ஹிந்துத்துவ சிறுகதைகள்

2012ம் வருடம் நமது தமிழ்ஹிந்து இணையதளத்தில் ஆலந்தூர் மள்ளன் என்ற புனைபெயரில் அரவிந்தன் நீலகண்டன்   பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியது நினைவிருக்கும். அந்தக் கதைகள் வாசகர்களால் தொடர்ந்து விவாதிக்கப் பட்டு, பாரட்டவும் பட்டன.  அவற்றை மிக நேர்த்தியாகத் தொகுத்து தடம் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

புத்தகத்தை ஆன்லைன் மூலம் இங்கே வாங்கலாம்.

hindutva-sirukathaikalபிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயசமாக தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு. பாரதியார் அவரது காலத்தில் பிரசாரக் கதைகளை சமூக மேம்பாட்டுக்கும் விடுதலை விழிப்புணர்வுக்கும் பயன்படுத்தினார். பிற்காலத்தில் திராவிடப் பிரசாரக் கதைகளில் அறுந்துபோன அத்தொடர்ச்சியை இக்கதைகள் தக்கவைப்பது மட்டுமில்லாமல், புதியதொரு பரிமாணத்தையும் உச்சத்தையும் தொடுகின்றன. வெற்றுப் பிரசாரக் கதைகளின் பின்புலமாக வெறுப்புணர்வை வைத்து உருவாக்கப்பட்ட திராவிடப் பிரசாரக் கதைகளில் இருந்து முற்றிலும் விலகி, வரலாற்றுப் பின்னணியில் இந்திய உணர்வுடன் வெளிவரும் சிறுகதைகளை இத்தொகுப்பில் நாம் விழிவிரிய வாசிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், பாரதப் பண்பாட்டில் வேர்கொண்டு நம் மரபின் மகத்துவக்கொடியைப் பறக்கவிடும் கதைகள் இவை எனலாம்.

 

Tags: , , , , ,

 

ஒரு மறுமொழி ஹிந்துத்துவ சிறுகதைகள்

  1. சிவஶ்ரீ. விபூதிபூஷண் on November 7, 2015 at 10:17 am

    ஆஹா உருவாகிவிட்டார் தமிழிலும் ஒரு பைரப்பா. ஹிந்துத்வ இலக்கிய ஆளுமை வீரசாவர்க்கரைப்போன்று சாதனை படைக்க வித்தைகளுக்கெல்லாம் மூலமாய் விளங்கும் எந்தைக் கூத்தன் அருள் அரவிந்தத்தில் நிறைக. சிவசிவ ஹரஹர

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*