தீர்ப்புகள் திருத்தப்படலாம்!

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஒரே நாளில் எல்லா விஷயங்களும் தலைகீழாக மாற வேண்டுமானால், உங்களுக்கு  ‘விபரீத ராஜயோகம்’ இருக்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தண்டனையும் அபராதமும் மேல்முறையீட்டில் ரத்தாகி இருப்பது விபரீத ராஜ யோகத்திற்கு உதாரணம்.

நீதிமன்றங்கள் புனிதமானவை; விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. நமது கட்டுரையின் நோக்கமும் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பதோ, இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலையை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ அல்ல. ஆனால், நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் பலவும் நம்மை மீறிய சக்தியால் நடத்தப்படுபவை தான் என்பதைப் புரிந்துகொள்ள அளிக்கப்பட்ட வாய்ப்பே இந்தத் தீர்ப்பு என்பது தான் கட்டுரையின் அடிநாதம்.

தீர்ப்புக்கு முன் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தனி நீதிபதி சி.ஆர்.குமாரசாமி குறித்து தமிழ்ப் பத்திரிகைகள் பல உணர்ச்சிப் பிரவாகமாக எழுதித் தீர்த்தன. இப்போது, ஜெயலலிதா மீதான தண்டனைகள் அனைத்தையும் ரத்து செய்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் தீர்ப்பு அளித்தவுடன் (2015 மே 11) சில பத்திரிகைகள் அஜீரணக் கோளாறால் அவதிப்படுகின்றன.

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
நீதிபதி மைக்கேல் டி குன்ஹா

அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு பரப்பண அக்ரஹாரா நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தபோது (2014 செப். 27), நீதித் துறையை சென்னியில் வைத்துக் கூத்தாடிய பலர், இன்று நீதித் துறையின் அடுத்தகட்டத் தீர்ப்பை ஏற்க முடியாமல் நெளிகின்றனர். பலர் நீதிபதி குமாரசாமியை மறைமுகமாக விமர்சிக்கின்றனர். இவர்கள் நீதித் துறையின் நடைமுறைகளை அறிந்துகொண்டுதான் இவ்வாறு செய்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் பல கோடி சம்பாதித்தார் என்பது தான் அவர் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டு. அத்துடன் தன்னுடன் உள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை பினாமியாகக் கொண்டு சொத்துக்களைக் குவித்தார் என்பதும் அடுத்த குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை முதன்முதலில் கூறியவர் அப்போதைய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி; திமுக தலைவர் கலாகார் அல்ல.

பிற்பாடு இந்தக் குற்றச்சாட்டு வழக்காக உருமாறியபோது, இதே கருணாநிதி தான் முதல்வராக இருந்தபோது, ஜெயலலிதாவை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அளவுக்கு மீறிய அதிகார துஷ்பிரயோகம் கொண்டு பல வழக்குகளை ஜோடித்தார். அந்த வழக்குகள் அனைத்தையும் சட்டத்தின் நடைமுறைப்படி ஜெயலலிதா வென்றுவிட்டார். சொத்துக் குவிப்பு என்ற ஒரே வழக்கு தான் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. அதில் தான் அவர் தண்டிக்கவும் பட்டார். ஆனால், மேல்முறையீட்டில் அவர் இப்போது அந்த வழக்கிலும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் உடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி குமாரசாமி
நீதிபதி சி.ஆர்.குமாரசாமி

இது தான் நீதிமன்ற பரிபாலனத்தில் உள்ள நடைமுறை.  ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே நமது நீதி பரிபாலனத்தின் ஆதார அம்சம். அதற்காகவே நீதித் துறையில் பல அடுக்குகளாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழமை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரானதாக மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அமைவது ஒன்றும் புதிதல்ல. அதற்காகத் தான் மேல்முறையீடு என்ற நடைமுறையே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையே ஜெயலலிதா தரப்பு தனக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இனி மேல்முறையீடு செய்ய வேண்டியது கர்நாடக அரசுத் தரப்பின் பொறுப்பு. இதுதான் நீதிமன்ற நடைமுறை. இந்த வழக்கை கர்நாடக அரசின் பொறுப்பாக மாற்றியதே திமுக தரப்பு தான்.

அதை விடுத்து, முந்தைய தீர்ப்பினை பட்டாசு வெடித்துக் கொண்டாடியவர்கள் இப்போது நீதித் துறையை கேவலமாக விமர்சிப்பது சற்றும் நியாயமல்ல. காலுக்கு எட்டிய வடை பறிபோன காகம் கரைவதுபோல திமுகவினர் இப்போது புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இப்போது அவர்கள் செய்ய வேண்டியது சட்டப்படியான நடவடிக்கைகளே ஒழிய, புலம்பல்கள் அல்ல. இவ்வழக்கில் ஒரு மனுதாரரான க.அன்பழகன் இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அல்லது, வழக்கின் ஆரம்பதாரரான சுப்பிரமணியன் சுவாமி  மேல் முறையீடு செய்யலாம். தீர்ப்புகள் திருத்தப்படலாம் என்பதே நீதிமன்ற நடைமுறை என்பதை அறிந்தவர்கள் நீதித் துறையை விமர்சிக்க மாட்டார்கள்.

sasikala, iLavarasi, suthakaran
சசிகலா, சுதாகரன், இளவரசி

மேல் முறையீட்டில் ஜெயலலிதாவுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வெளியாகலாம்; பாதகமும் ஆகலாம். முன்கூட்டிய யூகங்களுக்கு நீதித்துறை பங்குச்சந்தை அல்ல. இப்போதும் தனி நீதிபதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் போதிய சாட்சியங்களுடன் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றே குறிப்பிட்டிருக்கிறார். எனினும், அவரது கணக்கீடுகள் தவறு; புள்ளிவிவரங்களை கணக்கிடுவதில் அவர் பிழை செய்திருக்கிறார் என்றெல்லாம் இப்போது செய்திகள் வெளியாகின்றன. இதெல்லாம் மேல்முறையீட்டில் விவாதிக்க வேண்டிய விஷயங்களே. அதற்காக, ஜெயலலிதாவின் தண்டனை ரத்து என்ற தற்போதைய நிலையை விமர்சிக்க முடியாது.

தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் உச்சி குளிர்ந்து பாராட்டுவதும், பாதகமாகத் தீர்ப்பு வந்தால் குமுறிக் கொட்டுவதும் சாமானிய மனிதனின் குணங்கள். அரசியல்வாதிகள் எப்போதுமே சாமானியர்கள் என்று தங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஆனால், ஜெயலலிதா நிரபராதி என்று சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விடுவிக்கப்பட்டவுடன், நமது அரசியல் தலைவர்கள் பலர் பத்திரிகைகளில் பதித்த கருத்துகள், நாம் இன்னமும் பண்படாத நிலையிலேயே உள்ளோம் என்பதைத் தான் வெளிப்படுத்தின.

உண்மையில், நம் மனதை அரிக்கும் கேள்வி இதுவல்ல. முன்னாள் முதல்வரும், ஒரு கட்சியின் தலைவியுமான ஜெயலலிதாவால் தன் மீதான வழக்குகளில் பல ஆண்டுகள் எதிர்த்து வழக்காட முடிந்தது. தனது நிலைப்பாட்டை நிரூபித்து தன் மீதான வழக்குகளில் விடுபடவும் அவருக்கு வாய்ப்பும் வசதியும் இருந்தன. இதே வாய்ப்பும் வசதியும் சாமானியனுக்குக் கிடைக்குமா?

நீதி தேவதை
நீதி தேவதை

இதே நீதித் துறை சாமானியனுக்கும் இதேபோல கருணை காட்டுமா? அவ்வாறு நிகழுமானால், ஏற்கனவே அத்தகைய முன்னுதாரணங்கள் இருந்திருக்குமானால், இப்போதைய விமர்சனங்களை நீதித் துறை சந்திக்க நேர்ந்திருக்காது. ஆனால், இதைச் சொல்லவும் தனித் தகுதி தேவை. 2 ஜி ஊழலில் பல ஆயிரம் கோடி கொள்ளையடித்த கருணாநிதி கும்பலுக்கும், அவர்களுடன் கூட்டுக் கொள்ளையடித்த காங்கிரஸ் கும்பலுக்கும், அந்த காங்கிரஸ் கூட்டணி அரசை தோளில் சுமந்த இடதுசாரிகளுக்கும்,  ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை.

இப்போது, நீதித் துறையை மேலும் களங்கப்படுத்துவதாக, இந்தத் தீர்ப்பின் பின்புலத்தில் மத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் இருப்பதாக வதந்திகள் பரப்புவோரின் அறியாமையை எண்ணி வருத்தப்பட மட்டுமே முடிகிறது. கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு துலாக்கோலை கையில் ஏந்தி நிற்கும் நீதி தேவதையே, இவர்கள் தங்கள் அரசியலுக்காகத் தான் இவ்வாறு அறிந்தே முழங்குகிறார்கள். இவர்களை மன்னியும்!

விபரீத ராஜயோகத்தின் பலன் ஜெயலலிதாவுக்கு உடனடியாகக் கிடைக்க இருக்கிறது. இதே விபரீத ராஜயோகத்தை ஏற்கனவே மூன்று முறை நன்கு அனுபவித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இப்போதைக்கு அமைதி காக்க வேண்டும். ஏனென்றால், ஜாதகத்தில் இப்போது அவருக்குத் தான் போதாத காலம்.

இப்போது கிடைக்கும் வாய்ப்பை ஜெயலலிதா பயன்படுத்திக்கொண்டு, தனது முந்தைய தவறுகளையும் திருத்திக்கொண்டு ஆளட்டும். ஜனநாயகத்தில் மக்களே இறுதி தீர்ப்பாளர்கள். அவர்களுக்கு எல்லாமே தெரியும்.

.

1996 முதல் 2015 வரை… வழக்குகளின் பாதை…

  

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

1996 ஜூன் 14: 1991-96-ஆம் ஆண்டுவரை நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வராகப் பதவி வகித்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வருமானத்துக்குப் பொருத்தமில்லாமல் ரூ. 66,65,20,395 அளவுக்கு சொத்துக் குவித்ததாக சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.

  1996 ஜூன் 21: வழக்கை விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

  1996 ஜூன் 28: ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டது.

  1996 டிச. 7: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  1997 ஜூன் 4: சிறப்பு நீதிபதி பி.அன்பழகன் முன்பு 18 ஆயிரம் ஆவணங்கள், 88 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

  1997 ஏப். 30: வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

  1997 அக். 1: டான்சி,  கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஒட்டல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஜெயலலிதாவை விசாரிக்க அன்றைய தமிழக ஆளுநர் எம்.ஃபாத்திமா பீவி பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடர்ந்த 3 ரிட் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  2001 செப்.  21: டான்சி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது.

  2002 பிப். 21: ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.  அதைத் தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்றார். 

க.அன்பழகன்
க.அன்பழகன்

2003 நவ. 18: திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

  2004 பிப். 14:  பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கியது.

  2004 பிப். 19: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சிறப்பு அரசு வழக்குரைஞராக பி.வி.ஆச்சார்யாவை கர்நாடக அரசு நியமித்தது.

  2011 அக். 20, 21,  நவ. 21, 22 : பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதா, 1,339 கேள்விகளுக்கான தனது பதிலைப் பதிவு செய்தார்.

2012 அக். 12: சிறப்பு அரசு வழக்குரைஞர் பதவியிலிருந்து பி.வி.ஆச்சார்யா ராஜிநாமா செய்தார்.

2013 ஜனவரி: பி.வி.ஆச்சார்யாவின் ராஜிநாமா கடிதத்தை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது.

2013 பிப். 2: சிறப்பு அரசு வழக்குரைஞராக பவானி சிங்கை நியமித்து கர்நாடக அரசு ஆணை.

2013 ஆக. 26: சிறப்பு அரசு வழக்குரைஞராக பவானி சிங் நியமனம் செய்து பிறப்பித்த ஆணையை கர்நாடக அரசு திரும்பப் பெற்றது.

2013 செப். 30: பவானி சிங்கை நீக்கிய அரசாணையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2013 டிச. 12: திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட சிறப்பு  நீதிமன்றம் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள், ஆபரணங்களை சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவர உத்தரவிட்டது.

2014 பிப். 28: ஜெயலலிதாவுக்கு சொந்தமான வெள்ளிப் பொருள்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் கோரிய சிறப்பு அரசு வழக்குரைஞரின் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர்கள் பவனி சிங், பி.வி.ஆச்சார்யா
வழக்கறிஞர்கள் பவானி சிங், பி.வி.ஆச்சார்யா

2014 மார்ச் 14, 15: இறுதி வாதம் செய்ய நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததற்காக சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங்குக்கு சிறப்பு நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

2014 மார்ச் 18: சிறப்பு நீதிமன்ற ஆணையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பவானிசிங் மனுத் தாக்கல் செய்தார்.

2014 மார்ச் 21: பவானி சிங்கின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 2014 ஆக. 27: சிறப்பு நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன.

 2014 ஆக. 28: செப். 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. தீர்ப்பின்போது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவும் உத்தரவிட்டது.

 2014 செப். 16: தீர்ப்புத் தேதியை செப். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

  2014 செப். 27: சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுக் கால சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா ரூ. 10 கோடி அபராதம் விதித்தார்.  ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார்.

  2014 செப். 29: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல்.

  2014 செப். 30: நீதிபதி ரத்னகலா முன்பு ஜாமீன் மனு விசாரணை. அக். 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.

  2014 அக். 1: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவின் சிறப்பு அனுமதியின்பேரில் உயர் நீதிமன்ற நீதிபதி ரத்னகலா முன்பு மீண்டும் விசாரணை. வழக்கமான நீதிபதி முன்பு விசாரிக்க உத்தரவிட்டு, அக். 7-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

  2014 அக். 7: உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

  2014 அக். 9: ஜாமீன் மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

  2014 அக். 17: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எல்.தத்து தலைமையிலான அமர்வு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து உத்தரவிட்டது.

  2014 அக். 18: 21 நாள் சிறைவாசத்திலிருந்து ஜெயலலிதா விடுதலையானார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

  2014 டிச. 18: ஜெயலலிதாவின் ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு. சிறப்பு அமர்வு அமைத்து மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பளிக்க கர்நாடக உயர்  நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது.

  2015 ஜன. 1: நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையில் சிறப்பு நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு அமைத்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எச்.வகேலா உத்தரவு.

  2015 பிப். 26: சிறப்பு அரசு வழங்குரைஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலாளர்  க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

  2015 மார்ச் 9: அன்பழகன் மனுமீது ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

  2015 மார்ச் 11: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு.

  2015 ஏப். 1: ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல்.

  2015 ஏப். 15: பவானி சிங் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் அமர்வு வேறுபட்ட தீர்ப்பு. 3 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றம்.

  2015 ஏப். 27: பவானி சிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு. 

நீதி என்றும் நிலைக்கும்...
நீதி என்றும் நிலைக்கும்…

2015 ஏப். 27: அன்பழகன் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

  2015 ஏப். 28: அரசு சிறப்பு வழக்குரைஞராக பி.வி.ஆச்சார்யா நியமனம். அரசுத் தரப்பு எழுத்துப்பூர்வமான வாதத்தை ஆச்சார்யா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

  2015 மே 8: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11-ஆம் தேதி அன்று நீதிபதி குமாரசாமி வழங்குவார் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவிக்கை வெளியிட்டது.

  2015 மே 11: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கீழமை சிறப்பு  நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

 

36 Replies to “தீர்ப்புகள் திருத்தப்படலாம்!”

  1. மிக மிக நேர்மையான அலசல். நீங்கள் “கலாகார்” எனும் சொல்லை அதன் உண்மைப் பொருளான ‘கலைகளில் சிறந்தவன்’ என்பதாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இந்தி தெரியாத இவர்கள் அதையும் ஒரு வசைமொழி என்று சண்டைக்கு வந்தாலும் வருவார்கள். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் நீதித்துறையும் ஒன்று. இது நெடு நாள் வரையிலும், நாகரிகமுள்ளவர்கள் அரசியல் செய்த வரையிலும் நீதிபதிகளின் தீர்ப்புக்கு விமரிசனம் செய்வதோ, உள்நோக்கம் கற்பிப்பதோ இல்லாமல் இருந்தது. இப்போது வழக்கு என்னவென்றே தெரியாதவன் கூட, தனக்குப் பிடித்தவர் குறித்த வழக்கின் தீர்ப்பு என்றால் தாவிக் குதிப்பதும், எதிரிகளின் வழக்கு என்றால் தன மனம் போன போக்கில் விமரிசனம் செய்வதும் வழக்கமாகிவிட்டது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் தனித்தனியானவை. ஒன்றில் மற்றொன்று தலையிடுவது அல்லது எதிர்ப்பது என்பதை ஜனநாயக விரோதச் செயல் என்பதை இவர்களுக்கு யார் எடுத்துச் சொல்வது? அறியாமையின் விளைவாக மனம்போன போக்கில் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விமர்சிப்பவர்களை அவர்களுடைய தலைவர்கள் எச்சரிக்க வேண்டும் இது தவறு என்று. அத்தகைய தலைவர்களே இந்த இழி செயலில் ஈடுபடுகிறார்கள் எனும்போது நமது அரசியல் கீழ்த்தரமாகப் போய்விட்டது என்பதுதான் பொருள். அதிலும் பொறுப்புள்ள ஒரு தேசிய கட்சியின் தலைவர் அரசியல் ஆதாயத்துக்காகத் தன மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை வாரி இறைப்பதும், வன்மம் பாராட்டி வாயில் வந்ததைப் பேசுவதும் மிகவும் கண்டிக்கத் தக்கது. கடந்த 65 ஆண்டுகளாக இந்த நாட்டை வழி நடத்திய அத்தகைய தலைவரின் கட்சி வளர்த்துவிட்ட நாகரிகம் இதுதான் என்றால், இவர்களை என்னவென்று நினைக்க முடியும். “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்பதைப் போல அடித்துப் பேசிவிட்டால் பொய்யும் உண்மையாகாகிவிடும் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆனால், நல்ல காலம் நம் இந்திய சாதாரண குடிமக்கள் இந்த அரசியல் வாதிகளைப் போல் இல்லாமல் தனித்துவமும், நேர்மை சிந்தனைகளும், சட்டத்துக்கும், அரசியல் அமைப்புக்கும் மரியாதைக் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். மக்கள் இவர்களைப் பின் பற்றாத வரையிலும் இவர் போன்றவர்களின் கூக்குரல் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான். இந்த பாரத புண்ணிய பூமியில் தர்மம் என்றுமே தோற்றதில்லை. தோற்பது போல பல சோதனைகளைக் கொடுத்தாலும், இறுதி வெற்றி தர்மத்துக்கே. துரியோதனன்களும், துச்சாதனர்களும், சகுனிகளும், தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை தர்மத்துக்கு எதிராகப் புலம்பிக்கொண்டுதான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் வீழ்ச்சியும், அழிவும் இறைவன் ஏற்கனவே முடிவு செய்துவிட்ட தீர்ப்பு என்பதால், இவர்களின் வசை மொழிகளையும், கொடுமதிகளின் வெளிப்பாடுகளையும் செவி கொடுத்து கேட்க வேண்டிய அவசியமில்லை. மன சாட்சிதான் உண்மையான நீதிமன்றம் என்பது உண்மையானால் இவர்கள் தங்கள் மனச் சாட்சி எனும் நீதிமன்றத்தைக் கேட்கட்டும், தாங்கள் உத்தமர்கள் தானா என்று? கேட்க மாட்டார்கள்; காரணம் தங்களைப் பற்றி இவர்களுக்குத் தெரியாதா என்ன? இவர்களுக்கு எதிரான இறைவனின் தீர்ப்பு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அப்போது இவர்கள் இடும் ஊளைச் சத்தம் காதைக் கிழிக்கும். காலம் இதைத்தான் நமக்குக் காட்டுகிறது. ஜெய் ஹிந்த்!

  2. அண்மையில் முகனூலில் ஓர் அன்பர் வேறு விஷயத்துக்கு இதைப் பதிந்திருந்தார், இந்த விஷயத்தோடு எவ்வளவு ஒத்துப் போகிறது!

    முயலுக்கு மூணு கால்-கோர்ட் தீர்ப்பு!!

    முயல் கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட
    வீட்டுக்காரர்கள், சமையல்காரியை அழைத்து
    தோட்டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை
    பிடித்து சமைக்கச் சொன்னார்களாம்.

    தோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து
    அடித்து சமைக்க ஆரம்பித்தவளுக்கு அதை
    சுவைக்க ஆசை ஏற்பட்டதாம்.
    முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து
    சாப்பிட்டாளாம்.
    மிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம்.

    மூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று
    எங்கே? என்று கேட்டார்களாம் வீட்டுக்காரர்கள்.

    நான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த
    முயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது
    என்று வாதிட்டாளாம் அந்த பெண்.

    வழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம்.
    விசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு
    கால்கள்தான். இந்த பெண் எதையோ
    மறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று
    தீர்பளித்தாராம்.

    ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் அவளை திருடி
    என்றார்களாம்.
    தீர்ப்பை ஏற்றுகொள்ளாத அந்த பெண், வழக்கை
    ஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம்.

    அந்த பெண் என்ன பண்ணினாளோ? ஏது
    பண்ணினாளோ? என்ன நடந்துச்சோ? ஏது
    நடந்துச்சோ தெரியவில்லை?!

    விசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும்
    முயலுக்கு மூன்றே காலென்று தவறாக
    கணக்கிட்டு தீர்ப்பு சொன்னாராம்.

    தீர்ப்பைக் கேட்ட அந்த திருட்டுப் பெண்ணின்
    உறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள்
    வழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும்
    சிரிப்போடும் திமிரோடும் ஊர் மக்களைப்
    பார்த்தாளாம்.

    நாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம்
    முழுசாக மறுநாள்தான் மக்களுக்கு தெரிய
    வந்ததாம்..

    தீர்ப்பை சொன்ன நாட்டாமை, “முயலுக்கு
    முன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம்
    இரண்டுகால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள்.
    எனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான்.
    எனவே, அந்த பெண் நிரபராதி” என்று தீர்ப்பு
    சொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம்.

    இப்ப நீங்க சொல்லுங்க!
    முயலுக்கு
    மூன்று கால்களா?
    நான்கு கால்களா?
    அந்த பெண் நிரபராதியா? குற்றவாளியா?
    அந்த பெண்ணுக்கு தண்டனை தர வேண்டுமா?
    வேண்டாமா?

  3. ஊழல் விவகாரத்தை ஜெயலலிதா vs கருணா நிதி என்று பார்ப்பது தவறு

    ஜெயலலிதா vs உண்மை, நியாயம், தர்மம் என்றும்
    கருணா நிதி Vs உண்மை, நியாயம், தர்மம் என்றும்

    பார்ப்பதுதான் சரி, முறை, தர்மம்.

    இந்தக் கட்டுரை உழலை
    ஜெயலலிதா vs உண்மை, நியாயம், தர்மம் என்று பார்க்கவில்லை.

  4. இந்தத் தீர்ப்பை கண்டபடி விமரிசிக்கும் கருணாநிதி, இதே பாணியில் ‘தினகரன் நாளிதழ் எரிப்பு’ வழக்கில் பலியானவர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்து, அவருடைய மகம் அழகிரி விடுவிக்கப் பட்டபோது, இதே கேள்விகளை எழுப்பினார? அப்போது அவர் மன நிம்மதியுடன் தூங்கினாரா? இன்று வரை அந்த ஊழியர்கள் குடும்பங்களுக்கு என்ன உதவி செய்தனர்?

  5. Sirs,
    If there is any obvious arithmetical mistakes, the Judge himself, suo moto, correct the figures and give his verdict. Or the other course is for the prosecuting authority can appeal to the SC for rectification of mistakes. The personal attacks on the hon’ble judge by the opposition party leaders are in bad taste , which clearly indicates that the original prosecution itslef has ulterior motives. In this term as CM, JJ has done lot of good things for the poor and for the economic development of the State besides establishing the rights of TN on cauvery, mullaiperiyar issues. She is a good administrator with vision. We will have to wait and see what happens next.
    N.R.Ranganathan.

  6. தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிகளில் சொத்து வந்தது எப்படி என்பது ஊரறிந்த ரகசியம். என்னதான் கணக்கு போட்டாலும் ஒரு ரூபாய் திருடினாலும் குற்றம் தான் ஒரு கோடி திருடினாலும் குற்றம் தான்.

  7. “ஆனால், இதைச் சொல்லவும் தனித் தகுதி தேவை. 2 ஜி ஊழலில் பல ஆயிரம் கோடி கொள்ளையடித்த கருணாநிதி கும்பலுக்கும், அவர்களுடன் கூட்டுக் கொள்ளையடித்த காங்கிரஸ் கும்பலுக்கும், அந்த காங்கிரஸ் கூட்டணி அரசை தோளில் சுமந்த இடதுசாரிகளுக்கும், ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை.”
    இது தான் உண்மை. இந்துக்களை திருடன் என கூறியவர், இரண்டு லட்சம் கொடிகள் ஊழல் புரிந்தவர், தொலைபேசி துறை இணைப்பை (320) அவர் பேரன்கள் தங்கள் வீட்டுக்குள் போட்டுக் கொண்டு ஒரு பைசா செலவு இன்றி இரண்டு ஆண்டுகள் உபயோகித்தார்கள், அவர் மகள் கனிமொழி தாயார் டாட்டா நிறுவனத்திடமிருந்து 300 கோடி மதிப்புள்ள வீடு பெற்றார், மகன் அழகிரி சொல்லவே வேண்டாம்………இவர்கள் ஊழல் பற்றி பேச உரிமை அற்றவர்கள்.
    செல்வி ஜெயலலிதா வரட்டும். இன்னும் ஒரு ஆண்டில் 200 கும்பாபிஷேகம் காத்து இருக்கிறது. அவை முடிக்க பட வேண்டும். இந்துக்களை எதிர்ப்பவர்கள், மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சிக்கு வர முடியாது என வரலாறு தெரியப் படுத்த வேண்டும்.

  8. இந்த சொத்துக்குவிப்பு வழக்கு இவ்வளவு இழிநிலை எய்தியதற்கு , அரசியல் வாதிகளின் தேவை இல்லாத குறுக்கீடு மற்றும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே காரணம் ஆகும். சுப்பிரமணிய சாமி தொடுத்த வழக்கு அப்படியே தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தால், ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது. திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றார் பெருந்தலைவர் காமராஜர்.

    2. லண்டன் ஓட்டல் வழக்கு என்று ஒரு பொய்யான வழக்கை தாக்கல் செய்து , அந்த வழக்கை சொத்துக் குவிப்புடன் சேர்த்து , விசாரிப்பதா, இல்லை தனியாக விசாரிப்பதா என்று மண்டையை உடைத்துக்கொண்டு, பொது மக்களின் வரிப்பணத்தையும் பாழ் படுத்தியது முந்திய திமுக அரசுதான். கடைசியில் அந்த லண்டன் ஓட்டல் வழக்கு வாயைப் பிளந்துவிட்டது. இவர்களே மானம் கெட்டுப்போய், வாபஸ் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இந்த லண்டன் ஓட்டல் பொய் வழக்கால் சுமார் 7-வருடம் தாமதம் ஆனதுதான் கண்ட பலன். நீதிமன்றத்தின் நேரமும், வழக்கறிஞர்களின் நேரமும் பாழானதும் ஒரு கூடுதல் நிகழ்வு.

    3. ஜெயா மேல் சுமார் 15-க்கும் மேற்பட்ட வழக்குகளை திணித்த திமுக அரசு ,எல்லா வழக்குகளிலும் தோற்றது. ஒரே குட்டையில் ஊறிய இன்னொரு மட்டை , விஞ்ஞான பூர்வ ஊழல் கட்சி – டூ ஜி , கலைஞர் டி வி , இன்னமும் நீரா ராடியா டேப்பு, ஜாபர் சேட் டேப்பு, ஏர்செல் மாக்சிஸ் வழக்கு, பி எஸ் என் எல் ஒளி மற்றும் ஒலி இணைப்புக்களை திருடிய வழக்கு என்று பல்வேறு கூடுதல் வழக்குகளை இப்போது சந்தித்து திக்குமுக்காடி அமிழ்ந்துவருகிறது.

    4. ஜெயா வழக்கில் பக்கம் 852- இல் கணக்கில் தப்பு என்று கூச்சல் இட்டுவருகிறது திமுக. பாவம் – படித்துப்பார்ப்பதில் கூட கஞ்சத்தனம் போலும், முழு தீர்ப்பையும் படிக்காமல் , அரைகுறையாக படித்துவிட்டு உளறுகிறார்கள். கூட்டுச்சதி, பினாமி பெயரில் ஒச்த்துக்களை குவித்தது ஆகிய இரு குற்றசாட்டுக்களுமே நிரூபிக்கப்படவில்லை. மேலும் முதல் குற்றம் சுமத்தப்பட்ட ஜெயலலிதாவிடம் இருந்து மற்ற மூன்று பேருக்கும் எவ்வித பண மாற்றமும் நடந்ததற்கு சாட்சியம் எதுவும் இல்லை . மேலும் பினாமி என்ற வரையறைக்குள் யாரும் வரவில்லை என்பதே இந்த வழக்கில் சட்ட நிலை.

    5. பினாமி யாரும் இல்லை என்பதால், ஜெயாவின் பெயரில் என்ன சொத்து இருக்கிறது, முதல்வராக இருந்த வழக்குக் ஏதாவது புதிய சொத்து வாங்கி இருக்கிறாரா , அப்படி வாங்கி இருந்தால், அந்த சொத்து வாங்க கணக்கில் போதிய பணம் இருந்ததா என்பதை மட்டும் பார்த்தாலே போதும். நாலு அக்யூஸ்டு கணக்கையும் சேர்த்து பார்க்கவேண்டிய தேவையே இல்லை. இது ஒரு தேவை இல்லாத insignificant part . இந்த insignificant part – இல் பக்கம் 852- இல் கூட்டலில் 13.5 கோடி தவறு என்று சொல்லப்படுகிறது. ஆம் அந்த தவறு ஜெயலலிதாவுக்கு சாதகம் செய்துவிட்டது என்று வைத்துக்கொண்டாலும், எதிர்க்கட்சிகள் இன்னொரு விஷயத்தை மூடி மறைக்கின்றன. 876, 910,913 ஆகிய பக்கங்களில் ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள கொடநாடு எஸ்டேட் வாருமானம் 7 கோடி, ஜெயா புப்ளிகேஷன் டெபாசிட் அதாவது வாசகர் சந்தா 9.5 கோடி, நமது எம் ஜி ஆர் வருமானம் 4 கோடி ஆக மொத்தம் 20.5 கோடி ஜெயாவுக்கு வந்துள்ள வருமானம் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு , கணக்கு போடும் போது, விடுபட்டுள்ளது. மொத்தத்தில், கனம் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பில் உள்ள அட்டவணை பிழைகளை சரி செய்தால், கூடுதல் சொத்து இல்லை என்பதும், வருமானமே சொத்தைவிட அதிகமாக உள்ளது என்பதும் தெளிவாகிறது.

    6. மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை மட்டுமே நீதிபதி கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார். தனியார் வங்கிகள் மற்றும் தனியாரிடம் வாங்கிய கடன்களை அவர் கணக்கில் ஏற்க மறுத்துவிட்டார். உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தால், ஜெயலலிதாவுக்கு சார்பாகவே தீர்ப்பு வருவதுடன், வருமானம் இன்னமும் கூடுதல் ஆகி , சொத்து குறைவுதான் என்பது மேலும் உறுதியாகும். கீழே உள்ள லிங்க் பார்க்கவும்.

    https://iloapp.spicknewstamil.in/blog/news?Home&post=14

    7. திமுக , அதிமுகவை விட பெரிய ஊழல் என்றே தமிழகமக்களுக்கு நன்கு மனதில் பதிந்துவிட்டதால், அது உண்மை என்பதாலும் , திமுக என்ற அரசியல் கட்சி இருக்கும்வரை தொடர்ந்து அதிமுகவுக்கு மட்டுமே வாக்களிக்கும் போக்கு தமிழக வாக்காளர் மனதில் காணப்படுகிறது. திமுக முற்றிலும் காணாமல் போனால்தான் நல்ல திருப்பம் ஏற்படும். அதுவரை அதிமுகவுக்கே சாதகமான காற்று வீசும்.

    தமிழக வாக்காளர்களின் தேர்வுக்கு மிக முக்கிய காரணம் திமுக அளவுக்கு அதிமுக துரோகம் செய்யவில்லை. காவிரியில் 1968-லேயே புதிய அணைக்கட்டு கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி கொடுத்தது, கச்ச தீவை மத்திய அரசு தாரை வார்த்தபோது, பதவியை ராஜினாமா செய்யாமல் , சுகமாக சில்லறையை எண்ணியது, சமீபத்தில் சிவிலியன் தமிழர் தலையில் சோனியாவுடன் சேர்ந்து கொத்துஎரிகுண்டுகளை வீசிக் கொன்றபோது, கொலைகாரர்களை எதிர்த்து வாய் திறக்காமல் வஞ்சகம் செய்தது என்று துரோகப்பட்டியல் அதிகம். எனவே திமுகவுக்கு இனி வாய்ப்பு எப்போதும் கிடையாது.

  9. தாங்கள் கூறுவது நியாயமான உண்மை.ஒப்புக் கொள்கின்றேன்.ஆனால் 100 கோடி அபராதமுமு் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பெற்ற ஒரு தீா்ப்பு எப்படி நியாயப்படுத்தப்பட்டது.? அதுபோல் ரத்து என்பது எப்படி நியாயப்படுத்தப்பட்டது ? குன்காவுக்கும் குமாரசாமிக்கும் ஏன் இவ்வளவு பொிய ………….. வேறுபாடு எப்படி ? புாியவிலிலை.தங்களுக்கு புாிகின்றதா ? சட்டம் என்பது ஒரு வலை.மிகச்சிறய மீன்கள் சிக்குவதில்லை.மிகப்பொிய மீன்கள் வலைகளை அறுத்துக் கொண்டு தப்பி வீடுகின்றது.பாவம் இரண்டும் கெட்டான் ஆன நடுத்தர மீன்கள் அறுத்துக் கொண்டு தப்பவும் இயலாது.வலையில் உள்ள ஓட்டைக்குள் புகுந்தும் வெளியே வர இயலாது. நமது நீதிமன்றங்களின் யோக்கியதை அவ்வளவுதான். நீதிமன்றமும் சத்வ ராஜ தாம்ச குணங்களால்தானே நிறைந்திருக்கின்றது. ஏற்றுக் கொள்வோம்.

  10. மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வா் வலிமையான பொிய மீன்.வலையை அறுத்துக் கொண்டு தப்பிவிட்டது என்று சொல்லலாமா ?
    அண்ணல் கருணாநிதியும் சக்காாியா கமிஷன் சுமத்திய குற்றச்சாட்டுகளிலிருந்து அரசியல் காரணமாக -திமுக- காங்கிரஸ் தோ்தல் கூட்டணி காரணமாக விடுவிக்கப்பட்டாா் என்பதை கருத்தில் கொள்ளும் போது கருணாநிதி பொிய மீனாக இருந்து சட்டம் என்ற வலையை அறுத்துக் கொண்டு தப்பிவிட்டாா் என்பதை நாம் மறக்க முடியாது.

  11. தீர்ப்பு தீர்ப்புதான் சரியோ தவறோ ஏற்றுகொள்வதுதான் சரி தெரியாமல் செய்ததவறு தெரிந்து செய்த தவறு என்று உள்ளது ஜெயா செய்தது ஊழல் சந்தேகம் இல்லை ஆனால் சர்க்காரியா புகழ் பெற்றவர்போல் ஊழல் செய்திடும் திறமை இல்லை உச்ச நீதிமன்றம் முதலில் முடிவு செய்யவேண்டியது ஜெயா முதல்வராக பதவி ஏற்பது பற்றி. நீதி என்றுமே சாகாது

  12. முகநூல், ட்விட்டர், இன்னும் பிற இணைய தளங்களிலும், பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களின் வாசகர் கருத்து மற்றும் மறுமொழி பகுதிகளில் நம் வாக்காளப்பெருமக்கள் பொழிந்து தள்ளி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் போட்டிருக்கும் கணக்கு வழக்கு அட்டவனையை பார்த்தால், இவர்கள் எல்லோருமே பட்டயக்கணக்கர்களாக இருப்பார்களோ என்ற எண்ணமே மேலிடுகிறது.

    ஒரு சாதாரண வழக்கை எவ்வளவு ஊதிப்பெரிதாக்க முடியுமோ, அந்த அளவுக்கு இந்த வழக்கில் அரசியல் தீயசக்திகள் புகுந்து விளையாடின. இந்த வழக்கில் நடந்த விசாரணை என்பதே ஒரு மோசடியான அரசியல் சாயம் பூசப்பட்டு விட்டது.

    1. வழக்கு தமிழகத்தில் நடக்க கூடாது . வெளிமாநிலத்தில் தான் நடத்தப்படவேண்டும் என்று ஒரு கட்சி , வழக்கை வெளி மாநிலத்துக்கு மாற்றியது. காவிரி, மேகதாது என்று இருமாநிலங்களுக்கும் இடையே ஏராளம் பிரச்சினைகளும் உரசல்களும் இருக்கும் போது, இந்த வழக்கை பாண்டிச்சேரிக்காவது மாற்றியிருக்கலாம். அதிலேயே இந்த வழக்கு செத்துப்போய்விட்டது.

    2. யார் அரசு வழக்கறிஞராக இருக்கவேண்டும் என்று , வழக்கு நடந்துவரும் மாநிலமான கர்நாடக அரசுதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து திமுக காவடி எடுத்து, ஒவ்வொரு நீதிமன்ற படிக்கட்டுக்களாக ஏறி ,இறங்கி , யார் வாதடவேண்டும், யார் வாதாடக்கூடாது என்று தலையிட்டு , கிரிமினல் சட்டத்தையே ஒரு கேலிக்கூத்தாக்கினார்கள். இந்த பவானி சிங் நியமனம் என்ற பெயரிலே ஒரு ரவுண்டு போய்வந்தார்கள்.

    3. துக்ளக் ஆசிரியர் திரு சோ ராமசாமி அவர்கள் கருத்துப்படி, ” தீர்ப்பின் விவரங்களை சற்று பார்க்கிறபோது, கூட்டல் கணக்கில் தவறு இருப்பது தெரிகிறது. ஆனால் அது தீர்ப்பையே பாதிக்கிற அளவில் இருக்கிறதா என்று கேட்டால் , இல்லை என்றுதான் சொல்லவேண்டும் ” ஆனால் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்- விசாரணை கோர்ட் ஏற்கத்தவறிய பல சாட்சியங்களையும், ஆதாரங்களையும் உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது. செலவினங்களை பற்றிய மதிப்பீடுகள் விசாரணை நீதிமன்றத்தால் அதிகமாக சொல்லப்பட்டிருப்பதாக கருதி, அப்பீலில் குறைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக கூட்டுசதி, ஜெயலலிதாவிடம் இருந்து பணம் மற்றவர்கள் கைக்குப் போய்சேர்ந்தது என்பது முற்றிலும் நிரூபிக்கப்படவில்லை. இவை எல்லாம் ஹைகோர்ட் தீர்ப்பில் அடங்கி உள்ளன.இவற்றின் அடிப்படையிலும் தான் ஹைகோர்ட் ஜெ-வை விடுதலை செய்துள்ளது.

    4. ஜே- சிறைக்கு செல்லும் சூழல் நேரிட்டதால், அந்த வெற்றிடத்தில் தாங்கள் உள்ளே நுழைந்துவிடலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருந்த பல முதலமைச்சர் கனவாளர்கள் , கனவு கலைந்து, கணக்குகள் தவறாகி , கவலையில் ஆழ்ந்து செய்வது அறியாது முழிக்கின்றனர்.

    5. தமிழ் நாட்டில் கழகங்கள் தலையெடுத்த பிறகு , 1972-லே ஆரம்பித்த சாராயம் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது. எனவே கழகங்களின் ஆட்சியில் இனிமேல் நல்லது எதுவும் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இருக்கட்டும் என்று அனைவரும் வேண்டிக்கொள்கிறார்கள்.

    6. நீதித்துறையையே அச்சுறுத்தும் அளவுக்கு தமிழகத்தின் எதிர்க்கட்சிகளில் சில செய்துவந்த தொடர் பொய் பிரச்சாரம்- அதாவது ஜெயலலிதாவுக்கு எதிராக மட்டுமே தீர்ப்பு வந்தால் தான் அது நேர்மையான தீர்ப்பு என்பது போல , மீடியாவை வைத்து திசை திருப்ப நினைத்தவர்கள் நினைப்பில் மண் விழுந்துள்ளது. நீதி தேவதை திரு குமாரசாமி வடிவில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்திருக்கிறாள். அதில் ஒன்றுதான் நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் , அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்படும் வழக்குகளில் கவனம் அதிகம் தேவைப்படுகிறது என்ற அவரது வாசகம் தங்கத் தகட்டில் பதிக்கப்படவேண்டியது.

    7. இலங்கை போரின் கடைசி ஒரு மாதத்தில், முன்னாள் நிதி அமைச்சர் திரு ப . சிதம்பரம் அவர்கள் பிரபாகரனையும், எஞ்சிய விடுதலைபுலிகளையும் , முழு அழிவு ஏற்படாதவாறு , ஒரு சமாதான திட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் என்பதும் , அதனை நெடுமாறனும், வைகோ அவர்களும் , ஈழத்தில் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியாமல் , கெடுத்து குட்டி சுவராக்கிவிட்டனர் என்பதும், அதனாலேயே சிவிலியன் தமிழர்களுக்கும் பேரழிவு ஏற்பட்டது என்றும், திரு சிதம்பரம் அவர்களின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் , இந்த பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும் என்றும் இப்போது பல விஷயங்கள் வெளிவர துவங்கி உள்ளன. திரு ப சிதம்பரம் அவர்களின் முயற்சி வெற்றி பெறாமல் போனாலும் கூட, தமிழினத்தின் பேரழிவை தடுக்க தன்னால் இயன்ற ஒரு முயற்சியை செய்த அவரை , அனைத்து தமிழ் இனமும் நிச்சயம் நன்றியுடன் பாராட்டும்.

    8. தமிழகத்தில் இந்தமுறை ஒரே ஒரு நல்ல காரியம் நடக்கப்போகிறது. வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும், ஒரே ஒரு இடத்தில் கூட இந்திரா காங்கிரஸ் வெற்றிபெறாது என்பதுடன் , இம்முறை இந்திரா காங்கிரஸ் இல்லாத சட்டசபை தான் அமையும். இந்திரா காங்கிரசுடன் யார் கூட்டு சேர்ந்தாலும், அந்த கட்சிகளுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

  13. தமிழகத்தில் தேசியம் பேசும் ஒரு பழைய கட்சி; நாட்டுக்காக சர்வபரித்தியாகம் செய்த ஏராளமான தியாகசீலர்கள் இருந்த கட்சி; இன்று!!! தான் என்ன பேசுகிறோம் என்பதையே புரிந்து கொள்ளாமல், மனத்தில் வியாபித்திருக்கும் வன்மம் ஒன்றை மட்டுமே, “அவரைப் பொறுத்த மட்டும்” அழுத்தம் திறுத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் தலைவரின்அவலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தலைகீழாக நின்றும், ஆயிரம் குட்டிக்கரணங்கள் போட்டாலும் தமிழகத்தில் ஒரு இடம், ஒரேயொரு இடம்கூட சட்டமன்றத்தில் பிடிக்க முடியாது என்பதை அறியாமல் கனவுலகில் சஞ்சரிக்கும் பேதமையை என்ன சொல்ல? போட்டி, பொறாமை, பதவி ஆசை இத்தனையும் இருப்பது குற்றமல்ல; ஆனால் அதற்காகத் தன்னை மிஞ்சிய புத்திசாலி எவனுமில்லை எனும் ஆணவத்தை வெளிப்படுத்தும் நேரத்தில், அந்த பீடத்தில் அமர்ந்திருந்த உண்மையான தியாகசீலர்களையும், அவர்கள் கடைப்பிடித்த நேர்மையையும் ஒருகணம் மட்டும் நினைத்துப் பார்த்தால் போதும், வன்மமும் விஷமும் வெளிப்படாது. நாகரிகம் மட்டுமே வெளிப்படும். சிந்திக்க நேரமேது; மனத்தை அப்படி கெடுத்து வைத்திருக்கிறது பதவி மோகம். ஜெய் ஹிந்த்!

  14. அடியவனின் கதையில் ஒரு மாற்றம்(நான் அறிந்தவாறு) முதலில் தீர்ப்பளித்தவர் “அந்த முயலுக்கு முன்புறம் இரண்டு கால்கள், பின்புறம் இரண்டு கால்கள்; ஆகமொத்தம் ஐந்து கால்கள். அதில் இரண்டு கால்களை வேலைக்காரி சாப்பிட்டுவிட்டாள் “என்று கூறினார். இதில் எங்கே எது நடக்கவில்லையோ? ஆண்டவனுக்கும் அடியவர்களுகுமே வெளிச்சம்.

  15. ஜெ -வுக்காக ராஜினாமா செய்துள்ள திரு வெற்றிவேலின் ஆர் கே நகர் சட்டசபை தொகுதியில் ,

    1. அதிமுக சார்பில் வேறு யாராவது கூட்டணி இன்றி போட்டியிட்டால் ஆதரவு எப்படி இருக்கும்,

    2. ஜே- வே கூட்டணி இன்றி போட்டியிட்டால் ஆதரவு எப்படி இருக்கும்,

    3. ஜே- பாஜக கூட்டணியுடன் போட்டியிட்டால் ஆதரவு எப்படி இருக்கும்

    என்று விதம் விதமாக கருத்துக்கணிப்பு நடத்தி spicknews – செய்தி நிறுவனம் முடிவுகளை கீழே கொடுத்துள்ள இணைப்பில் வெளியிட்டுள்ளது.

    https://iloapp.spicknewstamil.in/blog/news?Home&post=22

    இதில் முக்கியம் என்னவென்றால், திமுகவுக்கு மூன்றாவது இடம் என்பதுதான். பாஜக அணி இரண்டாவது இடம் பெறும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஜே- தனித்துப்போட்டியிட்டால், 92 % ஆதரவும், பாஜகவுடன் போட்டியிட்டால் 97 % ஆதரவும் கிடைக்கும்.

  16. ஊழல் வழக்குகள் பல மாநிலங்களில் நடந்துள்ளன. பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம்,பீகார், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகம் ஆகிய பல மாநில முதல்வர்களும் ஊழல் வழக்கு, சொத்துக்குவிப்பு என்று நீதிமன்றங்களில் விசாரணையை சந்தித்து தண்டனையும் பெற்றுள்ளனர். சிலர் மீது விசாரணை இன்னமும் நடந்துவருகிறது. இந்த வழக்குகளை அந்த அந்த மாநில காவல்துறையினர் தான் நடத்தி வருகின்றனர். ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் , அந்த அரசியல்வாதிகளின் எதிர்க்கட்சிகள் தலையிடுவதில்லை.

    2. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் , அதிமுக பொது செயலாளருக்கு எதிரான வழக்கில் , தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக தமிழக சட்ட சபையில் முன்பு இருந்த திமுக, தேவை இல்லாமல் தலையிட்டு, இந்த வழக்கினை வெளி மாநிலத்துக்கு மாற்றி, யார் வழக்கறிஞராக இருந்து வழக்கை நடத்தவேண்டும் என்பது வரை குறுக்கிட்டு, இந்த வழக்கு ஒரு பொய்வழக்கு என்பதையும், அரசியல் எதிரிகளை பழிவாங்கி , அழித்தொழிக்க , திட்டமிட்டு செய்த சதி என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

    3. திமுகவினரின் வரலாறோ சென்னை மாநகராட்சி மாஸ்டர் ரோல் ஊழல், என்று துவங்கி, பூச்சி மருந்து, கோதுமை பேரம்,வீராணம், டூ ஜி , பி எஸ் என் எல் , கலைஞர் டி வி ,ஏர்செல் மாக்சிஸ் என்று களம் பல கண்டு வளம் பல பெற்று புதிய அவதாரங்கள் எடுத்து , ஊழலில் பி எச் டி வாங்கிய முத்திரை பதிக்கப்பட்டுவிட்டது. குடும்ப அரசியல் அந்த கட்சியை அழித்துவிட்டது என்பதே உண்மை.

    4. ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல, ஜே- மீது திமுகவினர் போட்ட பொய்வழக்குகள் எல்லாமே நிரூபிக்கப்படமுடியாமலே வாய் பிளந்தன. கடைசியில் இப்போது சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி மூச்சை விட்டது. அதிமுகவினர் செய்யும் ஊழலும், திமுகவினர் செய்த ஊழலும் தமிழனால் தராசில் நிறுக்கப்பட்டு, திமுக ஊழலே பெரிய ஊழல் என்று ஐ எஸ் ஐ சான்று பெற்றுவிட்டது. தமிழன் வேறு வழி இல்லாமல், குறைந்த ஊழல் என்று சொல்லி, அதிமுகவின் பின்னே திரியும் நிலையே ஏற்பட்டு உள்ளது.

    5. திமுக தமிழக அரசியல் வரைபடத்தில் இருந்து முற்றிலும் துடைத்து எறியப்பட்ட பின்னரே , புதிய மாற்று தமிழகத்தில் விரைவில் உருவாகும். திராவிட இயக்கங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றார் காமராஜர். அது காலத்தால் அழிக்க முடியாத உண்மை என்பது மேலும் மேலும் நிரூபணம் ஆகிவருகிறது. திமுகவுக்கு அதிமுக பரவாயில்லை என்ற மனநிலை தமிழகம் முழுவதும் உருவானதற்கும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே , இதற்கு முன்னர் வேறு எந்த ஒரு அரசியல் கட்சியும் சாதிக்காத அளவில் 37 /39 என்ற பிரம்மாண்டமான பாராளுமன்ற வெற்றியை எம் ஜி ஆர் கட்சி பெற்றதற்கும், நாடு முழுவதும் திமுகவினர் மேலும், அவர்கள் குடும்ப அரசியல் மீதும் , அவர்கள் ஊழல்கள் மீதும் மக்களுக்கு தெளிவான ஒரு புரிதல் ஏற்பட்டுவிட்டது என்பதே காரணம். இனி வரும் தேர்தல்களில் ஊழல் அரசியல் வாதிகளின் செல்வாக்கு சிறிது சிறிதாக குறையும் என்பதை வருங்காலம் நிரூபிக்கும்.

    6. பல தொலைகாட்சி நிறுவனங்கள் தங்கள் கைவசம் இருப்பதால், அதனை வைத்து எதிர்க்கட்சிகளை அழித்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்ட திமு க வினருக்கு, 2001, 2011, 2014 ஆகிய மூன்று தேர்தல்களிலும் படுதோல்வியை பரிசாக கொடுத்து, ஊடக செல்வாக்கு தேர்தலில் உதவாது என்பதை தமிழக வாக்காளர்கள் பலமுறை திமுகவுக்கு பாடம் கற்பித்து விட்டனர்.

    7. இந்து மதத்தை மட்டும் கேலி மற்றும் கிண்டல் செய்யும் திக போன்ற தரக்குறைவான கம்பெனிகளுடன் சேர்ந்துதான், காமராஜர் 1967-லே தோற்றுப்போனார். காமராஜரின் அரசியல் வாழ்வை முடித்து, கூட இருந்தே குழிபறித்தது, 1967-தேர்தலில் ஈ வே ரா-வின் பிரச்சாரம் தான். அதே போல, திமுகவினர், குடும்ப அரசியல், திக என்ற நச்சு தொடர்பு ஆகியவற்றை விட்டு ஒழித்தால் தான் இனி எதிர்காலம். வாரிசு அரசியல் மேலும் மேலும் தலைதூக்கினால் , வரும் தேர்தல்களில் ஜாமீன் தொகை கூட எந்த தொகுதியிலும் கிடைக்காது. ஏற்கனவே, காவிரி, கச்ச தீவு, இலங்கை தமிழர் படுகொலை என்று திமுகவினரின் துரோக வரலாறு மக்களுக்கு அப்பட்டமாக தெரிந்துவிட்டது. இனியும் சீர்திருந்தாவிட்டால் , திமுக இனி இருக்காது.

  17. //இந்து மதத்தை மட்டும் கேலி மற்றும் கிண்டல் செய்யும் திக போன்ற தரக்குறைவான கம்பெனிகளுடன் சேர்ந்துதான், காமராஜர் 1967-லே தோற்றுப்போனார். காமராஜரின் அரசியல் வாழ்வை முடித்து, கூட இருந்தே குழிபறித்தது, 1967-தேர்தலில் ஈ வே ரா-வின் பிரச்சாரம் தான்// ……..

    உண்மை அத்விகா அவர்களே. அந்த சூழ்நிலையிலும் தஞ்சையில் போட்டியிட்ட பரிசுத்த நாடார் அவர்களும், கும்பகோணத்தில் போட்டியிட்ட காசிராமனின் தந்தை நாராயண ஐயரும், தங்களுக்காக ஈ.வே.ரா. பிரசாரம் செய்ய வேண்டாம் என்று மறுத்து விட்டனர். அப்படியும் தஞ்சைக்கு பிரசாரத்துக்கு வந்தபோது, பரிசுத்த நாடார் அவர்கள் ஊரில் இல்லாமல் திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று விட்டார்.

  18. தமிழக இந்திரா காங்கிரஸ் என்பது நம் பொதுமக்களால் காமராஜருக்கு துரோகம் செய்த துரோகிகளின் சேர்க்கையாக மட்டுமே பார்க்கப்படும் இந்த காலக்கட்டத்தில், அந்த காங்கிரஸ் என்ற சேற்றில் முளைத்த செந்தாமரையாக , ஒரு இந்திரா காங்கிரஸ் எம் பி இன்றைய குமுதம் ரிப்போர்ட்டரில் தனது உணர்ச்சிகளை கொட்டி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். திரு சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் கருத்தில் இருந்து என்ன தெரிகிறது எனில் ,தமிழக இந்திரா காங்கிரசில் கூட சில நியாயவான்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் ஆகும். இனி அவரது கருத்தின் சுருக்கத்தைக் காண்போம்.:-
    1. ஜெயலலிதா வழக்கின் மூலம் , மாநில சுயாட்சியை முதுமக்கள் தாழியில் வைத்துப் புதைத்து விட்டோம்.
    2. மாநில சுயாட்சிக்காக இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களும் போராடி வருகின்றன.
    3. இந்தியாவில் தேசீயக் கட்சி ஆளும் மாநிலங்கள் ஆனாலும் சரி, மாநிலக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆனாலும் சரி , அந்த அந்த மாநிலங்களின் முதல்வர்கள் அல்லது முன்னாள் முதல்வர்கள் மீதான வழக்கை , வேறு வெளிமாநிலங்களுக்கு மாற்றுங்கள் என்று யாருமே கேட்டது கிடையாது. அந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் மாநில சுயாட்சியை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை.
    4. லல்லூபிரசாத் யாதவ், எடியூரப்பா,அசோக்தவான் போன்றவர்கள் மீதான வழக்குகள் இதற்கு உதாரணம்.
    ( லல்லு முதல்வராக இருந்தபோதே அவருக்கு எதிராக வழக்கு மற்றும் தீர்ப்பு வரும் சமயம் , அவர் தன்னுடைய மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கி தான் புதிய சிறைக்கு எல்லா வசதிகளுடன் சென்றார் என்பது பத்திரிகைகளில் வந்த செய்தி.)
    5.தன்னுடைய மாநிலத்திற்கு தேவையான சட்டமியற்றும் உரிமை, மாநில நிர்வாகம், மாநில அளவிலான நீதிமன்றங்கள் ஆகியவை மாநில சுயாட்சியில் வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தை ஆண்ட ஒரு திராவிட இயக்கம் ” தமிழகத்தில் வழக்கு நடந்தால், சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் , போலிஸ் நிர்வாகம் சரியில்லை, நீதிபதிகள் அச்சுறுத்தப்படுவார்கள் “- என்றெல்லாம் காரணம் கூறி , ஜெயலலிதா வழக்கை கர்நாடகாவுக்குக் கொண்டுபோய் நடத்தினார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், குஜராத் கலவரம் தொடர்பான பிரதமர் மோடி மீதான வழக்கை இந்தியாவில் நடத்தினால் நியாயம் கிடைக்காது என்று சொல்லி, பாகிஸ்தானுக்கு மாற்றுங்கள் எனச் சொல்வதைப் போலுள்ளது.
    6.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு முடிந்துவிட்ட ஒன்று. ஆனால் ஒரு மாநில நிர்வாகத்தைப் பற்றி , நீதியைப்பற்றி , வேறொரு மாநிலத்தின் அமைச்சரவை கூடி , முடிவெடுக்கவேண்டிய சூழலை மாநில சுயாட்சி என்று கேட்பவர்கள் தான் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    7. மேல்முறையீடு செய்யுங்கள் என்று கர்நாடக அரசிடம் கெஞ்சுகிறது மாநில சுயாட்சி கட்சி. இது எந்த விதத்தில் மாநில சுயாட்சிக்கு உகந்தது ?
    8. அந்தக் காலத்தில் சேர, சோழ , பாண்டிய, மற்றும் பல்லவ மன்னர்கள் காட்டிக்கொடுத்தல், சிறை எடுத்தல், கப்பம் வசூலித்தல், அடிமை ஆக்குதல் ஆகியவற்றை செய்து , மைசூர் மகாராஜாவும், திப்பு சுல்தானும், விஜயநகர சாம்ராஜ்யமும் தமிழகத்தில் ஆட்சி செய்ய வழி வகுத்தனர். இப்போதும் அதே நிலையை மாநில சுயாட்சி கேட்ட எதிர்க்கட்சி உருவாக்குகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. பக்கத்து மாநிலத்திடம் போய்க் கையேந்துவதுதான் மாநில சுயாட்சியா ?
    9. பீகார் , மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசியல்வாதிகள் அந்த அந்த மாநில நீதி துறையை நம்பும்போது, தமிழக அரசியல்வாதிகள் மட்டும் , தமிழக நீதித்துறைமீது நம்பிக்கை வைக்காதது ஏன்?
    10. நீதித்துறையையும், காவல்துறையையும் நம்புவதுதான் உண்மையான மாநில சுயாட்சி. தமிழக நீதித்துறையை நம்பாமல் , மாநில சுயாட்சியை குழிதோண்டிப் புதைத்துவிட்டு,ஒரு மாநிலத்தின் அரசியல் இறையாண்மையை இன்னொரு மாநிலத்திடம் திமுகவினர் அடகு வைத்தது வருந்தத் தக்கது.-

    நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் 2-6-2015 பக்கம் 14-15.

    தெளிவான மற்றும் நியாயமான சிந்தனைப்போக்கு என்பது கட்சி சார்பு இல்லாமல் பலரிடமும் வெளிப்படுகிறது என்பதற்கு திரு சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் கருத்துக்கள் ஒரு நல்ல உதாரணம். மனித இனத்தில் என்றும் உயர்ந்த எண்ணங்களும் உயர்ந்த செயல்களும் நிலவ , எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் அருள் புரியட்டும்.

  19. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களில் உள்ள ஆய்வு தான் சரியான அலசல். உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்வோர் , தங்களை அறியாமல் தாங்களே தங்களுக்கு தீங்கு இழைத்துக்கொள் கின்றனர். இந்த மேல்முறையீட்டில் , FINAL STAMP OF APPROVAL கிடைத்து ஜெவின் கைகள் மேலும் ஓங்கும்.

    THE TAROT READING FOR APPEAL BEFORE THE SUPREME COURT IS THE QUEEN OF PENTACLES AT .9-30 PM ON 1-6-2015 MONDAY .THE READING FOR THIS CARD IS AS FOLLOWS: TIME TO ENJOY WHAT YOU HAVE EARNED REST ASSURED THAT YOUR WEALTH MATERIAL COMFORTS WILL CONTINUE TO BLOOM.

    எனவே இந்த அறிவிப்பு ஜே க்கு மிகப்பெரிய அரசியல் தொடர் வெற்றிகளை குறிக்கிறது.கடைசிநாள்வரை ஆட்சியில் இருப்பார் என்பதன் அறிகுறி ஆகும் இது.

    கர்நாடக அரசின் மேல்முறையீடு முடிவு; ஜெயலலிதாவுக்கு பின்னடைவா ?
    NEWS.SPICKNEWSTAMIL.IN – https://news.spicknewstamil.in/?fb_ref=Default#post32&1433203945

  20. The judgement must be against jayalitha because

    Kanchi periyava was arrested for his disciple actions to get in to his good book.

    This goverment too feeding biriyani to terrorist who killed desabhakthas.

    If muslims died in accident (Ranipet ETP) compensation is 10 lakhs if christians died in saudi arbia
    compensation is 5 lacs ,if hindus died just 3 laks for poor aiadmk party workers died after jaya stepdown

  21. பிரதீப் என்ற பெயரில் கருத்து பதிவு செய்துள்ள நண்பருக்கு ஒரு கேள்வி . விபத்தில் இறந்தவனை விட தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு குறைவாகவே கொடுப்பது உலகில் எல்லா இடத்திலும் உள்ள நடைமுறை தான். உங்கள் ஒப்பீடு சரி அல்ல. விபத்தை விபத்துடன் தான் ஒப்பிடவேண்டும்.

  22. ஊன முற்றோர்,சாகடிக்கும் எழ்மையிளும் உதவி கேட்க கூசும் கூச்ச மேனியர் ,காசில்லாத காதல் பருவத்தோர் ,அம்மாவின் அரசியல் முன்னேற்றத்திற்காக ஓட்டு போட்டு ,தங்கள் பருவமும் ,உருவமும் ,பயனிலாமல் பாழாகிப்போனாலும் ,கட்டாய பிரம்மசாரிகளாய்,முதிர் கன்னிகளாய் வாழ்ந்தாலும் ,திருமணம் ஆகாத அம்மாவின் தியாக வாழ்வை,கட்சிக்கார கஞ்சி கூலிகளோடு சேர்ந்து ,காவியமாக பாடி தெருவில் திரிந்தாலும் ,அம்மாவுக்கு தமிழ்நாடு அரசியல் சலித்துபோய்,டெல்லி பிரதமராக ஆசைப்பட்ட போது அத்தனை தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்து ,அவர்களால் ஒரு பயனும்மின்றி வெறும் cheer leaders களாய் ,போன துக்கத்திலும் ,சோகத்திலும் ,பிற மாநிலத்தோர் வாயை மூடிக்கொண்டு ,மற்ற அத்தனை அவயங்களிலும் சிரித்தபோதும் ,அவமானத்தை ஜீரணித்து ,அடுத்த தேர்தலிலும் வாக்களிக்க தயாராகி விட்டோமல்லவா?எத்தனையோ செய்து விட்டோம் ,இதை செய்ய மாட்டோமா?

  23. நீங்கள் சொன்னது சரிதான். 2 ஜி வழக்கு தீர்ப்பு வரவில்லை. அனால் கொள்ளை அடித்தார்கள் என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள். டான்சி வழக்கில் தப்பு சிதார் என்று சொன்னது. மனசாட்சி என்று வந்து விழுந் விட்டது.

  24. அன்புள்ள திரு வெங்கடேஷ்,

    ஜே-க்கு 37/39 தொகுதிகளை வாரி வழங்கிய தமிழக மக்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல. தமிழக அரசியலில் இருக்கும் வாய்ப்புக்களில் என்ற அடிப்படையிலேயே தமிழக வாக்காளர்களின் தேர்வு அமைந்தது.

    திமுக, அதிமுக இரண்டுமே ஒரே மட்டைகள் என்றார் பெருந்தலைவர் காமராஜர். எந்த அரசியல் இயக்கம் ஆனாலும் தவறான பாதைகளில் பயணிப்பது குற்றம் அல்ல. ஆனால் தவறான பாதைகளில் பயணம் செய்துவிட்டு, அது தவறு என்று புரிந்தவுடன் பாதைகளை மாற்றிக்கொள்ளவேண்டும். அதுதான் சரியான வழி.

    தமிழகம் கண்ட தலைமகன், மக்கள் திலகம் எம் ஜி ஆராலேயே என் வாழ்நாள் தலைவர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் , திமுகவின் ஆரம்ப கால தனித்தமிழ்நாடு சாத்தியமில்லை என்பதையும், இந்தியாவில் ஒரு அங்கமாக இருந்துதான் நமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்பதையும் உணர்ந்தவுடன் , தனித்தமிழ் திராவிட நாடு கோரிக்கையை ஒதுக்கிவைத்தார்.

    இரண்டாவதாக , பெரியாரின் நாத்திக கொள்கை வழிதவறி செல்வதை உணர்ந்தார். அதனாலே தான் பெரியார் , உயிருடன் இருந்தபோதே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உண்மையை அடித்து சொல்லி அனைவரின் பாராட்டையும் பெற்றார். திமுகவுக்கு ஒரு தனிப்பட்ட பாதையை அமைத்துக் கொடுத்து, அதன் காரணமாக கண்ணீர்த்துளிகள் என்ற பெரியாரின் பாராட்டையும் பெற்றார்.

    தற்போது, திமுகவினர் 2014- பாராளுமன்ற தேர்தலில் கட்சியினருக்கு டிக்கெட் வழங்கும்போது, டூ ஜி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கும், இதர வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உறவினர்களுக்கும் , டிக்கெட் கொடுக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு டிக்கெட் கொடுத்திருந்தால் நிலைமை சிறிதாவது மாறியிருக்கும். பிரதமராக இருந்த மன்மோகன் சிங்காலேயே குற்றம் சுமத்தப்பட்டு தெரிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களை டிக்கெட் கொடுக்காமல் சிறிதுகாலம் ஒதுக்கிவைத்தால் என்ன குடியா முழுகிப்போய்விடும் ?

    இலங்கை தமிழரை படுபாதகம் செய்து கொலை செய்த காங்கிரசின் சோனியா காந்தி கால்களில் விழுந்தாவது , டூ ஜி மகளுக்கு ராஜ்ய சபை தேர்தலில் ஒரு எம் பி சீட்டு- பெறுவதற்கு ஆலாய்ப் பறந்தபோது, உலகமே சிரித்தது.

    இவ்வளவு கேடுகெட்ட எதிர்க்கட்சிக்கு எப்படி தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் ?

    பாஜக கூட்டணியிலோ , பாமக தலைவர் போட்டியிட்ட தருமபுரி தொகுதி தவிர ஏனைய தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்யவே போகவில்லை. மேலும் தமிழக பாஜக கூட்டணியில் சேர்த்துக்கொண்ட எந்த கட்சிக்குமே தமிழகத்தில் பரவலான ஓட்டு கிடையாது. ஓரிரு தாலுக்கா அல்லது ஓரிரு மாவட்டங்களில் மட்டுமே சிறிது ஓட்டு உள்ள கட்சிகளை சேர்த்துக்கொண்டு எப்படி பெரிய வெற்றியை பாஜக குவிக்க முடியும் ?

    அதனால் தான் ஜே-க்கு பெரிய வெற்றியை கொடுத்தால், அவர் நரேந்திர மோடிக்கு ஆதரவு கொடுப்பார்- தமிழக அரசின் திட்டங்களுக்கும் மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற அடிப்படையில் மக்கள் ஜே-வின் அதிமுகவுக்கே மீண்டும் பெருவாரியான வாக்குகளால் வெற்றியை தந்துள்ளனர். ஜே – பிரதமராவார் என்று சொல்லி சில அதிமுகவினர் ஓட்டுக்கேட்டனர் என்பது உண்மைதான். எல்லாக் கட்சிக்காரனும் தேர்தலுக்கு முன்னர் நான் தான் பிரதமர் என்று சொல்வது வழக்கம். கேவலம் கம்யூனிஸ்டுகள் கூட தேர்தலுக்கு முன்னர் என்ன திரிந்தார்கள் தெரியுமா ? மே 2014-இல் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்று பூ சுற்றிக்கொண்டு திரிந்தார்கள். அதை எல்லாம் கேட்டு எவனாவது ஏமாந்துபோய் தங்களுக்கு ஓட்டுப்போடமாட்டானா என்ற நப்பாசையில் செய்யப்படும் பொய்ப்பிரச்சாரம்தான் அது. எனவே தங்கள் வருத்தம் நியாயமானது அல்ல.

  25. அண்ணாவின் பேச்சில் கருத்தும் கனிவும் இரண்டுமே கலந்து இருக்கும்.

    ” நாங்கள் பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம்- பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்கமாட்டோம்”- என்றும் சொன்னார்.

    ஆனால் அண்ணாவுக்கு பிறகு வந்தவர்கள் திமுகவை தவறான பாதைக்கு இழுத்து சென்று , ரம்ஸான் நோன்பு கஞ்சி மட்டும் குடிப்பது, இந்து மத நம்பிக்கைகளை மட்டும் கேலிபேசுவது என்று , அந்த கட்சியை காலாவதி ஆக்கிவிட்டனர். அதன் விளைவே பார்லிமெண்டில் பெற்ற பூச்சியம். தக்கபடி மாறாவிட்டால் சட்டசபையிலும் பூச்சியம் ஆனால் ஆச்சரியப்படவேண்டாம்.

  26. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி சொல்வதற்கு என்னை போன்ற சாதாரண மனிதர்க்கு சட்ட அறிவோ, அல்லது தீர்ப்பை பற்றிய நுணுக்கமோ
    தெரியாது. ஆனால் இயற்கையின் நியதிப்படியோ, அல்லது இறைவனின் சட்டப்படியோ சில வகையான முடிவுகளை விரும்புகிறோம் அப்படிப் பார்க்கையில்
    இந்த தீர்ப்பு மகிழ்ச்சிதரக் கூடியதே.ராமாயணத்தில் வாலி ராமனால் கொல்லப்பட்டது
    நீதியா, அநீதியா என்று சொல்லும் அளவுக்கு என்னைப் போன்றோர் ராமாயணம்
    அறிந்திருக்கவில்லை ஆனால் ராமனால் ராவணனின் அரசியல் வாழ்வும், அதிகாரமும்
    அழிக்கப்பட வேண்டுமாயின் ராமன் உயிரோடு இருக்கவேண்டும். ஆகையால் வாலியின் மரணத்தில் உள்ள மர்மங்கள் எங்களைப் போன்றோர்க்குத் தெரியவேண்டிய அவசியமில்லை.

  27. அப்போ ஊழல்வாதிகள் நிரபராதிகள் குற்றமற்றவர்கள் என ஊர்ஜிதபடுத்த கோர்ட்டுகள் தேவை என சொல்லுறீங்களோ. இன்றைய கால கட்டத்தில் எத்தனை ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்டனர் அல்லது நிரபராதி என விடுதலை பெற்றனர். ஆக சராசரி மனிதனுக்கு கோர்ட்டில நீதி பெறுவது கடினம் என்பது மட்டும் நம்ம ஜனநாயகத்தில் சகஜம்,

  28. ஆர் கே நகரில் ஜே- 1,51, 000-க்கும் அதிகமான வித்தியாசத்தில் எம் எல் ஏவாக வெற்றி பெற்றுள்ளார். அதாவது பதிவான வாக்குகளில் சுமார் 89 சதவீதம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். போட்டியிட்டுள்ள இதர வேட்பாளர்கள் அனைவரும் ஜாமீன் தொகையை பறிகொடுத்து தோல்வி அடைந்தனர்.

    இன்னமும் பத்தே மாதத்தில் தமிழக சட்டப்பேரவைக்கு பொது தேர்தல் நடைபெற உள்ளது. அந்த பொது தேர்தலிலும் அதிமுகவே மிகப் பெரிய வெற்றி பெரும் நிலையில் உள்ளது. எல்லா எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் ஜே -வின் வெற்றி வரும் சட்டசபை தேர்தலில் . நிச்சயம் ஆகிவிட்டது.

  29. ஜெயாலலிதா பிரதமராவார் என்று கட்சிக்காரர்கள்தான் சொன்னார்கள் .ஜெயலலதா அப்படியெல்லாம் சொல்லவில்லை !என்பது தங்களது பேதமையைத்தான் காட்டுகிறது!அத்விகா ,ஜெயலலிதா தன கட்சிக்காரர்களை அவ்வளவு புத்திசாலிகளாகவும் ,சுதந்திர புருஷச ,சுந்தரிகளாக வளர்கவுமில்லை ,அப்படி வளர்வதை அனுமதிப்பதுமில்லை!…புது பணக்காரர்களுக்கு ஒரு பழக்கமுண்டு ,தங்களின் ஆஸ்திகளையும் ,ஆசைகளையும் தங்கள் வாயால் சொல்லாமல் ,(அப்படி சொல்லிவிட்டால் ,அரசாங்க கண்காணிப்பு ,கொள்ளை காரர்களின் கைவரிசை ,துர்பாக்கியங்களின் பகற்சூறை போன்ற அபாயங்களின் சூழும் ஆபத்துண்டு.)தங்கள் அடிமைகளை அவைகளை கசிய விடுவதும் ,அது கண்டு ஊர் அதிசயிக்க ,அந்த சமயத்தில் தங்கள் ‘அறியாமையை ‘பாசாங்காய் காட்டி ஓர் மேட்டிமையை வெளிப்படுத்தி அதை கவர்ச்சியில் ஒரு கண்ணியாக பூட்டிக்கொள்ளும் வித்தை அறிந்தவர்கள்!
    எப்படி தமிழ் நாட்டில் எம்ஜியார் தன்னை அரசியலில் ஆற்று படுத்தி ,ஆண்டவனாகி கட்சி ,ஆட்சி என்று ஆஸ்திகளை ,ஆளவிட்டதை போல் ,நரேந்திர மோடி இந்திய அளவில் உதவுவார்,சப்பாணி பருவத்தில் இருக்கும் பிஜேபி தலைவரான அவருக்கும் வேறு வழியில்லை!என்பதே ஜெயாவின் எண்ணம் என்பதை யூகிக்க சூனியகாரிகளின் உளவுத்துறை தேவையில்லை!அதற்காகவே அவரை பறந்துபறந்து பாராட்டியது .ஆனால் மண மேடையில் அவரே மாப்பிளையாய் அமைந்ததே ஜெயலலிதாவின் ‘புரட்ச்சிக்கு ‘காரணம் ,பிரதம ‘வேட்பாளர் ‘அறிவிப்பு அப்பாவித்தனமான ,செய்கை அல்ல .
    கலைந்திடும் கனவுகள் ,கண்ணீர் சிந்தும் நினைவுகள்!

  30. அந்த பதிலில் எனது அக்கறை விளிம்பு நிலை வாசிகளுக்கானது,முக்கியமாக உடல் ஊனமுற்றோர்க்கானது .எவ்வளவு படித்தாலும் அரசு ஆதரவை மட்டும் நம்பி வாழும் வாழ்க்கை ,தனியார்கள் எப்போதும் அபாயகரமானவர்கள் ,அவர்களது கருணை நிபந்தனைக்குட்பட்டது.செல்வந்தர்களின் வீட்டில் எப்படி அவர்கள் செல்லமோ ,எழை களின் இல்லத்திலொ ஊனமுற்றோர்கள் சொந்தங்களாலே,அவமானப்படும் வாய்ப்புண்டு .
    இந்த வயதில் தனது முதலமைச்சர் வேலை பறிபோக காரணமான எதிரிகளின் இன்னல் இடையூறுகளை எல்லாம் ,மூன்றே மாதங்களில் கன்னல் கரும்புகளாக்கிகொள்ளும் வித்தகமும்,வேகமும் கைவந்த ஜெயலலிதாவுக்கு ஊனமுற்றோர் வேலைகள் பெற வேண்டிய அவசியம் தெரியாதா?ஆயிரம் இ மெயில் அனுப்பினாலும் ,முதலமைச்சர் செல் ‘பர தேவதைகளின் ‘அலட்சியம் நமக்கு அச்சத்தை ஊட்டும் ,ஒரு வேளை,பிரதமராகப்போகும் அம்மா கேட்க வேண்டிய மங்கள வாழ்த்தொலி களுக்கிடையே ,இந்த அமங்கலங்களின் அழுகயோசை எதற்கு ?என்று முடிவெடுத்திருக்கலாம் !டி என் பி எஸ் சி வெளியிடும் சில பத்து பணி இடங்கள் எப்போது அனைவருக்கும் பொசிவது?அவர்களுக்கு உலகியற் இன்பங்கள் எப்போது இசைவது?

  31. திரு வெங்கடேஷ் , தங்கள் பதிவை படித்துப்பார்க்கும் போது, உடல் ஊனமுற்றோரின் பிரச்சினைகளைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. இது பற்றி விளக்கமான கட்டுரையை எழுதி தமிழ் இந்து .காம் – க்கு அனுப்புங்கள். தாங்கள் அனுப்பும் பதிவு பொருள் பொதிந்ததாக இருந்தால் உடனே நிச்சயம் பிரசுரிப்பார்கள். 68- வருடமாக நடந்துவரும் சுதந்திர இந்திய ஆட்சிகளில் தொடர்ந்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று ஒரே ஒரு கட்சி அல்லது ஆட்சியை மட்டும் குற்றம் சுமத்தி புண்ணியம் இல்லை. கோரிக்கைகளில் உள்ள நியாயத்தைத்தான் எடுத்து சொல்லி நியாயம் பெற முயற்சிக்கவேண்டும். எந்த ஆட்சியாளர்கள் ஆனாலும் அவர்களை குற்றம் மட்டும் சொல்வோரின் வேண்டுகோளை படித்துப்பார்க்க கூட தயங்குவார்கள். இதனை நாம் கொள்ளவேண்டும். இன்று இந்தியாவில் மொரார்ஜி, காமராஜ், கக்கன் , எம் ஜி ஆர் போன்றோரின் காலம் இல்லை. இன்று தமிழகத்தில் இருப்பதோ பல கோடி வெளிநாட்டில் பதுக்கிவைத்துள்ள கோமான்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களின் பணத்திமிரால் சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மட்டுமே நிறைந்து உள்ளன.

  32. திரு வெங்கடேஷ்
    நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சரியாகப் புரியவில்லை.

  33. . இன்று இந்தியாவில் மொரார்ஜி, காமராஜ், கக்கன் , எம் ஜி ஆர் போன்றோரின் காலம் இல்லை. இன்று தமிழகத்தில் இருப்பதோ பல கோடி வெளிநாட்டில் பதுக்கிவைத்துள்ள கோமான்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களின்
    பணத்திமிரால் சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மட்டுமே நிறைந்து.///.
    நன்றி ,அத்விகா இப்போது மேலே நீங்கள் குறிப்பிட்ட தலைவர்களில் ஜெயலலிதா இல்லை ,அவர் சாதாரனங்களில் ஒரு சாதாரணம் என்று ஒத்துக்கொண்டீர்கள் ,அதற்குத்தான் உங்களுக்கு பதிலளித்தேன் ,அவருக்காக சிறப்பாக கவலைப்பட ஒன்றுமில்லை!பிரதமர் பதவியின் மீது மிகுந்த ஆசை கொண்டிருந்தார் ,கால அரசியலும் மயங்கி காட்சி அளித்த போது ,இவர் அடையாளம் காட்டிய ஜனாதிபதி வேட்ப்பாளரை ,அத்வானி தலைமையில் விழுந்தடித்திக்கொண்டு ஆதரித்ததும் ,ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை அளித்தது ,எனவே தான் மோடி பிரதமர் வேட்ட்பாளராக அறிவிக்கப்பட்டத்தை ரசிக்கவில்லை அன்றைய ஜெயா டிவி பார்த்திருந்ததால் விளங்கும் ,அவரை அரசியல் ஆசை இல்லா துறவியாக காட்டுவது உண்மை இல்லை .

  34. ஒரு மாநில கட்சித்தலைவியாக தன் சிற்றெல்லையை மறந்து ,தன் அபிமானிகளை ,அரசியல் ,பத்திரிகை அதிபர்கள் மூலம் பிரதமர் பதவிக்கு தன்னை முன்னிலை படுத்தி அபிப்பிராயங்களை மக்களிடம் விதைத்தது (ஒரு பத்திரிகை ஆண்டு விழாவில் ,அதன் ஆசிரியர் ,அத்வானி,மோடி முன்னிலையிலே ஜெயலலிதாவை பிரதம பதவிக்கு பிஜெபி முன்னிறுத்தவேண்டும் என்றார்)கடைசியில் தனக்கும் மோடிக்கும் தான் போட்டி என்று வாக்களிக்க வேண்டினார்.தேர்தல் முடிவுகளில் உயர உயர பறந்த ஊர் குருவி கதையானது!இதற்கு தானே ஆசை பட்டீர்கள் ‘என்று நமட்டு சிரிப்போடு மக்கள் கேட்டனர் .கிரக சஞ்ச்சார வக்கிரங்கள் ,தேவ கவுடாவைப்போல் தன்னையும் பிரதமராக்கும் என்ற ஆசையும் தவறில்லை ,எனது கேள்வி :தனது அரசியல் வாழ்விற்கும் ,சுபிட்சமான எதிர்கால முன்னேற்றத்திற்கும் செய்த காரியங்களை ,அந்த கரிசனத்தை கோடியில் ஒரு கூறாவது ‘தனது தலைமையிலான ஆட்சியில் ‘வாழும் ஏழைகள் ,அவர்களிலும் அபாக்கியமான ஊன முற்றோர் மீது காட்டினாரா?என்பதே .
    கட்டுரை எழுதி ஊனமுற்றோரின் கையறு நிலையை மக்களிடம் விளக்கலாம் ,
    நாட்டின் முதலமைச்சருக்கே அப்படித்தான் பாடம் எடுக்க வேண்டும் என்பது பரிதாபமல்லவா?பரிதாபங்கள் ,கவலைகள் எல்லாம் அந்தஸ்த்தை பார்த்துதான் சுரக்கிறது!ஆளும் கட்சி தலைவிக்கு துன்பம் வந்ததால்தான் உச்ச நடிகருக்கு உள்ளம் நடுங்கும் ,அவர் விடுதலையானால் தான் அந்த துன்ப கேணியில் இன்ப சுனைகள் ஊற்றெடுக்கும் !
    நன்றே அம்மா இந்நாட்டில் நம்பியர்/நங்கையர் குடி வாழ்க்கை!

  35. வெங்கடேஷ் அவர்களே சோனியா காந்தி அவர்கள் பிரதமர் ஆக தன்னிடம் ஆதரவு MP கள் இருப்பதாக சொல்லி பிறகு இல்லை என்று தெரிந்ததும் தியாகி பட்டம் வாங்கி கொண்டது போல் ஜெ செய்யவில்லை.நிதிஷ்குமார் போல் இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை படவில்லை நரேன்றமோடி அவர்களை போல
    ஜெயலலிதா அவர்களும் ஆளுமை திறம் கொண்டவர் என்பதால் தான் அவரை தமிழக மக்கள் பாராளுமன்ற தேர்தலில் முழுவெற்றி பெற வைத்தனர் ஜெயலலிதா அவர்களுக்கு பிரதமர் ஆக முழு தகுதி வுண்டு.

    உங்கள் பிரச்சனை என்ன என்று தெரியவில்லை, நீங்கள் சொல்வதும் புரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *