மார்க்சியவாதிகள் மறைக்கும் பாஜக தலைவர்களின் தியாகங்கள்

arunanமார்க்சியவாதிகள் வரலாற்றை எப்படியெல்லாம் திரிப்பவர்கள் என்பது நாம் அறிந்ததுதான். அதுமீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. மார்க்சியவாதியான அருணன் காலந்தோறும் பிராமணியம் என்ற நூலை ஏழு பாகமாக எழுதியிருக்கிறார். அதில் 6வது பாகத்தில் 116வது பக்கத்தில் ஜனசங்கத்தை விமர்சித்து இப்படி எழுதுகிறார் :-

‘‘ஏற்கனவே குறிப்பிட்டதுபோல 1952 தேர்தலில் பெரிய வெற்றி இல்லையென்றாலும் 3.1% வாக்குகள் பெற்று தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுவிட்டது ஜனசங்கம். அத்வானி பொறுப்பில் இருந்த ராஜஸ்தானில் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தார்கள். இவர்கள் எல்லாம் யார் தெரியுமா? அத்வானி எழுதுகிறார் ‘ஜனசங்கம் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எட்டு எம்.எல்.ஏக்களுமே ஜாகிர்தார்களாக இருந்தார்கள்’ ஆக. யாரை நம்பி அங்கே கட்சி ஆரம்பித்தார்கள் என்பது நிச்சயமாகிறது. ஜாகிர்தார்கள் எனப்பட்டவர்கள் ஜமீந்தார்கள் போல பெரும் பெரும் நிலப்பிரபுக்கள் என்பதை அறிவோம். ஜாகிர்தாரி முறையை ஒழிக்க வேண்டும் என்கிற மக்கள் இயக்கம் வீறுகொண்டு எழுந்தபோது ஜனசங்கமும் அதை ஆதரித்தாக வேண்டிய இக்கட்டான நிலை உருவானது. அப்போது இவர்களில் ஆறுபேர் அதை ஏற்கவில்லை. வெளிப்படையாக அதை எதிர்த்தார்கள் என்கிறார் அத்வானி. நிலப்பிரபுத்துவத்தின் சமூகக் கட்டமைப்பாகிய பிராமணியத்தின் பிரதிநிதியாக மட்டுமல்ல அதன் பொருளாதாரக் கட்டமைப்பாகிய நிலப்பிரபுக்களின் பிரதிநிதியாகவும் ஜனசங்கம் பிறப்பெடுத்தது. பாமர மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காகத் தாங்களும் ஜாகிர்தாரி முறையை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். அந்தத் தந்திரத்தை ஏற்காத ஜாகிர்தார்களை கட்சிக் கட்டுப்பாடு கருதி கண்டித்தார்கள்.’’

இதுதான் மார்க்சிய அறிஞர்(?) அருணன் சொல்லியிருக்கும் ஜனசங்கத்தின் கதை. ஜனசங்கத்தை நிலப்பிரபுக்களின் பிரதிநிதியாக, பிராமணியத்தின் பிரதிநிதியாக கட்டமைத்திருக்கிறார் அருணன். மார்க்சிய அறிஞர்கள் வரலாற்றை எப்படி திரிப்பார்கள், எழுதுவார்கள் என்று அருண்சோரி புத்தகங்களை படித்தாலே விளங்கிக் கொள்ளலாம். வரலாற்றை திரிப்பதில், மறைப்பதில் அருணன் போன்ற மார்க்சிய அறிஞர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது இவர்கள் எழுதிய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள மூல புத்தகங்களை படிக்கும்போது நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு திரிபை இந்த அவர் எழுதிய காலந்தோறும் பிராமணியம் புத்தகத்தில் செய்துள்ளார். ஜாகிர்தார் முறையை ஒழிக்க பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுபேர் எதிர்த்தார்கள் என்று சொன்ன அருணன் அதன் முடிவை சொல்லாமல் மறைத்துவிட்டார். மேலும் கண்டித்தார்கள் என்று முடிவுரையை எழுதிவிட்டார்.

ஆனால் ஜாகிர்தார் முறையை ஒழிக்க பாஜக எந்த அளவுக்கு போனது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால், பாஜகவின் முடிவு என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் அருணன் குறிப்பிட்டிருக்கிற திரு.அத்வானி எழுதிய புத்தகத்தை நாம் படிக்க வேண்டும்.

நாம் படிக்காமல் விடுவோமா? படித்ததன் விளைவு அருணன் போன்றவர்களின் முகமூடி கிழிகிறது.

முதல் பொதுத்தேர்தல் 1952ல் நடைபெற்றது.

en desam

இனி திரு.அத்வானி எழுதுகிறார் :

ராஜஸ்தான் சட்டமன்றத்தேர்தலில் 8 இடங்களில் எங்கள் கட்சி வெற்றிபெற்றது. அப்போது ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 160.  எதிர்பார்க்கப்பட்டது போலவே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தது. சீக்கிரத்திலேயே ஜனசங்கத்தின் சட்டமன்ற கட்சியில் கருத்துவேறுபாடு எழுந்தது. அதன் விளைவாக 8 எம்.எல்.ஏக்களில் 6பேரை கட்சித் தலைமை கட்சியை விட்டே நீக்கிவிட்டது. விடுதலைக்கு முன்பு ராஜஸ்தான் 19 மன்னராட்சி மாநிலங்களாக இருந்தது. 1950க்கு முன்பு தான் இந்த மன்னராட்சிப் பகுதிகளும் நாட்டின் மற்ற மன்னராட்சிப் பகுதிகளும் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டன.

ஆனாலும் சில குடும்பங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உரிமை கொண்டாடும் ஜாகீர்தார் முறை தொடர்ந்து கொண்டிருந்தது. டாக்டர் முகர்ஜி மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாவின் வலியுறுத்தலின் பேரில் ஜாகீர்தாரி முறை ஒழிப்பு கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பாரதிய ஜனசங்க வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எட்டு பேரும் ஜாகீர்தார்களாக இருந்துவிட்டார்கள். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதுபோல ஜாகீர்தாரி முறையை ஒழிக்க சட்டமன்றத்தில் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என கட்சி தீர்மானித்த து. அதற்கு 6 எம்.எல்.ஏக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. பைரோன் சிங்க செகாவத், ஜகத் சிங் ஜாலா ஆகியோர் மட்டும் ஜாகீர்தாரி ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆறு எம்.எல்.ஏக்களின் நிலையை கட்சி தலைமைக்குத் தெரியப்படுத்தினர். டாக்டர் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகிய இருவரும் ஜெய்ப்பூர் வந்து அந்த ஆறு எம்.எல்.ஏக்களுடன் தனித்தனியே பேசினார்கள். எம்.எல்.ஏக்கள் தங்கள் நிலையில் இருந்து  மாறவில்லை. ‘கட்சி கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. அதனால் அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்’ என்றனர்.

செகாவத் விரைவிலேயே ராஜஸ்தான் ஜனசங்கத்தின் மக்களைக் கவர்ந்த தலைவராக உயர்ந்து விட்டார். மூன்றுமுறை ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக ஆனார். 2002ல் இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும் ஆனார். 1952ல் ஜாகிர்தாரி முறை ஒழிப்பு விஷயத்தில் அவர் எடுத்த துணிவான மற்றும் கொள்கை ரீதியான முடிவு அவரது அடுத்தடுத்த அரசியல் வெற்றிகளுக்கு முக்கியமான அடித்தளமாக அமைந்தது எனலாம்.

நூல் : என்தேசம் என் வாழ்க்கை, எல்.கே.அத்வானி, பக்கம் :109-110

வெறும் எட்டு  எம்.எல்.ஏக்களை கொண்ட ஜனசங்கம், தனது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத ஆறு எம்.எல்.ஏக்களை கட்சியைவிட்டு நீக்கியது என்பது வேறு கட்சிகளின் வரலாற்றில் நடக்க முடியாத  ஒரு மாபெரும் சம்பவம். வேறு எந்த கட்சியும் தனது கொள்கைக்காக தங்களது எம்.எல்.ஏக்களை விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் பாஜக அதை செய்தது. மொத்தமே எட்டு எம்.எல்.ஏக்கள் எனும்போது ஆறு எம்எல்ஏக்களை நீக்குகிறது என்றால் அதனுடைய கொள்கை கடைபிடிப்பு என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதுதான் கொள்கைக்காக தியாகம் செய்வது. இது பாரதிய ஜனசங்கத்திற்கு இயல்பிலேயே இருக்கும் பண்பு. மற்ற கட்சிகளில் எதிர்பார்க்க முடியாது. இன்றும் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சிக்கு விரோதமாக போய்விட்டால் அவரை நீக்குவது கிடையாது. காரணம் தங்கள் கட்சியின் பலம் குறைந்துவிடும் என்ற காரணம்தான். ஆனால் பாஜக அப்படி செய்யவில்லை. தங்கள் பலம் குறைந்தாலும் பரவாயில்லை. கொள்கை முக்கியம் என்று முடிவெடுத்தார்கள்.

பாரதிய ஜனசங்கத்தின் இந்த தியாகத்தை மறைத்துதான், திரித்துதான் மார்க்சிய எழுத்தாளர் அருணன் ‘கண்டித்தார்கள்’ என்று மட்டும் எழுதி ‘கட்சியை விட்டு நீக்கியதை’ மறைத்த நியாயமான(?) எழுத்தாளர்.

இதுமட்டுமல்ல.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொண்டிருந்தது. அதற்காக விவசாய நிலங்களில், நில உச்சவரம்பு சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைபடுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரியது. இந்தக் கொள்கையை தீன்தயாள்ஜி ஆதரித்து இருந்தார். கட்சியின் செயற்குழு அதற்கு அங்கீகாரம் அளித்தது. இந்த ஆதரவு நிலையை, பாரதிய ஜனதா  கட்சியைச் சார்ந்த பால்ராஜ் மதோக் என்பவர் தவறு என்று எதிர்த்தார். ஏழை எளிய மக்களுக்கு எதிராக இருந்த அவரை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கினார் அத்வானி அவர்கள்.

deendayalji

ஜனசங்கம் ‘ஏகாத்ம மானவ வாதம்’ என்னும் தீன்தயாள்ஜியின் தத்துவத்தை 1965ல் நடந்த விஜயவாடாவில் நடந்த மாநாட்டில் வழிகாட்டிக் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி அதன் விதிமுறைகளில் கட்சியின் அடிப்படை தத்துவமாக அதை ஏற்றுக் கொண்டது. பின்பு அத்தத்துவம் புத்தகமாக வெளியிடப்பட்டது.  அதில் தீன்தயாள்ஜி குறிப்பிடுகிறார் :- ‘தங்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்களாக பிற மனிதர்களை கருதிடும் அளவிற்கு மனிதர்களை இட்டுச் சென்று அதன் மூலம தேசிய ஒற்றுமைக்கு அபாயம் தோற்றுவித்திடும் தீண்டாமை போன்ற தீமைகளால் சமுதாயம் இன்று பீடிக்கப்பட்டுள்ளதென்றால் அத்தீமைகளை ஒழித்தாக வேண்டும்’(பக்.95) என்று அவர் குறிப்பிடுகிறார்.

இதையெல்லாம் மறைத்துதான் அருணன் போன்ற எழுத்தாளர்கள் பிராமணியத்தை ஆதரித்தார்கள், ஜாகிர்தார் முறையை ஆதரித்தார்கள் என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரத்தை கட்டமைத்து வருகிறார்கள்.

நாம் எப்போதுமே ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திராவிட இயக்க எழுத்தாளர்கள், கம்யூனிச எழுத்தாளர்கள் ஏதாவது எழுதினால் அதை உண்மை என்று உடனே நம்பிவிடக்கூடாது. அவர்கள் குறிப்பிடும் மூலநூலை கண்டிப்பாக படிக்க வேண்டும். நாம் அப்படி படிக்காமல் போனதன் விளைவுதான், இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவராமல் போனதன் விளைவுதான் இன்று அவர்கள் மாபெரும் எழுத்தாளர்கள், நடுநிலை எழுத்தாளர்கள் என்ற பெயரை பெற்றிருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த மாயைகள் உடையும் வெகுநாள் இல்லை. நமக்கான வெற்றிகள் எட்டிவிடும் தூரம்தான். அந்த தூரத்தை கடக்க நாம் நிறைய படிக்க, பரப்ப வேண்டும். அவ்வளவுதான்.

 

16 மறுமொழிகள் மார்க்சியவாதிகள் மறைக்கும் பாஜக தலைவர்களின் தியாகங்கள்

 1. செ.சுகுமாா் on April 25, 2015 at 5:57 pm

  அருணன் ஒரு முட்டாள்.மூளையில் கோட்டம் விழுந்தவன்.இவனைப்பற்றி சிந்திப்பதே வீண்

 2. செ.சுகுமாா் on April 25, 2015 at 5:59 pm

  ஆருணம் என்றாவது ” காபீா்” கோட்பாடு உலகில் ஏற்படுத்திய இரத்தக்களறி குறித்து கருத்து சொன்னதுண்டா ? அரேபிய வல்லாதிக்கத்தை உலகில் பரப்பிட குரான்வாதிகள் செய்து கொண்டிருக்கும் கொடுமைகளை என்றாவது சாடியதுண்டா ? அரேபிய வாதிகள் ……. அள்ளிக் கொடுக்கின்றான் ? ஐயா விலை போய் எழுதுகின்றான். ஓரவஞசகமாக ? கேடு கெட்டவன்.

 3. அத்விகா on April 25, 2015 at 7:42 pm

  திராவிடம் என்பது பொய் பித்தலாட்டம் ஆகியவற்றின் மொத்த தொகுப்பு. கம்யூனிசம் என்பதோ வெட்டி சர்வாதிகாரம் மற்றுமே. இரண்டும் விரைவில் அழியும். உலகில் இனி எங்கும் தேறாது.

 4. ஆர்யத்தமிழன் on April 25, 2015 at 9:10 pm

  பிராமணிய எதிர்ப்பு என்பதன் மறைமுக பொருள் தேசியத்தினை,தர்மத்தினை எதிர்ப்பது…

 5. visu on April 25, 2015 at 9:47 pm

  திரு.வேங்கடேசன்ஜி,தங்களது சமுதாய நலப்பணி தொடர எனது வாழ்த்துக்கள். பாரத சமுதாயத்தில்,குறிப்பாக தமிழ் சமுதாயத்தில் புரையோடிப்போன விஷயங்களை கையில் எடுத்துள்ளீர்கள்.வெற்றி கிட்ட எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

 6. sirippousingaram on April 25, 2015 at 9:49 pm

  செ.சுகுமாா்: ஆருணம் என்றாவது ” காபீா்” கோட்பாடு உலகில் ஏற்படுத்திய இரத்தக்களறி குறித்து கருத்து சொன்னதுண்டா ? அரேபிய வல்லாதிக்கத்தை உலகில் பரப்பிட குரான்வாதிகள் செய்து கொண்டிருக்கும் கொடுமைகளை என்றாவது சாடியதுண்டா ? ————–
  சொன்னா. வெட்டிடுவானுங்களே……..

 7. சீனீவாச ராமானுஜன் on April 25, 2015 at 11:09 pm

  பிஜேபி யின் கொள்கை உறுதியை எடுத்து சொல்ல ஏன் அவ்வளவு தூரம் செல்ல வேண்டும்.. பதவிக்காக காஷ்மீரில் ஆட்சியை பிடித்தபோதே தெரிந்துவிட்டது. எடியூரப்பா விசயத்திலேயே தெரிந்துவிட்டதே

 8. ராகுலன் on April 26, 2015 at 12:30 am

  //கம்யூனிசம் என்பதோ வெட்டி சர்வாதிகாரம் மற்றுமே. இரண்டும் விரைவில் அழியும். உலகில் இனி எங்கும் தேறாது.//

  சரி அதையும் தான் பொறுத்திருந்து பார்ப்போமே. எது தேறும் எது தேறாது என்று?

 9. k.gopaalan on April 26, 2015 at 11:25 am

  காதறுந்த ஊசியாகிப்போன கம்யூனிசத்தைக் கையில் வைத்துக்கொண்டு அலையும் இதுபோன்ற பேராசிரியர்கள் மேற்கு வங்கத்தில் போய் ஆரியம் திராவிடம் என்று பேசுவார்களா.

  சமூக நீதி, பார்ப்பனீயம், சங்கரமடம் பற்றிப் பேசி தமிழகத்தில் சிறிது காலம் பிழைப்பு நடத்தலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.

  கோபாலன்

 10. senthil on April 27, 2015 at 7:55 am

  தமிழ்நாட்டில் திராவிடம் முதலில் ஒழிய வேண்டும் . கம்யூனிசம் ஒரு சிறு கொசு மட்டுமே.

 11. Ganesan N on April 27, 2015 at 12:07 pm

  அய்யா ஒரு விசயத்தை புரிந்துகொள்ளுங்கள் , காங்கிரஸ் கட்சியும் கம்யூனிச கட்சியும் மத்திய அளவில் முடிவு செய்துள்ளனர் . அது என்ன ? பிரதமர் மோடி அவர்களையும் பாஜக வையும் கடுமையான முறையில் விமர்சிக்க வேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் / ஊடக ங்களில் பொய்களை உண்மை போல உரக்க கத்தி பேசி மக்களிடம் தவறான எண்னத்தை உருவாக்க வேண்டும் என்பதே.
  இதன் முயற்சிதான் அருணன் அவர்களின் பேச்சியும் எழுத்துகளும், மார்க்சியவாதியான இவர் ஊடக ங்களில் தன்னை பத்திரிக்கையாளர் என்ற போர்வைக்குள் தன்னை போர்த்திக்கொண்டு பொய்களை உண்மை போல உரக்க கத்தி பேசுவார் . சில ஊடக ங்களும் இது போன்ற நபர்களை ஊக்கபடு த்துகின்றன.

 12. La.ganesan on April 28, 2015 at 8:52 pm

  Everybody should be vigilant as my brother Shri Venkatesan is. Congrats for venkatesan. LG

 13. v.Ganesan on May 6, 2015 at 5:23 pm

  திரு இல.கணேசன் அவர்களே திரு ம.வெங்கடேசன் போன்றவர்களை பாஜக பயன்படுத்த நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்

 14. "Honest Man" on May 7, 2015 at 7:55 am

  ////////La.ganesan on April 28, 2015 at 8:52 pm
  Everybody should be vigilant as my brother Shri Venkatesan is. Congrats for venkatesan. LG ///////

  ///// v.Ganesan on May 6, 2015 at 5:23 pm
  திரு இல.கணேசன் அவர்களே திரு ம.வெங்கடேசன் போன்றவர்களை பாஜக பயன்படுத்த நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்//////

  இவர் போன்றோரை (இன்னும் தமிழ் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்) முறையாக பயன்படுத்திருந்தால் இந்நேரம் பிஜேபி தமிழ் நாட்டில் எப்படியோ வளர்ந்து இருக்குமே! இவர்கள் நல்ல மனம் இல்லாதவர்கள். எது எப்படியோ அந்த புண்ணியவான் இங்கே மறுமொழி எழுதியதன் மூலம் இந்த இணையதளத்தை பார்க்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர் என்று நன்கு தெரியவருகிறது. நமது கருத்துக்களை இவர்கள் ”மதிக்கிறார்களோ” இல்லையோ குறைந்த பட்சம் அவற்றை ”படிக்கிறார்களே” என்ற ஒரு ஆறுதல் கிடைக்கிறது. அது போதும்.

  (Edited and Published)

 15. S Dhanasekaran on May 8, 2015 at 10:23 am

  எப்படி இருந்த பா. ஜ.க. இப்போது எப்படி ஆகிவிட்டது.( கர்நாடகா , காஷ்மீர் )?

 16. ரங்கன் on May 21, 2015 at 8:31 pm

  ஆயுத எழுத்து என்ற விவாத நிகழ்ச்சி தற்போது ( 21.05.2015 இரவு 8.00 மணி ) தந்தி TV இல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அதில் திரு மோதியின் ஒரு வருட ஆட்சியில் ஊழல் குற்றச் சாட்டு இல்லை என்று அமித் ஷா சொல்லிவிட்டார் – அதற்கு திரு அருணன் அவர்களின் ஆரம்ப பதில். ” ஏங்க பல ஆயிரம் கோடி செலவு பண்ணி தேர்தல் ஜெயச்சவங்க அத ரெண்டு மடங்காக எடுக்காம விடுவாங்களா …..?” என ஆரம்பித்து வழக்கம் போல அதானி, அம்பானி என்று பேசினார். சகிக்கவில்லை – டிவி ஐ off செய்து விட்டேன்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*