சீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்!

Myanmar1
எல்லை தாண்டிய கடமை வீரர்கள் (ஜூன் 9)

 

ஜூன் 9-இல் மியான்மர் நாட்டின் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில், இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதலை (ஜூன் 4) நடத்திய பிரிவினைவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 38 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (இந்திய ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியிருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன). இதன் எதிரொலி அரசியல் வானில் இப்போது தீனமான சுவரத்தில் கேட்கிறது. ஆனால், இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு உலக அளவில் இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய ராணுவம் போல பரிதாபத்திற்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் எளிதில் தாக்கும் இலக்காக நமது வீரர்களை சுட்டுக் கொல்வது வழக்கமான செய்தியாகவே இருந்து வந்துள்ளது. எந்தத் திசையிலிருந்து தாக்குதல் வரும் என்று தெரியாத நிலையில், எதிர்த் தாக்குதலுக்கு அரசியல் அதிகார பீடத்திலிருந்து சமிக்ஞை கிடைக்காத நிலையில், கைவிடப்பட்டவர்களாகவே அவர்கள் பெரும்பாலும் போராடி வந்திருக்கிறார்கள்.

கார்கில் எதிர்த் தாக்குதல் போன்ற சில நல்லனுபவங்கள் இருந்தாலும், விடுதலைக்குப் பிந்தைய 68 ஆண்டுகளில் பெரும்பான்மைக் காலகட்டம் நமது ராணுவத்தின் மன உறுதியைக் குலைப்பதாகவே அமைந்திருந்தது. காஷ்மீரில் கல்வீசும் வெறியேற்றப்பட்ட இளைஞர்களையோ, முகாமில் புகுந்து படுகொலை செய்யும் பாக். ஆதரவு பயங்கரவாதிகளையோ இதுவரை நமது ராணுவத்தால் அடக்க முடியாததற்கு காரணம், நமது ராணுவத்தின் முயலாமை அல்ல; அவர்களைக் கட்டிப்போடும் அரசியல் அதிகார பீடத்தின் இயலாமையே அதற்குக் காரணம்.

இத்தகைய மோசமான நிலைப்பாடு தற்போது மாறி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் புலப்படத் துவங்கியிருக்கின்றன. அதில் பாதுகாப்புத் துறையும் முக்கியமானது. பாதுகாப்பு அமைச்சராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற பிறகு அதன் செயல்பாடுகள் புது வேகம் பெற்றுள்ளன. அதில் ஒன்றுதான் மணிப்பூர் பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்.

1998 முதல் 2004 வரை அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் உள்துறை அமைச்சராக அத்வானியும் பாதுகாப்பு அமைச்சராக ஜஸ்வந்த் சிங்கும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும் இருந்தபோது ஜம்மு காஷ்மீரில் நமது ராணுவம் செயல்படுத்திய ‘முந்திக் கொண்டு முதலடி கொடுக்கும் நடவடிக்கை’ (ப்ரோ ஏக்டிவ் பாலிஸி) காரணமாகத் தான் ஜம்மு காஷ்மீரில் வேட்டுச் சத்தம்  குறைந்தது என்பதும், அங்கு ஜனநாயகம் மீட்கப்பட்டது என்பதும் உண்மை. அத்தகைய அணுகுமுறையே இப்போதும் மியான்மரில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

ஆனால், அந்நிய நாட்டின் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது தான் புதிய விஷயம். அதுவும் மியான்மர் அரசின் ஒப்புதலுடன், நமது ராணுவம் அங்கு புகுந்து தாக்குதல் நடத்தும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இதற்கான களத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள் பிரிவினைவாதிகளே.

மணீப்பூரில் பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த இந்திய ராணுவ வாகனம் (ஜூன் 4)
மணிப்பூரில் பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த இந்திய ராணுவ வாகனம் (ஜூன் 4)

கடந்த ஜூன் 4-ம் தேதி, மணிப்பூர் மாநிலத்தில் கண்காணிப்புப் பணிக்காகச் சென்றுகொண்டிருந்த இந்திய ராணுவ வீர்ர்கள் மீது ராக்கெட் லாஞ்சர்கள், பயங்கர ஆயுதங்கள் கொண்டு பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில், நமது வீர்ர்கள் 18 பேர் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு நாகலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சில் (கப்லாங்) என்ற பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதன் பின்னணியில் சீனாவின் மறைமுக உதவி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பழங்குடியினச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு, அண்டை நாடுகளின் உதவியுடன் இயங்கும் பல பிரிவினைவாத இயக்கங்கள் அப்பகுதிகளில் ஆங்காங்கே செயல்படுகின்றன. இவற்றுக்கு கிறிஸ்தவ மிஷனரி உதவிகளும் உண்டு. திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், மிஸோரம், நாகலாந்து, அஸ்ஸாம், அருணாசல் ஆகிய மாநிலங்களில் இயங்கும் இந்தப் பழங்குடியின பிரிவினைவாதக் குழுக்கள் அவ்வப்போது எதிர்த்தரப்பை தாக்குவது வழக்கம். அங்கு அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம், எதிரி யார் என்றே தெரியாமல் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரிவினைவாதக் குழுக்களை முடக்கவும், இப்பகுதி மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கவும் பல முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், புவியியல் சிக்கல்கள், எல்லைப் பிரச்னைகள், அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை காரணமாக, இப்பகுதியில் அடிக்கடி நிச்சயமற்ற நிலைமை ஏற்படுகிறது. இதைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் குழப்பம் ஏற்படுத்த சீனா முயல்கிறது.

நமது வட கிழக்கு அண்டைநாடுகளான மியான்மர், பங்களாதேஷ், நேபாளம் ஆகியவற்றில் சீனாவின் கொடுங்கரம் நீண்டு வருகிறது. இதை மாற்றும் வகையில் அண்மைக்காலமாக பிரதமர் மோடியின் அயலுறவுப் பயணங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. அதன் வெற்றிகரமான விளைவே மியான்மர் எல்லைக்குள் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல் எனில் மிகையில்லை.

பொதுவாக, வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் பிரிவினைவாதிகள் இங்கு தாக்குதலை நடத்திவிட்டு, அண்டை நாட்டிற்குள் நுழைந்து பாதுகாப்பாக இருந்துகொள்வது வழக்கம். இதனை அண்டை நாடுகளும் தடுக்க முடிவதில்லை. அங்குள்ள  அடர் கானகங்களில் முகாம் அமைத்து பயிற்சி பெறும் பிரிவினைவாதிகள், திடீரென இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு  மாயமாகிவிடுவார்கள். இவர்களைத் தடுக்கவோ, பதிலடி கொடுக்கவோ நமது பாதுகாப்புப் படையினரால் முடிவதில்லை. இந்த இயலாமைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது, மியான்மரில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்.

மியான்மார் அதிபர் தெஇன் சேனுடன் பிரதமர் மோடி
மியான்மார் அதிபர் தேயின் சேனுடன் பிரதமர் மோடி (2014 நவம்பர் 19)

அண்மையில் (2014 நவம்பர் 19) மியான்மர் நாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடியின் அணுகுமுறையால், அந்நாட்டுடன் இதுவரை இருந்த இறுக்கம் மறைந்து நட்பு மலர்ந்துள்ளது. தற்போது தங்கள் நாட்டிற்குள் புகுந்த நாகலாந்து பிரிவினைவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததற்கு இந்த நட்பே காரணம்.  பிறகு சீன நெருக்கடிக்கு அஞ்சி இத்தாக்குதல் தங்கள் நாட்டின் எல்லைக்குள் நடக்கவில்லை என்று மியான்மர் அரசு மறுத்தாலும், உலகம் உண்மையை உணர்ந்துவிட்டது- இனிமேல் இந்தியா வேடிக்கை பார்க்காது.

இந்திய வீரர்கள் பலியாவதும், அவர்களுக்கு மலர்வளையம் வைத்து குண்டு முழங்க ராணுவ மரியாதை செலுத்துவதும் பழைய கதைகள். இனிமேல் இந்திய வீர்ர் ஒருவர் தாக்கப்பட்டாலும், இந்திய ராணுவம் எப்படிச் செயல்படும் என்று இப்போது உலகிற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் தாக்குதல் நடத்திவிட்டு மியான்மர் எல்லைக்குள் தலைமறைவான பிரிவினைவாதிகளின் இரு முகாம்களை ஜூன் 9-இல் முற்றுகையிட்டு இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் 38 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் மறைவிடங்களில் இருந்து பெருமளவிலான பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலை ராணுவ தலைமை தளபதி சுஹாக் ஒருங்கிணைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படியே இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன.

இந்த அதிரடித் தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ’21 பாரா’ பிரிவைச் சார்ந்த 70 பேர் ஈடுபட்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், தாக்குதலை வெற்றிகரமாக முடித்து நமது வீரர்கள் முகாம் திரும்பிய பிறகே இத்தகவல் அனைவருக்கும் தெரிய வந்தது. இந்த வெற்றிகரமான நடவடிக்கை காரணமாக, நாகலாந்து பிரிவினைவாத அமைப்புக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சீன அரசு மறுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பதிலடியே ராணுவத்துக்கு துணிவை அளிக்கும்
பதிலடியே ராணுவத்துக்கு துணிவை அளிக்கும்

இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு தீர்வு காண இந்தியா எத்தனை தீவிரம் காட்டும் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். “மியான்மர் அரசுடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அந்நாட்டு ராணுவ உதவியுடன் இந்த தாக்குதல் நடத்த முடிந்தது; எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட எவ்வித அச்சுறுத்தலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும்.  இது ஒரு தொடக்கம் தான்” என்று கூறியிருக்கிறார் மற்றொரு மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர்.

இந்தியாவின் இந்த அதிரடியால் அரண்டுபோன பாகிஸ்தான், தானாக முன்வந்து வாக்குமூலம் கொடுக்க துவங்கி உள்ளது. மியான்மரில் இந்தியா தாக்குதல் நடத்தியது போல பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவிடுமோ என்ற அச்சத்தால், ”பாகிஸ்தான் மியான்மர் அல்ல” என்று புலம்பி இருக்கிறார் பாக். அமைச்சர் ஒருவர். அதற்கு “இந்தியாவின் புதிய அணுகுமுறையால் அச்சமடைந்தவர்கள் பிதற்றத் துவங்கியுள்ளனர்” என்று பெயர் குறிப்பிடாமல் பதிலடி கொடுத்திருக்கிறார் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர். “ஆட்சியில் இருப்பவர்களின் சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்படும்போது பல விஷயங்களும் மாறுகின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு சிறிய நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புச் சூழல் தொடர்பான மனப்போக்கையே மாற்றிவிட்டது” என்றும் அவர் கூறி இருக்கிறார் பாரிக்கர்.

இந்தக் கருத்து முற்றிலும் உண்மை. கிழடு தட்டி மயங்கிக் கிடந்த பழைய சிங்கம் அல்ல இப்போதைய இந்தியா. தற்போதைய இந்தியா கர்ஜிக்கும் இந்தியா. உடனடி முடிவெடுக்கும் திறன் படைத்த, ஓய்வறியாமல் பணியாற்றும் தலைமை கொண்ட, நாட்டுநலனே பிரதானமாகக் கொண்ட அரசைப் பெற்றிருக்கிறது இன்றைய இந்தியா.

அதன் எதிரொலி இப்போது வடகிழக்கில் மின்னலாக வெளிப்பட்டிருக்கிறது. இந்த மின்னலைத் தொடர்ந்து வரும் இடியோசை பகையை வெல்லும். அதைத் தொடரும் மழையால் மண் குளிரும். நாடும் செழிக்கும்.

.

27 Replies to “சீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்!”

  1. மியான்மரில் நடந்த விஷயம் பற்றி திரு குமரேசன் என்ற கம்யூனிஸ்ட் அன்பர் பேசும் இந்த தந்தி தொலைகாட்சியின் ஆயுத எழுத்து (11.06.2015 ) லிங்கை பாருங்கள். ( 19 ஆம் நிமிடம் அவருடைய கருத்து வரும். )
    ஆஹா !! பின் லாடனை அமெரிக்க அழித்த விதத்தை உலகமே கண்டிததாம் ! மியான்மரில் நாம் குற்றவாளிகளை அரசியலால் சந்தித்து இருக்கவேண்டுமாம். கேளுங்கள். உள்ளம் பூரிக்கும்.

    சில சமயங்களில் மற்ற கட்சிகள் ( incl. BJP ) நடந்துகொள்ளும் விதம் பார்க்கும்போது கம்யுனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்து விடுவார்களோ என்ற சந்தேகம் வரும். திரு குமரேசன் பேசுவதைப் பார்க்கையில் அந்த மாதிரி விபரீதம் எதுவும் நேர்ந்துவிடாது என்று உறுதியாகின்றது.

  2. indhiyavin palam athirikalukku therinthu erukkum. olaga amathi ketukkum pakkitsan,china evarukkaluk edhu oru patam.I wish my india ranuvam -Thank you

  3. சமூக வலைத்தளங்களில் படித்தது. இரண்டு நாடுகள் 1947 இல் சுதந்திரம் பெற்றன. ஒன்று செவ்வாய் கிரகத்தில் நுழைய முயல்கிறது. மற்றது இந்தியாவுக்குள் நுழைய முயல்கிறது.

  4. பாகிஸ்தானை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். ,’எந்த
    நிலையிலும்'(?)பேச்சு வார்த்தையை நிறுத்தி ,அவர்களின் கோவத்திற்கு ஆளாக கூடாது,என்றெல்லாம் இங்குள்ள தரகு குஞ்சுகளும் ,செக்குலர் செம்மல்களும் கூவி தவித்த தவிப்பும் ,தத்தளிப்பும் ,டிவி விவாதத்திலும் ,நாளிதழ் செய்திகளிலும் ஆரம்பத்தில் ஓங்கியும் ,ஏனோ ,பிறகு ஈன ஸ்வரத்தில் அமுங்கிப்போன மாயமும் ரசிக்கத்தக்கது.when the bordering blagues were attacked,theirs inner country relative viruses proposed theirs naked support,when suspicion took alarming notes,they bowed down ,mewing away!
    stuck by shy,they now,seem to entertain topics,such as;,’peace,sovereignity of neighboring countries .brotherhood.’

  5. நீண்ட நாட்களுக்குபிறகு ஒரு மகிழ்ச்சி தரகூடிய நாம் எல்லோரும் பெருமைபடகூடியா ஒரு செய்தி இதுவாகத்தான் இருக்கவேண்டும்; நாட்டின் பாதுகாப்பிட்கு மற்றும் முன்னேற்றட்டிட்கு இது மாதிரியான அதிரடி சைகைகள் கண்டிப்பாக தேவை. வாழ்க பாரதம்; வாழ்க நம் தாய் திருநாடு.

  6. நல்ல காலம் பொறக்குது ; நல்ல காலம் பொறக்குது ; என்ற பாரதியின் பாடல் வரிகள் உண்மையாக போகுது ; உண்மையாக போகுது ; என்னும் காலம் வந்து விட்டது.

  7. //இந்தக் கருத்து முற்றிலும் உண்மை. கிழடு தட்டி மயங்கிக் கிடந்த பழைய சிங்கம் அல்ல இப்போதைய இந்தியா. தற்போதைய இந்தியா கர்ஜிக்கும் இந்தியா. உடனடி முடிவெடுக்கும் திறன் படைத்த, ஓய்வறியாமல் பணியாற்றும் தலைமை கொண்ட, நாட்டுநலனே பிரதானமாகக் கொண்ட அரசைப் பெற்றிருக்கிறது இன்றைய இந்தியா.//

    வரும் 21ஆம் தேதி உலக முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. யோகா அடிப்படையில் உடலுக்கு மிக ஆரோக்கியம் பயக்கக் கூடியது. அதிலும் ஹாஸ்ய யோகா முறை என்று கூறப்படும் சிரிப்பு யோகா இன்னும் மிக சிறந்தது. ஏனென்றால் சிரிப்பதால் மனிதனுக்கு அவ்வளவு நன்மை விளைகின்றது. சேக்கிழானின் மேற்கண்ட பத்தியை படித்ததும் கட்டுக்கடங்காமல் அப்படி ஒரு சிரிப்பு வந்தது. என் மனதில் உள்ள பாரமே குறைந்தது போல் இருக்கிறது. யான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெற வேண்டும், அது தான் நம் தமிழ் மரபும். ஆகவே மேற்ப்படி வாசகத்தை அச்சிட்டு வழங்கினால் பலரும் என்னை போன்று பயன் அடைவார்கள் என்றே நம்புகிறேன். பாரத மாதா கீ ஜெய் !

  8. தி சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழில் டி ஜே எஸ் ஜார்ஜ் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார் (14/06/2015). அதனை நமது அரசியல் வாதிகளும் தொலைகாட்சி பேச்சாளர்களும் அவசியம் படிக்கவேண்டும்

  9. பல நூற்றாண்டுகளாக, பஞ்சம் பிழைக்க வந்த பரதேச கழுதைகளால்,
    கட்டியம் கூறப்பட்ட காவிய நாடகமாய் கலங்கிய நாட்டின் அரசியல்நாயகி ,தன் தலைவனை கண்டு ,பொற்கால புராணங்களில் புழங்கிய பழங்கதைகள் பாடும் பருவங்களும், பாங்குற்ற உருவங்களும் பீடித்தனவோ?என்று பீடு குலையாமல் ,இக்கால நிதானத்திற்கு இறங்கி வருகிறாள் .

  10. நல்லதொரு கட்டுரை. சேக்கிழான் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .

  11. இந்திய ராணுவம் இத்தகைய தாக்குதலை இதற்கு முன் மியன்மாரில் பல முறை நடத்தி இருக்கிறது, ஆனால் இதை வெளிபடையாக சொன்னால் மியன்மார் அரசுக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படும் என்பதால் எல்லையோரம் தாக்குதல் நடந்தது என்று அறிவிக்கும். இந்த முறை வெளிப்படையாக ஒரு அமைச்சர் பேசியதால் மியன்மார் அரசுக்கும் அதிபருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுத்தியது.

  12. //…recent events cannot be an end in themselves and must be put in perspective. The tough response of the government must now be leveraged well to become part of an overall strategy to deliver peace in the north-eastern region.//

    – Former Chief Secretary, Nagaland. To read him what he says, click here:

    https://www.hindustantimes.com/analysis/don-t-say-no-to-negotiation-in-north-east/article1-1359923.aspx

    Think like him. Don’t chest-thump. It will make you look like street children.

  13. ரங்கன்
    தகரம் கண்டுபிடிக்கும் முன்பே கம்யூனிஸ்டுகள் உண்டியலை கண்டிப்பிடித்தவர்கள்“என்று கம்யூனிஸ்ட் கட்சியினரை பேசி, சட்டமன்றத்திலும் அதனை பதிவு செய்தவர் ஜெயலலிதா. — என்ன உண்மை , என்ன உண்மை

    திண்ணை site ல் நகைசுவை என்று ஒரு tag இருகின்றது . இங்கும் அதை போட்டு , இந்த வீடியோ வை போடலாம்

  14. “இந்திய ராணுவம் இத்தகைய தாக்குதலை இதற்கு முன் மியன்மாரில் பல முறை நடத்தி இருக்கிறது”மெய்யாலுமா. ஆதாரம் எங்கே. அது எப்படி உங்களுக்குத்தெரியும்.

  15. மிக அருமையாக தகவல்களைத் தொகுத்து வ்யாசம் சமர்ப்பித்துள்ள ஸ்ரீ சேக்கிழான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    வ்யாசம் சார்ந்து ஒரு சில கருத்துக்கள் :-

    \\ கார்கில் எதிர்த் தாக்குதல் போன்ற சில நல்லனுபவங்கள் இருந்தாலும், விடுதலைக்குப் பிந்தைய 68 ஆண்டுகளில் பெரும்பான்மைக் காலகட்டம் நமது ராணுவத்தின் மன உறுதியைக் குலைப்பதாகவே அமைந்திருந்தது. காஷ்மீரில் கல்வீசும் வெறியேற்றப்பட்ட இளைஞர்களையோ, \\

    காஷ்மீர உக்ரவாதிகளுக்கும் காஷ்மீரத்து பிரிவினைவாதிகளுக்கும் சிம்ம சொப்பனம் என்றால் ………. அன்றும் இன்றும் என்றும்…… ஒரே ராணுவ அமைப்பிடமிருந்து…………. ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ்.

    மிகவும் பரிதாபத்திற்குரிய மஜ்பூரியில் இயங்குபவர்கள் துணைராணுவத்தினர். இவர்களது தலையெழுத்து கல்லடியைத் தவிரவும் சொல்லடியும் வாங்கிக்கொள்வது. சி ஐ எஸ் எஃப் அல்லது சி ஆர் பி எஃப் போன்ற துணை ராணுவத்தினர் ஒரு திருட்டுக்குற்றத்துக்கு யாரையாவது பிடித்து விட்டாலும் கூட………. அவதிப்பட வேண்டியது பிடித்த துணைராணுவத்தினரேயல்லாமால் பிடிபட்ட திருடன் கிடையாது…….. வருஷக்கணக்காக கோர்ட்டு கச்சேரி என்று ……….. காஷ்மீரத்திலிருந்து மாற்றம் ஆன பின்னரும் அலைய வேண்டும். இந்த அவலத்துக்கு ஷரத்து 370 அடிக்கும் கூத்தையும் நினைவிற்கொள்ள வேண்டும். AFSPA விலக்கப்பட்டு விட்டால்…. அப்புறம் அவ்வளவு தான். கல்லடி கல்லுளிமங்கர்களுக்கு கொண்டாட்டம் தான்.

    \\ இத்தகைய மோசமான நிலைப்பாடு தற்போது மாறி இருக்கிறது. \\

    மேற்கெல்லையில் எல்லைக்கு அப்பாலிருந்து தாக்குதல் வெகுவாகக் குறைந்திருக்கிறது. காரணம் அதி உக்ரமான பதில் தாக்குதல் ஹிந்துஸ்தானத்தின் தரப்பிலிருந்து. பலமுறை மேற்கெல்லைக்கப்பால் அங்குள்ள ராணுவத்தினர் வெள்ளைக்கொடி காட்டி தமது தாக்குதலை நிறுத்தியிருக்கின்றனர்.

    காஷ்மீரத்தில் இன்னமும் கல்லடி வைபவம் முழுமையாகக் குறையவில்லை.

    இதுவரை காஷ்மீரத்தில் உறுதியான நிர்வாகத்தைக் கொடுத்துள்ளமை என்பதற்காக கட்சிகள் கடந்து ச்லாகிக்கப்படும் ஒரே நபர் முன்னாள் கவர்னரான ஸ்ரீ ஜக்மோஹன் அவர்கள் மட்டுமே. அவரளவு சீரான மற்றும் உறுதியான நிர்வாகம் எந்த கட்சியாலும் இதுவரை கொடுக்கப்படவில்லை என்பது உண்மை. அவரது சீர்திருத்தங்களுள் மாதா வைஷ்ணவிதேவி ஆலய நிர்வாக சீர்திருத்தம் மிக முக்யமானது. ஒழுங்குமுறையின் பாற்பட்டு தர்சனார்த்திகள் இன்றளவும் தர்சனம் பெற முடிவது அவருடைய முயற்சியாலேயே.

    \\ வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பழங்குடியினச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு, அண்டை நாடுகளின் உதவியுடன் இயங்கும் பல பிரிவினைவாத இயக்கங்கள் அப்பகுதிகளில் ஆங்காங்கே செயல்படுகின்றன. இவற்றுக்கு கிறிஸ்தவ மிஷனரி உதவிகளும் உண்டு.\\

    பிரிவினைவாத நெருப்பினை வளர்த்து கொழுந்து விட்டெரியச்செய்வதில் பங்கு க்றைஸ்தவ மிஷ நரிகளுக்கு மட்டுமில்லை. பெருமளவு உண்டியல் குலுக்கும் இடது சாரி கும்பல்களுக்கும் உண்டு.

    இந்த தேச விரோத சக்திகளது தேசவிரோதப் போக்கை முன்னிறுத்தாது……….. இவர்களது மற்றைய சமூஹப் பங்களிப்புகளை மிதி மிஞ்சி முன்னிறுத்தும்…. போலிமதசார்பின்மை பேசும்…….. மறைமுக பிரிவினைவாதம் பேசும்… அறிவுஜீவி சக்திகளுக்கும் ……….. தேசத்தில் பிரிவினைவாதம் வளர்வதில் பெரும் பங்குண்டு.

    \\ நமது வட கிழக்கு அண்டைநாடுகளான மியான்மர், பங்களாதேஷ், நேபாளம் ஆகியவற்றில் சீனாவின் கொடுங்கரம் நீண்டு வருகிறது. இதை மாற்றும் வகையில் அண்மைக்காலமாக பிரதமர் மோடியின் அயலுறவுப் பயணங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. \\

    சீன யாளியை எதிர்கொள்வது…. என்று கருத்தளவிலாவது செயல்படும் மாண்பு… ஹிந்து ஹ்ருதய சாம்ராட் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களிடமே காணக்கிட்டுகிறது.

    மேற்சொன்ன தேசங்களல்லாது வியத்நாமுடனும் கூட ஹிந்துஸ்தானம் இந்த லக்ஷ்யத்தின் அடிப்படையில் கூட்டு நடவடிக்கைகளில் இயங்குவதாகத் தெரிகிறது.

    \\ இந்திய வீரர்கள் பலியாவதும், அவர்களுக்கு மலர்வளையம் வைத்து குண்டு முழங்க ராணுவ மரியாதை செலுத்துவதும் பழைய கதைகள். \\

    மலர்வளையம் வைப்பதென்ன…… சமீபத்தில் இறந்து போன ராணுவத்தினருக்கு இறுதி மரியாதை செய்யக்கூட மறுத்த அவலத்தைச் செய்த ஜெனாப் ஃபாரூக் அப்துல்லா அவர்களது செயற்பாட்டினையோ …………அவருடன் கூட்டு வைத்திருந்த ….. தேசத்தைப் பிளந்த காங்க்ரஸ் கட்சியனரின் செயல்பாடும் கூட….. மறக்கக் கூடாத பழங்கதைகளே.

    இந்த அதிரடித் தாக்குதல் முடிந்த பின்னர் ………. ஹிந்துஸ்தான சர்க்கார் தரப்பிலிருந்தான அறிக்கைகள் இன்னமும் நேர்த்தியாக இருந்திருக்கலாம்.

  16. அன்பின் ஸ்ரீ ரங்கன்

    ஒரு சின்ன திருத்தம்

    \\ தகரம் கண்டுபிடிக்கும் முன்பே கம்யூனிஸ்டுகள் உண்டியலை கண்டிப்பிடித்தவர்கள்“என்று கம்யூனிஸ்ட் கட்சியினரை பேசி, சட்டமன்றத்திலும் அதனை பதிவு செய்தவர் ஜெயலலிதா. – என்ன உண்மை , என்ன உண்மை \\

    வாசகம் சத்யமான வாசகமே. ஆயினும்…..தகரத்தைக் கண்டுபிடிக்கும் முன்னர் உண்டியலைக் கண்டு பிடித்தவர்கள்… என்று கம்யூணிஸ்டுகளை… இருபது முப்பது வருஷம் முன்னால் திமுக வைச் சார்ந்த அன்பர் வெற்றிகொண்டான் மேடை மேடையாக ச்லாகித்திருக்கிறார்.

    உக்ரவாதிகள் ராணுவத்தினரைத் தாக்குதல் என்ற அடாவடிக்காரியம் செய்யப்புகுந்தால் ….. இதற்கு முன்னாளைய காங்க்ரஸ் கட்சியின் தரப்பிலிருந்து ………. வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று பேப்பரிலும் டிவியிலும் அறிக்கை தந்து விட்டு தூங்கப்போய் விடுவார்கள். அதற்கு மாறாக, இப்படி எல்லை தாண்டி உக்ரவாதிகளை ஹிந்துஸ்தான சர்க்கார் சிக்ஷிப்பது என்பது …… பிரிவினைவாத சக்திகளால் ஜீரணிக்க முடியாது. அவர்களது லக்ஷ்யம் தவிடு பொடியாகிறதே.

  17. //“இந்திய ராணுவம் இத்தகைய தாக்குதலை இதற்கு முன் மியன்மாரில் பல முறை நடத்தி இருக்கிறது”மெய்யாலுமா. ஆதாரம் எங்கே. அது எப்படி உங்களுக்குத்தெரியும்.//

    இந்த விஷயம் தொடர்பான தொலைகாட்சி விவாதங்களின் பொது மியன்மாருக்கான முன்னால் இந்திய தூதர் திரு. பார்த்தசாரதி மற்றும் சில முன்னால் ராணுவ தலைமை அதிகாரிகளும் இந்தியாவுக்கும் மியன்மாருக்கும் உள்ள ஒப்பந்தங்கள் பற்றியும் குறிப்பான சில தாக்குதல்கள் பற்றியும் கூறினார்கள். அதோடு இதை ஒரு அமைச்சர் வெளிபடையாக தம்பட்டம் அடித்தது தேவையில்லாத வெளி நாட்டுறவு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் தெளிவு படுத்தினர்.

  18. புதிய தலைமுறை மற்றும் தந்தி டி.வி.கள் நடுநிலை டிவி என்ற நிலை மாறி, பா.ஜ.க.வை திட்ட வேண்டும் என்பதற்காக சிலரை தங்கள் பானலில் வைத்து உள்ளார்கள். மக்களிடம் செல்வாக்கு இல்லாத இவர்கள் டி.வி.களில் சிங்கமாக சீருவார்கள். சரி தானே. மக்கள் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள்.

  19. இந்த விஷயத்தில் தம்பட்டம் என்று பலர் ‘வருத்தப் படுகின்றனர்’. ஏன் சார், ஏதோ ஒரு விளையாட்டில் – முக்கியமாக – கிரிக்கெட்டில் ஜெயித்துவிட்டால் – நாடே அலை புரண்டு போதையில் தள்ளாடுகிறது. நாட்டின் பாதுகாப்பு விஷயமாக ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது எங்கிருந்துதான் கோபம் வருகிறதோ ?

    இராணுவத்தின் முகப்பிலிருந்து பார்த்தால் தம்பட்டம் ரொம்பவும் அடித்துக் கொள்ளக் கூடாது என்பது சரியே – . பொதுவாக இராணுவம் சில விஷயங்களில் வெளிப்படை கூடாது என்றுதான் இருப்பார்கள். அடுத்த முறை இம்மாதிரி நடவடிக்கை எடுக்கும் ‘element of surprise’ என்பதற்காக. இந்த கோணத்திலிருந்து விவாதிப்பவர் யாரும் பேசவில்ல.

  20. //இந்த விஷயத்தில் தம்பட்டம் என்று பலர் ‘வருத்தப் படுகின்றனர்’//

    நம் ராணுவம் எல்லை தாண்டி எல்லாம் போகவில்லை. நமது எல்லையில் நடந்த சண்டையை நாடு விட்டு நாடு போய் துவம்சம் செய்து வந்ததாக பீலா விடுவது மோடிக்கு மட்டுமெ தெரிந்த கை வந்த கலை…

    ஏதோ நடத்துங்க… 🙂

  21. //ஏதோ நடத்துங்க//

    இப்படி பேடிகளை போல இல்லமால் ????

    பிரான்ஸ், துனிசியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் நேற்று ஒரே நாளில் ஒரே ஸ்டைலில் தாக்குதலை அரங்கேற்றி 65 பேரை கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ்

  22. திரு சுவனபிரியன்

    செய்திகளை வைத்துதான் என் போன்றவர்கள் இந்த விஷயத்தில் பேசுகிறோம். நீங்கள் ஒரு வேளை நேரிலேயே
    …//நமது எல்லையில் நடந்த சண்டையை ..// பார்த்திருந்தால் அதை ஊடகங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொண்டு செல்லலாமே.

  23. //செய்திகளை வைத்துதான் என் போன்றவர்கள் இந்த விஷயத்தில் பேசுகிறோம்.//

    That you should do more closely.

    According to newspaper reports, the picture released and came on all newspapers was denied by Army officials. They said it was an old pic, not related to the Burmese operation.

    2. Burma military junta denied that Indian Army operated within their soil. The operation was from Indian soil only.

    3. Indian government said first they entered Burma and did it. Later on, when it was pointed out by Burma negatively, Indian government did not further talk about it.

    So, what we came to know are all conflicting information. Army all along kept mum, keeping with Army traditions.

    We don’t know whether we entered or not. All that we now know there was no coordination between the news agencies and the Army. The proper course should have been that government newsagencies like PTI, ANI, UNI should have been briefed by the Army PRO and only on that briefing, all news should have been out. In this case, it appears nothing of that sort had happened.

    When you write here, you should write based on all news.

    One silver lining in all this: a perfect yes from Burma for this operation – Whether on their soil or in our soil doesn’t matter.

  24. திரு சுவனபிரியன்..
    //நம் ராணுவம் எல்லை தாண்டி எல்லாம் போகவில்லை. நமது எல்லையில் நடந்த சண்டையை நாடு விட்டு நாடு போய் துவம்சம் செய்து வந்ததாக பீலா விடுவது மோடிக்கு மட்டுமெ தெரிந்த கை வந்த கலை…
    ஏதோ நடத்துங்க… :-)//

    //மோடிக்கு மட்டுமெ தெரிந்த கை வந்த கலை– // அவருக்கும் மேல ஒருத்தர் இருந்தார்?! பீலா விடுவதோடு அல்லாமல் – இன்றுவரை எல்லா இஸ்லாமியர்களையும் மடையர்கள் ஆக்கிக்கொண்டு. முதல் போர் – வியாபாரிகளின் பொருட்களை கொள்ளை, கொலை செய்வது – முதல் போர். (சத்தமே வராதே). ஏன் என்றால் அவர் இறை தூதர். என்ன வேணுனாலும் செயலாம், சொல்லலாம். நம்பணும் இஸ்லாமிய கடமை.
    திரு சுவனம் ” ஷஹாதத்து அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் ” இதற்க்கு பொருள் எல்லா முல்லா, இமாம் etc சொல்வதை எல்லாம் பின் பற்ற வேண்டும் என்பதுவோ? ?

  25. /We don’t know whether we entered or not.//

    இன்றுதான் இந்த பதிலைப் பார்த்தேன் திரு BS அவர்களே.

    நாங்கள் நம் ராணுவம் சொல்வதை – அல்லது அரசு சொல்வதை – இந்த விஷயத்தில் நம்புகிறோம். ஆனால் நீங்கள் மிகவும் ‘தெளிவாக’ சொல்லிவிட்டு பின்னர் எதற்கு மேலே உள்ளதை எழுதுகிறீர்கள் ?

    திரு சுவனபிரியன் சொல்வதுபோல் சொல்லுங்களேன். யார் தடை போடுகிறார்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *