ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…

மனித வாழ்க்கை அவன் வாழும் இடம், பேசும் மொழி என்று ஒவ்வொரு சூழ்நிலைக்கும், மாறுபட்டு அமைவது இயல்பே என்றாலும் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களும், அதை அவர்கள் எதிர் கொள்ளும் தன்மை குறித்து படைப்பாளிகள் காட்டும் வழிகாட்டுதல்களும் பெரும்பாலும் எல்லா மொழிகளிலும், எல்லாக் காலகட்டத்திலும் ஒன்றாகவே இருந்துவந்திருக்கின்றன.  பக்திக் காலச் சூழல் இதற்குத் தகுந்த சான்றாகிறது.

சர்வக்ஞர்

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக மதிப்பிடப்படும் சர்வஞ்ஞர் கன்னட இலக்கிய உலகின் கவிஞர், ஞானி, நடைமுறைவாதி என்ற பன்முகம் கொண்டவர்.  கர்நாடக மாநிலம் தார்வாரைச் சேர்ந்த சங்கர பட்டாவின் மகன் என்பதும், அவரது இயற்பெயர் புஶ்பதத்தா என்பதும் தவிர அவருடைய வாழ்க்கை பற்றிய பிற விவரங்கள் தெளிவாக இல்லை.  சர்வஞ்ஞர் என்பதற்கு ’எல்லாம் அறிந்தவன் ’ என்ற பொருள் வடமொழியில் உண்டு.

படைப்பாளி  அவனது படைப்புகளால்தான் பேசப்படுகிறான் என்பதற்கு கன்னட இலக்கிய உலகில் வீரசைவ மரபு மிகப் பெரிய அடையாளமாகி இருக்கிறது.  பக்தியினூடே  சமுதாயநலம் சார்ந்த கருத்துக்கள் முதன்மை பெறுவது சாத்தியமாகி இருப்பது அதனால்தான்.

சிறு வயதில் இருந்தே நாடோடியாக வாழ வேண்டிய சூழலில் அவர் இருந்ததால்  சாதாரண மக்களின் சிக்கல்களை அவர்கள்வழியில் காட்ட முடிந்திருக்கிறது. தான் வாழ்ந்த காலகட்டத்தில் சமுதாயத்தின் பொருளாதார, சமய பண்பாட்டு நிலைகளின் பாதிப்பையும், அவற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அவர் கருத்துக்கள் அமைகின்றன. மூன்று பதங்களைக் கொண்டதாக அமைந்த வசனங்கள் ’சர்வஞ்ஞர் பதகளு’ என்றே அழைக்கப் படுகின்றன.  ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும் ’சர்வஞ்ஞா’ என்ற முத்திரையும் உண்டு.

சமுதாயம் சார்ந்த சிக்கல்களில் சாதி எல்லாக் காலங்களிலும் முதன்மையிடம் பெற்று வந்திருக்கிறது.  சாதியால் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் அடையும் துன்பங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி பாதிப்புக்கு உள்ளானவர்களும்,  பாதிப்பை ஏற்படுத்துபவர்களும் மாற வேண்டிய தன்மையைக் காட்டுகிறார்.  சில வசனங்கள் கேள்வியும் கேட்டு பதிலும் தருவதாகின்றன.  விடை சிந்தனையைத் தூண்டுவதாகிறது.

 “தாழ்த்தப்பட்டவனின்  வீட்டில்  ஒளிநுழைந்தால் அது

  தீண்டப்படாததாகி விடுமா? எந்த மனிதனின்  வீட்டிற்குள்

  இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான் சர்வஞ்ஞா.”

என்று கேள்வியும் பதிலுமாய் வசனம் அமைகிறது.

இது போலவே

“தாய்நாடு ஒன்றே குடிக்கும் நீர் ஒன்றே

      பயன்படுத்தும் நெருப்பு ஒன்றே எனும் போது

      கடவுள் பெயரில் சாதி எங்கிருந்து வந்தது சர்வஞ்ஞா?”

என்று பதிலைச் சொல்லி விட்டு கேள்விக்கான சாத்தியமே இல்லாமல் போகிற ஆழமான வசனங்களையும் காண முடிகிறது.

மனிதர்களைச் சாதிப் பெயரால் அடையாளம்காட்டி  உயர்வுதாழ்வாக்குகிற  தன்மை  உலகில் மிகஇயல்பாக உள்ளது. இந்தப்போக்கால் வருந்தும் அவருடைய மனவெளிப்பாடு மேலோட்டமான பார்வைக்கு நகைச்சுவைபோலத் தெரிந்தாலும் மனிதன் தன்னை உணர வேண்டிய அவசியத்தில் இருப்பதைத் தெளிவுபடுத்துவதாக பின்வரும் வசனம் அமைகிறது.

   “சாம்பலில் புரண்டு உடலெங்கும் சாம்பல் பூசிக் கொள்ளும் கழுதையை

    யோகி என்று கூறலாமா? ஞானம் இல்லாமல் உடலில் திருநீறு  

    பூசும் யோகியைக் கழுதை என்று  ஏன் அழைக்கக் கூடாது சர்வஞ்ஞா?”

என்று வசனம் கடுமையாக அமைந்திருந்தாலும் உண்மையானதாக உள்ளது.

எதைச் சொல்லும் போதும் எளிமையான உவமை, சான்று,  கருத்துமுறை  ஆகியவற்றையே வசன இலக்கிய மரபாளர்கள் பின்பற்றி இருக்கின்றனர். இவரும் இதற்கு விதிவிலக்கல்ல.  வெளித்தோற்றம், குருட்டு நம்பிக்கைகள், மேல்பூச்சு ஆகியவைமீது மக்கள் எல்லாக் காலத்திலும் நம்பிக்கைவைத்திருக்கின்றனர். ஆனால் அவை உண்மையில் எதற்கும் உதவுவதில்லை என்பதை

 “சந்தனத்தை  முன் நெற்றியில் அப்பிக்கொள்பவன்

       முக்தி அடைய முடியுமானால்

       சந்தனக் கல்லிற்குத் தானே முதலில் முக்தி சர்வஞ்ஞா?”

என்றும்

“தண்ணீரில் தினமும் மூழ்குபவனுக்கு

      மோட்சம் கிடைக்குமானால் தண்ணீரில் பிறந்து வாழும்

      தவளைக்கும் கண்டிப்பாகச் சொர்க்கம்  உண்டு சர்வஞ்ஞா!”

என்றும் கேட்டு  இறைத்தத்துவத்தை புரியவைக்கிறார். இவை  நடைமுறை உவமைகளாக நின்று பாமரனையும் தன்வசப்படுத்தும் நிலைகொண்டவையாகின்றன. அடையாளம் மட்டும் எப்போதும் போதுமானதாக இருக்கமுடியாதென்பது அவர் சிந்தனையாகும். கடவுளின் அருள்பெறக் கடும் விரதங்கள் தேவையில்லை என்றும் சாதாரண மனிதனால் அடைய முடிவதுதான் அது எனவும் புரியவைக்கிறார்.

ஓடத்தை நம்பினால் கரையைச் சேர்வது போல, பரமனை நம்பினால் வேண்டிய நிலையை அடையலாம்,” என்கிறார்.  தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு  உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும்.  பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்.

 “சிலவற்றை அறிந்தவர்களிடம் கற்றுக் கொள்ளலாம்

     சில செயல்களை உற்றுநோக்கி உணரலாம்

     மற்றதை சுயஅனுபவத்தால் மட்டுமே அறியமுடியும்,  சர்வஞ்ஞா!”

என்று கற்பது, உணர்வது, அறிவது என்பவற்றிற்கான வித்தியாசத்தைக் காட்டுகிறார்.  இந்த மூன்றின் மாறுபாடும், இவற்றின் இடையே இருக்கின்ற மிகச் சிறிய இடைவெளியும் எல்லாக்காலத்திற்கும் பொதுவானது என்பது இதன் சிறப்புச் செய்தியாகும்.

பிற வசனகாரர்களைப்  போல சர்வஞ்ஞரும் பெண்ணைப் போற்றுகிறார்.

பெண்ணால் தான் இவ்வுலகம் இன்பம்

          பெண்ணால் தான் வீட்டுலகம்

          பெண்ணே எல்லாச் செல்வமும், சர்வஞ்ஞா!“

எனப் பெண்மையை எல்லாமுமாகக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.  .துறவியாக இருந்து போற்றும் பார்வை இங்கு கவனிக்கத்தக்கது.

நிலம். நெருப்பு, நீர் என்ற இயற்கைச் சக்திகள் பிறவி எடுத்த எல்லோருக்கும் பொதுவானது.  அவைகளுக்கு  மனித உயிர், மற்ற உயிர் என்று வேறுபாடு இருப்பதில்லை.  இதை மனித உள்ளங்கள் உணர வேண்டும். அது மட்டும் உணரப் பட்டால் நம்மிடம் உள்ள ஏற்றதாழ்வுகள் எவ்வளவு அர்த்தம் அற்றவை என்பது புரியும் என்று எல்லாக்காலத்திற்கும் பொருந்தும் சிந்தனையை நம்முன் வைக்கிறார்.  உணரப்படுவதற்கு பெரிய கல்வி அறிவு, ஞானம் தேவையில்லை, .சகவுயிர் நேசிப்புமட்டும் அடிப்படை  மனநிலையாக இருக்கவேண்டும்

எல்லாம்தெரிந்தவர்கள் தெரிந்தவர்களாக இருப்பதற்கு அவர்களின் கர்வமற்ற இயல்புதான் காரணம். ஒவ்வொருவரிடம் இருந்தும் சிறிது சிறிதாகக் கற்றுக் கொண்டு, மலையளவு அறிவுபெற அவ்வியல்பு உதவுகிறது என்ற வசனம் ஒவ்வொரு மனிதனிடமும் அடிப்படையாக அமைய வேண்டிய — ஆனால் இல்லாமல் இருக்கிற தன்மையைக் காட்டுகிறது.

  “ஆடு தீண்டாத இலை இல்லை

              சர்வஞ்ஞர் கூறாத செய்தி இல்லை.”

என்ற கன்னட பழமொழி அவருடைய ஞானத்தைப் பறைசாற்றுவதாகிறது.

39 Replies to “ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…”

  1. சர்வக்ஞர் நமது சித்தர்கள் மற்றும் வள்ளலார்போன்றே மானிட சமத்துவத்தை வலியுறுத்தியவர்.

  2. No he can’t be compared to Sithars and Vallalaar. Many sithars roamed around with certain identities only – they just disowned their castes and clans; but they didn’t give up their thiruneeru, and other identifiable things.

    Vallalaavar wanted an identity of being unisex. So, he wore a white robe all over his body. If it is not identity, then what else?

    Here, this Kannada sage repudiates wholly all kinds of outward show.

    His stand on Castes won’t be accepted by many Tamilhindu writers and commenters. I have read Malarmannan here and in Thinnai adovating the essentiality of castes. He only wanted the differences w/o any hatred or animosity or holier than thou attitude. Others have written here that castes have served our Hindu society well in the past. Their perversion was a later development thanks to the ingress of Muslims in India.

    This Kannada poet has nothing to do with castes at all. He wants them to go. Their mere presence will diviide society neatively, he feels.

    I wonder how he was let alive in Karnatka because it is there still that non-brahmins should roll over the left over leaves of Brahmins to cure their skin diseases – a ritual that happens every year in Subramanya temples. Caste is alive and kicking in Karnataka, which means, this sage is only to read as poetry, and forgotten.

    About TN, less said the better. Castes are supported by all. Even the claims that dalits are lower to all are most welcome – witness the support PMK enjoys among OBCs and Brahmins also.

    Read this Kannada poet and forget. You are safe in TN and Karnataka.

  3. //I wonder how he was let alive in Karnatka because it is there still that non-brahmins should roll over the left over leaves of Brahmins to cure their skin diseases – a ritual that happens every year in Subramanya temples//

    Add to this the ritual of separate row for Brahmins and Non brahmins in serving free food at Mantralayam highlighted by Haran Prasanna, a Kannadiga himself, in an illuminating essay in this very Tamilhindu.com. One commenter was angry that this magazine had allowed the essay 🙂

    Dhanasekan can search for the essay and read all the comments and how Haran Prasanna was vilified for writing the essay here.

  4. மிக அருமையான பதிவு. சர்வ்க்ஞ்சரின் இந்தப் பாடல்களை எல்லாம் தமிழில் அழகுற மொழிபெயர்த்து எல்லோரும் படித்துப் பயன்பெறும் வகையில் வெளியிடலாமே மீனா அவர்களே

  5. ஸ்ரீமதி மீனா அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

    \\ மனித வாழ்க்கை அவன் வாழும் இடம், பேசும் மொழி என்று ஒவ்வொரு சூழ்நிலைக்கும், மாறுபட்டு அமைவது இயல்பே என்றாலும் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களும், அதை அவர்கள் எதிர் கொள்ளும் தன்மை குறித்து படைப்பாளிகள் காட்டும் வழிகாட்டுதல்களும் பெரும்பாலும் எல்லா மொழிகளிலும், எல்லாக் காலகட்டத்திலும் ஒன்றாகவே இருந்துவந்திருக்கின்றன. \\

    வ்யாசத்தின் முதல் வாசகமே முத்து முத்தாக அமைந்தது என்றால் மிகையாகாது. பற்பல மொழிகளிடையே மொழிபேசுபவர்களிடையே வேற்றுமைகள் உண்டு தான். ஆயினும் ஒற்றுமைகளை கன கச்சிதமாக தாங்கள் பகிர்ந்ததற்கு உளமார்ந்த நன்றிகள். வர இருக்கும் சுதந்திரதினத்தை மனதில் இருத்தி இந்த அருமையான வாசகத்தை தேசஒருமைப்பாட்டிற்கு ஒரு அரைகூவலாகவே எடுத்துக்கொள்கிறேன்.

    சர்வக்ஞர் சுட்டிக்காட்டியுள்ள மானுட சமத்வமும் விளக்கிய முறையும் மிக எளிமையான விளக்கங்களாக எல்லோராலும் புரிந்துகொள்ளக்கூடியனவாக இருக்கின்றது.

    ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் ஷாக்காக்களிலும் சங்கத்தின் பயிற்சி முகாம்களிலும் இதில் சொல்லப்பட்டுள்ள விளக்கங்கள் செயல்பாட்டில் இருப்பதைக் காணலாம்.

  6. //I wonder how he was let alive in Karnatka because it is there still that non-brahmins should roll over the left over leaves of Brahmins to cure their skin diseases – a ritual that happens every year in Subramanya temples//

    பி.எஸ். என்பவரின் முழு அறியாமையும் காழ்ப்புணர்வுமே இதில் வெளிப்படுகிறது. சர்வக்ஞர் மட்டுமல்ல, வீரசைவ மரபின் ஸ்தாபகர் பசவேஸ்வரர், கிருஷ்ண பக்தர் கனகதாசர் உட்பட சாதியத்திற்கு எதிராகப் போராடிய பல இந்து ஞானிகள் அங்கு தோன்றீயிருக்கிறார்கள். கர்நாடகத்தின் பல பகுதிகளீல் வீரசைவ மடங்கள் இன்றூம் ஆன்மீக நெறியைப் பரப்பி, கல்வி, மருத்துவ சேவைகளை மிகப்பெரிய அளவில் செய்து வருகின்றன. திராவிட இயக்கத்தால் சீரழிக்கப் பட்ட தமிழ் நாட்டை விட, சமூக சமுத்துவ உணர்வு கர்நாடகத்தில் நன்றாகவே இருக்கிறது என்பதே உண்மை.

    இங்கு பி.எஸ் குறிப்பிடும் இந்த “எச்சிலில் புரளும் சடங்கு” குறித்து ஜெயமோகன் ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்.. எந்த கலாசார, வரலாற்றுப் புரிதலும் இல்லாமல் எழுதும் பி.எஸ்ஸின் வாதம் எவ்வளவு அபத்தமானது என்பது அக்கட்டுரையை வாசித்தால் தெரியும்.

    எச்சிலில் புரள்வது என்னும் சடங்கு – https://www.jeyamohan.in/33437

    // விருந்தினரும் இரவலரும் உணவுண்ட இலை புனிதமானது என்ற எண்ணம் நம் சமூகத்தில் பல தளங்களில் இருந்திருக்கிறது. இப்போதுகூட திருச்செந்தூரில் அன்னதானம் செய்துவிட்டு அந்த எச்சில் இலைமேல் உருண்டு நேர்த்திக்கடன் தீர்க்கும் சடங்கு அடிக்கடி நிகழ்கிறது. பல அம்மன்கோயில்களில் இவ்வழக்கம் காணப்படுகிறது. காசியில் இது அன்றாடக்காட்சி.

    ஆகவே பிராமணர்களுக்கு உணவிடுதல் என்பது சென்றகாலகட்டத்தில் உயர்சாதி எஜமானனுக்கு அடிமை சோறுபோடுவதாக இருக்கவில்லை. இந்தியாவில் நிலமும் அரசும் என்றுமே இரண்டாம், மூன்றாம் படிநிலையைச்சேர்ந்த சாதிகளுக்குரியதாகவே இருந்திருக்கிறது. அவர்களை அண்டித்தான் பிராமணர் வாழ்ந்தனர். பிராமணபோஜனம் என்பது அந்த அதிகாரசாதிகளால் அளிக்கப்படும் ஒருவகை அன்னதானமே. மிகுந்த பக்தியுடன் செய்யப்படும் அன்னதானம்.

    ஆனால் இதைச்செய்பவர்கள் தலித்துக்கள் மட்டும் அல்ல. மிகப்பெரிய நில உடைமையாளர்களான நடுத்தரச்சாதியினர்தான் அதிகமும். காசர்கோடு, புத்தூர் பகுதி மல்லிகார்ஜுனர் கோயில்களில் நானே பலமுறை கண்டிருக்கிறேன். அத்துடன் பிராமணபோஜனத்துக்கு மட்டும் இப்படிச்செய்கிறார்கள் என்பதும் பிழை. எல்லா சாதியினரும் அமர்ந்து உண்ணும் பந்தியிலும் இதைக் கண்டிருக்கிறேன். கும்பளா என்ற ஊரில் ஓர் ஆலயத்தில் நான் சாப்பிட்ட பந்தியில் சிலர் இப்படி உருண்டதைக் கண்டு மிகுந்த சங்கடம் அடைந்திருக்கிறேன். அவர்கள் குழந்தை பிறப்பதற்காக அப்படி வேண்டியிருந்தார்கள் என்றார்கள்.

    தென்கனராவில் தலித்துக்கள் பரம ஏழைகளோ அடிமைகளோ அல்ல. நான் நன்கறிந்த தென்கனரா மிக ஆரம்பகாலத்திலேயே நிலச்சீர்திருத்தம் நிகழ்ந்த பகுதி. சொந்தமாக சற்று நிலம் இல்லாத தலித்துக்கள் அங்கே அனேகமாக இல்லை. அவர்களின் பொருளியல்நிலையும் சமூக நிலையும் மேம்பட்டவை. இச்சடங்கில் தலித்துக்கள் மட்டும் எச்சிலில் உருண்டார்கள், உருளச்செய்யப்பட்டார்கள் என்பதும் வெறும் பொய்ப்பிரச்சாரம் மட்டுமே. சமூகத்தின் பொதுமனநிலைக்குள் அவர்களும் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.

    ஆக, இச்சடங்கை நான் எப்படி பார்க்கிறேன்? இது இந்தியச்சமூகத்தில் தொல்பழங்காலம் முதலே இருந்துவரும் சடங்கு. விருந்தினர், இரவலர், அலைந்துதிரியும் ஞானிகள் போன்றவர்களுக்கு உணவிடும்போது உணவிடுபவன் கடவுளுக்கு வேள்விஉணவு படைக்கும் மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் உணவுண்ட எச்சில் இலை வேள்விச்சாம்பல் போல புனிதமானது என்றும் கருதப்பட்டது.

    அதன்பின் ஒரு காலகட்டத்தில் அந்த எச்சில் இலை நோய்களை தீர்ப்பது என்றும், கடவுள் அருள் கொண்டது என்றும் மனநிலை உருவாகியது. அது கடவுளுக்கான வேண்டுதலாக நீடித்தது. எல்லா மதத்திலும் இச்சடங்கு இருந்தது. விருந்தினருக்கும் இரவலர்களுக்கும் உணவு படைத்த இலைமீது அங்கப்பிரதட்சிணம் வைப்பது என்ற சடங்காக அது இன்றும் நீடிக்கிறது

    பிராமணர்களுக்கு உணவளிக்கப்பட்டது அவர்கள் உயர்சாதியினர் என்பதற்காக அல்ல. அவர்கள் எஜமானர்கள் என்பதற்காக அல்ல. மாறாக அவர்கள் அன்றைய சமூக அமைப்பில் கல்வி, மதச்சடங்கு இரண்டை மட்டுமே தொழிலாகச் செய்து யாசகம் பெற்று வாழவேண்டியவர்களாக அமைக்கப்பட்டிருந்தார்கள் என்பதனால்தான். அவர்களுக்கு உணவளிக்கப்பட்டது சமணர்களும் பௌத்தர்களும் தங்கள் துறவிகளுக்கு உணவளித்த அதே மனநிலையுடன்மட்டுமே. அக்காரணத்தாலேயே அவர்கள் உண்ட இலையும் புனிதமானதாக கருதப்பட்டது… //

  7. /////அக்காரணத்தாலேயே அவர்கள் உண்ட இலையும் புனிதமானதாக கருதப்பட்டது///

    மண்ணாங்கட்டி!. அவன் (=பிராமணன்) உண்ட இலை “யும்” புனிதமானது என்றால் அதில் இருந்த உணவும் புனிதமானதுதானே? அந்த புனிதமான உணவை சமைத்தவனின் மனம் எவ்வளவு புனிதமானது? அப்படி உணவு சமைத்து படைத்த புனிதமானவனை எச்சில்மீது புரள சொன்னது யார்? பக்தி முத்தி அவனே (=உணவு படைத்தாவன்) புத்தி கெட்டுபோய் அதன்மீது புரண்டாலும் அதை அவன் (=பிராமணன்) தடுத்திருக்கவேன்டாமா? அதுதானே அவன் கற்ற கல்விக்கு அழகு?

  8. //அதுதானே அவன் கற்ற கல்விக்கு அழகு?//

    பிறருடைய எச்சிலில் உருளுவது அபத்தமான செயல் என்று உருளுபவன் தெரிந்துகொள்வதற்கு அவன் என்ன IAS படித்திருக்க வேண்டுமா ? இவன் இதை செய்யாமல் இருந்தால் பிராமணன் போய் அவனிடம் என் எச்சிலில் உருளு என்று கெஞ்சவா போகிறான் ?

    சிவராத்திரி சமயத்தில் மசானகொல்லை என்று ஒரு கோரமான வழிபாட்டு முறை உண்டு. ( வேலூர் பக்கம் சென்றால் ஆடுகுட்டியை கடித்து கொலை செய்யும் கோரத்தைப் பார்க்க சகிக்காது ) இதெல்லாம் செய்வது பிராமணனா ?

    பிராமண எதிர்ப்பு எங்களுக்கு பழகிப்போன விஷயம். பலர் அதில் இருந்த பல உண்மைகளை உணர்ந்து எங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டும் இருக்கிறோம்.

    ஆனால் எதற்கெடுத்தாலும் brahmin bashing என்பது ஒரு சலிப்பைத் தருகிறது.

  9. நான் ஒரு இந்துமத விரோதி அல்ல. ஆனால் அதே நேரத்தில் இந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும் என்பதே என் குறிக்கோள். அதற்காக நான் ஈவேரா ஆதரவாளனும் அல்ல. ஈவேரா ஒரு அரசியல் வியாபாரி. அந்த ஆள் மதங்களை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் இந்து மதத்தை மட்டும்தான் விமர்சித்தான். அப்படியானால் இஸ்லாம் ஒரு மதமில்லையா? அவர்களை விமர்சித்தால் அவனை முஸ்லிம்கள் உயிரோடு விடமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்த பயந்தாங் கொள்ளிதான் அந்த ஈவேரா. (1) ////// சமூக அமைப்பில் கல்வி, மதச்சடங்கு இரண்டை மட்டுமே தொழிலாக (2) //////அவன் என்ன IAS படித்திருக்க வேண்டுமா ? பிராமணன் போய் அவனிடம் என் எச்சிலில் உருளு என்று கெஞ்சவா போகிறான் ?///////
    ஆமாம் அவன் படிக்காதவன்தான். ஆண்டாண்டுகாலமாக கல்வியை அவர்கள் தன ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். இப்போதுதான் இவர்கள் படிக்க துவங்கி இருக்கிறார்கள். ஆனாலும் அவனது ரத்தத்தில் ஊறிப்போன அடிமை புத்தி மட்டும் இன்னும் மாறவில்லை என்பதே உண்மை. அதனால்தான் ”அவன்” சாப்பிட்ட எச்சில் இலை மீது ”இவன்” உருளுகிறான். அவன் எச்சில் மீது உருண்டால் இவன் தோல் வியாதி தீரும் என்று ”அவன்” தானே கதை விட்டான்.(((கடவுளையும் எண்ணற்ற கதைகளையும் உண்டாக்கிவிட்டவன் யாராம்? இந்த படிக்காதவனா? அல்லது அந்த படித்தவனா? ))) அவன் சொன்னதை உண்மையா பொய்யா என்று ஆராயாமல் இவன் அதை நம்பிவிட்டான். அதனால்தான் உருளுகிறான்.

    மசான கொள்ளையில் மட்டும்தான் அக்கிரமம் நடக்கிறதா?
    1. கடவுள் சிலைக்கு பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் என பல அபிஷேகங்களை யார் செய்கிறது? இத்தனை பொருட்கள் மூலம் குளிப்பட்ட கடவுள் என்ன அவ்வளவு அழுக்கு பிடித்தவரா?
    2. அம்பாள் அருள் தருவாள் பொருள் தருவாள் என்று பக்தனிடம் பசப்பு வார்த்தைகளை சொல்லும் ”அவன்” அந்த அம்பாளிடமே அவனுக்கு தேவையான பொருளை கேட்காமல் பக்தனிடம் (காசுக்காக) ஆரத்தி தட்டை நீட்டுவதேன்?
    (என் கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் வந்தால் மீண்டும் மீண்டும் வருவேன்)

  10. yaaraiyum, எச்சில் இலையில் புரள இந்து மதம் ஆணை idavillai. அவரவர்கள் குடும்ப valakkapadi, palaver சம்பிரதாயங்கள் kadaipidikkiraarkal. இதில் எது உசத்தி எது மட்டம் என்று சொல்பதற்கு அடுத்தவர்களுக்கு உரிமை illai.

  11. திரு சிவஸ்ரீ. விபூதிபூஷண் வீர சைவத்தைச் சேர்ந்தவர் அல்லவா? அவர் திரு சக்திவேல் சொல்வதை ஏற்கிறாரா?

  12. அதிதிகள் உண்ட எச்சில் இலையில் உருள்வது, உருளும் பக்தனின் மன நிலையைப் பொறுத்தது. இஹற்கு எந்த இந்து சமய நூல்களிலும் விதியில்லை. நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் ஊருக்கு அருகிலுள்ள தென்கயிலாயம் எனும் வெள்ளிங்கிரிமலை அடிவாரத்தில் அன்னதானம் நடக்கும். அதனை நடத்தியவர் அக்காலத்தில் பிரபலமாண உப்பு வியாபாரி. மசனம்மாள் உப்பு வியாபாரம் என்பது அவருடைய நிறுவனத்திற்குப் பெயர். வெள்ளிமலையெனக் குவிந்திருக்கும் அன்னத்திற்கு வழிபாடு செய்தபின் அன்னதானம் நடக்கும். அன்னதானத்தை நடத்தியவரோ, உண்டவரோ யாரும் பிராமணர்கள் அல்லர். இன்ன சாதியினர் என்பது ஆருக்கும் தெரியாது. அனைவரும் உண்டபின்னர் அன்னதானம் நடத்தியவர் தன் பெரிய உடலைக் கொண்டு எச்சில் இலிகளின்மீது புரள்வார். அவரைத் தொடர்ந்து வேறு சிலரும் புரள்வர். பக்தர்கள் தம் மனநிலையில் செய்யும் சில செயல்களை அவர்களுடைய மனக் கண்ணில் நோக்குதல் வேண்டும். இதுவே தெய்வபக்தி உடையவர்களின் மனநிலையும் கருத்தும். பக்தர்கள் சாதாரணமக்களின் மனநிலையினின்றும் வேறுபட்ட மனநிலைஉடையவர்கள் என்னும் உண்மையை அடியவர்களின் (கிறித்துவம், இஸ்லாம், சைவம், வைணவம் எந்தமதமாக இருந்தாலும்) வாழ்க்கையப் படித்தவர்கள் அறிவர்.உனக்கும் பிடிக்கவில்லை என்றால் நீ அங்கு செல்லாதே; நீ உருளாதே. உன்னைச் சார்ந்தவர்கள் உருண்டால் உன் கருத்தை அவர்களிடம் சொல்லு. இதன் வழி சாதி வெறி ஊட்டாதே.

  13. திரு HONEST MAN

    //நான் ஒரு இந்துமத விரோதி அல்ல//

    நான் இந்து மத விரோதியாக ஈரோட்டுப் பாதையிலே ஒன்று இரண்டு வருடமல்ல 22 வருடங்கள் இருந்திருக்கிறேன். பெரிய போராட்டங்கள் எல்லாம் ஒன்றும் செய்து விடவில்லை. ஆனால் வைதீகர்களை உங்களை விட மோசமாகத் திட்டியும் இருக்கிறேன். எப்போது சலிப்பு வந்ததென்றால் – அவ்வப்போது சிறு பேச்சுக்கள் பேசும்போது ஒரு முறை தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் reservation poilcy இல் அரசு வேலைக்கு மாத்திரம் செல்வதாகு பதில் பிற துறைகளுக்கு செல்ல ஆரம்பிக்கவேண்டும் என்றேன். இது பேசியது 1994 இல்.
    அப்போது நம் நாட்டில் IT மிக வேகமாக ஆரம்பித்த நேரம். மிகவும் அருமையான சந்தர்ப்பம் என்றேன். உடனே அங்கிருந்த தலித் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து ‘ பாப்பார புத்த்யைக் காண்பிட்சுட்டயே ‘ என்று சொன்னார்கள். எனக்கு ச்சே என்றாகிவிட்டது. நான் பூணலை கழட்டி எறிந்துவிட்டு ஜாதி பார்க்காமல் பழகி வந்தேன். ஆனால் அவர்கள் என்னை பாரப்பனனாகத் தான் பார்திருக்கார்கள்.

    சரி சுய சரிதை போதும். இன்றும் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி அறிவு குறை, இல்லை என்பதெல்லாம் சும்மா கதை. ஒன்றுமே படிக்காதவன் கூட டிவி விவாதங்களை வைத்தே அறிவு பெறக் கூடிய நிலை வந்து விட்டது.

    திரும்ப திரும்ப பார்பனர்கள் மூளை அதிகம் என்று ஒரு புலம்பல். அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை சார். நான் CA படிக்க ஆரம்பித்து 8 முறை தோல்வி அடைந்து ( ஐயோ மீண்டும் சுய சரிதை ! ) குமாஸ்தாவாக வேலை ஆரம்பித்து குமாஸ்தாகவே ஓய்வும் பெற்றேன். களிமண் மூளை. என்போல் கோடி பிராமணர்கள் உள்ளனர்.

    சரி தவறு என்று தெரிந்து கொள்வதற்கு மீண்டும் சொல்கிறேன் IAS படித்திருக்க வேணும் என்பது இல்லை. ஆராய்ந்து பார்க்கும் பொறுமை வேண்டும்.

  14. //அதிதிகள் உண்ட எச்சில் இலையில் …//

    திரு முத்துக்குமாரசுவாமி!

    அதிதிகள் என்றால் என்ன பொருள்?

    தமிழில் கேள்விப்பட்டதேயில்லை. கொஞ்சம் சொல்லுங்கள் சார்.

  15. //yaaraiyum, எச்சில் இலையில் புரள இந்து மதம் ஆணை idavillai. அவரவர்கள் குடும்ப valakkapadi, palaver சம்பிரதாயங்கள் kadaipidikkiraarkal. இதில் எது உசத்தி எது மட்டம் என்று சொல்பதற்கு அடுத்தவர்களுக்கு உரிமை illai.
    //

    திரு கோபாலசுவாமி!

    இங்கு பேசப்படும் சடங்கு, ஒரு குடும்பச்சடங்கன்று ஒரு குடும்பத்தாரின் விருப்பத்திற்காக என்று சொல்ல.

    இஃதொரு கோயில் சடங்கு. எனவே இந்துமதச்சடங்கே. இந்துமதம் சொல்லவில்லையென்றால், ஏனந்த சடங்கு?

    சொல்லுங்கோ.

  16. ஐயன்மீர் பெரியவிவாதத்தில் அடியேனையும் இழுத்துவிட்டீர்கள். முதலில் உறுதியாகசொல்கிறேன் ஸ்ரீ சக்திவேல் மற்றும் முனைவர் ஐயா ஆகிய பெரியவர்களின் கருத்துக்களை ஒரு சைவனாக வீரசைவனாக ஒத்துக்கொள்ளுகிறேன் ஏற்றுக்கொள்கிறேன். அவற்றை வழி மொழிகிறேன்.
    சைவத்திலும் வைணவத்திலும் சரி அடியார்களின் எச்சில் உயர்வானதாகவேக்கருதப்படுகிறது. இதில் சாதிவர்ண வேறுபாடு இல்லை. கருனாடகத்தில் இந்த எச்சில் இலைமேல் புரளுவதை ஒரு சாதி சிக்கலாக வைத்தபோது புகைப்படங்களோடு அதை ஓர் நண்பர் நிராகரித்தார். அதிலே ஒரு முப்புரி நூல் அணிந்த பிராமணர் உச்சிஷ்டத்தின் மீது புரள்வதாகக்கண்டோர் வாயடைத்தனர். ஹிந்து சமயங்களைப்பொருத்தவரையில் கட்டாயவழிபாட்டுமுறைகள் பெரும்பாலும் இல்லை. விரும்பினோர் செய்யலாம். வேண்டாம் என்போர் விட்டுவிடலாம்.

  17. குருவின் எச்சில் ஜங்கமர்களின் உச்சிஸ்டத்தினை சாப்பிடுவது இறையருள் தரும். அவர்களது ஸ்ரீ பாத தீர்த்தம் பாதோதகம் எனப்படும் அதை அருந்துவதும் உயர்வானது. பாதோதகம் கலக்காமல் எதையும் உண்பதில்லை என்பது வீரசைவ ஆச்சாரமாகும். வீரசைவ அடியார்களுக்குள் எச்சில் தீட்டே அல்ல. எல்லோரும் ஒரே இலையில் சாப்பிடுவது கூட மிக சகஜமானது. ஸ்ரீ வைணவத்திலும் இந்த நம்பிக்கை உண்டு. கோவைக்கு அருகில் உள்ள காரமடை ரங்க நாதரின் தாசர்கள் வாழைப்பழம் கவாளம் எடுப்பார்கள். அவர்கள் வாயிலெடுத்தக்கவாளத்தினை கை நீட்டி வாங்கி சாப்பிடுவது ஒரு மரபாகவே இருந்தது. இந்த வழக்கங்கள் எல்லாம் பகுத்தறிவின் ஆதிக்கத்தால் குறைந்துவிட்டன என்றாலும் அழியவில்லை. இதையெல்லாம் வெறும் ஜடவாத அறிவியலால் புரிந்துகொள்ள முடியாது. அதை பக்தி என்ற உயர்ந்த நிலைவாய்த்தவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

  18. இந்தக்கட்டுரை எதை சொல்லவருகிறது என்பதைப்புரிந்துகொள்ளாமல் விவாதிப்பது பயனற்றது. BS என்ற அன்பர் இங்கே விவாதத்தினை திசைதிருப்பிவிட்டுள்ளார். சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஹிந்து சமய நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் முடிச்சுப்போடுவது ஒரு முற்போக்கு(?) நடவடிக்கை என்று கருதுவோர் அப்படித்தால் பேசுவார்கள் எழுதுவார்கள். சாதி வர்ண அமைப்பை நிராகரித்தவர்கள் மறுத்தவர்கள் பாரத நாட்டில் காலம் காலமாக தொடர்ந்துவருகிறார்கள். புத்தர் மஹாவீரர், பக்தி இயக்கம், வீரசைவ தாஸர் இயக்கம், மஹாராஸ்டிர பக்தி யியக்கம், வடனாட்டில் நிர்குண சகுண பக்தி இயக்கம் என்று தொடர்ந்து சாதி முக்கியம் இல்லை ஆண் பெண் பேதம் முக்கியம் இல்லை, பக்திதான், நேர்மைதான், ஒழுக்கம்தான், ஞானம்தான் முக்கியம் என்ற முழக்கம் தொடர்ந்து கேட்பது அபிராஹாமிய இடதுசாரி திராவிடிய முற்போக்கர்களுக்கு கேட்காது. காரணம் அதை ஏற்றுக்கொண்டால் இயேசு, முகமது, மார்க்ஸ், ஃப்ராய்டு போன்ற அன்னிய சரக்குக்கு இங்கே சந்தையோ இடமோ இருக்காது அல்லவா? இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதுவே முக்கியம் அவசியம்.

  19. மூட நம்பிக்கைகளைப்பற்றி இங்கே விவாதம் சென்றுள்ளது. எது நம்பிக்கை எது மூட நம்பிக்கை என்று பிரிப்பது அவ்வளவு எளிதானதன்று. நம்பிக்கை என்று வருகிறபோது அங்கே உண்மை என்பதை ஆய்ந்து அறியும் வாய்ப்பு இல்லை. ஆகவே நம்பவேண்டியிருக்கிறது.
    நேர்மையான மனிதர் ஆண்டவனுக்கு அபிடேகம் செய்வதைக்கூட வீண் என்றும் மூட நம்பிக்கை என்றும் கருதுகிறார். அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீமிதித்தல், பறவைக்காவடி போன்றவற்றையெல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்றோ மூட நம்பிக்கை என்றோ சொல்லலாம். ஆனால் அதை செய்வது வழிபாட்டில் பயன்படுத்துவது அவர்களின் உரிமை. அதைத்தவறு என்று நாம் சொல்லலாம் ஆனால் அதை அவர்கள் தொடர்வதற்கு உரிமை உண்டு.
    ரங்கன் ஐயா அவர்கள் மசாணக்கொள்ளையை யார் செய்கிறார்கள் என்றக்கேள்வியை இங்கே கேட்டார்கள். மசாணக்கொள்ளை என்பது வாமாச்சார தாந்த்ரீக வழிபாட்டின் எச்சம் ஆகும். புதைத்தப்பிணத்தின் தலையைத்திருகிக்கொண்டுவந்து வழிபாடு செய்யும் பழக்கம் கூட இருந்திருக்கிறது. இவையெல்லாம் சரி என்றோ தவறு என்று சொல்லுவதற்கு அபிராஹாமியர்களுக்கோ அல்லது இடது சாரிகளுக்கோ அதிகாரம் எள்ளளவும் இல்லை. உங்களுக்கு வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். முடியாது என்றால் விட்டுவிடுங்கள். இதனால் உங்களுக்கு ஏதாவது துன்பமோ தொந்தரவோ வந்ததா? அதைப்பற்றிபேசுங்கள்.

  20. நேர்மையான மனிதர்
    “அம்பாள் அருள் தருவாள் பொருள் தருவாள் என்று பக்தனிடம் பசப்பு வார்த்தைகளை சொல்லும் ”அவன்” அந்த அம்பாளிடமே அவனுக்கு தேவையான பொருளை கேட்காமல் பக்தனிடம் (காசுக்காக) ஆரத்தி தட்டை நீட்டுவதேன்?”
    யார் சொன்னது அப்படியென்று? அதைச்சொல்லுங்க.
    பக்தனிடம் ஆரத்தி தட்டை நீட்டுவது அதை அவர்கள் தொட்டு வணங்குவதற்குத்தான். குருக்களான அர்ச்சகர்களை அவமரியாதை செய்வதை அதுவும் ஹிந்து என்று சொல்லிக்கொண்டு இப்படி எழுதுவதைக்கண்டிக்கின்றேன். பல சிவாச்சாரியார்கள் பட்டாச்சாரியார்கள் ஏழையாக இருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா நீங்கள். நேர்மையாக இருங்கள் ஐயா.

  21. ////எச்சில் இலையில் புரள இந்து மதம் ஆணை idavillai////

    இந்து மதத்தில் எதை எதை ஆணையிடுள்ளதோ அதை அதை மட்டும்தான் வாழ்க்கையில் கடைபிடிகிறீர்களாக்கும். அது சரி. கீழ்சாதிகாரனை கோவிலுக்குள் விடாதே என்று இந்து மதம் எங்காவது ஆணையிட்டுள்ளதா? அப்படி எதுவும் இல்லையென்றால் அவன் எதற்கு உள்ளே விட மறுக்கபடுகிறான்? கோவிலுக்குள் யானை போகலாம் நாய் போகலாம் சேவல் போகலாம் வவ்வால் போகலாம் காக்கை போகலாம் மயில் போகலாம் குரங்கு போகலாம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் போகக்கூடாதா? இது அநியாயமாக தெரியவில்லையா? இதை மாற்றவேண்டும் என்று நினைக்காத நீங்கள் எப்படி இந்து என்று பெருமையாக சொல்லிகொள்கிரீர்கள்? ஒரு ஜந்துவுக்கு கொடுக்கும் மரியாதை கூட ஒரு இந்து அரிஜனனுக்கு கொடுக்க மறுப்பதேன்? பதில் சொல்லுங்கள்.

    ///// அடுத்தவர்களுக்கு உரிமை illai.////

    அடுத்தவன் என்றால் முஸ்லிமா? அல்லது கிறிஸ்தவனா? ஆம் அவர்கள்தான் என்றால் உம கருத்தை நானும் ஒத்துகொள்கிறேன் அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை. ஆனால் நான் ஒரு இந்து. இந்த இனிய மதம் அழியக்கூடாது என்ற உண்மையான அக்கறை கொண்ட எனக்கு அங்கே மதத்திற்கு புறம்பாக நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்க எனக்கு நிரம்ப உரிமை இருக்கு.

    /////////இஹற்கு எந்த இந்து சமய நூல்களிலும் விதியில்லை/////

    விதியில் இல்லாததை எதற்கு செய்ய அனுமதிகிரீர்கள்? தெரியாமல் அது பழக்கத்திற்கு வந்துவிட்டாலும் அதை இப்போதேனும் ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏன் உங்கள் மனதில் தோன்ற மாட்டேங்கிறது?

    //////////////பக்தர்கள் சாதாரணமக்களின் மனநிலையினின்றும் வேறுபட்ட மனநிலைஉடையவர்கள் ///// பக்தர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்னங்க வித்தியாசம்? நானும் பக்தன்தான் நீரும் பக்தன்தான். அப்படியானால் அந்த சாதாரண மனிதன் யாருங்க? பக்தன் என்றால் கடவுளின் மறுவடிவமா? அந்த மறுவடிவம்தான் இலையில் உருளுவதா? குப்பை தொட்டியில் போடப்பட்ட எச்சில் இலையில்கூட நாய் உருளுவது இல்லையே?

    /////உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீ அங்கு செல்லாதே///////

    மது எனக்கு பிடிக்கவில்லையென்றால் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க கூடாதா? மது பழக்கம் ஒழியவேண்டும் என்று குரல் கொடுத்தால் அது தவறா? அப்படியானால் மதுவை எதிர்க்கும் காந்தியாவாதிகள் எல்லாம் பைத்தியகாரர்களா?

    இன்றைக்கு எச்சில் இலையில் உருண்டால் புண்ணியம் தோல் வியாதி தீரும் என்று சொல்பவர்கள் நாளை மலஜலம் கழிந்த இடத்தில் உருண்டு புரண்டால் ”நேரடி” சொர்க்கம் கிடைக்கும் என்றால் அங்கேயும் புரளுவார்களா? எதையுமே அந்த ஆண்டவன் கொடுத்த புத்தியை கொண்டு யோசிக்கவே மாட்டார்களா? மண்டையில் தேங்காய் உடைத்தாலும் அதுவும் நல்ல பழக்கம் என்கிறீர்கள்.

    எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தாலும் எத்தனை ராமானுனஜர்கள் வந்தாலும் எத்தனை ராஜாராம் மோகன் ராய்கள் வந்தாலும் முட்டாள்தனமான் மற்றும் அறிவிற்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளுக்கு உங்களை போன்றவர்களின் ஆதரவு இருக்கும்வரை இந்து மதத்தை திருத்தவே முடியாது போல தெரிகிறதே.

  22. கன்னடதேசத்தில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சர்வக்ஞரை மிக அழகாக அருமையாக தி.இரா. மீனா அம்மையார் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் நன்றி. சாதி ஆண் பெண் பேதங்களை நிராகரித்தவர் நிச்சயம் சர்வக்ஞர் என்பதில் ஐயமில்லை. வெற்றுச்சடங்குகளை மறுத்து பரம்பொருளிடத்திலே சரணடைவதையும் பக்திவைராக்கியத்தினையும் போற்றுவோர் நிச்சயம் ஞானிகள் மட்டுமாக இருக்கமுடியும். சர்வக்ஞர் சிந்தனைகளைப்போற்றுவோம்.

  23. C.N.Muthukumaraswamy அவர்கள் பூடாகரமாக சொல்லி இருக்கலாம் அல்லது என் புரிதல் தவறு. செட்டியார்களிடம் நான் இதை பார்த்து உள்ளன்

    //1. கடவுள் சிலைக்கு பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் என பல அபிஷேகங்களை யார் செய்கிறது? இத்தனை பொருட்கள் மூலம் குளிப்பட்ட கடவுள் என்ன அவ்வளவு அழுக்கு பிடித்தவரா?
    2. அம்பாள் அருள் தருவாள் பொருள் தருவாள் என்று பக்தனிடம் பசப்பு வார்த்தைகளை சொல்லும் ”அவன்” அந்த அம்பாளிடமே அவனுக்கு தேவையான பொருளை கேட்காமல் பக்தனிடம் (காசுக்காக) ஆரத்தி தட்டை நீட்டுவதேன்?
    (என் கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் வந்தால் மீண்டும் மீண்டும் வருவேன்)//

    இதற்க்கு எல்லாம் விளக்கம் கொடுத்தவர் பலர் , பலர் . உங்களுக்கு கோப்பி பேஸ்ட் பண்ண தனியாக ஒரு நபர் vendum. திரும்ப திரும்ப வந்தால் மட்டும் வேறு font இல் ஏதும் வருமா என்ன?

  24. அதிதி என்றால் விருந்தினர். மட சேனா என்பது கர்நாடகாவிலுள்ள குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் ஒரு பிரபலமான சடங்கு. கோயிலுக்கு வருபவர்கள் என்ன அதிதிகளா? பக்தர்கள் அல்லது சேவார்த்திகள், இல்லையா? அவர்கள் பலபல ஜாதிகளிலிருந்தும் வருபவர்கள். அவர்களுள் பிராமணர்களுக்கு மட்டும் தனிப்பந்தி போடப்படுகிறது. பின்னர் அவ்வெச்சிலைகளில் பிராமணரல்லாதோர் உருண்டு புரளும் சடங்கைச் செய்கின்றார்கள். அப்படிப்புரண்டால் அக்கோயில் நம்பிக்கைபடி, உருண்டவர்களின் தோல் வியாதிகள் சுப்பிரமணிய சுவாமியின் அருளால் குணமாகும்,

    அக்கோயில் பிரபலமான இந்துக்கோயில். அச்சடங்கு இந்துச்சடங்கு. திரு கோபாலசுவாமி சொல்வதை ஏற்றால், அக்கோயில்காரர்கள் இந்துமதத்தில் அனுமதிக்கப்படா அல்லது சொல்லப்படா ஒன்றை சொல்லியதாக நிறைவேற்றக்காரணம்? திரு கோபாலசுவாமிதான் விளக்கவேண்டும்.

    திரு கோபாலசுவாமி உரிமை பற்றிப் பேசுகிறார். அதாவது இச்சடங்கைப் பற்றி எதிர் விமர்சனம் வைப்பதற்கு உரிமை வேண்டும் என்கிறார். என்ன உரிமை? எவரிடமிருந்து எவருக்குக் கொடுக்கப்பட்டது? புரியவில்லை. கொஞ்சம் ஊகிக்கலாம்: அதாவது விமர்சனம் பண்ணுவோர் இந்துக்களாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களை எப்படி இந்துக்கள் என்று நிரூபிப்பது முதலில்? போர்டைக்கட்டி கழுத்தில் தொங்க விடமுடியுமா|? அல்லது தாசில்தாரிடமிருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டுமா? எப்படி கண்டிபிடிப்பது முதலில். இம்மென்றால் சிறைவாசம்! ஏனென்றால் வனவாசம் என்று பாரதியார் எழுதியதைப்போல, மிகவும் மரியாதையான சொற்களிலேயே அவ்விமர்சனம் வைத்தாலும் வைத்தவரை பார்ப்பனத்துவேசம் பண்ணுகிறாரென்றுதானே சொல்வார்கள்? இதைவிட, விமர்சனமே வைக்காதே என்று மிரட்டல் விடலாமே?

    திரு கோபாலசுவாமி, இந்துமதத்தில் அடிக்கல்லையே தகர்க்கப் பார்க்கிறார். இந்து மதம் எவருக்கும் எவ்வுரிமையையும் கொடுக்கவில்லை. எவருமே தன்னை இந்து என்று நம்பலாம். விமர்சனமும் பண்ணலாம். விமர்சனம் கண்ணியமாக நம்பும்படி இருக்கவேண்டும். அவ்வளவே!

    இந்து அல்லாதோரும் பண்ணலாம். ஆனால், அவர்கள் பண்ண மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு இச்சடங்கு கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். தீண்டாமை இருக்கவேண்டும். உடன்கட்டை இருக்கவேண்டும். விதவைத் திருமணம் கூடாதென்று இருக்கவேண்டும். பிராமணர்களை பிற இந்துக்கள் தொழுதேத்தும் சடங்குகள் நிறைய நிறைய இருக்க இருக்க மிக மிக மகிழ்ச்சி அவர்களுக்கு !

    ஏன்? ஏன்? அப்போதுதான், அவற்றைச் சுட்டிக்காட்டி பிறமக்களை இந்துமதத்திலிருந்து வெளியேற்றித், தம் மதத்தில் எண்ணிக்கையை கூட்டலாம். மிசுநோர்கள் செய்யவில்லையா?

    ஆக, இச்சடங்கு வேண்டுமென்று சொல்லும் திரு முத்துக்குமாரசுவாமி போன்றவர்கள், இதை விமர்சனம் செய்ய உரிமையில்லை என்று சொல்லும் திரு கோபாலசுவாமி போன்றவர்கள். விமர்சனம் பண்ணாதே, அது பார்ப்பனத்துவேசமாகும் என்று சொல்லும் திரு இரங்கன் போன்றவர்கள். வீரசைவத்தின் பேரால் ஆதரிக்கும் திரு சக்திவேல் போன்றவர்கள் – மதமாற்றம் செய்யும் கிருத்துவருக்கும், இசுலாமியருக்கும் இன்ன பிறருக்கும் தங்களையறியாமலே உடந்தையாகிறார்கள்.

    திரு முத்துக்குமாரசுவாமி, உண்மையாகவே எழுதினாரானா? இல்லை கிண்டல் பண்ணுகிறாரா என்றே புரியவில்லை. உண்மையென்றால், அவரது முடிபுகள் தவறாகின்றன. இங்கே அதிதி இல்லை. குடும்பமும் இல்லை.

    சொற்களும் பொருட்களையும் எந்த சடங்கு பேசப்படுகிறது என்பனவற்றையும் நன்கறிந்த பின்னருமே கருத்தெழுதினால் அவருக்கு இத்தவறு நேராமலிருந்திருக்கும்.

    அவர் சொல்கிறார்: உனக்குப் பிடிக்கவில்லையென்றால், நுழையாதே. அவருக்கு இதைச் சொல்லலாம்: —

    இச்சடங்கு “எங்கள் ஜாதியினரை அடிமைப்படுத்துகிறது இதை உடனே நிறுத்துக!” என்று கருநாடகா நீதிமன்றத்தில் ஓபிசி அமைப்பு வழக்குத் தொடுத்திருக்கிறது. Even if their case fails, அவர்களைப் பார்த்து திருகுமாரசுவாமி, உங்கள் ஜாதிக்காரன் ஏன் வந்தான் என்று கேட்க முடியுமா? மேலும் அது பிராக்டிக்கலாக முடியுமா? ஓபிசிக்களும் மற்ற ஜாதியினரும் வரக்கூடாதென்றால், இந்துமதம் எப்படி நிற்கும்? வெறும்பிராமணருக்கா இம்மதம்? Therefore, Thiru Kumarasamy clearly cut at the root of the religion, by making it brahmins only 🙁

    (அடுத்து கட்டுரையையும் திரு சக்திவேல், திரு சிவ விபூதி பூஷன் எழுதியவைகளைப் பற்றியும்)

  25. திரு சிவஸ்ரீ. விபூதிபூஷண் !

    இங்கு எழுதுபவர்களை கிருத்துவர்கள், இசுலாமியர்கள் என்று நினைத்து எழுதுவது தவறு. இந்துமதச் சடங்குகளை கேள்வி கேட்டால் அவர் ஒரு மாவோயிஸ்டோ, கம்யூனிஸ்டோ, தி க வோ, திமுகவோ என்றெடுத்துப்பேசினால், விமர்சனத்தை எதிர்நோக்கிப் பதில் சொல்லாமல் மறைப்பதாகும். அவர்கள் யாரும் இங்கு எழுதவில்லை. இருவர்தான் விமர்சனம் செய்கிறார்கள்; அவர்களுள் நானொன்று. என்னைத் தில்லியில் வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். சும்மா குருட்டாம்போக்கில் எதையும் எழுதக்கூடாது. நான் பலவாண்டுகளாக இத்தளத்தைப்படித்த்தில் எந்த பெரியாரிஸ்டையும் தி மு கவினரையும் இங்கு பார்க்கவில்லை. இசுலாமியர் (சுவனப்பிரியன்) கிருத்துவர்களை (சிசம், ரெபெக்கா) போன்றோரை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆக, அந்நியர்கள் என்று சொல்லிச்சொல்லியே விமர்சன்ங்களை போர்வைக்கடியில் தள்ளுகிறீர்கள். விமர்சனங்களை ஏற்பதுதான் இந்துமதம் என்பதை ஏன் அறிய மறுக்கிறீர்கள்?
    நீங்கள் எழுதிய அனைத்து மடல்களையும் பார்த்தால், சாதிகளுக்கு முக்கியமில்லை வீரசைவத்தில் என்று தெரிகிறது. ஆனால், இச்சடங்கில் சாதிக்கே முக்கியத்துவம் என்பதை பார்க்க மறுப்பதேன்? முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதாகத்தெரிகிறதே?

    // உங்களுக்கு வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். முடியாது என்றால் விட்டுவிடுங்கள். இதனால் உங்களுக்கு ஏதாவது துன்பமோ தொந்தரவோ வந்ததா? அதைப்பற்றிபேசுங்கள்.//

    இதற்கு ஹான்ஸ்டு மேன் பதில் சொல்லி விட்டார். பல நம்பிக்கைகள் இந்து மதத்துக்கே வேட்டு வைப்பதாக இருக்கும்போது, ஒரு சிலரின் விபரீத கற்பனைகளில் உருவாகி கோயில் சடங்காக மாறும்போது, சும்மா விட்டு விடுங்கள்; உங்களுக்குத் தொந்தரவு வந்த்தா? அதைப்பற்றிப் பேசுங்கள் என்றால் எப்படி சார்?
    தமிழ்நாடு முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டம் நடந்துவருகிறதே? போராடும் அனைவரின் தகப்பன்மார், அண்ணன்மார், தம்பிமார எல்லாம் குடிப்பழக்கத்தால் அழிந்தவரா? இல்லை, நமக்கேன் அக்கறை என்றா விட்டார்கள்?
    சமூக அக்கறை கொண்டோர் எப்படி போராடுகிறாரோ, அதைப்போல மதத்தின் மேல் அக்கறை கொண்டோர் பேசுகிறார். உங்களையும் பேசுங்கள் என்கிறார் என்பதைப் படிக்கவில்லையா?

    நம்பிக்கைகள் எல்லாமே. அவற்றுள் மூட நம்பிக்கை, மூடா நம்பிக்கைகள் என்றெல்லாம் கிடையவே கிடையா. எல்லா நம்பிக்கைகளையும் எம்ப்ரைக்கிலாக பேசி முடிக்க முடியாது.

    ஆனால், நம்பிக்கைகளில் பிரிவு உண்டாகிறது.

    ஒன்று. மக்களை நல்வழிப்படுத்தும் நம்பிக்கைகள்;
    மற்றொன்று அவர்களுக்குத் தெரியாமலே அவர்களுக்குக் கேடு விளைவிப்பது.

    இரண்டாவதை கேடான, அல்லது தீய நம்பிக்கைகள் என்று பேரிட்டுவிட்டால் பிரச்சினையேயில்லை. இங்கு பேசப்படும் மதச்சடங்கு பிராமணரை சமூகத்தில் பிறமக்கள் தெய்வத்துக்கு இணையாக வைத்துக் கருதி வழிபடும் வண்ணம் செய்யப்பட்டு இந்துமதத்தில் இல்லாதவொன்றை (சொன்னவர் திரு கோபாலசுவாமி) இருப்பதாகக் காட்டுவதால், இது தீய நம்பிக்கை. இப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

  26. //ரங்கன் ஐயா அவர்கள் மசாணக்கொள்ளையை யார் செய்கிறார்கள் என்றக்கேள்வியை இங்கே கேட்டார்கள். மசாணக்கொள்ளை என்பது வாமாச்சார தாந்த்ரீக வழிபாட்டின் எச்சம் ஆகும். புதைத்தப்பிணத்தின் தலையைத்திருகிக்கொண்டுவந்து வழிபாடு செய்யும் பழக்கம் கூட இருந்திருக்கிறது. இவையெல்லாம் சரி என்றோ தவறு என்று சொல்லுவதற்கு அபிராஹாமியர்களுக்கோ அல்லது இடது சாரிகளுக்கோ அதிகாரம் எள்ளளவும் இல்லை. உங்களுக்கு வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். முடியாது என்றால் விட்டுவிடுங்கள். இதனால் உங்களுக்கு ஏதாவது துன்பமோ தொந்தரவோ வந்ததா? அதைப்பற்றிபேசுங்கள்.//

    திரு சிவஸ்ரீ.விபுதிபூஷன் அவர்களுக்கு
    பிராமணர்களால் இந்த நாட்டுக்கு கெடுதல்தான் நடந்தது என்று எண்ணம் பலருக்கு இருப்பதால் இந்த மசனகொல்லை உதாரணம் கொடுத்தேன். எனக்கு அதில் உடன்பாடு இல்லைதான். வாமாச்சார தாந்த்ரீக வழிபாட்டின் எச்சம் என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இந்த வழிபாட்டின் உள்ளடங்கிய தத்துவத்தை எனக்கு மிக எளிதாக புரிய வைத்தது ஒரு சாஸ்திரிகள்தான். ‘அருவருப்பாக இருக்கே சாஸ்திரிகளே ‘ என்றேன். ‘உனக்கு இந்த பூமியில் எதாவது ஒரு இடம் பயம் என்றால் அது எந்த இடம்? ‘என்று கேட்டார். உடனே நான் ‘ சுடுகாடுதான்’ என்றேன். அவர் ‘ அதுதான் – மரணபயத்தை போக்க பலவழிகள் உள்ளன அதில் இந்த வழிபாட்டு முறை மிகவும் அதீதமான முறை. உனக்கு அதைப் பார்க்கவே பயம் என்றால் அந்தப் பக்கம் போக வேண்டாமே’ என்று முடித்து விட்டார். இருந்தாலும் மிருக வதை மிகவும் கோரமாக நடக்கிறது – சில இடங்களில் – அது வரைக்கும் எனக்கு இதில் ஒப்புதல் இல்லைதான்.

  27. அன்பின் ஸ்ரீ சிவஸ்ரீ விபூதி பூஷண மஹாசய, நமஸ்தே.

    வீர சைவ சம்ப்ரதாயம் பற்றி தமிழ் ஹிந்துவில் நிறைய வ்யாசங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதுவும் அந்த சம்ப்ரதாயத்தில் ஒழுகுபவர்கள் எழுதினால் அது இன்னும் சாலச் சிறக்கும்.

    சைவம் தளத்தில் கீழ்க்கண்ட உரலில் காணப்படும் வ்யாசம் அருமையான தகவல்களைத் தருகிறது.

    ஒருமுறை தாங்கள் ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்களது வ்யாசத்தை ஒட்டிய விவாதத்தில் ஸ்ரீ நீலகண்ட சிவாசார்யரைப் பற்றிப் பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது.

    சமீபத்தில் தமிழகத்திற்கு வந்து தில்லையம்பலவாணப் பெருமானது ஆலய சம்ப்ரோக்ஷணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயர் அவர்கள் கானடாவிலிருந்து வெளிவரும் சிவத்தமிழ் இதழில் சமர்ப்பித்திருந்த

    இன்றைய நிலையில் தில்லைச் சிற்றம்பலமும் இலங்கைத் தமிழரின் பணிகளும்.. என்ற அருமையானதொரு வ்யாசத்தை வாசிக்க நேர்ந்தது.

    ஸ்ரீ ஷர்மா அவர்களது அனுமதியை சிறியேன் பெறவில்லை. இருப்பினும் இந்த அருமையான வ்யாசம் நமது தமிழ் ஹிந்து தளத்து வாசகர்களது வாசிப்பிற்கு வரவேணும் என்ற அபிலாஷையில் கீழே அப்படியே நகலெடுத்திருக்கிறேன்.

    வ்யாசத்தின் உத்தரங்களினூடே இன்னொரு வ்யாசத்தைப் பதிப்பித்தமைக்கு என்னை க்ஷமிக்குமாறு ஸ்ரீமதி மீனா அம்மையாரைக் கேட்டுக்கொள்கிறேன்.

    திருத்தில்லைச் சிற்றம்பலம் என்ற சிதம்பரம் உலகெங்கிலும் வாழும் இந்துக்களுக்கு ஒரு மிக முக்கியமான ஸ்தலம். சைவசமயிகளுக்கு நடராஜர்.. வைணவர்களுக்கு கோவிந்தராஜர் இருபேரும் கொலுவீற்றிருக்கிற பதி.

    கோயில் என்று அழைக்கப்பெறும் இத்தலத்தினை முன்னிறுத்தியே ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லி திருமுறைகளைப் பாடி மீண்டும் திருச்சிற்றம்பலம் சொல்லி நிறைவு செய்வது சைவ வழமை. இதற்குக் காரணம்
    திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட பதி இது. பெரியபுராணம் எழுதப்பெற்ற… வெளியீடு செய்யப்பெற்ற கோயில் இது..

    பஞ்சகிருத்தியங்களான படைத்தல்- காத்தல்- அழித்தல்- அருளல்- மறைத்தல் ஆகியவற்றை ஆற்றும் அகிலாண்ட நாயகனாக இறைவன் அங்கே நடராஜப்பரம்பொருளாக
    திருநடனம் செய்கிறான்.

    அந்த சிதம்பர ஆடவல்லபெருமானை போற்றாத இலக்கியங்கள் இல்லை. பெருமானுக்கு அருகிலேயே அன்னை சிவகாமியாளையும் காண்கிறோம். இத்தலம்
    மாணிக்கவாசகப்பெருமானும் நந்தனாரும் தாண்டவரும் இறைவனோடு கலந்து முக்தி பெற்ற பூமி.

    இப்படி எல்லாச் சிறப்பும் நிறைந்த அழகிய பெரிய கோயில் தில்லைத் திருக்கோயில். இக் கோயிலில் அதிகாலையில் நடக்கிற அற்புதமான பள்ளியெழுச்சிப் பூஜையை தரிசித்தோம். பெருமானுடைய பாதுகைகள் பள்ளியறையிலிருந்து சபாநாதர் சந்நதிக்கு எடுத்து வரப்பெற்று பெரிய மங்கள
    ஆராத்தி காண்பிக்கப்பெற்றது. இதனை தரிசித்த பின் கோயிலைச் சுற்றியுள்ள இலங்கைச் சைவத்தமிழர் பணிகளைப் பார்வையிட விழைந்தோம்.

    இக்கோயிலை சைவப்பெருமக்களின் தலைமையகமாகக் கண்டார் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் பெருமான். அதன் காரணமாக, அவரும் அவர் தம் வழியில்
    சென்றவர்களும் தில்லைத் திருக்கோயிற் சூழலில் அறப்பணிகளில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

    நாவலருக்கு முன்னரே அவர் தம் முன்னோராகிய யாழ். திருநெல்வேலி ஞானப்பிரகாசமாமுனிவர் தில்லையில் அரும் பணியாற்றியிருக்கிறார். மிகுந்த சமய அறிவும் பற்றும் உடையவராக அவர் திகழ்ந்திருக்கிறார். 16ம்
    நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர் போர்த்துக்கேயரின் கத்தோலிக்க வன்கொடுமை மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்திருக்கிறார்.

    ஆனாலும், அப்போதைய இராச்சியம் அவர்களுடையதாய் இருந்ததால்.. இரவோடு இரவாக இலங்கையை விட்டு இந்தியாவிற்கு ஓட வேண்டியவரானார். கோடிக்கரையை அடைந்த அவர் சிதம்பரத்தில் தங்கி.. நிறைய சைவப்பணிகள் செய்திருக்கிறார். நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார். இன்றைக்கு அவர் தம் நினைவாக சிதம்பரத்தில்
    அவரால் வெட்டப்பெற்ற ஞர்னப்பிரகாசர் குளம் ஒன்றே இருக்கிறது.

    இக்குளத்தை தேடி ஒரு தில்லைத் தீட்சிதரை அணுகி விபரமறிந்து ‘மாலை கட்டித் தெரு’ என்கிற இடத்தில் கோயிலுக்கு சிறிது தொலைவில் இக்குளத்தை கண்டோம்.
    ஒரு காலத்தில் நடராஜப்பெருமானின் தெப்போத்ஸவம் நடந்த இக்குளம் இன்று வேதனையான சூழலை அடைந்திருக்கின்றமையையும் காண முடிந்தது.

    இக்குளத்திற்கு முன்பாக நாவலர் பெருமானால் அமைக்கப்பெற்ற சேக்கிழார் பெருமான் திருக்கோயில் அமைந்திருக்கிறது. அன்று காலையில் நாம் சென்ற போது ஆலயம் நடை சாற்றியிருந்தது. ஆனாலும், ஆலயத்தை ஓரளவு பார்க்ககூடியதாயிருந்தது. சிறிய கோயில்.. அழகாக
    இருக்கிறது. ஆனால், அக்கோயிலை தரிசிக்க பெரியளவில் பக்தர்கள் வருவதாக காணமுடியவில்லை. எப்படியோ.. பெரியபுராணம் தந்த சேக்கிழாருக்கு கட்டப்பெற்ற கோயில் நல்லமுறையில் உள்ளது. அதன் அருகே சேக்கிழாருக்கு
    மணிமண்டபம் ஒன்றும் அமைந்துள்ளது.

    இவ்விடத்திலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினரால் பராமரிக்கப்பெறும் புண்ணியநாச்சியார் மடத்தை அடைந்தோம். அதைப் பார்த்த போது பெரிய மகிழ்ச்சி. ஒரு சைவக்குருக்கள் அதை நல்ல முறையில் பேணி
    வருகிறார். அந்த திருமடத்தில் நல்ல வகையான வசதிகள் இருந்தன. உண்மையிலேயே அம்மடம் இலங்கையிலிருந்து சிதம்பர தரிசனத்திற்குச் செல்பவர்களுக்கு ஒரு
    வரப்பிரசாதம்.

    இப்பணியை மேற்கொள்ளும் சைவ பரிபாலன சபையை பாராட்டாமல் இருக்க இயலவில்லை.இன்னும் சில இலங்கையரின் மடங்கள் சிதம்பரத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட போதிலும் என்னால், அவற்றை அடையாளம் கண்டு செல்ல இயலவில்லை.. எனவே, அவற்றின் இயக்கம் குறித்து என்னால் கண்டு கொள்ள இயலாமல் போயிற்று..

    அங்கிருந்து சற்றே தொலைவில் உள்ளது ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி. மிகவும் பழைய கட்டுமான முகப்பு. இப்போதும் நிறைய மாணவ- மாணவியர் அங்கே
    கல்வி கற்கிறார்கள். உண்மையிலேயே நாவலரால் சிறிய பாடசாலையாக ஆரம்பிக்கப்பெற்ற இது தற்போது விரிவு பெற்று உயர்ந்து மேல்
    நிலைப்பள்ளியாகியிருக்கிறது.

    தில்லைத்திருக்கோவிலைச் சேர்ந்த நடராஜதீக்ஷிதர் அவர்களிடமும் வேங்கடேச தீக்ஷிதர் அவர்களுடனும் விசாரித்த போது இந்தப்பாடசாலை வெகு சிறப்பாக இயங்குவதாக அறிய முடிந்தது.. ஆனாலும் அப்பாடசாலை புகழ் பெற்று நாவலரது
    பெயரை தில்லையில் நிலைநிறுத்த வேண்டும் என்பதே நமது பேராவலாக அமைந்தது.

    அப்படியே அங்கிருந்து புறப்பட்டு தில்லைக்காளியை வணங்கி மீளவும் நடராஜர் கோயிலை வந்தடைந்தோம். ஸ்ரீ நடராஜர் கோயிலோடு அமைந்த சிவகாமியம்பாள்
    கோயில், பாண்டி நாயக முருகன் கோயில், கோவிந்தராஜப்பெருமாள் கோயில்
    போன்றவற்றை எல்லாம் முதல் நாளிலேயே தரிசித்து விட்டோம். நிறைவாகவும் ஆடவல்லபெருமானை வணங்கினோம்.

    ஞானப்பிரகாசர்- ஆறுமுகநாவலர்- மட்டுமல்ல நீர்வை சிவசங்கரபண்டிதர்- காசி வாசி செந்திநாதையர்- சதாவதானி கதிரவேற்பிள்ளை- சிறுவை- சி.வை. தாமோதரம்
    பிள்ளை- கோவை சபாபதி நாவலர் என்று பலரும் சிதம்பரத்தில்
    பணியாற்றியிருக்கிறார்கள்.

    இவை குறித்து சிதம்பரம் செல்வதற்கு ஓரிரு நாள் முன் திருவாவடுதுறை ஆதீனம் குருமஹாசந்நிதானம் பரமாச்சார்யாரிடமும் திருப்பனந்தாள் மற்றும் தருமையாதீன தம்பிரான் சுவாமிகளிடமும் பேசும் வாய்ப்புக்கள் கிடைத்தன. அவற்றை இத்தருணத்தில் மனங் கொண்டேன்.

    சிதம்பரம் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு என்று பல காணிகள், தர்மசாதனங்கள் பல இலங்கையில் முக்கியமாக வட இலங்கையின் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கின்றன… பல்லாண்டுகளுக்கு முன் சிவநேயச் செல்வர்களால் செய்யப்பட்ட அந்த தர்மசாதனங்கள் அரசாங்க பதிவுகளில் உள்ளன அன்றி, கண்டறிவதற்கு கடினமாய், பிறரினால் கவரப்பட்டும், கவனிப்பாரற்றும் சிதைவதை அறிய முடிகின்றது..

    இப்போது சிதம்பரம் தீக்ஷிதர்கள் யாழ்ப்பாணம் வருகிறார்கள்… சதுர்வேதி பரமேஸ்வரதீக்ஷிதர் போன்றவர்கள் இலங்கையிலுள்ள சைவ அமைப்புக்களுடனும் தொடர்பில் இருக்கிறார்… யாழ்ப்பாணத்திலிருக்கிற எங்களுடைய கிராமத்து கோவில்களுக்கு கூட, இந்த தீக்ஷிதர்கள் வந்திருக்கிறார்கள்… இது எல்லாம் மீண்டும் சிதம்பரத்துடனான தொடர்பு எழுச்சியுற வழி செய்யலாம்… ஆனால், இப்போதிருக்கிற மக்களின் எண்ணமாற்றம், செயற்திறனில் விரைவாக நிகழும் சாத்தியங்கள் குறைவு..

    ஆனால், தில்லை நடராஜர் பெயரில் இலங்கையில் உருவாகியுள்ள ஸ்தலங்கள் வெகு சிறப்பாக உள்ளன… முக்கியமாக காரைநகர், ஆவரங்கால், கந்தர்மடம், சித்தங்கேணி, மயிலணி (சுன்னாகம்), என்கிற பல ஊர்களிலும் நடராஜருக்கு கோவில் எழுப்பி சைவப்பெருமக்கள் சிறப்பாக வழிபட்டு வருகிறார்கள்..

    ஆக, உண்மையைச் சொல்ல வேண்டுமாகில் இலங்கையிலிருந்து முன் சென்று பெரியவர்கள் தம் பணிகளை சிதம்பரத்தில் நிலை நிறுத்திய அளவிற்கு தற்போது
    அவ்வளவாக அவை அமைந்திருப்பதாக இல்லை. எனினும் எதிர்வரும் காலத்தில் சமாதானம் – சுமுகமான போக்குவரத்து வாய்ப்புகள் நிலவுகிற அடிப்படையில் சிதம்பரம்- யாழ்ப்பாணம்- இலங்கைத் தொடர்புகள் வலுப்பெற வேண்டும். இதன்
    மூலம் சிற்றம்பலவனின் திருவருள் நம் எல்லோரையும் ஆற்றுப்படுத்தட்டும் என்று வேண்டுகிறோம்.

    இதந்தரு மடந்தையொடு இயைந்துயிர் உடம்பு போல்
    விதம்படு உலகங்களில் விரிந்தொளி விளங்குவார்
    கதம்பமொடு துந்துபி வயங்கெழ முழங்கவே
    சிதம்பர நடம் பயில் செழுங்கழல் இறைஞ்சுவாம்.

  28. இந்த வ்யாசத்தை பகிர்ந்தமைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

    யாழ்ப்பாணத்தைச் சார்ந்த ஆறுமுகநாவலர் பெருமான், காசிவாசி செந்திநாதையர், கதிரைவேற்பிள்ளை போன்ற பல சைவ சமயிகளும் தில்லையைச் சுற்றிலும்……… ஈழத்திலிருந்து தில்லையம்பல வாணனை தரிசிக்க வரும் சைவ சமயிகள்…….. தங்குவதற்கு ஹேதுவாக பற்பல சத்திரங்கள், சாவடிகள் மற்றும் மடாலயங்களை எழுப்பியதாகத் தெரிகிறது.

    ஸ்ரீ ஷர்மா மஹாசயர் குறிப்பிட்டிருந்த படிக்கு ஆறுமுகநாவலர் பெருமான் பெயர் தாங்கிய பாடசாலை நன்றாக நடந்து வருகிறது.

    பேரன்பிற்குரிய ஈழத்தமிழன்பரான ஸ்ரீ வியாசன் அவர்களும்கூட அவர்களது தளத்தில் ஈழத்தமிழ்ச் சான்றோர்கள் தில்லையில் கட்டுமானம் செய்த மடாலயங்கள், சத்திரங்கள் மற்றும் சாவடிகள் பற்றி ஒரு வ்யாசம் எழுதியதை வாசித்த நினைவும் எனக்கு உண்டு.

    இது பற்றிய ஆவணங்கள் தொகுக்கப்பட்டு அந்த கட்டுமானங்கள் பாதுகாக்கப்பட்டு அவை வரும் தலைமுறையினருடைய சைவ சமயப்பணிகளுக்கு உபகாரமாக இருக்க வேண்டும் என்பதும் என் அபிலாஷை.

    இந்தச் சான்றோர்கள் சில குளங்களையும் கட்டுமானம் செய்திருக்கிறார்கள்.

    சமீபத்தில் தில்லையில் பொதுதீக்ஷிதர்கள் ஒரு குளத்தை புனருத்தாரணம் செய்ததை வாசிக்க நேர்ந்தது.

    அது போல தில்லையைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பழைய சைவ மடாலயங்களும், குளங்களும் புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும். அதன் முதல் படியாக முதன் முதலாக அவற்றைப் பற்றிய ஆவணங்களைத் தொகுத்தாக வேண்டும்.

    இதை வாசிக்கும் யாதொரு தமிழன்பரும், ஈழத்தமிழன்பர்களும், குறிப்பாக ஸ்ரீ வியாசன், ஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயர் போன்றோர் வெள்ளிக்கொம்பன் வினாயகனைத்தொழுது எவ்வளவு விரைவில் இந்தப் பணியைத் துவக்க இயலுமோ துவக்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    பணி துவங்கி அவரவரால் ஆன உபகாராதிகளையும் செய்யக்கடவோமாக.

    திருச்சிற்றம்பலம்
    சிவ சிதம்பரம்

  29. //////பகுத்தறிவின் ஆதிக்கத்தால் குறைந்துவிட்டன என்றாலும் அழியவில்லை.//////
    அப்படியானால் இந்து மதத்தை சுத்தபடுத்த இன்னும் பகுத்தறிவு இயக்கங்கள் அதிகமாக வேலை செய்யவேண்டும் போல தெரிகிறது. (((பகுத்தறிவு இயக்கம் என்பதில் நான் திக வை சேர்க்கவே மாட்டேன். அது இந்து மதத்தை சுத்தபடுத்த ஏற்பட்டதல்ல. ஆனால் அதை அழிக்க அந்நிய மதங்களால் தூண்டப்பட்ட இயக்கமாகும்.)))

    /////எது மூட நம்பிக்கை என்று பிரிப்பது அவ்வளவு எளிதானதன்று/////
    பக்தனின் மூடநம்பிக்கை முற்றிபோனதால்தான் நாட்டில் போலி சாமியார்கள் (நித்தியானந்தா, சாரதி பாபா, ஆஷா ராம் இன்னும் பல பேர்) அதிகரித்துவிட்டனர். வாயிலிருந்து லிங்கத்தையும் கைகளிலிருந்து திருநீற்றையும் வரவழைத்து கொடுக்கும் போலி சாமியார் அந்த ஏழை பக்தனுக்கு தனது சுண்டு விரல் மூலம் ஒரு மூட்டை அரிசியை வரவழைத்து தருவானா? அப்படி செய்தால் நாட்டில் பஞ்சமாகிலும் குறையுமே. அந்த ஏழை விபூதியையும் லிங்கத்தையும் வைத்துகொண்டு என்ன செய்ய?

    திரு ரங்கனுக்கும் திரு பாண்டியனுக்கும் கொலைகார மதமான இஸ்லாமை பற்றி எழுதினால் குஷியாக் இருக்கிறது. ஆனால் மூடனம்பிக்கிஐ மதமான இந்து மதத்தை பற்றி எழுதினால் கசக்கிறது. எனது எண்ணம் என்னவென்றால் கொலைகார மதம் அழிந்தொழியவேண்டும். மூட நம்பிக்கை கொண்ட மதமான இந்து மதத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்

    //// நேர்மையான மனிதர் ஆண்டவனுக்கு அபிடேகம் செய்வதைக்கூட வீண் என்றும் மூட நம்பிக்கை என்றும் கருதுகிறார்///// அய்யா கடவுளை குளிப்பாட்ட (அல்லது உங்கள் பாஷையில் அபிஷேகம் செய்ய) பால், விபூதி, தேங்காய் நீர் இவற்றையெல்லாம் பயன்படுத்தியதை பார்த்த ஒரு ஊரில் கடவுளுக்கு சாராய அபிஷேகம் செய்தனர். (இது பத்திரிக்கையில் வந்த செய்தி) மேலும் அதே பாணியில் தனது பிரியமான நடிகன் கட் ஔட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதெல்லாம் அறிவுக்கு ஒப்ப செயலா? இந்த அறிவு கெட்டசெயலுக்கு யார் வழிகாட்டி?

    ///////யார் சொன்னது அப்படியென்று? அதைச்சொல்லுங்க.////
    எனக்கு யாரும் சொல்லவேண்டிய அவசியமில்லை. நானே நேரில் கண்ட அனுபவம். தட்டில் காசு போட்டால் அந்த பக்தனுக்கு ஒருவித treatment காசு போடாத பக்தனுக்கு வேறுவிதமான treatment ஒரு முறை நான் தட்டில் காசுபோடாதபோது அந்த ”’நபர்”’ கோவிலுக்கு வந்தால் பாக்கட்டில் பைசா போட்டு வர பழக்கமே இல்லையோ? என்று கேட்டார்.

    //////சிவாச்சாரியார்கள் பட்டாச்சாரியார்கள் ஏழையாக இருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா///////
    பக்தனாவது மந்திரங்களை சொல்வதில். ஆனால் தினமும் குளித்து ஆண்டவன் அருகிலேயே நின்றுகொண்டு சதாசர்வகாலமும் மந்திரங்களை சொல்லிகொண்டிருக்கும் (பக்தனுக்கும் ஆண்டவனுக்கும் இடையில் agent ஆக இருக்கும்) இவர்களுக்கே இப்படிப்பட்ட ஏழ்மை நிலை என்றால் மந்திரங்களையே உச்சரிக்காத ஏழை பக்தனின் நிலை என்னவோ?

  30. பி.எஸ் ஐயா நீங்கள் அபிராஹாமியர் இல்லை என்று அறிவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஹிந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டுமுறைகள் பலப்பல. பன்மைத்தன்மை என்பது நம்முடைய பாரம்பரியத்தின் மிக உயர்ந்த சிறந்தக்கூறு. அதனை அபிரஹாமிய ஐரோப்பிய நோக்கில் விமர்சிப்பது அபத்தம். பகுத்தறிவு என்று இவர்கள் சொல்லுவதெல்லாம் மேலை நாட்டினரின் பார்வைதான். உப நிடதங்கள் நூற்று எட்டு என்றால் 108 ஞானமடைய அத்துணைமுறைகள் இருக்கின்றன என்பது பொருள். ஆகமங்கள் பல என்றால் பல்வேறு முறைகள் உள்ளன என்பது அர்த்தம். எல்லாமுறையையும் பகுத்தறிவினால் ஒன்றாக்கிவிடலாம் என்பது தவறு. வெறும் பகுத்தறிவினால் அல்லாமல் ஆராய்ச்சியினாலும் அனுபவத்தினாலும் நம்முடைய சாதனை வழிபாட்டுமுறைகளை நாம் நிதர்சனமாக ஆராய்ந்தறிவதே சிறந்தது.
    சிலவழிபாட்டுமுறைகள் உதாரணாமாக பலியிடுதல், அலகு குத்துதல் போன்றவை உங்கள் மனதிற்கு ஏற்புடையதில்லை என்றால் அதனை ஊர் அளவிலும் குடும்பத்தின் அளவிலும் விட்டுவிடலாம். அதனை மாற்றியும் அமைக்கலாம். உதாரணமாக எனது குலதெய்வத்திற்கு பலியிடும் பழக்கம் இருக்கிறது. அதை அடியேன் செய்வதில்லை.
    ஒரு சில சாதியினரை மக்களைத்தாழ்ந்த நிலையில் வைத்திருப்பதற்கு இந்த சடங்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற வாதம் ஆதாரமில்லாமல் உடைந்து நொறுங்கிவிட்டது.

  31. மதிப்பிற்குறிய ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயர் அவர்களுக்கு நமஸ்காரங்கள். வீரசைவக்கோட்பாடுகளைப்பற்றி விரைவில் எழுதுகிறேன். இப்போதைக்கு வீரசைவம் சார்ந்த இலக்கியங்களைத்திரட்டுவதிலும் குரு மற்றும் ஜங்கமர்களோடு உரையாடுவதிலும் அடியேனின் கவனம் உள்ளது. தமிழ் நாட்டில் எப்படி சைவத்தை ஹிந்து தர்மத்திலிருந்து பிரிக்க சிலர் முயல்வதைப்போலவே வீரசைவத்தினை சைவத்திலிருந்தும் ஹிந்து தர்மத்திலிருந்தும் தனி மதமாக்கும் முயற்சியும் கர்நாடகத்தில் நடந்துவருகிறது. இதப்பற்றியெல்லாம் எழுதுவது அவசியம் என்று அடியேன் உணர்ந்திருக்கிறேன். சிவசிவ

  32. //பிராமணர்களால் இந்த நாட்டுக்கு கெடுதல்தான் நடந்தது என்று எண்ணம் பலருக்கு இருப்பதால் இந்த மசனகொல்லை உதாரணம் கொடுத்தேன்//

    திரு இரங்கன்!

    இங்கு என்ன பேசப்படுகிறதோ அதை மட்டுமே தனியாக எடுத்துப் பேச வேண்டும். இங்கு ஒரேயொரு சடங்கு மட்டுமே பேசப்படுகிறது. அச்சடங்கு தவறென்று முடிப்பதே இந்து மதத்துக்கு நீங்கள் செய்யும் தொண்டாகும். மாறாக, ஜாதி உணர்வில் மதத்தைப் பார்ப்பது தவறாகும்.

  33. சில்லாண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் சிலையை பங்களூரில் வைப்பதற்கு கன்னடியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அச்சமயம், தமிழகத்தில் சர்வஞ்ஞர் சிலையை வைத்து விட்டால் கன்னடியர்கள் மகிழ்வார்கள் வள்ளுவரை அனுமதிப்பார்கள் என்ற பேச்செழ, சர்வஞ்ஞர் என்றால் யார் என்று எல்லாருமே தேடத்தொடங்கினார்கள். அவ்வளவு அறியாமை!
    இச்சூழலில்தான் இக்கட்டுரையின் சிறப்பமைகிறது. இது தமிழர்களிடையே (தமிழ்ஹிந்து.காம் வாசகர்கள் அவர்கள்தானே?) அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனும், அவ்வறிமுகம் அவரை ஒரு புரட்சிகரமான (அவர் காலகட்ட்த்தில் இருந்து பார்க்கும்போது) கருத்துக்களை சமூகத்துக்கு வழங்கியவர் என்ற நோக்கிலுமே எழுதப்பட்டிருக்கிறது. ஓரேயொரு இடத்தில்தான் வீர் சைவம் என்ற சொல்லே வருகிறது.

    கட்டுரையாளரின் இந்நோக்குக்களை நான் பாராட்டுகிறேன். இப்படி புரட்சிக் கருத்துக்களை வித்திட்டோரின் பலபல கட்டுரைகள் இங்கிடப்படவேண்டுமென்பதே என் அவா.

    மட சேனாவைப்பற்றிக் குறிப்பிடுவது, கர்நாடகா இவரின் புரட்சிக்கருத்துக்களை இன்று கூட ஏற்கவில்லையெனப்தை நிரூபிக்கவே. நம் தமிழ்நாட்டவரும் சுத்தமல்ல. இங்கும் இராமானுஜர் வைத்த புரட்சிக்கருத்துக்கள் பாராமுகமாக கைவிடப்பட்டுவிட்டன. சாதிக்கொடுமைகளில் ஏற்றத்தாழ்வுகளைப்பேணுவதில் தமிழர்கள் உலக்க்கோப்பையையேத் தட்டிச்சென்று விடுவார்கள் 

    மடசேனாவை ஆதரிக்கும் திரு சக்திவேல், மறைமுகமாக ஆதரிக்கும் மற்றவர்கள், ஒன்றுமே சொல்லாமல் அமைதி காத்தால் மடசேனா தொடரும் என நினைப்போர் – கண்டிப்பாக சர்வஞ்ஞர் கருத்துகளை உளமாற வெறுப்போரே. அவரின் இவ்வரிகள் அவர்களுக்கு சாட்டையடிகள்:

    சந்தனத்தை முன் நெற்றியில் அப்பிக்கொள்பவன்
    முக்தி அடைய முடியுமானால்
    சந்தனக் கல்லிற்குத் தானே முதலில் முக்தி சர்வஞ்ஞா?
    “தண்ணீரில் தினமும் மூழ்குபவனுக்கு
    மோட்சம் கிடைக்குமானால் தண்ணீரில் பிறந்து வாழும்
    தவளைக்கும் கண்டிப்பாகச் சொர்க்கம் உண்டு சர்வஞ்ஞா!”

    வீரசைவத்தின் தலைவர்களுள் ஒருவராக இவர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், திரு சக்திவேல் போன்றவர்கள் எப்படி வீர சைவத்தில் இருக்கிறார்கள் என்பதே மர்ம்ம்தான்!

    வீர சைவம், கண்டிப்பாக பிராமணனும் மற்றவரும் சமமே என்பதை ஏற்றுக்கொண்டால்தான் இவரை ஏற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் இவர் எப்படி வீரசைவத்தோடு தொடர்பு கொண்டவராவார்?

    கட்டுரை சாதி சமநிலைகள் உருவாக வேண்டுமெனபதையும் அதற்காக இவர் எழுதிய கனலான வரிகள் எப்படி தைக்கின்றன என்பதையும் பலவரிகளில் அரக்கபரக்க பறைகின்றது. இலக்கியம், சமயம் – இவற்றை முன்னிலையில் வைக்கவேயில்லை. சமூக அவலங்களை – அதுவும் சமயத்தால் உருவாக்கப்பட்டவைகளையே – ஊசிகளால் குத்துகிறது.

    அக்குத்தல்களுக்கெல்லாம் நாங்கள் சளைத்தவர்களல்ல; நாங்கள் பனங்காட்டு நரிகள்; இந்த சர்வஞ்ஞர் செய்யும் சலசலப்புக்களுக்கா நாங்கள் இளைத்தவர்கள்? என்று மட சேனாவை ஆதரிக்கும் நண்பர்கள் சொல்வதை நான் உணரமுடிகிறது. இவர்கள் மன்ங்களில் எப்படி அச்சிவபெருமான் குடிபுக முடியும் என்பது என் தீரா வியப்பு.

    கட்டுரையாளர் இன்னும் இவரைப் பற்றி எழுத வேண்டும். சர்வஞ்ஞர் போன்ற சமயப் புரட்சியாளர்களை வெளிக்காட்ட தங்கள் தளத்தை நல்கி இம்மதத்துக்குத் தொண்டு செய்த இத்தளத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  34. அன்பின் ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசயர் அவர்களுக்கு, நமஸ்தே.

    ஆப்ரஹாமியத்துக்கு ஹிந்துஸ்தானத்தில் இரண்டு முகங்களுண்டு.

    ஒன்று ஹிந்துஸ்தானத்தின் எந்த ப்ராந்தியத்தில் இருந்தாலும் அந்தந்த ப்ராந்தியத்தின் மண்ணின் மணத்தை தன்னுள் வாங்கி அராபிய அல்லது ஐரோப்பிய நகல் ஆகாது விளங்கும் ஹைந்தவ ஆப்ரஹாமியம். இதற்கு ஹிந்து மதத்துடனும் எந்தப் பிணக்கும் கிடையாது. கோடானுகோடி ஏழை க்றைஸ்தவ இஸ்லாமிய சஹோதரர்கள் இதைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு ஹிந்துக்களுடன் எந்தப்பிணக்கும் கிடையாது. ஹிந்துக்களை மதமாற்றுவது இவர்களது இலக்கும் கிடையாது. மேலும் ஹிந்துஸ்தானத்து அனைத்து பாஷைகளிலும் கலை இலக்கியம் இசை என இவர்களது பெரும் பங்கும் ஹிந்து சஹோதரர்களுடன் இணங்கி வாழும் மேன்மையும் இவர்களிடத்து காணப்படும். முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் மற்றும் ஏழை க்றைஸ்தவர் முன்னேற்ற இயக்கம் போன்ற இயக்கங்கள் வாயிலாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் ஹிந்துஸ்தானத்தின் கோடானுகோடி ஹைந்தவ ஆப்ரஹாமியர்களுடன் கலந்துரையாடி தேசஒருமைப்பாட்டை உறுதி செய்ய விழைகிறது.

    இன்னொன்று அராபிய மற்றும் பரங்கிப் பணத்துக்கு விலை போன ஆப்ரஹாமியம். இது ஒட்டு மொத்த உலக அமைதிக்கு உலைவைக்கும் இழிவுடையது.

    மனிதர்கள் மத்தியில் விஷப்பாம்புகள் கூட ஜீவித்திருப்பது போல இந்த விதேசிய ஆப்ரஹாமியம். எப்படி மனிதர்கள் மத்தியில் விஷப்பாம்புகளும் வாழ்கின்றனவோ அப்படி இந்த உலக அமைதிக்கு எதிரான கிருமியை முழுமையான கண்காணிப்பில் வைத்திருத்தல் உலக அமைதிக்கு மிக்க அவச்யம்.

    இந்த இரண்டாவது ஆப்ரஹாமியத்தின் பணத்தில் ஆட்டம் போடும் சக்திகள் ஹிந்து மதத்தை இழிவு செய்வது ஹிந்து மதத்தில் உள்ள அங்கங்களான பற்பல சமயங்களை நைசாக ஹிந்து மதத்துடன் ஒட்டோ உறவோ இல்லாதது போலக் காண்பிப்பது என பல போக்கிரித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த போக்கிரிக் கருத்தாக்கங்களை களையெடுக்க வேண்டியது ஒவ்வொரு ஹிந்துவினுடைய கடமையும் கூட.

    சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடுடைய தாங்கள் எழுத வேண்டிய வீர சைவ ஜங்கம மரபைப் பற்றி மட்டுமின்றி…….மிக விரிவாக …..இந்த மரபைச் சிதைக்க விழையும் சதிகள் பற்றியும் தங்களுடைய கருப்பொருளை விரிவாகக் கொண்டமை மகிழ்வளிக்கிறது. தில்லையம்பலவாணனின் அருளால் தங்களது முயற்சி திருவினையாகும். தங்களுடைய வ்யாசத் தொடரினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  35. பிஎஸ் என்ற பெயரில் எழுதும் அன்பர் அவருடைய விளக்கங்களில் மிக அதிகமான குதர்க்கங்கள் உள்ளன. கருத்துத் திரிபுகள் உள்ளன. அவற்றை வாசகர்கள் முன் வைக்க விழைவது இந்த உத்தரம்.

    இந்த வ்யாசத்தில் சர்வக்ஞரைப் பற்றியும் சைவ சமயத்தைப் பற்றியும் ஜாதி ஒழிப்பு / ஜாதி நல்லிணக்கம் இவை பற்றிப் பேசாது முனைந்து வ்யாசத்தை தடம் புரள வைக்கும் நோக்கில் பல கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளது முறையானதில்லை.

    வ்யாசத்தின் கருப்பொருளில் இருந்து விலகுவது எனக்கு உடன்பாடானதில்லை. ஆயினும் அப்பட்டமான கருத்துத் திரிபுகளை ஒதுக்குவது…….. தடம் புரளலை ஒதுக்குவது…….. இதை அப்படியே எல்லோரும் ஏற்று விடுவார்கள் என்ற எண்ணத்தைத் தருமாதலால் அதை களையெடுக்குமுகமாக இக்கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

    கருத்துத் திரிபுகள் மூலமாகவே அடுத்தவர் கருத்துக்களை சிதைப்பது…….. அடுத்தவர் சொல்லாத கருத்தை அடுத்தவர் கருத்தாகத் திணிப்பது………தொடர்ந்து ஜாதிக்காழ்ப்புக் கருத்துக்கள் பதிவது…….. ஸ்ரீ வைஷ்ணவத்தை சிரிவைணவம் என்று இழிவு செய்வது….வைஷ்ணவச் சான்றோர்களை இழிவு செய்வது………தேசத்தின் மணம் கமழும் ஹைந்தவ ஆப்ரஹாமியத்தை இழிவு செய்து அராபிய மற்றும் பரங்கிப் பணத்தில் தழைக்கும் பயங்கரவாத ஆப்ரஹாமியத்தை ஆதரிப்பது……… பயங்கரவாதத்தை ஆதரிப்பது…… ஹிந்து இயக்கங்களை இழிவு செய்வது போன்ற கருத்தாக்கங்கள் இந்த அன்பரது கருத்துக்களில் காணப்படுகிறது.

    இப்படிப்பட்ட குதர்க்கவாதிகளது ஒரு பொது யுக்தி அடுத்தவருடைய குறிப்பிட்ட கருத்துக்களை எதிர்க்கொள்ளாது பொத்தாம் பொதுவாக அடுத்தவர் சொல்லாத கருத்துக்களை சொன்னதாகச் சாதிப்பது. இங்கு இந்த அன்பரின் குறிப்பிட்ட முரண்பாடான கருத்துக்கள் சிகித்சைக்கு உள்ளாக்கப்படுகின்றன

    முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது நியதி. நேர்மையான கருத்துப் பகிர்பவர்கள் எந்த மதத்தினரானாலும் நேர்மையான கருத்தாடலுக்கு உரித்தானவர்கள். எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் குதர்க்க……. சுஷ்க தர்க்க …….. விதண்டாவாதிகளுடைய கருத்துக்கள் அப்படிப்பட்ட விதண்டாவாதக் கருத்துக்களால் களையெடுக்கப்பட வேண்டியவர்களே.

    இவருடைய ஒவ்வொரு குதர்க்க வாதத்திற்கும் ஆங்காங்கு எங்கெல்லாம் அதி குதர்க்கம் தென்படுகிறதோ அங்கெல்லாம் நேர்மையான மற்றும் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்டைலில் கருத்துத் திரிபுடனான இரண்டு பதில்களைப் பார்க்கலாம்.

    \\ இங்கு எழுதுபவர்களை கிருத்துவர்கள், இசுலாமியர்கள் என்று நினைத்து எழுதுவது தவறு. இந்துமதச் சடங்குகளை கேள்வி கேட்டால் அவர் ஒரு மாவோயிஸ்டோ, கம்யூனிஸ்டோ, தி க வோ, திமுகவோ என்றெடுத்துப்பேசினால், விமர்சனத்தை எதிர்நோக்கிப் பதில் சொல்லாமல் மறைப்பதாகும். \\

    ஆதிக்க ஜாதி இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களுடைய வாழ்நாள் முழுதுமான தலித் இழிவு ப்ரசங்கங்கள், தமிழ் மொழியை, தமிழ் இலக்கிய நூற்களை இழிவு செய்தமை, தமிழ்ச் சான்றோர்களை இழிவு படுத்தியமை, ஹிந்து மதத்தை இழிவு செய்தமை, பிள்ளையார் சிலைகளை தெருத்தெருவாக போட்டுடைத்தமை, ஊருக்கு உபதேசம் செய்து சொத்துப்பற்றால் மகளாகப் பாவித்த ஒரு பெண்ணை மனைவியாக்கிய இழிவைச் செய்தமை……… போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் அதில் உள்ள ந்யாயம் சுடுகையில்…… இந்த ந்யாயமான விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் இக்கருத்துக்களை முன்வைப்பவர்களை பார்ப்பனர்களாக சித்தரித்துப்பேசுபவர்கள் ……….இப்படிக் கருத்தாடுவது நகை முரண்.

    சீஷே கீ மெஹல் மே ரெஹ்னேவாலே பத்தர் நஹீன் ஃபேங்க்தே……… கண்ணாடி மாளிகையில் இருப்பவர்கள் கல்லெறியக்கூடாது என்று ஒரு உர்தூ பழமொழி உண்டு அதையே அன்பர் அவர்களுடைய மேற்கண்ட வாசகம் நினைவூட்டுகிறது.

    அடுத்தவருடைய கருத்துக்கு மட்டிலும் பதிலளிக்க முனைந்து அடுத்தவர் முகத்தையோ ஜாதிச் சான்றிதழையோ பார்க்காத போதும் அடுத்தவர் இன்ன ஜாதியைச் சார்ந்தவராக இருப்பதால் தான் இப்படிப்பட்ட கருத்தைப் பதிகிறார் என்று இந்த அன்பர் எழுத விழைந்தால் (அட்ச்சு வுடுவது) ………… அதற்கு அதே தொனியில் தான் பதில் கிட்டும். அன்பர் அவர்கள் அடித்தால் தக்காளி சட்னி அடுத்தவர் அடித்தால் நத்தம் என்று அழுவாச்சி கூடாது.

  36. பி எஸ் என்ற பெயரில் எழுதும் அன்பரின் குதர்க்கம்
    \\ திரு முத்துக்குமாரசுவாமி! அதிதிகள் என்றால் என்ன பொருள்? தமிழில் கேள்விப்பட்டதேயில்லை. கொஞ்சம் சொல்லுங்கள் சார். \\ அதிதி என்றால் விருந்தினர். \\

    மிகத் தரம் தாழ்ந்த நக்கல் மேற்கண்ட கருத்துக்கள்.

    ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்கள் இந்த தளத்தின் மூத்த பிதாமஹர். தமிழ் மொழியிலும் சைவ சமயத்திலும் ஆழ்ந்த பற்றுடையவர். முனைவர். கல்வி கற்ற சான்றோர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். பொன்னால் பொறிக்கத்தக்க வாசகங்களால் ஆன வ்யாசங்கள் சமர்ப்பித்து தமிழன்னைக்கும் ஹிந்து மதத்திற்கும் பெருமை சேர்க்கும் பெரியவர். சமய வேறுபாடின்றி ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள அனைத்து அன்பர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர். இவருடைய சமய விளக்கங்கள் பசுமரத்தாணி போன்று அடுத்தவர் மனதில் பதியும் என்பதை நான் உள்பட தளவாசகர்கள் பலரும் அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளோம்.

    கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் வள்ளல் அருணகிரிப்பெருமான் எனவும் ……….திருவள்ளுவர் இயற்றிய 1330 குறட்பாக்களுக்கு மேற்பட்டு 1331 வது குறட்பாவை அவர் தலையில் கட்டிய பெருமை உடைத்தவராகவும்……… 63க்கு மேற்பட்டு……. இவர் விதந்தோதும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கனவில் சொல்லிவிட்டதாலோ என்னவோ நாயன்மார்கள் 64 என்று அட்ச்சு வுட்டு….. தமிழுலகிற்கு புதுப்பாடம் கற்பித்த……. ப்ரக்யாதி வாய்ந்த தமிழ்ப்புலமை பெற்றவர் இந்த அன்பர் பி எஸ் அவர்கள்……….

    முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்களிடம் நக்கல் தொனிக்க அதிதி என்ற சொல்லின் பொருள் கேட்டு ……. தமிழில் கேள்விப்பட்டதில்லை என்று நக்கலடித்து……… பொருள் தெரியவில்லையோ இவருக்கு என்று நினைக்குங்கால் ………. இல்லையில்லை அடித்தது நக்கலே தான் எனத் தொனிக்க இந்த சொல்லுக்கு மேற்கொண்டு விளக்கம்.

    இது போன்ற சடங்கில் உள்ள கோட்பாட்டினை ஜாதிச்சார்புகள் ஏதுமின்றி தெளிவாக முனைவர் ஐயா விளக்கியிருந்தார். ஸ்ரீ ஜெயமோஹன் அவர்களும் இது பற்றி ஜாதிச் சார்புகள் இல்லாது விளக்கம் கொடுத்துள்ளார். வெறுமனே ஒரு சொல்லைப் பிடித்துக்கொண்டு தொங்கி நக்கலடித்து தாத்பர்யத்தை மறைக்க முனைவது பிஎஸ் என்ற இந்த அன்பருக்கு புதிதல்ல.

    சமயாசாரிகள் சாப்பிட்ட இலையில் புரளுவது என்பது காலங்காலமாக தக்ஷிணபாரதத்தில் புழங்கும் ஒரு வழக்கு. சமயாசாரிகளுடைய உச்சிஷ்டம் பவித்ரமானது என்ற ஒரு நம்பிக்கை இதன் ஆதாரம். ஹிந்து மதத்தின் சமயங்கள் ஆப்ரஹாமியம் போன்று ஒரு புஸ்தகத்துள் புதைந்து உறைந்து பட்டுப் போவது இல்லை. சாஸ்த்ர புஸ்தகங்களில் சொல்லப்படாத புதுச் சடங்குகளும் நம்பிக்கைகளும் கூட தானாக உருவாகி காலதேச வர்த்தமானங்களை ஒட்டி மறைதலும் கூட ஹிந்து மதத்தின் அனைத்து சமயங்களிலும் பொதுவானதே.

    இந்த சடங்கில் சாப்பிடுபவர் சாப்பிட்டவரின் எச்சில் இலையில் புரள்பவர் என்ற இரு பிரிவினர். சமயாசாரிகளுடைய எச்சில் இலையில் புரள்வது நன்று என்ற கோட்பாடுடையவர்கள் இருக்கும் வரை எந்த சட்டமும் முற்போக்குக் கூச்சல்களும் இந்தக் கோட்பாடுடையவர்களை மாற்றவே முடியாது. குக்கே சுப்ரமண்யா கோவிலில் தடை செய்யப்பட்டு விட்டால் கண்ணில் தென்பட்ட நாலு பார்ப்பனர்களை தங்கள் க்ராமத்து சுப்ரமண்ய ஸ்வாமி கோவிலில் இழுத்துக்கொண்டு வந்து அதே சடங்கை தொடங்கி விடுவார்கள் நம்பிக்கையாளர்கள். அவ்வளவே.

    பார்ப்பன ஜாதியில் பிறந்த ஒருவரின் எச்சில் இலையில் உருண்டால் நன்று என்று நினைப்பது சந்தேகமே இல்லாமல் அறியாமையே தான். சமயாசாரம் என்ற அடிப்படை நம்பிக்கையானது காலப்போக்கில் சமயாசாரம் உண்டோ இல்லையோ பார்ப்பன ஜாதியில் பிறந்த ஒரு அன்பர் என்ற படிக்கான இறங்குவது…….. சந்தேகமே இல்லாமல் துலக்கப்பட வேண்டிய அறியாமை தான்.

    சமயாசாரங்களில் ஒழுகுபவர் பார்ப்பனராக இருப்பதென்ன ………அது ரஹீமாக இருந்தாலும் சரி ரஸ்கானாக இருந்தாலும் சரி கபீராக இருந்தாலும் சரி ……….. அவரது உச்சிஷ்டம் பரம பவித்ரமானது என்ற புரிதல் வந்து விட்டாலே இவை தானாக மறைந்து விடும்.

    பார்ப்பனர்களை மட்டிலும் கட்டம் கட்டி ஜாதிக்காழ்ப்பு செய்வதில் சமர்த்தர் பிஎஸ். ஹிந்து நல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு தரப்பிற்கு மட்டும் விழிப்புணர்வு அளித்து ஒதுங்கிச் சென்று விட மாட்டார்கள் இரு தரப்பினருக்கும் சடங்கினுடைய உண்மையான தாத்பர்யத்தை புரிய வைக்க முனைவார். சடங்கில் உண்மையான சீர்திருத்தத்தைச் செய்ய முனைவார்.

    புஸ்தகங்களில் சொல்லப்படாத சடங்கா அதை இழிவு செய்வேன் என்று மனம் போன படி புறப்படுவது ஆப்ரஹாமிய தாக்கம் தான். புஸ்தகங்களுள் மட்டிலும் உறைந்து கடிவாளம் போடப்பட்டதாயிற்றே விதேசி ஆப்ரஹாமியம்.

    ஹைந்தவ ஆப்ரஹாமியமோ ஆனால் ஹிந்துஸ்தானத்தில் இருப்பதால் அந்தக் கடிவாளத்தை உடைத்து வெளிபோந்த பெருமை உடையது என்பதும் நோக்கத் தகுந்தது. ஹைந்தவ ஆப்ரஹாமியமும் கூட ஆப்ரஹாமிய பொஸ்தகங்களில் சொல்லப்படாத ஆசார அனுஷ்டானாதிகளைத் தன்வசம் கொண்டுள்ளது. இப்போக்கு பயங்கரவாத மதமாற்ற விதேச ஆப்ரஹாமியரின் அஸ்தியில் காங்கை கொடுப்பது இங்கு கருத்துப் பகிரும் பயங்கரவாத விதேச ஆப்ரஹாமியத்தைக் கைக்கொள்ளும் மற்றும் பயங்கரவாத விதேச ஆப்ரஹாமிய ஆதரவாளர்களின் எழுத்துக்களில் காண முடியும்.

    \\\ Therefore, Thiru Kumarasamy clearly cut at the root of the religion, by making it brahmins only 🙁 \\\

    மேற்கண்ட வாசகம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய வாசகம். எந்த ஒரு அன்பர் ஜாதிகளைக் கடந்த பார்வை உடையவராக இந்த தளத்தில் ஜாதிகளைக் கடந்தும் சமயங்களைக் கடந்தும் இந்த தளத்தில் மதிக்கப்படுகிறாரோ அவரை தரம் தாழ்ந்து நிந்தனை செய்யும் போக்கை உடையது ………… அவருடைய ஒட்டு மொத்த கருத்தாக்கங்களை வாசித்தும் வாசிக்காதது போல பாவலா செய்யும் இழிவான போக்கை உடைய…….. தூங்குவது போல நடிக்கும் போக்கை உடையது.

    ஸ்ரீ வெ. சா ஐயா மற்றும் அமரர் ஸ்ரீ மலர் மன்னன் மஹாசயர் அவர்கள் …….. இவர்களுடைய கருத்துக்களையும் இப்படியே திரித்து இழித்துப் பழித்து மண்டகப்படி வாங்கிய ப்ரக்யாதி உடையவர் இந்த அன்பர் என்றே என் புரிதல்.

    இந்த குதர்க்கவாத அன்பரின் வினயமில்லாத பொய்மையில் மூழ்கிய இந்தக் கருத்துக்களை மறுதலிக்குமுகமாக என்னால் முனைவர் ஐயா அவர்கள் இதே தளத்தில் பகிர்ந்துள்ள ஜாதி மறுப்பு வாசகங்களை வாசகம் வாசகமாக நிறுவ முடியும். முனைவர் ஐயாவின் கருத்துக்களை வாசித்துள்ளவர்களுக்கு இவை சொல்லித்தான் ஆகவேண்டும் என்று அவச்யமில்லை. அனால் தூங்குவது போல நடிப்பவர்களுக்கு எழுப்பினாலும் எழுந்து கொள்ள மாட்டார்கள்.குதர்க்கியான பிஎஸ் தானாக முனையட்டுமே. ப்ராயஸ்சித்தமாக முனைவர் ஐயாவுடைய இந்த தளத்தில் பகிரப்பட்ட ஜாதிச் சார்பற்ற வாசகங்களை பகிர்ந்து கொள்ளலாமே.

  37. திரு BS

    எச்சில் இலையில் உருளும் சடங்கு பற்றி இங்கு எழுத ஆரம்பித்தது தாங்களே அன்றி கட்டுரை ஆசிரயர் அல்ல.

    திரு HONESTMAN

    பாரதம் தாருல் இஸ்லாமாக மாறிவிடுமோ என்ற கவலையினால் முஸ்லிம்களின் சில பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். மற்றபடி இங்கிருக்கும் இஸ்லாமியர்களை விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.

    மூட நம்பிக்கைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிற மாதிரி நீங்களாகவே கற்பனை செய்துகொண்டு பேசுகிறீர்கள். முக்கியாமாக மூட நம்பிக்கைகளுக்கு பிராமணர்கள்தான் காரணம் என்று சொல்வதுதான் எனக்கு உடன்பாடு இல்லை. வைதீகர்களை முன்பு நான் பார்த்த விதம் வேறு இப்போது பார்க்கும் விதம் வேறு.

    கடுமையாக பல ஆண்டுகள் அவர்களை விமர்சனம் செய்த எனக்கு தற்போது மாற்றுக் கருத்து இருந்தாலும் அதை சொல்ல தார்மீக உரிமை ( எனக்கு) இல்லை என்று நான் நினைப்பதாலும், தவிர விஷய ஞானம் சிறிதும் இல்லை என்பதாலும் இத்துடன் இங்கு முடித்துகொள்கிறேன்.

    ஒன்று மட்டும் சொல்கிறேன் – யூதர்கள்தான் காரணம் என்று சொல்லித்தான் பல லக்ஷக்கான யூதர்களை ஹிட்லர் அழித்தான். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

  38. திரு இரங்கன் நீங்கள் எழுதியது: //நான் பூணலை கழட்டி எறிந்துவிட்டு ஜாதி பார்க்காமல் பழகி வந்தேன். ஆனால் அவர்கள் என்னை பாரப்பனனாகத் தான் பார்திருக்கார்கள்.//

    சமூகத்தளத்தில் ஜாதித்துவேசத்துக்கு ஆளாகி இருக்கிறீர்கள். இதைப்போல பல இடர்களுக்கும் ஆளாகுபவர் பலர். எடுத்துக்காட்டாக, இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டோர் நிறைய.

    ஆனால் இவையனைத்தும் சமூகதளத்தில் நடப்பவை. அங்குதான் அவற்றுக்கு எதிராகப் போராடவேண்டும்.

    சமூகதளத்தில் நடப்பவையை எடுத்து மதத்தளத்தில் போட்டு அங்கு ஜாதித்துவேசம் என்ற பூசுகிறீர்கள். அது தவறாகும். மதம் வேறு. ஜாதி வேறு. இரண்டையும் பிரித்து விடுங்கள்.

    அனபர் திரு கிருஸ்ணகுமாருக்குச் சொன்னது போல: ஜாதிக்காக சமூக தளத்திலேயே போராடுங்கள். எவரும் வேண்டாம்; தவறு என்று சொல்வதில்லை. உங்களுக்குப் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடுகிறீர்கள் என்றுதான் சொல்வர்.

    ஆனால், மதத்தில் ஏன் தனித்துவம் கேட்கிறீர்கள்? அங்கு உங்களுக்கும் பிறருக்கும் ஒரே உரிமைதானே கொடுக்கப்பட வேண்டும் ? அங்கு நடப்பதைத் தவறெனால் எப்படி ஜாதித்துவேசமன்று குழப்புகிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *