இந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கை

November 30, 2015
By

வம்பர் 18, 2015 அன்று இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களும், அறிஞர்களும் சிந்தனையாளர்களும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். நாட்டில் “சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதாக” வேறு சில வரலாற்றாசியர்கள் இதற்கு முன்பு வெளியிட்டிருந்த அறிக்கைக்கு எதிர்வினையாக இந்த அறிக்கை வெளியிடப் பட்டது. பல துறைகளையும் சார்ந்த 46 அறிஞர்கள் இதில் கையெழுத்திட்டிருந்தனர் (அவர்களின் பெயர்கள் மூல ஆங்கில வடிவத்தில் அறிக்கைக்குக்  கீழே உள்ளன).

அறிக்கையின் மூல ஆங்கில வடிவம் இங்கே.
தமிழில்: ஜடாயு

அறிக்கை:

தேசத்தில் “மிகவும் சீரழிந்து வரும் சூழலின்” அபாயம் குறித்து 53 இந்திய வரலாற்றாசிரியர்கள் அக்-26 அன்று, ஓர் அறிக்கை வெளியிட்டனர். “அதிகாரபூர்வ வரலாற்றையும் (legislated history), இந்தியாவின் கடந்த கால வரலாற்றில் சில விஷயங்களைப் பெருமைப் படுத்தியும் வேறு சில விஷயங்களைக் கீழ்மை செய்தும் உருவாக்கப் படும் சித்தரிப்புக்களையும்” எதிர்ப்பதாக அவர்கள் அதில் கூறியிருந்தனர். அதைத் தொடர்ந்து “சகிப்புத் தன்மையின்மையும், குறுகிய மனப்பான்மையும், வெறித்தனமும் ததும்பும் அபாயகரமான சூழ்நிலையை” நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாகவும், “இந்திய வரலாறு குறித்து ஒற்றைப்படையான, தட்டையான கண்ணோட்டம் உருவாக்கப் படுவதாகவும்” எச்சரிக்கை செய்யும் “திறந்த மடல்” ஒன்று வெளிவந்தது. “வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்களும் சமூகவியல் அறிஞர்களும்”, மொத்தம் 176 பேர், அந்த “திறந்த மடலில்” கையொப்பமிட்டிருந்தனர்.

கடிகாரம் வைக்கப் பட்டது போல, அடுத்தடுத்து சங்கிலித் தொடராக இணைந்த இத்தகைய அறிக்கைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள “அறிவுஜீவி” சமூகத்திடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பது திட்டமிட்டு இயக்கப் படும் ஒரு பிரசாரம் என்று நாங்கள் கருதுகிறோம். இல்லாத ஒரு பூதத்தை உருவாக்கி, ஐயோ புலி வருகிறது என்று பயமுறுத்தி பூச்சாண்டி காட்டுவதே இதன் நோக்கம். இந்த அறிக்கைகளில் இருப்பது அறிவுச் சார்போ கல்விப் புலமையோ அல்ல, சித்தாந்த சார்பும், அதைவிட அதிகமாக அரசியலும் தான்.

indian_native_history_2இந்தியப் பண்பாட்டின் பல கூறுகளில் புலமை பெற்ற வரலாற்றாசிரியர்கள், அகழாய்வாளர்கள் மற்றும் கல்விப் புலம் சார்ந்த அறிஞர்கள் என்ற வகையில், தார்மீகமான நிலைப்பாடு போல தோற்றமளிக்கும் இந்த போலித் தனமான அறிக்கைகளுக்கு எங்கள் எதிர்வினையை நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம். மேற்கண்ட இரு அறிக்கைகளிலும் கையெழுத்திட்ட இந்திய மற்றும் “வெளிநாட்டு” வரலாற்றாசிரியர்களில் பெரும்பாலர், 1970கள் முதல் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (Indian Council of Historical Research) உட்பட தேசத்தின் பல வரலாற்று அமைப்புகளை ஆக்கிரமித்திருக்கும் ஒரு அரசியல் கருத்தியல் அமைப்பின் கருவிகளாக செயல்பட்டு வருபவர்கள். இந்த அமைப்பு, இந்திய வரலாறு குறித்த தனது குறைபட்ட கண்ணோட்டத்தை ஒட்டுமொத்த கல்விப் புலத்தின் மீதும் இத்தனை காலம் சுமத்தி வந்திருக்கிறது.

மார்க்சிய வரலாற்றாய்விலும், இடதுசாரி அரசியலிலும் மையம் கொண்டு, பின்நவீனத்துவத்திலிருந்தும், ஆனல்ஸ் சமூகவியல் (Annales School), அடித்தட்டு வரலாற்றாய்வு (Subaltern studies) போன்ற துறைகளிலிருந்தும் சில விஷயங்களைக் கடன் வாங்கி உருவானது இந்தப் புதிய வரலாற்றுக் கோட்பாட்டுத் தரப்பு (வேறு பொருத்தமான பெயர் எதுவும் இல்லாததால், “இடதுசாரி” என்று பொதுவாக இதனை அழைக்கலாம்). ஆரம்பம் முதலே, வசைபாடல்களுக்கும், அறிவுத்துறைகளுக்கு சற்றும் பொருந்தாத செயல்பாடுகளுக்கும் பெயர்போனதாக இந்தத் தரப்பு இருந்து வந்துள்ளது. அவற்றில் சில:

1. இந்திய சமூக உருவாக்கத்தையும் வளர்ச்சியையும், “சாதி அமைப்பு” என்ற கண்ணாடி மூலமாக சித்தரிக்கும் குறைத்தல்வாத கண்ணோட்டம். “விலக்கி வைக்கும்” கூறுகளை மட்டுமே வலியுறுத்தி ஒருங்கிணைக்கும் கூறுகளை முற்றிலிமாக புறக்கணித்தல். (இத்தகைய ஒருங்கிணைப்புக் கூறுகள் இருந்திராவிட்டால் இந்திய சமூகம் என்றைக்கோ பிளவுண்டு சிதறியிருக்கும்).

2. தத்துவம், மொழியியல், இலக்கியம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கலை என்ற அனைத்து விஷயங்களையும் சார்ந்த இந்தியாவின் பாரம்பரிய அறிவுத் துறைகளை ஏறக்குறைய முழுவதுமாக இருட்டடிப்பு செய்தது. மற்ற கலாசாரங்களுக்கும் பண்பாடுகளுக்கும் இந்தியா வழங்கிய முக்கியமான பங்களிப்புகளைப் பின்னுக்குத் தள்ளியது. இந்த விஷயங்களைக் குறித்த பல அறிதல்கள் கண்டடையப் பட்ட பின்னும், இடதுசாரி வரலாற்றுத் தரப்பு, காலனிய வரலாற்றாசிரியர்களின் விசுவாசமிக்க வாரிசாக, இவற்றைப் புறக்கணித்தே வந்துள்ளது. ஆனால், இந்தியாவைப் பற்றிய “அறிவியல் பூர்வமான” சித்தரிப்பை அளிப்பதாக அது மார்தட்டிக் கொள்ளவும் செய்கிறது.

3. இந்தியாவின் இந்து, பௌத்த, ஜைன, சீக்கிய கலாசாரங்களின் சுயத்தன்மையையும், பண்பாட்டுத் தொடர்ச்சியையும் மறுதலிப்பது. அது குறித்த முந்தைய தலைமுறையின் இந்திய, மேற்கத்திய வரலாற்றாசிரியர்களின் ஆதாரபூர்வமான ஆய்வுகளை நிராகரிப்பது. குறிப்பாக, இந்து அடையாளம் என்பதன் மீதே, இந்த இடதுசாரித் தரப்பு கடும் துவேஷம் கொண்டிருக்கிறது. வேதங்களுடன் தொடர்பற்றது, பகுத்தறிவற்றது, மூடநம்பிக்கைகளால் நிரம்பியது, காட்டுமிராண்டித் தனமானது, கற்பனையாக உருவாக்கப் பட்டது, எனவே “முறை தவறியது” என்று பல்வேறு திரிபுகளின் மூலமாக மட்டுமே இந்து அடையாளத்தை இந்தத் தரப்பு சித்தரித்து வந்திருக்கிறது.

Sun_temple_martand_indogreek4. மிகத் தெளிவாக பதிவு செய்யப் பட்டிருக்கும் இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களை அங்கீகரிக்க மறுப்பது. குறிப்பாக, இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கொடூரங்களுக்கு எண்ணற்ற இந்துக்களும் பௌத்தர்களும் ஜைனர்களும் சீக்கியர்களும், சில நேரங்களில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கூட இரையானது (இந்தக் கொடுங்கோலர்களைப் பெருமைப் படுத்துவதும் நடக்கிறது), கோவாவிலும் கேரளத்திலும் பாண்டிச்சேரியிலும் கிறிஸ்தவ சர்ச்சின் அடக்குமுறைகள், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், அரசே முன்னின்று இந்தியர்களை பொருளாதார ரீதியிலும் கலாசார ரீதியிலும் வறுமையுறச் செய்தது – இவை போன்ற இருண்ட அத்தியாயங்கள். உலகெங்கும், வரலாற்றில் கொடுமைகளுக்கு இரையான மக்களையும், சமூகங்களையும் நினைவில் நிறுத்த வேண்டும் என்ற அறிவார்ந்த கொள்கை செயல்படுகிறது, ஆனால், இந்தியாவிலோ, (இடதுசாரித் தரப்பின் ஆதிக்கத்தால்), வரலாற்றில் கொடுமைகளுக்கு இரையாகி மடிந்தவர்கள், அவர்களது நினைவுகள் மறக்கடிக்கப் படுவதன் மூலமும், சில சமயங்களில் இழிவு செய்யப் படுவதன் மூலமும் இரண்டாவது முறையாக சாகடிக்கப் படும் அவலம் நிகழ்கிறது.

5. பழங்குடி வரலாறுகளின் புறக்கணிப்பு: “விளிம்பு நிலை” மக்களுக்கும், “ஒடுக்கப் பட்டவர்களுக்கும்” குரல் கொடுக்கிறோம் என்ற கோஷத்தைத் தாண்டி, இடதுசாரித் தரப்பு, இந்தியாவின் பழங்குடி சமூகங்களுக்கும், அவர்களது பாரம்பரியத்திற்கும், நம்பிக்கைகளுக்கும், உண்மையான பங்களிப்புகளுக்கும் எந்த மதிப்புக்குரிய இடத்தையும் அளித்ததில்லை. இந்து கலாசாரமும் பாரம்பரியமும் பழங்குடி கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளுடன் மாறுபாடு கொண்டவை என்று நிறுவும் உள்நோக்கத்துடன் மட்டுமே இடதுசாரித் தரப்பு அவற்றின் மீது கவனம் கொண்டது. ஆனால், உண்மையில் வன்முறையால் சுமத்தப் பட்ட அன்னிய மதமாற்றங்களைப் போல அல்லாமல், இந்துக் கலாசாரத்துடன் பழங்குடி மரபுகள் கொண்ட உறவு மிகவும் ஆழமானதும் தொன்மையானதும் ஆகும்.

5. ஆதாரங்களை பாரபட்சத்துடனும் தவறாகவும் பயன்படுத்துதல்: ஏற்கனவே இந்தத் தரப்பு கொண்டிருக்கும் முன்முடிவுகளுடன் பொருந்தவேண்டும் என்பதற்காக நூற்பிரதிகளும், அகழாய்வு கல்வெட்டு ஆதாரங்களும் திட்டமிட்டு தேவைப்பட்ட இடங்களில் தவறாகப் படிக்கப் பட்டுள்ளன. கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியவியலில் (Indology) நிகழ்ந்துள்ள உயர் ஆய்வுகளும், இடதுசாரி தரப்புடன் மாறுபடும் இந்திய, மேற்கத்திய ஆய்வாளர்களின் கருத்துக்களும் முற்றாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளன. தீவிர ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மாற்று பார்வைகளை முன்வைத்த அகழாய்வாளர்கள் எதிர்மறையாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப் பட்டுள்ளனர். தொல்பொருள் உயிர்ச் சூழல் சார்ந்த ஆய்வுகள் (palaeo-environmental), மரபணுவியல் ஆகிய அறிவியல் துறைகள் மூலம் பெறப்படும் தரவுகள் புறக்கணிக்கப் பட்டுள்ளன.

6. கவலைக்கிடமான வகையில் அடிப்படை நெறிகள் மீறப்படுதல்: மாற்றுக் கருத்து கொண்ட இந்திய வரலாற்றாசிரியர்களை அறிவுபூர்வமாக விமர்சிப்பதற்குப் பதிலாக, இடதுசாரி வரலாற்றியல் தரப்பு அவர்களை தேசியவாதிகள் என்றோ வகுப்புவாதிகள் என்றோ முத்திரை குத்தி நிராகரிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. நூருல் ஹசன் காலத்திலிருந்து, (காங்கிரசின்) அரசியல் ஆதரவு மூலமாக திணிக்கப் பட்ட கருத்துகளுக்கு ஒத்து ஊத மறுத்ததனால், பல திறமையுள்ள கல்விப்புல அறிஞர்கள் பாதிக்கப் பட்டு, ஒதுக்கி வைக்கப் பட்டனர். நல் வாய்ப்புகளை இழக்குமாறு செய்யப் பட்டனர். இந்திய வரலாற்று காங்கிரஸ், இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (ICHR) மற்றும் பல அமைப்புகள் அதிகார அரசியலுக்கும், நிதிக் கையாடல்களுக்கும் களமாக மாற்றப் பட்டிருக்கின்றன. மொத்தத்தில், இடதுசாரி தரப்பு தன்னை மட்டுமே ஒற்றைப் படையாக முன் நிறுத்தி, விவாதங்களையும் மாற்றுப் பார்வைகளையும் அழித்து, கல்வியாளர்கள் எதிரெதிர் தளங்களில் அணிதிரளும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவின் கடந்த காலத்தை முற்றிலும் புகழ்மிக்க, தூய பொற்காலமாக சித்தரிக்க முற்படும் முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அதே சமயம் அதைவிடப் பெரிய தீமையாக இடது சாரித் தரப்பு தனது “அதிகாரபூர்வ வரலாற்றை” திணிப்பதையும் கடுமையாகக் கண்டிக்கிறோம். அத்தகைய திணிப்பு, தங்கள் சுய அடையாளத்தையே அன்னியப் படுத்தும், பலவீனமாக்கும் சித்திரத்தைத்தான் இரண்டு தலைமுறைகளாக இந்திய மாணவர்களுக்கு அளித்துள்ளது. தங்கள் பண்பாட்டின், பாரம்பரியத்தின் மீது அவர்கள் வெறுப்புக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. (தங்கள் அறிக்கைகளில் குறிப்பிடும்) “இந்தியா கடந்த காலத்தில் போற்றி வளர்த்த பன்முகத் தன்மையையும் அதன் உயர் விழுமியங்களையும்” இந்தத் தரப்பு ஒருபோதும் கடைப்பிடித்ததில்லை.

சார்புகளற்ற, கறாரான புதிய இந்திய வரலாற்றுக் கண்ணோட்டத்திற்காக இந்த அறிக்கை மூலம் நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம்.

(இந்த அறிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு ஆன்லைன் பெடிஷன் உருவாக்கப் பட்டுள்ளது. விரும்புவோர் அதில் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம்)

Tags: , , , , , , , , , , , , , ,

 

19 மறுமொழிகள் இந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கை

 1. ஒற்றை சிந்தனை போலி அறிவியல் சிந்தனை பாரதப்பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் இழிவுசெய்து அழித்து அதை ஐரோப்பியவயமாக்கும் கேடுகெட்ட சிந்தனை. அதுதான் மார்க்சிய இடது சாரி சிந்தனை. இந்த சிந்தனைப்போக்கு வரலாறு மட்டுமல்ல சமூகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், பண்பாட்டு ஆய்வுகள், கலை இலக்கிய ஆய்வுகள் அனைத்திலும் கடந்த அறுபது ஆண்டுகளாக கோலோச்சி வருகிறது. இந்த போலி அறிவியல்வாதிகளின் ஆதிக்கம் கல்வித்துறையில் மட்டுமல்ல கலைத்துறை, ஊடகத்துறை வரை அங்கிங்கெனாதபடி காரிருள்போல் நிறைந்துள்ளது. இது ஏதோ அவர்கள் சொல்லுவதுபோல் தானே நிறைந்ததன்று. மாறாக அன்னியவயமான நேருவாலும் அவரது குடும்பத்தினால் ஆளப்பட்ட மத்திய அரசுகளாலும் புரக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒன்றாகும். அரசின் ஆதரவினால் இந்திய வர்லாற்று ஆராய்ச்சிக்கழகம்(ஐசிஹெச் ஆர்), இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக்கழகம், இந்தியப்பண்பட்டு ஆராய்ச்சிக்கழகம் போன்ற மத்திய நிறுவனங்களையும், முக்கியமானப்பல்கலைக்கழகங்களையும் கைப்பற்றிக்கொண்ட மார்க்சியர்கள் மாற்று சிந்தனைகளை ஒடுக்கிவிட்டனர். என்சி இஆர்டி எனப்படும் மத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தமது பார்வையிலான பாடங்களையே மத்திய தேசியக்கல்வி நிறுவனங்களில் கற்பிக்கவைத்தனர். மேற்கத்திய சிந்தனை அபிராஹாமிய இறையியல் ஆகியவற்றின் மீயுயர்வையும் பரிணாம வளர்ச்சியில் ஐரோப்பிய சமூகம், அரசு, பண்பாடு எல்லாமே நம்மைவிட மேலானவை என்னும் கருத்தியலைப்பிரச்சாரம் செய்யும் நோக்கினைக்கொண்டது. இவற்றில் இருந்து நமது வரலாற்றை மீட்டாகவேண்டும். அதற்கான காலகட்டம் இப்போது வந்துள்ளது. இந்த ஆதிக்கவாதிகளை எதிர்த்து சமூக அறிவியலாளர்கள் வரலாற்று அறிஞர்கள் குரல் கொடுத்துள்ளது அதற்கு சரியான அறிகுறியாகும். அருமையான மொழிபெயர்ப்பினை நல்கிய ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு பாராட்டுக்கள்.

 2. sakthipalani on November 30, 2015 at 7:47 pm

  அறிக்கைசர்ந்த அலசல் அருமையாகவுள்ளது

 3. மேகநாதன் on November 30, 2015 at 9:54 pm

  மிகவும் பயனுள்ளப் பக்கம்

 4. as kalyanaraman on November 30, 2015 at 11:23 pm

  Very useful post quite topical and bold

 5. Paandiyan on December 1, 2015 at 4:51 am

  http://www.jeyamohan.in/81384#.VlzZfU1Po_w
  மறுநாள் என்னைக் கண்ட வெங்கட் சாமிநாதன் அதை உடனே ஊகித்துக்கொண்டார். ‘யோவ் இதிலே முக்காவாசிப்பேர் சரியான காக்காக்கூட்டம். டெல்லியோட அதிகாரமையங்களை அண்டிப்பொழைக்கிற ஸ்நாப்ஸ். பலபேர் வெறும் பவர் புரோக்கர்கள். நீ மதிக்கிறமாதிரி உண்மையான ஆர்ட்டிஸ்ட் ஒண்ணுரெண்டு இருக்கலாம். அவனும் இங்க இருந்திட்டிருக்கமாட்டான். ஒடீருவான்”

  “இவங்கதான் அத்தனை கல்ச்சுரல் விஷயங்களையும் தீர்மானிக்கிறாங்க. உலகத்தில உள்ள அத்தனை விஷயங்களப்பத்தியும் ஒருமணிநேரம் அழகான ஆங்கிலத்திலே சரியான ஜார்கன் எல்லாம் போட்டு பேசமுடியும். ஆனா அறுபத்தி ஒண்ணாம்நிமிஷம் முதல் சாயம்போக ஆரம்பிச்சிரும். ஒரெளவும் தெரியாது. பெரும்பாலும் பழைய பெருங்காய டப்பா” வெங்கட் சாமிநாதன் சொன்னார்

  “அத்தனைபேரும் ஆளுக்கு நாலஞ்சு டிரஸ்ட் வச்சிருப்பாங்க. செர்வீஸ் ஆர்கனைசேஷன் , கல்ச்சுரல் ஆர்கனைசேஷன்னு இருக்கும். கான்ஃபரன்ஸிலே இருந்து கான்ஃபரன்ஸுக்கு பறந்திட்டிருப்பாங்க.கவர்மெண்ட் பங்களாவில ஒரே ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்காக தங்க எடம்குடுத்தாப்போரும், கெளப்பவே முடியாது. டெல்லியிலே மட்டும் எப்டியும் அஞ்சாயிரம் பங்களாக்களை ஆக்ரமிச்சு வச்சிட்டிருக்குது இந்தக்கூட்டம்” சாமிநாதன் சொன்னார் “இதே மாதிரி இன்னொரு அதிகாரமையம் இருக்கு ஜே.என்.யூ. அங்கியும் இதே கதைதான்”

  “கவர்மெண்ட் இவங்களை கெளப்பிவிடமுடியாதா?” என்றேன். “பொதுவா கவர்ன்மெண்ட் அப்டி நினைக்கிறதில்லை. ஏன்னா இந்தக்கூட்டம் நேரு காலம் முதலே வந்து ஒட்டிக்கிட்டது. ஒருத்தரை ஒருத்தர் சப்போர்ட் பண்ணுவாங்க. அப்பப்ப சில ஐ.ஏ.எஸ் காரங்க முயற்சி பண்ணினாலும் அங்க போய் இங்கபோய் காலை கைப்பிடிச்சு கெஞ்சி கூத்தாடி தப்பிச்சிருவாங்க”

  “அதோட இன்னொண்ணும் இருக்கு” என வெங்கட் சாமிநாதன் சொன்னார். “இவங்க வெறும் ஒட்டுண்ணிகள் மட்டும் இல்ல. இவங்களுக்கே பெரிய பவர் ஒண்ணு உண்டு. பெரும்பாலானவங்க முற்போக்கு இடதுசாரி ஆளுங்க. பாத்தேல்ல?’ நான் வியந்து “ஆமா” என்றேன்.

  “உலகம் முழுக்க செமினார்கள் வழியா அறியப்பட்டவங்க. இந்தியாவிலே எது நடந்தாலும் உலகப்பத்திரிகைக்காரங்க இவங்ககிட்டதான் கேப்பாங்க. காங்கிரஸ் கவர்மெண்டுக்கு ஒரு லெஃப்டிஸ்ட் முகமூடிய உண்டுபண்ணி குடுக்கிறதே இவங்கதான். அப்டிப்பாத்தா இவங்களுக்கு செலவழிக்கிற தொகை ரொம்ப கம்மி” என்றார் வெ.சா

 6. A.Seshagiri. on December 1, 2015 at 3:47 pm

  இந்தியாவில் சகிப்பின்மை இல்லாமல் போய்விட்டது.நான் இந்தியாவிட்டே போகப் போகிறேன் என்று வெற்று கூச்சல் போடுகிறவர்களை தூக்கி பிடிப்பவர்கள் கீழ் கண்ட சுட்டியில் உள்ளதையும் படித்து தெளியவும் .
  http://satyavijayi.com/a-muslim-lady-shows-mirror-to-all-intolerance-rants-in-this-brilliant-article-do-read-it-full/

 7. பெருந்துறையான் on December 11, 2015 at 11:55 am

  தொடர்ந்து இது போன்ற பதிவுகளை வெளிக் கொணருங்கள்

 8. தாயுமானவன் on December 25, 2016 at 3:56 pm

  எனக்கு ஒரு சந்தேகம்? யாரவது தீர்த்து வைத்தல் நலம்..

  இந்திய தேசத்தில் பல தத்துவ சிந்தனைகள் இருந்தன. வேதாந்தம், உபநிடதம், பவுத்தம், சமணம்,ஆசீவகம், நியாயிகம், வைசேஷிகம் என்று பற்பல வைதீக, அவைதீக தத்துவ சிந்தனைகள் நம் நாட்டில் பல இருந்தன. இவை போன்ற பல தர்க்க சிந்தனைகள் அனைத்தும் 8 அல்லது பத்தாம் நூற்றாண்டிற்கு பிறகு நம் நாட்டில் சுவடே இல்லாமல் போனது. இது குறித்து பிரபலமான இடது சாரி சிந்தனை கொண்ட அறிவு ஜீவி ஒருவருடன் பேச நேர்ந்தது. பேச்சினூடாக நான் கூறியது, மேற்படி தத்துவ தரிசனங்கள், கலாசார பன்மைத்துவம் அனைத்தும் இல்லாமல் அழிந்து போனதற்கு முக்கிய காரணம் இசுலாமியரின் படையெடுப்புக்களாலும் அவர்கள் ஆள நேர்ந்தாலுமே என்று கூறினேன். ஆனால், மேற்படி இடது அறிவு ஜீவியோ உடனே கோவமாக, கேட்க கூடாதா கேள்வியை நான் கேட்டு விட்டது போல் வெறுப்புடன் அதனை மறுத்து, அவ்வாறெல்லாம் கிடையாது, இத்தனை தத்துவ தரிசனங்களும் அழிந்ததற்கு முக்கிய காரணமே பார்ப்பனியம் தான் என்றும், பார்ப்பன இந்து மதமும் அதனை இயக்கிய பார்ப்பனர்களும் தான் அவர்களின் பிழைப்பில் மண் விழுந்து விட்டதே என்கிற கொலை வெறியில் அவைதீக மதங்கள் அனைத்தையும் துடைத்து அழித்தார்கள் என்றும் இங்கு வந்த இசுலாமிய படையெடுப்பு அதற்க்கு கரணம் அல்ல என்றும் என்னிடம் சண்டை போடாத குறையாக விவாதம் செய்தார்.

  என்னுடைய கருத்து இசுலாமியர்களுக்கு இதில் பெரும் பங்குண்டு என்பது தான். இருந்தாலும், எது தான் உண்மை என்று விவரம் தெரிந்த வாசகர்கள் யாரவது காய்த்தல் உவத்தல் இன்றி கூறினால் நான் தன்யன் ஆவேன்.

 9. க்ருஷ்ணகுமார் on December 28, 2016 at 9:50 pm

  \\இந்திய தேசத்தில் பல தத்துவ சிந்தனைகள் இருந்தன. வேதாந்தம், உபநிடதம், பவுத்தம், சமணம்,ஆசீவகம், நியாயிகம், வைசேஷிகம் என்று பற்பல வைதீக, அவைதீக தத்துவ சிந்தனைகள் நம் நாட்டில் பல இருந்தன. இவை போன்ற பல தர்க்க சிந்தனைகள் அனைத்தும் 8 அல்லது பத்தாம் நூற்றாண்டிற்கு பிறகு நம் நாட்டில் சுவடே இல்லாமல் போனது. \\

  கர்நாடகா,ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ரா,பீஹார், உபி, மத்யப்ரதேசம் போன்ற ஹிந்துஸ்தானத்தின் பல மாகாணங்களில் செழித்துத் தழைத்து வருகின்றது ******ஹிந்து மதத்தின் ஒரு முக்ய அங்கமாகிய ஜைன சமயம்*******.

  அரிஹந்த், ஜினவாணி, பாரஸ் என 24/7 ஜைன டிவி சேனல்கள் ஹிந்துஸ்தானம் முழுவதிலும் நிகழும் ஜைன சமயத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன.

  திகம்பர ஜைன மார்க்கத்தைச் சார்ந்த க்ராந்திகாரி ஸந்த் தருண்ஸாகர் ஜி மஹராஜ் அவர்களுடைய ஹிந்தி பாஷையிலான ****கடுவே ப்ரவசன்**** …….***கசப்பு சொற்பொழிவு**** இதனை “””ஜைனசமயத்தைப் பின்பற்றும் ஹிந்துக்களை விட “”” ஹிந்துமதத்தின் ஏனைய சமயங்களைப் பின்பற்றும் ஹிந்துக்கள்”””” மிக அதிக அளவில் ஹிந்துஸ்தானமளாவி கேட்டுப் பயனுறுகிறார்கள்.

  இதற்குப் பெயர் சுவடில்லாமல் அழிந்தொழிவது?

  ஹிமாசலப்ரதேசம், சிக்கிம், ஜம்மு காஷ்மீரத்தின் லத்தாக் போன்ற பகுதிகளில் *******ஹிந்துமதத்தின் இன்னொரு முக்யமான அங்கமாகிய பௌத்தம்***** கால இடைவெளி இல்லாமல் செழித்துத் தழைத்து வருகிறது.

  ஸ்ரீநகரிலிருந்து சாலை மார்க்கமாக த்ராஸ் வழியாக கார்கில் சென்று பின்னர் அங்கிருந்து மேலே மேலும் சாலை மார்க்கமாக லே (லத்தாக்) சென்று வாருங்கள் ஒருமுறை. கார்கிலில் இருந்து பத்து மணி நேர ப்ரயாணத்தில் வழிநெடுக போத்கர்பு, லாமாயிரூ, நிமூ, ஆல்சி, லே ……………… என ஈராயிரம் வருஷங்கள் புராதனமான……….. இன்னமும் புழக்கத்தில் உள்ள………… பௌத்த மடாலயங்கள் காணக்கிட்டும். ஸம்ஸ்க்ருத, ப்ராக்ருத மற்றும் திப்பெத்திய பாஷைகளில் இயற்றப்பட்ட *****பௌத்த சமய**** நூற்கள் இந்த மடாலயங்களில் காணக்கிட்டும்.

  இதற்குப் பெயர் சுவடில்லாமல் அழிந்தொழிவது?

  வைதிக சமயத்தின் ஆறு உட்சமயங்கள் ஒன்றையொன்று சார்ந்தவையே. காட்டாக த்ரிமதஸ்தர்கள் எனப்படும் வேதாந்திகள் பூர்வமீமாம்ஸையை அச்சு அசலாக முற்று முழுதாக ஏற்காவிட்டாலும்………… அதன் அடிப்படைகளை வெகு நிச்சயமாக ஏற்றே வேதாந்தத்தை படிக்கிறார்கள்.

  பூர்வ மீமாம்சை மற்றும் தர்க்கம் வாசிப்பதை அத்வைத வேதாந்த பாடம் கற்பதின் ஒரு அங்கமாகக் கொள்ளுகிறார்கள் ராமக்ருஷ்ண மடத்தில்.

  குறை உங்களிடமோ இடக்கு பேசும் இடதுசாரிகளிடமோ இல்லை.

  ***ஹிந்துத்வ எழுத்தாளர்கள்*** என்ற தரப்பினரே தங்கள் எழுத்துக்களில் ***வைதிக சமயங்களை மட்டிலும் *** ஹிந்து மதம் என்று சுட்டும் படிக்கு எழுதும் *****அவலம், பித்தலாட்டம்***** அழிந்தொழிந்தாலேயே………… ஜைனம் மற்றும் பௌத்தம் ஹிந்துஸ்தானத்தில் காணாமல் போய்விட்டது போன்ற பொய்யான கருத்தாக்கங்கள் பல அடிச்சுவடு இல்லாமல் அழிந்தொழியும்.

 10. தாயுமானவன் on December 25, 2016 at 3:56 pm
  “எனக்கு ஒரு சந்தேகம்? யாரவது தீர்த்து வைத்தல் நலம்”.
  இந்தியத் திரு நாட்டில் இன்றும் நியாயம், வைஷேசிகம், சாங்கியம் யோகம், மீமாம்சை வேதாந்தம் என்ற அறுவகை வைதீக தத்துவ மரபுகளும் பௌத்தம், ஜைனம், ஆகிய அவைதிக தரிசனங்களும் அவற்றில் கிளைத்த தத்துவ மரபுகளும் உயிர்ப்போடே உள்ளன. வேதாந்ததத்துவ மரபிலே ஆகம தாந்திரமரபுகளும் இணைந்துள்ளதையும் நாம் பார்க்கின்றோம். வேதாந்தத்தின் த்வைத, விசிட்டாத்வைத, கேவலாத்வைத, சுத்தாத்வைத பிரிவுகளைச்சேர்ந்தவர்கள் மற்றைய தத்துவ மரபுகளோடு ஒப்பிட்டே தமது மெய்யியல் கொள்கைகளைப்படிக்கின்றார்கள். கற்கின்றோம். ஆறுவகை தத்துவ தரிசனங்களும் உண்மையின் ஆறு பரிமாணங்களைப்பேசுகின்றன என்பதே வேதாந்திகளுடைய ஆழ்ந்த பொதுவானப்புரிதலாக இருக்கின்றது. உண்மை இப்படி இருக்க மார்க்சியர்கள் பார்ப்பனியம் மற்ற மரபுகளை அழித்தொழித்துவிட்டது என்பது ஏன்? அது அவர்களது அபிராஹாமிய மரபின்வரலாற்றில் காணப்படும் உண்மை. இந்த மார்க்சியர்கள் ஆளுகின்ற இடங்களில் எல்லாம் மாறுபட்ட வேறுபட்ட சிந்தனைகளை மட்டுமல்ல சிந்தனையாளர்கள், அறிவியல் அறிஞர்களைக்கருவருக்கும் வேலையை இன்றுவரை செய்துவந்திருக்கின்றார்கள். இடைக்காலத்தில் ஐரோப்பாவைப்பிடித்த கத்தோலிக்கக் கிறைஸ்தவம் பேகன் சிந்தனை மரபுகளை ஒழித்த ஒடுக்கிய அழித்தக்கதையை அப்படியே இந்திய தத்துவ மரபின் மீது எதிரொளிக்கின்றார்கள் அபிராஹாமியத்தில் கிளைத்த மார்க்சியர்கள்.
  பார்ப்பனியம் பாரதத்தத்துவ மரபுகளை அழித்தொழித்தது என்பது ஆதாரமற்றப்பொய். இந்திய மரபிலே பார்பனியம் என்று எந்த ஒரு சிந்தனைப்பள்ளியும் பாரம்பரியமும் கிடையாது. பார்ப்பனியம் அதாவது பிராமனிசம் என்றால் என்ன? அதன் கூறுகள் என்ன? என்று பல விவாதங்களிலே அடியேன் கேட்டேன்? அதை வரையறுக்கும் துணிவோ ஐரோப்பிய மையவாத அபிராஹாமியர் எவருக்கு எப்போதும் இருந்ததே கிடையாது. இன்றைக்கும் பார்ப்பனர்கள் என்பது ஒரு வர்ணமாகக் கூறப்பட்டாலும். பார்ப்பனர்களுக்குள் பன்மைத்தன்மை சைவம், வைணவம்,ஸ்மார்த்தம் என்ற சமய அடிப்படையிலேயும் சரி தத்துவ தரிசன அடிப்படையிலும் சரி உண்டு. பார்ப்பனர்களிலே வைதீகர்களும் உண்டு தாந்த்ரீகர்களும் உண்டு, பௌத்தர் ஜைனராயினோரும் உண்டு. பார்ப்பனர்கள் என்ற பிரிவினரை இடைக்கால ஐரோப்பாவினைத் தனது கட்டுப்பாட்டிலே வைத்திருந்த கத்தோலிக்க ரிலிஜியஸ் ப்ரிரீஷ்ட்லி வகுப்பினரை கிளர்ஜ்ஜியின் வார்ப்பிலே கட்டமைத்து இந்தியப்பாரம்பரியத்தை அதன் தத்துவ மரபுகளை, சிந்தனாமுறைகளை உடைத்தெரிய கேடுகெட்ட சூறையாடி ஐரோப்பிய சிந்தனையாளர்கள் முயல்கின்றார்கள். மார்க்சியர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். தத்துவ மரபுகள் இந்த நாட்டிலே விவாதித்து வளர்ந்தன. ஆட்சியைக்கைப்பற்றி அதிகாரத்தைக்கைப்பற்றி மற்ற மரபின் நூல்களை எரித்தும் அறிஞர்களை நாடுகடத்தியும், கொன்றும் ஒழித்தவரலாறு அபிராஹாமியர்களுடையது. அதையே செய்த மார்க்சியர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள தமது சூறையாடி வேலைகளை உலகளாவியது என்று புரட்டை அவிழ்த்துவிடுகின்றார்கள். ஆதாரமெங்கே என்றால் ஓடிவிடுவார்கள் இவர்கள்.

 11. தாயுமானவன் on December 29, 2016 at 3:25 pm

  @ கிருஷ்ண குமார்…

  மன்னிக்கவும் தாங்கள் அளித்த பதில் திருப்திகரமானதாக இல்லை. இன்னும் கூற போனால் தாங்கள் அளித்தது பதிலே கிடையாது. முதலில் என் கேள்வியின் கான்டெக்ஸ்டை சரியாக புரிந்து கொள்ளவும். எவ்வளவோ தத்துவ தரிசனங்கள் (சிந்தனைகள்) உருவான இந்த நாட்டில், எவ்வளவோ மருத்துவ, அறிவியல் கண்டுபிடிப்புகள், தத்துவ விவாதங்கள் நடந்த இந்த பூமியில் ஏன் குறிப்பாக 8 அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிற்கு பிறகு அறிவு தேக்க நிலை அடைந்தது என்பது தான் என் கேள்வி?

  நீங்கள் கூறியதெல்லாம் எனக்கு தெரியாமல் ஒன்றுமில்லை, இந்திய தேசம் முழூக்க பரவியிருந்த பவுத்தம். ஒரு காலத்தில் இந்தியாவில் மிக பெரிய அரச மதமாய் இன்று பவுத்தம் இன்றும் இருந்த இடம் தெரியாமல் எதனால் இப்படி கார்கில் காஷ்மீர் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுருங்கி போனது, எந்த காலக்கட்டத்தில் என்பது தான் இங்கு கேள்வி? அதற்க்கு இசுலாம் இங்கு வேரூன்றியதால் தான் என்பது என் புரிதல். இல்லை என்கிறார் ஒரு இடது சாரி தோழர் ஒருவர்.

  //**ஹிந்துத்வ எழுத்தாளர்கள்*** என்ற தரப்பினரே தங்கள் எழுத்துக்களில் ***வைதிக சமயங்களை மட்டிலும் *** ஹிந்து மதம் என்று சுட்டும் படிக்கு எழுதும் *****அவலம், பித்தலாட்டம்***** //

  ஐயய்யோ.. ஏதோ அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இப்படி எல்லாம் எழுத சொல்லி மொத்தமாக காலி செய்து விடுவீர்கள் போல் இருக்கிறதே. இந்துத்துவ எழுத்தாளர்கள் சரியாக தான் எழுதுகிறார்கள். பித்தலாட்டமோ அல்லது அறியாமையோ அது உங்களிடம் தான் இருக்கின்றது. சமணமும், பவுத்தமும் அவைதீக சமயங்கள் தான். அவை ஏதும் வேதத்தையோ அது கூறும் சடங்குகளையோ அல்லது இறை வழிபாட்டையோ என்றுமே ஏற்றுக் கொண்டதே கிடையாது. வைதீகத்தை எதிர்த்து உருவானது தான் பவுத்தமும் சமணமும். இதற்க்கு ஆதாரம் வேண்டுமானால் அப்பர், சுந்தரர், சம்பந்தரின் தேவார பதிகங்களை போய் படித்து பாருங்கள். சமணத்தையும், பவுத்தத்தையும் கழுவி கழுவி ஊற்றுவதை ஒவ்வொரு பாடலிலும் நீங்கள் பார்க்கலாம்.

  முடிந்தால் நீங்கள் என் கேள்வியை புரிந்துக் கொண்டு பதில் அளியுங்கள். இல்லையேல், விட்டு விடுங்கள் நம் இருவரின் நேரமாவது மிச்சமாகும்.

 12. BSV on December 30, 2016 at 8:31 pm

  இறுதியில் கிருஸ்ணகுமார் சொன்ன உபாயம் வெகு பொருத்தம். சரி. ஆனால் எல்லாருக்கும் தெரிந்தவொன்றே. பழுத்த பிராமணர்கள் சொன்னால் கேட்பார்கள் போலும்! வெல்டன் க்ருஷ்ணகுமார்.

 13. க்ருஷ்ணகுமார் on January 2, 2017 at 11:37 am

  அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

  தயவு செய்து என்னுடைய நேரத்தையும் பொருட்படுத்துங்களேன்.

  சுவடில்லாமல் அழிவது என்பதன் பொருள் உங்களுக்குத் தெரியும் தானே. ஹிந்துஸ்தானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பௌத்தம் மற்றும் ஜைன சமயத்தின் சுவடுகளை உங்களுக்குத் தரவுகளுடன் காட்டிய பின்னர் ………….. ஒன்று அதை மறுக்க வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டும். பொய்யை உரத்துச் சொல்வதால் மட்டிலும் அது உண்மையாகி விடாது.

  தமிழகத்தில் ஜைனம் அறுகிப்போனது (சுவடில்லாமல் போனது என்பது ………… பொய்யான கருத்தாக்கம்) எந்தக் காரணங்களால் என்று நீங்கள் கேட்டால் மட்டிலுமே அது பொருத்தமான ப்ரச்னம்.

  ஹிந்துத்வக் கருத்தாக்கங்களின் பாற்பட்டு ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் எல்லோருமே ஹிந்துக்கள் தான். ஏகாத்மதா ஸ்தோத்ரம் போல ராஷ்ட்ரீய சங்க நூற்தொகுப்புகளில் ***யம் வைதிகா மந்த்ர*** என்ற ஏகாத்மதா மந்த்ரமும் உண்டு. இவை அந்தக் கருத்தாக்கத்தையே சுட்டுகிறது. இந்த தளம் மட்டிலுமன்றி அனைத்து தளங்களிலும் ஹிந்து என்ற சொல்லில் இந்த அனைத்து சமயங்களையும் உள்ளடக்கியே எழுதி வந்திருக்கிறேன். எழுதி வருவேன்.

  சட்டரீதியாக ஹிந்துக்களுக்குக் கிடைக்கும் Hindu Undivided Family………….. அவிபக்த ஹிந்து குடும்பம் எனும் வருமான வரிச் சட்டத்தின் சட்ட சலுகையை இவர்கள் அனைவரும் அனுபவித்து வருகிறார்கள்.

  விவாஹம், விவாஹரத்து, குழந்தை ஸ்வீகாரம் போன்ற விஷயங்களிலும் இந்த சமயத்தைச் சார்ந்த ஹிந்துக்கள் Hindu Personal Law மூலமாகத் தீர்வு பெறுகிறார்கள் என்பது என் புரிதல். புரிதல் தவறானால்……….. தரவுகள் பகிரப்பட்டால் திருத்திக்கொள்கிறேன்.

 14. க்ருஷ்ணகுமார் on January 2, 2017 at 11:44 am

  அன்பர் பீ எசு

  \\ இறுதியில் கிருஸ்ணகுமார் சொன்ன உபாயம் வெகு பொருத்தம். சரி. ஆனால் எல்லாருக்கும் தெரிந்தவொன்றே. பழுத்த பிராமணர்கள் சொன்னால் கேட்பார்கள் போலும்! வெல்டன் க்ருஷ்ணகுமார். \\

  கருத்தில் உடன்பாடு சரி. கருத்தின் அத்யாவசிய கோட்பாடு ****ஹிந்து இன்றே ஒன்றுபடு*** எனும் சங்கப்பாடல்.

  சமயங்களில் வேறானாலும் மதத்தின் வழி ஒன்றான ஹிந்துக்களைப் பேசும் உத்தரத்தில் ஜாதியை எதற்கு இழுக்கிறீர்கள். என்னுடைய ஜாதி இன்னது என்று எந்த தளத்திலும் நான் எழுதியது இல்லை.

  அப்பாலே சில்சாம், சிரிவைணவம், ஜோ அமலன் என்று நான் இழுத்தால் அப்புறம் அழுவாச்சி வரக்கூடாது.

 15. BSV on January 3, 2017 at 10:03 pm

  With reference to Shri Shiva Viboothi Bhushan’s reply:

  வைதீக சமயம் என்பது வேதங்கள் உபநிஷத்துக்கள் மற்றும் அதனடிப்படையாக உருவாக்கப்பட்ட சமயச்சடங்குகள்; வாழ்க்கை முறையே. இவற்றைப்; பொதுவாக ஒரு ஜாதியினரும் அவர்களோடு சில மேற்ஜாதியினரும் க்டைபிடிக்கின்றனர். காயத்திரி மந்திரத்தையும் சந்த்யாவந்தனததையும் கருப்பசாமியைக்கும்பிடும் தேனிமாவடடக்கரர்கள் செய்வார்களா? அதாவது, வைதீக சமயத்துக்கும் வெளியே அப்பால் ஹிந்துமதம் விரிந்து பரந்து கிடக்கிறதல்லவா?

  இந்துத்வ எழுத்தாளர்க்ள், ஹிந்து மதம் என்றால் மேற்சொன்ன வைதீக சமயம் மட்டுமே என்று பரப்புரை செய்கிறார்கள். மேலை நாட்டு அறிஞர்களும் கான்ட்ராட் எல்ஸ்ட் , டேவிட் ஃப்ராட்லி போன்ற எழுத்தாளர்களும் இதையே செயகிறார்கள். இப்படிச்செய்ய்யும் போது மற்ற அ-வைதீகப்பிரிவுகளைச்சார்ந்தோர் என்ன நினைப்பார்கள்? நாம் ஹிந்துக்கள் இல்லை போலும் என்றுதானே.? இது இம்மத விரித்திக்கு வித்தாகுமா என்பதே கிருஸ்ணகுமாரின் அங்கலாய்ப்பு. ஆனால்
  ஒரு குறிப்பிட்ட ஜாதியோடு எடுத்துக்கொண்டு கோப்பப்படுகிறீர்கள். உங்களுக்கு விளக்க இப்படிச்சொல்லலாம். நீங்கள் வீஈசைவம். அதைமட்டுமே இந்துமதம் என்று எழுத்தாளர்கள் எழுதினால் சரியா? மற்றவர்கள் இந்துக்களில்லையா என்று கேட்டால் மேலைநாட்டானின் சூழ்ச்சி என்று மாற்றப்பார்க்கிறீர்களே! எவரொருவர் எல்லாப்பிரிவுகளைப் பற்றியும் பரப்புரை பண்ணுகிறாரோ அவர்தான் இம்மதத்தின் உண்மைத்தொண்டர் என்பது கிருஸ்ணகுமாரின் கருத்து.

  ஒரு பிரிவுக்கு மற்றொன்று எதிரியன்று. அதே வேளை, பிரிவுகள் பல என்ற உண்மையையும் ஏற்றாக வேண்டும். நீங்கள் என்னவோ வைதீக சமயத்தை எதிர்த்து எழுதவந்து விட்டார்கள் என்று பதறுகிறீர்கள்! உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள் அது போதும். உத்வியில்லாவிட்டாலும் உபத்தரமில்லாமிலிருக்க வேண்டும்.

 16. BSV on January 7, 2017 at 12:28 am

  ஹிந்து என்றே ஒன்று படு என்ற சங்கப்பாடலைப் பாடினால் போதுமா கிருஷ்ணகுமார்? அதைச்செய்து காட்ட வேண்டாமா? அதைச்செய்ய தடையாய் இருபப்து எது எனப்தற்கு அன்பர் கிரு.குமார் சொன்னது என்ன? வைதீஹ பிரிவைமட்டுமே இந்த்துவர்கள் ஹிந்துமதம் என்று சொல்லிவருகிறார்கள். என்பதுதானே ? பதில் சொல்லிவிட்டு ஓடலாமா? அம்மதத்தை அனுசரிப்பவர்கள் பிராம்ணர்களே. ஆக, தடையாயிருப்பது ஜாதியே என்றும் சொல்ல ஏன் ஓழிப்பு? ஒரு பககம் ஜாதி வேண்டும்; இன்னொரு பக்கம் ஒன்றுபடுதலா? அது எப்படிங்காணும் சாத்தியம? கூழுக்குமாசை; மீசைக்குமாசை,

  ஹிந்து என்று ஒன்றுபடுவதற்கு ஜாதிப்பிரிவினைகளே தடை. கிருஸ்ணன் எனக்குத் தாராளமாக உலகத்திலிருக்கும் அனைத்து கிருத்துவ ப்பெயரகளையும் இசுலமியப்பெயர்களையும் இட்டு மகிழ்ந்து கொள்ளலாம். எப்பெயரில் சொன்னாலென்ன ? உண்மை பொய்யாகாது. பொய் உண்மையாகாது.

  என் கருத்தை இவ்வளவு காலம் கழித்து ஏற்றுக்கொன்டதற்கு மகிழ்ச்சி. அது – ஜாதிகள் இருக்கும் வரை, இந்து என்று ஒன்று படு என்ற பாடல் வெறும் பாடலாக மட்டுமே நிற்கும் தீட்சிதர்களும் சர்மாக்களும் மனமிரங்கினால் பாடல் வெற்றியாகும் என்பதே.

  மனமிரங்குவாரா சர்மாக்கள்? அதாவது சர்மாக்கள் மனமிரங்கினால், போலி இந்துத்வ எழத்தாளருக்கு வேலையில்லை.

 17. க்ருஷ்ணகுமார் on January 16, 2017 at 3:35 pm

  \\ வைதீஹ பிரிவைமட்டுமே இந்த்துவர்கள் ஹிந்துமதம் என்று சொல்லிவருகிறார்கள். என்பதுதானே ? பதில் சொல்லிவிட்டு ஓடலாமா? \\
  ஹிந்துத்வ சிந்தனையை பரப்புரை செய்யும் வ்யாசங்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் பாடப்பெறும் ஏகாத்மதா மந்த்ரம் போன்றவை மிகத்தெளிவாக வைதிகம், சைவம், வைஷ்ணவம்,பௌத்தம், ஜைனம், சீக்கியம் போன்ற பல சமயங்களையும் ஒருங்கேயே அடையாளப்படுத்துகின்றன.
  சங்க ஷாகாக்களில் இந்த சமயத்தினர் அனைவரும்………….அவ்வளவு ஏன்……….ஹிந்துத்வ கருத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ளும் க்றைஸ்தவ இஸ்லாமியரும் கூட பங்கு பெறுகின்றனர்.
  \\ அம்மதத்தை அனுசரிப்பவர்கள் பிராம்ணர்களே.\\
  அபத்தம். வைதிக சமயத்தை அனுசரிப்பவர்கள் ப்ராம்மணர்களே என்பது அறியாமை. வேத ப்ராமாண்யத்தை ஏற்கும் சைவம், வைஷ்ணவம், சாக்தம் போன்ற அனைத்து சமயங்களுமே அவை வேத ப்ராமாண்யத்தை ஏற்கும்படிக்கு வைதிக சமயங்களே. பாபா ராம்தேவ் தமது பூர்வாச்ரம ஜாதியால் யாதவர். அவரது வ்யாகரண குரு ப்ரத்யும்ன மஹராஜ் பிறிதொரு ஜாதி. இவர்கள் எல்லோருமே பரம வைதிகர்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே அந்தகாரம் என்று சொன்னால் பூலோகம் அந்தகாரம் ஆகிவிடுமா சொல்லுங்கள். இவை சொல்ப உதாஹரணங்களே,
  \\ கிருஸ்ணன் எனக்குத் தாராளமாக உலகத்திலிருக்கும் அனைத்து கிருத்துவ ப்பெயரகளையும் இசுலமியப்பெயர்களையும் இட்டு மகிழ்ந்து கொள்ளலாம். \\
  இது தானே வேண்டாம் என்னுகிறது. ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற பெயரில் தங்களை எழுதுவதற்கு நானா பணிப்பித்தேன். நீங்களாக எழுதியது தானே அது. உணமை என்றுமே உண்மை தான்.
  \\ என் கருத்தை இவ்வளவு காலம் கழித்து ஏற்றுக்கொன்டதற்கு மகிழ்ச்சி. \\
  அபத்தம். ஹிந்து என்ற சொல் அனைத்து சமயங்களையும் மேலும் நாட்டார் வழிபாட்டு முறைமைகளையும் தன்னகத்தே கொண்டது என்பது நான் இந்த தளத்திலும் திண்ணையிலும் விஜயவாணியிலும் உச்சஸ்தாயியில் பலப்பலமுறை பகிர்ந்த விஷயம். நீங்கள் புது அவதாரம் எடுத்து விட்டதால் தேவரீர் பழைய அவதாரத்தில் எம்முடன் செய்த கருத்துப் பரிமாற்றங்களை மறப்பது சரியல்ல ஸ்வாமின் 🙂
  \\ போலி இந்துத்வ எழத்தாளருக்கு வேலையில்லை. \\
  ஹிந்துத்வ எழுத்தாளர்களின் கருத்துக்களில் ஹிந்துத்வம் சரியான படி ப்ரதிபலிக்கப்படவில்லை (அது அவலம், பித்தலாட்டம்) என்று நான் சொன்னதை திரித்து ***போலி ஹிந்துத்வ எழுத்தாளர்*** என்று மனம் போன போக்கில் எழுதுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 18. BSV on January 18, 2017 at 6:53 pm

  //ஹிந்துத்வ சிந்தனையை பரப்புரை செய்யும் வ்யாசங்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் பாடப்பெறும் ஏகாத்மதா மந்த்ரம் போன்றவை மிகத்தெளிவாக வைதிகம், சைவம், வைஷ்ணவம்,பௌத்தம், ஜைனம், சீக்கியம் போன்ற பல சமயங்களையும் ஒருங்கேயே அடையாளப்படுத்துகின்றன.//

  நாம் எழதியது கிருஸ்ணகுமார் போனறோரைத்தான். ஆர் எஸ் எஸ்\ தொண்டர் என்று சொல்பவர் கண்டிப்பாக ஜாதிகளை மறுக்க வேண்டும். ஜாதிகள் அவசியம் என்று நீண்ட கட்டுரையைத் திண்ணையில் எழுதியவரோடு நான் கடும் வாதப்போர் பன்னாட்கள் நடாத்தியபோது அவ்வெழுத்தாளருடன் சேர்ந்து கொண்ட கிருஸ்ணகுமார், தனக்கு ஜாதிப்பற்று இல்லை என்றால் நம்பலாமா? அவ்வெழுத்தாளர் இன்றில்லை. ஆனால் அக்கட்டுரை அங்கே இன்றும் நிற்கிறது. என் பின்னூட்டங்களும்தான்.

  \\ அம்மதத்தை அனுசரிப்பவர்கள் பிராம்ணர்களே.\\
  அபத்தம். வைதிக சமயத்தை அனுசரிப்பவர்கள் ப்ராம்மணர்களே என்பது அறியாமை. வேத ப்ராமாண்யத்தை ஏற்கும் சைவம், வைஷ்ணவம், சாக்தம் போன்ற அனைத்து சமயங்களுமே அவை வேத ப்ராமாண்யத்தை ஏற்கும்படிக்கு வைதிக சமயங்களே. பாபா ராம்தேவ் தமது பூர்வாச்ரம ஜாதியால் யாதவர். அவரது வ்யாகரண குரு ப்ரத்யும்ன மஹராஜ் பிறிதொரு ஜாதி. இவர்கள் எல்லோருமே பரம வைதிகர்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே அந்தகாரம் என்று சொன்னால் பூலோகம் அந்தகாரம் ஆகிவிடுமா சொல்லுங்கள். இவை சொல்ப உதாஹரணங்களே,

  பூலோகமே இருண்டது என்று நினைத்தே எழுதுகிறார். காயத்திரி மந்திரத்தையும், சந்தியாவந்தனத்தையும் பார்ப்பனர் தவிர வேறந்த ஜாதியும் செய்யாது என்றால் பொய்யா? ஆவணி அவிட்டத்துக்குப் பூனால் மாற்றுவது யார்? அது வைதீக மதமா இல்லையா? ஓர் அப்துல்கலாம் வீணை வாசித்தால் எல்லாருமா வீணைவாசிக்கிறார்கள்?. ஒரு முசுலீம் சமஸ்கிருதத்தில் பண்டிதர் என்றால் எல்லா முசுலீம்களும் அம்மொழியை ஏற்றுக்கொண்டு விட்டாரா?

  பொய் சொன்னால் பொருந்தச்சொல்லவேண்டும். இங்கு வைதீஹ மதக்கூறுகள் விமர்சிக்கபப்டவேயில்லை. என் கருத்துக்களை உய்த்துணர்ந்தால் தெரிவது. “இது இங்கே இப்படி; அது அங்கே அப்படி” என்ற தொனிதான். இப்படி இங்கே இருப்பது தவறு. அப்படி அங்கே இருப்பது உயர்வு என்று நான் சொல்லவில்லை.

  வைதீஹ மதத்தின் கூறுகள் எல்லாரிடமுமே இருக்கும். இருக்கின்றன. ஆனால் அவை அவர்கள் வழிபாட்டு மரபில் ஊடுருவி ஒன்றாகப்போனவைதான். ஆனால், பார்ப்பனருக்கு வைதீக மதம் இல்லையென்றால், பிராமணர் என்ற வகுப்பு வருமா? சர்மா என்ற ஜாதிப்பெயர் எங்கிருந்து வந்தது? தமிழ்நாட்டில் பிராமணர் தவிர வேறெவராவது சர்மா என்று உண்டா?

  முதலும் கடைசியுமாக, வைதீக மதம் இல்லாவிட்டால் பிராமணன் இல்லை. மற்றவர்கள் அவர்கள் வழிபாட்டோடு வாழமுடியும்; பிராமணர்களால் முடியாது. ராமைப்போல, ஹாசனைப்போல நாத்திகனாக மாற வேண்டியதுதான். இன்றைய பார்ப்ப்னர்களில் ஒரு 60 விழுக்காட்டுக்கு மேலே அப்படியாகிவிட்டால் அல்லது மதம் மாறிவிட்டால், வைதீஹ மதம் அழிந்தது.

  குலதெயவ வழிபாட்டைப் பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு கட்டுரை இங்கே ஒருவரால் எழுதப்பட்டது. அதற்குப் பலர் ஆதரவு பின்னூடடங்களைப்போட்டிருக்கின்றனர். அவ்வழிபாட்டிலும் வைதீக மதக்கூறுகள் உண்டு. ஆனால் அது அவர்களுக்கே தெரியாது. கிடா வெட்டி, அருவாளை வைத்து, சாராயப்படையல் வைக்கும்போது எப்படி வைதீஹ மதக்கூறுகள் அங்கே பிழைக்கும்? அவை, ஒரு காஸம்ட்டிக் எஃபெகட்தான். வைதீஹ இந்துமதமன்று.

  \\ கிருஸ்ணன் எனக்குத் தாராளமாக உலகத்திலிருக்கும் அனைத்து கிருத்துவ ப்பெயரகளையும் இசுலமியப்பெயர்களையும் இட்டு மகிழ்ந்து கொள்ளலாம். \\
  இது தானே வேண்டாம் என்னுகிறது. ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற பெயரில் தங்களை எழுதுவதற்கு நானா பணிப்பித்தேன். நீங்களாக எழுதியது தானே அது. உணமை என்றுமே உண்மை தான்.

  எந்த புனைப்பெயரையும் சுட்டிக்காட்டலாம். ஆனால் அதைச் செய்யும் நோக்கம் என்னை கிருத்துவனாக காட்டுவதே. இது கெட்ட நடத்தை. நான் கிருஷ்ணகுமாரை முசுலீம் என்றால் ஏற்றுக்கொள்வாரா?

  \\ என் கருத்தை இவ்வளவு காலம் கழித்து ஏற்றுக்கொன்டதற்கு மகிழ்ச்சி. \\
  அபத்தம். ஹிந்து என்ற சொல் அனைத்து சமயங்களையும் மேலும் நாட்டார் வழிபாட்டு முறைமைகளையும் தன்னகத்தே கொண்டது என்பது நான் இந்த தளத்திலும் திண்ணையிலும் விஜயவாணியிலும் உச்சஸ்தாயியில் பலப்பலமுறை பகிர்ந்த விஷயம். நீங்கள் புது அவதாரம் எடுத்து விட்டதால் தேவரீர் பழைய அவதாரத்தில் எம்முடன் செய்த கருத்துப் பரிமாற்றங்களை மறப்பது சரியல்ல ஸ்வாமின்

  என் கருத்து எக்காலமும் ஒன்றே. ஜாதிகள் அழிய வேண்டும். இச்சொற்றொடரை மதத்துக்கு வெளியே நின்று சொல்லலாம். இந்து மதத்துக்கு உள்ளே நின்றும் சொல்லலாம். இங்கு உள்ளே நின்று இன்றன்று; பலகாலம் எழுதிவருகிறேன். வெளியே நின்று ஆங்கில சஞ்சிகைகளில் எழுதுவதுண்டு. ஜோ என்று நீட்டி அவதூறு செய்வது ஒரே ஒரு நபர் கிருஸ்ணகுமார். காரணம்; அவருக்கு ஜாதிகள் வேண்டுமென்பதால். இப்போது திடீரென்று மாறிவிட்டாரோ? என்று என் நினைப்பு தவிடுபொடியாகி விட்டது. இன்றும் அந்த ஜாதி அரிப்பே அவரின் எதிர்வினையாகி விட்டது. ஆக்ரோஷமும் ஆவேசமும் என் எழுத்துக்களின் மேல் வருவதற்கு ஒரே காரணம் தன் ஜாதி அரிப்பே.

  \\ போலி இந்துத்வ எழத்தாளருக்கு வேலையில்லை. \\
  ஹிந்துத்வ எழுத்தாளர்களின் கருத்துக்களில் ஹிந்துத்வம் சரியான படி ப்ரதிபலிக்கப்படவில்லை (அது அவலம், பித்தலாட்டம்) என்று நான் சொன்னதை திரித்து ***போலி ஹிந்துத்வ எழுத்தாளர்*** என்று மனம் போன போக்கில் எழுதுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

  போலி இந்துத்தவ எழுத்தாளர் என்பது எல்லாரையுமே குறிக்கும். இந்துத்வம் ஜாதிகளை எதிர்க்கும் ஒன்று என்றெடுத்தால், ஜாதிகள் வேண்டுமென்று உணர்வுடன் இந்துத்வர் என்று சொல்வது, போலி இந்துத்வர் என்பதே. எட்டுணையும் ஐயமில். அதைத்தான் குறிப்பிடுகிறேன். மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்.

  //சங்க ஷாகாக்களில் இந்த சமயத்தினர் அனைவரும்………….அவ்வளவு ஏன்……….ஹிந்துத்வ கருத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ளும் க்றைஸ்தவ இஸ்லாமியரும் கூட பங்கு பெறுகி//

  ஆனால் அதில் உங்களைப்போன்றோர் இருக்க முடியாது எனபதே நான் கண்டது. இந்த போலி இந்துத்வர்களால் என்ன தொல்லை என்றால், வைதீஹ மதமே இந்துமதம் என்று பின்வாசல் வழியாக உள்ளே விடுகிறார்கள்; இவர்களூக்குத் துணை போவது, பெலிஜியம் பேராசிரியர் எல்ஸ்ட், அமெரிக்கர் ஃப்ராட்லி. இவர்கள் இருவருக்கும் வைதீஹ இந்துமதத்தைப் பற்றி மட்டுமே தெரியும். அட மடையர்களா…வைதீஹ இந்துமதம் இந்துமதம் என்ற ஆலமரத்தில் ஒரு பெருங்கிளையே. அல்லது அதன் வேர்களில் ஒன்றே.

  It is far better for Krishnakumar to join the 8 crore crowd of Tamil Nadu resident Tamilians and feel proud of your caste. If you are a brahmanan, it is good. Feel proud and become a member of Tambras. If 8 crore Tamilians have castes, why not I? If every caste wants their man or woman to be their CM, why can’t you desire to have your caste man? Everything is ok.

  But never ever say you are an RSS man. You cannot cheat all the people all the time. Get out.

 19. க்ருஷ்ணகுமார் on January 22, 2017 at 3:15 pm

  \\ காயத்திரி மந்திரத்தையும், சந்தியாவந்தனத்தையும் பார்ப்பனர் தவிர வேறந்த ஜாதியும் செய்யாது என்றால் பொய்யா? \\

  அப்பட்டமான பொய். இதே தளத்தில் ஆர்ய சமாஜம் அனைத்து ஹிந்துக்களுக்கும் இப்பயிற்சி அளிக்கிறது என்பதைப் பார்த்துப் பொறுமிய் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ சொல்லும் பொய். பாபா ராம்தேவ் அவர்களது ஒட்டு மொத்த இயக்கத்திலும் ஜாதி வித்யாசமன்னியில் அனைத்து ஜாதியினரும் காயத்ரிமந்த்ரத்தைச் சொல்லுவதையும் சந்த்யாவந்தனாதி அனுஷ்டானங்களைச் செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே இவற்றைப் பொறுக்காத ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ சொல்லும் அப்பட்டமான பொய்.

  \\ எந்த புனைப்பெயரையும் சுட்டிக்காட்டலாம். ஆனால் அதைச் செய்யும் நோக்கம் என்னை கிருத்துவனாக காட்டுவதே. \\

  ஹிந்துக்கள் க்றைஸ்தவராக மாறுவதில் புளகம் கொள்ளும் நீங்கள் …………. பரம பாகவதோத்தமரான டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்கள் தான் பிறந்த க்றைஸ்தவ மத ஆசாரங்களை ஒழுகாது …………தமது ஆசிரியரான ஸ்ரீ வைஷ்ணவரை ஆச்ரயித்து வைஷ்ணவ நூற்களை கற்று வைஷ்ணவ ஆசார்யர்கள் உகந்தேத்தும் வண்ணம் வாழுகையில்……….. அவரை நீங்கள் தளம் தளமாக இழித்துப் பழித்துப் பேசுவது எதனால்?

  ஒரு க்றைஸ்தவர் ஹிந்து வாழ்க்கை நெறிமுறைகளை ஏற்பது உங்களுக்கு ஏன் கசக்கிறது.

  உங்களை பிறிதொருவர் எதற்காக க்றைஸ்தவராகக் காட்ட வேண்டும். ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்று பிறிதொருவர் உங்களுக்குப் பெயர் சூட்டவில்லை. அது நீங்களாக உங்களுக்குச் சூட்டிக்கொண்ட பெயர் அல்லவா? எதற்குப் பொய் சொல்லுகிறீர்கள்?

  உங்களது பெயராலும் உங்களது கருத்துக்களாலும் உங்களது ஆப்ரஹாமிய ஆதரவாலும் க்றைஸ்தவர்கள் ஹிந்துவாக மாறுகையில் அதை இழித்துப் பழித்துப் பேசும் உங்கள் செயல்பாட்டாலும் ………….. நீங்கள் தான் உங்களை காட்டிக்கொடுக்கிறீர்கள். பிறிதொருவர் இல்லை ஐயா.

  \\ என் கருத்து எக்காலமும் ஒன்றே. ஜாதிகள் அழிய வேண்டும். \\

  ஹிந்து மதத்தின் அனைத்து சமயங்களும் ஒன்றுடன் ஒன்று பிணங்குவது மட்டிலும் கிடையாது. இணக்கங்களும் இவற்றினிடையே உண்டு என்பது வாதம். எப்போதுமே ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் வாதத்திலிருந்து தடம் புரள்வதில் பெருமிதம் கொள்பவர் என்பது தெரியாத விஷயமா?

  \\ அவ்வெழுத்தாளருடன் சேர்ந்து கொண்ட கிருஸ்ணகுமார், தனக்கு ஜாதிப்பற்று இல்லை \\

  எதற்குப் பூடகம். யார் எழுத்தாளர் என்று சொல்லுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? நீங்கள் சொல்லும் வ்யாசத்தின் தொடுப்பைப் பகிர்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்? நான் எந்த தளத்திலும் என்னுடைய ஜாதி இன்னது என்று எழுதியது கிடையாது.

  \\ கிடா வெட்டி, அருவாளை வைத்து, சாராயப்படையல் வைக்கும்போது எப்படி வைதீஹ மதக்கூறுகள் அங்கே பிழைக்கும்? \\

  ம்………… நல்ல டமாஸ். வைதீக மதக்கூறுகளை கசடறக்கற்ற ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  \\ இந்துத்வம் ஜாதிகளை எதிர்க்கும் ஒன்று என்றெடுத்தால், ஜாதிகள் வேண்டுமென்று உணர்வுடன் இந்துத்வர் என்று சொல்வது, போலி இந்துத்வர் என்பதே. \\

  எப்படீங்க டமாஸ் டமாஸாக எழுதுகிறீர்கள். ஹிந்துத்வம் என்பது ஜாதிகளில் ஆரம்பித்து ஜாதிகளில் முடிவதாக உங்களது எழுத்துக்களைப் பார்த்தால் யாராவது புரிந்து கொண்டு விடுவார்கள். ஹிந்துத்வத்திற்கு பல கூறுகள் உண்டு. அவற்றைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமான சமாசாரம் கூறு. சரியா?

  \\ வைதீஹ இந்துமதம் இந்துமதம் என்ற ஆலமரத்தில் ஒரு பெருங்கிளையே. அல்லது அதன் வேர்களில் ஒன்றே. \\

  உங்களுக்கு புரிஞ்ச மாதிரி இருக்கு. இன்னமும் முழுக்க புரியவில்லை. இதை நான் கூரை மீது ஏறி தமிழ் ஹிந்து முதல் அனைத்து தளத்திலும் சொன்ன போதும் உங்களுக்குப் புரிந்ததில்லை. இன்னமும் கூட முழுக்கப் புரியவும் இல்லை.

  \\ But never ever say you are an RSS man. You cannot cheat all the people all the time. Get out. \\

  உங்களது ஜாதிக்காழ்ப்புகள், ஹிந்து மதக்காழ்ப்புகள், ஸ்ரீ வைஷ்ணவ சமயத்தை சிரி வைணவம் என்று நீங்கள் இழிவு செய்தமை, ஆழ்வார் ஆசார்யாதிகளின் கருத்துக்களை திரித்தமை அதனை தளத்தின் வைஷ்ணவர்கள் சுட்டிக்காட்டியும் திருத்திக்கொள்ளாமை, ஆதிக்க ஜாதிவெறி ராமசாமி நாயக்கர் ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டதை ஆதரித்து நீங்கள் புளகம் கொண்டது, பயங்கரவாதி யாகூப் மேனனுக்கு தாங்கள் ஆதரவு அளித்தது போன்ற கருத்துக்களால் …………. நீங்கள் உங்கள் அடையாளங்களைக் கட்டமைத்துக் கொண்டீர்கள். அதை தொடர்வது அல்லது அதில் மாற்றுக்கொள்வது உங்களது விருப்பம்.

  ha. ha. ha. Then who could be an RSS man. The one like you who has taken oath to convert hindus to christianity? but please do not go out. just prove through your writings ………………..that why Amarar Malarmannan Mahasayar identified you as crypto christian.

  Good day.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*