இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா

மார்ச் மாதம் 4ஆம்தேதி சென்னையில் ம.வெங்கடேசன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக…வருக….வருக

ambedkar book invitation copy

இதில் முக்கியமான புத்தகம் ‘இந்துத்துவ அம்பேத்கர்’. கண்டிப்பாக ஒரு சலசலப்பை ஏற்படுத்தும். இந்திய அளவில் முதன்முதலாக இந்துத்துவ நோக்கில் அண்ணல் அம்பேத்கரை பார்க்க வைத்திருக்கிறது இப்புத்தகம். படிக்க படிக்க வியக்க வைக்கிறது. இவரையா இந்துமத விரோதி என்று சொல்கிறார்கள்? இவரையா ஒரு சாதிக்கு மட்டுமே போராடின தலைவராக கட்டமைத்திருக்கிறார்கள்? என்ற வியப்பும் கேள்வியும் ஒருசேர எழும் என்பதில் ஐயமில்லை.

ம.வெங்கடசேன் எழுதியுள்ள இந்துத்துவ அம்பேத்கர் நூலைப் பற்றி எழுத்தாளரும் ஆய்வாளருமான அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் மதிப்புரை இது.

பாபாசாகேப்அம்பேத்கரைமுழுமையாகஅறிதல்

ஹிந்துத்துவ அம்பேத்கர் என்கிற தலைப்பில் சகோதரர் ம.வெங்கடேசன் ஒரு புத்தகம் எழுதப் போகிறார் என்ற உடனேயே விமர்சனங்கள் எழ ஆரம்பித்து விட்டன. புத்தகம் வருவதற்கு முன்னரே ஒரு கட்டுரை அளவில் விமர்சனம் பெற்றது என்கிற பெருமை இந்த புத்தகத்துக்குத் தான் உண்டு. அந்தஅளவு அச்சம். தாங்க முடியாத அச்சம். பின்னர் ஊகங்கள். ’இந்த நூல் தனஞ்ஜெய்கீரின் நூலின் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.’ ‘அம்பேத்கரின் காந்தி எதிர்ப்புதான் இந்துத்துவர்களை அம்பேத்கருடன் இணைக்கிறது.’ ‘அம்பேத்கர் ‘பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள்’ என்கிற நூலில் வெளிப்படுத்திய இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகளால் தான் அவரை இந்துத்துவர்கள் சிலாகிக்கிறார்கள்.’

இந்த நூல் இவை அனைத்துக்கும் சரியான பதிலாக இருக்கும். ம.வெங்கடேசன் நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர். அவர் நீதிகட்சி குறித்து எழுதிய தொடர்கட்டுரை தமிழ்ஹிந்து.காம் இணையதளத்தில் வெளிவந்தபோது அவர் பலரின் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் புன்னகையுடன் நேர்கொண்டார். பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளில் ஆழமான வேர் கொண்டவர் அவர். அவர்இந்தநூலைஎழுதுவதற்குமிகமுக்கியமானகாரணம்ஒன்றுஉண்டு.

அது அவர் வளர்ந்த இயக்கம். அதில் அவர் கொண்ட அனுபவங்கள். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் ஷாகா போனவர் அவர். அங்கே காலை பிரார்த்தனையில் பாபாசாகேப் அம்பேத்கர் பெயரை சொல்வார்கள். ஆனால் அவரைச் சுற்றி 1990களில் இருந்து பாபாசாகேப் அம்பேத்கர் பெயரை சொல்பவர்களை அவர் காண்கிறார். அவர்கள் சொல்லும் அம்பேத்கர் தீவிர ஹிந்து விரோதி. சங்க வட்டாரங்களில் அறிவுஜீவி என புகழப்பட்ட அருண்ஷோரி அம்பேத்கரை எதிர்த்து ஒருபுத்தகம்எழுதுகிறார். அப்போதுஆர்.எஸ்.எஸ் அருண்ஷோரியை மறுதலிக்கிறது. அருண்ஷோரி காட்டும் அம்பேத்கர் உண்மை அம்பேத்கர் அல்ல. உண்மையான அம்பேத்கர் தேசபக்த அம்பேத்கர் என ஒரு தொடர் கட்டுரை ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரபூர்வ இதழில் வெளிவருகிறது. இவை எல்லாம் ம.வெங்கடேசனை ‘உண்மைஎன்ன?’ என்பதை தேட வைக்கிறது.

பாபாசாகேப் அம்பேத்கரின் ஐம்பதாவது ஆண்டு விழா கமிட்டியின் தலைவராக இருந்தவர் இந்துத்துவரான ஜெயகர் என்பதை ம.வெங்கடேசன் சுட்டிக் காட்டுகிறார். பாபாசாகேபின் இந்து மதவிரோதம் என்பது ஒரு கண்டிப்பான விமர்சனம் மட்டுமே என்பதை அவர் கண்டடைகிறார். இந்து மதம் என்பது ஸ்மிருதிகளின் அடிப்படையிலான ஒன்று மட்டும்தான் என்றால் அந்த இந்து மதத்தை டாக்டர்.அம்பேத்கர் நிராகரிக்கிறார். கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் ’இந்து’ என்பது அதன் பரந்துவிரிந்த பொருளில் விராட ஹிந்துத்துவ பெயராக பயன்படுத்தப்படுவதை அவர் ஏற்கிறார். ஏற்பதுமட்டுமல்ல அதையே அவர் முன்வைக்கிறார். இவை பாபாசாகேப் அம்பேத்கரின் அடிப்படை நிலைபாடுகள்.

இனவாத கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய சமுதாயத்தை அணுகுவதை பாபாசாகேப் முழுமையாக நிராகரித்தார். பண்டைய இலக்கியங்களை அணுகி ஆராய்ந்து இதற்கான பதிலை விரிவாக முன்வைத்தார் டாக்டர். அம்பேத்கர். ஆரியர்கள் என்பது இன அடிப்படையிலான பாகுபாடு என்பதையும் அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதையும் அவர் மறுத்தார். ஒரு பண்பாட்டு குழுமமாக அவர்களுக்கும் நாகர்களுக்கும் மோதல் இருந்திருக்கலாம் என அவர் கருதுகிறார். இங்கும் ஒரு விஷயத்தை பாபாசாகேப் கூறுகிறார். நாகர்-ஆரியர் என்கிற அடிப்படையில்கூட சாதிஅமைப்பு ஏற்படவில்லை. ஆரியர் பிராம்மணரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் ஆரியரே. பிராம்மணர் நாகரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் நாகரே. எனவே சாதியை இனகோட்பாட்டுடன் இணைக்க முடியாது என்பது அவரது நிலைபாடு. அண்மை கால மரபணு ஆராய்ச்சிகள் பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்து உண்மை என்பதை காட்டுகின்றன.

பாஸ்கர் நாராயண்கரே, ஜெயகர், மூஞ்சே, சாவர்க்கர் என அன்றைய முக்கிய இந்துத்துவ தலைவர்களுடன் அவருக்கு நல்லிணக்கம் இருந்தது. உபநிடதங்கள் மீது அவருக்கு பெரும்மதிப்பு இருந்தது. அத்வைத மகாவாக்கியங்களே ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படையை அளிக்க முடியும் என கருதியவர் அவர். இந்தியாவின் எல்லைகள் குறித்து அவருக்கு கவலை இருந்தது. வலுமையான ராணுவம் தேவை என்பதை முழுக்க உணர்ந்தவர் பாபாசாகேப். இஸ்லாமிய பாகிஸ்தான் மாவோயிச சீனா ஆகியவை இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் கண் வைப்பதை அவர் உணர்ந்திருந்தார். ஹிந்து ஒற்றுமைக்கு (இந்துசங்கதான்) சாதியம் அழிய வேண்டுமென்பதை சமரசமற்ற தீர்வாக முன்வைத்தார்.

இந்துமதத்தின் சாதியத்தை விமர்சித்த பாபாசாகேப் எந்த ஒரு கட்டத்திலும் இந்துமக்களின் பாதுகாப்பு என வரும்போது சிறிதளவு சமரசம் கூட செய்தது இல்லை. பாகிஸ்தானில் அகப்பட்டு கொண்ட இந்துக்களின் நிலையாகட்டும். காஷ்மீரில் ஹிந்து-பௌத்த-சீக்கியர்களின் வருங்காலம் ஆகட்டும் அவர் விராட இந்து சமுதாயத்தின் பாதுகாப்பு என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தார்.  

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதென்பது இந்துக்களின் பாதுகாப்புதான் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தவர் பாபாசாகேப். “ஸ்வராஜ்ஜியத்தை காப்பாற்றுவதைவிட பெற்ற சுவராஜ்ஜியத்தில் ஹிந்துக்களை பாதுகாப்பதென்பது முக்கியமானது. தங்களை காப்பாற்றும் வலு இல்லாமல் ஹிந்துக்கள் பெறும் சுதந்திரம் இறுதியில் அடிமைத்தளையாக மாறிவிடும்” என்பதைதொடர்ந்துவலியுறுத்திவந்தார்பாபாசாகேப்அம்பேத்கர்.

சரி எந்த அம்பேத்கர் உண்மையான அம்பேத்கர்? ஹிந்துமதத்தை கடுமையாக எதிர்க்கும் அம்பேத்கரா? அல்லது ஹிந்துத்துவர்கள் போற்றும் அம்பேத்கரா? எது முழுமையாக அம்பேத்கரை காட்டுகிறது?

பாபாசாகேப் அம்பேத்கரை இந்துத்துவ பார்வையில் பார்க்கையில் அவரது இந்துமத விமர்சனத்தை கணக்கில் எடுத்துகொண்டே அவரது இந்துத்துவ ஆதார நிலைபாடுகளை ம.வெங்கடேசன் முன்வைக்கிறார். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கரை இந்து விரோதியாக காட்டுகிறவர்கள் அவரது ஆதார இந்துத்துவ நிலைபாடுகளை மறைத்தே அவரை இந்துவிரோதியாக காட்டவேண்டியதுள்ளது. இதிலிருந்தே உண்மையான பாபாசாகேப் அம்பேத்கர் யார் என்பதும் அவரது முழுமையான பரிமாணங்கள் என்னென்ன என்பதும் விளங்கும். 

அண்ணல் அம்பேத்கரை முழுமையாகப் புரிந்துகொள்ள அழைக்கிறோம். அனைவரும் வருக….வருக.

10 Replies to “இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா”

  1. திரு.ம.வெங்கடேசனின் மூன்று நூல்களும் வெளியிட்டிற்குப்பின் சென்னையில் எங்கு கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தவும்.

    நன்றி.

    சக்திபழனி.

  2. கிழக்கு பதிப்பகம்,044-42009603 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்க.

  3. தமிழ் ஹிந்து தளத்தின் மூத்த எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் என அனைத்து தரப்பினரின் பேரன்புக்குப் பாத்திரமானவர் ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள். தான் எழுதும் ஒவ்வொரு வ்யாசத்தையும் பெரும் உழைப்புடனும் முழுமையான தரவுகளுடனும் எழுதி வரும் அன்பர். அன்பின் ஸ்ரீ ம.வெ எழுதும் ஒவ்வொரு வ்யாசமும் தமிழ் ஹிந்து தளத்தின் வாசகர்களால் பெரிதும் உகப்புடன் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டும் வருகிறது.

    பேரன்பிற்குரிய ஸ்ரீ ம.வெ எழுதிய மூன்று நூற்கள் ஒருங்கே வெளியீடு காண்கிறது என்பதில் மற்றைய தமிழ் ஹிந்து வாசகர்களைப் போன்று நானும் பேருவகை கொள்கிறேன். ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய முழுமையான சித்திரத்தை காய்த்தல் உவத்தல் இல்லாமல் ஸ்ரீ ம.வெ அவர்களது நூல் பகிர விழைகிறது என்பதனை தமிழ் ஹிந்து தளத்தின் மற்றொரு மூத்த எழுத்தாளரும் அனைத்து வாசகர்களின் பேரன்புக்குப் பாத்திரமானவருமான ஸ்ரீ.அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் மதிப்புரை பகிர்கிறது. இந்த நூலை உடன் வாங்கி வாசிக்கத் தூண்டுகிறது என்றால் மிகையாகாது.

    ஹிந்துஸ்தானமுழுதுமான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் ஒவ்வொரு கார்யாலயத்திலும் நிதமும் சங்க கார்யகர்த்தர்களால் ஓதப்படும் ஒரு நூல் ஏகாத்மதா ஸ்தோத்ரம். இதில் ஹிந்துஸ்தானமுழுதும் தேசத்தின் பண்பாட்டுக்கும் தத்துவத்திற்கும் பங்களித்த சான்றோர்கள் விதந்தோதப்படுகின்றனர். ஹிந்துஸ்தானத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களாகவும் ஹிந்து மதத்தைச் சார்ந்த அனைத்து சமயங்களான சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் மற்றும் நாட்டார்வழிபாடுகளைச் சார்ந்த சான்றோர்கள்………அவ்வளவு ஏன் இஸ்லாமிய மதத்தில் பிறந்த ஒரு சான்றோர் வரை……… பற்பல சான்றோர்களும் வழிபடப்படுகின்றனர். அப்படி ஹிந்துஸ்தானமளாவி அனைத்து ஸ்வயம்சேவகர்களாலும் நினைவு கூர்ந்து வழிபடப்படும் பல சான்றோர்களில் ஒருவராக ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் இந்த ஸ்தோத்ரத்தில் நினைவுகூறப்படுகிறார். நிதமும் ஸ்வயம் சேவகர்களால் நினைவு கூர்ந்து வழிபடப்படுகிறார்.

    ஹிந்துஸ்தான முழுதும் தேசத்திற்குப் பாடுபட்ட நாரீமணிகள், ஹிந்துஸ்தானத்தின் பெருமை வாய்ந்த நதிகள் மற்றும் மலைகள் உட்பட இந்த ஸ்தோத்ரத்தில் நினைவு கூறப்படுகிறது என்பது இதன் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கும்.

    இப்படி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் விதந்தோதும் பாரத அன்னையின் அருந்தவப்புதல்வர் அவர்களை காய்த்தல் உவத்தல் இல்லாமல் முழுமையாக சித்தரிக்க விழையும் ஒரு நூலைப் படைத்தமைக்காக பேரன்பிற்குரிய ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    இது போன்று நூற்கள் பல படைத்து நமது தொன்மையான ஹிந்துமதத்திற்கும் நமது தாய்நாடான ஹிந்துஸ்தானத்துக்கும் ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள் பெருமை சேர்க்க வேண்டும் என்று நீலக்கலாபமேறும் ராவுத்தனான எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் போற்றும் பழனிப்பதிவாழ் பாலகுமாரனை இறைஞ்சுகிறேன்.

    ஜெய்ஹிந்த்

  4. திரு.ம.வெங்கடேசன் அவர்களுக்கு ”இந்துத்துவ அம்பேத்கர்” என்ற புத்தகத்தை மிக சிரத்தையுடன் எழுதி வெளியிட்டதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னமும் இந்த புத்தகத்தை முழுமையாக படிக்கவில்லை. ஆனால் முன்னுரையே அசத்தாலான அதிர் வெடியுடன் ஆரம்பித்துள்ளதற்கு மற்றும் ஒருமுறை பாராட்டுகிறேன்.

    // இந்துத்துவ அம்பேத்கர் – இந்த பெயரே பலரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது – பலரை திடுக்கிட வைத்துள்ளது – பலரை அதிர்சிக் குள்ளாகியிருக்கிறது – பலரை கோபப்பட வைத்துள்ளது ( எனக்கும் கொஞ்சம் கோபம் உண்டு ஆனால் இந்துத்துவ அம்பேத்கர் மீது அல்ல) – அம்பேத்கரை எப்படி இந்துத்துவ அம்பேத்கர் என்று சொல்லலாம் ! ??? //

    21 – தலைப்புகளை தேர்ந்தெடுத்து எப்படி அம்பேத்கரது கருத்தாக்கங்கள் இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ் கருத்தாக்கங்களுடன் ஒத்துபோகிறது என்பதை ஆதார நிருபணங்களுடன் விளக்கி ” அம்பேத்கர் ஒரு இந்துத்துவரே” என்பதை உறுதி செய்கிறார்.

    1. ஜாதி ஒழிப்பில் ஆரிய சமாஜயம்
    2. சுவாமி சிரத்தானந்தர்
    3. ஜாதி ஒழிப்பா …மத ஒழிப்பா
    4. தேசிய மொழிகள் சமிஸ்கிருதம் இந்தி
    5. “ஆரிய இனவாதம் எனும் பொய்யுரை
    6. இந்து சட்ட மசோதா
    7. காந்தி படுகொலையும் ஆர்.எஸ்.எஸூம்
    8. ஜாதி எதிர்ப்புப் போராளி – வீர சாவர்க்கர்
    9. எஸ்.கே. போலே
    10. திலகரின் மகன் ஸ்ரீதர் பந்த்
    11. எல்.பி.போபட்கர்
    12. ஆர்.எஸ்.எஸ் சிந்தனையும் அம்பேத்கர் சிந்தனையும்
    13. ஸ்ரீ தத்தோபந்த தெங்கடி
    14. அண்ணலுக்கு எதிரியா ஆர்.எஸ்எஸ் ?
    15. இட ஒதுக்கீடு அண்ணல் அம்பேத்கர் – ஆர்.எஸ்.எஸ்
    16. கம்யூனிசம் பற்றி
    17. பொது சிவில் சட்டம்
    18. மத மாற்றம்
    19. 370 வது பிரிவு பிரச்னை
    20. மலை வாழ் பழங்குடிமக்கள்
    21. பாக்கிஸ்தான் பிரிவினை

    cont…….

  5. // இந்து என்பதில் பௌதர்கள், சீக்கியர்கள், சைனர்கள் ஆகியோரை அம்பேத்கர் உள்ளடிக்கியிருக்கிறார் // – ஆகவே அவரும் இந்துவே !!

    // அண்ணல் அம்பேத்கர் கொண்டுவர துடித்த சட்டம் ”இந்து சட்ட தொகுப்பு மசோதா // – ஆகவே அவரும் இந்துவே !!,
    // இந்து என்பது வழிபாட்டு சம்பிரதாயங்களை மட்டும் உள்ளடக்கியது. – இந்துத்துவம் என்பதை இந்துதன்மை என்று ஒற்றை வரியாக சுருக்கிவிட முடியாது – அது மதம், தேசம், கலாசாரம் பண்பாடு, மொழி, சமூகம், வரலாறு, அரசியல் போன்ற பல கூறுகள் அடங்கியது // இந்துத்துவத்தில் மதமும் உள்ளது – ஆகவே அவர் இந்துத்துவரே !!!

    // இந்துத்துவம் தேச ஒருமைபாட்டை வலியுறுத்துகிறது – ஆண்மீக பண்பாட்டு அடிப்படையில் ஒரே தேசம் என்கிறது – தேசத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த இஸத்தையும் ஏற்க மறுக்கிறது – ஜாதி ஒழிப்பை முன் எடுக்கிறது – தேச பிரிவினையை ஏற்க மறுக்கிறது – பிராந்திய கலாசாரம், பண்பாடுகளை ஏற்று வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்துகிறது – இந்த கருத்துக்களை அதிகம் வலியுறுத்தியவர் அம்பேத்கர் – ஆகவே அவர் இந்துத்துவரே !!!

    // புத்த சங்கங்கள் சோம்பேறிகளின் கூடாராமாக மாறியதை கண்டிக்கும் அவர் ராமகிருஷ்ணா மிஷனுடைய சேவைகளை பாராட்டுகிறார் // – ஆகவே அவர் இந்துத்துவரே !!!!!

    நான் முதலில் இந்தியர்களாகவும் பிறகு இந்துக்களாகவோ, முஸ்லீமாகவோ இருக்கிறோம் என்று சிலர் கூறுவதை நான் விரும்பவில்லை. நாம் இந்தியர்கள் என்ற விசுவாகத்தை மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றால் உருவாக்ககூடிய எந்த விசுவாசமும் மிகச் சிறிய அளவிலும் கூட பாதிக்க கூடாது என்று நான் விரும்புகிறேன். மக்கள் அனைவரும் முதலிலும் இறுதியிலும் இந்தியர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன் – ஆகவே அவர் ஒரு இந்துத்துவரே !!! –

    இந்த கருத்தை உள் தலைப்புகளில் ஆசிரியர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன் ?

    இப்படி 21 தலைப்புகளை தேர்ந்தெடுத்து அம்பேத்கர் ஒரு இந்துத்துவரே என உறுதி அளிக்கிறார் !!!! ???????

    cont……….

  6. முன்னுரையில் சொல்லியுள்ள சிலவற்றிற்கு எனது மாற்று கருத்துக்கள் (முடிவான கருத்துக்கள் அல்ல)

    // மதத்தை அழிப்பது என்று நான்கூறும் பொருள் பலர் புரிந்துகொள்ளவில்லை. தத்துவங்களுக்கும், விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு காரணமாக அவற்றின் அடிப்படையில் செய்யப்படும் செயல்கள் தன்மையும், தரமும் வேறுபடுகின்றன ………………………… இந்து வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ள படி பார்த்தால் யாகம், சமூகம், சுகாதாரம், அரசியல், ஒழுங்குமுறை ஆகிய எல்லாம் கலந்த ஒரு தொகுப்பாக இருக்கிறது // சொல்வது சேராததுபோல் உள்ளது ? எதை விதி என்றும் எதை தத்துவம் என்றும் சொல்கிறார் ? ஸ்ருதி ஸ்மிருதியை சொல்கிறாரா ? என்று சொல்லிவிட்டு ….

    // இந்துமதம் விதிகளின் தொகுப்பு என்ற முடிவிற்கு வருகிறார் // ஏன் ?

    // தத்துவங்களால் ஆனமதம் ஒன்று வரவேண்டும் – அப்படிப்பட்ட மதம்தான் உண்மையில் மதம் என்று கூறத் தகுந்தது // பிறகு மதசீர்திருத்தின் மிகவும் முக்கியமாக இடம் பெற வேண்டிய அம்சம் என்று

    // இந்து மதத்திற்கு ஒரே ஒரு பிரமாணமான புத்தகம் இருக்கவேண்டும் – இது எல்லா இந்துக்களும் ஏற்று ஒப்புக்கொண்டதாக இருக்க வேண்டும் // இது நடைமுறையில் சாத்தியமானதாக பாரதத்தில் அமைவது இன்றைய சூழலில் பகற்கனவுதான் ? எனக்கும் இந்துக்கள் எல்லோரும் கீதையையும், திருக்குறளையும் பிராமாண புத்தகமாக ஏற்றவேண்டும் என்ற ஆசை உண்டு !! ??

    // இந்துக்களிடையே புரோகிதர்கள் இல்லாமல் ஒழித்துவிடுவது நல்லது. இது இயலாது என்றால் புரோகித தொழில் பரம்பரை பரம்பரையாக வருவதை நிறுத்தவேண்டும். இந்துக்கள் அனைவரும் அரசு நிரணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று புரோகிதராக இருப்பதற்கு அனுமதி பத்திரம் பெறவேண்டும் …………. // இது எல்லோராலும் ஏற்றுக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை ? நீதி மன்றமே பரம்பரை புரோகித தொழிலில் தலையிடவேண்டாம் என்று தீர்ப்பு சொல்லியுள்ளது. இதில் அரசாங்கத்தை நுழைப்பது ”உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா” என்றுதான் முடியும். தமிழகத்தின் அறநிலைதுறை கேடுகெட்ட அராஜகத்துறை என்பது நீறுபணமான ஒன்று.

    cont…………

  7. மேலும் அறநிலைதுறை கட்டுப்பாட்டில் நடக்கும் சில அட்டுழியங்கள். ஆண்மீகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், அரசியல்வாதிகள், மாற்று மதத்தினரை கோவில் தர்மகர்தாக்களாக நியமித்தல். சிறப்பு தரிசனம் என்று தரகர்கள் அடிக்கும் கொள்ளை. சினிமா சூட்டிங் நடத்தபடும் இடம் போல வேண்டாத சக்திவாய்ந்து மின்சார பல்புகளை போடுதல். பிரகாரத்தின் உள்ளேயே கழப்பிடங்களை அமைத்தல். கோவில் கோபுரதரிசனம் செய்ய முடியாமல் அருகிலேயே பல அடுக்கு மாடிகளை கட்ட அனுமதி அளித்தல். கற்தரைகளை எடுத்து வழிக்கிவிமும் வண்ணம் கிரானைட் தரைகளை அமைத்தல். கோவில் சிலைகள், சித்திரங்கள் செதுக்கி வைத்துள்ள சரித்திர, சம்பிரதாய கட்டுமான பணி பற்றிய விபரங்களை புனர்நூதாரணம் என்ற பெயரில் உருதெரியாமல் செய்தல் என்று சொல்லஒண்ணா கொடும் பழிபாதக செயல்களை தொடர்ந்து செய்து மொத்தமாக தமிழனின் அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஹிந்து என்றும், ஹிந்து ஆத்தீகன் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவனை தவிற மற்ற இந்தியர்களுக்கு அர்சகர், பூசாரி பற்றி கேள்வி கேட்கும் உரிமை முதலில் கிடையாது. மற்றவர்கள் செக்யூலரிஸம் நம் நாட்டில் உண்மையில் இருக்கிறது என்றால் முதலில் அவர்கள் ஹிந்து கோவில்களை அரசாங்கத்தின் பிடியிலிருந்து வீடுவிக்க குரல் கொடுக்கவேண்டும். இது ஹிந்து ஆத்தீகர்களின் உரிமையை பறித்த படுபாதகசெயல் ஆகும். .
    ஹிந்து ஆத்தீகன் எந்த ஜாதியில் பிறந்தாலும் முதலில் அவன் ஹிந்து ஆத்தீகனுக்கு உரிய குறைந்தபஷ்ச அடையாளமான பூனூல்அணிய வேண்டும் நெற்றிபொட்டு வைக்கவேண்டும். (இதற்கு பிராமிணன்தான் மந்திரம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை). ஆகமவிதிப்படி அமையாத கோவில்களில் இன்றுள்ள பூசாரிகளை ஒழுங்குபடுத்தவும் அவர்களது குறைந்த பஷ்ச வருமானத்தை பெருக்குவதற்கும் இன்று பல ஹிந்து இயக்கங்கள் ஆக்கபூர்வமான செயலில் இறங்கியுள்ளன. அதைபோல் ஆகமவிதிப்படி அமைந்த கோவில்களில் பூஜாரி ஆகவோ அர்ச்சகர் ஆகவோ வரவேண்டும் என்றால் அவர் எந்த ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும் சிறுவயதிலேயே (7 அல்லது 8 வயதில்) ஆதீனமட வைதீகமட குருகூலங்களில் சேர்ந்து முறையான எல்லா பயிற்ச்சிகளையும் பெறவேண்டும். அதை அவர் அவர் தாய் மொழியிலேயே கற்கலாம். மேலும் இந்தியாவில் ஹிந்து மதத்தின் பல ஆகம வைதீக சாஸ்திரங்கள் சமிஸ்கிருத மொழியில் மட்டும் இருப்பதால் தாய் மொழியுடன் சமிஸ்கிருத மொழியும் கற்பது வேண்டும். இதற்கு பிராமிணர்கள் முடிந்தால் ஒத்துழைக்கவேண்டும். இல்லை என்றால் ஒதுங்கியிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது.
    cont…….

  8. மேலும் அறநிலைதுறை கட்டுப்பாட்டில் நடக்கும் சில அட்டுழியங்கள். ஆண்மீகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், அரசியல்வாதிகள், மாற்று மதத்தினரை கோவில் தர்மகர்தாக்களாக நியமித்தல். சிறப்பு தரிசனம் என்று தரகர்கள் அடிக்கும் கொள்ளை. சினிமா சூட்டிங் நடத்தபடும் இடம் போல வேண்டாத சக்திவாய்ந்து மின்சார பல்புகளை போடுதல். பிரகாரத்தின் உள்ளேயே கழப்பிடங்களை அமைத்தல். கோவில் கோபுரதரிசனம் செய்ய முடியாமல் அருகிலேயே பல அடுக்கு மாடிகளை கட்ட அனுமதி அளித்தல். கற்தரைகளை எடுத்து வழிக்கிவிமும் வண்ணம் கிரானைட் தரைகளை அமைத்தல். கோவில் சிலைகள், சித்திரங்கள் செதுக்கி வைத்துள்ள சரித்திர, சம்பிரதாய கட்டுமான பணி பற்றிய விபரங்களை புனர்நூதாரணம் என்ற பெயரில் உருதெரியாமல் செய்தல் என்று சொல்லஒண்ணா கொடும் பழிபாதக செயல்களை தொடர்ந்து செய்து மொத்தமாக தமிழனின் அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஹிந்து என்றும், ஹிந்து ஆத்தீகன் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவனை தவிற மற்ற இந்தியர்களுக்கு அர்சகர், பூசாரி பற்றி கேள்வி கேட்கும் உரிமை முதலில் கிடையாது. மற்றவர்கள் செக்யூலரிஸம் நம் நாட்டில் உண்மையில் இருக்கிறது என்றால் முதலில் அவர்கள் ஹிந்து கோவில்களை அரசாங்கத்தின் பிடியிலிருந்து வீடுவிக்க குரல் கொடுக்கவேண்டும். இது ஹிந்து ஆத்தீகர்களின் உரிமையை பறித்த படுபாதகசெயல் ஆகும். .
    ஹிந்து ஆத்தீகன் எந்த ஜாதியில் பிறந்தாலும் முதலில் அவன் ஹிந்து ஆத்தீகனுக்கு உரிய குறைந்தபஷ்ச அடையாளமான பூனூல்அணிய வேண்டும் நெற்றிபொட்டு வைக்கவேண்டும். (இதற்கு பிராமிணன்தான் மந்திரம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை). ஆகமவிதிப்படி அமையாத கோவில்களில் இன்றுள்ள பூசாரிகளை ஒழுங்குபடுத்தவும் அவர்களது குறைந்த பஷ்ச வருமானத்தை பெருக்குவதற்கும் இன்று பல ஹிந்து இயக்கங்கள் ஆக்கபூர்வமான செயலில் இறங்கியுள்ளன. அதைபோல் ஆகமவிதிப்படி அமைந்த கோவில்களில் பூஜாரி ஆகவோ அர்ச்சகர் ஆகவோ வரவேண்டும் என்றால் அவர் எந்த ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும் சிறுவயதிலேயே (7 அல்லது 8 வயதில்) ஆதீனமட வைதீகமட குருகூலங்களில் சேர்ந்து முறையான எல்லா பயிற்ச்சிகளையும் பெறவேண்டும். அதை அவர் அவர் தாய் மொழியிலேயே கற்கலாம். மேலும் இந்தியாவில் ஹிந்து மதத்தின் பல ஆகம வைதீக சாஸ்திரங்கள் சமிஸ்கிருத மொழியில் மட்டும் இருப்பதால் தாய் மொழியுடன் சமிஸ்கிருத மொழியும் கற்பது வேண்டும். இதற்கு பிராமிணர்கள் முடிந்தால் ஒத்துழைக்கவேண்டும். இல்லை என்றால் ஒதுங்கியிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது.
    cont…….

  9. // ஆனால் அம்பேத்கர் உபநிஷத்துக்களை சிறப்பித்து கூறியுள்ளார் – ” அஹம் பிரம்மாஸ்மி ” என்னுள் கடவுள் இருக்கிறார் என்பது திமிரான வாக்கியமா ? ”தத்வமஸி” நான்தான் கடவுள் – இப்படி ஒவ்வொருவரையும் எண்ணவைப்பது அவர்களது முக்கியத்தை அடிகோடிடுகிறது – உண்மையில் ஜனநாயகம் என்ற கோட்பாட்டிற்கு இந்தியாவும் தன் தத்துவார்த்த பங்களிப்பை ”பிரம்ம தத்துவத்தின் மூலம் வழங்கியிருக்கிறது //
    இங்கேயும் சற்று யோசிக்க வேண்டியுள்ளது. இந்து மதம் விதிகளால் பின்னப்பட்டது என்ற குற்றசாட்டை சொன்ன அவரே தத்துவங்கள் நிறைந்த உபநிஷத்துக்களை போற்றுகிறார் – தமிழ் ஹிந்து வாசகர்கள் அனைவரும் இந்த புத்தகத்தை நிச்சயம் வாங்கி விவாதிக்க வேண்டும் என்பது எனது அவா !!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *