ஆதிசங்கரர் படக்கதை — 5

உரையாடல் — வையவன்:  படங்கள் — செந்தமிழ்

Adhi 8

Adhi9

Tags: , , , ,

 

5 மறுமொழிகள் ஆதிசங்கரர் படக்கதை — 5

 1. ஆதிசங்கரர் படக்கதை அருமையாக உள்ளது. படங்கள் மிக தத்ரூபமாக உள்ளன. பாராட்டுக்கள். இந்த நல்லமுயற்சி தொடரவாழ்த்துகிறேன்.
  ஒரு சின்ன சந்தேகம். கடைசிப்படத்தில் இளந்துறவியான ஸ்ரீ சங்கரரின் தலையில் சிகை இருக்கிறதே. ஸ்ரீ சங்கரர் நம்பூதிரி பிராம்மணர் குடும்பத்தில் அவதரித்தார். ஆதலால் அவர் நம்பூதிரி திருமேனிகளைப்போல சிகை வைத்திருந்திருக்கலாம். அவர் சன்யாசம் பெற்றபிறகு அதை நீக்கவில்லையோ. தெரிந்தவர்கள் கொஞ்சம் தெளிவை ஏற்படுத்தினால் நன்று.
  சிவசிவ

 2. கந்தர்வன் on December 8, 2015 at 8:18 am

  அன்புள்ள சிவஸ்ரீ அவர்களே,

  // ஒரு சின்ன சந்தேகம். கடைசிப்படத்தில் இளந்துறவியான ஸ்ரீ சங்கரரின் தலையில் சிகை இருக்கிறதே. ஸ்ரீ சங்கரர் நம்பூதிரி பிராம்மணர் குடும்பத்தில் அவதரித்தார். ஆதலால் அவர் நம்பூதிரி திருமேனிகளைப்போல சிகை வைத்திருந்திருக்கலாம். அவர் சன்யாசம் பெற்றபிறகு அதை நீக்கவில்லையோ. தெரிந்தவர்கள் கொஞ்சம் தெளிவை ஏற்படுத்தினால் நன்று. //

  சித்திரம் கண்டிப்பாகத் தவறு. அத்வைதிகளும் த்வைதிகளும் (மாத்வ மடத்து சன்ன்யாசிகள்) கடைபிடிக்கும் சன்யாச ஆசாரம் “எகதண்ட” வகையைச் சேர்ந்தது. அவர்கள் ஒற்றைக்கோல் (ஏகதண்டம்) ஏந்தி, சிகை (குடுமி), யஜ்ஞோபவீதம் (முப்புரி நூல்) இவற்றை விடுவார்கள்.

  இதற்கு மாறாக ஸ்மிருதிகளில் பரவலாகப் பேசப்படும் த்ரிதண்ட சன்ன்யாசம் விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ மரபில் கடைபிடிக்கப்படுகிறது. இவர்கள் த்ரிதண்டம் (முக்கோல்) ஏந்துபவர்கள். சன்ன்யாசிகளில் இவர்களே சிகையையும் யஜ்ஞோபவீதத்தையும் தொடர்ந்து சன்யாச ஆச்ரமத்திலும் தவறாமல் வைத்துக் கொள்வார்கள். மூன்று வேளை சந்த்யாவந்தனமும் தவறாமல் செய்பவர்கள்.

  யாதவப்ரகாசர் எழுதிய “யதிதர்ம சமுச்சயம்”, தேசிகரின் ஆச்சார்யராக இருந்த வரதகுருவின் “யதிலிங்க பேத சமர்த்தனம்” ஆகிய நூல்களிலும், வேதாந்த தேசிகர் இயற்றிய சததூஷணியில் “யதிலிங்க பேத பங்க வாதம்” என்கிற 65-ஆம் வாதத்திலும் இது பற்றிப் பல விஷயங்களைக் காணலாம். அத்வைத மரபில் “பிரகடார்த்த விவரணம்” எங்கிற பாஷ்ய நூலில் அத்வைதத் தரப்பு வாதத்தையும் காணலாம்.

  // ஸ்ரீ சங்கரர் நம்பூதிரி பிராம்மணர் குடும்பத்தில் அவதரித்தார். //

  இதுவும் கேள்விக்குரியதே. அவர் ஆத்ரேய கோத்திரத்தில் பிறந்தவர் என்பது மாத்திரம் அவர் சீடர் சுரேஸ்வரர் எழுதிய தைத்திரீய பாஷ்ய வார்த்திகத்தில் தெரிகின்றது. மற்றபடி மாதவீய சங்கர விஜயம் கூறுபவை பெரும்பாலும் ஆதாரபூர்வமானவை அன்று.

 3. Geetha Sambasivam on December 8, 2015 at 3:50 pm

  சங்கரர் சந்நியாசி ஆகத் தானே தாயிடம் வாக்குறுதி கேட்டார். தானாக சந்நியாசம் வாங்க முடியாது அல்லவா? குரு மூலமாக சந்நியாசம் பெறும்வரையில் சிகை இருக்கலாம் என நினைக்கிறேன்.

  அசரீரி குரல் கேட்பது இதுவரை படிக்காத விஷயமாகத் தெரிகிறது. தொடரக் காத்திருக்கிறேன்.

 4. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on December 9, 2015 at 2:25 pm

  ஸ்ரீ சங்கரர் சன்யாசம் பெற்றபின்னரும் சிகையோடு இருப்பதாக சித்திரத்தில் தீட்டி யிருப்பது சரியானது தானா? என்ற அடியேனின் கேள்விக்கு அருமையான பதிலைத்தெளிவாக வழங்கிய என்றும் நமது அன்புக்குறிய திருமாலடியார் ஸ்ரீ கந்தர்வன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் சொல்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். சிகையைப்பற்றி மட்டும் கேட்டேன் நூலைப்பற்றியும் தெளிவு படுத்தியிருக்கிறார். ஸ்மார்த்தர்கள் ஸ்ரீவைணவ சன்யாச மரபுகளுக்கிடையேக் காணப்படும் வேறுபாட்டையும் மிக அருமையாக சொல்லியிருக்கிறார் நண்பர் ஸ்ரீ கந்தர்வன் அவர்கள்.
  ஸ்ரீ கந்தர்வன் அவர்கள் நமது தமிழ் ஹிந்துவில் எழுதியக்கட்டுரைத்தொகுப்பை நூலாக விரைவில் எதிர்பார்க்கின்றேன். குறிப்பாக பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணியை வெளியிடவேண்டுகிறேன். தமிழ் ஹிந்துவில் தொடர்ந்து ஸ்ரீ வைணவம் பற்றியும் நமது ஆழ்வார்கள் அருளிய அமுதத்தினைப்பற்றியும் எழுதவேண்டுகிறேன்.

 5. ஒரு அரிசோனன் on December 12, 2015 at 2:53 am

  இப்படக்கதையைப் படித்தவரையில், சங்கரர் தனது தாயிடம் சன்னியாசம் வாங்க அனுமதிதான் வாங்கியிருக்கிறார். சன்னியாசம் பூணவில்லை. கையில் சந்நியாசிக்கான தண்டம் காட்டியிருப்பதுதான் தவறாகப் படுகிறது. அடுத்த பகுதிகளில் சங்கரர் எப்படிக் காட்டப்படுகிறார் என்று பொறுத்திருந்துபார்ப்போமே!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*