கோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்

சனிக் கிழமை மாலை 5:30 அல்லது 6 மணி இருக்கலாம். திருவல்லிக் கேணி கோவில் வளாகத்தில் ஒரு காட்சியை காண நேர்ந்தது. கோவில் வந்திருக்கும் ஒரு முதிய பெண்மணியிடம் ஒரு இளைஞர் தமது செல்போனை காட்டி ஏதோ விவரித்து கொண்டிருந்தார். அந்த இளம் சகோதரர் ஒரு இஸ்லாமியர். ‘படைத்த இறைவன் ..’ என்றெல்லாம் வார்த்தைகள் காதில் விழுந்தன. நிச்சயமாக தனிப்பட்ட உரையாடல் அல்ல என திட்டவட்டமாக தெரிந்த பிறகு அவர்கள் அருகில் சென்றோம். சென்றோம் என்றால் ம.வெங்கடேசனும் நானும். ம.வெங்கடேசன் வெளிவர உள்ள ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’ நூலின் ஆசிரியர். நாங்கள் வந்ததை அன்பான புன்னகையுடன் ஆமோதித்தார் அந்த இஸ்லாமிய இளைஞர்.

muslim_Propaganda_near_Triplicane_temple‘இது டிஸ்கவரி சேனலில் உள்ள வீடியோ’ என்று தம் செல்போனில் சூரிய குடும்பம் குறித்த கிராபிக்ஸை காட்டி விளக்கினார் அந்த சகோதரர். கனிவான பண்பட்ட வார்த்தைகள். கேட்பவரை எவ்விதத்திலும் புண்படுத்திவிடலாகாது என்பதில் அதிக கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள். அந்த வயதான மூதாட்டி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். ‘இப்படிப்பட்ட சூரிய குடும்பமே ஒரு பெரும் பிரபஞ்சத்தின் சிறிய பகுதி. என்றால் அதை படைத்தவனை குறித்து நாம் சிந்திக்க வேண்டாமா? அவன் எவ்வளவு பெரியவனாக இருப்பான்!’. அந்த அம்மணி அமைதியாக ‘இதைத்தானப்பா நாங்களும் சொல்கிறோம்.. பகவான் உலகத்தை படைத்து சம்ரக்ஷித்து கொண்டிருக்கிறார். அதற்கென்ன இப்போ!’ என்றார். சரி நம் பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்று தோன்ற, வழக்கமான வாதத்தையே முன்வைத்தேன், ‘இவ்வளவு பிரபஞ்சத்தையும் படைத்தவன் படைக்கப்படாமல் தோன்றினால் இந்த பிரபஞ்சத்துக்கு மட்டும் படைப்பவன் தேவையா?’ அந்த சகோதரர் மாறாத நிர்விகல்ப புன்னகையுடன் ’நீங்க பேசுறது வாதம். நான் சொல்றது கருத்து. நான் வாதத்துக்கு வரலை’ என்றார். தெளிவு!

‘இல்லை படைக்கப்பட்டதன் ஒழுங்கின் அடிப்படையில் படைத்தவன் குறித்து சிந்திக்கிறதுனாலே அங்கே தர்க்கம் வாதம் வந்துருதுல்ல…’ என்று ஆரம்பித்தவனை அந்த வைணவ மூதாட்டி வெட்டினார். முஸ்லீம் நாச்சியார் கதையை சொன்னார். எப்படி பெருமாளிடம் மனம் பறி கொடுத்த இஸ்லாமிய இளவரசி இறுதியில் பரந்தாமனுடனேயே கலந்தார் என்பதை அந்த கொஞ்ச நேரத்துக்குள் விளக்கினார். ‘சரி சொல்லுங்க தம்பி’ என்று அந்த இஸ்லாமிய சகோதரரை பார்த்தார். ’எனக்கு…எனக்கு சொல்ல எதுவும் இல்லை. இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை’ என்றார். அந்த இஸ்லாமிய சகோதரரே நாளைக்கு திருவல்லிக்கேணி மீசைக்கார தேரோட்டியின் பக்தனாகிவிடுவாரோ என்று எனக்கே ஒரு நிமிஷம் தோன்றியது நிஜம்.

‘சரிங்க . ஒரு முக்கியமான இந்து கோவில் முன்னாடி உங்க மத பிரச்சாரத்தை செய்றீங்க. இதே போல இந்துக்கள் உங்க மசூதி முன்னாடி அவுங்க பிரச்சாரத்தை செய்ய அனுமதிப்பீங்களா?’ என்றேன். ஒரு நிமிஷம் தயங்கி ‘ஓ செய்யலாமே’ என்றார். அந்த வைணவ மூதாட்டி மிகவும் யதார்த்தமாக ‘அதெல்லாம் முடியாது தம்பி சும்மா சொல்லாதீங்க’ என்று சொன்னார். அதற்கிடையில் எங்கிருந்தோ இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இவரை போல சாதுவாக எல்லாம் இல்லை. ‘கொடுத்தஇலக்கை குறிவைக்காமல் இவங்க இங்க எதுக்கு’ என்கிற கேள்வி அவர்கள் எங்களை பார்த்த பார்வையிலேயே தெரிந்தது. சரி என்று அந்த சகோதரர் வைத்திருந்த ‘மனிதனுக்கேற்ற மார்க்கம்’ என்கிற பிரச்சார பிரசுரத்தை வாங்கிக் கொண்டு நடையை கட்டினோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வெளியீடு ‘மனிதனுக்கேற்ற மார்க்கம்’. ஆசிரியர் ஜைனுல் ஆபிதீன். திருச்சி ஷிர்க் மாநாட்டை நடத்திய அதே இயக்கத்தினர்தான். இந்து கோவில்களிலும் இஸ்லாமிய பிரச்சாரத்தை செய்கிறார்கள். அடிப்படையான சமுதாய நல்லிணக்கம் என்று ஒன்று இருக்கிறது. ஒரு வித பண்பாட்டு புரிதல். பன்மை மத நம்பிக்கைகள் கொண்ட சமுதாயம் இது. ஒரு மதத்தினரின் மத தலத்துக்கு சென்று, அதுவும் திருவல்லிக் கேணி போல ஆழ்வார்கள் பாடல் பெற்ற பழமையான தலத்துக்கு முன்னால், இப்படி பிற மத பிரச்சாரம் செய்வது, திட்டமிட்டு செய்வது தம் சொந்த மதத்தின் கண்ணியத்துக்கே எதிரானது என்பதை பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்தே இருப்பார்கள். அவர்கள் இதை எப்படி தடுத்து தம் சமுதாய கண்ணியத்தை நிலை நிறுத்த போகிறார்கள் என்பதை காண ஆவல்.

(அரவிந்தன் நீலகண்டன் ஃபேஸ்புக்கில் எழுதியது)

Tags: , , , , , , , ,

 

19 மறுமொழிகள் கோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்

 1. ந. பரமசிவம் on February 18, 2016 at 5:26 pm

  கிருத்துவம் முன்பு. இப்போது அதனுடன் இஸ்லாமும். ஆனால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மத மாற்றம் குறித்து முயல்வதில்லை. இருவரும் இந்து மத மக்களை மதமாற்றம் செய்வதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஏன்? நம்மிடம் ஒற்றுமை இல்லை. இல்லாத உயர் குலம், தாழ் குலம், என நம்மையே நாம் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம். இவை அனைத்தும், முகமதிய மற்றும் ஆங்கிலேய ஆட்சியின் போது வந்தவை என விளக்கப் பட வேண்டும்.

 2. Senthil kumar on February 18, 2016 at 6:14 pm

  நாமளும் ஒரு ‘வந்தேறி மதம் மறுப்பு மாநாடு’ நடத்துனா என்ன?

 3. sakthipalani on February 18, 2016 at 9:08 pm

  கோவில் வாசலில் அந்நிய மத ப்ரச்சாரத்தைக்கண்டு திரு அரவிந்தன் நீலகண்டன்
  அவர்கள் கவலை கொண்டுள்ளது புரிந்துகொள்ளக்கூடியதே.ஆனால் ராமர் கோயில்
  உள்ளேயே மசூதி எழுப்பியும் இந்து மதத்தை அழிக்கமுடியவில்லை என்னும்பொழுது
  இதல்லாம் சாதாரண ஒன்றுதான் கவலை கொள்ளவேண்டாம்.

 4. ஒரு அரிசோனன் on February 20, 2016 at 12:27 am

  எல்லோரும் அந்த வைணவ மூதாட்டிபோல விள்க்கவும் மாட்டார்கள். இந்துமதக் கொள்கைகளைப் புரிந்து எடுத்துச் சொல்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள். ஒன்று வார்த்தை தடித்து அடிதடி நிகழும், அல்லது, மதமாற்றம் நடக்கும்.

  இதை எதிர்த்து வழ்க்காட இந்திய பீனல் கோடிலோ, தமிழ்நாட்டுச் சட்டத்திலோ இடமுள்ளதா என்பதை அரவிநதன் நீலகண்டன் போன்றோர் கவ்னித்து ஆவன செய்யவேண்டும்.

  இல்லாவிட்டால், முள்ளை முள்ளால் எடுப்பதுபோன்று, அவர்களின் தொழுகை இடங்களுக்கு முன் காவல்துறையினரிடம் பாதுகாப்புட்ன் இந்துசமய்ப் பிரசாரம் செய்யவேண்டும். காவல்துறை மறுத்தால், மாற்றுச்சமயத்தார் கோவில்கள் முனபு பிரசாரம் செய்வதைக் கட்டுப்படுத்தும்ப்டி எதிரிவாதம் செய்யவேண்டும்.

 5. ஒரு அரிசோனன் on February 20, 2016 at 12:33 am

  //ராமர் கோயில்
  உள்ளேயே மசூதி எழுப்பியும் இந்து மதத்தை அழிக்கமுடியவில்லை என்னும்பொழுது இதல்லாம் சாதாரண ஒன்றுதான் கவலை கொள்ளவேண்டாம்.//

  அப்பொழுது ஒரு மராட்டிய சிங்கம் சிவாஜி இருந்தார். விஜயநகர சாம்ராஜ்ஜியம் இருந்தது, உயிரேபோனாலும் எங்கள் சமயத்தைவிட்டு நீங்கமாட்டோம் என்னும் மனத்திண்மை படைத்தவர்கள் இருந்தார்கள், இவ்வகை அநீதிகளை எதிர்கொள்ள.

  இப்பொழுது பணத்திற்காக விலைபோகிறவர்களே அதிகம். எனவே, கவலைகொள்ள்வேண்டாம் என்பவரே க்ட்டாய மதமாற்றம் செய்யப்படும் காலமும் வரலாம்.

 6. "Honest Man" on February 20, 2016 at 5:27 pm

  ///////இல்லாத உயர் குலம், தாழ் குலம்//// இது இல்லாத ஒன்றா? அப்பட்டமான ஒரு பெரிய பொய்யை அசராமல் கூறுகிறீர்களே! மாறாக
  இந்துக்கள் அனைவரையும் ஒற்றுமைபடுத்துவது எப்படி என்பதை யோசியுங்கள்.

  இந்துக்களுக்கு எதிராக ”’ஷிர்க் ஒழிப்பு மாநாடு”’ நடத்துகிறார்களே! இந்துக்கள் மட்டும்தான் சிலை வழிபாடு செய்கிறார்களா? கிறிஸ்தவர்கள் ஏசுவை சிலை வடிவில் வழபடவில்லையா? புத்தர்கள் புத்தரை சிலை வடிவில் வழிபடவில்லையா? பகுத்தறிவு பேசும் திகவினர் ஈவேரா வை சிலை வடிவில் கும்பிடவில்லையா?

 7. "Honest Man" on February 22, 2016 at 9:24 am

  /////அவர்களின் தொழுகை இடங்களுக்கு முன் காவல்துறையினரிடம் பாதுகாப்புட்ன் இந்துசமய்ப் பிரசாரம் செய்யவேண்டும்/////

  எதற்கு? அவன்தான் ஒரு பன்றி. ”அதை”த தின்னுகிறது. அதேபோல நாமுமா? அதற்கு பதிலாக நாம் நம் கோவில்களில் துண்டு பிரசுரம் அடித்து நம் மதத்தின் பெருமைகளை (உதாரணத்திற்கு:– சூரியதேவ கடவுள் 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் புறப்படுகிறான். இல்லையா? Sir Issac Newton கண்டறிந்த கண்டுபிடிப்பு படி சூரிய ஒளியை ஒரு prism மூலம் ஊடுருவ செய்யும்போது 7 நிறங்களாக பிரிகிறது. இதைத்தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் symbolic ஆக 7 குதிரைகளாக காட்டினார்கள் என்பது போல அறிவியல் பூர்வமான கருத்துக்கள் அடங்கிய) எடுத்து இயம்பவேண்டும். ஒரு ஊரில் அந்த ஊர்கார திகவினர் ”’பக்தர்களுக்கு 125 கேள்விகள்” என்று ஒரு நூலை வெளியிட்டுள்ளனர். நம் மனம் கொதிக்கும்படியான கேள்விகள் அதில் உள்ளன, நாம் அவனைப்போல அவமதிக்கும்படியான விஷயங்களை எழுத வேண்டாம். நம் பெருமைகளை மட்டும் எழுதலாமே. நாங்கள் இந்துக்களை காப்பாற்றவே பிறந்து வந்துள்ளோம் என்று கூறி திரியும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் எல்லாம் (நான் மேலே சொன்னமாதிரி) இதையெல்லாம் செய்யமாட்டார்கள். சும்மா கதையளப்பதற்கும் பஜனை யாகம் செய்வதற்கும்தான் அவர்கள் லாயக்கு. ஆகவே மசூதியில் போய் நாம் பிரச்சாரம் செய்ய முனைந்தால் இருக்கவே இருக்கிறார்கள் போலி மதசார்பின்மைவாத பொறுக்கிகள் அவர்கள் பார்லிமெண்டில் கலாட்டா செய்வார்கள். இங்கிலீஷ் மீடியா இருக்கவே இருக்கிறது. அவை உலகமே அழிந்துவிட்டதுபோல பக்கம் பக்கமாக எழுதுவார்கள். கருணாநிதி முரசொலியில் கவிதை எழுதுவார். கம்யூனிஸ்ட் கம்மனாட்டிகளை பற்றி சொல்லவே வேண்டாம். இவையெல்லாம் தேவையா? அதனால் மோடி அரசுக்கு கெட்ட பெயரை தேடி தரவேண்டுமா? முக்கியமான Bills பாசாமல் போகவேண்டுமா? இந்தியாவின் நிலைமை அதுபோல இருக்குதுங்க. முஸ்லிம் என்ன பேசினாலும் என்ன செய்தாலும் (மேலே சொன்ன) இவனுங்க ஒண்ணும் கண்டுக்கமாட்டானுங்க. கண்டுக்காம போனால்கூட பரவாயில்லை. அதற்கு வியாக்கியானம் வேறு கூறுவார்கள் எழுதுவார்கள் பேசுவார்கள்.ஆனால் இந்து ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதுமே தையத தக்க என்று வானத்துக்கும் பூமிக்கும் குதியோ குதி என்று குதிப்பார்கள்.

 8. sundarsvpr on February 22, 2016 at 9:31 am

  மேதை அம்பேத்கார் இறக்குமதி செயப்பட்ட வெளிநாட்டு மதங்களின் ஒன்றில் மாறவில்லை. பெளத்த மதத்திற்கு மாறினார். ஆனால் ஹிண்டுகளாகிய நாம் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறோம் அதுமட்டும் அல்ல. சதாதன மதம் என்று கூறிக்கொண்டு நம் மதம் அழியாது என்ற இறுமாப்பில் உள்ளோம் அதன் வெளிபாடு தான் மத மாற்றங்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்பது மாயமான வாதம்

 9. venkat on February 22, 2016 at 2:34 pm

  இத்தகைய வழக்கங்களை மிக கடுமையாக கண்டிக்க வேண்டும் ! உனது மதம் உன்னோடு ! எனது மதம் என்னோடு ! என்னை நிம்மதியாக வாழ விடு ! எனது நண்பரின் மகள் ஐரோப்பிய நாடு ஒன்றில் மேற்படிப்பு படிக்கிறார் . ஜே.டபுள்யு .ஆர்க் என்ற கிறிஸ்தவ மத வியாபாரிகள் ( மிக மென்மையான வசவு ) அவர் தங்கியுள்ள மாணவர் விடுதிகளில் சென்று தொந்தரவும் மத மற்றும் வேலைகளிலும் ஈடு படுகிறார்கள் ! இவர்கள் ஏன்தான் அல்லாவையும் , ஏசுவையும் இப்பட்டி கூவி கூவி விற்று, தூ ! இப்படி ஒரு பிழைப்பு !

 10. க்ருஷ்ணகுமார் on February 22, 2016 at 6:06 pm

  தமிழகத்தில் பெருகி வரும் இஸ்லாமிய வஹாபிய தீவிரவாதம் பற்றி சமீபத்தில் ஹிந்து முன்னணி ஒரு விழியம் வெளியிட்டிருக்கிறது. வீரத்துறவி மானனீய ஸ்ரீ இராம.கோபாலன் ஐயா அவர்கள் இந்த விழியத்தை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ் ஹிந்து வாசகர்கள் அதை வாங்கிப் பார்த்து ஏனைய நண்பர்களிடமும் பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  அஹ்லே சுன்னத் வல் ஜமாத் எனப்படும் பரேல்வி ஸுன்னி இஸ்லாமிய சஹோதரர்களின் இயக்கம் சமீபத்தில் தில்லியில் நிகழ்ந்த தங்களது கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் தேசப்பற்றினையும் அவர்கள் தேசத்துக்காக ஆற்றி வரும் பணியையும் பாராட்டி ஆர் எஸ் எஸ் அமைப்புடன் தேச வளர்ச்சிப்பணியில் தாங்களும் ஈடுபடுவதில் நாட்டம் காட்டியுள்ளனர்.

  முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் எனும் ஸ்தாபனம் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தினரால் ……இஸ்லாமிய சஹோதரர்களுடன் தொடர்ந்த ஒரு சம்வாதத்திற்காக………. ஹிந்து இஸ்லாமிய மத நல்லிணக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஸ்தாபனம். இந்த ஸ்தாபனத்தின் வாயிலாகவும் தமிழகத்தில் பெருகி வரும் மதமாற்ற நடவடிக்கைகள் பற்றி விவாதம் நிகழ்த்தப்பட வேண்டும்.

 11. க்ருஷ்ணகுமார் on February 22, 2016 at 6:19 pm

  அன்பின் ஸ்ரீ ஹானஸ்ட் மேன்

  \\ இது இல்லாத ஒன்றா? அப்பட்டமான ஒரு பெரிய பொய்யை அசராமல் கூறுகிறீர்களே! \\\

  தங்கள் கருத்தில் ந்யாயம் இருக்கிறது.

  ஹிந்து மத அடிப்படை நூற்களில் மனிதர்கள் உயர்வு தாழ்வு என பகுக்கப்படவில்லை.

  ஆயினும் ஜாதி முறைமை என்பது பிறப்பினடிப்படையில் அமைந்ததாகவும் உயர்வு தாழ்வு கற்பிப்பதாகவும் உள்ளது. ஜாதி முறைமை ஹிந்து மதத்தவர் என்றுமட்டிலும் அன்றி க்றைஸ்தவர் மற்றும் இஸ்லாமியரிடமும் காணப்படுகிறது.

  ஹிந்துக்களை ஒற்றுமைப் படுத்த ஆர் எஸ் எஸ் இயக்கம் பாடுபட்டு வருகிறது. தொடரும் சங்கப்பணியால் ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் ஹிந்துக்கள் ஒருவருடன் ஒருவர் பழக முடிகிறது. சங்க இயக்கங்களில் இதை கண்கூடாகப் பார்க்கலாம்.

  பொது தளத்தில் நீங்கள் சொல்லும் படி நிச்சயமாக ஜாதி உயர்வு தாழ்வு பார்க்கப்படுவது மட்டுமில்லை. பல சமயம் இது அடிதடி கொலை என்ற அளவுக்கும் செல்கிறது என்பதும் கூட உண்மையே.

  \\ இந்துக்கள் அனைவரையும் ஒற்றுமைபடுத்துவது எப்படி என்பதை யோசியுங்கள். \\

  தாங்கள் பகிர்ந்த கருத்தில் முக்யமான கருத்து இது. சங்கப்பணிகள் நிச்சயமாக இந்த இலக்கில் பயணிக்கின்றன. அதில் வேகம் வேண்டும் என்பதில் சம்சயம் இல்லை.

  இயக்க ரீதியாக நீங்கள் இப்பணியை செயற்படுத்த / துரிதப்படுத்த விரும்பினால் சங்கத்தின் ஷாக்காக்களில் தொடர்ந்து பங்கு பெற்று தங்களுடைய கருத்துக்களை நேரடியாகப் பகிரலாம்.

 12. sakthipalani on February 22, 2016 at 9:07 pm

  திரு ஒரு அறிசோனன் அவர்களே ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற ஒப்பற்ற,
  உயரிய கொள்கைக்கே விலை போகாத இந்துக்கள் அக்கொள்கையை தன்னுள் உள்ளடக்கிக்கொண்டு உயரிய நிலையை நோக்கி முன்னேறிய இந்துவா
  பணத்திர்க்குவிலைபோவான்!

 13. […] […]

 14. vedamgopal on March 14, 2016 at 10:48 pm

  மைனாரிடிகளை போட்டுத் தாக்கிய பெரியார் !!! ( அகடவிகட அக்கப் போர் – 15.11.2013)

  கீழே கொடுத்திருப்பது 6.3.1962 நாளிட்ட விடுதலை இதழில் ”பெரியார்” என்று கருணாநிதி அழைக்கும் ஈ.வெ.ராமசாமி நாயகர் எமுதிய தலையங்கம்

  ”நாட்டு லட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிடி சமுதாயம், மைனாரிடி மதம், மைனாரிடி கலாசாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொதுவளர்ச்சிக்கு கேடாக முடியும்.” ”இன்றைய சுதந்திரம் சுதந்திரமே அல்ல. வெள்ளையன் ஆட்சிகால சுதந்திரத்தை விட மோசமான நிலை என்பது சுதந்திர உதயநாள் முதல் எனது கருந்து”. ”இதற்கு உதாரணம் இந்த நாட்டில் இன்று மைனாரிடிகளாக உள்ள சமுதாயத்திற்கு இருந்து வரும் ஆதிக்கமும் நடப்பு வசதிகளுமே போதுமானதாகும்”

  ”100க்கு 6 வீதம் உள்ள முஸ்லீம்கள் ஒரு கூலி உடலுழைப்பும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் “கண்களுக்கே தென்படக்கூடாது” என்ற நிலையில் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உட்பட ”கோஷா” முறையை இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள். அதே நேரத்தில் நம் ஆண்களும், பெண்களும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள், வேலைக்காரிகளாக இருக்கிறார்கள்.

  இது அவரவர்கள் மத தர்மம், மத ஆசாரம் என்றால் யார் யாருடைய மத தர்மம் யாரை இந்த நிலையில் இழிவுபடுத்துவது என்பதை சிந்தித்தால் தமிழனின் சுதந்திரம் சுயமரியாதை அளவு விளங்கும்.

  நமது நாட்டில் மைனாரிட்டிகள் உரிமை அவர்களது சமய, கலாசாரம், பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே. இன்று நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடையவேண்டியவர்கள் ஆகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும், உரிமையும் துரோகம்- பச்சைத் துரோகம் என்கிற குழந்தைகளைத் தான் ஈனும் ஈன்று வருகிறது. இது இயற்கையான பண்பு.

  அதனாலேயே நம் நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக் கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். ”

  இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளும் பயன்பட்டு வாழக் காத்துக் கிடக்கிறார்கள்..

  ”இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு நாட்டுப்பெருவாசி மக்கள் சமுதாயத்திற்குக் கேடு என்பதை விளக்கவேயாகும் என்று எழுதினார் ஈ.வே.ரா.

  மேலும் பெரியார் பிராமிணர்களுக்கு இடம் கொடுப்பது சாணிமேல் கால் வைப்பதுபோல் உள்ளது என்று நினைத்து இஸ்லாமியர்களுக்கு சற்று அதிக இடம் கொடுத்தது தற்போது மலத்தில் கால் வைப்பதுபோல் உள்ளது என்று வருந்தினார்.

 15. Dr.A.Anburaj on July 19, 2016 at 9:52 am

  எனது வீடு திருநெல்வேலி கிறிஸ்தவ சபை க்கு சொந்தமான பிரமாண்டமான ஒரு சா்ச்சிற்கு அடுத்த வீடு. என வீட்டு பக்கம் யாரும் சமய பிரசார நோக்கோடு கால் வைக்க எவனுக்கும் கிறிஸ்தவனுக்கும் துணிச்சல் கிடையாது.எந்த நிலையிலும் இவரை மதம் மாறற முடியாது என்பது கிறிஸ்தவா்களின் துணிபு. இந்த நிலை முஸ்லீம்களையும் கிறிஸ்தவா்களைப் பொறுத்த மட்டில் உண்மை. சக இந்துக்களை மதம் மாற்ற முடியும் என்ற நிலை இருப்பதால் மற்றவா்களுக்கு ஒரு அசட்டு துணிச்சல்.

 16. Dr.A.Anburaj on July 19, 2016 at 9:55 am

  Sir Issac Newton கண்டறிந்த கண்டுபிடிப்பு படி சூரிய ஒளியை ஒரு prism மூலம் ஊடுருவ செய்யும்போது 7 நிறங்களாக பிரிகிறது. இதைத்தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் symbolic ஆக 7 குதிரைகளாக காட்டினார்கள் என்பது போல அறிவியல் பூர்வமான கருத்துக்கள் அடங்கிய) எடுத்து

  ஆனால் சுாியனுக்குகோவில் கட்டி பாலாபிஸேகம் செய்வது விஞ்ஞானம் ஆகாது

 17. sanjay on November 1, 2016 at 2:51 pm

  Anburaj,

  Christians (like you) look for every conceivable opportunity to convert non hindus to Christianity. Ditto with muslims also.

  Some years back, a few Christians distributed pamphlets in front of the Kapaleeswarar temple in mylapore. It contained vulgar references to Hindu Gods. The people there immediately contacted the police & got them arrested.

 18. sanjay on November 1, 2016 at 2:56 pm

  “convert non hindus to Christianity”

  should be “hindus to Christianity”.

 19. Anwar Basha on May 14, 2020 at 11:12 am

  ஏம்பா இருக்கிற பிரச்சனை எல்லாம் போதாதா? இந்து வழிபாட்டு தலங்களுக்கு அருகில் சென்று ஏன் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள்?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*