ஆதிசங்கரர் படக்கதை – 1

உரையாடல்கள்:  வையவன்

படம்:  செந்தமிழ்

வாழ்கிற வாழ்க்கைக்கு ஒரு பொருள் தேவைப்படுகிறது. அர்த்தம் வேண்டுமாயிருக்கிறது. நடக்கிற நடைக்கும், நடக்கிற பாதைக்கும் ஒரு துவக்கமும் முடிவும் ஒரு போக்கும் போல. பிறந்து வளர்ந்து அனுபவங்கள் பெற்று முடிவடைகிற எந்த ஒரு வாழ்வும் ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம் என்ற இடையறாத கேள்விகள் எல்லோரிடமும் எப்போதும் இல்லையெனிலும் மனம் மருளும்போது அவ்வப்போது எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியாக பாரத நாட்டில் வாழ்க்கையின் லட்சியங்களை வகுக்க  பல தத்துவப் பிரிவுகளும் சமய நெறிகளும் இடைவிடாது முயன்றன. அந்த முயற்சிகள் போராட்டங்களாகவும் கருத்தோட்டங்கள் ஆகவும் தொடர்ந்தன. மக்களுக்கு எந்த வழியைப் பின்பற்றுவது என்ற குழப்பம் மேலிட்டது. குழப்பம் ,சிக்கலாகி, மேலாதிக்கம் மிக்க போராட்டமானது. இவை என்று விடிந்து வெளிச்சம் உதிக்கும் என்று மக்கள் திகைத்திருந்த காலத்தில் உதித்தவர் ஆதி சங்கரர்.

வேத ரிஷிகள் நமக்களித்த மகத்தான ஞானச் சுடர் மணிகளாம் உபநிஷதங்களின் வழிநின்று அத்வைத வேதாந்தத்தை மையமான தத்துவமாக நிலை நாட்டினார் அவர்.  ஞானயோகம், கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம் ஆகிய நான்கு யோக நெறிகளையும்,  சைவம் வைஷ்ணவம் முதலான ஆறு சமய நெறிகளையும்  தனது  அபாரமான மேதமையாலும் அறிவுத் திறத்தாலும் ஓரிழையில் இணைத்தார்.  அவரது அறிவுக் கொடையே வேதாந்த தத்துவம் மேன்மேலும் புதிய பாதைகளைக் கண்டு செழுமையடையவும், இன்றளவும் இந்து மதம் உயிர்த்திருக்கவும் ஆதார சக்தியாக விளங்குகிறது.

ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வையவன் உரையாடல் வடிவில் எழுதி, ஓவியர்  செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம்.

ஆதி சங்கரர் 1

ஆதி சங்கரர் - 2

[வளரும்]

5 Replies to “ஆதிசங்கரர் படக்கதை – 1”

  1. அனைத்தும் மிக மிக நன்று. பாராட்டுக்கள் பல . தொடரட்டும் பணி

  2. ஆஹா அருமையான முயற்சி. வையவன் மற்றும் செந்தமிழ் ஆகியோருக்குப்பாராட்டுக்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் தொடர்ந்து ஒரு பதினைந்து ஆண்டுகள் வாங்கினேன். முதலில் அதில் படிப்பது எப்போதுமே படக்கதைத்தான். அதை இந்தத்தொடர் நினைவூட்டுகிறது. வாழ்த்துக்கள். தங்கள் முயற்சி வெற்றிபெறட்டும். சிவசிவ

  3. ஆதிசங்கரரின் வாழ்க்கையை படக்கதையாக பகிர முனையும் ஸ்ரீ வையவன் மற்றும் ஸ்ரீ செந்தமிழ் அவர்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். படக்கதை கண்களுக்கும் சிந்தனைக்கும் அரிதான விருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *