பீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்

November 11, 2015
By

பீகார் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்திகள்

1. யாதவ், முஸ்லீம்கள் இன்னும் சில உதிரி ஜாதிகள் நிச்சயமாக என்றுமே பி ஜே பி க்கு ஓட்டுப் போடப் போவதில்லை. அவர்கள் ஒன்று சேர்ந்து நிற்கும் பொழுது பி ஜே பி ஜெயிப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் பிரிந்து நிற்கும் பொழுது அபூர்வமாக வெற்றியை அடைய முடியும். இனிமேல் லாலு நிதிஷ் இருவர் கூட்டணி உடைந்தால் அன்றி பீஹாரில் மாற்றம் ஏதும் வரப் போவதில்லை

2. பி ஜே பியின் தோல்விக்கு தாத்ரியோ, எழுத்தாளர்கள் போராட்டங்களோ பத்திரிகைகளோ எந்த விதத்திலும் காரணம் இல்லை. இவை எதுவுமே நடந்திருக்கா விட்டாலும் கூட இதே முடிவுகள்தான் வந்திருக்கக் கூடும்

3. ஆர் எஸ் எஸ் தலைவரின் ரிசர்வேஷன் குறித்த பேச்சு அதிக பட்சமாக ஒரு சதவிகிதம் வாக்குகளை இழக்க வைத்திருந்திருக்கலாம்

4. பி ஜே பி சுஷில் மோடியை முதல்வர் வேட்ப்பாளராக துணிந்து அறிவித்திருந்திருக்க வேண்டும் அப்படி அறிவித்திருந்தால் கடந்த 2014 தேர்தலில் பெற்ற அதே வாக்கு சதவிகிதத்தையும் அனேகமாக ஒரு 66 சீட்டுக்களையும் பெற்றிருக்க கூடும் அதை விட பெரிய மாறுதல் ஏற்படுத்தியிருக்கப் போவதில்லை. இருந்தாலும் முதல்வர் வேட்ப்பாளரை அறிவித்து போராடுவதே சரியான வழிமுறையாக இருக்கும். வரும் தேர்தல்களில் இதைக் கணக்கில் கொள்ள வேண்டும்

CORRECTION-INDIA-POLITICS-MODI

5. மோடியின் வளர்ச்சி திட்டங்களோ பத்திரிகைகளினால் உருவாக்கப் பட்ட சகிப்பின்மை பிரசாரங்களோ பீஹாரில் ஒரு பொருட்டே கிடையாது. வளர்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கணிசமாக இருக்கும் மிகவும் பிற்படுத்தப் பட்ட ஒரு மாநிலத்தில் ஜாதி மதம் மட்டுமே ஒரே அடிப்படையாக உள்ளது. இது இன்னும் 100 ஆண்டுகளுக்கு மாறப் போவதில்லை. இந்திய ஜனநாயகம் இதன் காரணமாக தடுமாற்றத்துடனேயே இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கும்.

6. வரவிருக்கும் அசெம்ப்ளி தேர்தல்களிலும் இதே போன்ற எதிர்க் கட்சிகளின் கூட்டணி வலுப்படுமானால் பி ஜே பி இதே போன்ற தோல்விகளையே எதிர் கொள்ள நேரும். அஸ்ஸாமில் அந்த சாத்தியம் அதிகம் உள்ளது. உ பி யில் ஓரளவுக்கு உள்ளது

7. என்னைப் போன்ற ஒரு சாதாரண பார்வையாளனுக்கே அதுவும் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டே பீஹாரின் போக்குகளைக் கணிக்க முடிந்திருக்கும் பொழுது பி ஜே பி தலைவர்களுக்கும் இந்த உண்மைகள் ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட வருங்காலத்தில் ஹிமாச்சல பிரதேசம் தவிர வேறு புதிய வெற்றிகளை எதிர்பார்க்க முடியாது. இருக்கும் குஜராத் போன்ற மாநிலங்களில் கூட தோல்விகளை எதிர்பார்க்கலாம். ஆகவே யதார்த்த நிலையைக் கணக்கில் கொள்வது அவசியம்

8. ஆகவே வரும் காலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் தோல்விகளை எதிர் நோக்கி அதை கணக்கில் கொண்டே அந்த தோல்விகள் பி ஜே பி யின் வளர்ச்சித் திட்டங்களை எந்த அளவும் பாதிக்காமல் தொடர்ந்து வர வேண்டும். தேர்தல்களுக்காக தங்கள் கொள்கைகள் சீர்திருத்தங்கள் போன்றவற்றில் இருந்து விலகக் கூடாது. எது செய்தாலும் அந்தத் தோல்விகளைத் தவிர்க்கவே முடியாது

9. காங்கிரஸ், லாலு, தி மு க போன்ற கட்சிகளின் ஊழல்களின் மீதான விசாரணைகளை விரைவு படுத்த வேண்டும். அவர்களுக்கு சலுகைகளை அளிப்பதை நிறுத்த வேண்டும். என் ஜி ஓக்களை ரத்து செய்தது போலவே மீடியாக்களின் ஊழல்களையும் விசாரித்து அவர்களை அம்பலப் படுத்த வேண்டும்.

10. முக்கியமாக பி ஜே பி தனக்கு ஆதரவான மீடியாக்களை முக்கியமாக டி விக்களை உருவாக்குதல் மிக மிக அவசியம்

11. முஸ்லீம்கள் ஒரு பொழுதும் பி ஜே பியை ஆதரிக்கப் போவதில்லை. ஆகவே அவர்களை தாஜாப் படுத்தும் வேலைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளையும் முஸ்லீம்களின் கள்ளக் கடத்தல் நடவடிக்கைகளையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஓட்டுக்காக எந்த சலுகைகளையும் வழங்கக் கூடாது. இதில் உறுதியாக இருக்க வேண்டும்

12. மீடியாக்களின் மிரட்டல்களுக்கு பி ஜே பி அடிபணியக் கூடாது மாறாக மீடியாக்களின் நிதி மோசடிகளை விசாரணை செய்து அவர்களை அடக்கி வைக்க வேண்டும். அது போலவே அவார்டுகளைத் திருப்பி அளித்த எழுத்தாளர்களையும் விஞ்ஞானிகளையும் அவர்கள் செய்திருக்கும் நிதி மோசடிகளை விசாரித்து கைது செய்ய வேண்டும்.

13. பி ஜே பி யின் அமைச்சர்கள் என்ன பேச வேண்டும் ஏது பேச வேண்டும் என்பது குறித்து தெளிவான கண்டிப்பு இருக்க வேண்டும். மீறி பேசுபவர்களை தயங்காமல் விலக்க வேண்டும். அவர்கள் பணிகள் திட்டங்கள் குறித்து மட்டுமே அவர்கள் பேச வேண்டும். அரசியல் பேச்சுக்களை கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர்களிடம் விட வேண்டும்

14. பிற இந்துக் கட்சிகள் எம் பிக்கள் பேசுவதில் பி ஜே பி தலையிட முடியாது. அவர்களின் பேச்சுக்களுடன் உடன் படுகிறோம் அல்லது இல்லை என்பதை மட்டும் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள் அறிவித்தால் போதுமானது

15. தாத்ரி போன்ற தனியான குற்ற சம்பவங்கள் குறித்து பிரதமர் பேச வேண்டிய அவசியம் கிடையாது. அவரது பொதுவான உரைகளில் தொடர்ந்து அமைதியை வற்புறுத்தவும் வன்முறைகளைக் கண்டிக்கவும் செய்ய வேண்டும். முஸ்லீம்கள் தாக்கப் பட்டால் மட்டுமே செய்யக் கூடாது. இரு புறமும் பொதுவான வேண்டுகோள்கள் தொடர்ந்து வைக்கப் பட வேண்டும்

16. அடுத்து அஸ்ஸாம், உ பி இரு மாநிலங்களிலும் இப்பொழுதில் இருந்தே கவனம் செலுத்தப் பட வேண்டும். தொகுதிவாரியாக எம் எல் ஏ வேட்ப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு தொகுதிவாரியான பிரச்சினைகள் தொகுக்கப் பட்டு அவற்றிற்கான தீர்வுகளை இப்பொழுதில் இருந்து அளிக்கத் துவங்க வேண்டும். இரு மாநிலங்களுக்குமான முதல்வர் வேட்ப்பாளர் இப்பொழுதில் இருந்தே அறிவிக்கப் பட்டு அங்கு அவர்கள் முழு மூச்சாக இறங்கி செயல் பட வேண்டும். மோடியை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. லோக்கல் தலைவர் யார் என்பது தெளிவாக்கப் பட வேண்டும். கூட்டணி இருக்கும் பட்சத்தில் தோல்வி ஏற்படும் என்பதை உணர்ந்து அந்தத் தோல்வியின் தாக்கத்தைக் கூடுமானவரைக் குறைக்க வேண்டும். அஸ்ஸாமில் ஆட்சி பயங்கரவாத இஸ்லாமின் கையில் சென்று விடக் கூடும் என்ற அச்சம் இருக்க வேண்டும். அது அங்குள்ள மக்களிடம் தெளிவாகச் சொல்லப் பட வேண்டும்.

17. இந்திய வாக்களர்களுக்கு பொருளாதார அறிவு எல்லாம் பெரிதாகக் கிடையாது. நெடுஞ்சாலை போடுவதன் முக்கியத்துவங்களையும் துறைமுகம் கட்டுவதின் முக்கியத்துவங்களையும் அதனால் ஏற்படப் போகும் முன்னேற்றஙக்ளையும் அவர்கள் உணர்வதோ அதற்காக ஓட்டுப் போடுவதோ கிடையாது. அதனால்தான் வாஜ்பாய் உருவாக்கிய சாலைகளுக்கான பயன் அவருக்குக் கிடைக்காமல் போனது. அடிப்படையில் உணர்ச்சி வேகத்திலும் ஜாதி மத அடிப்படைகளிலும் ஓட்டுப் போடும் முட்டாள்கள் அவர்கள். அவர்களிடம் அச்சா தீன் என்று நீ எதைச் சொல்வாய் என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. வளர்ச்சி என்றால் எது என்ன என்பதை அவர்களால் சொல்லக் கூட முடியாது? அவர்களுக்குத் தெரிந்த ஒரே வளர்ச்சி எல்லாம் அவர்கள் பையில் கிடைக்கும் பணம் மட்டுமே. வருமான வரி கட்டுபவர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் தொடர்ந்து வருடத்திற்கு 2000 ரூபாய்கள் மீதம் பிடிக்குமாறு பட்ஜெட் போட்டால் அவர்கள் அதை வளர்ச்சி என்பார்கள். கூடுமானவரை விலைவாசிகளை கட்டுக்குள் வைத்திருப்பதையும் அவர்கள் வளர்ச்சியாகக் கருதுவார்கள். ஆகவே வருமான வரியின் வரம்புகளை அதிகரிப்பதன் மூலமாகவும் வரிகளைக் குறைப்பதன் மூலமாகவும் வாக்காளர்களிடம் வளர்ச்சி வந்து விட்ட உணர்வைத் தோற்றுவிக்கலாம் ஆனால் அது உண்மையான வளர்ச்சியில் கை வைக்கும். அது குறித்து அவர்களுக்குக் கவலையிருக்காது. ஆகவே உண்மையான வளர்ச்சித் திட்டங்களை சற்று குறைத்துக் கொண்டு பொது மக்களுக்கு வரிச் சலுகை மூலமாக லஞ்சம் அளித்து ஓட்டுக்களைக் கவர பி ஜே பி முயலலாம். சாலைகளும், துறைமுகங்களும், டிஜிட்டல் இண்டியாவும், ஸ்மார்ட் சிட்டிகளும் இல்லாமல் போனாலும் அவர்களுக்குக் கவலையில்லை அவர்களுக்குத் தேவையெல்லாம் இலவசங்களும் வரிக் குறைப்புக்களும் மட்டுமே. ஆகவே பி ஜே பி க்கு ஓட்டு வேண்டும் என்றால் வரிச் சலுகைகளையும் இலவச பென்ஷன்களையும் வழங்கலாம்

உண்மையான வளர்ச்சி தேவை வேண்டும் என்றால் துறைமுகங்களையும், சாலைகளையும், மின் திட்டங்களையும், டிஜிட்டல் இண்டியாக்களையும் நிர்மாணிக்கலாம். ஆனால் அவற்றை செயல் படுத்த நேரம் பிடிக்கும். மக்கள் பொறுமையற்றவர்கள். இப்பொழுதே வளர்ச்சி எதுவும் கண்ணில் தெரியவில்லை என்கிறார்கள். ஆகவே இவர்களை நம்பி எல்லாம் அரசாங்கம் வளர்ச்சி புண்ணாக்கு என்று எதையும் செய்யத் தேவையில்லை. அதற்கான அருகதையுள்ளவர்களும் கிடையாது. ஆகவே வரிச்சலுகையை அளித்து ஆட்சியில் தொடரும் வழியைப் பார்க்கலாம் அது போக ஏதேனும் நிதி மிச்சம் இருந்தால் ஒரு சில திட்டங்களை முடிக்கலாம்

18. செயல் படுத்து ஒவ்வொரு திட்டத்திற்கும் பொது மக்கள் பார்வையில் படும் படி மோடி படம் போட்டு இது மத்திய அரசின் திட்டம் என்று அறிவிக்க வேண்டும். மேலும் அதற்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதி அது எடுக்கும் காலம் எப்பொழுது முடியும் என்பது குறித்தும் பெரிய பெரிய விளம்பர போர்டுகளில் அறிவிப்புக்கள் வைக்கப் பட வேண்டும். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின் திட்டங்கள், கங்கை தூய்மை திட்டம் என்று அனைத்து திட்டம் குறித்தான விபரங்களும் பொது மக்கள் பார்வையில் படும் படி பெரும் பெரும் போர்டுகளில் விபரம் அளிக்கப் பட வேண்டும். இவை தவிர ஒவ்வொரு திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஒவ்வொரு மாதம் சம்பந்தப் பட்ட மந்திரி பேப்பர்களில் அறிவிப்புக்களையும் பேட்டிகளையும் அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்

19. 2019க்குள் தெளிவாக முடிக்கப் படும் என்று தெரிந்த திட்டங்களை பெரும் அளவில் விளம்பரப் படுத்தி அவற்றை செயல் பட வைக்க வேண்டும். முடியாத திட்டங்களை முடிக்க எங்களுக்கு இன்னுமொரு ஐந்தாண்டு தேவை என்பதைச் சொல்ல வேண்டும். அதை இப்பொழுதில் இருந்தே செய்ய வேண்டும்

20. பாராளுமன்ற மற்றும் சட்ட சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நேர விரயம் பண விரயம் பிரதமரின் மந்திரிகளின் பிரசார நேர விரயம் ஆகியவை தவிர்க்கப் படும். இதை உடனடியாக கொண்டு வர வேண்டும். அடுத்த 2019 லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநிலங்களுக்கான தேர்தல்களும் ஒரே சமயத்தில் நடத்தப் படும் என்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

21. தேர்தல்கள் அதிக பட்சம் 3 நாட்களுக்குள் முடிக்கப் பட்டு முடிவுகளும் அறிவிக்கப் பட வேண்டும் அதற்கான கட்டுமானங்களை செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் ஒரு மாத காலமாக தேர்தல் நடத்துவது எல்லாம் அவமானகரமான வெட்க்கக்கேடான செயல் திறன் இல்லாத திறமையில்லாத அரசாங்கத்தையே காட்டும். பொதுத் தேர்தல்களும் சட்டசபைத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப் பட்டு அனைத்து முடிவுகளுமே மூன்றாவது நாளில் அறிவிக்கப் பட வேண்டும். அதன் மூலமாக பீஹார் போன்ற தோல்விகளைத் தவிர்க்கலாம். ராஜ்யசபாவிலும் லோக்சபாவிலும் ஒரே மாதிரியான நிலை நிலவும். வெற்றி பெற்ற கட்சியினர் தங்கள் திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்ற முடியும்

22. ராஜ்யசபாவை இனிமேல் காங்கிரஸ் நடத்த அனுமதிக்காது. கூச்சல் குழப்பம் கலவரங்களை ஏற்படுத்தி எந்தவொரு திட்டங்களும் நிறைவேறாத வண்ணம் தடையை ஏற்படுத்தும். இதை எப்படித் தடுப்பது என்பதை பி ஜே பி திட்டமிட வேண்டும். கூட்டு சபை கூட்டினால் மெஜாரிட்டி கிடைக்கும் என்றால் அதைக் கூட்டி அதன் மூலமாக சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அதே சட்டங்களை நிறைவேற்றாமலேயே மாற்று வழிகளில் கொணரும் வழிகளை ஆராய வேண்டும். அவசர சட்டங்களைத் தொடர்ந்து பயன் படுத்த வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகத்தை காங்கிரஸ் அனுமதிக்காத பட்சத்தில் ஆளும் கட்சியும் சர்வாதிகாரமாகவே செயல் பட வேண்டும். இனிமேல் ராஜ்யசபா மூலம் தடை ஏற்படுத்துவதை பி ஜே பி அனுமதிக்கவே கூடாது. கடுமையாக அதை எதிர் கொள்ள வேண்டும்.

23. சிவசேனா, பட்நாயக், ஜெயலலிதா , முலயம் போன்ற கட்சிகளுடன் கூடுமானவரை அணுசரனையாகச் சென்று சமாதானப் படுத்தி அவர்களை வழிக்குக் கொண்டு வந்து கூட்டு பாராளுமன்றம் மூலமாக அனைத்து சட்டங்களையும் நிறைவேற்ற முயல வேண்டும். அதில் இனியும் தயக்கம் காட்டக் கூடாது.

24. தோல்வி அடையக் கூடிய தேர்தல்களில் பிரதமர் அதிக நேரம் செலவிடக் கூடாது. வெற்றி வாய்ப்பு இருக்கும் தேர்தல்களில் மட்டுமே அவர் முழுமையாகப் பயன் படுத்தப் பட வேண்டும். பிற மாநிலங்களில் அவர் ஒன்றிரண்டு கூட்டங்களில் பேசினாலே போதுமானது.

25. மேக் இன் இண்டியா மூலமாகத் துவக்கப் பட்டுள்ள தொழில்கள் குறித்து மாநில வாரியான தகவல்களை மாதா மாதம் பத்திரிகைகளில் அறிவிக்க வேண்டும்.

Tags: , , , , , , , , , , ,

 

29 மறுமொழிகள் பீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்

 1. paandiyan on November 11, 2015 at 8:51 am

  தமிழ்நாட்டில் ஒரு மாற்றமாக வந்த ராஜீவ் காந்தியின் வருகை இங்கு இதை போல ஆயிரம் மடங்கு அசிங்கமாக , அநாகரிமாக , அருவர்க்கதக்க வகையில் விமர்சனம் பண்ணப்பட்டது . அதன் பின் ,ஊலல் நாற்றம் , மது வாசனை , கமிசன் என்று இந்த மாநிலம் ஓகோ என்று இருகின்றது . பிகாரை பாப்போம் …

 2. Nataraja sastry on November 11, 2015 at 9:05 am

  பீகார் தேர்தல் முடிவுகள்.
  ஆலோசனைகளும் மிரட்டல்களும்

  பல நல்ல உள்ளங்கள் பாஜகவின் தோல்வியால் துவண்டுவிட்டு பல ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவங்கள் போல இப்போதும் நடந்த வேண்டாத சம்பவங்கள்தான் தோல்விக்கு காரணம் என்று பேசிவருகிறார்கள்.

  வழக்கப்படி நமது pseudo secular people தாத்ரி சம்பவம் இந்துத்வா என்று அவர்களின் வெற்றிக்கான காரணங்களை அடுக்குகிறார்கள்.

  என்னுடைய தேர்தல் கணிப்பு தப்பான காரணம் நான் எடுத்த புள்ளிவிவரம் கடந்த சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்றவை. நான் எடுத்திருக்க வேண்டியது 2024 மக்களவைத் தேர்தலை. அதன்படி 38.8 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெற்றது.
  நிதிஷ்குமார் அணி பெற்றது-17%
  லாலு+காங்கிரஸ் அணி பெற்றது 29.7

  இந்த முறை இந்த இரு அணிகளும் சேர்ந்ததால் அவர்களின் வாக்கு விகிதம் 17%+29.7=46.7% . இதில் என்.சி.பி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் 3% கழித்தால் 43.7%.

  38.8.% கணக்கின்படி 174 தொகுதிளில் முன்னிலை பெற்றது பாஜக. (2014 மக்களவை தேர்தலில் )

  43.7% பெற்றுள்ள ஶ்ரீ நிதிஷ்குமார் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதில் தாத்ரியோ மற்ற கத்திரிக்காய் காரணங்களோ இல்லை. திமுக +அதிமுக+ காங்கிரஸ் சேர்ந்தால் எப்படி தமிழ்நாட்டில் யாரும் எதிர்த்து நின்று ஜெயிக்க முடியாதோ அதைப்போல நிலைதான் பீகாரிலும்.

  ஆனால் இதில் உண்மையாக வெற்றி பெற்றது பாஜகதான் . அதை ஜெயிக்க பொருந்தாத கூட்டணி அமைத்தால்தான் ஆகும் என்ற நிலையை எடுக்க வைத்ததோடு ஶ்ரீ நிதிஷ்குமாருக்கு நிழலின் அருமையை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

  மலரவே மலராது என்ற கேரளாவில் இரன்டு தினங்களுக்கு முன் தாமரை பல்வேறு இடங்களில் மலர்ந்துள்ளது. அங்கும் இவர்கள் தனித் தனியாக நின்றால் 20 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்.

  இனி வருங்கால நிலை பாஜகவை எதிர் கொள்ள கொள்கைக்கூட்டணி உதவாது. தனியாக நின்று பீகாரில் இத்தனை இடங்களில் வென்ற பாஜக கர்நாடகா வழியில் தனித்து ஆட்சி அமைக்கும். கர்நாடகவில் 4% 16% 22% 38% என்ற வரிசையில் வளர்ந்த கட்சி. எடியூரப்பாவை நீக்கப்பட்டதன் காரணமாகத்தான் ஆட்சி இழந்தது. அதுவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்.

  எனவே பாஜக தோற்கவில்லை. தனது அஸ்திவாரத்தை உறுதி செய்து கொண்டுள்ளது. இனி நடக்கும் கூத்துகளை ரசித்துக் கொண்டு ஶ்ரீ நிதிஷ்குமாருக்கு நல்ல நண்பன் யாரென்று உணரவைக்கும்.

 3. c.Sugumar on November 11, 2015 at 9:22 am

  பிஹாா் மக்களின் நிலையை சமூக கலாச்சார நிலையை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளீா்கள். அனுமாா் கோவில்களும் நீராவியில் வேகவைத்து முள்ளங்கி மற்றம் சப்பாத்தி சாதி உணா்வுகள் இவைகள்தான் அடையாளம்.பள்ளிக் கூடங்களின் நிலையோ படு ……படு …பாிதாபம். சமய சீா்திருத்தம் மிகவும் அவசியம்.பலவகைகளில் கற்கால சிந்தனைகள் உள்ளது. இந்துக்களின் பாிதார நிலை காரணமாக முஸ்லீம்களின் கை அநியாயமாக ஓங்கி உள்ளது. மத உரசல்களும் மோதல்களும் அடிக்கடி நடக்கும். கூடடி கழித்துப் பாா்த்தால் இந்துக்களே நட்டப்படுவாா்கள்.இந்துக்களுக்கு என்று விமோச்சனம் கிடைக்கும் ??????????

 4. Paramasivam on November 11, 2015 at 9:41 am

  மிகவும் அருமையாக பிஜேபி தொண்டன் எண்ண ஓட்டத்துடன் உள்ளது. ஆனாலும், முதல்வர் பெயர் அறிவிப்பது மட்டும் தேவை இல்லா ஒன்று. தனித் தனி குழு அமைவதற்கு தான் உதவும். மிக முக்கிய மற்றொன்று, இதன் இந்தி மொழியாக்கம் பிரதமரிடம் கொடுக்க இயலுமா என முயற்சிக்க வேண்டும். திரு சு. சாமி கூறுவது போல், வ.வரி வசூலும் அதற்கான செலவும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், 2 வருடங்களுக்கு முற்றிலும் வரி இல்லாது (சில திட்டங்களில் பணம் சேமிக்கும் பட்சத்தில்) முயற்சிக்க வேண்டும். சரிவர செயல்படாத சிலரை கண்டிக்கவும் வேண்டும். ஆகவே, நமது எண்ணங்கள் பிரதமரை அடைய, திரு குருமூர்த்தி, திரு பொன்னார் ஆகியோர் மூலம் நீங்கள் செய்வீர்கள் (அ) தமிழ் ஹிந்து செய்யும் என நம்புகிறேன்.

 5. Anantha on November 11, 2015 at 10:18 am

  Bihar and UP both states were forced to remain non developed state by the mis rule of congress to begin with and then followed by Chara Chor Laluji. Now Nitish to fulfil his ambition as Tall Secular Leader in comparision with Others trapped himself in deep sea. As far as he is concerned BJP party is not devil. Only Modi and Amit Shah are devils. In his effort to escape from the clutches of Devil he fell iun the trap of deep Sea. Now he may have to dance to the tune of Lalu Family. Already convicted will remain in parole ever. Quoting him, many more influential convicted will be free in parole. Hey Bhagvan, is Desh ko Bachale

 6. Geetha Sambasivam on November 11, 2015 at 11:22 am

  பிஹார் தேர்தலை வைத்து இந்தியப் பாராளுமன்றத்தின் நிலைமையை முடிவு செய்ய முடியாது. இங்கே தொடர்ந்த எதிர்ப்புப் பிரசாரமும் ஓரளவு கை கொடுத்திருக்கிறது. எல்லாவற்றிலும் மோசமான ஒன்று லாலுவுக்கு அதிகம் இடங்கள் கிடைத்திருப்பது தான்! 🙁 லாலுவின் பிடியில் நிதிஷ்! 🙁

 7. Ravi.Karuppaiyan on November 11, 2015 at 1:55 pm

  திரு ஆசிரியர் அவர்களின் ஒவ்வொரு கருத்தும், ஆலோசனையும் அறிவுப்பூர்வமானதும், நடைமுரையானதும் ஆகும். இதை நம் தமிழ் நாட்டு பி.ஜே.பி தலைவர்கள் (திரு ராஜா மற்றும் இல.கணேசன்) மூலமாக, பி.ஜே.பி தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும். இல்லையேல் இந்தியாவை வெகு விரைவில் நாம் இழக்கவேண்டி வரும். மற்றும் நம் இந்துக்களை மதப்பற்று மிக்கவர்களாக மாற்றுவதற்கு ஒரு திடமான திட்டத்தை கொண்டுவரவேண்டும்.

 8. paandiyan on November 11, 2015 at 2:11 pm

  BJP உள்கட்சி பற்றி கருத்து சொன்னது பசி . இந்த பசி தான் தா மா கா போயி அப்பறோம் கக கக போ என்று ஏதோ ஒரு பெயரில் கட்சி ஆரம்பித்து அதுவும் போனியாகாமல் காங்கிரஸ் வந்து , தேர்தல் வழக்கில் சிக்கி (அது என்றுதான் முடியுமோ ) பின்பு அம்புலன்ஸ் , சாராதா என்று கடைசியில் வாசனில் வந்து நிற்கும் குற்றவாளி . இப்பேற்பட்ட நேர்மைகள் அறிக்கை தான் முதல் பக்கத்தில் வருகின்றது . லாலு க்கு திரும்ப ஒரு இமேஜ் கிடைத்தவுடன் இவர்கலுக்கு என்ன ஒரு குசி!! ஒரே இனம் அல்லவா !!!!

 9. Ramukivar on November 11, 2015 at 2:23 pm

  Don’t worry there will be another state election to Bihar assembly within two years.

 10. BS on November 11, 2015 at 9:07 pm

  Thirumalai Rajan shows his extreme hatred of Muslims as in his statement that Muslims never vote for BJP. In Parl Elections, in many constituencies, they voted for BJP en masse.

  Thirumalai Rajan should have written this article only after knowing what the post election voting pattern analysis or survey revealed. It revealed that the votes for BJP came only from urban centres. In rural, BJP was completely rejected.

  I agree that Muslims in Bihar assembly elections voted for Nitish. They would have voted for development from Modi. But they seem to have had a sudden change of heart recently against Modi. For this, we must go to the anti-muslim speech of, not only fringe elements, but also, Union Ministers and MPs and MLAs. They are not fringe elements. If fringe elements made hate speeches, and the BJP condemned them, it would have sufficed. But when Minsters, MPs make the same, the BJP or Modi didn’t directly condemn it is acceptable if Muslims fear and react democratically by voting against Modi. There are not many open attacks physically on Muslims, though. But hate speeches like these – all Muslims are Pakis, and they should not live here, all of them should come back to Hinduism, if not, they are anti national – such speeches were made recently and in the green memory of muslim voters. So, they changed their mind to Nitish.

  Thirumalai Rajan’s visceral hatred of Muslims in this article – we should have no truck with Muslims – echos one of the BJP candidates campaign speeches – “Muslims should not be present in my meeting. I don’t want their votes”. This type of thinking will go against BJP in future elections. I chuckled when some of you have recommended this article to the top leadership of BJP.

  There are many points Thirumalai Rajan has made here, which will destroy the future of BJP. I don’t go into them for lack of space. It requires a full article from me. But I am not a writer of articles in this forum; nor they will publish it if I send.

 11. க்ருஷ்ணகுமார் on November 11, 2015 at 10:21 pm

  தேர்தல் களப்பணிகள் மிகத் தாமதமகவும் முனைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமலும் தில்லி தேர்தலில் பாஜக கடும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. பீஹாரிலோ ஆனால் ஸ்ரீ அமீத் ஷா அவர்களின் திட்டமிடலுடன் கூடி மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்தல் பணி செயற்படுத்தப்பட்ட பின்னரும் கடும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. தில்லியளவுக்கு இல்லாவிடினும் பீஹாரிலும் பெருத்த தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது.

  பார்ப்பன பனியா கட்சியாவது நீண்ட காலத்துக்கு ஆட்சி செய்வதாவது……. இதெல்லாம் நிகழக்கூடிய சமாசாரமா என்ன? என்ற கேழ்விகள் பொதுதளத்தில் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கையிலேயே அடுத்தடுத்து குஜராத், மத்ய ப்ரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாகாணங்களில் பாஜக திரும்ப ஆட்சிக்கு வந்தது. திரும்ப ஆட்சிக்கு வந்தது என்பது மட்டிலுமல்ல பொது ஜனங்களின் அடிப்படைத்தேவைகளை அவர்களுடைய மனநிறைவுக்கு ஏற்றபடி பூர்த்தி செய்து மேலும் வளர்ச்சிப் பணிகளை முடுக்கி விட்டு ஊழலற்ற ஆட்சியை வழங்கி திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வந்து ………… பெற்ற வெற்றியை தங்களால் தக்க வைக்கத்துக்கொள்ள முடியும் என்றும் கூட இந்த மாகாணங்களின் மூலமாக பாஜக உலகுக்கு நிரூபித்தது.

  க்ஷத்ரிய, ஹரிஜன், ஆதிவாஸி,முஸ்லீம் (KHAM) என்ற காங்க்ரஸின் சமூஹக் கூட்டணி ஃபார்முலாவை தகர்த்தெறிந்தே குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதற்குப் பின்னர் பதிதார் என்று சொல்லப்படும் படேல் சமூஹத்தினரின் வாக்குகளை பாஜக வெல்ல முடியாது என்று ஒரு பிம்பம் இருந்தது. அதையும் பாஜக தகர்த்தெறிந்தது. இன்று அனைத்து சமூஹத்தினரின் ஒட்டுமொத்த வாக்குகளையும் சேகரம் செய்த ஒரு கட்சியாகத் தான் குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. மீண்டும் கோலோச்ச விழையும் ஜாதி அரசியல் இதற்கு சவாலாக முளைத்துள்ளது.

  சவாலை பாஜக தனியாக இல்லாமல் ஹிந்து இயக்கங்களுடன் கரம் கோர்த்து ஹிந்து ஒற்றுமையை அடித்தளமாக வைத்து எதிர்கொள்ள வேண்டும். இதே போன்று உசிதமான தேர்தல் யுக்தியைக் கையாண்டால் இதே பீஹாரில் இதே நிதீஷ் லாலு ஜோடியை இதே பாஜக கூட்டணி எதிர்கொண்டு வெற்றி கொள்ள முடியும். குஜராத்தில் படேல் சமுதாயத்தினர் ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்டு பாஜகாவை ஆதரிக்க முடிந்தது என்றால் பீஹார் மற்றும் உபியின் யாதவ சஹோதரர்களும் கூட பாஜகாவை ஆதரிக்க முடியும்.

  பீஹார் தேர்தலில் களப்பணியாளர்கள் கடுமையாக உழைக்க பணிக்கப்பட்டனர். உழைக்கவும் செய்தனர். ஆயினும் தில்லியிலும் சரி பீஹாரிலும் சரி உள்ளூர் பாஜக அரசியல் வாதிகள் தேர்தல் ப்ரசாரங்களில் ஆரவாரத்துடன் முன்னிறுத்தப்படவில்லை. அதற்கு நேர் மாறாக உள்ளூர் அரசியல் வாதிகளான நிதீஷ்குமாரும் லாலு யாதவும் எதிர்க்கூட்டணியால் முன்னிறுத்தப்பட்டனர். சத்ருக்கன் சின்ஹா வெளிப்படையாக கட்சிக்கு எதிராக அறிக்கைகள் கொடுத்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். வெளியே தெரியாமல் கட்சியின் சட்டசபை வேட்பாளர்களுக்கு ஆதரவாக இல்லாமல் வேறு நபர்களுக்கு மறைமுக ஆதரவு தந்த பாஜகவினரைப்பற்றி சமூஹ ஊடகங்களில் செய்திகள் கசிந்திருக்கின்றன. இந்தச் செய்தி பொய் என்றால் கட்சியின் தரப்பிலிருந்து அது தெளிவு படுத்தப்பட வேண்டும். உண்மை என்றால் அப்படி பணியாற்றியவர்களை கட்சி வெளிப்படையாக கடுமையாக தண்டிக்க வேண்டும்.

  மத்ய ப்ரதேசம், குஜராத், சத்தீஸ் கர், ராஜஸ்தான் என்ற படிக்கு இந்தப் பகுதிகளில் அந்தந்த மாகாண அரசியல்வாதிகளின் உள்ளூர் செல்வாக்கை முன்வைத்து கட்சி ஜெயித்ததை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஒவ்வொரு மாகாணத்திலும் பாஜக உள்ளூர்த் தலைவர்களை பலப்படுத்த வேண்டும். உள்ளூர்த்தலைவர்களையோ அவர்களது யோசனைகளையோ மத்திய கட்சித்தலைமை முறையாக மதிப்பதில்லை என்றும் ஒரு செய்தி உள்ளது. அல்லது அப்படி ஒரு பர்செப்ஷன் உள்ளது. அது செய்தியாக இருப்பினும் பர்செப்ஷனாக இருப்பினும் இரண்டுமே கட்சியின் ஆரோக்யமான செயல்பாட்டுக்கு உகந்தது அல்ல. அதை உடனே சரி செய்ய வேண்டியது கட்சியின் பொறுப்பு என்று கட்சியின் அபிமானிகளின் எதிர்பார்ப்பு.

  அடிப்படை கட்டுமானங்களை ஸ்திரப்படுத்த விழையும் மேக் இன் இண்டியா, டிஜிட்டல் இண்டியா, சுகாதார பாரதம், கங்கா சுத்திகரிப்பு, துறைமுகம் மற்றும் சாலை கட்டுமானங்கள், ராணுவத்தளவாடங்களின் தொடர்ந்த முறையான ஊழலற்ற கொள்முதல் போன்றவை தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. தேசத்தின் நலனில் அதீத அக்கறை உள்ள பாஜக போன்ற கட்சியாலேயே இவற்றை செயல்படுத்த முடியும்.

  அதே சமயம் தேசத்தில் ஏழ்மையில் உழலும் கோடானுகோடி மக்களுக்கு அவர்களது அடிப்படைத் தேவைகள் முறையாகப் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பதிலும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். பாஜக என்று மட்டிலும் அல்ல வெங்காயமும் சக்கரையும் அவ்வப்போது பற்பல அரசியல் கட்சிகளுக்கு மிகச் சரியாக தேர்தல் சமயத்தில் சிம்ம சொப்பனமாக இருந்துள்ளது என்று உலகம் அறியும்.

  ஊடகங்கள் வ்யாபாரிகள் என்று தேசத்தில் ஒரு மாஃபியா சதிவலை மக்களுடைய இன்றியமையாத் தேவைக்கான பொருட்களை தாங்கள் திட்டமிடும் சமயத்தில் பதுக்கி மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் தலைவலி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த சதிவலையில் தேச விரோத அரசியல் வாதிகளுக்குக் கூட பங்கிருக்கலாம்.

  ஆனால் தேசத்தின் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள பாஜக சர்க்கார் கூட இந்த சதிவலையின் சதிக்கு இறையாகி உள்ளது மிகவும் கவலைக்குறியது. பட்ஜெட் திட்டங்கள் வெளிவருமுன்னர் அவற்றை கசிய விடும் சர்க்காரி அலுவலர்கள் மற்றும் ஊடக மாஃபியாக்களின் சதிவலைக்கும்பலை இதே சர்க்கார் அம்பலப்படுத்தியது வெள்ளிடை மலை.

  வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளின் விலை கிடுகிடுவென ஏறுவதற்கு முன்னரே சர்க்காரின் தரப்பிலிருந்து இவை எதிர்பார்க்கப்பட்டு தடுக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது அதில் முறையான வெற்றி இல்லையென்றால் இந்த அத்யாவச்யப் பொருட்களின் விலை ஏறுமுகத்தில் இருக்கும் போது போர்க்கால அடிப்படையில் இவற்றை எதிர்கொண்டு மிகக் குறைந்த காலத்தில் இந்தக்குழப்பத்தை சர்க்கார் சரி செய்திருக்க வேண்டும். ஆனால் துரத்ருஷ்டவசமாக இரண்டு விதத்திலும் மத்திய மற்றும் மாகாண சர்க்கார்களின் செயல்பாடுகள் திறன் வாய்ந்ததாக இல்லை.அந்த அத்ருப்தி வெகுவாக இல்லையென்றாலும் நிச்சயமாக தேர்தலில் ப்ரதிபலித்ததை மறுக்கவே முடியாது. இந்த மாஃபியா கும்பலின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கும் காரியத்தை இந்த சர்க்கார் செய்தால் எதிர்காலத்தில் வரும் தேர்தல்களை இப்படிப்பட்ட இடையூறுகள் இல்லாமல் தெம்புடன் எதிர்கொள்ள முடியும்.

  அது போன்றே சர்க்காருக்கு எதிராக தயார்செய்யப்பட்ட நிகழ்வுகளை வைத்து எதிர்க்கட்சிகளும் ஊடக மாஃபியாக்களும் ஆடிய நாடகங்களை சர்க்காரும் ஆளும் கட்சியும் எதிர்கொண்ட முறைமை. பாஜக ஆளும் கட்சியாக இருந்தாலும் கூட ஊடங்களில் ஆட்சி செய்வது பரங்கிப் பணமும் அராபியப்பணமும் என்பதும் இந்தப்பணத்தில் ஊடக வேசித்தனத்துக்குத் தயாராக இருக்கும் இடதுசாரி குண்டர்படையும் என்பது வெள்ளிடை மலை. மிகுந்த உழைப்பின் பாற்பட்டு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பலம் வாய்ந்த ஊடகத்தையும் தன் வசம் வைத்திருப்பது மிகவும் அவச்யம்.

  சோஷல் மீடியா, வாட்ஸ் அப், ட்விட்டர் இவையெல்லாம் சரி தான். ஆனாலும் MSM எனப்படும் ப்ரிண்ட் மற்றும் விஷுவல் மீடியாவிலும் பாஜக என்று தனியாக இல்லாமல் ஒட்டு மொத்த ஹிந்துத்வ இயக்கங்களது ஆளுமையை காலம் கடந்தாவது நிறுவ முனைதல் என்பது இன்றைய காலத்தின் அத்யாவச்ய தேவை. ஹிந்துஸ்தானத்தின் அனைத்து பாஷைகளிலும் அனைத்து ப்ராந்தியங்களிலும் ஹிந்துத்வ தரப்பினர் தங்களது தரப்பை உரத்து ஒலிக்கச் செய்ய ஹேதுவான மீடியாவை எவ்வளவு சீக்கிரமாக நிறுவ முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக நிறுவ வேண்டும்.

  கல்வி, மருத்துவம், பன்முகச் சேவை, பொதுமக்களை ஹிந்துத்வ கோட்பாடுகளுக்காக ஒருங்கிணைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இயக்க ரீதியாக சங்க பரிவாரத்தில் வெற்றிகரமான இயக்கங்கள் உண்டு. இந்த செயற்பாடுகளில் சங்க பரிவார இயக்கங்கள் பெருவெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால் வெகுஜன ஊடகம் என்ற செயல்பாட்டில் இதுவரை சங்கபரிவார் இயக்கம் என்று ஏதும் இல்லை. இது விரைவில் சரிசெய்யப்படுதல் ஒட்டு மொத்த ஹிந்துத்வ இயக்கங்களுக்கும் தேசத்திற்கும் நலன் பயக்க வல்லது.

  இது சரி செய்யப்படுதல் வரைக்கும் பாஜக மற்றும் ஹிந்துத்வ இயக்கங்களின் தரப்பிலிருந்து ஒரு மிகப்பெரிய தேசமளாவிய ஊடகக் குழு தயார்படுத்தப்பட வேண்டும். இந்தக்குழு தொடர்ந்து நட்பு ஊடகங்களின் வாயிலாக விரைவாகவும் துடிப்பு மிகவும் செயல்பட வேண்டும். தயாரிக்கப்பட்ட சகிப்பின்மை நாடகம் ஒருபுறம் தேச முழுதும் வலம் வந்த போதே உத்தர பாரதத்தில் இதற்கு நாங்கள் துணை போக மாட்டோம் என்று தைனிக் ஜாக்ரண் என்ற ஒரு வெகுஜன தினசரி வெளிப்படையாக தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. அப்படிப்பட்ட எதிர்ப்பு மிகவும் காலம் கடந்து தெரிவிக்கப்பட்டது.

  இந்த செயல்பாட்டை பாஜக மட்டிலும் என்றில்லாது ஒட்டுமொத்த சங்க பரிவார இயக்கங்களும் மிகத் திறமையாக எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 12. க்ருஷ்ணகுமார் on November 11, 2015 at 10:41 pm

  தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை கண்டிக்கும் படிக்கான 11ம் திகதியிட்ட அறிக்கையை 10ம் திகதியன்றே கட்சித்தலைமைக்கு அனுப்பாது தேச விரோத ஊடக மாஃபியாவுக்கு கசிய விட்டிருக்கிறார்கள் கட்சியின் பீஷ்ம பிதாமஹர்கள் என்று அறியப்படும் ஸ்ரீ லால் க்ருஷ்ண அத்வானி, ஸ்ரீ முரளி மனோஹர் ஜோஷி, ஸ்ரீ யஷ்வந்த் சின் ஹா மற்றும் ஸ்ரீ சாந்த குமார் போன்ற பெருந்தகைகள்.

  நிச்சயமாக ஏதோ ஒரு காலத்தில் இவர்கள் அனைவரும் கட்சிக்கு உழைத்து கட்சிக்கு பெரும் பங்காற்றிய பெருந்தகைகள் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. கட்சியின் செயல்பாடுகளில் நிறைகள் உள்ளது போல குறைகளும் கூட உண்டு என்பதிலும் கூட மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கட்சியின் மூத்த தலைவர்களாகிய இவர்களுகு அவற்றை நிவர்த்தி செய்ய உரிமை உண்டு என்பதிலும் கூட மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

  ஆனால் …………. அதை அல்லும் பகலும் கட்சிக்கு எதிராக செயல்படும் ஊடக மாஃபியாக்களுக்கு கசிய விடும் இவர்களது செயற்பாடு குமட்டலெடுக்கத் தக்கது என்பதிலும் கூட மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

  பீமசேனனான மோதியை தழுவுபவர்கள் எல்லோரும் பீஷ்ம பிதாமஹர்கள் என்று நினைக்கலாகுமா? பீஷ்ம பிதாமஹர் உருவில் த்ருதராஷ்ட்ர ப்ரக்ருதிகள் இருந்து விட்டால்………இருந்து விட்டால்………. என்ன?,,,,,,,,கண்ணன் எனும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் பீம சேனனை என்ன ஒட்டு மொத்த பாரத சர்க்காரையும் ஒட்டு மொத்த தேசத்தையும் காத்து ரக்ஷிக்கும் என்று நம்பிக்கை உண்டு.

  ஆனால் பீமசேனனுக்கு கிட்டியிருக்க வேண்டிய த்ருதராஷ்ட்ர தழுவல் என்பது நயவஞ்சகமான தழுவல் என்பது பாரதம் காட்டும் உண்மை.

 13. க்ருஷ்ணகுமார் on November 11, 2015 at 10:54 pm

  அருண் ஷோரி, லால் க்ருஷ்ண அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, யஷ்வந்த் சின் ஹா, சுப்ரமண்ய ஸ்வாமி, சத்ருகன் சின் ஹா,சாந்தகுமார் என்று ஒரு பெரிய லிஸ்டைச் சார்ந்தவர்கள் சொல்லொணா கடுப்பில் இருக்கிறார்கள். கடுப்பு இல்லாவிட்டாலும் திறமை வாய்ந்து அது உபயோகிக்கப்படாத படிக்கு முன்னாள் மும்பை புலீஸ் கமிஷனராகிய ஸ்ரீ சத்யபால் சிங்க் முன்னாள் அரசு அதிகாரியாகிய ஸ்ரீ உதித்ராஜ் போன்றோரும் மணிசங்கர ஐயரின் வாயை அப்பப்போ திறமையாக அடக்கிய மாண்புடைய ஸ்ரீமதி மீனாக்ஷி லேகி போன்ற திறமையாளர்கள் தங்கள் திறன் உபயோகிக்கப்படாது வெட்டியாக காலம் கழிக்கின்றனர்.

  ஒருபுறம் கட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஊடக மாஃபியாக்களாலும் காங்க்ரஸ் ஜாதிக்கட்சி இடதுசாரி குண்டர்படையினராலும் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் ………… மறுபுறம் யார் கட்சிக்கு உதவ முடியுமோ அவர்களை கட்சி பாராமுகம் காட்டி உதாசீனம் செய்வதும் ……… முரண்நகையான விஷயங்கள்.

  போதாததற்கு கட்சியின் கூட்டணிக்கட்சியினருடனான தொடரும் தகறாறுகள்.

  Idle mind is devil’s workshop என்று ஒரு வசனம் உண்டு. இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தில் அல்லலுறும் பெருந்தகைகளுக்கு கட்சி முறையாக பணியிலமர்த்தினால் கட்சிக்கும் விமோசனம். இவர்களது ஆதங்கமும் தீரும். ம்……… காலம் கடந்தாவது கட்சியின் அனைத்து தரப்பினரையும் கட்சி அரவணைத்துச் செல்லும் பாங்கினை கட்சி மேற்கொள்ளுதல் நீண்ட காலத்துக்கு நலம் பயக்கும்.

 14. paandiyan on November 12, 2015 at 9:49 am

  ////அருண் ஷோரி, லால் க்ருஷ்ண அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, யஷ்வந்த் சின் ஹா, சுப்ரமண்ய ஸ்வாமி, சத்ருகன் சின் ஹா,சாந்தகுமார்//

  சின்ஹா மகனுக்கு மந்திரி கொடுத்தாகி விட்டது , இது ஒன்றும் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் போல இல்லை . பொண்டாட்டி , புருஷன் கட்சில் என்று . அத்வானி தன்னை ஜனாதிபதி க்கு promote பண்ணிக்கொள்ள வேண்டும் .அது அவர் பண்ணுவார என்ரே புரியவில்லை . ஷோரி , ஜோஷி எல்லாம் தேர்தல் களத்தில் இல்லாமலே போனவர்கள் . ஜோஷி மீது பெரிய குற்றசாட்ட உண்டு RSS அவர் கண்டு கொள்வதில்லை தேர்தல் பொது என்று . சுவாமி காபின்ட் தான் என்று அடம் புடிகின்றார் . இதில் கட்சி என்னதான் பண்ண முடியும் ..

 15. Sundar on November 12, 2015 at 10:16 am

  ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.,கொள்ளையனு தண்டனை தரப்பட்ட நபரும் கெளிக்கலாம் 2G coal எதுனாலும் .. வாழ்க ஜனநாயகம் …

 16. agswamy on November 12, 2015 at 12:35 pm

  Ahir, Ahrar, ahankar – Ahir is the ancient name of clan of yadavs and its meaning is foolish people.
  Ahrar is the name for toor dhall which prices went up high -as hoarding was done in large scale and bihar government did not act on this in order to keep the prices high. Ahankar is the arrogant attitude of amit shah and also modi too in his speech led BJP to lose the best opportunity. Also central government failed to act against Lalu by allowing him on bail for more than two years- never took action against medias -NDTV particularly on their evasion of tax , they showed hatred towards bjp. IN future elections bjp must talk only development and local issues with the people and never abuse too much on others like lalu which made him as a big man, stoning the person will give sympathy to the stoned person and it will be the negative backlash. so BJP must concentrate only on development talk and not communal, polarization, talk of pakistan and beef ect. Now the next election is in assam which has better chance for BJP if they do not play any communal card again.

 17. venkates on November 12, 2015 at 1:32 pm

  இந்ததோல்வி ஹிந்துத்துவத்தின் தோல்வி என்று சில மங்குனி மாமாக்கள் மகிழ்ச்சி காண்கிறார்கள் ,இனி இந்தியாவை ஒழித்து விடலாம் என்று அடையாள சிக்கலில் தவிக்கும் பரதேச கலப்பின குஞ்சுகள் ,கூவி கொண்டாடு கின்றன!
  உண்மையில் இது ஹிந்து மதத்தின் மகத்தான வெற்றி ,ஏனெனில் மதம் ஜாதிகளை காப்பாற்றி வைத்துள்ளதால்தான் ,நிதிஸ்,லாலு எல்லாம் மஞ்சள் குளிக்கிறார்கள் ,தாயை வென்றதாக தறுதலைகள்,தடுமாறுகின்றன.
  தமிழகத்தின் அரசியலில் ஒரே வாழும் சிட்டும் (ஜெயலலிதா)வாழ்த்துரைக்க மறுக்க,அனைத்து வாழா வெட்டிகளும்(வைகோ தலைமையில்)வாய் வலிக்க வாழ்த்தியே சாவதும் ,உண்மையை உறைக்கிறதே!

 18. க்ருஷ்ணகுமார் on November 12, 2015 at 5:59 pm

  \\ அத்வானி தன்னை ஜனாதிபதி க்கு promote பண்ணிக்கொள்ள வேண்டும் .அது அவர் பண்ணுவார என்ரே புரியவில்லை . \\

  மோதிக்கு இருக்கற தலைவலிகள் எல்லாம் போதாதா. வேற வெனையே வேண்டாம்.

 19. க்ருஷ்ணகுமார் on November 12, 2015 at 6:14 pm

  @Swamy, many valid points.

  Whether Modi and Shah were ahankaris or not………. the perception that was left from their speeches was that they are ahankaris.

  Sensing the magic that can defeat BJP, already Tarun Gogoi had requested Prashant Kishore to help him in Assam. PK had told him come through proper channel. Ask rahul gandhi to talk to me. Seems like the services of PK may be solicited by congress for Punjab too.

  At this juncture, BJP along with its allies should try to portray a strong NDA. Naresh Gujral from Akali Dal is the proper person who can strengthen NDA on whom Narendrabhai should depend upon. Plus, the govt may go in for cabinet expansion. The sour point of contention from many of the allies shall be talked to and addrssed properly.

  It appears that for the remaining tenure of Rajya Sabha, congress may not allow the government to run the proceedings of the upper house. Earlier, many from opposition like Mulayam were supporting govt. Now, such prospects are declining. For the purpose of obstructing the proceedings of upper house, the left mafia, castist opposition parties would join hands with anti national congis.

  Either Narendrabhai bring back Prashant Kishore or bring some one new of equal capabilities for strategising the electioneering. Plus, the government needs out of the box ideas for somehow running both the houses for passing important bills which would ignite growth.

  Cases agaisnt NDTV and P Chidambaram should have been initiated by the government long back. National Herald case is progressing in snail speed. The government can better utilise the services of Dr Swamy for fixing the mafia network comprising of unethical elements in media naxal oriented anti national left and the lootera congi.

  All these things, they do quite earlier and quite smartly. Time is running short.

 20. க்ருஷ்ணகுமார் on November 12, 2015 at 6:35 pm

  திருமலை சொன்னது

  \\ யாதவ், முஸ்லீம்கள் இன்னும் சில உதிரி ஜாதிகள் நிச்சயமாக என்றுமே பி ஜே பி க்கு ஓட்டுப் போடப் போவதில்லை \\ முஸ்லீம்கள் ஒரு பொழுதும் பி ஜே பியை ஆதரிக்கப் போவதில்லை. ஆகவே அவர்களை தாஜாப் படுத்தும் வேலைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளையும் முஸ்லீம்களின் கள்ளக் கடத்தல் நடவடிக்கைகளையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஓட்டுக்காக எந்த சலுகைகளையும் வழங்கக் கூடாது. இதில் உறுதியாக இருக்க வேண்டும் \\

  எசப்பனார் அட்ச்சு வுட்டது :-

  Thirumalai Rajan shows his extreme hatred of Muslims as in his statement that Muslims never vote for BJP. In Parl Elections, in many constituencies, they voted for BJP en masse.

  Thirumalai Rajan’s visceral hatred of Muslims in this article – we should have no truck with Muslims

  ஸ்வாமின், திருமலை சார் எந்த வாசகத்தில் நாம் முஸல்மாணிய சஹோதரர்களுடன் ஒட்டோ ஒறவோ வச்சுக்கவே கூடாதுன்னு சொன்னார்னு சொல்ல முடியுமா?

  அவர்களை தாஜாப் படுத்தக்கூடாது என்று தான் சொல்லியிருக்கிறார். நோ ட்ரக் நோ ஆட்டோ ரிக்ஷா …………… இத்யாதியெல்லாம் தேவரீருடைய கற்பனை.

  சும்மாவா அமரர் மலர்மன்னன் மஹாசயர வறுத்து எடுத்திருக்கிறீர்கள் ஜோ அவதாரத்தில். அமரர் மலர்மன்னன் மஹாசயர் மற்றும் வெ சா மஹாசயர்களுடைய கருத்துக்களில் இல்லாத விஷயங்களை பலவந்தமாக இருப்பது போல அட்ச்சுவுட்டு அவர்கள் வாயில் வார்த்தைகளைத் திணித்து பழக்கமாகி விட்டது உங்களுக்கு. அடுத்தவர் வாயில ஜபர்தஸ்தியாக வார்த்தைகளைப் போடும் ஆப்ரஹாமிய ஸ்டைலை புது அவதாரத்துலயாவது விட்டொழிக்கப்படாதோ.

  நரேந்த்ரபாய் மோதி அவர்களே சொன்ன விஷயம். முஸல்மாணிய சஹோதரர்கள் எனது கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும் சரி ஓட்டு போடாவிட்டாலும் சரி. எனது ஆட்சி அனைத்து 125 கோடி மக்களுக்கும் பணி செய்யும். அதில் முஸல்மாணிய சஹோதரர்களும் அடங்குவர். ஓட்டுக்காக வேண்டி யாருக்கும் எந்த சலுகைகளையும் கொடுக்கவே கூடாது என்பதில் என்ன தப்பு கண்டீர்? அதில் என்ன ராம்சாமி நாயக்க வெறுப்பக் கண்டீர். எல்லாம் தேவரீரச் சொல்லி குத்தமே கிடையாது. சட்டில இருக்கறது தானே ஆப்பயில் வரும். ராம்சாமி நாயக்க பஹூத் அறிவு மண்டைல ஏறி விட்டதென்றால் அந்தப் பரலோகத்து ஏக இறைவன் அளித்த பகுத்தறிவு மழுங்கி பணால் ஆகிவிடும் போல.

  தேவரீர் ராம்சாமி நாயக்கர் மற்றும் தேச விரோத காங்க்ரஸ் கட்சியின் சிக்குலர் வாதம் ………….. இத்யாதியிலிருந்து வெளியே வந்தால் தான் மோதியின் ஸப் கா ஸாத் ஸப் கா விகாஸ் என்ற சொல்லாடலுக்கு அர்த்தத்தையாவது புரிந்து கொள்ளக்கூட முயற்சியாவது செய்யலாம்.

  வானமெனும் வீதியிலே ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுல்ங்கள். பகுத்தறிவுன்னா என்னன்னு கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கள். ஆரையாவது கேட்டு சொல்லுங்கள்.

  ஸ்வாமின் பி எசு த்ருப்தோ பவ த்ருப்தோ பவ.

 21. Ramesh Srinivasan on November 12, 2015 at 7:10 pm

  ஆகா மொத்தம் நாம் ஒன்றும் கற்றுக்கொள்ளப் போவதில்லை. கலைஞர் பாணியில் – சோற்றால் அடித்த பிண்டங்கள்- என்று திட்டாததுதான் குறை.

  1. பீகார் வெள்ளத்துக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்து அதை விளம்பரம் செய்து நிதீஷோடு சண்டை போட்டோம். இதே போல் நேபாள பூகம்பத்திலும் உறவைக் கெடுத்துக் கொண்டோம்.

  2. சரி. பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் நிதீஷோடு உறவை சீர் செய்து இருக்கலாம். நம் ஊர் மக்கள் மத்தியில் காங்கிரசுக்கும் மாநிலத்தில் எம் ஜி ஆருக்கும் போடுவார்கள். அதனால் இந்திரா காந்தி சட்ட சபை தேர்தலில் மாற்றி யோசிப்பார்.

  3. ஊழல் ஊழல் என்று பேசி விட்டு இன்று வரை ஒரு வழக்கும் போடவில்லை. காங்கிரஸ் தலை தூக்கி விட்டது. இனிமேல் செய்தால் பழி வாங்கும் நடவடிக்கை என்று குதிப்பார்கள்.

  4. 18 மாதம் வீண் ஆகி விட்டது. மக்கள் இப்போது உடனடி தேவையை எதிர் பார்க்கிறார்கள். வெங்காயம் – ம பி, ராஜஸ்தானில் வாஜ்பாய் ஆட்சியிலேயே தோல்வி தந்தது. இப்போது துவரம் பருப்பு.

  5. எல்லாம் நானே என்றால் எல்லவற்றுக்கும் நானே பொறுப்பு ஏற்க்க வேண்டும்.

  6. அவன் சரியில்லை என்றால் அவன் சரியில்லாமல் இருக்கலாம். இவன் சரியில்லை என்றால் இவன் சரியில்லாமல் இருக்கலாம். அவனும் சரியில்லை, இவனும் சரியில்லை, எவனும் சரியில்லை என்றால் தப்பு நம் மீதுதான் இருக்கிறது என்று பொருள்.

  7.” ஒரு மாநிலத்தில் ஜாதி மதம் மட்டுமே ஒரே அடிப்படையாக உள்ளது. இது இன்னும் 100 ஆண்டுகளுக்கு மாறப் போவதில்லை. இந்திய ஜனநாயகம் இதன் காரணமாக தடுமாற்றத்துடனேயே இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கும்.” – அப்போ நிதீஷ் + பா ஜ க கூட்டணி மூன்று முறை ( ஒரு பாராளுமன்ற தேர்தல் உட்பட) எப்படி வென்றது?

  8.” ஆகவே வருமான வரியின் வரம்புகளை அதிகரிப்பதன் மூலமாகவும் வரிகளைக் குறைப்பதன் மூலமாகவும் வாக்காளர்களிடம் வளர்ச்சி வந்து விட்ட உணர்வைத் தோற்றுவிக்கலாம்” – இது நாம் பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி. உங்களுக்கு எப்படியோ தெரியாது. பருப்பு 200 ரூபாய் கொடுத்து வாங்கும் எங்களுக்கு இது ரொம்ப முக்கியம்.
  http://articles.economictimes.indiatimes.com/2014-04-20/news/49266126_1_24-crore-5-lakh-five-lakh

  9. இறைவா நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

 22. sakthipalani on November 12, 2015 at 7:26 pm

  பீகார் தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்தது என்று சொல்வதைவிட மக்களுக்கு உண்மையான அரசியல் வாதி என்றால் யார் என்பதை தெரியபடுத்தியது
  என்பதே உண்மை.லாலுவிடம் நிதிஷ்குமாரும், நிதிஷ்குமாரிடம் லாலுபிரசாத்தும்
  தோல்வியடைந்துகொன்டர்கள் என்பதே உண்மை.இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து பா. ஜ. க அரசியல் நிலைப்புதன்மையில் வெற்றியடைந்துள்ளது.

 23. .A.T.Thiruvengadam on November 13, 2015 at 3:38 am

  Right from day one,even during Vajpeyi”s time BJP has been chivaleous and dealing with its detractors with soft gloves.Secondly the leadership did not use its cadres properly and failed to gauge the public mood.Thirdly it failed to make the state governments to come up with speedy investigation of the cases and should have exposed the actual culprits.Greatest failure was not dealing withthe blabbermouths and disgruntled elements in the party.Abpove all failure to connect with the young and show the actual measures undertaken to improve their lot.The spoke persons did not try to assert and meekly allowed the channwls throw dirt on the leadership and portraying Modi as the culprit/President is worried about his second term and Rajan has already got his next assignment.No wonder BJP came a cropper.Thiruvengadam

 24. முத்து on November 13, 2015 at 10:51 am

  நல்ல அலசல். ஆனால்….

  /////// அடிப்படையில் உணர்ச்சி வேகத்திலும் ஜாதி மத அடிப்படைகளிலும் ஓட்டுப் போடும் முட்டாள்கள் அவர்கள்.////////

  தேர்தல் முடிவுகள் உங்களை இப்படிச் சொல்லவைக்கிறதா? அல்லது, இது முன்கூட்டியே தெரிந்திருந்தால் அதற்குத் தக்க திட்டம் தீட்டி, இத்தகைய பரிதாபமான தோல்வியைத் தவிர்த்திருக்கலாமே. மக்கள் பிஜேபியைத் தேர்ந்தெடுக்கவில்லை, அதனால் அவர்கள் முட்டாள்கள் என்று சொல்வது அறிவுப்பூர்வமானதா?

 25. பாரதி on November 13, 2015 at 2:47 pm

  லாலுவின் சாதியமும் நிதிஷின் போலி மதசார்பின்மையும் வென்றது.

 26. jayaseelan ganapathy on November 13, 2015 at 4:54 pm

  இவ்வளவு தூரம் நீட்டி முழக்க வேண்டிய அவசியமே கட்டுரையாளருக்கு வேண்டியதில்லை. இரண்டே வரிகள் தான் தேவை.
  அவையாவன:
  1) பிஜேபிக்கு ஓட்டு போடுபவர்கள் அறிவாளிகள்
  2) பிஜேபிக்கு ஓட்டு போடாதவர்கள் முட்டாள்கள்
  முடிஞ்சது கதை…!

 27. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on November 13, 2015 at 6:26 pm

  அருமையாக பிகார் தோல்வியை திருமலையார் ஆய்வு செய்து எழுதியுள்ளார். இந்தக்கட்டுரையில் திருமலையாரது பரிந்துரைகளை பாஜக ஏற்கவேண்டும் என்பது அடியேனது விருப்பம்.
  பிகார் தேர்தலில் சாதியசக்திகளும் போலி மதச்சார்பின்மை சக்திகளும் ஒன்று சேர்ந்து வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த இரு சக்திகளும் தேசிய அளவில் ஒன்று சேர்ந்தாலும் பாஜகவுக்கு இதே நிலையே ஏற்படும். அப்படி காங்கிரஸ், ஜனதா குழுமம், இடது சாரிகள், பிராந்தியக்கட்சிகள் அனைத்தும் தேசிய அளவில் ஒன்று திரள்வதற்கு இன்னும் ஒரு தசாப்தமாவது தேவைப்படும். காங்கிரஸ் தனியாக மீண்டும் எழுந்து நிற்பதற்கும் வாய்ப்பு குறைவு. ஆனால் இந்த இரண்டில் எதுவும் நடக்காமல் இருக்கவேண்டும் என்றால் திரு நமோஜி அரசாங்கம் சிறப்பாக செயல்படவேண்டும்.
  1.கார்பொரேட்டுகளை அன்னிய மூலதனம், நகர்புறம், தொழில், சேவைத்துறை இவற்றை மையமாகக்கொண்டு மட்டும் வளர்ச்சியை முன்னேற்றத்தைக் உருவகிக்காமல். மனிதவளத்தை மேம்படுத்துவதற்கும் கிராமியப்பொருளாதாரம் வேளாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். 2. பாரத நாட்டின் பாரம்பரிய ஞானம் தொழில் நுட்பம் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ அவற்றையெல்லாம் முழுமையாகப்பயன்படுத்துவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவேண்டும்.
  3. அமெரிக்காவுக்கும், பன்னாட்டுக்கம்பெனிகளுக்கும் எது நல்லதோ பயனுக்க்குகந்ததோ அதையே பாரத நாட்டின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கும் நல்லது என்று கருதும் உலகவங்கி பன்னாட்டு நிதியம் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற வலது சாரிப் பொருளாதாரவியலாளர்களை அவரது பரிந்துரைகளை உப்பைப்போல மிகக்குறைந்த அளவில் பயன்படுத்துதல் நல்லது.
  4.பாரத நாட்டின் சந்தைப்பெரியது அதனை முழுமையாகப்பயன்படுத்துவதே அதன் தேவைகளை எபக்டிவாக செய்வதே ஆரோக்கியமாக்குவதே சிறந்தது. ஏற்றுமதி அன்னிய சந்தை இவற்றுக்காக நமது உற்பத்தியைத்திருப்புவது அவசியமற்றது.
  5. நவீன தொழில் நுட்பங்களில் நல்லதும் உள்ளன தீயவையும் உள்ளன. தகவல் தொழில் நுட்பம் அதிகாரப்பரவல், வெளிப்படையான நிர்வாகம் மேலும் விரைவானத்தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுப்பதால் டிஜிடல் இந்தியா போன்றத்திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஆனால் பிடி, மரபணுவிதைகள் போன்றவை நமது பாரம்பரிய விதைச்செல்வத்தை அழித்து நமது சுதந்திரத்தினையும் உணவுப்பாதுகாப்பையும் அழித்துவிடும். பிடிக்கு எதிராக மக்களின் கருத்து வலுவாக உள்ளது. அதைக்கொண்டுவந்தால் மக்கள் பாஜவை எதிர்ப்பார்கள். எனவே பிடியை பாஜக அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது.
  சிவசிவ ஹர ஹர

 28. Slasher on November 13, 2015 at 9:47 pm

  The writer is on the right track. However, even he doesn’t understand the diabolical extent of collaboration between our Desh Drohi Media and Foreign Invaders in completely keeping us in the dark about our own history and culture.

  To open his eyes, let me put forward a sample of articles that will completely blow your mind.

  Tipu Sultan Unmasked: how our Desh Drohi Media loves Tipu Suddenly.

  http://ajitvadakayil.blogspot….

  How about the false narrative around Modi and India?

  http://ajitvadakayil.blogspot….

  Proud to be Hindu, Proud to Indian

  http://ajitvadakayil.blogspot….

  Read the above articles to first know about our History’s TRUTHS and how much it has been hijacked by Desh Drohis within India and outside Invaders.

  I hope everyone will take a few minutes of their time to read this very important blogger in our midst who has more than 310m (million!) page views on the Internet.

  I am not joking. If you have not read Ajit Vadakayil by now, you are probably not reading the most important blogger from India on the planet.

 29. paandiyan on November 14, 2015 at 5:10 pm

  //மோதிக்கு இருக்கற தலைவலிகள் எல்லாம் போதாதா. வேற வெனையே வேண்டாம்.//

  சரிதான். இன்றையை நிலயில் அவர் ஜனாதிபதி அனால் கூட அது ஜெயில்சிங் , ராஜீவ் உறவு மாத்ரி தான் இருக்கபோகின்றது ..

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*