு மற்றொரு குழுவை ஒழித்துக் கட்டும் பணி தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொணடிருக்கின்றது. அரேபியா்கள் அரேபியா்களாக அரேபிய குழுக்களாகவேதான் உள்ளனா்.இசுலாமியா்களாக மாறவவில்லை.மாறவும் இயலாது.அரேபியாவில் அமைதி ஒரு நாளும் வரப்போவதில்லை. அரேபியாவிற்கு கௌதம புத்தனும், ஸ்ரீராமபிரானும், சுவாமி விவேகானந்தரும் தேவை. அது கிடைக்காத வரை அழிவு தொடரும்.

  3. இஸ்லாமியரின் இருபிரிவினர்கள் மோதிக்கொள்ளுவதை வேடிக்கைப்பார்க்கும் வேலையை மட்டுமே பாரதம் செய்யவேண்டும். எந்த பக்கமும் சேரவேண்டிய அவசியம் நமக்கு இல்லை. இவர்கள் மோதினால் லாபம் ஆயுதவியாபாரிகளின் நாடான அமெரிக்காவுக்குத்தான். அசுர சக்திகள் மோதி அழியடும்.

  4. ஹூரி பிரியர்கள், தங்களுடைய தந்தை நாட்டை என்றும் விட்டு கொடுக்க மாட்டார்கள். அந்த மாதிரி சாய்வு நாற்காலி அறிவு ஜீவிகள்”, யாருடைய ரத்தம் சிந்தினாலும் மகிழ்ச்சி அடைவார்கள்.

  5. சுன்னி சலாப்பிகளை விட ஷியா அடிப்படைவாதிகளால் பாரதத்திற்கு அச்சுறுத்தல் குறைவு. இரண்டாவது சிரியாவில் ஆஸாத் இருப்பதே நல்கலது. காரணம் அவருக்கு எதிராக சண்டையிட்டு வரும் அனைவரும் சவூதியால் ஊக்கு வைக்கப்பட்ட சுன்னி பயங்கரவாதிகள். தன்னுடைய காலை அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும்

  6. பாகிஸ்தானிய இராணுவம் அரேபிய வளைகுடா நாடுகளில் ஏனைய வருடங்களுக்கு முன்பே தளங்கள் அமைத்தது. மலிவான கூலிப்படையாக செயல்பட்டு வருகிறது(காஸ்ட்லி கூலிப்படை அமேரிக்கா). சுன்னி பிரதேசங்களான இவை ஈரானுக்கு எதிராக ஒரு வியூகத்தை அமைக்கும் செயலில் ஈடுப்பட்டு வருகின்றனர்

  7. இஸ்லாமியரின் இரு பிரிவுகள் மோதினால் மாளப்போவது அந்த இஸ்லாமியனே. அதனால் உலகில் அவன் ஜனத்தொகை வெகுவாக குறையும். இது ரொம்ப நல்ல விஷயம்தானே! சந்தோஷபபடுங்க சார். திரு சுவனபிரியன் அரேபியாவில் நடக்கும் சண்டையில் தீவிரமாக மும்முரமாக ஈடுபட்டுள்ளாரோ? அவருக்கு நிச்சயம் “”72″” கிடப்பது உறுதி. தினமும் பேப்பரை திறந்து படித்தால் அரேபியாவில் சண்டை. லிபியாவில் சண்டை எகிப்தில் சண்டை. ஆப்கனிஸ்தானில் குண்டு வெடித்தது. பாகிஸ்தானில் குண்டு வெடித்தது. நைஜீரியாவில் பள்ளி (பெண்) குழந்தைகள் கடத்தல் என்று உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளை பற்றியே செய்தி வருகிறது. நியுசிலாந்தில் குண்டு, கிரீன்லாந்தில் குண்டு ஸ்காட்லாந்தில் சண்டை என்று எப்போதாவதாகிலும் செய்தி வருகிறதா? வருவதில்லை. காரணம் அந்த இஸ்லாம் காட்டுமிராண்டிகளின் தலைவனான முகமது என்ற முரடன் ஆரபித்து வைத்துவிட்ட போன சண்டை இது. இன்றும் அது தொடர்கிறது போராக . நடக்கட்டும் நடக்கட்டும் ஜோராக. அவர்கள் அவனியில் அழியட்டும் சீராக. அதனால் உலகில் அமைதி நிலவும் மாறாக.

  8. திரு ஹானஸ்ட் மேன்!

    //இஸ்லாமியரின் இரு பிரிவுகள் மோதினால் மாளப்போவது அந்த இஸ்லாமியனே. அதனால் உலகில் அவன் ஜனத்தொகை வெகுவாக குறையும். இது ரொம்ப நல்ல விஷயம்தானே! சந்தோஷபபடுங்க சார். திரு சுவனபிரியன் அரேபியாவில் நடக்கும் சண்டையில் தீவிரமாக மும்முரமாக ஈடுபட்டுள்ளாரோ? அவருக்கு நிச்சயம் “”72″” கிடப்பது உறுதி. தினமும் பேப்பரை திறந்து படித்தால் அரேபியாவில் சண்டை. லிபியாவில் சண்டை எகிப்தில் சண்டை. ஆப்கனிஸ்தானில் குண்டு வெடித்தது. பாகிஸ்தானில் குண்டு வெடித்தது. நைஜீரியாவில் பள்ளி (பெண்) குழந்தைகள் கடத்தல் என்று உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளை பற்றியே செய்தி வருகிறது. நியுசிலாந்தில் குண்டு, கிரீன்லாந்தில் குண்டு ஸ்காட்லாந்தில் சண்டை என்று எப்போதாவதாகிலும் செய்தி வருகிறதா? வருவதில்லை.//

    தீவிரவாதத்துக்கு யார் காரணம் என்பதை நீங்களும் உணர்ந்துள்ளீர்கள். இந்த சண்டைகளால் அதிகம் பலனடைவது அமெரிக்க ஆயுத வியாபாரிகள். அமெரிக்க அரசை நடத்திச் செல்வதும் அந்த கட்சிகளுக்கு பண உதவி செய்வதும் இவர்களே! அடுத்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அமெரிக்க ஐரோப்பிய அரசுகள்.

    நேற்று கூட கென்யாவில் பள்ளி குழந்தைகளை இஸ்லாமிய பெயரில் சில காட்டுமிராண்டிகள் கொன்று குவித்துள்ளனர். இதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறதா? கண்டிப்பாக இல்லை. ‘ஒரு உயிரைக் கொன்றவன் ஒட்டு மொத்த உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும்” என்று குர்ஆன் கட்டளையிட அதற்கு மாறாக அப்பாவி குழந்தைகளை கொல்பவன் எவ்வாறு இஸ்லாமியனாக முடியும்?

    ஐஎஸ்ஐஎஸ், அல்சபாப், இந்தியன் முஜாஹிதின் என்று எந்த பெயரில் வந்தாலும் குர்ஆனுக்கு மாற்றமாக செயல்படும் எவனும் இஸ்லாமியனாக முடியாது. முன்பு பாகிஸ்தானில் நடந்த பள்ளி குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவன் உடம்பில் பச்சைக் குத்திய ஐரோப்பியன் என்ற உண்மை ஆதாரத்தோடு வெளிப்பட்டது. மாலேகான் குண்டு வெடிப்பில் முதலில் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பிறகு அதனை செய்தது சாத்வி பிரக்யாசிங் என்ற பெண் துறவி என்பது நிரூபணமானது. இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உளவுத் துறையால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று முன்னால் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உண்மையை போட்டு உடைத்ததையும் நாம் மறந்து விட முடியாது.

    உங்களோடு பழகி வரும் சக தமிழ் இஸ்லாமியரை நோக்குங்கள். அவர்களிடம் தீவிரவாதம் இருக்கிறதா? புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஏ ஆர் ரஹ்மானிடமோ, அல்லது யுவன் சங்கர் ராஜாவிடமோ இது போன்ற தீவிரவாத எண்ணம் தலை தூக்கி பார்த்துள்ளீர்களா? எனவே இந்த குண்டு வெடிப்புகளும் கொலைகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுப்பதற்காக இஸ்ரேலும், அமெரிக்காவும், ஐரோப்பாவும் செய்து வரும் கூட்டு சதிகளின் ஒரு பகுதியே. எத்தனையோ எதிர்ப்புகளை சமாளித்த இஸ்லாம் இந்த எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி நடை போடும். அதனை உங்கள் காலங்களிலேயே பார்க்கத்தான் போகிறீர்கள்.

    //நியுசிலாந்தில் குண்டு, கிரீன்லாந்தில் குண்டு ஸ்காட்லாந்தில் சண்டை என்று எப்போதாவதாகிலும் செய்தி வருகிறதா?//

    கண்டிப்பாக வெடிக்காது. தீவிரவாதத்தை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு போதிக்கவில்லை. எனவே அந்த நாடுகள் குண்டு வெடிப்புகள் இல்லாது அமைதியாக உள்ளன.

    //திரு சுவனபிரியன் அரேபியாவில் நடக்கும் சண்டையில் தீவிரமாக மும்முரமாக ஈடுபட்டுள்ளாரோ?//

    உங்களின் புலனாய்வு புல்லரிக்க வைக்கிறது. நான் தற்போது இருப்பது தமிழகத்தில்… 🙂

    //என்ன நம்ப சுவனப்பிரியன் இருக்கும் இடத்தில் மத சண்டையா? IP அட்ரெஸ் செயல் இழந்து விட்டதோ . அய்யோகோ அய்யோகோ???// – பாண்டியன்

    நான் தமிழகம் வந்து விட்டதால் அங்கு சண்டை ஆரம்பமாகி விட்டது என்று நினைக்கிறேன். 🙂

  9. /////குர்ஆனுக்கு மாற்றமாக செயல்படும் எவனும் இஸ்லாமியனாக முடியாது. //////
    அப்படி பார்த்தால் உலகில் ஒரு முஸ்லிம்கூட இல்லை என்றே கூறலாம்.(1) வட்டி வாங்ககூடாது என்று குரான் சொல்கிறது. ஆனால் முஸ்லிம் அரசு ஊழியர்கள் GPF க்கு வட்டி வாங்குவதில்லையா? அதற்கு 8 1/2% வட்டிதான் அதாவது குறைந்த வட்டிதான் அதனால் தவறில்லை என்கிறீர்களா? சிறியதோ பெரியதோ வட்டி வட்டிதானே? ஆகவே இது குர் ஆனுக்கு மாறாக நடுக்கும் செயல் இல்லையா?

    ///// நான் தமிழகம் வந்து விட்டதால் அங்கு சண்டை ஆரம்பமாகி விட்டது என்று நினைக்கிறேன்//// நீங்கள் மீண்டும் சௌதி அரேபியா போனதும் இங்கு தமிழ்நாட்டில் கலவரம் வந்துவிடுமோ?

    2) குர் ஆனின் அத்தியாயம் 5 வசனம் 51 ல் “”இறை நம்பிக்கை கொண்டவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உங்கள் உற்ற நண்பர்களாக ஆக்கிகொள்ளாதீர்கள்””” என்று உள்ளது. இப்படியும் ஒரு கடவுளா? இந்த கடவுள் நமக்கு தேவையா? இந்துக்களை பார்த்து குறிப்பாக மோடியை பார்த்து divisive force என்று கூறுகின்றனர். மத நல்லிணக்கம் போதிக்க வேண்டிய ஒருவர் அவர்களுடன் சேராதீர் இவர்களுடன் சேராதீர் என்றா கூறுவது? மத ஒற்றுமையை போதிக்காத ஒரு கடவுள் நம்ம இந்தியாவுக்கு தேவைதானா?

    //// பெண் துறவி என்பது நிரூபணமானது. /////
    நிருபனமாகிவிட்டதா? தூக்கு தண்டனை வழங்கி விட்டார்களா? இன்னும் நான் பேப்பரில் படிக்கவில்லை. அதனால்தான் கேட்கிறேன்.

    //////ஒரு உயிரைக் கொன்றவன் ஒட்டு மொத்த உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும்” என்று குர்ஆன் கூறுகிறது////// அப்படியானால் நபியை குறை கூறிய ஒரு அரபு பெண் கவிஞரை கொல்ல வேண்டும் என்று தனது அடியாட்களிடம் (henchmen ) கூறி அதை நிறைவேற்றவும் செய்தாரே? அதற்கு என்ன அர்த்தம்?

    //////இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உளவுத் துறையால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று முன்னால் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ/////
    அதே ஆள்தான் காந்தி பிரிட்டிஷ் கைக்கூலி (agent ) என்று கூறினார் அதையும் நாம் ஏற்றுக்கொள்ளலாமா? அவர் என்ன அரிச்சந்திரனின் அடுத்த வீட்டுகாரனா?

    ///// துப்பாக்கிச் சூட்டை நடத்தியவன் உடம்பில் பச்சைக் குத்திய ஐரோப்பியன் //////
    ஐரோப்பாவில்தான் உங்கள் இஸ்லாம் பரவிய்ள்ளதே. சமீபத்தில் முஸ்லிமாக மாறிய ஒரு பச்சை குத்திய ஐரோப்பியன் இதை நடத்தியிருக்க வேண்டும். இங்கே தமிழ்நாட்டில் பழனி பாபா என்று ஒருத்தன் இருந்தான் அவன் ஒரு கொலை குற்றத்தில் மாட்டிகொண்டால் இவன் முஸ்லிம் அல்ல ஏனென்றால் அவன் பெயர் பழனி பாபா என்று சொல்வீர்களா? அதேபோல இப்போது ”மனுஷபுத்திரன்” என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு இதே நிலைதானா?

  10. //ஐஎஸ்ஐஎஸ், அல்சபாப், இந்தியன் முஜாஹிதின் என்று எந்த பெயரில் வந்தாலும் குர்ஆனுக்கு மாற்றமாக செயல்படும் எவனும் இஸ்லாமியனாக முடியாது. முன்பு பாகிஸ்தானில் நடந்த பள்ளி குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவன் உடம்பில் பச்சைக் குத்திய ஐரோப்பியன் என்ற உண்மை ஆதாரத்தோடு வெளிப்பட்டது. மாலேகான் குண்டு வெடிப்பில் முதலில் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பிறகு அதனை செய்தது சாத்வி பிரக்யாசிங் என்ற பெண் துறவி என்பது நிரூபணமானது. இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உளவுத் துறையால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று முன்னால் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உண்மையை போட்டு உடைத்ததையும் நாம் மறந்து விட முடியாது.//

    ஏன் 9/11 ஒரு இந்து அல்லது அமெரிக்க ஆளால் நடந்தது என்று அடித்து விடுங்களேன். இது வரை நடந்த தீவிரவாத கொலைகள் எதற்கும் இஸ்லாமியர் காரணம் இல்லை என்று சொல்லிவிடுங்களேன். நாங்களும் நிம்மதியாக ‘ஓஹோ இந்துக்கள்தான் இத்தனைக்கும் காரணமா’என்று நினைத்து வருத்தப்பட்டு விட்டுகிறோம்!!

    மார்க்கண்டேய கட்ஜூ வை ISIS இடம் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வரசொல்லுங்களேன்.

    உங்கள் மாதிரி நபர்களை கொஞ்சமும் திருத்தவே முடியாது.

  11. அறிவார்ந்த சமூகம் சோரம் போனதால் வந்த சாபக்கேடா அல்லது அறிவு தன ஆதிக்க வல்லமையினை இழந்து நிற்கிறதா, . . . இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்க அதிபரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது,இப்போது உலகில் அமேரிக்கா புறக்கணிக்க முடியாத வல்லாதிக்க சக்தி, எனவே நீங்களும் இனிமேல் இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளை போல காலனியாக்கலை தொடங்குவீர்களா..?அதற்கு அமெரிக்க அதிபரின் பதில் .. அமேரிக்கா காலனியாக்கலை விரும்பவில்லை மாறாக சக நாடுகளின் பொருளாதாரத்தின் மீது மட்டுமே ஆதிக்கம் செலுத்துவோம்,
    அமேரிக்கா தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இன்றுவரைக்கும் நின்றுகொண்டிருக்கிறது,எல்லா நகர்வுகளும் இந்த உலகத்தில் பொருளாதாரத்தையே அடிப்படையாக கொண்டு நகர்கிறது,
    உலக அரசாங்கங்களின் இயன்குதன்மையை இன்று உற்று நோக்கினால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் யோக்கியர்களாகவும்,போராடுகிரவர்களேல்லாம் பொறுக்கிகளாகவும்,தீவீரவாதிகளாகவும்,பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.இதில் ஒரு வேதனை என்னவென்றால் ஒரு நாட்டில் நடக்கும் போராட்டத்தில் அரசுக்கு எதிரான போராட்ட சக்திகள் ஆதிக்கம் பெறும்போது அண்டைய அரசுகளில் இருந்து அமெரிக்க அரசு வரைக்கும் போராட்ட சக்திகளை கேவலப்படுத்துவதும்,எதிர்த்தாக்குதல் நடத்தி அழித்தொழிப்பதுவும் சர்வ சாதாரணமாக இங்கே நடந்துகொண்டிருக்கிறது,இங்கே அழிக்கப்படுவது மனிதனின் உயிர்கள்,சிந்தப்படுவது மனிதனின் ரத்தம்,இதற்குத்தானா இந்த நாகரீகம் பண்பாடு,கல்வி..விஞ்ஞானம் ??
    யேமன் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை கூட நடத்திட அரசாங்கங்கள் தயாரில்லை என்பது வேதனை,அந்த மண்ணின் மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு நாடுகடந்தும் பலர் போராளிகளாக களம் இறங்குகின்றனர் என்றால்..(மதம் என்ற காரணம் ஒருபுறம் இருக்கட்டும் ) இப்போது போராட்டம் தனிமனிதர்களின் இருதயத்தில் நடக்கிறது,அது தான் உண்மையும் கூட
    குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு பிறகு உலகத்தில் நடக்கும் சுதந்திரபோராட்டங்கள் எல்லாம் பயங்கரவாதங்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டது,யேமன் போராட்டத்திற்கு அண்டைய அரசுகளின் அக்கபோறுகளுக்கு உண்மையான காரணம் என்ன??
    பென்டகனின் வழிகாட்டலில் வழங்கப்படும் செய்தியை மட்டுமே உலக நாடுகளின் மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய இழிநிலை,உண்மையில் என்ன நடக்கிறது என்று யாரும் அறிந்துகொள்ள முடியாத ஒரு ஒரு இரும்புத்திரைக்கு பின்னால் இருப்பது தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம்,
    அதை தெரியவைப்பதற்கான சூழலோ முன்னேர்ப்பாடுகளோ எதுவும் கண்ணுக்கே தெரியவில்லை,இந்த நிலையில் ஒரே ஒரு வரலாற்றை நினைவு படுத்துகிறேன்,
    1980 களில் போபார்ஸ் பீரங்கி பேர ஊழலில் அனைத்து பத்திரிக்கைகளும் பார்வையாளனாக இருந்தபோது ஹிந்து நாளிதழ் மட்டும் தோண்டி துருவி புலனாய்வு செய்து,வின்சத்தாவின் தொடர்பினை வெளிக்கொண்டு வந்தது,சித்ரா சுப்பிரமணியம் என்ற செய்தியாளர் துபாயிலும் கூட நிழல்போல விரட்டினார்,குவாத்ரோச்சியை மோப்பம் பிடித்தது இந்து நாளிதழ் தான்,
    அப்போது ஒவ்வொரு வெளியீடும் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது,அதற்கு மாண்புமிகு பிரதமராக இருந்த திரு ராஜீவ் காந்தி அவர்கள்,சொன்ன பதிலுரை…. குவாத்ரோச்சி..? மிகச்சிறந்த கற்பனை கதாபாத்திரம்…ஆட்சி மாறியது.. காட்சியும் மாறியது.. குவாத்ரோச்சியை சி.பி.ஐ விரட்டியது ஆனால் குவாத்ரோச்சியை பிடிக்கவே முடியவில்லை, மீண்டும் ஆட்சி மாறியது போபார்ஸ் ஊழலில் சொல்லப்பட்ட தொகைக்கு அதிகமாக செலவு பிடித்ததால் இந்த வழக்கு விசாரணை கை விடப்படுகிறது என்று அறிவிப்பும் செய்தாகி விட்டது,
    மேற்சொன்ன நிகழ்வு நமக்கு சுட்டிக்காட்டும் உண்மை என்னவென்றால் ஐநூறு ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக யாரும் காவல் நிலையத்தில் புகார் செய்யக்கூடாது ஏனென்றால் காவல்துறையில் இதற்காக தேடும் செலவின் அடிப்படையில் பார்த்தால் 3 அல்லது நான்கு காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் சம்பள செலவு 2 அல்லது 3 ஆயிரமாகும் …
    ஒரு ஜனநாயக நாட்டிலேயே… இந்த ஒரு இழிநிலை… இதில் தான் நாம் வாழ்கிறோம், இந்த முரண்பாடுகளின் ஊடே உற்று நோக்கினால் தெரிவது பழைய ஐரோப்பிய வரலாற்றில் முடிந்துபோனதாக சொல்லப்பட்ட பிரபுக்கள் ஆட்சி இன்றும் தொடர்கிறது பிரபுக்களுக்கு பணம் ஒன்று தான் அதற்காக எதையும் செய்யத்துணிவார்கள்,இதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஹிந்து போன்ற ஊடகங்களுக்கு மட்டுமே உள்ளது..

  12. பலா் கவனிக்கத் தவறிய விசயம் ஒன்று. முகம்மது துவக்கிய இசுலாமிய இயக்கம் ஒரு ஆன்மீக இயக்கம் அல்ல. புத்தனைப் போல் வள்ளுவரைப் போல் ஆதி சங்கரா் போல் துறவறத்தை முன்னிருத்தி பற்றற்ற வாழ்கை முன்னிருத்தி மனித வளத்தை மேம்படுத்தும் கலாச்சார ஆன்மீக இயக்கம் அல்ல. உலகத்தில் முதலில் தோன்றிய அரசியல் கட்சி கத்தோலிக்க கிறிஸ்தவ சபைதான். இரண்டாவது பொிய அரசியல் கட்சி முகம்மது என்ற அரேபியன் துவக்கிய இசுலாம் என்பதாகும். சவுதி அரேபிய பழக்க வழக்கங்கள் மட்டுமே முக்திக்கு வழி என்று முட்டாள்தனமாக இந்த அரேபியன் போதித்த காரணத்தால் இன்று இசுலாம் போகின்ற இடமெல்லாம் பிரச்சனையை உருவாக்கி வருகின்றது. அரபு நாடுகளில் கூட நூற்றுக் கணக்கான கலாச்சார குழுக்கள் தோக்திரங்கள் உள்ளன. அவைகளின் தனித்தன்மையை அழித்து குரைஷி சாதிக்காரனின் மேலாதிக்கத்தை இசுலாம் நாட்ட முயல்கின்றது. உலக மக்களை அரேபிய கலாச்சாரத்திற்கு மாற்றி அரேபியாவிற்கு அடிமையாக்கப் பாா்க்கின்றது இசலாம். இசுலாம் போகும் இடமெல்லாம் பாழ்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *